Monday, January 06, 2014

2013 டாப் 10 நம்பிக்கைகள்

எழுச்சித் தமிழச்சி!
பாலகன் பாலச்சந்திரனின் மரணத்துக்கு முன்-பின்னான புகைப்படங்கள் தமிழகத்தில் உருவாக்கிய எழுச்சி, கல்லூரி மாணவர்களிடையே அனல் வேள்வியைப் பற்றவைத்தது. அந்த இளைஞர் பட்டாளத்தை, 'தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக் குழு’வாக ஒருங்கிணைத்தவர்களில் ஒருவர் திவ்யா

அறச்சீற்றத்துடன் வெடித்த திவ்யாவின் முழக்கங்கள், தமிழகக் கல்லூரி வளாகங்களில் பிரளயத்தை உருவாக்கின. அருப்புக்கோட்டையைச் சேர்ந்த திவ்யா, வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்குக் குரல்கொடுத்த கம்யூனிஸ்ட் களப்பணியாளர். பின்னாட்களில் மாணவர்களின் போராட்டக் கனல் தணிந்தபோதும், 'தமிழ்நாடு மாணவர் இயக்கம்’ என்ற பெயரில் இப்போதும் தமிழகம் முழுக்க இயங்கி வருகிறார் திவ்யா!
மிஸ்டர் கறார் ஐ.ஏ.எஸ்.!
டந்த செப்டம்பர் மாதம், திண்டுக்கல் சார் ஆட்சியராகப் பொறுப்பேற்றார் மதுசூதன ரெட்டி. அன்றே மணல் மாஃபியாக்களுக்கு எதிரான அதிரடி வேட்டையைத் தொடங்கினார். 200-க்கும் அதிகமான கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வுசெய்து, கிடப்பில் இருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பட்டாக்களை வழங்கவைத்தார். மிரட்டல்களைப் புறந்தள்ளி மணல் மாஃபியாக்களைத் துரத்தியடித்துக் கொண்டிருந்தவரை, இரண்டு மாதங்களுக்குள் பெரம்பலூருக்குத் தூக்கியடித்தது அரசு இயந்திரம். இப்போது பெரம்பலூரில் குவாரி முறைகேடுகளைக் குறிவைத்து வளைத்துக்கொண்டிருக்கிறார் மதுசூதன ரெட்டி!
மண்ணின் மைந்தன்!
யற்கை வளங்களை மாஃபியாக்கள் கொள்ளையடிப்பதை எதிர்த்து இடைவிடாமல் போராடும் வாஞ்சி நாதன், 'மனித உரிமைப் பாதுகாப்பு மையம்’ என்ற அமைப்பின் மூலம், கடந்த ஆண்டு கிரானைட் கொள்ளைக்கு எதிராகப் பெரும் பிரசாரத்தை முன்னெடுத்த வழக்கறிஞர். தென்தமிழகக் கடலோரப் பகுதியில் நடைபெற்று வரும் தாது மணல் கொள்ளைக்கு எதி ராகச் செயல்படும் இவரது தலைமையிலான உண்மை அறியும் குழு, தாது மணல் ஆலைகளுக்குள் புகுந்து, அதன் செயல்பாடுகளை முதன்முதலாக உலகத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தது. இயற்கை அன்னை மெச்சும் மண்ணின் மைந்தன்... இந்த வாஞ்சிநாதன்!
சகலகலா வல்லவன்!
கொத்தனார், சென்ட்ரிங் பணியாளர், பெயின்டர்... என கிடைத்த வேலைகளைச் செய்து ஜீவிக்கும் மதுரையைச் சேர்ந்த தங்கபாண்டி, இளம் தலைமுறையினருக்குப் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளைக் கற்றுத்தருவதை ஒரு தவமாகச் செய்கிறார். பரம்பரையாக சிலம்பம் சுற்றும் குடும்பத்தைச் சேர்ந்த இவர், தினமும் ஏராளமானோருக்கு சிலம்பம், பறை உள்ளிட்ட பல்வேறு கலைகளைக் கற்றுத்தருகிறார். ஏழை மாணவர்களிடம் கட்டணம் பெறாமல், இதுவரை
10 ஆயிரம் பேருக்குப் பயிற்சி அளித்திருக்கும் தங்கபாண்டி, இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் சென்று அரசு சார்பான விழிப்பு உணர்வு பிரசாரங்களையும் மேற்கொண்டிருக்கிறார். தன்னலம் கருதாத துரோணாச்சாரியார்!
இனிய இசைஞன்!
.ஆர்.ரஹ்மான் இசைப் பட்டறையில் இருந்து வந்த 'எலெக்ட்ரிக்’ இசைஞன் சந்தோஷ் நாராயணன். ஆஸ்திரேலியாவில் ஆடியோ இன்ஜினீயரிங் படித்த திருச்சிப் பையன்.  அறிமுக 'அட்டகத்தி’யில் பின்னணி இசை, அதிரடி கானா என பின்னியெடுத்த சந்தோஷ், திகில் 'பீட்சா’விலும் திடுக்கிடவைத்தார். சிட்னி 'சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா’, ஆஸ்திரேலியா 'ஸ்டுடியோ 301’ என நவீன இசை வடிவங்களை தமிழ் சூழலுக்கு அறிமுகப்படுத்தும் கலைஞன். 'காசு... பணம்... துட்டு... மணி மணி’ என கானாவுக்குப் புத்துயிர் கொடுத்த சந்தோஷின் இசை, ரோல்ஸ்ராய்ஸ் கார் முதல் ராயபுரம் கார்ஷெட் வரை தடதடக்கிறது... கலகலக்கிறது!
நியூ வேவ் படைப்பாளிகள்!
'சூது கவ்வும்’ நலன் குமாரசாமி - 'மூடர் கூடம்’ நவீன் ஷேக் தாவூத்... யதார்த்த மாந்தர்கள், பகடி வசனங்கள், எளியவர்களின் கொண்டாட்டங்களை திரையில் பதிவுசெய்த 'நியூ வேவ்’ இளைஞர்கள்!
'நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சிக்கு மிகக் குறுகிய இடைவெளிக்குள் படத்தை அனுப்பவேண்டிய கட்டாயத்தில், டெட்லைன் டென்ஷனில் தவிக்கும் ஒரு குறும்பட இயக்குநரின் கதையையே 'ஒரு படம் எடுக்கணும்’ என்று இயக்கி, அனுப்பிவைத்தார் நலன். அந்தப் படம் குவித்த 'வார்ம் வெல்கம்’ வரவேற்பு, நலனை சில்வர் ஸ்கிரீனிலும் சிக்ஸர் அடிக்கவைத்தது!
'மூடர் கூடம்’ திரைக்கதையில், 'நாலு திருட்டுப் பசங்களும் பார்ல குடிச்சுட்டு குத்தாட்டம் போடுற மாதிரி ஒரு டான்ஸ் சேருங்க’ என்று தயாரிப்பாளர்கள் கரெக்ஷன் சொல்ல... நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் சொந்த பேனரில் 'மூடர் கூடம்’ உருவாக்கி தமிழ் சினிமாவுக்கு வெரைட்டி விருந்து படைத்தார் நவீன். தரமான சினிமா ரசனைக்கு உத்தரவாதம் அளிக்கும் இளைஞர்கள்!
மாற்றி யோசித்தவர்!
சுமார் 400 பேர்... விழித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், தங்கள் போராட்டங்களால் 12 நாட்கள் சென்னையை ஸ்தம்பிக்க வைத்தனர். ஒன்பது அம்சக் கோரிக்கைகளுக்காகப் போராடிய அவர்களை ஒருங்கிணைத்தவர், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் சங்கத் தலைவர் நாகராஜன். ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் எது என்பதை கடைசி சில நிமிடங்களுக்கு முன்னர் முடிவு செய்வது, சிறுசிறுக் குழுக் களாகப் பிரிந்து பல்முனை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது என காவல் துறையினரைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது 28 வயது நாகராஜனின் ஒருங்கிணைப்பு. அந்தக் கோரிக்கைகள் தமிழக அரசின் உத்தரவாக மாறவிருப்பது, இவர்களின் வியூகம்-வியர்வைக்குக் கிடைத்த வெற்றி!
நீச்சல் ஏஞ்சல்!
ண்ணனின் நீச்சல் பயிற்சியைப் பார்க்கச் சென்ற ஜெயவீணாவுக்கும் நீச்சல் ஆசை தொற்றிக்கொள்ள, இரண்டரை வயதிலேயே குளத்துக்குள் குதித்துவிட்டார். இப்போது 15 வயதில் சீனியர்களுடன் தேசிய நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப் பதக்க வேட்டையாடி வருகிறார் ஜெயவீணா. 50 மீட்டர் ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் மற்றும் 200 மீட்டர் இண்டிவிஜுவல் மெட்லே பிரிவில் ஜெயவீணாவை வெல்ல இந்தியாவில் இப்போதைக்கு ஆளே இல்லை. 2016 ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க நம்பிக்கை ஜெயவீணாவின் ஸ்ட்ரோக்குகளில் இருக்கிறது!  
கிராண்ட் மாஸ்டர்களின் மாஸ்டர்!
19 வயதுக்குட்பட்டோருக்கான செஸ் போட்டியில் பட்டம் வென்றபோது, அரவிந்தனின் வயது 12. இந்தியாவில் மிகக் குறைந்த வயதில் அந்தப் பட்டம் வென்ற அரவிந்தன், காமன்வெல்த் போட்டியில் 'அண்டர் 14’ பிரிவில் தங்கம் தட்டினான். இந்த ஆண்டு ஆசிய செஸ் போட்டியில் தங்கம் வென்ற அரவிந்தன், சென்னையில் நடைபெற்ற சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டித் தொடரில் 6 கிராண்ட் மாஸ்டர்களோடு மோதி சாம்பியன் பட்டம் தட்டியது மாஸ்டர் மூவ். விஸ்வநாதன் ஆனந்தை சமீபத்தில் வீழ்த்திய மேக்னஸ் கார்ல்சனின் அதிவிரைவாகக் காய்களை நகர்த்தும் பாணிதான் அரவிந்தனின் ஸ்டைலும்!
எள்ளல் ரசிகன்!
விஞர், புவியியல் ஆசிரியர் என இரு தளங்களிலும் சீரான படைப்பூக்கங்களை அளிக்கும் லிபி ஆரண்யாவின் இயற்பெயர் சரவணன். மதுரையில் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் லிபி எழுதிய 'தப்புகிறவன் குறித்தான பாடல்கள்’, 'உபரி வடைகளின் நகரம்’ ஆகிய இரண்டு நவீனக் கவிதைத் தொகுப்புகள் சூழலியல், தனியார்மயக் கொள்கைகள், பி.வி.சி. பைப் புழக்கத்தால் அதிகரிக்கும் உடல்நலக் கோளாறு... என சமகாலப் பிரச்னைகளைப் பேசும். தமிழ்நாடு பாடநூல் ஆசிரியர் குழுவின் 13 புத்தகங்களின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கெடுத்தவர். கவிதைகளை, சிறுகதைகளை எள்ளல் நகைச்சுவையுடன் விமர்சிப்பதில் தனி பாணியை உருவாக்கியவர்.


Thanks - Vikatan

CAPTAIN PHILLIPS - சினிமா விமர்சனம் ( சினிமா எக்ஸ்பிரஸ்)

 

'

கேப்டன் பிலிப்ஸ் (CAPTAIN PHILLIPS)

உண்மையில் நடந்த சம்பவங்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் "கேப்டன்ஸ் டியூட்டி: சோமாலி பைரேட்ஸ், நேவி சீல்ஸ் அண்ட் டேன்ஜரஸ் டேஸ் அட் ஸீ'.  அமெரிக்காவைச் சேர்ந்த எம்.வி.மார்ஸ்க் அலபாமா என்ற சரக்கு கப்பல் ஒன்று 2009ஆம் ஆண்டு சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்படுகிறது. இருநூறு ஆண்டு கால சரித்திரத்தில் ஆமெரிக்க சரக்குக் கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்படுவது இதுவே முதல் முறை. 
 
 
 
 உலகமயமாக்கல் காரணமாக பாதிக்கப்படும் பொருளாதார சீர்குலைவின் பின்னணியில் சோமாலிய கடற்கொள்ளைகளை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது இந்தப் படம்.  ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை வென்ற டாம் ஹான்ஸ் கப்பல் கேப்டன் வேடத்தில் அமர்க்களமாக நடித்திருக்கிறார். ஏற்கெனவே இவர் நடித்த "கேஸ்ட் அவே' "ஃராரஸ்ட் கம்ப்', "சேவிங் பிரைவேட் ரயான்', "தி டாவின்ஸி கோட்' ஆகிய படங்களைப் போலவே இந்தப் படத்திலும் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்படுகிறது. 
 
