Friday, January 31, 2014

. கூட்ட நெரிசல் உள்ள டவுன் பஸ்சில் புத்திசாலி ஆண் என்ன செய்வான் ? என்ன செய்ய மாட்டான்?

1. கூட்ட நெரிசல் உள்ள டவுன் பஸ்சில் புத்திசாலி ஆண் ஜன்னல் ஓர சீட்டில் அமர மாட்டான்


================



2 அழகிரி 2 வருசம் ,ஸ்டாலின் 2 வருசம் ,கனிமொழி 1 வருசம் ஆண்டுக்கலாம்.பிரச்னை வராது # தமிழ் இனத்தலைவருக்கு ஐடியா


====================


3 காரக்கொழம்பை ரொம்பக்காரமா பொண்டாட்டி வெச்சுட்டா அது அதி காரக்கொழம்பு ஆகிடும்



=======================


4 இந்த பொண்ணுங்க எல்லாம் ஏற்கனவே பளபளப்பாத்தான் இருக்காங்க.இதுல நெக்லஸ் ,ஜிமிக்கி எல்லாம் போட்டு ஷைனிங் ஏத்திக்கறாங்க.ஆம்பளைங்க தான் பாவம்



==========================


5 குழம்பு ல காரம் அதிகமா இருந்தா அதுல தயிர் ஊத்தி சாப்டுக்கனுமாம் # தொலை பேசி இல் இருந்து தொல்லை ( சொந்த சம்சாரம் டிப்ஸ்)



=======================



6 மேரேஜ் ஆனதும் பொண்டாட்டி நகையை எல்லாம் ஏன் புருசன் காரன் அடமானம் வெச்சுடறான் கற தொழில் ரகசியத்தைக்கண்டுபிடிச்ட்டேன் ;)))


=====================



7 ஆபீஸுக்கு லீவ் போட்டாலும் ஒரு விசிட் அடிச்சு வைங்க 1 லீவ் நாளிலும் அக்கறைனு டேமேஜர்ட்ட நல்ல பேர் 2 லேடி ஸ்டாபை ஸைட் அட்டெண்டென்ஸ்



======================



8 அன்பே ! நீ குடி இருந்த கோயில் தான்.அதாவது நாம் ஒரு அழகி என்ற கர்வம் உன்னையும் அறியாமல் உன் முகத்தில் குடி இருந்த கோயில்



=====================


9 6 அடி உயரமா இருப்பதுல ஆண்களுக்கு உள்ள பெரிய பிரச்னை என்னான்னா தலை நிமிர்ந்து பார்க்க சலிச்சுக்கிட்டு ( வெட்கம் அல்ல) பலர் பார்ப்பதே இல்லை



=====================


10 பொண்டாட்டியை குட்டிம்மா னு கூப்ட்டாத்தான் அன்பாம் # தென்றல் சீரியல் அலப்பறைகள்


=================


11 நாசமாப்போச்சு.இனி எல்லா சீரியல்களும் திங்கள் டூ சனி #,செத்தாண்டா சேகரு


=================


12 மாடர்ன் பிகருங்க செப்பல் போடக்கூட மறப்பாங்க.ஆனா பேஸ்புக் ல ஸ்டேட்டஸ் போட மறக்க மாட்டாங்க


====================


13 தாலி கட்டிட்டா எல்லா ஆம்பளைங்களும் ஹவுஸ் அரெஸ்ட்டட் கைதிகள் தான்


======================


14 தமிழன் 6 மணிக்கு எந்திரிப்பான்.ஆனா படுக்கையை விட்டு 7 மணி ஆனாலும் எந்திரிக்க மாட்டான் # தமிழேண்டா


=================


15 அஞ்சா நெஞ்சன் கூட அழறாராம்.அப்பா கதர்றாராம்.தம்பி அமைதியா இருக்காராம் # அய்யோ ராமா அறிவாலயத்தில் ஓடுதே சென்ட்டிமென்ட் டிராமா



========================

16 இன்னைக்கு தை அமாவாசை.பித்ருக்களுக்கு ஈமைக்கிரியைகள் செய்ய உகந்த நாள். கோயிலில் செம கூட்டம் இருக்கும்


=========================

17 பி ஏ பாஸ் ங்கற கில்மாப்படம் திருப்பூர் ல 4 தியேட்டர் ல ரிலிஸ்.ஈரோட்ல ரிலீஸே இல்லை # நீதி - திருப்பூர் ல மொள்ளமாரிங்க ஜாஸ்தி்


======================


18  திருப்பூர் ராகம் ,பிரகாஷ் ,மணீஷ் ,தெய்வம் # பிஏ பாஸ் கில்மாப்படம் ஓடும் திருத்தலங்கள் = ஈரோடு மாவட்ட மொள்ளமாரிகள் கவனத்திற்கு



======================


19 தேங்காயை உடைச்ட்டு வா னு அம்மா குடுத்தா உடைச்ட்டு அதுக்கு உடை கூலியா ஒரு காக்கா கடி கடிச்ட்டு தேங்காத்தண்ணியைக்குடிப்பவன் தான் தமிழன்



===========================


20 படையலை காகம் சாப்பிட வர தாமதமானால் ஆற்றில் ,கிணற்றில் மீன் களுக்கு படைக்கலாம் # டிப்ஸ்



========================


Thursday, January 30, 2014

சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக தீபிகாபடுகோனே

1. எனக்கு பதவி ஆசை இல்லை: ராகுல் # பெண்ணாசை , மண்ணாசை , பொன்னாசை எல்லாம் துறந்த துறவியே! அதிசயப்பிறவியே!ஓடாத புரவியே!



===============



2 அழகிரி என்னையும், ஸ்டாலினையும் வெறுக்கத்தக்க வகையில் பேசினார் - கலைஞர் # தலைவா, படு கேவலமாத்திட்டிய கேப்டன்,ராம்தாஸ் கூட எல்லாம் சேர்ல?


=================


3 அரசின் நிர்வாகக் கோளாறால் வெளிமாநிலங்களுக்கு இடம் பெயரும் முதலீடுகள்: கருணாநிதி குற்றச்சாட்டு# நம்ம வீட்லயே ஏகப்பட்ட கோளாறு இருக்கு போல


=================



4 பாஜக கூட்டணியை விரும்பும் தேமுதிக MLAக்கள்விஜயகாந்துக்கு ஃபேஸ்புக்கில் கடிதம் # 1000 தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்த கும்மி கொட்டுங்களேன்



=================


5 உயிருக்கு அச்சுறுத்தல்: ஸ்டாலினுக்கு பாதுகாப்பை அதிகரிக்க கருணாநிதி கடிதம்.. # பிரஸ் தானம் தெலுங்குப்பட திரைக்கதை அப்டியே கண் முன் ஓடுது



==================



6 டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் சாவுக்கு மனைவியே காரணம்: தாய்லாந்து போலீஸ்..# பொதுவாவே புருசனை வதைப்பது பொண்டாட்டியா தான் இருக்கும்



==================



7 பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியவருக்கு பத்மஸ்ரீ விருது: மேற்கு வங்க பெண்கள் ஆணையம் எதிர்ப்பு..# பாலியல் ஸ்ரீ விருதா தர முடியும்?


