Monday, January 27, 2014

ரம்மி- படத்தோட திரைக்கதை ஒரு மேஜிக் - விஜய் சேதுபதி

கோலிவுட்டில் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்துவரும் விஜய் சேதுபதியின் நடிப்பில் வேகமாகத் தயாராகி வருகிறது ‘ரம்மி’.



“இந்த படத்துக்கு பெரிய கிப்ட் அப்படின்னா கமல் சார் இந்த படத்தோட இசையை வெளியிட்டது தான். படத்தோட டிரெய்லர், பாடல்களை எல்லாம் பாத்துட்டு ஒரு எதார்த்த சினிமா பாத்த ஃபீல் இருக்குனு பாராட்டினார். ரம்மி விளையாடியிருக்கேன். டிக் அடிக்கிறது மக்கள்கிட்ட தான் இருக்கு” என்று உற்சாகமாகப் பேசுகிறார் படத்தின் இயக்குநர் பாலகிருஷ்ணன். படத்தைப் பற்றி என்ன கேட்டாலும் சற்றும் யோசிக்காமல் ரம்மி விளையாட்டில் சீட்டுகளை அழகாக கோர்ப்பது போன்று வார்த்தைகளை கோர்க்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து..


‘ரம்மி’ படத்தை ஆரம்பித்த விதத்தைச் சொல்லுங்க?


நான் படிச்ச கல்லூரி புல்லாங்குறிச்சி கிராமத்துல இருந்தது. படிக்கிறப்போ நடந்த நிகழ்வுகள், ஏற்பட்ட அனுபவங்கள் எல்லாத்தையும் திரைக்கதையா மாத்தி இந்தப் படத்தை எடுத்திருக்கேன். கல்லூரியை முடிச்ச பிறகு இயக்குநர் லிங்குசாமிகிட்ட ‘ஆனந்தம்’ படத்தில் இருந்து ‘பையா’ படம் வரை தயாரிப்பு மேற்பார்வையாளராக வேலை செஞ்சேன். ஒரு நடிகனா ‘பட்டாளம்’ படத்துல நடிக்க ஆரம்பிச்சேன். ‘மெளன குரு’, ‘நான் மகான் அல்ல’, ‘தூங்கா நகரம்’ அப்படின்னு 10 படங்கள்ல நடிச்சிருக்கேன். இந்தக் கதையை இயக்கலாம்னு ‘பட்டாளம்’ படம் பண்ணினப்போ முடிவு பண்ணி, படத்தோட வசனகர்த்தா பழனிச்சாமிகிட்ட கதையை சொன்னேன். அவர் நல்லா இருக்குன்னு சொன்னதோட இந்த கதையோட என் பயணம் ஆரம்பிச்சுது. இந்த கதை மூலமா நாம இயக்குநர் ஆகலாம்னு முடிவு பண்ணினேன்.



விஜய் சேதுபதி இந்த படத்தோட திரைக்கதை ஒரு மேஜிக்னு சொல்லியிருக்காரே. அப்படி என்ன மேஜிக் காட்டியிருக்கீங்க?



படத்தலைப்புக்கு காரணமே படத்தோட திரைக்கதை தான். ரம்மி விளையாட்டு ரொம்ப சுவாரசியமா இருக்கும். விளையாட உட்காந்தோம்ன்னா எந்திரிக்க மனசே வராது. அதே மாதிரி தான் காதலும். ரம்மிங்கிறது ஆடி ஜெயிக்கணும். காதல்ங்கிறது போராடி ஜெயிக்கணும், ரம்மி விளையாட்டை பாத்தீங்கன்னா ரொம்ப ஜாலியா ஆரம்பிக்கும், நீ இந்த கார்டு போடு, ஏன் அந்த கார்ட்டை போட்ட அப்படினு போகும். அந்த சூடு பறக்குற விளையாட்டு தான் இந்த படத்தோட தலைப்பு.



அடுத்து என்ன வரப்போகுது, அடுத்து யார் எங்கே வரப்போறா அப்படிங்குற நிலைமை படத்துல வரும். அதான் இந்த தலைப்பு வைச்சேன். படத்தோட கதையில திடீர்னு ஜோக்கர் கூட சீரியஸாகும். அதே மாதிரி இந்த படத்துல ஒரு மெசேஜ் சொல்லியிருக்கோம். லவ் சம்பந்தப்பட்ட அந்த மெசேஜ் கண்டிப்பா பெரியளவில் பேசப்படும்.



விஜய் சேதுபதி, இனிக்கோ பிரபாகர், ஐஸ்வர்யா, காயத்ரி இப்படி பாத்திரங்கள் தேர்வு எல்லாம் வித்தியாசமா இருக்கே?



விஜய் சேதுபதி இந்த படத்துக்கு கிடைச்சது பெரிய கிப்ட். இமான், யுகபாரதி இரண்டு பேருமே விஜய் சேதுபதிகிட்ட இந்த மாதிரி ஒரு கதையிருக்கு, கேட்டு பாருங்கன்னு சொன்னாங்க. கதையை கேட்ட உடனே நான் பண்றேன்னு சொல்லிட்டார். ஷுட்டிங் ஸ்பாட்ல இருந்து டப்பிங் வரைக்கும் கூடவே இருந்தார். அவரை நான் அப்பெல்லாம் விஜய் சேதுபதியா பாக்கல. அவரோட கதாபாத்திரமான ஜோசப்பாதான் பார்த்தேன். இனிகோ பிரபாகர் படத்துல சக்தின்னு ஒரு கேரக்டர் பண்ணியிருக்கார். அவரும் பிரமாதமா பண்ணியிருக்கார்.



ஹீரோயின் கேரக்டருக்கு நீச்சல் தெரியணும், அதே நேரத்துல கண்ணு நல்லா பெருசா இருக்கணும்னு தேடினேன். அந்த கேரக்டருக்கு நிறைய பேரைத் தேடினேன். நான் தேடின காம்பினேஷன் ஐஸ்வர்யாவுக்கு இருந்துச்சு. நிச்சயம் இந்த படம் அவங்களுக்கு நல்ல பேர் வாங்கி குடுக்கும். மார்டன் கேரக்டரா பண்ணிட்டு இருந்த காயத்ரியை இதுல கொஞ்சம் நேட்டிவிட்டியோட நடிக்க வைச்சிருக்கேன். எதையும் மிகைப்படுத்தாம அந்த களத்துல என்ன நடக்கும் அப்படினு கமல் சார் சொன்ன மாதிரி ரொம்ப எதார்த்தமா பதிவு பண்ணியிருக்கேன்.



தயாரிப்பு பணி, நடிகன் எல்லாத்தையும் தாண்டி இயக்குநர் ஆவதற்கு என்ன காரணம்?



நான் இயக்குநரா வர்றதுக்கு, இயக்குநர் லிங்குசாமிகிட்ட பணியாற்றியது தான் காரணம். அவர்கிட்ட அவ்வளவு விஷயங்கள் கத்துக்கிட்டேன். என்னைப் பொறுத்தவரைக்கும் நாம எத நோக்கி போறமோ, அது கண்டிப்பா நம்மள நோக்கி வரும். புதுக்கோட்டைக்கு பஸ் ஏறினோம்ன்னா, பஸ் புதுக்கோட்டை நோக்கி போயிட்டு இருக்கும், புதுக்கோட்டை நம்மள நோக்கி வந்துட்டு இருக்கும். நம்மளோட பாதையில் உறுதியாக இருக்கோமாங்கிறது தான் முக்கியம். இயக்குநர் ஆகணும்னு முடிவு பண்ணி, அதுக்கு என்னை முழுமையாக அர்ப்பணிச்சேன். இதோ என்னோட படம் தயாராகி வெளியாகப் போகுது.


