Tuesday, January 08, 2013

ரேப் செய்ய வந்தால் கொலை செய்யலாம் -டி ஜி பி பர பரப்புப்பேட்டி

டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி 6 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலன் இன்றி இறந்து போன சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ் பயணிகளிடம் நூதன விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஏ.கே.கான் உத்தரவின் பேரில் கடப்பா மாவட்டத்தில் முதன்முதலாக விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டது.

பஸ் நிலையத்தில் பெண் கண்டக்டர்கள் நின்று கொண்டு பஸ்சில் பயணம் செய்யும் பெண்களுக்கு ரோஜா பூ கொடுத்து துண்டு பிரசுரங்களை விநி யோகித்தார்கள். அதில், தனியார் பஸ்சில் பயணம் செய்ததால்தான் டெல்லியில் மருத்துவ மாணவிக்கு அந்த கொடூரம் நடந்துள்ளது.

அரசு பஸ்சில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. எனவே நீங்கள் அரசு பஸ்சில் பயணம் செய்யுங்கள். உங்களுக்கு நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மாநிலம் முழுக்க இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடக்க இருக்கிறது.

இதற்கிடையே ஐதராபாத் மாதாபூர் பகுதியில் உள்ள ஐ.டி. பார்க்கில் நடந்த நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஆந்திர மாநில டி.ஜி.பி. தினேஷ் ரெட்டி கலந்து கொண்டார்.

ஆண்களின் கற்பழிப்பு கொடுமையில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பெண்கள் கேள்வி கேட்டனர். அதற்கு டி.ஜி.பி. தினேஷ் ரெட்டி பதில் கூறும்போது, பாலியல் செய்யும் ஆண் களிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள அவர்களை கொலை செய்ய தயங்க கூடாது.

கொலை ஒரு குற்றமாக இருந்தாலும் எந்த பின்னணியில் கொலை நடந்தது என்பதை ஆராய்ந்துதான் போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள் என்று கூறினார்.

ஈவ்டீசிங் சட்டத்தை கடுமையாக்க திட்டமிட்டு இருப்பதாக அரசு முதன்மை செயலாளர் மின்னிமாத்யூ கூறினார்.

குண்டூரில் உள்ள மகளிர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நகர போலீஸ் சூப்பிரண்டு ரவிகிருஷ்ணா கூறும்போது, உங்களுக்கு எதிராக கொடுமை செய்யும் ஆண்களை தைரியமாக எதிர்க்க வேண்டும். அவர்கள் முகத்தில் மிளகாய் பொடியை வீசிவிட்டு எங்களுக்கு தகவல் சொல்லுங்கள். தகவல் வந்த அடுத்த நிமிடத்தில் போலீசார் அங்கு நிற்பார்கள். பெண்களை நாம் சக்தியாக வணங்குகிறோம். அப்படிப்பட்ட உங்களுக்கு கொடுமை வரும்போது தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அனைவரும் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கல்லூரி மாணவிகள் அனைவருக்கும் மிளகாய் பொடி பொட்டலம் இலவசமாக விநியோகிக்கப்பட்டது.
 
 
மாணவியை கற்பழித்தவர்கள் தற்கொலைக்கு முயற்சி?: திகார் ஜெயிலில் கண்காணிப்பு தீவிரம்
 
 
 
புதுடெல்லி, ஜன. 5-
 
டெல்லி மாணவியை ஓடும் பஸ்சில் கற்பழித்து கொலை செய்த ராம்சிங், முகேஷ்சிங், பவன், வினய், அக்ஷய் மற்றும் 17 வயது மைனர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
இவர்களில் மைனர் மட்டும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான். மற்ற 5 குற்றவாளிகளும் டெல்லி திகார் ஜெயிலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
கற்பழிப்பு குற்றவாளிகளை மற்ற குற்றவாளிகள் தாக்கி விட கூடாது என்பதற்காக திகார் ஜெயிலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய குற்றவாளியான ராம்சிங் மூன்றாம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
 
பவன், அக்ஷய் இருவரும் 4-ம் எண் ஜெயிலிலும், வினய், முகேஷ் இருவரும் 7-ம் நம்பர் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 5 பேரும் மற்ற கைதிகள் யாருடனும் பேசுவதில்லை.
 
சாப்பிடும்போது இவர்கள் 5 பேரும் தங்களுக்குள்ளே பேசி கொள்கிறார்கள். கற்பழிப்பு குற்றவாளிகள் திகார் ஜெயிலுக்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அவர்களது நடவடிக்கைகளும் இதை உறுதிபடுத்துவதாக உள்ளன.
 
இதையடுத்து கற்பழிப்பு குற்றவாளிகள் 5 பேர் மீதும் இரவு பகல் பாராமல் போலீசார் பார்வை திரும்பி உள்ளது. அவர்களது நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது



குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்படாததால் மரண தண்டனையில் இருந்து மைனர் தப்பிக்க வாய்ப்பு
 
 
டெல்லி, ஜன.4-
 
டெல்லியில் மருத்துவ மாணவியை கற்பழித்து கொலை செய்த ராம்சிங், முகேஷ் சிங், பவன், வினய், அக்ஷய் ஆகிய 5 பேர் மீது போலீசார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
 
மிக கொடூரமான குற்றம் செய்துள்ளதால் 5 பேருக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகையில் வலியுறுத்தியுள்ளனர். எனவே 5 குற்றவாளிகளுக்கும் அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
6-வது குற்றவாளிக்கு 17 வயதே ஆவதால் அவன் மைனர் என்பதால் பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே அவனது உண்மையான வயதை கண்டுபிடிக்க அவனுக்கு எலும்பு  மஜ்ஜை சோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்த சோதனை அறிக்கை இன்னும் வரவில்லை.
 
அவன் 18 வயதை பூர்த்தி செய்து மேஜர் ஆக இன்னும் 5 மாதம் இருப்பதாக தெரிகிறது. இது அந்த மைனருக்கு சாதகமான ஒரு சூழ்நிலையை மாற்றியுள்ளது.
 
தற்போதைய நிலையில் சிறுவர் குற்ற சட்டப்படி மாணவியை கற்பழித்த 17 வயது மாணவருக்கு அதிக பட்சமாக 3 ஆண்டுகள் வரைதான் ஜெயில் தண்டனை கொடுக்க முடியுமாம். இந்த காலக்கட்டத்தில் அவனுக்கு 18 வயது பூர்த்தி ஆகிவிட்டால், அவன் ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுவான்.
 
18 வயதுக்கு பிறகு அவனை சீர்திருத்த பள்ளியில் வைத்திருக்க இயலாது. மேலும் மேஜர் என்று சுட்டி காட்டி தண்டனை அளிக்கவும் இயலாது என்கிறார்கள். சட்டத்தில் உள்ள இந்த சில பிரிவுகளினால் மைனர் சிறுவன் உயிர் தப்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
மாணவியை கற்பழித்த 6 பேரில் இந்த மைனர்தான் மிக, மிக கொடூரமாக நடந்து கொண்டவன். மாணவியை 2 தடவை பலாத்காரம் செய்த அவன் அவர் வயிற்றில் கம்பியால் குத்தி மரணத்துக்கும் காரணமாக உள்ளான்.
 
இத்தகைய கொடூர மைனர் சில மாதங்களில் சுதந்திரமாக வெளியில் வந்து விடுவான் என்பதை பலராலும் ஜீரணிக்க இயலவில்லை. எனவேதான் அவனது உண்மையான வயதை உறுதி செய்ய டெல்லி போலீசார் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
 
 
THANX - MALAIMALAR

கண்ணா! ஜெயிலில் களி தின்ன ஆசையா? கே பாக்யராஜ் கேள்வி, போலீசில் புகார்

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/2/25/Kanna_Laddu_Thinna_Aasaiya.jpg/220px-Kanna_Laddu_Thinna_Aasaiya.jpg 
நடிகர் சந்தானம், இயக்குனர் ராம.நாராயணனுடன் இணைந்து தயாரிக்கும் படம் "கண்ணா லட்டு தின்ன ஆசையா". இதில் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் கே.பாக்யராஜின் "இன்று போய் நாளை வா" படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கே.பாக்யராஜ் சென்னை நகர போலீஸ் கமிஷனருக்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:



1981ம் வருடம் என்னால் உருவாக்கப்பட்ட மூலக்கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நான் நடித்து இயக்கிய படம் "இன்று போய் நாளை வா". மூன்று ஹீரோக்கள் ஒரு பெண்ணை காதலிக்க போட்டியிடும் கதை அம்சம் கொண்ட அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இதன் நெகட்டிவ் உரிமை, திரையீடு உரிமையும் வேறு சிலரிடம் இருந்தாலும் இதன் கதை உரிமை என்னிடம் மட்டுமே உள்ளது. 




அதை நான் தமிழில் ரீமேக் செய்ய யாருக்கும் விற்கவில்லை. ஆனால் 99 வருட திரையீடு உரிமை பெற்றுள்ள ஓ.கே.பிலிம்ஸ் பி.வி.மணி கதை உரிமை தன்னிடம் உள்ளதாக கூறி தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமிக்கு அதனை விற்றுள்ளார். இதனை புஷ்பா கந்தசாமி என்னிடம் சொன்னபோது நான் இந்தக் கதையை என் மகனை வைத்து மீண்டும் தயாரிக்கப்போகிறேன். அதனால் கதை உரிமையாக யாருக்கும் தர மாட்டேன் என்று கூறிவிட்டேன். ஆனால் அவர் கதை உரிமை என்னிடம் இருப்பது தெரிந்தும் ஓகே பிலிம்ஸ் மணியிடமிருந்து வாங்கி அதனை ராம.நாராயணனுக்கு விற்றுள்ளார். ராமநாராயணன் தற்போது எனது கதையை நடிகர் சந்தானத்தை வைத்து "கன்னா லட்டு தின்ன ஆசையா" என்ற படத்தை எடுத்து வருகிறார். 


http://gallery.oneindia.in/ph-big/2012/12/kanna-laddu-thinna-aasaiya_135521984215.jpg




கதை உரிமை என்னிடம் உள்ளது தெரிந்தும், ராமநாயராணன், புஷ்பாகந்தசாமி ஆகியோர் கூட்டு சதி செய்து எனது கதையை படம் எடுத்து வருகிறார்கள். கன்னா லட்டு தின்ன ஆசையா படத்தின் கதை. இன்று போய் நாளை வா கதைதான் என்று படத்தின் ஹீரோ சந்தானமும், இன்னொரு  நடிகரும் பேட்டியில் கூறி உள்ளனர். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. 



கதை என்னுடையது இல்லை என்றால் படத்தை போட்டுக் காட்ட சொன்னேன். அதையும் செய்யாமல் அவசர அவசரமாக திரையிட முயற்சித்து வருகிறார்கள். என் மகனின் எதிர்காலத்திற்காக நான் வைத்திருந்த கதையை இவர்கள் படம் எடுத்துவிட்டதால் எனது மகனின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அவர்கள் மீது 2 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு சிவில் வழக்கு தொடங்க உள்ளேன். எனவே போலி ஆவணங்கள் மூலம் எனது கதையை வைத்து எடுக்கப்பட்ட படத்தை நிறுத்தி வைத்து நீதி வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.


