Thursday, January 03, 2013

INCEPTION - சினிமா விமர்சனம்


நம்ம ஊர் கே பாக்யராஜ்க்கும் ஹாலிவுட் கிறிஸ்டோபர் நோலனுக்கும் ஒரே வித்தியாசம் தான். அவர் திரைக்கதை மன்னன். சாமான்ய ஜனங்களுக்கும் எளிமையா கதை சொல்லி  ரசிக்க வைப்பவர். இவர் குழப்பி அடிக்கும் திரைக்கதையில் தன் மேதா விலாசம் காட்டும் திறமைசாலி. மெத்தப்படித்தவர்களுக்கான படங்களை எடுப்பவர் .







படத்தோட கதை என்ன? 2 போட்டி கம்ப்பெனிகள் . நம்ம தமிழ் நாட்டில் ஜெ , கலைஞர் மாதிரின்னு வெச்சுக்கலாம். கம்பேனி ஜெ என்ன நினைக்குதுன்னா கலைஞர் கம்பெனிதான் நமக்கு போட்டி . அங்கே மு க ஸ்டாலின் கலைஞர் கூட கொஞ்சம் மனஸ்தாபமா இருக்கார் , அவரை தூண்டி விட்டு குடும்பத்துல குழப்பத்தை ஏற்படுத்தி  வாரிசு உரிமைப்பிரச்சனை அல்லது கம்பெனிக்கு நான் தான் ஓனர் அப்டினு ஒரு போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தி பலவீனப்படுத்தினா தான் நெம்பர் ஒன் ஆகிடலாம்னு நினைக்கறவர் ஜெ கம்பெனி .





அதுக்காக ஹீரோவை நியமிக்கறாங்க . நம்ம ஹீரோ யாரு? அவர் ஒரு ஆர்க்கிடெக். அது போக கனவுகளை கண்ட்ரோல் பண்ணுபவர்.அதாவது ஒரு ஆள் தூக்கத்துல இருக்கும்போது கனவு காண்பார் இல்லையா? அப்போ அவர் சிந்தனைல போய் அவர் ஐடியாக்களை திருடுபவர் , சில ஐடியாக்களை எதிரியின் மூளையில் விதைத்து ஆட்டுவிப்பவர். ஹிபனாடிசம் மாதிரி





இப்போ இவர் வேலை என்னான்னா ஸ்டாலின் கனவுல போய் இவர் நினைக்கும் சில நினைவுகளை விதைச்சுட்டு குடும்பத்துல குழப்பத்தை ஏற்படுத்தனும்.



இதை ஏன் இவர் பண்றார்னு நியாயக் கற்பிக்க ஒரு ஃபிளாஸ்பேக். ஹீரோவோட இரு குழந்தைகளை வில்லன் கடத்தி வெச்சு மிரட்றான். குழந்தைகளை காப்பாத்தனும்னா இந்த பிராஜக்ட்டை அவன் பண்ணியே ஆகனும்



ஹீரோவுக்கு ஒரு சம்சாரம். அவரு ஹீரோவோட கனவு வேட்டை பிராஜக்ட்டால மன நிலை பாதிக்கப்பட்டு ஒரு குழப்பமான சூழல்ல தற்கொலை செஞ்சவரு.





இப்படியே விட்டா கதை ட்ரையா இருக்குமேன்னு இந்த பிராஜக்ட் செய்ய ஹீரோவுக்கு உதவியா ஒரு 75 மார்க் ஃபிகரு உதவிக்கு, அதுதான் ஹீரோயின்.



எம் ஜி ஆர் பட ரேஞ்சுக்கு 3 மணி நேரத்தையும் தாண்டி படம் ஓடிட்டே இருக்கு





பொறுமையா பார்க்கனும். குறுக்கே ஃபோன் வந்துச்சுனு எந்திரிச்சுப்போய்ட்டு வந்தா படம் புரியாது 



http://cdn1.screenrant.com/wp-content/uploads/Inception-Leonardo-DiCaprio-Marion-Cotillard.jpg





இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்





  1. ஹீரோ ஹீரோயின் 2 பேரும் கனவு தேசத்துல வாக்கிங்க் போகும்போது கட்டிடங்கள் எல்லாம் என்னமோ பேப்பர் கட்டு மாதிரி மடங்கும் சீன் கிராஃபிக்ஸ் கலக்கல்





  1. படத்துல யாரும் குறை சொல்ல முடியாதபடி திரைக்கதை அமைத்த சாமார்த்தியம் ( நல்லா ஃபுல்லா புரிஞ்சாத்தானே குறை சொல்ல முடியும் ?)





  1. ரசிகர்களுக்கு இது முற்றிலும் புதிய களம். சைக்காலஜி , சைக்கோ சம்பந்தப்பட்ட படங்கள் நிறைய பார்த்திருந்தாலும் கனவு சமப்ந்தப்பட்ட வித்தியாசமான கோணம் அனுபவம் புதுமை





  1. ஹீரோ அவர் சம்சாரம் , ஹீரோயின் 3 பேர் சமப்ந்தப்பட்ட காட்சிகள் பொழுது போக்குக்கு . நல்லாருக்கு





  1. ஒளிப்பதிவு , லொக்கேஷன் செலக்சன், வசனங்கள் நீட் 



 http://www.fansshare.com/photos/marioncotillard/marion-cotillard-hot-1212295991.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்





  1. ஹீரோயின் தற்கொலை பண்ணிக்க கட்டிடத்தின் விளிம்பில் நிற்கிறார். அப்போ ஒரு வசனம் “ நீங்களும் என் கூடவே வந்துடுங்கன்னு மனைவி சொல்றா. ஹீரோ “ குதிக்காதேன்னு பதட்டமா சொல்றார். இந்த சீன்ல ஈசியா ஹீரோ ஹீரோயினை காப்பாத்தி இருக்க முடியும். அங்கேயே இரு, இதோ நானும் அங்கே வந்துடறேன், 2 பேரும் சேர்ந்தே குதிப்போம் அப்டினு சொல்லி பிரெயின் வாஷ் பண்ணி கிட்டே போய் காப்பாத்தி இருக்கலாம், சரி தொலையுது , புது ஜோடி கிடைக்கட்டும்னு விட்ட மாதிரி இருக்கு . அந்த சீன்ல ஹீரோயின் தற்கொலை பண்ணும்போது தனிமையில் இருந்தா அப்டினு காட்டி இருக்கலாம். ஏன்னா ஹீரோ முன்னால ஹீரோயின்  தற்கொலை பண்ணும் காட்சி வெச்சுடா ஆடியன்ஸ் மனசுல எப்பவும் ஹீரோ மேல ஒரு குற்ற உணர்ச்சி வந்துட்டே இருக்கும்





2.  ஹீரோவுக்கு உதவியா வர்ற பொண்ணு நாசர் மாதிரி எதுக்கு தேவை இல்லாம ஹீரோவோட பர்சனல் மேட்டர்ல தலையிடுது. சரி  ஹீரோ மேல லவ் போலன்னு நினைச்சா அதுவும் இல்லை . சும்மா டெம்ப்போ ஏத்தவா? 


3. ஹீரோவோட மனைவியின் தற்கொலைக்கு ஹீரோ தான் காரணம். தற்கொலைக்கு தூண்டிய வழக்குல அவருக்கு ஏன் தண்டனை கிடைக்கலை? 2 வதா வர்ற ஹீரோயின்  அது பற்றிக்கண்டுக்கவே இல்லை , போதாததுக்கு அடிக்கடி “ உன் மனைவி டெத்துக்கு நீ காரணம் இல்லை”ன்னு ஆறுதல் வசனம் வேற 









 http://www.movielist.tv/blog/images/inception-movie-photos-03.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்





1. கனவுகள் இவன் பேரைக்கேட்டாலே  கதி கலங்கி நிக்கும், கனவுகளை வேட்டையாடுபவன், தன் கட்டுக்குள் கொண்டு வருபவன்





2. உலகத்துலயே அபாயகரமான விஷயம் எது?





 வைரஸ்? எய்ட்ஸ்? பாக்டீரியாட்யூமர்?



 நோ.. ஐடியா. ஒரு ஐடியா  உங்க வாழ்க்கையையே மாத்திடும் , உள்ளுக்குள்ளேயே  இருந்து கொல்ற சக்தி ஐடியாவுக்கு உண்டு







3. கனவு காணும்போது  ஒருவனோட சுய நினைவு கம்மியா இருக்கும்





4. பிஸ்னெஸ்மேனோட இலக்கணம் என்னான்னா கணக்கற்ற அளவில் சொத்து சேர்த்து தன் எல்லா ரகசியங்களையும்  வைப்பாட்டி கிட்டே சொல்றதுதான்









5.  என் கனவுல நான் வெச்சதுதான் சட்டம்





 ஆனா இது உங்க கனவு இல்லை, என் கனவு





6.  நீ அவனை போட்டுத்த்ள்ளப்போறியா?





