Wednesday, March 09, 2011

புரட்சித்தலைவியின் அரசியல் வாழ்வை புரட்டிப்போட்ட கடிதம்,அதி மு க அதிர்ச்சி

http://www.envazhi.com/wp-content/uploads/2010/10/jaya-ajith-vijay.jpeg 
சில நாட்களுக்கு முன் தமிழருவி மணியன் அவர்கள் விகடனில் கலைஞருக்கு ஒரு கடிதம் போட்டு கலக்கினார். இப்போது அவரது அடுத்த தாக்குதல் புரட்சித்தலைவிக்கு...

ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்! - தமிழருவி மணியன்
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம்.


உங்களை நினைத்தால் ஒரு பக்கம் வியப்பாகவும், இன்னொரு பக்கம் வேதனை​யாகவும் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இது ஓர் ஆணாதிக்க உலகம். நீங்கள் இருந்த திரைப்பட உலகமும், இருக்கும் அரசியல் உலகமும் முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் மோசமான ஆளுகைக்கு ஆட்பட்டவை. 1964-ல் ஸ்ரீதரின் 'வெண்ணிற ஆடை’ படத்தில் முதன் முதலாக நீங்கள் அறிமுகமானபோது, தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் முதலமைச்சர் நாற்காலியில் ஒரு நாள் அமரக்​கூடும் என்று கண்ணுறக்க வேளையில் கனவு​கூடக் கண்டிருக்க மாட்டீர்கள்!

தமிழர்களின் ரசனை எல்லா வகையிலும் வித்தியாசமானது. திரைப்படங்களில் நாயக, நாயகியராய் இணைந்து நடித்த இருவரையும் முதல்வர் நாற்காலியில் அமரவைத்து அழகு பார்த்த வரலாற்றுச் சாதனை, உலகில் தமிழகத்தைத் தவிர வேறெங்கும் வாய்த்ததே இல்லை.

 http://www.vinavu.com/wp-content/uploads/2010/06/jayalalitha.jpg
எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இருவரின் ஆதிக்கத்தில் கட்டுண்டுக் கிடந்த திரையுலகில் அடியெடுத்துவைத்த நீங்கள், இரு வேறுபட்ட குணாம்சங்கள்கொண்ட அந்தக் கலையுலகச் சிகரங்களோடு கைகோத்து உங்கள் தோற்றப் பொலிவினாலும், நடிப்புத் திறமையாலும் முதன்மைக் கதாநாயகியாக முன்னேறியதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், கதாநாயகிக் கட்டம் முடிந்ததும் தமக்கையாய், தாயாய் வேடம் பூண்டு காலம் முழுவதும் ஒரு நடிகையாகவே வாழ்ந்து முடித்துவிட விரும்​பாமல், எம்.ஜி.ஆர். ஆதரவில் 1981-ல் அரசியல் உலகில் கால் பதித்து, ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்கள் விரித்துவைத்த சதிவலையை அறுத்தெறிந்து, அவர்களால் இழைக்கப்பட்ட அவமானங்களை சகித்துக்கொண்டு, அ.தி.மு.க-வை உங்கள் அசைக்க முடியாத தலைமையின் கீழ் கொண்டுவந்தீர்களே... அந்த அரிய சாதனை உண்மையிலேயே வியப்புக்கு உரியது!


உங்களுடைய விரிந்த வாசக ஞானம், தெளிந்த ஆங்கிலப் பேச்சு, தளராத தன்னம்பிக்கை, அபூர்வமான அரசியல் ஆளுமை, சர்க்கஸ் கூடாரத்தின் ரிங் மாஸ்டரைப்போல் உங்கள் கட்சியின் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் அசாத்திய ஆற்றல் அனைத்தும் நீங்கள் வளர்த்துக்கொண்ட பலமான பாது​காப்பு அரண்கள். எம்.ஜி.ஆர். கை தூக்கிவிட்டதனால்​தான் அரசியலில் நீங்கள் இந்த உயரத்தை எட்ட முடிந்தது என்பது பிழையான கருத்து. சரோஜாதேவியும், லதாவும் எம்.ஜி.ஆரே விரும்பி அரசியலில் ஆளாக்க முனைந்து இருந்​தாலும், உங்களைப்போல் உருவாகி இருக்க முடியாது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்பு உங்கள் தலைமை வாய்த்திருக்காவிட்டால், அ.தி.மு.க. ஓர் அரசியல்சக்தியாக நீடித்திருக்காது என்பதும் நிஜம்.


எல்லாம் சரி. ஆனால், ஒரு கோட்டை எவ்வளவு பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், அதற்குள் சில பலவீனங்கள் புலப்​படுவது இயல்பு. உங்கள் பலங்களுக்கு சமமாக பலவீனங்களும் பாதித்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? 'பரிசோதிக்கப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்றது’ என்றார் சாக்ரடீஸ். நீங்கள் பரிசோதித்துப் பார்த்து, பள்ளத்தில் வீழ்த்தும் பலவீனங்களில் இருந்து விடுபட விரும்பாததுதான் வேதனைக்கு உரியது.
 http://new.vikatan.com/news/images/addd.jpg

காமராஜரைப்போலவோ, கலைஞரைப்​போலவோ படிப்படியாக அரசியலில் நீங்கள் வளர்ந்தவர் இல்லை. உங்கள் அரசியல் பிரவேசம் 1981-ல் அரங்கேறியது. உடனே அ.தி.மு.க-வின் கொள்கைப் பரப்புச் செயலாள​ராக உயர்த்தப்பட்டீர்கள். 1988-ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றினீர்கள். 

1989 தேர்தலுக்குப் பின்பு தமிழக சட்டமன்ற வரலாற்றில் எதிர்க் கட்சித் தலைவராக அமர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றீர்கள். நிதி நிலை அறிக்கையை முதல்வ​ராக நின்று சட்டமன்றத்தில் கலைஞர் சமர்ப்பித்தபோது, நீங்கள் உருவாக்கிய கலவர நாடகத்தில் நேர்ந்த விபரீதக் காட்சிகளின் விளைவாக, மக்களின் அனு​தாபத்தைப் பெற்று 1991-ல் கோட்டையில் முதல்வராகக் கொலுவீற்றீர்கள்.


யாருக்கும் எளிதில் கிடைக்காத வரம் தமிழக வாக்காளர்களால், உங்களுக்கு எளிதாக வழங்கப்பட்டது. எளிதில் கிடைக்கும் எதுவும் பெரிதாகப் போற்றப்படுவது இல்லை. வாக்காளர்கள் விருப்பத்தோடு வனைந்து கொடுத்த பதவிக் குடத்தை நீங்கள் நந்தவனத்து ஆண்டி​யைப்போல் கூத்தாடிப் போட்டு​டைத்தீர்கள். 

மக்களால் தேர்ந்​தெடுக்கப்பட்ட தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் நீங்கள். நேர்த்தியாக உங்கள் நிர்வாகம் நடந்திருந்தால்... கலைஞர் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பே கனிந்து இருக்காது. அவருடைய குடும்பமும், பரிவாரமும் கோடிக் கோடி​யாய்ப் பணத்தைக் குவிக்கும் சந்தர்ப்பம் பிறந்திருக்காது. கலைஞரின் குடும்பம் உங்களுக்​குத்தான் அன்றாடம் நன்றி சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக, ஆ.ராசா உங்களுக்கு நிரம்பவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்.


அறிவியல்பூர்வமாக ஊழல் செய்தவர் கலைஞர்’ என்று சர்க்காரியா சொன்னதை உரத்த குரலில் ஊர் ஊராய் முழங்கிய நீங்கள், ஊழலின் நிழல் படாத உன்னதமான ஆட்சியை வழங்கிவிடவில்லை. அதிகாரத் துஷ்பிரயோகம், ஆணவப் போக்கு, சொத்துக் குவிப்பு, ஊழலில் திளைத்த அமைச்சர் குழு, விமர்சனங்​களை விரும்பாத சர்வாதிகாரச் சாயல், பழிவாங்கும் மனோபாவம் போன்றவை வாக்காளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதால், உங்கள் மீது இருந்த நம்பிக்கை நலிவடைந்​தது. 'ஸ்பிக்’ விவகாரத்தில் உங்கள் விருப்பத்துக்கு வளைந்து கொடுக்காத ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகாவின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டதன் பின்புலம் அறியாமல் தமிழகம் அதிர்ந்தது. 
 http://rajkanss.files.wordpress.com/2008/11/pg2a.jpg?w=480&h=654
தி.மு.க. வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தின் மீது நடத்தப்பட்ட கொடுமையான தாக்குதலின் பின்னணி புரிந்ததும் நல்ல அரசியலை நாடுவோர் நெஞ்சம் நடுங்கியது. எல்லா​வற்றுக்கும் சிகரம்போல் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் அமைந்துவிட்டது. உங்கள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நீங்கள் நடத்திவைத்த திருமணத்தில் பளிச்சிட்ட ஆடம்பரம் பாமர மக்களைக்கூட முகம் சுளிக்கவைத்தது. உங்கள் வீழ்ச்சி கலைஞரின் வியூகத்தில் விளைந்துவிடவில்லை. உங்களுக்கான பள்ளத்தை நீங்களே வெட்டிய விதம்தான் பரிதாபத்துக்கு உரியது.


முன்னாள் முதல்வரே... கடந்த காலத்தை இன்று நிதானமாகத் திரும்பிப் பார்த்து நீங்கள் கற்றறிய வேண்டிய பாடங்கள் கணக்கற்றவை. மிகுந்த நம்பிக்கையுடன் மக்களால் 1991-ல் ஆட்சியில் அமர்த்தப்பட்ட நீங்கள், 1996 தேர்தலில் மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டீர்கள். உங்கள் அமைச்சரவையில் இடம்பெற்ற அனைவரும் தோற்கடிக்கப்பட்டனர். 

