Saturday, March 19, 2011

தி மு க வின் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கை.. அதிமுக கலக்கம்



http://www.cinehour.com/gallery/cinenews/63484334kaliagnar.jpg 
கடந்த முறை இலவச கலர் டிவி வழங்கப்பட்டதைப் போல, இம்முறை தாய்மார்களுக்காக இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி வழங்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்.

தாய்மார்கள் தங்கள் விருப்பம் போல் கிரைண்டரையோ அல்லது மிக்ஸியையோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அரங்கத்தில் சனிக்கிழமைதி.மு.க. தலைவரும் முதல்வருமான கருணாநிதி வெளியிட்டு அதனை வாசித்தார்.


அதன் முக்கிய அம்சங்கள்:

* கல்வியை மாநில அரசின் பட்டியலில் கொண்டு வர வலியுறுத்துவோம்.

* கிராமத்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் பொது நுழைவுத் தேர்வை எக்காலத்திலும் நடத்த அனுமதியோம். 

* மத்திய அரசில் இருந்து மாநில அரசுக்கு கிடைத்து வருகின்ற வரி வருவாய் நியாயமான முறையில் கிடைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* செம்மொழியாயான தமிழை மத்திய ஆட்சிமொழியாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழை நீதிமன்ற மொழியாக்க நடவடிக்கை.

* மத்திய அரசு நடத்தும் தேர்வுகளை தமிழில் எழுத வலியுறுத்துவோம்.

* திருக்குறளை தேசிய நூலாக்க பாடுபடுவோம்.

* ஈழத்தமிழர்களுக்கு இலங்கையில் ஆட்சியில் பங்கு கிடைக்க மத்திய அரசை வலியுறுத்தக் கூறுவோம். 

* வேளாண் உற்பத்தியை அதிகரிக்க சிறப்புத் திட்டம்.

* விளைநிலங்களை வேறு பயன்பாட்டுக்கு செல்லாத வகையில் பாதுகாப்போம்.

* நகர்புறங்களில் நுகர்வோர் சந்தை அமைக்கப்படும்.

* படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.

* வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள குடும்பங்களை குறிப்பிட்ட காலங்களுக்கு பொருளாதார ஏற்றம் பெற நடவடிக்கை.

* அரசு கல்லூரிகளில் படிக்கும் பி.சி., எம்.பி.சி. எஸ்.சி, மாணவர்களுக்கு இலவச லேப்டாப்

* மகளிர் சுய உதவி கடன் தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும். இதில், ரூ.2 லட்சம் மானியம்.

* மீனவர் நலனுக்கு சிறப்பு காப்பீடு திட்டம் கொண்டுவரப்படும்.

* தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வை காண மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

* திருச்சி, மதுரையில் மன நல மருத்துவமனைகள் அமைக்கப்படும். 

* மதுரையில் காசநோய் மருத்துவமனை.

* மருத்துவ கட்டண ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும்.

* எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மருத்துவம், கல்வி உள்ளிட்ட வசதிகள்.

* நடக்க முடியாத முதிய நோயாளிக்கு வீட்டிலேயே மருத்துவர் மூலம் சிகிச்சை பெற சிறப்பு நடவடிக்கை.

* தரமான இலவசக் கல்வியை அனைவருக்கும் வழங்கும் வகையில் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.

* அரசு பள்ளி மாணவர்களுக்கு மூன்று சீறுடை.

* அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் வேலைவாய்ப்புகளை வழங்கும் படிப்புகளை அறிமுகம் செய்து, கல்வித் தரத்தை உயர்த்துவோம்.

* தமிழகத்தில் பல்கலைக்கழகமே இல்லாத மாவட்டம் இல்லை என்ற நிலையை எட்டுவோம்.

* தமிழகத்தில் வெளிநாட்டு மொழிகளை கற்றுத் தர ஏற்பாடு.

* சேது கால்வாய் திட்டத்தை முடிக்க தொடர்ந்து பாடுபடுவோம்.

* முல்லைப் பெரியாறு, காவிரி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றுக்கு தீர்வு கண்டு தமிழக உரிமைகளுக்கு தொடர்ந்து வலியுறுத்துவோம். 


* மாநகர போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கோவை, மதுரை நகரில் புல்லட் ரயில் இயக்க நடவடிக்கை.

* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை மாமல்லபுரம் வரை நீட்டிப்போம்
.
* மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து. 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு அரசு உள்ளூர் பேருந்தில் கட்டணமில்லா பயணம்
.
* முதியோர், ஆதரவற்ற பெண்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிக்கு மாத உதவித் தொகை ரூ.750 ஆக உயர்த்தப்படும்.

* தலித் கிறிஸ்தவர்கள் ஆதிதிராவிடர் பிரிவில் இடம்பெற மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* சிறுபான்மையினருக்கு சிறப்புக் கல்வித் திட்டம்.

* திருநங்கைகள் சுய உதவிக் குழு அமைக்கப்படும்.

* சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி வர்த்தகர்கள் ஈடுபட அனுமதி இல்லை
.
* கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.75 ஆயிரம் மானியம் இனி ரூ.1 லட்ச ரூபாயாக உயர்த்தப்படும். 

* கலைஞர் காப்பீடு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.


* அரசு அலுவலகங்களில் லஞ்சம் ஊழல் இல்லாத அளவுக்கு துரிதமான கண்காணிப்பு பணி. 

* புதிய சென்னை துணை நகரம் உருவாக்குவோம்.

* பரம ஏழைகளுக்கு ரூ.1 அரிசி இனி இலவசமாக வழங்கப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பரம ஏழைகளுக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். 

* இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டம் தொடரும்.


* தாய்மார்களுக்காக இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி வழங்கப்படும். இவை இரண்டில் ஏதாவது ஒன்றை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.


கலைஞர் அறிவித்த இந்த கவர்ச்சி திட்டங்கள் அ தி மு க வட்டத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது

மோகன்லால்-ன் கிறிஸ்டியன் பிரதர்ஸ் - சினிமா விமர்சனம்


மலையாளப்படமா? ஆஹா.. என நினைப்பவரகள் ஒன் ஸ்டெப் பேக் மேன்.. இது டீசண்ட்டான மலையாளப்படம்.. ( அட போங்கப்பா.) கேரளா கேப்டன் மோகன்லால் நடிச்ச செமத்தியான மசாலா படம்.. டீசண்ட்டான படம்னு சொன்னதும் யாரும் வருத்தப்பட வேண்டாம்.. கனிகா (ஃபைவ் ஸ்டார்),காவ்யா மாதவன்,லட்சுமிராய்  என 3 ஃபிகர்கள் உண்டு.. (இப்பத்தான் முகத்துல பல்பு எரியுது)

தமிழ் சினிமா மாதிரியே கேரளா சினிமாவும் கெட்டு சீரழியுதுன்னு சொல்றது சரியாத்தான் இருக்கு.. ஹீரோவுக்கு ஏகப்பட்ட பில்டப்.. அவர் வர்றப்ப எல்லாம் ஏய்.. தகிட தகிட தகிட என பில்டப் மியூசிக் போடும்போதும் சரி.. ஃபைட் சீனில் காதை கிழிக்கும்படி ரீ ரிக்கார்டிங்கும் சரி  கொலையாக்கொன்னெடுக்கிறாங்க..

யாராவது மோகன்லால் ரசிகர்கள் இருந்தா மன்னிச்சிடுங்கப்பா..(டெயிலி மன்னிப்பு கேட்கறதே நமக்கு பிழைப்பா போகிடுச்சு)கிட்டத்தட்ட 58 வயசான ஹீரோ 21 இளம் பிள்ளை சுப்பையா பாவு  மாதிரி இருக்கற லட்சுமி கூட டூயட் பாடும்போது மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு.. ஹூம் என்ன பண்றது? (இளம்பிள்ளை சுப்பையா பாவு பற்றி அறிய சேலம் மாவட்ட நெசவாள மக்களை தொடர்பு கொள்ளவும் ஹி ஹி)
படத்தோட இயக்குநர் ஜோஷி ஏற்கனவே தமிழ்ல சத்யராஜை வெச்சு ஏர்போர்ட் குடுத்தவர்தான்.இவர் படத்துல வேகமா ஜீப் வந்து கிரீச்சிட்டு நிற்கும் காட்சிகள் அதிகமா இருக்கும்.. நீங்க வேணா நோட் பணி பாருங்க..இந்த படத்துல 17 சீன் அப்படி வருது.. கஷ்ட காலம்டா சாமி..

படத்தோட கதை என்ன?ஒரு மினிஸ்டரோட பொண்ணு கடத்தப்படறா(ங்க).ஒரு கோடி ரூபா பணயத்தொகை..( ரொம்ப கம்மியா இருக்கே..?)மும்பை மாஃபியா கேங்க் கூட தொடர்பு உள்ள மோகன்லால் அவளை மீட்டுட்டு வர ரூ ஒரு கோடியே 10 லட்சம் ஃபீஸ் கேட்கறாரு..( நம்ம நக்கீரன் கோபால் மாதிரி)மீட்டுட்டு வர்றப்ப வில்லனை யாரோ ஷூட் பண்ணிடறாங்க.அது யாரு? ஏன் கொலை பண்றாங்க.. இதை எல்லாம் திரைக்கதை திருப்பங்களோட தாளிச்சு பிழிஞ்சு சொல்லி இருக்காங்க..

கேரளாவுல இது சந்தேகம் இல்லாத ஹிட்தான்.. எல்லா கமெர்ஷியல் அயிட்டங்களும் இருக்கு.3 ஹீரோயின்களுக்கும் தலா ஒரு பாட்டு இருக்கு.. ( சும்மா நாங்க 10 லட்சம் குடுத்துடுவமா?)

காவ்யா மாதவன் கேரளா குழாப்புட்டு மாதிரி இருக்கார்.. ( தொட்டு பார்த்தியா?ன்னு கேட்கக்கூடாது.. சும்மா ஒரு உத்தேசமா சொல்றது தான்)லட்சுமி ராய் அகர்வால் ஸ்வீட்ஸ் கோதுமை அல்வா மாதிரி நெகு நெகுன்னு இருகார்.. ( நெகமம் கந்த சாமி மன்னிக்க)கனிகா நல்லா அழகா இருந்தாலும் இந்த 2 யூத்துங்க முன்னால எடுபடல...(அடடா...ஜஸ்ட் மிஸ்)

நம்ம சித்தப்பா சரத் குமார் ஒரு கெஸ்ட் ரோல்ல கம்பீரமா வர்றார்.. வந்த வரை நல்லா பண்ணி இருக்கார்..


உத்தேசமா புரிஞ்சதுல நல்ல வசனங்கள்

1.  என்ன அநியாயம்ங்க இது..? 3 கோடி ரூபா மினிஸ்டர்க்கு தர்றீங்க.. அவரோட பி ஏ.. எனக்கு 3 % தர இப்படி யோசிக்கறீங்க?

2. சார்.. இந்த ஃபோட்டோக்களை பாருங்க.. ஏதாவது ஒரு பொண்ணை செலக்ட் பண்ணுங்க..

ஏம்ப்பா.. வேலைக்காரிக்குக்கூட இப்படி செலக்‌ஷன் பண்ணனுமா?

நீங்க சம்பளமே தர வேண்டியதில்லை.. தாலி மட்டும் கட்டீட்டா போதும்..

3.  இந்த ரகசியத்தை 3 வது ஆள் யார் கிட்டேயும் சொல்லீடாதீங்க..

ஹூம்.. 4 வது ஆளே மாடில நின்னு கேட்டுட்டான்.. கோவிந்தா..

என்ன சொன்னீங்க?

இல்லை.. அந்த ஈஸ்வரன் மேல இருந்து கேட்டுட்டு இருக்கான்னு சொல்ல வந்தேன்..

4. நீங்க யாரு? 

நான் மினிஸ்டரோட வுட் பீ

அவர் அப்படிப்பட்ட ஆள் இல்லையே...

சாரி.. மினிஸ்டரோட மகளோட வுட் பீ.. ஹி ஹி உளறீட்டேன்..


5. குட் மார்னிங்க் சார்...

இப்போ மணி என்ன?

சரி குட் ஈவினிங்க்.. இப்போ அதுவா முக்கியம்?

இயக்குநருக்கு சில கேள்விகள் ( தைரியமா  என்ன வேணாலும் கேட்கலாம்.. ஏன்னா அவருக்கு தமிழ் தெரியாது... எனக்கு மலையாளம் தெரியாது  ஹி ஹி )

1. மோகன் லால் அடிக்கடி டேய் ஆம்பளையா இருந்தா என் மேல கை வெச்சு பார்டா அப்படின்னு கேவலமான பஞ்ச் டயலாக்கை படம் பூரா 8 தடவை சொல்றார்.. வில்லன் பாட்டுக்கு சும்மா இருந்தாக்கூட எதுக்கு இப்படி தூண்டி விட்டு அடி வாங்கனும்? வேண்டுதலா..?

2. பணயத்தொகை ரூ ஒரு கோடி ஒரு பேக்ல தரப்படுது.. அந்த அசமஞ்சம் வில்லன் அதே பேக்லயே அதை வெச்சிருப்பானா? மாத்திக்க மாட்டான்..? அதுல ரகசிய ஒட்டுக்கேட்கும் கருவி இருக்கான்னு பார்க்க மாட்டானா?

3. பாஸ்போர்ட்டை யாராவது கோட் பாக்கெட்ல மேலே பிக் பாக்கெட் அடிக்க ஈஸியா இருக்கற மாதிரி வைப்பாங்களா?

4. வில்லனோட ஆட்கள் திலீப்பை சுற்றி வளைக்கறப்ப உன் பாஸ்போர்ட் எங்கே?ன்னு கேட்கவே இல்லை.. அவங்களே கை விட்டு எடுத்துக்கறாங்க.. அது எப்படி?

ஈரோட்ல சண்டிகா தியேட்டர்ல இந்தப்படம் பார்த்தேன். இங்கே ஒரு வாரம் ஓடும், கேரளாவுல 50 நாள் ஓடும்.