 நன்றி - தினமலர் 


http://www.cinespot.net/gallery/d/978058-1/Kanna+Laddu+Thinna+Aasaiya+Movie+Photos+_9_.jpg

பள்ளி கல்லூரி காலை 7.30 க்கு திறப்பது சாத்தியமா? மக்கள் கருத்து

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றும் அரசின் முயற்சிக்கு, ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரித்துள்ளனர். ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், மாணவ, மாணவியர் உடலாலும், உள்ளத்தாலும் கடுமையாக பாதிக்கப்படுவர் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

கடந்த மாதம், சென்னை, பெருங்குடியில், பஸ் படிக்கட்டுகளில் பயணித்த மாணவர்கள் நான்கு பேர், லாரி மோதி பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்தை, சென்னை ஐகோர்ட் தானாக முன்வந்து, விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதைத் தொடர்ந்து, போக்குவரத்து துறை, ஐகோர்ட்டில் ஒரு பதில் அறிக்கையை சமர்ப்பித்தது. 



அதில் கூறியுள்ளதாவது: சென்னையில், பள்ளி வேலை நேரத்தை, காலை, 7:30 மணியில் இருந்தும், கல்லூரி வேலை நேரத்தை, 8:00 மணியில் இருந்தும் துவங்கும் வகையில், மாற்றம் செய்யலாம். இந்தக் கருத்தை, கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறையிடம் தெரிவித்துள்ளோம். மேலும், கல்வி நிறுவனங்கள் துவங்கும் நேரம் மற்றும் முடியும் நேரங்களில், கூடுதல் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம், ஆசிரியர், மாணவர், பெற்றோர் மத்தியில், பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சென்னையைப் பொறுத்தவரை, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், காலை, 8:45 மற்றும் 9:00 மணிக்கு துவங்குகின்றன. தனியார் பள்ளிகள், 8:00 மணியில் இருந்து, 8:30க்குள் துவங்கப்படுகின்றன. தற்போதைய நேரத்தை மாற்றினால், பள்ளியின் தூரத்தை பொறுத்து, முன்கூட்டியே மாணவர்கள் கிளம்ப வேண்டியிருக்கும். குறைந்தபட்சம், 6:45 மணி முதல் கிளம்ப வேண்டியிருக்கும். இதற்கு, அதிகாலை, 5:00 அல்லது 5:30க்கே எழுந்து, குளித்து முடித்து, தயாராக வேண்டிய நிலை ஏற்படும். இதனால், அரசின் முயற்சிக்கு, ஆசிரியர்கள், 





மாணவர்கள், ஆரம்பத்திலேயே எதிர்ப்பு குரல் கொடுக்கின்றனர்.


மாணவர்கள் பாதிப்பர்:
அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலர் அண்ணாமலை கூறியதாவது: காலை, மாலை நேரங்களில், பஸ்களின் ண்ணிக்கையை இப்போதே,அதிகரிக்கலாம். மாணவர்களுக்கென, தனியாக சிறப்பு பஸ்களை இயக்கலாம். அனைத்து பஸ்களிலும், கதவுகள் அமைப்பதை கட்டாயமாக்கலாம். இதில் எதையுமே செய்யாமல்,பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றினால், நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் கண்டிப்பாக வரும்.காலையில் சரியாக சாப்பிடாமல் பள்ளிக்கு வந்து, மயக்கம் அடைந்து விழுகின்றனர்.

இதுபோன்றசம்பவம், அரசுப் பள்ளிகளிலும் நடக்கிறது; தனியார் பள்ளிகளிலும் நடக்கின்றன. இதனால், மாணவர் மட்டுமில்லாமல், பெற்றோர், ஆசிரியர்களுக்கும் சிரமம் ஏற்படும். ஆசிரியர்கள், நீண்ட தொலைவில் உள்ள பள்ளிகளில் வேலை பார்க்கின்றனர். அதிகாலையில் எழுந்து தயாரானால் தான், ஆசிரியர்களாலும், 7:30க்கு, பள்ளிக்குச் செல்ல முடியும். எனவே, நேர மாற்றம் செய்யும் முயற்சியை, அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


கல்வித்துறை தயார் : இந்த விவகாரம் குறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போதுள்ள நேரத்திற்கு, பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டும், பிரச்னை தீராது; போக்குவரத்து நெரிசல் தான் அதிகமாக ஏற்படும். நேரத்தை மாற்றுவது தான் ஒரே தீர்வு. அரசு உத்தரவிட்டால், நேரத்தை மாற்ற நாங்கள் தயார்' என்றார். இந்த விவகாரம் தொடர்பாக, போக்குவரத்து துறை, கல்வித்துறை, காவல்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டு கூட்டம், 10ம் தேதி, சென்னையில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

 மக்கள் கருத்து  



1. அனைத்து பள்ளிகளும் அரசு மயமாக வேண்டும் பள்ளிகள் 2 கி மீ சுற்றளவில் உள்ள மாணவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும் பெற்றோர் பிள்ளைகளை நடந்தே சென்று விட்டு விடலாம் 


2. வட மாநிலங்களில் குளிர் ஒரு டிகிரி இருக்கும்போதே கூட குழந்தைகள் ஏழு மணிக்கெல்லாம் ஆட்டோவில் ஏறி பள்ளி செல்வதை காணலாம். தமிழ்நாடு குளிரால் அவ்வளவு பாதிக்காத பகுதி மாலை இரண்டு மணிக்கு பள்ளி முடிந்து விடும். இதில் என்ன இவர்களுக்கு கஷ்டம் என்று தெரியவில்லை 


3. இதையெல்லாம்,ஜென்மத்திற்கும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.....மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் ஒப்புக்கொண்டாலும் ஆசிரியர் வர்க்கம் இதை ஏதனும் ஒரு காரணம் கொண்டு எதிர்க்கும் ....இவையெல்லாம் நடைமுறை படுத்துவது அவ்வளவு எளிதல்ல ...


.பெற்றோர் ,ஆசிரியர், ..காவல் துறை, கல்வித்துறை .மற்றும் ..அதற்கான பொறுப்புள்ள அமைச்சர்கள் உள்துறை செயலர் ...கல்வி துறை செயலர் இவர்களை கொண்ட கூட்டு கூட்டம் நடத்தி அவர்களது கருத்து கேட்டு ... அதன் படி ஒரு முடிவினை எடுக்கவேண்டும் ....அரசு தனது கொள்கையை ஏதேனும் ஒரு வகையில் திணிக்க முயலக்கூடாது 


4. Changes are never change. சார் நானும் தமிழ் நாட்டில் இருந்து இருந்தால் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தான் தெரிவித்து இருப்பேன். தமிழகம் தொடர்ந்து பின் நோக்கி செல்ல ஒரு காரணம் மக்களாகிய நாம் மட்டங்களை ஏற்காததே. திர்ப்பு தெரிவிப்போர் தமிழ் நாடு அல்லாத மற்ற மாநில நகர்களை சென்று பார்த்தல் சென்னை எவ்வளவு பின் தங்கியுள்ளது என்று தெரியும். 



பாம்பே மற்றும் பெங்களூர் நகர்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் காலை 7.30 ஆரம்பித்து மாலை 3.00 அல்லது 3.30 க்கெல்லாம் முடிந்துவிடும். இதனால் மாணவர்கள் பேருந்துகளை சிரமம் இல்லாமல் பயன் படுத்தமுடியும், படி கட்டு பயணம் தவிர்க்க படும் மற்றும் போக்கு வரத்தும் பீக் ஹவர் நேரங்களில் குறையும். நேரம் இல்லை, சிக்கிரம் எழ வேண்டும் என்று புலம்புவதை விட்டு நம் வாழ்க்கை முறையை மட்டற்ற வேண்டும் 


அதாவது பிள்ளைகளை ஒன்பது மணிக்கு முன் படுக்க செய்து அதிகாலை எழ பழக்க வேண்டும். இன்று சென்னை போன்ற நரக வாழ்க்கையில் தனி மனித மாற்றம் களை ஏற்காத வரை சமுதாய மாற்றம் ஏற்படாது. 



5. போக்குவரத்து துறை தங்களிடம் உள்ள குறைகளை தீர்க்காமல், பள்ளி மற்றும் கல்லூரி நேரத்தை மாற்றுவதற்கு ஆலோசனை கொடுப்பது வியப்பாக இருக்கிறது. ஏற்கனவே பள்ளிகள் 8.30 மணிமுதல் 9.00 மணிக்குள் தான் துவங்குகின்றன. இதற்கே நேரத்திற்கு போகமுடியாமல் அனைத்து பள்ளிகளிலும் சில மாணவ, மாணவிகள் வெளியில் நிற்பதும், கடவுள் வாழ்த்து முடிந்தவுடன் அவர்களை உள்ளே விடுவதும் நடக்கிறது. முதலில் போக்குவரத்து துறை அனைத்து பேருந்துகளிலும் மகாராஷ்டிரா,கர்நாடகா, மற்றும் ஆந்திரா போல இரும்பு கதவுகள் போருத்தட்டும். தானாகவே விபத்துகள் குறையும். 


6. எந்த ஒரு துறையிலும் எந்த ஒரு மாற்றத்தையும் எந்த ஒரு மக்களும் உடனடியாக ஏற்று கொள்வதில்லை.. அது போல்தான் இதுவும்.. எல்லாமும் சாத்தியம்தான்... நடைமுறைபடுத்தபட்டால் எல்லாம் ஓரிரு மாதங்களில் சரியாகிவிடும்.... இங்கு கருத்து சொல்லும் எத்தனை பேர் தங்கள் வீடுகளில் குழந்தைகளுக்கு காலை வேளைகளில் உதவுகின்றனர்... 


எதிர் கட்சியினர் போல் எல்லா திட்டங்களையும் எதிர்த்து கொண்டே இருந்தால் என்னதான் செய்ய..? தவிர மதியம் மற்றும் மாளை வேளைகளில் பல விசயங்களை செய்யலாம், கற்று கொள்ள நேரமும் மிஞ்சும்... காலை பொழுதில் வெறும் தூக்கம் மட்டுமே மிஞ்சும்... தவிர நடைமுறைபடுத்தபட்டு சாத்தியம் இல்லையெனில் மீண்டும் பழைய நடை முறைகே வரலாமே.... சமச்சீர் கல்வியில் என்ன நடந்தது...? காலையில் ஒரு மணி நேரம் முன்பே எழுந்தால் உடலுக்கும் நல்லதுதான். எல்லாமே பழக்கத்தில் மாறுபவனவே.... முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்... 


7. அரசு என்றால் மக்களுக்கு எதிராக செயல்படுவது என்பதுதான் ஜனநாயகம் . பிள்ளைகள் நிம்மதியாகத் தூங்குவது இந்த காலகட்டத்தில்தான், அதிகாலை எழுந்து தூக்கம் கலையுமுன், அவர்களுக்கு உணவை வாயில் திணித்து, திட்டி, பெற்றோகள் அவதிக்குள்ளாகி, டென்ஷனாகி, இவர்களும் நிம்மதியை இழந்து, குழந்தைகளையும் நிம்மதி இழக்கச் செய்து, பள்ளி சென்றவுடன் எமன் பாசக்கயிறு போல் ஆசிரியர்கள் தங்கள் கடமையைச் செய்கிறோம் என்ற பெயரில் பிள்ளைகளை தாங்கள் வீட்டில் பட்ட கஷ்ட்டங்களுக்கு இந்த பிள்ளைகளின் மீது காட்டி, மொத்தத்தில் எல்லோரும் பயித்தியம் பிடித்து ஆளாகவேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம் என்றால் நடக்கட்டும், தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கும் கல்விமுறைக்கு மாற்றாக பல நல்ல கருத்துக்களை சான்றோர்கள் அள்ளி தர ஆர்வமாக இருக்கும்போது, அவர்களை எல்லாம் மனிதனாகவே மதிக்காமல், இவர்கள்தான் எல்லாம் என்று ஈடுபட்டால் யார்தான் என்ன செய்ய முடியும்? 



