Saturday, January 05, 2013

மண் மணம் கமழும் கிராமத்துச்சமையல் - 30 வகைகள் -- பத்மா

30 வகை நாட்டுப்புற சமையல்

தொகுப்பு: பத்மினி படங்கள்: எம்.உசேன்


நாட்டுப்புற கலைகளைப் போலவே, நாட்டுப்புற சமையலும் மக்களை மகிழ்விப்பதில் ஈடு இணையற்றது. நாக்கை சுண்டியிழுக்கும் சுவையுடன், உடல் நலம் காக்க தேவையான சத்துக்களை தன்னகத்தே அடக்கியிருக்கும் '30 வகை நாட்டுப்புற சமையல்’ குறிப்புகளைத் தேடித் தேடி தயார் செய்து உங்கள் முன் குவித்திருக்கிறார் சமையல் கலை நிபுணர

நங்கநல்லூர் பத்மா. ''கருப்பட்டி, வேப்பம்பூ, கேழ்வரகு, கொள்ளு, சோளம், முடக்கத்தான் கீரை போன்றவற்றை பயன்படுத்தி இதமான, பதமான கிராமிய உணவு வகைகளை கொடுத்துள்ளேன். இவற்றை அடிக்கடி செய்து பரிமாறி, குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை பராமரித்து, ஆயுளையும் அதிகரிக்கச் செய்யுங்கள்'' என்று  அழைப்புவிடுக்கும் பத்மாவின் ரெசிபிகளை, கலையுணர்வுடன் அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி. 

கோதுமை ரவை உப்புமா
தேவையானவை: கோதுமை ரவை - 250 கிராம், பெரிய வெங் காயம் - 2, வறுத்த வேர்க்கடலை - ஒரு கப், பச்சை மிளகாய், எலுமிச்சம்பழம் - தலா ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்த மல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை  சேர்த்து, வதக்கிக் கொள்ளவும். இதில், ஒரு பங்கு கோதுமை ரவைக்கு இரண்டு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, நன்கு கொதிக்கவிடவும். பிறகு, உப்பு சேர்த்து, ரவையை தூவிக் கிளறி வேகவிட்டு, வறுத்த வேர்க்கடலையை உடைத்துப் போட்டு, எல்லாம் நன்கு கலந்துவரும்படி கிளறவும். கடைசியாக, எலுமிச்சம்பழம் பிழிந்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: இதே முறையில் சோள ரவையிலும் உப்புமா செய்யலாம்.

கத்திரிக்காய் ரசவாங்கி
தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், கத்திரிக்காய் - 200 கிராம், தனியா - 4 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் துருவல் - ஒரு கப், பொடித்த வெல்லம் - சிறிதளவு, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு (200 மில்லி தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்), கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள்,   மஞ்சள்தூள், கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பை வேக வைக்கவும். புளித் தண்ணீரில் கத்திரிக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கிப்போட்டு... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் ஆகியவற்றை வறுத்து சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதை, வேக வைத்த கத்திரிக்காயுடன் சேர்த்து, கொதிக்கவிடவும். கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்து, வெல்லம், வேக வைத்த துவரம்பருப்பு போட்டு கலந்து இறக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு கலக்கவும்.
குறிப்பு: கத்தரிக்காய் ரசவாங்கி... இட்லி, தோசை, சாதத்துடன் சேர்த்து சாப்பிட சிறந்தது.

 சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு
தேவையானவை: அதிகம் புளிப்பு இல்லாத மோர் - அரை லிட்டர், சேப்பங்கிழங்கு - 10 , தேங்காய் துருவல் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 2, மிளகு - 10, வெந்தயம், சீரகம், கடுகு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு... மிளகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, சீரகம் ஆகியவற்றை வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து நைஸாக அரைக்கவும். அரைத்த விழுதை மோருடன் சேர்த்து, உப்பு போட்டு கலக்கவும், சேப்பங்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, பாதியாக நறுக்கவும். மோர் கலவையுடன் வேக வைத்த சேப்பங்கிழங்கை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும். பிறகு கடுகு, வெந்தயம் தாளித்து,  சேர்த்து, பெருங்காயத்தூள் போட்டு கலக்கவும்.
குறிப்பு: வெண்டைக்காய், கத்திரிக்காய், பூசணி ஆகியவற்றிலும் மோர்க்குழம்பு தயாரிக்கலாம்.

முப்பருப்பு உருண்டை
தேவையானவை: முளைவிட்ட கொள்ளு, முளைவிட்ட கொண்டைக்கடலை, முளைவிட்ட பச்சைப்பயறு - தலா 100 கிராம், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டுப் பல் - 2, காய்ந்த மிளகாய் - ஒன்று, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை  - சிறிதளவு, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு,
செய்முறை: கொள்ளு, கொண்டக்கடலை, பச்சைப்பயிறு ஆகியவற்றுடன்... தோல் சீவி நறுக்கிய இஞ்சி, உரித்த பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக, கொரகொரப்பாக அரைக்கவும் (முளைவிட்டிருப்பதால் தண்ணீரில் ஊற வைக்கத் தேவையில்லை). இதனுடன் உப்பு, கறிவேப்பிலை சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, எண்ணெய் காய்ந்ததும் மாவை உருண்டைகளாக உருட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
குறிப்பு: இந்த உருண்டைகளை மோர்க்குழம்பு, கூட்டு முதலியவற்றில் போடலாம். மாவை, பக்கோடா போல கிள்ளிப் போட்டும் பொரிக்கலாம்.

 கேழ்வரகு புட்டு
தேவையானவை: கேழ்வரகு - 200 கிராம், சிவப்பு அரிசி - 100 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நறுக்கிய வாழைப்பழத் துண்டுகள் - சிறிதளவு, வெல்லத்தூள் அல்லது சர்க்கரை - ஒரு கப், நெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கேழ்வரகு, சிவப்பு அரிசி இரண்டையும் சேர்த்து ரவை பதத்தில் பொடித்துக் கொள்ளவும். தண்ணீரை லேசாக சூடாக்கி, மாவில் தெளித்து பிசிறிக் கொண்டு, இட்லித் தட்டின் மேல் ஒரு துணியை நனைத்துப் பிழிந்து போட்டு, மாவை போட்டு மூடி வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். நன்கு வெந்ததும், ஒரு தட்டில் கொட்டி உதிர்த்து நெய், தேங்காய் துருவல், நறுக்கிய பழத் துண்டுகள், வெல்லத்தூள் (அ) சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: மாவை இட்லித் தட்டில் வைக்காமல், புட்டு குழலில் நிரப்பியும் வேகவிட்டு எடுக்கலாம்.

 கேப்பைக்கூழ்
தேவையானவை: கேழ்வரகு மாவு - 100 கிராம், மோர் மிளகாய் - 3, மோர் (சிறிது புளிப்பாக) - 500 மில்லி, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 6 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மோருடன் உப்பு, கேழ்வரகு மாவு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து, மோர் மிளகாயைக் கிள்ளிப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். கரைத்த மாவை இதில் ஊற்றி, கூழ் பதமாக கிளறி இறக்கவும்.
குறிப்பு: கேப்பைக்கூழுக்கு, நறுக்கிய பச்சை வெங்காயம் தொட்டுச் சாப்பிட... ருசியோ ருசி!

 இஞ்சி  பருப்பு துவையல்
தேவையானவை: இஞ்சி - 25 கிராம், பாசிப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - ஒன்று,  எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு... பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, மிளகாயை சேர்த்து வறுக்கவும். இஞ்சியை தோல் சீவி, நறுக்கி வதக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உப்பு போட்டு கெட்டியாக அரைக்கவும்.
குறிப்பு: நீராகாரமும் (பழைய சாதத்தில் தண்ணீர் ஊற்றி கரைத்தது), இஞ்சி - பருப்பு துவையலும் சூப்பர் காம்பினேஷன்

 கலவை பருப்பு வாழைப்பூ உசிலி
தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 100 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கொள்ளு - 4 டீஸ்பூன், வாழைப்பூ - ஒன்று, காய்ந்த மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு, உளுத்தம்பருப்பு (தாளிக்க) - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கொள்ளு நான்கையும் ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, அதை களைந்து, வடிகட்டி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாழைப்பூவை ஆய்ந்து, நரம்பு நீக்கி, பொடியாக நறுக்கி... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் ஒரு தட்டில் கொட்டி ஆறிய உடன் நன்கு பிழிந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த பருப்பை சேர்த்து உதிரியாக வரும்வரை மிதமான தீயில் கிளறவும். பருப்பு மொறுமொறுப்பாக ஆனவுடன் பிழிந்து வைத்து இருக்கும் வாழைப்பூவை போட்டுக் கிளறி. எல்லாம் ஒன்று சேர்ந்ததும் இறக்கவும்.
குறிப்பு: இதை குழம்பு சாதத்துக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். சூடான சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.