 
 
 டாம் ஹான்ஸ் பாத்திரத்துக்கு ஈடு கொடுத்து முசி என்ற பெயருடைய சோமாலியா கடற்கொள்ளையர்களின் தலைவன் வேடத்தில் நடித்திருப்பவர் பர்கத் அப்ரி.  கப்பல் கேப்டனுக்கும் கடற்கொள்ளையர்களின் தலைவனுக்கும் இடையே ஏற்படும் உணர்வு பூர்வமான போராட்டத்தில் மனித மனதின் இயல்புகளும் வெளிப்படுகின்றன.  "போர்னி' தொடர்கள் மூலம் புகழ் பெற்ற பால் கிரீன்கிராஸ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.  ஹென்ரி ஜாக்மேனின் இசையும், பேரி அக்ராயிடின் ஒளிப்பதிவும் படத்துக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்திருக்கின்றன.
 
 
 
 
  இவற்றுடன் படத்தின் விறுவிறுப்புக்கு வெகுவாகத் துணை நிற்பது பில்லி ரே எழுதிய திரைக்கதைதான். சோமாலிய கடற்கொள்ளைகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை இதுவரை ஊடகங்களில் அதிகமாக வெளிச்சமிட்டுக் காட்டப்படவில்லை என்பதால் இந்தப் படம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.  சோனி பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் விரைவில் தமிழகமெங்கும் திரையிடப்படவிருக்கிறது.
 
 
thanx- cinema express

காமசூத்ரா 3டி-படத்துல யாருக்கும் hதுணி யே கிடையாது???

1, நானும் அரசியல் கட்சித் தலைவர்தான் -சரத்குமார் # நீங்களே சொல்லிக்கிட்டாதான் எல்லாருக்கும் தெரியும்



=====================


2, மோடிக்கு ஆதரவாக வீட்டுக்கு வீடு பிரசாரம் செய்வேன்:பாபா ராம்தேவ்# பாபா ,(ஹே)ராம் ,னு எல்லாம் தோல்விப்படமாவே இருக்கே.பேர் ராசி சரி இல்ல



====================



3,மோடியை ராமபிரான் கடவுளுடன் ஒப்பிட்ட ராஜ்நாத் சிங் # நம்ம பசங்க வில்லங்கமானவங்க.அப்போ சீதா யார்?னு கேப்பாங்ளே?




===================



4,முருகதாஸ் படத்தில் விஜய் கொல்கத்தா தாதாவாக நடிக்கப் போகிறாராம் - செய்தி # கொன்னுட்டாரு ;-))



==================



5,காங்கிரஸ் ஆட்சியில் தான் மதக்கலவரங்கள் நடக்கின்றன: தேவகௌடா: # அவங்க ஆட்சில தான் மத யானைக்கூட்டம் கூட ரிலீஸ் ஆகி இருக்கு



================



6,காலபோக்கில் ஏற்பட்ட சுழற்சியினால் காங்கிரஸ் தனிமைபடுதப்பட்டுள்ளது-ப.சி# வயிற்றுப்போக்கே வரப்போகுது 2014 தேர்தல் ல



==================



7  தேமுதிக வந்தால் பெரிய வெற்றி கிடைக்கும்... பொன். ராதாகிருஷ்ணன் # தாமரை ,முரசு 2ம் 3 எழுத்து.சின்ன பொருத்தம் சரி.குணப்பொருத்தம் இல்லயே



=================



8,பிறந்தது ம.பா.க... அவைத் தலைவரானார் டிராபிக் ராமசாமி.. தென் சென்னையில் போட்டி! # ஊருக்கு ஊர் ஆம் ஆத்மி ,டிராபிக் ராமசாமிகள் உருவாகனும்


==================


9,காங்கிரஸ் எந்த சவாலையும் சந்திக்கும்: வேலைவாய்ப்பு முகாமில் ஞானதேசிகன் பேச்சு.#,சந்திச்சா போதுமா? சவால் ல ஜெயிக்கனும்.முடியுமா ?


=================



10 என்னிடமிருந்த துடிப்பை கெஜ்ரிவாலிடம் காணுகிறேன் -கலைஞர்# கமலிடம் இருந்த நடிப்பை உங்களிடம் காண்கிறோம் தலைவா !,பிரமாதம்.பின்னீட்டீங்



==================



11 உடன்பிறப்பே, திருச்சி மாநாட்டுக்கு குடும்பத்தோடு கிளம்பிவா! - கருணாநிதி # தலைவர் குடும்பத்துலயே ஷார்ட்டேஜ் அட்டென்ட்டென்ஸ் தான்




===================


12 வரும் தேர்தலில் அதிமுக அட்ரஸ் இல்லாமல் போகும்! - ராமதாஸ் # போயஸ் பங்களாவை இவர் வாங்கிடுவார் போல



======================



13,பிரதமர் பதவி வேண்டாம், ராகுலை வழிநடத்துவேன்! - மன்மோகன்சிங் # நடத்திக்கூட்டிட்டுப்போக அவர் என்ன அஜித் தா? கார்ல கூட்டிட்டுப்போங்க


==================


14,தமிழகத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தது- செய்தி # பொதுவா இங்கே சேலை விபத்தும் ,சேலைகளால் ஏற்படும் ஆபத்தும் தான் அதிகம்



====================


15,மாமனார் அமிதாப் உடன் நல்லுறவு .மாமியார் தான் பிரச்சனை.- ஐஸ்வர்யா ராய் # உலக அழகியா இருந்தாலும் மாமியார் மெச்சிய மருமகள் ஆக முடியாது போல்




=====================



16,தோற்றுப் போவீர்கள், போங்கள்.. தா.பா. ஆவேசம் # பத்தினிங்க சாபமே பலிக்காத காலத்துல அரசியல்வாதிங்க சாபம் பலிக்கவா போகுது?



===================



17,எனக்கு 22 வயசு தான் ஆகுது - ஹன்சிகா #,அடேங்கப்பா.நான் கூட 36 இருக்கும் னு நினைச்சேன்



=================


18  தொடர்ந்து மி்ரட்டல் வருகிறது.. எஸ்.வி.சேகர் புகார் # வாரா வாரம் கட்சி மாறிட்டே இருந்தா பழைய் கட்சி ஆளுங்க மிரட்டத்தான் செய்வாங்க


==================



19  பெண்களுக்குப் பாதுகாப்பு தேவையென்றால் ஜெ. பிரதமராக வேண்டும்- அமைச்சர் செந்தூர் பாண்டியன் # அப்போ ஆண்களுக்கு பாதுகாப்பு தேவைன்னா?




==================


20காமசூத்ரா 3டி மிகவும் துணிச்சலான ,வெளிப்படையான படமா இருக்கும் - இயக்குநர் ரூபேஷ் பால் # படத்துல யாருக்கும் துணி யே கிடையாது போல




======================

நித்யானந்தா ஆசிரம அட்ரஸ்

1.பொண்ணு திருப்பதி லட்டு மாதிரி இருப்பா மாப்ளை.



வேற இடம் பாருங்க தரகரே.மாப்ளைக்கு சுகர் இருக்கு



=====================



2, நியு இயர் அன்று ஆபீஸ் போலாம்னு டிசைட் பண்ணியாச்!!! :)"



அன்னைக்காவது வேலை செய்ங்க மேடம்



===================



3 சார்.உங்க கிளாஸ் எங்கே?



 சரக்கு சாப்ட்டதும் டாஸ்மாக்லயே.வெச்ட்டு வந்துட்டேன். எடுத்துட்டு வர மாட்டேன்.



===================


4 மேடம்.நீங்க ஏன் மேக்கப்பே போட்டுக்கலை ?



 பியூட்டி பார்லர் ஓனர் - கெமிக்கல்ஸ் ,காஸ்மெடிக்ஸ் எல்லாம் ஸ்கின் க்கு அலர்ஜி ஆகிடும்ங்க



======================



5, லேடி - டாக்டர்.ரோஜாப்பூ மட்டும் தான் தலைல வைக்கறேன்.ரோஸ் மில்க் மட்டும் தான் சாப்பிடறேன். ஏன் இப்டி?



 நீங்க ரோஸ் நோயர் ஆகிட்டீங்க போல



==================


6,மிஸ்! லைப்ரரில ஒரு இங்க்லீஷ் புக் எடுத்தப்ப உங்க நினைவு தான் வந்தது.நீங்க போடற ட்வீட்ஸ் மாதிரி அந்த நாவலும் எதுவும் புரியப்போறதில்ல




===================


7,உங்க டிரஸ் ,பாப்பா டிரஸ் ,என் டிரஸ் எல்லாத்தையும் நீங்க அயர்ன் பண்ணிடுங்க.நான் பீரோல அழகா அடுக்கி வெச்சுடறேன். # அடுக்கு மல்லி வில்லி




==================



8. மேடம்.என் கனவுக்கன்னி நீங்க தான்



. நடிகை - நான் கன்னி னு உனக்கு எப்டி தெரியும்?



==================



9 டியர்.முன்னூத்தி நாப்பத்தி ஒண்ணு.



என்ன சம்பந்தம் இல்லாம உளர்றீங்க?



நீ தானே 1 4 3 சொல்லிட்டு திருப்பி அதை சொல்லச்சொன்னே?



====================


10 கோபமா இருக்கும் மனைவி - வீட்டுக்கு எத்தனை மணிக்கு வருவீங்க?




புத்திசாலி முன் யோசனைக்கணவன் - ஆபீஸ் ல மேனேஜர் விட்ட அடுத்த 10 வது நிமிடம்



=====================



11, சார்.உங்க படத்துல லட்சுமி மேனன் ஹீரோயினா நடிச்சிருந்தா என்ன டைட்டில் வைப்பீங்க ?



மத மத யானைக்கூட்டம்



======================



12, டியர்.ஆபீஸ் ல என் சம்சாரம் ராட்சசி மாதிரி னு சொன்னீங்களாமே?



 நோ நோ .மாதிரி யை நான் யூஸ் பண்ணவே இல்ல



==================


13, டீச்சர்க்குப்பக்கத்துல பாம்பு இருந்ததை ஏன் அவர் கிட்டே சொல்லி எச்சரிக்கலை?



 இதுவும் கடந்து போகும் னு அசால்ட்டா விட்டுட்டேன்




====================



14,சைக்காலஜி மிஸ் சைலஜா = அழகு ,பேரழகு என்ன வித்தியாசம் ?



மிஸ்! நீங்க் போட்டிருக்கும் செயின் அழகு.அதில் இருக்கும் டாலர் பேரழகு


=================



15. இந்தக்காலப்பெண்கள்கிட்டே பதி பக்தியே இல்லையே ஏன் மேடம் ?



 பெரும்பாலான பதி(கள்) பக்கி (களா)யா இருப்பதால்தான்



===================



16, என்ன சார்? குனிஞ்சு உக்காரு னு படத்துக்கு டைட்டில் வெச்சிருக்கீங்க?




நிமிர்ந்து நில் பாகம் 2 ங்க இது



==================



17.நித்தி - கண்ணே! உன் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துடுச்சே எதுக்கு?



ஜிஞ்சிதா - அது தெரில.ஆனா ஆசிரமத்துக்குள்ள CBI புகுந்துடுச்சு.ரெய்டு


-===================


18. நித்யானந்தா ஆசிரம அட்ரஸ் யாருக்காச்சும் தெரியுமா?"


ரஞ்சிதா ,டோர் நெம்பர் 143 .ஆனந்தமயி தெரு ,விழுப்புரம்-69



===================



19  ஹலோ! MR.என் பேரு ஆனந்தி.எதுக்கு ரஞ்சிதான்னு கூப்பிடறீங்க?



 மிஸ்! ரஞ்சிதா ஆனந்தமயி ஆகிட்டா ஆனந்தி களெல்லாம் ரஞ்சிதா தானே? # IF A=B .=A



======================


20  தமிழ் மிஸ் தன்யா .-வேதாளம்னு எழுதச்சொன்னா வதளம் னு எழுதி இருக்கியே?



 லொள் மாணவன் -வேதாளத்துக்குத்தான் கால்களோ ,கொம்போ கிடையாதாமே.மிஸ்



========================

Sunday, January 05, 2014

ஜெ.சி.டேனியல் - சினிமா விமர்சனம்



மலையாள மொழியில் முதல் திரைப்படத்தை இயக்கி, தயாரித்த ஒரு தமிழரின் கதைதான் "ஜெ.சி.டேனியல் படம் மொத்தமும்!


மலையாளத்தின் முதல் மவுன திரைப்படமான "விகிதகுமாரன் படத்தை 1928-ல் தயாரித்து, இயக்கி நடித்து 1930--ல் அதை வெளியிட்டு சாதி வெறியர்களின் எதிர்ப்புக்கு ஆளான ஜெ.சி.டேனியலின் கஷ்டமும், நஷ்டமும் தான் இப்படம் மொத்தமும் என்றாலும், அதை சூடாகவும், சுவாரஸ்யமாகவும், வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கியிருக்கும் விதத்தில் ரசிகர்கள் மனதை உருக்கி விடுகிறார் இயக்குநர் கமல்!



