Sunday, February 09, 2014

அய்யய்யோ மேடம்.இது என்ன பூரான் கடிச்சிருச்சா?

1. அய்யய்யோ மேடம்.இது என்ன பூரான் கடிச்சிருச்சா? கை பூரா இப்டி சிவப்பா திட்டுத்திட்டா தடிச்சிருக்கு ?


யோவ்.அது மெஹந்தி


நாசமாப்போச்சு


==============================


2 டியர்.உங்க வீட்டுக்குப்பக்கத்துல மாங்கா மரம் இருக்கா?


ஒய்? 



போன் பன்றக்கு கூட நேரம் இல்ல னு வாய் கூசாம அடிச்சு விடறியே?



=================================



3 நாளைக்கு லீவ் வேணுமா? போன வாரம் தானே லீவ் எடுத்தீங்க? 



சார்.நேத்து கூடத்தான் நீங்க ரிசப்ஷனிஸ்ட் கிட்டே கடலை போட்டீங்க.இன்னைக்கு போடல?



==============================


4 டியர்.என்னை உண்மையா லவ் பண்றீங்களா? சூடத்தை அணைச்சு சத்தியம் செய்ங்க




நான் லவ் பண்றது உன்னையா? கற்பூரத்தையா? உன்னையே அணைச்சு சொல்றேனே?




===============================



5 டாக்டர்.நான் ராஜ பரம்பரை.புற முதுகு காட்ட மாட்டேன்.



சொன்னா கேளுங்க.மேடம்.சில ஊசிகளை பின்னால தான் போடனும்




=====================


6 இன்று மதியம் அழகிரியை சந்திக்கிறார் ஸ்டாலின். # அக்னி நட்சத்திரம் பிஜிஎம் ஓட விடனும்.பாதுகாப்புக்கு பி எம் மிலிட்ரியை விடனும்




===========================


7 மாடு 1 - நீ ஏன் நுனிப்புல் மேயறே?




மாடு 2 - அப்போதான் மறுபடி வளர்ந்த பின் மறுபடி மேய முடியும்



========================



8 கட்டில் செய்பவரை ஏன் அரெஸ்ட் பன்றீங்க? 



அவர் 45 கட்டில் செஞ்சுட்டார். COT 45 = SIN 90 ஆச்சே? 90 குத்தம் பண்ணா சும்மா விட்ருவோமா?



==============================



9 நாட்டுப்புறத்தான் = கள்ளக் காதலிக்கு எதிர்ச்சொல்
நல்லக் காதலியா., கள்ளக்காதலனா.?  




பதில் = நல்லா காதலிக்காதே



=========================



10 ரஜினி - ஐ ஆம் கமிங் ஆன் த வே @ 11 4 2014 



, ஷங்கர் = "ஐ" ஆல்சோ ;-))



==========================


11 உளரல் ,உளறல் எது சரி டீச்சர் ?



கொஞ்சமா உளறுனா சின்ன ர ,தண்ணியைப்போட்டுட்டு விடிய விடிய உளறுனா பெரிய ற


=======================



12 ஏய் மிஸ்டர்.நீங்க ஏன் சென்ட்டே போடறதில்லை? நான் டெய்லி சென்ட் போடுவேன்.



 மிஸ்! நான் டெய்லி குளிச்சுடுவேன்.வாய்க்கால் ல தண்ணி ஓடுது



==========================


13 எங்கயாவது காளைய அடக்குனா பொண்ணு தருவாங்களா?



ம்ஹூம்.அடங்கிப்போகிறவனைத்தான் பொண்ணு கட்டிக்கும்



============================


14 ஜட்ஜ் - லாட்ஜ் ரெய்டில் மாட்டிய வழக்கில் 3000 ரூபா அபராதம்



 .நடிகை புவனேஸ்வரி = யுவர் ஆனர்.பணமா தான் கட்டனுமா? கழிச்சுக்கலாமா?



========================



15 மேடம்.ரெய்டோ ,அரெஸ்ட் வாரன்ட்டோ வராததுக்கு முன்பே ஏன் ஹாஸ்பிடல் ல அட்மிட் ஆகிட்டீங்க?



வரும் முன் காப்பான் தமிழன் கான்செப்ட் தான்



=====================


16   ஜட்ஜ் - சைபர் க்ரைம் குற்றவாளியா நீ? என்ன செஞ்சே?



 கைதி = மேத்ஸ் ல சைபர் மார்க் போட்ட டீச்சரை கொலை பண்ணிட்டேன்



==========================



17  மேடம்.நீங்க யாரோட கூட்டணி வைப்பீங்க?



 9 தாரா - நானும் கேப்டன் மாதிரி ஆண்டவனுடன் மட்டும் தான் கூட்டணி.அதாவது என்னை ஆல்ரெடி ஆண்டவன்


============================


18   டைரக்டர் - மேடம்.வில்லன் ரேப் பண்ண வரும்போது நீங்க கதறி அழறீங்க



.பூனம் பாண்டே - அடடா.கண்ணீர் வராதே.பேசாம இணங்கிடறேனே.அது ஈசி



==================================


19 கிளாமர் நடிகை - என் கிட்டே என்ன இருக்குன்னு இத்தனை பேர் என் ரசிகர்கள் ஆகி இருக்காங்க ?



மேடம், அதை கண்டு பிடிக்கத்தான். ரசிகர்கள் ஆகி இருக்காங்க ,ஜாக்கிரதை



=======================



20  எந்தக்கருத்தும் சொல்லாம ஏன் அமைதியா இருக்கீங்க?



சார்.மீட்டிங் நடக்கும்போது யாரும் பேசக்கூடாது னு நீங்க தானே சொன்னீங்க ?



========================




எட்டுத்திக்கும் மதயானை'- இயக்குநர் பேட்டி

புதியவர்களின் யதார்த்தம் ரசிக்கவைக்கிறது- 'எட்டுத்திக்கும் மதயானை' இயக்குநர் பேட்டி


ஒரு சாதாரண மனிதன் யதார்த்த வாழ்க்கையைக் கையில் எடுத்துக்கொள்ளும்போது சுற்றி இருக்கும் கட்டமைப்புகள் அவனுக்கு எதிராக மாறுகின்றன. உதவி என்ற உன்னதமான ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தும்போது அவமானப்படுத்தப்படுவதும், கட்டம் கட்டப்படுவதும் அவனைத் தொடரத்தான் செய்கிறது. இப்படி எட்டுத்திக்கும் மதயானையாக சூழும் பிரச்சினைகளை என் ஹீரோ எப்படி எதிர்கொள்ளப்போகிறான் என்பதை கொஞ்சம் காமெடி கலந்து எமோஷனலாக சொல்லியிருக்கேன்’’ என்கிறார் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி.



‘ராட்டினம்’ படம் வழியே அறியாமைக் காதலின் விளைவை படம்பிடித்துக் காட்டியவர், தன் 2-வது படமான ‘எட்டுத்திக்கும் மதயானை’ படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யாவை ஆக்ரோஷ நாயகனாகக் களத்தில் இறக்கி மதயானைகளோடு மோதவிட்டிருக்கிறார். கே.எஸ்.தங்கசாமியை சந்தித்துப் பேசியதிலிருந்து..



நீங்கள் சொல்லும் கதைக் களத்துக்கு ஒரு மாஸ் ஹீரோவை இறக்கியிருக்கலாமே?


தனக்கென்று தனி இமேஜ் உள்ள நடிகர் இந்த கதைக்கு தேவை யில்லை. இந்த கதைக்கு இவர்தான் பொருத்தமானவர் என்கிற கட்டத்தை உடைக்கவே புது நடிகர்களை, தொழில் நுட்பக் கலைஞர்களை தொடர்ந்து களமிறக்குகிறேன். எந்த அளவுகோலும் இல்லாமல் திறந்த வெள்ளைப் புத்தகமாக வரும் கலைஞனைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. ‘நான் நடிக்கிறேன்’ என்று வருபவர்களைவிட, சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாமல் வெளியில் பார்ப்பவர்களை நடிக்க வைக்கும்போது அவர்கள் கொடுக்கும் யதார்த்தம் மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது.


