Sunday, January 19, 2014

Nenokkadine - சினிமா விமர்சனம்

 
ஹீரோ  ஒரு  ராக் ஸ்டார். மேடைப்பாடகர்.ஓப்பனிங்க்லயே இவர்  போலீஸ் ல சரண்டர் ஆகி தான்  3 கொலை செஞ்சதா வாக்குமூலம் தர்றார். சின்ன வயசுல  தன் பெற்றோரை கொலை செஞ்சவங்க தான் அவங்க . ஆனா போலீஸ் சம்பவம் நடந்த இடத்துக்குப்போகும்போது அப்படி ஒரு சம்பவமே நடந்த மாதிரி  தெரியல. டெட் பாடி  எதுவும் கிடைக்கலை . போலீஸ்  ஹீரோவை  ரிலீஸ் பண்ணிடுது .


ஹீரோவுக்கு  ஏதோ சைகலாஜிக்கல் பிராப்ளம் அப்டிங்கற மாதிரி  சுத்தி  இருக்கறவங்க எல்லாம் சொல்ல்றாங்க . அதாவது  இல்லாத ஒண்ணை இருப்பது  போல் கற்பனை பண்ணிக்குவது. 


 அதை  நிரூபிப்பது போல் பல சம்பவங்கள் நடக்குது. இதுல  குறுக்கால  டி வி மீடியா ரிப்போர்ட்டர் வேற இவர் வாழ்க்கைல  குறுக்கிடறார். அவர் இந்த கேஸ்ல இம்ப்ரெஸ் ஆகி ஹீரோவுக்கு  உதவறார்.  இப்போ   ஹீரோவுக்கு   3 வேலை   1 தன்  பெற்றோரைக்கொன்னவங்களைப்பழி வாங்கனும் . 2 ஹீரோயினை லவ் பண்ணனும்   3 தனக்கு சைக்கலாஜிக்கல்  பிராப்ளம் எதுவும் இல்லை , நார்மல்  தான் அப்டினு வெளி உலகத்துக்கு  நிரூபிக்கனும். 



 இதை  எல்லாம்  ஹீரோ எப்படி  செய்யறார் என்பதே கதை 

  சும்மா  சொல்லக்கூடாது  இயக்குநர்  சுகுமார்க்கு தில் ஜாஸ்தி  தான். ஏன்னா வழக்கமான பழி வாங்கல் கதை , மசாலாக்கதையையே பார்த்த தெலுங்கு ஆடியன்ஸ்க்கு ஒரு மாறுபட்ட சைக்கலாஜிக்கல் த்ரில்லரை அதுவும் மகேஷ்  பாபுவை வெச்சுக்குடுக்க எண்ணம் வந்திருக்கே? வெல்டன் . ஆனா தமிழனுக்கு இது ஒண்ணும்  புதுசு  இல்லை. குடைக்குள் மழை , முப்பொழுதும்  உன் கற்பனைகள் , கஜினி  உட்பட பல படங்கள் இந்த மாதிரி பார்த்தாச்சு 


இயக்குநருக்கு அடுத்து நம்ம மனசில் இடம்  பிடிப்பது ஒளிப்பதிவாளர்  தான். ரத்தினவேலுவின்  கேமராவில்   கோவா , பாங்காங்க் , யு கே என ஃபாரீன்  லொக்கேஷன்களில் கலக்குது . ஹாலிவுட் படங்களுக்கு இணையான ஒளிப்பதிவு , லொக்கேஷன்  செலக்சன் 


 அடுத்து நம்ம தேவிப்ரசாத்தின் பின்னணி  இசை . ஒரு சைக்கோ த்ரில்லருக்கு  பி ஜி எம் எவ்வளவு  முக்கியம்னு சொல்ல வே தேவை  இல்லை. பாட்டு கூட  சுமாரா  இருந்தாப்போத்ம், ஆனா பி ஜி எம் கலக்கலா இருக்கனும் . பிரமாதமா பண்ணி  இருக்கார் , சபாஷ் 


 ஆக்சன் காட்சிகள் , ஸ்டண்ட் மாஸ்டர் உழைப்பு பிரமிக்க வைக்குது 


 இப்படி  டெக்னிக்கல் பிரம்மாண்ட்ங்கள்க்குப்பிறகுதான்   நடிகர்கள்  பங்களிப்பே  கண்ணுக்குத்தெரியுது 

ஹீரோவா   மகேஷ் பாபு . அண்ணனுக்கு  புது கேரக்டர் . நம்ம ஊர் செல்வராகவன், தனுஷ் படங்கள் பார்த்தவங்களுக்கு சைக்கோ கேரக்டர் எல்லாம் மனப்பாடம் . புதுசா உருவாகும் சைக்கோக்கள் கூட  முதல்ல செல்வ ராகவன் படம் பார்த்துடறதா  ஒரு புரளி கிள்ம்பிட்டு இருக்கு , மகேஷ் பூபதி தன் பாணீல  சைக்கோவுக்கு  செயல் வடிவம்  கொடுத்து  இருக்கார் . டான்ஸ் காட்சிகளில் வ்ழக்கம் போல் கலக்கல்  தான் . அதுவும்  குறிப்பா இந்த்   சைடில்  இருந்து அந்த சைடுக்கு   ஷூ முனைக்கால்களால் நகரும் காட்சி  வாவ்!! 


பிரபு தேவா , ராஜூ சுந்தரம் , விஜய் பாதிப்பு இல்லாமல் சொந்த மாக நடனம் ஆடும்  வெகு சில ஹீரோக்களில்  இவரும்  ஒருவர் . ஃபைட் காட்சிகளில்  ரிஸ்க்  எடுத்திருக்கார் . இந்தப்படம்  அவருக்கு பாக்ஸ் ஆஃபீசில் கல்லா கட்டிடும் , விமர்சன ரீதியாவும் பாராட்டு கிடைச்சுடும் 


 ஹீரோயின் க்ரிட்டி சனான் ( KRITI  SANON).இவர்   கூந்தலில்  பியா சாயல் , முக அமைப்பில்  விக்ரம் லிசி சாயல் , தைப்பூசத்தில் ( THIGH) ரம்பா சாயல் , தன்னம்பிக்கையில்  ரம்யா கிருஷ்ணன் சாயல் என கலந்து கட்டி அடிக்கிறார். இவர்  உதடு தான்  ரொம்ப சின்னது . ஆனா அதைப்பத்தி நமக்கென்ன கவலை ? படத்தை ரசிப்பதோட நம்ம கடமை  முடிஞ்சுடுதே ! 


சாயாஜி ஷிண்டே , நாசர் இவங்களும் படத்தில்  இருக்காங்க . ஆனாலும்  பெரிய தாக்கம் ஏதும்  இல்லை 


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1,.. படத்தின்  மையக்கருத்து ,திரைக்கதை  இழை  ஹாலிவுட் படம்னான  த பர்ன் ஐடெண்ட்டிட்டி  பாகம் 1 , 2 ,3  சாயல்  இருந்தாலும்  இயக்குநர் சாமார்த்தியமா  அதை  மூடி மறைச்சு திரைக்கதையில்  ஜால வித்தை  புரிந்தது 


2  வில்லனின் ஆள்  பேசிக்கொண்டிருக்கும்போதே கடலில்   போட் மூலம் தூக்கும் கலக்கலான்  லாங்க் ஷாட் 


3  ஓப்பனிங்க்  சீனில்  எதிர் வரும் காரை  நோக்கி பயணிக்கும்,  ஹீரோ பைக்கில்  இருந்து அப்டியே ஜம்ப் பண்ணி பைக்கை மட்டும் காரை  நோக்கி   தற்கொலைப்படை தனு மாதிரி அனுப்பும் காட்சி கலக்கல் 


4   ஓ மை  ஹார்ட் ;பாடல் காட்சி  முழுக்க  ஹீரோ பயன்படுத்திய  டான்ஸ் உத்திகள் அருமை 


5   எரிந்து போன் மோட்டார் படகில்   இருந்து  ஹீரோ பாராசூட்  மூலம்  வெளி வரும் காட்சி , அதற்கான பி ஜி எம்  செம 


6 இண்ட்டர்வெல் ஃபைட்க்குக்கான  பி ஜி எம்  அருமை 


7  தூம்  3 யை   நினைவு படுத்தினாலும் பைக் சேசிங்க் காட்சி செமயா படமாக்கப்பட்டிருக்கு 

8   மகேஷ் பாபுவின் பையன் இந்தப்படத்தில்  ஒரு ரோலில் வர்றான் , சோ க்யூட் 

இயக்குநரிடம்  சில கேள்விகள்

1,  இப்படத்தின் திரைக்கதை  பி , சி செண்ட்டர் ரசிகர்களுக்கு சுத்தமாப்புரியாது என்பதை எப்படி இயக்குநர் கவனிக்க மறந்தார் ?  ஒரு வேளை  புரிஞ்சாதானே கேள்வி  எல்லாம் கேட்பாங்கனு நினைச்சுட்டாரோ ? 



2 க்ளைமாக்ஸ்  சீன்ல்  ஹீரோவைச்சுத்தி  13 பேர் துப்பாக்கியோட   நிக்கறாங்க . அவங்களூம்  சுடறாங்க , ஹீரோவும்  சுடறார் . 3  அடி தூரத்துல எல்லாரும்   இருந்தும்  ஒரு புல்லட்  கூட ஹீரோவை எதுவும்  செய்யலையே ? எப்படி ? 


3 பைக்  சின்னா பின்னம் ஆகி கிடைக்கு , பைக்கில்  பயணித்த ஆள் எஸ் அவது  கூட  போனாப்போகுதுன்னு  ஜீரணிச்சுக்கலாம் , ஆனா  அவர்  செல் ஃபோன்  புத்தம்புது காதலி சிணுங்குவது மாதிரி   ரிங்க் கேட்பது காதில்  பூ 


சி பி கமெண்ட் - ஆக்சன் பிரியர்கள் , மசாலா ப்ரியர்கள் , மகேஷ் பாபு ரசிகர்கள் பார்க்கலாம் ,  விஜய்  ரசிகர்கள் எதுக்கும் பார்த்து வெச்சுக்குங்க, ஒரு வேளை விஜய் இந்தப்படம் செய்யக்கூட வாய்ப்பு  இருக்கு 


 ரேட்டிங்க்  =  3 / 5 


குளிர் காலத்தை சமாளிக்க புத்திசாலி .........

1. தைப்பொங்கலுக்கு கண்டுக்காத பக்கத்து வீட்டு மாது மாட்டுப்பொங்கலுக்கு மட்டும் நம்ம கிட்ட வந்து வாலன்ட்ரியா வாழ்த்து சொன்னா அது சூது என அறிக



=================



2  ட்விட்டரில் (தமிழ்ப்) பெண்கள் நடமாட்டம் இல்லாத நேரம் நடுநிசி 1 30 am TO 3,am .அதிகமாய் நடமாடும் நேரம் மதியம் 12 டூ 3 # இது கேள்வி அறிவு



===========================



3 பொண்ணுங்க மொக்கை ஜோக் சொன்னாக்கூட செம ஜோக் னு சொல்றவனைக்கூட மன்னிச்சுடலாம்.ஜோக்கே சொல்லாதப்பக்கூட சிரிக்கிறவனை மன்னிக்கவே கூடாது



=====================


4  ஆம் ஆத்மி கட்சியைத்தொடர்ந்து ஒபாமா வும் கட்சியில் சேர அழைத்தும் விஜய் மறுப்பு .விஜய் ரசிகர்க்ள் அதிர்ச்சி




=================



5  DPல சொந்த முகம் வைக்காம எந்த முகம் வெச்சிருந்தாலும் நேரில் பார்த்த நேரு மாமா மாதிரி " யூ ஆர் சோ க்யூட் " என அடிச்சு விடுபவன்தான் தமிழன்



====================


6   படத்துல பாட்டு சரி இல்லைனு டாக்டர் குத்திக்காட்றாரு.