 மொச்சைக் குழம்பு
தேவையானவை: பச்சை மொச்சை (உரித்தது) - 100 கிராம், சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், பாசிப்பருப்பு - ஒரு கப், புளி - எலுமிச்சை அளவு, கடுகு, உளுத் தம் பருப்பு, வெந்தயம் - தலா அரை ஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, தேங்காய்ப் பால் - ஒரு சிறிய கிண்ணம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியை 250 மில்லி தண்ணீரில் ஊற வைத்து, நன்கு கரைத்துக் கொள்ளவும். பாசிப் பருப்பை குழைவாக வேக   வைக்கவும். மொச்சையை சிறிது எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். வதக்கிய மொச்சை, சாம்பார் பொடி, உப்பு  ஆகிய வற்றை புளித் தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். வேக வைத்த பாசிப்பருப்பை இதனுடன் சேர்க்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்டி இறக்கவும். கடைசியாக தேங்காய்ப் பால் சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: தேங்காய்ப் பால் ருசியைக் கூட்டுவதோடு, வயிற்றில் புண் வராமலும் தடுக்கும்.

 அவரைக்காய் கூட்டு
தேவையானவை: அவரைக்காய் - 200 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து வேக வைக்கவும். அவரைக்காயுடன் உப்பு சேர்த்து வேக வைக்கவும். சீரகம், தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் மூன்றையும் சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். வேக வைத்த பருப்புடன் அரைத்த விழுதைக் கலந்து, அவரைக்காய் சேர்த்துக் கொதிக்கவிட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இறக்கவும்.
குறிப்பு: இதே முறையில் கீரைத்தண்டு, கொத்தவரங்காய், கத்திரிக்காய் ஆகியவற்றிலும் கூட்டு தயாரிக்கலாம்.

 தானிய வடை
தேவையானவை: முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய சோளம், மொச்சை (ஊற வைத்தது) - தலா 100 கிராம், காய்ந்த மிளகாய்  - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பொடியாக, நறுக்கிய புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொள்ளு, சோளம், மொச்சை, காய்ந்த மிளகாய், தோல் சீவி நறுக்கிய இஞ்சி, உப்பு எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து கெட்டியாக அரைக்க   வும். இதனுடன் கொத்த மல்லி, புதினா சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்த தும் மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிற மாக வேகவிட்டு எடுக் கவும்.
குறிப்பு: தக்காளி சட்னி, தேங்காய் சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன்.

 பீர்க்கங்காய் அடை
தேவையானவை: சிறிய பீர்க்கங்காய் - ஒன்று, இட்லி அரிசி (புழுங்கல் அரிசி) - 250 கிராம், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, கறுப்பு முழுஉளுந்து - தலா 100 கிராம், இஞ்சி - சிறு துண்டு, தக்காளி - ஒன்று, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, கறுப்பு முழுஉளுந்து மூன்றையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைத்து தக்காளி, தோல் சீவிய இஞ்சி, உப்பு சேர்க்கவும். அரிசியை தனியாகவும், பருப்பை தனியாகவும் அரைத்து மாவுகளை ஒன்று சேர்த்துக் கலக்கவும். பீர்க்கங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி, மாவுடன் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை அடையாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: இதே முறையில் கீரை, கோஸ் ஆகியவற்றிலும் அடை தயாரிக்கலாம்.

 கதம்ப சாம்பார்
தேவையானவை: குடமிளகாய் (சிறியது) ஒன்று, சிவப்பு பரங்கிக் கீற்று - ஒன்று, அவரைக்காய் - 4, கத்திரிக்காய் - 2, உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், முருங்கைக்காய் - தலா ஒன்று, சாம்பார்  பொடி 4 டீஸ்பூன், துவரம்பருப்பு - 100 கிராம், தனியா, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு, தேங்காய் துருவல் - ஒரு கப், கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எல்லா காய்களையும் பெரிய துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். துவரம் பருப்பை குழைவாக வேக வைக்கவும். தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்களை வதக்கி, புளிக் கரைசலை விட்டு, சாம்பார் பொடி, உப்பு போட்டு கொதிக்கவிடவும். வேகவைத்த துவரம்பருப்புடன், அரைத்து வைத்திருக்கும் விழுதைக் கலந்து, கொதிக்கும் குழம்புடன் சேர்க்கவும். இதில் கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: சூடான சாதத்துடன் இந்தக் குழம்பு சேர்த்து சாப்பிட... அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லா காய்களும் இருப்பதால், சைட் டிஷ் தேவை இல்லை.

 வாழைத்தண்டு மோர்க்கூட்டு
தேவையானவை: வாழைத்தண்டு - ஒரு துண்டு, புளிப்பு இல்லாத தயிர் - 500 மில்லி, பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு -  தேவையான அளவு.
செய்முறை: வாழைத்தண்டை வில்லைகளாக நறுக்கி, நார் நீக்கி, பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வாழைத்தண்டுடன் சேர்க்கவும். அதில் தயிர் விட்டு நன்கு கலக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்து உடனே இறக்கவும்.
குறிப்பு: பித்தப்பையில் உள்ள கற்களை கரைக்க வாழைத்தண்டு உதவும். நமக்கு அவசியம் தேவைப்படும் நார்ச்சத்து வாழைத்தண்டில் இருப்பதால்,  வாரம் ஒரு முறை இதை உணவில் சேர்க்கலாம்.

 வெந்தயக்கீரை சாம்பார்
தேவையானவை: வெந்தயக்கீரை - மூன்று கட்டு, புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு கப், கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெந்தயக் கீரையை ஆய்ந்து, நன்கு அலசி, எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். துவரம்பருப்பை குழைய வேக வைக்கவும். புளியை 250 மில்லி தண்ணீர் விட்டு கரைத்து, உப்பு, சாம்பார் பொடி, வதக்கிய வெந்தயக்கீரை சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் வேகவைத்த பருப்பு  சேர்த்து... கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.
குறிப்பு: வெந்தயக் கீரை உடலுக்கு குளிர்ச்சி தரும்.

 இனிப்பு காராமணி சுண்டல்
தேவையானவை: சிவப்பு காராமணி, வெல்லம் - தலா 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்.
செய்முறை: சிவப்பு காராமணியை வறுத்து ஒரு மணி நேரம் ஊற வைத்து குழையாமல் வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்தை பொடித்து தண்ணீர் விட்டு கரைத்து வடிக்கட்டி, அடுப்பில் வைத்து காய்ச்சவும். சிறிது கெட்டி யானதும் வேக வைத்த காரா மணி சேர்த்து, ஏலக்காய்த் தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: தானியங்களில் புரோட்டீன் சத்து அதிகம். உப்பு அல்லது இனிப்பு சேர்த்து செய்யப்பட்ட தானிய சுண்டலை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

 மிளகு அவல்
தேவையானவை: அவல் - 250 கிராம், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு,  எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அவலில் தண்ணீர் விட்டு நன்கு களைந்து, தண்ணீரை வடித்து தேவையான உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து, மிளகுத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து, அவலையும் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
குறிப்பு: புளித் தண்ணீரில் அவலை சேர்த்துக் களைந்து, தண்ணீர் வடித்து எடுத்தும் இதை செய்யலாம்.

 முடக்கத்தான் கீரை பக்கோடா
தேவையானவை: முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடி அளவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு - தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு,  மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பொட்டுக்கடலை  மாவு, அரிசி மாவுடன்... வெங் காயம், மிளகாய்த்தூள், இஞ்சி, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு, பொடியாக நறுக்கிய முடக்கத்தான் கீரையைப் போட்டு கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, மாவை பக்கோடாக்  களாக கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக வரும்வரை வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: முடக்கத்தான் கீரை கால்வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். இந்தக் கீரையை துவையல், சட்னி, தோசை, அடை ஆகியவற்றி லும் சேர்க்கலாம்.

 கலவை கீரை வடை
தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 100 கிராம், உளுத்தம்பருப்பு - 50 கிராம், பொடியாக நறுக்கிய முளைக்கீரை, முருங்கைக்கீரை, சிறுகீரை - தலா ஒரு கப், மிளகு - 10, இஞ்சி - சிறிய துண்டு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மூன்றையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீர் வடிக்கவும். இதனுடன் தோல் சீவி, நறுக்கிய இஞ்சி, உப்பு, மிளகு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். கீரைகளைக் கழுவி, வடிகட்டி ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி, மாவுடன் சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: முள்ளங்கி இலை, நூல்கோல் இலை, கோஸ் துருவல் சேர்த்தும் வடை தயாரிக்கலாம்.