 செத்த பாம்பை அடிச்சு எனக்குப்பழக்கம் இல்லை







7.  ஒருத்தரோட ஆழ்மனசுல இருந்து ஒரு ஐடியாவை நமக்கு பிடிச்ச மாதிரி  உருவாக்கனும், அதான் என் பிளான்



 புரியலையே?



 யானையை மனசுல நினைக்காதீங்கன்னு உங்க கிட்டே நான் சொன்னா நீங்க என்ன செய்வீங்க?



 யானையையே நினைச்சுட்டு இருப்பேன்





 அப்போ நான் ஜெயிச்சேன்னுதான் அர்த்தம், உங்க நினைவு இப்போ என் கட்டுப்பாட்டில்







8.  ஒருத்தனோட ஐடியாவைத்தூக்கி  இன்னொருத்தன் மூளைல வைப்பது சாதா விஷயம் இல்லை





9.  எனக்கு ஆபஹ்ட்து எல்லா இடத்துலயும் இருக்கும், போற பக்கம் எல்லாம்







10. பொம்மையும் , ஆசைப்பட்ட பொருலை மட்டும் வாங்கித்தா மட்டும் குழந்தைங்க ஒரு போதும் அப்பாவை உணர முடியாது , சமீபம் வேணும்.





11. எனக்கு உங்க கிட்டே ஒரு உதவி வேணும்



 என் கிட்டே இருக்கும்  ஒரே ஒரு  பி ஏ வை உனக்கு தரச்சொல்றே..





12 . பெரிய  பெரிய ஆராய்ச்சியாளர்கள்  என்ன சொல்றாங்கன்னா ஒருத்தரோட  மூளை அவர் விழித்திருக்கும்போது  வேலை செய்வதை விட  தூங்கிட்டு இருக்கும்போதுய்தான் நல்லா வேலை செய்யுமாம்







13.  என்னைக்குமே ஒரு கனவோட நடுப்பகுதிதான்  எல்லாருக்கும் நினைவுக்கு வரும் ஓப்பனிங்க் நோ படி நோ





14.  என் ட்ரீம் ஷேர் பண்ணிக்கறியா?





15. ஆர்க்கிடெக்க்கு இதுல என்ன வேலை?



 கனவை டிசைன் பண்ண ஒரு ஆள் வேணாமா


http://cdn02.cdn.justjared.com/wp-content/uploads/headlines/2009/08/leonardo-dicaprio-ellen-page-inception.jpg?1







16. நிஜ வாழ்வுல  5 நிமிஷம் = கனவுல  1 மணி நேரம்







17. என் உள்ளுணர்வுகளை எப்பவும் என்னால கட்டுப்படுத்த முடியாது





18. களவாடுனா மட்டும் போதாது , நடிச்சு ஏமாத்தவும் தெரியனும்





19.  உலகத்துலயே நெம்பர் ஒன் கம்ப்பெனி என்னுதாத்தான் இருக்கனும், என் எதிரியை நான் குழப்பனும்







20. அவர் பாலிசி என்ன தெரியுமா? எந்தப்பிரச்சனையிலும் மாட்டாம இருப்பது





இதை அவர் வாயால சொல்ல வைக்க முடியுமா?





21. நான் என்ன நினைக்கறேனோ அதை அவனுக்கே தெரியாம  அவன் நினைவில் விதைக்கனும்





22. சுய நினைவில் எந்தப்பையனும் தன் சொந்த அப்பாவுக்கு எதிரா  எதுவும் செய்ய மாட்டான்







23. நல்ல உணர்ச்சி எப்பவும் கெட்ட உணர்ச்சியை  பின்னுக்குத்தள்ளும்





24. நீ ஏன் எப்பவும் கனவுல அவளை நினைக்கறே?





 ஏன்னா அவ கனவுல மட்டும் தான் வருவா , என் காதலை எப்படி என்னால அழிக்க முடியாதோ அதே மாதிரி  என் ஞாபகங்கள் பூரா  அவ மட்டும் தான் ஆக்ரமிச்சுட்டு இருக்கா







25. இங்கே என்ன பண்றே?





 என் பேரு.......





உன் பேரைக்கேட்கலை.. நீ இங்கே என்ன பண்றே? ன்னு கேட்டேன்





26. நீ என்ன தெரிஞ்சுக்கனும்?



 எனக்கு சொந்தமானதை உனக்கு சொந்தமாக்கிக்க ட்ரை பண்றியா?ன்னு தெரிஞ்சுக்கனும்





27. உங்களைப்புரிஞ்சவங்க  உன் கூட இருப்பது நல்லது







28. ஓ சி ல கிடைச்சா லிட்டர் கணக்குல சரக்கு அடிப்பியோ?







29. கனவுல யாராவது செத்துட்டா  மறுபடியும்  நினைவு உலகத்துக்கு போக முடியாது , மீளா மாயச்சுழல்ல சிக்கிக்க வேண்டியதுதான்







30. கொஞ்சம் ஜாக்கிரதையா இரு , சிரிச்சு சிரிச்சே அவ ஆளை மயக்கிடுவா 


http://fc00.deviantart.net/fs71/f/2011/145/6/f/inception___wallpaper_by_rafaelaveiro-d3h8aeu.jpg



சி.பி கமெண்ட் - வித்தியாசமான KNOT  என்பதால் எல்லாரும் பார்க்கலாம்.நோல்னின் மைல் கல் படங்களில் இது முக்கியமான படம்  .ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் 2 வருஷம் முன் பார்த்தேன்.

ரேப் செய்யப்பட்ட புதுவை + 2 மாணவி பேட்டி

புதுவை: மயக்கமருந்து கொடுத்து என்னை கற்பழித்தனர் - டாக்டரிடம் மாணவி கதறல்


 புதுச்சேரி, ஜன. 3-

கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு புதுச்சேரி அரசு மகளிர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டரிடம் மாணவி கூறியதாவது:-

நான் 1-ந்தேதி வில்லியனூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது பஸ் கண்டக்டர் முத்துகுமரன் என்னிடம் உன் அம்மாவுக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது. உடனே வா என்று கூப்பிட்டார். எனவே அவருடன் நான் சென்றேன். என்னை பஸ்சில் அழைத்து சென்றார். அப்போது ஏதோ ஒரு வகை பொடியை முகத்தில் வைத்தார். அதன்பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

இரவு ஒரு குடிசை வீட்டில் இருந்தேன். அங்கு கண்டக்டர் முத்துகுமரன் என்னை கற்பழித்தார். இதனால் நான் பாதி மயக்கத்தில் இருந்தேன். அப்போது இருட்டு அறைக்குள் இழுத்து சென்றனர். அங்கு 2 பேர் இருந்தனர். அதில் ஒருவன் என்னை கற்பழித்தான்.



அதன்பிறகு காலையில் விழுப்புரம் பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். நான் என் பெற்றோருக்கு தகவல் கொடுத்தேன். இவ்வாறு அவர் டாக்டரிடம் கூறியதாக மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். கஸ்தூரி தெரிவித்தார். மேலும் டாக்டர் கஸ்தூரி கூறும்போது "மாணவிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் உடல் நலத்துடன் இருக்கிறார். அவருக்கு உடலில் வேறெங்கும் காயம் இல்லை என்றார்". 


 புதுவை மாணவி பாலியல் பலாத்காரம்: 2 பேர் கைது - என்ஜினீயரிங் மாணவர் தலைமறைவு

புதுச்சேரி, ஜன. 3-

புதுவை திருபுவனை அருகே உள்ள கொத்தபுரி நத்தத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் சுந்தரி வயது 17. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் புதுவையில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளி முடிந்ததும் அவர் டியூசனுக்கு சென்று வந்தார். நேற்று முன் தினம் புத்தாண்டு தினத்தில் அவர் டியூசனுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதுபற்றி திருபுவனை போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை விழுப்புரம் பஸ் நிலையத்தில் சுந்தரி மயங்கிய நிலையில் கிடந்தார். போலீசார் அவரிடம் விசாரித்து பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பெற்றோர் காரில் சென்று அவரை அழைத்து வந்து புதுவை அரசு பெண்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு பரிசோதனை செய்தார்கள். அதில் சுந்தரி கற்பழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து திருபுவனை போலீசார் கற்பழிப்பு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் மாணவியை பஸ் கண்டக்டர் ஒருவர் கடத்தி சென்றது தெரியவந்தது. சுந்தரி தினமும் திருபுவனையில் இருந்து புதுவை பள்ளிக்கு தனியார் பஸ்சில் வருவார். இந்த பஸ்சில் கண்டக்டராக இருந்த முத்துக்குமரன் (23) என்பவருடன் சுந்தரிக்கு அறிமுகம் இருந்தது. முத்துக்குமாரின் சொந்த ஊர் திருவெண்ணை நல்லூர் காந்திகுப்பம் காலனி ஆகும். முத்துக்குமரன் சுந்தரியை அழைத்து சென்று கற்பழித்தது தெரிய வந்தது.