இப்போ இயக்குநர். தொடர்ந்து நடிகரா, இயக்குநரா?


என்னை நம்பி வரும் படங்களில் நடிப்பேன். ஆனால், நான் இயக்குற படங்களில் நடிக்க மாட்டேன். மற்றவங்க இயக்கி, நடிக்கிறாங்க. ஆனா, என்னை பொறுத்தவரை இயக்குநர் பொறுப்பு அப்படிங்குறது 100% கவனமா இருக்க வேண்டிய இடம். அதே மாதிரிதான் நடிகன் அப்படிங்குற பொறுப்பும். 1% குறைஞ்சா கூட ஸ்கிரீன்ல தெரிஞ்சுரும். நடிகன், இயக்குநர் அப்படினு ரெண்டு வேலையையும் பண்றது கஷ்டம்.


நன்றி - த ஹிந்து 

2013ம் ஆண்டிற்கான பிலிம் ஃபேர் விருதுகள் வென்றவர்கள் பட்டியல்

2013ம் ஆண்டிற்கான பிலிம் ஃபேர் விருதுகளில் சிறந்த படம், இயக்குநர், நடிகர் உள்ளிட்ட விருதுகளை 'பாக் மில்கா பாக்' வென்றது.



பல ஆண்டுகளாக வருடந்தோறும் பிலிம் ஃபேர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. முன்னணி நடிகர், நடிகைகள் என அனைவருமே இந்த விருதுகள் வாங்க வேண்டும் என்று மெனக்கெடுவார்கள்.


2013ம் ஆண்டிற்கான விருதுகள் பட்டியலில் முக்கிய விருதுகளான சிறந்த படம், இயக்குநர், நடிகர் உள்ளிட்ட விருதுகளை 'பாக் மில்கா பாக்' திரைப்படம் தட்டிச் சென்றது. சிறந்த புதுமுக நடிகருக்கான விருதினை 'ராஞ்சனா' படத்திற்கான தனுஷ் பெற்றார்.



2013ம் ஆண்டிற்கான பிலிம் ஃபேர் விருதுகள் வென்றவர்கள் பட்டியல் 


:
Best Film - Bhaag Milkha Bhaag
Best Director - Rakeysh Omprakash Mehra (Bhaag Milkha Bhaag)
Best Actor - Farhan Akhtar (Bhaag Milkha Bhaag)
Best Actress - Deepika PAdukone - Goliyon Ki Raasleela Ram-leela
Best Actress in a Supporting Role - Supriya Pathak Kapur (Goliyon Ki Raasleela Ram-leela)
Best Actor in a Supporting Role - Nawazuddin Siddiqui (The Lunchbox)
Best Music - Mithhoon, Ankit Tiwari, Jeet Ganguly (Aashiqui 2)
Best Playback Singer (Male) - Arjit Singh - Tum hi ho - (Aashiqui 2)
Best Playback Singer (Female) - Monali Thakur - Sawaar (Lootera)
Best Lyrics - Prasoon Joshi - Zinda (Bhaag Milkha Bhaag)
Best Debut (Male) - Dhanush (Raanjhanaa)
Best Debut (Female) - Vaani Kapoor (Shuddh Desi Romance)
Best Debut Director - Ritesh Batra (The Lunchbox)
Best Actor (Critics) - Rajkumar Rao (Shahid)
Best Actress (Critics) - Shilpa Shukla (BA Pass)
Best Film (Critics) - The Lunchbox
Lifetime Achievement Award - Tanuja
RD Burman Award - Sidharth Mahadevan
Best Action - Thomas Struthers and Guru Bachchan (D Day)
Best Background Score - Hitesh Sonik (Kai Po Che)
Best Choreogrpahy - Samir and Arsh Tanna – Lahu muh lag gaya (Goliyon Ki Raasleel Ram-leela)
Best Cinematography - Kamaljit Negi (Madras Cafe)
Best Costume - Dolly Ahluwalia (Bhaag Milkha Bhaag)
Best Dialogue - Subhash Kapoor (Jolly LLB)
Best Editing - Aarif Sheikh (D-Day)
Best Production Design- Acropolis Design (Bhaag Milkha Bhaag)
Best Story - Subhash Kapoor (Jolly LLB)
Best Sound Design - Bishwadeep Chatterjee and Nohar Rajan Samal (Madras Café)
Best Screenplay - Chetan Bhagat, Abhishe Kapoor, Supratik Sen and Pubali Chaudhari (Kai Po Che)


நன்றி  - த தமிழ்  இந்து 

நான் ஆளான தாமரை... ரொம்ப நாளாகத்தூங்கல

மயில் வாகனன்
Embedded image permalink

1தேமுதிகவிற்கு உரிய முறையில் அழைப்பு விடப்படும் -கருணாநிதி#"அரை"குறை அழைப்பு பிடிக்காது.FULL சப்போர்ட் வேணும்னா சக்சஸ்FULL கூட்டணி


===================



2,,,பொய் சொல்லுவதையே மூலதனமாக கொண்ட கட்சி பாஜக-நாராயணசாமி# நமக்குத்தொழிலே பொய்யும் புரட்டும் தானேங்ணா?அடுத்தவங்களைக்குறை சொல்லி ?




============================



3அரசியலின் 'குத்தாட்ட நாயகி' ஆம் ஆத்மி: எழுத்தாளர் சேத்தன் பகத் சாடல் # அது கேஜ்ரிவால் அண்ணே.காஜல் அகர்வால் நினப்லயே இருந்தா எப்டி?




===================



4விற்பனையில் தொடர் சரிவு: பணியாளர்களை விஆர்எஸ்-ல் அனுப்பும் டாடா மோட்டார்ஸ்! # ச்சோட்டா ,படா எல்லாருக்கும் டாட்டா காட்டிடுச்சே டாட்டா




======================


5தேமுதிகவை கூட்டணிக்கு வருமாறு கருணாநிதி அழைப்பு # வாங்கண்ணா வணக்கங்கண்ணா .என் சாங்கை நீ கேளுங்கண்ணா! ஊத்திக்க ஊத்திக்க ஒரு ரவுண்டு



===================

நடராஜர் ,முருகர் வித் மனைவி ,துணைவி



6தேமுதிகவிற்கு உரிய முறையில் அழைப்பு விடப்படும் -கருணாநிதி# ஏபிசிடி ,டி ஆர் னா தாடி ,வந்தா வாடி ,வராட்டிப்போடி




====================



7ஜெ பற்றி அவதூறு பேச்சு: காடுவெட்டி குரு மீது போலீசில் புகார். # ஜெயிலில் கல் உடைக்கும் குரு ஆக ஆசை போல



========================



8 கிண்டியில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி..தோல்வி # ஏமாந்தா ஓசிலயே கிண்டிட்டு போலாம்னு பார்த்திருக்கான் முடியல போல


======================



9காங்., ஆதரவை கேட்கவில்லை:கருணாநிதி # ஸாங் டெடிகேட்டட் = கேட்டாலும் கிடைக்காதம்மா கிடைச்சதை நீயும் வேணாங்கலாமா?



