Tuesday, March 15, 2011

சி பி ஐ விசாரணை -கலைஞர் டி வி யை ஏழைகளுக்கு எழுதி வைப்பாரா கலைஞர்..?

http://truetamilans.files.wordpress.com/2007/05/thuglak-6.jpg 

1.காஞ்சிபுரம் காங்., எம்.பி., விஸ்வநாதன்: செங்கல்பட்டு வயலூர் கிராமம் அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். அவ்வாறு கட்டினால், 10 ஆயிரம் எக்டேர் பரப்பளவு பாசன வசதி பெறுவதுடன், 10 லட்சம் விவசாயிகளும் பயன் அடைவர். இதற்கு, மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்.

ஒதுக்குங்க ஒதுக்குங்க..சீக்கிரம்.. இன்னும் ஒரு மாசம் கூட இல்லை.. போவதற்கு முன் கடைசியா ஒரு ஊழல் பண்ணீட்டு போயிடறோம்...(முறைப்பொண்ணுக்கு வேற ஒரு மாப்பிள்ளை கூட கல்யாணம்னா கடைசி கடைசியா ஒரு ஞாபக முத்தம் தர்றதில்லையா? அது மாதிரி)

------------------------------------------------

2. மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி: விவசாயத் துறைக்கு கடன் வழங்கும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்க அளவில் நடந்து வருகின்றன. நடப்பு நிதியாண்டில் விவசாயத் துறைக்கு, 3.75 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், டிசம்பர் மாதத்திலேயே மூன்று லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு விட்டது.

விவசாயக்கடன் குடுத்துட்டுத்தான் இருக்காங்க.. ஆனா விவசாயிங்க யாரும் வளர்ந்ததா தெரியல.. இந்த மீடியேட்டர்களும், அரசியல்வாதிகளும் தான் வளர்றாங்க...


----------------------------------------------

ViewMore FromTagsCommentsShareSendFavoriteTwitterFacebook
http://farm4.static.flickr.com/3185/2635671409_bed718aea5.jpg
3. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்: தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தைத் தவறாக பயன்படுத்தி, போலியாக ஊழியர்களின் பெயர்களைச் சேர்த்து, மக்களுக்கு பண வினியோகம் நடந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், புவனகிரி தாலுகாவில் உள்ள அகரம் ஆலம்பாடி ஊராட்சியில், இதுபோன்ற முறைகேடு நடந்துள்ளது.

உங்களை எல்லாம் நினைச்சா எனக்கு பாவமா இருக்கு.. பல பக்கம் நடக்குது.. ஒரு ஊர்ல கண்டுபிடிச்சதுக்கே இந்த அலப்பறையா..?வைரஸ் இல்லாத கணிப்பொறியா?மாணவர்கள் கட் அடிக்காத வகுப்பறையா?ஊழல் நடக்காத துறையா?


--------------------------------------
http://www.writermugil.com/wp-content/uploads/2009/05/mk-fasting1.jpg
4. இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் பேட்டி: எந்த நாட்டையும் விட, மிக வேகமாக பொருளாதார பின்னடைவில் இருந்து நம் நாடு மீண்டது. அதுபோல், எந்த நாட்டையும் விட, மிக வேகமாக பணவீக்கம் நம்மைப் பற்றிக் கொண்டுள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த, வட்டி விகிதத்தை உயர்த்தித் தான் ஆக வேண்டும். பொருளாதார மீட்சியை தக்க வைக்க, வட்டி விகிதங்களை குறைவாக வைத்திருக்க வேண்டும். வளர்ச்சியுடனும், பணவீக்கத்துடனும் நாடு போராட வேண்டியுள்ளது.

அது கூட எப்படியோ போராடிக்கலாம்.. ஜாதி அரசியல்வாதிகளோடும், வியாதி அரசியல்வாதிகளோடும் போராட வேண்டி இருக்கே...?

----------------------------------------
5. பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பேச்சு: மன்மோகன் சிங்கை நேர்மையற்றவர் என சொல்ல முடியாது. ஆனால், பிரதமர் அலுவலகம் நேர்மையின்றி இருக்கிறது. "ஸ்பெக்ட்ரம்' முறைகேடுக்கு, கூட்டணி அரசியலின் நிர்பந்தமே காரணம் என, மன்மோகன் சிங் கூறியுள்ளார். இதன்மூலம்,தன் அலுவலகத்தை பழியிலிருந்து காப்பாற்ற முயற்சிக்கிறார். கொள்ளை நடந்து கொண்டிருந்தபோது, அவரது அலுவலகம் கண்ணை மூடிக் கொண்டிருந்தது.

அநியாயம் எங்கே நடந்தாலும் நான் வேடிக்கை பார்த்துட்டு சும்மா இருக்கமாட்டேன்.. கண்ணை மூடிக்குவேன்...ஹி ஹி - பிரதமர் மனசுக்குள் நினைச்சது
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEie_v9-nVyMs2fYySaTWRiA_u9LAkEuJauXLTPOPTvOI7NtMuhiBr5zj-iFp1UEDsU6gLp57fHfIH8eh1rgx5h1FhWwTIiH-8lU0bbQmkBIEH1nFqkH_5_oSyb0BjXz2Ae6uHDiERkWeCuE/s320/leena_manimekalai.jpg
-------------------------------------
6. மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் கராத் பேச்சு: மூன்று சீட்டுகளுக்காக, அமைச்சர்களை ராஜினாமா நாடகம் நடத்த வைத்த கருணாநிதியின் நோக்கமெல்லாம், சி.பி.ஐ., தன் வீட்டுக் கதவை தட்டி விடக் கூடாது என்பது தான். எங்கள் கட்சி சார்பில், புத்ததேவ் பட்டாச்சார்யா, அச்சுதானந்தன், மாணிக் சர்க்கார் ஆகிய மூன்று முதல்வர்கள் இருக்கின்றனர். அவர்கள் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டை உங்களால் சொல்ல முடியுமா? அவர்கள் சொத்துப் பட்டியல் வெளிப்படையானது. நாட்டிலேயே மிக மிக ஏழை முதல்வர்கள் இவர்கள் தான்.

எங்க தலைவர் கூட ஏழைதான்...ஒரே ஒரு வீடுதான் சொந்தமா இருந்தது.. அதையும் ஏழைக்கு எழுதி வெச்சுட்டார்.. ஆனா கலைஞர் டி வி யை எழுதி வைக்க சொல்லுங்க.. கடுப்பாகிடுவார்...

--------------------------------------------

http://inthiya.in/ta/wp-content/uploads/2011/02/karunanidhi-sonia-gandhi-manmohan-singh-.jpg
7. ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி பேட்டி : "ஸ்பெக்ட்ரம்' ஊழல் குறித்து, தி.மு.க., - காங்கிரஸ் தலைவர்களிடமும் விசாரணை நடத்தப்படலாம். "ஸ்பெக்ட்ரம்' ஊழல் பிரச்னையில், என் மீது மான நஷ்ட வழக்கு தொடரப் போவதாக முதல்வர் கருணாநிதியும், அமைச்சர் துரைமுருகனும் கூறியிருந்தனர். இதுவரை வழக்கு தொடராமல் மவுனம் சாதிப்பது ஏன்?

மானம் இருக்கறவங்க தான் மான நஷ்ட வழக்கு தொடர முடியும்னு கழக வக்கீல்கள் யாராவது சொல்லி இருப்பாங்களோ..?

-----------------------------------------
8. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கபாடியா பேச்சு: சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டும் சில கொள்கைகளின் அடிப்படையில் செயல்படுபவை. எனவே, வழக்குக்கு சம்பந்தப்படாத எதைப் பற்றியும் நீதிபதிகள் பேசக் கூடாது. சில நேரங்களில், வழக்கை விசாரிக்கும் போதும், தீர்ப்பு அளிக்கும் போதும் நீதிபதிகள் தங்கள் சொந்த கருத்துகளையும், விருப்பு, வெறுப்புகளையும் இந்த சமுதாயத்தின் மீது திணிக்கின்றனர். அப்படி செய்யக் கூடாது. நீதிபதிகள் தங்கள் கடமையை ஆற்றும்போது, சமுதாயத்துக்கு அறிவுரை வழங்கக் கூடாது.

அப்படியே அறிவுரை சொல்ற மாதிரி இருந்தா சாதாரண குடிமகனுக்கு சொல்லனும்.. அதை விட்டுட்டு பெரிய பெரிய தலைங்களுக்கு அட்வைஸ் பண்ணுனா எப்படி..? அவங்களுக்கு சொல் புத்தியும் கிடையாது.. சுய புத்தியும் கிடையாது...


---------------------------------------

டிஸ்கி 1 - தமிழச்சியோட ஸ்டில் எதுக்கு?ன்னு கேக்கறவங்களுக்கு, ஒரு தமிழன் தமிழச்சியோட ஸ்டில்லை போட்டாக்கூட குத்தமா?  ஹி ஹி 


டிஸ்கி 2- லீனா மணிமேகலைக்கும் அட்ரா சக்க இணைய தளத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..எக்சாம்க்கு படிக்காம போற மக்கு ஸ்டூடண்ட் வெறும் பேப்பரை குடுத்தா கேவலம்னு சம்பந்தா சம்பந்தம் இல்லாம எதையாவது எழுதற மாதிரி.. இந்த ஸ்டில்ஸூம்.. ஹி ஹி

Monday, March 14, 2011

ஐவர் - நட்பும், கற்பும் முறிந்த கதை - சினிமா விமர்சனம்

http://s.chakpak.com/se_images/14481992_-1_564_none/aivar-wallpaper.jpg

பெரிய பேனர் படம் இல்லை, மாஸ் ஹீரோக்கள் யாரும் இல்லை, அப்படி இருந்தும் இந்தப்படத்துக்கு ஏன் போனேன்னா இதுல 2 புதுமுகம் அறிமுகம்.. 2 ல ஒண்ணு செம கட்டை என கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தந்த அடிபடையில் தகவலை உறுதி செய்து கொள்ளவும் ( இவரு பெரிய சென்சஸ் ஆஃபீசர்..)உண்டு களித்த மனதை கலர் கண்டு ரசிக்கத்தயார் படுத்தவும் தான்...

பல வருடங்களுக்கு முன் ஃபாசில் இயக்கத்தில் நதியா நடித்த பூவே பூச்சூடவா படத்தில் வரும் கூலிங்க் கிளாஸ் காமெடியை அப்படியே ஈ அடிச்சான் காப்பி அடித்து முத சீனா ஓப்பன் பண்ணுனப்பவே அண்ணன் (டைரக்டர்) கிட்டே சொந்த சரக்கு கம்மின்னு தெரிஞ்சு போச்சு..

ஸ்ரீமன் தன்னோட ஃபிரண்ட் மேல ரொம்ப அட்டாச்மெண்ட்டா இருக்காரு.. அது எந்த அளவுக்குன்னா தனக்கு வரப்போற மனைவியை தேர்வு செய்வதும் தன் நண்பன் தான், கல்யாணத்தன்னைக்கு முதல் இரவுக்கு போறதுக்குக்கூட நண்பனுக்கு கைல அடிபட்டுடுச்சுன்னு டிலே பண்ற அளவு...


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPv3NPFYZC0UD0P8Dxaf5fD22OtbzAzvaAZJY1wXdnQCSAjQVbdfmBUHReyTzjX8-MYrgBpoTuQENIg6fGiO6_vGW00pgUMBdv2Lw7i90iXYVvQjthUoaa5lOyiGgqL4Y539vw874qRBqU/s1600/actress_athulya_latest_photos_stills_pics_images_01.jpg
இது எந்த மனைவிக்காவது பிடிக்குமா? ( என்னமோ பல மனைவிகள் வெச்சிருக்கறவனாட்டமே பேசறானே....?)நண்பனை கணவன் கிட்டே இருந்து பிரிக்க தன் தம்பியுடன் சேர்ந்து சதி பண்றா... பொய்ப்பழி சுமத்தி கழட்டி விடறா...(ஃபிரண்ட்ஷிப்பை)

நட்பைக்கூட கற்பைப்போல எண்ணும் ஸ்ரீமன் எப்படி உண்மையை உணர்ந்தார்..(ஆவ்..ஆ,.வ் கொட்டாவி) என்பதை தில் இருந்தா தியேட்டர்ல போய் பார்த்து தெரிஞ்சுக்குங்க..
படத்தோட இந்தக்கதை மேல டைரக்டருக்கே நம்பிக்கை இல்லை போல.. இன்னொரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க் கதை அட்டாச் பண்ணி இருக்காரு..ஸ்ரீமனுக்கு ஒரு தங்க்ச்சி.. இதான் புதுமுகம் அதுல்யா.. ( எதுலய்யா..?) அவளை ஒரு வெட்டாஃபீஸ் லவ் பண்ணுறான்..அவனுக்கு 3 ஃபிரண்ட்ஸ்.. அவங்களுக்கும் வேலை வெட்டி எதுவும் கிடையாது..
மேலே சொன்ன 4 பேரும் சகிக்க முடியாத முகத்தோற்றம், தாடி, தலை சீவாத பாணி .. ஹூம்..எப்படித்தான் கேமரா மேன் சகிச்சுக்கிட்டாரோ.....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUIcivLX_VCVVqP88ESrPWlnVgQFpGjmjF5-ZICZJfl435_4qvxNOA5eNzbkxnTnTlPSeOnCGDRq231XuBnHhr5HNSqa0cNrU1EN0sBCQvrkd5x80cW24-l_KFMmTpdSX1fZRPmGHgszSw/s1600/actress_athulya_latest_photos_stills_pics_images_04.jpg
4 பேர்ல ஒருத்தன் அதுல்யாவை லவ் பண்றான்..இன்னொருத்தன் அந்த ஊர்ல இருக்கற ஒண்ணாம் நெம்பர் அயிட்டம் மல்லிகாவை லவ் பண்றான்.. இதுல என்ன கொடுமைன்னா ஒரு டூயட்டும் உண்டு.. நீ மட்டும் மாறிட்டேடி மல்லிகா..செமயான பாடல் வரிகளை எழுதிக்குடுத்த கவிஞர் மட்டும் மல்லிகாவா நடிச்ச சப்ப ஃபிகரை பார்த்திருந்தா கோடம்பாக்கத்தை விட்டே ஓடி இருப்பார்..