சுந்தரியை அவர் திருவெண்ணைநல்லூருக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ஒரு குடிசை வீட்டில் வைத்து அவரும், அவருடைய நண்பர் அதே ஊரை சேர்ந்த வெங்கடாசலபதி (23) என்பவரும் கற்பழித்துள்ளார். மேலும் ஒருவரும் கற்பழிப்பில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து போலீசார் முத்துக்குமரன், வெங்கடாசலபதி இருவரையும் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகிறார்கள். அவருடைய பெயர் விபரம் இதுவரை தெரியவில்லை.

கற்பழிப்பில் ஈடுபட்ட வெங்கடாசலபதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவராவார். அவர் அரசூரில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். முத்துக்குமரன் சுந்தரியிடம் உனது தாயாருக்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறி அழைத்து சென்று இந்த பாதக செயலில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவெண்ணைநல்லூருக்கு பஸ்சிலேயே அழைத்து சென்றதாகவும், பின்னர் கற்பழித்துவிட்டு மீண்டும் பஸ்சிலேயே அழைத்து வந்து விழுப்புரம் பஸ் நிலையத்தில் விட்டு சென்றதாகவும் தெரிகிறது. 



நன்றி - மாலை மலர் 

புதுவையில் பிளஸ் 2 மாணவி பலாத்காரம்: மக்கள் போராட்டம்; பதட்டம் 
Posted Date : 12:55 (03/01/2013)Last updated : 13:01 (03/01/2013)
புதுச்சேரி :புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அங்கு  பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,அம்மாணவியின் தந்தை தீக்குளிக்க  முயற்சித்ததால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் மாணவிக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே  உலுக்கியபோதிலும்,பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்  கதையாகவே உள்ளது.

புதுவை திருபுவனை பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரின்  மகள் தேவி (வயது 17,  பெயர் மாற்றப்பட்டுள்ளது). புதுவை நகரில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து  வந்தார். புதுவையில் டியூசனும் படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை டியூசன் செல்வதாக கூறிவிட்டு சென்றார்.ஆனால் இரவு  வரை வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் விழுப்புரத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட அவர், தன்னை தனியார்  பஸ் கண்டக்டர் முத்து உள்ளிட்ட 3 பேர் தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.



இதுதொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து  குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கண்டக்டர் முத்து மற்றும் வெங்கடாச்சலம் ஆகிய இருவரை கைது செய்தனர்.

டெல்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் போராட்டம் அடங்குவதற்குள், புதுச்சேரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை  ஏற்படுத்தியுள்ளது.இதனால் புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள்  வெடித்துள்ளன.



இந்நிலையில் பாதிப்புக்குள்ளான மாணவியின் தந்தை நாகரஜ் இன்று திடீரென சாலைக்கு  ஓடிவந்து தம்மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.அவரை அங்கு நின்றவர்கள் ஓடிவந்து, அவரை தடுத்து நிறுத்தினர்.இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.



நன்றி - விகடன்



செய்தி 3


கேரளா: மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு தூக்குத் தண்டனை! 

 திருவனந்தபுரம்: கேரளாவில் 10 ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு தூக்குத் தண்டனை விதித்து திருவனந்தபுரம் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பளித்துள்ளது.

திருவனந்தபுரத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை, ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து,கொன்றுவிட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.


இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம்,ஆட்டோ ஓட்டுனர் மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை குற்றச்சாட்டு நிரூபணமானதால்,அவருக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இசை - 'படத்தோட சப்ஜெக்ட் இளையராஜா - ரஹ்மான் இடையிலான மோதல் கதையா? - எஸ் ஜே சூர்யா சூசக பேட்டி

http://www.mirchi9.com/movienews/wp-content/uploads/2012/06/Puli-in-tamil2.jpg 


அவர் இல்லை... இவர் இல்லை... இது எவர்க்ரீன் கதை!"


எஸ். கலீல்ராஜா


எம் ஆடியோ கீ போர்டு, ஆப்பிள் லேப்டாப், போஸ் ஸ்பீக்கர் மூன்றையும் இணைக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. கறுப்பு வெள்ளைக் கட்டைகளில் விரல்கள் விளையாட, டியூன் போடுகிறார். முன் நெற்றி மறைத்து விழும் முடியை ஒதுக்கி, கண்கள் சொருகி லயித்து பாடலை ஹம் செய்கிறார். லயம் தப்பும்போது. 'ஒன் மோர் போலாமா?’ என்கிறார் 'இசை’ பட இசையமைப்பாளர் எஸ்.ஜே.சூர்யா. கண்கள் விரிய, 'இருக்கு... ஆனா இல்லை’ என்று ப்ளேபாய் டயலாக் சொன்ன எஸ்.ஜே.சூர்யாவா இது?


http://www.cinegoer.com/navigation/actress/savitri/savithri-hot-pics-in-isai-tamil-movie-1-15.jpg


'உங்க தன்னம்பிக்கை தெரிஞ்ச விஷயம்தான். அதுக்காக உங்க படத்துக்கு நீங்களே இசை அமைக்கிறீங்களே?''   




 ''படம் இசை சம்பந்தப்பட்டது. ரஹ்மான் சார்கிட்ட கதை சொன்னேன். 'இசையமைக்கிறது கஷ்டமான விஷயம் இல்லை. ஆர்வம் இருந்தா, இந்தப் படத்துக்கு நீங்களே இசையமைக் கலாம்’னு சொன்னார். முயற்சிக்கலாம்னு முறைப்படி இசை கத்துக்கிட்டேன்.



 ரஹ்மான் சார்கிட்டே என்னைப் பத்தி கேட்டப்ப, 'நடுக்கடல்ல பிடிச்சு சூர்யாவைத் தள்ளிவிட்டாலும் நீந்தி வந்திருவார். அந்தத் தைரியத்துல மியூஸிக் பண்ணச் சொன்னேன்’னு சொல்லியிருக்கார். அவரோட நம்பிக்கையைக் காப்பாத் தணும். மியூஸிக் பண்ண முன்னே மாதிரி கீ போர்டு, வயலின், தபேலா, கிடார்னு தனித் தனி வாத்தியங்கள் இப்போ தேவையில்லை. அட! நோட்ஸ்கூட எழுத வேண்டியது இல்லை. எல்லாத்தையும் இந்த ஒரு லேப்டாப் பார்த்துக்கும். உலகம் எங்கயோ போய்ட்டு இருக்குங்க!''

 http://tamilko.com/wp-content/gallery/isai-savithri/savithri-isai-hot-2.jpg

''படத்தோட சப்ஜெக்ட் இளையராஜா - ரஹ்மான் இடையிலான மோதல்னு சொல்றாங் களே... உண்மையா?''



''இரண்டு இசை மேதைகளைப் பற்றிய கதை. அவ்வளவுதான். ஆண்டு அனுபவிச்ச ஒரு இசையமைப்பாளருக்கும் திறமையோடு வர்ற ஒரு  இளைய இசையமைப்பாளருக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள்தான் கதை. தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்... பல தலைமுறை இசையமைப்பாளர்களைத் தமிழ்நாடு பார்த்திருக்கு. இந்தத் தலைமுறைக்கு இளையராஜா சார், ரஹ்மான் சார்தான் பரிச்சயம். அதனால அப்படித் தோணலாம். 



ஐடியாக்கள் எப்பவும் எல்லார்கிட்டயும் இருக்கும். அதைக் கொடுக்கும் விதம்தான் ஆளாளுக்கு மாறும். கால மாற்றங்களுக்கு ஏற்ப நாம அப்டேட் டடா இருக்கோமா இல்லையாங் கிறதைப் பொறுத்து நம்ம வெற்றி, தோல்வி அமையும். அதைத்தான் 'இசை’யில் சொல்லியிருக்கேன். நான் இரண்டு இசையமைப்பாளர்கள் பத்திச் சொல்லியிருக்கேன். இதில் நீங்க இரண்டு பிசினஸ் புள்ளிகள், இரண்டு விளையாட்டு வீரர்களைக்கூடப் பொருத்திப் பார்த்துக்கலாம்!''


http://haihoi.com/Channels/cine_gallery/Isai%20Heroine%20Savitri%20Latest_004_S_657.jpg



''இசை மேதை, ஈகோ மோதல் கதைனு சொல்றீங்க... ஆனா, சம்பந்தமே இல்லாம ஹீரோயின் கிளிவேஜ் போட்டோதான் காட்டுறீங்க?''