ஒவ்வொன்ற்க்கும் மக்கள் நீதிமன்றம் சென்றுதான் தங்கள் வாழ்க்ககை நடத்தவேண்டிய காலகட்டத்தில் உள்ளோம் என்றால் மிகையாகாது. பள்ளி மாணவர்களிடமே கருத்துக் கேட்கலாமே? இவர்களுக்கு இல்லாத மூளையா இன்று ஆள்பவர்களிடம் இருக்கப்போகிறது? இன்றைய மாணவர்களிடம் இருக்கும் அறிவு வளர்ச்சி மிக மிக ஆற்றல் கொண்டது, ஆகவே அரசியல் கட்சியில் உறுப்பினர்களாக இருக்கும் மாணவர்கள், நாட்டுப்பற்றுள்ள மாணவர்கள், பெற்றோர்களுக்குக் கீழ்ப்பட்டு நடக்கும் மாணவர்கள், இப்படி பல கிளைகளாக உள்ள பல தரப்பு மாணவர்களிடம் கலந்து ஆலோசித்து , கடைசியில் பெற்றோர்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுத்தால் நல்லது. வந்தே மாதரம் 



8. நல்ல திட்டம். 2 - 2:30 க்கு வீட்டிற்கு வந்து வீட்டுப்பாடங்ககளை முடித்துவிட்டு மாலையில் 2 மணி நேரம் தொலைக்காட்சியின் முன்னால் உட்காராமல் விளையாட நேரம் கிடைக்கும். இதனால் உடம்பு குண்டாவதைத் தடுப்பதுடன் பல்வேறு வியாதிகளுக்கும் விடை கொடுத்திடலாம். 



9. காலை 7 1/2 மணிக்கு பள்ளி ஆரம்பித்தால் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வேலைக்கு செல்லலாம். மேலும் பள்ளிகளும் 3-5 KM க்குள் வசிக்கும் மாணவர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து சேர்க்கவேண்டும். அப்போது தான் ஊரில் உள்ள அனைத்து பெற்றோர்களும் தம் குழந்தைகளை ஒரே பள்ளியில் சேர்க்க முற்பட மாட்டார்கள். இது தேவையில்லாத டிராபிக்கை கட்டுப்படுத்தும். மேலும் பள்ளிக்காக குழந்தைகள் வெகு தொலைவு செல்வதும் தவிர்க்கப்படும். செய்வார்களா? 



10. நேரம் மாற்றம் நல்லது தான் பள்ளிக் குழந்தைகளுக்கு, ஆனால் இன்று இருக்கும் போக்குவரத்து நெரிசல்கள் , வாகனங்கள் அதிகமின்மை மற்றும் பலதரப்பட்ட மக்கள் வேலைக்கு அவரசமாக பணிக்கு செல்லும் அதிகாலையில் இந்த நேரம் மாற்றம் மீண்டும் பெற்றோர்களுக்கு, குழந்தைகளுக்கும் பல சிரமத்தை கொடுக்கும் அதற்கு பதிலாக அரசு சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு என்று தனிப் பேருந்துகளை என்று காலையும் , மாலையும் குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துகளை இயக்கலாம் மற்ற அரசு பேருந்துகள் காலையிலும் , மாலையிலும் தனியார் பேருந்துகளுக்கு இனியாக வருவாயை ஈட்டலாம் .


 பள்ளிக்குழந்தைகளும் இனிதாகவும், பாதுகாப்பாகவும் பயணம் செய்யலாம் மற்றும் படியில் பயணம் செய்யாமலும் தவிர்க்கலாம் இலவசங்கள கொடுப்பதை தவிர்த்து விட்டு, நல்ல பயனுள்ள திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்


 நன்றி - தினமலர்

மூன்று பேர் மூன்று காதல் - இயக்குநர் வஸந்த் ஜாலி பேட்டி

http://www.starmusiq.com/movieimages/Moondru-Per-Moondru-Kaadhal_B.jpg

அர்ஜுன் எனக்கு சீனியர். சேரன் எனக்குக் கொஞ்சம் ஜூனியர். இந்த சிச்சுவேஷன் எனக்குப் புதுசு. ஏன்னா, இப்போ இருக்கும் அஜித் வேற. 'ஆசை’ சமயத்துல அஜித் வேற. அதே மாதிரிதான் 'நேருக்கு நேர்’ சமயம் விஜய், சூர்யாவும். என் படத்துல நடிச்ச பிறகுதான் பலருக்கு ஸ்டார் அந்தஸ்து வந்துச்சு. ஆனா, ஸ்டார் அந்தஸ்தோட இருந்த ஹீரோவை நான் முதன்முதலா இயக்கினது 'ரிதம்’ படத்தில்தான். அப்ப அர்ஜுன் செம ஆக்ஷன் கிங். ஆனா, 'ரிதம்ல ஆக்ஷன் இருக்காது. ஆக்டிங் மட்டும்தான்’னு ஆரம்பத்திலேயே ஓப்பனா சொல்லிட்டேன்.  



சேரன் எனக்கு ரொம்பப் பிடிச்ச டைரக்டர். ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசை. அது இப்போ அழகா நிறைவேறி இருக்கு. ஓ.கே. எல்லாரும் காதல்பத்திப் பேசலாமே. படத்தோட காதல் இல்லை... அவங்கவங்க காதல்பத்தி!'' என்று சொல்லிவிட்டுக் குறும்பாகக் கண்ணடித்தார் வஸந்த்.    



''இப்பவும் நான் சொல்லிக்கிறேன்... நான்தான் இங்கே ரொம்ப பொடிப் பையன். அதனால, சீனியர் அர்ஜுன் சார் இப்போ பேசுவார். அவரு எதுல சீனியர்னு கேட்கக் கூடாது. எல்லாத்துலயுமே அவர்தான் சீனியர்!'' என்று இப்போதும் விமல் செம ஸ்கோர் செய்து ஒதுங்கிக்கொண்டார்.



''என்ன இப்படி மாட்டிவிடுறீங்க? எனக்கும் ஒரு லவ் இருந்துச்சு. ஆனா, அதை இப்ப சொன்னா வீட்ல மாட்டிக்குவேனே. சரி... பரவாயில்லை. இருபது வருஷத்துக்கு முன்னாடி ஷூட்டிங்ல ஒரு அப்பாவிப் பொண்ணு. பார்த்த நிமிஷமே எனக்குப் பத்திக்கிச்சு. பாரதிராஜா சாரோட 'கல்லுக்குள் ஈரம்’ படத்துல வர்ற மாதிரி. அப்ப நான் ரொம்பச் சின்ன பையன். அது ஒரு கிராமத்துப் பொண்ணு. ரெண்டு மூணு வாரம் க்ரஷ்ல திரிஞ்சேன். அப்புறம் அது அப்படியே மறைஞ்சுருச்சு. இப்ப காதல்னா, அது இந்தியா மேல மட்டும்தான். ஆனா, நான் கல்யாணத்துக்குப் பொண்ணு தேடினப்ப 'சினிமாக்காரனுக்குப் பொண்ணு தர மாட்டேன்’னு சொன்னவங்கதான் அதிகம். அந்த விஷயத்துல பரவாயில்லை விமல்... நீ கெட்டிக்காரன். காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்ட!'' என்று விமல் முதுகில் செல்ல மாகத் தட்டிக்கொடுக்கிறார் அர்ஜுன்.


http://mmimages.maalaimalar.com/Articles/2012/Dec/3fe32aac-d24d-4db5-9c15-377b826bbbdf_S_secvpf.gif



''அதுக்கு நான் பட்ட பாடு எனக்குத்தானே தெரியும். இப்போ வஸந்த் சார் அவரோட காதல்... ஸாரி காதல்கள் பத்திச் சொல்லுவார்!'' என்று விமல் அறிவிக்க, ''கொன்னு... கொன்னு'' என்று ஒற்றை விரல் காட்டி மிரட்டிவிட்டுப் பேசத் தொடங்கினார் வஸந்த்.


''எந்த விஷயத்துல அதீத ஆர்வமா இருக்கீங்களோ அல்லது யார் மேல எல்லாம் அதீத அன்பு செலுத்துறீங்களோ... அதுதான் லவ். அர்ஜுனைப் பாருங்க. சினிமாவுக்கு வந்து இத்தனை வருஷம் கழிச்சும் உடம்பை எவ்ளோ ஃபிட்டா வெச்சிருக்கார். அது அவர் தொழில் மேல அவருக்கு இருக்கிற லவ். சேரனுக்கு டைரக்ஷன் மேல லவ். எந்த நேரமும் எதையாவது யோசிச்சுக்கிட்டே இருக்கார். எனக்கு சினிமா மேல காதல். அது போக, என்ன சொல்ல... பெண்கள் மேல காதலே இல்லைனு சொல்ல முடியாது. ஆனா, அதுக்காக அதை இங்கே சொல்ல முடியாது. என்ன சேரன் கரெக்டா?''



''ரொம்பச் சரி... ஆனா, நீங்க பண்ண இன்னொரு விஷயம் ரொம்ப தப்பு. படத்துல எனக்கும் ஒரு காதல் இருக்குனு சொன்னீங்க. நானும் ஆசை ஆசையா வந்து நின்னா, கடைசி வரை என் ஜோடிகூட ஒரு வார்த்தைகூடப் பேசவிடலை. என் மேல உங்களுக்கு என்ன சார் கோபம்?'' என்று சேரன் பரிதாபமான குரலில் கேட்க, வெடித்துச் சிரித்துவிட்டார்கள் மூவரும்.  


''ஆனா, காதல் எந்த வயசுலயும் வரும். அதுவும் நம்ம கருத்தோட செட் ஆகுறவங்களோட அதிகமா வரும். அம்பது வயசுக்கு மேலயும் வரும். மத்தபடி வாழ்க்கையில ஒரே ஒரு முறைதான் காதல் பூக்கும்கிறதெல்லாம் சும்மா. அது பாட்டுக்கு அப்பப்ப பூத்துக்கிட்டே இருக்கும். அதுவும் வஸந்த் சார் மாதிரி ஆட்களுக்குஎல்லாம் தினம் தினம்கூடப் பூக்கும். ஏன்னா, பூமிக்கு அனுப்பப்பட்ட காதலின் கொள்கை பரப்புச் செயலாளர்கள்ல வஸந்தும் ஒருவர்!'' என்று சேரன் நிறுத்த, அதற்கு என்ன ரியாக்ஷன் கொடுப்பது என்று புரியாமல் சிரித்த வஸந்த், பிறகு சமாளித்துப் பேசத் தொடங்கினார்.  



''இதுதான் சேரன். மனசுல பட்டதைப் பளிச்னு பேசிடுவார். ரொம்ப ஓப்பன் டைப். எல்லாரும் சேரன் சீரியஸான ஆளு... ஹேண்டில் பண்றது கஷ்டம்னு பயமுறுத்தினாங்க. ஆனா, அவர் என்னைவிட செம ஜாலி பார்ட்டி. நாகர்கோவில்ல ஷூட்டிங். பரபரனு வேலை பார்த்துட்டு இருக் கோம். எனக்குத் தாடியை ட்ரிம் பண்ணக்கூட நேரம் இல்லை. திடீர்னு சேரன் என்னைக் கூப்பிட்டு வம்பா உட்காரவெச்சு, 'அளவா இருந் தாத்தான் அது வஸந்த் தாடி’னு சொல்லிட்டு, அவரே ட்ரிம் பண்ண ஆரம்பிச்சுட்டார். 



இப்போ என்னோட நெருக்கமான நண்பர்கள் பட்டியலில் சேரனுக்கும் ஒரு இடம் இருக்கு!'' என்று நெகிழ்ந்த வஸந்தை இறுக்கி அணைத்துக்கொண்டார் சேரன்.