சிறுகிழங்கு பொரியல்
தேவையானவை: சிறுகிழங்கு - 200 கிராம், இஞ்சி பேஸ்ட் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு -  தேவையான அளவு.
செய்முறை: சிறுகிழங்கை நன்றாக கழுவி, குக்கரில் வைத்து, ஒரு விசில் விட்டு இறக்கி, ஆறியதும் தோல் உரித்து, இரு பாதியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... இஞ்சிபேஸ்ட் சேர்த்து வதக்கி, பின்பு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, நறுக்கிய சிறுகிழங்கையும் சேர்த்து நன்றாகக் கிளறவும். தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

 எள்  கறிவேப்பிலைப்பொடி
தேவையானவை: எள் - 25 கிராம், கறிவேப்பிலை - இரண்டு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் எள்ளை வறுக்கவும். கறிவேப்பிலையை மொறுமொறுப்பாக வறுக்கவும். காய்ந்த மிளகாய்,  உளுத்தம்பருப்பையும் வறுத்து, எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.
குறிப்பு: எள், எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. கறிவேப்பிலை தலை முடி வளர்ச்சிக்கு உதவும். சூடான சாதத்துடன் இந்தப் பொடியை சேர்த்து, நெய் விட்டு சாப்பிட்டால், ருசிக்கு ருசி... வலிமைக்கு வலிமை !

 வெண்டைப்பிஞ்சு வெந்தய தோசை
தேவையானவை: வெண்டை (சிறு பிஞ்சு) - 6, புழுங்கல் அரிசி - 250 கிராம், வெந்தயம், உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். வெந்தயம், உளுத்தம்பருப்பை தனியாக ஊற வைத்து, பிறகு எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து நைஸாக அரைத்து, சிறிது மசிந்ததும் வெண்டைப் பிஞ்சையும் காம்பு நீக்கிப் போட்டு அரைக்கவும். மாவில் உப்பு சேர்த்துக் கலந்து, தோசைக்கல்லில் மாவை ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: வெண்டைப்பிஞ்சு தோசை மிகவும் மிருதுவாக இருக்கும். இதற்கு பூண்டு மிளகாய்ப்பொடி சூப்பர் காம்பினேஷன்!

 வேப்பம்பூ பச்சடி
தேவையானவை: வேப்பம்பூ - ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், பொடித்த வெல்லம் - சிறிதளவு, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, எண்ணெய் -  ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, வேப்பம்பூ சேர்த்து வறுக்கவும். இதில் புளிக் கரைசலை விட்டு, உப்பு, வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு: வேப்பம்பூ, பித்தத்தை தணிக்கும். பித்தம் அதிகம் உள்ளவர்கள் வேப்பம்பூ பச்சடி, துவையல், பொடி செய்து சாப்பிடுவது நல்லது.

 சேனை பொரியல்
தேவையானவை: சேனைக்கிழங்கு - 250 கிராம், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், புளி - எலுமிச்சம்பழ அளவு (தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சேனையை தோல் சீவி, பொடியாக நறுக்கி, புளித் தண்ணீரில் சேர்த்து... உப்பு,     மஞ்சள்தூள் போட்டு சிறிது நேரம் கொதிக்கவிட்டு, தண்ணீரை வடித்துவிடவும். வாணலியில் எண் ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வடிகட்டி வைத்த சேனையைப் போட்டு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு மொறுமொறுவென்று வரும்வரை கிளறி இறக்கவும்.
குறிப்பு: சேனை அதிகம் வேகக்கூடாது. சிறிது கொதித்த உடன் தண்ணீர் வடிக்கட்டி விட வேண்டும். நன்றாக வெந்துவிட்டால் மொறுமொறுப்பு வராது.

 கருப்பட்டி  கோதுமை தோசை
தேவையானவை: கருப்பட்டி - 200 கிராம், கோதுமை - 200 கிராம், அரிசி - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு கப், நெய் - 100 மில்லி.
செய்முறை: கோதுமை, அரிசி இரண்டையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு அரைக்கவும். கருப்பட்டியை பொடித்து, சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி, அரைத்த மாவுடன் கலந்து, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிறிது நெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: இதற்கு, வெண்ணெய் சிறந்த காம்பினேஷன் கோதுமைக்கு பதில் கம்பு, கேழ்வரகு மாவு பயன்படுத்தியும் இதே முறையில் தோசை தயாரிக்கலாம்.

 சோளம்  அரிசி  பருப்பு பொங்கல்
தேவையானவை: அரிசி - 200 கிராம், சோளம் (உரித்தது), பாசிப்பருப்பு (வறுத்தது) - தலா ஒரு கப், மிளகு - சீரகம் சேர்த்துப் பொடித்தது - 2 டீஸ்பூன், நெய் - 100 மில்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பாசிப்பருப்பு, சோளம் மூன்றையும் ஒன்று சேர்த்து, ஒரு பங்குக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் நெய் விட்டு, லேசாக சூடானதும்... மிளகு - சீரகப் பொடி போட்டு, கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கவும். இதை, வேக வைத்த அரிசி - பருப்பு கலவையுடன் சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு மசித்துக் கிளறி பரிமாறவும்.
குறிப்பு: அரிசிக்குப் பதில் கோதுமை பயன்படுத்தியும் இந்த பொங்கலை தயாரிக்கலாம். இதற்கு வடை - சட்னி, சிறந்த காம்பினேஷன்.

 தேங்காய்  அரிசி பாயசம்
தேவையானவை: அரிசி - 200 கிராம், தேங்காய் - ஒரு மூடி, பொடித்த வெல்லம்  - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பால் - 200 மில்லி, வறுத்த முந்திரி - 10.
செய்முறை: அரிசி - தேங்காய் இரண்டையும் கொரகொரப்பாக அரைத்து, சிறிது தண்ணீ ர் விட்டு கலக்கி கொதிக்கவிடவும். அரிசி நன்கு வேகும்வரை கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். வெந்ததும் வெல்லம் சேர்த்து கொதிக்கவிட்டு, பால் விட்டு, ஏலக்காய்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும். வறுத்த முந்திரியை உடைத்து இதனுடன் சேர்த்துப் பரிமாறவும்.
குறிப்பு: தேங்காயும் அரிசியும் எப்போதும் வீட்டில் இருக்கும் என்பதால்,  உடனே தயாரித்துவிடலாம். இதை செய்வது சுலபம்... சுவையோ அபாரம்!

தனியா  மிளகு  சீரகப்பொடி
தேவையானவை: தனியா - ஒரு கப், மிளகு - 10, சீரகம் - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் தனியா, மிளகு, உப்பு, சீரகம், காய்ந்த மிளகாய் எல்லாவற்றையும் வறுத்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
குறிப்பு: சூடான சாதத்துடன் இந்த பொடியை சேர்த்து, சிறிது நெய் விட்டு சாப்பிட... 'விறுவிறு’ சுவை நாக்கை கட்டிப்போடும். காய் வாங்க முடியாத சமயத்தில் இந்தப் பொடி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வெங்காய துவையல்
தேவையானவை: சின்ன வெங்காயம் - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 2, புளி -  சிறிய நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தை தோல் உரித்து, எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனியாக வறுக்கவும். முதலில் உளுத்தம்பருப்பு, மிளகாய், புளி மூன்றையும் மிக்ஸியில் சிறிது பொடித்து... அதன்பிறகு வதக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும்.
குறிப்பு: நீராகாரமும், வெங்காயத் துவையலும் அற்புதமான காம்பினேஷன்.

 வெங்காய துவையல்
தேவையானவை : சின்ன வெங்காயம் - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 2, புளி -  சிறிய நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : வெங்காயத்தை தோல் உரித்து, எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனியாக வறுக்கவும். முதலில் உளுத்தம்பருப்பு, மிளகாய், புளி மூன்றையும் மிக்ஸியில் சிறிது பொடித்து... அதன்பிறகு வதக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும்.
குறிப்பு: நீராகாரமும், வெங்காயத் துவையலும் அற்புதமான காம்பினேஷன்.