அங்கே படமே சரி இல்லைனு மக்கள் பேசிக்கறாங்களே மேடம் டம் டம் டமார்



===================



7   விழாக்காலங்களும் ,மழைக்காலங்களும் தான் நம்மைப்புதுப்பிக்க வல்லவை.காதலை சொல்ல உகந்த நாளும் கூட



=================



8   பொதுவா பொண்ணுங்க பாட்டில் மனம் மயங்குவாங்க.ஆண்கள் பாட்டில் சரக்கால் ஆளே மயங்குவாங்க



=====================



9  பொண்ணுங்களோட பேரு 3,எழுத்துல சின்னதா இருந்தாக்கூட செல்லம் கற பேரு ல அதையும் ஒரு எழுத்தா சுருக்கி அழைப்பவன் தான் தமிழன்



=====================



10  புத்தகப்ரியர்கள் CHAT கூட FACEBOOK போய் தான் செய்வாங்களாம் 



===================


11   குளிர் காலத்தை சமாளிக்க புத்திசாலி வெய்யில் காலத்துலயே கம்பளி வாங்கி ஸ்டாக் வெச்சுக்குவான்.சாமார்த்தியசாலி கல்யாணம் பண்ணிக்குவான்



==================


12  சூர்யா ரசிகர்கள் பிரெஞ்ச் தாடி வைப்பாங்க.சூர்யா ரசிகைகள் என்ன செய்வாங்களோ? காதலனை அந்த கெட்டப்க்கு மாறச்சொல்வாங்க்ளோ?


=====================



13  சூர்யா லேட்டஸ்ட் படத்துல பிரெஞ்ச் தாடியோட வர்றாராம். அப்போ பிரெஞ்ச் கிஸ் இருக்குமா?



======================



14  மாப்ளையை பிடிக்கலைன்னு பொண்ணு சொன்னதும் மாப்ளைக்கு ஹேர் கட் பண்ணி வெயிட் குறைச்சுட்டா பிடிச்சுடுமா? #,டாடி ஒரு டவுட்டு



==================]


15  லட்சுமிகரமான பொண்ணு கிடைச்சாலும் மேரேஜ்க்குப்பின் வாய் ஜாஸ்தியா இருந்தா கஜ லட்சுமிகரமான பொண்ணுனு சொல்லலாமா?



==================



16   வீரம் படம் பாத்துட்டு விஜய் படம் நல்லாருக்குன்னு பாராட்டினாராம்.அப்போ அஜித் ம் ஜில்லா படம் பாத்துட்டு குட் னு சொல்லனும்.அதானே நியாயம்?



========================



17   ஸார்.விஜய் போன் நெம்பர் கிடைக்குமா ? போக்கிரி ரிலீஸ் அப்போக்கூட அவர் கூட போன் ல பேசுனேன்.இப்ப நெம்பர் மாத்திட்டாரு போல # அடிச்சு விடுவோம்



==============================

Saturday, January 18, 2014

மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா மர்ம மரணம் -குற்றம் நடந்தது என்ன?

 


தரூர் மனைவி உடல் பரிசோதனை முடிந்தது : டாக்டர்கள் அறிக்கையில் குழப்பம்

புதுடில்லி : மனித வள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் சசிதரூர் மனைவி மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. இவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார் என்றும், இதனால் மனம் உடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும், அதிக டோஸ் மாத்திரை உட்கொண்டதாலும் இந்த இறப்பு நிகழ்ந்திருக்கலாம் என பல யூகங்கள் நிலவுகிறது.

மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர்கள் தங்களின் அறிக்கையில் உறுதியான முடிவை எதுவும் அறிவிக்க மறுத்து விட்டனர். இந்த மரணம் எதிர்பாராத விதமாக நடந்திருக்கிறது. இது இயற்கை மரணத்திற்கு எதிரானதாகவே இருக்கிறது. என்று தெரிவித்துள்ளனர்.


மரணம் இயற்கைக்கு எதிரானது: மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர்கள் தரப்பில் கூறியிருப்பதாவது; சுனந்தா மரணம் எதிர்பாராத வகையில் திடீரென நடந்திருக்கிறது. இது இயற்கைக்கு எதிரானதாக உள்ளது. இவரது உடலில் சில காயங்கள் உள்ளன. இந்த காயங்கள் இறப்புக்கு காரணமாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். விஷம் சாப்பிட்டதற்கான அறிகுறிகளும் இல்லை. சில மாதிரிகள் பயோலாஜிக்கல் ஆய்வுக்கு அனுப்ப வேண்டியுள்ளது. எனவே 2 அல்லது 3 நாட்கள் பொறுத்திருந்து தான் முழு விவரத்தை தெரிவிக்க முடியும். இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.


உடல் பரிசோதனை முடிந்ததும் சுனந்தா உடல் அமைச்சர் சசிதரூரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி அந்த உடலுடன் டில்லியில் அவரது வீட்டுக்கு கொண்டு சென்றார். வேனில் இருந்த போது அமைச்சர் மிக கவலையுடன் கன்னத்தில் கை வைத்தபடி இருந்தார்.

மனைவி சுனந்தா புஷ்கர் திடீரென மரணம் அடைந்ததால், துக்கம் தாளாமல் மத்திய அமைச்சர் சசிதரூருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையில் இன்று சுனந்தாவின் உடல் பரிசோதனை அறிக்கை வெளியிடப்படும் என தெரிகிறது. இதன் பின்னரே அவரது சாவின் மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 
 
ஏற்கனவே 2 மனைவிகளை விவாகரத்து செய்து கொண்ட சசிதரூர் தொழில் அதிபரான கணவனை இழந்த சுனந்தா புஷ்கரை காதல் திருமணம் செய்து கொண்டார். தரூருக்கு பாகிஸ்தான் பெண் நிருபருடன் தொடர்பு இருப்பதாக சுனந்தா சந்தேகமுற்றார். சசி தரூர் உண்மையற்றவராக இருந்து வருகிறார் என டுவிட்டரில் 2 நாட்களுக்கு முன்தான் சுன்நதா விமர்சித்திருந்தார். இந்நிலையில் டில்லி நட்சத்திர ஓட்டலில் அவர் மர்ம முறையில் இறந்து கிடந்தார்.


போலீஸ் விசாரணை:

இந்த மரணம் குறித்து போலீசாருக்கு எவ்வித முழு தகவலும் கிடைக்கவில்லை. இவரது உடலில் காயங்கள் எதுவுமில்லை. இவர் தற்கொலையா அல்லது கொலையா என்றும் சந்தேகம் நீடிக்கிறது. இவரது உடலை மாஜிஸ்திரேட் முன்னிலையில் மருத்துவக்குழுவினர் பரிசோதனை நடத்தி வருகின்றனர். சுன்நதா தங்கியிருந்து ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த ரகசிய காமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் பரிசோதித்து வருகின்றனர்.

இந்த பரிசோதனை வீடியோ மூலம் படமெடுக்கப்பட்டு வருகிறது. இவரது உடல் பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகும்.

சசிதரூர் ஆஸ்பத்திரியில் அனுமதி : இதற்கிடையில் சசிதரூக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இவரது இதயத்துடிப்பும் நிலை இல்லாமல் மாறி, மாறி இருந்து வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.


ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்:

சுனந்தா மரணம் குறித்து ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங் கவலை தெரிவித்துள்ளனர், இவர்கள் வெளியிட்டுளள இரங்கல் செய்தியில், இந்த துயரமான நேரத்தில் அமைச்சர் சசி தரூருக்கு ஏற்பட்டுள்ள துக்கத்தில் நாங்கள் பங்கெடுத்து கொள்வதாகவும், அவருக்கு இறைவன் வலிமையான இதயத்தை கொடுக்க வேண்டும் என்றும் பிரார்த்தித்து கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

பாக்., பெண் நிருபர் அதிர்ச்சி: சுனந்தா மரணம் குறித்து பாக்.,பெண் நிருபர் மெகர் தரர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவரது கருத்தில், நான் காலையில் எழுந்தவுடன் இந்த துயர செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியுற்றேன். இந்த கவலையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. பெரும் துயரத்தில் நான் என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை. சுனந்தா ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். ஓ மை காட் ! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சுனந்தாவுக்கு நோய் பாதிப்பா?

இதற்கிடையில் சுனந்தாவுக்கு குடலில் கேன்சர் தொற்று நோய் இருந்ததாகவும், இது தொடர்பாக கடந்த சில நாட்களாக சிகிச்சை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நோய் காரணமாக அவர் உணவு எதுவும் எடுத்து கொள்ள முடியாத நிலையில் இருந்தார். இதனால் மனம் உடைந்து தற்கொலை செய்திருக்கலாமோ என்றும் கூறப்படுகிறது.



அதிக டோஸ் மாத்திரை: இவரது உடல் நலம் தொடர்பாக மருத்துவ வட்டாரம் கூறுகையில்: வழக்கமாக எடுக்கும் மாத்திரை அளவை அதிகம் எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் அவர் மூச்சு திணறி இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் சசி தரூர் இன்று காலை 11 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


readers  views 


1. சுனந்தா அவர்கள் கோடி கணக்கில் பணம் படைத்தவர், IPL அணியின் சொந்தகாரர், முதல் இரு கணவர்களை விவாகரத்து செய்து மூன்றாவது திருமணம் செய்து கொண்ட மனஉறுதி படைத்தவர்... அப்படிப்பட்டவர் மன உளைச்சலுக்கு ஆளானார், கேன்சர் தொற்றால் அவதி பட்டார், அதனால் தற்கொலை செய்து கொண்டார் என்பது நம்பும்படியாக இல்லை...நோயால் பாதிக்கப்பட்டவர் கோடிகணக்கில் செலவு செய்ய வசதி இருந்தும் மத்திய அமைச்சரின் மனைவி என்ற அந்தஸ்து இருந்தும் மருத்துவமனையில் சேராமல் நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தார் என்பது அவர் சாவிற்கு நோயோ, மன அழுத்தமோ காரணம் அல்ல...நடந்ததோ வேறு... அதை மூடி மறைக்க மிகபெரிய அளவில் சதி நடக்கிறது என்றே எண்ண தோன்றுகிறது... 



2. சாதாரண மனிதனின் மனைவி இறந்தி்ருந்தால் கணவன் உள்ளே ஆனால் மந்தி்ரி மனைவி இறந்தால் பிரதமர் இரங்கல் தெரிவிப்பார் இது கொலைகாரர்கள் கொள்ளையர்கள் ஆட்ச்சியப்பா கண்ணை மூடிக்கொள்ளுங்கள் கனவு காணுங்கள் இந்தி்யாவில் பெண்ணின் நிலையை எண்ணி மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் .....ம் 


3. இவரை திருமணம் செய்வதற்குமுன் சுனந்தா அரபுநாடுகளில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். திருமணத்துக்கு பின் இவர்மீது IPL கிரிகெட் போட்டியில் 50 கோடி ரூபா அளவில் ஒரு அணியை விலைக்கு வாங்கிய வகையில் ஊழல் புகாரில் சிக்கி மீண்டார். இதைதான் காஸ்ட்லியான பெண் நண்பர் என்று மோடி கூறியதற்கு பெரிய எதிர்ப்பு. இப்போது அது உண்மையாகி விட்டது. 2 + 1 =3 இப்போ அடுத்தது ரெடி. 56 வயது வாலிபர் துள்ளி விளையாடுகிறார். கடைசி துபாய் இப்போது நடப்பு பாகிஸ்தான். காங்கிரஸ் இப்போது என்ன செய்யும்? பெண்ணை வேவுபார்த்ததாக மோடிமேல் நடவடிக்கை பெண்கள் விடுதலை அமைப்புகள் என்ற பெயரில் புகார் பெறப்பட்டு நடுவண் அரசு நடவடிக்கை எடுக்கச்சொல்லி மாநில அரசை வற்புறுத்தி வருகிறது. இப்போது இந்த சசி தரூர் அரேபிய வியாபாரியை துணைவி என்ற மனைவி இவருக்கு பாகிஸ்தானிய பெண் (உளவுக்காரியாக இருக்கலாம்) தொடர்பு உள்ளது என்று கூப்பாடு போட்டு அவர் மறுநாளே இறந்தது பற்றி வாய்மூடி மெளனமாக உள்ளது ஏன். மாமியார் உடைத்தால் மண் சட்டி மருமகள் உடைத்தால் பொன் சட்டி என்ற மாற்றந்தாய் மனபோக்கை என்னவென்று சொல்லுவது ? 



