Thursday, January 10, 2013

ஸ்லிம் சுந்தரி ரகசியம்! - தேவதர்ஷினி அழகுக்குறிப்புகள்

-->
http://www.cinemaexpress.com/Images/article/2012/2/21/tv1.jpg 

ஸ்லிம் சுந்தரி ரகசியம்!

- தேவதர்ஷினி

கொஞ்சம் கொழு கொழு உடம்புதான் பெண்களுக்கு அழகு என்றிருந்த தமிழ் சினிமாவில், ஒட்டிய கன்னம், ஒல்லியான உடம்புடன் நுழைந்து, தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தேவதர்ஷினி. இதே உடல்வாகுடன் கடந்த பத்தாண்டுகளாகவலம் வருகிறார்!
வளசரவாக்கத்திலுள்ள ஒரு ஷூட்டிங் ஹவுஸில் திரைப்பட நகரம்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த தேவதர்ஷினி, டைரக்டர் கொடுத்த பிரேக்கில் உரையாடினார்.
மீடியா உலகில் உங்கள் என்ட்ரி பாய்ன்ட்?

பெரிய ஹீரோயின்களையும், டீ.வி தொகுப்பாளினிகளையும் தந்த எத்திராஜ் காலேஜில் பி.காம் படித்தேன். படிக்கும்போதே தூர்தர்ஷனில் கனவுகள் இலவசம்சீரியலில் நடிக்க வாய்ப்புக் கிடைச்சுது. அதேசமயத்தில் நன்றாகத் தமிழ் உச்சரிக்கத் தெரிந்த காம்பியர் வேண்டுமென ஒரு தனியார் சேனலில் இருந்து அழைப்பு வந்தது. எனது தமிழ் உச்சரிப்பால் உடனே தேர்வானேன். மர்மதேசம்டீ.வி சீரியல் எனக்கு மிகப்பெரிய பிரேக் தந்தது. அதே சீரியலில் நடித்த சேத்தனைக் காதலித்து மணந்து கொண்டேன்.
சேத்தனிடம் உங்களுக்குப் பிடிச்சது என்ன?
சேத்தன் ரொம்ப வெளிப்படையானவர். கொஞ்சம்கூட பாசாங்கு கிடையாது. அவரது இந்தக் குணம், காதலிக்கத் தொடங்கிய நாட்களில் என்னைக் கொஞ்சம் கஷ்டப்படுத்தியதுதான். ஆனால், நாளடைவில் ஆழ்ந்த புரிதலையும், நம்பிக்கையையும் அதிகப்படுத்தியது.

ஏதாவது ஒரு சீரியலில் ஊர் உலகமே எனது நடிப்பைப் பாராட்டும்போது சேத்தன் என்ன சொல்கிறார் என ஆர்வமுடன் கேட்பேன். சேத்தன் ரொம்பக் கூலாக, இது சரியா இல்லை. இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம்" என்பார். அவரது காமென்ட் என்னை எந்தவிதத்திலும் கஷ்டப்படுத்தாது. அவர் எதிர்ப்பார்க்கும் விஷயங்களை அடுத்தடுத்த படங்களிலும், சீரியல்களிலும் செய்து பாராட்டைப் பெற்று விடுவேன். எனது நடிப்புக்குக் கிடைக்கும் பாராட்டுகளுக்குச் சேத்தனின் பாரபட்சமற்ற விமர்சனமும் ஒரு காரணம்.
உங்கள் மகள் நியதி அப்பா செல்லமா? அம்மா செல்லமா?
நியதி எங்க ரெண்டு பேருக்குமே செல்லம்தான். ஆனாலும் இலேசான கண்டிப்புக் காட்டிதான் வளர்க்கிறோம். ஏன் இதைச் செய்யக் கூடாதுனு பக்குவமாகப் பேசிப் புரிய வைப்போம். குழந்தை வளர்ப்பு ஒரு சேலஞ்ச்தான்!

காமெடி - குணசித்திரம் இரண்டு ரோல்களும் வந்தால் உங்க சாய்ஸ் எது?
பார்த்திபன் கனவுபடத்தில் விவேக் வேலையற்ற கணவனாகவும், நான் அவரது மனைவியாகவும் நடித்திருப்பேன். அந்தப் படம் வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இன்றைக்கும் என்னைப் பார்க்கும் பலரும் அதைப்பற்றியே பேசுறாங்க. அப்புறம் காஞ்சனாவரவும், அதைப் பத்தி பேசினாங்க. நடுவுல நான் எத்தனையோ கேரக்டர்கள் பண்ணிட்டேன். ஆனாலும் காமெடி ரோல்தான் நினவுல நிற்குது. அதனாலதான் இப்பல்லாம் காமெடி சார்ந்த குணச்சித்திர வேஷங்கள்னா உடனே ஒத்துக்கிறேன்.
விவேக், ஸ்ரீமன், மதுரை முத்து என ஜோடி சேர்ந்துதான் காமெடி செய்யறீங்க. ஜோடி இல்லாமல் காமெடி செய்ய முடியாதா?
தனியா அழுது காட்டி ரசிகர்களிடையே கைத்தட்டல் வாங்க முடியும். ஆனால், நம் காமெடியைப் பார்த்து வாய் விட்டுச் சிரிக்கணும்னா, கூட நடிக்கிற கலைஞர்களும் முக்கியம். இதைக் காமெடி கெமிஸ்ட்ரினு சொல்லலாம். இந்த ஜோடி நடிகராகவும் இருக்கலாம்; நடிகையாகவும் இருக்கலாம். டைமிங்சென்ஸ்’, ‘டயலாக் டெலிவரி’, ‘வாய்ஸ் மாடுலேஷன்’, ‘ரியாக்ஷன்’, ‘பாடி லேங்வேஜ்’... இந்த ஐந்தும் ஃபர்பெஃக்டா சேரும்போது தான் காமெடி சீனே எடுபடும்.