ஹீரோயின் அதுல்யா சுமாரா இருக்கு. நடிப்பும் ஓரளவு வருது..ஆனா அதுக்கு சரிப்பட்டு வராது.. ( டேய் ஒழுங்கா சொல்லீட்டு போ.. எதுக்கு சரிப்பட்டு வராது..?)

ஸ்ரீமனின் மனைவியாக வரும் ஃபிகர் தான் நான் சொன்ன செம கட்டை... சந்தன கலர் தேகம். ஆப்பிள் கன்னம்..செர்ரிப்பழ உதடு.வெண்ணெய் + மெழுகு மிக்ஸ் பண்ணி செய்த தேகமோ என வியக்க வைக்கும் உடல் அழகு..

ரொம்ப லோ பட்ஜெட் படமான இதுல அந்த செம கட்டை மட்டும் படம் பூரா பட்டுப்புடவைலயே வருது.. அநேகமா அதுதான் புரொடியூசரா இருக்கும். அல்லது புரொடியூசருக்கு...... ரொம்ப வேண்டியவங்களா இருக்கும்..ஹி ஹி 
http://www.jointscene.com/ahtees/admin/movies/content/17263_17_Ayvar.jpg
ஏண்டா இந்தப்படத்துக்கு வந்தோம் என விசனப்பட நேர்ந்தபோது மனதில் பட்ட வசனங்கள்

1.  டேய்.. சுத்துதுடா......

இன்னும் நாம குடிக்கவே இலை.. எப்படிடா சுத்தும்?

நான் பாட்டில் மூடியை சொன்னேன்...


2. இப்போ எதுக்கு இந்த கிழவனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கே..?


குடிச்சா அயுசு கம்மின்னு அடிக்கடி என்னை திட்டுவியே..இந்தாளுக்கு வயசு 80 ஆகுதாம்.. கடந்த 60 வருசமா குடிச்சுட்டே தான் இருக்காராம்.இப்போ என்ன சொல்றே..?

3.  என்னை ரொம்ப வயசானவன்னு கேவலமா பார்க்காதீங்க.. என் மூணாவது சம்சாரம் முழுகாம இருக்கா...

யார்றா இந்த ஆளு....?

என் ஒயின் ஷாப் உடன் பிறப்பு..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMYqufdo3U_LKbTbzNXSnGTuPuAlxEQnhmJCtpIoQuvnBcoh3nIUOYNe0n8wjaJU0GZ02V5uWglzmSqB54wlVSHz5cn7k4_XjURhke80z324BRjrQAMNDmsGAAovnIG7RLq4wQknHBYJpC/s1600/sameera_reddy_latest_hot_stills_pics_photos_wallpapers_02.JPG
4.  முதல் இரவுக்கு போற பொண்ணுக்கு வளையல் போட்டு விடறப்ப எதுக்காக எத்தனை வளையல் போடறோம்கறதை எண்ணுறாங்க..?

எத்தனை வளையல் உடையுதுங்கறதை வெச்சு கணக்கு போடத்தான்.

( ஹா ஹா நாங்க யாரு.. வளையலையும் கழட்டி வெச்சுடுவோம்ல.?ஹி ஹி )

5.  எனக்கு மல்லிகா செட் ஆகிட்டா ..ஊர்ல இருக்கறவனுக்கெல்லாம் பார்ட்டி.. அவனவன் ஓ சி ல கிடைக்குதேன்னு அள்ளிட்டு போறான்.. நீ மட்டும் கண்டுக்காம இருக்கியே,.?

ஏன்னா.. நான் தான் மல்லிகாவோட தற்கால புருஷன்..

(அப்போ கற்கால. முற்கால, எதிர்கால புருஷன்க நிறைய பேரு மெயிண்டெயின் பண்ணுறாங்க போல..)

6. நீ எதுக்காக இப்போ மொட்டை போட்டிருக்கே..?


நம்ம மல்லிகா இருக்காளே.. அவ யார் கிட்டேயும் இதுவரை ஒரு மாசத்துக்கு மேல ஒரே ஆள் கிட்டே இருந்ததில்லையாம்.. என் கிட்டே 40 நாள் இருந்துட்டா.. அதை கொண்டாட...

டிஸ்கி - நான் மேலே ஜொள்ளிய அந்த கட்டையோட ஸ்டில் கிடைக்கலை... அதனால பொன் வைக்கிற இடத்துல பூ வைக்கற மாதிரி ஒரு ஆல்டர்நேட் அரேஞ்மெண்ட்ஸ்க்காக கடைசி ஸ்டில்.. ஹி ஹி (சமீரா ரெட்டி ஸ்டில் எதுக்கு போட்டீங்க?ன்னு ஏகப்பட்ட கால்...)

ஆட்சியை கலைப்பது கவர்னர் உரிமை-ஆட்சியை கலாய்ப்பது பதிவர் கடமை

http://thenaali.com/cpanel/Editor/images/articles/thenaali%20choice/thenaali%20cartoon/cartoon_feb_17.jpg 

1. பத்திரிகைச் செய்தி: சுப்ரீம் கோர்ட்டுக்கு விரைவில் பதிலளிக்க வேண்டிய சூழ்நிலை சி.பி.ஐ.,க்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, தி.மு.க., எம்.பி.,யும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

சும்மா கண் துடைப்பு விசாரனை பண்ணுனா நாங்க நம்பிடுவோமாக்கும்?முதல்ல கலைஞர் டி விக்கு சீல் வெச்சு விசாரனை பண்ற வழியைப்பாருங்க...


-------------------------------------------

2. "டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளரான அரவாணி ரோஸ்: தி.மு.க., அரசில் எந்த திருநங்கைக்கும் அரசு பணி வழங்கப்படவில்லை. அ.தி.மு.க., ஆட்சியின் போது திருநங்கையர்கள் மூன்று பேருக்கு ஜெயலலிதா அரசு பணி வழங்கினார். கருணாநிதிக்கு எதிராக என்னை நிறுத்தினால் போட்டியிடுவேன்.

அதுவுமே அம்மா எதேச்சையா குடுத்திருப்பாரு..அல்லது கலைஞர் ஆட்சியில் இல்லாதது என் ஆட்சியில் நடந்ததுன்னு காட்ட குடுத்திருப்பாரு.. எப்படியோ நல்லது நடந்தா சரிதான்.


-------------------------------------------

3. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: கபட நாடகம் நடந்து முடிந்தாகிவிட்டது. இறுதியாக, குட்டு வெளிப்பட்டு விட்டது. அனைவருக்கும் தெரியும் வண்ணம் உண்மை வெளிவந்து விட்டது. "ஸ்பெக்ட்ரம்' ஊழல் மூலம் கிடைத்த பணத்தை, தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்ட தி.மு.க., - காங்கிரஸ், தங்கள் வேறுபாட்டைப் போக்கி, தமிழக சட்டசபை தேர்தல் தொகுதிப் பங்கீட்டை முடித்துள்ளன.

ஏம்மா ,சும்மா நடிக்காதீங்க.. 50 சீட்டுக்கு ஓக்கே சொல்லி இருந்தா அவங்க கூட நீங்க கூட்டணி வெச்சிருப்பீங்க.. பச்சைக்கலர் டிரஸ் போட்டுட்டு ஏன் இப்படி பச்சோந்தி மாதிரி பேசறீங்க?


------------------------
http://inthiya.in/ta/wp-content/uploads/2011/02/kanimozhi-rasa-cartoon.jpg
4, பா.ஜ., மாநில துணைத் தலைவர் எச்.ராஜா பேட்டி: குரல் வளையை நசுக்குவது போல காங்கிரஸ் நடந்து கொண்ட பிறகும், அக்கட்சியுடன் தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளது. ஊழலின் ஊற்றுக்கண்ணாக உள்ள காங்கிரஸ் செய்த ஊழலில் நான்கில் ஒரு பங்கு தி.மு.க.,விற்கும் உண்டு.

 என்னது? வெறும் 25 % தானா? எங்க தானைத்தலைவர் அந்த அளவுக்கு இறங்கி வர மாட்டாரே.. அட்லீஸ்ட் பாதிக்குப்பாதியாவது வாங்கி இருப்பாரே,...


-------------------------------------------

5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலர் பிரகாஷ் கராத் பேச்சு: இந்திய மக்கள் முன் இப்போது மிகப் பெரிய இரு பிரச்னைகள் உள்ளன. ஒன்று மிகப் பெரிய ஊழல், மற்றொன்று விலைவாசி உயர்வு. இந்த இரு பிரச்னைகளுக்கு காரணம், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசும், மாநிலத்தில் தி.மு.க., அரசும் தான்.

பிரச்சனை  என்ன?ன்னு எல்லாருக்கும் தெரியுது.. ஆனா அதுக்கான தீர்வு என்ன?ன்னு தான் யாருக்கும் தெரியல...

-------------------------------------------

6. முன்னாள் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேட்டி:பணத்திற்கும், பிரியாணிப் பொட்டலத்திற்கும், மது பானத்திற்கும் ஓட்டுகளை அடகு வைக்கும் நிலை இனியும் தொடரக்கூடாது. "என் ஓட்டு விற்பனைக்கல்ல' என்பதை ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் மக்கள் புரிய வைக்க வேண்டும்.

 அது சரி.. இதையும் ஓ சி ல குடுத்து எங்களை வேடிக்கை பார்க்க சொல்றீங்களா?வந்த வரை லாபம்னு வாங்கி போட்டுட்டு போய்ட்டே இருக்க வேண்டியதுதான்.

--------------------------------------------
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjL4EwVTbqM3pj2a1mwqJSLSRleRya6cAr7Dr9byyS4upk3VTKVAtha58gs7yKAHLuX82VxrHxzFRlCz3jn0fRngyXpRDVVLCbJDuRUhuIxcW2gZkBr_MPjv56-mLMnb1VglkfvPe3pcBg/s400/image009.jpg
7. புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி பேட்டி:சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிட இரண்டு தொகுதிகள் கேட்டோம். ஆனால், ஒரு தொகுதி மட்டும் தருவதாகக் கூறினர். எனவே, தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறி, 40 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

ஹா.. ஹா.. ஹா.. இருங்க என்னால சிரிப்பை அடக்க முடியல... எங்க தலைவர் ஒரு சீட் பிச்சை போட்டதை வாங்காம இப்படி சுய மரியாதை அது இதுன்னு ஏன் சார்  உடம்பை கெடுத்துக்கறீங்க? எங்க அண்ணன் ராம் தாசை பார்த்தீங்களா? எவ்வளவு கேவலப்படுத்தினாலும் ஒண்ணுமே தெரியாத மாதிரி , எதுவுமே நடக்காதது மாதிரி சிரிச்சுட்டே போஸ் குடுப்பாரு.. நீங்க இன்னும் வளரனும் தம்பி...

----------------------------------------
8. இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜா பேச்சு: ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்படாத எந்த ஒரு நாகரிகமும் மனித நாகரிகமாகவே ஏற்றுக் கொள்ளப்படாது. அதனால், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் இன்னும் கால தாமதம் கூடாது. மேலும், அதை தள்ளிப் போடுவதை அனுமதிக்க முடியாது. விரைவில், மசோதா நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆமாங்க ..அப்படித்தான் கடந்த 25 வருஷமா எல்லாரும் நம்பறாங்க... இன்னும் 25 வருஷம் நம்புனா என்ன ஆகிடும்?

---------------------------------------
9. பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் பேச்சு: நிதி நிலை அறிக்கையில், கறுப்புப் பணம் தொடர்பான எந்த விவரத்தையும், அரசு அறிவிக்கவில்லை. குறைந்தபட்சம் வெளிநாட்டில் எவ்வளவு கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது, எத்தனை பேர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பன போன்ற விவரங்களையாவது அரசு வெளியிட வேண்டும்.

அது சரி.. அதை வெளியிட்டா எங்களுக்கு எப்படி வருமானம் வரும்?னு காங்கிரஸ் கேட்குமே..?


10. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்மூத்த தலைவர் பிருந்தா கராத் பேச்சு: விலை உயர்வு என்பது சட்டப்பூர்வமாக அறிவிக்கப்படாத வரி போல் உள்ளது. இந்த பட்ஜெட் பணக்காரர்களுக்கும், கம்பெனிக் காரர்களுக்கும் தான் பயனுள்ளதாக இருக்கும். மருத்துவமனைகள், ரத்த பரிசோதனை மையங்களுக்கு கூட, இந்த பட்ஜெட்டில், 5 சதவீத சேவை விதிக்கப்பட்டுள்ளது.நோய் வந்தால் கூட வரி விதிக்கப்படும் என்பது கொடுமையானது.

ஏழைகளுக்கும் தேர்தல் சமயங்களிலே ஏதாவது நல்லது செய்வாங்க , கவலைப்படாதீங்க... 

டிஸ்கி - சனி ஞாயிறு நெட் பக்கம் வராதவர்களுக்காக  என் முன் தினப்பதிவுகள்

1. சினேகா-வின் பவானி - சினிமா விமர்சனம்

2. WORLD INVASION - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

3. பிரகாஷ்ராஜ்-ன் அன்வர் - கோவை குண்டு வெடிப்பு பின் புலக்கதை - சினிமா விமர்சனம்

4. ஆ...!! அனுஷ்காவா அப்படி. ? .ம்ஹூம் ..இருக்காது. நான் நம்ப ... 

 

 

Sunday, March 13, 2011

ஆ...!! அனுஷ்காவா அப்படி. ? .ம்ஹூம் ..இருக்காது. நான் நம்ப மாட்டேன்....

http://ininb.com/wp-content/uploads/2010/05/anushka4.jpg 

1. தமிழக முதல்வர் கருணாநிதி: விவசாயிகள் வாங்கிய, 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பயிர்க் கடன்களை முறையாக திருப்பிச் செலுத்துபவர்களின் வட்டியை முற்றிலும் ரத்து செய்யும் திட்டத்தை, இந்தியாவிலேயே முதன் முறையாக அறிவித்தோம்.

என்ன தலைவரே... இதெல்லாம் சாதாரண சாதனை.. உலகையே ஆச்சரியப்படுத்தும் அளவு ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ஊழல் செய்தும், அது எல்லாருக்கும் பப்ளிக்கா தெரிஞ்சும் யாராலும் ஒண்ணும் செய்ய முடியாத அளவு கண்ட்ரோல் பண்ணி வெச்ச சாதனை இருக்கே.. அதை விட்டுட்டு  ஏதேதோ சொல்றீங்க..

---------------------------------------------

2. பத்திரிகைச் செய்தி: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, வணிக முத்திரை குறியீடு தென்மண்டல பெண் அதிகாரியை, சி.பி.ஐ., ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

மனசுக்குள்ள புரட்சித்தலைவின்னு நினைப்பு போல... ஒரு உறைக்குள்ள ஒரு வாள் தான் இருக்க முடியும்.. ஒரு நாட்டுக்கு ஒரு புரட்சித்தலைவிதான் இருக்க முடியும்..  ( பாவம் ஒண்ணை வெச்சே தமிழ்நாடு தாங்க முடியாம இருக்கு... இதுல இண்ணொண்ணா?)
----------------------------------------------


3. இந்திய கம்யூ., மாநிலச் செயலர் தா.பாண்டியன்: மாணவ, மாணவியர் தேர்வுக்குத் தயாராகி, தேர்வை எழுதுகின்ற மாதமாக இருப்பதால், ஆசிரியர்கள், மாணவ, மாணவியருக்கு ஏப்ரல் மாதத்தில் தேர்தல் பெரும் இடையூறாக அமையும்.

என்ன விபரம் இல்லாம பேசறீங்க.. அவங்க ஃபெயில் ஆனா அக்டோபர்ல பார்த்துக்கலாம்.. இவங்களுக்கு அப்படியா? 5 வருஷத்துக்கு ஒரு தடவை தான் வரும்..விட்டா பிடிக்க முடியாது...

-------------------------------------------
4. பிரதமர் மன்மோகன் சிங்: நிதி பற்றாக்குறையை சமாளிக்கவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதத்திலும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்த பட்ஜெட்டை தயாரித்துள்ளார். கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர புதிதாக, "பொது மன்னிப்பு திட்டங்கள்' கொண்டு வந்தால் பயன் தராது.

ஆமா.. கைல வெண்ணெயை வெச்சுக்கிட்டே நெய்க்கு அலைந்த கதையா ஸ்விஸ் அக்கவுண்ட் டீட்டெயிலை வெச்சு மிரட்டி வரி கட்ட வைக்காம விட்டூட்டீங்க..(ஒரு வேளை அதுலயும் பணம் கை மாறி இருக்குமோ..?)

------------------------------------------

5. கோர்ட்டில் சி.பி.ஐ., தகவல்: "ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனம், தொலைத் தொடர்பு துறையிடம் அளித்திருந்த ஆவணத்தைக் கைப்பற்ற முடியவில்லை. வழக்கு விசாரணைக்கு முக்கிய ஆதாரமாகக் கருதப்படும் இந்த ஆவணம், காணாமல் போய் உள்ளது.

அதெப்பிடிங்க காணாம போகும்?..அதென்ன சினிமா கதையா? காணாம போனாக்கூட யாரும் கண்டுக்கமாட்டாங்க.. 5 டூயட், 4 ஃபைட் வெச்சு சமாளீச்சுக்கலாம்னு சொல்ல...


-----------------------------------------------------

6. தொலைத்தொடர்புத் துறைச் செயலர் சந்திரசேகர்: தொலைத்தொடர்பு சேவைகளை துவக்காத புதிய நிறுவனங்களிடம் இருந்து, இதுவரை, 300 கோடி ரூபாய்க்கு மேல், அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. காலக்கெடுவுக்குள் சேவைகளை துவக்காத, 119 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, இந்த அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.


வசூல் பண்ணுனது எல்லாம் அரசாங்க கஜானாவுக்குப்போச்சா..?இல்ல ராசா மாதிரி ஆட்டையைப்போட்டுட்டீங்களா..?

-------------------------------------

7. தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி: நமீதாவுக்கு புதுபட்டம்
தமது ரசிகர்களை செல்லமாக மச்சான்ஸ் என்று அழைக்கும் தென் இந்தியாவின் கவர்ச்சி புயல் நமீதாவுக்கு, "தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி" என்று ஒரு புதுபட்டத்தை வழங்கியுள்ளனர் ஜேப்பியார் கல்லூரி மாணவர்கள்.

ச்சீ.. நாட்டி.. கம்மனாட்டீ ( நமீதா ரசிகர்கள் யாரும் பொங்கி எழாதீங்க.. நான் செல்லமா திட்டுனது ஜேப்பியார் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்சை.. தக்காளிங்க.. படிக்கற வேலையைத்தவிர எல்லா வேலையும் செய்யுதுங்க...)

--------------------------------------------------

ranveer singh-anushka sharma kisses lip to lip in public place

8. பாலிவுட்டின் இளம் நாயகன்-நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரன்வீர் சிங்கும்-அனுஷ்கா சர்மாவும் காதலிப்பது ஊர் அறிந்த விஷயம். ஆனால் தாங்கள் காதலர்கள் இ‌ல்லை என்று கூறிவரும் இருவரும் சில தினங்களுக்கு முன்னர் பொது இடத்தில் லிப் டு லிப் கிஸ் கொடுத்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினர்.

குழப்பாதீங்க.. பொது இடத்துல குடுத்தாரா..? உதட்டுல குடுத்தாரா..? (இந்த அனுஷ்கா யாருக்கு எதை குடுத்தாலும் எங்களுக்கு கவலை இல்ல.. தங்கத்தலைவி தமிழ்நாட்டின் விடி வெள்ளி அனுஷ்கா தான் எங்க டார்கெட்)

-------------------------------------------------



mandira bedi poses topless
9. பிரபல பேஷன் பத்திரிகை ஒன்றுக்கு டாப்லெஸ் போஸ் கொடுத்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நடிகை மந்திரா பேடி.

இது போன்ற கலாச்சாரத்துகு புறம்பா ஒரு நடிகை நடந்துக்கிட்டது எனக்கு பேரதிர்ச்சியை அளிக்குது.. அந்த ஸ்டில்லை என் மெயிலுக்கு அனுப்புனா அதை பப்ளிஷ் பண்ணி ஒரு விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவேன்.. ( ஹி ஹி ஒரு பய தூங்க மாட்டான்)

டிஸ்கி - 1 : அனுஷ்காவை இவ்வளவு கவுரவமா எந்த இணைய தளத்துலயும் இதுவரை காட்டுனதில்லை.. எனவே கண்ணியமான இணைய தளம் என்ற விருதை அட்ரா சக்க தனக்குத்தானே அளித்துகொள்கிறது..இது ரொம்ப கேவலமா இருக்கே என நொந்து கொள்பவர்கள் டாக்டர் கலைஞரின் நமக்கு நாமே திட்டத்தை நான் ஃபாலோ பண்றேன் என்பதை உணரவும்.. ஹி ஹி

டிஸ்கி -2 : அனுஷ்காவின் ஜாக்கெட் கை ஏன் இவ்வளவு குட்டை என சந்தேகம் கொள்பவர்கள் கட்டையா இருக்கறவங்க குட்டையா கை வெச்ச ஜாக்கெட் போடுவாங்க என்ற அரிய உண்மையை ஆடை அலங்கார வடிவமைப்பாளர் மும்பை  அங்கிஸ்கான் (செங்கிஸ்கான் தம்பி??!!) ஸ்டார் டஸ்ட்ல தந்த பேட்டியை பார்க்கவும்..ஹிந்தி தெரியாதவங்க,ஸ்டார் டஸ்ட் இதழ் கிடைக்காதவங்க போனா போகுதுன்னு அனுஷ்காவை இன்னொரு முறை பார்க்கவும்.. ஹி ஹி

டிஸ்கி 3 - தேவையே இல்லாம எதுக்கு டிஸ்கி 2 போட்டீங்கன்னு கேட்கறவங்களுக்கு  இதன் மூலமா நான் 2 மேட்டர் உலகத்துக்கு அறிவிச்சிருக்கேன்.. 1. எனக்கு ஹிந்தி தெரியும்.. 2. நான் ரெகுலரா ஸ்டார் டஸ்ட் இதழ் படிச்சுட்டு வர்றேன் # தம்பட்டத்தமிழேண்டா

Saturday, March 12, 2011

சினேகா-வின் பவானி - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhV5KJFadRm6Y2jOb6dv9r7qhwn31SrDkwVqPu6zNzgfoLUg3f-TDxS5BqXnMokJLUS_8Mclxb712uVQfzkRqAibSO9C3NPd6tiqg78URBN4SWUeWlSEh8HRQXHcwmXZucmyYPnuZ4-SJJ5/s1600/Bhavani.jpg
சிரிப்பு அழகி சினேகாவுக்கு திடீர்னு ஒரு விபரீத ஆசை.. நாமளும் விஜய சாந்தி மாதிரி ஒரு வைஜயந்தி ஐ பி எஸ்  டைப் ஆக்‌ஷன் படம் கொடுக்கனும்னு..அதனால வலுக்கட்டாயமா தன்னோட ஸ்பெஷல் பிராண்ட் சிரிப்பை மூட்டை கட்டி பரண்ல வெச்சுட்டு போலீஸ் யூனிஃபார்ம் மாட்டி பல வித்தைகளை காட்டி இருக்காரு.........ஆனா.....

பொதுவா போலீஸ் யூனிஃபார்ம் போட்டா எல்லாருக்கும் கெத்தாதான் இருக்கும்..ஆனா திரைக்கதைல கெத்து இல்லையே....போலீஸ் ஆஃபீசரோட வீர தீர சாகசப்படம் பார்க்க வந்தவங்க போலீஸ் ஆஃபீசரோட தங்கையை ரேப் பண்ணி கொலை செஞ்சவனை பழி வாங்கற எஸ் ஏ சந்திர சேகர் கால படக்கதையை எதிர்பார்த்திருக்க மாட்டாங்க தான்.

என்னதான் சினேகா முகத்தை இறுக்கமா வெச்சிருந்தாலும் அவரது முகம் ஒரு சாஃப்ட்டான முகம் என்பதால்  ( கண்டு புடிச்சுட்டாருய்யா துர)  போலீஸ்க்கே உரிய கண்டிப்பு முகத்தில் வெளிப்படுத்த முடியல... ஆனா அவரும் முடிஞ்சவரை சமாளிச்சிருக்காரு..அவர் ஜீன்ஸ் பேண்ட் . டீ சர்ட் போட்டுக்கிட்டு கோபமா நடந்து வர்றப்ப.... ஹி ஹி.....பார்க்க நல்லாருக்கு  .( சென்சார் சென்சார்....)