இந்த படத்தில் ஆர்யா தம்பி ஹீரோ என்கிற இமேஜ் இருக்கிறதே?


சத்யாவுக்கு இது 2-வது படம். முதல் படம் அவருக்கு பெரிய இமேஜ் எதையும் கிரியேட் பண்ணலை. அப்படியான அந்த இமேஜ்தான் எனக்குத் தேவைப்பட்டது. இந்த படத்துக்குப் பிறகு, அவருக்கென்று தனி இமேஜ் உருவாகிவிடும். இன்னொரு விஷயம், ஆர்யாவின் தம்பி என்பதை அவர் எந்த இடத்திலும் கொஞ்சம்கூட காட்டிக்கொள்ளவில்லை. சமயத்தில் உரிமையோடு கோபப்பட்டாலும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் முழு ஈடுபாட்டோடு நடித்துக் கொடுத்திருக்கார்.



அவருடன் அறிமுக நாயகி ஸ்ரீமுகி. ‘ராட்டினம்’ பட நாயகன் லகுபரண், துர்கா, சாம் ஆன்டர்சன், ‘அசத்தப்போவது யாரு’ ராஜ்குமார், ஸ்ரீனிவாசன், சீமர், பானுசந்தர் இப்படி நல்ல டீமோடு சேர்ந்து விளையாடி இருக்கிறார் சத்யா. இந்த படத்தில் சத்யாவின் வேலையைப் பார்த்து ஆர்யா தன் தயாரிப்பு பேனருக்கே ஒரு படம் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.


கமர்ஷியல், புரமோஷன் எல்லாம் புதியவர்களுக்கு அவசியம்தானா?


இயக்குநர்கள் தங்களோட திறமையை நிரூபிக்க புரமோஷன், கமர்ஷியல் அவசியம் இல்லை. ஹீரோ, தயாரிப்பாளர்களுக்கு வேண்டு மானால் கமர்ஷியல் படங்கள் நல்லது. இயக்குநர்களைப் பொருத்தவரை தயாரிப் பாளரும் ஹீரோவும் சுதந்திரமானவராக அமைந்தாலே போதும். மக்களுக்கு அவசியமான விஷயத்தை முழுமையாக படைக்க முடியும். ‘ராட்டினம்’ படம் நல்ல பேரை வாங்கிக்கொடுத்தாலும் பெரிதா புரமோஷன் இல்லாததால் அடுத்த பட வேலைகளை தொடர முடியாமல் இருந்தது. அந்த நேரத்தில் நல்ல நண்பர்கள் ஒன்றிணைந்ததால் இந்த படம் சாத்தியமானது.


ஒரு சினிமா பாடல் வரியைக் கேட்டுதான் இந்த படத்துக்கு பெயர் வைத்தேன். கலிங்கத்துப்பரணியிலேயே இந்த வரிகள் வருகின்றன. இந்த பெயரில் நாஞ்சில் நாடன் நாவல் ஒன்று இருப்பதுகூட பிற்பாடு நண்பர்கள் சொல்லித்தான் தெரியும்.


இயக்குநர் பாலாஜி சக்திவேலும் நீங்களும் ரூம் மேட்டாமே?


தூத்துக்குடியில் இருந்து நடிக்க வந்தவன் நான். யார்கிட்ட போய் வாய்ப்பு கேட்பது என்று தெரியாமல் இருந்தவன். அறையில் மின்விசிறி சுற்றும். ஆனால் காற்று எங்கள் மீது வீசாது. அப்படி கழிந்த நாட்கள். இயக்குநர் ஏ.வெங்கடேஷ் அறையிலிருந்து கிளம்பிய நேரத்தில் நான் உள்ளே நுழைந்தேன். அப்போ பாலாஜி சக்திவேல் இயக்குநர் ஷங்கரின் உதவியாளர். நிறைய உற்சாகத்தை விதைப்பவர்.


 சோர்ந்து போக விடமாட்டார். நான், அவர், பொன்மாலைப்பொழுது இயக்குநர் துரை, கண்ணன், மார்கழி 16 பட இயக்குநர் ஸ்டீபன் எல்லோரும் கனவுகளோடு சுற்றித்திரிந்த காலம். எங்கள் வானத்தில் கனவு நட்சத்திரங்கள் மின்னிய காலமும் அதுதான். அப்போதான் இயக்குநர் கலைமணி சாரோட நட்பு கிடைச்சது. நடிக்கும் ஆசையை தள்ளி வைத்துவிட்டு அப்போதே அவரிடம் உதவியாளரா சேர்ந்தேன். அதற்கு பாலாஜி சக்திவேலின் வார்த்தைகள்தான் ஊக்கமாக அமைந்தது.



உங்களது மதயானைக் கோபம், தியேட்டருக்கு வந்த ரசிகர்களை எந்த மனநிலையோடு வெளியே அனுப்பும்?



பார்த்தோம், ரசித்தோம் என்று இருக்க விடமாட்டேன். ‘நானாக இருந்தாலும் இப்படி ஒரு கேரக்டராகத்தான் இருப்பேன்’ என்கிற உணர்வு, படம் பார்த்த ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஏற்படும்.


thanx - the tamil hindu 

சிவப்பு - இலங்கை அகதிகள் சம்பந்தப்பட்ட படம்?? - இயக்குநர் சத்யசிவா

இலங்கைத் தமிழர் உணர்வைக் காட்டும் ‘சிவப்பு’: இயக்குநர் சத்யசிவா

‘‘உணர்வுபூர்வமான விஷயங்களை ரொம்ப எந்திரத்தனமா சொன்னா எந்திரிச்சுப் போயிடுவாங்க. அதனால, படத்தோட போக்கை கொஞ்சம் மாத்தினேன். சுவாரசியமா கதை போயிக்கிட்டே இருக்கும். திடீர்னு நெஞ்சுல அடிக்கிற மாதிரி காட்சி இருக்கும். க்ளைமாக்ஸ் முடிஞ்சதும் ஒரு வலியோட எல்லாரும் வெளியே வருவாங்க. உண்மைய சொல்லிருக்கேன்’’ என்று ‘சிவப்பு’ படத்தைப் பற்றிக் கேட்டாலே ஆயிரம் வாட்ஸ் பல்பு போல சந்தோஷமாய் சிரிக்கிறார் இயக்குநர் சத்ய சிவா. ‘சிவப்பு’ படத்தைப் பற்றி அவரிடம் பேசியதில் இருந்து...


‘சிவப்பு’ எந்த மாதிரி கதைக்களம்..?



காதல் கதைதான். காதல்தான் முக்கியமா இருக்கும். அதைச் சுற்றி அரசியல், தமிழ் மக்களின் உணர்வுகள் இப்படி எல்லாமே கலந்திருக்கும். சென்னை, விசாகப்பட்டினம், தூத்துக் குடி, பாண்டிச்சேரி என கடல் சார்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கி றோம்.


ராஜ்கிரண், செல்வா, தம்பி ராமையா, நவீன் சந்திரா, ரூபா மஞ்சரி எல்லாருமே தங்கள் ரோலை சிறப்பா செஞ்சிருக்காங்க. ராஜ்கிரண் இதுவரை நிறைய படங்கள்ல நடிச்சிருக் காரு. ஆனா, எந்த ஒரு படத்தின் விளம்பரப் பணிக்கும் அவர் போன தில்லை. முதன்முதலா நம்ம படத்துக்கு வர்றதா சொல்லியிருக்கார். மது அம்பாட் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப் பெரிய பலம். என் வயசு அவரோட அனுபவம். அவரோட சேர்ந்து இந்த படத்துக்காக பணியாற்றியது மறக்கவே முடியாது. முக்கியமா, மனுஷ்யபுத்திரன் க்ளைமாக்ஸ்ல முக்கியமான கெஸ்ட் ரோல் பண்ணியிருக்கார்.


