Tuesday, January 01, 2013

2012 - டாப் 10 அழகிகள்

உலக நாயகிகள்!

ஆ. அலெக்ஸ் பாண்டியன்
ஹாலிவுட்டில் ஏஞ்சலினா ஜோலிகளை ஓரங்கட்டிவிட்டது அழகிகள் படை. உலகின் டாப் செக்ஸி லிஸ்ட், பியூட்டி லிஸ்ட், காஸ்ட்லி லிஸ்ட் என அனைத்துப் பட்டியல்களிலும் இடம் பெற்றிருக்கும் டாப் 10 பட்டாம்பூச்சிகளின் இனிய இன்ட்ரோ இங்கே... 


செலினா கோம்ஸ்

'ஸ்பை கிட்ஸ்’ படம் மூலம் சின்னதாக அறிமுகமாகி, பரபர வளர்ச்சி அடைந்து 20 வயதுக்குள்ளாகவே 'வுமன் ஆஃப் தி இயர்’ பட்டம் வென்ற ஏஞ்சல். ஆரம்பத்தில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் தலை காட்டி வந்தவருக்கு 'விசார்ட்ஸ் ஆஃப் வேவர்லி பிளேஸ்’ படம் பெரிய பிரேக்.  இடையில் பாப் பாடகர் ஜஸ்டின் பைபருடனான இரண்டு வருட டேட்டிங், பிரிவு, மீண்டும் காதல் எனக் காதல் பஞ்சாயத்துக்கும் பஞ்சம் இல்லை. பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் இயக்கத்தில் ஈடுபாடு காட்டும் செலினா, 'ப்யூர் லவ் வெயிட்ஸ்’ என்ற எழுத்துக்கள் பொறித்த மோதிரத்தை அணிந்திருக்கிறார். யார் எங்கே காத்திருக்கிறார்களோ!
வெனஸா ஹட்ஜென்ஸ்

ட்டு வயதிலேயே மேக்கப் போட்டு போஸ் கொடுக்க ஆரம்பித்த வெனஸா, 'பலானா பலான’ விஷயங்களில் பிரபலம். படுக்கையறையில் அவரை அவரே எடுத்துக்கொண்ட செம செக்ஸி படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்த, அதுவரை அவர் நடிப்பதற்கென கமிட் ஆகியிருந்த படங்களில் இருந்து கழட்டிவிடப்படும் நிலை உண்டானது. ''அது என் அனுமதி இல்லாமல் வெளியான படங்கள். எக்ஸ்கியூஸ்மீ!'' என்று சமாளித்தார் ஐஸ்க்ரீம் அழகி. படங்களை லீக் செய்தது யார் என்பதை அறிய எஃப்.பி.ஐ. ஆட்கள் விசாரிக்க வந்ததெல்லாம் டாப்பிக்கல் தகராறு. ஹாலிவுட்டின் பிரபலப் பத்திரிகைகளின் அட்டைப் படங்களை அலங்கரித்திருக்கும் வெனஸா, 22 வயதுக்குள் வாழ்க்கையின் எல்லா இன்ப துன்பங்களையும் அனுபவித்துவிட்டதாக அலுத்துக்கொள்கிறார். ''வாழ்க்கை போரடிக்கிறது!'' என்று அடிக்கடி சொல்பவர், அப்படி உணரும் தருணங்களில் தனது காமாசோமா வீடியோக்களை இணையத்தில் அப்லோடுவார். அதை முழுக்கப் பார்த்து ரசித்துவிட்டு, மறக்காமல் திட்டிக் குவித்துவிடுவார்கள் இணைய தலைமுறையினர்!
விக்டோரியா ஜஸ்டிஸ்

