Wednesday, January 02, 2013

2013 - ஹேப்பி நியூ இயர் கொண்டாட்ட ட்வீட்ஸ்

இனிய காலை வணக்கம் நண்பர்களே...
1..உயர் கல்வி கற்றவனை விட பெண்ணின் மனதை படித்தவனே அவள் மனசுக்குப்பிடித்தவன் ஆகிறான் 




--------------------------


2. பெண்களுக்கு குறுகி இருப்பது இடையும் , மனமும். 


--------------------


3. அரியர் வைக்காத காலேஜ் ஸ்டூடன்ட்டும் ,சின்ன வீடு வெச்சுக்காத அரசியல்வாதியும் அபூர்வம் 




-------------------------


4. இறுதி வரை மன உறுதியுடன் இருக்கும் ஆணின் காதல்.பெற்றோருக்குத்தெரியும் வரை உறுதியாய் இருக்கும் பெண்ணின் காதல் 



--------------------------


5. நம் மானம் கப்பல் ஏறுவது நாம் மிகவும் அபிமானம் வைத்தவர்களாலேதான் பெரும்பாலும் நிகழும் 



------------------------



6. எவ்வளவு மன உளைச்சல்கள் தாக்கி நின்றாலும் வதனத்தில் புன்னகையை தேக்கி நின்றவனே வாழ்வில் வெற்றி கொண்டான் 




---------------------------


7. திரு நீறு இல்லா நெற்றியும்,தன்னடக்கம் ,பணிவு இல்லாத வெற்றியும் பாழ் 




-------------------


8. பஸ்ல சீட் பிடிக்கனும்னா பஸ் ஸ்டேன்ட் போயிடனும்.பொண்ணு மனசுல இடம் பிடிக்கனும்னா வயசுக்கு வந்து சீர் செய்யும்போதே காதலை சொல்லிடனும். 



------------------------


9. ஒரு ஜி கே கேள்வி - ஒரு பெண் ஆணை அட்டெம்ப்ட் ரேப் செய்வதும் அவள் மேல் ஆண் கோர்ட்டில் கேஸ் போட்டு ஜெயிப்பதும் எந்த தமிழ்ப்படத்தில் ?

ஜப்பான் அழகி நமீதா வின் இந்திர விழாவில் 




------------------


10. தன் தாய் வீட்டில் இருந்து வரப்போகும் மனைவிுக்கு வருத்தப்படாதே. வருவதற்கு முன்னரே எஞ்சாய் 




----------------------



Wanna Apple ???
Wanna Apple ???



11. டாக்டர். கனவுல வந்தது அனகோண்டா என்னை முழுங்க முயற்சி பண்ணுது..



ஆனா நான் தப்பிக்கிறேன்..ஆமா ரொம்ப குண்டா இருக்கீங்ளே 




----------------------


12. ஷார்ட் டைம் மெமரி லாஸ் நோய் வந்தாலும் மறந்துவிடாத லாங்க் டைம் மெம்மரி நம் காதல் 




------------------------


13. 4 வழக்குகளை கூட தாக்குப்பிடிக்க முடியாத விஜயகாந்த் CM ஆக முடியுமா? : அழகிரி - # நாலும் தெரிந்த நல்ல தம்பி சொன்னாசரியாத்தான் இருக்கும் 




--------------------------


14. ஊடல் பொழுதுகளில் ,பொய்க்கோபத்தருணங்களில் தன்னிடம் ஆண் கெஞ்ச வேண்டும் ,தாள் படிந்து கிடக்க வேண்டும் என்பது பெண்களின் குரூர எதிர்பார்ப்பு 



------------------------------


15. ஒரு ஆணின் காதல் அரசுப்பணி போல் நிரந் தரமானது.பெண்ணின் காதல் நிபந்தனைகளுடன் கூடிய தனியார் பணி போல 




-------------------------


16. ஆண்ட்ரியா = வெண்ணெய் தடவிய அரச இலை.