பட விளம்பரங்களைப் பார்த்தா இலங்கை அகதிகள் சம்பந்தப்பட்ட படம்போல தெரியுதே?


முழுக்க இலங்கை சம்பந்தப்பட்ட படம் கிடையாது. கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடம்தான் கதைக் களம். அங்கே ராஜ்கிரண் மேற்பார்வை யாளரா இருக்கிறார். அகதி முகாம்ல இருக்குறதுக்கு பலருக்கு விருப்ப மில்லை. அங்கிருந்து ஆஸ்திரேலி யாவுக்கு தப்பிச்சுப் போகணும்னு நெனைக்கிறாங்க. அங்கே போனா சீக்கிரம் குடியுரிமை வாங்கிடலாம்கிறது அவங்க எண்ணம். உயிரைப் பணயம் வைச்சு முகாம்ல இருந்து போறாங்க. அப்படி போறவங்க, சிலரால ஏமாற்றப் படுறாங்க. முகாமுக்கும் திரும்ப முடியாம, ஆஸ்திரேலியாவுக்கும் போக முடியாம தவிக்கிறாங்க. அப்போ.. ராஜ்கிரண்கிட்ட தஞ்சம் கேட்குறாங்க. அந்த இடத்துல இலங்கைப் பெண் ணுக்கும் தமிழ்ப் பையனுக்கும் நடக்குற காதல் கதை. அந்த காதலால் ஏற்படுற பிரச்சினைகள்தான் ‘சிவப்பு’ கதை.



உண்மையில் நடப்பதை கதையா பண்ணியிருக்கீங்களா?



சம்பவங்கள் உண்மை இல்லை. உணர்வுகள் உண்மை. கற்பனையையும் சேர்த்து சொல்லியிருக்கேன்.

இந்த மாதிரியான கதைகள்ல யதார்த்தம் ரொம்ப முக்கியம். ‘சிவப்பு’ அப்படி இருக்குமா?


இலங்கை சம்பந்தப்பட்ட படத்தை யதார்த்தமா எடுத்திருக்கேன்னு சொல் றதைவிட, படத்தோட தொடக்கத்துல இலங்கையோட வரலாற்றைச் சொல்லி யிருக்கேன். தமிழர்கள்லயே பலர் இலங்கை வரலாறு தெரியாம இருக்காங்க. இந்த படம் பார்த்தா இலங்கைக்கும் நமக்குமான உறவு என்ன, இலங்கைத் தமிழர்கள் யாரு அப்படிங்குற விஷயத்தை எல்லோரும் தெரிஞ்சுக்க முடியும். ரொம்ப ரிஸ்க் எடுத்து அதை சொல்லியிருக்கேன்.


அது இல்லாம, ஒட்டுமொத்தமா இலங்கைத் தமிழ் மக்களோட வேண்டு கோள் என்னங்கிறதை முகாம்களில் இருக்கிறவங்ககிட்ட கேட்டேன். ‘எல்லோருமே அங்கிருந்து தமிழ்நாட்டுக் குப் போகணும் நினைச்சு வர்றீங்க. இங்க வந்ததும் ஏன் ஆஸ்திரேலியா போகணும்னு நினைக்கிறீங்க?’ இப்படி நிறைய கேள்விகள் கேட்டேன். அவங்க சொன்னது பயங்கரமா பாதிச்சுது. அவங்க சொன்ன பதில்களை சேர்த்துதான் படமா பண்ணியிருக்கேன்.


‘தூங்கிட்டு இருப்போம். படபடன்னு ஹெலிகாப்டர் சத்தம் கேட்கும். உடனே எந்திரிச்சு ஏதாவது இடத்துல போய் உட்காந்துக்குவோம். இப்பவும் அந்த சத்தம் எங்களை ரொம்ப பாதிக்குது..’’ அப்படியெல்லாம் சொன்னாங்க. இதையெல்லாம் காட்சிகளா படத்துல வச்சிருக்கேன். இந்த படத்துல உணர்வுபூர்வ விஷயம் நிறைய இருக்கு.



இலங்கையைப் பற்றிய கதையை படமா எடுப்பது போராட்டமா இருந்திருக்குமே..?


‘சோகம் என்பது இலங்கையில இருக்கிறவங்களுக்கு மட்டுமில்ல.. இலங்கையைப் பத்தி படம் எடுக்கிறவங் களுக்கும்தான்’னு காமெடியா அடிக்கடி சொல்லுவேன். அது இந்த படம்மூலம் உண்மையா ஆயிடுச்சு. ‘இலங்கை சம்பந்தமான படமா.. அய்யோ பிரச்சினை வருமே’னு எல்லாரும் தயங்குறாங்க. ஒரு உணர்வை வெளிக்கொண்டு வரலா மேங்கிற எண்ணம் யாருக்கும் இருக்கிற தில்ல. இந்த படத்தை பண்ணாதேன்னு சொன்னவங்கதான் நிறைய பேர். பண்ணுனு சொன்னது கொஞ்ச பேர் தான். இந்த படம் இந்த அளவுக்கு வந்து ருக்குன்னா தயாரிப்பாளர் முக்தா சீனி வாசனுக்கு நன்றி சொல்லியே ஆகணும்.



படம் சென்சார்ல நின்னுடும். ரிலீஸ் ஆகாது.. அப்படி.. இப்படின்னாங்க. தமிழ் சினிமாவுல நிறைய அனுபவம் உள்ளவங்களே சொன்னப்ப ரொம்ப பயந்துட்டேன். படம் சென்சார் ஆனதும் என் பயமெல்லாம் போய்விட்டது. என் ‘கழுகு’ படத்துக்குகூட சென்சார்ல நிறைய கட் பண்ணச் சொன்னாங்க. ‘சிவப்பு’ படத்துல ஒரு கட் கிடையாது, ஒரு டயலாக் மியூட் கிடையாது. ‘யூ’ சான்றிதழ் கொடுத்திருக்காங்க.


அனாதையா இருக்கிற மக்களை ஒண்ணு.. காப்பாத்துங்க. இல்லை.. கைவிட்டுருங்க. அவங்களை வச்சி அரசியல் பண்ணாதீங்க. அது கேவலம்... அப்படினு சொல்லிருக்கேன். இதை ராஜ்கிரண் வசனமா பேசுற இடம், பார்ப்பவர்கள் நெஞ்சில் கண்டிப்பா உறைக்கும்னு உறுதியாக சொல்றேன்.



படத்தை நிறைய பேருக்கு போட்டு காட்டிட்டேன். படம் பார்த்த சில அரசியல் தலைவர்கள்கூட, ‘ஒரு அரசியல்வாதியா இது தப்புன்னு தோணுது. ஆனா, ஒரு மனுஷனா சரின்னுதான் தோணுது’ அப்படின்னு சொன்னாங்க. அதுக்காக யார் மனசையும் புண்படுத்துற மாதிரி நான் எதுவும் சொல்லல. உண்மையை சொல்லிருக்கேன். இயக்குநர் சொன்னது உண்மைதான்னு எல்லார் மனசும் கண்டிப்பா நினைக்கும்.

சீரியஸ் விஷயத்துல இருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுறீங்க போல இருக்கு. அடுத்து ‘உஸ்தாத் ஹோட்டல்' படத்தை தமிழ் ரீமேக் பண்றீங்களே. அதுபற்றி..?



கழுகு, சிவப்பு மாதிரியான படங்கள்ல இருந்து விலகி உஸ்தாத் ஹோட்டல் என்னை வேறொரு இயக்குநரா வெளிப்படுத்தும். நான் கலர்ஃபுல்லா பண்ணப்போற முதல் படம். ரீமேக் படம்னு ஒரு இடத்துலகூட தோணாது. ஏன்னா ‘உஸ்தாத் ஹோட்டல்’ முழுக்க ஒரு முஸ்லிம் கலாச்சாரம். அதே கதைதான். ஆனா ‘தலப்பாக்கட்டி’யா மாறியிருக்கும். மகேஷ் முத்துசாமி கேமரா, இமான் இசைனு ரொம்ப சூப்பரான டீமோட வேலை செய்யப்போறேன். விக்ரம் பிரபு, நஸ்ரியா, ராஜ்கிரண் நடிக்கிறாங்க. இதுவரைக்கும் கெட்டப் சேஞ்ச் பண்ணாத ராஜ்கிரண் முதன்முறையா கெட்டப் சேஞ்ச் பண்ண இருக்கார். கதையே அவரைச் சுற்றித்தான் பயணிக்கும் என்பதால் ஒப்புக்கொண்டார்.


thanx - the tamil hindu 


அய்யய்யோ.பிஸ்கோத்து மேட்டர் இது னு அசால்ட்டா விட முடியாதே?