4 ஒரு வேளை இந்த தற்கொலைக்கும் இவருக்கும் சம்மந்தமே இல்லையென்றாலும் இவர் ஆஸ்பத்திரியில் படுத்து கொண்டது சந்தேகத்தை அதிகரிக்க செய்துள்ளது....அதோடு தற்கொலைக்கு இவர் காரணமாக இருப்பது போன்ற சூழ்நிலை உள்ளதால் இவருக்கு சட்ட பயம் வந்திருக்கலாம்... தற்கொலைக்கு கண்டிப்பாக தூண்டுதல் இருந்திருக்க வேண்டும்...அது என்ன என்பதை பொறுத்தே மற்றவை அமையும்...ஆனால் இதில் சில உண்மைகள் அவரோடு சேர்ந்தே மறைந்து விட்டது தான் வேதனை தரும் செய்தி... 



5 கல்யாணம் ஆகி 7 வருடத்திற்குள் மனைவி தற்கொலை செய்து கொண்டால் கணவன் கைது செய்ய படுவார் என்பது சட்டம். அதனால் தான் இப்பொழுது சுனந்தா தரூர் அவர்களுக்கு கடுமையான நோய் இருந்ததாக மீடியாக்கள் சொல்கின்றன. நேற்று காலை 4 மணிக்கு சில மீடியாக்களுக்கு (NDTV - Dutt, Headlines Today - Rahul Kanwal, CNN - Sagarika) IPL தொடர்பான சில முக்கிய விசயங்களை சொல்வதாக பேட்டி கொடுப்பதாக கூறி இருக்கிறார். ஆனால் இவர்கள் யாரும் அவரை பேட்டி எடுக்க செல்லவில்லை. எப்படியும் இதை இயற்கை மரணம் என்று முடித்து விடுவார்கள்.... 

 

6 சுனந்தா இறப்பதற்கு முன்பு சசிதரூர் பற்றி கூறிய வார்த்தைகளை -( பாகிஸ்தான் பெண் நிருபர் தொடர்பு மற்றும் ISI தொடர்பு ) மரண வாக்குமூலமாக கருத வேண்டும். அவர் மரணத்தில் மறைந்து இருக்கின்ற நம் நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பற்றி தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். சுனந்தா பற்றி கூறுபவர்கள் அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழையான பெண் அல்ல என்றே கூறுகின்றனர், சசிதருரின் மருத்துவமனை அனுமதி மேலும் பல சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது. இது மிகப்பெரிய நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் விசயமாக இருக்கும் என்று தோன்றுகிறது... பிரதமர் இதற்கும் கவலை தெரிவித்துவிட்டு மௌன சாமியாக சும்மா உக்கார்ந்து இருக்காமல் முழு அளவிலான புலன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். 


7 மர்மமான மரணம் .....இந்த பெண் இறப்பதற்கு முதல் நாள் Twitter இனைய தளதில் ஒரு குறிப்பிட்ட நாட்டின் பெண்ணை பற்றி குறிப்பிட்டு இருந்தார் என்று செய்தி படித்தேன். ஆனால் அடுத்த நாளே இறந்துள்ளார் ....கண்டிப்பாக உளவுத்துறை விசாரணை தேவை. தேவைப்பட்டால் மிக கடுமையான நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தயங்க கூடாது. இது போன்றவை நாட்டுக்கு நல்லதல



8 தாமரை ஒரு மத்திய அமைச்சராக உள்ளவர் ஏற்கெனவே சில பல பெண்களை மணந்து விவாகரத்து செய்தவர்.இப்போது பாகிஸ்தானின் சந்தேகத்துக்கு உரிய பெண் ஒருவரிடம் தொடர்புள்ளவர்.இப்படி இந்த நாட்டிற்கே கேடு விளைவிக்கக் கூடிய எதிரி நாட்டின் பெண்ணுடன் நட்புள்ளவருக்கு மத்திய மந்திரி பதவி கொடுத்து அழகு பார்க்கும் இந்த அரசாங்கம் இந்த நாட்டை எந்த நிலையில் வைத்திருக்கிறது என்பது சாதாரணப் பாமரனுக்கும் கூடத் தெரியும். பாகிஸ்தானின் சர்ச்சைக்குள்ள பெண்ணுடன் தொடர்புள்ளவராகக் கருதப் பட்டவரை அமைச்சராக இந்தக் காங்கிரஸ் அரசு வைத்துள்ளதிலிருந்தே இவர் காங்கிரசின் உள் வட்டத்தில் எந்த அளவுக்கு செல்வாக்கு உள்ளவரென்பது தெரியும். இவரை மீறி போஸ்ட் மார்டம் அறிக்கை உண்மைத் தன்மையுடன் வெளி வருமா? இவருக்கு நெஞ்சு வலி என்று மருத்துவமனையில் இருப்பது எந்த அளவுக்கு உண்மை.அரசியல்வாதிகளின் மற்றும் ஊழல் அதிகாரிகளின் நெஞ்சு வலி தான் உலகப் பிரசித்தமே, 



9 கார்கில் ஊடுருவலுக்கு கூட காங்கிரஸ் கட்சியின் சதி இருக்குமோ என்று நினைக்க தோன்றுகிறது....ஏனெனில் அன்றைய பா.ஜ ஆட்சியை வீழ்த்த இவர்கள் பல சதி செய்தனர்...அதில் ஒன்று தான் கார்கில் ஊடுருவல் மற்றும் சவப்பெட்டி ஊழல் என்று இல்லாத ஒன்றை பெரிதுபடுத்தினார்கள் என்ற சந்தேகம் அப்போதிலிருந்து இருக்கிறது.....பார்ப்போம் காலம் பதில் சொல்லும்...



10 கமல் படம் மாதிரி புரியாம பேசி குழப்பாதீங்க... நேற்று கணவனுக்கு ISI உளவாளி நிருபருடன் தொடர்பு இருக்கிறது என்று சொன்னவர்... மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்... அதை அதிகமான மாத்திரையை உண்டதால் வந்த மரணம் என்று மருத்துவ பரிசோதனை சொல்கிறது.... சந்தேகங்கள் சற்றும் குறைவதற்கு பதிலாக அதிகரிக்கத்தான் செய்கிறது.... சுனந்தா எதோ சொல்ல வருவதற்குள் இறந்திருக்கிறார்...அது தன கணவனை பற்றியா... இல்ல அந்த பெண் நிருபரை பற்றியா... இல்லை நாட்டிற்கு ஏதாவது பெரும் ஆபத்து வரப்போகிறதா.....


  சுனந்தா புஷ்கர் மரணமடைந்தது தொடர்பாக மத்திய அமைச்சர் சசி தரூரிடம் அதிகாரப்பூர்வமற்ற முறையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் சசி தரூரிடம் போலீசார் விசாரணை நடத்துவார்கள் எனவும் கூறப்படுகிறது.


புதுடில்லி: மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா உடல் இன்று மாலையில் லோதி ரோட்டில் உள்ள இடு காட்டில் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் மன்மோகன்சிங் அஞ்சலி செலுத்த வருவதாக இருந்தது. ஆனால் அவர் தனது நிகழ்ச்சியை ரத்து செய்தார்.

மத்திய அமைச்சர் மனைவி சுனந்தா நேற்று மர்ம முறையில் மரணமடைந்தார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

நட்சத்திர ஓட்டலில் இறந்த நிலையில் கிடந்த சுனந்தா உடல் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் சசிதரூரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது வீட்டில் அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

சுனந்தா பயன்படுத்திய மொபைல் போன், மற்றும ஐ.பேடு ஆகியன கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இன்று மாலை இறுதிச்சடங்கு முடிந்த பின்னர் அமைச்சர் சசி தரூரிடம் டில்லி போலீசார் வாக்குமூலம் பெற்று வாங்குவர் என கூறப்படுகிறது.

சுனந்தாவின் இறுதி போன் பேச்சு: சுனந்தா இறப்புக்கு முன் தனது நெருங்கிய நண்பரும மூத்த பத்திரிகையாளருமான நளினிசிங் என்பவரிடம் போனில் பேசியிருக்கிறார். இது குறித்து நளினி கூறியதாவது: சுனந்தா வெள்ளிக்கிழமை இரவு என்னிடம் 10 நிமிடம் போனில் பேசிக்கொண்டிருந்தார். பாக்., பெண் நிருபர் குறித்து தான் அதிகம் பேசினார். இவரது பேச்சின்போது மிகவும மனம் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. பல முறை அழுத படியே பேசினார். இது குறித்து நான் போலீசாரிடம் முழுமையாக தெரிவிப்பேன். சுனந்தா போன்ற ஒரு பெண்ணை நான் பார்த்தில்லை. மிகவும் நல்ல பெண். இவ்வாறு நளினி கூறினார்.

பிரதமர் அஞ்சலி தவிர்ப்பு : மறைந்த சசி தரூர் மனைவி உடலுக்கு பிரதமர் மன்மோகன்சிங் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவார் என முதலில் கூறப்பட்டது. ஆனால் சர்ச்சைகள் வரக்கூடும் என்ற காரணத்தினால் பிரதமர் இதனை கடைசி நேரத்தில் தவிர்த்து விட்டார். 

thanx - dinamalar

டெய்லி மாங்கா சாப்ட்டா இப்டி வாய் கூசாம பொய் பேசலாம்

1. ஏமாற்றுக்காரர்களின் முகமூடிகளை இப்புத்தாண்டில் கிழித்தெறிவோம்! - கருணாநிதி # குடும்பத்துக்கே செய் வினை வெச்சுக்குவார் போல



==================


2 திமுக கூட்டணிக்கு வருகிறேன் என்றோ வரவில்லையென்றோ விஜயகாந்த் கூறவில்லை! - திருமாவளவன் # மொத்தத்துல மனுசனாவே மதிக்கல



====================


3  எங்களுடைய கொள்கைகள் அதிமுகவின் கொள்கையோடு ஒத்துப்போவதால் கூட்டணி தொடர்கிறது! - தா.பாண்டியன் # முதுகு பெண்டியன் (BEND)



========================



4  திமுக கூட்டணியில் சேர்ந்தால் தேமுதிகவுக்கு நல்லது! - திருமாவளவன் # மக்களுக்கு எது நல்லது?



======================


5  ஜில்லா வை வாங்கிய வினியோகிஸ்தர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்- விஜய் # ஆரம்பம் எல்லாம் அமர்க்களம்னா.போகப்போகத்தானே டவுசர் கிழியுது



===============



6  மகேஷ் பாபுவை வைடுத்து சஸ்பென்ஸ் த்ரில்லர் எடுக்கும் மணிரத்னம் # வடக்குப்பட்டி ராமசாமி ! என் பணம் வந்துடும்.ஊ ஊ ஊ



======================



7  மகேஷ் பாபுவுடன் இணைந்தார் மணிரத்னம் # டைட்டில் நேனு கொன்னேனே உன்னை ?



=====================


8   இளைஞர்களும், பெண்களும் காங்கிரஸில் சேர வேண்டும்:ராகுல் வேண்டுகோள் # அப்போ ஆல்ரெடி கட்சில இருக்கும் வயசானவங்க எல்லாம் BJP ல சேரனுமா ?



==============================


9   என்னை வசை பாடுவதில் தான் முதல்வர் ஜெ.,க்கு அக்கறை: கருணாநிதி: # அப்பாடா ! ஜெ ஒரு பாடகினு பாராட்டிட்டாரே?



==========================


10  BJP உடன் அணி சேர தே.மு.தி.க., தயார்: ஊழல் எதிர்ப்பு வாசகம் மூலம் சூசகம்-செய்தி #ஸீட் யார் அதிகம் தராங்களோ அவங்க் கூட கூட்டணி ்



===================



11  'பாக்., வாலாட்டினால் பதிலடி கொடுப்போம்': ராணுவ தளபதி பிக்ரம் சிங் அதிரடி அறிவிப்பு: # வாளாட்டினால் வாலை சுருட்டிக்குவோம்?



