Tuesday, February 11, 2014

பொண்டாட்டிங்க பெட் காபி சாப்பிடறதில்லை, ஏன்? ஒரு ரகசியம்

1. சினிமாப்பார்த்து அதை விமர்சனம் செய்பவன் மனிதன்.அந்த விமர்சனத்தைக்கூட விட்டு வைக்காம விமர்சனம் செய்பவன் மாமனிதன்



==========================



2 பால் உற்பத்தியாளர் தங்கள் போராட்டத்துக்கு பாலை நிலத்தில் ஊற்றிப்போராடுவது அறியாமை ,மூடத்தனத்தின் உச்சம்



======================



3 ஜெ - நான் ஒரு தடவை பிரதமர் ஆகிட்டா ஆண்டவனே வந்தாலும் இந்தியாவைக்காப்பாத்த முடியாது # கற்பனை



=========================



4 ட்விட்டரை ஓப்பன் பண்ணி சத்தமே இல்லாம வேடிக்கை பார்க்கும் தமிழன் யாராவது பொண்ணு எதேச்சையா உள்ளே வந்தா டபார்னு என்ட்ரி ஆகி நலம் விசாரிப்பான்



=========================




5 இந்தியா வில் வாக்கப்பட்டாலும் சோனியா இத்தாலியர்தான்.பாகிஸ் தான் க்கு வாக்கப்பட்டாலும் சானியா மிர்சா இந்தியர் தான் # தமிழேண்டா




==========================



6 இந்தியாவின் அடுத்த பிரதமரும் ,தமிழ் நாட்டின் அடுத்த முதல்வரும் இப்போ கொல்கத்தா வில் முகாம்



===========================




7 டேமேஜரை விட அதிக இன்சென்ட்டிவ் நீ வாங்கினா அதை எல்லார்ட்டயும் ( ஆபீசுக்குள்) பெருமையா சொல்லிட்டிருக்காதே! # ஆபீஸ் விதிகள்



=========================



8 கவுண்டமணி ,வடிவேல் ,சந்தானம் காமெடிகளை விட தமிழ் இனத்தலைவர் காமெடிதான் என்னை அதிகம் கவர்ந்தது



=========================


9 சரவணன் சுப்பையா வின் சிட்டிசன் படத்தை ஷங்கர் இயக்கி இருந்தால் அதன் ரீச் &ரிச் இன்னும் பிரமாதமாய் இருந்திருக்கும்



========================



10 கனிமொழிக்கு காய்ச்சல் அடிப்பதால் அவரை 2 ஜி வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் -,தமிழ் நாட்டு சாணக்கியர் உருக்கமான வேண்டுகோள்



==========================


11 டார்கெட் அச்சீவ் பண்ணவங்களுக்குத்தான் சம்பளமாம்.வாடகை வந்து வாங்கிக்கச்சொல்லி ஹவுஸ் ஓனர்ட்ட ஆபீஸ் அட்ரஸ் கொடுத்திட்டோம் # யாரு கிட்டே



==========================



12 காலேஜ் போலாமா வேணாமா னு மத்தியானம் 2 மணிக்கு ஒரு பொண்ணு கேக்குதுன்னா அது ஈவ்னிங் காலேஜ் படிக்கறதா இருக்கும்


===========================



13 பொண்ணுக்கு வாய் நீளமா இருந்தா ஐ மீன் வாயாடியா இருந்தா நீளா னு பேர் வைக்கலாமோ?



========================



14 காலை ல ஆபீஸ் வந்ததும் கூந்தலில் சூடிய பூச்சரத்தை கேன்ட்டீன் பிரிட்ஜ் ல வெச்சு டோக்கன் போட்டுட்டு மாலை மீண்டும் தலையில் சூடிக்குது ்





======================


15 இஞ்சி இடுப்பழகி நீ என்னருகில் இருந்தாலே படிக்காமலேயே நீ இஞ்சி NEAR ( இஞ்சினியர்) ஆகி விட மாட்டாயா?



========================



16 மிக பிரபல ட்வீட்டர்களின் ட்வீட்ஸ் ,பாலோயர்ஸ் விகிதம் = 3:1 , பிரபலம் = 5:1 , ஓரளவு = 10:1 # என்னுது 7:1 ,அதாவது 7 ட்வீட்ஸ் க்கு 1 ஆள்



============================



17 விகிதாச்சார அடிப்படையில் தோட்டா முதல் இடம் 1 ட்வீட்க்கு 1 பாலோயர் .அரட்டை கேர்ள் 2 ம் இடம் 2 ட்வீட்க்கு 1 பாலோயர்



=====================



18 வெள்ளிக்கிழமை ஆகிட்டா பொண்ணுங்க தவறாம கோயிலுக்கும் ,பசங்க தவறாம சினிமா தியேட்டருக்கும் போயிடறாங்க




========================



19 அந்தக்காலத்துல எல்லாம் புருசன் மேல தெரியாம கால் பட்டா பொண்டாட்டிங்க கண் ல ஒத்திக்குவாங்க.இப்போ கால் ல உதைச்சு எழுப்பறாங்க ;-)


=======================



20 பொண்டாட்டிங்க பெட் காபி சாப்பிடறதில்லை.கிச்சன் ரூம் லயே ஆத்தி ஊத்திக்கறாங்க



============================


புற்று நோய் வராம இருக்க பாம்புப்புற்றுக்கு பால்!!!!!

1.பெண்கள் கூந்தலில் சூடிக்கொள்ளக்கூடாத பூ தாமரை,அரளி.சூட முடியாத பூ - காலி பிளவர் ,வாழைப்பூ



======================



2 பொண்ணுங்க கிட்டே எனக்குப்பிடிச்சதே மத்த நாள் ல எப்படியோ வெள்ளிக்கிழமை மட்டும் காலைல நேரத்துலயே அதாவது 7 மணிக்கே எழுந்துடுவதுதான்


=======================


3 லேடி யிடம் போட்டி இட்டு ஜெயிச்சவங்க கூட 1,2 இருக்கலாம்.மோடி யிடம் மோதி ஜெயிச்சவங்க யாரும் இல்ல # பிஜேபி க்கு பேனர் ஐடியா


=================


4 நைட் 11 வரை சீரியல் பார்க்கும் சம்சாரத்துக்கு டெய்லி நைட் 8 மணிக்கே சாப்பாட்ல தூக்க மருந்தை கலந்து குடுத்துடனும்


======================



5 இந்த தொழில் அதிபர்ங்க எல்லாம் நடிகைகளாப்பார்த்து கல்யாணம் பண்ணிக்குவதில் ஏதாவது உளவியல் ரீதியான காரணம் இருக்குமோ?



=======================



6  உங்காள் பட ஷூட்டிங் பாக்க 10000 பேர் வருவாங்களா? எங்காள் பட ஷூட்டிங் வேடிக்கை பாக்கவே நாளை 7 லட்சம் பேர் # எப்பூடி




=======================


 7  கொல்கத்தாவில் நாளை நரேந்திர மோடி கூட்டம்: 7 லட்சம் தொண்டர்கள் குவிகிறார்கள்...# முருகதாஸ்க்கு செம சான்ஸ்.அதை அப்டியே ஷூட் பண்ணி யூஸ்


==========================


8  தினத்தந்தி நிருபர் ட்விட்டர் ல இருக்கார் போல.ரம்மி விமர்சனத்துல ஹீரோயின் க்கு அகல் விழி னு வர்ணிச்சிருக்காரு # ஷப்பா



=====================



9 ஆபீஸ் ல லேடி ஸ்டாfஸ் அரட்டை அடிக்காம நோட்டும் கையுமா இருந்தா கிட்டக்கா போய்ப்பாருங்க.கோலம் போட்டுட்டோ எதுனா வரைஞ்சிட்டோ இருப்பாங்க



=======================


10 அவனவன் ஒரு சம்சாரத்துக்கு எடுபுடி வேலை செய்யவே முடியாம கிடக்கான்.ஊர் ல பாதிப்பேரு 2 , 3 கட்டிட்டு ஜாலியா இருக்கானுங்களே எப்டி?