அவர் வர்றப்ப ஒரு பேக் கிரவுண்ட் ஹம்மிங்க் கொடுக்கிறாங்க.. பாருங்க .. யதா யதா தரிகிடத்தோம் யதா யதா தரிகிடத்தோம் தம் தோம்... ஸ்லோ மோஷன்ல போலீஸ் புடை சூழ சினேகா நடந்து வர்றப்ப பார்க்க நல்லாதான் இருக்கு.. ஆனா பில்லா ரேஞ்சுக்கு அதே சீன் 13 இடத்துல வர்றப்ப கடுப்பாகுது...

http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/izizi//mywebdunia/UserData/DataC/cinemakisukisu/images/127404_f520.jpg
இந்தப்படத்துக்கு டூயட் வேண்டாம்னு முடிவு பண்ணுன இயக்குநரை நான் பாராட்டறேன்.. ஆனா சினேகாவை ஒரு இடத்துல கூட சிரிக்கறதை காட்டாததை வன்மையா கண்டிக்கிறேன்.. ( ஒரு சீன்ல அப்பாவைப்பார்த்து சிரிக்கிறார்.. ஆனா சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராதுன்னு சொல்ற மாதிரி அப்பாவைப்பார்த்து சிரிப்பது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.. ஹி ஹி )

ஃபைட் சீன்ல சினேகா ரொம்ப படுத்தறார்.. வில்லனின் அடியாளை ஓங்கி ஒரு அடி குடுத்துட்டு 5 விரல்லயும் நெட்டை (சொடக்கு - நன்றி - கி ராஜ நாராயணன்)எடுத்துட்டு இருக்கார்.. சுத்தி 36 வில்லனின் அடியாட்கள் அவர் சொடக்கு எடுத்து முடியற வரை காத்திருந்து அப்புறம் அடிக்க வர்றாங்க...

விவேக்- செல் முருகன் காமெடி காட்சிகள் தனி டிராக்கில் படத்துக்கு சம்பந்தம் இல்லாமல் போவதால் மனதை நிற்கவில்லை.. ஆனால் மோசமில்லை.. சிரிப்பு வருது....

http://www.viduppu.com/photos/full/actresses/sneha/004.jpg
வசனகர்த்தா பவானியில் பவனி வந்த இடங்கள்

1. இந்தத்தடவை உனக்கு எம் எல் ஏ சீட் இல்லை..

யோவ்,,நீ ஜெயிக்கனும்கறதுக்காக கள்ள ஓட்டு, கொலைன்னு எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கேன்..( நல்லா சொல்றாங்கய்யா டீட்டெயிலு..)

2.  யோவ்.. எஸ் ஐ.. ராஜா ராமன் மேல ஒரு சூசயிடு கேஸ் போடு.. அவனை நான் கொல்லப்போறேன்...

கேஸா..அப்படின்னா..?

சுத்தம்.. அதே தெரியாதா?    ( ரொம்ப அப்பிராணியா இருக்காரே...இந்த சப் இன்ஸ்பெக்டர்..) 

3. எனக்கு  கிம்பளம் தர்றது முதல் வீடு கட்டித்தந்தது வரை எல்லாமே அவர்தான்... அவரை எப்படி நான் அரெஸ்ட்  பண்றது?

உன் பொண்டாட்டிக்குத்தாலி கட்னதும் அவர்தானா..?

4.  ஹலோ... வந்து சேர்ந்திட்டியா.?

விவேக்.. - ஹா ஹா ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு. போயே சேர்ந்துட்டான்

5.  இனிமே ரன்னிங்க்ல செல் ஃபோன் பேசுவே நீ..?

ம்ஹூம்.. இனி வாக்கிங்க்ல கூட செல் ஃபோன்ல பேச மாட்டேன்...

6.  ஆஹா.. முருகன் மயில் மேல ஏறி வர்றது எனக்கு தெரியுது...

விவேக்.. - அடப்பாவி.. இங்கே பார்த்து வண்டி ஓட்டுடா.. எனக்கு எமன் எருமை மேல வந்து துரத்தறது நல்லா தெரியுது...

7. விவேக்.. -  அடப்பாவி.. வண்டில போறப்ப சாமி கும்பிடாம போனா சாமி கோவிச்சுக்கவா போகுது?ஏண்டா ஆக்சிடெண்ட் நடக்க ஒரு காரணி ஆகறீங்க..?

8.  விவேக்.. - என்னது? ரேப் பண்ணுனவனுக்கு ரூ 500 அபராதமா? இனி பாக்கெட்ல ரூ 500 வெச்சிருக்கறவன் எல்லாம் அடங்க மாட்டேனே... ( உயிர் புகழ் சங்கீதா நடித்த தனம் பட டயலாக் உல்டா.. # வாழ்க வல்லாரை லேகியம்)

9. விவேக்.. - என்னது? ஆயிலுக்கு பஞ்சமா? தமிழ் நாட்ல இருக்கற டீகடைகள்ல விற்கற பஜ்ஜிகளை பிழிஞ்சா ஆயில் கஷ்டமே வராதேடா.....

10. விவேக்.. -  நான் நினைக்கறேன்  இந்த பஜ்ஜில இருக்கற ஆயில் தான் பின் மருவி பஜாஜ் ஆயில்னு வந்ததோ..?

11.வில்லன் - இங்கே பாரு.. ஒரு அசிஸ்டெண்ட் கமிஷனர்  ஒரு சப் இன்ஸ்பெக்டரை அடிச்சான்னு பேர் வெளில வந்தா பெரிய பிரச்சனை ஆகும்...

ஓக்கே.. கான்ஸ்டபிளை விட்டு அடிக்க சொல்றேன்..

12. .வில்லன் - இவனுங்க பார்க்கற பார்வையே சரி இல்லையே.. ஓட்டு போடுவானுங்களா?

அல்லக்கை - நீங்க இதுவரை ஜனங்களுக்கு ஏதாவது நல்லது பண்ணி இருக்கீங்களா?

இல்லை..

அப்புறம் என்ன கவலையை விடுங்க.. இந்த ஜனங்க எபவும் நல்லவங்களுக்கு ஓட்டு போடவே மாட்டாங்க.. எல்லா ஓட்டும் நமக்குத்தான்..

13.  தலைவரே.. குழந்தைக்கு பெயர் வைங்க....

நம்ம சின்னம் கோடாலி சின்னம் தானே .. அதையே வை.. தேர்தலுக்கு யூஸ் ஆகும்..

14.  வில்லன் - அவ நம்மளை திட்றாளா? புகழ்றாளா? தெரியலையே..?

ஜனங்க கை தட்றாங்க.. அப்போ புகழ்றாங்கன்னு தான் அர்த்தம்..

அடப்போடா.. அவங்க எதுக்கு கை தட்றாங்கன்னு அவங்களுக்கே தெரியாது..



http://ulavan.net/wp-content/uploads/2010/12/sinega-e1292341879707.jpg
பரவை முனியம்மாவை வைத்து எடுக்கபாட்ட பாடல் அப்பட்டமாக தூள் பட ஏய் சிங்கம் போல நடந்து வரும்.. பாட்டின் உல்டா...

இயக்குநருக்கு பாராட்டு பெற வைக்கும் இடங்கள்

1. ஹீரோயின் தங்கையை வில்லனின் ஆட்கள்  கடத்தி செல்லும்போது அவளைக்காப்பாற்ற போகாமல் வில்லனின் மகனை ரிவால்வர் முனையில் மிரட்டி வில்லனை பணிய வைக்கும் இடம் விறு விறு....

2. ஆக்சிடெண்ட் ஆன செல் முருகன் பால் வண்டியிக்கு கீழே விழுவதும்.. எதேச்சையாக அவர் வாய் பால் பைப்புக்கு கீழே இருப்பதும்...செம காமெடி.. இந்த சீனில் விவேக்கின் டயலாக் டெலிவரி செம...

3. சினேகாவின் தங்கையாக வரும் ஃபிகர் புதுசா ,இளசா இருப்பது.. ஹி ஹி 
http://thangameen.com/Images/ContentImages/admin/sneha_23.gif
இயக்குநருக்கு சில கேள்விகள்

1.போலீஸ் கான்ஸ்டபிள் தனது குழந்தை இறந்ததற்கு லீவ் கேட்டும், அதை அடக்கம் பண்ணக்கூட லீவ் தராமல் எஸ் ஐ டபாய்ப்பதும்...எந்த ஊர்ல அப்படி நடக்குது..?

2.ஏ சி பவானியின் கதையில் தேவை இல்லாமல் கான்ஸ்டபிள் சம்பத்குமாரின் கிளைக்கதை எதற்கு?

3. ஹீரோயின் தங்கயின் பெண் அழைப்பு விழாவில் பன்னீர் தெளிப்பதற்குப்பதில் பெட்ரோலை தெளித்து அரை மணி நேரம் கழித்து பட்டாசு பற்ற வைத்து எரிப்பது ஓவர்...சுற்றி இருப்பவர்கள் கேட்க மாட்டாங்களா?

4. ஹீரோயின் ஆக்சிடெண்ட்டில் காலில் அடிபட்டு ஹாஸ்பிடலில்  அட்மிட் ஆன அடுத்த வாரமே எப்படி டெர்மினேஷன் லெட்டர் வரும்? மெடிக்கல் லீவ் இருக்கே..? 2 வருஷம் கழிச்சுத்தானே அந்த நடவடிக்கை எடுக்க முடியும்?

5. எந்த காலேஜ்ல எண்ட்ரன்ஸ்ல நீச்சல் குளம் இருக்கு?அதுல ரவுடிங்க நீச்சல் அடிப்பாங்களா? காலேஜ் டைம்ல...

6. ஹீரோயின் தங்கை டிரஸ் சேஞ்ச் பண்ண அறிமுகம் இல்லாதவர் வீட்டில் ஒரு அறையில் நுழையும்போது கதவைத்தாழ் போடாமல் டிரஸ் சேஞ்ச் பண்ணுவாளா? ( அப்பத்தானே வில்லன் ரேப் பண்ண உள்ளே வர முடியும்?னு சால்ஜாப்பு சொல்லக்கூடாது?)

7 கத்திக்குத்து பட்ட பொண்ணை காப்பாத்தி ஹாஸ்பிடல்ல சேர்க்காம ஏம்மா எந்திரி.. பாரு  அப்படின்னு ஹீரோயின் கத்தறாங்க.. லாஜிக்  ஓட்டை  ஓவர்...


http://www.thedipaar.com/pictures/resize_20101227131420.jpg
எட்டடுக்கு சோலை என்னுடைய சேலை எனும் டப்பாங்குத்துப்பாட்டு வரிகள் செம கில்மா .. ஆனால் அந்த பாட்டை படமாக்குவதில் ரசனைக்குறைவு..அந்த பாட்டுக்கு நடன தாரகைகளை தலைக்கு குளிக்க வைத்து  ( என்னமோ இவனே தலையை துவட்டி விட்ட மாதிரியே சொல்றானே.. )சேலை கட்ட வைத்து டீசண்ட்டாக ஆட வைத்தும் நோ யூஸ்...

கரும்புச்சாறு சொல்லழகி,கற்பூரக்கண்ணழகி  செல்ஃபோன் சிணுங்கல் சிங்காரி பாட்டு வரிகள் அழகு கற்பனை...

கோட்டா சீனிவாசராவ் வில்லன் நடிப்பில் ஓக்கே... ( ஆம்பளைங்களை இவன் பாராட்றதே இல்லைன்னு யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க..)

சராசரியாக 20 நாட்கள் ஓடும்

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 38
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்கிங்க்  - ஓக்கே

WORLD INVASION - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://reviewmovies.co.cc/wp-content/uploads/2011/02/world-invasion.jpg
டப்.. டப்... டுப் டுப்.....டமால்.. டுமீல்... டப்.. டப்... டுப் டுப்.....டமால்.. டுமீல்...  டப்.. டப்... டுப் டுப்.....டமால்.. டுமீல்...  டப்.. டப்... டுப் டுப்.....டமால்.. டுமீல்...  டப்.. டப்... டுப் டுப்.....டமால்.. டுமீல்...  அதோ எதிரி வந்துட்டான் தாக்குங்க   ... டப்.. டப்... டுப் டுப்.....டமால்.. டுமீல்...  டப்.. டப்... டுப் டுப்.....டமால்.. டுமீல்...  விடாதீங்க.. நாம ஜெயிச்சே ஆகனும்... டப்.. டப்... டுப் டுப்.....டமால்.. டுமீல்... டப்.. டப்... டுப் டுப்.....டமால்.. டுமீல்... நம்ம முழு பலத்தையும் பிரயோகிக்கனும்... கமான்,., சுடுங்க... டப்.. டப்... டுப் டுப்.....டமால்.. டுமீல்... டப்.. டப்... டுப் டுப்.....டமால்.. டுமீல்...

 வேற ஒண்ணுமில்ல .. மொத்தம் ஓடற 90 நிமிட படத்துல 70 நிமிஷம் மேலே சொன்ன மேட்டர் தான்...( ச்சீ  ச்சீ அந்த மேட்டர் இல்ல..)  காது வலி.. கண்ணூ வலி... ஸ் ஸ்  அப்பா முடியல..... இருங்க .. ஒரு ஹார்லிக்ஸ் குடிச்சுட்டு வர்றேன்.....