கிறங்கடிக்கும் அழகையும் தாண்டி உருகவைக்கும் கேரக்டர், விக்டோரியா ஜஸ்டிஸ். நடிப்பு மீது இவருக்கு இருந்த தீராக் காதலால், இவரது குடும்பமே லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குக் குடிபெயர்ந்தது. குடும்பத்தின் நம்பிக்கையைப் பொய்க்காமல் நடிக்கத் துவங்கி, இப்போது வருடம் மும்மாரி விருது மழை பொழிகிறது. பன்னிரண்டாவது வயதிலேயே 'சிறந்த நடிகை’ விருது தட்டியிருக்கிறார். ''என் 17 வயதில் எனக்கு இருந்த சுதந்திரமான சூழல் இப்போது பல பெண்களுக்குக் கிடைப்பது இல்லை. அதை அவர்களுக்கு உருவாக்குவதற்காகப் பாடுபடுவேன்!'' என்று சொல்லி பெண்கள் முன்னேற்றத்துக்காக அமெரிக்கா முழுக்கச் சுற்றுகிறார். ''உங்கள் கனவைச் சிதைக்க யாருக்கும் அனுமதி அளிக்காதீர்கள்!'' - இதுதான் விக்டோரியாவின் வேதம்.
எம்மா ஸ்டோன்

ச்சைக் கண் பளிங்குப் பொண்ணு. 'தி அமேஸிங் ஸ்பைடர்மேன்’ படத்தில் நடித்ததன் மூலம் அதீத லைம்லைட் பெற்றவர். சினிமாவுக்கு வரவில்லை என்றால், பத்திரிகையாளர் ஆகியிருப்பேன் என்று சொல்பவர், கடந்த ஒரு வருடமாக 'ஸ்பைடர் மேன்’ பட ஹீரோவுடன் கோயிங் ஸ்டெடி. கூந்தலை பிரவுன், சிவப்பு என விதவிதமாக நிறம் மாற்றிக்கொள்வது இவருக்குப் பிடித்த பொழுதுபோக்கு.
ஜெனிஃபர் லாரன்ஸ்

'மிகவும் திறமையான இளம் நடிகை’ என்று ஜெனிஃபரை அமெரிக்கா கொண்டாடுகிறது. 'எக்ஸ் மேன்’, 'தி ஹங்கர் கேம்ஸ்’ படங்களில் அதிரடி செய்ததன் மூலம், 'எப்போதைக்குமான ஆக்ஷன் ஹீரோயின்’ என ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் பாராட்டப் பெற்றிருக்கிறார். ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸுடன் தேவதைக்குக் காதல். 'உலகிலேயே என்னை அதிகம் சந்தோஷப்படுத்தக்கூடிய மனிதர் நிக்கோலஸ்தான்!’ என 'உருகுதே மருகுதே’கிறார்!
க்ரிஸ்டன் ஸ்டூவர்ட்

க்ரிஸ்டன் ஸ்டூவர்ட் என்பதைவிட 'பெல்லா’ என்றால் உலகமே பாசப் பார்வை பார்க்கும். டிராகுலா கதையான ட்வைலைட் படங்கள் மூலமாக உலகப் பிரபலம் அடைந்த ஹோம்லி ஏஞ்சல். தனது 19-வது வயதில்தான் ஹைஸ்கூல் படிப்பையே முடித்தார். ட்வைலட் பட நாயகன் ராபர்ட்டுடன் இவருக்கு நிஜத்திலும் வளர்ந்த காதல் உலகம் அதிகம் விவாதிக்கும் அந்தஸ்து பெற்ற செய்தி. இப்போது க்ரிஸ்டன் பிற ஆண்களுடனும் கெமிஸ்ட்ரி பாராட்டுவதால், இருவருக்கும் இடையே லடாய்... கடாய்!
மேகன் ஃபாக்ஸ்