==========================


11  மடில பூனையை வெச்சுக்கிட்டு மாடில வினை யை வெச்சிருந்த மாதிரி ……


=======================


12 எந்தப் பெண்னைப்பார்த்தாலும் உன் நினைவு தான் வருது என எல்லாப்பெண்களிடமும் அடிச்சு விடுவான் தமிழன்


=======================



13  முதல் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் 2வது மனவியோடு தலைமறைவு #விரைவில் 3 வது மனைவி செட் ஆக வாழ்த்து


==========================


14 கோழிக்கொண்டைப்பூ வை பாகை மாணி வடிவில் ஆண் மயில் தோகை விரிப்பது போன்ற தோற்றத்தில் கூந்தலில் சூடி இருக்கு ஒரு பொண்ணு .சூப்பரு



========================



15  காதலிக்கு யெல்லொ ,ரெட் ரோஸ் குடுப்பது நல்லதாம்.மஞ்சள் = மங்களகரம் . சிவப்பு = குங்குமம் ,ரத்தம்



===========================


16 புற்று நோய் வராம இருக்க பாம்புப்புற்றுக்கு பால் ஊற்றுவான் தமிழன் # புற்று நோய் ஒழிப்பு தினம்



============================



17 ஒரு பத்திரிக்கை ஆபீஸ் ல போன் பண்ணி சீரியசா ஏதாவது ட்வீட் போடுங்கண்ணாங்க.இனி முகத்தை உம்மு னு வெச்சுக்கனும் ட்வீட்டும்போது




=========================


18 உழவர் சந்தைக்கோ ,காய்கறி மார்க்கெட்டுக்கோ போகும் பெண் தற்காலிக வக்கீல் ஆகிறார் # பேரம்



==========================



19 நாம நல்லவரா இருப்பதை விட முக்கியம் நம் மனதுக்குப்பிடித்தவர் நாம் ஏதும் சொல்லாமல் அவர்களாகவே நம்மைப்பற்றி நல்ல விதமாய் நினைப்பது




============================


20 என்ன தான் சீரியல் னாலும் மாமியார் மாப்ளையை அறையும் காட்சி பார்த்து எனக்கு ரத்தம் கொதிக்குது.ஆனா 1 ம் பண்ண முடியாது ;-)



==============================

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் கதை என்ன?

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள படத்திற்கு தோட்டா ராய் செளத்ரி வில்லனாக நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. 


விஜய் 'ஜில்லா' படத்தினைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. 


இப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கி நடைபெற்றது. சமந்தா நாயகியாக நடிக்க இருக்கிறார். வில்லனாக யார் நடிக்கவிருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. 


இந்நிலையில் பெங்காலி நடிகர் தோட்டா ராய் செளத்ரி வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தில் தோட்டா வெளிநாட்டு தாதாவாக நடித்து வருகிறார்.
கதைப்படி, இவரை பிடிப்பதற்காக கொல்கத்தா போலீஸ், விஜய்யின் உதவியை நாடுகிறது. விஜய்யின் உதவியால் தாதாவை பிடித்து ஜெயிலில் அடைக்கிறார்கள். 


ஜெயிலில் இருந்து தப்பிக்கும் வில்லன், விஜய்யை கொலை செய்யத் தேடுகிறான். அப்போது தான் விஜய் தோற்றத்தில் இருவர் இருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது. இறுதியில் என்னவாகிறது என்பது தான் படத்தின் கதை. 


இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். நாளை முதல் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஜெயில் காட்சிகள் அனைத்தையும் ராஜமுந்திரியில் படமாக்க இருக்கிறார்கள். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. 

 thanx - the tamil hindu


a





a






அக்கடான்னு நாங்க சரக்கடிச்சா துக்கடான்னு நீங்க எடை போட்டா தடா

1. 2009ல் கைதான விபச்சார வழக்கு... புவனேஸ்வரிக்கு ரூ. 3000 'ஃபைன்'! # அஞ்சு வருசம்.ஒரு ஆட்சியே நடந்து முடிஞ்சாலும் வழக்கு முடியாது போல



====================


2 நஸ்ரியா என் தங்கச்சி மாதிரி: சொல்கிறார் மம்மூட்டி மகன் # பாஸ்! அப்போ டூயட் ,கிஸ் சீன் ல நடிக்கும்போது சங்கடமா இருக்காது?


=====================


3 ஜாக்கிசான் ன் போலீஸ் ஸ்டோரி பாகம் 6 சீனாவில் மட்டும் 400 கோடி வசூல் - செய்தி # ஜில்லா ரேஞ்ச்க்கு இருக்கும் போலயே



========================


4 டெல்லியை விட தமிழ்நாட்டில் தான் மின் கட்டணம் குறைவு! - நத்தம் விஸ்வநாதன் # நல்ல வேளை.ரேப் க்ரைம் ரேட்டிங் ஒப்பீடு செய்யல



==========================


5 காளி அம்மனுக்கு பூஜை போட்டாலும் நம்ம தலை எழுத்து சரி இல்லைன்னா நாம காலி ஆகிடுவோம்.விதி நல்லாருந்தா ஜாலி ஆவோம்


======================


6 : ஏப்ரல் 11 கோச்சடையான் வெளியீடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு # 11 4 2014 =கூட்டுத்தொகை 4 வருது .ரஜினி =3 கோச்சடையான் =6 மேட்ச் ஆகலையே?



==========================


7 எதிர்க்கட்சிகளின் வீழ்ச்சிக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்களே காரணம்: ஜெ# எலிக்கு மரண வலியாம்.பூனைக்கு கொண்டாட்டமாம்



=======================



8 காரைக்குடியில் தமிழ் அமைப்புகள் நடத்திய தமிழ்விழா # கேப்டனைக்கூப்பிடலையா? அவரும் தமிழ்க்குடி மகன் தானே?