''ஓ.கே. எல்லாம் சூப்பரா முடிஞ்சிருச்சு. இப்போ அப்படியே வெளியே கிளம்பிப் போய் டீ, காபி, வடை, பஜ்ஜினு சில ஃபார்மாலிட்டீஸ் மட்டும் முடிச்சுட்டா, நான் கிளம்பிருவேன்!'' என்று விமல் எண்ட் கார்டு தட்ட, சட்டெனச் சுதாரித்தார் சேரன்.


http://www.nakkheeran.in/AllImages/Gallerys/33751_1.jpg



''டேய்... நானும் ஆரம்பத்துல இருந்து பார்த்துட்டே இருக்கேன். எஸ்கேப் ஆகிட்டே இருக்கே. நீ இப்ப ஏதாச்சும் உண்மை பேசியே ஆகணும். இல்லைன்னா உன்னை விடுறதா இல்லை!'' என்று சேரன் மிரட்ட,


''சார்...  நான் அவ்ளோ வொர்த் இல்லை சார். நான் பொறந்த ஆஸ்பத்திரிக்குப் பக்கத்துல இருந்த தியேட்டருலதான் 'கேளடி கண்மணி’ படம் ஓடிட்டு இருந்துச்சு. கைக்குழந்தையா இருந்தப்ப அந்தப் பட வசனங்கள்தான் எனக்குத் தாலாட்டு. அப்படி வளர்ந்த நான், இப்ப எப்படி டைரக்டர் முன்னாடி பேசுறதுன்னுதான் கூச்சப்பட்டு ஒதுங்கி நிக்கிறேன்!'' என்று விமல் டபாய்க்க,
''அடப்பாவி... நான்லாம் அப்ப பொறக்கவே இல்லையே!'' என்று அர்ஜுன் சதாய்க்க... அப்புறம் அங்கே நடந்தது... நான்கு பேர்... நான்கு மணி நேர அரட்டை!


நன்றி - விக்டன்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqx_fST3LZM3AWmPgpU7Y1B46cERZdgo8V4V2ch9gOIBRAUKiNQbyY-YdT51fRWY0QAPA3bjgW0u4IEE3n2AXOd0iUm8ualKLft8_vcRmMjuFKZUeBH72e-meeqDIFPp0RPdEfECH0rBh4/s1600/5.jpg

Monday, January 07, 2013

டார்லிங்க் டார்லிங்க் டார்லிங்க் ( 1982 ) - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgD6NEIOEyfBsfaRDXaES8BWLJC-nubp2y5lqvMT__rmq8wySLzb5Qlf4yS34sr5uiVK07Tm_Y5HYDn8yUsJnhmjStLlcXoW0sY4yciOaiEwHha1BXVtwZtphtoBuB8wHtnY_XMslawpGDw/s1600/darling+darling.jpgஸ்கூல்லபடிக்கும்போதேஅதாவதுஅஞ்சாங்கிளாஸ்படிக்கும்போதேஹீரோவுக்கு ஹீரோயின் மேல பப்பி லவ்  . மேல் படிப்பு படிக்க அந்த ஃபீமேல் ஃபாரீன்க்கு போயிடுது . இவர் இலவு காத்த கிளி போல  வெயிட்டிங்க் . 10 வருஷம் கழிச்சு திரும்பி வருது . ஆனா இவரைக்கண்டுக்கவே இல்லை . 

ஹீரோ ஹீரோயின் அப்பாவுக்கு ஜஸ்ட் ஒரு வாட்ச்மேன் பையன் தான் , ஸ்டேட்டஸ் பிராப்ளம் . ஹீரோயின் கிட்டே ஓபனா கேட்டும் அவர் ஒத்துக்கலை . பெற்றோர் பார்த்த மாப்ளை ஊருக்கு வர்றார். 


 படிப்படியா ஹீரோயின் எப்படி வில்லன் கிட்டே இருந்து தப்பி ஹீரோ பக்கம் சாய்கிறார் என்பதே கதை .



இந்தக்காலத்துல இளைஞர்கள் தனக்கு கிடைக்காத பொண்ணு வேற யாருக்கும் கிடைக்கக்கூடாதுன்னு ஒரு உயர்ந்த எண்ணத்தோட தனக்கு நோ சொல்லும் பெண்ணின் முகத்தில்  ஆசிட் ஊத்திடறாங்க , ஆனா தனக்கு அவ இல்லைனு தெரிஞ்சும் ஹீரோ எப்படி எல்லாம் அவரை தாங்கு தாங்குன்னு தாங்கறார் என்பதைப்பார்க்கும்போது.........


ஹீரோவாக கே பாக்யராஜ். இவர் நடிப்பு பல இடங்களில் கலகலக்க வைக்கிறது , சில இடங்களீல் கண் கலங்க வைக்கிறது . தன்னை தாழ்த்திக்கொண்டு அனுதாப வாக்கு வாங்குவதில் தமிழ் சினிமாவில்  கே பாக்யராஜ் , வடிவேல் இருவரையும் அடிச்சுக்க ஆள் கிடையாது 


 ஹீரோயினாக பூர்ணிமா  , மிகவும் அமைதியான நடிப்பு . அண்டர் ப்ளே ஆக்டிங்க் 



ஹீரோவுக்கு அப்பாவாக வரும் கல்லாப்பட்டி சிங்காரத்தின் நடிப்பு செம காமெடி 


வில்லனாக சுமன் . சுமார் நடிப்பு .

http://i.ytimg.com/vi/6phMEF5WZ6I/0.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 



1.பப்பி லவ் பீரியட்ல ஸ்கூல் ஸ்டூடன்ஸ் எல்லாரும் மார்ச் பாஸ்ட் போட்டு நடக்கும்போது இவங்க 2 பேர் மட்டும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி புன் சிரித்தபடி நடப்பதும் , அதைக்கண்டு மற்றவர்கள் வியப்பதும் என ஓப்பனிங்க்கிலேயே டச்சிங்க் சீன்



2. நாய் செத்துப்போனதும் ஒரு பேச்சுக்கு அந்தப்பொண்ணு “ டெயிலி நாயின் சமாதிக்கு வந்து பூ வைக்கனும்” என சொல்ல அதை வேத வாக்காக்கொண்டு ஹீரோ 10 வருஷமா அந்த வேலையை செய்யறார். அப்போ அங்கே வரும் டூரிஸ்ட்கள் யாரோ முக்கிய நபர் இறந்ததாக நினைத்து கண்ணீர் விட அனைவரையும் அணைத்து ஆறுதல் சொல்லும் சீன் . கலக்கல் ( அதுல 4 பேர் லேடீஸ் . கதை வ்சனம் டைரக்‌ஷன் கே பாக்யராஜ் -னு இந்த சீனில் போடுவது டச்



3. ஸ்டேஷன் மாஸ்டராக லிவிங்க்ஸ்டன் ,  வாட்ச்மேனாக ஆர் பாண்டியராஜனை இந்தப்படத்தில் நடிக்க வைத்தது



4.  ஹீரோயின் ஹீரோ ஆசையாய்த்தரும் சோளக்கருதை குரங்குக்குதருவது அப்போது ஹீரோ முகம் இஞ்சி தின்ன குரங்காய் மாறுவது



5. முதன் முதலாக வளர்ந்த பின் ஹீரோயினை பார்க்கும் முதல் பார்வையில் அவர் ஹிரோவிடம் லக்கேஜை எடுத்துக்க என்பதும் அதை ரிப்பீட்டாக காட்டி ஹீரோவின் சோகத்தை வலிமை ஆக்குவதும்


6. ஹீரோயின் , ஹீரோ இருவரும் பால்ய பருவத்தில்  ஜோடியாக எடுத்த ஃபோட்டோக்களை   ஆசையாக ஹீரோ காட்ட அதில் ஹீரோவை மட்டும் தனியா கட் பண்ணி ஆல்பம் ஆக்கும் காட்சி



7. திரைக்கதை தடுமாறும்போது சரியாக வில்லன் சுமனின் எண்ட்ரி


8. வில்லனும் , ஹீரோயினும் ஹோட்டல்ல சாப்பிடப்போறாங்க , அப்போ ஹீரோயின் 20 ரூபா கொடுத்து  வெச்சுக்கோங்கறார், அடுத்த ஷாட்ல  பெட்டிக்கடை பக்கம் வண்டி நிக்குது , வில்லன் சிகரெட் வாங்க  சேஞ்ச் இல்லை, ஹீரோயினை கேட்டா அவர் கிட்டேயும் இல்லை , ஹீரோயின் ஹீரோ கிட்டே தனிமையில் “ உன் கிட்டே தந்த 20 ரூபா குடுத்தா மறுபடியும் தரமாடேனா?  என கேட்க  அப்போ ஹீரோ “ அதை ஒரு ஏழைப்பொண்ணுக்கு தானம் பண்ணிட்டேன் , சாப்பிட கேட்டாங்க “ எனும் செண்ட்டிமெண்ட் சீன்



 9.  ஹீரோ விலனுக்கு ஷூ பாலீஸ் போட்டு விடும் காட்சி , வில்லன் வாமிட் எடுக்கும்போது க்ளீன் பண்ணும் காட்சி


http://tamil.way2movies.com/wp-content/uploads/2010/04/Bhagyaraj-And-Family-In-Treasure-Collection-13.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோயின் அப்போதான் ஃபாரீன்ல இருந்து வர்றாங்க . தோழிகளுடன் கார்ல போகும்போது “ போன வாரம் ப்ரூஸ்லீ படம் பார்த்தேன் , ஃபாரீன்ல இருந்த சீன் ஒரு ஃபைட் இங்கே இல்லை , இந்தியாவில் கட் பண்ணிட்டாங்க “ என்கிறார் . ( போன வாரம் என்பதை நேத்து நைட் என மாற்றி இருக்கலாம் )


2. ஹீரோயின் ஹீரோ பால்ய கால ஃபோட்டோக்கள் ஒரு பொக்கிஷம் , அப்போ 2 பேருக்கும் 10 வயசு கூட இருக்காது , அந்த ஃபோட்டோக்களை எதுக்கு ஹீரோயின் தன்னை மட்டும் செப்பரேட் பண்ணி கட் பண்ணனும்? காலேஜ் ஃபோட்டோவா இருந்தா ஓக்கே



3. ஹீரோ தனது ஃபோட்டோக்களை எல்லாம் தன் ரூமில் தான் வைத்திருக்கிறார். ஒரு முக்கிய ட்விஸ்ட் காட்சியில் வில்லன் சுமன் ஹீரோயினிடம் “  எனக்கு இந்த ஃபோட்டோக்கள் அவன் கார்ல கிடைச்சது “ என்கிறார்



4. வில்லனோட அப்பா  ஹீரோயின் கிட்டே பேசும் வசனங்கள்  எல்லாம் டிராமா மாதிரி இருக்கு


5. ஒரு பெரிய பணக்காரர் , ஜமீன் பரம்பரை பல தொழில் செய்பவர் ஹீரோயினின் அப்பா. ஏதோ ஒரு சீட்டுக்கம்பெனியில் அவர் மேனேஜர் பண்ணிய துரோகத்தால் டகார்னு நடுத்தெருவுக்கு வருவது ஓவர் .