ந்து வயதில் மேடை நாடகத்தில் தொடங்கிய கலைச் சேவை, பதின்பருவ வயதுகளில் பல மில்லியன்கள் சம்பளம் வாங்கும் அளவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. டிரான்ஸ்ஃபார்மர்ஸ், ஜெனிஃபர்ஸ் பாடி படங்களில் நடித்ததன் மூலம் சர்வதேசக் கவனம் ஈர்த்தவர். உடல் முழுக்க விதவிதமாக டாட்டூ குத்திக்கொள்பவர், காதலன் பிரையன் க்ரீனின் பெயரை இடுப்பில் பதித்திருக்கிறார். வால் மார்ட் கடை ஒன்றில் ஷாப்பிங் செய்யும்போது சில மேக்கப் அயிட்டங்களைத் திருடி, மாட்டிக்கொண்டு முழித்தது மேகனின் சாதனைகளுள் ஒன்று!
டக்கோடா ஃபேன்னிங்

'தெய்வத் திருமகள்’ படத்தின் ஒரிஜினல் 'ஐ யாம் சாம்’ படத்தில் குட்டி நிலாவாக நடித்த பியூட்டி. ''இயக்குநர் ஆக வேண்டும் என்பதே லட்சியம்'' என்று சொல்லும் டக்கோடா, இப்போதும் செல்லும் இடங்களில் எல்லாம் பொம்மைகளை வாங்கிக் குவிக்கிறார். 'இவ்வளவு கலாட்டா செய்கிறீர்கள். ஆனால், 'ஐ யாம் சாம்’ படத்தில் எப்படி அவ்வளவு சீரியஸாக நடித்தீர்கள்?’ என்று கேட்டதற்கு, 'நான் வளர்க்கும் தங்க மீன் இறந்துவிட்டதாக நினைத்துக்கொள்வேன். கண்ணீர் பொலபொலவென வந்துவிடும்!'' என்றார் சமத்தாக!
அன்னா சோபியா ராப்  

டிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு, 'சினிமா... சினிமா’ என அழுது அடம்பிடித்து நடிக்க வந்தாலும், 42 ஆடிஷன்களுக்குப் பிறகும் சினிமா கதவு திறக்கவே இல்லை அன்னாவுக்கு. இப்போது அன்னாவின் கால்ஷீட் 2015 வரை ஃபுல். 'சார்லி அண்ட் தி சாக்லேட் ஃபேக்டரி’ இவரது லேட்டஸ்ட் ஹிட். இவர் அணியும் எந்த ஆடையையும் சிலாகித்து வர்ணித்துப் போற்றிப் பாராட்ட பெரும் கும்பல் உண்டு இணையத்தில். குழந்தைத்தனம் மாறாத முகத்தாலேயே பலரைக் கவர்ந்த அன்னாவை டூ-பீஸ் ஆடையில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. அதனாலேயே இப்போதெல்லாம் டவுசர் சட்டை தாண்டி, கவர்ச்சி எல்லை தாண்டுவதே இல்லை.
எல்லி ஃபேன்னிங்

'ஐ யாம் சாம்’ புகழ் டக்கோடா ஃபேன்னிங்கின் அன்புத் தங்கை எல்லி. ஹாலிவுட்டின் மிக மிகக் குட்டிப் பாப்பா ஹீரோயின். ஹாலிவுட் சினிமா வரலாற்றில் முதல் முறையாக மூன்றரை வயதிலேயே பிரீமியர் ஷோவில் கலந்துகொண்ட ஹீரோயினான இவருக்கு இப்போது வயது 14. தனது ஏழாவது பிறந்த நாளுக்கெல்லாம் தனது மொத்தக்  குடும்பத்தையும் தனது செலவில் ஆஸ்திரேலியா டூர் அழைத்துச் சென்றவர். சினிமாவில் ஒன்றாகப் பயணம் துவக்கி இப்போது வெவ்வேறு பாதையில் அக்காவும் தங்கையும் பிரிந்துவிட்டார்கள். ஆனாலும், இப்போதும் எனக்குப் பிடித்த நடிகை என எல்லி சொல்வது அவரது அக்காவைத்தான்!



நன்றி - விக்டன் 

S I P = சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் செய்யலாமா? - சோம. வள்ளியப்பன்

ஷேர் மார்க்கெட் சீக்ரெட்!

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் செய்யலாமா?