1. தோழி நயன்தாராவுடன் த்ரிஷா பார்ட்டியோ பார்ட்டி # சக்களத்தி சண்டை போடுவாங்கனு எதிர்பார்த்தேன்.சுமூக உடன்படிக்கை ஏற்பட்டுடுச்சு போல



=======================



2  என் தொண்டர்கள் 10 கிமீ என்றாலும் நடந்து வருவார்கள் - கேப்டன் # அவங்க என்ன அஜித் ரசிகர்களா?,அசராம நடக்க?


=======================


3 அடிச்சுச்சொல்றேன்.2016ல் நான் சி எம் ஆவேன் - கேப்டன் # அப்போக்கூட அடிக்கறதை மறக்கலை


=======================


4  நா மாத்தி மாத்தி பேசுவேன், நீங்க கோர்வையா போட்டுக்கோங்க.- கேப்டன் # நீங்க கோர்வையாப்பேசுனாலே நம்மாளுங்க மாத்தி மாத்தித்தான் போடுவாங்க



=======================


5 கேப்டனின் முடிவை நாடே எதிர்பார்க்கிறது! - பிரேமலதா # பூணம் பாண்டே ஸ்டேட்டஸைக்கூட ட்விட்டர்ல நாடே பாக்குது.அதுக்கு?



========================


6 நீருக்கு அடியில் திருமணம்: கின்னஸ் சாதனை படைத்த 'டைவிங்' தம்பதி # நல்ல வேளை .கல்யாணமுகூர்த்தம் மட்டும் தண்ணிக்கடில வெச்சாங்க




==========================



7 ஆண்ட்ரியா - சிம்பு போன் நெம்பர் என் கிட்டே இல்லை. # அவர் போனே உங்க கிட்டே தான் இருக்காம்.நேத்து வீட்ல வெச்ட்டு போய்ட்டாராம்


======================


8 த்ரிஷயம் ரீமேக்கில் நடிக்க மறுத்த ரஜினி, ஓகே சொன்ன கமல் # கோச்சடையான் ரிலீஸ் ஆகட்டும்னு சொன்னதை திரிச்சி போட்டுட்டாங்க போல



=======================


9   அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வென்றால் ஜெ. பிரதமராவார்: ஏ.பி. பரதன் நம்பிக்கை # இது வாழ்த்தா ? எச்சரிக்கையா?



========================


10  உண்மையை வெளிக்கொண்டுவர ரகசிய கேமரா பதிவு தவறல்ல: -அரசு # ஆமாங்க, வீடியோ கேமரான்னு இன்னும் நல்லது



===========================



11 புகார் மனுக்களை உயர் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக பெற வேண்டாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு # கொல்லைப்பக்கமாப்போய் வாங்கிக்கனுமா?



==========================



12 காங்., கூட்டணிக்கு கருணாநிதி நிபந்தனை  # பார்த்த 18 பொண்ணும் சரி வர்லைன்னா முதல்ல பார்த்த பொண்ணையே  ஓக்கே சொல்லிடுவார் மாப்ளை



=======================



13 ஜெ வின் பிரதமர் ஆசையை முறியடிக்க வேண்டும்: - ஸ்டாலின்  # அண்ணன் சி எம் ஆகக்கூடாது , அம்மா பி எம் ஆகக்கூடாது, ஆஹா! என்ன உயர்ந்த உள்ளம்



===========================



14 உளூந்தூர்ப்பேட்டை மாநாட்டில் ஜெ குறித்து அவதூறு பேச்சு: விஜயகாந்த் மீது வழக்கு-# வா மச்சி வா வண்ணாரப்பேட்டை.போ உள்ளே போ பாளையங்கோட்டை



=======================



15 கோதுமைக்கு வரி இல்லை. அரிசிக்கு சேவை வரி - மத்திய அரசு # தமிழனுக்கு சுகர் வரக்கூடாதுன்னு எவ்ளவ் அக்கறைனு அடிச்சு விடுவாங்களோ?



===========================



16  பிஸ்கெட் சாப்பிடுவது உடல் நலத்துக்கு கேடு: புதிய ஆய்வில் தகவல்.# அய்யய்யோ.பிஸ்கோத்து மேட்டர் இது னு அசால்ட்டா விட முடியாதே?



========================



17 சட்டமன்றத்தில் எதிர்கட்சியினரை ஜெ.பேசவிடுவதில்லை ஸ்டாலின் குற்றச்சாட்டு #ஒன் கரெக்சன் யுவர் ஆனர்.எந்தக்கட்சியினரையும் பேச விடுவதில்லை



=====================



18 சேலத்தில் பிளஸ்–2 மாணவியிடம் ‘சில்மிஷம்’: பள்ளி நிர்வாகிக்கு பெண்கள் செருப்படி # ஹை ஹீல்ஸ் அடி வேற .செத்தாண்டா சேகரு



==========================


19  தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளர் அறிவிப்பது தவறு:ராகுல் காந்தி! #மேரேஜ் க்கு முன்பே கல்யாண மண்டபம் எது?னு சொல்லனும்ணா!



==========================



20 தேமுதிக வந்தாலும் இனி சேர்த்துக்கொள்ள மாட்டோம் -பா ஜ க # 19 ஒரு தரம் 18 ரெண்டு தரம் 17 ,,,,,, -கேப்டன்



=============================

Saturday, February 08, 2014

புலிவால் - சினிமா விமர்சனம்

 
தினமலர் விமர்சனம்


'டிராபிக் ஜாம்' மலையாள திரைப்படம், 'சென்னையில் ஒரு நாள்' தமிழ்படமாக இங்கும் சக்கைபோடு போட்டதைத் தொடர்ந்து ஆர்.ராதிகா சரத்குமாரும், லிஸ்டின் ஸ்டீபனும் மீண்டும் இணைந்து மலையாளத்தில் 'சப்பாக் குரிச்' எனும் பெயரில் பெரும் வெற்றி பெற்ற படத்தை ரீ-மேக் செய்து 'புலிவாலாக' தயாரித்து தந்திருக்கின்றனர். (இது கொரிய மொழியில் 'போலீஸ்யூத்' என்ற பெயரிலும் இவர்கள் எல்லோருக்கும் முன்பாக சக்கைபோடு போட்டது தனிக்கதை!)

கதைப்படி பெரும் பணக்கார வீட்டுப்பிள்ளை கார்த்திக் எனும் பிரசன்னாவுக்கு, பவித்ரா எனும் இனியாவுடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இத்தருணத்தில் கொஞ்சம் சபலபுத்திக்காரரான கார்த்திக் எனும் பிரசன்னா உடன் பணிபுரியும் மோனிகா எனும் ஓவியாவிடம் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட தகவலையே சொல்லாமல் கட்டில் காதல் களியாட்டம் நடத்தி விடுகிறார். அதுசமயம் சும்மா இருக்காமல் ஒரு கிரேஸூக்கு அதை தன் விலை உயர்ந்த செல்போனிலும் படமாக்கி வைத்து கொண்டு அவ்வப்போது பார்த்து மகிழும் பிரசன்னா, ஒருநாள் தன் செல்போனை தொலைக்க, அது கிட்டி சூப்பர்மார்க்கெட் ஒன்றில் சேல்ஸ்மேனாக வேலைபார்க்கும் காசி எனும் விமலின் கையில் கிடைக்கிறது. அந்த போனை சந்தோஷமாக தன் வசம் வைத்துக் கொண்டு பிரசன்னாவை சுத்தலில் விடுகிறார் விமல்!

