Friday, February 07, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (7 2 .2014 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

 

1,பண்ணையாரும் பத்மினியும் -தமிழ் சினிமாவில் ரசிகர்களை படம் பார்க்க தியேட்டர்களுக்கு அழைக்க படத்தில் கதை மட்டும் இருந்தால் போதாது வித்தியாசமான தலைப்பும் இருக்க வேண்டும் என்பதை நன்கு புரிந்து வைத்துள்ளனர் இன்றைய இயக்குனர்கள். அந்தவகையில் வித்தியாசமான கதையுடனும், வித்தியாசமான தலைப்புடனும் ஒரு புதிய படம் உருவாகி வருகிறது. படத்தின் பெயர் பண்ணையாரும் பத்மினியும்...! தலைப்பை பார்த்ததும் ஏத‌ோ பண்ணையாருக்கும், பத்மினி என்ற பெண்ணுக்கும் தொடர்பான கதை ‌என்று எண்ணிவிடாதீர்கள். ஒரு பண்ணையாரும் அவர் வாங்கும் காரான பத்மினி என்பதையும் தான் படத்தின் தலைப்பாக்கி இருக்கிறார்கள். குறும்பட தயாரிப்பில் நாளைய இயக்குனர் பார்ட்-2 வில் வெற்றி பெற்ற இயக்குனர் அருண் குமார் தான் இப்படத்தை இயக்க உள்ளார். படத்தின் கதை 1995-ல் மதுரை பக்கம் உள்ள ஒரு சிறு கிராமத்தில் துவங்குகிறது.

இந்த படத்தில் பண்ணையாரான ஜெய்பிரகாஷ் ஒரு கார் வாங்குகிறார். அவருக்கு கார் ஓட்ட தெரியாததால் அவருக்கு டிரைவராக விஜயசேதுபதி வருகிறார். படத்தின் திரைக்கதை மொத்தமும் இந்த கார் உடனே நகருகிறது. அதோடு விஜய் சேதுபதிக்கும், ஹீரோயினுக்கும் இடையேயான காதலும் கலந்து கட்டி இப்படத்தை இயக்குகிறார் அருண். முதல்படமே கொஞ்சம் வித்தியாசமாக இருந்தால் தான் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சாகும், அதனால் தான் இந்த புதுகளத்தை படமாக்கி வருகிறேன் என்கிறார் டைரக்டர்


ஈரோடு வி எஸ் பி , அண்ணா வில்  ரிலீஸ் 


 

2.  புலிவால் -சென்னையில் ஒரு நாள் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து ராதிகா சரத்குமார் - தயாரிப்பாளர் லிஸ்டின் இணைந்து தயாரிக்கும் புதிய படம் புலிவால். இந்தப் படத்தில் விமல், பிரசன்னா, அனன்யா, இனியா, ஓவியா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. 
 
மலையாளத்தில் வெளியான ட்ராபிக் படத்தை தமிழில் சென்னையில் ஒரு நாள் என எடுத்து வெற்றி கண்டது ராதிகாவின் ராடான் மீடியா ஒர்க்ஸ். இந்தப் படத்தை ராதிராவுடன் இணைந்து தயாரித்தவர் லிஸ்டின். இப்போது மீண்டும் அதே கூட்டணி தொடர்கிறது. 
 
இந்தப் படத்துக்கு புலிவால் என பெயர் சூட்டியுள்ளனர். மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற சப்பா குரிசு படத்தைத்தான் புலிவால் என ரீமேக் செய்கின்றனர். இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் கூறுகையில், "சப்பா குரிசு கதையை அப்படியே காட்சிக்கு காட்சி எடுக்கவில்லை. அடிப்படை கதைக் கருவை மட்டுமே எடுத்துக் கொள்கிறோம்," என்றார். இந்தப் படத்தை மாரிமுத்து இயக்குகிறார்.
 
 
ஈரோடு அபிராமி , சண்டிகா , அன்னபூரணி, சீனிவாசா வில்  ரிலீஸ் 
 
 
3. -தம்பி ராமையா வடிவேலைவிட பெட்டராக நடிப்பார், வடிவேலைவிட குணச்சித்திர வேடத்தில் வெளுத்து வாங்குவார் என்றெல்லாம் ஆஷிக் என்ற இயக்குனர் தம்பி ராமையாவின் பிஆர்ஓ வாக பேசியதை நினைவிருக்கிறதா? இந்த ஆஷிக் இயக்கும் உ என்ற படத்தில் தம்பி ராமையாதான் கதை நாயகன். ஆஷிக் என்ற பூனைக்குட்டி மியாவ் என்று கத்தியதற்கு காரணம் கிடைத்ததா? கொடைக்கானலில் உ படப்பிடிப்பை நடத்திய போது நாயகி டிமிக்கிக் கொடுத்திருக்கிறார். எப்படி என்பதன் திரைக்கதை விளக்கத்தை அவர்களே தந்திருக்கிறார்கள்.


பீனிக்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் திரைப்படக் கல்லுரி மாணவர் ஆஷிக் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வரும் படம் “உ”. தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க 25க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றது.


இயக்குநர் ஆஷிக் விரும்பிய கதாநாயகி கிடைக்காமல் தாமதப்பட்டு வந்தது இப்படத்தின் படப்பிடிப்பு. இறுதியில் கேரளாவில் இருந்து ஒரு புதுமுக கதாநாயகியை தேர்வு செய்துவிட்டு, படப்பிடிப்பு தேதியையும் உறுதி செய்து விட்டு ஒருநாள் முன்னதாகவே கொடைக்கானல் கிளம்பி சென்றனர் உ படக்குழுவினர்.