சமீபத்தில் வியக்க வைத்த நபர்?
ஸ்ரீதேவி! அவங்க நடிச்ச இங்கிலிஷ் விங்கிலிஷ்’ - படத்தைக் குடும்பத்தோட பார்த்தேன். அடேயப்பா! எவ்வளவு அற்புதமான நடிப்பு! வெரி டச்சிங்! பல இடங்களில் சீட்டை விட்டு எழுந்து கை தட்டினேன். கண்டிப்பாக ஒவ்வொரு பெண்ணும் பார்க்க வேண்டிய திரைப்படம், அதுவும் கணவருடன்!
எடையே போடாமல் ஸ்லிம் சுந்தரியாக இருப்பதன் ரகசியம் என்ன?
எனது அக்கா கார்த்திகேயினி பிலாடி’ (Pilates) என்ற ஜெர்மன் வகை உடற்பயிற்சி செய்றாங்க. அவங்ககிட்ட இதைக் கத்துக்கிட்டு, தினமும் செய்றேன். அவ்வளவு தான். டயட்எல்லாம் கிடையாது. நான் நல்லாவே சாப்பிடுற டைப். ஒருவேளை குண்டாயிட்டா அக்கா, அண்ணி ரோல்களுக்குப் பதில் அம்மா, மாமியார் ரோல் பண்ணுவேன்.
2013 எப்படி?
கண்ணா, லட்டு தின்ன ஆசையா?’, ‘அமளி துமளி’, ‘தில்லு முல்லு’, ‘எனக்கு வாய்த்த நண்பர்கள் இப்படி’, ‘கருத்தம் பட்டி’, ‘கோப்பெருந்தேவி’, ‘வெள்ளைக் காகிதம்னு 2013 முழுக்க என் கால்ஷிட் ஃபுல்!"


thanx -kalki


சிம்ரனின் பர்சனல் டைரியிலிருந்து 26 ரகசியத்தகவல்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNgizQOi6B9erA4uAF9XrlcZmjRM1qBrnQ5d0KsD4GZVGJYXuw10Ip06I-vfGopMzrNq4OQBZ9yAl00qklzWlr11vOQPAAtzPXgy2qvSHy7sJJL2dwgOttxhCmlze4T_e-6L6YcJRTRfmG/s1600/2773475_f520.jpg

சிம்ரனைப் பற்றி... A To Z

A ஆப்பிள், ஏரோப்ளேன் பிசினஸ் எல்லாம் கிடையாது. எனக்குப் பிடிச்சது Axe. கோடரி. அது உழைப்பின் சின்னமாச்சே. எங்க வீட்லகூட ஒண்ணு இருக்கு. தற்காப்புக்காக வெச்சிருக்கேன். (அப்பாஸை மிஸ் பண்ணிட்டீங்களோ?)


 B நிச்சயமா 'பெட்’ இல்லை. Books. நான் நிறையப் படிப்பேன். காமிக்ஸ், சினிமா புக்னு கையில் சிக்கிறதெல்லாம் வாசிப்பேன். (பாத்ரூம்ல பாடுவீங்களா?)
C- Cap. என்னோட தலைமுடி கொஞ்சம் லூஸா 

இருக்கிறதால, கலர் கலரா கேப் வாங்கிப் போட்டுட்டு ஊர் சுத்துவேன். என்கிட்ட மொத்தம் 20 தொப்பி இருக்கு. ஆனா, எனக்கு யாரும் குல்லா போட முடியாது... ஆமா! (கேண்டில் லைட் டின்னருக்கு யாரைக் கூப்பிடுவீங்க?) 


D - Dog. எனக்கு நாய் பிடிக்காது... (என்று சொல்கிற முதல் நடிகை.) ஆனா, என் தங்கச்சிங்க நோவல், ஜோதி ரெண்டு பேருக்கும் நாய்தான் உயிரே. ஒரு வெள்ளை பொமரேனியன் எங்க வீட்ல வளர்த்து அது கொஞ்ச நாள்ல செத்துப்போச்சு. அந்த சோகம் மறக்க முடியாதது. (டிஸ்கொதே அடிக்கடி போறீங்களாமே?)



E - Eye கண்தானே பிரதானம். கண்கள்தானே நம்மோட முதல் கம்யூனிகேஷன். ஒரு ஆளையே தீர்மானிச்சுரலாம், அவன் கண்களைப் பார்த்து. (பார்வையே சரியில்லையே!) எனக்குக் கண்கள் இன்னும் கொஞ்சம் பெரிசா இருந்திருந்தா நல்லாஇருக்கும்னு நினைச்சுப்பேன். (நீங்க கண்ணாடி போடுறது தலைவலிக்குத்தானே?)

F - Fans... ரசிகர்கள்தான். எவ்ளோ லவ் லெட்டர்ஸ், போன் கால்ஸ், அப்புறம் யீறீணீரீ... நம்ம தேசியக் கொடி. கிரிக்கெட் மேட்ச் பார்க்கறப்போ நம்ம டீம் ஜெயிச்சு கப் வாங்குறப்போ வர்ற சந்தோஷம் இருக்கே... நான் சச்சின் ரசிகை தெரியுமோ? (உங்களுக்கு ஃப்ரீடம் இருக்கா?)