===============


8 பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்: சரத்குமார் # பல்லக்குத்தூக்கிகள் எஜமானரைத்தூக்கி வெச்சுதான் பேசுவாங்க


==============


9 எனக்கு இணையான பாத்திரம் சிம்புவுக்கு இருக்க வேண்டும், அஜீத்தின் அன்பு கட்டளை# அவர் எத்தனை கிமீ நடக்கறாரோ அதே தூரம் இவரும் நடக்கனுமாம்



===============


10 சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்கள் உதவாக்கரைகள்- தமிழருவிமணியன் # இதை நீங்க ஃபேஸ்புக்லதானே போஸ்ட் செஞ்சீங்க? ஹி ஹி தவளை தவளை



==================


11  டெல்லியில் மகளிர்பாதுகாப்புப் படைஅமைப்புஅரசு ஒப்புதல் #  கராத்தே  தெரிஞ்ச லேடீசை அப்பாயிண்ட் செய்ங்க, ஆம்பளைங்களைப்போட்டா இன்னும் ஆபத்து


=================


12  அழகிரி உருவ பொம்மையை  யாரும் எரிக்கக் கூடாது, -ஸ்டாலின் # அமைதிப்படை பார்த்தீங்களா? யாரும் பொம்மையை எரிக்க வேணாமாம், நல்லா கேட்டுக்குங்க


=================


13  தனுஷ்தான் சைக்கோ வேடத்துக்கு பொருத்தமாக இருப்பார் -  கன்னட இயக்குநர் பவன்குமார் # அப்போ கன்னட லுசியா  ரீமேக்கில் இவர் லூசா நடிப்பார்?



=================


14 பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க–16– பா.ம.க–10 இடங்கள் கேட்கின்றன.. # அடேங்கப்பா.அப்போ பிஜேபி க்கு 13 வேட்பாளர்களுக்கு ஆள் கிடைக்குமா?



===========================


15 சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக தீபிகாபடுகோனே # படம் படு த்துக்காம இருக்கனும்.படுத்தி எடுக்காம இருக்கனும்



======================


16  2ம் தேதி மாநாட்டில் கூட்டணி பற்றி அறிவிப்போம்.. பிரேமலதா விஜயகாந்த் # சபாஷ்! கூட்டணி பத்தி கூட புருசன் பொண்டாட்டி சகிதம் கூட்டணியாதான்



======================



17 ராஜ்யசபா எம்.பி.: வாசனுக்கு குழிபறித்த ப.சிதம்பரம்?: உதயமாகிறது த.மா.கா # காங் எதிர்ப்பு ஓட்டை காங் க்கே பெற்றுத்தரும் சாணக்கிய தந்திரம்


====================



18 அழகிரி பயம்': ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரி பிரதமருக் கு மு க கடிதம் # இவர் குடும்பத்தைப்பாதுகாக்கவே அரசுப்பணத்துல பாதி போய்டும்



=======================



19   40 தொகுதிகளும் அம்மாவுக்குத்தான்..அடித்துச் சொல்கிறார் சரத்குமார் # ஜால்ரா அடித்துச்சொல்கிறார்னு தெளிவா சொல்லுங்க



========================


20  மோடி பிரதமராக எனது ஆதரவு கிடையாது - சரத்குமார் # நாட்டாமை சீப்பை ஒளிச்சு வெச்சுட்டார்.இனி மேரேஜ் நின்னுடும்.



=============================

நினைத்தது யாரோ - சினிமா விமர்சனம்

 

ஹீரோ  ஒரு உதவி இயக்குநர். ஒரு நாள்  ஷூட்டிங்க் ஸ்பாட்ல  ஹீரோயினை சந்திக்கறார். ஒரே  ஒரு சீன்ல சும்மா தலையை மட்டும் காண்பிச்சுட்டுப்போங்க என்ற வேண்டுகோளுக்காக அவரும் நடிக்கிறார். அதனால் காலேஜில் அவர் பேர் கெடுது . ஹீரோயினுக்கு செம கடுப்பு .ஹீரோவைக்கண்டாலே பயந்து ஓடறார். ஹீரோ விடாம  ஹீரோயின் பின்னாலயே சுத்தி எப்படியோ கரெக்ட் பண்ணிடறார். 2 பேரும் லவ்விங்க் . 


சொர்ணமுகி படத்தில் வருவது போல் ஹீரோ ஒரு வருசம் ஜெயிலுக்குப்போறார் தான் செய்யாத ஒரு குற்றத்துக்காக . அந்த  சைக்கிள்  கேப் ல  ஹீரோயினுக்கு  ஒரு கோடீஸ்வரன் கூட மேரேஜ்  ஆகிடுது. அவர் மவுன ராகம்  மோகன் மாதிரி ஜெண்ட்டில் மேன். ஹீரோயின்  சோகமா இருப்பதைப்பார்த்து உன் ஃபிளாஷ் பேக் என்ன -னு கேட்கறார்.புருசனா நினைச்சுச்சொல்லவேணாம், ஃபிரண்டா நினைச்சு சொல்லுங்கறார். 

 ஹீரோ யின் சொந்தக்கதை காதல் வந்த கதை எல்லாம் எடுத்து விடுது. கடுப்பான புருஷன் டைவர்ஸ்  பண்ணிடறார். இதுல தமிழ் சினிமா செண்ட்டிமெண்ட் என்னான்னா  புருஷன் - பொண்டாட்டிக்குள்ளே  கில்மா ஏதும் நடக்கலை . 


 காதலிக்கு மேரேஜ் ஆன மேட்டர்   தெரிஞ்சு  ஹீரோ தேவதாஸ் ஆகி மப்பில் 24 மணி நேரமும் இருக்கார். அவரை பழையபடி சரி ஆக்கி பெரிய டைரக்டர் ஆக்கனும்னு ஹீரோயின் பாடு பட்டு கூடவே இருந்து உதவி இயக்குநரை இயக்குநர் ஆக்கிடறார்,. 



 ஹீரோ கிட்டே ஃபிரண்ட்ஸ் எல்லாம் உசுப்பேத்தறாங்க . அதான் படமும் இயக்கியாச்சு , காதலிக்கும் டைவர்ஸ் ஆயாச்சு , மேரேஜ்க்கு அப்ளை பண்ணுங்கறாங்க . 


 க்ளைமெக்ஸ் ல  ஒரு ட்விஸ்ட் இருக்கு  அது என்ன என்பதை  வெண் திரையிலோ ,  ஒரு மாசம் கழிச்சு சின்னத்திரையிலோ காண்க. 