பூஜா = கண்ணில் ஒற்றிக்கொள்ளும் கற்பூர வெற்றிலை 



---------------


17. உள்ளங்கையை அழுத்துவதன் பொது அர்த்தம் நான் உன்னை என் உள்ளங்கையில் வைத்துத்தாங்குவேன் என்பதாகும் 




----------------------


18. காதலனைத்தவிர வேறு யாரையும் பெண் கவனிப்பதில்லை.எதிர் வரும் பெண்களை தன் காதலி வடிவில் ஆண் ரசிக்காமல் விடுவதில்லை 



------------------------


19. பெண்ணின் அதிகபட்ச தியாகம் காதலன் பெயரை த்தன் குழந்தைக்கு வைப்பது.ஆணின் குறைந்த பட்ச தியாகம் வாழ்நாள் முழுக்க முதல் காதல் நினைவில் இருப்பது் 




-----------------------


20. நீ என் அன்பை புறக்கணித்தபோது கூட என்னை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம் என எனக்குத்தோன்றியதே இல்லை 




---------------------------



எல்லா காலைகளும் நமக்காகவே விடிகின்றன.



இனிய காலை வணக்கம்.


21. தான் உண்மையாய்க்காதலித்த பெண்ணுக்கு துரோகம் இழைத்ததாய் ஆண்கள் வரலாற்றில் இல்லை. 




----------------------


22. டியர் .ஐ லவ் யூ. நீ ஓக்கே சொன்னா .நீ எனக்கு மிசஸ். நாட் ஓக்கே ன்னா ஐ மிஸ் யூ 







--------------------------



23. பாம்பையும் ,பணக்காரனையும் ஒரே இடத்தில் பார்த்தால் ஆண் பாம்பை அடிக்கப்பார்ப்பான்.பெண் பணக்காரனை மடக்கப்பார்ப்பாள் 




--------------------------


24. ஒரு ஏழையின் ப‌சியைவிட‌க் கொடுமையான‌து உன் நிராகரிப்பு.உன் நிராகரிப்பை விடக்கொடியது உன் அலட்சியம் ் 



---------------------------


25. அன்பே! நீ சாம்பார் வெச்சதா சொன்னாலும் அது சாதா ரசம் தான். 




-------------------------


26. மனைவி முட்டாள்தனமாய்க் கேள்வி கேட்கும்போது தான்  கணவன் கேனத்தனமாய் பதில் சொல்கிறான் 




------------------------------


27. புது வருஷத்தன்னைக்கு ஒரு புது பிகரோட கடலை போட்டா வருஷம் பூரா சாகுபடி அமோகமா இருக்குமாம் # சென்னிமலை சித்தர் வாக்கு 




-----------------------------


28.  அசினுக்காக பார்த்திருந்தா நீ யூத். நதியாக்காக பார்த்திருந்தா ஓல்டு #்.. M குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி! 




--------------------


29. உன் கன்னத்தில் இடும் ஒத்தட முத்தம் பஞ்சாமிர்தத்தை உள்ளங்கையில் ஊற்றி சுவைப்பது போல.இடம் பொருள் ஏவல் கவலைப்படாதது 



--------------------------



30. டியர் உன் புருவம் வில்லு மாதிரி இருக்கு. கண்ணு சுறா மாதிரி. 



ம்ககும்.போடா போக்கிரி .



---------------------


Photo



31. கமல் ( மைன்ட் வாய்ஸ் ) - நல்ல வேளை அனிரூத் நடிக்க வர்ல.நம்ம பொழப்புல மண்ணைபோட்டிருப்பாப்ல 




--------------------------


32. ஆர்மோனியம் ஸ்பெஷலிஸ்ட் - இளையராஜா .மவுத் ஆர்கன் ஸ்பெஷலிஸ்ட் - அனிரூத் # ஆண்ட்ரியா பாறைகள்் 



---------------------------


33. அனிருத  ஏன் யாருக்குமே பிடிக்கலை? 


 எப்போ அவர் ஆண்ட்ரியா கிட்டே லிப் லாக் பண்ணாரோ அப்பவே லாக் அவுட் 





-----------------------------


34. உங்களால் நல்ல படைப்பை உருவாக்க முடியாத சந்தர்ப்பங்களில் நல்ல படைப்பை ,படைப்பாளிகளை ஊக்குவிக்கலாம். 




