Skip to content

Wednesday, January 29, 2014

கோ-எட்’ நிர்வாண யோகா பள்ளி -நியூயார்க் நகரில்

1.காங்கிரசில் எல்லோரும் குரல் எழுப்பினால் அது தமிழகம் முழுக்க எதிரொலிக்கும்- ஞானதேசிகன் # கரகோஷம் கூட எதிரொலிக்காதுங்க்ணா.ஒரு கை ஓசை எப்டி?



================



2  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்...# கோச்சடையான் ரிலீஸ் ஆனா எத்தனை பேர் மொட்டை போட்டுவாங்க்ளோ?



=======================



3 ஓடும் ரெயிலில் குற்ற சம்பவங்களை தடுக்க பாதுகாப்பு அதிகாரிக்கு நிரந்தர படுக்கை வசதி# படுத்துத்தூங்கிடுவாரு! யார் கிரிமினலை பிடிப்பாங்க?



===========================



4 ஆட்சி செய்ய முடியாவிட்டால், பதவி விலகுங்கள்: கெஜ்ரிவாலுக்கு சிதம்பரம் அறிவுரை # நம்ம பொருளாதாரக்கொள்கையே சந்தி சிரிச்சுக்கிடக்கு.




============================ 



5 மதுரை தி.மு.க.வில் இருந்து மு.க.அழகிரி ஆதரவாளர்கள் 5 பேர் அதிரடி நீக்கம்: -அன்பழகன் . # மொத்தமாவே அஞ்சா நெஞ்சனுக்கு 5 பேர் தான் ஆதரவு போல 



================================



6 இந்திய பொருளாதாரம் இயற்கையிலேயே பெண் தன்மை கொண்டது: ஆடிட்டர் குருமூர்த்தி # அதான் நம்ம வசப்பட மாட்டேங்குதா?




==========================


7  இளையராஜாவுக்கு இசையமைக்க தெரியாது - சாரு நிவேதிதா !# பச்சை பச்சையா எழுதறவர் பொய் சொல்ல மாட்டாரு.அண்ணன் சட்டையைப்பாத்தீங்களா?ப்ளூ கலரு



===========================


8  மு.க. அழகிரி நீக்கத்தால் குடும்ப அரசியல் பழி நீங்கியது: கி.வீ # ஓரவஞ்சனைப்பழி ஓரமா வந்து ஒட்டிக்குச்சே?



===========================



9  விஜய்காந்த்துடன் கூட்டணிக்காக அழகிரியை கட்சியை விட்டு நீக்கிய மு க# கருப்பு MGRருக்காக சிவப்பு கருணாநிதியைக்கட்சியை விட்டு துரத்துவதா?



========================



10அழகிரி நீக்கத்தால் திமுகவின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படாது -்மு க # கழகத்தின் அகராதியில் திமுக = ஸ்டாலின் .அவர் வளர்ச்சிக்கு பாதிப்பில்லை

===========================



11 3வது முறையாக இன்று உலக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய பெண்கள் கபடி அணி # காலை வாரி விடுவது ,ரைடு விடுவதுன்னா பொண்ணுங்க தான்யா சாம்பியன்



==========================


12 போகப்போக தெரியும்...: மு.க.அழகிரி பேட்டி. # போகி போகி வயிறு எரியும்



=======================



13 அழகிரி நீக்கம் மூலம் திமுக விஸ்வரூபம் எடுத்துள்ளது - கி வீரமணி # அடடா அதைத்தான் ஆல்ரெடி கமல் எடுத்துட்டாரே? மெனக்கெட்டு ஏன் திமுகவும்?



=======================



14 கூட்டணி பற்றி தேமுதிக விடம் இருந்து பதில் வராததற்கு நான்.பொறுப்பல்ல - மு க # யானை பள்ளத்தில் போய் படுத்தா தரை மட்டம்



======================


15  திமுக கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார் - ஜவாஹிருல்லா எம் எல் ஏ # அவர் வருவாரா? உடைந்து போன கட்சியை ஒட்ட வைக்க அவர் வருவாரா?



====================



16  திமுகவின் சொத்தை சிலர் அபகரிக்கப்பார்க்கிறார்கள் - அழகிரி # விட்ராதீங்கண்ணே! நமக்கு மானம் மரியாதையை விட சொத்து தான் முக்கியம்


========================



17 அழகிரியின் நீக்கம் திமுகவை பாதிக்காது - மு க # திமுக பெற வேண்டிய வெற்றியை பாதிக்கும்



========================


18 சிதம்பரம் கோயில் வளாகத்திற்குள் காரில் வந்து ஜெயேந்திரர் தரிசனம் # கார் காலம்னு சமாளிக்க வழி இல்ல.மாட்டுனாரு


========================




19 கோ-எட்’ நிர்வாண யோகா பள்ளி -நியூயார்க் நகரில் தொடங்கியது! # பள்ளிக்கூடம் போகலாமா?,அதுக்கு பாஸ்போர்ட்ட வாங்கலாமா?



=======================


20  திமுகவில் ஜனநாயகம் செத்துவிட்டது! - மு.க.அழகிரி # ரொம்ப லேட் பிக்கப்ண்ணே நீங்க



===================================

Tuesday, January 28, 2014

தெகல்கா தருண் தேஜ்பால் vs பெண்நிருபர் அளித்த பாலியல் அத்துமீறல் புகார்

கடந்துபோன ஆண்டு பல வகைகளில் நம்மைப் பாலியல் வன்முறை பற்றிய புரிதலை நோக்கி இட்டுச் சென்றுள்ளது. சட்ட வரையறைகளின் போதாமைகள் பற்றியும் பொதுபுத்தியின் கயமைகளைப் பற்றியும் ஊடகங்களின் பரபரப்புச் செயல்பாடுகளைப் பற்றியும் அது நம்மை விவாதிக்க வைத்துள்ளது. ஏராளமான மக்கள் தெருவில் இறங்கிப் பாலியல் வன்முறைக்கு எதிராகத் தங்கள் குரலை உயர்த்தினார்கள். இரு புதிய சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இவை முக்கியமானவை.



குறிப்பிட்ட சில சம்பவங்களில்தான் இப்படிப்பட்ட போராட்டங்களும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்ற ஆதங்கமும் கோபமும் பலருக்கும் இருந்தாலும் இந்த விவாதம் வன்முறைக்கு எதிரான பெண்களின் வரலாற்றுப் போராட்டத்தில் அதனளவில் ஒரு முன்னோக்கிய அடி என்பதை நாம் மறுக்க முடியாது.


இந்தப் புரிதலைப் பல பெண்கள் தம்மீது, தம் உடல்மீது, தம் மாண்பின் மீது பலத்த காயங்களைச் சுமந்துகொண்டு ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பது இதில் முதன்மையான விஷயம்.


தெகல்கா இதழில் நிறுவன ஆசிரியரான தருண் தேஜ்பால்மீது தெகல்காவின் இளம் பெண்நிருபர் அளித்த பாலியல் அத்துமீறல் புகார்தான் இந்த விவாதத்தின் இப்போதைய முக்கியச் செய்தி.


முதல்நாள் இரவு தேஜ்பால் தெகல்காவிலிருந்து விலகுகிறார் என்று செய்தி வந்தது. “ஒரு தவறான புரிதலில் எடுத்த முடிவு பொருந்தாத செயலாக மாறி இப்போது நாம் நம்பும் அனைத்தையும் பிரச்சினைக் குள்ளாக்கியிருக்கிறது. அந்தச் செய்தியாளரிடம் நான் ஏற்கனவே நிபந்தனைகளற்ற மன்னிப்புக் கோரிவிட்டேன். பரிகாரம் வெறும் வார்த்தைகளால் இருக்க முடியாது என்று நினைக்கிறேன். என்னைச் சாட்டையால் அடிக்கும் தவத்தை நான் மேற்கொள்ள வேண்டும். எனவே நான் அடுத்த ஆறு மாதத்திற்குத் தெகல்கா வின் ஆசிரியர் பதவியிலிருந்தும் தெகல்கா அலுவலகத்திலிருந்தும் என்னை விடுவித்துக் கொள்ளும் முடிவை முன்வைக்கிறேன்” என்ற ஒரு ‘இலக்கியத்தரம் வாய்ந்த சுயபரிசோதனை, சுய தண்டனை மற்றும் சுய தீர்ப்பை’ எழுதிச் சம்பவத்தை முடிக்க அவர் முற்பட்டார்.