நன்றி - விகடன்

டெல்லி ரேப்டு கேர்ள் சாவுக்குக்காரணம் டெல்லி போலீஸ் தான் - பர பரப்பு தகவல்கள்

டெல்லி சம்பவம்: உதவ வராமல் சண்டை போட்ட போலீசார்'

Posted Date : 11:48 (05/01/2013)Last updated : 11:49 (05/01/2013)
புதுடெல்லி: டெல்லியில்  
மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி  சாலையில் வீசப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த போலீசார்  உதவ வராமல் அந்த இடம் எந்த காவல் நிலைய எல்லைக்குள் உட்பட்டது என்பது குறித்து  தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததாக மாணவியின் நண்பர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி இரவு ஓடும் பேருந்தில் மாணவியை இரும்பு  கம்பியால் தாக்கி பலாத்காரம் செய்த கும்பல்,அவரையும், அவருடன் வந்த ஆண்  நண்பரையும் பலமாக தாக்கி சாலையில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்துவிட்ட மாணவி உயிரிழந்துவிட்ட  நிலையில்,அவருடன் வந்த ஆண் நண்பர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை  பெற்று 

இந்நிலையில் சாலையில் ஆடைகளின்றி காயங்களுடன் தானும், மாணவியும் உயிருக்கு  போராடிக் கொண்டிருந்தபோது தங்களுக்கு யாருமே உதவவில்லை என்றும்,போலீசாரும்  உதவ வராமல் காவல் நிலைய எல்லை குறித்து தங்களுக்குள்  சண்டையிட்டுக்கொண்டிருந்ததாகவும் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள  பேட்டியில் அந்த ஆண் நண்பர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,"அவ்வழியாக காரிலும்,பைக்கிலும்,  ஆட்டோ ரிக்ஷாவிலும் சென்றவர்களை தடுத்து

நிறுத்தி உதவி கேட்க  முயற்சித்தேன்.ஆனால் தங்களது வாகனங்களில் மெதுவாக அருகில் வந்து வேடிக்கை  பார்த்து விட்டு சென்றனரே தவிர,யாருமே உதவவில்லை.இதிலேயே 25 நிமிடங்கள்  கழிந்துவிட்டது.

பின்னர் அந்த வழியாக சென்ற யாரோ ஒருவர் போலீசுக்கு இது குறித்து தகவல்  அளித்தபின்னர்,45 நிமிடங்கள் கழித்து 3 வேன்களில் ரோந்து போலீசார் வந்தனர்.

நாங்கள் ஆடையிலாமல் கிடந்த நிலையில்,போலீசார் உட்பட யாரும் ஒரு சிறிய  துணியை கூட கொடுக்கவில்லை.ஆம்புலன்ஸையும் அழைக்கவில்லை.அவர்கள்  வெறுமனே எங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

எங்களுக்கு உதவ முன்வராமல் இந்த வழக்கு எந்த காவல்நிலைய எல்லைக்குள் வரும்  என தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர்.இதிலேயே 45 நிமிடங்கள்  விரயமாகிவிட்டது.

பின்னர் பலமுறை நான் கேட்டுக்கொண்ட பின்னர் யாரோ ஒருவர் ஒரு போர்வையை  கிழித்துக்கொடுத்தார்.அதனைக்கொண்டு மாணவியின் உடலை நான் மூடினேன். 

பின்னர் நானே எனது தோழியை போலீஸ் வேனில் தூக்கி வைத்தேன். காவல்துறையினர்  அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், நீண்டதூரம் பயணித்து சப்தர்ஜங்  மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்" என்று தெரிவித்துள்ளார். 



நன்றி - விகடன் நியூஸ்

தமிழ் நாட்டின் அடுத்த 5 சி எம் கள் இப்பவே ரெடி


Photo: காதல் சில்மிஷி * 23 *

♥ ♥ ♥ ♥ ♥ ♥

பேரானந்தம்..
சிறுதுயரம்..
எதுவானாலும்
அவளிடமிருந்து
வந்துசேரும்...
முத்தம் விடு தூது!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥


1. உன்னிடமிருக்கும் நகை எல்லாம் எங்கம்மாவிடமிருந்து  நீ ஆட்டையைப்போட்டவை தாம்!


-----------------------


2. இன்று கட்டபொம்மன் பிறந்தநாள்  முன்னிட்டு வரி கட்ட மாட்டேன் , பொண்ணை மட்டும் தான் கட்டுவேன் என அலப்பரை செய்தால் நீயும் தமிழனே!



----------------------------


3. பாப்பா , மண்ல  கை வைக்காதே! 
போங்கப்பா , நீ மட்டும் மண்ல கால் வெச்சிருக்கே?



-------------------------------


4. பெண்மை மென்மையாக இருந்தால் மேன்மை ;-))



----------------------


5. ஜெ-வைப் பிரதமர் ஆக்கினால், தமிழகம்போல இந்தியாவும் இருளில் மூழ்கும்- கனிமொழி# கலைஞரைப் பிரதமர் ஆக்கினால் இந்தியாவே காணாம போயிடுமே?



------------------------


6. வாழ்வில் , என் லட்சியத்தில் சிகரம் தொடும் எண்ணம் எனக்கில்லை, என் அன்பே! உன் கரம் பற்றினால் போதும் 



--------------------------


7. டெல்லியில் இருந்த சூழல், முதல் அமைச்சர்களைப் பணியவைப்பதாக இருந்தது!'- ஜெ # அதானே! தமிழ் ல உங்களுக்குப்பிடிக்காத ஒரே வார்த்தை - பணிவு




-------------------------


8. மிஸ், இன்னைக்கு நான் ஃபுல் ஃபார்ம்ல இருக்கறதா எல்லாரும் பாராட்றாங்க, ஆனா ஏன் கெட் அவுட் சொல்றீங்க?


நீ யூனிஃபார்ம்ல இல்லையே?



--------------------------


9. டியர்,உதடுகள் ஒட்டாத கவிதைகள் சொல்லவா?



 வேணாம், உதடுகள் விலகாத கில்மா கவிதை நான் சொல்றேன் ;-)



------------------------


10. உன் நினப்பு பொழப்பைக்குடுத்தது, உன் தங்கச்சி நினைப்பு பொழப்பை கெடுக்குது




------------------------



Photo: Photography




11. சமுதாயத்தின் எழுச்சிக்காக ஸ்டாலின் பாடுபடுவார் - கருணாநிதி # பாவம்.நீங்க எப்படா சீட்டை விட்டு எந்திரிப்பீங்கனு படாத பாடு படறார்




-----------------------


12. மு க - தி மு க ஆட்சிக்கு வந்தால் வருசம் ஒரு சி எம். 1 ஸ்டாலின் 2 அழகிரி 3 கனிமொழி 4 மு க முத்து 5 குஷ்பூ




---------------------------


13. மு க ஸ்டாலின் - டாடி டாடி ஓ மை டாடி உன்னைக்கண்டாலே ஆனந்தமே . அழகிரி - விடுகதையா இந்த வாழ்க்கை? விடை தருவார் யாரோ?




------------------------


14. மு க - மன்னர் ஆட்சி எனில் அண்ணனுக்கு மகுடம் சூட்டலாம்.நடப்பது மக்கள் ஆட்சி.எனவே தம்பிக்கு மகுடம்




-----------------------



15. மு க - கவலைப்படாதே ! கட்சி தம்பிக்கு! ஆட்சி அண்ணனுக்கு.# அழகிரியின் கனவு





----------


16. அழகிரி - மாய்ந்து மாய்ந்து நான் பார்த்த போது அய்யய்யோ.





-------------------------



17. எனக்கு பின்னால் ஸ்டாலின்!: கருணாநிதி அறிவிப்பு # தலைவா! நீங்க சீட்டை விட்டு எப்போ எந்திரிக்க? நான் குந்திக்க?னு தளபதி பெருமூச்சு விடறாரு





-------------------


18. உங்க படத்துல ஹீரோவை டம்மியா காட்டி இருக்கீங்க்ளே ஏன்?




அதுக்கு ஆல்ட்டர்நேட்டிவா ஹீரோயினை கம்மி டிரஸ்ல காட்டிட்டனே?




-----------------------------



19. ஆம்பளை ரிசப்ஷனிஸ்ட்டை மார்க்கெட்டிங் டிபார்ட்மென்ட்ல உக்கார வைக்கறதும் , லாக்கப் ல பெண் போலீசை காவலுக்கு வைப்பதும் 1 தான்




----------------------



20. ஆயுள் உள்ளவரை சமுதாய பணி - கலைஞர் # ஓஹோ.ஆயுள் தண்டனை டூ ஆல் ஓவர் தமிழன்ஸ்?



---------------------




Photo: Photography



21. டீன் ஏஜ் ல வில் மாதிரி இடை வளைவதால் வில் ஏஜ் ( வில்லேஜ்)னு சொல்லலாமா? # யோகா டீச்சர் யோகேஷ்வரியின் டைரியில் இருந்து




----------------------


22. மு க ஸ்டாலின் - டாடி டாடி ஓ மை டாடி உன்னைக்கண்டாலே ஆனந்தமே .




அழகிரி - விடுகதையா இந்த வாழ்க்கை? விடை தருவார் யாரோ?



---------


23. மு க - தி மு க ஆட்சிக்கு வந்தால் வருசம் ஒரு சி எம். 1 ஸ்டாலின் 2 அழகிரி 3 கனிமொழி 4 மு க முத்து 5 குஷ்பூ





------------------------------------------


24. திமுக மடம் அல்ல:அழகிரி" # விடாதீங்கண்ணே.நீங்க ஜடம் அல்லனு நிரூபிங்க



--------------------


25. டேமேஜர் - உன் திறமைக்கும் அறிவுக்கும் நீ இங்க இருக்க வேண்டியவனே இல்ல.