-------------------------


35. ஆரோக்யமான நல்லசினிமாக்கள் மேலும் மேலும் உருவாக அலெக்ஸ்பாண்டியன் மாதிரி மாமூல் மசாலாக்குப்பைகள் மண்ணைக்கவ்வ வேண்டும் 




-----------------------



36. மேரேஜ் ஆகாதவங்களுக்கு புது வருஷத்துல புது சம்சாரம் கிடைக்க வாழ்த்துகள்.மேரேஜ் ஆனவங்க ஒழுங்கா பழைய சம்சாரத்தோடயே இருக்க வாழ்த்து ;-))) 



----------------------


37. விஸ்வரூபம் எத்தனை நாள் ஓடும்னு எதிர்பார்க்கறீங்க ? 




கமல் - படம் 2 1/2 மணி நேரம் ஓடும்.அதுதான் கன்பர்மா சொல்ல முடியும் 



----------------------------
 
டுடே டைம் பாஸ் @ டி வி

Tuesday, January 01, 2013

கோழி கூவுது ( 2012) - சினிமா விமர்சனம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigrvDA8pipmcMJ6cFzKDiBUghSF5CK-8tN6EVa1SXeKtT6tvBMBKs0hlBiStWyOM3YiQKV1H3QuqbobI8uKB5xYpYVhThNV5nhhsRdWnxGci1dh7CMZI_p7V53ZKM3fj5PxSjN2VF9JbE/s1600/Sreeja+In+Kozhi+Koovuthu+Movie+Wallpapers+New+Latest+Images+(10).jpga

கோழியைக்கண்டாலே அருவெறுப்பாய்ப்பார்க்கும் ஒரு குடும்பத்தில் கோழிக்குஞ்சை கொஞ்சினாலே பிடிக்காத பெற்றோருக்கு மகளாகப்பிறந்த ஹீரோயின்  கோழிக்குஞ்சுகளை விற்று வியாபாரம் செய்யும் ஹீரோவை காதலிக்கிறாள். அவங்க காதல் ல வெற்றி பெற்றாங்களா? இல்லை கூவிக்குச்சா? இதான் கதை


நாமக்கல் மாவட்டத்தில் கோழிகளைப்பிரதானத்தொழிலாக வைத்திருக்கும்  மண் மனம் சார்ந்த பதிவு என்ற வகையில் இது  தனித்துவம் உள்ள படம் தான் ஆனாலும் முன் பாதி முழுக்க நமக்குப்புதிய தளத்தை , கோழிக்குஞ்சுகள் வியாபாரிகள் நுணுக்கமான வாழ்க்கைமுறைகளைப்பதிவு செய்த இயக்குநர் பின் பாதியில் வணிக நோக்கம் கருதி சுப்ரமணிய புரம்  உட்பட பல வெற்றிப்படங்களின் கலவையான திரைக்கதையில் பயணித்த படியால் முழு வெற்றி பெற முடியவில்லை


ஹீரோவாக அசோக். காதலியின் முன் ,  ஊர் மக்களிடம் அடி வாங்கும் காட்சியில் கூனிக்குறுகும்போதும் , காதலுக்கு அவர் ஓக்கே சொன்னதும்  ஆடுகளம் தனுஷ் மாதிரி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும்போதும் சபாஷ் போட வைக்கிறார்.


http://tamil.cinesnacks.net/photos/movies/Kozhi-Koovuthu/kozhi-koovuthu-images-070.jpg



ஹீரோயின் புது முகம் ஸ்ரீ ஜா ரோஸ் . பேருக்கு தக்கபடி அவர் ரோஸ் கலர் இல்லை என்றாலும் மாநிற மரிக்கொழுந்து மாதிரி மின்னுகிறார். நல்ல உருண்டையான முகம். ஒப்பனை அதிகம் இல்லாமலேயே நம் உள்ளம் கவர் கள்வி ஆகிறார். ஆனால் கிராமத்து இளைஞர்களுக்கு  மட்டுமே பிடிக்கும் முக லட்சணம் மற்றும் உடல்வாகு .


 படத்தில் அனைவரையும் பின்னுக்குத்தள்ளி பாராட்டு பெறுபவர்கள் மூவர்

 ஹீரோயினின் சித்தப்பாவாக வரும் போஸ் வெங்கட் , நடிப்பு பட்டாசு . படம் முழுக்க வில்லன் வேலை , க்ளைமாக்ஸில் குணச்சித்திர நடிப்பு


ஹீரோவின் அம்மாவாக  அமரர் ரகுவரன் மனைவி ரோகினி . பண் பட்ட நடிப்பு சரன்யாவுக்கு டஃப்  ஃபைட் கொடுப்பார் என நம்பலாம் .