Cast:Mohanlal, Suresh Gopi, Dileep, Sarath Kumar, Lakshmi Rai, Kanika, Lakshmi Gopalswamy, Saikumar, Biju Menon, Vijayaraghavan, Suresh Krishna, Kunchan, Anand, Suraj Venjaramood, Shobha Mohan
Direction:Joshy
Production: A.V. Anoop, Maha Subair
Music:Deepak Dev

ஆனந்த விகடன் VS குஷ்பூ பேட்டி - காமெடி கும்மி

 http://www.anushkapics.com/images/anushka.jpg
 

முத்தமிழ் வித்தகர் டாக்டர் கலைஞர் ஆசி பெற்று கழகத்தின் கிளாமர் பேச்சாளராக குணவதி குஷ்பூ நம் நகரங்களில் வலம் வர இருக்கிறார்..பெண்களின் கற்பு பற்றி உயரிய கருத்துக்களை பகிர்ந்து 87 கோர்ட்களில் பாராட்டு பெற்றவரும்,ஷூட்டிங்க் ஸ்பாட்டில் கடவுள் படத்தைபார்த்தாலே பய பக்தியோடு கும்பிட்டு நல்ல பெயர் வாங்கியவரும்,ஜெயா டி வி யில் ஜாக்கெட்பாட் நிகழ்ச்சியின் மூலம் பெண்களுக்கு ஜாக்கெட் பற்றிய விழிப்புணர்வை ஊட்டியவரும் ஆகிய தானைத்தலைவி  (அம்மா தொண்டர்கள் மன்னிக்க)குஷ்பூ இந்த வாரம் ஆனந்த விகடனுக்கு பேட்டி அளித்திருக்கிறார்..

அந்த பேட்டியை அப்படியே தந்தால் சுவராஸ்யம் இருக்காது என்பதால் குஷ்பூவின் மனசாட்சி என்ன நினைத்திருக்கும் என்பதை எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்குடன் தந்துள்ளேன்..

தி மு க வுக்கு குஷ்பூவே தேவை இல்லாத ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்தானே என முணு முணுப்பவர்களுக்கு - சாரி.. இதை நீங்கள் உங்கள் தலைவரிடம் தான் கேட்க வேண்டும்.. ஹி ஹி


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGNL_oAkB5EsAjE_39uJspwn-OtvKno7Rod3kbTuxnYyZ1v6DOpBmiFqcWxC8S3opZ0DKx4k-ZKUSFc5EI496drYlLZqr5f_nkgOmNJefyeyMlf0hEig6bEQ4fQ9rndto1pAcnTljvd0x9/s320/kushbu_3_deviyar.jpg

1. ''முதன்முதலா பிரசாரத்துக்குக் கிளம்புறீங்க. என்ன பேசுவீங்க... பயமா இருக்கா?'' 

''எனக்குப் பயமே கிடையாது. 20 வருஷமா இங்கேதான் இருக்கேன். ரெண்டு பெரிய கட்சிகளைப்பத்தியும் நல்லாவே தெரியும். திராவிட அரசியல் வரலாறு தெரியும். நாட்டு நடப்பு தெரியும். வழக்கமான அரசியல்வாதிங்க மாதிரி நான் பேச மாட்டேன். எதிர்க் கட்சி யைப்பத்தியோ, அதன் தலைவர்களைப்பத்தியோ தப்பா பேச மாட்டேன். தலைவர் கலைஞர், தமிழ் மக்களுக்காக இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ், இலவச டி.வி, இலவச நிலம், ஒரு ரூபாய் அரிசின்னு அத்தனை விஷயங்களையும் பார்த்துப் பார்த்துப் பண்ணியிருக்கார். அதைச் சொன்னாலே, கோடிக்கணக்கான மக்களின் ஓட்டு எங்களுக்குத்தான்!''

குஷ்புவின் மனசாட்சி - எனக்கு எதுக்குங்க பயம்? சுந்தர் சி தான் பயப்படனும்..பொதுவா புருஷங்க தான் பொண்டாட்டி என்ன பேசிடுவாளோ.. வம்பை விலைக்கு வாங்கிட்டு வந்துடுவாளோன்னு பயப்படுவாங்க..பொண்டாட்டிங்களுக்கு கவலையும் கிடையாது, பயமும் கிடையாது..

2. ''பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள் ரெண்டு கட்சிகளும் ஒரு காலத்தில் உங்களைக் கடுமையா எதிர்த்தாங்க. இப்போ அவங்ககூட இணைந்து பிரசாரம் செய்யும் சந்தர்ப்பம் வந்தால்..?'' 

''கண்டிப்பா இணைந்து பிரசாரம் செய்வேன். இப்போ அவங்க எங்க அணியில்தானே இருக்காங்க. தலைவர் பாலிஸிதான் என் பாலிஸியும். மறப்போம்... மன்னிப்போம்!''


குஷ்புவின் மனசாட்சி -

டைரக்டர் சொல்றபடி கேட்கவேண்டியது ஒரு நடிகையோட வேலை.. ஹீரோ கூட டூயட் பாடச்சொன்னா பாடுவோம்.. வில்லன் கூட டூயட் பாடச்சொன்னாலும் பாடுவோம்..கலைஞர் தி மு க வோட டைரக்டர்...


3. ''ஸ்பெக்ட்ரம் பிரச்னை தி.மு.க-வுக்கு எதிரா இருக்குதே?'' 

''உண்மையில் ஸ்பெக்ட்ரம் ஒரு பிரச்னையே இல்லை. மீடியாதான் எல்லாத்துக்கும் காரணம். பரபரப்புக்காக, 'அவ்ளோ நஷ்டம்... இவ்ளோ நஷ்டம்’னு கிளப்பிவிடுறாங்க. கடைசியில், இப்போ டயர் பஞ்சர் ஆன மாதிரி புஸ்ஸுனு போயிருச்சு. எதிர்க் கட்சிகளுக்கு தி.மு.க-வைக் குறை சொல்லக் காரணமே இல்லை. அழுத குழந்தை கையில் பொம்மையைக் கொடுத்தா, அதையே வெச்சு விளையாடும். அது மாதிரி எதிர்க் கட்சிகள் ஸ்பெக்ட்ரமைக் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டாங்க!'' 


குஷ்புவின் மனசாட்சி -

அது என்ன ரம்மோ எனக்கு என்ன தெரியும்?ஒரு கூட்டத்துக்கு இவ்வளவுன்னு சம்பளம் குடுத்துடறாங்க.. என்ன பேசனும்னு எழுதிக்குடுத்துடுவாங்க.. போய் ஒப்பிச்சுட்டு வந்துடுவேன்,, தி மு க தோத்தா என்ன?  ஜெயிச்சா என்ன? எனக்கு கல்லா நம்புனா சரி (நிரம்புனா)
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj83a2f1m39wBAQmJp0X0ZwSYDuI8molwihBTspDwz32uU6Vn-UtFlyR0gH0yuCgTvZNXT8eM5a-6wDHsfhEf5ZfXcZrNsnMBQyXFCL0fOiqNi-ue7CPNQUrq2XTei5Eb8WgqIhLjoUZ9yd/s1600/kushboo%5B1%5D.jpg

4. ''கலைஞர் ஆட்சியில் அவர் குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிகம் என்பது ஒரு முக்கியக் குற்றச்சாட்டு...'' 


''அப்படின்னு மக்களா சொன்னாங்க? எதிர்க் கட்சிகள் புதுசு புதுசா யோசிச்சு காரணம் சொல்றாங்க. 'இவ்வளவு நல்லது பண்ணி இருக்கோம்’னு தைரியமா எங்களால் சொல்ல முடியும். அவங்களால சொல்ல முடியுமா? கலைஞர் ஆட்சியில் தப்பு கண்டுபிடிக்கப் பெரிய ஆராய்ச்சியே பண்ணிட்டு இருக்காங்க!''


குஷ்புவின் மனசாட்சி -

ஆமாங்க.. கலைஞர் வாரிசுலயே பாருங்க ஸ்டாலினுக்கு என்னை பிடிக்கும், அழகிரிக்கு பிடிக்காது.. கனி மொழிக்கு என்னை பிடிக்காது.. கட்சில ஒரு கிளாமரான ஆளு வர்றதை அவங்க விரும்பலை ... இதுவும் குடும்ப ஆதிக்கம் தான்.. ஆனா வெளில சொல்ல முடியுமா?


5. ''கார்த்திக், விஜயகாந்த், சரத்குமார்னு உங்க சினிமா நண்பர்கள் எதிர் அணியில் இருக்காங்களே?''

''நான் அவங்களை எதிர்த்துப் பேசறதுக்காகவோ, குறைச்சுப் பேசறதுக்காகவோ அரசியலுக்கு வரலை. ஒருவேளை, அவங்க என்னைத் தாக்கிப் பேசினாலும், நான் அவங்களைத் தாக்கிப் பேச மாட்டேன். எதிர்க் கட்சி என்பதால், அவங்க எனக்கு எதிரிகள் கிடை யாது. நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் ஆனப்போ, கட்சி வித்தியாசம் இல்லாம எல்லாப் பெண் எம்.பி-க்களும் ஒண்ணா நின்னு கை கொடுத்தாங்களே... அப்படித்தான் நான் அரசியல் பண்ண ஆசைப்படுறேன்!''


குஷ்புவின் மனசாட்சி -

இருந்தா என்ன? என்னமோ அவங்க நாட்டைக்காப்பாத்த வந்த தியாகிங்க மாதிரியும், நான் துரோகி மாதிரியும் பேசறீங்களே.. எல்லாரும் கூத்தாடிங்க தான்.. பணத்துக்காக எப்படி வேணும்னாலும் மாத்தி மாத்தி பேசுவோம்.. கல்லா கட்டற வேலையைத்தான் எல்லாரும் பார்க்கறோம்..?

6. ''விஜய் அரசியலுக்கு வர்றதைப்பத்தி...'' 

''நாட்டுக்கு நல்லது பண்ணணும்னு நினைக்கும் யாரும் அரசியலுக்கு வரலாம். ஆனால், சினிமா வேற... அரசியல் வேற! சினிமாவில் கை தட்டி, விசில் அடிப்பாங்க. அவங்க அப்படியே நமக்குத்தான் ஓட்டுப் போடுவாங்கன்னு நம்பி வரக் கூடாது. அரசியல்... சினிமாவைவிடச் சிக்கலான ஏரியா!''


குஷ்புவின் மனசாட்சி -

அவருக்கு படத்துலதான்  நடிப்பு சரியா வர்லைன்னு  பார்த்தா அரசியல்லயும் சரியா நடிக்க வர்லை.. இன்னும் பக்குவப்படனும்.. இப்போ என்னை ஜெவை யும் எடுத்துக்குங்க.. எவ்வளவு திறமையா நடிக்கறோம்..அந்த அளவுக்கு அவருக்கு அனுபவம் பத்தாது...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqqS4hYJwnWwJuNydfG72p_Bfbqv_XRXcQ8sliHQw8bTkoVGLV94VejAw4sQO5BB7bUE2IUvX7E11_79HeVlerO6CuHKDuv1VGs71XCGrcK6gfdldbAkkQQ9CYIoAL4cagPUQe2UnGvy4/s1600/kus.jpg
7. ''சரி... சினிமா பத்திப் பேசுவோம். உங்களுக்குப் பிடிச்ச ஹீரோயின் யாரு?'' 

''எனக்கு ஜோதிகாவை ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அவங்க ஒரு கம்ப்ளீட் ஹீரோயின். ரொம்ப வருஷம் கழிச்சு, இப்போ அனுஷ்காவைப் பிடிச்சிருக்கு. 'அருந்ததி’யில் பிரமாதமான பெர்ஃபார்மன்ஸ். நல்ல உயரம், நல்ல அழகு... நம்பர் ஒன் ஹீரோயினுக்கான எல்லா தகுதிகளும் அவங்களுக்கு இருக்கு!''


குஷ்புவின் மனசாட்சி -

நல்ல வேளை பிடிச்ச ஹீரோ யாருன்னு கேட்கலை.. பிரபுன்னு சொன்னா புருஷன் மூடு அவுட் ஆகிடுவாரு,, கார்த்திக்னு சொன்னா பிரபு மூடு அவுட் ஆகிடுவாரு.. இவங்க 3 பேர் கிட்டயும் சிக்கிட்டு நான் படற பாடு இருக்கே.. ஹய்யோ ஹய்யோ..


8. ''பலர் உங்களுக்கு ரசிகர்கள். நீங்க யாருக்கு ரசிகை?'' 

''நான் ஸ்கூல் படிக்கும்போது ரவி சாஸ்திரியோட ஃபேன். ஆனா, இதுவரை ஒரு தடவைகூட அவரை நேரில் பார்த்தது இல்லை. அது பெரிய வருத்தம். நடிகர்களில் நான் கார்த்திக் ரசிகை. 23 வருஷமா அவர் எனக்கு நல்ல ஃப்ரெண்ட். அவர் ஒரிஜினல் பேரான 'முரளி’ன்னு சொல்லித்தான் இப்பவும் நான் கூப்பிடுவேன். என் குழந்தைகளுக்கு அவர் பேரே தெரியாது. 'பெரியப் பா’ன்னு சொன்னாத்தான் தெரியும். என் குடும்பத்தில் அவரும் ஒருவர்!''


குஷ்புவின் மனசாட்சி -

நல்ல அப்பா.., நல்ல பெரியப்பா அமைஞ்சிருக்காங்க என் குழந்தைகளுக்கு.. .ஹி ஹி 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgF5j849OuiTd-uJqg5LnuW8BqyJOMgKSIEZ1aD3w0vjeTDZuQ7TGNg-X02sxmqsOKS2jzeRVhFSPiX1idG8ShD3AWuZ3-96gFdTVJobjsIzQ1ZzCfYlFzOIkKewUQEf6-NcToqhFjZNMxJ/s1600/ileana_vedi.jpg
டிஸ்கி -1 : இந்த பேட்டி குஷ்புவைத்தவிர யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. ஹி ஹி  

டிஸ்கி 2 : குஷ்பூவின் குலப்பெருமையை கேவலப்படுத்தி விட்டார்..சி பி மன்னிப்பு கேட்கும் வரை போராடுவோம் என யாராவது பதிவு போட நினைத்தால்.. வேணாம்ங்க.. ஏன் இந்த சிரமம்.. இங்கேயே இப்பவே மன்னிப்பு கேட்டுக்கறேன்.. ஹி ஹி ஈரோட்ல 10 ரூபாவுக்கு 5 மன்னிப்பு...


டிஸ்கி 3. - இலியானா ஃபோட்டோ எதுக்கு போட்டிருக்குன்னா ரொம்ப பழசா இருக்கே ஃபோட்டோக்கள் என யாரும் சலித்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக..