தாங்க்ஸ் சார். உன்னை கன்னி இல்லா காட்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்றோம்



-----------------------


26. பெண்கள் தங்கள் மோ்கத்தை அதிகம் காட்டியது சேலை,நகைக்கடை்களிலும், ஆண்கள் தியேட்டரிலும் , டாஸ்மாக்கிலும்்




--------------------------


27. நிறைய ஆண்கள் இருக்கற இடம் சுத்தமா இருக்கும்.. அமைதியா இருக்கும்...நிறைய மன நிம்மதி இருக்கும்





-----------------------


28. படிப்பு ஏறாததுக்கு மூன்று காரணம் தான் இருக்கமுடியும்


1.மிஸ் ஸெம பிகர்


2. கோ எட்்

 3. HM ஆன்ட்டி #3 படம்பார்த்தாச்சு ஆனா இந்த 3?




-------------------------


29. நான் male ஜாதி தான் , என் பொஞ்சாதி ஃபீமேல் ஜாதி



-------------------


30,. டியர், தோசைக்கல்லைப்பழக்கித்தான் தோசை சுடனும், புது செல் ஃபோனையும் பழக்கனும், கொடுங்க, ஒரு வருஷம் கழிச்சு தந்துடறேன்




--------------------


Photo: Photography



31. என் ஜோக் படிச்சிட்டு சிரிப்பு வர்லைனு ஆபீஸ் பிகருங்க சொன்னதே இல்ல #

ஏன்?

சொன்னா கிச்சு கிச்சு மூட்டிடுவேன்னு மிரட்டி வெச்சிருக்கேன்




--------------------


32. நடிகையர் திலகம் சாவித்ரியா அவங்கவங்க சம்சாரத்தைப்பார்க்க ஆசைப்படறவங்க மாமியார் மாமனார் ஐ வீட்டுக்கு வர வைங்க# உலகமகாநடிப்புடா சாமி



----------------------


33. டியர்.இன்னைக்கு 11 டூ 2 ஆபீஸ் மீட்டிங் இருக்கு.போன் பண்ணினா எடுக்க மாட்டேன்.



யார் பண்ணாலும் எடுக்க மாட்டீங்ளா?நான் பண்ணா மட்டுமா?



---------------------


34. 1 4 3 = கடைசி நெம்பர் பட்டை நாமம் என்பதன் குறியீடா?




----------------------


35. டி ஆர் - அட காதலிச்சா போதாது அதை மூடி வைக்கக்கூடாது.



 நமீதா - எனக்கு மூட நம்பிக்கையே கிடையாது.இந்திர விழா பார்த்தா தெரியும்



-----------------------


36. டாக்டர்.என் சம்சாரம் என் பேச்சை கேட்க மாட்டேங்கறாங்க



.ENT splist - செக்டு.அவங்க யார் பேச்சையும் கேட்கமாட்டாங்க.டமாரம் ஆகிடுச்சு



---------------------


37. வாழையடி வாழையாக திருமணம் ஆன ஆண்கள் கோழையடி கோழையடி


--------------------


38. பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக்கூடாது.அப்படி பொறந்து விட்டா பொண்டாட்டி பேச்சை மீறக்கூடாது ( சந்திரபாபு குரலில் பாடுக)



----------------------


39. லட்சுமிகரமான பொண்ணு தேடுனது அந்தக்காலம்.லட்சுமி மேனன் ,லட்சுமி ராய் மாதிரி கேட்பது இந்தக்காலம்




----------------------


40. தைப்பொங்கலுக்கு ரம்பா படம் எதும் ரிலீஸ் இல்ல.அதுக்கு பதிலா அரேபியன் ஹார்ஸ் லட்சுமி ராய் படம் வருது# "THAIGH"SPL



--------------------------



Photo: Photography



41.  நான் என்ன சமையல் செய்ய வேண்டும் என்பதை என் மனைவியும் , பாப்பாவும் தான் தீர்மானிக்கிறார்கள்."




-----------------------


42. டேவிட் படத்துக்கு எதிர்ப்பதம் = நைட் விட்





------------------------


43. டியர்.மேரேஜ்க்குப்பின் நீ ட்வீட் போடக்கூடாது ஓக்கே?



யா.சோறு கூட போட மாட்டேன்.டோன்ட் ஒர்ரி




----------------------


44. பெண் பார்க்கும் படலத்துல மாப்ள.- பொண்ணை பாடச்சொல்லுங்க.



பொண்ணு - கிட்டே நெருங்கி வாடா கர்லாக்கட்டை உடம்புக்காரா





---------------------


45. எதிர்க்கட்சி என்றால் வழக்கு; ஆளுங்கட்சியில் சேர்ந்தால் வாபசா? - கருணாநிதி # அழகிரி - டாடி.நான் அங்கே தான் போகப்போறேன்




----------------



46. கருணாநிதி முன்னுக்கு பின் முரணாக பேசுவதில் வல்லவர் - ராமதாஸ் # ஆமா அவர் முரண்டு .நீங்க நுரண்டு




--------------------


47. மிஸ்.யூ ஹேவ் பிரைட் பியூச்சர். ஓ தாங்ஸ்.எப்டி தெரியும்?



இவ்ள்வ் டியூப் லைட்டா இருக்கீங்ளே?



--------------------------



48. மிஸ்! நானும் எங்கண்ணனும் உங்களை லவ் பண்றோம்.




யோவ்.நான் என்ன தி மு க கட்சியா? 2 பேர் உரிமை கொண்டாட?




--------------------



49. படம் ஹிட் ஆகுமா? என்ற எதிர்பார்ப்பை விட DTH முயற்சி வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு தான் அதிகம் # விஸ்வரூபம்




---------------------


50. டியர்.நீ வெட்டி வேர்.நான் ஒரு வெட்டி ஆள்.ஆஹா என்ன பொருத்தம்?




---------------------------




டுடே டைம் பாஸ் @ டி வி

Friday, January 04, 2013

கமல் -ன் விஸ்வரூபம் டி டி ஹெச் ரிலீஸ் - சாதக பாதகங்கள் - ஒரு அலசல்


ஒளிப்பதிவு - திருப்பூர் ஆகாய மனிதன் யுவராஜ் ( )


 எடிட்டிங்க் - இலங்கை சித்தர்கள் ராஜ்ஜியம் தோழி (http://siththarkal.blogspot.com/)

TABLE NO 21 - சினிமா விமர்சனம்

http://media1.santabanta.com/full1/Bollywood%20Movies/Table%20No%2021/table-no-21-6a.jpg
பாரதிராஜா தன் மகன் மனோஜை ஹீரோவா போட்டு சரண் இயக்க ஒரு படம் எடுத்தாரே அல்லி அர்ஜூனா அந்தப்படத்தோட அடிப்படைக்கருவான ரேகிங்க் கொடுமைகள் ,  டி வி ல இப்போ  ஃபேமஸ் ஆகி வரும் ரியாலிட்டி ஷோ சீரழிவு சொல்வதெல்லாம் உண்மை பேக் டிராப்ல  சொன்னா அதுதான் டேபிள் நெம்பர் ஒன் ஹிந்திப்படத்தின் கதை

மேரேஜ் ஆகி 5 வது திருமண நாள் கொண்டாடும் புது மணத்தம்பதி  ஒரு ஹோட்டல்ல வித்தியாசமான போட்டில கலந்துக்கறாங்க . அது ஒரு ரியாலிட்டி ஷோ , லைவ் புரோகிராம். 8 கேள்வி கேட்பாங்க , அதுக்கு பதில் சொல்லனும். சரியா சொல்லிட்டா   21 கோடி ரூபா  பரிசு .

 முதல் கேள்வியே செம கில்மாவா இருக்கு. உங்க மனைவியை பப்ளிக் ப்ளேஸ்ல எல்லாரும் பார்க்க லிப் டூ லிப் கிஸ் அடிப்பீங்களா? அடிப்பேன்னு சொல்லி அடிச்சு ஒரு கோடி அடிக்கறார் ஹீரோ.