 நானும் பல குப்பை படங்களை பார்த்திருக்கேன்.. ( நான் பார்க்கறதுல 90 % குப்பைங்கதான்)# இதுல பெருமை வேறயா? அது என்னமோ தெரில என்ன மாயமோ தெரில நான் பார்க்கறது எல்லாம் குப்பையாவே ஆகிடுது...நடு நடுவே ஆஹா  ஓஹோ  சூப்பர்னு போட்டுக்கனும்..ம்ம். எனக்கு என்ன ஆனாலும் நான் தாங்கிக்குவேன்..ஆனா என் ஃபாலோயர்ஸூக்கு ஏதாவதுன்னா என்னால தாங்க முடியாது... ஹி ஹி

http://static.muveez.com/media/rabbithole324.png
படத்துல என்ன கதை.?அதாவது டைரக்டர் விட்ட கதை என்ன?லாஸ் ஏஞ்சல்ஸ்ல அடையாளம் தெரியாத எதிரிங்க தாக்கறாங்க.... ராணுவம் வரவழைக்கப்படுது.. வேற்றுக்கிரக வாசிகள் போல் தென்படும் அவர்களை அழிக்கறாங்க...நமக்கு தலை வலி தான் மிச்சம்....

சில காட்சிகளில் ஹெலிகாப்டர் வந்து குண்டு போடற சீன்லாம் நல்லாதான் இருக்கு.. ஆனா பல காட்சிகள் குண்டு வெடிப்பே பிரதானமா இருக்கறதால நம்மால முடியல....ஒரு வேளை நாம இன்னும் பக்குவப்படனுமோ...? போர்க்கால படங்கள்., யுத்தம் சம்பந்தப்பட்ட படங்கள் நிறைய பார்த்திருக்கேன்.. ( தலையணை யுத்தம் (நன்றி பட்டுக்கோட்டை பிரபாகர்) முதல் உலக யுத்தம் வரை..

ஆனால் யாம் அறிந்த யுத்தபடங்களிலே இதுபோல் ஒரு மொக்கைப்படம் வேறெங்கும் காணோம்..( பாரதியார் ஆத்மா மன்னிக்க)

http://cdn.koimoi.com/wp-content/new-galleries/2011/03/World-Invasion-Battle-Los-Angeles-Premiere-01.jpg
மொக்கைப்படத்திலும் தேறிய வசனங்கள்

1. மறுபடி யூனிட்டை விட்டுப்பிரிஞ்சே  நானே உன்னை கண்டு பிடிச்சு ஷூட் பண்ணிடுவேன்.

2. ஒரு இனத்தோட பலத்தை அழிக்கனும்னா அங்கே உள்ள உயிர் இனத்தை அழிக்கறதுதான் ஒரே வழி...

3. ஃபிகரு  - உங்களுக்கு குழந்தை இருக்கா?

வீணாப்போன வீரன் - இல்லை

ஃபிகரு - எனக்கும் இல்லை,ஆனா குழந்தை பெத்துக்க ரொம்பவே ஆசைப்பட்டவ...

ஆடியன்ஸ் தரப்பிலிருந்து ஒரு ஆர்வக்கோளாறன் ( சத்தியமா நான் இல்லை)  - ஏம்மா.. நான் வேணா ஹெல்ப் பண்ணட்டா.?. எனக்கு ஹெல்ப்பிங்க் மைண்ட் ஜாஸ்தி...

(வீணாப்போன வீரன்  பெயர்க்காரணம் - ஃபிகர் தானா வலியனா வந்து பேசறப்ப கண்டுக்காம இருந்தானே... அதான் )

# ரண களத்துலயும் உனக்கு கிளு கிளுப்பு கேக்குது.. ம் ?


 இந்த டப்பா படத்தை ஈரோடு வி எஸ் பி & சண்டிகா ரெண்டு தியேட்டர்ல போட்டிருக்காங்க.. இதுல சைக்கலாஜிக்கல் ட்ரீட்மெண்ட் இருக்கு..எப்படின்னா 2 தியேட்டர்ல படம் போட்டிருக்கான்பா அப்போ கண்டிப்பா படம் நல்லாருக்கும் என ராங்க் கால்குலேஷன் போட்டுடுவான் நம்மாள்.. சீடன் கூட ஈரோட்ல 4 தியேட்டர்ல போட்டிருந்தாங்க.. செம குப்பை ஆச்சே அந்த மாதிரி....

தியேட்டர்ல படம் போட்ட பிறகு ஒரு காதல் ஜோடி வந்தது... அந்த பையனுக்கு 16 வயசு இருக்கும்.. அந்த ஃபிகருக்கு 15 வயசு இருக்கும்..ஸ்கூல் யூனிஃபார்ம்ல வந்தாங்க...( அந்தக்காலத்துல எல்லாம் நாங்க யூனிஃபார்ம்ல வெளில போகவே பயப்படுவோம்...)ஹூம்.. காலம் கெட்டுக்கிடக்கு.. அந்த பசங்களோட பெற்றோர்களை நினைச்சா பாவமா இருக்கு...

டிஸ்கி 1 - வழக்கமா சி பி பண்ற விமர்சனம் மாதிரி இல்ல...பக்கத்து சீட் ஃபிகரை பார்த்துட்டு கோட்டை விட்டுட்டாருன்னு யாரும் கமெண்ட் போட்டுடாதீங்க... அது உண்மை இல்லை.. படத்துல அவ்வளவுதான் தேறுச்சு...(அந்த ஃபிகரு தேறாது..ஹி ஹி )


டிஸ்கி 2 - இங்கே ரெண்டாவதா இருக்கற ஸ்டில் பார்த்துட்டு பரவால்ல. ஏதோ ஒரு சீன் இருக்கும் போலன்னு யாரும் போய் ஏமாந்துடாதீங்க.. இது சுத்தமான யு படம்..போய் ஏமாந்தா நான் பொறுப்பு இல்லை - இப்படிக்கு அகில இந்திய அஜால் குஜால் பட ரசிகர் மன்ற உறுப்பினன் அஞ்சா சிங்கம்.. ( இவர் சீன் படம் பாக்க மட்டும் அஞ்ச மாட்டாரு.. ஹி ஹி )


டிஸ்கி 3  - இந்தப்படத்துக்கு தமிழ் டைட்டில் உலகப்பேரழிவு ஆரம்பம்...ஆனா போனா நமக்குத்தான் பேரழிவு.. ஹி ஹி

சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்....சமயம் பார்த்து பல வகையில் கொள்ளை அடிக்கிறார்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8rcUaR_CKR-jO8PSEz4ZObOh1vP6-XjVS0uji6cRSrPVoXbnCvKmCnM-dJGf6lgtRbZdcJ106Xm3F4bI3a8hiBPuFSWUoElOTCdA8VnJrfQBsJ1Ripch10GDQIr-cpNvvsuO6pVOoM3Z8/s400/pg2a.jpg 

1. பிரதமர் மன்மோகன் சிங்: தவறான கணிப்பின் காரணமாக, மத்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையராக தாமஸ் நியமிக்கப்பட்டுவிட்டார். இதற்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

உங்களுக்கு அந்த அளவுக்கு பவர் இருக்கா..? சொக்கத்தங்கம் சோனியா ஓக்கே சொல்லீட்டாங்களா?

------------------------------------------

2. கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி: காங்கிரஸ் கட்சி, ஒழுக்கக் கட்டுப்பாட்டை தீவிரமாக கடைபிடித்து வருகிறது. அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டவர்கள் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்க வேண்டும்.

ஒழுக்ககட்டுப்பாடுன்னா.. என்ன அர்த்தம்? தலைமைக்கு தெரியாம எந்த ஊழலையும் பண்ணக்கூடாதுன்னு அர்த்தமோ?

-----------------------------------------------

3. மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன்: மார்க்சிஸ்ட் கட்சி ஊழல், தாராளமயமாக்குதல் ஆகியவற்றுக்கு எதிரானது. ஆகவே, தி.மு.க.,வுடன் உடன்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. அ.தி.மு.க.,. தரப்பில் இருந்து தேர்தல் உடன்பாடு குறித்து பேசுவதற்காக மார்க்சிஸ்ட் கட்சிக்கு அழைப்பு வந்துள்ளது. இரு கட்சிகளின் குழுவினரும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச இருக்கிறோம்.

வெற்றி வாய்ப்பு உள்ளவருடன் மட்டுமே கூட்டணிங்கறது உங்க கொள்கை போல...

---------------------------------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCMPY28JroG8kKRc0xzSsU7zNQBynJihPeKbUFD3LwRrMkH6OpD_vsQu0OBTZ6tA9R_Vh4CgofhjdyG9gaWnbRTfScmS67JgvsrdS-78f1xRBEE5_6X7mVNYJrpsbx2pEexN-wUpoEf1rv/s1600/tamilmakkalkural_blogspot_sonia.jpg
4. மத்திய உரத் துறை அமைச்சர் அழகிரி பேட்டி: தி.மு.க., - காங்கிரஸ் நல்லுறவில் விரிசல் என்று, ஊடகங்களில் தான் பெரிதுபடுத்தப்பட்டது. ஆனால், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில், எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை; இரு கட்சித் தொண்டர்களும், இணைந்து பணியாற்றுவோம். எங்கள் கூட்டணி மக்கள் ஆதரவுடன் மகத்தான் வெற்றியைப் பெறும்.


அதெல்லாம் சரி.. உங்களுக்கு அப்புறம் வந்தவங்க எல்லாம் ஏகப்பட்ட ஊழல்ல மாட்டி இருக்காங்க.. நீங்க வெறும் வாய்தான்.. இது வரை ஒரு ஊழல்ல கூட மாட்டலையே.. அம்புட்டு நல்லவரா நீங்க..?

-------------------------------------------------
5. என்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பேச்சு: முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு எனக்கு கட்சித் தலைமை கட்டளையிட்டது. கட்சித் தலைமையின் கட்டளைக்கு கட்டுப்பட்டு அப்பதவியை ராஜினாமா செய்தேன். அதன் பின் முதல்வர் வைத்திலிங்கம் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த ஆட்சியில், மக்களுக்கு எந்த புதிய திட்டங்களும் அமல் செய்யவில்லை. பொய்யான குற்றச்சாட்டுக்களை என் மீது சுமத்தி முதல்வர் பதவியில் இருந்து என்னை விலகுமாறு கூறிய சோனியா, தற்போது நடக்கும் மோசமான ஆட்சியை கண்டிக்கவில்லை.

எப்படிய்யா கண்டிப்பாங்க..?ஒரு  அயோக்கியனை மிரட்டனும்னா முதல்ல நாம யோக்கியமா இருக்கனும்...

---------------------------------------

6. மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் பேட்டி: இரு ஓய்வு பெற்ற அதிகாரிகள், ஒரு பணியிலுள்ள அதிகாரி ஆகிய மூன்று பேரை சி.வி.சி., பதவிக்கு பணியாளர் மற்றும் பயிற்சித்துறை பரிந்துரை செய்தது. இந்த விஷயத்தில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. இது குறித்து பிரதமர் கூறியிருப்பது மிகச் சரியானது. எல்லாவற்றையும் அவரே போய்ப் பார்க்க முடியாது. அவர் முன், என்னென்ன விவரங்கள் வைக்கப்பட்டனவோ அவற்றைக் கொண்டுதான் அவர் முடிவெடுக்க முடியும்.

ஆமாமா.. எல்லாத்தையும் அவரே பார்க்க முடியாதுதான்.. ஆனா பேசுனபடி கமிஷன் தொகையை மட்டும் சரியா தராம டபாய்ச்சசிடறாங்க.. அதான் இப்போ பிரச்சனை

--------------------------------------


http://img.dinamalar.com/data/images_news/tblcatroon_67855471373.jpg
7. முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேச்சு : தேர்தல் நேரத்தில் கட்சியினர் உண்மைகளை திரித்துக் கூறுவதை தவிர்த்தால், பிரச்னைகள் வருவதை தடுக்கலாம். ஜாதி, மத உணர்வுகளை தூண்டும் வகையில், கட்சியினரின் பேச்சு அமையக் கூடாது.

ஜாதி ஓட்டுக்களை எப்படித்தான் அவங்க வாங்குவாங்க பாவம்..?நல்ல ஜாதில பொறந்திருந்தா எதுக்கு ஜாதி அரசியலுக்கு வர்றானுங்க..?

----------------------------------

8. முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேச்சு: அரசின் நல்ல திட்டங்களை வரவேற்றோம்; பிடிக்காத திட்டங்களை எதிர்த்தோம். டாஸ்மாக், சாராயம், லாட்டரியை எதிர்த்தோம். இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து எதிர்க்கத்தான் போகிறோம்; இது நம் கொள்கை. இதை மாற்றிக் கொள்ள முடியாது.

ஏம்ப்பா அவ்வளவு கஷ்டம்.. ஏன் கூட்டு சேர்றீங்க? நீங்க சொல்றது எப்படி இருக்குன்னா பொண்டாட்ட்டி நடத்தை தவறுனா கண்டிப்போம்னு சொல்ற மாதிரி இருக்கு. காலுக்கு ஆகாத செருப்பு எதுக்கு.. யோக்கியமா இருந்தா அதை கழட்டி எறிய வேண்டியது தானே,..?

-------------------------------------------

9. வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் பேச்சு: கிராமப்புறங்களில், வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும். இதுவே, பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை. தற்போது, தகவல் தொழில்நுட்பமானது, நகரங்களை மையப்படுத்தியே உள்ளது; இது, கிராமங்களை சென்றடைய வேண்டும். தகவல் தொழில்நுட்பத்தின் இத்தகைய மாற்றம் தான் உலகளவில் இந்தியாவை உயர்த்த உதவும்.