மறுநாள் கதாநாயகி வந்த உடன் படப்பிடிப்பை தொடங்கலாம் என்று இருந்த படக்குழுவுக்கு போனில் வந்தது அந்த அதிர்ச்சி செய்தி. தவிர்க்க முடியாத காரணத்தால் என்னால் கொடைக்கானல் வரமுடியவில்லை என கூலாக சொன்னார் அந்த புதுமுக கதாநாயகி.


படத்தில் தான் கதாநாயகிகள் தவிக்க விடுவார்கள் என்று பார்த்தால் நிஜத்தில் உ படக்குழுவினரை தவிக்க விட்டார் அந்தக் கதாநாயகி.


அதன்பின் புது‌ச்ச்சேரியில் “மிஸ் தமிழச்சி”யாக தேர்வு செய்யப்பட்ட நேகா ஒரே நாளில் உ படத்திற்கு திடீர் கதாநாயகி ஆனார். படக்குழுவில் உள்ள அனைவருமே நண்பர்கள் தான். அந்த நண்பர்கள் குழுவில் ஒருவருக்கு தோழியாக இருந்த நேகா நடிக்க ஆர்வமாக இருப்பது தெரிந்து, நேகா போட்டோவை மெயிலில் அனுப்பச்சொல்லி, பார்த்து உடனடியாக ஓகே சொன்னார் இயக்குநர் ஆஷிக். அன்று மாலையே கொடைக்கானல் கிளம்பி வரச்சொல்லி படப்பிடிப்பு நடத்தி சென்னை திரும்பி இருக்கிறார்கள். நேகா கேரளாவில் பிறந்து சென்னையில் வளர்ந்து புது‌ச்சேரியில் படித்து‌க் கொண்டிருக்கும் தமிழ் யுவதி. தமிழ் சினிமாவில் தமிழ் பேசத் தெரிந்த தமிழ் கதாநாயகிகள் வரிசையில் நேகா புதுவரவு.


ஈரோடு சங்கீதா வில்  ரிலீஸ் . இந்தப்படத்தின் பாடல்கள் அனைத்தும் எழுதியவர் எனது நெருங்கிய நண்பர்  முருகன் மந்திரம் . இவர் பல படங்களில் பாடல் எழுதி இருக்கிறார். எஸ் எஸ் குமரனின் தேநீர் விடுதி , பூ படங்களில் பாடல்கள் எழுதி இருக்கிறார்

 

 4. கோவலனின் காதலி -காதல் என்றால் என்ன படத்தை இயக்கியவர் காளிமுத்து. அவர் தற்போது தனது பெயரை அர்ஜூன ராஜா என்று மாற்றி வைத்து இயக்கியுள்ள படம் கோவலனின் காதலி. இப்படத்தில் கிரண்மை, நவ்நீத்கபூர் என்ற இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். முதலில் கிரண்மைதான் படத்தின் முக்கிய நாயகி என்று கமிட் பண்ணிய இயக்குனர் பின்னர் நவ்நீத் கபூரின் கேரக்டரை பெருசுபடுத்தி அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டாராம்.

இதனால் கொதித்துப்போன கிரண்மை, படப்பிடிப்பு தளத்தில் மற்ற நடிகைகள் போல் இயக்குனர்களுக்கு ஐஸ் வைத்து பேசத் தெரியாத நடிகை நான். ஆனால் நவ்நீத் கபூர் அப்படியல்ல. யாரை எப்படி கவுக்க வேண்டும் என்ற வித்தை தெரிந்தவர். அதனால் பேச வேண்டியவர்களிடத்தில் கச்சிதமாக பேசி அவரே படத்தில் முக்கிய நாயகியாகி விட்டார். அந்த வகையில், அந்த நடிகையுடன் சேர்ந்து கொண்டு என்னை மோசம் செய்து விட்டார் அந்த இயக்குனர் என்று சரமாரியாக இயக்குனரை சாடுகிறார் கிரண்மை.


ஈரோட்டில்  ரிலீஸ் இல்லை 

 
5 ENDER'S GAME  -ஏலியனிடமிருந்து மனிதர்களை காக்கும் கதைதான் இதுவும். ஆனால் படத்தை இயக்கியவர் கவின் ஹுட். அமீரும், சுப்பிரமணியம் சிவாவும் சேர்ந்து யோகிக்காக ஒரு படத்தை காப்பியடித்தார்களே... Tsotsi. அந்தப் படத்தை இயக்கியவர் இவர்தான். X-Men Origins: Wolverine படமும் இவரது கைவண்ணமே.

சென்ற வாரம் வெளியான என்டர்ஸ் கேம் முதல் மூன்று தினங்களில் 28 மில்லியன் டாலர்களை வசூலித்து முதலிடத்தை கைப்பற்றியிருக்கிறது. 110 மில்லியன் டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட படத்தின் ஓபனிங் 28 மில்லியன் என்பது ஆவரே‌ஜ்தான்.


ஈரோடு ராயல் , ஸ்ரீ கிருஷ்ணா  வில்  ரிலிஸ். ஈரோட்டில் ஜில்லா  நேற்றே கடைசி @  ராயல் 

Thursday, February 06, 2014

விஜய் சங்கவியுடன் ஜோடி சேர்வாரா?

1. உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக இருந்த பீஜிங்கை பின்னுக்கு தள்ளிய டெல்லி..# அதான் விளக்குமாறு ஆட்சிக்கு வந்தாச்சில்ல? சுத்தம் பண்ணிடும்



===================


2 அழகிரியை சந்தித்த திமுக எம்.பி.க்கள். அவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக அறிவிப்பு.# அவருக்கே கட்சில முடிவுகாலம் வந்தாச்சு



====================


3 பாராளுமன்ற தேர்தல்: தர்மபுரி தொகுதியில் அன்புமணி போட்டி# தர்ம அடி நிச்சயம்



======================


பாமக ஆட்சிக்கு வந்தால் காடுவெட்டி குருவுக்கு காவல்துறை - ராமதாஸ்.
# குன்றத்திலே திருடனுக்கு கொண்டாட்டம்.