ஹீரோயினின் அப்பாவாக வருபவர் வருங்கால விஜயகுமார்


 மயில் சாமியும் அவ்வப்போது மொக்கை போடுகிறார்
http://www.cinespot.net/gallery/d/982539-1/Kozhi+Koovuthu+Movie+Stills+_86_.jpg



 இயக்குநர் பாராட்டு  பெறும் இடங்கள்



1. நிதானமாக கதை சொல்லும் பாங்கு , நாமக்கல் மாவட்ட கலாச்சாரம்  பதிவு செய்தது , எந்த இயக்குநரிடமும் அசிஸ்டெண்டாக ஒர்க் பண்ணாமல் நேரடியாக இயக்குநர் ஆகி இருக்கும் தமிழ் சினிமாவின்  5 வது இயக்குநர் ( 1. மணிரத்னம்  2 ஆரண்யகாண்டம்  இயக்குநர்  3 காதலில் சொதப்புவது எப்படி? இயக்குநர் 4  பீட்சா இயக்குநர்)



2. ஹீரோயினுக்கு தெப்பக்குளத்தில் ஒரு குளியல் சீன் வைத்தது  (  ரொம்ப சுத்த பத்தமானவர்னு காட்டனுமாம் )


3. ஹீரோவுக்கு பஞ்ச் டயலாக் , ஃபைட் எதுவும் வைக்காதது
http://www.tamilnow.com/movies/misc/kozhi-koovuthu-movie-shooting-spot/kozhi-koovuthu-movie-shooting-spot-stills-2376.jpg




இயக்குநரிடம் சில கேள்விகள்


1. சுடிதார் , மிடி , ஜீன்ஸ் பேண்ட் ரெடிமேடா எடுத்துட்டு வந்தாதான் வீட்டுக்கு வந்ததும் அதை போட்டுப்பார்ப்பாங்க , ஆனா படத்துல ஒரு சீன்ல ஹீரோயினுக்கு  புடவை வாங்கிட்டு வந்து அதை போட்டுப்பார்த்து சரியா இருக்கா? சொல்லுன்னு ஒரு சீன் வருது . புடவைல கூட XL , XXL  அப்டினு சைஸ் வந்துட்டுதா? என்ன? 


2.  ஊர்ல  1008 ரவுடிங்க இருக்கும்போது  போஸ் வெங்கட் தனது நீண்ட நாள் பகையாளீயை எப்படி நம்பி ஹீரோவை கொலை செய்யும் பணிக்கு நியமிக்கிறார்?



3. ஜாதகத்தில் நம்பிக்கை உள்ளவராக வரும் ஹீரோயினின் அப்பா ஜோசியர் சொன்னாரேன்னு தன் மகளை ஒதுக்கி வைப்பது நம்பும்படி இல்லை , பல காட்சிகளில் அவர் மகள் மீது பாசம் உள்ளவராகத்தான் வர்றார். 


4. ஹீரோயின் ஒருத்தனை லவ் பண்ற விஷயம் வீட்டில் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு ஆனா அப்பாவுக்கு மட்டும் தெரியல , அது எப்படி? அவர் என்ன ஃபாரீன்லயா இருக்கார்? அதே வீட்டில் தானே? 


5. போஸ் வெங்கட் தனது கொலை முடிவில் இருந்து மனம் மாறியதும்  அடியாளை தேடி கிள்ம்பறார் , 2  ரீல் தேடி முடித்த பின் அவருக்கு ஃபோன் பண்ண ட்ரை பண்றார் , அதை ஏன் முதல்லியே செய்யலை?


http://tamil.cinesnacks.net/photos/movies/Kozhi-Koovuthu/kozhi-koovuthu-images-065.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்

1. கடன் கொடுத்த எந்த நபரும் உருப்பட்டதா சரித்திரம் இல்லை


2. நாட்டான் கோழின்னா நாட்டுக்கோழின்னு அர்த்தம்


3. சாமி! ஒரு வேளை சாப்பாட்டுக்காக அப்பப்ப ஏதாவது சின்ன சின்ன தப்பு பண்ணுவோம், கண்டுக்காத



4. நான் சொன்னது பலிக்கலை  என் பேரு ராமராஜன் இல்லை

 டேய், உன் பேரு குமரேஷன் தானே?