தெகல்கா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியரும் பொதுவெளியில் பெண்களின் மீதான வன்முறைகளுக்குக் குரல் கொடுத்து வந்தவருமான ஷோமா சௌத்ரியிடம் பாலியல் வன்முறைப் புகாரை அந்த நிருபர் அளித்தார். அதன் நகலும் வெளியானது.
கோவா போலிஸார் நடவடிக்கையைத் தொடங்கிப் பிரச்சினையைச் சட்டத்தின் வளையத்திற்குள் கொண்டு சென்றதும் தேஜ்பாலின் தரப்புப் புகார் அளித்த பெண் நிருபரின் மீது அவதூறுகளைவீச ஆரம்பித்தனர்.


 அதுதானே நம் தேசிய பண்பாடு! அந்தப் பெண்ணின் விருப்பத்தோடுதான் கோவாவில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் லிஃப்டில் 'அவர் வேண்டாம் என்று மறுத்தும்' தான் அவரிடம் “பொருந்தாத” செயலில் ஈடுபட்ட தாகத் தேஜ்பால் சொன்னார். கோவா போலிஸ் அவரை விசாரிக்க முயற்சி செய்தவுடன் தேஜ்பால் ஆதரவாளர் கள் என்ற போர்வையில் இலக்கியவாதிகளும் பத்திரிகை யாளர்களும் அவருக்கு ஆதரவாக அந்தப் பெண்ணை இழிவுபடுத்திச் சமூக வலைதளங்களிலும் பத்திரிகை களிலும் அவதூறுகளை அள்ளித்தெளிக்கத் துவங்கினர்.



ஒரு குற்றம் நடந்ததற்குப் பாதிக்கப்பட்டவரையே காரணமாக்குவது ஆணாதிக்கச் சமூகத்தின் வெளிப்பாடு. தருண் தேஜ்பாலும் அவரது ஆண் நண்பர்களும் இலக்கிய மற்றும் பத்திரிகை சகாக்களும் அவருக்கு வக்காலத்து வாங்குவது அவர்களின் 'புரிதலின் உணர்வு நிலையின்' வெளிப்பாடு.



இந்த அவதூறுகளுக்குச் சட்ட ரீதியாகவும் பெண்ணிய நோக்கிலும் பதில் சொல்ல முடியும், பதில் சொல்லப்பட்டிருக்கிறது.
தேஜ்பால் மீது பாலியல் குற்றத்திற்கான குற்றச்சாட்டை அளித்துள்ள இளம் பத்திரிகையாளர் தன் அறிக்கையில் குறிப்பிடுவது:



“கடந்த இரு வாரங்களாக எனக்குக் கிடைத்துள்ள பரந்துபட்ட ஆதரவு என்னை நெகிழச் செய்துள்ளது. அதேசமயம் என்னுடைய புகாரை ஒரு தேர்தல் கால அரசியல் சதியாகச் சித்திரிக்கும் முயற்சிகள் என்னை மிகவும் பாதிக்கின்றன. என்னைக் கவலைக்குள்ளாக்குகின்றன. இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். கீழ்க்காணும் வாதங்களை வைக்கிறேன்.



பெண்கள் தங்களுடைய வாழ்வையும் தங்கள் உடல்களையும் தமக்கானதாக அவற்றின் மீது தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக நடத்தும் போராட்டம் நிச்சயமாக ஒரு அரசியல் போராட்டம்தான். ஆனால் பெண்ணிய அரசியலும் அதன் கவலைகளும் நம்முடைய குறுகிய கட்சி அரசியல் உலகத்திலிருந்து மிகவும் விரிந்து பரந்தவை. எனவே பாலினம், அதிகாரம் மற்றும் வன்முறை குறித்து எழும் ஒவ்வொரு முக்கிய விவாதத்தையும் தங்களைப் பற்றிய ஒன்றாக மாற்ற முனையும் அரசியல் கட்சிகளின் உளவேட்கையை அவர்கள் கட்டுப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.”




ஆனால் இந்தச் சர்ச்சைகளிலும் பல பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் சர்ச்சைக்குப் பதிலாக நிலவும் ஒரு கனத்த நிசப்தத்திலும் ஒரு விஷயத்தைப் பார்க்கத் தவறுகிறோம். அது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ஒரு பெண்ணின் வலி. இந்த வலி உடல்ரீதியாக மனரீதியாக அவர்களை ஆழ்த்தும் நிராதரவான, தனிமையான துக்கம் நிறைந்த வெற்றிடம் நம்முடைய விவாதங்களில் கவனம் பெறுவதேயில்லை.



தெகல்கா விவகாரத்திலும் பாதிக்கப்பட்ட இளம் நிருபர் தான் மிகவும் மதித்த தன் தந்தையின் நண்பரான தன் தோழியின் தகப்பனான, எழுத்தாளர், இந்திய ஊடகவியலின் சூப்பர்மேன் என்று பலராலும் கருதப்படும் தேஜ்பாலால் மிகக் கீழ்த்தரமான முறையில் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். அவர் எழுதிய புகார் கடிதங்களில் அவருடைய அதிர்ச்சியும் குழப்பமும் துயரமும் கோபமும் வெளிப்படுகின்றன.



“ஓயாத வலிநிறைக்கும் இச்சம்பவத்தின் மிகக் கடினமான பகுதி இதற்கான சரியான வார்த்தை, வரையறையைக் கையாள்வதுதான். என்னை நான் ஒரு “பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவளாக” பார்க்கத் தயாராக இருந்தேனா என்பது எனக்குத் தெரியவில்லை. என்னுடைய நண்பர்கள், உடன் பணிபுரிவோர், ஆதரவாளர்கள், எதிரிகள் அனைவரும் என்னை அப்படிப் பார்ப்பதை ஏற்கத் தயாராக இருந்தனரா என்றும் தெரியவில்லை. ஆனால் ஒரு குற்றத்தைப் பாதிக்கப்பட்டவர் வரையறுப்பதில்லை, சட்டமே வரையறுக்கும். இந்தச் சம்பவத்தில் சட்டம் தெளிவாக இருக்கிறது. தேஜ்பால் செய்தது சட்ட வரையறைப்படி பாலியல் வன்புணர்வுதான்.

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் அவற்றைத் தடுக்கப் புகார் அளிக்கும் தயக்கங்களில் மிக முக்கியமான ஒரு விஷயத்தை அவர் விவாதப் படுத்தியிருக்கிறார்.


தேஜ்பாலின் மதவாதத்திற்கு எதிரான செயல்பாடுகளின் பேராலும் தெகல்காவின் சிறப்புமிக்க பத்திரிகைச் செயல்பாடுகளின் பெயராலும் தேஜ்பாலின் உலகத்தரம் வாய்ந்த எழுத்தின் பெயராலும் அவரால் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் வலியை, துயரத்தைப் பற்றி ஒரு அணுவளவு புரிந்துணர்வும் இல்லாமல் புறந்தள்ளிக் கருத்துக்களை, அவதூறுகளை அள்ளிவீசுவது கீழ்த்தரமான ஆதிக்கச் செயல்பாடேயன்றி வேறெதுவும் இல்லை.