6. பொதுவா ஒருத்தருக்கு லவ் வந்தா அந்த செகண்ட்ல அத வெளிபப்டுத்தனும் , ஹீரோயின் ஆ-ன்னா ஊ-ன்னா ஹீரோ கிட்டே காரை எடு , உன் கிட்டே கொஞ்சம் பேசனும் என கூட்டிப்போய்  லவ்வை சொல்வது , கண்டிபப்து எல்லாம் டிராமா மாதிரி இருக்கு


7. கராத்தே மாஸ்டர்  , ஹீரோயின் அண்ட் கோ  ரகளை ம், ஹீரோ ஃபைட் அக்மார்க்  நாடகம்


 8. படத்துல முக்கியமான திருப்பம் வரக்காரணமான ஒரு சீன் - ஹீரோயின் ஹோட்டல் ரூம்ல டிரஸ் மாத்துறா , அவரை மெரேஜ் பண்ணிக்கப்போற மாப்ளை சாவித்துவார,ம் வழியா ஒளிஞ்சிருந்து பார்க்கறார், ஹீரோயின் கோபமா கிள்ம்பிடறார்


 1. எந்த ஒரு ஆணும் இப்படி செய்ய மாட்டான். கிணத்துத்தண்ணியை ஆத்து வெள்ள்மா அடிச்சுட்டுப்போகும்?

2. அந்த கில்மா சிச்சுவேஷனைப்பயன்படுத்தி கில்மாக்கு ட்ரை பண்றதா காட்டி இருந்தாக்கூட ஏத்துக்கற மாதிரி இருக்கும்


3. அப்படி யோக்கிய சிகாமணியா இருக்கும் ஹீரோயின் ரூமில் லைட்ஸ் ஆஃப் பண்ணி டிரஸ் ட்சேஞ்ச் பண்ணிக்கலாமே?



9. வில்லன் ஹீரோயின் கேரக்டர்ல சந்தேகப்பட்டு “ நிச்சயம் ஆகியாச்சு ,  இனி மேரேஜை நிறுத்துனா என் ஸ்டேட்டஸ் பாதிக்கும் “ அப்டினு சொன்ன பிறகு ஹீரோயின் மனசு மாறுவது போல காட்டி இருக்கக்கூடாது . வேற வழி இல்லாம ஆனா அந்த மடம் ஆகாட்டி சந்தை மடம்கற மாதிரி இருக்கு


http://i.ytimg.com/vi/eaN_GJZo6ck/0.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்


1. சின்ன வயசுலயே எனக்கு குதிரை ஏறனும்னு ஆசை , ஒரு வாய்ப்புக்குடுத்தா .. ஹி ஹி


2. ஏரோபிளைன் தரைல இருக்கும்போது விபத்து நடந்தா தப்பில்லை . 1000 அடி பறக்கும்போது விபத்து நடந்தாலும் ஆள் சில காயங்களோட பிழைச்சுக்கலாம், ஆனா 50,000 அடி உயரத்துல பரக்கும்போது விபத்து நடந்தா ? இப்போ நீ அப்டித்தான் பண்ணிட்டு இருக்கே.


3. எடுத்து வெச்சு முங்குனா என்ன? எறங்கி முங்குனா என்ன? குளியல் ஒண்ணுதானே?


4. சீட்டாட்டம் உனக்கு வர்லை, நீ எல்லாம் எங்கே கரை ஏறப்போறே? அதுல எல்லாம் ஒரு நெளிவு சுளிவு இருக்குடா

5.  சிரிச்ச முகம் , இளிச்சவாய முகம் 2க்கும் வித்தியாசம் என்ன தெரியுமா?


 10 வயசுல லவ் பண்ணே ஓக்கே , அது சிரிச்ச முகம் , ஆனா 10 வருஷமா நான் சொன்னேன்னு ஒரு நாய்க்குட்டிக்கு மலர் வளையம் வெச்சே பாரு அது  இளிச்சவாய முகம்


6. மொதலாளி , பாப்பா கூட எத்தனை பொண்ணுங்க வர்றாங்க? ஹி ஹி


 யோவ்!

 டிஃபன் ரெடி பண்ணக்கேட்டேன்



7. ஹாய் , ஐ ஆம் ராஜா

 ஓ , ஐ ஃபர்கெட், ஓக்கே  லக்கேஜை எடுத்துக்குங்க



8. ஒரு நாய்க்குட்டிக்கு 10 வருஷமா மலர் வளையம் வெச்சது உங்களுக்காகத்தாங்க

 ஓஹோ , ஓக்கே  இனிமே அந்த மாதிரி முட்டாள் தனம் செய்யாதீங்க



9. கடன் வாங்குனா சம்பாதிச்சு கட்டுற யோக்கியதை இருக்கனும், அல்லது  பணக்கார இடத்துல சம்பந்தம் வெச்சுக்கும் யோக்கியதை வேணும்


10. இத்தனை நாளா உங்களை வெறும் லூசுன்னுதான் நினைச்சுட்டு இருந்தேன், இப்போதான் தெரியுது  விஷயம் தெரிஞ்ச லூஸ்னு


11.  என்னதான் அற்பனுக்கு வாழ்வு வந்து அர்த்தராத்திரில குடை பிடிச்சாலும்  காய்கறிக்காரன், பால்காரனுக்கெல்லாம் பாக்கியை டெயிலி செக் குடுத்து க்ளியர் பண்றது ஓவர்.



12. நேத்துத்தான் எனக்கு ஒரு பையன் பிறந்தான், எனக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்குன்னு புருஞ்சுக்கிட்டேன்

 ஓஹோ , பக்கத்து பங்களா ஓனர்க்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்காம், அங்கே வாட்ச்மேனா ஜாயின் பண்ணி விட்டுடறேன்



13. என் மேல நீங்க வெச்சிருந்த லவ்  , சின்சியாரிட்டி  எல்லாத்தையும் என்னால புரிஞ்சுக்க முடியுது , ஆனா உங்க முட்டாள்த்தனத்தைத்தான் என்னால புரிஞ்சுக்க முடியலை



14.  வேற வழியே இல்லீங்களா? கொஞ்சம் முயற்சி பண்ணிப்பாருங்க , 10 வருஷ லவ் இது



15 . காதல்ங்கறது தாஜ்மகால் மாதிரி , ஒத்துக்கறேன் ஆனா நீங்க ஷாஜகான் இல்லையே? சாதாரண கொத்தனார் , ஜஸ்ட் ரசிக்க மட்டுமே செய்யலாம்



16.


16.  அடப்பாவி, அப்போ என் பணம்?

 திருப்பதி உண்டியல்ல போட்டுக்கிட்டதா நினைச்சுக்குங்க



17. என்னைப்பத்தி உங்களுக்குத்தெரியாது , நான் தண்ணி அடிச்சா  கண்டபடி உளறுவேன்

 அதான் எனக்கும் வேணும்



18. டேக் திஸ் ரிங்க்


 வேணாம்

 இது கோல்டும்மா

 தெரியும், இருக்கறதை விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்படக்கூடாதுன்னு  நினைக்கறேன், எங்கண்ணன் மாதிரி நானும் ஆகிடக்கூடாதில்லை>?



19டாக்டர், வாங்க. இவங்களுக்கு யூக்லிப்டஸ் தைலம் போட்டேன், நீங்க வந்து ஒரு ஊசி போட்டுட்டா எல்லாம் சரி ஆகிடும்.


 ஏன்? அதையும் நீயே போடறதுதானே?





20கல்யாணம் பண்ணிக்கப்போற என்னை நம்பாம அவனை நம்பி நைட் டைம்ல வெளில  போய் இருக்கே?


சி பி கமெண்ட் -  காதலர்கள் , பப்பி  லவ்வர்கள் , காமெடிப்ப்ரியர்கள் பார்க்க வேண்டிய ப்டம் 
http://i.ytimg.com/vi/GYK4YAZXDYI/0.jpg

சி.பி செந்தில்குமார் -ன் ஜோக்ஸ்

1. உங்க கட்சித்தொண்டர்கள் பச்சை கலர் டிரஸ் தான் போடனும்னு வாய் மொழி உத்தரவு இட்டீங்களாமே? 


 பச்சைப்பொய் 



---------------------


2. அவன் சரியான சினிமாப்பைத்தியம்னு எப்படி சொல்றே? 


 கேட்கறவன் கேனயனா இருந்தா கரண்டை கண்டு பிடிச்சது காஜல் அகர்வால், கரண்ட் கட்டை கண்டு பிடிச்சது சோனியா அகர்வால்னு சொல்வே போல ங்கறாரே?



-------------------------


3. மாப்ளை டெம்ப்பரவரி  ஜாப் என்பதால் பொண்ணு தர மாட்டேண்ட்டீங்களாமே? 



ஆமாய்யா, தமிழக மினிஸ்டர்னா நித்ய கண்டம் , பூரண ஆயுசு



------------------------


4. இருட்டும் திருட்டும் பேர் போன இடம் எது? 



இண்ட்டர்வியூவுல இவ்ளவ் ஈசியாவா கேள்வி கேப்பாங்க? தமிழ்நாடு சார்



-------------------


5. அமைச்சரே! மாதம் மும்மாரி பெய்கிறதா? 


 மன்னா! தினம் முப்பது முறை கரண்ட் போகிறது 



----------------------------


6. நாட்டை விற்க அனுமதிக்க மாட்டேன்னு தலைவர் சொல்றாரே? 


 அடமானம் வைக்க ஐடியா போல 



-------------------------


7. சிறுககட்டி பெருக வாழ் ங்கறதை தலைவர் தப்பா நினைச்சுட்டார்  போல 


 எப்டி சொல்றே? 


சிறுசை கட்டி பெருசு நீ வாழ்!னு எழுதி வெச்சிருக்காரே? 



----------------------


8. தலைவர் விஜய் ரசிகர்னு எப்படி சொல்றே? 


 மின் வெட்டு பிரச்சனை எப்போ தீரும்?னு மக்கள் கேட்டதுக்கு ஐ ஆம் வெயிட்டிங்க்னாரே? 



---------------------


9. ஜட்ஜ் - கிரானைட் ஊழல்ல நீ ஈடுபடலை என்பதற்கு ஆதாரம் இருக்கா? 


 கைதி - யுவர் ஆனர் எனக்கு மாலைக்கண் வியாதி இருக்கு, நான் எப்படி கிரா “நைட்” ஊழல் புரிய முடியும்? 



------------------


10. உட் கட்சிப்பிரச்சனையை சரி பண்ணனும்


 தலைவரே! முதல்ல உங்க குடும்பப்பிரச்சனையை சரி பண்ணுங்க , பெரிய அக்கப்போர் 



-------------------------------


11. அவரு சரியான டுபாக்கூர் பார்ட்டின்னு எப்படி சொல்றே? 


தமிழகத்தில்   விஸ்வரூபம் எடுத்திருக்கும் மின் வெட்டு பிரச்சனையை சமாளிக்க  காணாமப்போன கரண்டை தேடி கமல் போகும் ஃபாரீன் டூர் என்கொயரிதான் விஸ்வரூப படக்கதை



----------------------


12.  உங்க படத்துக்கு மாட்றான்னு ஏன் டைட்டில் வெச்சிருக்கீங்க? 


 வில்லன் ஹீரோ கிட்டே மாட்றான். அதான் 


----------------------


13. ஐ பி எஸ் மாப்ளையே வேணாம்னு உங்க பொண்ணு சொல்லிடுச்சா? ஏன்? 


 யு பி எஸ் பிராடக்ட் பண்ற கம்ப்பெனி ஓனரைத்தான் மேரேஜ் பண்ணிக்குமாம்



------------------------


14. தலைவரே!இப்போ எதுக்கு ஆலோசனைக்கூட்டம் போட்டிருக்கீங்க?

 இப்போ , இன்னைக்கு நிலவரத்துக்கு யாரெல்லாம் மினிஸ்டரா இருக்கோம்னு தெரிஞ்சுக்க 




-----------------------------


15. நாய் , பூனை வளர்க்காம உங்க வீட்ல பெட் அனிமல்ஸா எருமை, பசு வளர்க்கறீங்களே? 