G - Gum. வீட்ல என் டாடி அசோக் ரவிசங்கர் நோவல் லைசென்ஸோட ஒரு துப்பாக்கி வெச்சிருக்கார். கோபம் வந்தா 'ஷூட் பண்ணிருவேன்’னு மிரட்டுவார். அதோட சரி. ஆயுத பூஜைக்கு சாமி கும்பிடுறதுக்கும் வீட்ல அலங்காரமா நிக்கிறதுக்கும்தான் அந்தத் துப்பாக்கி. எனக்குக்கூட ஷூட்டிங் கத்துக்கணும்னு ஆசை. சினிமா ஷூட்டிங்தான் வாய்ச்சது. (உங்களுக்கு குளூகோஸ் எது?)


H - Home என் வீடு ரொம்ப ஸ்பெஷல். மும்பையில் இருக்கிற எங்க வீட்டுக்கு 'மங்கள்மூர்த்தி நிவாஸ்’னு பேரு. கணபதி இல்லம்னு தமிழ்ல சொல்லலாம். வீடு முழுக்கக் கலைப் பொருட்கள் சேகரிச்சு வெச்சிருக்கேன். புத்தர் கால செப்புத் தகடு மாதிரி அபூர்வமான சமாசாரம்கூட உண்டு. சென்னையில ஒரு வீடு பிடிக்கணும். (ஹோட்டல்ல ரூம் போட்டுப் போட்டுப் போரடிக்குதா?)


I - Ice வைக்கிற பார்ட்டிகளைச் சுத்தமா பிடிக்காது. ஆனா, ஐஸ்க்ரீம்ஸ்... மொத்த சொத்தையும் எழுதித் தந்துடுவேன். அவ்ளோ பிடிக்கும். சினிமாவுக்கு வந்தப்புறம் டயட், அது இதுனு ஐஸ்க்ரீமுக்குத் தடா போட்டுட்டாங்க. அதனாலென்ன, திருட்டுத்தனமா டேஸ்ட் பண்ணிடுவேன்! (ஐடென்டி கார்டு வாங்கிட்டீங்களா?)


J - Jokes. ஒரு மனைவி, கணவன்... அவனோட ஃப்ரெண்ட். மூணு பேரும் ஸ்விம்மிங்பூல் போனாங்க. ஃப்ரெண்டுக்கு அந்தப் பொண்ணு மேல ஒரு கண்ணு. அவளை எப்படியாவது தொட்டுரணும்னு தண்ணிக்குள்ள நீந்தறப்போ உள்நீச்சல்ல அவளைத் தொட்டுட்டு வந்துட்டான். கரை ஏறினதும் அந்தக் கணவன் சிரிச்சானாம். 'பையா... Your idea is fine.. But the leg is mine-னு சொல்ல...’ பார்ட்டி பேஜாராயிட்டான். (பாரதிராஜா படத்துல ஜாக்கெட் போட மாட்டீங்களா?)


K - Kite... காத்தாடி. என் தம்பி காத்தாடி விடுறதுல கில்லாடி. ஃப்ரீயா இருக்கிறப்போ நானும் அவன்கூடச் சேர்ந்துக்குவேன். அறுபட்டு தானாப் பறக்கிற காத்தாடியைப் பார்க்கிறப்போ... அது யாரோ ஒருத்தரோட வேதனைனு புரியும். நம்ம கையில் சிக்கிட்டா... அதோட சந்தோஷம் அனுபவிச்சாதான் புரியும். (குறிப்பா எதைச் சொல்றீங்க..?)


L - Lion. ஷூட்டிங்ல என்னைப் பயமுறுத்தணும்னா, 'நாளைக்கு குஷால்தாஸ் கார்டன்ல சிங்கத்தோட ஒரு ஸீன் இருக்கும். சிங்கத்தோட நீங்க வாக்கிங் போற மாதிரி ஒரு ஷாட். ரெடியா இருங்க...’னு அசிஸ்டென்ட்ஸ் சொல்லிட்டுப் போயிடுவாங்க. அன்னிக்கு ராத்திரி எல்லா சாமியையும் கும்பிட்டுட்டு இருப்பேன். (லவ் ஞாபகம் வரலியா?)


M - Man. நல்ல மனுஷங்களைப் பார்க்கறதே அபூர்வமாயிருச்சு. என்னோட 'அவர்’ - ஒரு ஹீரோ மாதிரி இருக்கணும்னு அவசியம் இல்லை. ஆனா, ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாவாவது இருக்கணும். மனசாரப் பழகணும். ஹ்யூமர்சென்ஸ் வேணும். பார்க்கிறத்துக்கு அம்சமா இருக்கணும். சினிமா ஆளாக்கூட இருக்கலாம். ஆனா, நம்பர் டூவாக நான் ரெடி இல்லை. (நிலாச் சோறு சாப்பிட்டு இருக்கீங்களா?)


N - Nail. நீளமா நகம் வளர்க்கணும்னு எனக்கு ஆசை. ஆனா, டென்ஷன் வந்தா நகம் கடிக் கிற பழக்கத்தால எல்லாம் அவுட். ஒரு பெண் தப்பிக்க நகத்தையே ஆயுதமாகப் பயன்படுத்த லாம்னு காந்தித் தாத்தா சொல்லியிருக்கார். எனக்கு அந்த சான்ஸ் வரலை. வந்தா நகம் இல்லை! (நைட் கனவு வருமா?)


O - Ocean. பொண்ணுங்க மனசைக் கடலுக்கு ஒப்பிடுவாங்க. அதுக்குத்தான் எவ்வளவு சக்தி. காதலுக்கும் கவிதைக்கும் கடல் ஒரு வரம். பீச்ல வாக் போறதுன்னா செம ஜாலியாயிருவேன். (ஒன்... டூ... த்ரீ... எதுவரைக்கும் தெரியும்?)