சோம. வள்ளியப்பன்

அப்படி இப்படி என்று பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் முந்தைய உச்சத்துக்கு அருகில் வந்துவிட்டன. சென்செக்ஸ் 19,500 புள்ளிகள், நிப்டி 5,950 புள்ளிகள். முந்தைய உச்சம், இனி கைக்கெட்டும் தூரம்தான்.
2008 ஜனவரி மாதம்தான் பங்குச்சந்தை உச்சாணிக் கொம்பில் நின்றது. பின், தவறி குப்புற விழுந்தது. அதன்பிறகு வரும் ஜனவரி 2013 மாதத்துடன் முழுசா ஐந்து ஆண்டுகள் முடிகின்றன.
ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட அதே அளவு வந்திருந்தாலும், குறியீட்டு எண்கள் மேலும் உயர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று கருதுவோர் உண்டு. காரணம், நிறுவனங்களின் சம்பாத்தியங்கள் அப்படி.
சென்செக்ஸ் PE என்பார்கள். அப்படி என்றால் என்ன?
ஒரு குடும்பம் 2003ம் ஆண்டில் மாதம் ஒன்றுக்கு 4000 ரூபாய்க்கு மளிகைப் பொருட்கள் வாங்கியது என்று வைத்துக் கொள்வோம். அந்தக் குடும்பத்தின் வருமானம் தொடர்ந்து அதிகரிக்கின்றது என்று, குடும்பத்தினர் செலவையும் கூட்டிக் கொண்டே போனார்கள். மாதம் 10 ஆயிரம், 15 ஆயிரம் என்று உயர்த்திக் கொண்டே போய், 2008ம் ஆண்டு மாதம் 21 ஆயிரம் ரூபாய் செலவு செய்தார்கள். அந்த அளவு செலவு தாங்காது என்று, கடன்காரர்கள் விரட்ட பிரச்னைகள் அதிகமாகி, மாதம் 8000 என்கிற அளவுக்கு ஒரேயடியாகக் குறைத்துக் கொண்டார்கள்.
பின்பு கடன்கள் குறைந்து, மேலும் சில குடும்ப உறுப்பினர்களும் சம்பாதிக்கத் தொடங்க, ஏற்கெனவே சம்பாதிப்பவர்களின் வருமானங்களும் உயர, அந்தக் குடும்பம் மீண்டும் செலவைக் கூட்டியது. தற்சமயம் (டிசம்பர் 2012ல்) அது 19500 ஆக இருக்கிறது. அதிகபட்சம் 21,000 தான் வரமுடியும் என்று சிலர் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதற்கு மேலேயும் அந்தக் குடும்பத்தால் செலவு செய்யமுடியும் என்கிறார்கள் வேறு சிலர்.
அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், இப்போது 2012ல் அந்தக் குடும்ப உறுப்பினர்களின் சம்பாத்தியம் அதிகம் என்பது தான்.
21,000 என்பது ஒரு எண். அவ்வளவுதான். செலவு அதைத் தாண்ட முடியாது என்பதோ, அதைத் தாண்டினால்தான் சரி என்றோ சொல்ல முடியுமா?
சென்செக்ஸ் என்ற குறியீட்டு எண், குடும்பம் செலவு செய்கிற தொகைக்கு ஒப்பு. அந்தக் குடும்பம் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம், ஈட்டுகிற வருமானத்துக்கு ஏற்ப என்பது போல, சென்செக்ஸும் எவ்வளவு வேண்டுமானாலும் உயரலாம். வருமானம் குறைந்தால் மீண்டும் செலவும் குறையலாம். எந்த எண்ணும் இறுதியானது அல்ல.