================================



5 காங்கிரஸ் தனித்துவிடப்படவில்லை.. 275 இடங்கள் இலக்கு:- ஜி.கே.வாசன் !# பொண்ணுக்கு டைவர்ஸ் ஆகிடுச்சு.ஆனா புகுந்த வீட்டில்தான் இருக்கு





=========================



6 கோவையில் வீட்டில் பாலியல் தொழில்: புரோக்கர் கைது- 3 பெண்கள் மீட்பு # இதெல்லாம் தப்பு ப்ரோ னு போலீஸ் நொங்கெடுத்திருக்குமே ?




===============================



7 நடிகர் 'விஜய்'யின் நாயகி பிரியங்கா சோப்ராவுக்கு காலில் காயம் # ஷூட்டிங்னா ஆளுக்கு அடிபடறதும் ,ரிலீஸ்னா படம் அடி வாங்கறதும் சகஜம் தானே?




===============================



8 கூட்டணி குழப்பத்தால் விஜயகாந்த் செல்வாக்கு சரிவு- அதிமுகவுக்கே வெற்றி: பண்ருட்டி ராமச்சந்திரன் # அண்ணனுக்கு ஒரு அண்ணா விருது பார்சல்



===========================



9 திருவள்ளுவரே தமிழ்நாட்டில் திணறிப்போயிருக்கிறார் அதிமுக ஆட்சியில்-கலைஞர் # என் பேரு அழகிரி.எனக்கு இன்னொரு பேர் இருக்கு.திருவள்ளுவர்




=============================



10 ஹாலிவுட் நடிகைகளை 'காப்பி'யடித்து டிரஸ் போடும் தீபிகா படுகோனே # ஏதோ கொஞ்சமே கொஞ்சமாவது டிரஸ் போடறாங்க்ளே?




=============================


11 அம்மா பிரதமர் ஆக வேண்டும் - தா பா ,,
#தா.பாண்டியன் # உங்கம்மாவா? நம்ம அம்மாவா? ்



=======================



12 இலங்கை அரசு தன் கடற்படையை அடக்கி வைக்க வேண்டும்-வாசன்# எங்கேங்க , இப்பவெல்லாம் சொந்தப்பையனையே தலைவர்களால அடக்க முடியறதில்லை




===========================



13 திமுகவை எந்த சக்தியாலும் அழிக்கமுடியாது - ஸ்டாலின் # கருவேல மரமா இருந்தாலும் ஆணி வேர் பலமா இருந்துட்டா ஏதும் செய்ய முடியாது




====================================



14 காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்து ஊழலை ஒழிக்க வேண்டும்- விஜயகாந்துக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பகிரங்க அழைப்பு # மிஷின் இம்ப்பாசிபிள் 2



=========================




15 விஜயகாந்த் வெற்றியை எதிர்த்து கோர்ட்டில் மேல்முறையீடு- சட்டசபைக்கு செல்ல தடை விதிக்க கோரிக்கை# இப்ப மட்டும் போய்க்கிட்டா இருக்காரு?



============================




16 மனைவியை கணவர் அடிக்கலாம்: ஆப்கானிஸ்தானில் புதிய சட்டம் # ஆனா மனைவி திருப்பி அடிப்பாளே.தாங்க முடியாதே? :-(




=======================



17 ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தொடரும் - சோனியா காந்தி # ஓட்டு வேணும்னா இந்தியன் / இத்தாலியன் எது வேணாலும் செய்வான்




============================



18 ரூ.5 லட்சத்தில் குடும்பத்தில் எல்லோரையும் அழைத்துச் செல்லும் டட்சன் எம்பிவி கார் # தமிழ் இனத்தலைவர் குடும்பத்துல 92 பேர் இருக்காங்க



=======================



19 தன் முதல் ஹீரோ விஜய்க்கு மீண்டும் ஜோடியானார் ப்ரியங்கா சோப்ரா! # தானிக்கு தீனி.விஜய் சங்கவியுடன் ஜோடி சேர்வாரா? ரசிகர்கள் ஆவல்



============================



20 இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் பண்ண வேண்டாம் : ராஜ்கிரண் அதிரடி # ராஜபக்சே மட்டும் தான் பாக்கி.எல்லாரும் இதை சொல்லியாச்




=================================

வண்ணத்துப்பூச்சி (2008) - திரை விமர்சனம்


சமீபத்தில் ஈரோட்டில் கல்லூரி மாணவர்களுக்கான திரைப்பட விழா நடைபெற்றது.இதில் நல்ல கருத்துள்ள படங்கள் மாணவ மாணவிகளுக்கு காட்டப்பட்டன. கடந்த சனிக்கிழமை அன்று (01.02.2014) மகாராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு வண்ணத்துப்பூச்சி என்ற படம் காட்டப்பட்டது. நல்ல படமா இருந்தா அட்ராசக்கக்கு ஒரு பதிவு தேறும்-னு போனேன் (தொழில் தர்மம்). உண்மையாவே படம் சூப்பர்....