P - Piano.. எவ்ளோ அற்புதமான இசைக் கருவி. என் தாத்தா நல்லா பியானோ வாசிப்பாராம். அவர் இறந்ததுக்கு அடுத்த வருஷம் அதே நாள் நான் பிறந்தேன். அதனால எனக்கு எங்க வீட்டு பியானோ மேல தனி சென்டிமென்ட்! (ப்ளேபாய்ஸ்பற்றி அபிப்பிராயம் என்ன?)


Q - Queen... மகாராணியை இது வரை நேர்ல பார்த்தது இல்லை. பாட்டி சொல்ற கதை. பழைய சினிமா, ஹிஸ்ட்ரி புக் இது மூணும்தான் மகாராணிபத்தி எனக்குத் தெரியவெச்சது. இப்போ எலிசபெத் ராணி இந்தியாவுக்கு வர்றாங்கன்னதும் அவங்களைப் பார்க்க முடியுமானு ஆசை வந்தது. 'எங்களைக் கேட்டுத்தான் சூரியன் எழும்... விழும்’னு சொன்ன பரம்பரையாச்சே! ('க்யூ’ல எங்காவது நின்னது உண்டா?)


R - Rose.. ஆயிரம் பூக்கள் இருந்தாலும் அழகு ரோஜாதான். ஊட்டி ஷூட்டிங்னா என்னைப் பிடிக்கவே முடியாது. நைஸா பொட்டானிக்கல் கார்டன் ஓடிருவேன். 'ரோசாப்பூ... சின்ன ரோசாப்பூ...’ பாட்டு என்னோட லேட்டஸ்ட் ஃபேவரைட்! (உங்களை ரௌடிங்க மிரட்டலையா?)


S - Snake.. எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. பாம்புன்னா அலர்ஜி. அப்பப்போ கனவுல வந்து பயமுறுத்தும். (அதுக்கு வேற அர்த்தம் தெரியுமா?)


T - Telephone... போன் பில் அதிகமா கட்டுறதுல நானும் ஒருத்தி. யாராவது ஒரு ஃப்ரெண்டுக்குப் பேச ஆரம்பிச்சா... ரெண்டு, மூணு மணி நேரத்துக்குக் குறையாம வைக்க மாட்டேன். எனக்கு முதல் சான்ஸ் கிடைச்ச நியூஸ்கூட போன்லதான் வந்தது! (உங்க டார்கெட் என்ன... நம்பர் ஒன்னா?)


U - Umbrella... நல்ல மழையில கையில குடையோட நடக்கிறதுன்னா தனி சுகம். எலெக்ஷன்ல குடையைச் சின்னமா தருவாங்க. நல்லாப் பேசுவாங்க, மழை நின்னதும் குடையை மடக்கிடற மாதிரி... தேர்தல் முடிஞ்ச தும் மக்களை மறந்துடுவாங்க! (அப்பர் பெர்த் பிடிக்குமா... இல்லே லோயர் பெர்த்தா?)


V - Vegetarian.. நான் சாப்பாட்டுல வெஜ். அதுவும் முருங்கைக்காய் சாம்பார்னா கேக்கவே வேணாம். (பாக்யராஜ் படம் பார்ப்பீங்களா?)


W - Watch... எனக்கும் வாட்ச்சுக்கும் ராசியே கிடையாது. வாங்கின வாட்ச் அத்தனையும் தொலைச்சுட்டேன்.என்  வாட்ச்சுகளைத் திருடறதுக்குன்னே ஒருத்தன் பொறந்திருக்கான்போல... வெறுத்துப்போய் வாட்ச் கட்டறதையே விட்டுட்டேன். (வாட்ச்மேனைக் காக்கா பிடிக்கறது உண்டா?)


X - Xmas... நான் விரும்பிக் கொண்டாடுற ஃபங்ஷன் ஒண்ணு, தீபாவளி. இன்னொண்ணு கிறிஸ்துமஸ். நான் ஸ்கூல் படிக்கிறப்போ கிறிஸ்துமஸ் தாத்தா வேஷம் போட்டு ஆடியிருக்கேன். (டபுள் எக்ஸ், ட்ரிபிள் எக்ஸ்னா என்ன?)


Y - Yellow... மஞ்சள் நிறம் மங்கலத்தோட அடையாளம். மஞ்சள் பூசிக்கற பொண்ணுங்களைப் பார்க்கவே ஆசையா இருக்கும். (யோகா செய்றது உண்டா?)


Z - Zero... நூறு, ஆயிரம், லட்சம், கோடில வர்ற ஜீரோவெல்லாம் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்! (வரி கட்டுறீங்களா?)


- செல்லா

நன்றி - விகடன்

வீணா மாலிக் - ஜிந்தகி 50-50


http://www.cinejosh.com/gallereys/actress/normal/veena_malik_hot_stills_1111120254/veena_malik_hot_stills_1111120254_026.jpg


சமீபத்தில் வீணா மாலிக்கின் எம்.எம்.எஸ். கிளிப்பிங்குகள் சில இன்டர்நெட்டில் வெளியாகின. மகா அசிங்கமான காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தன. யூடியூபில் அதை வெளியிட்டிருந்தனர்.இந்த வீடியோ காட்சிகள் குறித்து வீணா மாலிக் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். 


அது தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்டதல்ல என்று அவர் விளக்கியுள்ளார்.மும்பை: இன்டர்நெட்டில் உலா வரும் எம்.எம்.எஸ் கிளிப்பிங் குறித்து விசனப்பட்டுள்ளார் வீணா மாலிக். அது ஒரு படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சி என்றும் அதை சிலர் திரித்து ஆபாசப் படம் போல வெளியிட்டுள்ளதாகவும் அவர் புலம்புகிறார்.