 கட்சிக்கட்டுப்பாடுதான் அம்மாங்க்ற சத்தம் தான் வீட்டை நிறைக்கனுமாம்


-----------------------


16. டாடி, சிங்கத்துக்கு அருகம்புல் ஜூஸ் தரலாமா? 


 என்னடா உளர்றே? 


 பின்னே ? புரட்டாசி மாசம்னு சாக்கு சொல்லி வெறும் இட்லி மட்டும் சாப்பிடக்குடுத்தா எப்படி? 



---------------------------


17. அதிரடியா ஆடறது  டோனியா? ஷேவாக்கா?



 2 பேரும் இல்லை அமைச்சரை அடிக்கடி அதிரடியா மாற்றும் ஜெ தான் 



--------------------------------



18. எப்படியாவது எனக்கு ஒரு வேலை வாங்கிக்குடுங்க , அது போதும்

 ஓஹோ அப்போ சம்பளம் வேணாமா? வேலை மட்டும் போதுமா? 



--------------------------------






Sunday, January 06, 2013

DTH இணைப்பில் பணம் கட்டியவர்கள் அட்ரசில் படம் ஓடும்போது ரெய்டு

1.மிஸ், இன்னைக்கு நான் ஃபுல் ஃபார்ம்ல இருக்கறதா எல்லாரும் பாராட்றாங்க, ஆனா ஏன் கெட் அவுட் சொல்றீங்க?


நீ யூனிஃபார்ம்ல இல்லையே?



-------------------


2. டெல்லியில் இருந்த சூழல், முதல் அமைச்சர்களைப் பணியவைப்பதாக இருந்தது!'- ஜெ # அதானே! தமிழ் ல உங்களுக்குப்பிடிக்காத ஒரே வார்த்தை - பணிவு



-------------------


3. வாழ்வில் , என் லட்சியத்தில் சிகரம் தொடும் எண்ணம் எனக்கில்லை, என் அன்பே! உன் கரம் பற்றினால் போதும்



----------------------


4. ஜெ-வைப் பிரதமர் ஆக்கினால், தமிழகம்போல இந்தியாவும் இருளில் மூழ்கும்- கனிமொழி# கலைஞரைப் பிரதமர் ஆக்கினால் இந்தியாவே காணாம போயிடுமே?



---------------------


5. பெண்மை மென்மையாக இருந்தால் மேன்மை ;-))



------------------




Photo

6. பாப்பா , மண்ல கை வைக்காதே! போங்கப்பா , நீ மட்டும் மண்ல கால் வெச்சிருக்கே?




--------------------


7.  உண்மையை மட்டும் பேசணும், அடுத்தவங்களை வம்பிழுக்கக்கூடாதுன்னா நாட்ல  98% பொண்ணுங்க மவுன விரதம் தான்




--------------------------------


8.  பெண்களே !!! ஒரே ஒரு நாள் - ஒரு அப்பாவியாக, அப்பாவாக, வீட்டோடு மாப்ளையாக ஆணாக வாழ்ந்து பாருங்கள். ஆண்மையின் அவலம் புரியும



---------------------------

9. அத்தான்.பொங்கல் பரிசா பட்டுப்புடவை வேணும்.



ஆனானப்பட்ட அரசாங்கமே 100 ரூபா தான் தருது.நான் 50 ரூபா தர்றேன்.



------------


10. கடுகு இல்லாம சமையல் இல்லை.பொடுகு இல்லாத பெண் தலை இல்லை




---------------------


What an idea :P




11. டியர் .என் கிட்டே பிடிக்காத அம்சம் எது?



என்னை கிட்டே விடாம 2 அடி தள்ளி நிக்கறியே இந்த நம்பா மாரித்தனம் தான் பிடிக்கலை.


----------------------


12. குடும்ப அட்டைகளுக்கு பொங்கல்  பரிசாக ரூ.100 ரொக்கம்: ஜெ. # குடும்பத்தலைவன் குவாட்டர் அடிச்சுட்டு குப்புறப்படுத்துக்குவான்



------------------


13. ஜட்ஜ் - மைனர் பொண்ணை மேரேஜ் பண்ணது தப்பு .


கைதி - மேஜர் ஆகும் வயசு 18 அல்ல 16, ,


 ஜட்ஜ் - அது இப்போ வந்த சட்டம். உன் மேரேஜ் நடந்தது 2005 ல



-----------------------


14. ஆபீஸில் ஸ்டெனோவின் பிரமோஷன் செய்தி அறிந்து - மேலும் வளர வாழ்த்துக்கள்!.


 யோவ்! #


அவ்வ்வ்வ்.இப்பதான் புரிஞ்சுது



--------------------------


15. ரோஜா என்றால் கூடவே முள்ளோ ஆர் கே செல்வமணியோ எப்போதும் இருப்பர் # ஜாக்கிரதை



----------------------


Photo



16. நிஜமாகவே முதல் பெஞ்ச் தான் பள்ளியில் எப்போதும்! ஏன்னா அப்போதான் டீச்சர் க்ளோசப்ல தெரிவாங்க -



-----------------


17.  சார்,DTH ல படம் ஓடும்போது கரண்ட் போய்டுச்சுன்னா  என்ன பண்ண ?



கமல் - சிம்ப்பிள், அடுத்த நாள் தியேட்டர்ல வந்து  டிக்கெட் எடுத்து பாருங்க



---------------------


18. டியர் , என்னை மட்டும் தானே காதலிக்கறீங்க?



ம்க்கும், இப்படியே எல்லாரும் கேளுங்க



---------------------------


19. DTH இணைப்பில்  பணம் கட்டியவர்கள் அட்ரசில் படம் ஓடும்போது ரெய்டு நடக்கும். ஒரு வீட்டில் ஒருவர் மட்டுமே படம் பார்க்கனுமாம் # சும்மா




---------------------------------


20. விஸ்வரூபம் - டைட்டிலை நியாயப்படுத்த நமீதாவை கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்திருக்கலாம்




------------------------------

21. வேறு கட்சிக்கு துரோகம் இழைத்து அதிமுகவுக்கு வந்தால் கார் பரிசு ,கரண்ட் கட் பிரச்சனையை மறை க்க  ரூ 100 பிச்சை # புரட்சித்தலைவி



----------------------------



FOR MORE INFO VISIT US @ http://osmeb.blogspot.in/
Wat an expression !!! 







FOR MORE INFO VISIT US @ http://osmeb.blogspot.in/




Saturday, January 05, 2013

Koncham Istam Koncham Kastam - சினிமா விமர்சனம்

http://wallpapers.oneindia.in/d/163554-2/koncham-istam-koncham-kastam4.jpgகொஞ்சம் இஷ்டம் , கொஞ்சம் கஷ்டம்


ஹீரோ ஒரு பொம்பளை பொறுக்கி , கிடைச்ச ஃபிகரை மடக்கி போட்டு வேற வேற வேற அப்டினு நீயா? நானா? கோபினாத்   கேட்பாரே  அப்பேற்பட்ட கிருஷ்ணன்.சினிமால வர்ற ஹீரோயின்களும் சரி , இந்தக்கால மாடர்ன் ஃபிகர்களும் சரி தனக்காக உயிரையே தரத்தயாராக இருக்கும் யோக்க்கிய சிகாமணிகளை கண்டுக்கவே மாட்டாங்க..  அவங்க கண்ணுக்கு சிக்கறதெல்லாம் இந்த மாதிரி மொள்ள மாரி , முடிச்சவுக்கி , செகண்ட்ஸ் பார்ட்டிங்க தான் .


 ஹீரோயின் கேனம் மாதிரி அந்த பிக்காலிப்பயலை லவ் பண்றா. இந்த காதல் எப்பிசோடு இடைவேளை வரை போகுது .

 ஹீரோவோட அம்மா, அப்பா பிரிஞ்சு வாழறாங்க . அவங்க 2 பேரையும் பழைய படி எப்படி ஹீரோ & ஹீரோயின் சேர்த்த்து வைக்கறாங்க , அந்த முயற்சியில் இருவருக்கும் ஏற்படும் ஈகோ மோதல்களை எப்படி சமாளிக்கறாங்க என்பதுதான் மிச்ச மீதிக்கதை


 30 % பூவெல்லாம் உன் வாசம் +  30 %  ஜோடி +   30 % குஷி  + 10 % சொந்த சரக்கு


 ஹீரோ  சித்தார்த் .ஸ்ருதி கமலின் முன்னாள் நண்பர் . ஆள் ஸ்டார்டா இருக்கார்,. ஆனா படத்துல ஹெர் ஸ்டைல் சகிக்கலை. ஃபங்க் ஸ்டைல் எல்லாம் எப்போவோ காலாவதி ஆகிடுச்சு . படம் பூரா பொண்ணுங்க பின்னால , பொண்ணுங்க படை சூழ  உலா வர்றார். 


 ஹீரோயின் இஞ்சி இடுப்பழகி , மஞ்சக்காட்டு மைனா  தமனா .கொஞ்சம் கொஞ்சம் நடிக்க ட்ரை பண்ணி இருக்கு பாப்பா . பொதுவா பொண்ணுங்களை திட்டுவதில்லை என்ற உயர்ந்த லட்சியம் வைத்திருப்பதால் இத்தோட இவரை விட்டுடலாம் 



 பிரகாஷ் ராஜ் நடிப்பு  செம .ரம்யா கிருஷ்ணன் ஆண்ட்டியா வந்தாலும் ஆஹா!


காமெடிக்கு பிரம்மானந்தம் . கேப் கிடைக்கும் இடம் எல்லாம் சிக்சர் அடிக்கறார். நம்மா ஊர் வடிவேல் மாதிரி தெலுங்கு ல பிரம்மானந்தம் , வேணு மாதவ் அவர் பங்குக்கு வந்து கொஞ்சம்  கலாய்க்கிறார்



http://spicy.southdreamz.com/cache/tamana/tollywood-glamour-actress-tamanna-hot-photos-8_650.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 



1. படத்துல பெருசா கதை இல்லைன்னாலும் சுவராஸ்யமா திரைக்கதை அமைச்ச விதம்.  முன் பாதி பூரா காலேஜ் கலாட்டாக்கள் , ஹீரோ ஹீரோயின் காதல் கொண்டாட்டம் , பின் பாதி பிரகாஷ் ராஜ் - ரம்யா ஜோடியின் ஆக்ரமிப்பு அழகிய பிரமிப்பு 


2. விரதம் இருப்பதன் காரணத்தை  ஹீரோயின் சொல்வதும் அதையே தூண்டிலாக வைத்து ஹீரோ ஹீரோயினை கரெக்ட் பண்ணுவது 



3. பிரகாஷ் ராஜ் - ரம்யா மேரேஜ் ஆல்பத்தை ஹீரோ ரம்யாவிடம்  கொடுத்து  உங்களுக்கு யார் மேலாவது கோபம் வந்தா அவங்க முகத்துல கிறுக்கி விடுங்க , கோபம் போயிடும் என சொல்ல ரம்யா பிரகஷ் ராஜ் முகம் பூரா கிறுக்குவதும் அது பிரகாஷ் ராஜ் கைக்கு சிக்கி அவரும் பழிக்குப்பழியாய் ரம்யா முகத்தில் கிறுக்குவதும் செம காமெடி 


4. ஹோட்டலில் எதிர்பாராமல் எதிர் எதிரே பிரகாஷ் ராஜ் ரம்யா  அமர்வதும் அதைத்தொடர்ந்து வரும் காட்சிகளும்


5. பல படங்களின் கூட்டாஞ்சோறு கதம்பப்படம் தான் என்பதை உணரா வண்ணம் பர பர என காட்சிகளை கொண்டு சென்ற விதம் 



6. பாடல்கள், இசை , ஒளிப்பதிவு பிளஸ் 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfOf7EVj0hfjsdcM3bC2_a79zEk1nwB-eFQ4M3fahtkk00wNxkCfHxVya9ICTArF5kgS89I0cjdplf5zN_KOWhTVzje4pKQinRU7jLnKXqWGgyW-tR99icl7iNqRZ_ii2tO02YxDT4ie0/s1600/tamanna+hot2.jpg



 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோ ஒரு  சீன்ல அவர் கரெக்ட் பண்ணிட்டு இருக்கும் ஒரு ஃபிகருக்கு பிறந்த நாள் பரிசா ஒரு புறாவைத்தர்றாரு , அந்த கேனம் அதை கூண்டுல விடும்போது இவரு “ பறவைக்கு சுதந்திரம் கொடு  எதுக்கு அடிமை ஆக்க நினைக்கறே? அப்டிங்கறாரு . இவர் மட்டும் 24 மணி நேரம் அதை சிறை வைக்கலையா? இந்த ஈர வெங்காய டயலாக் பேசுனதுக்கு பாப்பாவை கடைக்கு கூட்டிட்டுப்போய் பறவையை வாங்கி ஆன் த ஸ்பாட் பறக்க விட்டிருக்கலாமே?