====================



10மோடி மாதிரி கர்ஜிக்க வேண்டும்!'': ராகுலுக்கு ஆலோசனை சொன்ன காங்கிரஸ் தலைவர்கள் # ராcool லா இருக்காமா ராHOT டா மாறிடுங்க



====================

தைப்பூசம் தரிசனம் @ சென்னிமலை
Embedded image permalink

11,,,,,,,,3வது திருமணத்துக்கு தயாராகும் வனிதா விஜயகுமார் # வருசா வருசம் பர்த்டே கொண்டாடற மாதிரி ஒவ்வொரு வருசமும் புதுப்புருசன்.சபாஷ்



====================


12,,,ஸ்ரீவில்லிபுத்தூரிில் போலி ஏ.டி.எம். அட்டை மூலம் ரூ.1.50 லட்சம் மோசடி: # பேங்க் ஸ்டாf அதுக்கு உடந்தையா இருந்திருப்பான்



===================


13,,,,கனரா வங்கி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி தோல்வி # கனரா பேங்க் னா ஏடிஎம் மிஷின் கனமா இருக்கும்கற ஜி கே கூட இல்லாத திருடன் போல



=====================



14,,,,,,8ம் வகுப்பு மாணவியைக் காதலித்த ஆசிரியரை நீக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் # சுந்தர காண்டம் படம் பார்த்த கோஷ்டியா இருக்கும்




========================



15,
கௌதம் கார்த்திக் நடிக்கும் அடுத்த படம் " இந்தரஜித்"..# கமல் ஆல்ரெடி கலைஞன் படத்துக்கு அந்த டைட்டில் தானே வெச்சாரு ? கதையும் அதானா?


சென்னிமலை தெப்பக்குளம் ,அதுல H2O ,அதுக்கு மேல தெப்பத்தேர்

=========================
சென்னிமலை தெப்பக்குளம் ,அதுல H2O ,அதுக்கு மேல தெப்பத்தேர்
Embedded image permalink


16
தே.மு.தி.க.வுடன் பா.ஜனதா நாளை பேச்சுவார்த்தை: கூட்டணி உறுதியாகிறது...# நான் ஆளான தாமரை.ரொம்ப நாளாகத்தூங்கல




==================


17
உலகம் முழுவதிலும் 'கூகுள்' வழியாக தேடப்பட்ட தென்னிந்திய அரசியல் தலைவர்களில் ஜெ ுக்கு முதல் இடம்.# ஏன் தேடனும்? கொடநாட்ல தானே இருப்பார்?



===================


18அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல் நலக்குறைவு: ஆஸ்பத்திரியில் ிசோதனை..# என்னய்யா இது? சீன் பை சீன் முதல்வன் ரீமேக்காவே இருக்கு?



==================



19கர்நாடகத்தில் எம்.எல்.ஏ.க்கள் லேப்–டாப் வாங்க தலா ரூ.60 ஆயிரம்...# இவங்க பிட்டுப்படம் பாக்க மக்கள் வரிப்பணத்துல இருந்து அழுவனுமா?




===================



20,,,பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேன்: நடிகர் கார்த்திக் பேட்டி. # கவுதம் ,கார்த்திகா,துளசி,ராதா னு மொத்தம் 4 ஓட்டு உறுதி





===============================


சென்னிமலை ஈஸ்வரர்
Embedded image permalink


சென்னிமலை ஈஸ்வரர்


 சென்னிமலை மகா தரிசனம்





சென்னிமலை மகா தரிசனம்

Sunday, January 26, 2014

பெரிய நெல்லிக்காயின் புளிப்பு மாதிரி நம் பிரிவுகள்!

1.நான் சின்னப்பையனா இருக்கும்போது பொண்ணுங்க போடும் சுடியின் துப்பட்டா 2 1/4 மீட்டர் நீளம் இருக்கும்.இப்போ ஜஸ்ட் 1 1/2 மீ தான் # உத்தேசமா



======================



2 எதுவும் எழுதத்தோணலைன்னாக்கூட தமிழன் சும்மா இருக்கமாட்டான்.என்ன ட்வீட்டுவது?னு தெரியலையே? அப்டி னு ட்வீட்டி ஒரு ட்வீட் தேத்திடுவான்



=======================



3  சி சென்ட்டரான சென்னிமலை ல ஜில்லா 15 வது நாளா இன்னும் ஓடுது.தைப்பூசத்தேர்த்திருவிழாக்கூட்டம் தான் காரணம்னு சொல்லி சமாளிப்போம் ;-))


=========================


4 வீரம்னா என்ன தெரியுமா? சொந்தப்பையனா இருந்தாலும் சரி , பதவிக்கு ஆபத்து விளைவிப்பான்னு தெரிஞ்சா கட்சியை விட்டு கடாசுவதே!



========================



5 சிவனும் சக்தியும் தனியா பிரிஞ்சா மாஸ்டா



========================


6 நான் சின்ன வயசில் இருந்தே ஜெ வின் நடிப்புக்கு ரசிகன் - அழகிரி அதிரடி # சும்மா


========================


7  கலைஞரோட ராஜ தந்திரத்தைப்புரிஞ்சிக்கிட்டவன் இந்த ஜில்லாவுலயே கிடையாது ,அவர் எது செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்


==========================



8 அழகிரி இனி அழுகைகிரி



=====================



9 அஞ்சா நெஞ்சன் ஆம் ஆத்மியில் சேருவாரா? புரட்சித்தலைவி பக்கம் போவாரா?



===========================



10 இளைய தளபதி க்கு நேரம் எப்படியோ? ஆனா நம்ம தளபதிக்கு நேரம் கை கூடி வந்திருக்கு #,அண்ணன் வெளியே தம்பி கோட்டைக்கு உள்ளே



======================



11 முதுகுல குத்துனது பெத்த அப்பாவா இருந்தா அவமானத்தை வெளில சொல்லக்கூடாது.



========================


12 தமிழ் நாட்டின் நன்மைக்காக மகனையே கட்சியை விட்டுத்துரத்திய மகானே! அப்டினு யாரும் இன்னும் பேனர் ரெடி பண்ணலையா?



======================



13   அழகிரி = காலிசோடா .ஸ்டாலின் = நேர் எதிர்




======================



14 மதுரையை விரட்டிய சுந்தர திராவிடர்



======================



15  மு க வீடு 2 பட்டா ரெட்டை இலைக்கு கொண்டாட்டம்



=====================


16 தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.ஆனால் அவர் வைத்தது போல் ஒரு சூன்யம் இல்லை # சூது கவ்வும்




========================



17 தமிழர்களே தமிழர்களே கேப்டனைத்தூக்கி எறிந்து யார் பேசினாலும் கட்டுமரமாய் இருக்கமாட்டேன்.கட்டவிழ்த்து விட்டு விடுவேன்



=======================



18 தங்க மீன் கள் மாதிரி நல்ல படத்தை பாருங்கன்னா ஒரு பய கேட்பதில்லை.பாக்காதீங்கன்னா ஆளாளுக்கு ஏன்? னு கேட்கறாங்க #,தமிழேண்டா



===========================



19  பெரிய நெல்லிக்காயின் புளிப்பு மாதிரி நம் பிரிவுகள்! உன் நினைவுகள் நெல்லி விள்ளல் அள்ளலுக்குப்பின் குடிக்கும் நீர் போல் தித்திப்பானவை



===========================


20 பஸ் ரயில் பயணங்களில் உன் தேர்வு ஜன்னல் ஓர இருக்கையாக இருக்கும்! என் தேர்வு உன் மடி ஓரமாக இருக்கும் ,இறுக்கும், கிறுகிறுக்கும்



==================================


மாலினி 22 பாளையங்கோட்டை - சினிமா விமர்சனம்

 

ஹீரோயின்  ஒரு நர்ஸ்.கேரளாவில்  இருந்து 2 தோழிகளுடன்  சென்னை வந்து  ஒரு பங்களாவில் ஒன் பை த்ரீ ஆக தங்கி வேலைக்குப்போறாங்க .கால் காசு சம்பளம்னாலும் அது கவர்மெண்ட் காசா இருக்கனும்னு சிலர் நினைப்பது போல் இந்தியாவில் வேலை பார்ப்பதை விட வெளிநாட்டில் வேலை பார்ப்பதை கவுரமாக நினைப்பவர்களும் நாட்ல நிறைய பேர் இருக்காங்க .அதே போல்  ஹீரோயினும் ஃபாரீன் போய் ஒர்க் பண்ண ஆசைப்பட்டு  விசா வாங்க ஏற்பாடு பண்றாங்க .