விக்ரமன் பேக்  டூ ஃபார்ம் .  படம் போட்ட முதல்  2 ரீல்களில் 5 காதல்  ஜோடியை காட்டி எல்லாரும் காதலை தூற்றுவது போல் எல்லாம் சீன் வெச்சு இதென்ன , தேறாது போலயே என எண்ண வைத்து பின்  டர்ன் அடிச்சு மெயின் கதைக்கு வந்து தான் எப்போதும் பாசிட்டிவ் அப்ரோச்சர் , தன் திரைக்கதையில் வில்லனுக்கே வேலை  இல்லை என நிரூபிக்கிறார் . 


 ஹீரோ  புதுமுகம்  ரேஜித் மேனன்,ஏதோ கேரளா பார்டர் ஆள் போல . மிக மென்மையான  ,பெண்களை க்கவரும் , மோகன் போன்ற  முகச்சாயல் உள்ள ஆள். அசால்ட்டா நடிச்சிருக்கார் . பாடல் காட்சிகளில் மட்டும் லேசான தடுமாற்றம் , மற்ற படி ஓக்கே , நல்ல எதிர் காலம் உண்டு 


 ஹீரோயின்  புதுமுகம்  நிமிஷா . ஒரு நிமிசத்தில் மனதில் பதியும் குடும்பப்பாங்கான  தோற்றம் . இவர் அணியும் கண்ணிய உடைகள்  விக்ரமன் பிராண்ட் . டீசண்ட் டிரஸ் செலக்சனில் விக்ரமன் எப்போதும்  பேர் எடுத்தவர், இதிலும்  நிரூபிக்கிறார் . 


படத்தில்  ஓப்பனிங்கில்  வரும் கிளைக்கதைகள்  தேவை இல்லாதது . அதே போல் இடைவேளைக்குப்பின்  ஹீரோ எடுக்கும்  ஷூட்டிங்க் காட்சிகள்  தாவணிக்கனவுகள் படத்தை  நினைவு படுத்தி  இருக்கு . அதிலும் எடிட்டிங்க்கிலும் கவனம் செலுத்தி  இருக்கலாம் 


 பாடல் காட்சிகளில் வழக்கம் போல் அனைத்தும் மெலோடி தான் , கை ரேகை போலத்தான் காதல்  எனும் பாடல் அள்ளிக்குது  கவிதை நயம்  மிக்க வரிகள் , படமாக்கிய விதமும்  சூப்பர் 

 அஜித்தின் மச்சான்  தான்  ஹீரோயினுக்கு கணவர்  ரோல் . நல்லா பண்ணி இருக்கார் . இவர் கதிரின் காதல் வைரஸ் -ல்  ஹீரோவாகவும் , சமீபத்தில் வந்த நேர்  எதிர்  -ல் வில்லனாகவும் வந்தவர் .


வழக்கமாக விக்ரமன் படங்களில் வரும்  ல ல லால ல இதில்  மிஸ்சிங்க் . அதே  போல்  ஒளிப்பதிவிலும் , லொக்கேஷனிலும் வழக்கமான பாணியில்  இருந்து விலகி காலத்துக்கு ஏற்ப தன்னைப்புதுப்பிக்க  முயற்சி செய்திருக்கிறார்., ஆனால் பாடல் காட்சிகளில் மட்டும் இன்னும்  பூவே  உனக்காக பாதிப்பு 


ஹீரோ படம் எடுக்கும் படத்தில்  ஹீரோவாக நடிப்பவர்  தேவை  இல்லாமல் பாடல் காட்சியில்  விஜயை இமிடேட் செய்கிறார் . அவர் வரும் காட்சிகள் எரிச்சல் . 


 ஹீரோயின் தங்கையாக வருபவர் அச்சு அசல்( முகச்சாயலில் )  ஷகீலாவின்  தங்கை  போல்  இருக்கார் . 


 ஹீரோ - ஹீரோயின்  இடைப்பட்ட காதல் மலரும் காட்சிகள் கவி நயம். 



 படம் பார்க்கும்போது போட்ட  ட்வீட்ஸ் 


1, விக்ரமன் ன் நினைத்தது யாரோ? படம் போட்டு 10 நிமிசம் ஆகியும் ஹம்மிங் தீம் காணோம் .வாட் எ மெ மிராக்கிள் # லா ல லா லா



2 விக்ரமன் செல்வராகவனை மறைமுகமா நக்கல் அடிக்கும் காட்சிகள் வெச்சிருக்கார் # ஐ சண்டை சண்டை


3 ஹீரோ கிட்டே கடனா வாங்குன 5 ரூபாயை ஹீரோயின் மணி ஆர்டர் பண்ணிடறார்.அந்த பண்பைப்பார்த்து ஹீரோ க்கு லவ் #வாவ்! வாட் எ சிச்சுவேசன்


4 ஹீரோயின் ஜாக்கிங் போற ஸீன் ல கேமரா கால் கிட்டே ஜூம் # உங்க சிம்பாலிக் டச் ல தீ வைக்க


5 ஹீரோயின் மழை ல நனைஞ்சிட்டு இருக்கு.பேக்கு ஹீரோ வாட்டர் கேன் குடுத்து முகம் கழுவிக்கச்சொல்றார்.#,ஏதாவது குறியீடா இருக்குமோ?



6 இன்னைக்கு சன்டே.சென்னை ல போட்டோ ஸ்டூடியோ எதுவும் திறந்திருக்காது னு ஒரு டயலாக் வருது .# டயலாக் ரைட்டர் வெளியூர் போல

7 இடைவேளை ட்விஸ்ட் எதுமே இல்லை.அதை சமாளிக்க அஜித் மச்சான் ரிச்சர்டு வர்ற சீன் காட்டி " இவர் தான் கதைக்கு வில்லன் " னு சொல்லி இன்ட்டர்வல்


8 நினைத்தது யாரோ படத்துக்கு பணம் போட்ட புரொடியூசர் யாரோ ? # ஊ ஊ

9  இளைய தளபதியை டான்ஸ் காட்சியில் யார் தான் இமிடேட் பண்றதுன்னு வரை முறை இல்லாம போச்சு.


இயக்குநரிடம் சில கேள்விகள்


1.  கிளைக்கதையில் படத்துக்கு தேவை இல்லாத கதையில்  ஐ டி யில் ஒர்க் பண்ணும் மாடர்ன் கேர்ள் காதலனுடன்  கில்மா பண்ணி மேரேஜ்க்கு முன்பே கர்ப்பம் ஆகிறாள் .  வ்ழக்கம் போல் அவன்  கழட்டி விட்றான். இது தற்கொலை செய்ய முயற்சிக்குது . இன்னும் 1980 ல யே  இருந்தா எப்படி ? இப்போதான்  பல சோதனை முறை வந்துடுச்சே . காதலன் மேல்  புகார் கொடுத்து மெடிக்கல் செக்கப் மூலம் குழந்தைக்கு அப்பா அவன்  தான் என நிரூபிக்கலாமே? 