2 வது  கேள்வி உங்க கணவர் உங்களை முழுசா அறிஞ்சவரா? அதுக்கு அந்த உத்தம பத்தினி “ நோ” -னு சொல்றார். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும்  யாரும் அறியாத ஒரு  கறுப்புப்பக்கம் இருக்குங்கற பொது விதிப்படி  . ஹீரோயினை ஒரு பிளேட்ல தேள், பல்லி, பூரான் மாதிரி ஊர்வன ஜந்துக்களை உயிரோட சாப்பிட சொல்றாங்க். புருஷன் சொல்றான். என் சம்சாரம் பற்ரி எனக்குத்தெரியாதா? அவ சுத்த  சைவம்கறான். ஆனா அவ  ஈட்டிங்க் . வின் 2 கோடி 


http://movies.infoonlinepages.com/gallery/var/albums/Events/T/Table-No.21/Stills-1/First%20Look%20Launch%20Of%20Table%20No%2021%20Movie%205.JPG?m=1353741295

3வது கேள்வி - உங்க மனைவிக்காக நீங்க எந்த தியாகமும் பண்ணத்தயாரா? எஸ். ஒரு கூண்டுல மனைவியை அடைச்சு டைம் குடுக்கறாங்க  அந்த டைம்க்குள்ளே ஹீரோ அரை பாட்டில் பிளட்டை அவர் உடம்புல இருந்து எடுத்து பாட்டில்ல சேர்த்தனும். டைமிங்க் மிஸ் ஆனா  ஆள் அவுட். பர பரப்பான இந்த கேம்ல ஹீரோ வின்


 இதுல தம்பதிகள் செம காண்ட் ஆகி விலகிடறோம்கறாங்க . அக்ரிமெண்ட்படி விலகமுடியாதுங்கறார் வில்லன். போய்யா நீயும் ஆச்சு , உன் போட்டியும் ஆச்சுன்னு 2 பேரும் அழகிரி மாதிரி கிளம்பறாங்க . அவங்க கைல  என்னமோ வாட்ச் மாதிரி 1 கட்டி இருக்காங்க ஆல்ரெடி . வில்லன் எல்லையை தாண்டுனா டேஞ்சர். சோ அவங்க  ரிட்டர்ன் ஆகி மறுபடி கேம் 



4 வது ஸ்டெப்ல மனைவியை மொட்டை அடிக்கச்சொல்றான். வழக்கமா பொண்ணுங்கதான் பையனுக்கு மொட்டை அடிப்பாங்க , இதுல உல்டா  வின்


5 வது கேள்வி உங்க மனைவியை எப்பவாவது  கை நீட்டி அடிச்சிருக்கீங்களா? ஆமாங்கறார். இப்போ மனைவிகிட்டே நீங்க பளார்னு ஒரு அறை விடுங்க அப்டிங்கறார். விடா பாரு ஒரு அறை பளார்.. கதி கலங்கிடுச்சு 


 6 வது கேள்வி  பப்ளிக் ப்ளேஸ்ல ஃபைட் பண்ணி இருக்கீங்களா?  இல்லை. இப்போ பண்ணுங்கங்கறார்.  பபளிக் ப்ளேஸ்ல ஒரு காரை உடைச்சு போலீஸ் கிட்டே மாட்டி ஒரு ஃபைட் . வந்து பார்த்தா மனைவியை காணோம். ஸ்ட்ரப்டீஸ் எனப்படும் டான்ஸ்க்கு வலுக்கட்டாயமா அவளை கொண்டு போய் இருக்காங்க . போய் ஃபைட் போட்டு மீட்டாச்சு . வின் 


 7 வது கேள்வி  . உங்க கணவருக்கு நீங்க எப்பவாவது துரோகம் பண்ணி இருக்கீங்களா?   அவ பொய் சொல்ல வழி இல்லை . லை டிடெக்டிவ் மிஷின் காட்டிக்குடுத்துடும் . ஆமாங்கறா . அங்கேயே தம்பதிகளுக்குள் சண்டை . ஆனா போட்டில வின்


 8 வது கேள்வி . இதுவரை யாரையாவது கொலை பண்ணி இருக்கீங்களா? இல்லை.. இப்போ பண்ணுங்க  அப்டினு ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறாங்க .


 அவன் யாரு? எதுக்கு இந்த தம்பதியை இப்படி டார்ச்சர் பண்றான்? கொலை செய்யக்கூட்டிட்டுப்போனது வில்லனோட மகனையே. எதுக்காக ? இதெல்லாமே க்ளைமாக்ஸ் சஸ்பென்ஸ்..


ஹீரோவா ராஜீவ். பாவம் அவருக்கு லவ் சீன் எல்லாம் நல்லா ஒர்க் அவுட் ஆகுது . க்ரைம் , பயம் , ஃபைட் , ஆக்ரோஷம் எல்லாம் சரியா வர்லை 


 ஹீரோயின் Tena Desae, . வசீகரமான முகமோ , சொல்லிக்கொள்ளும்படியான தேகமோ இல்லை. 50 மார்க்  தேறும் . மொட்டை அடிக்கும்போது ஓரளவு நடிக்க ட்ரை பண்ணி இருக்கு பாப்பா . 


 வில்லன் நடிப்பு ரகுவரன் , பிரகாஷ்ராஜ் மாதிரி பிரமாதப்படுத்தலை . சொன்னதை செஞ்சுட்டு போய்ட்டார்.. 


http://www.apnatimepass.com/table-no-21-movie-poster-12.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1.  படம் 108 நிமிடங்கள் ஓடுது .  நல்ல விறு விறுப்பு . க்ளைமாக்ஸை யூகிக்க முடியலை ,. குட் 


2. க்ரைம் த்ரில்லர்ல  சமூக அக்கறை , மெசேஜ் சொல்லாமல் சொல்வது நல்ல திரைக்கதை உத்தி 




3. படத்தோட ஓப்பனிங்க் சீன்ல ஹீரோயினுக்கு ஸ்விம்மிங்க் டூ பீஸ் டிரஸ்ல  ஒரு கர்ச்சீப்பும் , 2 ரிப்பனும் மட்டும் காஸ்ட்யூமா குடுத்து கேமராவால் அள்ளிக்கிட்டது 



http://cdn.koimoi.com/wp-content/new-galleries/2012/12/Tena-Desae-sizzles-in-Sari-at-a-photoshoot.jpg


 இயக்குநருக்கு சில கேள்விகள்




1. முன் பின் அறிமுகம் இல்லாத ஆள் கூப்பிடதும் தம்பதிகள் ஹெலிகாப்டர்ல தேவாங்கு மாதிரி கிளம்பறாங்க்ளே? எப்டி? 



2.  புரோகிராம் லைவ்ல ஓடுது. உலகம் பூரா மக்கள் பார்த்துட்டு இருக்காங்க. கண்ணியமான உடை அணீயாமல் எல்லாரும் பார்த்துக்கோங்கன்னு கடையை விரிக்கறது மாதிரி மனைவி போட்டு வரும் டிரஸ்சை கணவன் அனுமதிப்பது எபப்டி? 



3. மனைவிக்கு ஏதோ விலை மதிப்பில்லாத முத்து மாலையை பரிசு அளிக்கிறார். அது பார்த்தா  சென்னிமலை தேர்க்கடைல 10 ரூபாய்க்கு வாங்குன பாசி மாலை மாதிரி இருக்கு. அட்லீஸ்ட் ஒரு நெக்லஸ் மாதிரி கவரிங்க்லயாவது காட்டி இருக்கலாம் 



4.  கேம் நடக்கும்போது பதில் சொன்ன அடுத்த நிமிஷமே 2 கோடி ரூபா அவங்க பேங்க் அக்கவுண்ட்ல கிரெடிட் ஆகுது .  அது எப்படி முடியும்?  சும்மா  எஸ் பி  அக்கவுண்ட்ல 50,000 ரூபா க்கு மேலே போட்டாலே பேன் கார்டு , லொட்டு  லொசுக்கு ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் இருக்கும்போது எந்த டீட்டெயிலும் கேட்காம ஆன் லைன்ல 2 கோடி ரூபா அக்கவுண்ட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ண முடியுமா?  ( பேங்க் மேனேஜர் கம் நண்பரிடம் கேட்டேன் முடியாதுங்கறார்) 



5. ஹீரோ ரத்தத்தைப்பார்த்தாலே மயக்கம் வரும் ஆள் அப்டினு ஃபிளாஸ்பேக்ல வருது . ஆனா அவரே  தன் கைல ஊசி  குத்தி பாட்டில் நிறைய ரத்தம் எடுக்கறாரு. மெடிக்கல் லைன்ல இருப்பவங்க தவிர வேறு யாரும் அப்படி செல்ஃப் பிளட் டொனேட் பண்ண முடியாது . கிறு கிறுனு வருமே.. 



 6. எல்லாரும் பார்க்கும் இந்த லைவ் புரோகிராம்ல கொலை பண்றது , துன்புறுத்துறது இதை எல்லாம் பார்த்து யாரும் கேள்வி கேட்கலையா? போலீஸ் எல்லாம் என்ன பண்ணுது? என்பதற்கு யூகமாக ஒரு பதில் க்லைமாக்ஸ்ல கிடைக்குது , ஆனா அதை முறைப்படி விளக்கவே இல்லை 


7.  ராக்கிங்க் பண்ணும் காட்சியில் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்க்குள்ள , அவங்களுக்கே உரிய குறும்புத்தனம் , ஜாலி எல்லாம் மிஸ்சிங்க் , எஒம்ப கொடூரம் மட்டுமே காட்டி இருக்காங்க. பரிதாபத்தை வரவழைக்க , ரொம்ப செய்ற்கை .


