Thursday, March 22, 2018

விமான விபத்து பரபரப்பாக ஊடகச் செய்தியாவதின் உளவியல் என்ன?

ஜெ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்த ஆண்டவனால் கூட தமிழகத்தைக்காப்பாத்த முடியாது −ரஜினி
மக்களிடம் ஜாக்கிரதையாக பேசவேண்டும். ஜெயலலிதா ,கலைஞர் போன்ற சிறந்த தலைவர்கள் எங்கும் இல்லை- ரஜினி



============


குற்றம் பார்க் கில்"சுற்றம் இல்லை = NN
No relatives in crime park துபாஷ்


==============


3 விஐபி கள் கவனத்துக்கு,
இனி நீங்கள் FB யில்"பதிவு,போடும்போது பின்குறிப்பாக 1 இது என் சொந்தப்படைப்பு 2 இது என் அக்கவுண்ட் அட்மின் படைப்பு 3 இது அட்லி மாதிரி அடுத்தவன் படைப்பை திருடி ரீமிக்ஸ் ,ரீமேக் பண்ணது என குறிப்பிடுக



==============



4 தவறு செய்த அரசு ஊழியர்களை 3 மாசம் சஸ்பெண்டு ,300 ரூபா அபராதம்னு டீல் பண்றதாலதான் அவங்களுக்கு தெனாவெட்டு.டிஸ்மிஸ் +3 வருச ஜெயில் னு தீட்டுனா இனி தப்பு பண்ண மத்தவங்க யோசிப்பாங்க இல்ல?


=============



5 டிராபிக் போலீஸ் உங்களை துரத்தினால்
உயிர் உள்ள வரை உஷா(ர்)


===============



6 மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு பெண்ணிடம் கை நீட்டி செருப்படி வாங்கிய அய்யாக்கண்ணுக்கு மகளிர் தின வாழ்த்து

============



7 நீ பணி புரியும் கம்பெனியில் எவ்வளவு நாணயமாக ,எத்தனை வருடங்கள் பணியாற்றினாலும்,கம்பெனியின் உயர்வுக்காக உன் உழைப்பை கொட்டி இருந்தாலும் ஒரு கட்டத்தில் கம்பெனியின் நன்மைக்காக உன்னை பலி கொடுக்க தயங்காது

==============



பொது இடத்தில் ஒரு பெண்ணை தகாத வார்த்தையில் ,திட்டுவது ஒரு விவசாயியாக இருந்தாலும் ,கலெக்டரா இருந்தாலும் தப்பு தப்பு தான்.ஒரு பெண்ணிடம் அறை வாங்கிய அவமானம் இனி காலத்துக்கும் மறையாத தழும்பாக நிலைக்கும் அவமானப்பட்ட தருணங்கள் (நீதி−கெட்ட வார்த்தை பேசினால் கேடு வரும்)


==============



9 சமூகவலைத்தளங்களில் கெட்ட வார்த்தை பேசுவதை தடுக்க/குறைக்க வழி இருக்கா?
ஆதார் கார்டு டிபி யா அட்டாச் பண்ணனும்னு விதி இருந்தா போதும் வீர பிரதாபர்கள் இருக்கற இடம் தெரியாம கமுக்கமா பம்முவாங்க


===============



10 சாமான்ய மக்களிடம் சிடு சிடு என விழுந்து அவங்களை லோனுக்காக லோ லோ என அலைய விட்ட பேங்க் மேனேஜர்கள் தொழில் அதிபர்களிடம் கோடிக்கணக்கில் ஏமாறுவது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்றாலும் மட்டற்ற மகிழ்ச்சி


===============



11 உங்கள் குழந்தைகளுக்கு பேக்கரியில் நொறுக்ஸ் ,பிஸ்கெட் வாங்கித்தந்து பழக்காதீர்!பழமுதிர் நிலையத்தில் திராட்சை ,வாழை ,ஆரஞ்சு என பழங்கள் தந்து பழக்குங்கள்.ஆரோக்ய வாழ்வு!