2. ஹீரோவோட பர்த்டே அன்னைக்கு அவரோட கேர்ள் ஃபிரண்ட்ஸ் எல்லாம் அவரை சந்தோஷப்படுத்த  மவுண்ட் ரோட்ல  அரை குறையா டான்ஸ் ஆடுதுங்க  கேவலமா இருக்கு 


3. பிரகாஷ் ராஜ் -  ரம்யா கிருஷ்ணன் பிரிவுக்கு சொல்லப்படும் காரணம் ஏற்றுக்கொள்ளும்படியே இல்லை  இவர் எப்பவும் வெளீயூர் பிஸ்னெஸ்னு சுத்துறார். அவரு எப்பவும் அவர் கூடவே இருக்கனும்னு நினைக்கறார், இதனால் வாக்குவாதம் வரும், பர்மனண்ட்டா பிரிய இது ஒரு காரணமா காட்டுனா எப்டி>? 


4. ஹீரோ பல பேரை பார்த்தவன்னு  தெரிஞ்சும் அவர் கண் முன்னாடியே அவர் பலரை கிஸ் அடிப்பது பார்த்தும் கொஞ்சம் கூட வெட்கம் மானம் சூடு சுரனை இல்லாம ஹீரோயின் அவர் கிட்டே ஐ லவ் யூ சொல்வது எப்படி? அதுக்கு காரணம் அவர் சின்ன வயசுல அம்மா இல்லாத பிள்ளை என்பதால் என்பது செம காமெடி .


5 . ஹீரோ ஹீரோயின்  கதை பொர்ஷன் முடிஞ்சு பிரகாஷ் ராஜ் ரம்யா கிருஷ்ணன் போர்ஷன் ஆரம்பிச்சதுமே திரைக்கதைல விறு விறுப்பு குறைஞ்சுடுச்சு , அடுத்தடுத்து என்ன ஆகப்போகுது என்பது ஈசியா கெஸ் பண்ண முடிவது  படத்தின் பலகீனம் 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqx3r3WV7XwitVas26csEAzI66IB4P3zj5prN4UwVO1mQPPXUGImLO1U3yCv1idxYGzUwbiQ-1JtGkh8spxwgg-7s91dIirKalYPmWIb8VGkNlluzWguj88rzT_cJPH8klcXoJCxbId7Xe/s1600/Tamanna-at-Racha-Axe-Presentation---Hot-Photos-170.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்

1. எல்லாரும் அப்பா பேச்சைக்கேட்பாங்க, ஆனா அப்பா என் பேச்சைக்கேட்பாரு


2. ஏய்.. டோண்ட் கிஸ் மீ, ஃபிரண்ட்ஸ் எல்லாரும் வெளியே வெயிட் பண்றாங்க..


 அவங்களையும் வெளில வரச்சொல்லு , ஆளுக்கு 1 கொடுத்திடலாம்



3. பாலிடிக்ஸால அப்பாவால வளர முடியல

 ஓஹோ, அதான் இவ்ளவ் குள்ளமா இருக்காரா?



4. அவன் ஓடிப்போய்ட்டான், நான் ஓஞ்சு போய்ட்டேன். சரி வாங்க, வெளில வர முடியாத படி அடிங்க



5. ஹலோ! டேய் , உடனடியா இங்கே வா! இங்கே ஒரு சூப்பர் ஃபிகர், நீ வந்து இங்க்லீஷ்ல பேசுனா மடிஞ்சுடும் , நீ வந்து  பேசுனா எனக்கு செட் ஆகிடும் ஹி ஹி


6. அவ ஃபேஸ் ஸ்ரேயா மாதிரி இருக்கு , உடம்பு மும்தாஜ் மாதிரி இருக்கு



7. வாழ்க்கைல ஒரு விஷயம்... வயசுக்கு வந்த பையன் கூட பைக்ல போற சான்ஸ் கிடைச்சா மிஸ் பண்ணிடக்கூடாது



8. அவனுக்கு சிரிக்கறதைத்தவிர வேற எதுவுமே தெரியாதா?


ஒரு காலத்துல அவனுக்கு சிரிப்புன்னா என்னன்னே தெரியாது



9.  சார் .. 2 சமோசா


 எனக்கு வேணாம், நான் விரதம்


 சரி அந்த 2 சமோசாவையும் ஒரே பிளேட்ல போட்டு எனக்கே கொடுத்துடுங்க/


 ச்சே...



10. அப்பா , எதுக்கெடுத்தாலும் உன் இஷ்டம் உன் இஷ்டம்னு வளர்த்திட்டு இப்போ லைஃப் பார்ட்னர் மேட்டர்ல மட்டும் என் இஷ்டம்னு சொன்னா எப்படி?


உனக்கு எது இஷ்டம்னு ஐ நோ



11.  நான் உனக்காக 100 வரன்கள் கொண்டு வர்றேன், அதுல இருந்து 1 நீ செலக்ட் பண்ணு , அதான் எனக்குப்பெருமை



12. கல்யாணத்துக்கு முன்னாடி அப்படி இப்படின்னு 7 தலைமுறை பார்ப்பாங்க


13. நட்புக்கு அறிமுகம் போதும், காதலுக்கு நட்பு போதும் , ஆனா கல்யாணத்துக்கு நட்பு , காதல் இந்த 2 மட்டும் போதாது



14.  என் குடும்பத்துக்காக கஷ்டப்படறது , ஊர் ஊரா ஜாப் விஷயமா போக வேண்டி இருப்பது  சுயநலம்னா நான் சுயநலவாதிதான்


நான் உங்க கூடவே இருக்கனும்னு நினைக்கறது தப்புன்னா நானும் சுயநலவாதிதான்



15.  ஒரு புருஷனா நீங்க செய்யற எல்லா வேலையையும் நான் செஞ்சுட முடியும், ஆனா ஒரு பொண்டாட்டியா நான் செய்யும்  வேலைகள் எல்லாம் நீங்க செஞ்சுட முடியாது 


16 நான் மட்டும் பிடிக்க்லைன்னா என்ன ஆயிருக்கும்?

“நீ பிடிப்பே, நான் விழற்தை பார்த்துட்டு இருக்க மாட்டேன் ஒரு நம்பிக்கை 



http://www.tollywoodmotion.com/wp-content/gallery/tamanna-unseen-hot-stills/tamanna-unseen-hot-stills3.jpg



ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 41


 குமுதம் ரேங்க் - ஓக்கே 


 சி பி கமெண்ட் - லவ்வர்ஸ் பார்க்கலாம் . டைம் பாஸ் படம்  , ஜி டி வி ல படம் பார்த்தேன்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjU6LxF0SFuFjSIACIcULawhwMOhzJ_26FksXbxyTuvcbXDw9d3WHJCiDEZd2ruAyTCkD0lQv0c5OO2DMRcXNU4E7o17_2b84O3edO7FQdMZYDEXGaIStVdd2VL46u7Gi6OuwjFfOpMWvQ/s1600/konchem-ishtam-koncham-kashtam-wallpapers-posters_1.jpg


டெல்லி - சம்பவம் - மக்கள் கருத்து

பாலியல் பலாத்கார பாரதம்

தலைநகர் டெல்லி...தலைகுனிவு காட்சிகள்
 
 
ஆர்.ஷஃபி முன்னா 
 
 
டெல்லியில், பாராமெடிக்கல் கல்லூரியில் பிஸியோதெரபி பயிலும் 23 வயது மாணவி சீமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஓடும் பேருந்தில் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக் கப்பட்ட சம்பவம், நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் குற்றங்களின் உச்சகட்டம். இதைச் சமூகமும் உச்சபட்சமாக உணர்ந்ததால்... தலைநகரே ஸ்தம்பிக்க, நாட்டின் பல இடங் களிலும் பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர்.


தெற்கு டெல்லியின் சாக்கேத் பகுதியிலிருக் கும்
மால் ஒன்றில், தன் 'பாய் ஃப்ரெண்ட்' அர்விந்த் பிரதாப் பாண்டேவுடன் சினிமா பார்த்துள்ளார் சீமா. வீடு திரும்புவதற்காக, இரவு 9.30-க்கு தனியார் பேருந்தில் இருவரும் ஏறியுள்ளனர். உள்ளே இருந்த சில பயணிகள், அடுத்த ஸ்டாப்பிங்குகளில் இறங்கிவிட, சீமா, அர்விந்த், டிரைவர் மற்றும் ஐந்து ஆண்களுடன் பயணம் தொடர்ந்துள்ளது. 



அவர்கள் சீமாவை சீண்ட, இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம். கோபம் அடைந்தவர்கள்... அர்விந்தை இரும்புத் தடியால் தாக்கியுள்ளனர். பிறகு, டிரைவர் ஸீட்டின் அருகே உள்ள கேபினில், ஓடும் பேருந்திலேயே அனைவரும் சீமாவை மாறி மாறி வல்லுறவு கொண்டுள்ளனர். சுமார் 30 கி.மீ தூரம் வரை பயணப்பட்ட அந்தப் பேருந்தில் அரங்கேற்றப்பட்ட கொடூரம்... சினிமாக்களில்கூட பார்த்தறியாத உச்ச கொடூரம். அதன்பிறகு, இருவரையும் ஓடும் பஸ்ஸில் இருந்து தூக்கி எறிந்தது... கொடுமையிலும் கொடுமை! இதைப் பார்த்த ஒருவர் தந்த தகவலை அடுத்து, இருவரையும் மீட்டு அருகிலுள்ள சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் சேர்த்தது போலீஸ்.


குற்றவாளிகள் ஆறு பேரில் இருவர் மறுநாள் கைது செய்யப்பட்டாலும், மீதம் உள்ளவர்களை கைது செய்வதில் போலீஸ் வழக்கம்போல் சுணக்கம் காட்டியது. சம்பவம் தலைப்பு செய்தியாக மாற.... டெல்லியின் கல்லூரி மாணவ -மாணவிகளும், பொதுமக்களும் கைகோக்க... போராட்டக்களமாக மாறியது இந்தியா கேட். நாடாளுமன்றத்திலும் விஷயம் எதிரொலிக்க... 'குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை' என்கிற குரல் உரக்க ஒலிக்கிறது.