 விசா  ரெடி பண்ண நடக்கும் முயற்சில அந்த ஆஃபீஸ் ல ஒரு ஆஃபீசர்  கூட ஹீரோயினுக்கு பழக்கம். அது நாளடைவில் காதலா மாறிடுது.ஹீரோயின் வீட்டைக்காலி பண்ணிட்டு காதலன்  வீட்டில்  லிவ்விங்க்  டுகெதரா வாழ ஒரு கண்டிஷனோட  கிளம்பறார். ஒண்ணா ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் நாம் இருவரும் ஒண்ணாகக்கூடாது என்பது தான் அது . எதுக்கு சுத்தி வளைச்சுக்கிட்டு? கில்மா பண்ணக்கூடாது என்பதுதான்  அந்த கண்டிஷன். 

கோஷ்டிப்பூசல் இல்லாம காங்கிரஸ் இருந்துடும் , முதுகுத்தண்டு பெண்ட் ஆகாத அமைச்சர்கள் அதிமுகவில் அமைஞ்சிடுவாங்க , அண்ணன் - தம்பிக்குள்ள பிரச்சனையே வராம கழகம் கண்ணியம் ஆகும் , கேப்டன் சரக்கு அடிக்க மாட்டார் -இத்தனை அதிசயம் நடந்தாலும்   ஒரு இயற்கை விதி மட்டும் மாறாது . பஞ்சும் நெருப்பும் பக்கத்து பக்கத்துல  இருந்தா பத்திக்கும். பத்திக்குது . மேட்டர்  முடிஞ்சிடுது . 





 மேட்டர்  முடிஞ்ச பின் தான் நமக்கெல்லாம் இன்னொரு மேட்டர்  தெரிய வருது. ஹீரோவா இதுவரை இருந்தவர் தான் வில்லன். இவருக்கு தொழிலே புது பைக்கை முதல்ல இவர் ஓட்டிப்பார்த்துட்டு அடுத்து தன் முதலாளிக்கு கொடுத்து  ஓட்டிப்பார்க்கச்சொல்வார். அதுக்கு தனி காசும் வாங்கிக்குவார். இந்தக்கேவலமான அக்ரீமெண்ட்டில் நம்ம நாயகி 420 வது ஆள் .


ஹீரோ வீட்டில்  இல்லாத நேரம் பார்த்து ஓனர் ஹீரோயினை கதற கதற என்ன பண்ணனுமோ அதைப்பண்ணிடறார். அது மட்டும்  இல்லாம  நாயகன் நாயகியை ஒரு போதை மருந்துக்கேசில்  போலீசில்  மாட்டி விட்டுடறார். ஜெயிலுக்குப்போன ஹீரோயின் பின்  ரிலிஸ் ஆகி வில்லன்கள் 2 பேரையும் எப்படிப்பழி வாங்கறார் என்பதே கதை .



22 ஃபீமேல் கோட்டயம் என்ற பெயரில் கேரளாவில்  ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்ட படம்  தான் தமிழில் முறையா உரிமை வாங்கி  ரீமேக் ஆகி இருக்கு , திரைக்கதை , இயக்கம் நடிகை ஸ்ரீப்ரியா. 


நித்யா மேனன்  தான் ஹீரோயின் . பூ ஒன்று  புயலானது நாயகி விஜய சாந்தி   மாதிரி கேரக்டர். பிரமாதமாப்பண்ணி  இருக்கார் . காதலியாக , அப்பாவி நர்சாக அழகு மயிலாக வரும் காட்சிகளில் அள்ளிக்கறார். ஆனா க்ளைமாக்சில்   வில்லி அவதாரம் எடுக்கும்போது அவர் பாடி லேங்குவேஜில்  செயற்கையோ  செயற்கை . சமீபத்துல இவ்வளவு அடர்த்தியான புருவத்தை பார்க்கலை .நித்யா மேனன் அழகுப்பதுமை


கோவை சரளா காமெடி பண்றேன்கற பேர்ல  படு மொக்கை போடறார். சரியான அலையல் கேஸாக நடித்திருப்பது முகம் சுளிப்பு . ஆம்பளைங்களுக்கே அவர் நடிப்பு இப்படி இருந்தா பொண்ணுங்களுக்கு எப்படி இருக்குமோ? 


நாயகனாக  கிரிஷ் ஜே சதார்  ரொம்ப இயல்பான  முகம் . பசுத்தோல் போர்த்திய  புலியாக அவர் வரும் காட்சிகள்  குட் ஒர்க் . காதல் காட்சிகளில் நாயகி ஓவர் டேக்கி விடுகிறார். ( விமர்சனத்துக்கு சம்பந்தம் இல்லாத ஒரு தகவல் இந்தப்படத்தின்  ஒரிஜினல் மலையாளப்படத்தின்  ஷூட்டிங்க் டைமில்  தான் அதன் இயக்குநர் ஆஷிக் குக்கும் , நாயகி  ரீமா கல்லிங்கல்க்கு ம் காதல் ஆகி கல்யாணம் வரை போச்சு )


வில்லனாக வரும்  முதலாளி கேரக்டரில் நரேஷ் என்பவர் நடிச்சிருக்கார் . படத்தில்  ரேப் சீன்கள்லயும் நடிச்சுட்டு அதுக்கு சம்பளமும் வேற. அந்த குதூகலம்  முகத்தில் நல்லாத்தெரியுது. மேன் மேலும் அவர் பல ரேப் சீன்கள் நடிக்க வாழ்த்து /


திரைக்கதை யில்   ஒரு லவ் சஸ்பென்ஸ் த்ரில்லருக்கே  உண்டான திருப்பங்களுடன்  இருப்பது பிளஸ் . ஆனா 20 வருடங்களாக சினிமா உலகம் மறந்து  போன  ரேப்  சீன்களை  தத்ரூபமாக காட்டுகிறேன் பேர்வழி என இறங்கி அடித்திருப்பது மைனஸ் , இதுல   இயக்குநர் ஒரு பெண்  வேற . என்ன தான் சமூக விழிப்புணர்வு என சால்ஜாப் சொன்னாலும்  சொன்ன விதத்தில்  இது பெண்களைக்கவராத படமே . 




நச்  வசனங்கள்



1.   கொச்சி மாதிரி  ஒரு ரிச்சி சிட்டியை இந்தியாவிலேயே பார்க்க முடியாது 



2   சென்னைக்கு இணையான ஊர் தமிழ் நாட்லயே கோவை மட்டும் தான்  ( இந்த மாதிரி ஊர்ப்பெருமை பேசும் டயலாக்ஸ் எல்லாம் அந்தந்த ஊர் ஆடியன்ஸ் கை தட்ட யூஸ் ஆகும் ) 


3  ஒரு பொண்ணுக்கு  2 அண்ணன்கள்  இருக்கலாம்,  2  தம்பிகள்  இருக்கலாம். 2 பாய் ஃபிரண்ட்ஸ் மட்டும்  இருக்கக்கூடாதா? 