Friday, March 18, 2011

முத்துக்கு முத்தாக - வெற்றிக்கு வித்தாக -சினிமா விமர்சனம்

http://www.sivajitv.com/newsphotos/MuthukuMuthaga1.jpg
மாயாண்டி குடும்பத்தார்,கோரிப்பாளையம் ,பாண்டி,பூ மகள் ஊர்வலம் பட வரிசையில் இயக்குநர் ராசு மதுரவனின் 5 வது ஃபேமிலி செண்ட்டிமெண்ட் படமான இது கல் நெஞ்சையும் கரைக்கும், கண் கலங்க வைக்கும் அம்மா, அப்பா பாசக்கதை...இந்த கால இளைஞர்களுக்கு ஒரு பாடமாக வந்திருக்கும் இந்தப்படம் அடையப்போகும் வெற்றி ரவுடியிசக்கதைகளையே நம்பி குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டும் பாடாவதி இயக்குநர்களுக்கான சவுக்கடி,...

அம்மா, அப்பாவாக வாழ்ந்திருக்கும் இளவரசு - சரண்யா ஜோடிகளின் குணச்சித்திர நடிப்பு அருமை.அதுவும் இளவரசின் அண்டர்ப்ளே ஆக்டிங்கும் அவரது பாடி லேங்குவேஜூம் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு ஒரு பாடம்.

படத்தோட கதை என்ன?5 பசங்க பெத்திருந்தும் கடைசி காலத்துல மருமகள்களின் நயவஞ்சகத்தால் அடைக்கலமோ, பாசமோ கிடைக்காமல் பரிதவிக்கும் பெற்றொரின் கதை தான்...ஏற்கனவே தவமாய் தவமிருந்து, சம்சாரம் அது மின்சாரம்,வானத்தைப்போல போன்ற பல படங்களின் சாயல் இருந்தாலும் இது ஒருகவனிக்கத்தக்க படமே...

படத்தோட ஓப்பனிங்க் சாங்க்ல ஒளிப்பதிவு கண்களை அள்ளுகிறது.அதே போல் ஓப்பனிங்க் ஃபைட் சீனில் பதட்டத்தை ஏற்படுத்தாமல் ஏதோ லவ் தீம் மியூசிக் மாதிரி போட்டு பின்னணி இசையில் ஏன் சொதப்பினார்கள் என்பது தெரியவில்லை.. 


http://monikaonline.in/wp-content/uploads/2011/01/monika-muthukku-muthaga.jpg
கிராமத்து தெம்மாங்குப்பாட்டான  பொண்ணைபார்த்தா விசில் அடிப்பேன்...என்னத்தை பாட்டுக்கு  செமயான கலக்கல் இசை அமைத்து தியேட்டரை எழுந்து ஆட வைத்திருக்க வேண்டாமா? இசை அமைப்பாளர் ரொம்ப வே அடக்கி வாசித்தது ஏனோ..?அந்த பாட்டுக்கு எல்லா ஆண்களும் வேட்டையை அவிழ்த்து அண்டர் டிராயருடன் ஆடுவது மொத்தப்படத்துக்குமான திருஷ்டி...

படம் முன் பாதி வரை கலகலப்பாகப்போகிறது என்றால் அதற்கு முக்கியமான காரணம் சிங்கம்புலி. சாதாரண சீனைக்கூட இவர் செய்யும் அலப்பறைகளால் களை கட்டுகிற மாஜிக் தெரிந்தவர் போல..

.கதைக்களனாக  ஐவரில் ஒருவர் வேன் டிரைவராக வருவதும் அவரது வேனில் மோனிகா பயணிப்பதும் அழகு. ஆனால் நாயகி மோனிகாவை எந்த வித பில்டப்பும் இல்லாமல் சர்வசாதாரணமாக அறிமுகப்படுத்தியதை அகில இந்திய ”அழகி ” பட மோனிகா ரசிகர் மன்றத்தை சார்ந்தவன் என்ற முறையில் இயக்குநரை வன்மையாக கண்டிக்கிறேன்..

அதே இயக்குநர் இன்னொரு  நாயகி களவாணி ஓவியாவுக்கு மட்டும்  ஸ்லோமோஷனில் செம பில்டப்போடு அறிமுக சீன் வைத்தது ஏன்?
ஆனால் தாவணீயில் வந்து கிராமத்துமாணவியாக மனதில் பதிந்த ஓவியா இதில் சிட்டி காலேஜ் கேர்ளாக எடுபடவில்லை.. அதுவும் அவரது ஹேர் ஸ்டை பல காட்சிகளில் சகிக்க வில்லை.

http://narumugai.com/wp-content/uploads/2010/09/oviya-4.jpg
மோனிகா காதலன் தனக்கு கிடைக்கமாட்டான் என தெரிந்து கதறுவது செம நடிப்பு.. அவரது கழுத்து நரம்புகள் புடைக்க கதறும் அந்த சீனில் மோனிகாவின் அர்ப்பணிப்பான  நடிப்பு அட்டகாசம்.

ஐந்து மகன்களில் இருவருக்கு திருமணம் ஆகிறது.. அதில் ஒரு மகன் வீட்டோட மாப்பிள்ளையாக போகிறான்.. அந்த சீனில் அந்த மகன் கண் கலங்கிக்கொண்டே வீட்டை விட்டுக்கிளம்பும் சீன் டாப் கிளாஸ் நடிப்பு....

5 மகன்களிடம் அடி வாங்கும் ஆள் இந்த தேன் கூட்டின் மீது கை வைக்காதீர் என கட் அவுட் வைப்பது செம காமெடி சீன்...அதே போல் வேன் வாடகைக்கு ஆசைப்பட்டு ஒரு கல்யாண ஜோடியையே பிரிக்கும் காமெடியும் கலகல ..
சிங்கம்புலியின் கரிமேடு கருவாயன் கெட்டப் நகைக்க வைக்கிறது..

கிளாமர் ஹீரோயின் என்றால் ஸ்லோமோஷன்ல பேஸ்கட் பால் விளையாட வேண்டும், ஜீன்ஸ் பேண்ட் டைட் டீ சர்ட் போட்டு ஜாக்கிங்க் போக வேண்டும் (அதுவும் ஸ்லோ மோஷன்ல தான்) என்ற கோடம்பாக்கத்தின் மாறாத செண்ட்டிமெண்ட்டை வரவேற்கிறேன்.. (ஹி ஹி கிடைச்ச வரை லாபம்....)

http://monikaonline.in/wp-content/uploads/2011/01/Muthukku-Muthaga-Audio-Launch-monika.jpg

என்ன பண்ணி தொலைச்சே.. என் நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுத்துதே  பாட்டுக்கு மோனிகா ஆடும் டான்ஸ் இதம்... பாடல் வரிகள் இலக்கிய நயம். படமாக்கிய விதம் கண்ணியம்..

ஊருக்கு போய் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் ஒரு பையன் அம்மா சேலையையும், அப்பா வேட்டியையும் ஞாபகத்துக்காகவும் , வாசத்துக்காகவும் எடுத்து செல்வது செம செண்ட்டிமெண்ட் சீன்..

ஒரு சுடிதார் பூ வந்து என்னைத்தொட்டு சென்றது.. என் கன்னம் 2-ல் ஹைக்கூ சொல்லி சென்றது 30 நாளும் பவுர்ணமியே பாட்டுக்கு ஓவியா ஆடும் சீனும் கலக்கலான கொரியோகிராஃபி..

இந்த பாடலுக்கு பிளாக் ஜீன்ஸ் + ஸ்கை ப்ளூ டீ சர்ட்டில் ஓவியா ஆடும்போது.. செம கிளு கிளு..

நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு பாட்டுக்கு கிராமத்தின் பெருமையை அறிமுகப்படுத்தும் காமெடி சீன்கள் ஓக்கே ரகம்...
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_145913000000.jpg
முத்துக்கு முத்தான வசனங்களில் நினைவில் நின்றவை...

1. எம் பி பி எஸ் படிச்சுட்டு ஃபாரீன் டாக்டர் ஆகாம் ஏன் இந்த கிராமத்துக்கு வந்தேன்? இங்கே ஜாதிச்சண்டை அதிகம்...நிறைய பேரு வெட்டிக்குவாங்க.. அடிச்சுக்குவாங்க.. 4 காசு சம்பாதிக்கலாம்னுதான்.....

2.  அண்ணே.. உள் குத்து, வெளி குத்து என்ன வித்தியாசம்?

அவங்க ஆள்கள் அவங்களுக்குள்ளேயே அடிச்சுக்கிட்டா அது உள்குத்து.. வெளி ஆட்களை அடிச்சா அது வெளி குத்து...

3.  என்னது வீட்டோட மாப்பிள்ளையாவா..? இது சரி ஆகுமா?

நம்ம பசங்க எப்படி வாழறாங்கன்னு பார்க்கனும்.. எங்கே வாழறாங்கன்னு பார்க்கக்கூடாது..

4. என்னதான் வீட்டுசாப்பாடு ருசியா இருந்தாலும் மாமன் மச்சான் வீட்ல ஓசி சாப்பாடு சாப்பிடற சுகம் இருக்கே,,,.. அடடா...

5.. டே.. எதுக்கு இவ்வளவு பதட்டம்..? முத ராத்திரி ரூம்ல இருந்து வெளில வந்து எதிர்ல இருக்கற பொருளை எல்லாம் தட்டி விடறே.. கைல குடுத்த காபி டம்ளரை தட்டி விட்டே... ஆனா தலைல இருக்கற மல்லைகைப்பூவை தட்டி விடாம இருக்கே..? அதை முதல்ல தட்டி விடடா..

6. எண்ணையை தூக்கி உள்ளே வைடான்னா என்னை தூக்கி உள்ளே உட்கார வைக்கறியா..?

7. ஹீரோ -எந்த அழகான பொண்ணு என் எதிரே வந்தாலும் ஆட்டோகிராஃப் வாங்கறது என் பாலிசிங்க..போடுங்க...

8.சிங்கம்புலி  -எதுக்குய்யா என்னை சுருட்டைன்னு கூப்பிடறீங்க.? சச்சின் டெண்டுல்கர்னு கூப்பிடுங்க..

9.   அண்ணே , என் ஆளு வர இன்னும் 10 நிமிஷம் ஆகும் .எப்படியாவது இவங்களை  சமாளி....

சிங்கம்புலி - ஆமா.. இவனுங்க என்ன கலெக்டர் ஆஃபீஸ்லயா வேலை பார்க்கறானுங்க..?

10. சிங்கம்புலி - வண்டி 10 நிமிஷம் நிக்கும், யூரின் போறவங்க எல்லாரும் போயிட்டு வந்துடுங்க..

யோவ்,, வண்டி கிளம்பியே 10 நிமிஷம் தான் ஆகுது.. அதுக்குள்ளே  யூரின் போன்னா எப்படி வரும்?

11.  சிங்கம்புலி - யோவ்.. இடைத்தேர்தல் வந்தா ஓட்டுக்கு ரூ 10000 கிடைக்கும்.. செத்துத்தொலைய்யான்னா சாக மாட்டேங்கறே.. நீ எல்லாம் என்னய்யா எம் எல் ஏ..?

12. எல்லா நாளும் சண்டேவா இருந்தா ரொம்ப நல்லாருக்கும்.. நாம் எல்லாரும் குடும்பத்தோட சந்தோசமா இருக்கறது  அன்னைக்குத்தானே..

13.  என்னதான் ஏ சி ரூம்ல சாப்பிட்டாலும் அம்மா கையால சாப்பிட்ட மாதிரி வருமா?

14.  சரண்யா - டே.. தம்பி.. காலேஜ்க்கு போ.. படி ஆனா பாஸ் மட்டும் ஆகிடாதே., அப்புறம் எங்களை  பிரிஞ்சு போயிடுவெ...

15.  நாங்கதான் 10 மாசம் சுமந்து பெக்கறோம்..

அடிப்போடி.. உங்களுக்கு அந்த 10 மாசத்தோட முடிஞ்சிடுது மொத்த வேலையும்.. மீதி நாள் பூரா கஷ்டப்படறது நாங்கதான்.. அடுத்த ஜென்மம்னு  ஒண்ணு இருந்தா நான் உனக்கு பொண்டாட்டி ஆகனும், நீ என் புருஷன் ஆகனும். நீ இப்போ நீ  பண்ற சித்திரவதை எல்லாத்தையும் நான் உனக்கு                 பண்ணனும்..

என்ன சாபம் குடுக்கறீங்களா?

கையாலாகாத  ஆம்பளைங்க சாபம் தான் குடுக்க முடியும்.. ( இந்த சீனுக்கு செம க்ளாப்ஸ்.. ஏகப்பட்ட ஆம்பளைங்க பாதிக்கப்பட்டிருக்காங்க போல )
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/05/D-0490.jpg
பல காட்சிகளில் அம்மா செண்ட்டிமெண்ட்டையும், ஆண்களே கண் கலங்க வைக்கும் காட்சிகள் வைத்தும் இயக்குநர் பாராட்டைப்பெறுகிறார்..

மாமனார் மாமியார் வந்ததும் தனது அம்மா வீட்டில் போய் சாப்பிட்டு விட்டு கடையில் டிஃபன் வாங்கி வருவது,பேரனைப்பார்க்க வந்த மாமியார் ஆஸ்துமா பேஷண்ட் என்பதால் தன் குழந்தைக்கும் வந்து விடும் என அவனை அண்ட விடாமல் பண்ணுவது , வீட்டோட மாப்ளையான பையன் அங்கே மரியாதை கிடைக்காமல் மன்ம் ஒடிந்து வந்து அம்மா பசிக்குது சோறு போடு என சொல்லும் இடங்கள் என கண்களை குளம் ஆக்கும் சீன்கள் மட்டும் 13 இடங்கள்.

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. சொல்லி வைத்தது மாதிரி எல்லா மருமகள்களும் அப்படி கொடூரமாக இருப்பார்களா? யாராவது ஒருவரையாவது பாஸிட்டிவ்வாக காண்பித்திருக்கலாம்..