எந்தக் கொம்பனையும் பெண் விஷயத்தை வைத்து வீழ்த்திவிடலாம் என்று ஒரு இளம் ஆண்பத்திரிகையாளர் குமுறியிருக்கிறார். அதைப் படித்தால் இந்த ஆண்கள்தான் எவ்வளவு கஷ்டப்பட்டு வீட்டிற்கு வெளியே வந்து, தங்களைத் தூண்டிலில் சிக்கவைக்க ஓயாமல் அலையும் பெண்களின் பிடியில் சிக்காமல், பணிபுரிந்து வருகிறார்கள் என்ற பரிதாபம்தான் தோன்றுகிறது.



ஊடகங்களில் பெண்கள்



ஆண், பெண் பணிபுரியும் எல்லாத் துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் இருக்கிறது. ஏனெனில் பாலியல் வன்முறை பாலியல் சார்ந்ததோ செய்யும் தொழிலால் தீர்மானிக்கப்படுவதோ ஆண்களின் மரபணுக்கோளாறோ மேலைக்கலாச்சார ஊடுருவலோ அல்ல. அது அதிகாரம் பற்றியது.



ஆசிரியர்களாகவும் மருத்துவத் தாதிகளாகவும் இருப்பதே பெண்களுக்கு உகந்த பாதுகாப்பான வேலைகள் என்ற நிலை உடைபட்ட கடந்த இருபது ஆண்டுகளில் ஊடகங்களில் பெண்கள் ஒரு பெரும் புயலென உள்நுழைந்து பணியாற்றி வருகிறார்கள். ஆசிரியத் தொழிலிலும் தாதிகளுக்கும்கூடப் பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது என்பது அவர்கள் நடத்தும் போராட்டங்களிலிருந்து பார்க்க முடிகிறது. பெண்கள் எல்லாத் துறைகளிலும் கால்பதித்து முன்னகரும்போது அதிகாரம் அவர்களுக்கு மட்டுமே உரியது என்று நம்பும் ஆண்களின் மேதாவித்தனங்களும் உடைந்து நொறுங்குகின்றன.

தமிழக ஊடக உலகமும் இதற்கு விதிவிலக்கல்ல. பெண் நிருபர்களை மிகக் கேலியாகவும் ஏதோ அலங்காரப் பொருட்களாகவும்தான் தமிழ் ஆண்பத்திரிகையாளர்கள் தொடக்கக் காலத்தில் எதிர்கொண்டனர். உடை குறித்த பாலியல் ததும்பும் கேலியை எதிர்கொள்ளாமல் பெண்ஊடகவியலாளர்கள் ஒரு நாளைக்கூடக் கடக்க முடியாது.


 எழுதும் கட்டுரைகளோ தொகுக்கும் தொலைக்காட்சி செய்தியையோவிடத் தோற்றம், அவள் அணியும் உடை இவைக் குறித்துக் கிடைக்கும் வழிசல்கள்தான் அதிகம்.



“சென்னைப் பெண்கள்லாம் பார்த்தாலே படுக்க ரெடி” “நீங்கள்லாம் இப்படி இறுக்கமா டிரெஸ் போட்டுட்டு வந்தா எப்படி மனுஷன் பிரஸ் மீட்ட கவனிக்க முடியும்?” “இப்படிக் கையத் தொடைமேல வச்சிப் பேசாதம்மா, என்னமோ ஆகுது எனக்கு.” செய்தி அறைகளில் எதிர்கொண்ட உரையாடல்களை இப்படி எழுதிக்கொண்டே போகலாம்


.
முதலில் வருவது அதிர்ச்சியும் அவமானமும்தான். யாராவது பார்த்தால் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற அச்சம். நீங்காத அருவருப்பு பல நாட்களுக்கு உறுத்தும். அவநம்பிக்கையும் குற்ற உணர்ச்சியும் வந்து வந்து போகும்.



ஆனால் இதுகுறித்துப் புகார் அளிப்பது அல்லது இதை யாரிடமாவது பகிர்ந்துகொள்வது என்பதுகூடப் பெரும்பாலும் சாத்தியமில்லை. அப்படிப் பேசுபவர்களிடமிருந்து விலகிச் செல்வதுதான் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் சாத்தியம். ஆனால் அப்படிப் பேசுபவர் செய்தி ஆசிரியராகவோ தலைமை நிருபராகவோ இருந்தால் அது வேலையில் ஒதுக்கப்படுவதிலும் வாய்ப்புகள் மறுக்கப்படுவதிலும் போய் முடியும். சன் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் ராஜாமீது அளிக்கப்பட்ட புகாரைப் பார்த்தால் இது புரியும். தொடர்ந்து அந்தச் செய்தி வாசிப்பாளர் அதிகாலை ஷிஃப்டிற்கு ஒதுக்கப்பட்டார் என்பது அவர் விலகிச்செல்ல முயன்றதற்கு அளிக்கப்பட்ட தண்டனை.



தெகல்காவின் பெண்பத்திரிகையாளருக்கும் ஒரு வாரம் தேவைப்பட்டது தன்மீது நிகழ்ந்த வன்முறையைப் புகாராகப் பதிவு செய்ய. இந்த மன உளைச்சலை, அலைகழிப்பை உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.கங்குலிமீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ள சட்ட மாணவி தெளிவாகப் பகிர்ந்துள்ளார்.



ஏ.கே.கங்குலி விவகாரமே அந்த மாணவி, அவர் தற்போது வழக்கறிஞர், கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்துக் கங்குலியின் பெயரைக் குறிப்பிடாமல் எழுதிய ஒரு வலைப்பதிவில்தான் வெளியில் வந்தது.



“காந்தி ஒருமுறை கூறினார், ‘வாதங்களைவிட மிகப் பலம் வாய்ந்த ஒன்று என்னிடம் இருக்கிறது, அதன் பெயர் அனுபவம்’ என்று. இந்த வார்த்தைகளில் இருந்துதான் நான் எழுதும் இந்தப் பதிவிற்கான சக்தி, மதிப்பு எனக்குக் கிடைத்தது. என்னுடைய அனுபவம் மட்டுமல்ல, ஆனால் நம் நாட்டில் இப்போது நடந்துவரும் விவாதத்தில் அந்த அனுபவம் கொண்டுவரக்கூடிய வெளிச்சத்திலிருந்து இதை எழுதுகிறேன்”



என்று தொடங்கி அவர் நாட்டின் மிக உயர்ந்த நீதிபீடமாகத் தங்களுடைய இறையாண்மையை மிகத் தெளிவாகக் கட்டிக்காத்துவரும் இந்திய உச்சநீதிமன்றத்தின் ஆணாதிக்கக் கட்டுமானத்தை அசைத்துப் போடப்போகும் தன் கட்டுரையைத் தொடர்கிறார். கடந்த டிசம்பர் மாதம் நிர்பயாவுக்கு நிகழ்ந்த கோரப் பாலியல் வன்முறையை எதிர்த்து வரலாறு காணாத ஒரு போராட்டத்தைத் தில்லி தன் வீதிகளில் கண்டது. அதே மாதத்தில் தன் கல்லூரி இறுதியாண்டின் விடுப்பில் சட்ட உதவியாளராக நீதிபதி ஏ.கே.கங்குலியிடம் பணிபுரிந்த அந்த மாணவி அவரின் தாத்தா வயதொத்த ஏ.கே.கங்குலியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். அதை அவர் கடந்த நவம்பரில்தான் வலைப்பதிவாகப் பதிந்தார்.



“ இந்தச் சம்பவத்தில் என்னைத் துன்புறுத்தியது எது? இந்தச் சமூகத்தின் வளர்ப்பான நான் அந்தப் பிரச்சினையிலிருந்து உடனடியாக வெளி யேறிவிட்டேன். ஆனால் அதுவா என்னை மிகவும் பாதித்தது? நான் 'ஏற்கவே முடியாத' ஒன்றை ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்பதா என்னைப் பாதித்தது? நான் மிக அதிகமாக அதை யோசிக்க யோசிக்க எனக்குப் பிடிபட்டது இதுதான்.எனக்கு நேர்ந்ததைப் பற்றிப் பேசவோ ஏன் யோசிக்கவோ ஒரு கட்டமைப்போ மொழியோ எனக்குத் தட்டுப்படவில்லை என்பதுதான். என்னுடைய குழப்பத்தின் இயலாமையின் மையமாக இருந்தது.