வடக்கே தாதா சாகிப் பால்கே, சென்னையில் நடராஜ முதலியார் உள்ளிட்டோர் இந்தியிலும், தமிழிலும் திரைப்படங்கள் உருவாக்குவது கேள்விப்பட்டு அவர்களை சந்தித்து தானும் மலையாள மொழியில் படமெடுக்க கிளம்புகிறார் அன்றைய கேரளாவில் இணைந்திருந்த இன்றைய தமிழகத்தின் நாகர்கோயில் பகுதியை சேர்ந்த பெரும் பணக்காரரான ஜெ.சி.டேனியல், தன் சொத்து பத்துக்களை எல்லாம் மனைவியின் சம்மதத்துடன் விற்று கேமிரா வாங்கி, ஸ்டுடியோ அ<லுவலகம் எல்லாம் அமைத்து படப்பிடிப்பு நடத்தி எத்தனைக்கும் டேனியலுக்கு, நாயகியாக நடிக்க வந்த வடக்கத்திய இறக்குமதி நடிகை தனக்கு அது வேணும், இது வேணும் என கேட்டு தொல்லை கொடுக்கிறார்.


(அப்பவேவா.?!) அதனால் அவருக்கு "பேக்கப் சொல்லிவிட்டு லோக்கலிலேயே ஆள் தேடுகிறார் டேனியல், ஆனால் குதிரை கொம்பாக இருக்கிறது. அதனால் நாடங்களில் நடிக்கும் கீழ்ஜாதிப் பெண் ஒருவரை தேடிப்பிடித்து தன் படத்தில் நாயர் பெண்ணாக நடிக்க வைத்து, ஒருவழியாக படத்தை முடித்து திரைக்கு கொண்டு வருகிறார்.


திருவனந்தபுரத்தின் பெரிய திரையரங்கில் படம் திரையிடப்படுகிறது. கீழ்ஜாதிப்பெண், நாயர் பெண்ணாக நடித்திருப்பது கண்டு ஊரும், உயர் ஜாதியினரும் கொந்தளிக்கின்றனர். முதல் ரீலிலேயே படத்தை நிறுத்தி, நாயர் பெண்ணாக நடித்த ரோஸி எனும் ரோஸம்மாவை கொலை வெறியுடன் துரத்துகின்றனர்.


அவர்களிடமிருந்து ரோஸி தப்பி பிழைத்தாரா?, ஜெ.சி.டேனியலின் நிலை என்ன.? மீண்டும் விகிதகுமாரன் மீண்டு திரையிடப்பட்டதா? இல்லையா? எனும் கேள்விகளுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் அளிக்கிறது இப்படத்தின் மீதிக்கதை!


மலையாள சினிமாவின் பிதாமகனாக, தமிழன் ஜெ.சி.டேனியல் நாடாராக பிருத்விராஜ், நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார். அவரைமாதிரியே அவரது மனைவி ஜேனட் டேனியலாக மம்தா மோகன்தாஸூம் பிரமாதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். சேலங்காடு கோபால கிருஷ்ணனாக டேனியலுக்காக கேரள அரசிடம் போராடும் பாத்திரம், ரோஸி அலைஸ் ரோசம்மா, பி.யூ.சின்னப்பாவாக வரும் மதன்பால் உள்ளிட்டவர்களும் தங்கள் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.


பெரும் பணக்காரராக பிறந்து படம் எடுக்கிறேன் என எல்லா பொருளையும் இழந்து, இடையில் பெரிய பல் மருத்துவராகவும் பயின்று பணிபுரிந்து இறுதியில் எண்ணற்ற பிள்ளைகள் இருந்தும் எதுவும் இல்லாமல் தான் எடுத்த படத்தின் பிரிதி கூட இல்லாமல் நோய்வாய்பட்டு இறுந்த ஜெ.சி.டேனியலின் வாழ்க்கையை அற்புதமாக நம் கண் முன் காட்சிக்கு காட்சி நிறுத்துகிறார் இயக்குநர் கமல்.


அதற்கு பிருத்விராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்களும், வினுவின் ஒளிப்பதிவும், எம்.ஜெயசந்திரனின் இயல்பான இசையும் பெரிதும் துணை நின்று "ஜெ.சி.டேனியல் திரைப்படத்தை பெரும் காவியமாக்கிவிடுகின்றன!


மொத்தத்தில், "ஜெ.சி.டேனியல், திரையுலக வரலாற்றில் ரசிகர்களும், திரையுலகினரும் காணவேண்டிய "இளவேனில்!

Thanks - Dinamalar

தாமரை யின் மறை கழண்ட நிலை்"

1. எந்திரன் பார்ட் 2 – மீண்டும் இணைகிறார்கள் ஷங்கரும் ரஜினியும் #
பார்ட் பார்ட்டா எடுத்துத்தள்ளுங்க.வசூலை அள்ளுங்க




2 காங்கிரஸ் தமிழர் நலனுக்கு எதிரான கட்சி-கலைஞர்# ஓஹோ! திமுக மாதிரி
தானா அதுவும்? ரொம்ப லேட் பிக்கப் தலைவா நீங்க



3  திமுகவால் ஏற்பட்ட கறை நீங்கியது-ஈவிகேஎஸ்# நேற்று வரை கறை நல்லதுன்னு
சொல்லிட்டிருந்தீங்க?




4  3வது முறையாக காங்கிரஸ் ஆட்சியமைக்கும்-வாசன்# ஹாட்ரிக் அடிக்க
முடியாது என்பதே இப்போதைய ஹாட் நியூஸ்




5 காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது-ஞானதேசிகன்# திரும்புன பக்கம் எல்லாம்
அடி பலமா உள்ளதுன்னு சொல்லுங்க்ணா



6  மோடி ஒரு விளம்பர பிரியர்-கலைஞர்# தலைவர் கண்ணாடியே பார்க்க மாட்டார்
போல.நம்மை மீறி இந்த ஜில்லாலயே யாருக்கும் உங்க அளவு வீரம் இல்லை தலைவா




7 தமிழகத்தின் ராஜபக்சே கருணாநிதி-நாஞ்சில் சம்பத்# அண்ணனுக்கு
புதுக்கார் வாங்க ஆசை போல.மேடம்.கவனிங்க



8   தமிழர் நலனில் காங்கிரஸ் அக்கறையாக இருக்கிறது-நாராயணசாமி# கறையாக
இருக்க்கிறது ன்னு சொல்லுங்க



9 அஜீத்தின் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த மர்ம வாலிபர்கள்: -செய்தி.#
பீரோல இருப்பதைத்திருடி இன்னொருக்கா அவரை மொட்டை அடிக்க பிளான்?



10 ஊழலற்ற ஆட்சிக்கு உத்தரவாதம் அளித்தால் ஆம்ஆத்மிக்கு ஆதரவு-காங்#
லாஜிக் இடிக்குதே.நீங்க ஆதரவு குடுத்தா அது ஊழல் ஆதரவு
குடுத்தமாதிரிதானே?



11 திராவிட கொள்கைக்கு கேடு விளைவிக்காத கூட்டணி அமைப்போம்-கலைஞர்
#டிராவிட்டின் பேட்டிங் நுணுக்கமும் திராவிடக்கொள்கையும் 1,யாருக்கும்
புரியாது"



12 நான் நிரபராதி-சி.பி.ஐ. போலீசார் என்னை அநியாயமாக சிக்க வைத்து
விட்டனர்: லல்லு புலம்பல். # சிபிஐ செஞ்ச உருப்படியான வேலைகள் ல இதுவும்
1



13  பாகிஸ்தான் நடிகைக்கு உடல் ரீதியாக இம்சை: "பிக் பாஸ்" போட்டியாளர்
நடிகர் அர்மான் கோலி கைது..# BIG BOSS இப்போ PIG BOSS ஆகிட்டாரா?



14 முள்ளிவாய்க்கால் முற்றம் யாருக்கும் எதிரானது அல்ல: பழ.நெடுமாறன் ி.#
இப்டி பேசுனா அது ஆளுங்கட்சிக்கு எதிரானது.ஜெ வின் எண்ணங்கள் புதிரானது



15  ஹிட்லர்’ மோடியும் ‘முசோலினி’ முலாயம் சிங் யாதவும் கூட்டாளிகள்-
மத்திய மந்திரி # மோடிக்கு நீங்க குடுத்த பட்டத்திலேயே ஹிட் இருக்கே?




16 காங்கிரசின் சுமை நீங்கி விட்டதாக கருதுகிறோம் - EVKS இளங்கோவன்#
பாவச்சுமை காலாகாலத்துக்கும் இருக்கும்



17 தி.மு.க., என்ற அழுக்கு மூட்டையை பா.ஜ., சுமக்காது: இளங்கோவன் # இப்போ
நீங்க காங்கிரஸ்ல இருக்கீங்க்ளா? பி ஜே பிலயா?



18 பேஸ்புக்கில் நடிகை என்று ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்த மோசடி
ராணிக்கு சென்னை போலீஸ் வலை! # போலீஸ் ஏன் அந்தப்பொண்ணுக்கு வலை
விரிக்குுது?



19 மோடி கனவு நிறைவேறாது: லாலு # இது நீங்க ஜெயில் ல இருந்தப்ப கண்ட
கனவா? இந்தக்கனவு மட்டும் நிறைவேறுமா?."



20 புத்தாண்டு பார்ட்டியில் வெறும் 7 நிமிடம் ஆட ரூ.6 கோடி
வாங்கும்பிரியங்கா சோப்ரா # அப்டி ஓவர் சம்பளம் கொடுக்கும் புண்ணிய கோடி
யாருங்கோவ்?



21   ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்று சாதனை படைத்த மகாராஷ்ட்ரா
பெண் # அடேங்கப்பா தசாவதாரத்தாய்.மகா ராவா



22   கூட்டணி அமைக்க திமுக வந்தால், பாஜக பரிசீலிக்கும்: நிர்மலா
சீதாராமன் # தாமரை யின் மறை கழண்ட நிலை்"



23  தனுஷ் ஜோடியாக லட்சுமி மேனன்! - விஷால் எங்கிருந்தாலும் வந்து இதை
தட்டி கேட்கவும்



24   சாமானிய மக்களால்தான் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும் : அரவிந்த்
கெஜ்ரிவால் # அவனையே அவனால காப்பாத்திக்க முடியல, நாட்டை எப்டி?



25   தமிழகத்தில் தனித்து விடப்படும் காங்கிரஸ்,DMK,ADMK கை விரிப்பு#
செல் ஃபோன் ரிங்க் டோன் = தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்




26 25 வது படமான வேலையில்லா பட்டதாரி யில் ஒரு மெசேஜ் சொல்றேன் - தனுஷ் #
அடடா, அதை செல்லுக்கு sms செஞ்சா போதுமே? எதுக்கு மெனக்கெட்டு சினிமா?



27 நம்பிக்கை துரோகம் செய்த காங்கிரசுடன் கூட்டணி இல்லை:- கருணாநிதி #
இவர் கூடத்தான் தமிழர்களுக்கு துரோகம் செஞ்சாரு, நாம ஓட்டு போடலை?

Saturday, January 04, 2014

நம்ம கிராமம் - சினிமா விமர்சனம்



இந்தியா வெள்ளையர்களுக்கு அடிமைப்பட்டு கிடந்த காலகட்டத்திலும், அதற்கு முன்பும், நம் சமூகத்தில் இருந்த பெண் அடிமைத்தனத்தையும், பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் விளக்கும் அழகிய பீரியட்பிலிம் தான் "நம்ம கிராமம்! நடிகர் மோகன் சர்மாவின் இயக்கத்தில், மலையாளத்திலும், தமிழிலும் வெளிவந்திருக்கும் முத்தாய்ப்பான படமும் கூட!


பாலக்காடு பகுதியை சேர்ந்த ஒரு சிறிய கிராமத்தில் பெரும் பணத்துடனும், பேரும் புகழுடனும் வாழும் ராவ் பகதூர் சுப்பிரமணிய சர்மா எனும் மோகன் சர்மாவுக்கு அன்பான குடும்பமும் உண்டு, ஆசை நாயகியும் உண்டு! அவரது கூட்டு குடும்பத்தில் அவரது தங்கை ரேணுகாவின் மகள் துளசி எனும் சும்விருத்தா சுனிலுக்கு பார்த்து பார்த்து அவர் சிறுமியாக இருக்கும் போதே குழந்தை விவாகம் செய்து வைக்கிறார் ராவ் பகதூர்.


திருமணம் முடிந்த கொஞ்ச நேரத்திலேயே பாம்பு கடித்து மணமகன் இறந்து போக மொத்த குடும்பமும் துக்கத்தில் திளைக்கிறது. ஆனால் மோகன் சர்மாவின் விதவை தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்க மொட்டை அடிக்கும் வைபவம் மட்டும் தள்ளி வைக்கப்பட்டு, மற்றபடி வீட்டின் இரண்டாங்கட்டில் விதவை பாட்டியுடன் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளில் வைக்கப்படுகிறார் துளசி! இதைக்கண்டு சர்மாவின் மகனும், துளசியின் மாமன் மகனுமான கண்ணன் கொதிக்கிறான்.