==============



12 உறவினர் /நண்பர் இல்லங்களுக்கு செல்கையில் மழலைகளுக்கு சாக்லெட்,ஐஸ்க்ரீம் வாங்கிச்செல்லாமல் நெல்லிக்கா ,இலந்தைப்பழம் ,கிலாக்காய் ,சர்க்கரை வள்ளிக்கிழங்கு இப்டி வாங்கி"செல்க.செலவும் குறைவு,பை நிறைய பொருள்.ஆரோக்ய வாழ்வு


===============



13 பத்திரிக்கையாளர்களை எதிர்கொள்வதில் கமலின் திறமை அபாரம்.ஒரே கேள்விக்கு ஆங்கிலத்தில் ஒரு"பதில் ,தமிழில் வேறு ஒரு"சுவராஸ்ய பதில் என கலக்கறார்,பொதுவா மேஜர்சுந்தர்ராஜன் மாதிரி தான் எல்லாரும் மொழி பெயர்ப்பாங்க



===============



14 ஆழ்துளைக்கிணறு களில் தவறி விழுந்த குழந்தைகளை மீட்க நவீன எந்திரம் ,காட்டுப்பகுதிகளில் தீ விபத்து நிகழும்போது இரவுகளில் கூட மீட்புப்பணி நிகழ ஆவண நவீன வழிகள் கண்டறியப்படனும்



===============



15 பணவசதி,பர்சனாலிட்டி எல்லாம் இருந்தும் ஆர்யா வுக்கு"பெண்ணே கிடைக்காதது போல் பொய்யாக"டி ஆர் பி க்காக ,விளம்பரத்துக்காக பெண்களை ஏமாற்றும் "எங்க"வீட்டு"மாப்பிள்ளை" நிகழச்சி தடை செய்யப்பட வேண்டும்.நிகழ்ச்சியில்"கலந்து கொள்ளும்"பெண்கள்"தங்கள் எதிர்காலம்"பாதிக்கும்"என்பதை உணரனும்


=================


16 ஏதோ ஒரு,பாடாவதி"சேனல்ல"ஒரு,பாடாவதி சீரியல்ல ஒரு"சீன்,அதுல"மாமியார்"புது"மணப்பெண்"(மருமகள்) கிட்டே"சவால்"விடுது,"இன்னைக்கு"சாந்தி"முகூர்த்தம்"எப்டி நடக்குது?னு"நான்"பாத்துடறேன்
மருமகள் =,பாக்கலாமா? சவால்;. அய்யோ ஊர்மிளா!



==


17 காலாவதி ஆன ஏர்செல் சிம் டூ BSNL சிம் மாற்ற BSNL ஆபீசில்"சிம்"சார்ஜ் ரூ 10 மட்டும்தான். வெளில ,பொட்டிக்கடை",பிரைவேட்"ஆட்களிடம் ஏமாறாதீர்.ரூ"200 /108 என சார்ஜ் செய்கிறார்கள்


==============


18 டெக்ஸ்டைல்ஸ்"காரர்களே!தமிழகத்தில் இருந்து கேரளா,கர்நாடகா,ஆந்திரா மாநிலங்களுக்கு அனுப்பப்படும் பேல்கள் மினிமம்"ரூ"400 டூ 600 வரை"சார்ஜ் செய்யப்படுகிறது தனியார்"லாரி"சர்வீசில்.ஆனால்"ரயில்வே"ல"நான்கில் ஒரு"பகுதி தான்.டெட் சீப்.Gst இல்லாவிட்டாலும்



==============


19 GST நெம்பர் இல்லாத"கடைகளுக்கு"பார்சல் டெலிவரி"செய்ய "எக்ஸ்ட்ரா"சார்ஜ்"ரூ"600 +,பார்சல்"சார்ஜ்"ரூ"400 என தனியார்"லாரி களில் வசூலிக்கப்படுகிறது,(கேரளா,ஆந்திரா,கர்நாடகா)ஆனால்"ரயில்வே"யில் புக் செய்தால் ஒரு"கிலோ"வுக்கு ரூ 3 மட்டுமே,மினிமம் 30 கிலோ பார்சலுக்கு ரூ 90 மட்டுமே


===============



20 தினந்தோறும் நடக்கும் சாலை விபத்துகள், ரயில் விபத்துகளை விட அரிதினும் அரிதாக நடக்கும் விமான விபத்து பரபரப்பாக ஊடகச் செய்தியாவதின் உளவியல் என்ன?
சிம்ப்பிள்.பஸ்",ரயில் விபத்துகளில் மரணம் பயணிகளில் 25%,50% ஆனால் விமான விபத்து"என்றால்"100% மரணம்


===============