 அந்தச் சம்பவம் என்னை ஆழமாகப் பாதித்த அதே நேரத்தில் எனக்கு அவர்மீது கோபமோ வெறுப்போ வரவில்லை. பதிலாக நான் பெரிதும் மதித்த ஒருவர் என்னிடம் அப்படி நடந்துகொண்டது பற்றிய அதிர்ச்சியும் வலியுமே உணர்ந்தேன். எல்லையற்ற சோகம்தான் என்னை மிகத் தீவிரமாகப் பற்றிக்கொண்ட உணர்வு. ஆனால் இப்படிப்பட்ட மனநிலை எனக்குப் புதிதாக இருந்தது. இப்படிப்பட்ட சம்பவங்கள் பற்றிச் ‘சரியான’ எதிர்வினையாக நான் நினைத்திருந்தவற்றோடு முற்றிலும் மாறாக அவரின் செய்கைகளை நான் புரிந்துகொண்டு அவரை மன்னிப்பதும் இல்லையென்றால் நான் அவரை ‘நல்ல மனிதர்’ என்றே தொடர்ந்து நினைப்பதும் ஒரு முட்டாள்தனமான நிலைப்பாடு என்று பட்டது.



இந்த மனநிலை அன்று தில்லியில் போராட்டக்காரர்கள் வெளிப்படுத்திய தீவிரமான அறச்சீற்றத்திற்கு முன் முற்றிலும் வேறுபட்டும் இருந்தது.”
தன்னை மிகவும் காயப்படுத்திய பாலியல் வன்முறையை எதிர்த்துத் தில்லி போராட்டக்காரர்களைப் போல் சீற்றத்துடன் தன்னால் எதிர்கொள்ள இயலவில்லை என்பதைக் குறித்துத் தொடர்ந்து அந்தப் பதிவில் எழுதியிருக்கிறார்.



இதேபோல் தெகல்கா விவகாரம் வெளியில் வந்த மூன்றாவது நாள் ஒரு பெண் பத்திரிகையாளர் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தனக்கு ‘தி ஹிந்து’ நாளிதழில் பணிபுரியும்போது ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து வலைப்பதிவு எழுதியுள்ளார். தன்னிடம் ஆபாசமாகப் பேசிய ஒரு சீனியர் பிசினஸ் செய்தியாளர் குறித்துத் தான் அளித்த புகார்கள் பலனில்லாமல் போனது குறித்தும் எழுதும் அவர் “அது என்னுடைய முதல் வேலை, அதை விட்டால் எனக்கு வேலை கிடைக்காது என்று நான் அப்போது நினைத்ததால் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியபோது அதை நான் நம்பினேன்.” அதற்குப் பின்னரும் துன்புறுத்தல் தொடர்ந்ததாலும் அவரைத் தவிர வேறு பெண் நிருபர்களும் பாதிக்கப்பட்டதாலும் அந்த ஆண் செய்தியாளர் அவரிடம் மன்னிப்பு கேட்கும் நிலை வந்தது என்று கூறும் அவர், “அத்தனை புகார்களுக்குப் பின்னும் அவர் வேலையில் இருந்து நீக்கப்படவில்லை. விடுப்பில் சென்று பின் ராஜினாமா செய்தார்” என்று குறிப்பிடுகிறார்



. “என்னைப் பொருத்தவரை என் வாழ்வின் மிகக் கடினமான நாட்கள் அவை. அவர் என்னிடம் பேசியவை, என்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்ய நான் பட்ட நரகவேதனை. நான் புகார் அளித்தபின் என்னுடன் பணிபுரியும் ஆண்கள் என்னைப் பார்த்த விதத்தையும் நான் மறக்கமாட்டேன். சிலர் ‘அய்யோ நான் உன்னுடன் பேசமாட்டேன். நானும் துன்புறுத்தினேன் என்று நீ நாளை சொல்லிவிட்டால்’ என்று கிண்டல் செய்தார்கள். நான் வேலையை விட்டு விலகிய நாளில் பலர் என்னிடம் ‘நான் ஒரு பத்திரிகையாளரின் வேலையைக் கெடுத்து அவர் வாழ்க்கையை அழித்துவிட்டதாகக் கூறினார்கள்” என்று அவர் எழுதுகிறார். ஊடக நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் மிகச் சாதாரணமாக நடைபெறுவதையும் ஊடகங்களின் பெண்வெறுப்பு மனநிலையையும் வெளிக்கொண்டுவந்திருக்கும் தெகல்கா விவகாரம் பெரும் பனிக்கட்டியின் ஒரு சிறு நுனிதான் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.




இதுபோலப் பலரும் கடந்த ஒரு மாதத்தில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியும் அதுகுறித்த தங்கள் புகார்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தாதது குறித்தும் பொதுவெளியில் வைத்திருக்கிறார்கள். இவர்களில் பலரும் படித்தவர்கள், சுய சம்பாத்தியமும் ஆளுமையும் உள்ளவர்கள்.



ஒரு பெண் தனக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தலைப் பொதுவாக வெளியில் சொல்லத் தயங்கும் சமூகம் இது. மேலும் அதிர்ச்சியும் அவமானமும் வலியும் நிறைந்த இந்த அனுபவத்தைப் பேசுவதற்குக்கூட வெளியற்றதாகவே குடும்பக் கட்டமைப்பு இருக்கிறது. இவ்வளவையும் தாண்டி ஒரு பெண் புகார் அளிக்க முன்வருவது மிகப் பெரிய விஷயம். இப்படியான துணிச்சலும் நியாய உணர்வும் உள்ள பெண்களின் கண்ணீரின் ரத்தத்தின் மேல்தான் பெண்களைப் பாதுகாக்கும் பல சட்டங்கள் எழுந்துள்ளன. இந்தச் சட்டங்கள்தான் ஓரளவிற்காவது நமது அரசு சமத்துவத்தை நம்புகிறது என்பதை நமக்குத் தெரிவிக்கும் சான்றுகள்.




அதேசமயம் ஒரு வன்முறையைச் சந்திக்கும் பெண் மேலும் அதை வெளியில் சொல்லக்கூட முடியாமல் குமைந்து போவது ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சினை. ஒரு சமூகமாக நாம் சமத்துவத்தை ஏற்றுக்கொள்ள பெண்களின் வலிகளைப் புரிந்துணர்வோடு பார்க்கப் பல ஒளிவருடத் தூரத்தைக் கடக்கவேண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது. ஆனாலும் இந்தப் பயணம் தொடர்கிறது. ஏனெனில் “எலிகளுக்குப் பூனைகளால் என்றைக்குமே விடுதலை கிடைக்கப் போவதில்லை.” அடிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு விடுதலையைத் தவிர வேறெதுவும் போதுமானதில்லை.




பாலியல் வன்முறை குறித்தும் பெண்கள் சுயாதீனமாகச் செயல்பட அவர்களுக்கு இருக்கும் மறுக்க முடியாத உரிமை குறித்தும் உடல்சார்ந்த வன்முறைகள் நிகழும்போது ஒரு பழமையான சமூகத்தில் தன் விடுதலையை நோக்கி அடியெடுத்துவைக்கும் பெண்கள் உணரும் வலிநிறைந்த அலைக்கழிப்புகள் குறித்தும் மிக அத்தியாவசியமான விவாதம் தொடங்கப்பட்டுள்ளது.