கவர்னர் ஆட்சி வந்தாத்தான் தமிழனுக்கு நல்ல காலம் பொறக்கும். இந்த அரசியல்வியாதி வந்தானுங்கன்னா சுரண்டீட்டே தான் இருப்பாங்க..சுரண்டுற அளவு மாறும், ஆனா சுரண்டறது மாறாது..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjy5STpTSLTgoMi9hNc9B54g8By-uFdcZ5VZNEtG77CLxg8Axsa-X9zk9jKnETHMonpJbG1imPyfFBBmD3Zhbp6HGr6-31ps7P-tns6VrCXmuSVexSWxxko1AOv-BO1tda9I-R0yj5l8RA/s400/mgr_jaya.jpg
-------------------------------------
டிஸ்கி -1 : இன்று டிஸ்கில எந்த மேட்டரும் இல்ல.. ஏன்னா பதிவுங்கறது நாம போய்ப்பார்க்கற பொண்ணு மாதிரி.. டிஸ்கிங்கறது பொண்ணுக்கு தோழி மாதிரி.. சும்மா சப்போர்ட்டுக்கு.. ஆனா நம்மாளுங்க என்ன பண்றாங்க ? பொண்ணை விட பொண்ணோட தோழி நல்லாருக்கே அப்படின்னு கமெண்ட் பண்ணிடறாங்க..ஹி ஹி

டிஸ்கி 2 -  பாருங்க அட்ரா சக்க போடற டிஸ்கி ல கூட கருத்து இருக்கு.. நாம தெரிஞ்சுக்க வேண்டிய நீதி என்னான்னா பொண்ணு பார்க்கப்போறப்ப பொண்ணோட தோழியையோ, பொண்ணோட தங்கையையோ சைட் அடிக்கறது தப்பு...அப்படியே அடிச்சாலும் அதை வெளில சொல்லக்கூடாது.. ஹி ஹி


Friday, March 11, 2011

பிரகாஷ்ராஜ்-ன் அன்வர் - கோவை குண்டு வெடிப்பு பின் புலக்கதை - சினிமா விமர்சனம்


http://www.filmics.com/tamil/images/stories/news/March/3-3-11/Prithviraj-anvar.png
 நல்ல சினிமாவில் நடிக்க வேண்டும், நல்ல சினிமா தர வேண்டும் என்ற பிரகாஷ்ராஜின் கொள்கையால் அவரது இமேஜ் திரை உலகில் உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதற்கு சாட்சியாக பிரித்விராஜ் ஹீரோவாக நடித்த இந்த மலையாள டப்பிங்க் படத்துக்கு பிரகாஷ்ராஜின் பிம்பத்தை  போஸ்டரில் போட்ட சாமார்த்தியத்துகு ஒரு சபாஷ்..

கோவையில் நடந்த குண்டு வெடிப்பில் என்ன நடந்தது?யார் அதன் பின் புலமாக இருந்தார்கள்?முஸ்லீம்கள் அந்த நிகழ்ச்சியால் எந்த அளவு பாதிப்பு அடைந்தார்கள் என்பதை விளக்கும் கதை.

தீவிரவாதிகள் ட்ரூப்பில் பிரித்விராஜ் சேரும்போதே இது கேப்டனின் நரசிம்மா படத்தில் வருவது போல போலீஸின் டெக்னிக் என  தெள்ளத்தெளிவாய் தெரிகிறது ..ஆனால் பிரித்விராஜின் ஃபிளாஷ்பேக் காட்சிகள் வரும்போது இயக்குநரின் சாமார்த்தியம் வெளிப்படுகிறது.

படத்தோட ஓப்பனிங்க்லயே ஜெயில் கைதிகள் வேட்டி சட்டையோட உலாவுவதைப்பார்த்தால் லாஜிக் கன்னா பின்னா என அடி வாங்கப்போகுதுன்னு பார்த்தா கேரளாவில் அப்படித்தானாம்.

ஒளிப்பதிவு அம்சமாக இயற்கை அழகுகளை அள்ளிக்கொள்கிறது...அதுவும் அபூர்வமாய் வரும் பாடல் காட்சிகள் 3-ல் ஒளிப்பதிவு ரெகை கட்டிப்பறக்குது.. போற போக்கைப்பார்த்தா இந்த டைரக்டர் ஆக்‌ஷன் படத்தை விட காதல் சப்ஜெக்ட்ல படம் எடுத்தா கலக்குவாருன்னு தோணுது...



http://www.tutyonline.net/gallery/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/b/prithivra10.jpg
கிழக்கில் பூக்கும் ஆதவன் போல் ஒளிர்ந்திடுவாயோ பாடல் வரிகளை கேட்கும்போது இந்த மாதிரி ஆக்‌ஷன் சப்ஜெக்ட்ல கூட மனுஷன் மெனக்கெட்டு பாடல் வரிகளை செலக்ட் பண்ணி இருக்காரே..ன்னு தோணுச்சு..வெல்டன் டைரக்டர் கம் பாடல் ஆசிரியர் .அந்த பாடலுக்கான ஹீரோயினுக்கான ஆடை வடிவமைப்பு மகா கண்ணியம்.செம...

அதே போல் கண்ணின் இமை போலே பாடலுக்கு நடன தாரகைகள் ( நன்றி - சாண்டில்யன்) அணிந்திருக்கும் கவுரவமான உடைகள் புதிதாய் படம் எடுக்க வரும் இயக்குநர்களுக்கு நல்ல ஒரு முன் உதாரணம்..சமீப கால படங்களில் இவ்வளவு  டீசண்ட்டாக க்ரூப் டான்சர்ஸை ஃபுல்லா கவர் பண்ணி அழகு படுத்தியவர்  யாரும் இல்லை...( நற நற... )


பிரகாஷ்ராஜ் பல இடங்களில் சர்வ சாதாரணமாய்ப்பேசும் ஆங்கில வசனங்களில் வசனகர்த்தா மிளிர்கிறார்.. துல்லியமான ஆங்கில அறிவும், நாட்டு நடப்பை தாக்கும் வசனங்களும் வெல்டன் சொல்ல வைக்கிறது.

http://www.ulakacinema.com/wp-content/uploads/2011/03/anwar01.jpg
வசனகர்த்தா வெங்கடேஷ் கலக்கிய இடங்கள்

1.  உங்களை ஏன் அரெஸ்ட் பண்ணி இருக்காங்க தெரியுமா?

ம்.. தெரியும்.. ஏன்னா நான் ஒரு முஸ்லீம்..

மத்த முஸ்லீம்களை ஏன் அரெஸ்ட் பண்ணலைன்னு தெரியுமா?

ஓ... அதுக்காக வருத்தப்படுகிறீர்களா?


2.  அப்போ.. உங்களுக்கும் பாம் பிளாஸ்ட்க்கும் தொடர்பு இலைன்னு சொல்றீங்களா..?

நீங்க என்ன சொல்லப்போறீங்களோ அது தானே நாளைக்கு பேப்பர்ல வரப்போவுது...? நான் சொல்றதையா போடப்போறாங்க..?

3. ஜெயிலர் - அங்கே என்னடா பேச்சு..?

புது கைதி வந்திருக்கான் இல்ல// விசாரிக்கறோம்..

ஆமா, அடையாளம் தெரிஞ்சு எம் எல் ஏ சீ ட் குடுக்கப்போறியா..?

4.  அன்வர், அப்துல்லா இப்படி பேர் வெச்சது தப்பு.. அதான் போலீஸ்ல அரெஸ்ட் பண்றாங்க..

அதுக்காக இந்த வயசுல போய் பேரை மாத்த முடியுமா?

5,  சரி சரி.. சிகரெட்டை அணை... ஜெயிலர் வர்றான்...

ஏன்.. அவர் ரொம்ப கண்டிப்போ...?

ம்ஹூம்.. சிகரெட்டை பிச்சை கேட்பான்...

6.  போலீஸ்காரங்க எல்லோரும் கெட்டவங்கன்னு சொல்றியா..?

முஸ்லீம்கள் எல்லாரும் தீவிரவாதிகள்னு சொல்றியா..?

7.  அங்கே என்னடா மீட்டிங்?

ஜெயில்ல பாம் வைக்கறதைப்பத்தி  டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம்..

அப்படியாவது  இந்த ஜெயில் வாழ்க்கைக்கு முடிவு காலம் வரட்டும்...

8.  இது கோர்ட் வாசல்.. விசில் அடிக்கறே..?

உள்ளே ஜட்ஜ் சுத்தியல்ல அடிக்கிறாரு...அதை கேட்க மாட்டீங்க..?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEit8qnQCdrhYeFbaekQVQg6koONINqJdmE1SXg0FpZyskK6hWS2ibkf72qoRhYQGyBe-wBMIKhQLJsy3rwJnmqtrQWxACK-MB1BzhuKf5UZ92ITbRoKILmP9H94l2vwh6iFC0jIjd3ovNsq/s1600/Anvar+Movie+photos+_27_.jpg
9.  உங்களை நான் ஜெயில்ல பார்க்கவே இல்லையே...

வரனும்.. ரொம்ப நாளா நண்பன் கூப்பிட்டுட்டே இருக்கான்.....

10. மேலே போனவன் கீழே வந்தே ஆகனும்.. இது இயற்கையின் விதி ( LAW OF NATURE)

11..ஆஷா.. விசாரணைக்கு ஒத்துழைக்கனும்.. உனக்கு கடவுள் நம்பிக்கை உண்டா..?

அதை உங்க கிட்டே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை...

12. மரண பயத்தை வெல்லும்போதுதான் ஒரு சாதாரண மனிதன் முஸ்லீம் ஆகறான்.

13.  இவ்வளவு கஷ்டப்பட்டும் 3 பேர் தான் செத்தாங்களா?

எத்தனை பேர் செத்தாங்கங்கறது முக்கியம் இல்ல..உயிரோட இருக்கறவங்க மனசுல பயத்தை விளைவிக்கனும்..

14.  என் பையனுக்கு  திமிர் ஜாஸ்தி.. ஆனா வயசானா அது சரியாகிடும்...

15. பசியோட இருக்கறவங்களுக்கும், அநாதைகளுக்கும் உதவி செய்யனும் நாம எல்லாரும்...

16.  ஒரு நிமிஷம்... ஒரே நிமிஷம்.. நான் அநாதை ஆகிட்டேன்...

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_095934000000.jpg
இயக்குநருக்கு சில வார்த்தைகள்

1. பிரகாஷ்ராஜ் சுடப்படும் சீன் குருதிப்புனல் க்ளைமாக்ஸை நினைவு படுத்துவதை தவிர்த்திருக்கலாம்...

2. மதி நுட்பம் வாய்ந்த ஆங்கில வசனங்களை கரெக்ட்டான இடங்களில் போட்டது சந்தோஷம் .. ஆனால் திரையில் அதைத்தமிழ்ப்படுத்தி இருக்கலாம்.

3. மிக நீளமான அந்த ஆக்‌ஷன் காட்சியில் ஹீரோ ஜீன்ஸ் பேண்ட் போட்டபடி காலை தூக்கவே சிரமப்பட்டு உதைக்கிறார்.. அது எப்படு பவர் ஃபுல் ஷாட்டாகும்? ஜாக்கி சான் படங்களில் ஃபைட் சீன்களில் அவர் அணியும் பேக்கீஸ் ரக பேண்ட்களை கவனிக்கவும்..

4. வெறும் 3 சீன்களே வந்தாலும் ஹீரோவின் தங்கையாக வரும் ஃபிகர் செம செலக்‌ஷன்.. கீப் இட் அப்...
5.. இடைவேளைக்குப்பிறகு வரும் 28 நிமிட ஃபிளாஷ்பேக் காட்சியில் வெறும் 6 நிமிட இடை வெளியில் 2 பாடல்கள் வருவதை தவிர்த்திருக்கலாம்..

http://thatstamil.oneindia.in/img/2010/04/21-mamthamoh200.jpg

அது போக காயத்ரி ரகுராம் அவர்களின் நடன இயக்கம்  ரொம்பவே அழகு...ஹீரோயின்  18  நிமிடங்களே வந்தாலும் (மம்தா) மனதில் நிற்கிறார்.. ( நல்ல வேளை உட்காரலை)

இந்தப்படம் மலையாள டப்பிங்க் படம் என்பதால் ஆனந்த விகடன் -ல் விமர்சனம் போட மாட்டாங்க..குமுதம் புக் எலக்‌ஷன் ஸ்பெஷல்ல மும்முரமா இருக்கறதால அதுலயும் போட மாட்டாங்க.... ( அப்போ நான் தான் இளிச்சவாயனா..?)

படம் எத்தனை நாள் ஓடும்.. ஆவரேஜ்ஜா 20 நாட்கள்

ஒரு ஓட்டுக்கு பத்தாயிரம்.. ஒரு தரம்.....

http://athikalai.files.wordpress.com/2010/12/kalaiger-paradu.jpg 
1. பா.ம.க., தலைவர் மணி: காங்கிரசுக்காக, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒன்று இரண்டை குறைத்துக்கொள்ள வேண்டுமென்ற பேச்சே எழவில்லை. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட, 31 தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம்.