 அதான் நானும் சொன்னேன், என் பேரு ராமராஜன் இல்லைன்னு , கம்முன்னு இரு



5. கோழிக்குஞ்சு என்ன சாப்பிடும்?

 கொத்து புரோட்டாவும், சில்லி சிக்கனும்



6 ஈமுக்கோழி தான் இப்போ ஃபேஷன்.. உன் சம்சாரம் பேரு கோமதி ,  கோமு  கோழிப்பண்ணைன்னு ஆரம்பி



7கோழிக்குஞ்சுக்கு எதுக்கு பிரியாணி அரிசு போடச்சொல்றே?


 கோழிகுஞ்சு பெரிசாகி எப்படியும் அதை பிரியாணி ஆக்கப்போறோம், அதுக்க் இப்ப இருந்தே ட்ரெயினிங்க்



8 இந்தக்கோழி உசிரோட இருக்குங்களா?


 உசுருக்கு கேரண்டி தர நாங்க என்ன கடவுளா?


9.  உன்னை வந்து வெச்சுக்கறேன்யா//


 என்னை ஆல்ரெடி 2 பேரு வெச்சிருக்கானுங்க ,பொடி போ


10. பசின்னு ஒண்ணு உருவாக்கப்படாம இருந்திருந்தா  யாரும் யாரையும் ஏமாத்தவே மாட்டாங்க.



11.  வெட்கத்தையும் அவமானத்தையும் பார்த்தா   ர்ங்க வீட்ல எல்லாரும் பட்டினியைத்தான் பார்க்க வேண்டி இருக்கும்



12. அன்றாடங்காய்ச்சிகளுக்கு அட்வைஸ் ஏறாது


13. சோறு போடும் நிலத்தை கூறு போடக்கூடாது 


 http://www.tamilnow.com/movies/gallery/kozhi-koovuthu/kozhi-koovuthu-3611.jpg



14.  பார்த்து பார்த்துக்காலை வெச்சா நாத்து நடற பாத்தில கூட காலை வைக்க முடியாது


15. லவ் பண்றவன் என்னைக்கு  பேசி இருக்கான்? கூட இருக்கற ஃபிரண்ட்ஸ் தான்  பேசுவாங்க.



16. கோபம்கறது தீ மாதிரி , பத்த வெச்சவனையும் சேர்த்து அழிக்கும்

17.  ஏப்பா, 3 பேருக்கும் டீ தாப்பா

 3 பேருக்கும் பால் தான்


 டீ யா?  பாலா?


 போகப்போக நீயே தெரிஞ்சுக்குவே


18. கொடுத்த பணத்தை திருப்பி வாங்கறதுக்குக்கூட கை நீட்ட மாட்டான் இந்த அய்யனார்


19. அம்மா கிட்டே சொல்ல முடியாத அளவுக்கு அசிங்கத்தை பண்ணிட்டு வந்து நிக்கறியா?


20. கோழி விக்கறவன் கூடை பின்ற பொண்ணாப்பார்த்து ஆசைப்பட வேண்டியதுதானே?


21. பிடிக்காததைச்செய்யத்தான் யோசிக்கனும், பிடிச்சதைச்செய்ய ஏன் யோசிக்கனும்?


22. பக்கத்துப்பட்டி ஆடு பாதை மாறிப்போனா என்ன? வாய்க்கால்ல போனா என்ன?ன்னு அசால்ட்டா விட்டூட்டீகளோ?


23. நாங்க 2 நாள்ல சாகற கோழிக்குஞ்சுகளையே ஒரு வாரம் உயிர் வாழ வைக்கற ஆளுங்க , கூடவே இருக்கும் நண்பனை போட்டுத்தள்ளுவோம்னு எப்படி நினைச்சீங்க?  



எதிர்பார்க்கும் விகடன் மார்க் - 40 


 எதிர்பார்க்கும் குமுதம் ரேட்டிங்க் -  சுமார் 


 ரேட்டிங்க்  6 / 10 



http://www.cinepicks.com/tamil/gallery/kozhi-koovuthu/kozhi-koovuthu-photos-8766.jpg



 சி.பி கமெண்ட் - முதல் பாதி மண் மணம் பின் பாதி  திரைக்கதையில் இயக்குநரிட்ம் குழப்ப மனம்.காதலர்கள் மட்டும் பார்க்கலாம். ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணா தியேட்டரில் 7 பேருடன் இந்த ஏழரையை பார்த்தேன் . 