நீங்களே பர்கூர் தொகுதியில் மக்கள் அறியாத ஒரு மனிதரிடம் தோற்கும் நிலை நேர்ந்தது. சரிந்துவிட்ட உங்கள் அரசியல் செல்வாக்கை முற்றாக முடித்துவிட முதல்வர் பொறுப்பேற்ற கலைஞர் காரியத்தில் கண்வைத்தார். உங்கள் மீது 40-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு விரைவாக உங்களை சிறைக்கு அனுப்பிவைக்க அடித்தளம் அமைக்கப்பட்டது. கலைஞர் கண்ட கனவு நனவானது. நீங்கள் சில காலம் சிறைவைக்கப்பட்டீர்கள். 'டான்சி’ வழக்கு உங்கள் உறக்கத்தைக் கலைத்தது.

சொத்துக் குவிப்பு வழக்கு 'விடாது கருப்பு’ என்பதுபோல் இன்று வரை தொடர்ந்து உங்களைத் துன்புறுத்துகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.76 லட்சம் கோடியை நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுத்திய 'நேர்மையானவர்கள்’, நீங்கள் 60 கோடி சேர்த்துவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை போனதும், இன்று வரை கூச்சம் இல்லாமல் உங்கள் ஊழல் குறித்து வக்கணையாக விமர்சிப்பதும் வேறு கதை.

 http://www.vinavu.com/wp-content/uploads/2010/06/karunanidhi.jpg
ஒரே ஒரு ரூபாய் தவறாகப் பெற்றாலும் ஊழல்... ஊழல்தான். யார் செய்தாலும் ஊழல் தண்டனைக்கு உரியதுதான். ஐந்து ஆண்டு ஆட்சியில் நீங்கள் செய்த தவறுகள் மொத்தமாக முற்றுகையிட்டு உங்களை அடியோடு வீழ்த்தியதும், உங்கள் அரசியல் வாழ்வு அஸ்தமித்துவிட்டது என்றே அனைவரும் ஆரூடம் கணித்தனர். 'ஒழிந்தார் ஜெயலலிதா; அழிந்தது அ.தி.மு.க.’ என்று மகிழ்ந்தது கலைஞரின் பரிவாரம்.


ஃபீனிக்ஸ் பறவை தன் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழும்’ என்பது நிஜம் அல்ல. ஆனால், அரசியல் உலகம் அதிசயிக்கும் வகையில் உங்கள் சாம்பல் மேட்டில் இருந்து நீங்கள் உயிர்த்தெழுந்ததுதான் நிஜம். உங்கள் தவறுகளைத் தமிழகத்து மக்கள் மிகவும் பெருந்​தன்மையுடன் மன்னித்து மீண்டும் ஆட்சி நாற்காலியில் அமரச் செய்தார்கள். 140 தொகுதிகளில் நின்று 132 தொகுதிகளில் வென்று, தனிப்பெரும்பான்மையுடன் நீங்கள் அரசை அமைத்தீர்கள்.

உங்களோடு கூட்டணி சேர்ந்தவர்கள் 64 தொகுதிகளில் வெற்றிக் கனியைப் பறித்துச் சுவைத்தனர். ஆடம்பர மணவிழா, 'சகோதரி’ சசிகலாவின் குடும்ப அத்துமீறல், டான்சி நிலப் பேரம் என்ற குறைகளை எல்லாம் புறந்தள்ளி 234 தொகுதிகளில் உங்கள் கூட்டணிக்கு 196 எம்.எல்.ஏ-க்களை வழங்கிய வாக்காளர்கள் உங்களிடம் எதிர்பார்த்தது ஒன்றே ஒன்றுதான்... நல்லாட்சி! அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நீங்கள் நடந்துகொண்டீர்களா சகோதரி? மருத்துவர் ராமதாஸைப்போல் அரசியல் ஆதாயத்துக்காக 'அன்புச் சகோதரி’ என்று நான் அழைக்கவில்லை.

 http://img.dinamalar.com/data/uploads/WR_216592.jpeg
சட்டமன்றத் தேர்தல் 2001-ல் நடந்தபோது நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தீர்கள். அது ஒரு தவறான நடவடிக்கை. தேர்தலில் உங்கள் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க. ஆட்சி​யைக் கைப்பற்றியதும் நீங்கள் முதல்வராக முயன்றது இரண்டாவது தவறு. கிரிமினல் வழக்கில் இரண்டு ஆண்டு​களுக்குக் குறையாமல் சிறைத் தண்டனை பெற்றவர்கள் முதல்வராக முடியாது என்பது சட்டம். 

ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து தமிழகத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஃபாத்திமா பீவி உங்களை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார். தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தலில் நிற்க முடியாமல் தடுக்கப்பட்ட முதலமைச்சர் நீங்கள் ஒருவரே. ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட முதல்வரும் நீங்களே. கலைஞருக்குள்ள சாமர்த்தியம் உங்களுக்கு சாத்தியப்படவில்லை. அதனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்பு நீங்கள் பதவியில் இருந்து விலகிப் பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினீர்கள். யாருக்கு எப்போது எது கிடைக்கும் என்று யார்தான் அறிவார்? 

வீதியில் விளையாடிய கரிகாலன் கழுத்தில் யானை மாலையிட்ட கதையை எம் கண் முன்னால் நிகழச் செய்தவர் நீங்கள். நான்கு மாதங்கள் முதல்வர் நாற்காலியில் பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தாலும், பின்னால் இருந்தபடி பரிபாலனம் செய்தது நீங்கள்தானே சகோதரி!


ஒருவழியாக சட்டம் எழுப்பிய தடுப்புச் சுவரைத் தகர்த்துவிட்டு, ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியைத் தன்னிடம் தக்கவைத்துக்​கொள்வதில் நீங்கள் காட்டிய முனைப்பு, அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்குக்கூட எளிதில் கைவராதது! நீங்கள் மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததே அரிய சாதனைதான். ஆனால், அதன் மூலம் மக்கள் அடைந்த பயன் என்ன? 

உங்களைச் சிறைக்கு அனுப்பிய கலைஞரை நீங்கள் சிறைக்கு அனுப்ப நாள் குறித்து நள்ளிரவில் கைது செய்து, மக்கள் அனுதாபத்தை அவர் பக்கம் திருப்பும் திருப்பணியில்தானே ஈடுபட்டீர்கள்!
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIyq4cteTn4NIN9nUInRVN-CD7_7D3sbiLBlOr08VVxJzRUtX1uKYnJoFiJ2HfPsWnQEdn7GkPFYzfLEIlw5VqVp63MwJL-ihuGu_d5cRs1PfGJ7McdEtAJqS0OXSeiiPPHDnXHzaoHcj6/s1600/Jayalilatha+cartoon.jpg

உங்களுக்குப் பிரச்னை கலைஞர். கலைஞருக்குப் பிரச்னை நீங்கள். உங்கள் இருவர் கால்களிலும் மாறி மாறி மிதிபடுவது மக்கள். 'விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என் செய்ய நினைத்தாய்?’ என்று சரியாகத்தான் புலம்பினான் பாரதி.
உங்களுடைய அசைக்க முடியாத பலம் அபாரத் தன்னம்பிக்கை. அதுவே சில நேரங்களில் வரம்பு கடந்து பிறர் பார்வையில் தலைக்கனமாய் தரிசனம் தரும்படி நடந்துகொள்வதுதான் உங்களது மோசமான பலவீனம்.

ஜனநாயக அமைப்பில் விமர்சனங்களை ஆரோக்கியமாக நேர்கொள்ளும் தன்மை மிக முக்கியம். தமிழகத்தில் உள்ள ஆறரைக் கோடி மக்களும் பன்னீர்செல்வம், செங்கோட்டையன்போன்று கை கட்டி, வாய் பொத்தி, முதுகு வளைந்து 'அம்மா’ என்று ஆராதிக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதுதான் தவறு. ஊடகங்கள் அனைத்தும் ஒத்தூத வேண்டும் என்ற விருப்பம் கலைஞரைப்போல் உங்களுக்கும் உண்டு.

'இந்து’ நாளிதழ் உங்கள் சகிப்புத்தன்மையற்ற நடவடிக்கைகள் குறித்துக் கட்டுரை தீட்டியதற்காக என்.ராம் உட்பட ஆறு பேரை கைது செய்ய முயன்றது சரியான நடவடிக்கையா என்று இப்போது சிந்தியுங்கள். பல்வேறு இதழ்கள் மீது வழக்குப் பதிவு செய்த உங்கள் செயல் பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது இல்லையா?


அரசு ஊழியர்கள் 2003-ல் ஓய்வூதியச் சலுகைகளுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது ஒரு துளி மையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேரை வேலை நீக்கம் செய்ததும், இரவில் வீடு புகுந்து அவர்களைக் கள்வர்கள்போல் கைது செய்ததும், சாலைப் பணியாளர்கள் வாழ்வோடு விளையாடியதும்தான் உங்கள் வீழ்ச்சிக்கு வியூகம் அமைத்ததை இப்போதாவது உணர்ந்துவிட்டீர்களா? அப்போது 'அரசு ஊழியர்களை அழைத்துப் பேச வேண்டும்;

அன்பால் சாதிக்க வேண்டும்’ என்று உங்களுக்கு அருளுரை வழங்கிய கலைஞருடைய இப்போதைய ஆட்சியில், அதே அரசு ஊழியர்கள் காவல் துறையால் நடுவீதியில் கடுமையாகத் தாக்கப்பட்டனர் என்பது தனியரு கொடுமை!