===========================



12   மேடைப்பேச்சில் அரைத்த மாவையே அரைத்தார் பிரதமர்: -செய்தி # வெரி நைஸ் னு எல்லாரும் சொல்லட்டும்னா?



=====================



13   காங்., ஆட்சியில் விலைவாசி கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் # டெய்லி மாங்கா சாப்ட்டா இப்டி வாய் கூசாம பொய் பேசலாம்



===================



14   போலியோ இல்லாத நாடாகிறது இந்தியா: -செய்தி # வாழ்த்துகள்.அப்டியே போலியா இல்லாத மனிதர்களும் மாறினா தேவலை



====================



15   பஸ் ஒப்பந்தம் : ஷீலா தீட்சித் குற்றவாளி: புதுடில்லி செய்தி ! ! # இவரும் கிரிமினல் சில"பஸ் " ல சேர்ந்துட்டாரா?




=====================



16   இனி ஜனதா தர்பார் இல்லை:கெஜ்ரிவால்: # இனி துக்LUCK தர்பார் தானா?



==================



17   இந்திய சினிமாவில் வசூலில் முதல் இடம் பிடித்தது தூம் 3 - செய்தி # வாவ்! வாட் எ மேஜிக் கல் மிராக்கில்



====================



18   அனுஷ்கா வின் பாகுபாலி படத்தின் டைட்டீலுக்கு ஜெயின் சங்கத்தினர் எதிர்ப்பு! # பெரிய் பட்ஜெட் படம்னா பாகுபாடே பாக்காம ஏதோ ஒரு எதிர்ப்பு



==================



19   2014ல் வெற்றி பெறுவோம்:வாசன்: சென்னை : # பேரக்குழந்தைக்கு வெற்றினு பேர் வெச்சுடுவாரோ?



===================



20   மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்:திக்விஜய் சிங்: # சாரி.அது முடியாது - மோடி( இப்டி சொல்லிடுவாரோ?)



=======================

Thursday, January 16, 2014

விகடன் பார்வையில் - பொங்கல் ஜல்லிக்கட்டில் துள்ளிக்கிட்டு முன்னணியில் வந்தது எது?


















காதல் கைகூடக் கீழே போட்ட அரிவாளை, காதலைக் காப்பாற்ற  மீண்டும் கையில் எடுக் கும்... 'வீரம்’!


ஜில் காதல், ஜாலி கேலி, அதிரடி ஆக்ஷன், சென்ட்டிமென்ட் உருக்கம்... என அஜித்துக்கு ஏற்ற மாஸ் மசாலா பல்ஸைக் கச்சிதமாகப் பிடித்திருக்கிறார் இயக்குநர் சிவா. 'முரட்டுக்காளை’ ஒன்லைன், 'பையா’ ட்விஸ்ட், அரிவாள், ரத்தம், சத்தம்... எனப் பார்த்துப் பழகிய சங்கதிகள்தான் என்றாலும், காமெடி கோட்டிங் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.


'ஒட்டன்சத்திரம் விநாயகமாக’ அடி முதல் முடி வரை ஆல் வெள்ளையாக வருகிறார் அஜித். நீண்ட இடைவேளைக்குப் பிறகு, கோட், சூட், துப்பாக்கி இல்லாமல் உருக உருகக் காதலிக்கும் அஜித்தைப் பார்க்க... அழகாக இருக்கிறது! ஆக்ஷன் காட்சிகளில் முறைப்பு, காதல் காட்சிகள் தவிப்பு எனப் படம் நெடுக ஹேட்ஸ் ஆஃப்!


ரீ-என்ட்ரியில், தமன்னா இன்னும் அழகு! அரிவாளைப் பார்த்து மயங்கி விழுவது, வீட்டுக்கு வரும் அஜித்தைப் பார்த்துப் பரிதவிப்பது என நடிக்கவும் செய்திருக்கிறார்.  அஜித்தின் தம்பிகளாக வரும் பாலா, விதார்த், சுஹைல், முனீஷ§க்கு 'கும்பல் கோவிந்தா’ வேலைதான் என்றாலும், ஓ.கே. பாய்ஸ்!
முன்-பின்பாதிகளில் காமெடி மேளா நடத்தி படத்தின் நீளத்தை மறக்கச் செய்கிறது சந்தானத்தின் காமெடி. 


'வேணாம்னு சொல்றதுக்கே இவ்ளோ வேகமாப் போறாரே...’, 'தள்ளி ஸ்டார்ட் ஆகும்னு பார்த்தா, தானாவே ஸ்டார்ட் ஆகுதே?’ என்று கிடைக்கும் கேப்பில் கெடா வெட்டுகிறார் சந்தானம். அதிலும் சந்தானமும், அஜித்தின் தம்பிகளும் 'படம் எடுக்கிறோம்’ என்று தம்பி ராமைய்யாவைப் படுத்தும்பாடு... ரகளை மாஸ்! திருவிழா கணக்காக வரும் கூட்டத்தில் நாசர், அப்புக்குட்டி, ரமேஷ் கண்ணா, பிரதீப் ராவத் ஆகியோர் கவனிக்கவைக்கிறார்கள்.


திருப்பாச்சி அரிவாளுக்கே தடை விதித்துவிட்டார்கள் தமிழகத்தில். ஆனால், படத்தில் விதவிதமாக, ரகம்ரகமாக அரிவாள்கள் ஆட்களைப் பலிவாங்கிக்கொண்டே இருக்கிறதே! எம்பூட்டு ரத்தம்?
அட, போலீஸ்... போலீஸ்... என ஒரு கேரக்டர் இருப்பதையே மறந்துவிட்டார்கள் போல. அதுல் குல்கர்னியின் அந்த ஃப்ளாஷ்பேக்... செம டிராமா!


பின்னணி இசையில் டெம்போ ஏற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களில் அம்போ என விட்டுவிடுகிறார். வெற்றியின் ஒளிப்பதிவும், காசி விஸ்வநாதனின் எடிட் கட்டும் படத்துக்குப் பெரும்பலம்.


மாஸ் மசாலாதான்... ஆனாலும் டேஸ்ட் பீஸ்!


 




















ரௌடி வளர்ப்பு மகன் போலீஸாக மாறி, ரௌடி அப்பாவைத் திருத்தினால்... அதுவே ஜில்லா!  


மோகன்லால் - விஜய் என மாஸ் ஆக்ஷன் மசாலா ட்ரீட் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் நேசன். மோகன்லாலைக் கொல்ல நடக்கும் முயற்சிகளைச் சொல்லிவிட்டு, பின்பாதியில் அத்தனை விஷயங்களையும் ஒன்றாகக் கோக்கும் இடத்தில் மட்டும் சுவாரஸ்யம். மற்றபடி பன்ச், பில்டப் என்று மசாலாவைக் 'காட்டு காட்டென்று’ காட்டியதில் கண்ணைக் கட்டுகிறது!
கம்பீர ரௌடி சிவனாக மோகன்லால்... அசத்தல்! நரை தாடி, அகல பாடி எனத் தோன்றும் ஃப்ரேம்களில் எல்லாம் வசீகரிக்கிறார். ஆனால், 'இந்தச் சிவனை...’, 'இந்தச் சிவனுக்கு...’ என ஆரம்பித்து மதுரையில் உட்கார்ந்துகொண்டு அவர் அடிக்கும் பன்ச்களில்... மலையாள வாடை தூக்கல்!


ஆக்ஷன் கதைக்கு விஜய்யின் எக்ஸ்பிரஷன் களும், பாடிலாங்குவேஜும் பக்கா. தீ விபத்தில் பலியான குழந்தைகளைப்  பார்த்துக் கலங்குவதும், அப்பா பாசத்தில் உருகுவதுமாக செம. ஆனால், ஒரு பக்கமாகச் சாய்ந்து சாய்ந்து நடக்கும் ஸ்டைல்... வேணாம் ப்ரோ!  


லேடி போலீஸ் காஜல் அகர்வால். கண்களைச் சுருக்கிக் கோபப்படுவதைத் தவிர வேறு வேலை எதுவும் இல்லை. சம்பத் கோபம், நக்கல், நையாண்டி, வெறி... என எல்லாம் கலந்துகட்டி அடிக்கிறார்.  செம சீரியஸ் கதையில் கொஞ்சம் சிரிப்பு மாவு பிசைவது 'பரோட்டா’ சூரிதான். ''என்னாது 'சாந்தி’ங்கிறது மாடர்ன் பேரா..? காந்தி காலத்திலேயே தடை பண்ணின பேருடா அது...'' என்று விஜய் காதலுக்கு லந்து கொடுக்கும் இடங்களில் கிச்சுக்கிச்சு!


மிரட்டல் அப்பா - அவரது ப்ளஸ் மைனஸ் எல்லாம் அறிந்த செம ஷார்ப் மகன்... இவர்களுக்கு இடையிலான மோதல் தூள் கிளப்ப வேண்டாமா? ஆனால், ஏதோ செல்லச் சண்டை போட்டுக்கொள்வது போல, 'திருந்து - திருந்த முடியாது’ என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஜாலி கேலி முன்பாதி ரசிக்கவைத்தாலும் இரண்டாம் பாதியில் அவ்வளவு நீள ஃப்ளாஷ்பேக்குகள்... சலிப்பு. 'நாம ரௌடியா இருக்கோம்... போலீஸாவும் இருந்தா என்ன?’ என்ற எண்ணமும், திருந்திய விஜய்க்கு சீனியர் பதவி உயர்வு வழங்கும் இடமும்... ப்பா.!


இமான் இசையில் 'கண்டாங்கி...’, 'மாமா எப்போ ட்ரீட்டு?’ பாடல்கள் ரண்டக்க ரண்டக்க ரகம். ஆக்ஷன் படத்துக்கான ஃபுல் டெம்போவையும் கடத்துகிறது கணேஷ் ராஜவேலுவின் ஒளிப்பதிவு.


ரொம்ப நேரம் ஜில்லாவைச் சுற்றிக் காட்டிக்கொண்டே இருந்தால்,  கண்ணு வேர்க்காதா பாஸ்?

Thanks-Vikatan

எப்போ மாமா ட்ரீட்டு?

1. ஜட்ஜ் - எதுக்காக ஒரே ஏடிஎம் ல 5 தடவை கொள்ளை அடிச்சே ?



கைதி - கட்டணம் இல்லாம 5 டைம் பணம் எடுக்கலாம்னு சொன்னாங்க எஜமான்


===================



2 ஹீரோ - நான் அடிச்சா அது மரண அடியா இருக்கும்.



 வில்லன் - அண்ணா!,நீங்க நடிச்சாலே மரண அடி தானுங்க்ணா



=======================



3   செஸ் விளையாடும்போது நான் எப்பவும் ராஜா வுக்கு முன்னால இருக்கும் சிப்பாயைத்தான் ஓப்பன் செய்வேன்.



 ஓஹோ! ஓப்பனிங் கிங் னா இதானா?



====================


4  திருப்பதி போனா திருப்பம்



 ஏன்? கொடைக்கானல் ,ஊட்டி போனா வராதா ?


========================



5 டேமேஜர் - நேத்து ஏன் சொல்லாம லீவ் போட்டீங்க?



சார்.சன்டே ஒர்க்கிங் டே வெச்சா லீவ் தரமாட்டோம்னு சர்க்குலர் வந்ததே?



==================



6 சார்.படம் ரிலீஸ் ஆகி 5,நாள் கூட ஆகலை.எதுக்கு வெற்றி விழா கொண்டாடறீங்க?



 50 நாள் கழிச்சு கொண்டாடலாம்.தியேட்டர்ல படம் ஓடாதே?



======================



7   சார்.டெய்லி 4 கிமீ நடக்கனும் நீங்க.



 டாக்டர்.எல்லா படத்துலயும் அதானே பண்ணிட்டு இருக்கேன்



==================


8  ஒரே டைம் ல் 2 சர்ட் ஒன்னு மேல் 1 ஏன் போடறீங்க?