2 கழட்டி விடனும்னு நினைச்சே பழகும் அவன் காண்டம்  இல்லாம   அவளை கண்டம் பண்றான். எப்படி ? பாதுகாப்பா  மேட்டரை முடிக்க மாட்டானா? 


3  மேரேஜ்  முடிஞ்ச பின்னும்  2 வருசம் எந்த ஊர்ப்புருசன் மேட்டர்  முடிக்காம  பொண்டாட்டியை ஷோ கேஷ் பொம்மை கணக்கா  சும்மா பார்த்துட்டு மட்டும் இருக்கான் ? 


4  சரி , அதையாவது  ஜீரணிச்சுக்கலாம். ஹீரோயின்  “ என் ,காதலனை பெரிய ஆள் ஆக்கிட்டுத்தான் வருவேன் அப்டினு கிளம்பும்போது அப்பவாவது  மேட்டரை  முடிச்சுட்டு அனுப்ப மாட்டானா? ( இதுதான் நல்ல சான்ஸ் , கண்டிஷன் பெயில் அப்ளை பண்ற மாதிரி , நீ காதலனை பெரிய ஆள் ஆக்கனும்னா  முதல்ல நீ அம்மா ஆகிடனும் )

 மனம்  கவர்ந்த  வசனங்கள்


1   மிஸ் , என் செல்லுக்கு  ஏதாவது  மிஸ்டு காலோ , மெசேஜோ வந்துச்சா? 

   பில் கட்டலைன்னு மெசேஜ் தான் வந்துச்சு 


2  என் முகத்தை ஏன் உங்க சிஸ்டம்  டெஸ்க் டாப்ல வெச்சிருக்கீங்க ? 


 மிஸ் , நீங்களே  உங்க முகத்தைப்பார்த்திட்டிருந்தா  போர் அடிக்கும், எல்லாரும்  ரசிக்கட்டும் 


( விக்ரமன் படங்களீலேயே  மிகக்குறைவான  அழகிய வசனங்கள் இதில் தான் . மிஸ்சிங்க் )

சி பி கமெண்ட் -  காதலர்கள் , விக்ரமன் ரசிகர்கள் , பெண்கள் பார்க்கலாம். 
நினைத்தது யாரோ - ஒரு உதவி இயக்குநரின் எளிமையான காதல்் கதை .க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் குட் -  ஈரோடு ஸ்ரீ  கிருஷ்ணா வில் படம் பார்த்தேன்


விகடன் மார்க் =41 ,


ரேட்டிங் = 2.75 / 5


டிஸ்கி -

இங்க என்ன சொல்லுது - சினிமா விமர்சனம்



 

இங்க என்ன சொல்லுது - சினிமா விமர்சனம்

 

வாழ்க்கைல எந்த  குறிக்கோளும்  ,கொள்கையும் இல்லாத ஒரு பேராசைக்காரன்  கம் சூதாடி வாழ்வில் சந்திக்கும் தோல்விகள் தான்  கதை. அதை  எந்த அளவு சுத்தி வளைச்சுக்கதை சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு  சுமார் திரைக்கதையில் சொல்லி  இருக்காங்க . 

ஹீரோ சிங்கப்பூர்ல  ஒரு பொண்ணைப்பார்க்கறார். பார்த்ததும் காதல் ஆகி மேரேஜ் பண்ணிக்கலாமா?ன்னு கேக்கறப்ப அந்தப்பொண்னு தான் ஒரு கால் கேர்ள்-னு சொல்ல இருந்தாலும் பரவாயில்லை, நமக்கு லட்சியம் தான் முக்கியம்னு லிவ்விங்க்  டுகெதரா வாழ்றாரு. அந்தப்பொண்ணோட புருஷன் திருந்தி வந்ததும் எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்திட்டு கிளம்பி வர்றாரு.


 அடுத்து அவர்  தன் நண்பரோட  இன்னொரு பெண்ணை சந்திக்கறாரு. அந்தப்பொண்ணு மேல  ஒரு இது . ( எந்தப்பொண்ணை நாம விட்டு வெச்சிருக்கோம் ? ) காதலைச்சொல்ல அவ பர்த் டே தான் சரியான சான்ஸ் -னு நண்பரோட பர்த் டே பார்ட்டிக்கு வெறும் கையை வீசிட்டுப்போறாரு , சிறு பிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது , வெறும் கையோட  போனா பொண்ணு மடியாது என்ற கொல்லி மலை சித்தர் வாக்குக்கு ஏற்ப அவர் பரிசு ஏதும் கொண்டுபோகாததால கவர் பண்ண முடியலை . 


 ஆனா கூடப்போன அவர் நண்பர்  பிளாட்டினம்  ரிங்க் கிஃப்டா கொடுத்து அசத்திடறாரு. அதனால அந்தப்பொண்ணு   தன்னை மேரேஜ் பண்ணிக்குங்கன்னு கேக்குது. உடனே பதறிய நண்பர்  எஸ் ஆகறாரு. ஏன்னா அவர்க்கு ஆல்ரெடி ஒரு ஆள் இருக்கு, நிச்சயமும் ஆகி இருக்கு. 

 செம கடுப்பான பொண்ணு  ஹீரோ மேல போலீஸ் ல புகார் கொடுக்கறார். மேரேஜ் பண்ணிக்கறேன்னு சொல்லி ஏமாத்திட்டதா..  வேற வழி  இல்லாம மேரேஜ் பண்ணிக்கறார். 


6 மாசம் ஒழுங்கா லைஃப் போகுது .  அதுக்குப்பின் சினிமா எடுக்கறேன்னு மனைவி பேர்ல இருக்கும் வீட்டை அடமானம் வெச்சு அல்லல் படறார். பின் குதிரை ரேஸ் ல  லட்ச ரூபா இழக்கிறார்.  மனைவி தற்கொலை முயற்சி வரை போகுது . 


 எப்படி அவர் திருந்தறார் என்பதுதான் கதை 



 கணேஷ்  தான்  ஹீரோ கம் தயாரி[ப்பு , கதை , திரைக்கதை எல்லாம் . அவரோட  குரல்  ஒரு பிளஸ்  தான் , ஆனா படம்  முழுக்க அவரையே பார்க்கும் அளவு  ஒர்த் இல்லை . மிக பலவீனமான  திரைக்கதை . 


 முன் பாதி இடைவேளை வரும் வரை காட்சிகள் வந்து வந்து போகுதே ஒழிய கதைக்கு வர்வே  இல்லை . 

 மீரா ஜாஸ்மின்  தான்  ஹீரோயின் . மாண்டலின் ராஜேஷ் பார்த்தா நொந்துடுவாரு . எப்படி இருந்த  பொண்ணு இப்படி ஆகிடுச்சே ? 