அதை எப்படி நீங்க சொல முடியும்?அண்ணன் ராம்தாஸ் கூட சொல்ல முடியாது.. அவசரப்படாதீங்க.. கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது...

----------------------------------------------
2. தமிழக முதல்வர் கருணாநிதி: காங்கிரஸ், 60 இடங்கள் போதாதென்று, 63 இடங்கள் கேட்பதும், அதுவும் எந்தெந்த இடங்கள் என அவர்கள் கேட்பதையெல்லாம் கொடுக்க வேண்டும் என்பதும் முறைதானா என்பதை அந்தக் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும்.

போங்க தலைவரே... உடனே ராஜினாமா பண்ணி கொள்கை வீரர்கள்னு புரூஃப் பண்ணாம இப்படி பெரியம்மா கால்ல விழுந்ததுக்கு போயஸ் அம்மா கிட்டே தோத்தே இருக்கலாம்.

-----------------------------------------------

3. பத்திரிகைச் செய்தி: பெருமளவில் வரி ஏய்ப்பு செய்து, 40 ஆயிரம் கோடி வரை சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள, புனே வர்த்தகர் ஹசன் அலியின் வீட்டில், அமலாக்க பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் மும்பையிலுள்ள அமலாக்க பிரிவு அலுவலகத்திற்கு ஹசன் அலியை அழைத்துச் சென்று விசாரணையை தொடர்ந்தனர்.

இப்படியே விசாரனை பண்ணீட்டே இருங்க.. ஆனா தண்டனை மட்டும் குடுத்துடாதீங்க... எனக்கென்னவோ பேரம் தான் நடக்குதுன்னு நினைக்கறேன்.

---------------------------------------------
 http://deco-00.slide.com/r/1/3/dl/pKkYxdFD4z81a9OrA6EbCElNZXftEwuJ/watermark
4. தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி:இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் உட்காரப் போவதில்லை; அதனால், எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஆசை தி.மு.க.,விற்குத்தான் உள்ளது. கூட்டணிக்கு காங்கிரஸ் நிபந்தனை விதித்து மிரட்டல் விடுத்தது என சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

அண்ணே ஒரு சின்ன கரெக்சன் ,இந்த தேர்தல்ல மட்டும் இல்ல, எந்த தேர்தல்லயும் காங்கிரஸ் தமிழ்நாட்ல ஆட்சி அமைக்க முடியாது.. பல்லக்கு தூக்குவதே உங்க தலை எழுத்து..

------------------------------------------



5. பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: தி.மு.க.,வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து செயல்பட வேண்டும் என, ஆறு மாதங்களுக்கு முன்பே வலியுறுத்தினேன். தற்போது, அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி அமைத்துள்ளன. இது வரவேற்கத்தக்கது. பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தால் சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்காது என, பல கட்சியினரும் நினைக்கின்றனர். இது சரியல்ல; நாட்டு நலனுக்கும் நல்லது அல்ல.

நாட்டு நலனுக்கு நல்லதில்லைன்னு பார்த்தா திராவிடக்கட்சிகள் தலை முழுகப்படனும், கவர்னர் ஆட்சி வரனும்.. அதெல்லாம் முடியுமா? நடக்கறதை பேசுங்க..

------------------------------------


6. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: பொருளாதார பிரச்னைகளில் இருந்து விடுபட்டு பெண்கள் சொந்த காலில் நின்றால், சமுதாயத்தை பிடித்துள்ள வரதட்சணை நோய், பெண் சிசு கொலை போன்ற கொடுமைகளில் இருந்து மகளிருக்கு விடிவு பிறக்கும். ஒவ்வொரு வீட்டிலும் பெண்களுக்கு கட்டாய கல்வியும், கட்டாய வேலை வாய்ப்பும் கிடைக்க அனைவரும் சபதம் ஏற்று செயல்பட வேண்டும்.

இது மகளிர் தின அறிக்கை மாதிரி தெரியலயே.. அய்யா கூட இருந்துக்கிட்டே அம்மா கூட கூட்டணி போட அச்சாரம் மாதிரி தெரியுது..?

------------------------------------------------------
http://athikalai.files.wordpress.com/2010/12/mathi_cartoon-1.jpg
7.அ.தி.மு.க., மகளிரணி செயலர் கோகுல இந்திரா பேச்சு: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை வைத்து, ஆயிரம் ரூபாய் கொடுத்து ஓட்டு கேட்க வருவர். அப்போது அவர்களிடம், "இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் வரும். அதனால், 99 ஆயிரம் ரூபாய் எங்கள் பணம்; அதை கொடுக்க வேண்டும்' என, கேட்க வேண்டும். வரும் தேர்தலில் ஜெயலலிதாவை முதல்வர் சிம்மாசனத்தில் அமர்த்த வேண்டும்.

அம்மா வந்ததும்  அதை அபேஸ் பண்ணி கொட நாட்ல புதைச்சு வெச்சுக்குவார்...நாங்க வேடிக்கை பார்க்கனும்..?

------------------------------------------------

8. பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜன் பேட்டி: பல முனை மாற்று வரியில் இருந்து சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு விதி விலக்கு அளிக்கப்படாது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து, 100 டாலருக்கு மேல் இருந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. எனவே, பெட்ரோலிய பொருட்களின்விலை உயர்வு தவிர்க்க முடியாதது. உணவுப் பொருட்களின் விலை இம்மாதத்தில் குறையும்.

எங்களுக்குக்கூட காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருவது கவலை அளிப்பதாகத்தான் உள்ளது..
---------------------------------------------------------

9. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை: ஆண்களுக்கு பெண்கள் அடிமை இல்லை. பெண்களுக்கும் ஆண்கள் அடிமை இல்லை. இருவரும் நண்பர்கள் போல் இருக்க வேண்டும். ஆண் - பெண் உறவு, நட்பின் அடிப்படையில் அமையும் போது, வாழ்க்கையில் எதிர் கொள்ளும் சவால்களை அவர்கள் ஒரு சேர சமாளிக்கின்றனர். அரசியலிலும், பெண்களுக்கு சம வாய்ப்பு கிடைக்க செய்ய வேண்டும். அதற்கான சூழ்நிலையை சமூக ஆர்வலர்கள் உருவாக்க வேண்டும்.

எப்படியோ  அம்மாவுக்கு அடிமை ஆகீட்டீங்க..25 சீட் தக்கி முக்கி ஜெயிச்சுட்டா அம்மா மதிப்பாங்க.. இல்லைன்னா போட்டு மிதிப்பாங்க...

--------------------------------------

டிஸ்கி -1 : நடிகை ஃபோட்டோ இல்லாததால் எங்கே சி பி திருந்தீட்டானோ என யாரும் அதிர்ச்சி அடைய வேணாம்.கோதுமை அல்வாவை டெயிலி சாப்பிட்டுட்டே இருந்தா திகட்டும்.. நாம என்ன பண்ணுவோம்.. கொஞ்சம் காரக்கடலை சாப்பிட்டு நாக்குக்கு காரத்தன்மை கொடுத்து அப்புறம் மறு படி ஸ்வீட் சாப்பிடுவோம்.. அது மாதிரி தான்..

டிஸ்கி 2  - சி பி நடிகைகளை கோதுமை அல்வா என கூறிவிட்டான் என போராட்டம் நடத்த நினைப்பவர்களுக்கு,  ... எதுக்கு சிரமப்படறீங்க..இனிமே நான் ஏதாவது தப்பு பண்ணுனா அப்பவே மன்னிப்பு கேட்டுடறதா முடிவு பண்ணிட்டேன்.. யாருக்கும் சிரமம் வைக்ககூடாது.. சோ எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க.. ஹி ஹி(  நாகேஷ் என்னை மன்னிச்சிடுங்க ஹி ஹி )

Thursday, March 10, 2011

இலக்கணப்பிழை - ரசனையான அஜால் குஜால் படம் - விமர்சனம் 18 கூ(ட்)டல்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQIivRz0LYIlD3rZHXwKOQ50W_MjX8R1UctVW1SXlpkSLHjToLikhcKM1-GA1CRoOPRbI45DU2BgAkmaC_yqHaLPj16ZVh1_m52OlXOOaHMjzp6bcUeNNA4GrDKFi-mBceBtdYets9cwI/s400/Ilakkana-Pizhai-movie-posters.jpg
ஈரோடு ஸ்ரீனிவாசா தியேட்டர்ல இந்தப்பட போஸ்டரைப்பார்த்ததும் இன்னைக்கு ஆஃபீஸ்க்கு மட்டம் போட்டுடலாம்னு தீர்மானிச்சுட்டேன்,.காரணம் போஸ்டர்ல பார்த்த 4 ஃபிகர்ங்களும் ஃபிரஸ் ஃபேஸா, ( அண்ட் ஆல்சோ ஃபிரஸ் பீஸ்)தெரிஞ்சாங்க..

ரிசப்ஷனிஸ்ட் ஜெயந்தி கிட்டே இன்னைக்கு அவுட் கோயிங்க் ரெஜிஸ்டர்ல பவானின்னு போட்டுக்கம்மா என்றேன். ( டி. ஏ  ( to  CLAIM TRAVELLING ALLOWANCE)). பார்ட்டி கமுக்கலான சிரிப்போடு எந்தா சாரே.. சினிமாவோ. என்றது.. ( வயசு 19 3/4 , ஊர் கேரளா- பாலக்காடு - அகலி # இன்ஃபர்மேஷன் ஈஸ் வெல்த் )

மேனேஜர்ட்ட பர்மிஷன் வாங்க அவர் ரூமுக்கு போனேன்..

சார்.. காலைல 11 டூ 12.30  ஒன்றரை மணி நேரம்  பர்மிஷன் வேணும் சார்..

வழக்கமா நீங்க வெள்ளீக்கிழமை தானே கோயிலுக்கு போகனும்னு பர்மிஷன் கேப்பீங்க..?

ஹி ஹி .. சொந்தக்காரங்க ஊர்ல இருந்து வர்றாங்க சார்... அவங்களை பிக்கப் பண்ண ரயில்வே ஸ்டேஷன் வரை போகனும்.. 

சரி சரி  போங்க..ஆனா சொன்ன டைம்க்கு கரெக்ட்டா சீட்ல இருக்கனும்..

ஓகே சார் ஒண்ணும் பிரச்சனை இல்ல .( சின்ன படமாத்தான் இருக்கும் )


http://www.tamilulakam.com/news/upload/cinema/Tu_7996.jpg
11 மணிக்கு தியேட்டருக்கு போனா படம் ஏற்கனவே போட்டாச்சு..அடடா.. கில்மா படங்கள் போட்ட அந்த நாள் முதல் இந்த நாள் வரை லேட்டா தியேட்டர்ல எண்ட்ரி ஆகற எல்லா வெண்ணைங்களும் கேட்கற கேடு கெட்ட கேள்வியை நானும் பக்கத்து சீட் ஆள் கிட்டே கேட்டேன்.. 
சார்.. படம் போட்டாச்சா... எப்போ போட்டாங்க.. ஏதாவது சீன் வந்ததா..?

இப்பத்தான் சார் எழுத்து போட்டு முடிச்சாங்க...

அப்பாடா,,. எழுத்தை மட்டும் தானே போட்டாங்க.. 

படத்தோட கதை என்னன்னா....

ஹீரோ வேலைக்குப்போயிடறான்,ஹீரோவோட நண்பன் அவன் வீட்டுக்கு பக்கத்துலயே குடி இருக்கான்.. (அநியாயத்துக்கு ரொம்ப பக்கம்)ஹீரோயின் பகல்ல சும்மா படுத்திருக்கும்போது ( டிரஸ் போட்டிருக்காங்க) ஹீரோவோட நண்பன் (ஆட்டோ டிரைவர்)அவனோட காதலிக்கு ஃபோன் போட்டு காதல் ரசம் சொட்ட சொட பேசறான்.அதைக்கேட்டு ஹீரோயினுக்கு மூடு வந்துடுது..( தியேட்டர்ல இருந்த 1256 பேருக்கும் தான்.. ஹி ஹி )

ஆட்டோ டிரைவரா வர்ற ஹீரோவோட ஃபிரண்ட் சகிக்கலை.. அதுவா நமக்கு முக்கியம்..?ஹீரோயின் பரவால்லை.. மோசம் இல்லை.. ஆனா அவரோடது ஓவர் ஆக்டிங்க்.. எப்போ பாரு கண்ணை சொருக்கிக்கறதும், நாக்கை கடிக்கறதும், செம அலம்பல்...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHGFS6CEgNyLOzCIjf20AvKy7FIDmzYF-11YrkKHk4gRYI-RpcFa7yldvjIQDfaC0iFo0VSStHAWyX32J2fqSL1BJ9EjQHhd6R9dR2D7NPDpPKAw9Hv22ohYhksk82TOYK2T7vmNCx8BFH/s320/Ilakkana-Pizhai1.jpg
ஆட்டோ டிரைவரின் காதலியாக வரும் பிளஸ் டூ ஃபிகர் இளமையான முகம்.காதலியின் தோழியாக வருபவரும் அழகுதான்.( வயசு 18)

சொக்குபொடி போட்ட கில்மா வசனங்கள்

1.  இங்கே பார்டி.. இனிமே உன் லவ்வர் வர்றப்ப நான் உன் கூட வர மாட்டேண்டி..