ஒரு பங்கு ஆண்டுக்கு எவ்வளவு லாபம் ஈட்டுகிறது என்பதை E P S என்பார்கள். (எர்னிங்ஸ் பெர் ஷேர்). அந்த ஒரு பங்குக்கான லாபத்தைப் போல, அந்தப் பங்கு சந்தையில் எத்தனை மடங்கு விலை விற்கிறது என்று வகுத்துப் பார்த்துச் சொல்லுவதுதான் P E(பிரைஸ் எர்னிங் ரேஷியோ) கணக்கு.
தனிப்பட்ட நிறுவனப் பங்குகளுக்கு அந்த விதமாக, என்ன E P S மற்றும் என்ன P E இருக்கிறது என்று பார்த்து ஒருவர் பங்குகள் வாங்குவதைப் போல, மொத்த பங்குச் சந்தைக் குறியீட்டு எண் என்ன அளவு போகலாம் என்று கணிப்பதற்கும், இந்த P E முறையைப் பயன்படுத்துவார்கள்.
சென்ற அத்தியாயத்தில் பார்த்தது, டெக்னிக்கல் அனாலிசிஸ்சின் ஒரு சிறு பகுதி என்றால், இவை (E P S , P E எல்லாம்) ஃபண்டமெண்டல் அனாலிசிஸ்சின் சிறிய பகுதிகள்.
தற்சமயம் சென்செக்ஸ் 19,500 இருக்கிற போது அதன் P E, 17 ஆக இருக்கிறது. அப்படியென்றால், சென்செக்ஸ்சில் இருக்கும் 30 நிறுவனங்களின் மொத்த E P Sசைப் போல, 17 மடங்கு சென்செக்ஸ் இருக்கிறது என்று பொருள்.
முன்பு 2008 ஜனவரியில் சென்செக்ஸ் 21,000 போன போது, அது 26 அளவு P E ஆக இருந்தது. கூடுதல் P E என்பது ஒரு குடும்பம், அது சம்பாதிப்பதைப் போல பலமடங்கு செலவு செய்வதற்கு ஒப்பு. நிலைமை தற்சமயம் அப்படியில்லை. காரணம், தற்சமயம் சென்செக்ஸில் இருக்கும் பங்குகள் சம்பாதிப்பது 2008ல் சம்பாதித்ததைவிட அதிகம். அதனால்தான் P E குறைவாக இருக்கிறது.
செய்தி என்ன?
நிறுவனங்கள் சம்பாதிப்பதை மட்டும் வைத்துப் பார்த்தால், குறியீட்டு எண்கள் உயர்வதற்கு இன்னும் இடம் இருக்கிறது. இதை உச்சம் என்று சொல்லமுடியாது.
நானும் பார்க்கிறேன், நான் வாங்கிய பங்கு விலை இறங்குகிறது, நான் விற்ற பின்பு அதே பங்குகள் விலை ஏறுகின்றனஎன்று பலரும் சொல்வார்கள். ‘எதிர்பார்த்து நின்றால் அந்தப் பேருந்து வரவே வராது. ஆனால் வேறு வேலையாக வெளியில் போகும் போது பார்த்தால், அதே வழித்தடப் பேருந்து ஒன்றன்பின் ஒன்றாகப் போகும்என்று சொல்வது போன்றதுதான் இதுவும்.
பங்குச்சந்தை என்ற பெரும் கடலில், நாமெல்லாம் சின்னஞ்சிறு சோழிகள். ஆக தற்செயலாக நிகழ்வனவற்றை நாமாக நமக்கு எதிரான செயல்களாகக் கற்பனை செய்து கொள்கிறோம்.