பாலியல் வன்முறை அடிப்படையில் ஆண்-பெண் சமத்துவத்தை மறுக்கவும் ஆணாதிக்கத்தைக் காப்பாற்றவும் உருவாக்கி வளர்த்தெடுக்கப்பட்ட கருவி என்ற புரிதல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேண்டும். பாலியல் வன்முறையைச் சந்திக்கும் பெண்கள் இதைப் பற்றிப் பேச ஒரு வெளியை, ஒரு மொழியை நாம் உருவாக்க வேண்டும். பாதுகாப்பான நம்பத்தகுந்த அமைப்புகள் வேண்டும். பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்ணின் உடல், மனவலிகளையும் காயங்களையும் புரிந்துணர்வோடு பார்க்கும் நாகரீகத்தையும் நியாய உணர்வையும் நம் சமூகம் பெற வேண்டும்.


thanx - kaalachuvadu

ராகுல் காந்தியின் சொதப்பல் பேட்டி யும் , பிரபல ட்வீட்டர்களின் காமெடி கும்மியும்


ஆதரவாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் ராகுல் நேர்காணல்

'இந்த ஆண்டின் நேர்காணல்'... இப்படித்தான் 'டைம்ஸ் நெள' சேனல் ராகுல் காந்தியுடனான நேர்காணல் பற்றி விளம்பரப்படுத்தியது. ஆனால், ராகுல் காந்தி திங்கள்கிழமை இரவு அளித்த முழுநீள தொலைக்காட்சிப் பேட்டியோ, அவரது ஆதரவாளர்களை ஏமாற்றத்திலும், அவரது விமர்சகர்களை ஆரவாரத்திலும் ஆழ்த்தும் நிலைக்குத் தள்ளியது.


இந்தப் பேட்டிக் களத்தில், காங்கிரசின் நட்சத்திர பரப்புரையாளர் ராகுல் காந்தி, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை விமர்சிக்கக் கிடைத்த வாய்ப்பில் இருந்து நழுவினார்.


'இந்து தேசியவாதம்' என்ற மோடியின் நிலைப்பாடு குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கான காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் இவைதான் என எதையும் குறிப்பிடவில்லை. அதற்குப் பதிலாக, தன்னை மூன்றாவது நபராக அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் பேசினார் ராகுல் காந்தி.


இந்திய அரசியல் கட்டமைப்புகளில் ஏதோ தவறு இருப்பதாகவும், இந்தக் குறைபாடுகளால் அன்றாடம் மக்கள் அவதியுறுவதாகவும் தெரிவித்தார். அப்படிப்பட்ட அமைப்புகளை, தாம் வெறுப்பதாகவும் தெரிவித்தார். இருப்பினும் ஒரு காங்கிரஸ்காரராக சுதந்திரத்திற்குப் பின் காங்கிரஸ் நிகழ்த்திய சாதனைகள் என பசுமைப் புரட்சி முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வரையில் பட்டியலிட மறக்கவில்லை.


ராகுல் காந்தி நேர்காணலில் மிகவும் வலுவிழந்த பகுதி என்றால், அது மோடி பற்றிய கேள்விகளுக்கு அவர் பதில் அளித்த பகுதியே ஆகும். மோடி தொடர்பான கேள்விகளில் இருந்து தப்பிக்கவே ராகுல் மிகுந்த ஆர்வம் காட்டினார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, 2002 குஜராத் கலவரத்தை கட்டுப்படுத்தாமல், அதை மேலும் தூண்டிவிட்டார் என்று கூறிய ராகுல், "இது மாதிரியான சம்பங்களில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் இப்போதைய தேவை என்னவென்றால், நாட்டில் பெண்களுக்கு அதிகாரமளித்தலே" என விவாதத்தின் போக்கையே மாற்றினார்.


இதேபோல் 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பபட்டது, கலவரத்துக்கு மன்னிப்பு கேட்பீர்களா என்ற கேள்வியும் முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளிக்காத ராகுல், சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திற்கும், குஜராத் கலவரத்திற்கும் வித்தியாசம் இருப்பதாகக் கூறினார். சீக்கியர்கள் மீதான வன்முறையை கட்டுப்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்தது, ஆனால் குஜராத் கலவரத்தை தூண்டியதே பாஜகதான் என்றார்.


மோடி மீதான அச்சத்தால் அவருடன் சரிசமமாக ஒப்பிடப்படுவதை தவிர்க்கிறீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, தனக்கு எந்தவித அச்சமும் இல்லை, தேர்தல் தோல்வி பயம் இல்லை; ஆனால் அரசியலில் தன் தந்தை அனுபவித்த துயரங்களையும், அவரது மரணத்தையும் எப்போதும் மறந்ததில்லை என்றார்.


காங்கிரஸ் மீது வைக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எப்போதும் மெளனம் சாதிப்பது ஏன் என்றதற்கு, "இது தொடர்பாக என் கருத்துகள் அனைத்தையும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்து விட்டேன்" என்றார். இது, பிரதமரிடம் தாம் தெரிவித்துவிட்டதாகவும், பிரதமர்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற குறைகூறும் தொணியில் பேசினார்.


இப்படி எல்லா கேள்விகளுக்கும் தொடர்பு இல்லாமல், தெளிவான பதில் அளிக்காமல் பேசிய ராகுல் காந்தி குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் குவிந்தன. ராகுல் சிறுபிள்ளை போல் பேசுவதாக கேலி செய்யப்பட்டார். பிரதமர் பதவியை ஏற்பீர்களா என்ற கேள்விக்கு, வியப்பூட்டும் வகையில் "நான் இப்போது இங்கே ஏன் அமர்ந்து கொண்டிருக்கிறேன் என்பதே பெரிய கேள்வி" என்றார்.


ராகுல் காந்தி முதல் முறையாக பேட்டியளித்துள்ளார் என டைம்ஸ் நெள சேனல் தெரிவித்திருந்தாலும், கடந்த ஜனவரி 14 ஆம் தேதி அவர் தைனிக் பாஸ்கர் இந்தி பத்திரிகைக்கு பேட்டியளியிருந்தது குறிப்பிடத்தக்கது.\\\\

ட்வீட்டாளர்களை ஜோக்காளர்களாக்கிய ராகுல் பேட்டி!




மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, 'டைம்ஸ் நெள' சேனலுக்கு அளித்த பேட்டி, அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோ இல்லையோ... இணையவாசிகளின் கற்பனைத் திறனுக்கு ஊக்கியாக இருந்திருக்கிறது.




குறிப்பாக, சமூக வலைத்தளமான ட்விட்டரில், ட்வீட்டாளர்கள் ஜோக்காளர்களாகி, நிமிடத்துக்கு நூற்றுக்கணக்கான ட்வீட்களால், ராகுலை ட்ரெண்டிங்கில் வலம் வரச் செய்தனர்.


ட்விட்டரின் டாப் 10 ட்ரெண்ட்டிங்கில்

 முதல் 8 இடங்களை ராகுலே ஆக்கிரமித்திருந்தார். #RahulSpeaksToArnab | #ArnabVsRahul | #FranklySpeaking | #ComedyNightsWithPappu | Pappu | RTI | Women Empowerment முதலான ஹேஷ்டேகுகள் ஏற்றத்தில் இருந்தன.
ராகுல் பேட்டியைத் தொடர்ந்து வந்த எண்ணற்ற ட்வீட்களில் மிகவும் பிரபலமானவற்றில் சில இங்கே:


நேற்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில், ராகுல் காந்தி,

அது இது எது நிகழ்ச்சியின் மாத்தி யோசி சுற்றை விளையாடிக்கொண்டிருந்தார்.