படத்தோட கதை என்ன? பெத்தவங்க தன் குழந்தைகளை கவனிக்காம பணம் பணம்-னு இருக்காங்க. கதைக்கு ஏத்த மாதிரி ரெண்டு பேரும் சாஃப்ட்வேர் துறைல பெரிய வேலைல இருக்காங்க. ஆனா தன் குழந்தை திவ்யா மேல அக்கறை இல்லாம இருக்காங்க. ஒரு நாள் அந்த குழந்தைக்கு கிராமத்துல இருக்கற தாத்தாவ பத்தி தகவல் தெரியுது. அப்பா அம்மா சம்மதத்தோட அந்த கிராமத்துக்கு போகுது. அப்பா அம்மா கிட்ட இருக்கறத விட தாத்தா கூட இருக்கறத தான் விரும்புது.

அப்பா அம்மா கூட போக மாட்டேங்குது. கோவத்துல சொந்த அப்பானு கூட பார்க்காம அடிச்சுடறார். குழந்தக்கு கோபம் வந்து தன் பெற்றோர்கள் மேல கேஸ் போடுது. கேஸ்ல யார் ஜெய்ச்சா என்பதை பார்த்து தெரிந்துகொள்க. இந்த படத்தை ராஜ் அல்லது ஜீ தமிழ் தொலைகாட்சில அடிக்கடி போடுவாங்னு நண்பர்கள் சொன்னார்கள்.



மொத்த படத்தையும் தாங்கி நிற்பவர்கள் அந்த குழந்தையும் தாத்தாவாக வருபவரும் தான். அருமையான நடிப்பு.கிராமத்து கதாப்பாத்திரங்கள் அனைவரும் சூப்பர் நடிப்பு. அதிலும் தாத்தாவாக வருபவர் பிள்ளை பாசத்திற்கு ஏங்கும் கதாப்பாத்திரத்தில் நிஜ தாத்தாவாக வாழ்ந்து இருக்கிறார். அனைத்து கதாப்பாத்திரங்களும் கன கச்சிதம். ஆனால் நகரத்து அப்பா அம்மாவாக வருபவர்களிடம் ஏன் அவ்வளவு செயற்கையான நடிப்பு? இயக்குநர் அதை கவனிக்க மறந்துட்டாரா? பாடல் இசை ஓக்கே ரகம்.

இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள் :

1. படத்தின் ஆரம்பத்தில் அருமையான மெல்லிய பாடலை வைத்தது. காற்றில்.. காற்றில்.. வண்ணத்துப்பூச்சி பாடல் அதில் குழந்தையின் ஏக்கங்களை பாடல் வரியாக அமைத்தது.

2. கெஸ்ட் ரோலில் ரேவதியை நடிக்க வைத்தது.

3.கிராமத்து கதாப்பாத்திரங்களை யதார்த்தம் குறையாமல் பதிவு செய்தது.

4.ஆட்டம் போட வைக்கும் கடைசியாக வரும் கோவில் திருவிழா பாடல்.

5. ரேவதி தரும் தீர்ப்பு மற்றும் அவர் பேசும் வசனங்கள்.

6. குழந்தையாக வரும் திவ்யாவின் சுட்டித்தனமான நடிப்பு.

7.இறுதியாக தாத்தாவும் பேத்தியும் கையை பிடித்துக்கொண்டு நடக்கும் காட்சி பேக்கிரவுண்ட் சூரிய ஒளி.. குட் வொர்க்.


இயக்குநரின் கவனத்திற்கு:

1. ஹீரோ ஏன் சின்ன வயசுல ஏன் ஓடி போறார்? அதற்கான காரணத்தை சரியாவே சொல்லல.

2. கந்துவட்டி கேரக்டர் திணிப்பு மாதிரி தெரியுது. அவ்ளோநாளா திருந்தாதவன் அந்த பாப்பா பேச்ச கேட்ட உடனே திருந்திடறான். ( வர வர பசங்க பேச்சுக்கு மரியாதை இல்லாம போய்டுச்சு...)

3. முன்பாதி கொஞ்சம் ரப்பர். காட்சிகளை குறைத்திருக்கலாம்.

4. யாரோ ஒரு பெரியவர் சொன்ன உடனே குழந்தையை நம்பி அனுப்பி வச்சுடறாங்க. யாராவது இப்படி அனுப்புவாங்களா?

5. க்ளைமேக்ஸ் காட்சில பெற்றோர்கள் நடிப்பு படு செயற்கை.

6.அம்மவாக வருபவர் ஓவர் மேக்கப் ... படிக்கிற பசங்க பயப்படுறாங்கள்ல...

7.கிராமத்துக்கு அந்த பாப்பா வந்த உடனே அவள எந்த காரணத்துனால கடவுளா கொண்டாடுறாங்க? (நானும் நிறையா கிராமத்துக்கு போயிருக்கேன் தாயீ ...)

மனம் கவர்ந்த வசனங்கள் : 


1. நான் முக்கிமியல்ல, நான் வாங்குன கப்புக்கு மட்டும் சொந்தம் கொண்டாடுறாங்க.


2. அங்கிள் உங்களுக்கு சொந்தம்னு சொல்லிக்க யாராவது இருக்காங்களா?

    இல்ல.. ஏன் கேக்கற?

    அப்புறம் ஏன் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதிக்கறீங்க? அது     யாருக்கு பயன்பட போகுது?

3. எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கனும்.

4.என் தாத்தாக்கு நான் தான் கஷாயம் வச்சு தருவேன். நீங்க வச்சு கொடுத்துட்டு போயிட்டா மறுபடியும் உடம்பு சரியில்லாம போனதுக்கப்புறம் நான் எப்படி வைக்கறது? எனக்கும் சொல்லி கொடுங்க..

5. சின்ன புள்ளையா இருந்தாலும் மரியாதையா பேசுதுல்ல?

அதோட பரம்பரை அப்படி...