ஒருகட்டத்தில் துளசிக்கும் மொட்டை என குடும்பம் மொத்தமும் களம் இறங்கும்போது சுகுமாரி பாட்டி தீக்குளிக்கிறார். அதையே காரணமாக வைத்து கண்ணன், துளசி கழுத்தில் மறுதாலிகட்டி புரட்சி படைப்பதோடு அந்த வீட்டையும், கிராமத்தையும் ஒதுக்கி வைத்து மனைவியுடன் பட்டணம் புறப்படுகிறான். இது தான் "நம்ம கிராமம்! இது எல்லாம் சுதந்திர போராட்ட காலத்தில் நடப்பதும், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும் நாளில் துளசிக்கும் சுதந்திரம் கிடைப்பதில் தான் டைரக்டர் மோகன் சர்மாவின் டச் ஜொலிக்கிறது.



மோகன் சர்மா, மறைந்த சுகுமாரி, பாத்திமா பாபு, பேபி சம்ஜா, சம்விருத்தா சுனில், மாஸ்டர் சச்சின், கண்ணன், டாக்டர் ராதிகா, ரேணுகா உள்ளிட்ட எல்லோரும் பாலக்காட்டு பிராமணர்களாகவே நடித்து சுதந்திர போராட்ட காலத்திற்கு நம்மை அழைத்து செல்வது "நம்ம கிராமம் படத்தின் பெரிய பலம்! அதிலும் அந்த பைத்தியகார கிழவியாக வரும் பாட்டியாகட்டும், மாஸ்டர் நெடுமுடி வேணுவாகட்டும் எல்லோரும் நம்ம கிராமத்தில் நம்மை லயிக்க வைப்பது சூப்பர்ப்!


மது அம்பாட்டின் அழகிய ஓவிய ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு மற்றும் மோகன் சர்மாவின் எழுத்து, இயக்கம், தயாரிப்பு எல்லாம் மெய்சிலிர்ப்பு!


மொத்தத்தில், ""நம்ம கிராமம் - நல்ல ப(பா)டமாகும்!


Thanks - Dinamalar

ஜில்லா VS வீரம் -காமெடி கும்மி -பாகம் 3

1.ஜில்லா வில் ஹீரோஸ் =2 , ஜில்லா டீசர் இதுவரை வந்தவை =2,டீசர் 2 லும் டைம் டியூரேசன் =11 விநாடி = கூட்டுத்தொகை = 2 #ரெட்டை இலைக்கு சவால் ?




===================


2.இந்த மாசம் வீரத்தின் அடையாளமா இரு தினங்கள் .1 வீர பாண்டியக்கட்ட பொம்மன் பிறந்த நாள் (3 1 14) , 2 இன்னொண்ணு ஊருக்கே தெரியும் ( 10 1 14)



====================


3. ஜில்லா VS வீரம் எது ஹிட் ஆகும்? கற ஒரு விவாதத்துல ஒரு அதி மேதாவி " அஜித் டென்த் ல பெயில்" ங்கறார் # அய்யோ ராமா ;-)))




===================


4.தீபாவளி டார்கெட் ஏ சென்ட்டர். பொங்கல் டார்கெட் பி ,சி சென்ட்டர் - ஸ்டெப் பை ஸ்டெப்பா முன்னேறுவோர் சங்கம்



===================


5.சார்.சால்ட் & பெப்பர் ஸ்டைலிஷ் லுக்கை சிலர் தாத்தா மாதிரி இருக்குனு கிண்டல் பண்றாங்களே?


விட்டுத்தள்ளுங்க.ஹாலிவுட் ஸ்டைல் அப்டேட் ஆகாதவங்க


=======================


6 மோகன்லால் - நவம்பர்ல கீதாஞ்சலி ஊத்திக்குச்சு. டிசம்பர்ல த்ரிஷ்யம் மெகாஹிட்டு. ஜனவரில ஜில்லா,? விஜய் - வாழ்க்கை ஒரு வட்டம்.1 ஓடுனா 1 ஓடாது



=====================



7./சார், நீங்க டான்ஸ் ஸ்பெஷலிஸ்ட் தானே? டீசர்ல டான்ஸ் சீன் காட்டாம ஃபைட் சீன் எதுக்கு?



சும்மா இருங்க, ஆல்ரெடி ஆடிப்போய் இருக்கேன்



=====================



8,பொங்கலுக்கு இளைய தளபதி படம் 2 ரிலீஸ் ஆகுது . 1 ஜில்லா 2 ஆந்திராவில் மகேஷ் பாபு படம்



=====================


9,வி நாயகன் = வில்லன் நாயகன்


======================


10,சிவன் கோயிலுக்கு வர்ற கூட்டத்தை விட விநாயகருக்குத்தான் கூட்டம் ஜாஸ்தி # சிவசக்தி vs விநாயகம் #,10 1 2014



====================



11.வேட்டி கட்டிய வேங்கை மழைல நனைஞ்சு சீறுவதைப்பார்த்திருக்கியா?எதிரிங்க எல்லாம் நெல்லிக்காய் மூட்டை சிதறுன மாதிரி ஓடுறதை பார்த்திருக்கியா?


======================


12.ஒத்தை ஆளு. எதிர் முகாம் ல 2 பேரு. ஜெயிக்கப்போவது யாரு ? # 10 1 2014



====================



13.வெற்றிப்புதையல் எங்கே இருந்தாலும் தோண்டி எடுத்துடுவேன்.




 எது செய்யறதா இருந்தாலும் என்னைத்தாண்டித்தான் போய் ஆகனும் ;-)



=======================


14,கலக்கப்போவது யாரு? கலர்புல்லா? ஒயிட் & கிரேட்புல்லா? #,10 1 2014


==================


15.அஜித் ஹேர் ஸ்டைலை சால்ட் & பெப்பர் லுக் னு கொண்டாடும் உலகம் அதே ஹேர் ஸ்டைலை ஒரு ஹீரோயின் வெச்சிக்கிட்டா ஒத்துக்குமா? ;-)


===================



16,ஜெ - ஹீரோ ஏன் தெனாவெட்டா சேர் மேல உக்காந்திருக்கார் ?



 விஜய் - மேடம்.அவர் என்ன opsஸா? பம்மிக்கிட்டே தரைல உக்கார?தாதா கேரக்டர்னா அப்டித்தான்


====================


17.ஜில்லா' பட பேனர்களுக்கு திடீர் தடை : ரகசிய உத்தரவால் விஜய் அதிர்ச்சி # அன்புள்ள முதல்வருக்கு ஆனந்தி எழுதுவது.இது நல்லா இல்ல




==================


18,தமனா டூ அஜித் = அந்த " வானத்தைப்போல" படம் நடிச்ச மன்னவரே! பனி க்குழலைப்போல ஹேர் ஸ்டைல் கொண்ட சின்னவரே!



=====================



19.காஜல் அகர்வால் டூ விஜய் = நலந்"தீனா"? நலம் "தீனா"? உடலும் உள்ளமும் நலம் " தீனா"? # ஜில்லா


=====================



20.தங்கள் அபிமான ஹீரோ எது செய்தாலும் ,சொன்னாலும் அதன் - ,+ எல்லாம் அலசி ஆராய விரும்பாமல் மாஸ்.,மரண மாஸ் ,செம ,கலக்கல் என்பவனே தமிழன் ;-)



=========================



21.தம்பி டா ,அண்ணன் டா டயலாக் ( வீரம்) சந்தானம் சொன்ன நண்பேண்டா ( பாஸ் எ பாஸ்கரன் ) ரீ மிக்ஸ்



===================



22,என் ஆளுங்களைத்தொடனும்னா என்னைத்தாண்டித்தான் போக்ணும் - வீரம் டயலாக் அண்ணாம்லை ல ரஜினி சொன்னது




====================


23,பொங்கல் ரிலீஸ் ஜில்லா ,வீரம் இரண்டு படங்கள் மேலும் எனக்கு நம்பிக்கை வரவில்லை.இரண்டையும் தாண்டி வேற ஏதாவது ஒரு படம் ஹிட் ஆகும் னு தோணுது




======================



24,ராம்ராஜ் வேட்டி விளம்பரங்கள் # ஜில்லா ,வீரம்



==================



25,காஜல் அகர்வாலை இடிப்பார்னு ஆர்வமா பார்த்தா மோகன் லால் தோள் ல இடிக்கறாரு ;-))) # ஜில்லா



====================


26.அஜித் -நான் உம் சொன்னா நாலு பேரும் உன்னை உழுதுருவாங்க . #வீரம்" # படம் பார்க்கும் ஆடியன்ஸ் சென்ட்டிமென்ட் சீன் ல அழுதுருவாங்க



=====================



27.ஜில்லா டீசர் பார்த்ததும் என் மனசுக்குள் ஓடிய பி ஜி எம் = தளபதி ! எங்கள் தளபதி !



====================


28,ஜில்லா = தீனா + தளபதி . வீரம் = வானத்தைப்போல + நட்புக்காக # யூகம்



===================


29.ஜில்லா டீசர் பார்த்தேன்.தளபதி ரஜினி மம்முட்டி காம்ப்போ வில் காட்டுக்குயிலு பாட்டு போலவே இருக்கு



====================


30,ஜில்லா படத்தை சென்சார் செய்யும் அதே அதிகாரிகள் தான் தீனா வை சென்சார் செய்தார்களா? # தகவல் அறியும் உரிமைச்சட்டம்



=====================



31, விஜய் - தமிழ்நாடுன்னாலே கூட்டணி தான் ஜெயிக்கும் என்பதே சரித்திரம்.



அஜித் - சரித்திரம் என்பதே பழைய ரெக்கார்டை முறியடிப்பதுதானே?




====================


32.வி-தலைவா ல மிஸ் ஆகிடுச்சு.இந்த டைம் மிஸ் ஆகாது. விட்டதை பிடிச்சுடுவேன்.



அஜித் - இருப்பதைத்தக்க வெச்சாலே எனக்குப்போதும்.என்ன நான் சொல்றது?



======================


33. 2014 ம் ஆண்டின் முதல் பிளாக் பஸ்டர் மூவி எதுவாக இருக்கும் என்பதை கணிக்க ஜில்லா டீசர் கம்மிங் ஆன் த வே.ஐ ஆம் வெய்ட்டிங்க் # வீரம்.ஜில்லா



======================



34, ஸார்.உங்க படத்துக்கு நல்ல தியேட்டர் கிடைக்குமா?



 நம்ம படத்தைபோட்டாலே அது நல்ல தியேட்டரா டெவலப் ஆகிடாதா?


=====================


35,இந்தியா பாகிஸ்தான் மேட்ச் போல் விறுவிறுப்பாக மோதல் .7 வருடங்களுக்குப்பின் # 10 1 2014



====================


36,டீசர் இன்னைக்கு சொன்னபடி ரிலீஸ் ஆனா விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூ இயர்.ஆகலைன்னா .,……# ஜில்லா


===================



37. ராம்ராஜ் வேட்டிகள் கம்பெனி க்கு மார்க்கெட்டிங் ஐடியா.வீரம் வேட்டினு அடிச்சு விடுங்க.அள்ளிக்கும் சேல்ஸ்



====================



38,பாட்டுல இருக்கும் வெரசா (SPEED) படத்துல இருந்தா ஜில்லா நல்லா கட்டும் கல்லா # லா லலல்லா லலல்லா




====================



39,  பொங்கலுக்கு (10 1 2014) அஜித் படம் ஓடும் தியேட்டர்களை " வீரம்" விளைஞ்ச மண்ணு என்றும் சொல்லலாம்


====================



40 ஜில்லா டிலே... டென்ஷன் ஏறுது... குழப்பத்தில் தியேட்டர்கள்! # விஜய் படம் னா ரிலீஸ் அப்ப,உயிர் சாமி படம்னா ரிலீஸ் ஆனபின் பிரச்னை வரும்்


====================



41 பழைய ராமராஜன் கலர் சர்ட்ஸ் நிறைய தேங்கிடுச்சு. ஜில்லா சர்ட்னு வித்துடு.கோடீஸ்வரன் ஆகலாம்




=================



42  ஜில்லாவுக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன்லால்! # எங்க இளைய தளபதி மட்டும் சாதாரண ஆளா? அவரும் வாங்கமாட்டார்பாருங்க



===================


43  புலி பதுங்கறதே சமயம் பார்த்து பாயத்தான்.



பதுங்கற மாதிரி தெரியலையே.பயந்து ஒதுங்கற மாதிரி தெரியுது? # 10 1 2014



==================



44 டைட்டில் ல 2 வதா பேர் வரவைப்பதில் ஒரு தொழில் ரகசியம் இருக்கு.அப்ளாஸ் அப்போ தான் அள்ளும்



======================


45,ஹீரோ 1= என் படம் மழை மாதிரி.எப்போ வரும்னு எனக்கே தெரியாது.