எவராலும் மிகச் சரியாக விலை ஏறுவதற்கு முன்பு வாங்க முடியாது. விலை இறங்கும் முன் சரியாக விற்றுவிடவும் முடியாது. இது சந்தையைடைம்பண்ணுவதற்கான முயற்சி. தண்ணீரைக் கையில் பிடிக்கும் முயற்சி போன்றதேதான். நடக்காது.
வேறு என்ன வழி?
ஒரே ஒரு நிச்சய வழி இருக்கிறது. அதன் பெயர், சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்.
இதில் இரண்டு வார்த்தைகள் முக்கியமானவை. ஒன்று, இன்வெஸ்ட்மென்ட். மற்றது சிஸ்டமேட்டிக்.
வேறு ஒன்றும் பெரிதாக இல்லை. ஒரே நாளில் வாங்காமல், கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்ந்து வாங்குவது. அவ்வளவு தான். 100 பங்குகளை லட்ச ரூபாய்க்கு ஒரே தவணையில் வாங்கிவிட்டால், அதன் பிறகு இறங்கினால் வருத்தம் வரும். அதே போல், ஒரே தவணையில் 100 பங்குகளை, லட்ச ரூபாய்க்கு வாங்கிய உடனேயே, அந்தப் பங்கு விலை 20% உயர்ந்தால், அடடா இன்னும் கூடுதலாக வாங்காமல் விட்டுவிட்டோமே என்று வருத்தமாக இருக்கும் (பேராசைக்காரமனது!).
வாங்கிய பிறகு ஏறுமா இறங்குமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. இடைப்பட்ட குறுகிய காலங்களில் எதுவும் நடக்கலாம். அதற்கு மாறுகிற அரசியல் நிலைமை, வெளிவரும் புள்ளிவிவரங்கள், சர்வதேச நிலைமைகள் என்று எவ்வளவோ இருக்கும். ஆனால், நல்ல நிறுவனங்கள், இடையில் விலைகள் இறங்கினாலும் நீண்ட காலத்தில் நன்றாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தால், அப்படிப்பட்ட பங்குகளை, சிறிய அளவுகளில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சிறுகச் சிறுக வாங்கிக் கொண்டேயிருப்பது ஒரு வழி.
மாதம் ஒரு பங்கு அல்லது மாதம் 5000 ரூபாய்க்கு என்பது போல், முன்கூட்டியே முடிவு செய்து கொண்ட தேதிகளில், என்ன விலை இருந்தாலும் தேர்ந்தெடுத்த பங்குகளை வாங்குவது. இதுதான் சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான். நாமேதான் செய்ய வேண்டும் என்பதில்லை. பல பங்குத் தரகு நிறுவனங்களும், வங்கிகளும் கூட இப்படிப்பட்ட திட்டங்களை வைத்திருக்கிறார்கள். அதில் சேர்ந்து விட்டால் போதும். மாதம் 5000 என்பது ஓர் உதாரணம் தான். மாதம் 100 ரூபாய் என்கிற அளவில் கூட இந்தத் திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தைச் சுருக்கமாக SIP என்பார்கள்.
(தொடரும்)


நன்றி - கல்கி 

செஞ்சுட்டாளே அவ சமையலை.கொஞ்சம் கூட வாய்ல வைக்க முடியல

1.புத்தகம் எழுதப்போகிறார் காஜல் அகர்வால்! # ஃபேஸ்புக்கா இருக்கும் 



--------------------


2. நான் அரசியலுக்கு வந்தால் அது தனி வழியாக இருக்கும் - ரஜினிகாந்த்" -# ரசிகர்களைக்குழப்பி ஒரு வழி பண்ணாம விடமாட்டீங்க போல 




-------------------


3. கைதி - யுவர் ஆனர்.நான் மைனர்.


ஜட்ஜ் - உன்னைத்தான் முதல்ல தண்டிக்கனும் 



-------------------


4. புதுமுக நடிகைகளுடன் போட்டி போட விரும்பவில்லை: தமன்னா. # அதானே.பாட்டிக்கு எதுக்கு லூட்டி? 




-------------------------



5. நடிப்பில நான் திமிங்கலம்னா என் மகள் ஒரு சுறா: ராதா புகழாரம். # ஓ அதான் கடல்ல துளசி ! குடும்பமே கடல் குடும்பம் போல 




--------------------


6. டாக்டர்.தொண்டை கட்டிக்கிச்சு.என்ன பண்ணனும்? 



லேடி டாக்டர் லேகா - வாயை மூடிக்கிட்டு சும்மா இருடா டோய் ( சும்மா) 




--------------------


7. நயன்தாராவை மறந்து ஒரு வருடமாகிவிட்டது: பிரபுதேவா. # மறந்தாச்சா?துறந்தாச்சா? 