''ஹா...ஹா...ஹா... அது ஒரு சின்ன போர்ஷன். ஏங்க, ஒரு இளம் இசையமைப்பாளர் காதலிக்கக் கூடாதா? முன்னே மாதிரி என் படத்துல ஹார்ஸ் ரொமான்ஸ் இருக்காது. ஷேக்ஸ்பியர் நாவல்களில் பெண்களை வர்ணிப்பாரே... அழகா, கவிதையா... அப்படி நான் படத்துல வர்ணிக்கிறேன். அவ்வளவுதான்!''



http://tamilko.com/wp-content/gallery/isai-savithri/savithri-isai-hot-9.jpg



''அஜித், விஜய்க்குப் பெரிய பிரேக் கொடுத்தவர் நீங்க. இப்போ அவங்களை வெச்சுப் படம் இயக்கும் எண்ணம் இல்லையா?''



''அஜித் சார், விஜய் சார் ரெண்டு பேருடனும் எனக்கு நல்ல நட்பு எப்பவும் உண்டு. ஆனா, எனக்கு ஒரு சவால் இருக்கு. நான் ஆறு படங்கள் ஹீரோவா நடிச்சிருக்கேன். ஆனா, நல்ல நடிகன்னு மக்கள்கிட்டேயும், இயக்குநர் களிடமும் நான் பேர் வாங்கலை. ஒரு இயக்குநரா மத்தவங்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த நான், ஒரு நடிகனா ஜெயிக்கலை. அந்த வருத்தம் எனக்கு உண்டு. ஒரு பயிற்சியாளருக்கும், ஒரு பிளேய ருக்குமான வித்தியாசம் அது. அதை இப்போதான் புரிஞ்சுக்கிட்டேன். இந்தப் படம் ஜெயிக்கணும். நல்ல நடிகன்னு பேர் எடுக்கணும். மத்ததை... அமையும்போது பார்ப்போம்!''



நன்றி - விகடன் 



http://reviews.in.88db.com/images/Isai-heroine-Savithri/Savithri-hot-navel-pics.jpg

பூலோகம் - ஜெயம்’ ரவி, த்ரிஷா -இயக்குநர் ஜனநாதனின் சிஷ்யர். பேட்டி

 http://kollycafe.com/wp-content/uploads/2012/09/boologam-movie-onlocation05.jpg
 
 
வடசென்னையின் ரிங் கிங்!

கி.கார்த்திகேயன்
 
நான் பக்கா மெட்ராஸ்காரன். நான் சொன்னா அது கரெக்ட்டா இருக்கும். வடசென்னையோட விருப்பமான விளையாட்டு என்னன்னு சொல்லுங்க?'' - எடுத்த எடுப்பிலேயே கேள்வி கேட்டவர், பதிலுக்குக் காத்திருக்காமல் அவரே சஸ்பென்ஸ் உடைத்தார். ''ஃபுட்பால், கபடி, கில்லி... இப்படித்தானே யோசிப்பீங்க. அதெல்லாம் இல்லை... பாக்ஸிங்தான் அவங்களோட நாடி, நரம்பு, ரத்தம் எல்லாத்துலேயும் ஊறின விளையாட்டு. இதை நான் சும்மா என் அனுபவத்தை மட்டும்வெச்சுச் சொல்லலை. அரை நூற்றாண்டு வரலாற்று
 
 
 
ஆதாரங்களோட சொல்றேன்'' என்று குறுந்தாடி தடவிப் புன்னகைக்கிறார் கல்யாண கிருஷ்ணன். 'பூலோகம்’ படத்தின் இயக்குநர். அறிமுக வாய்ப்பிலேயே 'ஜெயம்’ ரவி, த்ரிஷா எனக் கவனிக்கவைக்கும் காம்பினே ஷனுடன் களம் இறங்கி இருப்பவர், இயக்குநர் ஜனநாதனின் சிஷ்யர்.  
 
  ''ஆச்சர்யமாத்தான் இருக்கும். ஆனா, அதுதான் வட சென்னையின் முகம். நாட்டு மருந்து வைத்தியர் பரம்பரை, சார்பேட்டா பரம்பரை, இரும்பு மனிதர் ராசமாணிக்கம் பரம்பரை... இப்படி வட சென்னையில ஏகப்பட்ட குத்துச் சண்டைப் பரம்பரைங்க இருக்கும். அவங்களுக்கு சாப்பாடு, தண்ணி, பொழுதுபோக்கு, தொழில், காதல் எல்லாமே பாக்ஸிங்தான். வருஷம் முழுக்க புஷ்டியான சாப்பாடு சாப்பிட்டுட்டு குஸ்தி போட்டுட்டே இருப்பாங்க.



நிறைய எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள்ல, 'வட சென்னையில் மாபெரும் குஸ்திப் போட்டி’னு போஸ்டர்கள் பாஸிங்ல போகும். எந்தப் பரம்பரை வீரர் சாம்பியன் பட்டம் ஜெயிக்கிறாங்களோ, அவங்களுக்கு ஏரியாவுல மவுசு. அப்படி ஒரு பரம்பரையைச் சேர்ந்த 'ஜெயம்’ ரவி, ஏரியாவுக்குள்ள அவருக்கு இருக்கிற பிரச்னைகள், த்ரிஷாவுடனான காதல், சர்வதேச சவால்கள்னு... ஒரு வாழ்க்கையையே சினிமா ஆக்கியிருக்கேன்!''




''ஜனநாதன் ரொம்ப சின்சியரான சினிமா பண்ணுவார். அவர்கிட்ட இருந்து வந்த உங்ககிட்ட ஒரு கமர்ஷியல் பேக்கேஜ் தெரியுதே?''



''சினிமாவில் என் குரு, ரோல்மாடல், வழிகாட்டி எல்லாமே ஜனா சார்தான். நான் 20 வருஷமா சினிமாவுல இருக்கேன். என் அப்பா, அம்மா எல்லாருமே சினிமாவில் இருந்தவங்கதான். அதனால ஒரு தொழிலா சினிமாவைப் பார்த்துட்டு இருந்தவனுக்கு, 'அது ஒரு கலைடா... அது ஒரு வாழ்க்கைடா’னு புரியவெச்சவர் ஜனா சார்தான்.



அப்புறம் சினிமாவை நான் பார்த்த பார்வையே வேற. 'இயற்கை’, 'ஈ’, 'பேராண்மை’ படங்களின் திரைக்கதையில் என் உழைப்பும் இருக்கு. அதுக்கு மதிப்புக் கொடுத்தோ என்னவோ, 'பூலோகம்’ படத்தின் கதைக்கு ஜனா சாரே வசனம் எழுதுறார். அந்த வகையில் ஜனா சாரோட தாக்கம் இந்தப் படத்தில் நிச்சயம் இருக்கும். சொல்லப்போனா, அவர் எடுத்ததைவிட சீரியஸ் சினிமா எடுக்கத்தான் எனக்கும் ஆசை. ஆனா, ஒரு முதல் பட இயக்குநர் மீது இருக்கும் நம்பிக்கை, எதிர்பார்ப்பு இது எல்லாத்தையும் கணிக்கிறப்போ, 'பூலோகம்’ தான் எனக்கு பெஸ்ட் ஓப்பனிங்!''

 http://redcapsica.com/gallery_images/original/image_3174.jpg


'' 'உனக்கும் எனக்கும்’ படத்துல 'ஜெயம்’ ரவி - த்ரிஷா ஜோடி ஜாலி கேலியாக் குறும்பு பண்ணிட்டு இருந்தாங்க. இப்போ ரெண்டு பேருமே வேற மோல்டுல இருக்காங்க. அவங்களுக்கேத்த ஹோம் வொர்க் கொடுத் தீங்களா?''



''நிச்சயமா! ஒரு பாக்ஸர் இன்டர்நேஷனல் கேம்ல ஜெயிக்கணும்னா, 20 வருஷம் போரா டணும். அந்த 20 வருஷப் போராட்டம் ஒரு பாக்ஸரை எப்படி மாத்தியிருக்கும்? அந்த மாற்றங்களை ரெண்டே மாச பாக்ஸிங் பயிற்சி யில் ரவி கொண்டுவந்தார். ஹூக், அப்பர்-கட் பஞ்ச்னு டெக்னிக் கத்துக்கிட்டதுல இருந்து, உடம்பை இரும்பாக்குறது, பார்வையைக் கத்தி ஆக்குறதுனு பயங்கரமா சீசன் ஆகிட்டாரு.
 