 அப்போ தான் dressing sense கூடிட்டே போகுது.னு எல்லாரும் சொல்வாங்க.ஈ

========================


9    போனில் லேடி வாய்ஸ் - ஸார்.அட்ரஸ் வெரிபிகேசன்.உங்க அட்ரஸ் சொல்லுங்க.


அஸ்கு புஸ்கு.லேடீஸ் பர்ஸ்ட் .நீங்க சொன்னா நான் சொல்றேன்



====================


10 என் படம் கிராண்ட் சக்சஸ் சார்



. ஏதாவது ஆதாரம் இருக்கா?



நாங்களே தயாரிச்ச யூ டியூப் ல அப்லோடின டிஸ்கஷன் இருக்கு



====================



11 என் புருசன் என்னை எந்த வேலையும் செய்ய விட மாட்டாரு.



 தொட்டது துலங்காதுன்னு நினைச்சிருப்பாரோ?



======================



12  என் புருசன்    டூ வீலர் தான் வெச்சிருக்காரு.ஆனா 4 வீலர் தான் ஐ லைக்.



சரி.உங்கப்பாட்ட சொல்லி ஒரு ஆடி கார் வாங்கித்தரச்சொல்லுங்க



===============



13  எனக்கு தாலி,பிரேஸ்லெட் இதெல்லாம் பெருசு பெருசா போட ஆசை .




மேடம் அதுக்கு நீங்க அவதார் ஜூவல்லர் பேரனைத்தான் கட்டனும்



=====================



14   மேரேஜ் பண்ணிக்கிட்டா கமிட்மெண்ட் இருக்கும்.ஜாலியா இருக்க முடியாது.



 மேடம்.புருசன் கூட ஜாலியா இருக்கலாமே?


=====================



15  இவர் தான் என்னோட 401 வது மாப்ளை



. அடேங்கப்பா.பஜ்ஜி சொஜ்ஜி செஞ்சே உங்கப்பா ஏழை ஆகி இருப்பாரே?


==========================


16  சிரிச்சா கன்னத்துல குழி விழற மாப்ளை வேணும்.



 நோ பிராப்ளம். மேடம்.தண்ணி அடிச்ட்டு அவர் எப்பவும் ஏதாவது குழி ல தான் விழுந்து கிடப்பாரு



========================


17 புவியியல் மிஸ் புனிதா-உலகின் உயரமான ஹில்ஸ் எது?




 லொள் மாணவன் - அது சரியாத்தெரியல மிஸ்.ஆனா உலகின் பெரிய ஹை ஹீல்ஸ் உங்களுதுதான்




========================



18  விஜய் ரசிகை = எப்போ மாமா ட்ரீட்டு?



 அஜித் ரசிகன் = நீ ஓக்கே சொன்னா டுடே நைட்டு


=====================



19  மிஸ்! ஜில்லா ஏன் இன்னும் பாக்கலை?



பிசி.



ஓஹோ!டெய்லி 14 மணி நேரம் ட்விட்டர்ல தானே இருக்கீங்க? ட்விட்டர்ல




==============================



20  மிஸ் கில்லாடி லேடி =  உங்களுக்கு எது பிடிச்சிருக்கு? ஜில்லா வா? வீரமா? ஏதோ 1 தான் சொல்லனும்



குழப்பவாதி = 1



=====================



 21   பிளாஸ்பேக் ஸீன்ஸ் ஜில்லா ல அதிகமா இருக்காம்.அப்போ அந்த சீன் மட்டும் கண்ணை மூடிக்குங்க



=================



Wednesday, January 15, 2014

அற்புத மருந்துகளின் வித்தகர்!

டாக்டர் எல்லப்பிரகத சுப்பாராவ் 

"அநேகமாக, நீங்கள் எல்லப்பிரகத சுப்பாராவ் என்ற பெயரை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இருப்பினும், அவர் வாழ்ந்தார் என்பதாலேயே நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழக்கூடும்."


டாரென் ஆன்ட்ரிம் 1950-ல் ஆர்கோசி வார இதழில் இவ்வாறு குறிப்பிட்டார். ஏறக்குறைய 65 ஆண்டுகள் கழித்து இன்றும் மேற்கூறிய வாசகங்கள் உண்மையாகவே விளங்குகின்றன.


எக்ஸ்-ரே கதிர்கள், பெனிசிலின் போன்ற ஒற்றை முக்கிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய விஞ்ஞானிகளின் பெயர்களை நம் நாட்டில் சிறு குழந்தை கூட சொல்லும். ஆனால், கோடானகோடி மக்களை கொடிய நோய்களிலிருந்து காக்கும் அருமருந்துகள் பலவற்றை கண்டுபிடித்தவர் ஓர் இந்தியர் என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாது.


அவர் ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் பிறந்து சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்த டாக்டர் எல்லப்பிரகத சுப்பாராவ்.
அன்றைய மதராஸ் மாகாணம் பீமாவரத்தில் 1895ஆம் ஆண்டு எல்லப்பிரகத சுப்பாராவ் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். கடும் வறுமையாலும், உறவினர்களின் இறப்பாலும் சுப்பாராவின் இளமைப் பருவம் சூழப்பட்டிருந்தது. இதன் காரணமாக தன் மூன்றாவது முயற்சியில் பள்ளிப் படிப்பை முடித்தார். இடையில், காசிக்கு சென்று யாத்ரீகர்களுக்கு பழம் விற்றால் பெரும் செல்வம் ஈட்டலாம் என எண்ணி வீட்டை விட்டோடிய சுப்பாராவ், பாதியில் மீட்டுக் கொணரப்பட்டார்.


சென்னை மாநிலக் கல்லூரியில் சிறப்புத் தகுதியுடன் இடைநிலைப் பட்டம் பெற்றபின், உலக வாழ்வில் பற்றற்று ராமகிருஷ்ண மடத்தில் சந்நியாசி ஆக முடிவு செய்தார். இதற்கு தன் தாயின் சம்மதம் கிட்டாததாலும், மடத்தின் அறிவுரையாலும் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்.

 
காதி கையுறைகள்

இக்காலகட்டத்தில், காந்தியின் ஒத்துழையாமை கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட சுப்பாராவ், அறுவை சிகிச்சைக்கு காதி கையுறைகளை பயன்படுத்தினார். இதனால் கோபமுற்ற அறுவை சிகிச்சை பேராசிரியர் பிராட்பீல்ட், சுப்பாராவை அப்பாடத்தில் தேர்ச்சி செய்யவில்லை. ஆதலால், சுப்பாராவிற்கு 1921ல் மருத்துவப் பட்டம் தரப்படாமல் எல்.எம்.எஸ். பட்டமே அளிக்கப்பட்டது.


அதே ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெப்பமண்டல மருத்துவம் பயில இடம் கிடைத்தும் தன் சகோதரர்கள் மரணத்தால் அவர் அவ்வாய்ப்பை ஏற்க முடியாத சூழல் உருவானது. இடையில் ஓராண்டு ஆயுர்வேத கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்த சுப்பாராவ், மீண்டும் 1923ல் ஹார்வர்டில் இடம் கிடைக்கவே, ஹார்வர்ட் பயணமானார்.


அமெரிக்க பயணம்

சென்னையில் தன் மருத்துவப் படிப்பிற்கு உதவிய தன் நண்பர் கஸ்தூரி சூரியநாராயண மூர்த்தியின் மகளை மணந்த சுப்பாராவ், தன் மாமனாரிடமும், காக்கிநாடா சத்தியலிங்கம் அறக்கட்டளையிடமும் நிதியுதவி பெற்று அமெரிக்காவிற்கான தன் பயணத்தை துவங்கினார்.


கையில் 75 டாலர்களுடன் அக்டோபர் இறுதியில் பாஸ்டன் நகரம் வந்தடையும் சுப்பாராவின் உடனடிச் செலவுகளை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ஸ்டிராங் ஏற்றுக்கொள்கிறார். அமெரிக்காவில் மருத்துவத் தொழில் செய்ய சுப்பாராவிற்கு உரிமம் இல்லாததால், ப்ரிகாம் பெண்கள் மருத்துவமனையில் அடிப்படை பணியாள் வேலை செய்கிறார்.


ஒரு முக்கியத் திருப்புமுனை

இவ்வாறான அசாதாரண சூழலில் வெப்பமண்டல மருத்துவத்தில் பட்டயம் பெறும் சுப்பாராவ், 1924-ல் ஹார்வர்ட் உயிர்வேதியியல் துறையில் பேராசிரியர் சைரஸ் ஃபிஸ்கே'வின் ஆய்வுக்கூடத்தில் ஆராய்ச்சியாளராக பணியில் அமர்கிறார். இத்தருணம் சுப்பாராவின் வாழ்வின் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைகிறது.


இதுவரை வாழ்வில் வறுமை, இறப்பு, ஈகை சூழ வாழ்ந்த சுப்பாராவ், தொடர்ந்து புகழையும் செல்வத்தையும் தேடித் தெளிவான இலக்குகளற்று ஓடி வந்தவர், வாழ்வில் முதல் முறையாக தன் இலக்கை, பாதையை இனம்காண்கிறார். மருத்துவ ஆராய்ச்சியே தன் வாழ்வின் பிடிமானம் என உணர்கிறார்.


ஃபிஸ்கே - சுப்பாராவ் முறை

ஃபிஸ்கேயின் ஆய்வகத்தில் பணியை துவங்கும் சுப்பாராவ், சில மாதங்களிலேயே ரத்தத்தில் பாஸ்பரஸின் அளவை விரைவாக மதிப்பிடும் முறையை கண்டுபிடிக்கிறார். ஃபிஸ்கே-சுப்பாராவ் முறை என்று விளங்கப்படும் இம்முறை அதே ஆண்டு பாடப் புத்தகங்களில் இடம்பெறுகிறது. இன்று வரை உலகெங்கிலும் உயிர்வேதியியல் மாணவர்கள் கற்கும் ஓர் அடிப்படை கற்றல் முறையாக இம்முறை விளங்குகிறது.


இம்முறையின் துணைகொண்டு சுப்பாராவ் மற்றும் ஃபிஸ்கே மனித உடலின் சக்தி வடிவங்களான பாஸ்போகிரியாட்டின் மற்றும் அடினோசின் ட்ரைபாஸ்பேட் வேதிப்பொருட்களை கண்டுபிடிக்கின்றனர். நாம் உண்ணும் உணவை உடலில் சக்திவடிவமாக சேமித்து வைப்பதிலும், தேவைப்படும் பொழுது சக்தியாக மாற்றி நம் தசை இயக்கத்திற்கு உதவுவதுமே இவ்விரு வேதிப்பொருட்களின் வேலையாகும்.


நோபல் கமிட்டியின் தவறு

அதுநாள் வரை கிளைகொஜென் லாக்டிக் அமிலமாக மாற்றம் பெறுவதே தசை இயக்கத்திற்கு காரணமாக எண்ணப்பட்டது; 1922-ல் நோபல் பரிசும் அக்கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட்டதே. ஆனால் சுப்பாராவின் கண்டுபிடிப்பு நோபல் கமிட்டியின் தவறை சுட்டிக்காட்டுவதாக அமைகிறது. முடிவுகளை வெளியிடுவதில் ஏற்படும் தாமதத்தாலும், தன தவறினை ஏற்றுக்கொள்ள நோபல் கமிட்டி காட்டிய தயக்கத்தாலும் இப்பெரும் கண்டுபிடிப்பிற்கான அங்கீகாரம் சுப்பாராவ் மற்றும் ஃபிஸ்கேவிற்கு மறுக்கப்பட்டது.


எனினும், 1930ல் உயிர்வேதியலில் சுப்பாராவ் முனைவர் பட்டம் பெறுகிறார். ஹார்வர்ட் பல்கலை.யில் தொடர்ந்து ஆராய்ச்சியாளராக பணியாற்றும் சுப்பாராவ், தசை வேதியியலில் நாட்டம் குறையவே, பெர்நிசியஸ் சோகைக்கான மருந்தினை வெற்றிகரமாக மிருக ஈரலிலிருந்து பிரித்தெடுத்தார். இந்நோய் வெப்பமண்டலங்களில் காணப்படும் குடல் உறிஞ்சா நோய்க்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது. சுப்பாராவின் சகோதரர்கள் அனைவரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். ஒருவர் இறந்தும் போனார்.