 ஹீரோ 2 = என் படம் சூரியன் மாதிரி.கரெக்ட் டைம்க்கு வந்துடும் #ி -1,2 ரேங்க் அல்ல


=====================




46,ஜி + பில்லா = ஜில்லா # சும்மா



===================


47,

வள்ளுவர் சம்சாரம் வாசுகி ட்விட்டரில் இருந்தா

1. ஒரு படைப்பாளிக்குக்கிடைக்கும் வணிக ரீதியான தோல்வி அவன் பாதையை ,படைப்பாளுமையை மாற்றி விடும் என்பதால் இழப்பு ரசிகனுக்கும்



===================



2 1 மணி நேரமா் பக்கத்தில் உக்காந்திருந்த ஒரு பிகர் பஸ் ல முன்சீட்காலிஆனதும் அங்கே போயிடுச்சு.எதிர்க்கட்சிக்காரன் பார்த்தா என்ன நினைப்பான்?


=================



3 தன் சிலையை அரசாங்க செலவில் வடிவமைச்சு பேரைக்்கெடுத்துக்கிட்டா அது மாயாவதி.ஆல்ரெடி இருக்கும் சிலைகளை பொறுப்பில்லாம அகற்ற நினைச்சா ஜெ




===================



4 FAKE ID யை கண்டு பிடிக்க ஒரு குறுக்கு வழி இருக்கு.ஜப்பான் ரவி ,ரைட்டர் ,க்ட்டதுரை இந்த 3 பேரும் யார் கூட பேசுவது இல்லையோ அவங்க FAKE ID




=================



5 குனிஞ்ச தலை நிமிராத அக்மார்க் குடும்பப்பொண்ணு யார் ?,மழை வருதா?னு வானத்தைக்கூட அண்ணாந்து பார்க்காம நீர் நிலைகளில் வானத்தை பார்ப்போரே



================



6 விலை இல்லாப்பொருள்கள் எல்லாவற்றிலும் (இரட்டை)இலை இல்லா நிலை வேண்டும் பரம்பொருளே!



==================



7 CO-STAFF ல் சக பணியாளினி என்பதில் ஆள் ( இது நம்ம ஆளு) என்பது ஒளிந்திருப்பதை கவனித்தீர்களா?



=================



8 நம் காதலுக்கு முடிவு காலமே இல்லை.நம் இரவுக்கு விடிவு காலமே இல்லை



================


9 தமிழ் நாட்டில் தான் கொலைகாரர்களுக்கு விடுதலையும் ,சாதனை படைத்த கலைக்னர்களுக்கு அவமதிப்பும் கிடைக்கும்



===============



10  ஜெ - சிவாஜி சிலையை தூக்கிடுங்க !



ஓபிஎஸ் - வீரர் சிவாஜி,நடிகர் திலகம் சிவாஜி,சூப்பர் ஸ்டார் சிவாஜி 3 ல எதை மேடம்?



================


11  5 12 2013 ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு.பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு - நயன் நடிக்கும் பட ஷுட்டிங்




==================


12   ஒரு தனி வங்கியே திறக்கும் அளவுக்கு உன் வெட்கப்புன்னகைகளை சேமித்து வைத்திருக்கும் காதல் டெபாசிட்டர் நான்.



====================


13. சுஜாதா வின் எழுத்துக்கள் காலம் கடந்தும் சரித்திரம் ஆகும் என்பதற்கு உதாரணம் ஆம் ஆத்மி அர்விந்த் கேஜ்ரிவால் #,முதல்வன் திரைக்கதை வசனம்




==================


14, மேல் மருவத்தூர் ல பேர்ல தான் male.பக்தைகள் எல்லாம் FEMALE



====================


15. ராகுல் காந்திக்குப்பிடிக்காத இனிப்பு கேசரியாத்தான் இருக்கும் # அர்விந்த் கேசரிவால்



==================



16, வள்ளுவர் சம்சாரம் வாசுகி ட்விட்டரில் இருந்தா= அவரதிகாரம்-133னு ட்வீட் போட்டு இருப்பாரு




======================



17. செல்வராகவன் க்கு கட்டம் சரி இல்லை.இங்கே சேர்ந்தா அங்கே வலிக்கும் #,சிம்பு படம்.டி ஆர் @,திமுக



===================


18, நல்ல நாள் லயே சிம்பு படம் ஏகப்பட்ட சிக்கல் சந்திக்கும்.டி ஆர் திமுக வில் இணைஞ்சுட்டாரு.இனி என்ன ஆகுமோ? # கவுதம் வாசுதேவ் மேனன் + சிம்பு


===================


19  மதயானைக்கூட்டம் படத்தைப்பத்தி சிலாகிச்சு 3 ட்வீட்ஸ் போட்டேன்.ஒருத்தர் போன் பண்ணி நீங்க தேவர் இன்மா?னு கேள்வி # அய்யோ ராமா ;-))



===================



20  வழுக்கி விழுந்தாலும் உன் மீதே விழ வேண்டும்.சோகம் தாங்காமல் அழுதாலும் உன் தோளில்சாய்ந்தே அழ வேண்டும்


========================


டி வி டுடெ 4 1 2014
Embedded image permalink

Friday, January 03, 2014

TOM YUM GOONG-2 -சினிமா விமர்சனம் (கும்கி வீரன்)

ராமநாராயணன்  படத்தில் வருவது போல்  ஹீரோ ஒரு  யானையை  பாசமா  வளர்த்துட்டு வர்றார்.நல்ல  நேரம்  எம்  ஜி  ஆர் மாதிரி  அவர் யானையை அன்பா  பார்த்துக்கறார்.ஒரு  குரூப் வந்து அவர் இல்லாதப்ப யானையை  அபேஸ் பண்ணிக்  கூட்டிட்டுப் போறாங்க.


அதைக்கடத்துன ஆள் இருக்கும் பங்களாவுக்குப்போனா  அங்கே  அந்த ஆளோட 2 வளர்ப்பு மகள்கள்  இருக்காங்க.அந்த   ஆள் செத்துக்கிடக்காரு.யானையைக்கடத்தினதால   ஆளைக்கொன்னது ஹீரோ  தான்னு   அந்தப்பொண்ணுங்களும்,போலீசும்  நினைக்குது.



யானையைக்  கடத்தச்சொன்ன  மெயின்  வில்லன் வேலை முடிஞ்சதும்  அந்த வேலையைச் செஞ்ச சைடு வில்லனைக் கொன்னு   பழியை  ஹீரோமேல் போட்டுடறாரு.


ஊர்ல யானைக்கா  பஞ்சம்?எதுக்காக கடத்துனாரு?   அந்த நாட்டின்    பிரதமரை யானையின்  தந்தத்தில் பாம் வெச்சுக் கொல்ல சதி தான்.பொதுவா  இந்தமாதிரி பிரதமரைக்கொல்ல  வில்லன் செய்யும் சதியை   முறியடிக்க  மாநகரக்காவல்  கேப்டன்   தான் லாயக்கு   என்றாலும்  கேப்டன் அரசியல்ல பிசியா இருப்பதாலும், இது   தமிழ்ப்படம்   இல்லை   என்பதாலும்   அவருக்குப்பதிலா  டோனி  ஜா களம்  இறங்குவதே கதை.


ஹீரோ வா டோனிஜா   அதகளம்  பண்ணி  இருக்காரு. அவர்  டூப்  போடாமல்,கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் உதவி இல்லாமல் போடும் ஃபைட்கள் தியேட்டரில் விசில் சத்தத்தைக்கிளப்பிக்கொண்டே இருக்கு.ஓப்பனிங்க் சீனில் வரும்  20  நிமிட  பைக் சேசிங்க்ஃபைட்  அட்டகாசம்.மொட்டைமாடியில் வீட்டின் கூரையைப்பிய்த்துக்கொண்டு மேலே வானில் பறக்கும்  பைக் வீரனை,ஹீரோஅவருக்கு இணையாகப்பறந்து வந்து  தாக்கும்போது பட்டாசு   கிளம்புது.ஆனால்,படம்,முழுக்க,அவர்,ஏன்,பல்லைக்கடித்தபடியே,இருக்கார்னு
தெரியலை



வில்லனாக  வரும் அந்த மொட்டைத்தலை ஆள்  ஆஜானுபாவகமான  உயரம்,ஆகிருதியான தோற்றம்,ஜைஜாண்டிக் பர்சன்.அவரை வில்லன்   கடைசி வரை  மார்ஷியல் ஆர்ட்  மூலம் வீழ்த்த  முடியாதபடி ஆக்‌ஷன்  காட்சிகளை  வடிவமைத்த  ஸ்டண்ட்மாஸ்டருக்கு  ஒரு  சபாஷ்.


சைடு வில்லனின்  இரு மகள்களில்  ஒருவரை  இன்னொரு வில்லன் கொன்று
விடுவதால் எஞ்சி இருக்கும்  மகள்  தான் நாயகி மாதிரி.ஆனா பாருங்க,படத்தில்,சரக்குக்கூட,(அதாவது,மருந்துக்குக்கூட)காதல்,காட்சிகளே
கிடையாது.டோனிஜாவை  எல்லாம் கமல்,சிம்பு,படம்,பாக்க  விடனும்.


நமக்கு.ஆறுதல்,அளிக்க,ஒரு,வில்லி,இருக்கு.கிளாமரா,வருது.


மெயின்,வில்லனின்,அடியாளாக,வரும்,ஆள்,அடிக்கும்,கவுண்ட்டர்,டயலாக்
சந்தானத்தை,நினைவுபடுத்துது.சீரியசாகப்போகும்,படத்தில்,அவர்,காமெடி
ஒருஆறுதல்.


ஹெல்மெட்,தலையுடன்,தரையோடு,படுத்திருக்கும்,ஆள்,மீது,பைக்,ஏறிச்
செல்லும்,காட்சி,அபாரம்.


படம்,இடைவேளை,வரை,45,நிமிடமும்,அதுக்குப்பின்,53,நிமிடமும்,ஓடுது.ஒரு,சீன்
கூடபோர்,அடிக்கலை.


நச் வசனங்கள்



1.எதுவா,இருந்தாலும்,பேசித்தீர்த்துக்கலாம்


தீர்த்துட்டுப்பேசித்தான்,எனக்குப்பழக்கம்.



2.குபேரன்,சூட்கேஸ்ல,குத்தவெச்சு,உக்காந்திருக்கான்,வாங்கிக்க


3. யானையைக்கட்டி,த்தீனிபோட,முடியாதுன்னு,சொல்வாங்க,ஆனா
இது,எது,குடுத்தாலும்,துன்னும்




4.பாஸ்!உங்களுக்கு,எதுவும்,ஆகலையே?



ஏன்?ஏதாவது,ஆகும்னுஎதிர்பார்த்தியா?




5.பாஸ்!இதைப்பாத்தீங்களா?


வந்ததுல,இருந்து,இதைத்தானே,பார்த்துட்டு,இருக்கோம்?



6..வில்லன்,டூ,வில்லி=உன்னை,அவன்,குறைச்சு,எடை,போட்டுட்டான்,நீ,அவனை

உதைச்சு,எடைக்குப்போட்டுட்டியே?


7.சண்டை,போடவந்தா,சண்டை,மட்டும்,தான்போடனும்.என்ன,முறைக்கறே?

நோ,டபுள்,மீனிங்க்


8.வில்லன் -உன்னை,மாதிரி,திறமை,சாலிங்க,ஏன்,வெளீல,வர்றதே,இல்ல?


வர,விட்டாத்தானே?


9.எங்க,பாஸ்க்கு,எதுலயும்,ஸ்பீடுதாம்.சினிமால,கூட,ஸ்லோமோசன்,சீன்
பிடிக்காது



சொதப்பல்,சொப்னா



1.யானையை,விலைபேசி,பின்,கிளம்பும்,வில்லன்,ஹீரோ,இல்லாதபோது,வீட்டில்
வந்து,யானையை,கிளப்பும்,ஐடியாவில்,தான்,போறான்.பின்,எதுக்கு,லூஸ்,மாதிரி

தன்,விசிட்டிங்க்,கார்டை,குடுத்துட்டுப்போறான்?அவன்,குடுக்கலைன்னா
வில்லன்,அட்ரசே,ஹீரோவுக்குத்தெரியாதே?இது,எப்படி,இருக்குன்னா,திருடன்

ஹவுஸ்,ஓனர்ட்டதன்,மேதா,விலாசத்தைக்காட்ட,தன்,விலாசத்தையே,சொல்ற
மாதிரி



2..அப்போதான்,வில்லன்,குரூப்,ஹீரோவை,மிரட்டிட்டுப்போகுது.அடுத்த,5வது,
நிமிசமே,ஹீரோ,ஏன்,யானையைத்தனியா,விட்டுட்டுப்போறார்?யானையை

அவங்க,வந்து,தூக்குவாங்கன்னு,தெரியாதா?


3.ஒரு,ஃபைட்,சீன்ல,ஹீரோ,ஷூல,தீ,பத்திக்குது,அதுலயே,ஹீரோ,அடியாட்களை
உதைக்கறார்.அவங்க,எல்லாம்,சூடு,தாங்காம,அலர்றாங்க.ஹீரோவுக்கு,மட்டும்
எதுவும்,ஆகாதா?


