Wednesday, February 23, 2011

குமுதம் VS கலைஞர் பேட்டி - காமெடி கும்மி & உட்டாலக்கடி கலாட்டா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhd70JSBPxmFqRkMKk1UXeTisNvkoN9v8zCBsIVHYzjWgqkjtDfbqSAoLL6LpgwaI4tC5OrJUA4fUDA9UGScrT7LsdPSVXQb2N9zuuoiVy5AWeO03koY9bWMlbDzwAmiqFZgHpc2ut_I_vh/s1600/Karunanidhi+cartoon.jpg
 
தமி்ழ்நாட்டின் நெம்பர் ஒன் தமிழ் வார இதழான குமுதம் (2.3.2011) இன்று கலைஞரைப்பேட்டி எடுத்து  போட்டிருக்கிறது.ஸ்பெக்ட்ரம் பிரச்சனை வெற்றியைப்பாதிக்குமா? என சென்சேஷனல் டைட்டிலுடன் வந்துள்ள பேட்டி படிக்க செம காமெடியாக இருந்தது.அதன் ஒரிஜினல் பதிப்பை லைப்ரரியிலோ. நண்பர்களிடம் ஓ சி புக் வாங்கியோ படித்து ரசியுங்கள். ( நாம எந்தக்காலத்துல காசு குடுத்து புக் வாங்கி இருக்கோம்?).இப்போது இங்கே கேள்வி மட்டும் குமுதம் கேட்டது ,பதில் கலைஞர் சொன்னதை போடாமல் கலைஞரின் மனசாட்சி என்ன சொல்லி இருக்கும் என ஒரு கற்பனை.

1.” வரப்போகும் தேர்தலில் தி மு க வின் வியூகம் எப்படி இருக்கும்??”

இதுல புதுசா சொல்ல என்ன இருக்கு?எப்பவும் போலத்தான்.வர்றவங்க எல்லாம் வாங்கன்னு எல்லாரையும் கூட்டணில சேர்த்திக்க வேண்டியது. அப்புறம் தொகுதி பிரிக்கறப்ப பிரச்சனை வந்தா “உங்களுக்கு என் இதயத்தில் கண்டிப்பாக இடம் உண்டு என மழுப்புவது...

2. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் தி மு க சாதித்தது என்ன?

என்ன இப்படி கேட்டுட்டீங்க?.கடந்த 64 வருட காலங்களிலேயே யாராலும் பண்ண முடியாத டார்கெட் ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ஊழல் அச்சீவ் பண்ணி இருக்கோமில்ல..ஸ்டாலின் -அழகிரி சண்டை வராம பேலன்ஸ் பண்றதே பெரிய சாதனையா இருக்கு.. எனக்கு.


3.நீங்க இது வரைக்கும் பல தேர்தலை சந்தித்து இருக்கீங்க. அந்த தேர்தலுக்கும், இந்த தேர்தலுக்கும் என்ன வித்தியாசம்?

அப்போவெல்லாம் குங்குமச்சிமிழ் அல்லது பனை ஓலை விசிறி குடுப்போம்,ஏமாளி ஜனங்க அதுக்கே ஆளுக்கு 2 ஓட்டு போடுவாங்க. இப்போ எல்லாரும் உஷார் ஆகிட்டாங்க. ஒரு ஓட்டுக்கு ரூ 2000, என் கிட்டே 4 ஓட்டு இருக்குன்னு கணக்கு போட்டு கேக்கறாங்க.. ஹூம் குடுத்துத்தொலைப்போம், சின்ன மீனைப்போட்டு பெரிய மீனை எடுக்க வேண்டியதுதான்.
http://athikalai.files.wordpress.com/2010/12/mathi_cartoon-1.jpg
4. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சிக்கல்கள் வந்தாலும் தேர்தலை உற்சாகமாகவே சந்திக்கிறீர்கள்.அதற்கான பலம் எங்கே இருந்து கிடைக்குது?

உள்ளுக்குள்ள பயம் இருக்கு, அதை வெளில காட்ட முடியுமா? 60 சீட் தான் ஜெயிப்போம்னு தெரிஞ்சாக்கூட “உடன் பிறப்பே ,நாம் 234 தொகுதிகள்லயும் வெற்றி பெறுவது உறுதி”அப்படின்னு உதார் விட்டுத்தானே பழக்கம்?