B12 கண்டுபிடிப்பு

அடுத்தக்கட்டமாக, ஈரலிலிருந்து விட்டமின்கள், குறிப்பாக விட்டமின் B12, பிரித்தெடுப்பதில் ஆர்வம் காட்டினார் சுப்பாராவ். பலவாறு முயன்றும் இம்முயற்சியில் தோல்வியை தழுவுகிறார். எனினும் B12 பிரித்தெடுத்தல் முறையில் முக்கியப் பங்காற்றுகிறார். இன்று விட்டமின் B12 கண்டுபிடிப்பில் சுப்பாராவின் பங்களிப்பு சுட்டிக்காட்டப்படாதது துரதிர்ஷ்டவசமானது.


இப்பின்னணியில் 1940-ல், நியூயார்க் மாகாணத்தில் லெடெர்ல் ஆய்வுக்கூடம் சுப்பாராவை தன் ஈரல் மருந்து ஆய்வுப்பிரிவில் ஆய்வு மேலாளர் பணியில், பெரும் சம்பளத்துடன் அமர்த்த முன்வருகிறது. தனக்கு அளிக்கப்பட சம்பளத்தை பாதியாக குறைத்தால் பணியில் சேர்வதாக சொல்கிறார் சுப்பாராவ். ஆம், சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொண்டு அதற்கு பதில் வார இறுதி நாட்களில் வேதிப்பொருள் பிரித்தெடுத்தல் ஆய்வுகளை நடத்த மூலப்பொருட்களும், தடையற்ற அதிகாரமும் வழங்குமாறு கேட்டுக்கொண்டு பணியில் சேர்கிறார்.


அருமருந்துகள் கண்டுபிடிப்பு

லெடெர்ல் ஆய்வகத்தில் தன் தலைமையில் திறமையான இளைஞர் குழுவை உருவாக்கும் சுப்பாராவ், அடுத்த ஐந்து ஆண்டுகள் நோய் நீக்க மருந்து ஆய்விற்கான அடித்தளத்தினை நிறுவுகிறார். பின் வரும் மூன்று ஆண்டுகளில் சுப்பாராவ் குழு மானுடத்தைக் காக்கும் பல அருமருந்துகளை மருத்துவ உலகிற்கு சமர்ப்பிக்கிறது. இக்காலகட்டத்தில் மருத்துவ உலகில் சுப்பாராவ் மற்றும் குழுவினர் ஃபோலிக் ஆசிட் பாய்ஸ் (folic acid boys) என்று பெருமைப்பட அழைக்கப்படுகின்றனர்.


1945-ல், சுப்பாராவ் மற்றும் டுக்கர், ஆரியோமைசின் எனும் முதல் டெட்ராசைக்ளின் வகை நுண்ணுயிர் எதிரியை கண்டுபிடிக்கின்றனர். இவை கிராம்-நேர் மற்றும் கிராம்-எதிர் என இருவகை நுண்ணுயிரிகளையும் கட்டுப்படுத்தக்கூடிய தன்மை கொண்டவை. இதற்கு முன் இருந்த பிளெம்மிங்கின் பெனிசிலின் மற்றும் வாக்ஸ்மன்னின் ஸ்டிரெப்டோமைசின் நுண்ணுயிர் எதிரிகள், முறையே, கிராம்-நேர் மற்றும் கிராம்-எதிர் நுண்ணுயிரிகளை மட்டும் அளிக்கக்கூடியவை.


புற்றுநோய்க்கு எதிரான முதல் மருந்து

ஃபோலிக் அமில குறைபாட்டால் ஏற்படும் சோகை நோய்க்கான மருந்தாக ஃபோலிக் அமிலத்தை வேதித்தொகுப்பு முறையில் தயாரித்து வெற்றி காண்கிறார் சுப்பாராவ். பலநிலை வினைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பு முறையின் இடையில் எதிர்ஃபோலேட் (antifolate) வகை வேதிப்பொருட்கள் கிடைக்கின்றன. சுப்பாராவின் ஹார்வர்ட் நண்பர் மருத்துவர் சிட்னி ஃபார்பரின் ஆலோசனையில் அமினொப்டெரின் (aminopterin) எனும் எதிர்ஃபோலேட்டை சுப்பாராவ் மற்றும் கில்டி தயாரிக்கின்றனர். இதுவே புற்றுநோய்க்கெதிரான முதல் மருந்தாகும்.


லுகீமியா நோயால் தாக்கப்பட்ட சிறுவர்களுக்கு அமினொப்டெரின் சிகிச்சையளித்து வெற்றிபெறுவதன் மூலம் கீமோதெரபி முறையை ஆற்றல்மிக்க சிகிச்சை முறையாக உலகுக்கு அளிக்கிறார் ஃபார்பர். இன்று வரை நவீன கீமோதெரபி முறையின் தந்தை என்று சிட்னி ஃபார்பர் அழைக்கப்படுகிறார்.


இதன் பின்னர் மேலும் ஆற்றல் மிக்க, குறைந்த பக்கவிளைவுகள் ஏற்படுத்தக்கூடிய இன்னுமொரு எதிர்ஃபோலேட்டான மீதோட்ரெக்சேட்டை (methotrexate) சுப்பாராவ் கண்டுபிடிக்கிறார். இன்று வரை, சிறுவர்களுக்கான லுகீமியா, பல்வேறு புற்றுநோய்கள், முடக்கு வாதம், தடிப்புத்தோல் அழற்சி (Psoriasis), க்ரோன் நோய் (Crohn's colitis) என பல நோய்களுக்கான மருந்தாக மீதோட்ரெக்சேட் பயன்படுத்தப்படுகின்றது.

ஹெட்ராசென்

இரண்டாம் உலகப்போரின் பொழுது உலகெங்கிலும் பணியில் அமர்த்தப்பட்ட அமெரிக்க ராணுவத்தினரை மலேரியா மற்றும் யானைக்கால் நோயில் இருந்து காக்க மருந்து தயாரிக்கும் பணி சுப்பாராவிடம் அளிக்கப்பட்டது. ஹெட்ராசென் என அழைக்கப்படும் டைஎத்தில் கார்பமசைன் (DEC) மருந்தினை கண்டுபிடித்தார். இன்று வரை, யானைக்கால் நோய்க்கெதிரான இயக்கத்தில் உலக சுகாதார அமைப்பு ஹெட்ராசென் மருந்துகளையே பயன்படுத்துகிறது.


சுப்பாராவ் 1948-ல், தனது 53-வது வயதில் மாரடைப்பால் காலமானார். நியூயார்க் டைம்ஸ், நியூயார்க் ஹெரால்ட் - ட்ரிப்யூன் உட்பட பல இதழ்கள் சுப்பாராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தன.


சுப்புராவின் தனித்துவம்

தன் கண்டுபிடிப்புகளை தன் பெயரோடு இணைத்துக்கொள்ளும் (விஞ்ஞான உலகின் பொதுவான நடைமுறை) காரியங்களை சுப்பாராவ் என்றும் முன்னெடுத்ததில்லை. விஞ்ஞான மாநாடுகளுக்கு சென்று தன் கண்டுபிடிப்புகளை பறைசாற்றியதில்லை. தன் குழுவின் பணியாளர்கள் பொதுமேடைகளில் அங்கீகாரங்களை பெற்றுக்கொள்கையில் பெருமிதத்தோடு அரங்கத்தில் கடைசியில் அமர்ந்துகொள்வார். 


பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதை தவிர்த்தே வந்தார். 1990ல் தி சைண்டிபிக் இதழ் வெளியிட்ட 'ஐம்பது ஆண்டுகளை கடந்த பத்து பெரும்பங்காற்றிய ஆய்வுக்கட்டுரைகள்' எனும் சிறப்புக்கட்டுரையில் ஃபிஸ்கே--சுப்பாராவ் முறையை விளக்கும் சுப்பாராவின் ஆய்வுக்கட்டுரை முதலிடத்தை பிடித்தது.


இந்தியக் குடிமகன்

ஏறக்குறைய 25 ஆண்டுகள் அமெரிக்காவில் பணிபுரிந்த சுப்பாராவ் கடைசி வரை அமெரிக்க குடியுரிமை பெறவே இல்லை. அக்கால அமெரிக்கச் சட்டம் இந்தியர்களுக்கு குடியுரிமை மறுத்தது. 1943ல் நியூ ரிபப்ளிக் இதழ் சுப்பாராவ் போன்ற மகத்தான இந்தியர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவது கண்டனத்துக்குரியது என கருத்து தெரிவித்தது. 1946லேயே இந்தியர்களுக்கு குடியுரிமையில் இடம் தரும் சட்டம் அமலுக்கு வந்தது. அதன் பின்னும் சுப்பாராவ் அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முன்வரவில்லை. கடைசி வரை இந்தியக் குடிமகனாகவே வாழ்ந்து இறந்தார்.


1994ல் குஜராத் மற்றும் மராட்டியத்தில் பரவிய ப்ளேக் வெடிப்பை கட்டுப்படுத்தி பின்னர் முற்றிலும் அகற்ற பெரிதும் உதவியது டெட்ராசைக்ளின் நோய்க்கொல்லிகளே. சுப்பாராவ் பிறந்த நூறாவது ஆண்டில் தன் தாயகத்திற்கு செய்த சிறு பங்களிப்பாக இதனை எடுத்துக்கொள்ளலாம்.


விஞ்ஞானத்தின் மூலம் மானுட நல்வாழ்வுக்கு பெரும்பங்காற்றிய இந்தியர்களில் கண்டிப்பாக சுப்பாராவ் முதன்மையானவராக விளங்குகிறார். சுப்பாராவிற்கு அமரர்களுக்கு வழங்கும் பாரத ரத்னா விருது வழங்குவதன் மூலமும், பள்ளிப் பாடத்திட்டத்தில் சுப்பாராவின் வாழ்க்கை மற்றும் பங்களிப்பை சேர்ப்பதன் மூலமும் இந்தியா தன் தவப்புதல்வர்களுள் ஒருவரை சிறப்பிக்கலாம். டாக்டர் எல்லப்பிரகத சுப்பாராவ் அதற்கு முற்றிலும் தகுதியானவரே.

Thanks-The Hindu

Tuesday, January 14, 2014

கலவரம் - சினிமா விமர்சனம்


ஒரு அரசியல் தலைவர் கம் தாதா வை அவர் பண்ற அக்கிரமத்துக்காக  போலீஸ் கைது செய்யுது.அவரை அரசாங்கம் விடுவிக்கனும்கறதுக்காக அவர் ஆணைப்படியே அவரோட அடியாளுங்க கலவரம் பண்றாங்க.வேணும்னே தூண்டிவிடப்பட்ட அந்த கலவரத்துல பல உயிர்ச்சேதம் நடக்குது. அதில் உயிர் இழந்த மாணவிகள் 4 பேரு.அந்த 4 பேரோட தோழர்கள் 4 பேரும் அவங்க சாவுக்குக்காரணமானவங்களைப்பழி வாங்கக்கிளம்பறாங்க.அந்த  4 மாணவிகள் ல ஒரு மாணவியோட அப்பா ஒரு ஐ பி எஸ் ஆஃபீசர். அவர் தானா முன் வந்து அந்த கேசை டீல் பண்ண ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி அந்த 4 மாணவர்களை யூஸ் பண்ணி வில்லன்களை போட்டுத்தள்ளறாரு.இதுதான் கதை . 


3 வருடங்களுக்கு முன் வெளி வந்த கலவரகாரு எனும் கன்னடப்படத்தின் டப்பிங்க் படம்  தான் இது.சத்யராஜ் நடிச்சிருக்கறதால டைமிங்கா இப்போ  ரிலீஸ் பண்ணி இருக்காங்க .


 போலீஸ் ஆஃபீசர் கம் விசாரணை அதிகாரியா சத்யராஜ் கலக்கறார். படம் போட்ட முதல் 55  நிமிடங்கள் போனதே தெரியல. செம ஸ்பீடு .மம்முட்டி நடிச்ச  சி பி ஐ டைரி குறிப்பு மாதிரி காட்சிகள் பர பரனு நகருது . 