@Chingakutty

அர்னாப்: நம் தேசத்தை ஏலியன்கள் படையெடுத்தால் என்ன செய்யலாம்?
ராகுல்: காங்கிரஸ்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமல் படுத்தியது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


@TheUnRealTimes

வாழ்க்கை உங்களுக்கு ராகுல் என்ற பெயரைத் தந்தால்,
அதோடு டிராவிட்டை இணைத்துக் கொள்ளுங்கள்
காந்தியை அல்ல


@dhiry2k

இன்று, நாம் அனைவரும் ஞானவான்கள் ஆனோம்.
எந்த பிரச்சினையாக இருந்தாலும் நம்மிடம் பதில் உள்ளது.
"பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், தகவல் அறியும் உரிமை சட்டம்"


@Viram

இந்த ராகுல் காந்தி பேட்டியில் கேள்விகள் இருந்தன,
பதில்களும் இருந்தன


ஆனால் இரண்டுக்குமான தொடர்பைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.


@bhogleharsha

ராகுல் காந்திட்ட உங்க பேரு என்னன்னு கேட்டா கூட 'empowering the women'ன்னு பதில் சொல்லுவாரு போல! :>


@BalaramanL


ஆர்.டி.ஐ-இன் விரிவாக்கத்தைக் கேட்காமல் இருந்து,
ராகுல் காந்தியை தர்மசங்கடப்படுத்தாமல் விட்டதற்கு
அர்னாப் கோஸ்வாமிக்கு பத்மபூஷண் விருது கொடுக்க வேண்டும்


@arnab_chak


இந்த பேட்டி என் கல்லூரி பிராக்டிகல் தேர்வுகளை ஞாபகப்படுத்துகிறது.
'நீ என்ன கேள்வி கேட்டாலும் எனக்குத் தெரிந்த பதிலைத் தான் சொல்லுவேன்'


@it_saurabh


ஒவ்வொரு முறையும் காங்கிரஸ், நரேந்திர மோடிக்கு தோண்டும் குழியில்
ராகுல் காந்தி குதிக்கிறார்


@rishibagree


ராகுல் காந்தி அவர்களே, 2+2 எவ்வளவு?


அர்னாப், பெண்கள் கையில் அதிகாரம் செல்ல வேண்டும். அரசியலை மாற்ற வேண்டும். அடுத்த கேள்வி?


@maheshmurthy

அடிப்படை பிரச்சினை என்னவென்றால்,
ராகுலுக்கு முதல் கேள்வி புரியும்போது
அர்னாப் 3-வது கேள்வியை கேட்டு முடிக்கிறார்.


@reviewero


நம் நாட்டில் உள்ள பெண்கள் ஜனத்தொகையை விட அதிக முறை
'பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்' என்கிற வார்த்தைகளை ராகுல் காந்தி இப்போது சொல்லிவிட்டார்


@i_Psycho


இது இரு வேறு வித்தியாசமான நிகழ்ச்சிகளைப் பார்ப்பது போல் உள்ளது.
அர்னாபின் கேள்விகள், ராகுலின் பதில்கள்.


@gauravkapur


மோடிக்கு, பேச விருப்பமில்லை
ராகுலுக்கு, பேசத் தெரியவில்லை
கேஜ்ரிவால், பேச்சை நிறுத்தவில்லை


@daddy_san


அர்னாப்: கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா?
ராகுல்: கோழிக்கு அதிகாரம் அளிக்க வேண்டும், முட்டைக்கு தகவல் அறியும் சட்டத்தைத் தரவேண்டும்.


@chandana

 நன்றி - த தமிழ்  இந்து 

எனது மகளை கவரும் ஆண்மகனுக்கு ரூ.815 கோடி: ஹாங்காங்க் தொழில் அதிபர் அறிவிப்பு

1. முருகதாஸ் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் விஜய் # இரட்டை இலைக்கு மேட்ச் க்கு மேட்ச்?



=====================


2 காங்கிரசை யாரும் தனிமைப்படுத்த முடியாது: ஞானதேசிகன்"#,சிங்கம் தான் சிங்கிளா இருக்கும்.காங்கிரஸ் கோஷ்டியோட கூட்டமாத்தான் இருக்கும்



======================



3 எப்படி ஏளனம் செய்தாலும் நான் கவலைப்பட மாட்டேன் -ராமதாஸ்.# .என்ன ஓட்டு வேணாலும் ஓட்டிக்குங்க.ஆனா ஓட்டு மட்டும் போட்டுடுங்கங்கறாரா?



=====================



4கும்பகோணத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியை கட்டி போட்டு நகை கொள்ளை.# செலவுக்குப்பணம் கேட்டு சம்சாரம் தர்லைனா ஆளை வெச்சு இப்டி புடுங்கிக்கனும்



==========================


5  சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி முதலீட்டாளர்கள் அச்சம் கொள்ளவேணாம்-மத்ய அரசு # கட்டுன பணத்தை எல்லாம் ஜில்லா வாரியா திருப்பிக்கொடுத்துடற மாதிரி


======================


6 பிரியங்கா தேர்தலில் போட்டியிட மாட்டார்: ராகுல் காந்தி # வாக்கு சேகரிக்க மட்டும் கறிவேப்பிலையா பயன்படுத்திக்குவீங்க?



======================



7 பிறந்தநாள் வரை அமைதி காக்க தொண்டர்களுக்கு மு.க.அழகிரி வேண்டுகோள்..# அதுக்குப்பின் பொங்கல் வைக்கப்போறாரா?



===========================



8 என்னை நீக்கியதால் நஷ்டம் பூராவும் திமுகவுக்குத்தான்.-் மு.க.அழகிரி # லாபம் பூரா எனக்குத்தான் - ஜெ



=====================



9 இயற்கை உணவுகளால் 25 கிலோவைக் குறைத்து சிக்கென்று மாறிய நமீதா! # மெகா சைஸ் அப்பளமா இருந்தவர் மிளகாய் வத்தலா சுருங்கிட்டா எவன் பாப்பான்?


======================




10 பாரீஸ்: 80 முறை கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி கைது # ஒரு தடவை யே சரியா எந்த வேலையையும் இந்த பொம்பளைங்க செய்யமாட்டாங்க போல



=======================



11 ரஜினி, கமல், விஜய், அஜீத் படங்களை டப் செய்யக் கூடாது - கன்னட திரையுலகம்ஸ்ட்ரைக் # ஏன்? நீங்க சத்தம் இல்லாம ரீமேக்கி காசு பாக்கனுமா?


====================



12 பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நயன்தாரா–சிம்பு திருமண காட்சி # நல்ல வேளை எஸ் ஜே சூர்யா இயக்கலை



======================



13 இந்தியாவுடன் நெருக்கம் : ஜப்பான் விருப்பம் # ஏற்கனவே இந்தியா ஒரு தீபகற்ப நாடு என்பதை நினைவில் கொள்ளவும் , ஜப்பான், நிப்பான், தப்பான்



========================



14 பிப்ரவரியில் ராணி முகர்ஜி - ஆதித்யா சோப்ரா திருமணம் # என்ன . இந்த வருசம் நடிகைங்க மேரேஜ் ஸ்பெஷலா? ஆளாளுக்கு தாலி கட்டிக்கறாங்க ?



================



15 தனிமையில் வாழவே விரும்புகிறேன் : சல்மான்கான் # பகல் ல தானே?


==================



16  விருது எனக்கு இன்னும் சமூகப் பொறுப்பை கொடுக்கிறது: வைரமுத்து பேட்டி # அடடா, அப்போ இனி கில்மாப்பாட்டு எழுத மாட்டீங்களா?



====================


17 நேபாளத்தில் சுஷில் கொய்லாரா புதிய பிரதமராகிறார்...# மணீஷா கொய்ராலா பரம்பரையோ?


=================



18  வருகிற பாராளுமன்ற தேர்தலில் 👉இந்தியாவுக்கு காங்கிரசிடம் இருந்து சுதந்திரம் கிடைக்கும்🎆 -எடியூரப்பா"#சரி.உங்க



ளுக்கு என்ன கிடைக்கும்?