சிம்பு ஹீரோவுக்கு நண்பரா  ஒரு கெஸ்ட்  ரோல் . ஒரு பாட்டு  இருக்கு . சும்மா 4 சீன்  வர்றார் அவ்வளவு  தான் . ( அவர் ) தொட்டுக்க ஊறுகாயா ஆண்ட்ரியா 2 சீன் ல வர்றாங்க 


மயில் சாமி , கே எஸ்  ரவிக்குமார்   கெஸ்ட்  ரோல் . வந்த வரை  ஓக்கே

மொழி படத்தில் அழகு தேவதையா வந்த ஸ்வர்ண மால்யா 2 திருவாரூர் தேர் மாதிரி நமீதாவுக்கே அக்கா மாதிரி வர்றார். அகவுரவத்தோற்றம். 




இயக்குநரிடம் சில கேள்விகள்


1.  பொண்ணுங்களை இதை விட கேவலப்படுத்திட  முடியாது . மீராஜாஸ்மின் சிம்புவை லவ்வறாரு. அவர் ஓக்கே சொல்லலை, ஜஸ்ட் அடுத்த செகண்டே கணேஷ் நீ தான் என்னை கட்டிக்கனும்கறாரு. இதுக்குப்பேர் தான் தெய்வீகக்காதலா? 



2 ஹீரோ கைல  பொண்டாட்டியோட  வீட்டு டாக்குமெண்ட்  இருக்கு , நேரா நேஷனலைஸ்டு பேங்க் போலாமே? 65 காசு தானே வட்டி ? எதுக்கு சேட்டு கிட்டே போறாரு ? வெத்து பாண்ட் பேப்பர் ல சைன் வாங்கி  செக் வாங்கி கடன் தந்து 5 % வட்டிக்குத்தானே சேட்டு , கந்து வட்டி  எல்லாம் ? நம்ம கிட்டேதான் பக்கா டாக்குமெண்ட்  இருக்கே? 



3  மனைவி நகையை  அதே போல்  சேட்டு கிட்டே அடமானம் வைக்கறார். 8 லட்சம்  ரூபா மதிப்புக்கு பணம்  தர தயாரா  இருந்தும் 2 லட்சம் போதும்கறார்.எதுக்கு நகை பாக்சில்  இருக்கும் எல்லா நகையையும் அவன் கிட்டே தரனும் ? எந்த அளவு பணம்  வேணுமோ அந்த அளவு நகை மட்டும் அடமானம்  வைக்கலாமே? அதுவும் பேங்க்கில் வைக்கலாம் , ஏன் சேட்டு ? சப்போஸ்  ரேஸில் லாஸ் ஆனா ஆல்ட்டர் நேட்டிவ் அரேஞ்ச்மெண்ட் இல்லாமல் எப்படி  தைரியமா செலவு பண்றார் ? 


4  புருஷன் காரன்  சூதாடின்னு தெரிஞ்சுக்கிட்டா மாசமா  இருக்கும் சம்சாரம் டக்னு  தனியா  பிரிஞ்சு தான் வாழ்வா . எதுக்கு தற்கொலை  முயற்சி .  படு நாடகத்தனம்.

5   கே  எஸ்  ரவிக்குமார்க்கு அட்வான்ஸா  3  கோடி  குடுக்கனும்னு  ஒரு இடத்துல டயலாக் வருது . ஆனா அவர் ரிட்டர்ன் தரும்போது உங்க கிட்டே வாங்குன 1 1/2  கோடி  இந்தாங்கங்கறார். மீதி காக்கா தூக்கிட்டுப்போய்டுச்சா?




 படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ் 


1. தியேட்டர் வாசலில் எட்டாங்கிளாஸ் தமிழ் வாத்தியார் - டேய்.நீ இன்னும் உருப்படாமதான் இருக்கியா? ங்கறார் # ஷே ம் ஷேம் பப்பி ஷெம்



2 சந்தானத்துக்கு ஓப்பனிங் சாங் .நான் தாண்டா அப்பா டக்கரு # இங்க என்ன சொல்லுது


3 படம் போட்டு 45 நிமிசம் ஆச்சு.இன்னும் கதை என்ன னு தெரில.பயங்கர சஸ்பென்ஸ் படமோ? #சன் பிக்சர்ஸ்டா ;-))



4 டைமிங் சாங் பை யங் சூப்பர் ஸ்டார் - அ அறிவில்லையா? அறிவில்லையா? கொஞ்சம் கூட உனக்கு அறிவில்லையா?



5 உலக சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக இடைவேளை வரை கதையே சொல்லாம மொக்கை போட்ட முதல் படம் # இங்க என்ன சொல்லுது.ஊ ஊ ஊ வடக்குப்பட்டி ராமசாமி


6  சந்தானம் கெஸ்ட் ரோல் தான் . படம் பூரா வர்ற மாதிரி போஸ்டர் ஒட்டி ஊரை ஏமாத்துறாங்க மக்களே # இ எ சொ


7 ஆன்ட்ரியா கண்ணுக்கு எதிர்ல வர்றவர் எல்லாம் அனிரூத் தான் # அநியாய அந்நியோன்யம்


8 ஸார்.உங்க படத்துக்கு குடும்பப்பெண்கள் கூட்டம் குவியபோகுது. 



நிஜமா வா? 


ஆமா.டி வி ஸீரியல் கணக்கா இருக்கு 




 நச் டயலாக்ஸ் 


1.  மேரேஜ் ஆகி  15 வருசம் ஆகிடுச்சு \\\


 தேவலையே . ரெண்டு ஏழரையைத்தாண்டிட்டே.இன்னும்  ஒரு ஏழரை பாக்கி இருக்கு 


2 ஏம்மா அங்கே சரக்கு ஊத்தின பார் கேர்ள் தானெ? நீ ? இங்கே வாசக்கூட்டிட்டு இருக்கே? ஓ முறை வாசலா நீ? 


3  அந்தப்பொண்ணு இடுப்புல விழுந்ததே 2 டயர் , அதுல போறீங்களா? இல்ல ஃபோர் வீலர் கார் ல வர்ரீங்களா? 


4  என்ன ? உங்க பேர் ஏழு முகமா? 
\
\
 ஆறு முகம்னு வெக்கலாம், 7 முகம்  கூடாதா? 



5  ஏன் சார்  , மாடு கன்னு போட்ட மாதிரி ஏன் குனிஞ்சு போஸ்  குடும்க்கறீங்க ? 

 ஈஸ்வரா  , கும்பிடறேன் 


 ஈஸ்ட் பக்கம் பாக்க ஈஸ்வரர் என்ன ஈ சி ஆர்  ரோடா? 



6  அஸ் பர் வாஸ்து கார் டிக்கிதான்  குபேர மூலை , அது ல உக்காந்து வர்றீங்களா?