திருமங்கலம் தேர்தல் பாணி குறித்துக் கடுமையாக விமர்சிக்கும் நீங்கள்தான், உங்கள் ஆட்சியில் இடைத்தேர்தல்கள் நடந்தபோது, அமைச்சர்களின் படையெடுப்பை அறிமுகப்படுத்தினீர்கள். சென்னை மாநகராட்சி இடைத்தேர்தலில் விதிமுறைகளை மீறி உங்கள் தொண்டர்கள் செயல்பட்டபோது நீங்கள் வேடிக்கை பார்த்தீர்கள்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHX-8Y3fQjW5tABhp-1DdE5HgEXlG4_D7B0zz_MulsTOAwU1ADa5kduYK0MPU_JVTx0Q4fQGK2rE8PQjCcUuozMgioJvDARffzwnVYCIuZlqDXAHRREXcmXg37eVkh-NpRGX6X8OU_kEW3/s1600/tamilmakkalkural_blogspot_meenavar_prachani.jpg
சாத்தான்குளம் இடைத்தேர்தலில் நிர்வாக எந்திரத்தை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தினீர்கள். வாக்காளர்களுக்கு 'அன்பளிப்பு' தரும் 'ஜனநாயகக் கடமை’யை நீங்களும் செய்தீர்கள். கலைஞரின் குடும்பம் குறித்துப் பேசும்போதெல்லாம், சசிகலா குடும்பம் உங்கள் நினைவில் நிற்பதில்லை. திரைப்பட உலகில் தேவைக்கு மேல் நீங்கள் சொத்து சேர்த்தாயிற்று. உங்களுக்கென்று தனியாக ஒரு குடும்பம் இல்லை. 'தத்துவஞானிகள் ஆளவேண்டும்.

அவர்களுக்குக் குடும்பம் கூடாது’ என்றார் பிளேட்டோ. அந்த வரம் உங்களுக்கு இயல்​பாக வாய்த்திருந்தது. ஒரு செப்புக் காசும் நேர்மை தவறிச் சேர்க்காமல் ஊழலற்ற நிர்வாகத்தை நீங்கள் நினைத்திருந்தால், தமிழக மக்களுக்குத் தந்திருக்க முடியும். சசிகலா குடும்பம் உங்கள் கால்களை நேர் வழியில் நடக்கவிடாமல் பிணைத்திருக்கும் இரும்புச் சங்கிலி என்று நீங்கள் இப்போதேனும் உணர்ந்தீர்களா?


போகட்டும். உங்கள் 10 ஆண்டு ஆட்சியில் நல்லதே நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. கந்துவட்டிக் கொடுமையில் இருந்து ஏழைகளைக் காப்பாற்றிய நடவடிக்கை, பாமர மக்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டிய லாட்டரி சீட்டுக்குத் தடை விதித்த நற்செயல், வீரப்பன் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் வெளிப்படுத்திய துணிச்சல், காஞ்சி சங்கராச்சாரியாரைக் கைது செய்ததில் காட்டிய கண்டிப்பு, மழை நீர் சேகரிப்பில் மக்களை ஈடுபடுத்திய ஆளுமை, கலைஞரால் கை கழுவப்பட்ட வீராணம் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிச் சென்னையின் தாகம் தவிர்த்த ஆட்சித் திறன், தாய்மை உணர்வுடன் தொடங்கிய தொட்டில் குழந்தைத் திட்டம் மூலம் வெளிப்படுத்திய சமூகப் பார்வை, கல்வி வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு பள்ளிப் பிள்ளைகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய கருணை போன்றவற்றுக்காக நிச்சயம் நீங்கள் பெருமைப்படலாம். 

உங்கள் ஆட்சியின் சிறப்பு அம்சமாக மக்கள் மறவாமல் நினைப்பது சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு. கட்சிக்காரர்கள் அதிகாரம் செலுத்தும் கொத்தடிமைக் கூடங்களாக காவல் நிலையங்கள் கழிந்துபோக நீங்கள் அனுமதித்தது இல்லை!


சகோதரி... நீங்கள் மூன்றாவது முறை முதல்வராகும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறீர்கள். வலிமையான கூட்டணி உங்களுக்கு வாய்ப்பாக அமைந்து இருக்கிறது. வாக்காளர்களுக்கு வேறு வழி இல்லை. ஜனநாயகத்தில் நன்மை தீமைக்கு நடுவே போட்டி நடந்தால், மக்கள் நன்மையின் பக்கமே நிற்க விரும்புவார்கள். 

அதற்கான சூழல் இன்னும் கனியாதபோது, பெரிய தீமையைப் புறந்தள்ளிவிட்டு, சிறிய தீமையைத்தான் அவர்கள் தேர்ந்தெடுக்க இயலும். சாம்பல் மேட்டில் இருந்து நீங்கள் மீண்டும் உயிர்த்தெழ வாய்ப்பு உள்ளது. தேர்தல் களத்தின் ஆதரவுக் காற்றை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.

அந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடிந்தால்...ஈழத் தமிழர் நலன் காக்க உண்மையான உள்ளுணர்வுடன் நீங்கள் செயற்பட வேண்டும். தமிழகத்தின் ஒரு மீனவரும் கடலில் சாவை சந்திக்காத நிலை வர வேண்டும். இலவசத் திட்டங்கள் என்னும் போர்வையில், ஏழை மக்களை ஏழை மக்களாகவே என்றும் கையேந்தும் இழிநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்கள் காமராஜர் வழியில் உருப்படியான திட்டங்கள் தீட்ட வேண்டும். 

டாஸ்மாக்கை அரசுடமையாக்கிய பாவத்தைச் செய்த நீங்கள் பூரண மதுவிலக்கை வழங்க முடியாமற்போனாலும், வீதியெங்கும் பரவியிருக்கும் கடைகளைக் குறைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஊழலற்ற ஆட்சியைத் தந்து நீங்கள் உயர வேண்டும்.

சசிகலா சாம்ராஜ்யம் மீண்டும் எழுவதற்கு எந்த நிலையிலும் நீங்கள் இடம் அளித்துவிடலாகாது. இந்த முறை நீங்கள் தவறு இழைத்தால்... இனி வாழ்வின் இறுதி வரை ஆட்சி நாற்காலியில் அமர முடியாது என்றே உணர்ந்து செயற்படுங்கள். ஆட்சி மாற்றம் வெறும் காட்சி மாற்றமாக முடிந்துவிடக் கூடாது என்பதுதான் எங்கள் பிரார்த்தனை.


உழுகலப்பையைப் போல் தாழ்ச்சிகொண்டவன் நான்’ என்றார் இயேசுபிரான். பணிவே நீங்கள் அணியும் மிக உயர்ந்த அலங்காரம் என்பதை மறவாதீர்கள்!
இப்படிக்கு,
நீங்கள் நிச்சயம் மாறியிருப்பீர்கள்
என்ற நம்பிக்கையுடன்,
தமிழருவி மணியன்

பள்ளியறையில் இருக்கும்போது பள்ளி பாளையம் சிக்கனா?

http://img1.dinamalar.com/cini/ActressWall/164Kangana-Ranaut_2.jpg
1. தலைவர் ஜெயில்ல இருந்தப்பக்கூட சிந்தனைலயே இருக்காரே...

உள்ளே இருந்துக்கிட்டே ஊழல் பண்ண முடியுமா?ன்னு திங்க் பண்றாரு...

-----------------------------

2. டாக்டர்.. நான் இந்த க்ளினிக்கிற்கு ரெகுலர் பேஷண்ட்...

அதுக்கென்ன?

நான் எப்போ வந்து அட்மிட் ஆனாலும் நர்ஸ் நந்தினி தான் என்னை அட்டெண்ட் பண்றாங்க...வேற ஃபிகர் மாத்துங்க.. போர் அடிச்சுடுச்சு...

------------------------------

3. தலைவர் கு . க விளம்பர ஏஜெண்ட் ஆகிட்டார்னு எப்படி சொல்றே..?

2 ஜி க்கு மேல் இப்போது வேண்டாம்.. 4 ஜிக்கு மேல் எப்போதும் வேண்டாம்னு அறிக்கை விட்டிருக்காரே..?

--------------------------------------------

4. தலைவரோட பையன் கணக்குல கில்லாடியா இருக்கானே..?

எப்படி சொல்றே..?

ஒண்ணே முக்கால் கோடிக்கு எத்தனை சைபர்?னு கேட்டா டக்னு பதில் சொல்றானே....

---------------------------------------

5. அவன் டாக்டரோட பையன்னு எப்படி சொல்றே..?

மத்த பசங்க எல்லாம் டான் டான் -னு பதில் சொல்றப்ப இவன் மட்டும் டானிக் டானிக்னு பதில் சொல்றானே..?

------------------------------------
http://www.123tamilcinema.com/images/2010/07/kangana231246001480-e1279320202294-680x546.jpg
6. உன் காதலர் கமல் ரசிகர் போலன்னு எப்படி சொல்றே..?

என் கிட்டே பேசறப்ப,  “பூங்கொடி... உன் கிட்டே கற்பு இருக்கனும்னு நான் நினைக்கலை,ஆனா இருந்தா நல்லது”ன்னு சொல்றாரே...?  ( தசாவதாரம் - கடவுள் இல்லைன்னு சொல்லலை,இருந்தா நல்லாருக்கும்னு சொல்றேன்)

-------------------------------

7.  இந்தப்படம் ஓட்டுப்போடற ஒவ்வொரு தமிழனையும் கவரும்..