ஜிந்தகி 50-50 என்ற படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சியிலிருந்து சிலவற்றை சுட்டு திரித்து ஆபாசப் படம் போல வெளியிட்டு விட்டதாக புலம்புகிறார் வீணா.


என்னைத் தப்பானவளாக சித்தரிக்க நடந்த முயற்சிதான் இது. இந்தக்காட்சிகள் என்னை அப்செட் செய்து விட்டன என்றார் வீணா. இந்த தவறானப் பிரசாரத்தால் பயந்துபோய் விடாமல் சினிமாவில் எனது சேவையை தொடர்ந்து தொய்வின்றி தொடரப் போவதாக கூறியுள்ளார் வீணா.


மும்பை: பாலிவுட்டில் கவர்ச்சி அலையைப் பரப்பியபடி இருக்கும் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், தான் நெருக்கமாக பழகி வரும் இயக்குநர் ஹேமந்த் மதுகருடன் பொது நிகழ்ச்சியில் பப்ளிக்காக கலந்து கொண்டு கவர்ச்சியாக தரிசனம் தந்தார்.


மதுகர் வேறு யாருமல்ல, மும்பை 125 கிலோமீட்டர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நடித்திருக்கிறார் வீணா மாலிக். அப்போதுதான் இருவருக்கும் பற்றிக் கொண்டு விட்டது.



இருவரும் வெளிநாட்டுக்குப் போயெல்லாம் உல்லாசமாக இருந்தார்கள். மது அருந்தியபடியும், நெருக்கமாக உட்கார்ந்தபடியும், முத்தமிட்டுக் கொண்டபடியும் அவர்கள் காட்சி தந்ததை போட்டோவெல்லாம் எடுத்துப் போட்டன மீடியாக்கள். இந்தப் போட்டோக்களை ரிலீஸ் செய்ததே வீணாதான் என்றும் ஒரு செய்தி உண்டு.


தற்போது வீணா மாலிக் ஒரு தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். இதன் இசை வெளியீடு ஹைதராபாத்தில் நடந்தது. அந்த விழாவில் மதுகரும் கலந்து கொண்டு வீணாவுடன் அமர்ந்து ஆற அமர பேசி கலகலப்பூட்டினார்.



வீணாவும், மதுகரும் அருகருகே அமர்ந்து படு கிசுகிசுப்பாக மெய் மறந்து பேசிக் கொண்டிருந்ததை பலரும் வேடிக்கை பார்த்து ஜொள்ளு விட்டனர்



வீணா மாலிக் படு கவர்ச்சிகரமான டிரஸ்ஸில் காட்சி தந்ததே அவரைப் பார்த்து பலரும் ஜொள்ளு விட முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.



த சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் முத்த சாதனை புரிய தயாராகி வருகிறார் வீணா என்று ஏற்கனவே டாக் உள்ளது. இதற்காக அவரும் தனது உதடுகளைத் தயார்படுத்தி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. புண்ணாகப் போவது யாருடைய உதடுகளோ...


http://www.cinejosh.com/gallereys/spicy/normal/veena_malik_hot_stills_2411121122/veena_malik_hot_stills_2411121122_041.jpg









ஆதிபகவன்

ஜீவா நடிக்க...

எ ஃபிலிம் பை 'ஜெயம்' ரவி!
க.நாகப்பன்
"போன வருஷம் என் படம் தமிழ்ல ஒண்ணுகூட ரிலீஸ் ஆகலை. ஆனா, 2012ல நான் பண்ண வேலைகள் 2013ல்தான் ஸ்க்ரீனுக்கு வரும். அதிலும் 'ஆதிபகவன்’ படத்தில் நாலு படத்துக்கான உழைப்பைக் கொடுத்திருக்கேன். 2013 எனக்கு... ஏன் நம்ம எல்லா ருக்கும் ரொம்ப ரொம்ப ஜோரான வருஷமா இருக்கும்!''நம்பிக்கை வார்த்தை களுடன் பேட்டியைத் துவக்குகிறார் 'ஜெயம்’ ரவி.


 ''கடகடனு நிறையப் படங்கள் பண்ணிட்டு இருந்தீங்க. இப்ப ரொம்ப செலெக்ட்டிவ் ஆயிட்டீங்க. முக்கியமா அண்ணன் இயக்கத்தில் ஒரு படம்கூட நடிக்கலை. ஏன் இந்த மாற்றம்?''


 
''மாற்றம் நல்லதுதானே! அண்ணன் இயக்கமோ, மத்த இயக்குநர்களோ எல்லாமே நல்ல படங்கள்தான் பண்ணேன். ஆனா, மொத்தக் குடும்பத்துக்குமான பேக்கேஜ்னு சொல்லிட்டு, ஒரு ஃபார்முலாவில் செட் ஆகிட்டேன். இனிமே பண்ற ஒவ்வொரு படமும் நமக்கே புதுசா இருக்கணும்னு முடிவுபண்ணி நடிச்ச படம்தான் 'பேராண்மை’. 




 அதுக்குக் கிடைச்ச ரெஸ்பான்ஸ்.... ரொம்ப சந்தோஷமா இருந் தது. இப்ப 'ஆதிபகவன்’, 'நிமிர்ந்து நில்’, 'பூலோகம்’ படங்களோட போஸ்டர்ஸ் பார்த்தீங்கன்னாலே, ஒவ்வொரு படமும் வேற வேற ஏரியானு தெரிஞ்சுக்குவீங்க.