7   கீழே  போக எவ்ளவ்  நேரம் ஆகும் ? 



 கார்ல போனா  7 மணி  நேரம் ஆகும் . உச்சில இருந்து  குதிச்சா   உடனே போய்டலாம் 

 

8 நான் வெஜ் சாப்பிடறவன் எப்பவும் குதர்க்கமாவே பேசுவான் 
\
\
 பல்லாயிரம் பேரைக்கொன்ன ஹிட்லர் ஒரு சாம்பார் சாதம் , புரியல ? சைவம் 


9  டீ யைக்கண்டு  பிடிச்சதே சைனாக்காரன் தான் ., அவனுக்கே  டீயா? 


10  சுருக்கமா சொல்லனும்னா ஆல்ரெடி எஃப் சி ஆன வண்டியை  நீ க்ளீன் பண்ணி சர்வீஸ் பண்ணி ஓட்டிட்டு வந்திருக்கே , காரோட ஓனர் வந்ததும் காரைக்கொடுத்துட்டு  , ஒப்படைச்ட்டு வந்துட்டே , அதானே ? 



11  சரக்குத்தானே வேணும் ? நான் வாங்கித்தர்ரேன் 


 ஒருத்தர் கைலயே ஓ சி ல சாப்ட்டா உடம்புல ஒட்டாது 



12  எங்க பரம்பரைலயே யார்க்கும் பத்திரம்  கிடையாது 


13  ஒவ்வொரு  புருஷனும் செய்யற அட்டூழியம் , அநியாயம் எல்லாத்துக்கும்  பொண்டாட்டி செய்யும்  பூஜை  , புனஸ்காரம்  தான் பாதுகாப்பு வளையம் 


14   அவங்கவங்க பிரச்சனைக்கு தற்கொலை தான்  தீர்வுன்னா ஊர்ல ஒரு பய  உயிரோட  இருக்க  முடியாது 

சி பி கமெண்ட் -  முன் பாதி திரைக்கதை திக்குத்தெரியாத காடு , பின் பாதியில் நாடகத்தனமான காட்சிகள் மைனஸ்,சந்தானம்  கானல்  நீர் , சன் பிக்சர்ஸ்க்கு தேவை இல்லாத வேலை


விகடன் மார்க் - 39 ,


ரேட்டிங்- 2.25 / 5 


ஈரோடு சண்டிகா வில் படம் பார்த்தேன்



வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (31.1.2014 ) 7 படங்கள் முன்னோட்ட பார்வை

இன்னைக்கு வியாழக்கிழமை தான். ஆனா இன்னைக்கு 2 படங்கள் ரிலீஸ் ஆவதால் சினிமா ரசிகனுக்கு இன்னைக்கு வெள்ளி

1. இங்க என்ன சொல்லுது -ஒரு நாள் நைட்டு விடிவி கணேஷ், கார்ல வந்துட்டிக்கார். போதையில இருந்த நாலஞ்சு பேர், பைக்ல அவர் காரை விரட்டிட்டு வந்திருக்காங்க. இவருக்கு பயம். போதையில வேற இருக்காங்க. ஏதாவது பண்ணிருவாங்களோன்னு வேகமா வண்டியை ஓட்டியிருக்கார். அவங்களும் விடாம தொடர்ந்திருக்காங்க. அப்புறம் ஒரு கட்டத்துல காரை நிறுத்திடலாம்னு ஸ்லோ பண்ணும்போது கார் கண்ணாடியை தட்டியிருக்காங்க,அதுல ரெண்டு பேர். இவர் திறந்ததும், சட்டையை கழட்டி காண்பிச்சுட்டு ‘இங்க என்ன சொல்லுதுதெர்தா?’ன்னு சிரிச்சுட்டே வேகமா போயிட்டாங்களாம். இந்த பஞ்ச் இவ்வளவு ரீச்சாயிருக்கான்னு அவருக்கு ஆச்சரியம். மறுநாளே அதை டைட்டிலா பதிவு பண்ணிட்டு வந்துட்டார்...’’ என்கிறார் சன் பிக்சர்ஸின் ‘இங்க என்ன சொல்லுது’ பட இயக்குநர் வின்சென்ட் செல்வா. இந்த படத்துக்காக, தனது பெயரை வி.செல்வா என்று மாற்றியிருக்கிறார்.‘‘பெயரை நான் மாற்றலை. விடிவி கணேஷ்தான் இப்படி இருந்தா சரியா இருக்கும்னு மாற்றி வச்சுட்டார் என்கிறார் வி.செல்வா.

சரி, காதல் கதைன்னு சொல்றாங்களே?

காதல் இல்லாம சினிமா இல்லை. ஒரு நாற்பது வயசு யூத்துக்கு வர்ற காதல், கல்யாணம், பிரச்னைகள், மகிழ்ச்சி, சோகம்னு கதை எல்லா பக்கமும் போகும். அதாவது, இந்தியில ராஜ்கபூர் படங்கள் பார்த்தீங்கன்னா, எல்லாருமே கிண்டலா அவரை பேசுவாங்க. முட்டாள்ங்கற மாதிரி அவர் கேரக்டரை நினைப்பாங்க. கடைசியில எல்லாத்தையும் அடிச்சுட்டு தூக்கிட்டு இவர் போயிட்டிருப்பார். ரொம்ப ஆச்சரியமா அவரை பார்க்கிற மாதிரி கேரக்டர் இருக்கும். அதே மாதிரியான கதைதான்
இதுவும்.

விடிவி கணேஷோட கதை, வசனம் எப்படியிருக்கு?

எல்லா மனுஷங்களுக்கும் வாழ்க்கை நிறைய அனுபவங்களை கற்றுக்கொடுத்திருக்கு. ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமான மனிதர்களை சந்திருக்கிறோம். வேற வேறயான சூழல் இருக்கு. வேற வேறயான நிகழ்வுகளை எதிர்கொள்கிறோம். இப்படியான அனுபவங்களை கதையாக்கினாலே சுவாரஸ்யம் அதிகமா இருக்கும். அப்படி விடிவி கணேஷ் கேள்விப்பட்ட, அவரோட நண்பர்களுக்கு நடந்த, அனுபவப்பட்ட சம்பவங்களை வச்சு கதை பண்ணியிருக்கார். ஒவ்வொரு கேரக்டரும் அப்படி பண்ணினதுதான். யதார்த்தமான கதையா இருக்கும்.

நீங்க எப்படி இந்தப் படத்துக்கு இயக்குநரானீங்க?