 
 
 
 சும்மா டூயட்டுக்கு மட்டும் வந்துட்டுப் போற கேரக்டர் இல்லை த்ரிஷாவுக்கு. படத்துல ஒரே ஒரு பாட்டுலதான் ரெண்டு பேரும் சேர்ந்து ரொமான்ஸ் பண்ணுவாங்க. அது செம கிக்கா இருக்கும். மத்தபடி ஏரியாவுக்குள்ள சுத்திட்டு இருக்குற ரவியை 'ரிங் கிங்’ ஆக்குவதில் த்ரிஷாவுக்கும் சமமான பங்கு உண்டு!'' 


நன்றி - விகடன்


http://www.southdreamz.com/wp-content/uploads/2012/05/Trisha-Hot-in-Dammu-Stills-1.jpg

ஷங்கரின் ஐ பட காமெடி டிராக்கில் நான் - பவர் ஸ்டார் பட்டாசு பேட்டி

http://tamil.oneindia.in/img/2012/06/01-powerstar-srini-300.jpg 
"கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு நான் அண்ணேன்டா!"

க.ராஜீவ்காந்தி
படங்கள் : ஜெ.தான்யராஜு
ப்பாடா... உலகம் அழியலையே!’ எனப் பெருமூச்சு விடுபவர்களுக்கு... ''அப்படி எல்லாம் உங்களை ரிலாக்ஸ் ஆக விட மாட்டேன்ல!'' என்று துள்ளித் தொடை தட்டி வருகிறார் உங்கள் 'பவர் ஸ்டார்’ கம் அக்குபஞ்சர் டாக்டர் சீனிவாசன். ஜெயலலிதா, ரஜினி, கமல், ஷங்கர், சிம்பு, சந்தானம் என்று நான் கேட்ட கேள்விகளும் சரி, அதற்கு பவர் ஸ்டார் அளித்த பதில்களும் சரி... செம சீரியஸ்தான். ஆனால், அதைப் பேட்டியாகப் படிக்கும்போது, 'இது ஜாலி பேட்டிதானே’ என்று எழும் எண்ணத்தைத் தவிர்க்க முடிகிறதா... பாருங்கள்


http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/04/Anandha-Thollai-21-10-2010-0000.jpg



காலர் டியூனா 'அம்மா என்றழைக்காத’ பாட்டு வெச்சிருக்கீங்களே... வழக்குகள்ல இருந்து தப்பிக்கத்தானே?'' 


'எனக்கு அம்மான்னா ரொம்பப் பிடிக்கும். என் சொந்த அம்மா மட்டும் இல்ல... 'அம்மா’வும்தான். அவங்களுக்காகத்தான் இந்தப் பாட்டு வெச்சிருக்கேன். இன்னொண்ணு... தாயில்லாமல் நானில்லை!''



''ஆக்ச்சுவலா உங்க வயசு என்ன?''



''என் அருமைத் தம்பி சிம்புவைவிட 10 வயசு... கம்மி!''


''சார், சிம்பு கோச்சுக்கப் போறாரு?''



''அட... நீங்க வேற! என்னைப் பார்த்தாலே அவர் சிரிச்சுடுறாரு! 'எத்தனையோ பேரைச் சிரிக்கவெச்சிருக்கேன். என்னையே சிரிக்கவெச்சது நீங்கதான்’னு என்கிட்டயே சொல்லிஇருக்காப்ல. நம்ம மேல அவருக்கு ரொம்ப மரியாதை!''



''ஸோலோ ஹீரோவா பட்டையக் கிளப்பிட்டு இருந்தீங்க. இப்ப ஏன் மூணு ஹீரோ சப்ஜெக்ட்ல நடிச்சு உங்க பேரைக் கெடுத்துக்குறீங்க?''



''என்ன தம்பி இப்படிக் கேட்டுட்டீங்க... சந்தானம் தம்பிகூட நடிக்கிறதெல்லாம் எவ்ளோ பெரிய வாய்ப்பு. இருந்தாலும், உங்களை மாதிரி தீவிரமான ரசிகர்களுக்காக(!) சோலோவாகவும் நடிப்பேன். அப்பப்போ காம்பினேஷன்லயும் நடிப்பேன்!''



''சந்தானம் ஷூட்டிங் ஸ்பாட்ல உங்களைக் கண்டபடி கலாய்ச்சுட்டே இருந்தாராமே?''



''சந்தானம்கூட எனக்கு கெமிஸ்ட்ரி ரொம்ப நல்லா வந்திருக்கு. எனக்கு ஒரு தம்பி இல்லையேங்கிற ஏக்கத்தைப் பூர்த்தி செஞ்சுட்டாரு சந்தானம் தம்பி. அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா, அந்தத் தம்பியே எனக்குத் தம்பியாப் பொறக்கணும்!''



''நடிக்கிறதுக்கு ஹோம்வொர்க் பண்ணுவாங்களே... நீங்க எந்தப் படத்தைப் பார்த்து உற்சாகப்படுத்திக்குவீங்க?''


'' 'பாட்ஷா’தான். அந்தப் படத்தை 30 தடவை பார்த்துட்டுதான் நடிக்கணும்கிற வெறி எனக்குள்ள வந்துச்சு!''


''உங்க ரசிகர்கள் பற்றி..?''


''என்னை நம்பி இருக்கிற கோடிக்கணக்கான ரசிகர்கள்பத்தி நினைச்சாலே, எனக்குக் கண்ணீர் வந்துடும். 'உயிரை விடு’னு சொன்னா, விடுற அளவுக்கு எனக்கு ரசிகர்கள் இருக்காங்க. இவங்கள்லாம் எனக்கு எப்படிக் கிடைச்சாங்கன்னு இப்ப வரை தெரியலை. எல்லாமே பாபா வோட அருள்!''



'' 'ஐ’ படத்துல ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கிற விக்ரமுக்கு நீங்கதான் கோச்சாமே... உண்மையா?''



''ஷ்...ஷ்ஷ்... அப்படிலாம் இல்லை. இந்தப் படத்துலயும் சந்தானம்தான் எனக்கு பார்ட்னர். படம் ஃபுல்லா வருவோம். காமெடி பண்ணுவோம். கதையை வெளியே சொல்லக் கூடாதுனு ஷங்கர் சார் கண்டிச்சுச் சொல்லியிருக்காரு. அதனால கதை வேண்டாம்!''



''உங்க பாடிகார்டு எத்தனை பேர்? அவங்களுக்கு எவ்ளோ சம்பளம் தர்றீங்க?''


''எல்லாருமே பிரியப்பட்டு, 'அண்ணன்’கிற அன்புக்குக் கட்டுப்பட்டு இருக்காங்க. யாரும் பணத்துக்கு ஆசைப்பட்டு இல்லை.''



''2013-ல தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன பரிசு கொடுக்கப்போறீங்க?''  



''நான் நடிச்ச நிறையப் படங்கள் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கு. ஆனா, சந்தானம் தம்பி கேட்டுக் கிட்டதால நிறுத்திவெச்சிருக்கேன். சீக்கிரமே 'மன்னவன்’, 'தேசிய நெடுஞ்சாலை’, 'சீனு எம்.ஏ.பி.எல்’னு வரிசையா படங்கள் வெளிவரும்!''


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbmzmXqjqHN4NBDi1IsW3HRA_7Elk4G50tADDzP0QtnlpEkTPm3BdHti9HTYv0T4GzrS3YynWj5YJ8ZyA5XHPaAcB16eWiiW1SEHYDBVKGK5qUtf44wT01lva1QNc3yc8h0W1peU9d9Q4/s1600/Meenakshi-srinivasan-Hot-In-Lathika-Movie-Stills.jpg


''விக் இல்லாமலேயே அழகாத்தானே இருக்கீங்க... அப்புறம் எதுக்கு டோப்பா எல்லாம்?''



''ஹலோ தம்பி... இது நேச்சுரல் முடி. நம்புங்க! நான் சில படங்களுக்காக, அந்த கேரக்டர் கேட்டுக் கிட்டதால மொட்டை அடிச்சதைப் பார்த்து எனக்கு சொட்டைத் தலைனு நினைச்சுட்டாங்க. ஆனா, இதுதான் ரியல்!''



''நீங்க ரஜினியை ஃபாலோ பண்றீங்கன்னு பார்த்தா, திடீர்னு 'விஸ்வரூபம்’ கமல் மாதிரி ஸ்டெப்ஸ் போடுறீங்களே?''