 'ஆதிபகவன்’ ரொம்ப ரௌத்ரமானவன். அந்தப் படத்தோட கேன்வாஸுக்காகவே ஒரு வருஷம் உயிரைக் கொடுத்து நடிச்சேன். 'நிமிர்ந்து நில்’ படத்துல 40 வயசைத் தாண்டின கேரக்டர்ல நடிக்குறது... ஃப்ரெஷ்ஷா இருக்கு. முதன்முதலா டபுள் ரோல் பண்றேன். 'பூலோகம்’ செம ஆக்ஷன் ஏரியா. என்ன... அடுத்தடுத்து மூணு படங்கள்ல நடிக்கிறதால, உடம்பை ஏத்த, இறக்க, ஜிம் வொர்க் அவுட்னு ஒவ்வொரு நாளும் கஷ்டமா இருக்கு. வயசு இருக்கிறதால சமாளிக்க முடியுது. படம் வரும்போது, அதுக்கான கிரெடிட் கிடைக்கும்போது கவலை, வலி எல்லாம் மறைஞ்சிடும்!''



''சாக்லேட் பாய் இமேஜை உடைக்கத்தான் அடுத்து அடுத்து ஆக்ஷன் படம் பண்றீங்களா?''


''அப்படி இல்லை. என்னால இன்னும் பிரமாதமான ரோல் பண்ண முடியும்னு என்னைவிட என் இயக்குநர்கள் நம்பினாங்க. 'இவன் காதலிச்சுட்டே இருந்தா சரிவராது. அடுத்த லெவலுக்கு இவன் போகணும்’னு என் மேல் அக்கறையும் நம்பிக்கையும் வெச்ச ஜனா சார், அமீர் அண்ணன், கனி அண்ணன்... இவங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும். உதவி இயக்குநரா இருந்த நான் நடிக்க வந்ததே ஒரு நம்பிக்கையில்தானே!''  


''உதவி இயக்குநரா..? எந்தப் படத்தில் வேலை பார்த்தீங்க?''  



''இயக்குநர் ஆகணும்கிற ஆசையில்தான் லயோலாவில் விஸ்காம் படிச்சேன். அப்பவே நான் இயக்கின 'சம்மரி’ குறும்படமும் 'வேர்ல்டு பீஸ்’ ஆவணப்படமும் பாராட்டுகளைக் குவிச்சது. சரி... சினிமாவுக்குள் வந்துடுவோம், நிறையக் கத்துக்குவோம்னு நினைச்சுதான் வந்தேன். 'ஆளவந்தான்’ல சுரேஷ் கிருஷ்ணா சாரிடம் உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். 



ஆனா, சினிமாவைப் பக்கத்தில் இருந்து  பார்த் தப்போ, இயக்கத்தைவிட நடிப்பு கொஞ்சம் பக்கத்தில் இருந்த மாதிரி தெரிந்தது. அப்படியே டிராக் மாறி நடிப்புப் பயிற்சி எடுத்துக்க ஆரம் பிச்சேன். இப்ப ஆர்வமா நடிச்சுட்டு இருக்கேன். ஆனா, டைரக்ஷன்தான் என் கனவு. சீக்கிரம் ஒரு படம் பண்ணுவேன். என் மனசுல ஒரு கதை இருக்கு. அந்த கேரக்டருக்கு நீதான் பொருத்தமா இருப்பேனு ஜீவாகிட்ட இப்பவே சொல்லி வெச்சிருக்கேன்... பார்க்கலாம்!''  



''ஹீரோக்கள் மத்தியில உங்க ஃப்ரெண்ட்ஸ் கேங் ரொம்ப ஆரோக்கியமான விஷயம். என்னல்லாம் பேசிக்கு வீங்க?''



''கார்த்தி, சிபிராஜ், ஆர்யா, ஜீவா, விஷால், நான்... இது செம குபீர் ஜாலி பிரதர்ஸ் டீம்! இவங்கள்ல ஒருத்தன் சிக்கிட்டா, எல்லாரும் அவனைக் கலாய்ச்சுக் கிண்டலடிச்சுக் காலி பண்ணிருவோம்.



' 'எங்கேயும் காதல்’ படத்தில் அழகா இருக்கடா... டான்ஸ் நல்லாப் பண்ற’னு என்னைப் பாராட்டினாங்க. இன்னொரு படத்துல நடிச்சதுக்கு, 'ஏன்டா... கதையே இல்லாத படத்துல நடிச்ச?’னு செம பரேடு வாங்கினேன். சினிமாபத்திக் கொஞ்சம்தான் பேசிக்குவோம். மத்த அரட்டை, சேட்டைதான் நிறைய. நான், ஆர்யா, விஷால், ஜீவா நாலு பேரும் சேர்ந்து நடிக்கிற மாதிரி ஒரு படம் பண்ணலாம்னு வெங்கட் பிரபு சொல்லியிருக்கார். அந்தப் படத்துக்காக நாங்க நாலு பேருமே வெயிட்டிங்!''




''புதுசா வந்த ஹீரோ, ஹீரோயின்கள்ல யாரைப் பிடிச்சிருக்கு?''  



'' 'பரதேசி’ டிரெய்லர்லயே மிரண்டுட்டேன். அதர்வா நல்லாப் பண்றார். சமந்தா பெர்ஃபார்மன்ஸ் ரொம்ப க்யூட்!''



''சினிமாவுக்கு வந்து பத்து வருஷம் ஆச்சு. என்னலாம் கத்துக்கிட்டீங்க?''



''கத்துக்கிட்டே இருக்கேன். ரொம்பக் கொஞ்சம்தான் கத்திருக்கேன். இன்னும் நிறையக் கத்துக்கணும். யார் உண்மையா இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன். பொய்யானவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன். ஒவ்வொரு படத்துலயும் என்னை இம்ப்ரூவ் பண்ணிட்டே இருக்கேன். நடிப்பு, டான்ஸ், ஃபைட் மட்டும் நல்லாப் பண்ணாப் போதும்னு நினைக்க மாட்டேன். நான் நடிக்கிற படத்தில் நடிகன்கிறதைத் தாண்டி, ஓர் உதவி இயக்குநராகவும் வேலை பார்ப்பேன்.