எனக்கும் கணேஷுக்கும் 15 வருட நட்பு இருக்கு. முதன் முதலா அவர் படம் தயாரிக்க நினைச்சதும் என்னைதான் இயக்குநரா முடிவு பண்ணியிருந்தார். அப்புறம் அது தள்ளி தள்ளி போச்சு. நானும் சில படங்களை டைரக்ட் பண்ணிட்டேன். இப்பதான் அதுக்கான நேரம் வந்து அவர் படத்தை இயக்கற வாய்ப்புக் கொடுத்திருக்கார். இந்தக் கதையை நான் கேட்டப்ப அவ்வளவு ஆச்சரியமா இருந்தது. இதுல இவர் மட்டும்தான் நடிக்க முடியும். வேற யாருக்கும் இது செட் ஆகாது. அப்படியொரு கதை இது. அவர் கதையா இருந்தாலும் அதை அழகா நாங்க படமாக்கியிருக்கோம்னு நினைக்கிறேன்.

இதுல நடிக்கும்போது சிம்புவுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் காதல்னு சொன்னாங்களே?

அப்படி எதுவுமே இல்லை. சிம்புவுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் தனித் தனியா தான் காட்சிகள் உண்டு. ஒரு காட்சியில மட்டும்தான் ரெண்டு பேரும் ஒண்ணா வருவாங்க. அதனால அவங்களுக்குள்ள காதல்னு சொல்றதெல்லாம் சும்மா. சிம்புவும் சந்தானமும் படத்துக்கு பெரிய பலம். அவங்க வர்ற ஒவ்வொரு காட்சியும் கிளாப்ஸ் அள்ளும்.

மீரா ஜாஸ்மின் ஷூட்டிங்ல தொந்தரவு பண்ணுவார்னு சொல்வாங்களே?

இல்லை. அவங்களால எந்த தொந்தரவும் இல்லை. ஒரு குழந்தை மாதிரி படப் பிடிப்புல நடந்துக்கிட்டாங்க. கேரளாவுல அவர் வீட்டுல போய் கதை சொன்னோம். உடனே ஓகே சொன்னாங்க. பிறகு அவங்க வீட்டுலயே போட்டோசெஷன் நடத்திட்டு வந்தோம். ஷூட்டிங் நேரத்துல ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்ட்ட, ‘என்னை ரொம்ப அழகா காண்பிச்சிருக்கீங்க’ன்னு சொல்லிட்டே இருப்பார். ஷூட்டிங் முடிஞ்ச பிறகு ஒரு அரைநாள் தேவைபட்டது. கேட்டதும், ‘அரை நாள் என்ன, எவ்வளவு நாள் வேணாலும் எடுத்துக்குங்க’ன்னு ரெண்டு நாள் வந்து நடிச்சுக் குடுத்துட்டுப் போனாங்க. அவங்க கேரக்டர் லண்டன்ல நடக்கிற மாதிரி இருக்கும். அப்புறம் சிங்கப்பூர்ல சில காட்சிகள் நடக்கும். மீராவோட ஒத்துழைப்பு அவ்வளவு அருமையா இருந்தது.


ஈரோடு சண்டிகா , வி எஸ் பி யில்  ரிலீஸ் 


2. நினைத்தது யாரோ?-அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் பி.ரமேஷ், ஜி.இமானு வேல் இணைந்து தயாரிக்கும் படம் நினைத்தது யாரோ. இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி விக்ரமன் இயக்குகிறார்.

இவர் புது வசந்தம், நான்பேச நினைப்பதெல்லாம், வானத்தைப் போல, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், சூரியவம்சம், பிரியமான தோழி உள்ளிட்ட பல ஹிட் படங்களை டைரக்டு செய்தவர்.

இதில் நாயகன், நாயகி உள்ளிட்ட பலரும் புது முகங்களாக நடிக்கின்றனர். அதற்கான தேர்வு நடக்கிறது. படம் பற்றி விக்ரமன் சொல்கிறார். இது என்னுடைய பதினேழாவது படம். இதுவரை நான் எடுத்த படங்கள் அனைத்துமே காதல், குடும்ப சென்டிமென்ட், காமெடி என கலவையான கதையம்சம் உள்ள படங்களாக இருந்தன.

நினைத்தது யாரோ படத்தில் முழுக்க காதலை மட்டுமே பிரதானப்படுத்துகிறேன். வழக்கமாக எனது முந்தைய படங்களில் பாட்டுக்கும் இசைக்கும் முக்கியத்துவம் இருக்கும். நினைத்தது யாரோ படத்திலும் அவை இருக்கும்.


ஈரொடு ஸ்ரீ கிருஷ்ணாவில்  ரிலிஸ்


ரம்மி -ஸ்ரீவள்ளி ஸ்டுடியோ சார்பில் கே.குருநாதன், பி.ஏலப்பன், பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ரம்மி. இதில் நாயகர்களாக விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகர் நடிக்கின்றனர். நாயகிகளாக ஐஸ்வர்யா, காயத்ரி நடிக்கின்றனர். ஆடுகளம் ஜெயபாலன், சுஜாதா, சென்ட் ராஜன், சிவகுமார், பேபி, காதல் சரவணன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

சஞ்சய் முக்கிய வேடத்தில் வருகிறார். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி பாலகிருஷ்ணன் கே. இயக்குகிறார். இவர் லிங்குசாமி படங்களில் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்றியவர் அவர் படம் பற்றி அவர் சொல்கிறார்.

காதலும், சீட்டாட்டமும் ஒன்றுதான். மூன்று இளைஞர்கள் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து ஒன்றாக பழகுகின்றனர். அவர்களின் காதல், நட்பு, குடும்ப செண்டிமென்ட், போராட்டங்களே படத்தின் கதை. இப்படம் தனியார் கல்லூரிகள் உருவாகாத 80-ம் ஆண்டு நடக்கிற கதை.

புதுக்கோட்டை, சிவகங் கை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது. ஒளிப்பதிவு: சி.பிரேம்குமார், இசை: டி.இமான், எடிட்டிங்: ராஜா முகமது , வசனம்: மோகன பழனிச்சாமி.


ஈரோடு அபிராமியில்  ரிலீஸ் 


எதிர் வீச்சு -மாலிக் ஸ்டீரிம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் ஷாகுல், எஸ். ராஷிக் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம். எதிர் வீச்சு.

இதில் நாயகனாக இர்பான், நாயகியாக ரஸ்னா நடிக்கின்றனர். சின்னி ஜெயந்த், நளினி, சிங்கமுத்து, வையாபுரி, ராஷிக், மலேசியாவை சேர்ந்த உதயரதி, நிர்மலா, கிளிமாஞ்சாரோ, துஷாரா, விநிஷா, சலீம், நஸீரா இப்ராகிம், ஷைபுதின், இத்ரீஸ், ஷாகுல் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு, கதை, திரைக்கதை, வசனம் பாடல்கள் எழுதி கே.குணா இயக்குகிறார். இவர் மௌனம் சம்மதம், ஏர் போர்ட், படிச்ச புள்ள படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றியவர். படம் பற்றி தயாரிப்பாளர் எஸ்.ராஷிக் சொல்கிறார்.