2. மோனிகாவும், ஹீரோவும் செல் ஃபோன் ரிங்க் டோனில் காதல் பாட்டு ரிங்க் டோன்களை மாற்றி மாற்றி வைத்து வேனில் காதல் தூது விடுவது கவிதையான சீன் தான்.. ஆனால் செல் ஃபோனில் ரிங்க் டோனோ அல்லது மெசேஜோ வந்தால் லைட் எரியுமே.. என்னாச்சு? 

3. க்ளைமாக்ஸ் ஃபைட் சீனில்  பின்னணி இசை அந்தகாலத்து பழைய பாணீயில் ஏன்..?

4. கதைக்களன் திண்டுக்கல்லில் நடப்பது போல் காட்டி இருக்கிறீர்கள். புது மணத்தம்பதிகள் கல் உப்புக்குவியலில் கால் வைத்து மிதிப்பது போல் ஒரு சாங்கிய சம்பிராதய சீன் உள்ளது.. உப்பை தாண்டுவாங்க.. மிதிக்க மாட்டாங்க..

5. க்ளைமாக்சில் அரளி விதை அரைத்த துவையலை  ( பச்சை கலர்)சரண்யா மட்டன் குழம்பில் மிக்ஸ் பண்றாங்க... ஆனா அதே கலர்ல தான் குழம்பு இருக்கு மாற்றமே இல்லை கலர்ல..

6. மருமகள் அரளி விதையை அரைச்சு குடிச்சு சாக வேண்டியதுதானே  என திட்டியதால் மனம் உடைந்த சரண்யா கணவனுடன் சாவது ஓக்கே.. ஆனால் தற்கொலைக்கு தூண்டிய வழக்கு மருமகள்  மீது போடலை.. அவளுக்கு தண்டனையே தர்லையே ஏன்?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_txRCodujsFK0B71dlN4xtlPQiunyEcAqqHiqJkebXmXOqjhEaB0T_Pl_pN4hVcD82ZsDas6oP5kcBpYNGYBGdHW67rpIrluwJdKz5zU_FarnQgRbnYJ_LiiEDYqSoleQg9z4azdkO-uk/s320/Kollywood-news-1740.jpg
படம் பார்க்கும் இளைஞர்களுக்கு இயக்குநர் சொல்ல வரும் கருத்துக்கள்

1. கோடி கோடியா கொட்டி கொடுத்தாலும் வீட்டோட மாப்பிள்ளையா போகாதே..ஆரம்பத்துல சுகமா இருக்கும்.. ஆனா போகப்போக மதிக்க மாட்டாங்க..

2. அம்மா, அப்பா செத்த பிறகு அவங்களை நினைச்சு கண்ணீர் சிந்துவதை விட அவங்க உயிரோட  இருக்கறப்பவே அவங்களுக்கு ஏதாவது நல்லது செய்.

படம் முடியற ஸ்டேஜ் வந்ததும் நான் அப்படியே சுத்தி பார்க்கறேன். எல்லாரும் அவசர அவசரமா கண்களை துடைச்சுக்கறாங்க.. அவங்க விடற கண்ணீர் வெளி ஆட்களுக்கு தெரிஞ்சுடக்கூடாதாம்..லைட் போடப்போறாங்கள்ல...
இந்தப்படம் பி  செண்ட்டர்களில்  40 நாட்கள் , சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடும். ஏ செண்டர்களில் 30 நாட்கள் ஓடலாம்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் -ஓக்கே

ஈரோடு ஆனூர்ல படம் பார்த்தேன்.. லட்சுமிலயும் போட்டிருக்காங்க..

சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய பெண்ணை செம ஃபிகர்,செம கட்டை என வர்ணிப்பது தவறா?ஆனந்த விகடன் அலசல்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXsu1hsF-hokpG9x2WaB0l5102_tzJpThllMvUyxVKpcmzWwx9-N8VkbMioJ3fVJweBgyEQsJXW_d7Q9YWT8RIIMFjVcMvyylTRkn2ESBfLS34fXhhlUY0CyoNBrwoTdLTK6kwfSWXDcE/s400/Kanika-Plain-Silk-Indian-Saree--homelyheroines.blogspot.jpg 

சமீபத்தில் நான் ஒரு சினிமா விமர்சனம் எழுதும்போது ஹீரோயினின் அண்ணியை செம கட்டை என வர்ணித்து விட்டேன். அது பலரது மனங்களை சங்கடப்படுத்தியதாக நண்பரின் பதிவைப்படித்து வருத்தம் அடைந்தேன்.இனி அது போல் தவறு நேராமல் கவனமாக இருக்கிறேன் என பின்னூட்டம் இட்டேன்.

இந்த வார ஆனந்த விகடனில் வந்த ஒரு கட்டுரை பெண்களின் வலியையும்,அவர்களது மன நிலையையும் மனதை பாதிக்கும் வண்ணம் எழுதப்பட்டு இருந்தது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

'பசியை மறந்தோம் பெண்ணைக் கண்டு... கவலை மறந்தோம் பெண்ணைக் கண்டு!’ என்று ஆண்களுக்கு... பெண்களைக் கண்டால் பசியும் கவலையும் மறந்துபோவது, அவளின் வெளித்தோற்றத்தை மட்டும் பார்ப்பதால்தான்! 

சாலையில் எதிர்ப்படும் பெண்களை எல்லாம் ரசித்துவிட்டுச் செல்லும் ஆண்களுக்கு, பெண்ணின் மனம் புரியாத புதிர்தான். பெண் மனம் ஆழம்... அவ்வளவுதான் சமூகத்தின் புரிதல். அவளை நெருங்கி, அவள் மனதின் அடியாழத்தைப் புரிந்துகொண்டால், அவளை ரசிக்க முடியாது. மாறாக, அதிசயிக்கத் தோன்றும்!

ஒவ்வொரு பெண்ணின் மனதுக்குள்ளும் மொழியப்படாமல் இருக்கும் வாக்கியங்கள் எத்தனை என்பதை அவள் மட்டுமே அறிவாள்.
சுலபமாக ஒரு பெண்ணைக் குறித்து 'மொக்கை ஃபிகர்’, 'சுமார் ஃபிகர்’, 'சூப்பர் ஃபிகர்’ என்று மதிப்பெண் அளிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை... நெருங்கி, பேசி, பழகி உணர்ந்த பிறகு, 'மொக்கை ஃபிகர்’ என்று முன்னர் பட்டமளிக்கப்பட்ட பெண், உங்களுக்குப் பேரழகியாகத் தோன்றும் அதிசயம் அனுபவித்தது உண்டா?

அவளது ஒரு புன்சிரிப்புக்காக, 'சாப்டியா?’ என்ற ஒற்றை விசாரிப்புக்காக ஏங்கித் தவித்த அனுபவம் உண்டா? இறுக்கம் தவிர்த்து உருக இலகுவாக இருங்கள்... உணர்வீர்கள்!


யார் கண்டது? நீங்கள் தினமும் பார்க்கும் பெண்களில் ஒருத்தி கள்ளிப் பாலுக்குத் தப்பியவளாக இருக்கக்கூடும்.

அல்லது ஒரு கண்ணில் வெண்ணெய் மற்றொன்றில் சுண்ணாம்பு கதையாக, வீட்டில் சகோதரனுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரம் மறுக்கப்பட்டவளாகவோ, கணவனால் துரத்தப்பட்டவளாகவோ, சுதந்திரம் வேண்டி கணவனை விவாகரத்து செய்தவளாகவோ, குடும்ப நிர்பந்தம் காரணமாக உயிருக்கு உயிராகக் காதலித்தவனை மறந்து, வீட்டில் பார்த்தவனை மணம் முடித்து, துயரத்தைச் சுமந்து வாழ்பவளாகவோ இருக்கக்கூடும். 
 http://www.our-kerala.com/newgallery/images/photos/images/Kanika_8608.jpg
ஏழ்மை நசுக்க வாழ்வின் ரணங்களை அனுபவித்தவளாகவோ, அம்பையின் 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ கதையில் வருவதுபோலத் தன் வாழ்நாளில் ஆயிரக்கணக்கான தோசைகளைச் சுட்ட அனுபவம் உள்ளவளாகவோ...  இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கக்கூடும்!
பொதுவாகவே, பெண்கள் 'வேண்டாம்’ என்றால், 'வேண்டும்’ என்று சொல்வதாக அர்த்தம் என ஒரு கருத்து நிலவுகிறது. 

எல்லாப் பெண்களுக்கும் இது பொருந்துமா? நிச்சயம் இல்லை. தன்னம்பிக்கை உள்ள பெண்களிடத்தில் எது கேட்டாலும், மனதில் உள்ளதைப் பட் படாரென்று உடைத்துச் சொல்லிவிடுவார்கள். ஆனால், கட்டுப்பெட்டியாக, 'வாய்ப் பூட்டு’ சட்டம் இயற்றப்பட்ட சூழலில் வளர்க்கப்பட்டவர்களால் நினைத்ததை அத்தனை சீக்கிரம் வெளியில் சொல்லிவிட முடிவது இல்லை. அதனாலேயே மென்று விழுங்கி, மனம் 'ஆம்’ என்று சொல்ல, உதடுகள் 'இல்லை’ என்று சொல்லும் விபத்து நேர்கிறது.

என் நெருங்கிய தோழி செல்விக்கு செவ்வாய் தோஷம் என்பதால் திருமணம் விரைவாக நடக்காது என்கிற பயத்தில் இருந்தனர் பெற்றோர். செவ்வாய் தோஷம் உள்ள மாப்பிள்ளை ஒருவர் வர, அவள் படிப்பைப் பாதியில் நிறுத்தி அவசரமாக மணம் முடித்தனர். அவளோ நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவள். பாட்டு, நடனம் என்று எல்லா திறமைகளும் கொண்டவள்.

ஆளுமைத் திறன் வாய்க்கப்பெற்ற அவள் மட்டும் படிப்பை முடித்திருந்தால், ஒரு திறமையான அதிகாரியாக வலம் வந்திருப்பாள். ஆனால், எல்லாம் இருந்தும் அவளால் அவள் பெற்றோரை எதிர்த்துப் பேச முடியவில்லை. திருமணமாகிச் சில நாட்கள் கழித்து நான் அவளைப் பார்க்கச் சென்றபோது, வீட்டுக் கொல்லைப்புறத்தில் அமர்ந்து பாத்திரம் துலக்கிக்கொண்டு இருந்தாள். அப்படி அவளைக் காண நேர்ந்த அந்த துரதிஷ்ட கணம் வாழ்வில் வராமலேயே இருந்திருக்கலாம்.

'சிந்து பைரவி’ படத்தில் பாட்டு கற்றுக்கொள்ளும்போதும் சுலக்‌ஷனா மாடியில் காயப்போட்ட வடாம்பற்றி கவலைப்படுவதுபோல, பணியிடத்திலும் வீட்டைப் பற்றிய நினைவுகளிலேயே நீந்திக்கொண்டு இருப்பார்கள் பெண்கள். மெகா சீரியல்கள் என்ற போர்வையில் வரும் நிகழ்ச்சிகளும்கூட, பெண்களை ஒரு வட்டத்துக்குள்ளேயே இழுக்கின்றன. ஆனாலும், பொழுதுபோக்க வேறு வழி இல்லாத நிலையில், பெண்களும் சீரியல்களையே பார்க்கத் தலைப்படுகின்றனர். 

எப்படி வீட்டுக்கு வெளியே ஓர் உலகம் உண்டு என்பதைப் பெண் மனது நம்ப மறுக்கிறதோ, அப்படியே சீரியல்களைத் தாண்டிய நிகழ்ச்சிகளைத் தர நம் ஊடகங்களும் மறுக்கின்றன. அப்படியே வந்தாலும், சமையல், அழகுக் குறிப்புகள் என்று மீண்டும் மீண்டும் ஆணுக்காக ஒரு பெண்ணைத் தயார் செய்வதை மட்டுமே மீண்டும் வலியுறுத்துகிறார்கள். என்ன செய்ய... 'ஆணுக்கு உலகம் எல்லாம் வீடு... பெண்ணுக்கு வீடுதான் உலகம்’ என்று பெண்களையே நம்பவைத்த உலகம்! 

சேலை, சுடிதார், ஜீன்ஸ், ஸ்கர்ட் என்று சாலைகளில், கோயில்களில், அலுவலகங்களில் எதிர்ப்படும் பெண்கள் விதவிதமானவர்கள். பெண்கள் அணியும் உடைகளை வைத்து அவளை எடை போடுவது இன்னமும் சமூக வழக்கமாக இருக்கிறது. பெண்கள் அணியும் உடையே ஈவ் டீஸிங்குக்குக் காரணம் என்று கருதி, கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பெண்களுக்கு மட்டும் டிரெஸ் கோட் கெடுபிடிகள் அரங்கேறும். ஈவ் டீஸிங்குக்குப் பலியான சரிகா ஷா அணிந்திருந்தது துப்பட்டாவுடன் கூடிய சல்வார் கமீஸ்தானே?

பணி நிமித்தம் சொந்த ஊரில் இருந்து வந்து ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண்களின் உலகம் பிறர் அறியாதது. இப்படியான ஊர்க் குருவிகளின் எண்ணிக்கை சென்னையில் அதிகம். இரவில் எத்தனை மணிக்குப் படுத்தாலும், அதிகாலையில் எழ வேண்டும். இல்லையென்றால், குளிக்க பாத்ரூம் கிடைப்பதில் துவங்கும் அன்றைய சிக்கல். 

ஒரு சிறிய அறையில் நான்கைந்து கட்டில்கள் ஒட்டி ஒட்டி கிடத்தப்பட்டு இருக்கும். சில ஹாஸ்டல்களில் ரயில் பெர்த்போல படுக்கைகள் மேலும் கீழுமான அடுக்கடுக்காக இருக்கும். தூக்கக் கலக்கத்தில் எழுந்து தலையில் நச்சென்று மோதிக்கொள்வதில் புலரும் பலரின் பொழுதுகள். ஒரு சின்ன ஷெல்ஃபில் அத்தனை பேரின் பொருட்களையும் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கே வாடகை நான்காயிரத்துச் சொச்சமாக இருக்கும். குருவிக் கூடு அறையில், நான்கைந்து பெண்கள் அவரவர் கனவுகள் அனுமதித்த எல்லைக்குள் உலவிக்கொண்டு இருப்பார்கள்.