நெய்வேலி

நான் கண்ட ஊரு!





நெய்வேலி

நெய்வேலியில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற ஆசிரியை நான். நாற்பது வருடங்களாக நெய்வேலியில் வசித்து வருகிறேன். அதன் சிறப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன்.
* கடலூர் மாவட்டத்தில் அருட்பிரகாச வள்ளலார் வாழ்ந்த வடலூருக்கு வடமேற்கே மரங்கள் சூழ்ந்த அழகிய நகரம் நெய்வேலி டவுன்ஷிப்.
* இருபத்து நான்கு மணி நேரமும் மின்சாரமும், தண்ணீரும் தடையின்றி கிடைக்கக்கூடிய ஒரே ஊர் எங்கள் நெய்வேலியே!
* ஜம்புலிங்க முதலியார் என்ற மிராசுதார் தன்னுடைய நிலத்தில் ஆழ்க்குழாய் கிணறு தோண்டிய போது, நீர் கரிய நிறத்தில் வந்ததை அரசுக்குத் தெரிவிக்க அதன் அடிப்படையில் உண்டானதே பொன்விழா கண்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்.

* அவர் நினைவாக இங்குள்ள ஒரு பிரதான சாலைக்கு ஜம்புலிங்க முதலியார் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
* காமராஜர் முதலமைச்சராக இருந்த போது இந்தியப் பிரதமராக இருந்த பண்டித ஜவாஹர்லால் நேருவின் பொற்கரங்களால் அடிக்கல் நாட்டி துவக்கப்பட்டது இந்த நெய்வேலி.
* சென்னையிலிருந்து சிதம்பரம், கும்பகோணம் பேருந்து மார்க்கமாகச் செல்பவர்கள் பண்ருட்டி தாண்டியவுடன் சாலையின் வலது புறம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என்ற அசோகச் சக்கரத்துடன் கூடிய பெரிய வளைவைக் காணலாம்.
* இரண்டு பக்கமும் அழகிய தார்ச்சாலைகள் நடுவில் பசுமையும், குளுமையும் கொண்ட பூ மரங்கள் என காண்போர் வியக்கும் வண்ணம் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட அழகிய நகரம் நெய்வேலி.
* இரண்டு வருடங்களுக்கு முன்பே பிளாஸ்டிக் தடைசெய்யப்பட்டு விட்டதால் நகரம் மிகவும் தூய்மையாக இருக்கும்.

* நகரம் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு வட்டத்தின் மையத்திலும் ஒரு பள்ளிக்கூடம் அமைந்திருக்கும்.
* இங்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் பணிபுரிவதால் நெய்வேலி டவுன் ஷிப்பைமினி இந்தியாஎன்றே சொல்லலாம். அவர்கள் தங்கள் கலாசார விழாக்களைக் கொண்டாட தெலுங்கு சமிதி, கன்னட சங்கம், கலாலயா போன்ற அமைப்புகளும் உள்ளன. ‘காவேரி லேடீஸ் கிளப்என்ற மாதர் சங்கமும் துடிப்பாகச் செயல்படுகிறது.
* மத்திய அரசு நிறுவனம் என்பதால் பெயர்ப் பலகைகள் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மும்மொழிகளிலும் எழுதப்பட்டிருக்கும்.

* தொழிலாளர்களின் பணித்தகுதிக்கு ஏற்ப குவார்டர்ஸ் கட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு வீடும் மரங்களால் சூழப்பட்டிருக்கும். மா, பலா, தென்னை, எலுமிச்சை மரங்கள் இல்லாத வீடுகளே கிடையாது.
* பசுமைச் சூழலுக்கான தேசிய சுற்றுச் சூழல் விடுதிகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது. நவரத்னா விருதினையும் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
* தமிழக அரசின் உதவியுடன் மேல்நிலை, உயர்நிலை துவக்கப் பள்ளிகளை நிறுவனம் நடத்துகிறது. இது தவிர, ஆங்கில வழிப் பள்ளிகளும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயாவும் உண்டு.
* பெரிய நூலகம் ஒன்று நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. அதில் சிறுவர்களுக்கான தனிப்பிரிவு இயங்குகிறது.

