Monday, May 27, 2019

எதுனா ஊழல் கேஸ்ல மாட்டிட்டாக்கூட பாத்துக்க ஆள் வேணும்ல

பால்காரரு, பொட்டிக்கடைக்காரரு,பஸ் கண்டக்டர்,ஆபீஸ் கொலீக்ஸ் ,எதிர் வீட் ஆன்ட்டினு கண்டபடி பந்தயம் கட்டுன தொகையைக்கணக்கு பாத்தா 13 லட்சம் வருது ,கையிருப்பே 12 லட்சம்தான் ,தோத்துட்டா பேங்க் ல ஒரு லட்சம் லோன் போட்டுதான் அடைக்கனும்போல,ஜெயிச்சா எவனும் தரப்போறதில்ல #23/5/19


==========

2 உலகம் முழுக்க வெள்ளை ஆடைகளை மட்டுமே உடுத்துவது என முடிவு எடுத்தால்
1 டையிங் பேக்டரிகள் அழியும் 2 ஆறு ,ஏரி நீர்நிலைகள் மாசுபடாது 3 டிசைன் பிடிக்கல,கலர் மேட்ச் ஆகல னு பொண்டாட்டிங்க தொந்தரவு குறையும்


=================


3 நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்ட (நாம் தமிழர் கட்சி vs மக்கள் நீதி மய்யம்) இவற்றை ஒப்பிடுகையில், எந்தக் கட்சி அதிக வாக்கு %பெறும் என கருதுகிறீர்கள்?
புதுசா ஒரு ஜவுளிக்கடை ஓப்பன் பண்ணா கூட்டம் அங்கே அதிகம் போகும்,அந்த"லாஜிக்படி கமல்


==============


4 ஆரஞ்சு மிட்டாய்களை மிக்சில"போட்டு"அரைச்சா வர்ற சாறு கூட ஆரஞ்சு ஜூஸ் தான்


==============


5 பூமி சூரியனை சுற்றி வருகிறது
சூரியன் பூமியை சுட்டு வருகிறது அக்னி வெயில்


==============


6 மத்திய அரசு ஊழயரான கோமதி தேர்தல் நேரத்தில் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக தெரிந்தோ தெரியாமலோ மீடியாக்களுக்கு பேட்டி அளித்ததன் காரணமாகவே அவர் பழி வாங்கப்படுகிறார் என சந்தேகிக்க இடம் இருக்கு


==============


7 ஒரு பொண்ணு FB வராம 2 நாட்கள் கழிச்சு வரும்போது போடற முத பதிவுக்கு நம்மாளுங்க போடற கமெண்ட்சைப்பாக்கனுமே?
2 நாளா எங்கே போய்ட்டிங்க தோழி? தூக்கமே இல்லை சாப்பாடே இறங்கலை


===============


8 What is the running time of ?.
11am 2 pm 6 pm 9 pm


==============


9 போன முறை பாஜக 30% ஓட்டு வாங்கி இருக்கிறது , இந்த முறை 33% - 35% வாங்கும் என கணிக்கிறேன், பாஜக தனிப்பெரும் கட்சியாக 285+ சீட்கள் பெறும் என்பது என் கணிப்பு


===============
10  மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, ஆனா சில சமயம் அது
மடத்தனமாகவும் அமையும், மத்தியில் பாஜக ஜெயிச்சு ,மாநிலத்தில்  அதற்கு எதிர்க்கட்சி ஜெயிப்பதால் நலத்திட்டங்கள் மக்களுக்குக்கிடைக்காது


===========

11  தமிழன் எப்பவும் இப்படித்தான்.
எளிய,அரிய மனிதர் காமராஜரை தோற்கடித்தான் தமிழ்நாட்டின் நெ1 திருடன், தமிழ் இன துரோகியை ஜெயிக்க வைக்கிறான்


================


12 இந்தியாவிலேயே கேரளாவும் தமிழகமும்தான் புத்திசாலித்தனமா வாக்களிச்சிருக்காம் ,இவங்க புத்திசாலித்தனத்தால இனி அரசு இந்த 2 மாநிலங்களை மட்டும் ஒதுக்கினா பாதிப்பு யாருக்கு?