கேப்டன் நடிச்ச உளவுத்துறை , அருண் விஜய் நடிச்ச ஜனனம் படங்களை டைரக்ட் செய்த ரமேஷ் செல்வன் தான் இயக்குநர். இவர் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்  என்பதால் அதற்கான  பில்டப் எல்லாம் நல்லாவே  தெரியுது. காட்சிகள் கட்டிங்க் , எடிட்டிங்க்  எல்லாம்  குட் . இடைவேளைக்குப்பின்  வரும்  ஃபிளாஸ்பேக் காட்சிகள்  கொஞ்சம்  சோர்வைத்தந்தாலும்   மொத்தப்படமே 132  நிமிடங்கள் தான் என்பதால்  படம்  ஓக்கே  தான் . 


சத்யராஜ்க்கு  ஜோடி  இல்லை என்பது பெரிய ஆறுதல் . ஜோடி  இருந்தா  டூயட், செண்ட்டிமெண்ட் என இழுவைகள்  இருக்கும், அதே போல் காமெடி  டிராக்  என்ற பெயரில்  யாரும்  மொக்கை எல்லாம் போட வில்லை . 


கோவையில் நடந்த பஸ்  எரிப்பு சம்பவம் , மதுரையில் நடந்த  தினகரன்  ஆஃபீஸ் கலாட்டா எல்லாம் கண் முன் விரியுது. இது ஆல்ரெடி  பாலாஜி சக்திவேல் கல்லூரி எனும் படத்தில் செஞ்சிருந்தாலும்  இது வேறு மாதிரி  திரைகக்தை 


 அந்த 4 மாணவ மாணவிகள் எல்லாம்  யாரும்  தெரிந்த  முகமே  இல்லை , ஒரே ஒரு முகம் டி வி  புகழ்  சுஜிபாலா .


இயக்குநர்  ராஜ் கபூர்  ஒரு கேரக்டரில் வர்றார். வில்லனின் நடிப்பு கன கச்சிதம் . 

இயக்குநரிடம்  சில கேள்விகள்



1. மயில் சாமி மூலம்  பத்திரிக்கை எடிட்டர் மாதிரி மிமிக்ரி செய்து பேசும்போது அவங்க அப்படியே நம்பி  ஒரு ஃபேக்  நியூசை அதுவும் ஒரு கொலை செய்தி பற்றிப்போடுவது நம்பவே முடியலை. எந்த  ஃபோன்  நெம்பர்ல இருந்து வருது அப்டினு பார்க்க மாட்டாங்களா? எடிட்டர் தான் பேசினார் என்பதை கன்ஃபர்ம் செய்ய மாட்டாங்களா? 


2. ஜெயிலில் இருந்து  தப்பிக்கும் காட்சியில் 4 பேரும்  பேண்ட் சர்ட்டில் ஆர்டினரியா  இருக்காங்க.கைதி டிரஸ் என்னாச்சு ? 


3  செல்  ஃபோன் டவர் கிடைக்காததால்  ரூமை விட்டு  வில்லன் வெளியே வருவான், அப்போ  ஷூட் பண்ணு -னு சத்யராஜ் சொல்றார். வில்லனின்  ஃபோட்டோவைக்காட்ட மாட்டாரா? என்ன அடையாளம் ? வில்லனுக்குப்பதில் அவனின் அடியாள்  ரூமை விட்டு வெளீயே  ஃபோனுடன் 
வந்ததும்  தவறுதலாக அவனை சுட்டதும்  வில்லன் வெளீயே வர்றான். அப்போ   சுட்டிருக்கலாமே? ஏன் ஓடறாங்க ? 


4. வில்லனின்  டிரைவர் வேணும்னே  ரூட் மாறி காரை ஏர்போர்ட் போகும் திசைக்கு எதிர்  திசையில் வண்டியைத்திருப்பும்போது  வில்லன் ஏன் தன் செல் ஃபோனில்  இருந்து மெசேஜ் அனுப்பி   தன் அடியாட்கள் வரும் காரில் இருப்பவர்களுக்கு இன்ஃபார்ம் செய்யக்கூடாது ? 


5. ஒரு  சீன் ல வில்லனை  4 பேரும்  நீண்ட வாள்  கொண்டு  துரத்திட்டு ஓடறாங்க. எதுக்கு வெட்டி வேலை. சத்யராஜ்கொடுத்த கன் இருக்கே ? எடுத்து போட்டுத்தள்ளலாமே? 


6.  மாணவர்களில்  ஒரு ஆள் அடி பட்டு  சீரியசா படுத்திருக்கார். அப்போப்போய்  டெலி கால் மூலம் இண்ட்டர்வியூ செய்வது எதுக்கு. அவ்ளவ் முக்கியமான கலெக்டர் உத்யோகமா அது ? 


7. வில்லன்   திதி  கொடுக்கும் காட்சியில்  அய்யர் “ பிண்டத்தைக்கொண்டு போய்  கடல் ல கரைக்கும்படி சொல்லும்போது கையில் அந்த மாவு உருண்டையை எடுத்துட்டுப்போறார். பொதுவா ஒரு பிளேட் ல போட்டு எடுத்துட்டுப்போய் அந்த பிளேட்டை கழுவிட்டு வருவாங்க . பிண்டத்தை கடலில் கரைப்பாங்க .


8 கலவரக்காட்சியில்   மாணவியின் மேல் வில்லன் பெட்ரோல் ஊத்தும்போது அவ ;பாட்டுக்கு  ஓட வேண்டியதுதானே? அவன் என்ன கையைப்பிடிச்சுட்டா இருக்கான்? சுத்தி ஆளுங்க யாரும்  இல்லை. வேணாம் , வேணாம் அப்டினு சொல்லிட்டு ஏன் அங்கேயே  நிக்குது ? 

9 லேண்ட் லைன் பப்ளிக் பூத் ல இருந்து  ஃபோன் பண்ணி  வில்லனை மிரட்டும் மாணவர்கள்  ஏன் அதே  ஏரியாவில்  இருக்காங்க ? ட்ரேஸ் அவுட் பண்ணி கண்டு பிடிப்பாங்கனு  தெரியாதா? 


10   கொலை செஞ்சது காலேஜ் ஸ்டூடண்ட் என்றதும்  வில்லன் என்னது?22 வயசுப்பையனா>? என்கிறார். 12 வது படிக்கும் பையனுக்கு 12 + 5 = 17  வயசு , காலேஜ் 3 வருசம்  என்றால்  17 + 3  = 20 வயசு தானே ஆகுது ? 

Kalavaram Movie Audio Launch

நச் வசனங்கள் 


1.  எல்லாப்போர்லயும் கடைசில நல்லதுதான் நடந்திருக்கு 



2. என் பத்திரிக்கை முதல் இடத்துக்கு வரனும்னா  நீ மேலிடத்தில் இருக்கனும் , ஐ மீன் சாகனும் 



3. ஆட்சியே  முடிஞ்சாலும் அவங்க ஆரம்பிச்சு வெச்ச விசாரணைக்கமிசன் விசாரணை முடியாது 


4. ஏய் மிஸ்டர்  ஸ்டாப்  தட் என்கொயரி 


 சாரி சார், எல்லா ஒர்க்கையும் முடிச்சுட்டேன்

  என்னய்யா ? ஸ்கூல் பசங்க இம்போசிசன் முடிச்ச மாதிரி ரொம்ப ஈசியா  முடிச்சுட்டேன்னு சொல்றே? 



5.  விசாரனைக்கமிஷன்   ஏன் அமைக்கறோம்? அதுல கமிஷன்  இருப்பதால்  தான் 


6.  ஒவ்வொரு  பொறுக்கியையும் , ரவுடியையும் போட்டுத்தள்ளறது  என்னை மாதிரி  ஒரு போலீஸ் ஆஃபீசரால தான் , என்கவுண்ட்டர்  மூலம் 



7.  வில்லன் - நான் சென்னைக்கு வரும்போது   பிச்சைக்காரனா இருந்தேன் , என்ன பார்க்கறே ?  இப்பவும் அப்படித்தான் இருக்கனா? 


8  யார் நம்மாளைப்போட்டாங்கனு தெரியலை 

 டேய் , கொலை பண்றவன் , குத்தம் பண்றவன் பண்ணிட்டு  விசிட்டிங்க் கார்டு  கொடுத்துட்டா  செய்வான் ? 


9  அவருக்கு வேட்டி கட்டவே  தெரியாது . அப்டியே 4 மாசத்துக்கு  ஒரு தடவை கட்டினாலும் அது அவிழ்ந்து விழுந்துடும் 


அடேங்கப்பா ,  4 மாசத்துக்கு  ஒரு  டைம்  வேட்டி அவிழ்ந்ததுக்கே  4 குழந்தைகள்னா........



சி பி கமெண்ட்  -   படம்   பரபரப்பா  ஓடுது . முன் பாதி ஓக்கே , பின் பாதி  சுமார் தான்.  லேடீசும் பார்க்கலாம் .சத்யராஜை  ரசிப்பவர்கள் பார்க்கலாம். 



 ரேட்டிங்க்  =  2.5 / 5

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

குமுதம் ரேங்க் - OK


திருப்பூர்  ஜோதி யில் படம் பார்த்தேன் 




Kalavaram Movie Stills (7)

Monday, January 13, 2014

அகடம் - சினிமா விமர்சனம் ( ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட கின்னஸ் சாதனை திரைப்படம் )

தினமலர் விமர்சனம்

உலகில் முதன்முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் எனும் கின்னஸ் சாதனை சான்றிதழுடன் 2 மணிநேரம், 2 நிமிடங்கள் ஓடக்கூடிய விதத்தில் நல்லதொரு விழிப்புணர்வு மெஸேஜூடன் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் 'அகடம்'

போலி மருந்துகளின் போக்கிரி தனங்களாலும், மனித உயிர்கள் பற்றி கவலைப்படாமல் அதை தயாரிப்பவர்களின் பொல்லாத குணங்களாலும், தன் குழந்தையையும், குடும்பத்தையும் அநியாயமாக இழக்கும் ஹீரோ, தன் மனைவியின் ஆவி உதவியுடன், போலி மருந்து பொறுக்கிகளின் கதையை முடிக்கும் கதை தான் 'அகடம்' படத்தின் கையடக்க கரு, கதை, களம் எல்லாம்!

கதாநாயகர் தமிழ், போலி மருந்து தயாரிப்பாளர்களின் கூட்டாளியாகவே களம் இறங்கி, தன் மனைவி பாத்திமா எனும் ஸ்ரீபிரியங்காவின் உயிரற்ற உடலுடனும், உயிரோட்டமான ஆவியுடனும் கயவர்களை பயமுறுத்தி பழிதீர்க்கும் காட்சிகள் திக் திக் திகில் காட்சிகள்!


கதையின் நாயகி பாத்திமாவாக நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்கா கை குழந்தையுடன், ஆவியாக அசால்ட்டாக பயமுறுத்தியிருக்கிறார். சஞ்சய்-பாம்பே பாஸ்கர், ஜான் - ஸ்ரீனிஐயர், அசோக்-கலைசேகரன், பிச்சை பெருமாள்-சவரண பாலாஜி, குழந்தை அப்துல் கலாமாக வரும் மாஸ்டர் அஜெய், விலைமாதுவாக வரும் அனிஷா உள்ளிட்ட அனைவரும் தாங்கள் ஏற்ற பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர். பலே, பலே!

கே.பாஸ்கரின் பின்னணி இசை, இ.ஜே.நவுஷத்கானின் ஒளிப்பதிவு, இசட்.முகமது கிஷாக்கின் இயக்கம் எல்லாம் சேர்ந்து சில காட்சிகளை 'ஜவ்'வாக இழுத்தாலும், நல்ல 'மெடிக்கல் மெசேஜ்' உடன் சிறந்து நிற்கும் 'அகடம்', புதிய முயற்சிக்கு 'மகுடம்!'
 