4.க்ளைமாக்ஸில்,யானையின்,தந்தத்தில்,பாம்,இருக்கு,அதைக்கழட்டுனா
,வெடிக்கும்.அது,தெரிஞ்சும்,வில்லன்,அதைக்கழட்டி,சிதறிடறான்.அந்த,உயரமான
இடத்துல,இருந்து,கடல்,ல,குதிச்சு,ஹீரோவும்,யானையும்,எஸ்,ஆவது,எப்படி? 




சி.பி.கமெண்ட் -ஆக்சன்,பிரியர்கள்,டோனிஜா,ரசிகர்கள்,பாக்கலாம்.பெண்களும்

பாக்கும்,தாத்தில்,தான்,படம்,இருக்கு,இது,ஒரு யூ,படம்.

ஈரோடு,விஎஸ்பி,தியேட்டரில்,படம்,பாத்தேன்


வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (3.1.2014 ) 9 படங்கள் முன்னோட்ட பார்வை

1.அகடம் -லாஸ்ட் பெஞ்ச்  பாய்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் அகடம் இதில் புது முகங்கள் ஸ்ரீநிஅய்யர், பாஸ்கர், தமிழ், கலை சேகரன், எஸ்.சரவணன் பாலாஜி, ஸ்ரீபிரியங்கா, அனிஷா  ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசட். முஹம்மத் இசாக்  இயக்குகிறார்.



சில வருடங்களுக்கு முன் தமிழகத்தையே உலுக்கி எடுத்த   ஒரு உண்மை   சம்பவத்தை மையமாக வைத்து  இப்படம் தயாராகிறது என்று அவர் சொன்னார். திடுக்கிடும் திருப்பங்கள், சஸ்பென்ஸ் மர்மங்கள்  நிறைந்த  திரில்லர் படமாக உருவாகிறது. கின்னஸ் சாதனைக்காக ஒரே ஷாட்டில் முழு படத்தையும் எடுக்கின்றனர். மொத்த படப்பிடிப்பும் இரண்டு  மணி நேரங்களே  நடக்கிறது. இரவு நேரத்திலேயே  படப்பிடிப்பை நடத்துகின்றனர். 

ஒளிப்பதிவு: நௌஷாம், இசை: ஷ்யாம் பெஞ்சமின். 
சிங்கிள் ஷாட்டில்  எடுக்கப்பட்ட படம்
.ஈரோட்டில்ரிலீஸ்  இல்லை.  
 
2.  என் காதல் புதிது - கல்லூரி காதலையும், அந்த காதலர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளையும் கருவாக வைத்து உருவாகி வரும் புதிய படம் என் காதல் புதிது. இந்த படத்தில் ராம்சத்யா கதாநாயகனாகவும், உமாஸ்ரீ, நமீதா பிரமோத் ஆகிய இருவரும் கதாநாயகிகளாகவும் நடிக்க, ஜி.எம்.குமார், பாண்டியராஜன், லொள்ளு சபா ஜீவா, அல்வா வாசு, பாய்ஸ் ராஜன், பாலாஜி, ஸ்ரீலதா ஆகியோரும் உடன் நடித்துள்ளனர்.
புன்னகை வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, சத்யதேவ் இசையமைக்கிறார். நா.முத்துக்குமார், விவேகா ஆகிய இருவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை மாரீஷ்குமார் கவனிக்கிறார். வீரா மூவீஸ் சார்பில் டி.விஜயகுமார், எஸ்.சரவணன் ஆகிய இருவரும் தயாரித்து இருக்கிறார்கள். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. ஊட்டி, கோத்தகிரி, கோவளம் மற்றும் கேரளாவில் இந்த படம் வளர்ந்து இருக்கிறது.

ஈரோட்டில்  ரிலீஸ்  இல்லை

 

3. நம்ம கிராமம்-நம் நாட்டில் பல கிராமங்கள் ஜாதீய வன் கொடுமைகளையும், பெண் கொடுமைகளையும் சந்தித்துள்ளன. இன்றும் அதன் சுவடுகள், தழும்புகளைத் தாங்கிக் கொண்டு மௌன சாட்சிகளாக நிற்கின்றன கிராமங்கள். அப்படி சாட்சியாக நிற்கும் ஒரு கிராமத்தில் நடந்த கதையின் திரைக்காட்சி வடிவம்தான்  ‘நம்ம கிராமம்’படம்
 இதுவரை படங்களில் ஜாதி, பெண்ணடிமைத்தனம் போன்றவை வணிகப் பார்வை கெட்டு விடாதபடி மேம்போக் காகவே சொல்லப்பட்டு வந்துள்ளன.ஜாதிக் கொடுமையின் அடக்குமுறையும் பெண்ணினத்தின் ஒடுக்குமுறையும் இதுவரை இல்லாத அளவுக்கு– சொல்லாத அளவுக்கு ரத்தமும் சதையுமாக சொல்லப்பட்டு இருக்கும் படம் ‘நம்ம கிராமம்.’ இப்படத்தில் நடித்த நடிகைக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்த தமிழக முதல்வர் அம்மா நெகிழ்ந்து பாராட்டியிருக்கிறார்.



அப்படிப்பட்ட ‘நம்ம கிராமம்’ படத்தை இயக்கியிருப்பவர் மோகன் சர்மா. இவர் புனா திரைப்படக் கல்லூரியில் பயின்றவர்.இவருக்குப் பல பெருமைகள் உண்டு. தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 170 படங்களில் நடித்தவர்; 17 படங்களைத் தயாரித்தவர்;கதை, திரைக்கதையாசிரியர்.தமிழில் ‘தூண்டில்மீன்’ ‘நாடகமேஉலகம்’ ‘ஜெனரல் சக்கரவர்த்தி’, ‘ஏணிப்படிகள்’, ‘சலங்கைஒலி’போன்ற படங்களிலும் மலையாளத்தில் ‘சட்டக்காரி’, ‘நெல்லு’, ‘சலனம்’, ‘பிரயாணம்’,'ஜீவிக்கான் மறந்து போய ஸ்திரி’ ‘தீக்கனல்’ ‘கயலும் கயிறும்’ போன்ற  படங்களிலும் இவர் குறிப்பிடத்தக்க வேடத்தில் தோன்றி நடித்தவர்.


தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக 2002–ல் பொறுப்பு வகித்தவர். தேசிய விருது தேர்வுக் குழுவிலும் சர்வதேச திரைப்பட விழாவுக்கான இந்தியன் பனோரமா படங்கள் தேர்வுக் குழுவிலும் இடம் பெற்றவர். தாதா சாஹேப் பால்கே சாதனை விருதுக்கு தென்னிந்திய பிரதிநிதித்துவ உரிமையைப் போராடி பெற்றவர். அதன் பிறகுதான் தென்னிந்தியர்கள் விருது பெற ஆரம்பித்தனர்.


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தயாரிப்பிலும் நடிப்பிலும் தொடர்ச்சியாக இயங்கி வந்த இவருக்கு தான் படம் இயக்கினால் வழக்கமல்லாதபடியும் சமூகச் சிந்தனையுடனும்தான் இயக்கவேண்டும் என்ற தீர்மானம் இருந்தது. அதன்படியே தன் மனத்தின் ஆழத்தில் புதைந்து கிடந்த உண்மைச் சம்பவத்தை எழுதி இயக்கியுள்ளார்.


இப்படத்துக்கு 2012-ன் சிறந்த குணச்சித்திர நடிகையாக சுகுமாரிக்கும் சிறந்த உடைகள் அமைப்புக்காக இந்திரன் ஜெயனுக்கும் என இரண்டு தேசியவிருதுகள் கிடைத்தது படத்தின் பெருமைகளில் ஒன்று.


தேசியவிருது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள தமிழக முதல்வரைச் சந்தித்த சுகுமாரியிடம் வாழ்த்து கூறிய முதல்வர், படம் பற்றி விசாரித்துள்ளார். சுகுமாரி படம் பற்றிக் கூறியதும் ஆர்வமாய் பார்க்க விரும்பி பார்த்ததுடன் நெகிழ்ந்து பாராட்டியும் இருக்கிறார். இது இன்னொரு பெருமை.


படம் பற்றி மோகன் சர்மா கூறுகையில் “இது முழுக்க முழுக்க உண்மைச் சம்பவம். இது சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. நம் நாட்டில் ஜாதிக் கொடுமை எந்த அளவுக்கு கொழுந்து விட்டு எரிந்தது என்பதற்கும் சமுதாயத்தில் பாதியளவு உள்ள பெண்களுக்கு எவ்வளவு கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டன என்பதற்கும் ஏராளமான சான்றுகள் உண்டு. என்னைப் பாதித்த ஒரு கிராமம் பற்றியதுதான் இப்படம். ஒரு அக்கிரகாரத்தில் நடப்பவைதான் இந்தக் கதை. “என்கிறார்.


புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தீவிர யதார்த்த சினிமா தாக்கம் கொண்டவர்கள். மோகன் சர்மா எப்படி?
 

“நான் இந்தப் படத்தை எடுக்க முடிவு செய்தபின் நண்பர்கள் ஏன்  இந்த வேண்டாத வேலை என்று.கேட்டனர். இந்தக் கதையைத்தான் எடுப்பது என்று நான் பிடிவாதமாக இருந்தேன்.  17 படங்களைத் தயாரித்திருக்கிறேன். இயக்கினால் இதைத்தான் இயக்குவது என்பதில் உறுதியாக இருந்தேன். இந்தப்படம் எடுத்ததில் எனக்கு ஒரு லட்சியம்– நோக்கம் இருந்தது. எனக்கு ஆத்ம திருப்தி கிடைத்துள்ளது. இது விறுவிறுப்பாகவும் யதார்த்த தன்மையுடனும் இருக்கும். ஆவணத்தைப் போல அவ்வளவு உண்மைத் தன்மையுடனும் இருக்கும். இது யதார்த்த சினிமாவுக்கான இலக்கணம் சிறிதும் மாறுபடாமல் இருக்கும்.” என்கிறார் நம்பிக்கையுடன்.

படத்தின் நாயகன் நிஷாந்த் நாயகி சம்ருதா இருவரும் புதுமுகங்கள். ஒய்.ஜி. மகேந்திரன், பாத்திமாபாபு, நளினி ஆகியோருடன் மோகன் சர்மாவும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.


ஆவணங்களின்படி இது 100 ஆண்டுக்கு முன் நடந்த கதை என்றாலும் இப்படத்தின் கதை 1935 ல் தொடங்கி 1947 ல் முடியும்படி அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக அக்காலச் சூழல்படி கதை, நிகழ்விடம், காட்சிகள் அமைக்க மிகவும் சிரமப்பட்டு ஆய்வு செய்து விவரம் சேகரித்துள்ளனர். இடம், மனிதர்கள், உடைகள், சாதனங்கள் பற்றி தீவிர கவனம் செலுத்தி எடுத்துள்ளனர். கோவை அருகில் தத்தமங்கலம் என்கிற ஊரில்தான் படத்தின் பெரும்பகுதி  எடுக்கப்பட்டுள்ளது.காட்சிப் பின்புலத்தை உருவாக்க கலை இயக்குநர் பாவாவும் ஏற்ற ஒளியமைப்பு செய்ய ஒளிப்பதிவாளர் மது அம்பாட்டும் நிறையவே உழைத்துள்ளனர்.இசை- பி.என். சுந்தரம். படத்தொகுப்பு- பி.லெனின். இயக்கம்- மோகன் சர்மா.தயாரிப்பு-குணசித்ரா மூவீஸ்.


ஜனவரி 3-ல் ஒவ்வொரு ஊரிலும் பேசப்பட வருகிறது ‘நம்ம கிராமம்’.

ஈரோட்டில்  ரிலீஸ்  இல்லை 
 
4 கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு-அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் புத்தம் புதிய திரைப்படம் ஒன்று தற்போது தயாராகி வருகிறது. ‘கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தினை டி.எஸ்.கே. புரடெக்சன் கோவிலம்பாக்கம் டி.சிங்காரம் தயாரிக்க ஸ்ரீ கிருஷ்ணா இயக்குகிறார். ஒற்றை வரியில் படத்திற்கு பெயர் வைப்பது போய் இப்போது நீளமாக பெயர்வைக்க ஆரம்பித்துவிட்டனர். முற்றிலும் புது முகங்கள் நடிக்கும் இந்த திரைப்படத்தில் தயாரிப்பாளர் சிங்காரமும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
DSK புரொடக்‌ஷன் சார்பில் கோவிலம்பாக்கம் D.சிங்காரம் தயாரிப்பில் ஸ்ரீ கிருஷ்ணா இயக்கும் படம் கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு.


இத்திரைப்படத்தில் புதுமுக நாயகன் ஆதவராம், கதாநாயகிகளாக பிரியா, மஞ்சு ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளர் D.சிங்காரம் முக்கியமான கதாபாத்திரத்தில் நமது பாரம்பரியக் தற்காப்புக் கலையான சிலம்பாட்டக் கலை வீரராக நடித்திருக்கிறார். கலைஞர் டிவி பொதுமேளாளர் பிளாரென்ஸ் பெரைரா காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார்.