======================


9 விஜய் - முருகதாஸ் காம்ப்போ படம் கொல் கத்தா வில் இன்று படப்பிடிப்பு துவக்கம் # இதுல ஒரு குறியீடு இருக்கு.புரிஞ்சவங்க சிரிச்சுக்கலாம்



=======================



10  எங்களின் வாக்கு வங்கி "சுருங்கி"விட்டது - பீட்டர் அல்போன்ஸ் # முருங்கைக்காய் சாம்பார் சாப்ட்டுப்பாருங்க.பெரிய மாற்றம் கிடைக்கும்



=======================


11  ஆம் ஆத்மி குற்றச்சாட்டுக்கு ஜெட்லி கண்டனம் # ஜெட்லிக்கு தமிழ் தெரியுமா? ஓ.இது வேற ஜெட்லியா


======================



12  ஹன்சிகா பிறந்தநாளுக்கு சிம்பு அரண்மனை வடிவில் பெரிய கேக் கொடுத்தார், சிம்பு பிநாளுக்கு ஹன்சிகா சின்ன கேக் தான் கொடுத்தார் # நீதி -ஹிஹி


========================


13 அழகிரி மூலம் மு.க. ஸ்டாலினுக்கு ஆபத்து: -ஜெ # எதிர்க்கட்சி 2 பட்டா ஆளுங்கட்சிக்கு கொண்டாட்டம்


==========================



14  சம்பளமே வாங்காமல் தனுஷ் படத்தில் நடனமாடினார் சிவகார்த்திக்கேயன் # இந்தியப்பொருளாதாரமே இதனால் உயர்ந்து சென் செக்ஸ் 1000 புள்ளி உயர்வு




======================


15 திருச்சி மாநாடு கட்சிக்கு ஒரு திருப்பு முனையாக இருக்கும் - கலைஞர் # தலைவா! நேர் வழி ல போனா திருப்பு முனையே வராது,ஹி ஹி



=====================


16 தேமுதிகதான் அடுத்து ஆட்சியில் உட்காரப்போகிறது! - விஜயகாந்த் # அக்கடான்னு நாங்க சரக்கடிச்சா துக்கடான்னு நீங்க எடை போட்டா தடா .



=======================



17   பாஜக கூட்டணியில் விஜயகாந்த் சேரவேண்டும்! - எஸ்.வி.சேகர் # தாமரைப்பூவுக்கும் ,தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல.மாமனை அள்ளி நீ



========================



18 இளைஞர்களைக் கெடுக்கவேண்டுமென்பதற்காக டாஸ்மாக் கடைகளை திறந்துவைக்கிறார்கள்! - கேப்டன் # ராம்தாஸ் கூட கூட்டணி போல?



==========================


19  பாஜகவிற்காக இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்வேன்! - எஸ்.வி.சேகர் # ஓ சி ல ஆல் இந்தியா டூர் .அடிச்சு விடுங்க



=======================



20  இளைஞர் படை இருக்கும்போது என்னால் நாட்டை சுத்தப்படுத்தமுடியும்! - விஜயகாந்த் # சுத்தப்படுத்த விளக்குமாறு கூட கூட்டு.ஆம் ஆத்மி.சிக்னல்



=====================


 21  நாட்டை நல்ல வழியில் நடத்திச்செல்லுங்கள் என்றுதான் கேட்கிறேன்! - விஜயகாந்த் # சாலை ஓரம் டாஸ்மாக் இருந்தாலே அது நல்ல வழிதான் கறாரா?



============================

22   மாநாட்டில் 25லட்சம் பேர் கலந்து கொண்டனர்! - பிரேமலதா # நுட்பமா படிக்கனும்." கலந்து" கொண்ட னர் . செம சரக்கு போல


===========================



23   இனி போலீசாக நடிக்கமாட்டேன்! - விஜயகாந்த் # அரசியல் வாதி ஆகிட்டாலே போலீசைப்பிடிக்காதோ ?


=======================

 24  நான் மோடியின் கொள்கை பரப்பு செயலாளரோ, ஜெ விின் ஆலோசகரோ அல்ல: சோ # நல்லவேளை .துக்ளக் ஆசிரியர் நான் இல்லைனு சொல்லல


======================


25  பாலா படம் - 12 பாடல்களை பதிவு செய்த இளையராஜா - # படம் ரிலீஸ் ஆனதும் ட்ரிம்மிங் கற பேர்ல 6 பாட்டு எப்டியும் கட் பண்றது தானேவழக்கம்?



======================


26  மக்களுடனே கூட்டணி அமைப்போம்.- ஸ்டாலின் # ஆனா சொந்த அண்ணனை விரட்டி விடுவோம்.தமிழேண்டா


==============================




Monday, February 10, 2014

பிஸினஸ் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு

மனத்தடையை உடைத்து வெளியே வாருங்கள்: போர்சியா மெடிக்கல் சி.இ.ஓ மீனா கணேஷ் சிறப்புப் பேட்டி

நம் நாட்டில் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கையே மிகவும் குறைவு. அதிலேயும் பெண் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கையைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் பெண்ணாகவும் இருந்து தொடர் தொழில்முனைவோராகவும் (serial entrepreneur) இருப்பது குறிப்பிடத்தகுந்தது. சில நிறுவனங்களை ஆரம்பித்து அதை மற்ற நிறுவனங்களுடன் இணைத்து இப்போது போர்சியா மெடிக்கல் (Portea Medical) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மீனா கணேஷ் சென்னை வந்திருந்தார். ஒரு காலை பொழுதில் பிஸினஸ் மற்றும் வாழ்க்கை குறித்து அவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த உரையாடலில் இருந்து.. 



உங்களின் ஆரம்ப காலம் பற்றி சொல்லுங்கள்? 



அப்பா ரயில்வேயில் இருந்ததால் ஒரு நிலையான இடத்தில் இருந்தது கிடையாது. பத்தாவது வரை கொல்கத்தாவில் படித்தேன். அதன் பிறகு சென்னை டபிள்யூ.சி.சி. கல்லூரியில் இயற்பியல் படித்தேன். பிறகு கோல்கத்தாவில் இருக்கும் இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் மேனேஜ்மென்டில் நிர்வாகப்படிப்பு படிக்கச் சென்றேன். 


இயற்பியல் படித்து எதற்காக நிர்வாகப்படிப்பு படித்தீர்கள்? 



என்னுடைய அண்ணன் ஐ.ஐ.எம்.-கோல்கத்தாவில் படித்தார். அதனால் நானும் அங்கு படிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதை தவிர பெரிதாக ஒன்றும் காரணம் இல்லை. இதுதான் படிக்க வேண்டும் என்ற இலக்கும் இல்லை. அண்ணன் படித்தார் நானும் படித்தேன். இத்தனைக்கும் எனக்கு ஐ.ஐ.எம். ஆமதாபாத், ஐ.ஐ.எம். பெங்களூரு, ஐ.ஐ.எம். கோல்கத்தா என மூன்று கல்லுரிகளிலும் எனக்கு இடம் கிடைத்து. கோல்கத்தாவில் அண்ணன் படித்தார், மேலும் கோல்கத்தாவில் என்னுடைய ஆரம்ப காலம் இருந்ததால் ஐ.ஐ.எம். கோல்கத்தாவில் படித்தேன். 



பெரும்பாலும் ஐ.ஐ.எம்.-ல் படிப்பவர்கள் என்ஜீனியரிங் பின்னணியில் இருந்து வந்திருப்பார்கள். அவர்களுடன் எப்படி சமாளித்தீர்கள்? 

 
முதலில் அங்கு அனைவரும் புதியவர்கள். எனக்கு சில விஷயம் தெரியாது அவர்களுக்கு சில விஷயம் தெரியாது. அப்படியே கற்றுக்கொள்ள வேண்டியதுதான். உதாரணத்துக்கு டெல்லியில் பொருளாதாரம் படித்துவிட்டு வருபவர்களுக்கு கணிதம் கடிமாக இருக்கும். எங்களுக்கு கணக்குப்பதிவியல் கடினமாக இருக்கும். 


ஐ.ஐ.எம்.க்கு பிறகு என்ன செய்தீர்கள்? 