* நகரத்தின் மையத்தில் பாரதி விளையாட்டரங்கம் உள்ளது. இங்கு அகில இந்திய அளவில் போட்டிகள் நடைபெறும். குடியரசு தின, சுதந்திர தின நாட்களில் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக நடக்கும்.
* காலாண்டு, அரையாண்டு, கோடை விடுமுறை நாட்களில், மாணவ, மாணவிகளுக்கு அனைத்து விளையாட்டுகளிலும் இலவசப் பயிற்சி அளித்து பரிசும், சான்றிதழும் கொடுத்து மாணவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்வார்கள்.
* விளையாட்டு அரங்கிற்கு அருகில் லிக்னைட் ஹால் உள்ளது. இங்கு குழந்தைகள் தினவிழா. தேசிய பாதுகாப்பு வார விழா போன்ற விழாக்கள் நடைபெறும். வருடந்தோறும் ஜூலை மாதத்தில் மாபெரும் புத்தகக் கண்காட்சியும் இங்குதான் நடைபெறும்.
* நெய்வேலி மக்கள் நன்கு படித்தவர்களாகவும், கலை, விளையாட்டுகளில் ஆர்வ மிக்கவராகவும் இருப்பர்.

* இந்தக் கடைகளுக்கு மத்தியில் கோல்டன் ஜூப்ளி பார்க், மினி சோலையாகக் கண்களுக்கு விருந்தளிக்கும். இங்கு குழந்தைகளுக்கான விளையாட்டுச் சாதனங்கள் ஏராளம். பெரியவர்களுக்கான நடைப்பயிற்சி பாதையும் உண்டு. வட்டம் 8ல் இருக்கும் நேரு நூற்றாண்டு விழா பூங்காவும் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது.
* வட்டம் 24-ல் தொன்மை வாய்ந்த மாதா கோயில் ஒன்று உள்ளது. நகரின் கிழக்கே அமைந்துள்ள வேலுடையான்பட்டு முருகன் கோயிலும் பழமைவாய்ந்தது. இங்கு பங்குனி உத்திரத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான காவடிகளும் அன்னதானமும் பக்தர்களை வசீகரிக்கும்.
* வட்டம் 16-ல் அமைந்துள்ள நடராஜர் கோயிலில் 13.5 அடி உயரமுள்ள ஆசியாவிலேயே பெரிய உயரமான நடராஜர் விக்ரகம் உள்ளது. இந்தக் கோயிலில் ஆலய ஓதுவாரால் இலவச தேவார வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
* கிறிஸ்தவ, முஸ்லீம் அன்பர்களுக்கான சர்ச்சுகள், மசூதிகளும் இங்கு உண்டு.

* தொழிலாளர்களின் நலனுக்காகப் பொது மருத்துவமனையும் ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றும் சிறப்பாகச் செயல்படுகின்றன. இங்கு யோகாசன வகுப்புகள் நிறுவனத்தால் இலவசமாக நடத்தப்படுகின்றன.
* நிர்வாகம் ஆங்காங்கே கட்டியுள்ள திருமண மண்டபங்களில் தொழிலாளர்கள் குறைந்த கட்டணத்தில் குடும்ப விழாக்களை நடத்திக் கொள்ளலாம்.
* இங்குள்ள தெருக்களின் பெயர்கள் மிகவும் வித்தியாசமானவை. மாதிரிக்குச் சில: அப்பர் சாலை, சுந்தரர் சாலை, வேலூர் சாலை, மைசூர் சாலை, மயில் தெரு, மான் தெரு, மண்வெட்டி தெரு, கடப்பாறை தெரு, தென்னை வீதி, பனை வீதி.
* நெய்வேலி டவுன்ஷிப்புக்குள் அமைந்துள்ள மத்தியப் பேருந்து நிலையம் மிகவும் சிறிதாகத்தான் இருக்கும். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது போல அனைத்து ஊர்களுக்கும் பேருந்து வசதி உண்டு.
* பசுமையும், குளுமையும் நிறைந்த எங்கள் நெய்வேலியின் அழகிய தார்ச்சாலைகளில் பயணிப்பதே தனி சுகம். அதற்காகவாவது நெய்வேலிக்கு வருகை தாருங்கள்.
படங்கள் உதவி: விஜய், இந்து, அபி


நன்றி - கல்கி