விடுதி அறைத் தோழி ஒருத்தியின் அப்பா பல வியாதிகளோடு போராடிக்கொண்டு இருக்கிறார். அம்மாவும் அத்தனை சுகம் இல்லை. இவளுடைய சம்பளம்தான் அந்தக் குடும்பத்தின் ஜீவ நாடி. பெற்றோர் மேல் அத்தனை பாசம் இருந்தாலும், மாதம் ஒரு முறைகூட ஊருக்குச் சென்று அவர்களைப் பார்த்து வர மாட்டாள்.

விடுதித் தோழிகள் அவளைத் திட்டித் தீர்க்கவும் அதற்கான காரணத்தைக் கம்மல் குரலில் சொன்னாள் ஒருநாள், 'ஒரு தடவை நான் ஊருக்குப் போயிட்டு வந்தா, குறைஞ்சது ஆயிரம் ரூபா ஆகும். அந்தக் காசு மிச்சப்பட்டா, அது அப்பாவுக்கு ஒரு வாரம் மருந்துக்கு ஆகும்ல. நான் அங்கே போய் என்ன அவங்களுக்கு மருத்துவமா பார்க்கப் போறேன்?’

இன்னொரு தோழிக்கு காலை 4 முதல் 9 மணி வரை கால் டாக்ஸி அலுவலகத்தில் பகுதி நேர வேலை. அது முடிந்து அரக்கப் பறக்க ஹாஸ்டலுக்கு வந்து குளித்து அலுவலகம் செல்வாள். மாலை 6 மணிக்குத் திரும்பியதும் மீண்டும் கால் டாக்ஸி அலுவலகத்துக்கு ஓட்டம். இரவு 11 மணிக்கு நிதானமாகச் சாப்பிட்டு, எங்களோடு பேசி நாட்டு நிலவரம் அறிந்துகொண்டு, 12 மணிக்கு படுக்கையில் சாய்வாள். 

அடுத்த நாள் மீண்டும் 4 மணிக்கு அலாரம் அடிப்பதற்கு முன்னரே துடித்தெழுந்து ஓடிக்கொண்டு இருப்பாள். ஒரு முறை, மாதக் கடைசியில் ஹாஸ்டல் வார்டனிடம் விடுதிக் கட்டணத்தை எண்ணிக்கொடுத்துவிட்டு, கையில் மிச்சம் இருந்த பணத்தை வெற்றுப் பார்வை பார்த்துக்கொண்டு இருந்தாள். தோள் தொட்டு உலுக்கியதும், ''இந்த ரூவா நோட்டு அத்தனையும் என் வேர்வைப்பா!'' என்றவளின் குரல் இன்னமும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது!


நட்பும் காதலும்தான் பெரும்பாலான பெண்களை உற்சாகமுடன் இயக்கிக்கொண்டு இருக்கிறது. சாலையில் நடந்துகொண்டே இயர்போனில் பேசியபடி செல்லும் பெண்களைப் பார்த்திருப்பீர்கள். சிலர் திட்டியும் இருப்பீர்கள். கொஞ்சம் அவர்கள் அருகில் சென்று கேட்டுப் பாருங்கள். எவ்வளவுதான் நெருங்கிச் சென்று கேட்டாலும், அவர்கள் பேசுவது உங்கள் காதில் விழாது. அவ்வளவு மெல்லிய குரலில் பேசுவார்கள். 

பெற்றோருடன் வாழும் பெண்ணாக இருந்தாலும், ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண்ணாக இருந்தாலும், தனியாகப் பேசுவதற்கென பெண்களுக்கு சுதந்திரப் பிரதேசமே கிடையாது. ஆகவே, பலர் அருகில் இருந்தாலும் தனிப்பட்ட விஷயங்களை யாரும் அறியாதவாறு பேச நிர்பந்திக்கப்பட்டு, பரிணாம வளர்ச்சியாக அந்த மென் குரல் உரையாடல் கலையைக் கற்றுக்கொண்டது பெண்ணினம்.

ஓர் ஆண், பலர் முன்னிலையில் ஒரு பெண்ணுக்கு போனில் 'ஐ லவ் யூ’ சொல்வது இங்கே ஃபேஷன். ஆனால், தன் நெருங்கிய தோழியாக இருந்தாலும்கூட, அவள் முன்னே அந்த மூன்று வார்த்தைகளை ஒரு பெண் சொல்ல முடியாத சூழல்!

நெருங்கிய தோழிகளாய் இருந்த எத்தனையோ பெண்கள் திருமணம் முடித்து கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்பறுந்து புகுந்த வீட்டில் ஒரு மெஷினாக இயங்கிக்கொண்டு இருக்கும் வாழ்க்கைச் சூழலின் வேதனையை ஒரு நாளேனும் உணர்ந்து இருக்கிறீர்களா? என்றேனும், எங்கேனும், உருவம் மாறி பருமனாகி, கையில் குழந்தையுடன், கவலை ரேகைகள் படர்ந்த முகத்துடன் சந்திக்க நேரும்போது, தோழியைக் கண்டுகொண்ட மகிழ்ச்சியைவிட, அவள் உருவம் அளிக்கும் உணர்வு மனதைப் பிசையும். 

'எப்படி இருக்கே?’ என்ற கேள்விக்கு, 'நல்லா இருக்கேன்!’ என்று சம்பிரதாயமாக உதடுகள் சொன்னாலும், காட்டிக்கொடுக்கும் கண்களை என்ன செய்ய முடியும்?

கிண்டி தொழிற்பேட்டை அருகே, ரேஸ் கோர்ஸ் சாலையில் காலை, மாலைகளில் சென்னையில் எங்குமே காணக் கிடைக்காத தாவணி அணிந்த பெண்களைக் காண முடியும். எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் பலர் 9 மணிக்குள் அலுவலகத்தினுள் இருக்க வேண்டும். 

10 நிமிடங்கள் தாமதமானாலும்கூட அரை நாள் விடுமுறையாகக் கணக்கில் கொள்ளப்பட்டு, அற்ப சொற்ப சம்பளத்தில் அதுவும் பிடித்தம் செய்யப்படும். அந்த அயோக்கியத்தனத்துக்குப் பயந்து, அந்தப் பெண்கள் காலையில் பேருந்து ஒவ்வொரு ஸ்டேஜைக் கடக்கும்போதும் மணி பார்த்துப் பார்த்து நகத்தைக் கடிக்கும் தவிப்பு நமக்கே பதற்றத்தை உண்டாக்கும். 

ஸ்டேஜ் க்ளோஸிங் என்று பேருந்து ஓரங்கட்டி நிற்க, அழாக்குறையாக அந்தப் பெண்கள், 'அண்ணே... அண்ணே வண்டிய எடுங்கண்ணே! வெளில நிக்க வச்சுருவாங்கண்ணே!’ என்று கெஞ்சிய முகங்களைப் பார்த்தால் எவருக்கும் மனம் கலங்கும். தங்களுக்கு பவுடர், பொட்டு வாங்குவதற்கோ... ஜீன்ஸ், டாப்ஸ் போன்ற நவநாகரிக ஆடைகள் வாங்குவதற்கோ அந்தப் பெண்கள் தங்கள் ஆயுளைத் தேய்த்துத் தீய்த்து உழைப்பதில்லை. குடும்பத்தினரின் மூன்று வேளை உணவுக்காகத்தான் இந்தப் பாடு!

பெண்கள் அனைவருக்கும் பாலியல் தொல்லைகள் இல்லாத பணியிடங்கள் வாய்ப்பது இல்லை. பேருந்தில் உரசும் வக்கிரத்தில் இருந்து அலுவலக ஃபைலுக்கு அடியில் விரல் தடவும் எதேச்சதிகாரம் வரை அனைத்தையும் கடந்துதான் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறாள் பெண்.

ஓர் ஆண் தன் பணியில் முன்னேறி மேலே சென்றால், அவனது திறமை காரணம் என்று புகழும் உலகம், அதையே ஒரு பெண் சாதித்தால், 'வேறு வழி’யில் சாதித்தாள் என்று புறம் பேசும். தன் உழைப்பில் தன்னைச் சார்ந்தவர்களை வாழவைக்கும் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பெற, ஒரு பெண் கடக்க வேண்டிய பாடுகள் சொல்லி மாளாது.

எது எப்படியோ, பெண்களின் வியர்வையும் கண்ணீரும் சமமாகக் கலந்திருக்கும் சமுத்திரத்தின் நீர்தான் ஆவியாகி ஆண்களின் உலகில் மழையாய்ப் பெய்து வளமாக்குகிறது!

Thursday, March 17, 2011

ஆணவத்தால் ஆடிய ஆரணங்கே... தனக்குத்தானே ஊதிக்கொண்டீர்கள் சங்கே

http://inthiya.in/ta/wp-content/uploads/2011/03/vijayakanth-dmdk-jayalaitha-aiadmk-join-hands.jpg 

அரசியலில் புதுத்திருப்பம்.வை கோவை அவமானப்படுத்திய அம்மா பாடம் கற்க வேண்டிய தருணம் வந்து விட்டது.3 வது அணி உருவானால் கலைஞருக்கு கொண்டாட்டம். தமிழனுக்கு இருந்த ஒரே நம்பிக்கையும் போச்சு.எம்ஜிஆரையே மதிக்காதவர் தான் இந்த ஜெ.கூட்டணிக்கட்சித்தலைவர்களை இவரைப்போல் கேவலப்படுத்தியவர்கள் யாரும் இலர்..

1. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பரதன்: தொழில் துறையைச் சேர்ந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப் போவதாக திரிணமுல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தொழில் துறையினருடன், எதிர்க்கட்சியினர் தொடர்பு வைத்துள்ளது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இவ்வளவுதானா? நான் கூட நீரா ராடியா கூட வர்த்தகத்தொடர்போன்னு நினைச்சு பயந்துட்டேன்.. 

--------------------------------------------------
 
2. சர்வதேச ஆடிட்டிங் நிறுவனமான கேபிஎம்ஜி: கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டில் அதிகரித்து வரும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் நாட்டின் நம்பகத்தன்மை, குறிப்பாக சர்வதேச அளவில், பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களில் பதட்ட சூழலை உருவாக்கியுள்ளது.

அப்போ 2 வருஷத்துக்கு  முன்னால மட்டும் இவனுங்க யோக்கியமா நடந்திருப்பாங்கன்னு அர்த்தம் இல்லை.. அப்போ வெளில தெரியலை. இப்போ வெட்ட வெளிச்சம் ஆகிடுச்சு.. அவ்வளவுதான்
-----------------------------------------------


3. இந்திய கம்யூ., மாநிலச் செயலர் தா.பாண்டியன்: காங்., - தி.மு.க., கூட்டணியின் தவறான கொள்கைகளை முறியடிக்கும் வகையில், அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. எங்கள் கூட்டணி, மக்கள் ஆதரவு பெற்ற மகத்தான கூட்டணி.

எங்கே.. அம்மா இந்த  வை கோவை கேவலப்படுத்தி ஆப்பு வெச்சுக்கிட்டாங்களே..3வது அணி உருவானா அம்மாவுக்கு சங்கு... கலைஞருக்கு நுங்கு.

----------------------------------------------------
http://rajkanss.files.wordpress.com/2008/11/pg2a.jpg?w=480&h=654
4. தமிழக காங்., தலைவர் தங்கபாலு: கடந்த தேர்தலில் நாங்கள் 48 இடங்களில் போட்டியிட்டோம்; தற்போது, 63 இடங்களில் போட்டியிடுகிறோம். 2004 லோக்சபா தேர்தலில், இந்தக் கூட்டணியில், 10 தொகுதிகளில் போட்டியிட்டோம்; 2009 லோக்சபா தேர்தலில், 16 இடங்களைப் பெற்றோம். இப்படி, காங்கிரசுக்கு முன்னேற்றம் ஏற்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆமாமா.. செம முன்னேற்றம் தான்.. அப்பவெல்லாம் காங்கிரஸ்ல 4 கோஷ்டிதான் இருந்தது.. இப்போ 32 கோஷ்டி இருக்கே.. கட்சி எம்பூட்டு வளர்ந்திருக்கு...

----------------------------------------

5. தி.மு.க., செய்தித் தொடர்பாளர் இளங்கோவன்: கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிகளைப் பகிர்ந்துள்ளது, புதிய அனுபவத்தைக் கொடுத்துள்ளது. தொகுதிகள் பற்றிய புதிய நிலவரத்தை அறியவும், இதன் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது. லாப, நஷ்ட கணக்கில் தொகுதிகளை பிரித்துக் கொள்ளவில்லை; விட்டுக் கொடுத்து தொகுதிகளைப் பிரித்துக் கொண்டுள்ளோம்.

அண்ணே.. விட்டுக்குடுத்துன்னு மொட்டையா சொன்னா மக்களுக்கு என்ன புரியும்? தன்மானத்தை விட்டுக்குடுத்துன்னு விளக்கமா சொல்லுங்க...

---------------------------------

6. நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் கார்த்திக்: அ.தி.மு.க.,வுடன் பேச்சு நடத்தியதில், நாங்கள் கோரிய தொகுதிகளைக் கொடுக்க அவர்களுக்கு மனமில்லாதது தெரிந்தது; அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகிக் கொள்வதே சுயமரியாதைக்கு ஏற்றதென முடிவெடுக்கப்பட்டது; இதனால், அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து எங்கள் கட்சி விலகிக் கொள்கிறது.

உள்ளத்தை அள்ளித்தா படம் தான் உங்க மாஸ்டர் பீஸ் காமெடின்னு எல்லாரும் நினைச்சுட்டு இருந்தாங்க.. இப்போ இந்த பேட்டியால அந்த ரெக்கார்டையே உடைச்சுட்டீங்க..மானங்கெட்டுப்போய் 3 சீட் கேட்டிருப்பீங்க.. அந்தம்மா ஒரு சீட் மட்டும் தர்றேன்னு கேவலப்படுத்தி இருக்கும்..

----------------------------------
http://inthiya.in/ta/wp-content/uploads/2011/02/ramados-jayalalitha.jpg
7. தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: பா.ஜ., ஆளும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் குறுகிய காலத்தில், மிகப் பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளன. அப்படியொரு வளர்ச்சியை, தமிழகத்தில் கொண்டு வர பா.ஜ., பாடுபடும் என்பதால், தேர்தலில் எங்களுக்கு உறுதியான வெற்றி கிடைக்கும். குறுகிய காலத்திற்குள், தமிழகத்தை ஆளும் நிலையை அடைவோம்.