 
1985-ம் ஆண்டு முதல் 92-ம் ஆண்டுவரை என்.ஐ.ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அதன் பிறகு பிரைஸ்வாட்டஹவுஸ் கூப்பர்ஸ் (PricewaterhouseCoopers) நிறுவனத்தில் இரண்டரை வருடங்களும் மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்தில் 5 வருடங்களும் வேலை செய்தேன். 


என்.ஐ.ஐ.டியில் நான் சேரும்போது அது சிறிய நிறுவனம். அதனால் நான் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. மைக்ரோசாப்டில் சில புதிய பிஸினஸ் யூனிட்களை ஆரம்பித்தேன். அதன்பிறகு கஸ்டமர் அசெட் என்ற பி.பி.ஓ நிறுவனத்தை ஆரம்பித்தேன். 


மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனத்தில் இருந்து வேலையை விடும்போது, ஏன் வேலையை விடவேண்டும் என்கிற ரீதியில் கருத்து சொல்லி இருப்பார்களே? 

 
சொன்னார்கள்தான். இருந்தாலும் மைக்ரோசாப்டில் நான் தனியாக சில பிஸினஸ் பிரிவுகளை உருவாக்கி இருந்தேன். அந்த நம்பிக்கையில்தான் புதிய நிறுவனத்தை ஆரம்பித்தேன். 


மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய டெக்னாலஜி நிறுவனத்தில் வேலையில் இருந்து விட்டு டெக்னாலஜி சார்ந்த நிறுவனம் ஆரம்பிக்காமல் ஏன் பி.பி.ஒ நிறுவனம் ஆரம்பித்தீர்கள்? 

 
நான் நிறுவனம் ஆரம்பிக்க இருந்த சமயத்தில் டெக்னாலஜி சேர்ந்த நிறைய நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. மேலும் ஒர் நிறுவனம் ஆரம்பிக்க வேண்டாம் என்று பி.பி.ஓ. நிறுவனம் ஆரம்பித்தேன். 


நிறுவனம் ஆரம்பிப்பதற்கான முதலீடு? 

 
என்னிடம் பெரிய தொகை ஏதும் இல்லை. கிட்டத்தட்ட 100 சதவீத தொகையும் வென்ச்சர் கேப்பிட்டல் மூலமாகதான் திரட்டினேன். நிறுவனம் வளர்ந்த பிறகு ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்துக்கு விற்றுவிட்டேன். 


அதன் பிறகு? 

 
இங்கிலாந்தின் முக்கிய ரீடெய்ல் நிறுவனமான டெஸ்கோ நிறுவனத்தின் ’பேக் ஆஃபிஸ்’ வேலைகளை இந்தியாவில் செய்வதற்கு என்னை அழைத்தார்கள். அதற்கு பொறுப்பேற்று அந்த நிறுவனத்தில் இருந்து வெளியே டியூடர் விஸ்டா (tutorvista) என்னும் நிறுவனத்தை ஆரம்பித்தேன். இது ஓரு ஆன்லைன் டியுஷன் நிறுவனம். இதுமட்டுமல்லாமல் கல்வி சம்பந்தமாக பல வேலைகளை இந்த நிறுவனம் மூலம் செய்துவந்தோம். பள்ளிகளுக்கு டெக்னாலஜி மூலம் தீர்வுகளை கொடுத்தோம். 


அதன்பிறகு 2011-ம் ஆண்டு அந்த நிறுவனத்தை விற்றுவிட்டோம். லாக்-இன் காலம் இருந்ததால் பிப்ரவரி 2013 வரை அங்கி இருந்தேன். அதன் பிறகு இப்போது போர்ஷியா மெடிக்கல் என்ற டெல்லியை சேர்ந்த நிறுவனத்தை வாங்கி அதை நடத்திக்கொண்டிருக்கிறேன். 


இதற்கு இடையில் நானும் 11 நிறுவனங்களில் (delyver, online prasad, must see india, bluestone உள்ளிட்ட 11 நிறுவனங்கள்) strategic முதலீடு செய்திருக்கிறேன். 


ஒரு நிறுவனத்தை ஆரம்பிப்பதும், விற்பதுமாக இருந்தால் வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் உங்களை எப்படி நம்புவார்கள்? இது உங்களுக்கு பாதகமாக இருக்காதா? 


வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்கள் இதை வேறு மாதிரி பார்ப்பர்கள். அவர்கள் முதலீடு செய்யும் போது குறிப்பிட்ட காலத்துக்குள் வெளியேறுவதுதான் அவர்களது திட்டமாக இருக்கும். 


இதுவரை நான் ஆரம்பித்த நிறுவனத்தில் வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்கள் எளிதாக வெளியேற முடிந்திருப்பதால், இது எனக்கு சாதகமே. அதாவது என் பிஸினஸ் வெற்றிகரமாக இருந்தால்தான், என்னுடைய பிஸினஸை இன்னொருவர் வாங்குவார்கள், அப்போதுதான் என் நிறுவனத்தில் முதலீடு செய்த வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்கள் வெளியேற வாய்ப்பு கிடைக்கும். 


போர்ஷியா மெடிக்கல் என்ன மாதிரி நிறுவனம்? 

 
360 டிகிரி மருத்துவ சேவை கொடுக்கும் நிறுவனம் இது. டாக்டர், பரிசோதனை மைய வசதி, வீட்டுக்கே மருத்துவர்களை அனுப்பவது, நீண்டகால நோய்களுக்கு சிகிச்சை எடுப்பவர்களை பராமரிக்க நர்ஸ்களை அனுப்புவது, வயதானவர்களை பராமரிப்பது, சிகிச்சைக்கு பின் தேவையான பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளை நாங்கள் கொடுக்கிறோம். 


இந்தியாவில் குடும்ப டாக்டர் அமைப்புதான் இருக்கிறது. வீட்டுக்கே மருத்துவர் வருவதை மக்கள் ஏற்பார்களா? மேலும், குடும்ப டாக்டர்களுக்கு தன்னுடைய நோயாளிகளை பற்றி முழுவதுமாக தெரிந்து வைத்திருப்பார்களே! நீங்கள் எப்படி இதை சரி செய்ய முடியும்? 


நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் குடும்ப மருத்துவர் என்ற அமைப்பு இப்போது நகரங்களில் குறைந்து கொண்டிருக்கிறது. போக்குவரத்து நெருக்கடியில், தரமான சிகிச்சை வீட்டிலே கிடைக்கும் என்றால் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். 


இரண்டாவது, குடும்ப மருத்துவருக்கு தன்னுடைய நோயாளியை, பற்றி எல்லாம் தெரியும்தான். அதேபோல தான் எங்களிடமும். டெக்னாலஜி மூலம் ஒரு நோயாளியின் அத்தனை தகவல்களையும் எங்களுடைய மருத்துவர் படித்துவிட்டுதான் நோயாளியை பார்க்கச்செல்வார். 


பெரும்பாலும் மருத்துவர்கள் ஒரு கார்னர் அறையில் இருந்துக்கொண்டு சிகிச்சை அளிக்கத்தானே விரும்புவார்கள்? தினமும் வெளியே செல்லவேண்டும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? 

 
அவர்கள் எங்களிடம் பணிபுரியும் முழுநேர மருத்துவர்கள். மேலும் அவர்கள் வெளியே செல்வதற்கு ஏற்ப அதிகமான ஊதியம் கொடுக்கிறோம். அதனால் வெளியே செல்ல தயாராக இருக்கிறார்கள். 


பிஸினஸ் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு? 