''உலக நாயகனோட யாரும் போட்டி போட முடியாது. அவர் வேற பாணி. இது பவர் பாணி!''



''நீங்க நடிக்கிற படத்துக்குனு பஞ்ச் டயலாக் யோசிச்சு வெச்சிருப்பீங்களே... அதைக் கொஞ்சம் சொல்லுங்க?''


''ம்ம்ம்... சூப்பர் ஸ்டாருக்குப் போட்டின்னா... அது பவர் ஸ்டார்தான்!''



''ஓ... அப்போ ரஜினி மட்டும்தான் உங்களுக்குப் போட்டியா இங்கே?''


''ஆங்... ஆமாதானே... இல்லையா? அவர்கூட போட்டி இருக்கு. ஆனா, பொறாமை கிடையாது. இதை அவரோட தீவிர ரசிகனா சொல்றேன்!''


''நீங்க நல்லவரா... கெட்டவரா?''


''அது எனக்கே தெரியலையே!'' 


நன்றி - விகடன்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqqGnrsG6K2LpReTmUDWKNu7Y5pgD24S81uNtZ6FlsnNP0HC34K4mgVsd0U4ASM3NAY1_XMbYU7d2TpRdIfqDOAyQkqUgaxJbO_nJH4eTsdNmyX1EHlwZEUr5X1DiBBWctpC2R1vCwBZM/s1600/power.jpg

ராணா , சசி தரூர் உடன் அடிக்கடி சந்திப்பு ஏன்? த்ரிஷா இடம் சுட்டிப்பொருள் விளக்கிய பேட்டி

http://www.southdreamz.com/wp-content/uploads/2011/05/Trisha-hot-in-Saree-10.jpg 

ஐ லைக் சமந்தா"
க.ராஜீவ்காந்தி
 
 
10 வருஷம்... 10 வருஷம்னு மத்தவங்கதான் சொல்லிட்டே இருக்காங்க. ஆனா, 'சமர்’ பட ரிலீஸை நினைச்சா ரெஸ்ட்லெஸா இருக்கு... ஏதோ முதல் படம் ரிலீஸ் ஆகுற மாதிரி'' விழிகளும் வார்த்தைகளும் படபடக்கின்றன த்ரிஷாவிடம். அழகில் இயல்பு, வார்த்தைகளில் தெளிவு, அணுகுமுறையில் சிநேகம்... 10 வருட அனுபவங்களுக்குப் பிறகு, இது த்ரிஷா வெர்ஷன் 2.0.  



 ''இப்போ ட்ரெண்ட்ல ஒரு ஹீரோயின் 10 வருஷம் தாக்குப்பிடிக்கிறது பெரிய விஷயம்... எப்படி முடிஞ்சது?''


 
''நேர்மையா சொல்லணும்னா, முதல் படம் நடிச்ச பிறகு ஆறு மாசம் கூட நான் சினிமாவில் தாக்குப்பிடிக்க மாட்டேன்னுதான் நினைச் சேன். ஆனா, இத்தனை வருஷம்... நான் நினைச்சே பார்க்கலை. அதுவும் ரசிகர்களுக்கு என்னை எப்படிப் பிடிச்சதுனு இப்போ வரைக்கும் தெரியலை. இப்பவும் சினிமால என் எதிர்காலம்பத்தி எந்தத் திட்டமும் இல்லை. காலைல எந்திரிச்சா ஷூட்டிங் கிளம்புற ஆர்வம் இருக்கிற வரை நடிப்பேன். நல்ல ஸ்க்ரிப்ட், வித்தியாசமான கேரக்டர்கள் கிடைச்சிட்டே இருந்தா, இன்னொரு 10 வருஷம்கூட நடிக்க ஆசைதான்.



இப்பெல்லாம் படம் தேர்ந்தெடுக்கிறதில் ரொம்பக் கவனமா இருக்கேன். அதனாலதான், 2012-ல தமிழ்ல என் படம் ஒண்ணுகூட ரிலீஸ் ஆகலை. ஆனா, இந்த இடைவெளியும் நல்லதுதான். தமிழ்நாட்டு ரசிகர்கள் என்னை நல்லா மிஸ் பண்ணட்டும். எல்லாத்துக்கும் சேர்த்து, 2013-ல் நாலைஞ்சு படம் வரும். எல்லாமே நல்ல படங்கள், நல்ல நல்ல ரோல்கள்!''



''த்ரிஷாவுக்கு ரீ ப்ளேஸ்மென்ட் யார்?''



''பதில் சொல்றது கஷ்டமாச்சே. நான் நடிக்க வந்தப்ப, சிம்ரனுக்கு ரீ ப்ளேஸ்மென்ட்னு சொன்னாங்க. ஆனா, இப்பவும் சிம்ரன்னா சிம்ரன்தானே! இப்ப நிறையப் பேரு முதல் படத்துலயே அசத்துறாங்க. எனக்கு சமந்தாவை ரொம்பப் பிடிக்குது. ஸ்கிரீன்ல அவ்ளோ அழகா இருக்காங்க. நேச்சுரலா நடிக்கவும் செய் றாங்க. என் சாய்ஸ் சமந்தா!''



''ஆஹா... நீங்க சமந்தா சூப்பர்னு சொல்றீங்க. ஆனா, 'வி.டி.வி.’ ஜெஸ்ஸியைவிட 'என்.இ.பி.’ நித்யாதான் பெஸ்ட்’னு சமந்தா சொல்லியிருக்காங்களே?''



''மாட்டிவிடணும்னு பாக்கறீங்க? நான் இன்னும் 'நித்யா’வைப் பார்க்கலை. ஆனா, சமந்தா சொன்னா சரியாத்தான் இருக்கும். ஏன்னா, ஜெஸ்ஸி, நித்யா ரெண்டு ரோலுமே அவங்க பண்ணியிருக்காங்க. நான் ஜெஸ்ஸி மட்டும்தானே பண்ணியிருக்கேன்!''



''ஹீரோயின்களில் யார் உங்க க்ளோஸ் ஃப்ரெண்ட்?''



''எல்லார்கிட்டயும் நல்லாப் பேசுவேன். நயன்தாரா ரொம்ப வருஷமா நல்ல பழக்கம். தமன்னா, இலியானா, வரூ எல்லாருமே நல்ல ஃப்ரெண்ட்ஸ்தான். ஆனா, ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்னு சினிமாவில் யாரும் இல்லை. 20 வருஷம் முன்னாடி க்ளோஸா இருந்தவங்கதான் இப்பவும் என் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்!''



''கிசுகிசுக்கள்..?''


  ''இத்தனை வருஷத்துல பக்குவப்பட்டுட்டேன். நானோ, ராணாவோ எதையும் சீரியஸா எடுத்துக்கிட்டதே இல்லை. எங்களைப் பொறுத்தவரை கிசுகிசுக்களை ஜோக் மாதிரி எடுத்துக்குவோம். படிச்சுட்டு சிரிச்சுக்குவோம்!''



''கல்யாணம்?''


''எனக்கே தெரியாம எனக்கு ஏகப்பட்ட தடவை கல்யாணம் ஆகிடுச்சே! ஆனா, இப்ப வரை எனக்கு அப்படி ஒரு ஐடியா வரவே இல்லை. நிச்சயம் கல்யாணம் பண்ணிப்பேன், கரெக்டான ஆள் கிடைச்சதும்!


ஆளும் கிடைக்கலை, பண்ணிக்கிற மனநிலையும் இல்லை. ரெண்டும் செட் ஆச்சுன்னா பார்க்கலாம். ஆனா, எனக்கு லவ் மேரேஜ்தான்!''



''திடீர்னு சசி தரூரைச் சந்திக்கிறீங்க. எதிர்காலம் அரசியலிலா?''