-----------------------


8. எல்லாத்தரப்பு ரசிகர்களும் பார்த்து பிடிச்சிருக்குன்னு சொல்ற மாதிரி ஒரு படம் எடுத்திருக்கேன்.டைட்டில் - இடை 



----------------------


9. திரும்பிய பக்கம் எல்லாம் திரிபுர சுந்தரிகள்் இருந்தாலும் கோயிலுக்கு சென்று தரிசித்தால்தான் ஒரு திருப்தி. 




-----------------------



10. சேலை கட்டிய தமிழன் பிரதமராவதை விட வேட்டி கட்டிய தமிழன் பிரதமராகவேண்டும்-கலைஞர்! # தலைவரே.வயசானா வழி விடனும் .குழி தோண்டக்கூடாது 




----------------------------


11. செஞ்சுட்டாளே அவ சமையலை.கொஞ்சம் கூட வாய்ல வைக்க முடியல.மீல்சோ டிபனோ பேதம் ஏதும் சொல்லத்தோணலே # சும்மா 




------------------------



12. நான் ஒரு மைனர் பொண்ணு - லட்சுமி மேனன் # சொல்லிட்டாளே அவ வயசையே 





-------------------------


13. PUSH' STEP =் தள்ளுபடி # சபாஷ் துபாஷ் 




----------------------


14.  குழலினிது யாழினிது என்பர்.... கலா மாஸ்டரின் கிழி கிழி ' என்ற வார்த்தையை கேட்காதவர்! :-) 





--------------------


15. ஜெ - திமுக ஆட்சியிலே அடிக்கப்பட்ட மணல் கொள்ளைகளால் பிட்ச் சரியா அமைக்க முடியலை.தோல்விக்கு அவர்தான் பொறுப்பு. 




----------------------


16. மு க - கழக ஆட்சியாக இருந்தால் என்ன விலை குடுத்தாவது வெற்றிக்கனியை பறித்திருப்போம் 




-------------------------


17. நமக்கு மிகப் பிடித்தவருக்கு நம்மை சுத்தமா பிடிக்கல ் என அறிய நேரும் தருணத்திற்குப் பெயர் தான் ஜென்மசாபம்.




-------------------


18. இந்தியா வித் பாகிஸ்தான் மேட்ச்ல யார் ஜெயிச்சாலும் அலட்டிக்காத ஒரே விளையாட்டு வீரர் சானியா மிர்சா 




--------------------


19. கன்னிப்பொண்ணு கும்னு இருப்பா.மேரேஜ் ஆன பொண்ணு கும்கி மாதிரி இருப்பா # சும்மா 



------------------


20. புத்திசாலி புருஷன் சன்டே க்கு சம்சாரத்தை அவங்கம்மா வீட்டுல விட்டுட்டு வந்துடுவான்.;-)) 




------------------


21. ஒரு கொள்கைக்காக துன்பத்தை,சம்சாரத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது. —ராஜாஜி ரீ மிக்ஸ் 




------------------


22. மேரேஜ் ஆகும்போது 50 kg தாஜ்மகால்.இப்போ 98 kg திருமலை நாயக்க்கர் மகால்







-----------------



23. இரண்டாம் உலகம் படத்திற்கு விருது கிடைக்காவிட்டால் தேர்வுகமிட்டி மீதே போர் தொடுப்பேன்-அனுஷ்கா #அக்கப்போர்மா உன்னோட 



-------------------


24. ஒரு குடும்பத்தை பொறுத்த மட்டில் கூடுதலான சுமையை சுமப்பது குடும்பத் தலைவன் தான்.சம்சாரம் 98 கிலோ ;-)) 



----------------------


25. ஒரு வானவில் போலே அவள் என் வாழ்விலே வந்தாள் # 7 பாய் பிரண்ட்சாம் 




---------------


20.