===================




19  ஓரினச்சேர்க்கையாளரான எனது மகளை கவரும் ஆண்மகனுக்கு ரூ.815 கோடி: ஹாங்காங்க் தொழில் அதிபர் அறிவிப்பு # சிம்பு ,ஆர்யா யுவர் அட்டென்சன் ப்ளீஸ்



===================



20 எனக்கு பதவி ஆசை இல்லை: ராகுல்  #  பெண்ணாசை , மண்ணாசை , பொன்னாசை எல்லாம் துறந்த துறவியே! அதிசயப்பிறவியே!ஓடாத புரவியே!






================================

தன்னை விட 15 வயசு ஜூனியரான பொண்ணு.....

1. கூட்டணி யே இன்னும் முடிவாகலை .அதுக்குள்ள கருத்துக்கணிப்பு வர ஆரம்பிச்சிடுச்சு # குத்து மதிப்பு குருசாமிகள் ,இந்தியா.டு டே


==================


2 அனுஷ்கா ரசிகனின் டைரி வாசகம் - அனு தினமும் அனு தினமே!



====================



3 டி பி ல நாம கலராத்தெரியனும்னா ஆரஞ்சு பல்பை எரிய விட்டு எதித்த மாதிரி நின்னு போட்டோ எடுத்துக்கனும் போல ;-))



=====================



4 பொண்டாட்டி பெட்டர் ஆப் னா மச்சினி யை பெஸ்ட் குவாட்டர் னு சொல்லலாமா? னு ஒரு குடிமகன் கேட்டாரு



======================



5 ரம்மியும் காதலும் ஒண்ணு: 'ரம்மி' இயக்குநர் பாலகிருஷ்ணன் # ஆமா சீட்டாட்டத்துல ரம்மி சேர்றதும் , வாழ்க்கைல காதலர் சேருவதும் கஷ்டம்



==================



6 டி எல் ல 17 டாக்டர்கள் பாலோ பண்றாங்க.இதுல சோகம் என்னன்னா ஒரு நர்ஸ் கூட பாலோ பண்ணலை



=================


7 சிவபெருமான் நேத்து நைட் போன் பண்ணாரு.சுமங்கலிப்பெண்கள் அசைவத்தில் இருந்து சைவத்துக்கு மாறுனா தீர்க்க சுமங்கலி ஆகிடுவாங்களாம்



=================


8 சந்தன மரத்தில் கருநாகப்பாம்பு ஏறுவதைப்போல் உன் முதுகில் ஜடை



==================


9 ஆபீஸ்லயே லஞ்ச் சாப்பிட்டா லஞ்ச் டைம் அரைமணி நேரமாம்.வெளில போய் சாப்ட்டா 1மணி நேரமாம் # டிபனை ஆபீஸ் திண்ணைல வெச்சு சாப்ட்ரனும்



====================


10 பஸ் ல ஏறும் பிகர்ஸ் ல U நெக் ஜாக்கெட் பிகர் ,Vநெக் ஜாக்கெட் பிகர் எத்தனை ஏறுதுனு பாய்ன்ட் போட்டு விளையாடிட்டிருக்கோம் #,உருப்புட்ருவோம்


==================



11 பொதுவா பொண்ணுங்க பேசும்போது தலையை ஆட்டி ஆட்டி பேசுவாங்க.ஜிமிக்கி அணிந்த பெண்கள் இன்னும் அதிகமா #,அடுத்த டைம் நோட் பண்ணிப்பாருங்க


=============


12   பெண்ணிடம் பேசும்போது நாமா ஒரு டாபிக்கை ஆரம்பிக்கக்கூடாதாம்.அவங்க ஆரம்பிக்கும் மொக்கை டாபிக் க்கு ம் குடுத்தா போதுமாம் # லேடீசாலஜி



=====================



13  பெண்கள் கைக்குட்டை பயன்படுத்தும்போது மைனா தன் அலகை துடைப்பது போல் கவிநயத்துடன் இருக்கும்


==================


14 உன் பக்கம் நியாயம் இருந்தாலும் ஆபீசில் உயர் அதிகாரிகளிடம் குரல் உயர்த்திப்பேசாதே # ஆபீஸ் விதி



==============



15 இந்த பொண்டாட்டிங்க எல்லாம் பேஷன் கற பேர் ல அழகிய நீள மயில் தோகைக்கூந்தலை பாப் கட்டிங்கா மாத்திக்கறதில் என்ன நன்மைன்னா ஆயில் செலவு மிச்சம்


====================



16 பீக் அவர் காலை 7 டூ 9 என்று தெரிந்தும் அந்த நேரத்தில் வெளியே போய் " அப்ப்ப்பா ஒரே டிராபிக் நெரிசல் "என சலித்துக்கொள்பவன் தான் தமிழன்



====================



17 ஓவர் லோடு ஏற்றுவதைத்தடுக்க ஒவ்வொரு படகிலும் மேக்சிமம் கெப்பாசிட்டி எத்தனை பேரை ஏத்தலாம்னு எழுதி வைக்க அரசு உத்தரவிடனும்



=====================



18 தன்னை விட 15 வயசு ஜூனியரான பொண்ணு தன்னை பேர் சொல்லிக்கூப்பிட்டாக்கூட கோபப்படமாட்டான் தமிழன்



==================================



19 விமானத்தில் பயணிக்க பறவை போல் பறக்கத்தெரிய்த்தேவை இல்லை.ஆனா படகு ,கப்பல் ல பயணிக்க மீன் போல் நீந்தத்தெரிஞ்சிருக்கனும்



======================




20  பொண்ணுங்க வர்ற நேரத்துக்குஅலாரம் வெச்சு எந்திரிச்சு வணக்கம் வெச்சு 10 நிமிசம் கடலை போட்டுட்டு பின் போர்வையைப்போத்தி தூங்குபவன்தான் தமிழன்



=============================

ஹை ஹீல்ஸ் செப்பல் போடும் பிகர்களே! ஒரு சொல் கேளீர்

1. காதலைச்சொல்ல நீ ரோஜாப்பூவை நீட்டும்போது காதலி திரும்பிக்கொண்டால் கூந்தலில் வைத்து விடு என்ற குறிப்பால் உணர்த்தலாகவும் இருக்கலாம்



=====================



2 தலைக்குக்குளித்தால் நரை முடிகள் வெளியே தெரிவது மாதிரி நீ பார்க்கும்போது எனக்குள் இருக்கும் குழந்தைத்தனம் வெளியே குதித்து குதூகலிக்கிறது



========================



3 பசியும் ,அவமானமும் ஒரு ஏழைக்கு பழகி விடுவது போல் உன் அலட்சியமும் ,நிராகரிப்பும் எனக்குப்பழகி விட்டது.



=====================


4 கோலம் போடும் முன் பூமியைக்குளிர்விக்க தண்ணீர் தெளிப்பது போல என்னிடம் பேசும் முன் உன் விழி ஒளிக்கதிரை என் மேல் தெறிக்கவிடுகிறாய்



======================


5 கடிதத்தில் ஏதாவது எழுதும் முன் முகவரியை முதலில் எழுதுவது மாதிரி உன்னுடன் பேச ஆரம்பிக்கும் முன் உன் விழிகளை ஆசையுடன் பார்த்துக்கொள்கிறேன்



========================


6 நான்கு நாவல் பழங்களை சாப்பிட்டால் தற்காலிகமாக நாக்கு மரத்து விடுவது போலே உன் அலட்சியங்கள் என் மனதை நிரந்தரமாக மரத்துப்போகச்செய்து விட்டது



==========================


7 பீர்க்கங்காய் மேல் தோலை சுரண்டினால் வரும் சுருள் சுருள் பூ போல உன் கூந்தலின் முன் சுருள் குழல் காற்றில் அசைகிறது


=====================



8 சாரி சொன்னா எனக்குப்பிடிக்காதுன்னுபொண்ணு சொன்னா உடனே யோசிக்காம " சாரி.இனி உனக்குப்பிடிக்காத சாரி யை கேட்க மாட்டேன்.சாரி " என்பான் தமிழன்