குறுகிய காலம்னா எவ்வளவு ? குத்து மதிப்பா 2000 வருஷம் ஆகுமா?

----------------------------------

8. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் பேட்டி: தேர்தலில், எல்லா விதிமுறை மீறல்களுமே கைது செய்யக் கூடியவை அல்ல. வன்முறையில் ஈடுபடுவது மாதிரியான சில வகை மீறல்களுக்குத்தான் வழக்கு தொடரப்படுகிறது. அந்த வழக்கு விசாரணை முடிய வெகு நாட்களாகக் கூடும். அதில், தேர்தல் கமிஷன் தலையிட முடியாது.

விதியை மீறல்னாலே அது குற்றம் தானே.. அப்புறம் என்ன இதுக்கோசரம் சட்டம் இயற்றனும்?

---------------------------------------------

9. தமிழக தலைமைத் தேர்தல் முன்னாள் அதிகாரி நரேஷ் குப்தா பேட்டி: ஒரு ஓட்டை விற்பது, ஐந்து வருடங்களை விற்பதற்குச் சமமான வேதனை. அந்த ஐந்து வருட ஆட்சியில் தவறு ஏதும் நிகழ்ந்தால், ஓட்டை சரியாகப் பயன்படுத்தாத நாம் தான் அதற்குப் பொறுப்பு.

பேசாம ஆட்சியில் பங்குன்னு கூட்டணிக்கட்சிகள் நெருக்கற மாதிரி ஊழலில் பங்குன்னு வாக்காளர்களும் பாண்ட் பேப்பர்ல அரசியல் வாதிகளோட ஒரு ஒப்பந்தம் போட்றலாமா?

-----------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiI1_DtXARCcMSIp11ALSXgifyAozubfEpUph0V2LZ4VIRPPF79fCRufFxo0fXLK-nHoyA4doPTc1p_SPlL7KIrr-rFts6KiawvZYLPgduH464U-MFFJPeLU0-4m69pGYEqZCuEl_bQkes/s1600/njk.jpg
10. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் தாவூத் மியாகான் பேட்டி: கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்தோம். ஆனால், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே, தி.மு.க., கூட்டணிக்கு கொடுத்த ஆதரவை ரத்து செய்து, அடுத்த கட்டமாக அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

அம்மா மட்டும் அப்படியே உங்களை மதிச்சு சோபால உட்கார வெச்சுட்டாலும்..

----------------------------------------

11. சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேட்டி: "ஸ்பெக்ட்ரம்' பற்றி தொழில் நுட்ப ரீதியாகத் தெரியாவிட்டாலும், அதிகளவு பணத்தை கொள்ளையடித்து விட்டனர் என மக்களுக்கு தெரிந்துள்ளது. இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப, விலைவாசி ஒன்றே போதும். இவர்கள் கொண்டுவந்த நலத்திட்டங்களால் கட்சிக்காரர்கள் தான் பயனடைந்துள்ளனர்.

வேற யார் பயனடையனும்னு எதிர்பார்க்கறீங்க..?  கஷ்டப்பட்டு கொள்ளை அடிக்கறாங்க.. உங்களுக்கு எல்லாம் ஒரு பங்கா குடுக்க முடியும்?

ரெகுலரா ஒரே பஸ்ல போய் ஃபிகர்களை சைட் அடிப்பது எப்படி?

http://www.hindu.com/2005/11/20/images/2005112002820201.jpg 
என்னை கேவலப்படுத்திய ஃபிகர்கள் பாகம் 2 

சென்னிமலை டூ ஈரோடு போக பஸ் ரூட் 2 இருக்கு. ஒண்ணு வெள்ளோடு வழி..டவுன் பஸ் சார்ஜ் 6 ரூபா...இன்னொண்ணு பெருந்துறை ரூட்..சர்வீஸ் பஸ் சார்ஜ் ரூ 10.டவுன் பஸ்ல போனா ஃபிகர்ங்க மதிக்கறதில்லை..(இல்லைன்னா மட்டும் வணக்கம் போட்டுட்டுத்தான் மறு வேலை..)

பெருந்துறை வழியா போற பஸ்ல போக 2 காரணங்கள் இருக்கு. 1. அந்த ரூட்ல தான் மகாராஜா மகளிர் காலேஜ் இருக்கு. 2. திண்டல் வெள்ளாளர் மகளிர் காலேஜ் அந்த ரூட்லதான் இருக்கு, ( VMC)

காலைல 8.40 க்கு சக்தி முருகன் பஸ் வரும் . இதுல மகாராஜா மகளிர் காலேஜ் ஃபிகருங்க 18 பேரும்,வி எம் சி கேர்ள்ஸ் 12 பேரும் வருவாங்க.. (கவுண்ட்டவுன் கண்ணாயிரம்) இந்த பஸ்ல ஹை குவாலிட்டி பொண்ணுங்க வருவாங்க..அதாவது ஹை சொசயிட்டி பணக்காரப்பொண்ணுங்க..இந்தப்பொண்ணுங்க எல்லாம் சுத்த மோசம். யாரும் மோசமான கேரக்டர்னு நினைச்சுடாதீங்க.. பசங்களோட அகராதில நம்மைப்பார்த்து சைட் அடிச்சா அது நல்ல பொண்ணு.. கண்டுக்காம விட்டா ராங்கி.. அப்படிம்போம்.

நானும் 2 மாசம் அதே பஸ்ல ரெகுலரா போய் பார்த்தேன்.. யாரும் கண்டுக்கலை.. மனுஷனாக்கூட மதிக்கலை.... சரி.. பஸ்ஸை மாத்திப்பாக்கலாம்னு அடுத்த பஸ் கே எம் எல் காலை 8. 50 க்கு வர்ற பஸ்க்கு மாறுனேன்.
http://www.hindu.com/2007/12/14/images/2007121452290301.jpg
இதுல மொத்தமா 30 ஃபிகருங்க வந்தாங்க.. எல்லாரும் அவ்வளவு மொத்தமான்னு கேட்கக்கூடாது..டோட்டலான்னு அர்த்தம்.KML பஸ்ல ஒரு மூணு எழுத்துப்பெயர் கொண்ட ஃபிகர் ரெகுலரா வந்தது..அந்த பஸ்ல ரெகுலர் ஃபிகர்ஸ் 30 பேரு.. இர் ரெகுலர் ஃபிகர்ஸ் 12 பேரு..( இர்ரெகுலர்னா அப்பப்ப வர்ற ஃபிகர்ங்க)

அந்த த்ரிஷா ஃபிகர் பார்க்க திரிஷா மாதிரியே இருக்கும்.(பெயரை வெளியிட வேணாம்னு சொல்லிடிச்சு)அந்த கால கட்டத்துல கதைகள்ல மட்டும் தான் கேரக்டர் நேம் வரும்.ஜோக்ஸ்ல வராது.நான் ஒரு ஐடியா பண்ணுனேன். அது வரை காதலர்கள் ஜோக்ஸ்னா கண்ணே... அன்பே. டியர்.. இப்படித்தான் ஜோக் வசனம் வரும்.மீறிப்போனா கமலாங்கற பேர் வரும்.. மத்தபடி வேற பொண்ணுங்க பேர் வராது..நான் 13 ஃபிகர்ங்களோட பேரை வெவ்வேறு ஜோக்ஸ்களில் வர வைத்து ஒரே ஜோக் எழுத்தாளர் அதிக அளவில் ஃபிகர் பெயர்களை வர வைத்தவன் என்ற வரலாற்று சிறப்பை ஏற்படுத்தினேன்..( ஹி ஹி நம்மால இது தான் முடியும்.. ஹி ஹி )

நான் அந்த த்ரிஷா ஃபிகர் பேரை வர வைக்க சபதம் எடுத்துக்கிட்டேன்.அப்பவெல்லாம் மாதம் ஒரு முறை குமுதம் இதழ் குமுதம் ஸ்பெஷல் என ஒரு குட்டி புக் வரும். அதுல இந்த ஜோக் வந்துச்சு.

” எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்...நீங்க தான் மிஸ்   ***  வா?”

“ஆமா.. நீங்க யாரு? எப்படி என் பேரு தெரியும்?”

”இல்ல.. இந்த கே எம் எல் பஸ்ல வர்ற ஃபிகர்லயே சூப்பர் ஃபிகர்   ***  தான்னு சொன்னாங்க.. அதான் பஸ்ல ஏறுனதும் டால் அடிச்சு கண் கூசுச்சு.. நீங்க தான்னு கண்டு பிடிச்சுட்டேன்..”

“ ஹய்யோ”
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYxHJpTWG03gCMjLjHYYvWjTDUS3eiBPy9Pr9J4gYr-29ZnQlZiDDcT0XaktOOo6EeZv2cCcJ4FEpzmYUstSvZYGOAw7w52-DgMuRE0EBUL729Md55lvTXg_5LNqqFOM1ahizj2RC4zoE/s1600-r/DSC00101.JPG

இந்த ஜோக் புக்ல என் பெயர், ஊர் பேரு போட்டு வந்தது.. அப்போ நிறைய பேருக்கு என்னை தெரியாது.. (இப்போ மட்டும்?)அந்த புக்கை காலேஜ்ல யாரோ அந்த ஃபிகர்ட்ட காட்டீட்டாங்க... (பார்க்கத்தானே அப்படிப்பண்ணுனதே..!) அந்த குரூப்ல வந்த பொண்ணுங்களுக்கெல்லாம் பொறாமை... இந்த ஃபிகருக்கு மட்டும் பெருமை...ஆனா ஆள் யார்னு தெரியாது...

மேட்டர் லீக் ஆகி அந்த ஃபிகரோட வீட்டுக்கு போயிடுச்சு.. பஸ்ஸை மாத்தீட்டாங்க..எந்த பஸ்னு தெரியலை... நானும் பெருசா ரிஸ்க் எடுத்துக்கலை.. விட்டுட்டேன்..
சில வருடங்களுக்குப்பிறகு ஈரோட்ல அந்த பெண்ணை பார்த்தேன்.. ( இப்போ அந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. பார்த்தீங்களா? மேரேஜ் ஆனதும் ஃபிகர் பத பிரயோகம் கட் ஆகி பெண் என மாறியதை..? # தமிழன் கல்யாணம் ஆன பொண்ணுங்களுக்கு எப்பவும் மரியாதை குடுப்பான்)ஈரோடு நகர டிராஃபிக் எஸ் ஐ.. (அய்யோ சாமி.)தான் புருஷன்.

.
அவர் பயங்கர கறுப்பு..ஆள் பாக்க  ராஜ்கிரன்  மாதிரி இருப்பாரு..நான் அந்த பெண் கிட்டே கேட்டேன்.


.” என்னை தெரியுதுங்களா?” ( எதிர்த்த மாதிரியே நின்னா தெரியாம..?)

”ம்..சென்னிமலைதானே..?” (ஆஹா.. ரெக்கை கட்டி பறக்குதய்யா..)

”நீங்க ரெகுலரா பஸ்ல வர்றப்ப நான் அதே பஸ்ல வருவேன்.. அப்புறம்....”


” தெரியும்... குமுதம்ல ஜோக் போட்டிருந்தீங்களே..”

”ஆமா.. அதைப்பார்த்து என்ன நினைச்சீங்க..?”

” ஒண்ணும் நினைக்கலை..ஆனா அந்த ஜோக் வந்த பிறகு நிறைய பேர் அந்த பஸ்ல என்னை நோட் பண்ண ஆரம்பிச்சாங்க.. என் கணவர் கூட அந்த ஜோக்கை பார்த்த பிறகு யார்னு பார்ப்பமேன்னு அதே பஸ்ல வந்து பார்த்தார்..அப்புறம் என்னை பிடிச்சதால எங்கம்மா ,அப்பா கிட்டே வந்து சம்பந்தம் பேசுனார்..நிச்சயம் முடிஞ்சதும் அந்த பஸ்ல போகவேணாம்.. ரவுடிப்பசங்க ஜாஸ்தின்னு அவர் தான் வேற பஸ்ல வரச்சொன்னார்.”

”அப்போ என்னைப்பற்றி நீங்க நினைச்சதே இல்லையா?”
http://www.fashionclothingtoday.com/wp-content/uploads/2010/08/Printed-Bridal-saree2.jpg
”ம்ஹூம்.. சமீபத்துல உங்க ஃபோட்டோ வந்தது ஒரு புக்ல .. அப்பத்தான் நீங்கன்னே எனக்கு தெரியும்..ஆனா அதுக்குள்ள எனக்கு மேரேஜே ஆகிடுச்சு..”

”ஓஹோ.. சரி.. சப்போஸ் அவருக்கு முன்னே நான் வந்து பொண்ணு கேட்டிருந்தா எனக்கு ஓக்கே சொல்லி இருப்பீங்களா?”

ம்ஹூம். கண்டிப்பா சொல்லி  இருக்க மாட்டேன்”

ஏன்?

ஏன்னா உங்களுக்கு பொண்ணுங்களை கவர்ற லுக் இல்ல... எல்லாரையும் கலாய்ச்சுட்டே இருக்கீங்க..பஸ்ல எல்லா பொண்ணுங்களும் உங்களை பற்றி இதே விதமான அபிப்ராயம் தான் வெச்சிருக்காங்க.. ஒரு ரவுடி இமேஜ்..

எனக்கென்னவோ உங்களுக்கு கல்யாணம் ஆனதால இப்படி சொல்றீங்களோன்னு டவுட்டா இருக்கு..

இல்லை.. வேணும்னா என் ஃபிரண்ட் ஃபோன் நெம்பர் தர்றேன் .. கேட்டுப்பாருங்க..

வேணாம்... வேணாம்... (உங்க கிட்டே கேவலப்பட்டது போதாதுன்னு ஃபோன் போட்டு அவுட் கோயிங்க் கால் போட்டு பேசி கேவலப்படனுமா?)

”உங்க கிட்டே ஒண்ணு சொல்லனும்”

ம்.. சொல்லுங்க

நீங்க உங்க வாழ்க்கைல எந்த சம்பவம் நடந்தாலும் அதை பத்திரிக்கைகளுக்கு கதையா எழுதுவீங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.. இந்த சம்பவத்தை எழுதுனா என் பேரை எழுத வேண்டாம்..