அப்போ மேல்தட்டு மக்கள்னு சொல்லப்படற ஏ செண்ட்டர்ல ஓடாதா?

-------------------------------

8.  உங்க படத்துக்கு வெங்காயம்னு ஏன் டைட்டில் வெச்சிருக்கீங்க..?

அப்பவாவது நல்ல ரேட்டுக்கு போகுதா?ன்னு பார்க்கத்தான்..

-----------------------------

9.  மன்னா! சாப்பிடும்போது கூட மேட்சுக்கு மேட்சா?புரியலையே...?


பள்ளிபாளையம் சிக்கன் சாப்பிடறப்ப பள்ளியறை போயிடுவேன்...

---------------------------------

10..  உங்க வீட்ல பேய் குடி இருக்குன்னு தெரிஞ்சும் விரட்டாம விட்டு வெச்சு இருக்கீங்களே.. ஏன்?

மாசாமாசம் வாடகை கொடுத்து  பேயிங்க் கெஸ்ட்டாத்தான் இருக்கு.. (PAYING GUEST)

----------------------------------------

டிஸ்கி 1 - கங்கணா ரன்வத்க்கு ஷாம்பு செலவே டெயிலி ரூ 2000 ஆகும்னு நினைக்கறேன்.கூந்தல் ரொம்ப அடர்த்தி...டாப்பா இருக்கு... ஆனா டோப்பாவா..? தெரில...அப்புறம் அவங்க டிரஸ்ஸுக்கு மேட்சா ரோஸ் கலர் லிப்ஸ்டிக் வைச்சதை ரசிச்சேன்.. ஆனா அவங்க பச்சைக்கலர் டிரஸ் போட்டா என்ன ஆகும்..?

டிஸ்கி 2 - டெயிலர்ட்ட ஜாக்கெட் தைக்க குடுக்கறப்ப யு கழுத்துன்னு சொல்லி குடுத்திருக்காரு... அவன் கேட்டிருக்கான்,, கேப்பிட்டல் யூ வா? ஸ்மால் யு வா?..பாப்பாவுக்கு புரியல.. எனி ஒன் அப்படின்னு சொல்ல இப்போ டெயிலருக்கு புரியல..எதுக்கு வம்புன்னு கேப்பிடல்.. ஸ்மால் எல்லாம் கலந்து ஒரு பிரம்மாண்டமான யு வெட்டிட்டு பின்னிட்டாரு.. ஹி ஹி

டிஸ்கி 3 - நீ தான் சைவம் ஆச்சே.. ( எல்லாருக்கும் சொல்லியாச்சு நான் சைவம் சைவம்)எதுக்கு அசைவம் பற்றி டைட்டில் வைக்கறே?ன்னு...யாராவது கேட்டா...(கண்டிப்பா கேப்பாங்க..)எத்தனையோ அரசியல்வாதிகள் மகா ஊழல் பண்ணீட்டே நல்லாட்சி நடத்தறோம்னு அறிக்கை விடறதில்லையா? அதை நம்பி நாம் ஓட்டு போடறதில்லையா?...

Tuesday, March 08, 2011

என்னை கேவலப்படுத்திய ஃபிகர்கள் (பாகம் 1 )

http://tamilwavez.com/uploads/2/7/4/8/2748076/4981172_orig.jpg 
பொதுவா ஒரு மனுஷன் கேவலப்படுற மேட்டரை வெளில சொல்ல மாட்டான்.(அப்போ  நீ மனுஷன் இல்லையா?) அதுவும் பொண்ணால கேவலப்பட்டா அது ஆளுங்கட்சிகள் செய்யும் ஊழல் மாதிரி வெளிலயே வராது...இதையும் தாண்டி நான் ஏன் அதை வெளில சொல்றேன்னா மனிதனின் மனோவியல் சாஸ்திரம் தான்.அடுத்தவனுக்கு  ஒரு கேவலம்னா அதை ஆர்வமா படிப்போம்.சரி... அந்த கேவலத்தை ஏன் கல்கியின் பொன்னியின் செல்வன் மாதிரி பாகம் 1, பாகம் 2 -னு போடறேன்னா  நிறைய பேர்கிட்டே கேவலப்பட்டு இருக்கேன்.. ஹி ஹி .

நான் ரொம்ப சின்னப்பையனா இருந்தப்ப (இப்போ சின்னப்பையன்னா அப்போ ரொம்ப சின்னப்பையன்தானே? - நான் கரெக்டா பேசறேனா?)எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்க போன அனுபவம் தான் இந்த பதிவோட KNOT.

மணல் கயிறு படம் பார்த்த எஃபக்டோ என்னவோ நான் சில கண்டிஷன்ஸ் போட்டேன்.

1. பொண்ணு சிவப்பா கலரா இருக்கனும். ( பிளாக்& ஒயிட்னா ஒத்துக்க மாட்டியா?) ஆனா நான் கறுப்புத்தான். கறுப்பும் ,சிவப்பும்  சேர்ந்தா நாடாளுமாமே..?#டி எம் கே

2.பிளஸ் டூ வரை படிச்சிருந்தா போதும். ( சின்ன வயசு ஃபிகரா சிக்கும்னு ஒரு நப்பாசை)

3. சைவமா இருக்கனும்.(பின்னால சண்டை வந்தாக்கூட கடிக்கக்கூடாது.).அதுவும் சுத்த சைவமா முட்டை,கேக் கூட சாப்பிடாததா இருக்கனும் ( செலவு கம்மி)

4.வேலைக்குப்போற பொண்ணா இருக்கக்கூடாது...(ஏன்னா எனக்கு மட்டும் வேலை இல்லாதப்ப மனைவி மட்டும் வேலைக்குப்போனா நமக்குக்கேவலம் தானே..?)

மேலே சொன்ன கண்டிஷன்லாம் எதுவுமே செட் ஆகலை.(ஃபிகரும் செட் ஆகலை) அதுக்கு முக்கியக்காரணம் எனக்கு செவ்வாய் தோஷம் இருந்ததுதான்.(இப்போ வெள்ளி தோஷம் மட்டும் #சினிமா ). சரின்னு என் கண்டிஷன்சை கொஞ்சம் கொஞ்சமா தளர்த்திட்டே வந்தேன்.கலைஞர் சோனியா கிட்டே பணிஞ்சு போற மாதிரி..

ஈரோட்ல ஜெகநாத புரம் காலனில ஒரு பொண்ணு இருக்கறதா சொன்னாங்க.. ( அவ்வளவு பெரிய காலனில ஒரே ஒரு பொண்ணா?)சரின்னு பொண்ணு  பார்க்கப்போனோம்.பொண்ணோட வீட்ல பொண்ணு பார்க்க விட மாட்டாங்க.அதனால பக்கத்து வீட்டுல ஏற்பாடு.அந்த வீட்ல 3 ஃபிகருங்க..28 ,22, 18 (வயசு).மூணு ஃபிகருமே எனக்கு பிடிச்சுப்போச்சு.( நாம எந்த ஃபிகரை வாழ்க்கைல பிடிக்கலைன்னு சொல்லி இருக்கோம்?)

அம்மா.. எனக்கு 3மே ஓக்கே.. அப்படின்னேன். எங்கம்மா முறைச்சாங்க..டேய்.. அவங்க பக்கத்து வீட்டுப்பொண்ணுங்க..அதும் ஒரு பொண்ணு கல்யாணம் ஆனது..நாம பார்க்க வேண்டிய பொண்ணு இப்பத்தான் வரும்.. வெயிட்.

தென்றலே என்னைத்தொடு ஜெயஸ்ரீ கணக்கா ( ஏன் பிசிக்ஸா,கெமிஸ்ட்ரியா இல்லை?) ஒரு ஃபிகர் வந்தது.. சினிமால பார்க்கற மாதிரி அலங்காரம் எல்லாம் பண்ணலை. பவுடர் கூட அடிக்கலை.ஆனா செம கலர். ( அதென்ன செம கலர் ? செம்மையான கலர்  தான் மருவி செம கலர் ஆகி இருக்கும்னு நினைக்கிறேன்)

5 நிமிஷம் எங்க முன்னால உக்காந்திருந்தது. என்னை தைரியமா பார்த்துது.(பொண்ணுங்க எல்லாம் தைரியமா பார்த்துடறாங்கப்பா) அப்புறம் உள்ளே போயிடுச்சு.போய் பக்கத்து வீட்டு ஃபிகர் 28 வயசுன்னு சொன்னேனே அந்த அக்கா கிட்டே (இப்ப திடீர்னு ஏன் அக்கா?#கல்யாணம் ஆனாலே அந்த லிஸ்ட்டுக்கு கொண்டு வந்துடுவோம் இல்ல?) மாப்பிள்ளை என்னை விட கலர் கம்மி.. எனக்கு பிடிக்கலை. இதை அவங்க மனம் கோணாம சொல்லிடுங்கக்கா.. அப்படின்னு சொல்லுச்சாம்...

இதை அப்படியே ஒப்பனா, பப்ளிக்கா சொன்னாங்க..எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா போச்சு..அப்பத்தான் நான் டார்லிங்க் டார்லிங்க் டார்லிங்க் படத்துல வர்ற பாட்டு ஓ நெஞ்சே.. நீ தான் பாடும் கீதங்கள் பாட்டோட சரணத்துல வர்ற வரிகளான உள்ளக்கதவை நீ மெல்லத்திறந்தாய்..பாடிட்டு இருந்தேன். பணால் ஆச்சு.. எல்லாரும் கிளம்பிட்டோம்.பொண்ணு பேரு அபிராமி.நான் முதன் முதலா பார்த்த பொண்ணோட ஞாபகமாத்தான் இப்போ என் குழந்தைக்கு அபிராமின்னு பெயர் வெச்சதா நினைக்காதீங்க.. அது எதேச்சையா நடந்தது.