4  சாரி, உன்னை கல்யாணம் பண்ணிக்கவும்  முடியாது, நீ என்னை வெச்சுக்கவும்  முடியாது , ஆல்ரெடி நான் கமிட்டட் 


5 குடிச்சுப்பார்க்கனும், குடிக்கறவன் எல்லாம் எவ்ளவ் கஷ்டப்பட்டு அதைக்குடிக்கறான்  அப்டிங்கறதை பொண்ணுங்க தெரிஞ்சுக்கனும்னா அவங்களும் அதை குடிச்சுப்பார்க்கனும் ( நாசமாப்போச்சு )



6  டியர் , ஐ லவ் யூ.. நீ யும்  ஐ லவ் யூ சொல்லு பார்ப்போம் 


 உனக்கு தோணுச்சு , நீ சொல்லிட்டே. எனக்குட்தோணும் போது நான் சொல்றேன் . ஐ.....


 ஐ ? \\


 ஐ டெல் யூ லேட்டர் 



7  தண்ணி அடிக்கற டைம்ல  காபி குடிக்கறியா?ன்னு கேட்டா எப்படி ? 


8  நெகடிவ் பப்ளிசிட்டி  யாருக்கும் நல்லதில்லை 


9  மிஸ் , நீங்க  கோவாவா? 

ம் 

 ஸ்கின் பார்த்தாலே தெரியுது . 

 ஓ , நீங்க ஸ்கின் ஸ்பெசலிஸ்ட்டா?


10   உன்  நோய்க்கு மரணம் தான் மருந்து 


11   எதிரியோட   உயிர்  போகும் தருணத்துல நாம செஞ்சதுதான் சரி , நாம தான் கடவுள்னு ஒரு எண்னம் நம்ம மனசுல வரும் 



12  இண்டியன்  கோப்ரா - தமிழ் ல இதை ஏன் நல்ல பாம்புன்னு சொல்றாங்க  தெரியுமா?  கொத்துனா உடனே அதிக சித்ரவதை இல்லாம டக்னு உயிர் போயிடும் 


இயக்குநர் பாராட்டு பெறும்  இடங்கள்


 1.  ஹீரோ  - ஹீரோயின்  ரொமான்ஸ் காட்சிகள்   மார்கழிப்பனிக்கு ஓ அந்த மாசம் தான் காலாவதி ஆகிடுச்சா சரி  பொதுவா குளிருக்கு ஏற்ற சூடான காட்சிகள் .


2 மகாநதிதான்  தமிழ் சினிமாவில் அதிக நேரம்  ஜெயில் வாழ்க்கையைக்காட்டிய படமாக இதுவரை  இருந்தது, இது அதுக்கு அடுத்த இடம்  பிடிக்கும்  


3 பெண் வேடம் இட்ட ஆண்   ஜெயிலில் நாயகியை துரத்தும் காட்சிகள் , அவன் சுயரூபம் வெளிப்படும் பர பர சேசிங்க் காட்சிகள் 


4 க்ளைமேக்சில்   ஹீரோயின்  ஹீரோவுக்கு அளிக்கும்  தண்டனை கர்ண கொடூரமா  இருந்தாலும் தியேட்டரில் கைதட்டலை அள்ளிக்கிச்சு 


5  பின்னணி  இசை , எடிட்டிங்க், ஒளிப்பதிவு  போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்  கன கச்சிதம் 

 

இயக்குநரிடம் சில கேள்விகள் 


1. ஓனரா வரும்  வில்லன்  ஹீரோயினை   ரேப் பண்ணும் காட்சி கொடூரம். அவர் ஒண்ணும் சைக்கோ இல்லை . ஜஸ்ட் மயக்க மருந்தோ , போதை மருந்தோ  கொடுத்து  அல்லது  சரக்கு  குடுத்து  ஹீரோயினை பலவீனப்படுத்தி   கெடுத்திருக்கலாம். அவ்வளவு வன்முறையான ரேப்  எதுக்கு ? வில்லன்  மேல் அதீத வெறுப்பு வர வைக்கவா? 



2  மேலே சொன்ன  பாயிண்ட்டை மெய்ப்பிக்கும் வகையில் வில்லன் ஒரு சீன்ல வீல்  சேரில் இருக்கும் ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணை அடைய  நினைத்து தன் அடியாளிடம் சொல்லும் வசனம் ஒரு சோறு பதம் - பொண்ணுங்க ஓட விட்டு அலைய விட்டு நாம அடைவது  போர், அவங்க எதிர்க்காம அமைதியா இருக்கனும் “ 



3  ஹீரோ இண்ட்டர்வெல்  டைம்ல  ஹீரோயினை ஆறுதலா கட்டி அணைத்து அப்போதே முதுகுப்பக்கமாக செல்லில் ஓனருக்கு  மெசேஜ் அனுப்பறார். அவ  ரெடி ஆகிட்டா அப்டினு . எவ்ளவ் அபாயம் அது .? ஏன் அவன்  தனியா பாத்ரூம் போய் அந்த மெசேஜை அனுப்பக்கூடாது ? 


4  ஜெயிலுக்குள் பெண் வேடத்தில்  நுழையும் ஆண்  ஹீரோயினை தாக்கி மயக்கம் அடைய வைப்பதோடு காட்சி  முடியுது . கொலை  முயற்சியா? அல்லது  வில்லன்  சொன்ன் படி ரேப் செஞ்சானா? என்ற தெளிவு காட்சியில்  இல்லை 


5  ஜெயில்  ரவுடியாக வரும் அந்த நிறைமாத கர்ப்பிணிப்பெண் மிக பரிதாபகரமாக உள்ளார். ரவுடி  தோற்றமே வர்லை 



6 க்ளைமாக்சில்  அந்த  ரவுடிப்பெண்  ஆண்  வேடத்தில்  இருக்கும் பெண்  ரூமில் அவருக்குத்தெரியாமல் ஒளிந்திருந்து பார்ப்பவர் ஏன் கதவை தடார்  என சாத்தி சத்தம் எழுப்பறார்? பூனை மாதிரி வந்திருக்கலாமே? 



7  ஜெயிலில் பெண் வேடத்தில் நுழையும் ஆண் அவ்வளவு அசால்ட்டாக   ரூமை உள் பக்கம்  தாழ்ப்போடாமல்  ஷேவிங் செய்வாரா? ( தாடியைத்தான் ) 



8  ஹீரோயினை  முதல்  முறை  ரேப் செய்யும்  வில்லன் பின்  2 வது  முறை வரும்போது  வீட்டுக்கதவை  ஏன் திறந்தே வெச்சிருக்கார் ?  வர வேண்டும் மகராஜா , வர்வேற்கும் மது  ரோஜா பாட்டு போடாதது ஒண்னுதான்  குறை 



9   நர்சின் பேஷண்ட்டாக வரும் ஒரு பணக்காரர்  எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி அவருக்கு தன் சொத்தில் பாதியை எழுதி வைப்பது நம்பும்படி இல்லை ( மலையாள ஒரிஜினலில்  அந்த பணக்காரருடன்  ஹீரோயின்  கில்மா வெச்சுக்கிட்டு பிரதி உபகாரமா உதவி பெறுகிறார்னு காட்சி வருது போல ., தமிழ்ப்பண்பாட்டுக்காக மாத்திட்டாங்க ) 



10   ஹீரோயின்   தன்  காதலனுடன்   ஹோட்டலில் இருக்கும்போது  ஹீரோ அவரைத்தூண்டி  விட்டு சரக்கு அடிக்கும் காட்சி  ரொம்ப செயற்கை. முதல்  முறை சரக்கு அடிக்கும் பெண் அப்படித்தான் ஊத்தி ஊத்தி அடிக்குமா? ஒரு ரூமில்  யாரும் இல்லாத பொது வேணும்னா அப்டி அடிக்கலாம்.,  ஹோட்டலில் எல்லாரும் பார்க்கும்போது  ஒரு பெண் அப்படி சரக்கு அடிக்குமா? 