சகோதரிக்கு இழக்கப்பட்ட அநீதிக்காக ஒரு சகோதரன் போராடும் கதைக்களமே “கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு” படம்.


இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, ஓசூர், பொன்னெரி, கோவிலம்பாக்கம், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடந்துள்ளது.


கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஸ்ரீ கிருஷ்ணா. முரேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். திவ்யகவி, எஸ்.கே.விஜயன் மற்றும் சுபாஷ் எழுதும் பாடல்களுக்கு இசையமைக்கிறார் எஸ்.பிரேம். நடனத்தை ராக் ஷங்கர் கையாள, திகில் சேகர் சண்டைக்காட்சிகளை அமைக்கிறார்.


விறுவிறுப்பாகவும் ஆக்‌ஷன் கலந்த செண்டிமெண்டுகளும் நிறைந்ததாம் இத்திரைப்படம்

ஈரோட்டில்  ரிலீஸ்  இல்லை 

5அத்திமலை முத்துப்பாண்டி-.மலையூர் மம்பட்டியான், வாட்டாக்குடி இரணியன், கும்பக்கரை தங்கையா போன்று கிராமத்து தாதா கம் ஹீரோவாக இருந்தர் அத்திமலை முத்துப்பாண்டி, திருவண்ணாமலை பகுதியில் வாழ்ந்தவராம். இப்போது இவரது வாழ்க்கையை சினிமாவாக தயாரித்து வருகிறார்கள். படத்தின் பெயரும் அத்திமலை முத்துப்பாண்டிதான். சாரதி ஆறுமுகம் என்பவர் அத்திமலை முத்துப்பாண்டியாக நடிக்கிறார். சொப்னா என்ற புதுமுகம் அவருக்கு ஜோடி. தஞ்சை ரகுபதி என்பவர் இயக்குகிறார்.

அவர் கூறியதாவது: 1980களில் வாழ்ந்தவர் முத்துப்பாண்டி. அத்திமலை காட்டுக்கே ராஜா மாதிரி அவர். இருப்பவர்களிடம் பிடுங்கி இல்லாதவர்களிடம் கொடுத்தவர். வீரத்தால் வளர்ந்தவர். துரோகத்தால் வீழ்ந்தவர். அவரது வாழ்க்கையே அவர் காலத்தில் இருந்த சினிமா ஸ்டைலிலேயே படமாக எடுக்குகிறோம். அவர் வாழ்ந்த பகுதியிலேயே படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். என்றார்.


ஈரோட்டில்  ரிலீஸ்  இல்லை 
6 முன் அந்தி சாரல்-இது  ஏதோ கில்மாப்படம் போல .கூகுள்கூகு:ள்பண்ணிப்பார்த்தேன்,கிடைக்கவில்லை

ஃபோகஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தேவேந்திரன் இயக்கத்தில் யூதா ஷாலோம் இசையமைத்துள்ள படம். அன்சார், ஆனந்த், முரளி, நட்சத்திரா, சங்கவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.


7செல்லாயி குமரேசன்-இது  ஏதோ  லோ  பட்ஜெட் படம் போல.

ஈரோடு  சங்கீதாவில் ரிலீஸ்


8.விக்ரம் தாதா-நந்தினி வழங்கும் ஸ்ரீ லக்ஷ்மிஜோதி கிரியேசன்ஸ் பட நிறுவனம் ஏற்கனவே தமிழில் பிசினஸ்‌மேன், டைகர் விஷ்வா போன்ற படங்களையும், மலையாளத்தில் அதூர்ஷ், நாயக் போன்ற படங்களையும் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் சார்பாக ‌ஏ.என்.பாலாஜி, கோவிந்தராஜ் இருவரும் இணைந்து, தெலுங்கில் ‘‘பெஜவாடு’’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை தமிழில் ‘‘விக்ரம் தாதா’’ என்ற பெயரில் தயாரிக்கின்றனர்.

இதில் நாகசைதன்யா கதாநாயகனாகவும் அமலாபால் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் கோட்டா சீனிவாசராவ், அஜெய், அபிமன்யூசிங், முகுல்தேவ், சுபலேகா சுதாகர், அகுதிபிரசாத், சத்யபிரகாஷ், பிரமானந்தம், அஞ்சனா சகானி, எம்.எஸ்.நாராயண் ஆகியோர் நடிக்கின்றனர்.


ஊரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மிகப்பெரிய புள்ளியின் வலதுகரமாக திகழும் ஒருவன் சந்தர்ப்பவசத்தால் குற்றவாளியாக்கப்படுகிறான். அவனை மீட்டெடுக்கும் தம்பியின் ஆக்ஷன் படம்தான் ‘‘விக்ரம் தாதா’’. நாகசைதன்யா மிகப்பெரிய ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கும் படம் இது. இப்படத்தில் அமலாபால் கிளாமர் வேடத்தில் நடிக்கிறார்.


இப்படத்திற்கு கார்கோ, ஜெயமுரசு, சுதந்திரதாஸ், உவரி க.சுகுமாரன் பாடல்கள் எழுத, அல்மொகிலே, பிரதீப் கொனேரு, பிரேம் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர். ஏ.ஆர்.கே.ராஜராஜ் வசனம் எழுதி தமிழாக்கம் பொறுப்பேற்றிருக்கிறார். விவேக் கிருஷ்ணா இயக்கத்தில் எஸ்.கே.பூபதி ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.என்.பாலாஜி தயாரிக்கிறார்.
ஈரோடு,ஸ்டார், ரிலீஸ்

9.கும்கி வீரன்-புரூஸ்லீ, ஜாக்கிசான், ஜெட்லீ வரிசையில் இப்போது சைனீஸ் படங்களின் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருகிறார் டோனிஜா. இவர் நடித்த ஓங் பேக் படத்தில் யானைப் பாகனாக நடித்திருந்தார். யானை கூட்டங்களின் மேலே பறந்து பறந்து சண்டை போடுவார். அதனால் இப்போது வெளிவரவிருக்கும் அவரது டோம் யுங் கோன்ங் 2 படத்திற்கு கும்கி வீரன் என்ற பெயர் வைத்திருக்கிறார்கள்.

ஓங் பேக் டைரக்டர் பிரச்சாய் பிங்கே, ஸ்டண்ட் டைரக்டர் கிட்டிகேரி டோனிஜா ஆகிய மூவரும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். படத்தில் 20 நிமிடங்கள் இடம்பெறும் பைக் சேசிங் படு திரில்லாக இருக்குமாம். ஹாலிவுட் படங்களை தரவரிசைப்படுத்தும் ஐஎம்டிபி அமைப்பு இந்தப் படத்துக்கு 7.3 மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறது. இதன் தமிழ் பதிப்பு வசனத்தை ராஜா எழுதுகிறார். இண்டோ ஓவர்சீஸ் நிறுவனத்தின் சார்பில் பிரோஸ் மற்றும் ஆர்ட் ஸ்டூடியோ ரிலீஸ் செய்கிறது.
 ஈரோட்டில் ஆனூர்,விஎஸ்பி 2 தியேட்டர்களில் ரிலீஸ்

 
10.அம்மா அம்மம்மா-ஆ. சந்திர சேகர் திரைக்களம் தயாரிப்பில் பாலு மணிவண்ணன் இயக்கத்தில் எம்.வி. ரகு இசையமைத்துள்ள படம். சம்பத், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த், சுஜிதா, தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.


 ஈரோட்டில்  ரிலீஸ்  இல்லை



11.



11.ஜெ.சி.டேனியல்- மலையாளத்தில் ரிலீசான படம், ‘செல்லுலாயிட்’. தமிழகத்தில் பிறந்து, முதல் மலையாளப் படத்தை இயக்கி, மலையாள சினிமாவின் தந்தை என்று போற்றப்படும் ஜெ.சி.டேனியலின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் இப்படத்தில், டேனியல் கேரக்டரில் பிருத்விராஜ் நடித்துள்ளார். மலையாளத்தில் சிறந்த படமாகவும், பிருத்விராஜ் சிறந்த நடிகராகவும் தேர்வு செய்யப்பட்டு, கேரள மாநில அரசின் விருதைப் பெற்ற இப்படம், தமிழில் ‘ஜெ.சி.டேனியல்’ என்ற பெயரில் ‘டப்’ ஆகிறது.ஈரோட்டில்  ரிலீஸ்  இல்லை


டிஸ்கி-டைட்டில் ல  9,உள்ளடக்கத்தில்11,ஏன்?கணக்குத்தெரியாதா?என்பவர்க்கு
நெம்பர் 2,11ஆகிய2ம்போனவாரமே  ரிலீஸ்,ஆனாலும்,பலதியேட்டகளில்,இன்றுரீரிலீஸ்#நாங்க
ரொம்பஸ்ட்ரிக்ட்டுங்க்ணா
நன்றி=தினமலர்,தினமணி,மாலைமலர்,அனைத்துசினிமாஇணையதளங்கள்

என் ஆசை மச்சான் ரிட்டர்ன் டிக்கெட் எடுத்து வெச்சான்

1. டில்லி தமிழர்களிடம் வரவேற்பில்லை-சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்# என் ஆசை மச்சான் ரிட்டர்ன் டிக்கெட் எடுத்து வெச்சான்



==================



2 நடிப்பது எப்படி?: ஜி.வி. பிரகாஷுக்கு டிப்ஸ் கொடுத்த விஜய். # முதல் கட்டமா ஹீரோ ஓப்பனிங் சீன் ல இந்த BGM மை உங்களுக்கு வழங்குப்வர்.,


=================



3 பாலியல் தொந்திரவுக்கு ஆளான பெண்களை பேட்டிகண்டு வெளியிட்டால் 2 வருஷம் தண்டனை # அய்யய்யோ.நல்ல வேளை தப்பிச்சேன்



================


4 நயன் பண்ணுறதெல்லாம் ரொம்ப ஓவர் சிம்பு சீறல் # அவர் பாட்டுக்கு தேவனே( சிவனே) ன்னு அவர் வழில போனாரு.சொந்தப்படத்துல புக் பண்ணது யாரு?


===============



5 கணவரை கத்தியால் குத்திய மனைவி கைது: புளியங்குடி யில் # குத்தாதே.குத்துனா கத்துவேன்.கத்தாதே.கத்துனா குத்துவேன்



==================


6 ஆர்யா, ஷ்ருதி இணையும் புதிய படம் ‘வாடி வாசல்’ # வாசல்ல எப்டி? வாடிஉள்ளே னு வெச்சிருக்கலாம்



==================


7 அண்ணனுடன் காதல்: அமலா பாலை தேடி வந்துள்ள சர்ச்சை கதை.. நடிப்பாரா? # மாமனாருடன் கில்மா வை ஏத்துக்கிட்ட ஜனங்க இதை ஏத்துக்க மாட்டாங்க



===================



8 சன்னி லியோன் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார்.! # டைட்டில் காட்டு மன்னார் கோவில் சிற்பம்?




================



9  பாஹுபாலி இந்திய சினிமாக்கு பெஞ்ச் மார்க்காக இருக்கும் - அனுஷ்கா !# மேடம்.புரொடியூசர் வீட்டு பெஞ்ச் வரை விக்காம இருந்தா சரி


=================


10 தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு இடைக்கால ஜாமீன்! # அதுல கூட இடை இருக்கு னு யாரும் கண்டனம் தெரிவிக்கலையா?



==================



11 தன் வீட்டை எழுதிகொடுத்து, தனுஷ் கால்ஷீடையும் கொடுத்து அடுத்தபட பாதி சம்பளமும் நஷ்ட்டயிடாக கொடுத்தார் செல்வராகவன்.# பாவம் யா :-((



=================



12 சிவாஜி சிலையை எல்லோருக்கும் தெரியும்படியான இடத்தில் வைக்கலாம் - ராதாரவி # வடபழனி ஏவிஎம் ஸ்டூடியோல வெச்சுடலாமா?


=============



13 பாட்டாளி கட்சி மூலம் நம்பிக்கை வரும் என்று மக்கள் நினைக்கிறார்கள் -ராமதாஸ் # தம்பி! நம்பி யும் வராது கையும் வராது.தாமரை தான் வரும்


==================



14  டெல்லியில் தே.மு.தி.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: விஜயகாந்த் # அணையப்போகும் விளக்கு கூட பிரகாசமாத்தான் எரியும்


=================



15  இலங்கை எம்.பி.யுடன் தென்னிந்திய நடிகை நெருக்கம்; சீ.டி.யால் பரபரப்பு # சன் டி வி ல இன்னைக்கு நைட் போட்டா பார்த்து கருத்து சொல்றோம்"



===================




16 தில்லியில் 11 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு: விஜயகாந்த் # எந்தக்கட்சிக்குன்னு சொல்லவே இல்லயே?