5. தி மு க தொண்டர்களை எப்படி எப்போதும் உற்சாகமாய் வைத்திருக்கிறீர்கள்?அவர்களை நினைக்கும்போது  உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
1000 ஊழல்களை  கட்சி  பண்ணுனாலும்,தி மு க ஊழலில் ஊறிய கட்சிங்கறதை  நம்ப மாட்டாங்க  பாசக்காரப்பய புள்ளைக... ஏதாவது சந்தேகம் வந்தாக்கூட முரசொலில உடன்பிறப்பே...அப்படின்னு ஆரம்பிச்சு எதை எழுதுனாலும் நம்பிடறாங்க.. அவங்களை எல்லாம் நினைச்சா எனக்கு பாவமா இருக்கு....

6. இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனை தி மு க வின் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா?

ம். அதனாலதான் பல்லைக்கடிச்சுக்கிட்டு ராம்தாஸ் கூட எல்லாம் கூட்டணி வைக்க வேண்டியதா இருக்கு. 10 சீட்டுக்கு பம்புன ஆள் கூட இப்போ 30 சீட்டுக்கு மேல வாங்கிட்டாரு.காங்கிரஸ் வேற ஆட்சில பங்குனு குண்டைத்தூக்கிப்போடறாங்க... பார்ப்போம்.முடிஞ்சவரை அடுத்த ஊழல் பண்ண சான்ஸ் கிடைக்குமா?ன்னு பார்க்கறேன். முடியலைன்னா இதுவரைக்கும் பண்ணுன ஊழல் பணத்தினை வெச்சு 5 வருஷம் தாட்ட வேண்டியதுதான்.
http://www.vinavu.com/wp-content/uploads/2010/06/karunanidhi.jpg
7. ஆ ராசாவை கைது பண்றப்ப உங்களுக்கு தகவலை சொல்லிட்டுத்தான் கைது பண்ணுனாங்களாமே...

ஆமா.. கூட்டணி தர்மம்னு ஒண்ணு இருக்கில்ல?

8. வரப்போகும் தேர்தலில் எந்தப்பிரச்சனை மையமா இருக்கும்?உங்க பிரச்சாரம் எதை முன்னிறுத்தி இருக்கும்?

எல்லாத்தேர்தல்லயும் சி எம் சீட்டு யாருக்கு? இதுதான் மையமா இருக்கும். நாடு எக்கேடு கெட்டு நாசமாப்போனா நமக்கென்ன?பதவிதானே நமக்கு முக்கியம்.மேடைல பேசறப்ப ஊழல் அற்ற ஆட்சின்னு உதார் விடுவோம். தனியா வீடு வீடா போய் ஒரு ஓட்டுக்கு ரூ 2000 தர்றோம்னு வாக்கு குடுப்போம்.

9. உங்க குடும்பமே சினி ஃபீல்டை ஆக்ரமிச்சு இருக்கறதா குற்றச்சாட்டு இருக்கே?

அட.. அறிவு கெட்ட ஜனங்களே...சினிமாத்துறைக்கு சலுகைகளை வாரி வாரி தர்றேனே எதுக்கு? மக்கள் வரிப்பணத்துல கிடைச்ச பணத்தை தமிழ் டைட்டிலுக்கு வரி விலக்குனு அள்ளி விடறது எதுக்கு..? எல்லாம் சுய நலம் தான்.அதுவுமில்லாம சினி ஃபீல்டை மட்டுமா நாங்க ஆக்ரமிச்சு இருக்கோம்?டி வி மீடியா கூட எங்க கட்டுப்பாட்டுல தான்.அவ்வளவு ஏன் ?இப்போ பேட்டி எடுக்கற குமுதமே கூட இப்போ என் பினாமி தானே....
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZKRbOQ3Uw088X_BzU9b9EirMJWTygPuTs0znS3IgAjYJn0em9aNcJx9HOiwZVINv0oh5u-Lxw_gScJYsJXr-ST0IBQ_l3CD3-iqw1PJXEJkqiciwjUFaK4vUI3GqzQolO6N0Ijph-p5-A/s1600/tamilmakkalkural_kalavanigal_anbucartoons.jpg
10. இலங்கைத்தமிழர்கள். மீனவர்கள் பிரச்சனை பற்றி என்ன நினைக்கறீங்க..?