சரிங்க.. நான்  வர்றேன்..
http://www.suriyakathir.com/issues/2010/Feb01-15/PG47a.jpg
டீன் ஏஜ் பசங்களுக்கு சில ஐடியாக்கள்

1. ஹீரோ மாதிரி நடக்கறதா நினைச்சுக்கிட்டு எல்லா பொண்ணுங்களையும் கலாட்டா பண்ணிட்டு கமெண்ட் அடிச்சுட்டு இருக்காதீங்க...

2. பஸ்ல ஸ்டெப்ல நின்னுக்கிட்டே வந்தா எல்லா பொண்ணுங்க பார்வைலயும் படலாம்னு தப்புக்கணக்கு போடாதீங்க.. எனக்கு தெரிஞ்சு ஸ்டெப்ல நின்னுட்டு வந்தவன் யாரும் லவ் மேரேஜே பண்ணுனதில்லை.. கமுக்கமா பஸ்ஸுக்குள்ள உக்காந்து நல்ல பையனா வந்தாத்தான் நல்ல பேரு கிடைக்கும்.

3. ரெகுலரா ஒரே பஸ்ல வருஷக்கணக்கா வராதீங்க..வாரா வாரம் பஸ் மாத்துங்க.. அப்போ அதிக ஃபிகருங்களை பார்க்கலாம்.. அவங்களுக்கும் பையன் ரெகுலரா வர்றான்கறது தெரியாது...

4. நல்ல ஃபிகரை எங்காவது பார்த்தா சும்மா அலம்பல் பண்ணி ஊரைக்கூட்டி , ஃபிரண்ட்ஸ் கிட்டே காட்டி விளம்பரம் பண்ணாதீங்க..அப்புறம் வேற யாராவது லவட்டிட்டு போக சான்சஸ் உண்டு.

5. ஃபங்க் தலையோட ,ரவுடி மாதிரி இருக்காதீங்க.. டீசண்ட்டா தலையை அழுந்த படிய வாரிக்கிட்டு நெற்றில மங்களகரமா திருநீறு, குங்குமம் வெச்சுக்கிட்டு நீட்டா வரனும்.. (திருநீறு, குங்குமம் வெச்சாலே பாதி ரவுடி களை போயிடும்..)


டிஸ்கி -1 மேலே உள்ள எந்த காலேஜ் ஃபிகரும் என்னுடன் படித்ததல்ல..எதேச்சையா ஃபோட்டோ கிடைச்சது.. அவ்வளவுதான்.

டிஸ்கி 2 - மேலே சொன்ன நிகழ்வுகளில் என்னையும் மீறி ஏதாவது சொல் பிரயோகங்கள் யார் மனதையாவது பாதித்தால் அதற்கு தனி பதிவு போட்டு என்னை கேவலப்படுத்த வேண்டாம்.. இங்கேயே பின்னூட்டமா போடுங்க,, மன்னிப்பு கேட்டுடறேன்.. நான் டெயிலி 10 பிளாக் போய் மன்னிப்பு கேட்க சங்கடமா இருக்கு.. ஹி ஹி 

டிஸ்கி 3 - முதல் பாகம் படிக்காதவங்க, ஏற்கன்வே படிச்சிருந்தாலும் ரிப்பீட்டா படிக்க ஆசைப்படறவங்க  என்னை கேவலப்படுத்திய ஃபிகர்கள் (பாகம் 1 )

Wednesday, March 16, 2011

தமனாவும், தப்ஸியும் ஒரே கட்சிலயா? உருப்பட்ட மாதிரி தான்...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioWJDBnit0WAHtClKHkSfNYxbpq8PNXWcLg_8m-3gFsksZMtDUq_kJy_IfFQC0ICC_yioAEqVucWHfunNKtXugMVhGWM9AalBr6NhdqDEwAL4wkCQj2-auMRShZzmLFunf4rENsQHN8duR/s1600/tapsee2.jpg

1.  நாட்டு நலனுக்காகத்தான் கட்சி நடத்தறேன்...

காமெடி பண்ணாதீங்க தலைவரே.... நீங்க கட்சியை கலைச்சாத்தான் அது நாட்டுக்கு நலன்.....

--------------------------------------------

2. உங்க மேல சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு நீங்க பதிலே சொல்லலையே...

கண்டு பிடிக்கப்பட்டது கை அளவு... கண்டுபிடிக்கப்படாதது கடல் அளவு...

-----------------------------------------

3. தலைவருக்கு இனப்பற்று அதிகம்னு எப்படி சொல்றே..?

அவரோட ஜாதி ஆளுங்களுக்கு மட்டும் தான் சீட் தர்றாராம்...

-----------------------------------------

4. நான் 25 வருஷமா ஊழல் பண்றேன்...

தலைவரே... அதெல்லாம் கமுக்கமா வெச்சுக்கவேண்டியது...இப்படியா வெள்ளி விழா கொண்டாடி  ஊரை கூட்டறது?

---------------------------------------

5. இன்ஸ்பெக்டர! ஆயுதக்கடத்தல் வழக்குல எதுக்கு மளிகைக்கடைக்காரரைப்போய் அரெஸ்ட் பண்ணி இருக்கீங்க..?

அவரு கடைல 100 கிலோ ரவை ஸ்டாக் வெச்சிருந்தாராம்..

-------------------------------------
http://mallumasalaactress.in/wp-content/uploads/2010/06/tamanna2.jpg
6.சி பி ஐ ஆஃபீசர்ஸ் ஏன் திக் பிரமை அடைஞ்சு நின்னுட்டாங்க?

ஊழல் எனது பிறப்புரிமை அப்படின்னு தலைவரு  உரிமை முழக்கம் இட்டாராம்..

-------------------------------------

7. தலைவருக்கு தன்னம்பிக்கை குறைஞ்சிடுச்சுன்னு எப்படி சொல்றே...?

கட்சில தப்ஸி, தமன்னா இவங்களை சேர்த்துக்கிட்டா ஜெயிச்சிடலாமா? அப்படிங்கறாரே..

-------------------------------------

8.    சித்தோடு சதீஷ் அம்மா கட்சின்னு எப்படி சொல்றே..?


மஞ்சள் கலர்ல இருக்குன்னு போஸ்ட் கார்டு கூட யூஸ் பண்றதில்லை...

-----------------------------

9. பேடு பாய்ஸின் டெண்ட்டாக டெம்ப்பிள்ஸ் எல்லாம் மாறி விடக்கூடாதுன்னு ஹீரோ வசனம் பேசறாரே.. என்ன அர்த்தம்? புரியலையே..?

கொடியவர்களின் கூடாரமாக கோயில்கள் ஆகி விடக்கூடாதுங்கற பராசக்தி வசனம் தான்.. ரீ மிக்ஸ்ல அப்படி ஆகிடுச்சு...

----------------------------------

10.  தலைவரோட செல் ஃபோன்ல காலர் டியூனாக என்ன வெச்சிருக்காரு..?

அது தெரியலை.. கரகாட்டக்காரி காஞ்சனாவை வெச்சிருக்காரு. அது வேணா தெரியும்...

---------------------------------

அதோ அந்த பதிவர் போல ட்வீட்ட வேண்டும்.. ...

http://wallpapers.oneindia.in/d/124594-2/ileana-wallpaper17.jpg

பொழுது போகாத நேரத்தில் டி வி முன் உட்கார்ந்த நேரம் எல்லாம் ஹில்ஸ் ஏறிப்போய் விட்டது..ட்விட்டர் முன் உட்கார்ந்தால் ஆளாளுக்கு கலக்கு கலக்கு என கலக்கித்தள்ளிக்கொண்டிருக்கிரார்கள்.. பதிவு எழுதுவதை விட, பதிவு படிப்பதை விட ட்வீட்ஸ்களைப்படிப்பது சுவராஸ்யமான ஒன்றாய் மாறி இருக்கிறது....


1. RajanLeaks சுயமரியாதையுடன் அதிமுக அணியில் இருந்து விலகுகிறோம்: கார்த்திக் # அப்பிடியே மானமரியாதையோட போயி தாத்தா கிட்ட சேர்ந்துகுங்க

------------------------------------------- 

2.
RajanLeaks தேர்தல் நடத்தை விதிமுறையை மீறமாட்டேன்: அழகிரி உறுதி # ஹா ஹா ஹா! யாரு கிட்ட சொல்றீங்கண்ணே! காங்கிரஸ் கிட்டயா?

----------------------------------------- 

3. 
RajanLeaks RT @kolaaru: சென்னை, கோவை, மதுரைனு காங்கிரஸ் கேட்டு வாங்கிருக்கே,எலெக்‌ஷ்ன்ல நிக்க போறான்களா இல்ல டிராவல்ஸ் பஸ் விட போறான்களா
---------------------------------------------




4.
Sangakavi உன்னை நானும் என்னை நீயும் சமரசமாய் திருடிக்கொண்டோம் .. அங்கே பார் காதலும் நட்பும் தமக்குள் சண்டை இட்டுக்கொள்கின்றன நம்மை திருட

----------------------------------------------------


http://tamilactressphotos.in/wp-content/uploads/2010/06/ileana25.jpg
5. Sangakavi தலைவர்கள் எல்லாம் சென்னையில் போட்டியிடாமல் சொந்த ஊர்ல போட்டியிடுகிறார்களாம்... தொகுதிக்கு நல்லது செய்திருந்தால் ஏன் தொகுதி மாறனும்?????
 
----------------------------------------------
6.
kolaaru இந்த சீட்ட வாங்குறதுக்கு எதுக்கு ஐவர் குழு,வெண்ணிலா கபடி குழுவே போதும் இத வாங்குறதுக்கு

---------------------------------------------
7.
Aaryan66 ஒதுக்கிய தொகுதியில் ஜெயிக்க வைக்க வில்லையென்றாலும் சிபிஐ பாயுமோ?


-----------------------------------------------

8.
karaiyaan அவமதித்து விட்டார் ஜெ.- கார்த்திக் 'பரபரப்பு' பேட்டி / எப்ப மதித்தார் தற்போது அவமதிக்க! RT @Kaniyen

--------------------------------------


http://www.idlebrain.com/movie/photogallery/anjali/images/newpg-anjali9.jpg
9. isr_selva வளையல்கள் கணக்கிட்ட முத்தங்களின் எண்ணிக்கையை, கொலுசுகள் மறுத்துக் கொண்டிருக்க, நானும் அவளும் முத்தங்களை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

 ------------------------------

10.
iamkarki வைகோ மேல‌ உன‌க்கு என்ன‌ கோவ‌ம்னு கேட்ப‌வ‌ர‌க்ளுக்கு.. உங்க‌ளுக்கு ஏன் கோவ‌மில்லைன்னு சொல்லுங்க‌ முத‌ல்ல‌.
 
------------------------------------------


11.
UVMP 25-30 தொகுதியில் போட்டியிடுவோம்-கார்த்திக்//என்ன பொசுக்குன்னு சொல்லிடீங்க, அவ்வளவு பேருக்கு எங்க போவது,இது என்ன நம்ம கட்சி மாநாடா
 
--------------------------------------------


12. 
kanapraba விக்ரமன் மீண்டும் "இளமை நாட்கள்" என்ற படத்தை இயக்குகிறாராம், நலிவடைந்த லலாலா கோரஸ் பாடகர் சங்கம் நன்றி நவில்கின்றது

--------------------------------------------  http://tamil.galatta.com/entertainment/photogallery/tamil/actress/Anjali/anjali-new05.jpg
13. kolaaru ஜெயிச்சா வீட்டுக்கொரு வாஷிங் மெஷின்-மன்சூரலிகான் # ஜெயிக்கலேனா வீட்டுக்கு வந்து கையால துவச்சு கொடுப்பாரு வாரமொருமுற





--------------------------------------------------


14.
thennarasu எவ்வளோ கொடுத்தாலும் வாங்கிப்பாரு...வைகோ ரொம்ப நல்லவருன்னுட்டாங்கய்யா அம்மா! 


-------------------------------------


15. navi_n திருமணத்தின் முன்பே தம்பதிகள் ஆனாலும் திருமணத்தின் பின் மருந்துக்குக் கூட காதலர்கள் ஆக மறந்துவிடுகிறார்கள்.


டிஸ்கி - எனக்கு இப்போ சூர்யனின் பார்வை உச்சத்தில் இருப்பதால்( சூர்யக்கதிர் புக் அல்ல) நேரம் சரி இல்லை என சித்தோட்டு ஜோதிடர் எச்சரித்து உள்ளார்.. எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்றாலும் சொன்ன ஜோதிடர் நண்பர் என்பதால் அதற்கு கட்டுப்பட்டு நோ டிஸ்கி.. ஹி ஹி 

Tuesday, March 15, 2011

நாளைய இயக்குநர் - மழலை +டிராஜடி கதைகள்

[0.jpg]
ஏற்கனவே பலமுறை சொன்ன மாதிரி கலைஞர் டி வி ல எனக்கு பிடிச்ச புரோகிராம் வாரா வாரம் ஞாயிறு காலை 10. 30 மணிக்கு வர்ற நாளைய இயக்குநர் நிக்ழச்சிதான் என்றாலும் இத்தனை நாளா மனசுக்குள்ள புதைச்சு வெச்ச ஒரு ரகசியத்தை இப்போ ஓப்பன் பண்றேன்..(மனசுக்குள்ள நீரா ராடியான்னு நினப்பு)

தொகுப்பாளினியா வர்ற ஃபிகர் எனக்கு பிடிக்கலை.. ( பொண்ணு பார்க்கப்போன மாப்பிள்ளை மாதிரியே பேசறானே)பொதுவா பொண்ணுங்கன்னா உண்மையான குங்குமம் வெச்சுட்டு வந்தாத்தான் நல்லாருக்கும்.( அப்போ பொய்யான குங்குமம்னா என்ன? # ஸ்டிக்கர் பொட்டு) பாப்பா பிரச்சனை எதுக்குன்னு பெரும்பாலும் பொட்டே வைக்கறதில்லை..அது பெரிய மைனஸ்..அப்புறம் பாப்பா போட்டுட்டு வர்ற டிரஸ் கரகாட்டக்காரி மாதிரி நல்லாவே இல்லை.. இதை எல்லாத்தையும் கூட பொறுத்துக்கலாம்.. ஆனா பாப்பா செயற்கையா சிரிக்குது பாருங்க.. அதை தாங்க முடியல...