11 போதை மருந்து வழக்கில்  ஹீரோயினை போலீஸ்  பிடிக்கும்போது   அவர் செல் ஃபோனில்  யார் யார் உரையாடினாங்க என டெஸ்ட் செஞ்சா வில்லன்கள் மாட்டி இருப்பாங்களே?  ஏன் அப்படி செய்யலை ? 


12  ஹீரோயின்    ஹீரோவுக்கு க்ளைமாக்சில் அளிக்கும்  தண்டனை  அதை கட் பண்ணுவதோடு  விட்டிருக்கக்கூடாது . கை கால் ரெண்டையும் கட் பண்ணி  இருக்கனும் . ஏன்னா  அப்போதான் மத்தவங்க முன்னால அவன் அவமானப்படுவான் . அதை மட்டும் கட் பண்ணிட்டா யாருக்கு அது தெரியப்போகுது ?


13  ஹீரோயினின்  தோழியாக வருபவர் வசதியான வாழ்க்கைக்காக ஒரு தொழில் அதிபருடன் கீப்பாக இருக்கார் என்பது  கதைக்கு எந்த விதத்தில் பயன் ? பெண்களை மிகவும் மட்டம்  தட்டுவது போல் அனைத்து பெண் கதாபாத்திரங்களும் வடிவமைக்கட்டிருப்பது படத்தின்  பெரிய மைனஸ்


மனோரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மாலினி 22 படத்தை 30 வயதுக்கு கீழ் உள்ள ஆண்கள் ,இதய பலஹீனம் உள்ளவர்கள் தவிர்க்கவும்




சி பி கமெண்ட் - மாலினி 22 பாளையங்கோட்டை - ரேப் ரிவஞ்ச் த்ரில்லர் - கேரளா வில் நடந்த உண்மைசம்பவம் - விகடன் =41 ரேட்டிங் = 3 / 5 பெண்கள் தவிர்க்கவும்



டிஸ்கி - ஒரிஜினல் மலையாளம்  22  ஃபீமேல் கோட்டயம் ( 2012 ) முழுப்படமும் பார்க்க  லிங்க் -http://www.youtube.com/watch?v=bNofelGKcvc

Saturday, January 25, 2014

தாவணி தினம்

1.காங்கிரசில் எல்லோரும் குரல் எழுப்பினால் அது தமிழகம் முழுக்க எதிரொலிக்கும்! - ஞானதேசிகன் # மேடம்.தமிழகம் இருண்ட குகைனு குத்திக்காட்றார்.



================


2 மக்களின் நலனுக்காகவே அரசியலுக்கு வந்தேன்! - நடிகை விஜயசாந்தி # சொத்துல பாதியை ஏழைகளுக்கு எழுதி வைங்க பார்ப்போம்


=============



3 கம்யூனிஸ்ட் ADMKவுடன் சேர்ந்தற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் - மு க # நம்ம முகாம் ல சேர்ந்தா வாழ்த்து.எதிர் முகாம் ல சேர்ந்தா தூற்று!



=================



4 100 கோடி கொடுத்தாலும் இனி பெரிய ஹீரோக்கள் பக்கம் போகமாட்டேன் - விக்ரமன் #,உங்க மெகா ஹிட்சே விஜய்.( பூவே உனக்காக)கேப்டன் ( வானத்தைப்போல)


==============



5 யுவன் சங்கர் ராஜா இசையில் நான் பாடல் எழுதுவது காலத்தின் விருப்பம் - வைரமுத்து # ஓஹோ.அப்போ உங்களுக்கு விருப்பம் இல்ல?வேண்டா வெறுப்பா ?



=================


6 தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் ஜில்லா #,ஹீரோ மகேஷ் பாபுவா? தானிக்கு தீனி டிட் பார் டாட்


===============


7 87 மணி நேரம் டி.வி., பார்த்து மூவர் கின்னஸ் சாதனை # நம்ம ஊர் லேடீசை விட்டா விடிய விடிய முடிய முடிய முழு மாசமும் பாப்பாங்களே?



================



8 தேர்தல் கூட்டணி வியூகம் அமைக்க தமிழக காங்கிரஸ் தலைவராகிறார் ஜி.கே.வாசன் # எக்ஸ்பயரி டேட் முடிஞ்ச டேப்லெட்டை பிரிட்ஜில் வெச்சு என்ன பயன்?்


=================


9 2005 க்கு முன்பாக அச்சிடப்பட்ட ரூ் நோட்டுக்கள் செல்லாது: ரிசர்வ் வங்கி # இனிகொள்ளைஅடிப்பவங்க புது நோட்டானு செக் பண்ணி அடிச்சுக்குங்கப்பா



===============


10 "பைத்தியக்கார முதல்வர்' கேஜரிவால்: சுஷில்குமார் ஷிண்டே கடும் தாக்கு: # ஊர்ல எல்லாரும் ஊழல்வாதிகளா இருக்கும்போது ஊழலை எதிர்த்தா அப்டிதான்



==============



11 ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி மீது மருமகள் வரதட்சணை புகார்: # நீதிக்கு போதாத காலம்னு சொல்லும் காலம் போய் நீதிபதிகளுக்கு கண்டம்னு ஆகிடுச்


==============



12 ஆட்சி செய்ய முடியாவிட்டால், பதவி விலகுங்கள்: கெஜ்ரிவாலுக்கு சிதம்பரம் அறிவுரை # மேரேஜ் ஆன அடுத்த வாரமே டைவர்ஸ் பண்ணச்சொன்னா எப்டீங்க்ணா?


===============



13 குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் இன்றைய பெண்கள்...-ஆய்வில் தகவல் # அது தேவலை.புருசனையே திண்ணைக்கு அனுப்பிடறாங்க்ளே?



===============



14 சோனியாகாந்தியுடன் கனிமொழி சந்திப்பு: # மணிமேகலை யை சந்திக்க இவராப்போனாரா? தலைவர் சாணக்கியத்தனமா ஏதாவது ஐடியா பண்ணாரா?





================



15  DMKவிடம் விழுந்து விடாதீர்கள்: விஜயகாந்துக்கு தமிழருவி மணியன் ் # டோன்ட் ஒர்ரி.கேப்டன் புல் மப்ல இருந்தாலும் கீழே விழுந்து பழக்கம் இல்ல.



===============



16  பாஜகவுடன் தொகுதி உடன்பாட்டுக்கு 5 பேர் குழு அமைத்த வைகோ #,அடேங்கப்பா.உயர் மட்டக்குழுவே.5,பேர்னா தொண்டர்கள் எத்தனை பேர் இருப்பாங்க்?


==============


17  கோ–ஆப்டெக்சின் அடுத்த அதிரடி தாவணி தினம்: ..# ஏய் தாவணி போட்ட சிட்டு நீ லாலா கடை லட்டு ரிங்க் டோனா வெச்சுக்கலாம்



=================



18 ஆட்சிக்கு வந்தால் ராகுல் காந்தியே பிரதமர்-சிதம்பரம் # பக்கத்து இலைக்குப்பாயாசம் கேட்கும் பார்த்திபன் மாதிரியே பேசறாரே?