''ஐயோ, அதெல்லாம் வேணாங்க... இப்ப சினிமாவும் அரசியலும் கலந்துடுச்சு. அதனால சினிமால இருக்கிற வரை அரசியல்பத்திப் பேசாம இருக்கிறதுதான் நல்லது!''



thanx - vikatan 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfbNdUVE1BPnstHfGJuLk1D57woUqLkcALgHXOb6O8ex6CZ-M0o01bmcSuGR5uI_SdLzXTaa0Q1BuvL4n8f7RqXwjnLO9ktpBCe6Ifk0-_9ic4Jvqm5UI-D556IHM5BR7AjzDixGhL1PE/s1600/Trisha_Latest_Hot_Stills,_Images,Photo_Gallery,_Wallpapers.jpg

கட்சிக்காக உழைச்ச யாரையும் மதிக்க மாட்டேங்கிறீங்க...? ஏன்? மு க ஸ்டாலின் பேட்டி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitf1lIIvaUKl-mWbHf1H3J4FY1l-jH92OjOUdf-tY0XrY3wHrYD3nSQnnsIEuUyPsfprOdBd5wgMY1f7vhx6XRmBS_t7U2UIYVWbfu2vj-Y9QGbCp-FWBFDu-ax0Y7aVLUYz67jkmDyJKH/s1600/2.jpg 

விகடன் மேடை - ஸ்டாலின்


சென்னை: தனக்கு பின்னர் தமது மகன் மு.க. ஸ்டாலின் தனது சமூக பணியை  தலைமை ஏற்று வழிநடத்திச் செல்வார் என்று அதன் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

திமுகவில் மு.க. ஸ்டாலின் மற்றும் மு.க. அழகிரி கோஷ்டிகளுக்கு இடையேயான மோதலால், தனக்குப் பின்னர் கட்சியை தலைமையேற்று நடத்தப்போவது யார் என்பதை அறிவிப்பது பிரச்னைக்கு வழிவகுக்கும் என்பதால், அதுகுறித்து கருணாநிதி வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்து வந்தார்.

இருப்பினும் கட்சியில் ஸ்டாலினுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது.



இந்நிலையில் தனக்குப் பின்னால் தமது மகன் மு.க. ஸ்டாலின் திமுகவுக்கு தலைமை ஏற்று கட்சியை வழிநடத்திச் செல்வார் என்று கருணாநிதி இன்று வெளிப்படையாகவே அறிவித்தார்.

அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,வேலூர் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் சாமுவேல் செல்லப்பாண்டியன் தலைமையில் 2 ஆயிரம் பேர், திமுகவில் இன்று இணைந்தனர்.

அவர்களை வரவேற்று பேசிய கருணாநிதி,"நீங்கள் இங்கு வருவதற்கு காரணமாக இருந்த உங்கள் முன்னாள் தலைவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மராட்டிய மாநிலத்தில் அம்பேத்கார் பல்கலைக் கழகம் கொண்டு வருவதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால் 12 ஆண்டுகள் ஆகியும் அதனை கொண்டு வர முடியவில்லை.எனது மூத்த மகன் மு.க. அழகிரி மனைவி காந்தி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்.அந்த பெண்ணை எனது மருமகளாக மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டேன்.

எனது மனைவியும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.அனைவரும் ஒரே சாதி என்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சாதி மறுப்பு திருமணத்தை நடத்தி வைக்கிறேன்.அம்பேத்கருக்கு மணி மண்டபம் என் ஆட்சியில் கட்டப்பட்டது. சென்னையில் உள்ள சட்டப் பல்கலைக் கழகத்துக்கும் அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டது. அம்பேத்கரை திராவிட முன்னேற்ற கழகமே போற்றி வருகிறது.

இந்த சமுதாயம் மேன்மைக்காக எழுச்சிக்காக நான் என் ஆயுள் உள்ளவரை பாடுபடுவேன். அதன் பிறகு என்றால் இங்கு அமர்ந்து இருக்கிற தம்பி ஸ்டாலினை மறந்து விடாதீர்கள்.  தமிழ் இனம், திராவிட இனம், மொழி இனத்தை காக்க தங்களை அர்ப்பணித்து இந்த இயக்கத்தில் இணைந்து இருக்கிறீர்கள்.நல்வாழ்வுக்கு இட்டுச் செல்லும் நம் இனத்தை மேன்மைபடுத்தி செல்வோம்.முன்னேறி செல்வழிவகை காண்போம்" என்றார்.
கருணாநிதியின் இந்த பேச்சு அவருக்கு பின் ஸ்டாலினே திமுகவுக்கு தலைமை ஏற்பார் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் கருணாநிதியின் இந்த அறிவிப்பு திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வி.சரவணன், திருச்சி.


 '' 'கொள்கை... கொள்கை’ என்று பேசுகிறீர்களே... உங்கள்   கட்சிக்கு என்னதான் கொள்கை?''



''தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு, தமிழ்க் கலை, தமிழ்ப் பண்பாடு ஆகியவை பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும், வேறு எதன் பெயராலும் தமிழினம் பிரிக்கப்படவோ, சுரண்டப்படவோ கூடாது. சுயமரியாதையும் பகுத்தறிவும் மிகுந்த சமத்துவ சமதர்ம சமுதாயம்
அமைக்கப்பட வேண்டும்.


தாழ்த்தப்பட்டும் பிற்படுத்தப்பட்டும் கிடக்கும் மக்களின் வாழ்வு வளம்பெறச் செய்ய வேண்டும்.


இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ்நாடு யாருடைய மேலாதிக்கமும் இன்றிச் செழித்திட, மாநிலத்தில் சுயாட்சி... மத்தியில் கூட்டாட்சி எனும் தத்துவம் வளம் பெறவும் வேண்டும். இந்த லட்சியங்களை அடையப் பாடுபடுவதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை!''


டி.கே.லட்சுமணன், சிந்தாதிரிப்பேட்டை.


''காலம் கடந்து நடந்த டெசோ மாநாட்டால் என்ன பயன்?''


''எது காலம் கடந்த செயல்? லட்சக்கணக்கான மக்கள் இன்னும் தங்களது எதிர்காலம் என்ன என்று தெரியாமல் கிளிநொச்சியிலும், முள்ளிவாய்க்காலிலும், வன்னியிலும் அவஸ்தைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்களே... அவர்களது ஏக்கங்களை உலகத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்வது எங்களது கடமை அல்லவா?



இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களது கோரிக்கை. அந்தக் கோரிக்கையை இந்தியாவை ஆளும் பிரதமர் மன்மோகன் சிங் கவனத்துக்குக் கொண்டுசென்று, இந்தியாவின் நிலைப்பாட்டை ஈழத் தமிழருக்கு ஆதரவாக மாற்றியவர் கலைஞர் என்பதை நினைவில்கொள்ளுங்கள். 


ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக்காகவும் நல்வாழ்வுக்காகவும் கழகம் மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளில் ஒன்றுதான் டெசோ மாநாடு. டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை உலக நாடுகளும் உலக அமைப்புகளும் தற்போதுதான் புரிந்துகொள்ளத் தொடங்கி இருக்கின்றன. டெசோ மாநாடு காலம் கடந்ததல்ல; காலத்தின் கட்டாயத் தேவை.''



பி.மாதவன், வேதாரண்யம்.


''கருணாநிதி தனது மகனைத் தலைவராக நியமனம் செய்யவிருக்கும் கட்சியை, ஜனநாயக இயக்கம் என்று எப்படிச் சொல்ல முடியும்?''



''கிளைக் கழகம், வட்டக் கழகம் முதல் மாவட்டக் கழகம் வரை உண்மையான உறுப்பினர் சேர்க்கையும் நியாயமான நிர்வாகிகள் தேர்வும் நடக்கும் ஒரே இயக்கம் தி.மு.க. இங்கு யாரையும் வானத்தில் இருந்து கொண்டுவந்து தலைவராக்க முடியாது.


'கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல’ என்று தலைவர் கலைஞர் அவர்கள் பல முறை சொல்லி இருக்கிறார். கழகத்தில் எல்லாமே ஜனநாயக முறைப்படியே நடக்கும்.''


சி.தமிழ்வாணன், திருநெல்வேலி.



''2016-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் என்கிறேன் நான்... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?''



''2016-ல் தி.மு.க-தான் ஆட்சிக்கு வரும் என்ற உங்களது நம்பிக்கைக்கு முதலில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். அப்போதும் தலைவர் கலைஞர் அவர்களே முதல்வர்.


எனது சுற்றுப்பயணங்களின்போது பொதுமக்களிடம் புதிய பேரார்வத்தைப் பார்க்க முடிகிறது. தற்போதைய ஆட்சி மீதான கோபமும் கொந்தளிப்பும் அவர்களின் முகங்களில் பிரதிபலிப்பதைக் காண முடிகிறது. தி.மு.க-வுக்கான ஆதரவு அனுதினமும் வளர்ந்துவருகிறது!''



இரட்டை ஓடை பஞ்சவண்ண மகன்,கருப்பம்புலம்.


''பேராசிரியர் அன்பழகனை எப்படிப் பார்க்கிறீர்கள். அவர் உங்களை எப்படி வழிநடத்துகிறார்?''