ஒருகட்டத்தில் அந்த செல்போனை அவசரமாக சார்ஜ் செய்ய தனக்கு தெரிந்த செல்போன் கடையில் கொடுக்கிறார் விமல். அதில் இருக்கும் பிரசன்னா - ஓவியா செக்ஸ் வீடியோ ஏற்றப்பட்டு உலகெங்கும் ஒலி-ஒளி பரப்பப்பட, விஷயம் தெரிந்ததும் டென்ஷனாகும் பிரசன்னா விமலைதேடி பிடிக்க துரத்துகிறார். ஓவியா தற்கொலை முயற்சிக்கிறார். தன் காதலி செல்வி எனும் அனன்யாவுடன் தன் செயலுக்கு வருந்தும் காசி-விமல், கார்த்திக்-பிரசன்னா கையில் சிக்கினாரா?, மோனிகா-ஓவியா உயிர்பிழைத்தாரா.?! இல்லையா.?! என்பது வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கப்பட்டிருக்கும் மீதிக்கதை!

காஸ்ட்லி இடத்து பையன் கார்த்திக்காகவே வாழ்ந்திருக்கிறார் பிரசன்னா! கார்த்திக் எனும் பெயருக்கேற்றபடியே சபலபுத்திக்காரராக அல்லல்படுவதிலும் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார் பலே!

காசி எனும் விமல், யதார்த்தமான சூப்பர் மார்கெட் சேல்ஸ்மேனாக வழக்கம்போலவே ஸ்கோர் செய்திருக்கிறார். நடுத்தர வர்க்கத்து இளைஞரின் காஸ்ட்லீ செல்போன் ஆசையை கனகச்சிதமாக பதிவு செய்திருப்பதற்காக பாரட்டலாம் மனிதரை!

அனன்யா, ஓவியா, இனியா மூவரில் ஓவியா 'அந்தமாதிரி' காட்சிகளில் செம ஸ்கோர் செய்திருக்கிறார் என்றால் அனன்யா, இனியா இருவரும் ஹோம்லி குத்துவிளக்குகளாக மின்னியிருக்கின்றனர்.

தம்பி ராமைய்யா, சூரி இருவரும் காமெடியில் கலக்கி இருக்கின்றனர். நோஜன் கே.தினேஷின் அழகிய ஒளிப்பதிவு, என்.ஆர்.ரகுநந்தனின் இனிய இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் ஜி.மாரிமுத்துவின் எழுத்து-இயக்கத்தில் ஒருசில லாஜிக் மிஸ்டேக்குகள்(குறிப்பாக பிரசன்னா தன்னை தேடி வருவது தெரிந்தும் தன்னிடம் உள்ள அவரது செல்போனை ஆப் செய்யாமல் வைத்திருக்கும் விமல்... போன்று...) இருந்தாலும் ''புலி வால்'' - ''வெற்றி வாள்'' என்றால் மிகையல்ல!
  • நடிகர் : விமல், பிரசன்னா
  • நடிகை : ஓவியா, அனன்யா,
  • இயக்குனர் :ஜி.மாரிமுத்து

thanx - dinamalar
 

உ - சினிமா விமர்சனம்

தினமலர் விமர்சனம்



எந்த ஒரு செயலையும் செய்யத் தொடங்கும் முன் "உ எனும் பிள்ளையார் சுழியையும் அதைத்தொடர்ந்து ஒருசில பட்டைகளையும் போட்டு அதில் பொட்டும் வைத்து தொடங்குவது நம் வழக்கம்!



இத்திரைப்படத்தின் நாமகரணம் எனப்படும் டைட்டிலே "உ என்பதும், சில நாட்களுக்கு முன் டிரையிலராக வெளியிடப்பட்டு திரையிட்டபோது "உ எனும் பிள்ளையார் சுழி டைட்டிலாக ஒளிர்ந்தபோது பின்னணியில் ஒலித்த ஓசைகளால் இப்படம் மீடியாக்களில் பெரும் சர்ச்சைக்குள்ளானது! நம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அறிமுக இயக்குநர் ஆஷிக், அந்த ஊலை ஓசையை ஒழித்து கட்டிவிட்டு படத்தை வெளியிட்டிருப்பதற்காகவே இயக்குநரை முதற்கண் பாராட்ட வேண்டும்!



அடுத்ததாக ஒரேமாதிரி கதை சொல்லும் தமிழ் சினிமாக்களில் இருந்து ஒரேயடியாக விலகி, இப்படியும் படமெடுக்கலாம் என தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிதாக ஒரு "ரூட்டை போட்டுக் கொடுத்து அதற்கு பிள்ளையார்சுழி போட்டிருப்பதற்காக இயக்குநரை மீண்டும், மீண்டும் பாராட்டியே ஆக வேண்டும்!



கதைப்படி வழுக்கை வசப்பட்டும், வாழ்க்கை வசப்படாத துணை-இணை சினிமா இயக்குநர் கணேஷிற்கு ஒரு படக்கம்பெனியில் படம் இயக்க வாய்ப்பு கிடைக்கிறது. தன் அறை "கம் துறை நண்பர்களை தன்னுடன் இணைத்து பணிபுரிய அழைக்கிறார். அவர்கள் கணேஷை கேலி செய்வதோடு "உன்னால் எல்லாம் படம் இயக்க முடியுமா?! என கேள்வியும் கேட்டு "சவுடால் சவாலும் விடுகின்றனர்!



இதில் பீல் ஆகும் கணேஷ், புல்மப்பில் நியூசென்ஸில் போலீஸில் சிக்குகிறார். அங்கு தன்னை மாதிரியே நான்சென்ஸ் புட்டி, குட்டி, பெட்டி கேஸ்களில் சிக்கி பேஜாராகி வீற்றிருக்கும் 4 இளைஞர்களை சந்திக்கும் கணேஷ், அந்தநால்வரையுமே தன் உதவியாளர்கள் ஆக்கி உருப்படியான சீன்களை பிடித்து ஒருமாதிரி ஜோரானதொரு கதையை உருவாக்கி தயாரிப்பாளர் பக்குலனிடம் சொல்லி படமெடுக்க கிளம்புகிறார். அவரை அவரது அறை-துறை, அரை-குறை நண்பர்கள் தங்களது சாவலில் ஜெயிப்பதற்காக ஆள்பலம் காட்டி படமெடுக்க விடாமல் தடுக்க பார்க்க, அவர்களை தனது அறிவுபலத்தால் கணேஷ் ஜெயிப்பதும், படமெடுத்து ரிலீஸ் செய்வதும்தான் "உ படத்தின் கதை!



 உதவி இயக்குநராக இருந்து இயக்குநராக உயரும் கணேஷின் இந்த வெற்றிக்கதையுடன் அவர் இயக்கும் படக்கதையையும் கலந்துகட்டி கலர்புல்லாக கதை சொல்லியிருப்பதற்காக இயக்குநர் ஆஷிக்கை இன்னும் ஒருமுறை பாராட்டலாம்!



தம்பி ராமைய்யா, வருண், மதன்கோபால், "ஸ்மைல் செல்வா, சத்யசாய், ராஜ்கமல், சவுந்திராஜா, காளி, ராஜசிவா, டீப்ஸ், ஆஜித், மதுமிதா, பயில்வான் ரங்கநாதன், "யோகி தேவராஜ் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.