அடுத்து ஈரோடு லோட்டஸ் அப்போலோ ஹாஸ்பிடல்ல ரிசப்ஷனிஷ்ட்டா ஒர்க் பண்ற மோஹனா அப்படின்னு ஒரு பொண்ணு. அதைப்பார்க்க போனோம்.வீட்ல பார்த்தா செண்ட்டிமெண்ட்டா ராசி இல்லைன்னு அவங்க ஒர்க் பண்ற ஹாஸ்பிடலுக்கே போனோம். பொண்ணோட அப்பா பேரு சிவக்குமார்.அவர் ஹாஸ்பிடலை சுத்தி காண்பிச்சார். (அந்த பொண்ணு வேலை செய்யுதா?ஓனரா?)
http://www.chennai365.com/wp-content/uploads/actress/Laila/Laila.jpg
மொத்தம் 36 நர்சுங்க..எல்லாம் கேரளா ஃபிகருங்க.. நீங்க 1000 தான் சொல்லுங்க.. அல்லது 1001 கூட சொல்லுங்க கேரளா ஃபிகர்னா கேரளா ஃபிகர் தான் பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கும்.(இது பற்றி தனி பதிவு மறுக்கா போடறேன் ,டைட்டில்-பாலக்காட்டுப்பொண்ணுங்க - தேங்காய் பன்னுங்க )

சினிமால டூயட் சீன் காட்டறப்ப தோழிகளைக்காட்டி பிறகு கடைசியா ஹீரோயினை காட்டுன மாதிரி மோஹனாவை  கடைசியா காட்னாங்க.. அடாடா.. லைலா மாதிரி தில் படத்துல வருமே உன் சமையல்  அறையில் நான் உப்பா? சர்க்கரையா? பாட்டுக்கு . அதே மாதிரி சாயல்...வயசு 19 3/4 தான் இருக்கும்.( பர்த் சர்ட்டிஃபிகேட் பார்த்த மாதிரியே சொல்றானே)

நல்லா பேசுச்சு... நானும் பேசுனேன். செம கடலை...அப்புறம் ஒரு ஆச்சரியம் நடந்தது.. பொண்ணுக்கு என்னை பிடிச்சிடுச்சு... ஒரே கொண்டாட்டம் தான்.

கிட்டத்தட்ட நிச்சயம் வரை போயிட்டோம். அப்புறம் தான் விதி விளையாடுச்சு.( விதி என்ன ஸ்போர்ட்ஸ்மேனா?) எனக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்தி  (வாய் மட்டுமா?)பொண்ணோட அப்பா கிட்டே பேச்சு வாக்குல சார்... நீங்க புக்ஸ் எல்லாம் படிச்சிருக்கீங்களா? ஆனந்த விகடன்,குமுதம் இதுல எல்லாம் என் ஜோக்ஸ் வரும்...

அவர் உடனே..ஆமா.. பார்த்திருக்கேன்.. பாக்யால கூட ஏ ஜோக்ஸ் எழுதுவீங்களே.. அது நீங்க தானா?

ஹி ஹி ஆமா சார்...

அவர் டக்குன்னு ஆள் சைலண்ட் ஆகிட்டார். எதுவும் பேசல. அடுத்த நாள் மோஹனா ஃபோன் போட்டுச்சு (கீழே போடலை)

”நீங்க புக்குக்கு எழுதறது அப்பாவுக்கு பிடிக்கலை’

ஏன்?

ஏ ஜோக் நிறைய வருதாம்... அப்போ உங்க கேரக்டரும் அதே மாதிரி தானே இருக்கும், இந்த இடம் வேணாம்னு சொல்றார்”

அட.. ராஜேஷ் குமார் கூட க்ரைம் கதை எழுதறார்,, அப்போ அவர் கொலை பண்ற ஆளா?

அப்படி இல்லைங்க... எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல.. எங்கப்பா அப்படி ஃபீல் பண்றாரு...

சரி இப்போ என்ன பண்ணனும்னு சொல்றே,..?

நீங்க பாக்யா புக்குக்கு ஜோக் எழுதறதை  நிறுத்தனும்.. அதை எங்கப்பா கிட்டே சொல்லனும்.இனிமே அந்த புக்குக்கு ஏ ஜோக் எழுத மாட்டேன்ன்னு....

அது நடக்காது.. கே பாக்யராஜ் சார் புக்கிற்கு தொடர்ந்து எழுத காரணமே அவர் எப்பவாவது என் எழுத்துல இன்ஸ்பிரேஷன் ஆகி ஏதாவது வசன சான்ஸோ, காமெடி ஸ்கிரிப்டோ தருவார்னு தான்.சாரி....

அவ்வளவுதான்....அந்த மோஹனா சேப்டர் க்ளோஸ்......
http://thatstamil.oneindia.in/images32/optimized/lailao-500.jpg
இந்த 2 பெண் பார்க்கும் படலங்கள்ல இருந்து நமக்கு தெரியற நீதி என்னன்னா..

1. பொண்ணு பார்க்கப்போறப்ப இயற்கையா என்ன அழகு இருக்கோ அது போதும்னு அசால்ட்டா இருக்கக்கூடாது.. பியூட்டி பார்லர் போய் நம்மை அழகு படுத்திட்டு டீசண்ட்டா போகனும்...(அப்போ நான் இண்டீசண்ட்டா..?)

2. ஓப்பனா எதையும் நாம பேசிடக்கூடாது.. மனசுக்குள்ளே என்ன எண்ணம் இருந்தாலும் வெளில நல்லவன் மாதிரியே காட்டிக்கனும். உண்மையான மனிதனுக்கு மதிப்பில்லை.. பொய்யா நல்லவனா வேஷம் போடனும்.

நல்ல வேளை அந்த மோஹனாவோட அப்பா பாக்யா மட்டும் படிச்சாரு.. விருந்து,திரைச்சித்ரா,ஹெர்குலிஸ் எல்லாம் படிக்கலை... ஒரு வேளை அதையும் படிச்சிருப்பாரோ#டவுட்டு.

டிஸ்கி -1 : மகளிர் தினத்துக்கும், இந்த பெண் பார்க்கும் படலத்துக்கும் என்ன சம்பந்தம்.?என்னை கட்டிக்காம போனதே அந்த பொண்ணுங்களுக்கு நல்லது தானே.. அது பெண் குலத்துக்கு நல்லது நடந்த மாதிரிதானே...#சமாளிஃபிகேஷன்

டிஸ்கி -2 : பதிவுக்கும், லைலா ஃபோட்டோவுக்கும் என்ன சம்பந்தம்னா முத பொண்ணு ஃபோட்டொ, 2வது பொண்ணு ஃபோட்டோ 2ம் வெச்சிருக்கேன். ஆனா இந்த பதிவு போட அனுமதி கொடுத்த அந்த 2 ஃபிகருங்களும் ,ஃபோட்டோ போட அனுமதிக்கலை..அதனால நடிகை ஃபோட்டோ...

டிஸ்கி 3 - முதலாவதா பார்த்த ஃபிகர் அபிராமி த்ரிஷா மாதிரின்னு சொல்ல முடியாது.. ஆனா அந்த ஃபிகரோட டிரஸ்ஸிங்க் சென்ஸ் த்ரிஷா மாதிரி இருக்கும். வழக்கமா பொண்ணுங்க வளையல் போடும்போது புடவை கலர்ல போடுவாங்க.. ஆனா த்ரிஷாவோட இந்த ஸ்டில்லுல பாருங்க பார்டர் கலர்+ புடவை கலர் 2 காம்பினேஷனும் மேட்ச் ஆகற மாதிரி வளையல் கலர் மேட்ச் ஆகறதை....அந்த ஃபிகரும் அப்படித்தான் போட்டிருந்தது..#நல்லா நோட் பண்ணு ஆனா கோட்டை விட்டுடு@மனசாட்சி

நமீதா பாவம்... மீ பாவம்

http://www.oopps.info/wp-content/uploads/2009/05/hot-namitha-wallpaper-3.jpg
1. தலைவர் சினிமா அதிகம் பார்க்கறதில்லை போல... ..

எப்படி சொல்றே..?

படத்துல நமீதாவைப்பார்த்துட்டு “ பாவம், ரொம்ப ஏழை போல.உடுத்திக்கவே நல்ல டிரஸ் இல்லாம கஷ்டப்படறார்,அரை குறையா டிரஸ் பண்றார்னு வருத்தப்படறாரே...?

-----------------------------
2. என்னது ? மேடைல தலைவர் எழு ,மேலே சிரிப்பு நிகழ்ச்சி வழங்கறாரா?

அதான்பா, ஸ்டேண்ட் அப் காமெடி... ( STAND UP COMEDY)

------------------------
3.  ஏம்மா .. பொண்ணு .. இந்தா டிக்கெட்.. வாங்கிக்க...

சாரி.. கண்டக்டர் சார்.. வெளில தனியா போறப்ப யார் எது குடுத்தாலும் வாங்கிக்கக்கூடாதுன்னு அம்மா சொல்லி இருக்கு....

-----------------------------

4.சைபர் கிரைம்ல தலைவர் சம்பந்தப்பட்டிருப்பார்னு எப்படி சொல்றே..?


அவருதான் எல்லா விஷயத்துலயும் பூஜ்யம் ஆச்சே..?

---------------------------------

5. பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்கன்னு மணமக்களை வாழ்த்தி தலைவரு 16 சீட் வேணும்னு சூசகமா கூட்டணிக்கட்சித்தலைவருக்கு உணர்த்திட்டாரே....