ஆண் பெண் பேதம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக பிஸினஸுக்கு ஆண் பெண் பேதம் கிடையாது. அவர்கள் என்ன சொல்லுவார்கள் இவர்கள் என்ன சொல்லுவார்கள் என்பதையும் தங்களிடம் இருக்கும் மனத்தடையையும் உடைத்துவிட்டு வந்தால், வெளியே பெரிய பிஸினஸ் உலகம் காத்திருக்கிறது. 


மீனா கணேஷ், தலைமை செயல் அதிகாரி, போர்சியா மெடிக்கல். 


thanx - the hindu

நினைவில் நின்றவள் - சினிமா விமர்சனம்

 
தினமலர் விமர்சனம்

எஸ்.வி.சேகரின் வாரிசு அஸ்வின் சேகர் நாயகராக நடித்து வெளிவந்திருக்கும் மற்றுமொரு படம்! இப்பட இயக்குநர் அகஸ்திய பாரதி அறிமுக இயக்குநர், இப்படம் வெளிவருவதற்குள்ளாகவே இயற்கை எய்திவிட்டார் என்பதால் அவரது இரண்டு கல்லூரி படிக்கும் பெண் வாரிசுகளையும் இப்படவெளியீட்டிற்கு முன்பாக அழைத்து தலா ஒரு லட்சம் என ஆக மொத்தம் 2 லட்சங்கள் கொடுத்து 'நினைவில் நின்றார்' எஸ்.வி.சேகர். இனி படம் 'நினைவில் நின்றதா?' என பார்ப்போம்...


காவல்துறை அதிகாரி மகள் கீர்த்தி சாவ்லா சுற்றுலா செல்கிறார். அங்கு 'கைடு' ஆக வரும் அஸ்வின் சேகரின் கனிவான குணம், கசிந்துருகும் மணம் கீர்த்தியை கவருகிறது. அஸ்வின் மீது கீர்த்தி ஒருதலைகாதலில் விழுகிறார். காதலை அஸ்வினிடம் சொல்வதற்கு முன் அஸ்வின் 'எஸ்' ஆகிறார். மீண்டும் ஒரு கொலை கைதியாக அஸ்வினை சிறையில் பார்க்கிறார் கீர்த்தி சாவ்லா! ஏன்? எதற்கு.? எப்படி..? இருவரும் க்ளைமாக்ஸில் ஜோடி சேர்ந்தனரா? இல்லையா.? என்பது சஸ்பென்ஸான மீதிக்கதை!


அஸ்வின் சேகர், கீர்த்தி சாவ்லா, எஸ்.வி.சேகர் எல்லோரும் நடித்திருப்பது பலம். நாடகத்தன்மையில் நடித்திருப்பது பலவீனம்! சோனா ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் போட்டிருப்பது ஆறுதல்! சோனாவின் ஆட்டம் மாதிரியே டி.இமானின் இசையும் பெரும்பலம்!

இயக்குநர் அகஸ்திய பாரதி இறைவனடி சேர்ந்துவிட்டதால் அவரது இயக்கம், விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகி விடுகிறது.

ஆகமொத்தத்தில், 'நினைவில் நின்றவள்' வெளியீட்டில் எஸ்.வி.சேகர், இப்படத்தின் இயக்குநர் குடும்பத்திற்கு செய்த உதவி மட்டுமே 'நினைவில் நிற்கிறது!'
thanx - dinamalar 



  • நடிகர் : அஸ்வின் சேகர்
  • நடிகை : கீர்த்தி சாவ்லா
  • இயக்குனர் :அகஸ்திய பாரதி

பெண்ணின் நிர்வாணப் படம் என்பதாலேயே அது ஆபாசமாகி விடாது: உச்ச நீதிமன்றம்


பெண்ணின் நிர்வாணப் படம் என்பதாலேயே அது ஆபாசமாகி விடாது: உச்ச நீதிமன்றம்

பாலியல் உணர்வை தூண்டுவதாக இருந்தால், நிர்வாணப் படத்தை ஆபாசமானது எனலாம். மற்றபடி, நிர்வாணப்படம் என்பதால் மட்டுமே அது ஆபாசமாகிவிடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 


ஜெர்மனி டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கருடன் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பார்பரா பெல்டஸ் என்ற பெண் நிர்வாணமாக இருக்கும் படம் ஒன்றை பத்திரிகை ஒன்று 1993ல் வெளியிட்டிருந்தது. இது தொடர்பான வழக்கில், இந்த தீர்ப்பை பிறப்பித்தது உச்ச நீதிமன்றம். 


மேலும், சம்பந்தப்பட்ட பத்திரி கைக்கு எதிரான வழக்கையும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு ரத்து செய்தது. 


தீர்ப்பு விவரம்: 


ஆபாச எண்ணத்தை தூண்டு வதாக உள்ள பாலியல் வக்கிர படங்களை ஆபாசமாக கருத லாம். தீய எண்ணத்தை காட்டுவதா கவும் பாலியல் வெறியை தூண்டு வதாகவும் இருக்கும் படங்களை ஆபாச படங்களாக கருதலாம். அதுவும் அந்த படங்களின் பின்னணி மற்றும் தன்மையைப் பொறுத்ததாகும். 


நிகழ் சமூகத்தின் தரத்தை வைத்து, சராசரி நபரின் கண் ணோட்டத்தில் ஆபாசத்தை எடை போடவேண்டும். காலத்துக்கேற்ப ஆபாசம் பற்றிய கோட்பாடு மாறும். 


ஒரு காலத்தில் ஆபாசமாக கருதப்படுவது பிறிதொரு காலத்தில் ஆபாசமாக கருதப்படமாட்டாது. 


தனக்கு நிச்சயிக்கப்பட்ட கருப்பு இன பெண் பார்பரா பெல்டஸுடன் நிர்வாண கோலத்தில் பெக்கர் இந்த படத்தில் இருக்கிறார். 


நிறவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், காதலுக்கு ஆதரவு தரவேண்டும் என்ற செய்தியை சமூகத்துக்கு தெரிவிக் கும் அடையாளமாகவே இந்த படம் அமைந்திருக்கிறது. 


நிறம் முக்கியமல்ல. நிறத்தைவிட காதலே பிரதானமானது என்பது இந்த புகைப்படம் முன்வைக்கும் செய்தி. வெள்ளை நிறத்தவருக்கும் கறுப்பு இனப் பெண்ணுக்கும் இடையேயான காதல் மலர்ந்து அது திருமணத்தில் முடிய உதவி யிருக்கிறது. 


எனவே பத்திரிகையில் வந்த செய்தி, படத்தை அது சொல்ல வந்த நோக்கத்தை புரிந்து மதிப்பிட வேண்டும். அதன்படி பார்த்தால் ஸ்போர்ட்ஸ் வோர்ல்ட் மற்றும் ஆனந்த பஜார் பத்திரிகையில் வெளியான இந்த படம், கட்டுரையை ஆட்சேபத்துக்குரியது என சொல்ல முடியாது. பார்பரா பெல்டஸின் மார்பகமானது போரிஸ் பெக்கரின் முழங்கைகளால் மறைக்கப்பட்ட இந்த படம் இருக்கிறது. இது அரை நிர்வாண புகைப்படம்தான். ஆனால் இந்த படத்தை எடுத்தவர் வேறு யாருமல்ல. பார்பராவின் தந்தை. மேலும் இந்த படம் உள்ள ஸ்போர்ட்ஸ் வோர்ல்ட், மற்றும் ஆனந்த பஜார் பத்திரிகையானது யார் கைக்காவது கிடைத்து அந்த படத்தை பார்த்தால் அது அவர்களது ஆபாச வெறியை தூண்டிவிடப் போவதில்லை. 


இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் நன்கு யோசித்து செயல்பட்டு எந்த பின்னணியில் இந்த படம் காட்டப்பட்டுள்ளது என்பதை உணர்ந்திருக்க வேண்டும். 


ஜெர்மன் பத்திரிகையில் வெளியான கட்டுரையில் ஜெர்மனியில் காணப்படும் நிறவெறி, பாகுபாடு குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் போரிஸ். ஜெர்மனியில் நிலவும் நிறவெறி பற்றி போரிஸ் பெக்கர் தெரிவித்த எதிர்ப்பு கருத்துகளை இந்த கட்டுரை கூறுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர். 


இந்த படம் முதலில் ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டென் பத்திரிகையில் வெளியானது.. பிற்பாடு ஸ்போர்ட்ஸ் வோர்ல்ட், ஆனந்தபஜார் பத்திரிகையில் 1993ல் வெளியானது. 


இதை எதிர்த்து சம்பந்தப்பட்டவர் கள் மீது கொல்கத்தாவில் உள்ள வழக்கறிஞர் ஒருவர் புகார் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட், பத்திரிகைகளின் ஆசிரியர், வெளியீட்டாளர் உள்ளிட்டவர்களை விசாரணைக்கு அழைத்தார். 


அதைத் தொடர்ந்து வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த பத்திரி கையும் பிறரும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுகினர். உயர் நீதிமன்றம் வழக்கை ரத்து செய்யாததால் உச்ச நீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. 



readers views 

சரியா போச்சு, பெண்னின் நிர்வான படம் கறுத்து சொல்லுதா! இவ்வளவு கேவளமாவா யோசிப்பீங்க! தன் மகளை, மணைவியை, சகோதரியை, தாயை இப்படி உலகத்திற்க்கு காட்டி கறுத்து சொல்ல நினைத்துப்பார்க்க முடியுமா! எங்க போச்சு நாம் மார்தட்டிய கலாச்சாரம்னு தெரியவில்லை. எதிற்காலத்தில் என்ன சமூக அமைப்பை உருவாக்க துடிக்கிறோம் ! கடவுளே காப்பாற்று !


2   நிர்வாணம் தான் காட்டுமா கருப்பு வெள்ளை என்று ..முகம் காட்டாதோ.தயை கூர்ந்து தீர்ப்பு சொல்லும்முன் நிஜத்தை உணர்ந்து தீர்ப்பு சொல்லவும் .


3 சமூகப் பண்பாட்டை கட்டிக்காக்கின்ற கடமை நீதிபதிகளுக்கும் உண்டு என்பதை மறந்து, இத்தகைய தீர்ப்பை அளித்துள்ளார்கள்.!


12 Years A Slave - சினிமா விமர்சனம்

மறைக்க முடியாத கருப்புச் சரித்திரம்!

 

 

கலை நுட்பத்தினால், செங்கோலினால், ஈகையினால் இயற்றப்பட்ட வரலாற்றுக் கதைகளைக் காட்டிலும், கண்ணீரால், மனித அத்துமீறல்களால், செந்நீரால் தீட்டப்பட்ட வரலாற்றுக் கதைகளும், காப்பியங்களும் அதிகமாய் திகழ்கின்றன. 


NRI எனும் வார்த்தையை 'நான் ரிடர்னிங் இண்டியன்ஸ்' என்றே பலர் பெயர் சூட்டிவிட்டனர். புண்ணிய பூமியாக, சந்தர்ப்பங்களின் சொர்க்க பூமியாக அமெரிக்காவை எண்ணி அங்கேயே டேரா போடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடிக் கொண்டே தான் செல்கிறது. 


அமெரிக்கா உண்மையில் கடந்த வந்த பாதை என்ன? கொலம்பஸ்ஸினால் கண்டறியப்பட்ட இத்தேசத்தில் புதைந்து கிடக்கும் வரலாற்று இழிபாடுகளை மிகைபடுத்தப்படாத மனித உணர்ச்சிகளால் சித்தரித்துள்ளது '12 இயர்ஸ் எ ஸ்லேவ்' (12 Years A Slave). 



கதாநாயகன் சாலமன் வயலின் வாசிப்பதில் வித்தகர். நியூயார்க்கில் மனைவி, மக்களுடன் மகிழ்ச்சியாக வாழும் நாயகனை இரண்டு நபர்கள் அணுகுகிறார்கள். தாங்கள் சர்க்கஸ் கலைஞர்கள் என்றும், 'இப்போது வாஷிங்டனில் நடக்கவிருக்கும் எக்ஸிபிஷனில் நீங்கள் எங்களுக்காக வாசிக்க வேண்டும். வாசிக்கும் பட்சத்தில் ஒரு கணிசமான தொகை உங்களுக்கு தருவோம்' எனக் கூறுகின்றனர். 

 
நாயகன் இவ்விருவருடன் வாஷிங்டனிற்கு செல்கிறார். அங்கு ஒரு பாரில் தன்னை மறந்து குடிக்கும் நாயகன் மயக்கமுற, அழைத்து வந்த இருவரும் இவரை படுக்கையில் உறங்க வைக்கின்றனர். 


கண் கூச சாலமன் மெல்ல இமைகளை திறந்து, கால்களை இழுத்துப் பார்கிறார். ஏதோ தடுக்க, எழுந்து பார்க்கையில் அவர் கைகளும், கால்களும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தது. சாலமனை அழைத்து வந்த இருவர் காசுக்காக சாலமனை அடிமை என்று விற்றுவிட்டதை பிறகு உணர்கிறார். அரசாங்கத்தினால் அடிமை அல்ல என அங்கீகரிக்கப்பட்ட நாயகன் அவ்விரு மனித நரிகளின் பணத்தாசைக்கு பலிகடாவாகிறார். 


அன்று முதல் ஒரு தவறும் செய்யாது, தன் நிறத்தின் காரணமாக பன்னிரெண்டு வருடம் அடிமைப்படுத்தப்பட்ட சாலமன் எனும் மனிதரை பற்றிய கதை தான் இப்படம். 1853 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட சாலமனால் இயற்றப்பட்ட '12 இயர்ஸ் எ ஸ்லேவ்' எனும் புத்தகத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் இயக்கப்பட்டுள்ளது. 


சாலமனை பற்றிய கதை என்று மட்டும் இக்கதையை விவரிக்க இயலாது. இவர் சந்தித்த நல்லவர்-கெட்டவர், மேம்பட்ட மனிதர்கள், இழி பிறப்புகள், அப்பிராணிகள், சுயநலவாதிகள், சந்தர்ப்பவாதிகள் இவர்கள் யாவரும் இக்கதையின் அங்கத்தினர்கள். 


எதிர்ப்பாரா திருப்பங்களுக்கு இடம் அளிக்காத போதும் இப்படம் நம்மை ஈர்க்கத் தவறுவதில்லை. காரணம் இது ஒரு வரலாற்று பெட்டகம். இதில் வரும் நிகழ்வுகள் அமெரிக்காவுக்கு மட்டுமோ அல்லது அங்கு வாழ்ந்த மக்களுக்கு மட்டுமோ உரித்தான ஒன்றல்ல. பல தேசங்களில் இழைக்கப்பட்ட தீண்டாமை போன்ற அநீதியை, மனித இழிபாடுகளை இதில் வரும் கதைமாந்தர்களோடு நம்மால் ஒப்பிட்டு கூற முடியும். 