==============


19 ஆட்சியாளருக்கு 60 ஆண்டுகள் கொடுத்த நீங்கள், சேவகனுக்கு 60 மாதங்கள் கொடுங்கள்: மோடி: # புரட்சியாளர் கேஜ்ரிவால் வேற குறுக்கே வந்துட்டாரே?



==================



20  காங்கிரஸ் எம்.பிக்கள் என்னை பிரதமராக தேர்வு செய்தால் ஏற்றுக் கொள்வேன்: ராகுல் காந்தி # 30 எம் பி ங்க பத்தாதே மன்னா?


===================

வல்லினம் - ‘ஈரம்’ மாதிரியே வித்தியாசமான கதைக்களமா? - இயக்குநர் அறிவழகன்


நாம் பார்க்கும் படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே நம் மனதை விட்டு நீங்காத இடத்தை பெறும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றான ‘ஈரம்’ படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் அறிவழகன். அந்தப் படத்திற்கு பிறகு ‘வல்லினம்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் களம் இறங்குகிறார் அறிவழகன். படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிக்கொண்டிருக்கையில், ‘தி இந்து’வுக்காக அவரைச் சந்தித்தோம்.




‘ஈரம்’ மாதிரியே ‘வல்லினம்’ படமும் வித்தியாசமான கதைக்களமா?



'ஈரம்' பேய்ப்படம் என்றால் ‘வல்லினம்’ முழுக்க முழுக்க ஒரு பேஸ்கட் பால் விளையாட்டு சம்பந்தமான கதை. விளையாட்டு சம்பந்தப்பட்ட கதையில் காதல், நட்பு, வில்லன்கள் இப்படி எல்லாமே கலந்து திரைக்கதை பண்ணியிருக்கேன். 6 மாதங்களில் படத்தோட திரைக்கதை எல்லாம் எழுதி, மொத்த ஷுட்டிங்கும் 90 நாள்ல முடிச்சுட்டேன். ‘ஈரம்’ படம் எப்படி டெக்னிக்கல் விஷயங்களால் பெரிதும் பேசப்பட்டதோ, அந்த வகையில் ஒரு படி மேலே போய் இந்த ‘வல்லினம்’ படத்தை பண்ணியிருக்கேன்.



பேஸ்கட் பாலை மையமா வைச்சு கதை எழுத என்ன காரணம்?



நான் ஒரு பேஸ்கட் பால் ப்ளேயரோ, விளையாட்டு ரசிகனோ கிடையாது. இருந்தாலும் எனக்கு ஒரு ஆதங்கம் இருந்தது. எனக்கு மட்டுமல்ல சமூகத்துல இருக்குற மக்கள்கிட்ட ஒரு ஆதங்கம் இருந்துட்டு இருக்கு. இங்க கிரிக்கெட்டுக்கு இருக்கிற மரியாதை மத்த விளையாட்டுக்கு இல்லை. அந்த ஆதங்கத்தை இந்தப் படத்தில் சொல்லியிருக்கேன்


இந்த மாதிரி கதைல ஹீரோவுக்கு அந்த விளையாட்டு தெரியலைன்னா பாக்கும்போது சிரிப்பாயிடும்.. இல்லையா..?



ஒரு நடிகரை பிளேயரா நடிக்க வைக்குறது கஷ்டமான விஷயம்தான். எல்லாருமே இந்த கதைக்கு ஒரு பிளேயரை தான் நடிகராக ஆக்குவாங்க. நான் நகுலை முடிவு பண்ணினேன். ஏன்னா அவரோட எனர்ஜி. எப்போதுமே துறுதுறுன்னு இருப்பார் அதுதான் பேஸ்கட் பால் விளையாட்டுக்கு ரொம்ப முக்கியம். கிட்டதட்ட ஒரு மாசத்துல அந்த விளையாட்டுல இருக்குற முக்கியமான விஷயங்களை உடனே கத்துக்கிட்டார். படம் பாத்தவங்க எல்லாருமே அவர் ஒரு பாஸ்கட் பால் வீரராகவே மாறிட்டதா சொல்லியிருக்காங்க.



‘ஈரம்’மாதிரியே வல்லினம் படமும் மேக்கிங்கில் பேசப்படுமா?



‘ஈரம்’ படம் பாத்தீங்கன்னா ஒரு ப்ளூ டோன் (Tone) இருக்கும். அதே மாதிரி ‘வல்லினம்’ படத்துக்கு சிவப்பு டோன் அப்படினு ஃபிக்ஸ் பண்ணினேன். தமிழ்நாட்டுல சிவப்பு நிற கட்டிடம் இருக்குற கல்லூரியா தேடினேன். கோயம்புத்தூர் விவசாய கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி மட்டும்தான் சிவப்பு கலர்ல இருந்துச்சு. அங்கே ஷுட்டிங் அப்படின்னா வகுப்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாதுனு சொல்லிட்டாங்க. அதனால காலேஜ் லீவு நேரத்துல, சனி,ஞாயிறு இப்படி ப்ளான் பண்ணி ஷுட்டிங் நடத்தினோம். அதே மாதிரி காலேஜ் க்ரவுண்டுக்கு பக்கத்துல பேஸ்கட் பால் க்ரவுண்டு மாதிரி காட்சிகள் இருக்கு. அதுக்கு தமிழ்நாடு, ஐதராபாத்துல எல்லா காலேஜ்ஜையும் பார்த்தேன். கடைசில சென்னை பச்சையப்பா காலேஜ்தான் செட்டாச்சு.



இந்த மாதிரி விளையாட்டை மையப்படுத்தி எழுதின கதையில் கதாநாயகிக்கு நடிக்க ஸ்கோப் குறைவா இருக்குமே?


விளையாட்டை மையப்படுத்தி பண்ணியிருந்தாலும் நாயகி மிருதுளாவுக்கு முக்கியமான கேரக்டர் கொடுத்திருக்கேன். நல்லா பண்ணியிருக்காங்க.



முதல் இரண்டு படங்களின் கதைக்களமும் பேய், விளையாட்டு... உங்க அடுத்த படத்தோட கதைக்களம்?



‘ஈரம்’ படத்தை ஏத்துக்கிட்டாங்க. ‘வல்லினம்’ வெளியான உடனேயும் எல்லாரும் பாத்து நல்லாயிருக்குனு சொல்லுவாங்கனு நம்பறேன். அதுக்கு அப்புறம் அப்படினு கேட்டா, இயக்குநர் அறிவழகனை வச்சு படம் பண்ணினா எல்லா விதத்துலயும் நல்லாப் போகும்னு என்னை நம்புற தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களை வைச்சுதான் பண்ணுவேன். அதே நேரத்துல, நான் எழுதுற கதைக்கு இந்த நடிகர் சரியா இருப்பார்னு தோணினாதான் அப்ரோச் பண்ணுவேன்.