6.இது வரை நான் சட்டப்படி தான் தீர்ப்பு கொடுத்து இருக்கேன். இப்பதான் முதல் முறையா ஒரு குழந்தையை புரிந்து கொண்டு தீர்ப்பு கொடுத்து இருகேன்.ரொம்ப திருப்தியா இருக்கு.

மொத்ததில் வண்ணத்துப்பூச்சி சிறகடித்து பறக்கச்செய்யும். ஆனால் கமர்ஷியல் படம் இல்லை. பக்கா டாக்குமெண்ட்ரி. 

டிஸ்கி: படம் முடிந்தவுடன் மாணவ மாணவிகள் எழுந்து நின்று கை தட்டி அங்கீகாரத்தை அளித்தனர்.

இந்த விமர்சனத்தை வழங்கியவர் என் அக்கா பையன் கார்த்திக். எடிட்டிங், male பார்வை மட்டும் சி.பி.

ரேட்டிங்= 6.0/10


 


வேதாளம் ஏன் முருங்கை மரத்துல ஏறுச்சு? வழக்கம் போல் ஒரு வெட்டி ஆராய்ச்சீய்

1.சம்சாரம் ஊருக்குப்போய் இருக்கையில் தனிமைக்கடலில் நீ தத்தளிக்கையில் மச்சினியே கலங்கரை விளக்கம்



============


2 கோவை தியேட்டர் ஓனர்கள் டிஸ்ட்ரிபியூட்டருக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் ஜில்லா எல்லா தியேட்டர்களிலும் எடுக்கப்பட்டது தவறான முடிவு


===============



3 ட்விட்டரில் இருக்கும் அனைத்து டாக்டர்களும் தங்கள் டிபி யில் ஹாஸ்பிடல் நர்ஸ் போட்டோவை அப்டேட்டனுமாம்.மத்திய அரசு உத்தரவு # சும்மா


================



4 பெண்ணைப்பற்றி வர்ணிச்சுட்டு அதோட முடிச்சுடுங்க.பின் குறிப்பு னு ஏதாவது சொன்னா நமக்குப்பின்னால வரும் சந்த்திகள் நம்மைப்பத்தி தப்பா பேசும்


================



5 மீசை சரியா வராத பசங்க ஐப்ரோ பென்சிலால் மீசை வரைவது போல் பொண்ணுங்க புருவத்தை வரைஞ்சிக்கறாங்க # கார்த்திகா பாறைகள்



===============


6  அஜீத்குமார் - கவுதம் மேனன் படம்: பிப்ரவரி 6-ல் பூஜை # 6 2 2014= கூட்டுத்தொகை =15=6 ,அஜித்குமார் =6மேட்சுக்கு மேட்ச்



===============



7  6 மனமே 6,அந்த் ஆண்டவன் கட்டளை 6 ;-))



===============


8 சிஸ்டம் கீ போர்டு 180 ரூபா இருந்துச்சு.l.o.v.e. i.j.a.y இந்த லெட்டர்ஸ் எல்லாம் தேய்ஞ்சிடுச்சுனு புதுசு வாங்க வந்தா.240 ரூபா சொல்றாங்க.



============


9  யார்னே தெரியாத மைனா ,குருவி ,கழுகு சொன்னா கேள்வியே கேட்காம தமிழன் நம்புவான்.முகம் தெரிஞ்ச பழக்கமான ஆள் சொன்னா நம்ப மாட்டான் ;-)))



===========================


10  எனக்குப்பிடித்த நீராகாரம் உன் உமிழ் நீர் தான். உனக்குப்பிடித்த ஆகாரம் என் முத்தமே!



==============================



11  நம் முதல் சந்திப்பு விதிப்படி ,வீதியில் நிகழ்ந்தது



==========================




12 ராட்டன் தூரியில் சுற்றும்போது வயிற்றைப்புரட்டிப்போடுவது போல என்னை விட்டு நீ தற்காலிகமாக விலகினாலும் அது நிரந்தரமோ என பயம் சூழ்கிறது



==============================



13 என் அருகில் நீ வந்ததும் நான் செய்யும் முதல் பணியே உன்னை வாசம் பிடிப்பதே! அதற்குப்பின் தான் உன்னைப்பிடிப்பதே!



==================



14 1000 அஸ்திரங்கள் உன் உடல் எங்கும் மறைந்து கிடந்தாலும் என்னை ஒரே நொடியில் வீழ்த்தும் பிரம்மாஸ்திரம் உன் கண்கள் தான்



===========================



15 உன் உதட்டையும் ,கண்ணையும் மாறி மாறிப்பார்ப்பதில் என் கண்கள் அபார வேகத்தில் ரேஸ் பைக்கின் துல்லியத்துடன்


========================


16 வீட்டுக்கு திருடன் வந்தா கண்டுக்காத நாய் வீதில வாக்கிங் போறவனை விடாம துரத்தும்



==========================



17 ஊர்ல 1008 மரம் இருக்கும்போது விக்கிரமாதித்தன் தோள்ல இருந்த வேதாளம் ஏன் முருங்கை மரத்துல ஏறுச்சு? அப்போ முந்தானை முடிச்சு கூட வர்லையே?