தெய்வத்தின் பெயரால், சர்வாதிகாரத்தின் பெயரால், சாதி சமயத்தின் பெயரால், மொழியின் பெயரால் இன்று கூட பல மக்களுக்கு நிந்தனைகள் நிகழ்த்தப்பட்டு தான் வருகிறது. நிறத்தின் பெயரால் விதிக்கப்பட்ட அநீதியை தான் இப்படம் விவரிக்கிறது. 


படத்தில் சாலமனின் தோழி சக அடிமை ஒருத்தி அழுது கொண்டே இருக்கிறார். ' நீ இப்போ அமைதியா இரு. இல்லைன்னா உன்னால உயிரோடு இருக்க முடியாது' – சாலமன். அவளோ 'நான் இனி உயிருடன் இருந்து என்ன பயன். என் பசங்களை என் கூட வெச்சு காப்பாத்த எதை எல்லாம் விற்கக் கூடாதோ அத்தனையும் செய்து விட்டேன். செய்யாத இழி செயல் இல்லை. கடைசில இப்போ என் குழந்தைகளும் என் கிட்ட இல்லை. இதுக்கு மேல எதுக்கு வாழணும்' என்று புலம்பிக் கதறுகிறாள். இக்காட்சி நடக்கும் மறுபுறத்தில் இவர்களின் முதலாளி இயேசுவிற்கு நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை பற்றிய கதையைச் சொல்லி 'இதை எப்படி பொறுத்துக் கொண்டாரோ ஆண்டவன்' என்று வியக்கிறார். கண்ணுக்கு தெரியாத கடவுளுக்காக வருந்தும் மனிதம் கண்முன் இருக்கும் மனிதருக்கென வருகையில் மழுங்கடிக்கப்படுவதை உணர்த்தி அக்காட்சி சடார் சடார் என்று சாட்டையடி அடிக்கிறது. 


 
தொழிலாளிகளை தன் பொழுது போக்கிற்காக ஆடச் சொல்கிறார் முதலாளி. அப்போது மனதில் விரத்தி, பயம், பிரிவுகளை சுமக்கும் அடிமை மக்கள் ஏனோ தானோ என்று கைகளை அசைக்கின்றனர். முதலாளியின் மனைவி அங்கே ஆடும் ஒரு பெண்ணின் நளினமற்ற ஆட்டத்தை கண்டு சினமுற்று அவள் மீது விஸ்கி பாட்டிலை வீசுகிறாள். நெற்றி கிழிகிறது. அதை பார்த்து நின்ற மக்களை 'நீங்கள் ஆடுங்கள்.. என் சந்தோஷத்தை கெடுக்காதீர்கள்' என்று முதலாளி கூறுகிறார். 



இதைப் போன்ற பல காட்சிகள் அமெரிக்காவில் மனிதத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட பல வன்கொடுமைகளை சித்தரிக்கிறது. கலையம்சத்துடன் செதுக்கப்பட்ட இப்படைப்பு கண்டிப்பாக உங்களை சோகத்தின் குழியில் தள்ளிவிடப் பார்க்கவில்லை, மாறாக மனிதத்தின் தேவையை உரத்து உரைக்கின்றது. 


சவுக்கினால் அடிக்கப்பட்ட வரலாற்றை அன்பினால், கண்ணீரால் துடைக்கப் பார்க்கும் இப்படம், ஆஸ்கர் விருதுக்கு ஒன்பது பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இப்படம் கண்டிப்பாக ஆஸ்கர் விருதுகளை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

thanx - the tamil hndu

கட்டுரையாளரின் ஃபேஸ்புக் பக்கம் https://www.facebook.com/CinemaPithan


 

பொண்ணுங்க கூலிங் கிளாஸ் போடுவ்தை வன்மையாக எதிர்க்கிறேன்.

1 நாம் வாழ்வதற்கான தொழில் ,நமக்கு விருப்பமான தொழில் இரண்டும் வேறு வேறாக இருப்பது தான் காலதேவன் நமக்குக்கொடுக்க்கும் சாபம்


======================


2 ஒருவரை ஒரு முறை காப்பாற்றினால் காலம் முழுவதும் அவரைக்காப்பாற்ற வேண்டிய பொறுப்பு சில சமயம் நமக்கு வரக்கூடும்


=====================


3  கேப்டன் கையில் சரக்கே.அவருக்கு சைடு டிஷ் என்றும் முறுக்கே # மாநாடு கேப்ட்டன் பாட்டில் ஓப்பனிங் ஷாங்


=======================



4 கேப்டன் டி வி ல லைவ் தொடங்கியாச்.ஆனா யாரும் பதற வேண்டாம்.4 மணி நேரம் ஆகும்.மப்பு தெளிய.சாரி முடிவு அறிய



========================


5   மேடம்.நீங்க இது வரை வாசிச்சதுல எது பிடிச்சது? ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்? ஹெரால்டு ராபின்சன்?



 ஆண்ட்ரியா = 2ம் இல்லை.அனிரூத் வாசிச்ச மவுத் ஆர்கன்



========================


6  நான் சின்னப்பையனா இருக்கும்போது மஞ்ச சட்டை போட்ட பையன் ,மஞ்ச ஜாக்கெட் போட்ட பொண்ணு இவங்க தான் மஞ்ச மாக்காங்கனு நினைச்ட்டு இருந்தேன்



========================



7 ரேடியோ ஜாக்கிக்கெல்லாம் மாசா மாசம் 1 ந்தேதி நிர்வாகம் கூலிங் கிளாஸ் தருதாம் # ட்விட்டர் கிசு கிசு



=======================


8  வேண்டாத விரோதி = மாமியார் ,வேண்டப்பட்ட விரோதி = சம்சாரம்



======================


9  நான் சின்னப்பையனா இருக்கும்போது சுபாங்கி ன்னா பேங்க் ல ஒர்க் பண்ற பொண்ணுனு நினைச்சுட்டு இருந்தேன்



===================



10 நந்தியா வட்டை மலர்க்கண்காட்சி ! நீ வெள்ளந்தியாய் சிரிக்கையில்.



=====================



11பேச நேரம் ஒதுக்க நேரம் இல்லை எனில் ஒதுக்குவதாகவும் ஒரு அர்த்தம் உண்டு



============


12 நீ பேசாமல் இருப்பது வேண்டுமென்றே செய்யும் புறக்கணிப்பு என்பது என் கணிப்பு



========================



13 கொய்யாப்பழத்தின் வாசம் போல் அறை எங்கும் பரவி நிறைகிறது உன் அன்பு



======================


14 காலில் எங்கே அடிபட்டாலும் தொடையில் நெறி கட்டுவது மாதிரி என்னை நீ வழியில் எங்கே பார்த்தாலும் உன் நடை நெகிழ்கிறதே எப்படி?



======================



15 வெற்றிலை சாப்பிடும் முன் காம்பைக்கிள்ளி எறிவது மாதிரி உன் அன்றாட வேலைப்பளுவில் எனை நீ மறந்தாய்!