8. வில்லனோட டார்கெட் ஹீரோதான் . ஹீரோயினை மொட்ட்டை ஆக்குனது . அந்த விடுதில அவளை அலங்கோலப்படுத்துனது தேவை இல்லாதது . அதுதான் தேவைன்னா க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்ல ஹீரோவை வில்லனா காட்டுனதுக்குப்[பதிலா ஹீரோயினை வில்லியா காட்டி இருந்தா செமயா இருந்திருக்கும் 



http://mimg.sulekha.com/tena-desae/images/stills/tena-desae-04.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்

 1. டெயிலி ஃபிளைட்ல போனா அது உல்லாச வாழ்க்கை ஆகிடுமா? 



2. இந்த முத்து மாலை வாங்க பணம் ஏது? 



 லாட்டரி விழுந்தது , ஜாக் பாட் அடிச்சேன் 


 பொய் 

 சேவிங்க்ஸ்ல இருந்துதான் எடுத்தேன்

 எனக்காக  சேவிங்க்ஸ்ல இருந்து ஏன் செலவு பண்ணி வேஸ்ட் பண்றீங்க பணத்தை? இருந்தாலும் ஐ லைக் இட் ( அதானே? ) 



3. டிராயிங்க் சூப்பரா  இருக்கு 


 சும்மா அள்ளி விடாதீங்க , அது காலியா இருக்கு 

 கலைக்கண்ணோட பார்க்கனும் 



4.  கேம்ல ஜெயிச்சா எவ்ளவ் ? 

 எவ்ளவ் வேணும் ? 


 ஒரு கோடி?


 21 கோடி தர்றேன் 



வாவ் 



5. வெரிகுட் , ஃபர்ஸ்ட் கிஸ் மாதிரியே பிரமாதமா கொடுத்தே 



6. இந்த உலகத்தை வழி நடத்திச்செல்வது எது தெரியுமா?  பயம் தான் . யார் யாரை  எப்படி மடக்குவாங்க அப்டிங்கற பயம் தான்


http://media.santabanta.com/newsite/cinemascope/bitimages/tena-desae.jpg
சி.பி கமென்ட் - க்ரைம் த்ரில்லர்கள் பார்க்கலாம். லேடீஸ் , மாணவ் மாணவிகள்  மன ரீதியான பாதிப்புக்கு ஆளாவர்கள் என்பதால் பார்க்க வேண்டாம்  ( இதுல என்ன பியூட்டின்னா இது ஒரு விழிப்புணர்வுப்படம் டூ காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்) . ஈரோடு அண்ணாவில் படம் பார்த்தேன் . மொத்தமே 7 பேர்தான் தியேட்டர்ல


 ரேட்டிங்க்  =    3 / 5



ஆனந்த விக்டன் எதிர்பார்ப்பு மர்க் - 40 ( ஹிந்திப்படம் எனவே விமர்சனம், மார்க் போட மாட்டாங்க )


குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே



http://arkwhisper.com/wp-content/uploads/2012/12/deepika_padulone_hot.jpg

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 4.1.2013 ) 7 படங்கள் முன்னோட்ட பார்வை

இந்த ஆண்டில் முதல் வெள்ளிக் கிழமையிலேயே 10 படங்கள் வெளிவருகிறது. ‘நண்பர்கள் கவனத்திற்கு’, ‘குறும்புக்கார பசங்க’, ‘கள்ளத்துப்பாக்கி’, ‘கனவு காதலன்’, ‘காதல் கிளுகிளுப்பு’, ‘மயில்பாறை’, ‘நிமிடங்கள்’ ஆகிய நேரடித் தமிழ்ப் படங்களும், ‘கமாண்டோஸ் ஏகே 47’, ‘மாய கத்தி’, ‘அருந்ததி வேட்டை’ ஆகிய டப்பிங் படங்களும் வெளிவருகிறது.  பொங்கலுக்கு கமலின் ‘விஸ்வரூபம்’, கார்த்திக்கின் ‘அலெக்ஸ் பாண்டியன்’, விஷாலின் ‘சமர்’, சந்தானத்தின் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ஆகிய படங்கள் வெளிவருவதால் அடுத்த வாரம் சிறு பட்ஜெட் படங்கள் வெளிவராது என்று தெரிகிறது. 

 http://www.tamil.cinebuzzz.com/img_articles/1103b.jpg

1.கள்ளத்துப்பாக்கி -கமல்ஹாசனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் கே.சி.ரவிதேவன். இவர் இயக்கி உள்ள படம் கள்ளத்துப்பாக்கி. தமிழ் செல்வன், குட்டி ஆனந்த், ஷாவந்திகா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். ஏ.வி.வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், எஸ்.கே.பாலச்சந்திரன் இசை அமைத்துள்ளார். வேலை வெட்டி இல்லாமல் திரியும்.  5 சிறுவர்களிடம் ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. அதை வைத்து அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதுதான் கதை.

விஜய் நடித்துள்ள துப்பாக்கி படத்தின் பெயரை பயன்படுத்த கூடாது. அதில் எங்கள் படத்தின் தலைப்பான துப்பாக்கி உள்ளது. என்று இயக்குனர் பிரச்னையை கிளப்பினார். இது தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், நீதிமன்றம் வரை சென்று ஒரு வழியாக சமாதானத்தில் முடிந்தது. இருந்தாலும் கோபம் தீராத இயக்குனர். துப்பாக்கி வெளியாகும் தீபாவளி அன்றே தன் படத்தையும் வெளியிடுவது என்று விளம்பரங்கள் செய்து வந்தார். 


இந்த நிலையில் படத்துக்கு அடுத்த பிரச்னை வந்திருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர். படம் வன்முறை நிறைந்ததாக இருக்கிறது என்று சொல்லி சான்றிதழ் தர மறுத்துவிட்டனர். இதனால் கள்ளத்துப்பாக்கி தீபாவளிக்கு வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் ரவிதேன் கூறியதாவது, கூலிக்காக கொலை செய்வதுதான் படத்தின் கதை களம். ஆட்டோ டிரைவர், தள்ளுவண்டியில் காய்கறி விற்பவர், செருப்பு தைப்பவர்களில் சிலர் கூலிக்காக கொலை செய்வர்கள் கொலை செய்யப்படுபவர் யார், யாருக்காக கொலை செய்கிறோம் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. 


ஆனால் அதை ஒரு கடமை போல செய்து விட்டு வருவார்கள். இதைத்தான் படத்தில் காட்டியிருக்கிறோம். இதுபோன்ற படங்கள் இந்தியில் நிறைய வந்திருக்கிறது. ஆனால் இதை அனுமதிக்க மறுத்து விட்டார்கள். இதற்கு பின்னால் யாருடைய சதியும் இருப்பதாக நாங்கள் நம்பவில்லை. ரிவைசிங் கமிட்டிக்கு விண்ணப்பத்திருக்கிறோம். அங்கும் நியாயம் கிடைக்காவிட்டால் நீதிமன்றம் வரை சென்றாவது படத்தை வெளியிட்டே தீருவோம் என்றார்.

கள்ளத்துப்பாக்கி என்றாலும் சிக்கல் அப்படி பெயர் வைத்தாலுமா சிக்கல்....?!

ஈரோடு ஸ்டார் ல் ரிலீஸ் 

 http://pakindmp3.com/media/346/images/1356032950_Table%20No%2021.jpg

2. TABLE NO 21 - பாலிவுட்டில், வித்தியாசமான கதைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களின் வரிசை தொடர்கிறது. அந்த வரிசையில், இப்போது, "டேபிள் நம்பர்-21ம் சேரும் என, பாலிவுட் வட்டாரங்கள் உறுதியாக நம்புகின்றன. இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் தம்பதி, பிஜி தீவுக்கு, சுற்றுலா செல்கின்றனர்; ஆடம்பர ஓட்டலில் தங்குகின்றனர். அங்கு இருக்கும் ஒருவர், டாக்டர் தம்பதியை, ஒரு புதுமையான போட்டியில் விளையாட அழைக்கிறார். இந்த போட்டியில், எட்டு கேள்விகள் கேட்கப்படும். எட்டு கேள்விகளுமே, சம்பந்தப்பட்டவர்களின் சொந்த வாழ்க்கையை மையமாக வைத்தே கேட்கப்படும். 