நோ யூஸ்.. ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம்,இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்னு சொல்லி தலைவர் சமாளிச்சிட்டாரே..

=------------------------------------------

http://www.cinehour.com/gallery/cinenews/39028028vijayalakshmi.jpg
6. கூட்டணிக்கு அழைச்ச தலைவர்ட்ட நம்ம தலைவர் ரொம்ப அல்பமா நடந்துக்கிட்டாராமே..?

சிவப்புக்கம்பள வரவேற்பு அளிக்கப்படும்னு கூட்டணிக்கு அழைச்சீங்களே.. அந்த கம்பளத்தை  நான் வீட்டுக்கு எடுத்துட்டு போயிடலாமா?ன்னு கேட்டுட்டார்.

-------------------
7. எனக்கு  இன்னும்  முதுகெலும்பு  முறிந்துவிடவில்லை.  10 சீட் பத்தாது-னு சொன்னது தப்பா போச்சு  தலைவரே!

ஏன்?

உங்களை  உதச்சு  முதுகெலும்பை  முறிக்க  ஆட்டோல  ஆட்கள்  வந்திருக்காங்க.

-----------------------
8. சாரி...  உங்களுக்கு 80 சீட்  தரமுடியாது.  4  சீட்தான்.

இது கூட்டணி  தர்மம்  இல்லை.  இது  கூட்டணி  பிச்சை.

----------------------
9. எதுக்காக  தியேட்டரை  பூட்டறீங்க?

திறந்தா ஆடியன்ஸ்  ஓடிடுவாங்க.

------------------------
10. தலைவர்  ஏன்  கோபமா  இருக்காரு?

கூட்டணி  பேச்சு  வார்த்தைக்கு  போனப்ப  வாசல்ல NO ENTRY போர்டு  வெச்சு  கேவலப்படுத்தீட்டாங்களாம்.

-------------------------------

டிஸ்கி (v)- மகளிர் தினத்தை முன்னிட்டு என்ன ஸ்பெஷல்?னு கேட்டவங்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு நான் பெண் பார்த்த அனுபவங்கள் பற்றி ஒரு மேட்டர் போடப்போறேன்.

Monday, March 07, 2011

நாளைய இயக்குநர் - காதல் + கண்ணீர் கதைகள்

http://www.tamilgood.com/movies/wp-content/uploads/2011/01/Naalaiya-Iyyakunar55.jpg 
6.3.2011 அன்று ஞாயிறு காலை 10.30 மணிக்கு கலைஞர் டி வி ல நாளைய இயக்குநர் நிகழ்ச்சில  ஹாய் மதன் சொன்ன தொடக்க வரி மனதைத்தொடுவதாக இருந்தது.இன்னொருவர் கஷ்டங்களைப்பார்த்து நெகிழ நாம் கத்துக்கனும்.அதற்கு அச்சாரமா டிராஜடிங்கற தலைப்புல இந்த வார படங்கள் அமைஞ்சிருக்குன்னார்.

அய்யய்யோ டிராஜடியா? மாட்னோம்டா அப்டின்னு நான் சலித்துக்கொண்டே தான் பார்த்தேன்.என் எண்ணங்களை தவிடு பொடி ஆக்கும் படி முதல் படமே கலக்கலான தொடக்கமா அமைஞ்சது..

1. அன்புடையீர்  - திருப்பூர் ராம்.

ஒரு சோக கதையை ஆக்‌ஷன் ஃபார்முலாவுல சொல்ல முடியுமா?ங்கற பிரமிப்பான தொடக்கத்தோட படம் அமைஞ்சது.ஒரு தூக்குத்தண்டனைக்கைதி தப்பி ஓடறப்ப போலீஸ் துரத்துது.. அந்த சேசிங்க் சீன்ல யே ஃபிளாஸ்பேக் அப்பப்ப வருது.

இந்த குறும்படத்தோட கதை சொல்லல் பாணி என்னை ரொம்பவே கவர்ந்துடுச்சு.மொத்தம் ஓடற 7 நிமிஷத்துல கதையை சொல்லி ஆகனும்,அதுல சோகம் இருக்கனும்,சுவராஸ்யமும் இருக்கனும்ங்கற கண்டிஷன்ஸை எல்லாம் அனாசயமா ஏத்துக்கிட்டு ஆக்‌ஷன் த்ரில்லர் லேபிள்ல சேர்த்தும் அளவு வித்தியாசமான படமாக இயக்கப்பட்ட இந்தப்படம் சமீபத்தில் நான் பார்த்த 65 குறும்படங்களில் சிறந்த படம் என கொள்ளலாம்.

படத்தோட பிளஸ் பாயிண்ட் ஹீரோயின். ரொம்ப பாந்தமான குடும்பப்பாங்கான மனைவியா வர்றவர் ரொம்ப இயல்பா நடிச்சிருக்கார்.கைதி தப்பி நேரா தன் வீட்டுக்கு வந்து தன் மனைவியையும் ,கைக்குழந்தையையும் பார்க்க வந்தவர் தன் மனைவி வேற ஒரு ஆள் கூட குடும்பம் நடத்துறதை பார்த்து திக் பிரமை அடைஞ்சு நிக்கறார்...

இந்தக்கதைல எனக்கு சில டவுட்ஸ்

1.கணவன் கைது ஆன உடனே ஒரு மனைவி உடனே செக்யூரிட்டிக்காக அப்படி வேற ஒரு ஆள் கூட போவாரா?

2. கதைல ஹீரோயின் (மனைவி) தனக்கு ஆண் குழந்தை தான் பிடிக்கும்கறா.. ஹீரோ பெண் குழந்தை தான் பிடிக்கும்கறான். பொதுவா பொண்ணுங்க எந்தக்குழந்தையா இருந்தாலும் ஓக்கே அது அவங்க குழந்தைன்னு நினைப்பாங்க.. ஆண்கள் தான் வாரிசுக்கு ஆண் வேணும்னு நினைப்பாங்க.

3.  தூக்கு தண்டனைக்கைதியை துரத்தி பிடிக்கும் போலீஸ் ஆஃபீசர் அந்த கைதிக்கு முன்னாலயே தன்னோட உயர் அதிகாரிக்கு ஃபோன் போட்டு ,”சார்.. உடனே வாங்க.. நான் தனியா இவனை சமாளிக்க முடியாது”ங்கற  மாதிரி பேசுவாரா? ரிவால்வரால கால்லயோ, கைலயோ சுட்டு காயத்தை ஏற்படுத்தி கைதியை பலவீனன் ஆக்கி இருக்கலாமே..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigu7s621zl2WdvvbzlmIkQ1WQJ3x-Ap0Lkl7tCd8h11gQKI65yBvyDf6yR2lyFJOVFHQPl6yTJTdEnnP5aiQ8kZAvuFhjCS-EM5SFuPmA7h0bey2BsKhUxd03Yn9HrlcIgSIrnaVUNeipm/s320/director.png
இந்தப்படத்தில் கவர்ந்த வசனங்கள்

1. தப்பு செஞ்சவங்க நிறைய பேரு வெளில இருக்கறப்ப நான் மட்டும் ஏன் சாவனும்?

2,  எனக்கு பெண் குழந்தைன்னா உசுரு.மனைவியைக்கூட ஒரு குழந்தையாத்தான் பார்த்துக்கறேன்.

3. அப்பாவோட வாசம் தெரியாமயே என் குழந்தை வளர்ந்துட்டு இருக்கு

இந்தக்கதைக்கான ரிசல்ட் ஆடியன்சிடமும் சரி,ஜட்ஜூங்க ரெண்டு பேர்ட்டயும் சரி அபாரமா இருந்தது.ஒரு படைப்பாளிக்கு கிடைக்கற சிறந்த அங்கீகாரமே பாராட்டுதான் என்ற அளவிலும்,பாராட்டு சிறந்த கிரியா ஊக்கி என்ற அளவிலும் அந்த காட்சியைப்பார்க்க மனசுக்கு மகிழ்ச்சியா இருந்தது.

2. நான் அமாவாசைல பிறந்தவன் - அழகு ராஜா

ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டரோட போராட்டங்கள்,அவமானங்கள்,வலி இவற்றை சொல்லும் கதை. பொதுவா இந்த மாதிரி கதைகள் ஜனங்களால அதிகமா விரும்பப்படறது இல்ல... அன்றாட வாழ்வியலில் ஏற்படும் பிரச்சனைகளை மையமா வெச்சு படம் எடுக்கறதே நல்லது. இதுக்கு சினி ஃபீல்டுலயே உதாரணம் சொல்லலாம். தாவணிக்கனவுகள், சினிமா சினிமா,முகவரி...(இதில் முகவரி வெற்றிப்படம் என்றாலும் எதிர்பார்த்த வெற்றி இல்லைன்னு அதன் இயக்குநரே பேட்டி குடுத்திருக்கார்,)


பிடித்த வசனங்கள்

1. எனக்கு நடக்கறது  ஒண்ணும் புதுசு இல்லை...தமிழ் சினிமாவுல கதை சொல்ல நடையா நடந்துட்டு தான் இருகேன்..

2.  என்னய்யா.. ஒரு கிஸ் சீன்க்கு இத்தனை டேக் எடுக்கறே... நல்ல வேளை ரேப் சீன் எடுக்காம போயிட்டோம்..