========================



16 அன்பு வைத்த நபரால் நேரம் ஒதுக்கப்படுபவர்கள் ,அன்பு வைத்தவரால் ஒதுக்கப்படுபவர் என உலகில் இரு பிரிவினர் உண்டு



=========================



17 யாரிடமும் கைமாத்து ( கடன்) கேட்கக்கூடாது.ஆனா இப்போ " கை" மாத்திடனும் .தாமரை வரனும்


=====================



18 கண்ணே! என்னை விட நீ குட்டையாக இருந்தால் என்ன? செம கட்டையாக இருக்காயே! உன் மடியில் மட்டையாகி விழுந் தேனே!



=========================



19 மில்க் பிக்கீஸ் பிரிட்டானியா 10 ரூபா pkt் ல 14% XTR A னு போட்டிருக்காங்க.எண்ணிப்பாத்தேன்.16 பிஸ்கெட் இருக்கு # கவுன்ட்டவுன் கண்1000



========================


20 பொண்ணுங்க கூலிங் கிளாஸ் போடுவ்தை வன்மையாக எதிர்க்கிறேன்.ஆல்ரெடி உங்க கண் குளிர்ச்சியாதானே இருக்கு?



=======================

Sunday, February 09, 2014

பச்சையும் சிவப்பும் ஒண்ணாச்சேர்ந்தா மாஸ் டா

1. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடித்தால் நான் யோசித்த டைட்டில் 1 அற்புதன் 2 கனவான் ( dreamer,gentleman) 3, கண்ணியன் 4 தலையாய தரன்



=======================



2  டிபனுக்கும் லன்ச்சுக்கும் இடைவெளி 5 மணி நேரம். ஆனா லன்ச்க்கும் டின்னருக்கும் இடைவெளி 7 மணி டின்னர் டூ அடுத்த நாள் டிபன் 12 மணி நேரம்



======================

 3  ஒரு பொண்ணு அடிக்கடி சாரி கேக்குதுன்னா அது சுடி தான் போட்டிருக்கும் என அறிக


==========================


4 கேப்டனை யாரும் எள்ளி நகையாடாதீர். சாதாரண" குடி "மகனால் கூட சி எம் ஆக முடியும் என மக்கள் மனதில் நம்பிக்கை " ஊற்றிய" தலைவர் அவர்



==========================



5  வாக்கிங் போறதை விட பெரிய விஷயம் வாக்கிங் போனதுக்கு எவிடென்ஸ் ரெக்கார்டை பொண்டாட்டி கிட்டே சப்மிட் பண்றது # டீச்சரைக்கட்னா இப்டித்தான்



=======================


6 பச்சையும் சிவப்பும் ஒண்ணாச்சேர்ந்தா மாஸ் டா #,அதிமுக + கம்யூனிஸ்ட்



=====================



7 ஹெம்மிங் ஊசி ல நூல் கோர்க்கத்தெரியாத ,பாசி மாலை ல மணி கோர்க்கத்தெரியாத பொண்ணா இருந்தாலும் பொது வாழ்வில் நம்மை கோர்த்து விட்டுடுவாங்க;-)



=====================

 8 ட்வீட் போட கவர்னரே வந்தாலும் கமுக்கமா வந்தமா 4 ட்வீட் போட்டமானு கிளம்பிடுவாரு.ஆனா தமிழன் மட்டும் தான் நான் வந்தாச்சு ,னு ஓப்பனிங் பில்டப்


=======================


9  பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு யாரும் யாரையும் அண்ணா னு கூப்பிட வேணாம்.நாட்டுக்கு ஒரு அண்ணா தான் # எஸ்கேப் 7 மலை



===========================


10  இந்த வருசம் ஒரு சிறப்பு 4 4 14,6 6 14 8 8 14 10 10 14 ,12 12 14 எல்லாம் வெள்ளிக்கிழமை வருது # வெட்டியா தான் இருக்கேன்



=======================


11 இன்னைக்கு சிம்புக்கு பிறந்தநாளாம்.பிரபுதேவா ,ஆர்யா வுக்கு இன்னைக்கு நைட் தூக்கம் வராது


======================



12 இந்த சமூக சூழலில் வார்த்தைகளைத்தெரிவு செய்து பேசும்போது ஆண் கவனமா இருக்கனும்.பொண்ணுங்க என்ன பேசுனாலும் யாரும் கண்டுக்க மாட்டாங்க


========================


13 வாரத்துல மத்த நாள் எல்லாம் ஏதோ வெட்டி முறிச்ச மாதிரி திங்கட்கிழமை ஏதோ தர்மத்துக்கு ஆபீஸ் கிளம்பற மாதிரி சலிச்சுக்குவான் தமிழன்


====================



14 நாளை - சார்.நேத்து நைட் தான் தனித்துப்போட்டின்னீங்க? இப்போ கூட்டணி சொல்றீங்க? அரசியல்வாதி பேச்சு விடிஞ்சாபோச்சு


========================



15 தமிழ் இனத்தலைவர் - தோல்வி நிலையென நினைத்து மனிதன் கூட்டணியை நினைக்கலாமா?,அழகிரி இழந்தோம் ,கேப்டனை இழந்தோம்.



=====================


16 கூட்டம் முடியும் வரை தனக்கு முன்னால் பிரேமலதாவை உக்கார வைத்து தன் கண் பார்வையிலேயே வெச்சிருந்தாரே ஆகா # கேப்டன்டா


======================


17 சார்.நிஜமாவே தனியா தான் போட்டியா? கூட்டணி இல்லையா?



,கேப்டன் - சும்மா டிமாண்டை ஏத்தி விடத்தான்.எங்களுக்கும் சாணக்கியத்தனம் தெரியும்



========================


18  தொண்டர்களே! இருந்து " சாப்டுட்டு" திருப்தியா வீட்டுக்குப்போங்க - கேப்டன் # ஒரு குடிமகனோட கஷ்டம் இன்னொரு குடிமகனுக்குத்தான் தெரியும்


======================


19  போலீஸ்க்கும் கலெக்டருக்கும் மட்டும் நன்றி சொல்ல மாட்டேன்.எவ்ளவ் கொடுமை செஞ்சாங்க ?-விஜய்காந்த்# கேப்டன் பிரபாகரன்லயா?


=====================


20 புருசன் சொல்றாரு.பொண்டாட்டி அதை திருப்பி சொல்லுது.ஆஹா! எல்லா பொண்டாட்டிங்களும் நல்லா பார்த்துக்குங்க


======================


21 டிரைவரை பகல்ல அடிப்பாராம்.நைட் தோசை வாங்கித்தருவாராம்.தில் இருந்தா சம்சாரத்தை ஒரு வாட்டி அடிச்சுப்பாருங்க



==========================


22 தனக்கு முன்னால தன் சம்சாரம் உக்காந்திருந்தும் எப்டிப்பேசறார் பாருய்யா.நாமும் தான் இருக்கோமே!


=====================



23 புரட்சித்தலைவி கூட ஜெயா டி வி பாக்காம கேப்டன் டி வி லைவ் பாத்துட்டு இருக்காராம் # கேப்டன் பாறைகள்



========================


24 இந்தியாவிலயே ஏன் இந்த உலகத்துலயே தண்ணி மப்புல கூட மேடை ஏறி தெளிவாப்பேசறது எங்க கேப்டன் தான்



======================



25   மேரேஜ் ஆன புதுசுல டெய்லரிங் ஒர்க் எல்லாம் தெரியும் னு சம்சாரம் கிட்டே சொன்னது தப்பா போச்சு.சன்டே ஆனா ஜாக்கெட்க்கு கொக்கி வைக்கும் வேலை



==============================