 அதிலும் கணேஷ் - தம்பி ராமைய்யா, புரடியூசர் பக்குலன் - பயில்வான் பற்றி சிலநேரங்களில் வாயால பேசுறார், சில நேரங்கள்ல பேசுறார்... என அவரது வாயுத்தொல்லை பற்றிபேசும்போது தியேட்டர் அதிர்கிறது. எல்லோரையும் கலாய்க்கும் தம்பி ராமைய்யாவையே கலாய்க்கும் "கவுண்டர் பிராக்டீஸ், புரடியூசர் பக்குலன் - பயில்வான் ரங்கநாதன், மணி சார் ஓ.கே. சொன்னாதான் ஓ.கே. என கதைகேட்பாளர் மணி 




- "யோகி தேவ்ராஜ்க்கு தரப்படும் பில்-டப் எல்லாமே படத்திற்கு பலவந்தமாக, அதேநேரம் படுபாந்தமாகவும் பலம் சேர்க்கும் பாத்திரங்கள் என்பது சூப்பர்ப்! ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பது நம்முன் நிற்கும் ஒரே கேள்வி.?!



அபிஜித் ராமசாமியின் இசை, முருகன் மந்திரத்தின் பாடல்வரிகள், ஜெயபிரகாஷின் ஒளிப்பதிவு உள்ளிட்ட பலங்களுடன் எம்.ஆர்.ராதாவை இம்மிட்டேட் செய்து வில்லனும் அவரது கையாட்களும் பேசி போரடிக்கும் காட்சிகள் ஏற்படுத்தும் சலிப்பு உள்ளிட்ட பலவீனங்களும் இருந்தாலும், 

ஆஷிக்கின் எழுத்து-இயக்கத்தில் "உ - "ஓஹோ!

thanx - dinamalar

தொட்டால் தொடரும் - கேபிள் சங்கர் பேட்டி

 
வலைப்பூக்களின் (Blogs) உலகில் பிரபலமான பெயர் கேபிள் சங்கர். திரை விமர்சனங்களை உடனுக்குடன் இணைய வாசகர்களுக்குத் தந்து, தனக்கெனத் தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கிக்கொண்டவர். திரை விமர்சனம் என்ற தளத்திலிருந்து தற்போது திரை இயக்கத்துக்கு வந்திருக்கிறார். துவார் ஜி. சந்திரசேகர் தயாரிப்பில் ‘தொட்டால் தொடரும்’ படத்தை இயக்கி முடித்து, பின்னணி இசைக் கோர்ப்பில் பிஸியாக இருந்தவரைச் சந்தித்தோம். 



உங்கள் வலைப்பூவை எந்த ஆண்டு தொடங்கினீர்கள், நீங்கள் விமர்சனம் எழுதிய முதல் படம் எதுவென்று நினைவிருக்கிறதா?


 
2006ஆம் ஆண்டு எனது பிளாக்கை தொடங்கினேன். முதலில் நான் திரை விமர்சனம் எழுதவில்லை. சமூகம் சார்ந்து மக்களை அதிகமாக பாதிக்கும் விஷயங்களை சின்னச் சின்ன பதிவுகளாக எழுதிவந்தேன். பிறகு 2008 -ல் பத்துக்குப் பத்து என்ற சிறு முதலீட்டுப் படத்துக்குத்தான் முதலில் விமர்சனம் எழுதினேன். திரை விமர்சனத்தில் எனக்கென்று ஒரு பாணி உருவானதாக ஜீவா இயக்கி, ஜெயம் ரவி நடித்த ‘தாம் தூம்’ படத்தைச் சொல்ல வேண்டும். திரை விமர்சனம் சார்ந்து எனக்கு வாசகர்கள் கிடைத்தது மட்டுமல்ல, திரைப்பட விநியோகம், கேபிள் டிவி தொழில், சிறுகதைகள், கவிதைகள் என்று திரையுலகம், படைப்புலகம் சார்ந்து நான் எழுதிய எழுத்துக்களுக்கும் பெரிய வரவேற்பு கிடைத்தது. ‘உங்களது சினிமா வியாபாரம் தொடரைப் படித்து அதிலிருந்து திரைப்பட விநியோகத்தைக் கற்றுக்கொண்டேன். இதுவரை மூன்று படங்களை வாங்கி வெற்றிகரமாக விநியோகித்து விட்டேன்’ என்று ஒருவர் என்னை நேரில் சந்தித்துச் சொன்னபோது மகிழ்ந்துபோனேன். 




இவ்வளவு காட்டமாக விமர்சனம் எழுதுகிறீர்களே, உங்களால் ஒரு நேர்த்தியான படத்தை எடுத்துக்காட்ட முடியுமா என்று திரையுலகில் இருந்து யாராவது உங்களை கேட்டிருக்கிறார்களா?


 
நிறைய பேர். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தூவார் சந்திரசேகரனே எனக்கு அப்படித்தான் கிடைத்தார். அவர் தயாரித்த ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’ படத்துக்கு நான் எழுதியிருந்த விமர்சனத்தைப் படித்துவிட்டு என்னிடம் பேசினார். பிறகு என் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர், அப்படியானால் நீங்கள் வந்து ஒரு படம் எடுத்துக்காட்டுங்கள் பார்க்கலாம் என்றார். சண்டை யிலும் விவாதத்திலும்தான் எங்கள் நட்பு தொடங்கியது. 



விமர்சனம் செய்பவர் களால் நல்ல படம் எடுக்க முடியுமா என்று கேட்கிறார்கள். எல்லா நல்ல விமர்சகர்களுக்குள்ளும் நல்ல ரசிகன் இருக்கிறான். நான் பல படங்களை விமர்சனம் செய்திருக்கிறேன். பாராட்டியும் இருக்கிறேன். நல்லதை விட்டுவிட்டு கெட்டதை மட்டும் நினைவில் வைத்திருக்கிறார்கள். 



நான் வெறும் விமர்சகன் மட்டுமல்ல.கடந்த 15 ஆண்டுகளாகத் திரைத் துறையில், திரைப்பட விநியோகம், திரையரங்க நிர்வாகம், தயாரிப்பு, விளம்பரம், திரைக்கதை, வசனம், நாவல், சிறுகதை எனத் தொடர்ந்து இயங்கி வந்திருக்கிறேன். திரை இயக்கம் என்பது என் கனவு. என் படத்திற்கும் விமர்சனம் இருக்கும். அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் பல விஷயங்களை விமர்சிக்க முடியாதபடி என் படம் தரமும் நேர்த்தியும் நிறைந்ததாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும். 


 
என்ன கதையைக் கையாள்கிறீர்கள்?


 
காதல் த்ரில்லர் வகைக் கதை. சிவா ஐடி நிறுவனமொன்றின் ஹெச்.ஆர். பிரிவில் வேலை செய்யும் மனித வளத்துறை அதிகாரி. இவர்தான் கதையின் நாயகன். மதுமிதா அமெரிக்க வங்கியொன்றுக்காக கால் சென்டரில் வேலை செய்யும் டெலிகாலர். ஒரு வாடிக்கையாளருக்கு செல்லும் அழைப்பின் வழியாக முதன்மைக் கதாபாத்திரங்களை நிழல்போலத் தொடரும் ஆபத்து என்ன என்பதுதான் கதை.முதல் பாதி லவ், ரொமான்ஸ் என்று நகரும் கதையின் மறுபாதி ஆக்‌ஷன் த்ரில்லராக வேகமெடுக்கும். சிவாவாக தமன், மதுமிதாவாக அருந்ததி நடித்திருக்கிறார்கள்.



 இரண்டு முக்கியக் கதாபாத்திரங்களில் வின்சென்ட் அசோகன், ஹலோ எப்.எம். பாலாஜி நடித்திருக்கிறார்கள். விஜய் ஆம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.சி. சிவன் இசையமைத்துவருகிறார். முந்தைய படங்களின் வெற்றியைப் பார்க்காமல் அதில் அவர்கள் காட்டியுள்ள திறமையை மட்டும் பார்த்து நட்சத்திரங்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் தேர்வு செய்திருக்கிறோம். 

 

இதுவொரு சிறு முதலீட்டுப் படமா?