=======================



18  தோப்புக்கரணம் னா முழுசா கீழே உக்காந்து எந்திரிக்கனும். அது எக்சசைஸ் மாதிரி.அதை மினி தோப்புக்கரணம் ஆக்கி விநாயகரையே ஏமாத்துபவன்தான் தமிழன்



============================



19 தன் பெற்றோருக்கு நன்றிக்கடன் முழுதாய் அடைத்தவன் இவ்வுலகில் இதுவரை இல்லை




=======================


20 தன் குழந்தையை தோளில் சுமந்து நடக்கும்போது மட்டும் ஒவ்வொரு ஆணின் தோளும் குழைந்து அம்மாவின் மடி ஆகி விடும்



======================



21 மழலையின் உதட்டில் இருந்து வரும் ஒருமை முன்னிலை வார்த்தைகள் பெற்றோருக்கு பன்மை படர்க்கையை விடப்பேரானந்தமாய் காதில் ஒலிக்கும்


=======================



22 பேய்க்கு கல்யாணம் ஆனா சுடுகாட்டில் தான் முதல் இரவு நடக்கும் சாரி படுத்துக்கும்



==========================



23 நேத்து மீதிக்காசு 1 ரூபா தராத கண்டக்டர் இன்னைக்கு எந்த பஸ் ,டியூட்டி டைம் என்ன? னு 5 ரூபா செலவு பண்ணி போன் பண்ணி விசாரிச்சு வாங்கிட்டேன்



=======================



24 கூந்தலில் ரோஜாவை சூடும்போது வானம் பார்த்த வாக்கில் பலரும் ,பூமியைப்பார்த்த வாக்கில் சிலரும் சூடிக்கொள்கிறார்கள் # பொழுது போகாத பொம்மு



===========================


25 பொண்ணுங்க ஜெனீலியா ,லைலா ,தமனா மாதிரி லூஸ்தனமா பேசினாலும் ஜாக்கெட் மட்டும் செம டைட்டா போடுவாங்க # அனுமானம் 10 " * 



=======================



26  10" சைஸ் உள்ள 25 கிராம் எடை கூட தேறாத துக்ளியூண்டு ஹேன்ட்பேக் கை என்னமோ ரயில்வே போர்ட்டர் கணக்கா தூக்கிட்டு வருது ஒரு பிகரு




===========================






Wednesday, February 05, 2014

சக்சஸ் FULL கூட்டணி எது?

1கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜயகாந்த் வெளிநாட்டுப் பயணம் # ஒபாமா கூடவா கூட்டணி வைக்கப்போறீங்க?



==============


2ராஜபக்சேவுக்கு ஜெ தண்டனை அளிப்பார்-நாஞ்சில் சம்பத்# யோவ்.பெட்ரோல் போட காசு வேணும்னா கேட்டு வாங்கிக்குங்க.சும்மா அடிச்சு விடக்கூடாது



===============


3காதல் காட்சிகளில், என்னை விட என் மகன் சிறப்பாக நடிக்கிறான்..் கார்த்திக் புகழாரம் # படம் தான் ஊத்திக்குதே ஒழிய பிகரு தேத்திக்குது



===============


4சன்னி லியோனுக்கு சேலை கட்ட கற்றுக் கொடுத்த சல்மான் கான் # பிரதி உபகாரமா அவர் இவருக்கு என்ன கத்துக்குடுத்தாரோ? சிவசிவா


=================


5பாஜக கூட்டணியில் தேமுதிக,பாமக, மதிமுக,ஜன21 முதல் தொகுதிப் பங்கீடு பேச்சு,ு !# அப்டிப்போட்டுத்தாக்கு.காங் க்கு செம ஷாக்கு



=================


6பாமக கண்டிப்பாக வரும், தேமுதிகவும் வரும் அறிகுறிகள் தென்படுகிறது: இல.கணேசன்# "சகாப்தம்" படைக்கும் கூட்டணி!??



================



7விஜய்யை இயக்கும் 'ராஜா ராணி' புகழ் அட்லீ # தெலுங்கு ரீமேக்கர் ,தமிழ் ரீமேக்கர் 2 பேரும் இணைஞ்சா மாஸ் தான்



=================


8நாட்டை காப்பாற்ற முயற்சிக்கிறோம்'- ப் மோடி ு: # அப்டி நாட்டுக்கு நல்லது நடக்க் நாங்க விடமாட்டோம் - சோனியா ,ராகுல் ,ப்ரியங்கா



==================



9கருணாநிதியுடன் மு.க.அழகிரி மீண்டும் சந்திப்பு. #டாடி!பட்டமளிப்புவிழா எப்போ? அஞ்சா நெஞ்சன் பட்டம் வேணா சூட்டிடறேன்




=====================



10கள்ளக்காதல் தகராறில் அதிகமாக மாத்திரை சாப்பிட்டதால் சுனந்தா மரணம்: # மாத்திரையை சாப்ட்டது சுனந்தாதானுங்.அதுக்கு தூண்டுனது சசிதரூர்ங்க



=================


11ஆளுங்கட்சிக்கும் ஆண்டகட்சிக்கும் மாற்று நாங்கள்தான் - விஜய்காந்த் # ஆம் ஆத்மியுடன் கூட்டணி உண்டா? "விளக்குமாறு " கேட்டுக்கொள்கிறோம்


=================



12செவ்வாய் கிரகத்தில் பயிர் செய்யக்கூடிய சாத்தியம் உள்ளது -விஞ்ஞானிகள் தகவல் # அங்க போயும் வாய் வலிக்க கடலை சாகுபடி செய்வான் நம்மாளு


=================


13பிரிட்டன் டாக்டர் நிக்கோலசுடன் காதல் முறிந்தாலும் ஆழமான நட்பு தொடரும் - கங்கனாரனாவத் # ஆழமான நட்புன்னா கிணத்தடில் சந்திச்சுக்குவாங்க்ளோ?



==================



14ஆண்ட்ரியாவுடன் காதல் முறியக்காரணம் வயசு வித்தியாசம் - அனிரூத் # ஓஹோ! ஜவ் மிட்டாய் மாதிரி உதட்டை மென்னுட்டிருந்தப்ப அது தெரியலையா?