இயக்குநருக்கு சில வார்த்தைகள்

1 . சினிமா வாய்ப்பு கிடைக்கலைன்னு மனம் வருத்தம்தான் படுவாங்க,இதுக்கு யாரும் தற்கொலை செய்ய மாட்டாங்க. அப்படியே எங்காவது ஒரு சம்பவம் நடந்திருந்தாலும் அதை படமாக்குவதால் புது ஆட்களுக்கு தன்னம்பிக்கை யை வளர்ப்பது போல்தான் நாம்(அதாவது நீங்க) படம் எடுக்கவேண்டுமே தவிர நெகடிவ் எண்ணங்கள் ஏற்படும்படி அல்ல.

2. தூக்கு மாட்டிக்கொள்ளும் ஹீரோ 3 முறை மட்டுமே கால்களை உதறுவது போல் சீன் இருக்கு.. கிட்டத்தட்ட 13 முறை உதறுவானாம்.அந்த கொடூரத்தை காட்டுவதற்கு சிம்ப்பிளாக சிம்பாலிக் ஷாட் வைத்திருக்கலாம்.
http://whatslatest.com/blog/wp-content/uploads/2009/10/paritala-sunitha.jpg
3. கடைசி வரை -சத்தி 

காதல் ஜோடி லவ் பண்றாங்க. காதலனுக்கு ஒரு விபத்துல கண் பார்வை போயிடுது.உடனே பிராக்டிகல் சேஃப்டி லைஃப்ஃபை காதலி செலக்ட் பண்றா. வீட்ல பார்க்கற மாப்பிள்ளைக்கு ஓக்கே சொல்றா....ஆனா காதலன் நடந்த சம்பவத்தை நண்பன் கிட்டே சொல்றப்போ காதலி மேல தப்பில்லைங்கற மாதிரி சப்போர்ர்ட்டா பேசறான்  .

1. என்னடா நண்பா.. பேசிட்டு இருந்தே , திடீர்னு ஆளைக்காணோம்..போய்ட்டியோன்னு பார்த்தேன்.

பாதிலயே விட்டுட்டுப்போக நான் என்ன உன் ஆள் தேவியா?


2.பார்வை இல்லாததால என் கவனம் கலையறதில்லை.. கூர்மையான புலன்கள் ....

3.  ஒரே ஜோக்கை ரெண்டு மூணு தடவை படிச்சுப்பாரு ,சிரிப்பே வராது..அதே மாதிரி பல தடவை அழுது பார்த்துட்டா எதுவுமே சோகம் இல்ல...( சோகத்தோட வலி குறைஞ்சிடும்)

4. ஹீரோயின் - உங்களை எந்த அளவுக்கு நான் விரும்பறேனோ அந்த அளவுக்கு  என்னை நான் அதிகமா விரும்பறேன். 


காதல் கதை எடுக்கறவங்க  அந்த கதைக்கு வில்லனா காதலர்களே மாறிடறதா காட்டறப்ப அந்த கதைல , காதல்ல வலு குறைஞ்சிடுது....இதை கவனத்துல வெச்சுக்கிட்டு திரைக்கதை அமைப்பது நல்லது.

இயக்குநருக்கு சில வார்த்தைகள்

1. காதலர்கள் ஜாலியா பேசிட்டு இருக்கறப்ப ஒருத்தர் கண்ணை ஒருத்தர் பார்த்துப்பேச ஆசைப்படுவாங்க.. அதனால கூலிங்க் கிளாஸ் போட்டுட்டு பார்க்ல உட்கார்ந்து பேசற சீன் தேவை இல்லை.ஹீரோவை பந்தாவா காட்டனும்னு நினைச்சா பைக்ல போறப்ப, நடந்து வர்றப்ப அப்படி காட்டுனா போதும்.

2.காதலி காதலனை கை விடற ஷாட்ல அவ கண்ல வருத்தமே இல்ல..வேற வழி இல்லாம அப்படி பண்றாங்கறதை நல்லா தெளிவா காட்டனும்.சப்போஸ் நடிகைக்கு ஆக்டிங்க் வர்லைன்னா ( IF THE EXPECTING PERFORMANCE IS NOT OBTAINED) லாங்க் ஷாட் வைச்சு சமாளிக்கலாம்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfCXOzUpmBqLkEGK3eBANMrLDwnPPb_mw2GjbUVJf4KWkvaahfa6v08hTo3ENFowqihfuON-UThLoHLIZ6-Rn_iHJpjMjz6RDVL-S_sgC1QAztn1eVh8wNywrHcwGicZ4ifoFJels1kof4/s1600/clapboard.jpg
4. ஒரு நாள் - தீபக்   

இந்தப்படம் ஒரு பிரமிப்பான அனுபவத்தை குடுத்தது.2008 நவம்பர் மாதம் 26ந்தேதி நடந்த உண்மைசம்பவத்தை மையமா வெச்சு எடுக்கப்பட்டிருக்கு.

ஒரே ஒரு கேரக்டரை வெச்சு இவ்வளவு பவர் ஃபுல்லா ஒரு திரைக்கதையை எழுத முடியுமா?அதை ரொம்ப பர்ஃபக்‌ஷனோட எடுக்க முடியுமா?என அனைவரையும் வியக்க வைத்து முதல் பரிசை தட்டி சென்ற படம். கடந்த ஆறு வாரங்களில் முதல் பரிசை பெறும் படங்கள் சரியான தேர்வுதானா  என மெல்லிய சந்தேக நூலிழை மனதில் ஓடும். ஆனா இந்தப்படம் சந்தேகத்துக்கு இடமில்லாம அனைவரது கவனத்தையும் பிரமாதமா கவர்ந்தது.

ஊடலுடனான கோபத்தில் மனைவி பெட்ரூம்ல படுத்திருக்கா.. அப்போ கணவன் கிட்டே இருந்து ஃபோன்.இவ எடுத்து 2 வார்த்தை கோபமா பேசிட்டு வெச்சிடறா..அவன் உடனே மெசேஜ் அனுப்பறான்.அடுத்த டைம் ஃபோன் பண்ணுனதும் அவ எடுத்துப்பேசும்போது மெல்ல மெல்ல தான் தீவிரவாதிகளால் தாக்கபட்ட ஹோட்டலில் இருப்பதாகவும், தன்னுடன் இருந்த அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் எனவும்,தான் மரண வாசலில் இருப்பதாகவும் பதட்டத்தோட சொல்றான்.

இறக்கும் தருவாயில் மனைவியுடன் கணவனுக்கோ,கணவ்னுடன் மனைவிக்கோ பேசும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதே கதையின் ஒன் லைன். அதற்கான கதைக்களனாக டெரரிஸ்ட் சம்பவத்தை கையில் எடுத்தது படத்தின் வெற்றியை உறுதி செய்யவும் , கதையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தவும்..

இந்த படத்துல நடிச்ச ஹீரோயின் நல்ல அழகான முகம். சடக் சடக் என மாறும் அம்சமான முக பாவனைகள். கோபம், ஊடல், காதல், பயம் , மரணத்தின் விளிம்பில் கணவன் இருப்பதும் வரும் பதட்டம் எல்லாமே கலக்கலான அம்சங்கள்.மேக்கப் அதீதமாக இல்லாமல் மிதமான இயற்கையான அழகு முகம் ஒரு பிளஸ் என்றால் அவரது பாடி லேங்குவேஜ்ஜூம் அற்புதம்.

சாகும் தருவாயிலும் கணவன்  பேசும் ஒரு டயலாக் கண் கலங்க வைத்தது,.
http://www.cinesnacks.in/tamil-movies/actress/Kajal-Agarwal-01/kajal-agarwal-photos-031.jpg
டாக்டரை கல்யானம் பண்ணுனது கூட ஒரு வகைல நல்லதா போச்சு.இப்போ முதல் உதவி சிகிச்சை எப்படி பண்றதுன்னு சொல்றியே.. நம்ம குழந்தையையும் டாக்டருக்கே படிக்க வைக்கனும்.

டைரக்டருக்கு சில வார்த்தைகள்

1. ஒரே ஒரு கேரக்டர் என முடிவு செஞ்சு ஷூட் பண்ணுனது பிரமாதமான ஐடியா என்றாலும் அதை ஒரே ஷாட்டில் சொல்லி இருந்தா இன்னும் பிரமாதமாய் இருந்திருக்கும்.கட் ஷாட்டே தேவை இல்லை. ஒரே ரூம். ஒரே கேரக்டர் எனும்போது குணா படத்தில் ஹாஸ்பிடல் சீனில் வரும் 4 நிமிட காட்சியில் கமல் அறையை சுற்றி வந்து பேசும்போது எப்படி கேமரா கோணங்கள் இருந்ததோ அப்படி இருந்திருந்தா கலக்கலா இருந்திருக்கும்.

2. அந்த சம்பவம் நடக்கறப்ப ஹீரோ ஹீரோயிண்ட்ட தீவிரவாத சம்பவம் பார்க்க டி வி யை ஆன் பண்ணு என சொல்றார்,அப்போ சிம்பாலிக் ஷாட் வைக்கும் உத்திக்காக கே டி வி ல ரோஜா படம் ஓடற மாதிரி காட்டி இருக்கீங்க. அந்த ஹோட்டல் சம்பவம் உண்மையா நடந்த அன்று அந்த படம் எந்த சேனல்லயும் இல்லை.

எனிவே ஹாட்ஸ் ஆஃப் தீபக்

பரிசு கொடுத்து முடிச்ச பிறகு எலிமினேஷன் ரவுண்ட் இது என்பதால் ஒருவர் எலிமினேட் பண்ணப்பட போகிறார் என அறிவித்தார்கள். அந்த மேடையில் 260 பேர் பார்த்துக்கொண்டிருக்காங்க. டி வி ல கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் அதைப்பார்க்கறாங்க.. அப்போ போய் ஒருவரை மேடைல அழைச்சு கை குடுத்து உங்களை எலிமினேட் பண்றோம்.. சாரி என சொல்றாங்களே...