  • நடிகர் : தமிழ்
  • நடிகை : ஸ்ரீ பிரியங்கா
  • இயக்குனர் :இசட்.முகமது கிஷாக்
thanx - dinamalar


கோல்டன் குளோப் விருதுகள் -11 ஹாலிவுட் திரைப்படங்கள் (லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் )

  • சிறந்த நடிகர் விருது பெற்ற லியார்னடோ டிகாப்ரியோ
    சிறந்த நடிகர் விருது பெற்ற லியார்னடோ டிகாப்ரியோ
ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் சின்னதிரை படைப்புகளுக்காக வழங்கப்படும் கோல்டன் குளோப் விருதுகள் விழா லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடந்து முடிந்தது. லியார்னடோ டிகாப்ரியோ சிறந்த நடிகராகவும், அமெரிக்கன் ஹஸல் சிறந்த திரைப்படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. 


கோல்டன் குளோபில் விருது பெற்றவர்களுக்கு ஆஸ்கரில் விருது பெறவும் வாய்ப்புகள் அதிகம் என்ற கருத்து நிலவுவதால், ஆஸ்கரைப் போலவே, ஒவ்வொரு வருடமும் கோல்டன் குளோப் விருதுகளும் சினிமா ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பை உண்டாக்கும். இந்த வருடத்திற்கான கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நேற்று நடந்தது. 

  • சிறந்த உறுதுணை நடிகைக்கான விருதுடன் ஜெனிஃபர் லாரன்ஸ்
    சிறந்த உறுதுணை நடிகைக்கான விருதுடன் ஜெனிஃபர் லாரன்ஸ்

இதுவரை ஒன்பது முறை கோல்டன் குளோப் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள நடிகர் லியார்னடோ டிகாப்ரியோ, இரண்டாவது முறையாக, வொல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட் படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான விருதினைத் தட்டிச் சென்றார். 


காமெடி மியூசிக்கல் வகையில் சிறந்த திரைப்படமாக அமெரிக்கன் ஹஸல் திரைப்படமும், டிராமா வகையில் சிறந்த படமாக 12 இயர்ஸ் எ ஸ்லேவ் படமும் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த இயக்குநருக்கான விருதை, உலகம் முழுவது வெற்றிகரமாக ஓடி, விமர்சகர்கள் பாராட்டையும் பெற்ற கிராவிட்டி படத்தை இயக்கிய அல்ஃபோன்ஸோ காரன் பெற்றர். சென்ற வருடம் கோல்டன் குளோபில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்ற ஜெனிஃபர் லாரன்ஸ், இந்த முறை சிறந்த உறுதுணை நடிகைக்கான விருதைப் பெற்றார்.


  • சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்ட அல்ஃபோன்ஸோ காரன்
    சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்ட அல்ஃபோன்ஸோ காரன்

முழு விருது விவரங்கள் பின்வருமாறு:

 
# சிறந்த திரைப்படம் (டிராமா) - 12 இயர்ஸ் எ ஸ்லேவ் 


# சிறந்த திரைப்படம் (காமெடி/மியூசிக்கல்) - அமெரிக்கன் ஹஸல் 


# சிறந்த நடிகர் (டிராமா) - மேத்யூ மெக்கானஹே (டாலஸ் பையர்ஸ் க்ளப்) 


# சிறந்த நடிகர் (காமெடி/மியூசிக்கல்) - லியார்னடோ டிகாப்ரியோ (வொல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட்) 


# சிறந்த நடிகை (டிராமா) - கேட் ப்ளான்செட் (ப்ளூ ஜாஸ்மின்) 


# சிறந்த நடிகை (காமெடி/மியூசிக்கல்) - ஏமி ஆடம்ஸ் (அமெரிக்கன் ஹஸல்) 


# சிறந்த அனிமேஷன் திரைப்படம் - ஃப்ரோஸன் 


# சிறந்த அயல்நாட்டுத் திரைப்படம் - தி கிரேட் பியூட்டி (இத்தாலி) 


# சிறந்த உறுதுணை நடிகர் - ஜாரெட் லிடோ (டாலஸ் பையர்ஸ் க்ளப்) 


# சிறந்த உறுதுணை நடிகை - ஜெனிஃபர் லாரன்ஸ் (அமெரிக்கன் ஹஸல்) 


# சிறந்த இயக்குநர் - அல்ஃபோன்ஸோ காரன் (கிராவிட்டி) 


thanx -  the tamil hindu

  • சிறந்த நடிகையாகத் தேர்வான ஏமி ஆடம்ஸ்
    சிறந்த நடிகையாகத் தேர்வான ஏமி ஆடம்ஸ்

Sunday, January 12, 2014

YEVADU- சினிமா விமர்சனம்(தெலுங்கு)-2013

அல்லு அர்ஜூனும்,காஜல் அகவாலும் லவ்வர்ஸ்,ஆனா அந்த ஊர்ல இருக்கும் தாதாவும் அதே காஜலை லவ்வறான்.அதனால ஏற்படும் தகராறுல காஜல் ஆள் அவுட்.அல்லு அர்ஜூன் முகம் எல்லாம் எரிஞ்சு ஹாஸ்பிடல் ல அட்மிட் ஆகறார்.இது ஒரு பக்கம்,அப்படியே வண்டியைத்திருப்புனா....


ராம்சரண்-ன் எதிரி சாய்குமார்(இவரும் தாதா தான்,)சவுரி இல்லாத ஃபிகரைக்கூட  ஆந்திராவுல பாத்துடலாம்,ஆனா தாதா இல்லாத சினிமாக்கதையைப்பாக்க முடியாது போல.3000 கோடி பிராஜக்ட்டுக்காக வில்லன் தாதா சாய் குமார் ஹீரோ இருக்கும் ஏரியாவில் நில ஆக்ரமிப்பு செய்யறான்.அதைத்தட்டி கேட்கும் ராம்சரனை  10 அடி நீளம் உள்ள  கத்தி(வாள்)யால28 தடவை குத்தி கொல்றான்.இப்போ ராம்சரண் ஹாஸ்பிடல்ல.


ஃபேஸ் ஆஃப் படத்தில் வருவது போல ராம்சரணின் முகத்தை(தோல்) ,அல்லு அர்ஜூனுக்கு வெச்சு ஆபரேஷன் பண்றாங்க.அவர் வந்து வில்லன் குரூப்பையும்,படம்  பாக்கும் ஆடியன்சையும் ஒரு சேரப்பழி வாங்கறார்,அய்யோ,அம்மா,முடியல.உஷ்,அப்பா

ஹீரோவா ராம்சரண்.இவர் 2 பாட்டுக்கு பிரமாதமா டான்ஸ் ஆடறார்.எமிஜாக்சன் கூட இடைவேளை வரையும்,அதுக்குப்பின் ஸ்ருதியோடவும் டூயட் பாடறார்.


எமிஜாக்சன் மதராசப்பட்டினம் ல அழகா வந்துபோவார்.இதுல எடுபடலை,மேக்கப் கர்ணகொடூரம்.ஜாக்கெட்,டிசைன்ல டெய்லர் தெச்ச பின் ஜாக்கெட் போட்ட பின் கத்திரிக்கோலால இந்தப்பக்கம் கொஞ்சம்,அந்தப்பக்கம் கொஞ்சம் வேணும்னே வெட்டிக்கிட்ட மாதிரி இருக்கு,சரி,ரசிச்சு வெப்போம்.


ஸ்ருதி,காரக்கொழம்பைத்தலைல ஊத்திக்கிட்ட  மாதிரி ஒரு செம்பட்டைத்தலை.ஃபோன் பண்ணி ஏன்?னு விசாரிச்சா அது தான் கோல்டன் ஹேராம்.ஹே!ராம்!  (யார்  யாரோ மோகன் லால் ஃபோன் பண்ணி அப்டிச்சொன்னார்,இப்டிச்சொன்னார்,ஐ ஆம் ஹேப்பி-ன்னார்னுஅடிச்சு விடும்போது,நாமும்,அடிச்சுவிட்டா என்ன?)

ஸ்ருதிக்கு லிப்ஸ்டிக் போட யாராவது சொல்லிக்கொடுத்தா தேவலை,அப்டியேஅப்பிக்குச்சு.லோகட்,ஜாக்கெட்,யார்,வேணா,எப்படி,வேணா
,போடலாம்,அதுக்கு.எந்த,தகுதியும்,தேவை,இல்லை,ஆனா,.லோ,ஹிப்,சேலை
கட்ட
தகுதி,வேணும்.தொப்பை,இருக்கக்கூடாது, இடையில்,வளைவு,இருக்கனும்.

இதை,எல்லாம்,கவனத்தில்,கொள்வது,நல்லது,அபாயகரமான,இறக்கத்தில்,
போகும்,ஊட்டி,சாலை,மாதிரி,லோ,ஹிப்,இறக்கமா,அதே,போல்,பயங்கரமான
லோ,கட்,ஜாக்கெட்டில்,டான்ஸ்,மூவ்மெண்ட்டில்,துள்ளல்கள்,அதிகம்

வில்லன்,சாய்,குமார்,நெத்தில,2,அடி,நீளத்துக்கு,3இஞ்ச்,அகலத்துலகுங்குமம்
,வெச்சு,காமெடி,பண்றார்.சாரி,அதுதான்,வில்லத்தனமாம்.முடியல.


இடைவேளை,வரை,வில்லன்,ஆட்களை,ராம்சரண்,ஸ்கெட்ச்போட்டு,
தூக்குவதிலேயே,போயிடுது.

அதுக்குப்பின்,ஃபிளாஸ்பேக்

ஓவர்,லிப்ஸ்டிக்,ஓமனா

படத்தில்,உருப்படியான,ஒரே,ஒரு,வசனம்


1.எதிரிகளுக்கு,நம்,மீது,இருக்கும்,பயம்,தான்,நமக்கு,முதலீடு

(இந்த,வசனத்தை,இன்னும்,எத்தனை,படத்துல,பாக்க?)


சபாஷ்,இயக்குநர்


1.எமி,ஜாக்சன்,ஸ்ருதி,காஜல்,அகர்வால்,என3,பேரை,புக்,பண்ணி(படத்துக்கு)
கொடுத்த,சம்பளத்துக்கு,இணையான,கிளாமர்,காட்ட,வெச்சது


2.அட்டகாசமான,3பாடல்கள்,2டூயட்,ஒரு,குத்தாட்டம்


சொதப்பல்ஸ்,சொப்னா


1.நடு,ரோட்டில்,வில்லனின்,அடியாள்,காரில்,இருந்து,பைக்கில்,இருக்கும்,
ஹீரோவை,சுடறார்.குறி,தவறிடுது,உடனே,வில்லனின்,அடியாள்,ஏன்,ஓடனும்

ஹீரோவிடம்,ஆயுதம்,இல்லையே?இன்னும்,சுட்டிருக்கலாம்


2,ராம்,சரண்,வில்லனின்,அடியாளை,சேஸ்,செய்யும்போது,அவன்,அடிபட்டு,

எதிர்பாராத,விதமா,இறந்துடறான்,அவனை,யார்,அனுப்பினாங்கனு,
ஹீரோவால,விசாரிக்க,முடியலடெட்,பாடி,பேண்ட்,சர்ட்,பாக்கெட்ல
செக்,பண்ணி,இருந்தா,செல்,ஃபோன்,கிடைச்சிருக்கும்,அதுல,மெசேஜோ,
ரிசீவ்டு கால்,பாத்திருக்கலாம்



சி.பி,கமெண்ட்-ஆந்திராவில்,செம,ஹிட்,னு,அடிச்சு,விடுவாங்க,யாரும்
நம்பிடாதீங்க. மாமூல் மசாலா ரிவஞ்ச் சப்ஜெக்ட் - ஸ்ருதியின் கிளாமர் தூக்கல் ,மீதி நேரம் தூங்கல் 


ஈரோடு,அண்ணா,தியேட்டரில்,படம்,பாத்தேன்


டிஸ்கி-ட்விட்டர் ல தல தளபதி ரசிகர்கள் பைட் நடக்குதேன்னு சலிச்சுப்போய் யவடு தெலுங்குப்படத்துக்குப்போனா அங்கே 2 க்ரூப் வீரமா? ஜில்லாவா?பைட்டிங்

-ரேட்டிங் = 2.25 / 5