=================


15முருகதாஸ் + விஜய் படத்திக்கு பரிசீலனையில் உள்ள டைட்டில்கள் = வாள் ,ஆம் # பேசாம ஆம் ஆத்மியின் போர் வாள் னு வைங்க.டாபிக்கலா இருக்கும்



====================


16அநேகன் படத்தில் நான்கு கெட்டப்பில் தனுஷ் # அண்ணன் ஒரு கெட்டப் ல நடிச்சாலே 100 நாள் ஓடும்.இதுல 4 ,400 நாள் கன்பர்ம்


===============


17 பொய் சொல்லுவதையே மூலதனமாக கொண்ட கட்சி பாஜக-நாராயணசாமி# நமக்குத்தொழிலே பொய்யும் புரட்டும் தானேங்ணா?அடுத்தவங்களைக்குறை சொல்லி ?




===============



18 தேமுதிகவிற்கு உரிய முறையில் அழைப்பு விடப்படும் -கருணாநிதி#"அரை"குறை அழைப்பு பிடிக்காது.FULL சப்போர்ட் வேணும்னா சக்சஸ்FULL கூட்டணி]\




=================



19  குடியரசு தினவிழாவை சீர்குலைக்க ஆம்ஆத்மி முயற்சி: ஞானதேசிகன் # பாகிஸ்தான் தீவிரவாதி ரேஞ்ச்க்கு அவரை ஏத்தி விடாதீங்கய்யா.பிஞ்சு மூஞ்சி



================



20 திமுகவில் யாரும் யாருக்கும் பயப்படத்தேவையில்லை! -.ஸ்டாலின் # பயப்படாதீங்க.அழகிரி எதும் செய்ய மாட்டாரு.இவருக்கு இவரே ஆறுதல் சொல்லிக்கறாரோ?


=====================

Tuesday, February 04, 2014

கலைஞருக்கு ஆப்பு - ஆம் ஆத்மி வெச்சாச்சு மாப்பு

உச்சநீதிமன்றத்தில் கலைஞர் டிவி தொடர்பான 'ஸ்பெக்ட்ரம்' தொலைபேசி டேப்  தாக்கல்: பிரசாந்த் பூஷன்
 spectrum வழக்கில் கலைஞர் TV தொடர்பான மேலும் பல தொலைபேசி உரையாடல்களை டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது. அத்துடன் கனிமொழியை காப்பாற்றும் வகையிலான இந்த சதி தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.


spectrum ஊழல் வழக்கில் ஏற்கெனவே அரசியல் தரகர் நீரா ராடியா பேசிய தொலைபேசி உரையாடல்கள் சேர்க்கப்பட்டு அது தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் spectrum ஊழல் வழக்கில் கலைஞர் TV தொடர்பான தொலைபேசி உரையாடல்கள் சில நாட்களுக்கு முன் ஒரு இணையத்தளத்தில் வெளியானது.

2ஜி: கலைஞர் டிவி தொடர்பான மேலும் தொலைபேசி உரையாடல்களை வெளியிட்டது ஆம் ஆத்மி!!

கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகியான சரத் ரெட்டி மற்றும் காவல்துறை அதிகாரி ஜாபர்சேட் ஆகியோர் இடையே இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றிருந்தது.

அதில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்ய வருவதற்கு முன்பாகவே தாம் 100க்கும் மேற்பட்ட ஆவணங்களில் தான் பின் தேதியிட்டு கையெழுத்திட்டு வருவதாக சரத் ரெட்டி கூறுவது பதிவாகி இருக்கிறது. (ஆனால், இந்த உரையாடலில் பேசுவது ஜாபர் சேட், சரத் ரெட்டி தானா என்பது உறுதி செய்யப்படாமல் இருந்தது).
இந்த உரையாடல், Mobile போனில் Record செய்யப்பட்டது. யார் இந்த டேப்பை வெளியிட்டார் என்பதை நாங்கள் சொல்ல மாட்டோம். இதில் பதிவான குரல் பல முறை சோதிக்கப்பட்டுள்ளது.

புதிய டேப்புகள்- விசாரணை தேவை

இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷன், spectrum வழக்கில் கலைஞர் டிவி தொடர்பான மேலும் பல தொலைபேசி உரையாடல்களை வெளியிட்டார்.


அதில் காவல்துறை அதிகாரி ஜாபர்சேட் மற்றும் கருணாநிதியின் உதவியாளர் சண்முக நாதன் ஆகியோருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் ஒன்றும் அடக்கம். இது குறித்து கருத்து தெரிவித்த பிரசாந்த் பூஷன், spectrum வழக்கில் கனிமொழியை பாதுகாக்கும் சதியையே இந்த தொலைபேசி உரையாடல்கள் வெளிப்படுத்துகின்றன.



கனிமொழியின் தொண்டு நிறுவனத்துக்கு TATA நிறுவனம் ரூ20 லட்சம் நன்கொடை கொடுத்ததும் இதில் பதிவாகியுள்ளது. மேலும் கலைஞர் டிவிக்கான ரூ200 கோடி பண பரிவர்த்தனை தொடர்பான தகவலும் இந்த தொலைபேசி உரையாடலில் உள்ளது.

spectrum வழக்கில் கலைஞர் டிவிக்கு பணப்பரிவர்த்தனம் நடந்தது என்பது திமுக தலைவர் கருணாநிதிக்கும் தெரியும் என்பதை இந்த உரையாடல் வெளிப்படுத்துகிறது. இது தொடர்பாக கருணாநிதியாக இருந்தாலும் டாடாவாக இருந்தாலும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

கருத்து கூற சரத் ரெட்டி மறுப்பு

இந்த தொலைபேசி உரையாடல்கள் பற்றி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்க முடியாது என்று கலைஞர் டிவியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, பிரசாந்த் பூஷன் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது என்றும் அதை கேட்ட பிறகு தான் என்னால் பதில் சொல்ல முடியும். மேலும், இந்த விஷயம் கோர்ட்டில் உள்ளது. எனவே, அது குறித்து கருத்து கூறுவது சரியாக இருக்காது என்றார் சரத்.