'பேராண்மை’ படத்தில் என் கேரக்டருக்கு எங்கேயும் ரெஃபரன்ஸ் இல்லை. என்.சி.சி. ஆபீஸர், பழங்குடி இளைஞன், உறுதியான உடம்பு, அதீதப் புத்திசாலித்தனம்... அவன் எப்படி இருப்பான்... என்ன பண்ணுவான்? ஜனா சார் சுருக்கமா சொன்னார், 'பலரோட தாய்ப் பால் குடிச்சு வளர்ந்தவன். காட்டுப் பழங்கள் சாப் பிட்டு வளர்ந்தவன். ஆரோக்கியமா இருப்பான். அதே சமயம், இரும்பு மாதிரி இருப்பான்’னு சொன்னாரு. 



அப்போ 'சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்துக்காக அமுல் பேபி மாதிரி இருந்தேன். சில வாரங்கள்ல அப்படியே ஆளே மாறினேன். ஒரு செட் பிராப்பர்ட்டி எப்படி இருக் கணும்னு இயக்குநர் நினைக்கிறாரோ, ஒரு நடிகனையும் அப்படித்தான் எதிர்பார்ப்பார். அந்த எதிர்பார்ப்புக்கும் மேல இருக்கணும்னுதான் நான் ஓடிட்டே இருக்கேன்.




எனக்குப் பக்கத்துல இருக்கிற ரோல் மாடல் அமீர் கான். சினிமாவில் சகல துறைகளிலும் அவர் மாதிரி வித்தியாசமான முயற்சிகள் பண்ணிட்டே இருக்கணும். அதுக்கு ஏத்த மாதிரி என்னைத் தகுதிப்படுத்திட்டு இருக்கேன்.''


நன்றி - விகடன்

ஆஸ்கார் - நாமினேசன்ஸ் - 2012

The 2013 Academy Award nominations have been being announced in Hollywood by actors Seth MacFarlane and Emma Stone. 


Historical drama Lincoln dominated the shortlist with 12 nominations, but 

Ben Affleck drama Argo and Quentin Tarantino's western Django Unchained could also be in the running, with a possible nod for Bond film Skyfall.


The ceremony will take place at the Dolby Theatre on 24 February.
Nominees in the main categories will be listed below as the announcements are made (you may need to hit "refresh" on your web browser to see the updates).


Best film
  • Amour
  • Argo
  • Beasts Of The Southern Wild
  • Django Unchained
  • Les Miserables
  • Lincoln
  • Life Of Pi
  • Silver Linings Playbook
  • Zero Dark Thirty
Best actress
  • Jessica Chastain - Zero Dark Thirty
  • Jennifer Lawrence - Silver Linings Playbook
  • Emmanuelle Riva - Amour
  • Quvenzhane Wallis - Beasts of the Southern Wild
  • Naomi Watts - The Impossible
Best actor
  • Daniel Day Lewis - Lincoln
  • Bradley Cooper - Silver Linings Playbook
  • Hugh Jackman - Les Miserables
  • Joaquin Phoenix - The Master
  • Denzel Washington - Flight
Best director
  • Michael Haneke - Amour
  • Ang Lee - Life of Pi
  • David O Russell - Silver Linings Playbook
  • Steven Spielberg - Lincoln
  • Benh Zeitlin - Beasts of the Southern Wild
Best supporting actor
  • Alan Arkin - Argo
  • Robert De Niro - Silver Linings Playbook
  • Tommy Lee Jones - Lincoln
  • Christoph Waltz - Django Unchained
  • Philip Seymour Hoffman - The Master
Best supporting actress
  • Amy Adams - The Master
  • Sally Field - Lincoln
  • Anne Hathaway - Les Miserables
  • Helen Hunt - The Sessions
  • Jacki Weaver - Silver Linings Playbook
Best foreign film
  • Amour
  • No
  • War witch
  • A Royal Affair
  • Kon-Tiki
Bond tribute
The Oscars ceremony will also be hosted by MacFarlane, who created the animated series Family Guy. 



It has already been announced that the star-studded event will feature a tribute to 50 years of the James Bond movie franchise.


"We are very happy to include a special sequence on our show saluting the Bond films on their 50th birthday," said the producers of the Oscars show, Craig Zadan and Neil Meron.


The nominations are selected by a ballot of 6,000 members of the Academy of Motion Picture Arts and Sciences. 


A total of 24 categories will be announced, including the best acting performances of the year and technical awards in areas such as editing, design and music.


Nominations for this year's awards are being announced two weeks earlier than usual.


The Academy of Motion Picture Arts and Sciences said the move would "provide members and the public a longer period of time to see the nominated films".


The Bafta nominations were announced on Wednesday with Lincoln leading the way in 10 categories.


நன்றி - BBC

கரண்ட் கட்டுக்கு தீர்வு

-->
ஒளிமயமான எதிர்காலம்!

‘‘சூரிய விளக்குக்கு மாறுங்க!’’