''நான் அவரை என்னுடைய பெரிய தந்தையாராகவே பார்க்கிறேன். என்னுடைய அரசியல் பங்கேற்பைப் பலரும் விமர்சித்த காலத்தில், வெளிப்படையாகவே மனப்பூர்வமாக வரவேற்றவர் பேராசிரியர் அவர்கள். தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி, வழிநடத்திவருகிறார்!''



உ.பாண்டி., மதுரை-2.


''உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வர ஆசைப்பட்டால் சம்மதிப்பீர்களா?''


''அரசியலுக்கு வர வேண்டும் என்றோ, வரக் கூடாது என்றோ சொல்லும் அளவுக்கு இதில் என் விருப்பம் முக்கியமானது அல்ல. தனது எதிர்காலத்தைத் தானே தீர்மானிக்கும் அளவுக்கு பக்குவப்பட்டவர்தான் உதயநிதி!''



எஸ்.கதிரவன், சென்னை-10.


''சமீபத்தில் பார்த்த திரைப்படம்?'' 


''சீனுராமசாமி இயக்கத்தில் வெளிவந்துள்ள 'நீர்ப்பறவை’. கடலில் மிதக்கும் மீனவர்களின் வாழ்க்கைப் படகு, கண்ணீரிலும் எப்படித் தத்தளிக்கிறது என்பதைத் தத்ரூபமாகச் சொல்லும் படம். அந்தப் படம் கலங்கவைக்கும் கண்ணீர்ப் பறவையாகவும் இருந்தது!''



எம்.மேக்னா, நா.முத்தையாபுரம்.


''திருமதி துர்கா ஸ்டாலின்..?''



''வள்ளுவர் கூறும் மனைமாட்சிக்கு உதாரணமானவர் என் வாழ்க்கைத் துணை நலன்.


டி.ராகுல், தாமரைக்குளம்.


''ரஜினியோடு உங்களது நட்புபற்றிப் பகிர்ந்துகொள்ள முடியுமா?''


''சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுடனான நட்பு 'அகநக நட்பதாகும்’. அது ஆழமான அன்பையும் பாசத்தையும் அடிப்படையாகக் கொண்டது. நான் நடத்திவந்த 'இளைய சூரியன்’ என்ற இதழின் முதல் வாரமே அவரைத்தான் நேரில் பேட்டி கண்டேன். அந்த அளவுக்கு முக்கிய மனிதர்!''



எஸ்.சிவசங்கர், திருச்சி-3.


 '' 'கட்சிக்காக உழைச்ச யாரையும் மதிக்க மாட்டேங்கிறீங்க... புதுசா வந்தவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீங்க...’ என்று கட்சிக்காரர்களே புலம்புகிறார்களே..?''



''தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், ஆட்சி அமைந்தால் அமைச்சர்களாகப் பொறுப்பேற்பவர்கள் அனைவரும் கட்சிக்காக உழைத்தவர்கள்தான். நகரக் கழகச் செயலாளர்களாகவும், ஒன்றியக் கழகச் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்புக்கு வருபவர்கள் எல்லோருமே கட்சிக்காக இரவு - பகல் பாராமல் பணியாற்றியவர்கள்தான். கழகத்தில் யாரும் வானத்தில் இருந்து குதித்து வந்து வாய்ப்பைத் தட்டிக்கொண்டு போய்விட முடியாது.




கட்சிக்காக உழைத்தவர்களைக் கண்ணெனப் போற்றிக் காக்கும் கட்சி தி.மு.க. என்பதை உண்மை உணர்ந்தவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வர்!''


ச.கருணாகரன், காரைக்குடி.


''ஆயிரம் பஞ்சாயத்துகள் இருந்தாலும், அ.தி.மு.க-வில் யாரும் அமைச்சர் ஆகலாம். புதியவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும். ஆனால், தி.மு.க-வில் பழைய ஆட்களே அமைச்சர்களாக இருப்பார்கள். அவ்வளவு சீக்கிரத்தில் புதியவர்களுக்குத் தேர்தலில் நிற்க சீட் கிடைத்துவிடாது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''



''புதியவர்களாகப் பார்த்து அவர்களுக்கு மட்டுமே சீட் கொடுத்தால், 'ஏற்கெனவே கட்சிக்காக உழைத்தவர்களுக்கு என்ன மரியாதை?’ என்று நீங்களே கேட்பீர்கள். முந்தைய கேள்வியில் இன்னொரு நண்பர் கேட்கவும் செய்துள்ளார்.



தி.மு.க-வில் சட்டமன்ற, நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியலை ஒரு முறை நீங்கள் வாங்கிப் பாருங்கள். தலைவர் கலைஞர் அவர்கள் நுட்பமான ஒரு பங்கீட்டை அதில் பாங்குடன் செய்திருப்பார். கட்சிக்காக உழைத்தவர்கள், கட்சியின் மூத்த முன்னோடிகள், குறிப்பிட்ட தொகுதியில் மக்கள் மத்தியில் செல்வாக்கானவர் கள், இளைஞர்கள், பட்டதாரிகள், பெண்கள், சிறுபான்மையினர் எனப் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையிலும் வேட்பாளர்களை கலைஞர் தேர்வு செய்திருப்பார்.  


லாட்டரிச் சீட்டு குலுக்கலில் பரிசு விழுந்ததைப் போல, அமைச்சர் பதவிகளும் தேர்தலில் நிற்பதற்கான வாய்ப்புகளும் சில கட்சிகளில் வழங்கப்படுகின்றன. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை அடிப்படையாகக்கொண்ட அவற்றை இலக்கணமாகவோ முன்மாதிரியாகவோ எடுத்துக்கொள்ள முடியாது!''



பி.முத்தையா, சாத்தூர்.


''தந்தை கலைஞர், தலைவர் கலைஞர்... எப்படிப் பார்க்கிறீர்கள்?''


தந்தை கலைஞர் - பாசத் திருவுருவம்.  தலைவர் கலைஞர்-கண்டிப்பானவர், கறாரானவர்!''


வசந்தா காந்த், தோப்புத்துறை.


''இவ்வளவு பெரிய இடத்தில் இருந்தும் தங்களுக்கு என்று ஓர் ஆசை இருக்குமே அது என்ன?''


''எதைப் பற்றியும் எண்ணிக்கொண்டு சாய்ந்திருக்காமல், எந்தவித இடையூறும் இன்றி எல்லாவற்றையும் மறந்து குடும்பத்தாரோடு அளவளாவிக்கொண்டு இருக்க வேண்டும் என்ற ஆசைதான்!''



எஸ்.பவதாரிணி சீனிவாசன், ஆலத்தம்பாடி.


''நீங்கள் சென்னை மாநகர மேயராக இருந்தபோது, தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தார். அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?''



''சென்னை மக்களுக்கு எந்த நலத் திட்டங்களையும் வெற்றிகரமாகச் செய்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக ஜெயலலிதா இருந்தார். முடிந்த வரை எங்களைச் செயல்படவிடாமல் தடுத்தார். தன்னுடைய சர்வாதிகாரச் சிந்தனைக்கு ஏற்ப ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து, என்னைப் பதவி நீக்கம் செய்யத் துடித்தார். சென்னை மாநகர மக்களுக்கு நான் சேவை செய்வதில் ஜெயலலிதா ஏற்படுத்திய தடைகளைத் தாண்ட வேண்டும் என்ற வேகத்துடனேயே அப்போதைய எனது ஒவ்வொரு நாளும் கழிந்தது!''



ஆர்.விஜயராஜன், தூத்துக்குடி.


''செயல் தலைவர் ஆகப்போகிறீர்களாமே?''


''நான் எப்போதுமே செயல்படுபவன்தான்!''


அடுத்த வாரம்...


''சாதி பற்றிப் பேசியே ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற எண்ணத்தில், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் ராமதாஸ், மீண்டும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வந்தால், சேர்த்துக்கொள்வீர்களா?''


''கடந்த ஆட்சியின்போது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அரசியலிலும் சினிமாவிலும் ஆதிக்கம் செலுத்தியது உண்மைதானே?''




''கலைஞரின் மகனாக இல்லாமல் இருந்தால், நீங்கள் அரசியலுக்குள் நுழைந்திருப்பீர் களா?''


- இன்னும் பேசுவோம்...


thanx - vikatan 


டிஸ்கி - அழகிரி உங்களுக்குப்போட்டியா ? ஸ்டாலின் பேட்டி ( பாகம் 1)

http://www.adrasaka.com/2012/12/blog-post_27.html

திராவிடக் கட்சிகள் தமிழகத்தைக் குட்டிச்சுவராக்கிவிட்டனவா? 2016-ன் தமிழக சி .எம் .மு. க .ஸ்டாலின் பேட்டி பாகம் 3 -

http://www.adrasaka.com/2013/01/2016.html