''பஸ்ஸிலிருந்து தூக்கி எறியப்பட்ட மாணவி, காயங்களுடன் நிர்வாணமாக நடுரோட்டில் கிடந்துள்ளார். போலீசார் வரும்வரை ஒரு துணியை அவர் மீது போர்த்தவும் யாரும் முன்வரவில்லை. நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடந்து வரும் குற்றங்களில் இந்தச் சம்பவமே கடைசியாக இருக்க வேண்டும். இதற்கு ஒரு முடிவு கட்டாமல் எங்கள் போராட்டம் ஓயாது'' என நம்மிடம் ஆவேசப்பட்டவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி பிரதீபா சர்மா.


பொதுமக்களின் ஆவேசப் போராட்டம் டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி... ஏன், ஜனாதிபதியின் வீட்டையும் விட்டு வைக்கவில்லை. இதன் பிறகே... மீதம் இருந்த நான்கு குற்றவாளிகளையும் கைது செய்தது டெல்லி போலீஸ். அமைதி காக்கும்படி பிரதமர் மன்மோகன் சிங் தொலைக்காட்சியில் தோன்றி கோரிக்கை வைக்கும் அளவுக்கு போராட்டம் விஸ்வரூபமெடுத்திருக்கிறது!


''பாலியல் வன்புணர்ச்சி வழக்குகள் பலவும், பத்து வருடங்களுக்கு மேலாக, முடிவடையாமல் நிலுவையில் உள்ளதாக செய்திகள் வருகின்றன. இவர்கள் விஷயத்தில் மனித உரிமைகளைப் பார்ப்பது பாவமாகிவிடும். குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும், குற்றவாளிகளுக்கு துணைபோகாமலிருக்கவும் போலீஸார் உறுதி எடுக்க வேண்டும். அப்போதுதான் என் மகள் மற்றும் பேரக் குழந்தைகள் இந்த நகரத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும்'' எனச் சீறினார் போராட்டத்திலிருந்தவர்களில் ஒருவரான முதியவர் சாய்ராம் ராத்தோட்.



போராட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் லாபம் தேட முனைந்த சில அரசியல் கட்சிகளை, போராட்டக்காரர்கள் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. எனினும், போராட்டக்காரர்களுக்கு இடையே ஊடுருவிய சமூக விரோதிகள் சிலரால், எண்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.


போராட்டக்காரர்களை அடக்கும் பணியில் திடீர் என மயக்கம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்து போயிருக்கிறார் ஒரு போலீஸ்காரர். ஆனால், 'மாரடைப் பால் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் இறந்துபோயிருக்கிறார். போராட்டத்தை ஒடுக்குவதற்காக இந்த விஷயத்தை போலீஸ் பெரிதாக்குகிறது' என்று இந்த மரணத்தையும் சர்ச்சைக்கு உள்ளாக்குகிறார்கள் இப்போது.


''சீமா மருத்துவ மாணவி என்பதால், உடலின் தன்மையை அறிந்து சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைக்கிறார். ஐந்து முறை கோமா நிலைக்குச் சென்று திரும்பியபோதும் அவருக்கு மனஉறுதி அதிகமாக உள்ளது. இது, தான் உயிருடன் இருந்தால்தான் குற்றவாளிகளை தண்டிக்க முடியும் என்பதற்காகவும் இருக்கலாம். ஒருமுறை நினைவு திரும்பியபோது, 'அம்மா... நான் வாழ விரும்புகிறேன்!’ என ஒரு பேப்பரில் எழுதிக் காட்டினார்.


ஒரு கட்டத்தில் ஒருசில அடிகள் நடக்கவும் செய்தார். ஆனால், இப்போது அவரால் எதுவும் முடியவில்லை. வெறி கொண்ட அந்தக் கொடூரர்கள் அவருடைய பெண்ணுறுப்பில் இரும்பு கம்பியையும் நுழைத்துள்ளனர். அது வயிற்றுக்குள்ளும் சென்று பல உறுப்புகளையும் பாதித்துள்ளது. இதனால், உடல் முழுவதும் பரவிவிட்ட இன்ஃபெக்ஷன்தான் தற்போது மாணவிக்கு மிகவும் ஆபத்தாக உள்ளது. முதுகிலும் பல எலும்புகள் முறிந்துள்ளன. அவரு டைய முழு நிலைமையையும் விளக்கமாகக் கூறினால்... மருத்துவர்களாகிய எங்களுக்கே மனது வலிக்கிறது. இந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் மனிதர்களே அல்ல?'' என ஆதங்கப்பட்டார் சப்தர்ஜங் மருத்துவமனையின் சூப்பிரண்டென்டன்ட் பி.டி.அத்தானி.



விவகாரம் தொடர்ந்து பெரிதாகிக் கொண்டே போகும் நிலையில், ஒரு சமயம் நன்றாக.... மறுசமயம் மோசமாக என மாணவியின் உடல் நிலையும் மாறிக் கொண்டே போனதால்... மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு, அரசு செலவில் அனுப்பப் பட்டார் சீமா. ஆனால், உடல்உறுப்புகள் ஒவ் வொன்றாக செயல் இழக்க... டிசம்பர் 29-ம் தேதி அதிகாலை சிங்கப்பூரிலேயே, 13 நாள் போராட்டத் துக்குப் பின் இறந்து போனார்.


தேசிய குற்றவியல் ஆவணப் பதிவுகளின்படி, நம் நாட்டின் 53 பெரு நகரங்களில், மிக அதிகமான பாலியல் வன்புணர்ச்சி வழக்குகள் பதிவாகியிருப்பது... டெல்லியில்தான். 2011-ல் இங்கே மட்டும் 572 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள் ளனர். மும்பை-239, பெங்களூரு-96, சென்னை-76, கொல்கத்தா-47 என இந்த பட்டியல் நீள்கிறது!


டெல்லியில் இரண்டு நாட்களுக்கு, மூன்று கற்பழிப்பு வழக்குகள் சராசரியாகப் பதிவாகின்றன. கற்பழிப்பு குற்றங்கள் சம்பந்தமான டெல்லி போலீஸின் குற்றப் பதிவுகளின் புள்ளிவிவரங்கள், 'பெண்களுக்கு, அவர்களை அறிந்தவர்களால்தான் அதிக ஆபத்து' என்கின்றன. 


2011-ம் வருடத்தில் பதிவான வழக்குகளில் மட்டும் 97.54 சதவிகித குற்றவாளிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள்தான். இதில், 58.28 சதவிகித குற்றவாளிகள் உறவினர்கள். 36.46 சதவிகித குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களுடைய தெருவிலேயே வசிப்பவர்கள். வெறும் 2.8 சதவிகித குற்றவாளிகள் மட்டுமே முன்பின் தெரியாதவர்கள். இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல!


'பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு' என்ற பட்டியலில் இந்தியா இருப்பது, காந்தி பிறந்த தேசத்துக்கு எத்தனை பெரிய கேவலம்!     

பஸ் டிரைவர் ராம்சிங், இவனுடைய சகோதரன் முகேஷ் சிங், பாடி பில்டரான வினய் சர்மா, தள்ளுவண்டியில் பழங்களை விற்கும் பவண் குப்தா (இந்த இருவரும்... டிரைவரின் நண்பர்கள்), ப்ளஸ் டூ படித்துவிட்டு வேலை தேடி பீகாரிலிருந்து டெல்லி வந்திருக்கும் அக்ஷய் தாக்கூர், கூலி வேலை செய்து பிழைக்க ராஜஸ்தானில் இருந்து வந்திருக்கும் ராஜு ஆகிய ஆறு பேரும், இந்தக் கொடூரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.



 மக்கள் கருத்து 

1. பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடு.....இப்போதுதானா? மாபெரும் இதிகாசமென இந்த நாடு கொண்டாடுகிறதே அந்த 'மகாபாரத'த்தில் மனைவியை வைத்து சூதாடுகிறார்கள் பாண்டவர்கள்.அறிவிற் சிறந்த பெரியோரும்,மூத்தோரும் கூடியிருக்கும் சபையில் துகிலுரியப்படும் போது ஐந்து கணவர்களோ,அல்லது வீரத்திலும்,அறிவிலும் சிறந்த பெரியோர்களோ காப்பாற்றும் திறனை இழந்து விட்டதால் கடவுளைக் கூப்பிடுகிறாள்.....


.
இப்போது இந்தியப் பெண்களை பாஞ்சாலியின் நிலையில் வைத்துப் பாருங்கள் இரண்டு காட்சிகளுக்கும் வித்தியாசம் எதுவுமில்லை.

நல்லவேளை குறைவாக அணிந்திருந்ததால் பாஞ்சாலி பலாத்காரத்திற்கு உள்ளாட்கப்பட்டாள் என யாரும் இதுவரை யாரும் கருத்து சொல்லவில்லை.
இங்கு பெண் என்பவள் ஆணின் உடமை,அவள் ஒரு நுகர்பொருள்.... அவ்வளவுதான்.அப்படித்தான் இந்த கலாச்சாரம் சொல்லிக்கொடுத்திருக்கிறது.இங்கு பெண் தெய்வங்கள் வணங்கப்படுவதும்,
பெண்களின் பெயரால் நதிகளும்,மலைகளும் போற்றபடுவதும் நிஜத்தில் பெண்ணுக்கு இழைக்கும் கொடுமைகள் ஏற்படுத்தும் குற்ற உணர்வினால் மட்டுமே தவிர வேறு காரணம் ஏதுமிருக்க முடியாது.

கற்பழிப்பு என்பது கடைந்தெடுக்கப்பட்ட வன்முறையே.இந்தக் கொடுமையை செய்த அந்த இளைஞர்கள் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்ள என்ன தூண்டியது,எது தைரியம் கொடுத்தது என்பதை யோசிக்கவே இயலவில்லை.
இந்த தேசத்து ஆண்கள் மனதில் பெண்களின் மீது இவ்வளவு வ்ன்மமா?
இதை பாலியல் இச்சை என்று மட்டும் எடுத்துக்கொண்டால் மிகக் குறுகிய வட்டத்துக்குள் சிக்கிக்கொள்வோம்.

எதுவென்றாலும் இந்த தேசம் முழுதும் மாறவேண்டிய தருணம் வந்து விட்டது...மாறுங்கள்,இல்லயென்றால் மாற்றப்படுவீர்கள்.

இத்தனை அவமானத்திலும்,துயரத்திலும் ஆறுதல் வீறு கொண்டு போராடும்
இளைய சமுதாயம். நாளைய வாழ்க்கையின் மீது ஒரு நம்பிக்கை ஒளி தெரிகிறது...!!!



2. இந்த அரசியல்வாதிகள் பேசி முடித்து சட்ட்ம இயற்றுவதற்கு வருடங்கள் ஆகலாம். சவுதியில் வழங்கப்படும் தண்டனையே (கட்டி வைத்து குற்றவாளிகளின் மேல் கல்லெறிதல்) சிறந்த தண்டனை. அதற்கு பயப்படாதவர்கள் குறைவே. கர்ஜிக்கும் மனித ஆர்வலர்கள் இந்த பெண்ணின் உயிரை கொண்டு வர மாட்டார்கள்.



3. பாலியல் வன்முறை வழக்குகள் டெல்லியில் அதிகம் என்றாலும், உண்மையில் மற்ற மாநிலங்களில் குடும்ப கௌரவத்திற்காக உண்மை வெளியே வந்து விடாமல் மறைத்து விடுகிறார்கள் பாதிக்கப் பட்டவர்கள்..இனிமேல் தைரியமாக சட்ட நடவடிக்கைகளுக்கு முன் வருவார்கள் என்பதுடன், தங்களைப் பாதுகாத்துக் கொள்வதிலும் தைரியமாக நடந்து கொள்வார்கள் என நம்புவோம்.


நன்றி - விகடன்