===============


13 கேரளாவில் முஸ்லீம்கள்,கிறிஸ்டியன்கள் அதிகம்,அதனால் அவங்க வாக்கு பாஜக வுக்கு வராது,ஆனா தமிழகத்தில் கடவுள் நம்பிக்கை உள்ள இந்துக்கள் அதிகம் இருந்தும்,இந்து மத நம்பிக்கைகளை நக்கல் அடித்த கட்சிக்கே வாக்களித்து வெற்றி பெற வைத்தது ஏன்?எதற்கு? எப்படி?


===============


14 மதம் ,ஜாதி பார்த்து நாங்க ஓட்டு போடறதில்லைனு சில புத்திசாலிகள் கருத்து தெரிவிக்கறாங்க.அவங்க"சார்ந்த அரசியல்"கட்சிகள் போட்டியிடற தொகுதில எந்த ஜாதி ஓட்டுகள் அதிகம்னு பார்த்து அந்த ஜாதி வேட்பாளரை களம் இறக்குவது ஏனோ? (எல்லாக்கட்சித்தலைவர்களும்தான்)

=============


15 டெல்லி போய் நம்மாளுங்க பழைய ஞாபகத்துல கோ பேக் மோடினு கூவிடப்போறாங்க,அடி வெளுத்துடப்போறாங்க 350+ vs 39


=============


16 சூரத்தில் மாடியில் ஏற்பட்ட தீ விபத்து வீடியோ"கண்டேன்.பாதிக்கப்பட்டவர்கள் மாடியிலிருந்து குதிக்கறாங்க,ஜனங்க அதை வீடியோ எடுத்துட்டு இருக்காங்க.அந்த டைம்ல தரைல மெத்தை மாதிரி எதுனா ரெடி பண்ணி போட்டிருக்கலாம்,அல்லது இறங்க சங்கிலி,கயிறு ரெடி பணணி இருக்கலாம்




=========
===============

17 தேர்தல் முடிவு வந்த அடுத்த நாளே காவல்காரன் எனும் சவுக்கிதார் அடைமொழியை ட்விட்டர் ஹேண்டிலில் இருந்து அனைவரும் (பாஜக வினர்) எடுத்து விட்டார்கள்,இனிமே அது தேவை இல்லைன்னா?இனி அடுத்த தேர்தல் வரும்போது மறுபடியும் வேறு ஒரு அடைமொழியா?

===============


18எங்களைத்தாக்கிட்டே இருக்கீங்க,கெட்ட வார்த்தை பேசறதுக்குன்னே ஒருத்தரை வளர்த்து வெச்சிருக்கோம்,அவரைக்கூட்டிட்டு வர்றோம்
தாராளமா கூட்டிட்டுவாங்க,ஆனா எழுத்துப்பிழை இல்லாம சுத்தத்தமிழ் தெரிஞ்ச ஆளா கூட்டிட்டு வாங்க,பாதிப்பேருக்கு தமிழே தகராறு, இந்த லட்சணத்துல எல்லார்ட்டயும் தகராறு


===========


19 இது தான் திராவிடம்
இது தான் ஜனநாயகம் இது தான் அதிகார பரவல் னு சொல்றாங்களே தலைவரே!நம்ம குடும்ப ஆதிக்கம் கம்மியா இருக்கே? எதுனா ஊழல் கேஸ்ல மாட்டிட்டாக்கூட பாத்துக்க ஆள் வேணும்ல

============


20 அதிமுக ல EPS vs OPS மோதல் வரனும்னு விரும்பினா ஓபிஎஸ் மகனுக்கு மந்திரி பதவி தரப்படும்,அது தான் அமித்ஷாவின் ஸ்கெட்சா இருக்கும்


=================