இப்போ நீ விமர்சனம் பண்ண போறது பாப்பாவையா? குறும்படத்தையா?ன்னு சலிச்சுக்கறவங்களுக்கு...சென்னை  டி நகர் -ல் உள்ள டி சி மேனர் ஹோட்டலில் ரிசப்ஷனிஸ்ட்டாக பணியாற்றும் ஒரு ஃபிகரை பற்றி குறிபிட விரும்புகிறேன்.. (ஃபிகர் சுட்டி பொருள் விளக்கு..)அந்த ஃபிகர் +2 தான் படிச்சிருக்குன்னாலும் ஏர்ஹோஸ்டல்ல ஒர்க் பண்ற மாதிரி செம நீட்டா இருக்கும்..அந்த ஹோட்டலுக்கே ஒரு கவுரவம் அந்த ஃபிகர்தான்.ஃபிகருக்கு சம்பளம் மாதம் ரூ 27,000.வேலை சும்மா சிரிக்கனும்.. அவ்வளவுதான்...இது பற்றி மேலும் விபரங்களை என்னைக்கவர்ந்த கேரளா ஃபிகர்கள் என்ற புதிய பதிவில் விளக்கமா பார்ப்போம்.. இப்போ....
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/06/Priyamani-new-gallery-8.jpg

1. ஆசை - அருண்குமார்

டைட்டில்லயே சைக்கிளை டிசைன் பண்ணி கலக்கலா லே அவுட் குடுத்ததைப்பார்த்ததும் படம் பின்னி எடுக்கும்னு நினைச்சேன்.. ம்ஹூம்.. சுமார்தான்.சின்ன பொண்ணு ஒண்ணு சைக்கிள் வாங்க ஆசைப்படுது..கொஞ்சம் கொஞ்சமா காசு உண்டியல்ல சேர்த்து எப்படியோ ஒரு குட்டி சைக்கிள் வாங்கிடுது.. ஆனா ஒரு வேன் வந்து அதை இடிச்சு ரிப்பேர் பண்ணிடுது..

டிராஜடியா முடிக்கனும்கறதுக்காக வேணும்னே பண்ணுன மாதிரி இருக்கு.. இதன் மூலமா டைரக்டர் என்ன சொல்ல வர்றார்னே தெரியல..மனதை தொடலை..ஆனா ஒளிப்பதிவு, கேமரா கோணங்கள் எல்லாம் ரொம்ப பிரமாதம்..

இயக்குநர் கவனிக்கத்தவறிய அம்சங்கள்

1. படத்தில் காட்டப்பட்ட அந்த சின்ன உண்டியலில் 200 ரூபா அளவுக்குத்தான் காசு போட முடியும்...இதை எப்படி உறுதியா சொல்றேன்னா மண்பாண்டம் செய்யும் குயவனாக இருக்கும் எங்க ஊர் நண்பன் சரவணன் என் கூட அமர்ந்துதான் பார்த்துட்டு இருந்தார்.. அவர் சொன்ன தகவல் தான் அது..300 ரூபா அதுல சேர்க்க முடியாது.

2. அதே போல் ஒரு ரூபாக்காசு, மற்றும் 2 ரூபாக்காசு மட்டுமே அந்த சிறிய உண்டியல் துவாரத்தில் போட முடியும். 5 ரூபாக்காசு போட சான்ஸே இல்லையாம்..( 2 ரூபாக்காசே ரொம்ப சிரமப்பட்டே போடமுடியுமாம்..).ஆனால் ஒரு சீனில் உண்டியலை உடைத்த பிறகு அதில் இருந்த காசுகளை எடுக்கும்போது 5 ரூபாக்காசு நிறைய இருக்கு.

3. வேகமாக வரும் வேன் அந்த சைக்கிளை இடித்து தள்ளும்போது சப்பழிந்து போகும், அல்லது தூக்கி அடிக்கும்.. படத்தில் காட்டுவது போல் ஒரு சக்கரம் மட்டும் தனியே கழண்டு போக வாய்ப்பே இல்லை..

நான் சொல்ற பாயிண்ட்ஸ் ஏதோ குறை சொல்லனும் என்ற நோக்கில் சொல்லப்படுவதல்ல.. அடுத்த முறை அவர்கள் கவனமாக படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்வது..
http://tamildigitalcinema.com/wp-content/gallery/bhuvaneswari-hot/bhuvaneswari-hot-1.jpg
2. தருணம் - மணிவண்ணன்

எதிர்பாராதவிதமா ஒரு ஆக்‌ஷன் கம் டெரரிஸ்ட் ரிலேட்டட் மூவி...கேமரா ஆங்கிள் கலக்கலா இருந்துச்சு.கோயிலுக்கு ஒரு தம்பதி சாமி கும்பிட வர்றாங்க.. ஒரு தீவிரவாதி கும்பல் கணவனை பிடிச்சு அவன் உடம்புக்குள்ள ஒரு வெடியை வெச்சு ஆபரேஷன் பண்ணி பப்ளிக் பிளேஸ்ல அவனை அனுப்பறாங்க.. பிணையக்கைதியா மனைவி...என்ன நடக்குது?ங்கறதை  நல்ல சஸ்பென்ஸா சொல்லி இருக்காங்க..

இது எழுத்தாளர் சுபா அவர்கள் எழுதிய ஒரு நாவலின் வடிவாக்கம் (சூப்பர் நாவல் 1998 நவம்பர் உயிர்பலி) என்றாலும் இயக்குநர் விட்டு விளாசி இருந்தார்..7 நிமிடத்தில் இந்த மாதிரி ஒரு திரில்லர் எடுப்பது ரொம்ப கஷ்டம் தான்..ஹாய் மதன் கூட இதை பாராட்டி THE  Bourne  IDENTITY  படம் போல் திரில்லர் வகையறா படம் எடுக்க வாழ்த்துக்கள் என்றார்.

மனம் கவர்ந்த வசனம்

மனைவி - உங்க பெயரை இனிஷியல் ஆக்க ஒரு சொந்தம் வரப்போகுது..

கணவன் - என் வாழ்க்கைலயே ரொம்ப சந்தோஷமா இருக்கற 2வது தருணம் இதுதான்

மனைவி - அப்போ முத தருணம்..?

கணவன் - நம்ம முதல் கல்யாண நாள்

இந்த மாதிரி ஒரு ஆக்‌ஷன் பேக் டிராப்ல லவ் டயலாக் ஒரு ரிலாக்‌ஷேஷனா இருக்கும். வெல்டன் டைரக்டர்.அதே போல் க்ளைமாக்சில் வெடி குண்டை வெடிக்க வைக்கும் ரிமோட் பட்டனை புறா தட்டி விடுவது செமயான சீன்.(டைரக்டர் மணி அகதா கிறிஸ்டி,சுஜாதா ரசிகர் போல)
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYdmpT0_prjnmrdtEyBSPFra6ns0abOTpVcb4PzFtrgIGHTJ8NVQTMl-Qx8Z0WBjWvx1qws4EKb4Ol6dPeZJ6eeAxNIYm0T3W72RbSaPvi9Eg6tzrjXMrgn3_Th2zFpbEgUZuXL2mDdQxt/s1600/nishanti+in+transparent+saree+%25283%2529.jpg
3.  பசி - ஆர் .ரவிக்குமார்

ஒரு கிராமத்துக்கதை.. சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கற சூழல்ல ஸ்கூல்ல போடற சத்துணவையாவது சாப்பிடலாம்னு ஏங்கற பையன் கதை.. ஸ்கூல்ல பாடம் நடத்தறப்பக்கூட அவனுக்கு சாப்பாட்டு ஞாபகம் தான்.அந்த அளவு அவனை பசி துரத்துது.. கடைசில அவன் சாப்பிடும்போது அந்த சாப்பாட்ல பல்லி விழுந்துட்டதா சொல்லி அதையும் பிடுங்கிடறாங்க..

இந்த கதைல முக்கியமா  அந்த சின்னப்பையனோட நடிப்பு நல்லாருந்தது.. ஒரு பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னன்னா ஹாய் மதன் அந்த பையனை மேடைக்கு கூப்பிட்டு அவனை வாங்க போங்க என மரியாதை கொடுத்துப்பேசி ஊக்குவிச்சதுதான். வெல்டன் மதன் சார்..

இயக்குநர் ஒரு விஷயத்துல பாராட்டப்படவேண்டிய ஆள் தான். என்னான்னா ஸ்கூல்ல பாடம் நடத்தறப்ப கனிகள் பற்றி பாடம் வருது.. அப்போ எல்லா வகை கனிகளும் அந்த பையனோட நினைவலைகளில் சுற்றுவது மாதிரி ஒரு கிராஃபிக்ஸ் ஷாட் வெச்சது அழகு...அவர் பண்ணுன சின்ன மிஸ்டேக் ஏழை சிறுவனா நடிக்க  உண்மையாகவே ஏழையை தேர்ந்தெடுத்து இருக்கலாம்.. அந்த பையனோட முகத்துல செல்வக்களை தாண்டவமாடுது.. (FACE SHINING)

இதுக்கு ஹாய் மதனோட கமெண்ட் ,  “அரெஸ்ட்டிங்க் ஷாட் வைக்க முடியல.. பசி என்பது நிறைய பேர் எடுத்துக்கிட்ட தீம் என்பதால் உங்களால ஒரு வட்டத்தை விட்டு வெளில வர முடியல...புதுசா சொல்ல முடியாம தவிச்ச மாதிரி இருக்கு. உங்க கைகள் கட்டப்பட்டிருக்கு....”   100% கரெக்ட்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisdFbugtozFImXP2_GstPWidbmCr9M9hvZDxXnA9BR-x1b3DQhx-8QB9EpH3qfasrRBEYXRESdJwhIw1P-OxBS1S6PElMWwqEXfm4wziXp_eZnck3Z9Rt3ndI5-MfSKgznw0yCq0FSH-Eq/s1600/neelam-actress-stills-010.jpg
4. அஞ்சு ரூபா - எஸ் . வி . அருண்குமார்

படத்தோட ஓப்பனிங்க் ஷாட்லயே அசத்த ஆரம்பிச்ச இந்தப்படம் முதல் பரிசு வாங்குனதுல எந்த ஆச்சரியமும் இல்ல. பலரின் ஏகோபித்த ஆதரவு இந்தப்படத்துக்கு கிடைச்சதுக்குக்காரணம் மென்மையான கதை சொல்லல் பாணியும், சிறுவனின் பண் பட்ட நடிப்பும்..

ஒரு சின்ன பையன் பலூன் வாங்க ஆசைப்படறான்.. அஞ்சு ரூபா.. அவனுக்கு கிடைக்கல.. அம்மா கிட்டே கேட்கறப்ப  செலவுக்கு டெயிலி தர்ற அம்பது பைசாவை சேர்த்து வெச்சு வாங்கிக்கோ அப்படிங்கறா...அவனும் சேர்த்து வைக்கிறான்..காசை எங்கேயோ தொலைச்சுடறான்.. அப்புறம் அம்மாவே வேற ஒரு அஞ்சு ரூபாவை குடுத்து இதுதான் தொலைஞ்சு போன காசுங்கறா..அந்த காசை ஒரு அவசரத்துக்கு அம்மா க்ரேட்டப்பக்கூட அவன் கொடுக்காம அழுது அடம் பிடிக்கறான்.. இவ்வளவு கஷ்டப்பட்டு சேர்த்து வெச்ச அஞ்சு ரூபாவை குடுத்து அவன் பலூன் வாங்கப்போனப்ப பலூன் விலை 6 ரூபா ஆகிடுது
கலைஞர் ஆட்சில விலைவாசி கடுமையா ஏறுதுன்னு சிம்பாலிக்கா சொன்ன காட்சி வெச்ச படத்துக்கு அனுமதி அளிச்சதும், அதுக்கு பரிசு குடுத்ததும் கலைஞர் டி வி நிர்வாக இயக்குநர் எந்த அளவு அசிரத்தையா இருக்கார் என்பதற்கான அத்தாட்சி..


சேர்த்து வெச்ச காசை வெச்சு பலூன் வாங்கி வர்றப்ப அது உடைஞ்சிடுது..அவன் அடுத்த அஞ்சு ரூபா சேமிப்புக்கு ரெடி ஆகிடறான்..கேட்பதற்கும், படிப்பதற்கும் வெகு சாதாரணமா தெரியற இந்த கதை படமா நம்ம கண் முன் விரியும்போது செமயா இருக்கு..

இயக்குநரை சபாஷ் போட வைத்த இடங்கள்

1. பள்ளிக்கூடத்துக்கு போகும் மகனை அம்மா, “ ஸ்கூலுக்கு சூதானமா (ஜாக்கிரதையா) போய்ட்டு வ ரனும் என்ன?’ என்ற டயலாக்கை 2 இடங்களில் வைத்து ஏதோ ஆக்சிடெண்ட் நடக்கப்போகிறதோ என டெம்போ ஏற்றி அப்படி எந்த சீனும் வைக்காதது..

2. ஏழை அம்மா விறகு அடுப்பில் ஊதுகுழலால் ஊதும் சத்தத்தை இயற்கையாக ஆன் த ஸ்பாட் ரெக்கார்டிங்க் செய்தது..

3. பலூன்காரனின் வசனங்கள் வெகு இயல்பாக அமைந்தது..

4. அம்மா, பையனின் அற்புதமான நடிப்பு

பெஸ்ட் ஆக்டிங்க் விருதை கடைசி 2 படத்தில் நடித்த 2 சிறுவர்களுக்கும் கொடுத்தது கை தட்டல் பெற வைத்த  முடிவு..

டிஸ்கி -1. குறும்பட ஸ்டில்கள் எதுவும் கிடைக்கலை.. என் மெயிலுக்கு அனுப்பி வைங்கன்னு சொன்னதை யாரும் மதிக்கலை..(வழக்கம் போலவே..)அதனால சில குறும்பு பட ஸ்டில்கள்.. ஹி ஹி

டிஸ்கி 2  - முதல் 2 ஸ்டில்களில் ஃபிகர்கள் 2ம் கலைஞருக்கு பிடித்த மஞ்சள் நிற டிரஸ் அணிந்து நிற்பதும், அடுத்த 2 ஸ்டில்களில் உள்ள ஃபிகர்கள் கலைஞர் டி வி யின் நிர்வாக இயக்குநர்க்கு பிடித்த நிறமான டார்க் ரோஸ், லைட் ரோஸ் நிறங்களில் டிரஸ் அணிந்து நிற்பதும் எதேச்சையானவை.. எந்த  உள்குத்தும் இல்லை.. ஹி ஹி