கபடி, கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுகளை மையமாக வைத்து பல படங்கள் வந்துள்ளன. முதல் தடவையாக இண்டர் நேஷனல் கேம்புட்சால் என்ற இண்டோர் புட்பால் விளையாட்டை வைத்து இப்படம் தயாராகிறது.

இண்டோர் புட்பால் என்பது சிறிய அரங்குக்குள் குறைவானவர்களை வைத்து நடத்தும் கால்பந்து விளையாட்டு ஆகும். இரு விளையாட்டு குழுவினருக்கு நடக்கும் போட்டியை கருவாக வைத்து தயாராகிறது. காதல், ஆக்ஷன், பொழுது போக்கு அம்சங்கள் இருக்கும். மலேசியாவில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

ஒளிப்பதிவு: பிர்லா போஸ், இசை: ராஜாமணி, எடிட்டிங்: ஜேம்ஸ், ரமேஷ் லால். 
 

நினைவில்  நின்றவள் -  எஸ் வி சேகர்  மகன் அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் படம்


B A PASS - இது  கில்மாப்படம் மாதிரி சாயலில்  இருந்தாலும் அவார்டு படம் 

இரயில்வே ஸ்டேஷன் ஆண்ட்டி-மோகன் சிக்கா – சிறுகதை

பி.ஏ. பாஸ் இந்திப் படத்தின் மூலக்கதையான ஆங்கிலச் சிறுகதை. 'Delhi Noir' என்ற சிறுகதைத் தொகுதியில் இந்தக் கதை இடம்பெற்றுள்ளது.

 
7 HEART ATTACKThe satellite rights of Nithin's upcoming release Heart Attack have been sold out for a whopping by a leading regional entertainment channel. Sources say that this is he biggest price for a Nithin's film.
Nithin is pairing up with Adah Sharma, who is marking her debut in Tollywood with the film. Heart Attack is being produced on Puri Jagannadh Touring Talkies by Puri Jagannadh, who is also the director of the movie.

Cinematography is by Amol Rathod and musical scores for the film are by Anup Rubens. The film's audio got good response. Stay glued to way2movies for updates of Heart Attack Telugu film set for January 31st release


ஈரோடு அண்ணா வில் ரிலிஸ் 

எல்லா ஃபிகருங்களும் அப்பிராணிகள் என்பதை கண்டு பிடிச்சுட்டேன், இதோ ஆதாரம்

1. அபாயத்தின் நிறம் சிவப்பு.அதனால் தான் சிக"ரெட்"டு ,இதை அறிந்தும் மணிதன் ஏன் அதைக்குடிக்கனும் மெனெக்கெட்டு?



=============



2 சமைத்தது அம்மா என்றால் இன்னைக்கு என்ன ஸ்பெசல் ?,என கேட்கத்தேவை இல்லை.அம்மாவின் சமையலே ஸ்பெஷல் தானே?



=================


3 அஜித் ரசிகர்கள் டீ விரும்பிகளாவும் ,விஜய் ரசிக ரசிகைகள் காபி விரும்பிகளாவும் இருப்பாங்க



===================


4 காடுகள் சூழ்ந்த கிராமத்தில் இரவுக்கு தனி சத்தம் உண்டு



=================



5 ஜன்னல் ஓர சீட்டை அறவே வெறுப்பவர் டிரைவரானால் அவர் நிலை என்ன்? பஸ்ஸில் போகும் நம் நிலை என்னாகும்? # எங்கேயும் எப்போதும் ஓடும் சிந்தனைகள்



======================



6 நம் இருவரில் அதிக காதல் வசப்பட்டது நீயா? நானா?



==========================


7  சீனப்பெண்களுக்கு என்ன தான் கண் சின்னதா இருந்தாலும் அழகு ரசிக்கும்படி சிறப்பாவே இருக்கு # ROBIN



==================


கேவலமாத்திட்டுனவங்க கூட எல்லாம் சேரக்கூடாதுன்னா ஊர்ல ஒரு பய பொண்டாட்டி கூட குடும்பம் நடத்த முடியாது



===================


9 சுகர் பேஷன்டுக்கு ஹார்ட் அட்டாக் முதன் முதலில் வரும்போது வலியை உணரமுடியாத மாதிரி நம் முதல் பிரிவுவலி உணரப்படாமல் இருந்தது



===================



10 உங்க சொந்தக்கருத்தை யாரும் மதிக்கலைன்னா யாரோ ஒரு தத்துவ மேதை சொன்னதா அள்ளி விடவும்.பிரமாதம்பாங்க # தமிழேண்டா


==============



11 வாக்கிங் போய்ட்டிருக்கேன்.கோலம் போட வந்த ஒரு கோமதி " யாரு? திருடனா?"ங்குது.ஏம்மா எந்த ஊர்ல திருடன் காலைல வந்திருக்கான்?



====================


12 இந்த பொண்டாட்டிங்க எல்லாம் காலைல 6 மணிக்கு எந்திரிச்சு வாசல்ல கோலம் போட்டுட்டு மறுபடியும் போய் படுத்துக்குவாங்க போல



==================



13 ட்ரென்ட் செட்டர்கள் ஒவ்வொரு துறையிலும் இருந்தாலும் வாடகையை உயர்த்தும் எல்லா ஹவுஸ் ஓனர்களும் ரென்ட் செட்டர்களே!


===================



14 அப்பாவும் ,அண்ணனும் உணர்ச்சிவசப்பட்டு அறிக்கைகளை அள்ளி விடும்போது தம்பி மட்டும் அமைதியா இருப்பது ஆஹா! ராஜ தந்திரி



====================



15 காதலியின் கன்னமும் ,கிலாக்காயும் ஒனறுதான்.பார்த்ததுமே உமிழ் நீரை ஊறச்செய்து கடிக்கச்சொல்லும்



===================


16 பவுடரை கணக்.கே இல்லாம முகத்துல அப்பின பிகருங்க எல்லாருமே பவுடர் "அப்பி"ராணி களே!


=====================



17 தசரதர் = மு க . ராமர் = அழகிரி . லட்சுமணன் = ஸ்டாலின் # அறிவோம் அறிவாலய ராமாயணம்



=================


18 உங்க டி பி அழகுனு மத்தவங்க பாராட்டனுமா?.குத்து மதிப்பா 10 பேர் கிட்டே " உங்க டி பி அள்ளிக்குது" னு அள்ளி விடுங்க.பதில் மொய் வெச்சே ஆகனும்


===============


19 அடேங்கப்பா.பஸ் ல ஒரு பிகரு புருவத்துக்குக்கீழெ 19 புள்ளி வெச்சு மேக்கப்.கோலம் போட டைம் இல்ல போல




===================



20 பஸ் ல எத்தனை டைம் எத்தனை பொண்ணுங்க கூட்ட நெரிசலில் இடிச்சாலும் ஆண்கள் முறைப்பதில்லை # நீதி = ஆண் அமைதி ,யோக்கியன்



=========================