கருணாநிதியின் PA., சண்முகநாதன்

spectrum விவகாரம் தொடர்பாக கனிமொழி கலைஞர் டி.வி., எம்.டி., சரத்குமாரை பல முறை சந்தித்துள்ளார். கருணாநிதியின் பி.ஏ., சண்முகநாதன் கடந்த 2010 டிசம்பர் 31 ம் தேதி போலீஸ் அதிகாரி உள்ளிட்ட சிலரிடம் பேசிய விவகாரத்திற்கும் எங்களிடம் ஆதாரம் உள்ளது. இந்த உரையாடலை நாங்கள் எங்கள் கட்சியின் இணையதளத்தில் வெளியிடுவோம்.

கலைஞர் டி.வி.,யில் 20% கனிமொழி, 60% கருணாநிதி மனைவி ஆகியோருக்கு பங்கு உண்டு. 2G spectrum ஊழலில் பெறப்பட்ட கடன் தொகையில் மாற்று ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

Thanks - OneIndia-Tamil

பெரிய நெல்லிக்காயின் புளிப்பு மாதிரி நம் பிரிவுகள்!

1.நான் சின்னப்பையனா இருக்கும்போது பொண்ணுங்க போடும் சுடியின் துப்பட்டா 2 1/4 மீட்டர் நீளம் இருக்கும்.இப்போ ஜஸ்ட் 1 1/2 மீ தான் # உத்தேசமா


======================


2எதுவும் எழுதத்தோணலைன்னாக்கூட தமிழன் சும்மா இருக்கமாட்டான்.என்ன ட்வீட்டுவது?னு தெரியலையே? அப்டி னு ட்வீட்டி ஒரு ட்வீட் தேத்திடுவான்



=======================



3  சி சென்ட்டரான சென்னிமலை ல ஜில்லா 15 வது நாளா இன்னும் ஓடுது.தைப்பூசத்தேர்த்திருவிழாக்கூட்டம் தான் காரணம்னு சொல்லி சமாளிப்போம் ;-))


=========================


4 வீரம்னா என்ன தெரியுமா? சொந்தப்பையனா இருந்தாலும் சரி , பதவிக்கு ஆபத்து விளைவிப்பான்னு தெரிஞ்சா கட்சியை விட்டு கடாசுவதே!



========================



5 சிவனும் சக்தியும் தனியா பிரிஞ்சா மாஸ்டா



========================


6 நான் சின்ன வயசில் இருந்தே ஜெ வின் நடிப்புக்கு ரசிகன் - அழகிரி அதிரடி # சும்மா


========================


7  கலைஞரோட ராஜ தந்திரத்தைப்புரிஞ்சிக்கிட்டவன் இந்த ஜில்லாவுலயே கிடையாது ,அவர் எது செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்


==========================



8 அழகிரி இனி அழுகைகிரி



=====================



9 அஞ்சா நெஞ்சன் ஆம் ஆத்மியில் சேருவாரா? புரட்சித்தலைவி பக்கம் போவாரா?



===========================



10 இளைய தளபதி க்கு நேரம் எப்படியோ? ஆனா நம்ம தளபதிக்கு நேரம் கை கூடி வந்திருக்கு #,அண்ணன் வெளியே தம்பி கோட்டைக்கு உள்ளே



======================



11 முதுகுல குத்துனது பெத்த அப்பாவா இருந்தா அவமானத்தை வெளில சொல்லக்கூடாது.



========================


12 தமிழ் நாட்டின் நன்மைக்காக மகனையே கட்சியை விட்டுத்துரத்திய மகானே! அப்டினு யாரும் இன்னும் பேனர் ரெடி பண்ணலையா?



======================



13   அழகிரி = காலிசோடா .ஸ்டாலின் = நேர் எதிர்




======================



14 மதுரையை விரட்டிய சுந்தர திராவிடர்



======================



15  மு க வீடு 2 பட்டா ரெட்டை இலைக்கு கொண்டாட்டம்



=====================


16 தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.ஆனால் அவர் வைத்தது போல் ஒரு சூன்யம் இல்லை # சூது கவ்வும்




========================



17 தமிழர்களே தமிழர்களே கேப்டனைத்தூக்கி எறிந்து யார் பேசினாலும் கட்டுமரமாய் இருக்கமாட்டேன்.கட்டவிழ்த்து விட்டு விடுவேன்



=======================



18 தங்க மீன் கள் மாதிரி நல்ல படத்தை பாருங்கன்னா ஒரு பய கேட்பதில்லை.பாக்காதீங்கன்னா ஆளாளுக்கு ஏன்? னு கேட்கறாங்க #,தமிழேண்டா



===========================



19  பெரிய நெல்லிக்காயின் புளிப்பு மாதிரி நம் பிரிவுகள்! உன் நினைவுகள் நெல்லி விள்ளல் அள்ளலுக்குப்பின் குடிக்கும் நீர் போல் தித்திப்பானவை



===========================


20 பஸ் ரயில் பயணங்களில் உன் தேர்வு ஜன்னல் ஓர இருக்கையாக இருக்கும்! என் தேர்வு உன் மடி ஓரமாக இருக்கும் ,இறுக்கும், கிறுகிறுக்கும்



==================================