=======================


9 பத்மபூசன் விருது விஜய் ,அஜித் இருவரில் யாருக்கு முதலில் கிடைக்கும் ? #,அடுத்த சண்டை ;-))


======================



10 DPல தன் சொந்த முகத்தை 5 நிமிசத்துல காமிச்ட்டு மாத்தும் பெண் ட்வீட்டர்கள் இருந்தா் தமிழன் 1 நிமிசத்துல காப்பி பண்ணி வெச்சுக்குவான்



======================



11 ஒரு சாதா படத்தை அசாதா படமா காட்டுவதில் சன் டிவி யின் மார்க்கெட்டிங் டெக்னிக் கோலோச்சுகிறது # இங்கே என்ன சொல்லுது


====================



12 ஆம் ஆத்மி அர்விந்த் கேஜ்ரிவால் தாக்கத்தில் ,சாயலில் உருவான படம் தான் ஜெய் ஹோ படம்னு சொல்றாங்க # பாத்துடுவோம்



====================



13 ATM மில் பாஸ்வோர்டு் அடித்தபின் பணம் எடுக்க முடியாமல் மிஷின் ரிப்பேர் எனக்காட்டினால் அப்டியே வராமல் மீண்டும் சில நெம்பரை தட்டி குழப்பவும்



=====================


14 விஜய் கெட்டப் மாத்த மாட்டார்.விஜய் ரசிகைகள் டி பி அடிக்கடி மாத்துவாங்க #,அவதானிப்பு



=====================



15 படத்தை போட்டுட்டு தான் டிக்கெட் கவுன்ட்டரையே திறக்கறாங்க.இதுல என்ன தொழில் ரகசியம்? # ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணா - ஜெய் ஹோ


==================


16 ஒரு வழிப்பாதையில் வேணி நடந்து சென்றால் "ஒன் வே நீ" னு சொல்லலாம்


==========================


17 பெரும்பாலான பெண்கள் காலைல 7 மணிக்கு மேல் தான் எந்திரிக்கறாங்க.குடும்பத்துல 7 1/2 அதனால தான் ஸ்டார்ட் ஆகுது





============================


18 ஹை ஹீல்ஸ் செப்பல் போடும் பிகரைப்பார்த்தா எப்போ தடுக்கி ( நம்ம மேல) விழுந்துடுமோனு பயமா இருக்கு



==========================


19  ட்விட்டர்ல ஃபாலோயர்ஸா இருக்கும் 11000 பேரும் ஆளுக்கு 10000 ரூபா குடுத்தா வேலைக்கே போகத்தேவை இல்லை.# சாரு நிவேதிதா சிந்தனைகள்



=======================


20  கல்யாணம் ஆகாத லேடி மேஸ்திரியா த்ரிஷா நடிச்சா மேஸ்திரிஷா னு சொல்லலாமா?

மானிட்டரில் மாணிக்கம் யார் ?

1. ட்விட்டரில் காதலைச்சொல்ல 143,அனுமதி இல்லை.எனவே 140 .+2 ,+1 என்றேன் ;-))



==========================



2 மருதாணி வைத்த விரல்களை விட அதை அம்மியில் அரைத்த விரல் அதீத சிவப்பாவது போலே உன் கண்களை கண்ணாடியில் நீ பார்த்ததை விட நான் பார்த்ததே அதிகம்



========================



3 எதிர்பாராத தருணத்தில் வரும் உன் PH அழைப்புகள் எந்த அளவு மகிழ்ச்சியோ அந்த அளவு துக்கம் தருவது இன்ன நேரத்தில் அழைப்பேன் என சொல்லி மறப்பது



========================



4 யோகா செய்வதை விடக்கொடுமையானது சமையலில் உனக்கு ஒத்தாசை செய்வது


==========================



5 தீவிர விஜய் ரசிகன் யார் தெரியுமா? தூங்கிட்டு இருந்த ஆளை ஜி எந்திரிங்கன்னு எழுப்புனாக்கூட " என்னது? ஜில்லா எடுத்தாச்சா? னு கேட்பவரே


========================



6 உனக்கு கர்லிங் ஹேர் னு காதலியைப்புகழ்ந்தாக்கூட லிங்க் ? னு கேட்டா அது இணைய இணை ;-)



========================


7  எனக்கும் என் மனைவிக்கும் சண்டை என்பதால் தற்காலிகமாகத்தள்ளி வைக்கிறேன்.மாலை 6 மணிக்கு சேர்த்துக்கொள்வேன் # திமுக தொண்டன்


========================



8 பஸ் ல ஒரு (கேரளா) பொண்ணு நிஜமாவே தலையை துவட்டி ஜன்னல் வழியா கூந்தலை காய வெச்சுட்டு இருக்கு.நல்ல வேளை சாம்பிராணி எல்லாம் பிடிக்கலை



==================



9 இந்தப்பொண்ணுங்க கிட்டே பர்சனல் டீட்டெய்ல்ஸ் கேட்டா இண்ட்டர்வியூல கூட வெவ்வெவ்வவ்வே அதெல்லாம் சொல்ல மாட்டேன் னு சொல்லிடும் போல



===========================



10 காங் செய்தித்தொடர்பாளர் ஷோபா .அடேங்கப்பா எவ்ளவ் அடர்த்தி சுருட்டைக்கூந்தல்.மேடம் க்கு தேங்காய் எண்ணெயே டெய்லி கால் லிட்டர் செலவாகும் போல



======================


11 இந்த பொண்டாட்டிங்க எல்லாம் 2 இட்லி மட்டும்தான் சாப்பிடறாங்க.ஆனா 6 தோசை சாப்பிடும் புருசனை விட பலசாலியா இருக்காங்க.எப்படி?



======================



12 காலேஜ் லைf  ல  சக்திமுருகன் பஸ் ல நாங்க எல்லாம் கலாய்ச்சுட்டு இருந்த ஒரு ஹை கிளாஸ் பிகரு ஈரோடு டிராபிக் எஸ்.ஐ சம்சாரம்.செத்தாண்டா சேகரு ;-))


============================


13  பால்குடி மாறா பாலகி போல் முகம் உள்ளவங்க கூட லவ் மேரேஜ் தான் பண்ணி இருக்காங்க.நாமெல்லாம் வேஸ்ட்டுய்யா


=====================


14 த்ரிஷா வைக்கலாய்த்தால் ஒரிசா தப்பிச்சென்றாலும் தரிசாக்காமல் விடமாட்டோம் - இவன் பாத்ரூம் சிங்கர் பாமரன்



======================



15 த்ரிஷா வுக்கு உருகார் ஒரு காசுக்கும் ஆகார்



==================


16 தரிசான நிலம் கூட த்ரிஷா வந்தால் கரிசல் காட்டு நிலம் ஆகாதோ?


====================



17 அழகிரி - ஒரு இனத்துக்கு நல்ல தலைவராத்தான் இருக்க முடியல்.புள்ளைக்கு நல்ல அப்பாவாகவும் இருக்க முடியலையே # அக்னி நட்சத்திரம்


=====================



18 ஜல்லடை போட்டு சலித்துப்பார்த்து விட்டேன்.எதுக்கெடுத்தாலும் சலித்துக்கொள்வதில் பெண்களை அடித்துக்கொள்ள ஆள் இல்லை



=====================


19 குடியரசு தினத்தை முன்னிட்டு கேப்டனுக்கு மானிட்டரில் மாணிக்கம் விருது வழங்கப்படுகிறது


=======================

20 உன் மயிலிறகு வருடல் பார்வைகள் எப்போதாவது என் ஆத்மாவை தொட்டாலும் அதற்கு முன் 1000 தடவை உன் பாம்புக்கடி வார்த்தையை ஏற்க நேரிடுகிறது


=============================================