அந்தப்பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கப்படாமல் அப்படியே இருக்கனும்.அப்போத்தான் தேர்தல் வாக்குறுதி தர்றப்ப 6-வது முறையாக நான் ஆட்சிக்கு வந்தால் இலங்கைத்தமிழர்கள். மீனவர்கள் பிரச்சனைஅனைத்தையும் தீர்ப்போம்னு சொல்ல முடியும்.இப்பவே தீர்த்துட்டா எதை வெச்சு பிழைப்பை ஓட்டறது?

11. மு க ஸ்டாலின் அண்மைக்காலமாக அபாரமாக உழைத்து வருகிறாரே...
அவரு கவலை அவருக்கு.. ஆட்சி அழகிரி கைக்குப்போயிடக்கூடாதுன்னு பார்க்கறார்.

12. கனி மொழியும் இப்போது அரசியல் பணி ஆற்றி வருகிறார்,அதைப்பற்றி?

எப்படியோ.. தமிழ்நாட்டை எங்க பரம்பரை இன்னும் 100 வருஷம் ஆனாலும் விடாம சுரண்டுவாங்க..

13. நீங்க ஓய்வின்றி உழைக்கிறீர்களே... அது ஏன்?

இதென்ன கேள்வி,, கொஞ்சம் ஏமாந்தா வேற யாராவது ஊழல் பண்ணிடுவாங்க.. முழுக்க முழுக்க எல்லா ஊழலையும் நாங்க தான் பண்ணனும்.

14. நீங்க 75 வருஷமா சினி ஃபீல்டுல இருக்கீங்க.. அப்போ.. இப்போ என்ன வித்தியாசம்?

அப்போவெல்லாம் என் வசனத்திற்காகவே படம் ஓடுச்சு. இப்போ என் வசனம்னு சொன்னாலே கட்சிக்காரன் கூட காத தூரம் ஓடறான். இளைஞன் படம் ரிலீஸ் ஆன 2 வது நாளே ஊத்திக்கிச்சு.. ஆனா ஒரு கவுரத்துக்காக பிரம்மாண்ட வெற்றின்னு கலைஞர் டி வி ல போட்டு ஒப்பேத்திட்டிருக்கோம்.

15. கலைஞர் சிறு குறிப்பு வரைகன்னு கேட்டா என்ன பதில் சொல்வீங்க?

உலக பணக்காரர் வரிசையில் முதல் இடம் லட்சியம்,ஆசியப்பணக்காரர் வரிசையில் முதல் இடம் நிச்சயம்.
16. பத்திரிக்கையாளர் சோ உங்க மேல கடுமையா தாக்குறாரே ஏன்?

நான் ஒரு தலித் என்பதால் இருக்கலாம்.என்னால சரியா பதிலடி கொடுக்க முடியாம போச்சுன்னா இந்த ஜாதி மேட்டரை கைல எடுத்துக்குவேன். ஒரு பய கேள்வி கேட்க முடியாது.


டிஸ்கி 1 - குமுதத்தில் கேட்கப்பட்ட கேள்விகளை கொஞ்சம் நறுக் சுருக் ஆக்கி எடிட் செய்திருக்கிறேன்.கலைஞரின் பதில்களில் அவரது தமிழ் நடை வராது. ஏன் எனில் மனசாட்சியின் குரலாகத்தான் பதிவு செய்திருக்கிறேன். மனசாட்சிக்கு நடிக்கத்தெரியாது.

டிஸ்கி 2- தொடர்ந்து மிரட்டல்கள் வருவதால் எனது செல் ஃபோனில் புது நெம்பர் வந்தால் நான் எடுப்பதில்லை. எனவே பதிவுலக நண்பர்கள் என்னுடன் பேச விரும்பினால் முதலில் உங்கள் செல் ஃபோனில் இருந்து மெசேஜ் அனுப்பி இன்னார் தான் அன்னார் (அதாவது நீங்க)என சொல்லி அப்புறம் பேசவும்.

டிஸ்கி 3 - மேலே சொன்ன டெக்னிக், பதிவர்களுக்கு மட்டுமே.. என்னை மிரட்ட நினைப்பவர்கள் அதே ஐடியாவை ஃபாலோ பண்ணக்கூடாது... ஹி ஹி