ஏண்டி..?

எங்கே அவனை நான் லவ் பண்ணீடுவனோன்னு பயமா இருக்குடி..

2. என்னங்க.. என்னையும் கூட கூடிட்டு போங்க...

போடி.. நான் என்ன மாமியார் வீட்டுக்கா போறேன்.. போறது ஆஃபீஸ்க்கு..

( நான் வேணா வரட்டா.... # ஆடியன்சில் இருந்து ஒரு குரல்)

3.இங்கே பாருடி.. மேரேஜூக்குப்பிறகு நீ சேலை தான் கட்டனும்...

ஏங்க?நான் சேலைல தான் அழகா தெரியறேனா?

அப்படி இல்லை.. சேலைல தான் எதெது எவ்வளவு பர்சண்ட் தெரியனுமோ அதது அவ்வளவு பர்சண்ட் தெரியும்...

4.. டியர்.. நீ பிராணயாமம் பண்ணுவியாமே.. பண்ணு பார்க்கலாம்...

இப்படி மூச்சை நல்லா இழுத்து ....

ஆஹா பிரமாதம்.. ஏம்மா நீ வேடிக்கை பார்த்துட்டு நிக்கறே... நீயும் அவ ஃபிரண்டுதானே.. நீயும் பண்ணேன்...


ச்சீ .. நீ ங்க எதுக்கு கேட்கறீங்கன்னு தெரிஞ்சு போச்சு...நான் மாட்டேன்பா...

5.   டியர்.. எதுக்கு ஆட்டோல ஹாரனை எடுத்துட்டீங்க....

ஹி ஹி ஒழுங்கா வேலைல கான்செண்ட்ரேட் பண்ண முடியல..மைண்ட் டிஸ்டர்ப்பா இருக்கு....

6.. ஏண்டா.. எனக்கு இன்னைக்கு த்ரீ டேஸ்னு எப்படி கண்டு பிடிச்சே...?

எனக்கு தெரியும்டி.. வழக்கமா நீ செகப்பு பொட்டு வெச்சிட்டு வருவே.. இப்ப மெரூன் கலர் பொட்டு வெச்சுட்டு வந்திருக்கியே.(  ..#விளங்கிடும் நாடு)



http://www.cinesnacks.net/tamil-movies/movies/Ilakkana-Pizhai/ilakkana-pizhai-images-019.jpg
ரைட்டு.. முதல் முதலா ஆட்டோ காரருக்கும்,ஹீரோயினுக்கும் எப்படி டச்சிங்க் டச்சிங்க் ஆகுது..?

தண்ணி குடுங்கன்னு  அவன் கேட்கறப்ப அந்த உத்தம பத்தினி மல்லிகைப்பூ வெச்சிருந்த சொம்புல இருந்து எடுத்து தருது.. அதை வாசம் பார்த்துட்டு அவரு ஹ்ம்முனு மூச்சை இழுத்து விட்டு ஒரு மார்க்கமா பார்க்கறாரு. அப்புறம் என்ன 2 பேருக்கும் பத்திக்கிச்சு...

.
படம் போட்டு 9 ரீல் வரைக்கும் சந்தேகம் வராத ஹீரோவுக்கு 10வது ரீல்ல சந்தேகம் வந்துடுது..(படத்துல டர்னிங்க் பாயிண்ட் வேணாமா?)மனைவியை அவளோட அம்மா வீட்ல கொண்டு போய் விட்டுட்டு வந்துடறாரு..( அட போங்கப்பா)
இப்போ ஆட்டோகாரர் காதலியை கணக்கு பண்ண ப்ளேன் போடறாரு...அதுக்குப்பிறகு நடந்தது என்ன?ஹீரோயின் கதி என்ன? காதலியின் தோழி கூட சீன் இருந்ததா?



http://tamil.galatta.com/entertainment/photogallery/tamil/movies/Ilakkanappizhai/Aa-Ilakkana-Pizhai-16.jpg
விடை  வெண் திரையில்...

( அது வேற ஒண்ணுமில்லை.. 1970 களில் வந்த பழைய படங்களின் பாட்டு புக் கிடைச்சது படிச்சிட்டு இருந்தேன்.. அதுல இப்படித்தான் கதைச்சுருக்கத்துக்குப்பின்னாடி போட்டிருந்தாங்க..)

இந்த படத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நீதி...
1.கல்யானமானவங்க மனைவியை விட்டு பிரியவே கூடாது..  (.ஆஃபீஸ்க்கும் கூட்டிட்டு போயிடனும்..?)

2. என்னதான் நெருக்கமான ஃபிரண்டா இருந்தாலும் அவனை வீட்டுக்குள்ள விடக்கூடாது.. (விட்டா அவன் நெருக்கமாகிடுவான்)

3. தப்பு பண்ணற லேடீஸ் 17 முறை தப்பு பண்ணீட்டு 18 வது தடவையா தப்பு பண்றப்பத்தான்  இப்படி பண்ணுனா அது துரோகம்னு நினைப்பாங்க..

4. காதலியோட கடலை போடறப்ப காதலியின் தோழியையும் பக்கத்துலயே வெச்சுக்கனும்..

5.சொந்தமா ஒரு கார் அல்லது ஆட்டோ இருந்தா ஃபிகர்ங்க செட் ஆகும்.. (பைக் இருந்தா காதலி மட்டும்.. ஹி ஹி )


http://cinema.livestaradd.com/wp-content/uploads/2010/11/swathi-4.jpg
படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னே ஒரு சினிமா பத்திரிக்கைல வந்த செய்தி...
சாமானியன் முதல் சாமியார்கள் வரை சபலப்பட்டு தங்களின் எல்லைகளை மீறும்போது ஏற்படும் இலக்கணப்பிழையால், அவர்களின் வாழ்க்கை எப்படி புரட்டிப் போடப்படுகிறது? என்பதை கருவாக வைத்து ஒரு படம் தயாராகிறது. இந்த படத்துக்கு, "இலக்கணப்பிழை" என்றே பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. ஆட்டோ ஓட்டும் ஒரு இளைஞனுக்கு, நண்பன் மனைவியுடன் கள்ளத்தொடர்பு ஏற்படுகிறது. இதனால் நட்பு முறிகிறது. அந்த துரோகம் அவனுடைய வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது? என்பதை கதை சித்தரிக்கிறது. கதாநாயகன்-கதாநாயகிகளாக புதுமுகங்கள் ஆறுமுகம், சத்யா, சுவாதிஸ்ரீ, ரிஹானா ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள். கதை-திரைக்கதை-வசனம் எழுதி ஜோ இயக்குகிறார். ரமேஷ் கே.பாபு ஒளிப்பதிவு செய்கிறார். அருணகிரி இசையமைக்கிறார். யுவா என்டர்டெய்ண்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகிறது. படப்பிடிப்பு வால்பாறை காட்டு பகுதிகளில் 30 நாட்கள் நடந்தது. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது.


http://www.sivajitv.com/newsphotos/Swathi2.jpg
12. 45 க்கு படம் முடிஞ்சுது..சில பேரோட பிளாக்ல இன்று காலை 11.30 டூ 12.30 கமெண்ட் போட்டியே எப்படி? படம் பார்த்தது பொய்யா? கமெண்ட் போட்டது பொய்யா? என கேட்பவர்களுக்கு.... ரெண்டும் உண்மைதான்.. லேப்டாப்போட போனேன்.. ஹி ஹி

பாத்திரங்கள் அறிமுகம்..( பெரிய நாடக ட்ரூப் நடத்தறாரு..)

1. முதல் ஸ்டில்லுல இருக்கற ஃபிகர் தான் ஹீரோயின்,அந்த தாடிவாலா தான் ஆட்டோகாரன்.

2.ரெண்டாவது ஸ்டில்லுல இருப்பது ஹீரோயினும் ஹீரோவும் (அந்த அப்பாவி புருஷன்)

3. 4 . மூணாவது ,நாலாவது ஸ்டில்ல்ல இருக்கும் ஃபிகர்தான் ஆட்டோக்காரனோட பிளஸ் டூ லவ்வர்.

5. ஆறாவது ,ஏழாவது ஸ்டில்லுல இருக்கறது  கண்கள் இரண்டால் புகழ் ஸ்வாதி (கூடுதல் கிளாமருக்கு..இவங்க அந்த படத்துல இல்ல)

ஃபைனல் டச்  - படத்துல சீன் இருக்கா? இல்லையா? 

நீங்க எதிர்பார்க்கற சீன் இல்ல.. ஆனா பாக்கலாம்..ஹி ஹி .ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பது மாதிரி.....


மாண்டவனுடன் மட்டுமே கூட்டணி....ஸ்வீட் எடு ,கொண்டாடு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWt2V7_67SiY_-kMZZMfopvD5aRgI5FB8XP2ajz7BkfZJRIwMu_juzHd6Twx10udfrw8jTnFsECWQeUbk2-5hthONC_6jlP4SjcbCj6B7tJu61raxFdAXqftfdZBWrKxc-Ck9wQrtJZUxe/s1600/madharasapattinam_amy_jackson_stills_01.jpg
1. ஏதோ சண்டை போட்டுக்கிட்டு தனிக்குடித்தனம் வந்துட்டீங்களாமே?எங்கே உங்க மனைவியைக்காணோம்?

அவ கூட சண்டை போட்டுத்தான் தனிக்குடித்தனம் வந்துட்டேன்.. ஹி  ஹி


-------------------------------------------------
2. தலைவர் ஏன் பர்மனண்ட்டா ஹாஸ்பிடல்லயே  படுத்துட்டாரு?

இனி தமிழன் மேல் விழும் ஒவ்வொரு அடியும் என் மேல் விழுந்ததா நினைச்சுக்குவேன்னு பேட்டி குடுத்தாரே...

( தமிழன் ஒவ்வொரு செகண்ட்லயும் உலகின் எங்கோ ஒரு மூலைல அடி வாங்கிட்டுத்தானே இருக்கான்)

-----------------------------------------

3. தலைவரே.. 4ஜி ஊழல்ல எவ்வளவு பணம் கொள்ளை அடிச்சிருப்பாங்க?

இது தெரியாதா?2 ஜி ஊழல்ல ஒண்ணே முக்கால லட்சம் கோடின்னா 4 ஜி ல மூன்றரை லட்சம் கோடி.....

-------------------------------------

4. தலைவரே.. உங்களுக்கு மேட்டர் தெரியுமா?ஊழல் வழக்குல 5 வருஷம் உங்களை உள்ளே போடச்சொல்லி தீர்ப்பு வந்திருக்கு...

விட்டா ஸ்வீட் எடு கொண்டாடு அப்படின்னு நீயே மானத்தை வாங்கிடுவே போல..

----------------------------------------
5. டாக்டர்.. டெயிலி ஒரு பழம் சாப்பிட்டா உடம்புக்கு நல்லதுன்னு சொன்னீங்க.. நீங்க சொன்ன  மாதிரி சாப்பிட்டேன்..ஆனா சேரலை....

அது சரி.. ஒரு முழு பலாப் பழத்தை ஒரே ஆள் சாப்பிட்டா இப்படி வயித்தால தான் போகும்....

-----------------------------------------
 http://www.123tamilgallery.com/images/Swati-15651.jpg
6. லவ் பண்ணுன பெண்ணை கல்யாணம் பண்ணிக்க மறுத்துட்டான்.. இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்...

அவன் லவ் பண்ணுன பொண்ணுக்கே கல்யாணம் பண்ணி வெச்சுடலாம்.அப்பத்தான் லவ் ஜோடிகளுக்கு இது ஒரு பாடமா அமையும்.

-------------------------------------
7. நடிகை - நடிப்புங்கறது என் ரத்தத்துலயே ஊறி இருக்கு...

மேடம்.. ஆனா ரத்த சோகை வந்த நோயாளி மாதிரி தானே எப்பவும் இருக்கீங்க..?சுத்தமா நடிப்பே வர்லையே....

-----------------------------------

8. தலைவரு ஏன் லூஸ் மாதிரி சுடுகாட்டுக்கு போய் கூட்டணிப்பேச்சுவார்த்தை நடத்தறாரு..?

ஒரு வேளை மாண்டவனுடன் மட்டுமே கூட்டணியோ என்னவோ..?

-------------------------------

9. தலைவர் இப்போ ரொம்ப டல்லா இருக்காரே... எப்படி இப்போ மேடைல பேசுவாரு? 

2 லார்ஜ் அடிச்சு சார்ஜ் ஏத்திக்கிட்டு.

--------------------------------------

10. டாக்டர்.. ஆபரேஷன் முடிஞ்ச பிறகு ஃபீஸ் தர்றேன்கறேன்.. இப்பவே கேட்கறீங்களே...

இப்போ இல்லாட்டி எப்போ..?

---------------------------------


 டிஸ்கி (vm): ஸ்வாதிக்கும், எமி ஜாக்‌ஷனுக்கும் என்ன சம்பந்தம்னு யாரும் கேட்டுடாதீங்க..2 பேருக்கும் எனக்கு தெரிஞ்ச ஒற்றுமை.. துப்பட்டா போடற பழக்கமில்லை.. இந்த ஒரு தகுதி போதாதா.. அட்ரா சக்க இணைய தளத்தில் இடம் பெற...