 
அப்படிச் சொல்ல முடியாது. கதைக்கும் காட்சியமைப்புக்கும் என்ன தேவையோ அதில் குறை வந்துவிடாதபடி படம் தயாராகியிருக்கிறது. ஒரு பெரிய படத்துக்கான உழைப்பில் இந்தப் படமும் குறைந்ததில்லை. ‘சிங்கம்-2‘ படத்துக்குப் பிறகு இந்தப் படத்திற்காக அமெரிக்காவிலிருந்து ப்ளைகேம் கேமரா வரவழைத்து பயன்படுத்தியிருக்கிறோம். எந்த விதத்திலும் ரசிகர்களை இந்தப் படம் ஏமாற்ற வாய்ப்பில்லை. முக்கியமாக விமர்சகர்களை! 


நன்றி - த தமிழ் இந்து 

Friday, February 07, 2014

பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம்

அந்த ஊருக்கே  அவர் தான் எல்லாம். நாட்டில் எந்த விஞ்ஞானக்கண்டு பிடிப்பு வந்தாலும் அவர் வீட்டில் தான் முதல்ல வரும். ஊர் மக்கள்  ரேடியோ, டி வி , ஃபோன் எல்லாம் அவர் வீட்டில் தான்  முதன் முதலா பார்க்கறாங்க . அப்பேர்ப்பட்ட பண்ணையார்  வீட்டில் அவர் சொந்தக்காரர் மூலம் அப்போதைக்கு பத்மினி ( கார்) யைப்பார்த்துக்குங்கன்னு  விட்டுட்டுப்போறார்.


பண்ணையார்க்கு ஒரே குஷி.பெருமிதம். ஆனா அவருக்கு கார் ஓட்டத்தெரியாது . இதுக்காகவே அவர் ஒரு டிரைவரை வெச்சுக்கறார். ஊர் மக்கள்க்கு ஒரு நல்லது கெட்டதுன்னா அந்த கார்ல தான் போறாங்க , வர்றாங்க . 


பொதுவா கார் ஓனரை விட கார் டிரைவருங்களுக்குத்தான் கார் அதிகம் யூஸ் ஆகும். அந்த  தியரி படி  டிரைவரும் தன் காதலியைக்கவர அந்த காரை யூஸ் பண்ணிக்கறாரு. 

பண்ணையாரோட மனைவிக்கு கார்ல போக உள்ளூர ஆசை. ஆனா வெளில காட்டிக்கலை. கார் டிரைவர் ஓட்டுனா எல்லாம் உக்கார மாட்டேன், நீங்களே ஓட்டிப்பழகுங்கன்னு சொல்றாங்க. 


அவரும் பழகறாரு.இப்படி சந்தோசமாப்போய்ட்டிருந்த வாழ்க்கைல விதி பண்ணையார் மகள் வடிவத்துல வந்து சிரிக்குது. தாய் வீட்டில் எது கிடைச்சாலும் சுருட்டிட்டுப்போகும்  நல்ல குடும்பத்துப்பொண்ணான பண்ணையார் மகள் நைசா பத்மினி காரையும் லவட்டிக்குது. 


அதனால  சோகத்தில்  மூழ்கும் பண்ணையார் என்ன ஆனார் ? மனைவி ஆசை  நிறைவேறுச்சா ? என்பது மீதிக்கதை . 



ஆர்ப்பாட்டமே இல்லாத , மிகத்தெளிவான ஒரு நதியின் ஓட்டம் போல மிக அழகான திரைக்கதை . 8 நிமிடக்குறும்படத்தை  128  நிமிட  முழுப்படமாக எடுக்க இயக்குநர் எவ்வளவு மெனக்கெட்டிருப்பார் என்பது தெளிவாகத்தெரிகிறது . பிரமாதப்படுத்தி  இருக்கிறார் இயக்குநர் , வாழ்த்துகள்.


ஜெயப்பிரகாஷ் தான் பண்ணையார்  ரோல் . அருமையான நடிப்பு .  ஓவர் ஆக்டிங்க் சிறிதும் இல்லாமல்  மிக இயல்பான நடிப்பு . காரைப்பார்த்து பெருமிதப்படும்போது , காரைத்துடைக்கும்போது  கூட கவனமாக , மெதுவாகச்செய்வது , கார் ஓட்ட துடிப்பது , மகளிடம்  மென்மையாகப்பேசுவது  என சுத்தி சுத்தி சிக்சர்களாக விளாசுகிறார். 


 அவருக்கு  ஜோடியாக துளசி . குயிலியின் கண்கள் ,சரண்யா பொன் வண்ணன் பாணியில் அமைந்த அழகிய நடிப்பு . இவரும் அவருக்கு இணையாக பட்டையைக்கிளப்பி இருக்கார் . கிழவா என அவர் முன்னால  நையாண்டி செய்தாலும் உள்ளூர அவர் மீது இருக்கும் காதல் வெளிக்காட்டும் மர்மப்புன்னகை கொள்ளை அழகு . வயோதிகக்காதலின் அழகிய கவிதையை படிப்பது போல்  இருக்கு 

 விஜய் சேதுபதி தான் டிரைவர் . பல வெற்றிப்படங்கள்  கொடுத்த  ஹீரோ எப்படி தலைக்கனம் இல்லாமல் சாதா கேரக்டரில் கூட சைன் பண்ண முடியும் என்பதற்கு முன்னோடியாகத்திகழ்கிறார். இவருக்கு  படத்தில்  முக்கியத்துவம் கம்மி என்றாலும் திரைக்கதையின் நலன் கருதி இவர் அடக்கி வாசித்திருப்பது , இதில் நடிக்க ஒத்துக்கொண்டது  பாராட்டத்தக்கது . கார் ஓட்ட பண்ணையார் கற்றுக்கொண்டால் தன்னைக்கழட்டி விட்டுடுவாரோ என்ற பதட்டம் அவர் முகத்தில் லேசாகத்தோன்றி மறைவது நுணுக்கமான நடிப்பு 


 அவர் கூடவே வரும் பீடை எனும் கேரக்டர் கவுண்டமணிக்கு செந்தில் மாதிரி . அவர் வாயில் யார் விழுந்தாலும் அவர் ஊ ஊ ஊ தான்  , செம காமெடியான காட்சிகள் படம் முழுக்க . 


 நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் . பனங்கிழங்கை வேக வைத்து ப்பிளந்தது போன்ற மாநிறம் முகம், கிராமத்துக்கேரக்டருக்கு அழகாகப்பொருந்துகிறார் . விழிகளாலேயே அவர் பேசி விடுவதால் வசன உச்சரிப்புகளில் செய்யும் சில தவறுகள் கவனிக்கப்படாமலேயே போகிறது .  அவர் சிரிக்கும்போது தெரியும் கீழ் வரிசைப்பல் சந்து கூட அழகுதான்


பண்ணையாரின் மகளாக வருபவர் நீலிமா ராணி , பஸ் டிரைவர் , கண்டக்டர் உட்பட பல துணைப்பாத்திரங்கள்  நிறைவாகச்செய்து இருக்காங்க. கெஸ்ட்  ரோல் ல புன்னகை இளவரசி சினேகா , அட்ட கத்தி தினேஷ்  குட் .