ஐயோ... கரண்ட் கட் பிரச்னை தாங்க முடியலையே!"
மின் கட்டண உயர்வும் எக்கச்சக்கமாயிடுச்சே!" என்ற புலம்பல்தான் இப்போது எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
சென்னை கிருகம்பாக்கத்தில் எம்.எஸ். லைட்டிங் சொல்யூஷன்ஸ்என்ற பெயரில் சோலார் மின்விளக்குகளை சந்தைப்படுத்தி வருகிறார் சுதா ரமணி.
மின் வெட்டு, தட்டுப்பாடு, பகிர்வில் பிரச்னை இவ்வளவுக்கும் ஒரே தீர்வு இறைவன் அளித்த இயற்கைக் கொடையான சூரியனே! சூரிய சக்தியே பிரபஞ்ச சக்தி. இன்று எப்படி கம்ப்யூட்டர் இன்றி, உலகில்லையோ, அதுபோல வருங்காலத்தில் சோலார் எனர்ஜி இல்லாமல் தொழில் வளமில்லை" என்று ஆரம்பித்தார் சுதா ரமணி.
சோலார் மின் சக்தி என்றால் என்ன?
சூரியக் கதிர்களின் மூலம் வெப்பம் பெற்று உற்பத்தி செய்யப்படும் மின்சாரமே, சோலார் மின்சக்தி எனப்படுகிறது. சூரியக் கதிர்கள் சூரியப் பலகையில் படும்போது, அதில் உள்ள சிலிக்கான் என்னும் பொருள் எலக்ட்ரான்களைச் செயல்படத் தூண்டும். அச்சமயம், ஏற்படும் எலெக்ட்ரான்களின் ஓட்டத்தால் ஒருவித சக்தி உற்பத்தியாகும். அந்தச் சக்தியே மின்சக்தி. இப்படி உருவாகும் மின்சாரமானது, பேட்டரி, இன்வெர்ட்டர் மூலமாகச் சேமிக்கப்பட்டு மின் பயன்பாட்டுக்கு வயர்கள் மூலம் அனுப்பப்படும்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல உபகரணங்களை சூரிய மின்சக்தி மூலம் இயக்கலாம். சோலார் வாட்டர் ஹீட்டர், சோலார் தெருவிளக்குகள், சோலார் மொபைல் சார்ஜர், சோலார் மின்விசிறி, சோலார் குக்கர், ஏன் சோலார் விமானம் கூட வந்துவிட்டது.
நீங்க என்னென்ன சோலார் விளக்குகளைத் தயாரிக்கிறீங்க?

பத்து வாட்ஸ் உள்ள சோலார் பேனல் முதல், எட்டு வாட்ஸ் போர் டபிள் ஸ்லிம் லைட்வரை விதவிதமான லைட்டுகளைத் தயாரிக்கிறோம். உதாரணமாக, பத்து வாட்ஸ் உள்ள சோலார் பேனலைப் போட்டுவிட்டால், அது முழுமையாக சார்ஜ் ஆனதும் விளக்குகள் 10-12 மணி நேரம் ஃபுல் மோடிலும், அதை அடுத்து 24 மணி நேரம் டிம் மோடிலும் எரியும். ஆட்டோமேடிக் மோடில் போட்டுவிட்டால் சூரியன் மறைந்ததும் தானாகவே எரிய ஆரம்பிக்கும். சூரியன் உதித்ததும் ஸ்விச் ஆஃப் ஆகிவிடும். இதில் லெட் ஆசிட் பேட்டரிஉள்ளதால், ஓவர் சார்ஜ் ஆனாலும் ஓவர் டிஸ்சார்ஜ் ஆனாலும், பல வருடங்கள் நீடித்து வரும்.
தற்போது தமிழ்நாட்டில் பல இடங்களில் பதினைந்து மணி நேர மின்வெட்டு நிகழ்வதால் இன்வெர்ட்டர், பேட்டரி எல்லாம் பயனில்லாமல் போகிறது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க, 200 W 300 W சோலார் பேனல்களை வீட்டுக் கூரையின் மீது பொருத்திவிட்டால், இன்வெர்ட்டர் பேட்டரியை சிறப்பாக சார்ஜ் செய்து பயன்படுத்தலாம். இதனால் கிரைண்டர், ஃபேன், டீ.வி, இன்டர்நெட் போன்றவற்றைக்கூட தடையின்றி உபயோகிக்க முடியும்.
10W, 6W போன்ற சி..பி லைட்டுகளை பாத்ரூம், பூஜை அறை, பால்கனி போன்ற இடங்களிலும், கடை, ஓட்டல் அறைகளிலும் திறம்படப் பயன்படுத்தலாம். இவை தவிர, 20W எல்ஈடி ட்யூப் லைட்களும் வீட்டு உபயோகத்துக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
சோலார் பல்புகள் மார்க்கெட்டிங்கில் நீங்கள் சந்திக்கும் சவால்கள்?
சாதாரண குண்டு பல்புகளின் விலையுடன், இந்த சோலார் பல்புகளை ஒப்பிட்டுப் பார்ப்பதால், முதலில் வாடிக்கையாளர்களுக்கு விஞ்ஞானப்பூர்வமாக பலவற்றையும் விளக்கிதான் விற்க வேண்டியுள்ளது.
இது ஒரு ஒன்-டைம் இன்வெஸ்ட் மெண்ட்! கரண்ட் பில் எகிறாது. சுற்றுச் சுழலுக்குப் பாதுகாப்பானது" என்றெல்லாம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். தற்போது தமிழக அரசாங்கமும் நிறைய விழிப்புணர்வு திட்டங்கள், கடனுதவி, மானியம் போன்ற வற்றை வழங்குகிறது. மக்கள் அவற்றைச் சிந்தித்துச் செயல்படுத்த வேண்டிய காலக் கட்டம் வந்துவிட்டது.
தமிழகப் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?
சூரிய ஒளி மூலம் செயல்படும் ஏதேனும் ஒரு பொருளையாவது வாங்கிப் பயன்படுத்துவேன் என்று ஒவ்வொரு வரும் உறுதி எடுத்துக்கொண்டால் குறைந்த பட்சம் 800 மெகாவாட் மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும்.