====================



17 தர்மம் தழைத்தது, உண்மை வென்றது” ஜெயேந்திரர் # சுவாமி! உங்க பேருல முத எழுத்துல இருக்கறவங்களால உங்க தலைஎழுத்தே மாறப்போகுது பாருங்க"


===================


  18  ராகுலை பிரதமராக்கவே ஆந்திராவை பிரிக்கிறார் சோனியா: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு # பிரி"வினை" முயற்சி யால் அவங்களுக்கே வினை தான்



===================



19 நாட்டின் தலைநகரான டெல்லியில் சாலைகள் தரமாக இல்லை- விஜயகாந்த். பிரச்சாரம் # கேப்பிடல் பற்றி கேப்டன் மதிப்பிடல் அடடே! .



=================



20  வாக்காளர்களுக்கு பணம் தரமாட்டோம் என்று அறிவிக்க தி.மு.க., அ.தி.மு.க தயாரா?: ராமதாஸ் # ஜாதியைப்பத்தியே பேசமாட்டேன்.னு சொல்ல நீங்க தயாரா?




=================



21 கடவுளின் ஆசீர்வாதத்தால் சங்கராச்சாரியார் விடுதலை: சுஸ்மா ஸ்வராஜ் மகிழ்ச்சி # பாவிகளை அவர் ரட்சிப்பார் !!!!



===================




Thursday, January 02, 2014

டாப் 10 டப்பா படங்கள் -2013

 

தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு, விமர்சகர்களாலும் மக்களாலும் 10 படங்கள் நிராகரிப்பட்டது. மணிரத்னம், அமீர், பாரதிராஜா, செல்வராகவன், ராஜேஷ் போன்ற முக்கியமான இயக்குநர்களே 2013ல் சறுக்கியது தான் அதிர்ச்சி. 


'கடல்', 'ஆதிபகவன்', 'அன்னக்கொடி', 'நாகராஜ சோழன்', 'அலெக்ஸ் பாண்டியன்', 'மரியான்', 'தலைவா', 'நய்யாண்டி', 'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'இரண்டாம் உலகம்' ஆகிய படங்கள் 2013ல் படுதோல்வியை சந்தித்தன. 


மக்களை மூழ்கடித்த 'கடல்'

 
'நெஞ்சுக்குள்ளே' பாடல் மூலம் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டினார் மணிரத்னம். படத்தின் நாயகன், நாயகி உள்ளிட்டோரின் லுக்கை போஸ்டராக வைத்து INTRODUCING GAUTAM KARTHIK, INTRODUCING THULASI என ஒவ்வொன்றாக வெளியிட்டார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பாடல்கள் மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. 


மணிரத்னத்தின் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மான் இசை, கார்த்திக்கின் மகன் ஹீரோ, ராதாவின் மகள் ஹீரோயின், மீண்டும் அரவிந்த்சாமி, வில்லனாக அர்ஜுன் என படத்தின் முதல் காட்சிக்கு ஞாயிற்று கிழமை மாலை மெரினாவில் இருக்கும் கூட்டம் போல அலை மோதியது. தியேட்டருக்குள் வந்த அனைவரையும் மூழ்கடித்து, 'இனிமேல் என்னை நம்பி வருவியா' என்று திணறடித்தார். முத்து கிடைக்கும் என நம்பி வந்தவர்களுக்கு கிளிஞ்சல்கள் அளித்து அனுப்பினார்கள். 


சுனாமி வந்த அடுத்த நாள் மெரினா பீச் எப்படி இருந்ததோ அப்படி தான் படத்திற்கு இரண்டாம் நாள் கூட்டம் இருந்தது. அந்தளவிற்கு மக்களால் முற்றிலும் நிராகரிப்பட்டது. இப்படத்தினை வாங்கி பாதிப்படைந்தது ஜெமினி நிறுவனம். அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து இன்னும் அவர்கள் மீளவில்லை. 

 
'பருத்தி வீரன்' இயக்குநரா 'ஆதிபகவனை இயக்கினார்?

 
இயக்குநர் அமீர், இசையமைப்பாளர் யுவன் என அனைத்து முன்னணி கலைஞர்களும் இணைந்து ரசிர்களை ஏமாற்றிய படம் 'ஆதிபகவன்'. நீண்ட மாதங்களாக படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தின் ஒரு புகைப்படத்தைக் கூட வெளியிடாமல் படத்திற்கு எதிர்பார்ப்பை கூட்டினார்கள். பத்தாக்குறைக்கு பவளக்கொடியாய் நீதுசந்திரா வேறு அவ்வப்போது பேட்டிகளில் ‘ஆதிபகவன்’ படம் குறித்து சிலாகித்தார். 


படத்தின் போஸ்டர்களில் கூட ’வில்லன் ’ஜெயம் ரவியின் படத்தை வெளியிடவில்லை. 2007ல் 'பருத்தி வீரன்' இயக்கிய அமீர் இயக்கத்தில் 6 ஆண்டுகள் கழித்து வெளிவந்தது 'ஆதிபகவன்'. படத்தைப் பார்த்தவர்கள் அனைவருமே கேட்ட கேள்வி 'நிஜமாவே அமீர் இயக்கிய படமா இது?' என்பது தான். 



இமயத்தை கொடியில் தொங்க வைத்த 'அன்னக்கொடி'

 
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் 'அன்னக்கொடி'. தேனியில் படப்பூஜை போடப்பட்ட போது அமீர் நடிப்பதாக இருந்தது. ஆனால், அதற்கு பிறகு நடைபெற்ற பிரச்சினையால் கார்த்திகா, மனோஜ் நடிப்பில் வெளியானது. 


மாமனாரின் காமவெறி, ஆண்மையற்ற கணவன் என சொதப்பலான கதையை 'அன்னக்கொடி'யாக எடுத்திருந்தார். நாம எதை படமாக எடுத்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று பாரதிராஜா நினைத்து விட்டார் போல. 


'அன்னக்கொடி' வெளியான முதல் நாள் மாலையே கொடியில் ஒரு துணி கூட இல்லை

. தப்பாக அல்வா கிண்டிய மணிவண்ணன் - சத்யராஜ் 

 
மணிவண்ணன் - சத்யராஜ் கூட்டணியில் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்ற 'அமைதிப்படை' படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்தது 'நாகராஜ சோழன்'. 'அமைதிப்படை' படத்தில் இருந்த சுவாரசியமான காட்சிகள் எதுவுமே 'நாகராஜ சோழன்' படத்தில் இல்லாதது பெரிய குறை. ‘அமைதிப்படை’யில் கிண்டிய அல்வாவை மறுபடி கிளறி மக்களுக்கு கொடுத்தார்கள்.. பழைய அல்வா அல்லவா.. புளித்துவிட்டது. 


விளம்பரத்தை நம்பி களமிறங்கிய அலெக்ஸ் பாண்டியன்

 
பட்டித் தொட்டி எங்கும் விளம்பரப்படுத்தி, பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளி விட வேண்டும் என்ற நினைப்புடன் ஸ்டூடியோ க்ரின் 'அலெஸ் பாண்டியன்' படத்தினை வெளியிட்டது. 


கார்த்தி, அனுஷ்கா என முன்னணி நட்சத்திரங்கள் நடித்தனர். அரிவாளால் சுமோ டயரை வெட்டுவது, சுமோ வானுயர்விற்கு பறப்பது, டிரெய்னின் மீது வில்லன் ஆட்கள் துரத்துவது, சந்தானத்தின் டபுள் மீனிங் வசனங்கள் என படம் பார்க்கும் அனைவரையும் ரத்தக்களரியாக்கி ஒட வைத்தது. 


பாட்டெல்லாம் ஹிட்டு.. படம்..? கடலோடு கூட்டு சேர்ந்த 'மரியான்'


 
ஏ.ஆர்.ரஹ்மான் இசையின் மூலம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'மரியான்' வெளியானது. 'நீ வரணும் பனி', 'காசா இல்லடா...' என கலங்கடித்த தனுஷின் நடிப்பு, 'மரியான்.. உனக்காக காத்துட்டுருப்பேன்டா', 'வந்துரு வந்துரு' என்று அசத்தலான பார்வதி நடிப்பு, 'இன்னும் கொஞ்சம் நேரம்', 'எங்கே போன ராசா', 'கடல் ராசா நான்' என ஏ.ஆர்.ராஹ்மானின் துள்ளலான இசை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இருந்தாலும் சொதப்பலான திரைக்கதை அமைப்பால் தோல்வியடைந்தது மரியான். 



2013ல் ஆப்பிள், ஐ-டியூன்ஸ் தளத்தில் சிறந்த தமிழ் இசை ஆல்பமாக தேர்வானது 'மரியான்' 



நமக்கும் எதிரிகள் இருக்கிறார்கள் என்று விஜய் உணர்ந்த 'தலைவா'

 
இயக்குநர் விஜய் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம். 'நாயகன்' கதையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து, 'தலைவா' என்று படமாக்கினார்கள். விஜய்யின் போஸ்டர்கள் வெளியான போது, அரசியல் சார்ந்த படம் என்று பேச்சு நிலவியது. 


'தலைவா' திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் என்று பெரும் சர்ச்சையில் கிளம்பியது. படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க போதிய போலீசார் இல்லை என்று தமிழக அரசு கூறியது. இறுதியாக தயாரிப்பாளர் செய்தியாளர்கள் மத்தியில் அழுதது, படத்தினை வெளியிட தமிழக அரசு உதவிட வேண்டும் என்று விஜய் வீடியோ மூலம் பேசியது உள்ளிட்ட பலதரப்பட்ட முயற்சிகளுக்கு பிறகு தான் ‘தலைவா’ வெளியானது. 



படம் போதிய வரவேற்பையும் பெறவில்லை, வசூலையும் பெறவில்லை. தயாரிப்பாளருக்கு மட்டுமன்றி, விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு நஷ்டத்தினை ஏற்படுத்தியது 'தலைவா' 


தனுஷை பதற வைத்த 'நய்யாண்டி'

 
'வாகை சூட வா' இயக்குநர் சற்குணம் - தனுஷ் - நஸ்ரியா இணைப்பில் வெளியான படம் 'நய்யாண்டி'. நஸ்ரியாவின் சர்ச்சையால் படம் பரபரப்பானது. தேசிய விருது இயக்குநர் + தேசிய விருது நடிகர் கூட்டணி என்று நம்பி படத்திற்கு சென்றவர்களை நையாண்டி செய்தது நய்யாண்டி’


“சற்குணம் - தனுஷிடம் இருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை” என்று ரசிகர்கள் நொந்தார்கள். 


இப்படத்தின் உச்சப்பட்ச காமெடியாக, ஓடாததால், படத்தை திரையரங்குகளிலிருந்து எடுத்த பிறகு, மலையாளத் தயாரிப்பாளர் ஒருவர் எனது கதையை திருடி படமாக எடுத்து விட்டார்கள் என்று போலீசில் புகார் அளித்தார்! 


கோவம் வர்ற மாதிரி காமெடி செய்த 'ஆல் இன் ஆல் அழகுராஜா'


 
ராஜேஷ் - கார்த்தி - சந்தானம் இணைப்பில் வெளியான படம் 'ஆல் இன் ஆல் அழகுராஜா'. தனது காமெடி படங்கள் மூலம், தனக்கென்று ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் ராஜேஷ். அவரே அந்த வட்டத்தை சுருக்கிக் கொண்ட படம் 'ஆல் இன் ஆல் அழகுராஜா'. 


காமெடி என்கிற பெயரில் சந்தானத்தின் பேச்சு, 3 மணி நேர படம் என பல வகையில் பார்ப்பவர்களை இடைவேளையின் போதே கடுப்பேற்றியது படம்.


இருண்ட 'இரண்டாம் உலகம்'

 
செல்வராகவன் இயக்கத்தில் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட 'இரண்டாம் உலகம்'. ஆர்யா, அனுஷ்கா நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். படம் தயாரிப்பிலேயே பல நாட்கள் இருந்ததால், ஹாரிஸ் ஜெயராஜ் மற்ற படங்களில் பிஸியாக, இறுதியில் அனிருத் பின்னணி இசையில் வெளியானது ‘இரண்டாம் உலகம்’. 


பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, சொதப்பலான திரைக்கதையால் ஏமாற்றிய படம். கிராபிக்ஸ் காட்சிகளில் காட்டிய அக்கறையை திரைக்கதை அமைப்பில் காட்டியிருக்கலாம். 


ஹாரிஸ் ஜெயராஜ் மற்றொரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், "ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கு பின்னணி இசையமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், பிரம்மாண்ட படம் எனக்கு பிடிக்கவில்லை. ஆகையால் தான் இந்த படத்திற்கு இசையமைத்தேன்" என்று பொறி வைத்து பேசி வியக்க வைத்தார். 


படம் பார்க்க வந்தவர்களை எல்லாம் இரண்டாம் உலகத்திற்கு அழைத்துச் செல்கிறேன் பேர்வழி என்று முட்டுச் சந்துக்குள் தான் கூட்டிச் சென்றார் செல்வராகவன். மூன்றாம் உலகம் விரைவில் என படத்தை முடித்து, "அய்யோ... மறுபடியும் முதல்ல இருந்தா..." என்று கேட்க வைத்தார். 

thanx - the hindu