வெற்றி பெற்றால், 21 கோடி ரூபாய் பரிசு நிச்சயம். ஒரே ஒரு நிபந்தனை; எந்த காரணத்தைக் கொண்டும், போட்டியிலிருந்து, பாதியிலேயே வெளியேற முடியாது. இதில், டாக்டர் தம்பதி, ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். இக்கட்டான சூழல் ஏற்படும்போது, போட்டியிலிருந்து வெளியேற முயற்சித்தும், அவர்களால் முடியவில்லை. தங்களை திட்டமிட்டு, சூழ்ச்சியில் சிக்க வைத்துவிட்டதை, அவர்கள் உணர்கின்றனர். இந்த ஆபத்திலிருந்து, அவர்கள் வெளியேறுகின்றனரா இல்லையா என்பதே கதை. ஆதித்யா தத் இயக்கியுள்ள இப்படத்தில், பரேஷ் ராவல், தீனா தோசே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 


ஈரோடு அண்ணா வில் ரிலீஸ்  

TABLE NO 21 - சினிமா விமர்சனம்


http://www.adrasaka.com/2013/01/table-no-21.html
 

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/4/4f/Chemistry_film.jpg/220px-Chemistry_film.jpg


3. அருந்ததி வேட்டை - மித்து மூவிஸ் ஜெயராம் வேல் பிலிம்ஸ் வேல் முருகன் ஆகியோர்  இணைந்து  தயாரிக்கும் படம் அருந்ததி வேட்டை. இதில் சரண்யா மோகன், வினித், மனோஜ் கே.ஜெயன், ஆகியோர் நடிக்கின்றனர். மலையாளத்தில் கெமிஸ்ட்ரி என்ற பெயரில் வெளியான படத்தின்  தமிழாக்கமே இப்படம்.

நாடெங்கிலும் தற்போது பிரச்சினைக்குரிய விஷயமாக உள்ள பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரமே படத்தின் கதை. வினித் ஒரு கல்வி நிலையத்தில் ஆசிரியர். அவர் புனிதமான ஆசிரியர் வேலையை வைத்து  பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்.

அப்படி படுகொலையான ஒரு பெண்ணின் ஆவி சரண்யா மோகன் உடலில் புகுந்து வினித்தையும் அவரது கூட்டாளிகளையும் பழி தீர்ப்பதே கதை. பயங்கர திகில் படமாக தயாராகியுள்ளது. விஜி தம்பி இயக்கியுள்ளார்.


ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணா வில் ரிலீஸ் 


http://mjcdn.motherjones.com/preset_16/red-dawn-2012-poster.jpg

4.   Red Dawn (2012) - தமிழில் கமாண்டோ ஏகே 47-ஆக வரும் ரெட் டான்!
1984ம் ஆண்டு வெளியான படம் ரெட் டான். அப்போதே வசூலையும் குவித்து பல பிரச்சினைகளையும் கிளப்பிய படம். தற்போது அதே பெயரில் ரீமேக் செய்திருக்கிறார்கள். டேன் பிராட்லி இயக்கி உள்ளார். இவர் ஸ்பைடர்மேன், இண்டிபெண்டன்ஸ் டே படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிவர். 



2000ல் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து இப்போதுதான் வெளிவருகிறது. க்ரிஸ் ஹென்ஸ்வொர்த், இசபெல் லூக்காஸ், நடித்திருக்கிறார்கள். வாஷிங்டன் நகரத்தின் மீது எதிரிகள் வான்வெளி தாக்குதல் நடத்துகிறார்கள். அந்த ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் வான் வரின்ஸ் என்ற கொரில்லா போராட்ட குழுவை அமைத்து எதிரிகளை எப்படி முறியடிக்கிறார்கள் என்பதுதான் கதை.



 இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் டப் செய்து வெளியிடுகிறார்கள். தமிழில் புளூ மாட் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் வெளியிடுகிறது. படத்திற்கு "கமாண்டோ ஏகே 47" என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.


ஈரோடு  ராயல் இல் ரிலீஸ் 

http://cdn3.supergoodmovies.com/FilesFive/nanbargal-kavanathirku-d9e150fe.jpg

5.நண்பர்கள் கவனத்திற்கு - கிரீன் சேனல் எண்டர்டெயின்மென் படநிறுவனம் சார்பாக சகாதேவன் தயாரிக்கும் புதியபடம் நண்பர்கள் கவனத்திற்கு. இப்படத்தின் நாயகனாக குளிர் 100 பட நாயகன் சஞ்சீவ் நடிக்க அவருக்கு ஜோடியாக கம்பீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மனிஷாஜித் ஹீரோயினாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ஜெயமணியின் மகன் வர்ஷயனும் அறிமுகமாகிறார். இவர்களுடன் ராஜ்கபூர், மகாதேவன், தலைவாசல் விஜய், டாக்டர் சூரி, சங்கர், தெனாலி, அழகப்பன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

நட்புக்கும், காதலுக்கும் இடையில் உள்ள உணர்வை பிரதிபலிப்பது தான் நண்பர்கள் கவனத்திற்கு படத்தின் கதை. டைரக்டர் ஆர்.வி.உதயகுமாரிடம் உதவியாளராக இருந்த கே.ஜெயக்குமார் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.  சினேகனின் பாடல்வரிகளுக்கு பிரம்மா இசையமைக்க, பால் லிவிங்ஸ்டன் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு சிதம்பரம், கொள்ளிடம், மாயவரம், தரங்கம்பாடி, சென்னை உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்றது.


ஈரோடு அன்னபூரணியில் ரிலீஸ் 

 http://mmimages.maalaimalar.com/Articles/2012/Jun/df98e275-e990-4928-aa94-103f7bebdf7e_S_secvpf.gif

6. குறும்புக்கார பசங்க - ஸ்ரீ பூங்காவனம் சினி கிரியேஷன்ஸ், ஸ்ரீ பெரியாயி பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் புதிய படம் குறும்புக்கார பசங்க. ஊரில் படித்துவிட்டு வேலை செய்யாமல் சுற்றி திரியும் நான்கு இளைஞர்கள் செய்யும் குறும்புத்தனங்கள். அவர்கள் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போட்டது என்பதே இப்படத்தின் கதை. இதில் எதார்த்த‌த்தை மீறாமல் திரைக்கதை அமைத்து இருக்கிறார் புதுமுகம் டி.சாமிதுரை. டைரக்டர்கள் லாரன்ஸ் மற்றும் மனோஜ் குமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். மேலும் இவர் ஒரு மாற்றுதிறனாளியும் கூட.

இப்படத்தின் ஹீரோவாக சஞ்சீவ்வும், ஹீரோயினாக மோனிகாவும் நடிக்கி்ன்றனர். இவர்களுடன் பாண்டியராஜன், நெல்லை சிவா, செல்லதுரை, தவசி, பேபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை தயாரிப்பதுடன் வில்லனாகவும் நடிக்கிறார் ரவிராஜன். அருள்ராஜ் இசையமைக்க, பாண்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாமிதுரை.


 http://moviegalleri.net/wp-content/gallery/mayil-paarai-tamil-movie-stills/mayil_paarai_movie_stills_4003.jpg

7.  மயில் பாறை -ஓம் ஸ்ரீ லட்சுமி பிலிம்ஸ் சார்பில் டி.சக்கரவர்த்தி தயாரிக்கும் படம் மயில் பாறை. இதில் புதுமுகங்கள் அரசகுமார், தேவிநம்பியார் ஜோடியாக நடிக்கின்றனர். சசிரேகா, யுவராஜ், சரவணன், தேவி, சுரேஷ், ஆதவன், சிம்பு, சத்யமூர்த்தி, பிரியா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி சிவக்குமார் பா. டைரக்டு செய்கிறார்.

கோவிலில் உள்ள வைர வேலை அபகரிக்க ஒரு கும்பல் முயற்சிக்கிறது. அவ்வூர் பஞ்சாயத்து தலைவர் பாதுகாப்பில் இருப்பதால் அவரை கொல்ல திட்டமிடுகின்றனர். அந்த கும்பலை பிடிக்க போலீசாரும் முனைகின்றனர்.
ஒளிப்பதிவு: அலெக்ஸ், இசை: ரவிவர்மா, எடிட்டிங்: துரைராஜ். 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBpfGZNZQusbqq4xfnisjI2EsepIDnWfO_axbmpQLqAztaCCdRaKXbUxutIIlSVIpWjwTH96VRABNBcKwUc0b23iG3hAC3fc2JK-7EwFGGxCI93PQHFzY0YpMbny0mGeK7MrP1pZvO-X0/s1600/NIMIDANGAL-TAMIL-AUDIO-CD.jpg

8.  நிமிடங்கள் - இந்தப்படம் 2009லயே ரெடி ஆகியும் இப்போதான் ரிலீஸ் ஆகி இருக்கு. க்ரைம் த்ரில்லர் போல .







http://moviestalk.doyouknow.in/images/2012.11/Kanavu-Kadhalan-Movie-Review-270712260136852.png


9. கனவுக்காதலன் - இந்தபப்டத்தைப்பற்றி கூகுள் பூரா தேடிட்டேன். ஒரு விபரமும் இல்லை. என்னய்யா மார்க்கெட்டிங்க் பண்றீங்க?



10.  ஏதோ ஒரு மலையாளப்படம்