இயக்குநர் அறிவழகனை நம்பி படத்துக்கு வர்றவங்க எந்த விதத்துலயும் ஏமாறக்கூடாது அப்படிங்கிற விஷயத்துல நான் தெளிவாக இருக்கேன். தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளை ரசிகர்கள் ஏத்துக்குவாங்களா இல்லயான்னு எனக்கு தெரியல. எனக்கு பிடிச்ச கதையை எடுத்துருக்கேன் அப்படினு சொல்லவே மாட்டேன். நான் கதை எழுதுற அப்பவே எனக்கும் பிடித்து, ரசிகர்களுக்கும் பிடிக்கும் அப்படினு உறுதியா நம்பினாதான் திரைக்கதை எழுதவே ஆரம்பிப்பேன். இப்போ காமெடி டிரெண்ட், லவ் டிரெண்ட் அப்படினு எந்த ஒரு டிரெண்ட் பின்னாடியும் ஓடுற ஆள் நான் இல்லை!


thanx - the hindu 

Friday, January 24, 2014

கோலி சோடா - சினிமா விமர்சனம்

விக்ரமன் திரைக்கதையில் பாண்டிய நாடு சுசீந்தரன் இயக்கத்தில் 4 விஷால் நடிச்சா படம் எப்படி  இருக்கும், அப்படி இருக்கு, ஷப்பா  முடியலடா சாமி. பசங்க படத்தில்  யதார்த்தமான  உறவுகளை மென்மையாக ச்சொல்லி  கோல் அடித்த  பாண்டிராஜ்  இயக்குநராக  ஜெயித்து தயாரிப்பாளராக இதில்  தவறான  ஒரு கதையைத்தேர்ந்து எடுத்து  சொதப்பி  இருக்கிறார் .


கோயம்பேடு மார்க்கெட்  தான் கதைக்களம், அங்கே  பிஞ்சிலே பழுத்த பசங்க 4 பேர்  வழக்கம் போல்  பொண்ணுங்களை  ரூட் விடறாங்க . மனம்  கவர்ந்த  பொண்ணு  உங்களுக்குன்னு  தனி அடையாளமா என்ன  இருக்கு ? என கேட்க உடனே   4 பேரும்  சேர்ந்து  விக்ரமன் பாணில   ஆச்சி மெஸ்  ஆரம்பிச்சு  ஒரே பாட்டிலே நல்ல வேளை  கோடீஸ் வரன் எல்லாம் ஆகலை..  கொஞ்சம் வசதியா ஆகிடறாங்க . 


 அந்த  மெஸ்க்கு   ஒரு ரவுடி  கும்பல் வருது . அவங்களுக்கும் இந்த பொடிப்பசங்களுக்கும்  ஒரு மோதல் . அதுல  எப்படி பசங்க  ஜெயிக்கறாங்க என்பதை  மிக மிக செயற்கையாக , நம்ப முடியாத அளவில்   வலிந்து  வன்முறையைப்புகுத்தி  செயற்கையான அனுதாபத்தை வர வைத்து அதகளம் பண்ணுவதாக   நினைத்து  சொதப்பி  இருக்கிறார்கள் 


 அழகாய்  இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற கவித்துவமான  டைட்டிலுடன்  நல்ல கதையைத்தந்த  இயக்குநர்  விஜய் மில்டன் பல விஜய் , விஷால் படங்கள்  எல்லாம் பார்த்துக்கெட்டுப்போய் இப்படி ஒரு  லோ  கிளாஸ் மசாலாப்படம்  கொடுத்திருக்கிறார். 


படத்தில்  பாராட்டுப்பெறும்  விஷயம் இதை 2  மணி  நேரத்தில்    சுருக்கமா முடிச்சதே .அப்பாடா, விட்டாப்போதும்னு ஓடி வந்துட்டேன் , இனிதான் போய் பைக் எடுக்கனும் 


பசங்க படத்தில் வந்த அதே 4 பசங்க   இதில்  கொஞ்சம் வளர்ந்து  இருக்காங்க .அவங்க அளவில்  சொன்ன வேலையைச்செஞ்சு  இருக்காங்க 


20  ரவுடிகளுடன்  4 பசங்க  மோதுவது  , ஜெயிப்பது , க்ளைமாக்சில்  பயங்கர வில்லனுடன் பொடியன்கள்  மோதி  ஜெயிப்பது , பஞ்ச் டயலாக் பேசுவது என  விஜயையே  கிலி அடிக்க வைக்கும்  கில்லிக்காட்சிகள் உண்டு .


a



நச் வசனங்கள் 


1.  சூப்பர் ஃபிகருங்க எல்லாம் அட்டு ஃபிகருங்களைக்கூடவே வெச்சுக்குதே ஏன்? அப்படியாவது பசங்க நம்மைப்பார்க்கட்டும்னுதான் ( இதைச்சொல்வது  14 வயசுப்பையன் -அய்யோ அம்மா)



2 அப்பவே அம்மா சொல்லுச்சு பொம்பளைப்புள்ளைங்களை எல்லாம் நம்பாதேன்னு

  டேய் , உனக்குத்தான் அம்மாவே  இல்லையே ?

 எல்லா அம்மாக்களும் அப்படித்தானேடா சொல்வாங்க?



3  ஐஸ் க்ரீம் எப்போடா ஆர்டர்  குடுத்தே?


 நீ  கோபமா  இருக்கும்போதே கொடுத்துட்டேன்



4  என்ன  இருந்தாலும்  செக்யூரிட்டிக்கு இந்த  சின்சியாரிட்டி  இருக்கக்கூடாது  ( இதைச்சொல்வது  போலீஸ் ஆஃபீசரைப்பார்த்து )



 5 அடி வாங்குனா அநாதைப்புள்ளை கூட அம்மான்னு தான் கூப்பிடும் ( கொலம்பஸ் கண்டு பிடிச்சுட்டாரு )


6  பல் இல்லாதவனுக்கு பக்கோடாவும் , பஞ்சு மிட்டாயும்  1 தான்





இயக்குநரிடம்  சில கேள்விகள்



1  விஜய் , விஷால் இடம் கால்ஷீட் கேட்டு கிடைக்கலை என்பதற்காக இப்படி எல்லாம் உணர்ச்சி வசப்படுவது  நியாயமா?


2   டீன்  ஏஜ் பசங்க வாழ்க்கையை சொல்றேன்னு சொல்லி  13  டூ 14 வயசுப்பசங்களை இப்படி  கெடுத்து வெச்சதுக்கு என்ன பரிகாரம்  செய்யப்போறீங்க ?


3  க்ளைமாக்சில்   வில்லனை 4 பசங்களும்  நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தும் அட்டகாசமான கேவலமான் ஐடியா  யார் கொடுத்தது ? அநேகமா சம்பளம் வாங்காத ஒரு அசிஸ்டென்ட் டைரக்டராத்தான் இருக்கும்





 பாராட்டு பெறும் இடங்கள்


1  இமான் அண்ணாச்சியின்   காமெடி 10  நிமிசம் இருக்கு , மொத்தப்படத்துக்கும் அது 1 தான் ஆறுதல்


2  பவர் ஸ்டார்  ஒரு பாட்டுக்கு ஆடறார். அவர்  இனி சில்க் சுமிதா டிஸ்கோ சாந்தி ரேஞ்சுக்கு ஒரு பாட்டு ஆட்டக்காரர் ஆகிடுவார் போல

3  ஹீரோயினாக வரும்  கனகாம்பரக்கலர் உதட்டுக்காரி 16 வயசுப்பஞ்சு மிட்டாய்  நல்ல  முக வசீகரம் . பாந்தமான நடிப்பு ( யாரைக்குறை சொன்னாலும்  ஹீரோயினைக்குறை சொல்லாதோர் சங்கம் ) , ஹீரோயினின் அம்மா வாக வருபவர்   நடிப்பு



சி பி கமெண்ட் - கோலிசோடா - பிஞ்சில் பழுத்த பசங்க ளின்.செயற்கையான வன்முறை சினிமா =


 விகடன் மார்க் =39 ,


ரேட்டிங் = 2.25 / 5

ஈரோடு சீனிவாசாவில் படம் பார்த்தேன்



டிஸ்கி - இந்த கில்மா க்ரைம் த்ரில்லரை வழங்குவது

 -அட்ரா சக்க: நேர் எதிர் - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2014/01/blog-post_2813.html