சபாஷ்  இயக்குநர் 


1 பண்ணையார்  வீட்டில்  அழுது கொண்டு இருக்கும் அக்கம் பக்கம் லேடீஸ் அவரைக்கண்டதும் அழுகையை நிறுத்த அவர் ம் ம் தொடரலாம் என்பது போல் சைகை காட்ட அவர்கள் ஸ்விட்ச் போட்டது போல் அழுவது  செம காமெடி ./ அதே காட்சியில்  அந்த இழவு வீட்டில் பண்ணையார் தூங்க , அங்கே வரும் பீடை அவர் இறந்து விட்டதாக அழும் காட்சி மாஸ் 


 2  டெட் பாடியைக்கொண்டு போக வரும் பத்மினி கார்  கூட வரும் கூட்டத்துக்கு இடம் இல்லாமல் கார்  மேல் சேர் போட்டு சிட்டிங்க் எம் எல் ஏ மாதிரி சிட்டிங்க் டெட் பாடியாக வருவது நல்ல கற்பனை 


3 பண்ணையார் , ஹீரோ  இருவரும்  காரில் டிரைவிங்க்  கற்பது  எந்த அளவு முடியுமோ அந்த அளவு காமெடி கையாண்டிருக்காங்க 



4 பீடை கேரக்டர்   ரொம்ப   முக்கியமான , கவனிக்கத்தக்க கேரக்டர்., அதுக்கான காட்சி  அமைப்புகள் அபாரம் , ஏன்னா இந்த திரைக்கதையில் ஆல்ரெடி ஸ்கோர் பண்ண பலர்  இருக்கும்போது இந்த கேரக்டருக்காக மெனக்கெட்டு காட்சிகள் அமைத்தது பெரிய விஷயம் 


5 பாடல் காட்சிகள் , ஒளிப்பதிவு . இசை , பின்னணி இசை எல்லாமே சராசரிக்கும் மேல் . குறிப்பா  எங்க  ஊரு வண்டி இது பாட்டு ,  பேசுகிறேன் பேசுகிறேன் காதல் மொழி , பேசாமல் பேசுவது உன் கண் விழி பாட்டு , உனக்காகப்பொறந்தேனே பாட்டு என 3  செம ஹிட் பாட்டு 


6  சினேகா வீடு தேடி வரும்போது அவர் கிட்டே அவரோட அப்பா கார்  கொடுத்த விஷயத்தை சொல்லலாமா? வேணாமா? என தடுமாறுவது , சினேகா அந்த விஷயம் தெரிஞ்சும் அசால்ட்டாக விட்டதும்  , குற்ற உணர்வில் மருகுவது எல்லாமே பிரமாதம் 

சில மைனஸ்


1 கதை நடக்கும் கால கட்டம் 1980 + என்பதால்  அதுக்கு ஏற்றாற் போல ஆடை வடிவமைப்பு எல்லாம் கவனமா பண்ணி இருக்காங்க . ஆனா நாயகியின்  ஜாக்கெட் டிசைன் ஏதோ 1970 ல நடக்கும் கதைல வரும் வரும் வடிவுக்கரசி  ஜாக்கெட் மாதிரி ரொம்ப  ஓல்டு  ஃபேசனா  இருக்கு  , லூஸ் ஃபிட்டிங்க் வேற . அது தனியா  துருத்திட்டு இருக்கு .

2   ஒரு முறை கூட நகரத்துக்கு சென்று காரை சர்வீசுக்கே விடாம பண்ணையார் இருக்கலாம், டிரைவர்  கூடவா அப்டி இருப்பார் ? 


3  ஊர்ப்பண்ணையார் இடம் கார் மெக்கானிக் என்னமோ  கேப்டன் ரேஞ்சுக்கு உதார் விடுவதும் , பண்ணையார் காங்கிரஸ் போல் கெஞ்சுவதும் ஓவர் . 1980 கால கட்டத்தில் பண்ணையார்க்கு  முடி திருத்துபவர் முதல் சேவகம் செய்பவர் வரை எல்லோரும் எப்படி பம்முவார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் 


4 முன் பாதியில் சர சர  என சாரப்பாம்பு போல் நகரும் திரைக்கதை பின் பாதியில் மண்ணுள்ளிப்பாம்பு போல் நெளிகிறது , எடிட்டிங்கில் கவனம் தேவை . 


5  பேருந்தில்  சிற்றுந்து என எழுதி  இருக்கு . ஆனா அது பெரிய சர்வீஸ் பஸ் மாதிரி  இருக்கு . அந்தக்காலத்தில் ஏது  மினி பஸ் ? அதுவும் இல்லாம கிராமம்னா அங்கே அரசாங்க பஸ் ஓடாம தனியார் பஸ் ஓடுவது ஆச்சரியம்


6 பார்வையாளர்கள் பெரும்பாலும் விஜய் சேதுபதி -ஐஸ் ஜோடி ரொமான்ஸை எதிர்பார்த்திருக்க அதிக காட்சிகள் பண்ணையார் & கோ விற்கு வைத்தது திரைக்கதைக்கு சரியாக இருந்தாலும் ஆடியன்சுக்கு ஏமாற்றமே


7 கார்  ரிப்பேர் ஆனதும் மகள்  காரைத்திருப்பிக்கொண்டு வருவது நம்பும்படி  இல்லை.

மனதில்  நின்ற வசனங்கள்


1. ஒத்தை வார்த்தை ல சொல்லு.பிடிச்சிருக்கா? இல்லையா?


2  காருக்கு க்ளீனர் வெச்ச முத ஆளு நீங்க தான்


3  புதுத்துணி எங்கே?


 பொட்டில.


 போடலை? 


 போட்டா அழுக்காகிடுமே?



4  வண்டியைப்புள்ளை மாதிரி வெச்சுப்பார்த்துக்கிட்டோம் \\

 உங்களை யாரு அப்டி ஊரான்  வீட்டு வண்டியைப்பார்த்துக்கச்சொன்னது ? 


5 அய்யா , கீர் கணோம்


 அவசரம் , முதல்ல வண்டியை எடு , அதை பின்னால சாவகாசமா தேடிக்கலாம் \\


 அய்யோ , கீர் இருந்தா தான் வண்டியைஎடுக்க முடியும்  


6 அய்யா 2 நாள்  போது ம் 

 அதுக்குள்ளே கார் ஓட்ட கத்துக்கலாமா? 


 ம்ஹூம் , இப்டி ஓங்கி கதவை அடைச்சா கார் கதவு 2 நாள்  கூட தாங்காது 


கையோட வந்துடும் 



7  நீ  மட்டும் 5 ரூபா குடுத்துட்டா  உன்னை முன் சீட்டில் என்ன ? டிரைவர்  சீட்டிலேயே ஏத்திக்கொண்டு போறேன் 


8 பட்டப்பேரு தான்   பீடை ,  ஆத்தா வெச்ச பேரு  பெருச்சாளி 


9  உன்னை எல்லாம்  2000 வருசத்துக்கு யாரும் எதும்  பண்ணிட முடியாது . நல்லா இரு .. போய்யாங்




படம் பார்க்கும்போது போட்ட  ட்வீட்ஸ் 


1. பத்மினி யின் இன்ட்ரோ சீன் பிஜிஎம் இளைய ராஜா வுக்கு இணையான தரம்



2 ரம்மி ல விட்டதை பண்ணை ல பிடிச்சிடுவாரா? # ஓப்பனிங் சீன் காமெடி அலப்பறை .விஜய் சேதுபதி ராக்ஸ்


3 கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் சென்ட்டிமென்ட் - ஹீரோயின் இன்ட்ரோ @ இழவு வீடு # விழா ,மதயானைக்கூட்டம் ,பண்ணையாரும் பத்மினியும்


4  படம் கொஞ்சம் ஸ்லோவாப்போகுது.ஏப்பா ஆபரேட்டர் .அடிச்சு வேகமா ஓட்டப்பா



5 சமதளத்தில் ஓடும் நதி போல மிக நிதானமான ஆனால் அழகிய திரைக்கதை # பண்ணையாரும் பத்மினியும் இடை வேளை



6 விமர்சகனா இருப்பதில் என்ன பிரச்சனைன்னா இடை வேளை விட்டா கேன்ட்டீன் போக டைம் இருக்காது.வசனத்தையாவது டைப்புவோம்


7  உனக்காகப்பிறந்தேனே மெலோடி சாங் கலக்கல் னா அதற்கான ஜெயப்ரகாஷ் ஜோடியின் நடிப்பு பதநீர் ( தெளுவு) இதம்

 
சி.பி கமெண்ட் - பண்ணையாரும் பத்மினியும் - கிளாசிக்கல் மூவி - கமர்ஷியல் ஹிட் கடினம். லாஜிக்கல் மிஸ்டேக் அதிகம் .பெண்களுக்கு பிடிக்கும். ஏ செண்ட்டரில்  ஓடும் .


ஆனந்த விகடன்எதிர்பார்ப்பு  மார்க் =42 

 குமுதம் ரேங்கிங்க் =- ஓக்கே 


,ரேட்டிங் = 3 / 5