இது எந்த விதத்தில் சரி...? நிறைகளை பொதுவாக எல்லோருக்கும் முன் சொல்லுங்கள். குறைகளை தனியாக கூப்பிட்டு சொல்லுங்கள்.தோல்விகளை ருசித்தவன் என்ற முறையிலும்,சக படைப்பாளி அவமானப்படுத்தப்படுகிறான்  என்ற தார்மீக கோபத்திலும் எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

அப்புறம் ஒரு சந்தோஷமான நிகழ்வு நடந்தது. இந்த வாரம் முதல் பரிசு போட்டிக்கு ராமின்  அன்புடையீர்,தீபக்கின் ஒரு நாள் ரெண்டுமே சம தகுதி இருந்தாலும் கடைசில முடி இழையில் முன்னணி பெற்றதாக அறிவிக்கப்பட்டது ஒரு நாள் படமே... 

வாழ்த்துக்கள்.

திருப்பூர் ராம் எனது நண்பர். நான் இதுவரை நேரில் சந்தித்ததில்லை. செல் ஃபோன் அறிமுகம் மட்டும்.

”மப்” பொழுதும் உன் கற்பனைகள்

http://spicy.southdreamz.com/spicydb/hot-actress-anjali-pictures/actress-anjali-saree-stills-05.jpg

1. ஹீரோ ஒரு சரக்கு பார்ட்டி..ஹீரோயின் ஞாபகமாவே எப்பவும் கவிதை எழுதிட்டே இருக்காரு..

ஓ,என்ன டைட்டில்?

மப்பொழுதும் உன் கற்பனைகள் (முப்பொழுதும் உன் கற்பனைகள் பட டைரக்டர் என்னை மன்னிப்பாராக)


---------------------------------------------------------

2.தலைவரு கமல் ரசிகர்னு எப்படி சொல்றே,,?

அவர் எடுக்கப்போற சொந்தப்படத்துக்கு மகளிர் அணித்தலைவி இருக்கின்றாள்னு டைட்டில் வெச்சிருக்காரே...

--------------------------

3. மேடம்.. முகம் பூரா ஜிகினா ஒட்டிக்கிட்டு வர்றீங்களே...ஏன்?

ஷைனிங்க் ஸ்டார்னு பெயர் எடுக்கத்தான்.

-------------------------------------

4 ஆடியன்ஸ் எல்லாரும் ஓடி வந்து அந்த டி வி காம்ப்பியரர் லேடி பின்னால ஒட்டிக்கிட்டு நிக்கறாங்களே..?  ஏன்?

வெல்கம் பேக்  ட்டூ  (WELCOME BACK   TO ) னு சொன்னாங்காட்டி அவர் பேக் பின்னால போய் நின்னுக்கிட்டாங்களாம்.

---------------------------

5.மிஸ்,,நான் குடுத்த லவ் லெட்டரை  ஏன் கிழிச்சுப்போட்டுட்டீங்க..?

உங்க முகத்தைக்கூட சகிச்சுக்கலாம் போல.. உங்க கவிதையை சகிக்க முடியல....

---------------------------------------------
http://www.bevapphasanam.com/wp-content/uploads/2011/02/Anjali-Tamil-Actress-Cute-In-Salwar-Kameez-bevapphasanam.com_.jpg
6. உங்க மனைவியை பாடவா டூயட் பாடலை நிகழ்ச்சில தான் முதன் முதலா சந்திச்சீங்களாமே...?

ஆமா... இப்போ வீட்ல தினமும் அவ பாட்டுத்தான்.. ஹி ஹி .

-----------------------------------

7. உங்க மனைவி கோவிச்சுக்கிட்டு அவங்கம்மா வீட்டுக்கு போயிடாங்களாமே..? ஏன்?

எங்கம்மா வீட்டுக்கு போக முடியாதே.. ஏன்னா,அவங்க என் கூடத் தானே இருக்காங்க..
-----------------------------------------------

8. நான் ஜாலியா,சந்தோஷமா இருக்கரது உங்க கண்ணை உறுத்துதா..?

அப்படியெல்லாம் இல்லையே.. ஏன் கேட்கறே..?

அம்மா வீட்டுக்கு கோவிச்சுக்கிட்டு போன மனைவியை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வான்னு சொன்னீங்களே...

-----------------------------------------

9. ஹீரோயின் கொஞ்சம் அழகு கம்மி தான்.. அதுக்காக வில்லன் அவரை ரேப் பண்ணற மாதிரி சீன்ல கூட  நடிக்க மாட்டேன்னு சொல்றது ஓவர்....



--------------------------------------------------------

10. டாக்டர்.. எனக்கு தூக்கத்துல நடக்கற வியாதி இருக்கு.

வெரிகுட்... அப்போ காலைல எழுந்ததும் நீங்க உங்க வேலையைபார்க்கலாம்,வாக்கிங்க் போற வேலை இல்லை..

--------------------------------------

டிஸ்கி (v) - 1. நாளைய இயக்குநர் நிகழ்ச்சில கலந்துக்கிட்ட இயக்குநர்கள் யாராவது ஷூட்டிங்க் டைம்ல எடுத்த ஃபோட்டோ இருந்தா என் மெயிலுக்கு அனுப்புங்க.

டிஸ்கி 2 - முப்பொழுதும் உன் கற்பனைகள் டைட்டிலுக்கும் அஞ்சலி படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.லேட்டஸ்ட் கனவுக்கன்னி அஞ்சலியா?ன்னு கேட்டு கமெண்ட் போட்டுடாதீங்க..

டிஸ்கி 3. அஞ்சலிக்கு ஒரு பர்சனல் அட்வைஸ்.. நீங்க மேட்ச்சுக்கு மேட்ச் பொட்டு வைக்கிற பழக்கம் ஏற்படுத்திக்குங்க. நான் பார்த்த 328 ஃபோட்டோலயும் உங்க டிரஸ்க்கும்,நெற்றிப்பொட்டு கலருக்கும் சம்பந்தமே இல்ல...( ரொம்ப முக்கியம்..?)

Sunday, March 06, 2011

தமிழ்நாட்டுக்கு விடிவு காலம். தி மு கவுக்கு முடிவு காலம்?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTrqd0GVC3ZwosA6Z4aU_FFoG_FJlY0e8HSPHl4pnLp9oH50YCYXI0MS9NU9cbpkdrzLX2495qQx9dcFe0DseppymNvxC-3yTpoDvshUjJmP4R2qtxs-z_s0Tbz_wMSsadcZxtINhKBTY/s640/kalaignar_cartoon.jpg 

நேத்து இரவு 7 மணில இருந்து நம்ம ட்வீட்டர்களுக்கு செம கொண்டாட்டம் போல..கலைஞர் - காங்கிரஸ் உறவு முறிஞ்சு போனதுல (தற்காலிக பிரிவு??) ஸ்வீட் எடு கொண்டாடு ரேஞ்சுக்கு போய் அவங்க ட்வீட்டிய வேகம் அபாரம். வழக்கமாக ஒரு நிமிடத்துக்கு ஒரு ட்வீட் என்ற சராசரி வேகத்தைத்தாண்டி நேற்று ஒரு செகண்டுக்கு ஒன்று என்ற வேகத்தில் ட்வீட்டினார்கள்.(60  மடங்கு அதிகம்)

ரெகுலராக பதிவு போடும் நம்ம ஆட்களில் பாரத் பாரதி,பட்டா பட்டி,ரஹீம்  கஸாலி இருந்தாங்க.நான் நைட் படித்த 2700 ட்வீட்களில் தேர்ந்தெடுத்த 16 ட்வீட்கள்...அப்புறம் நம்ம ஆட்களின் ட்வீட்டை வேணும்னே தவிர்த்துட்டேன்.தேவையற்ற விமர்சனத்தை தவிர்க்க... பாரத் பாரதி மட்டும் விதி விலக்கு.

1.காங்கிரஸ் தனியாப் போனா 234 தொகுதிகளில் நிற்க வேட்பாளர்களே இல்லையாம் :-) #டெல்லியில் அவசர ஆலோசனை.

2. ABC_02 சொத்துக்குவிப்பு வழக்கில் பச்சயம்மாவுக்கு எதிரான தீர்ப்பு வந்தால் கேப்டன்தான் முதலமைச்சர். #அந்தக்கூட்டணிஜெயிச்சா.

 3. TBCD செயலலிதா சசியயையும் தினகரனையும் கழட்டி(?!) விட்ட மாதிரி தலைவர் கனிமொழி/இராசத்தியயை கழட்டி விடுவது போல வேசம் கட்டினால் #2g #tnae11

4. balawatrap கலைஞ்சர்: எங்கேய்யா வைகோ? கூப்பிடு!!! வச்சுக்கோ 45! வைகோ:தாயகம் அல்ல, தாய்க்கழகம் திரும்புகிறேன். 


http://thecandideye.files.wordpress.com/2010/03/kumudam_cartoon_dmk.jpg?w=285&h=400
5. narain தமிழகத்தில் தொடர்ச்சியாய் ஒரே கட்சி ஆட்சி அமைத்ததில்லை. இப்படி பால் ஆக்டோபஸ் ஜோசியம் பார்த்தால் திமுக தோற்கும் :) 

6. writerpara @kavi_rt தமிழகத்தில் காங்கிரசுக்கு ஓரளவு வாக்குவங்கி உண்டு. பெரும்பாலும் முதியோர் வாக்கு. ஓட்டுப்போட அழைத்துவரமட்டும் தெரியாது. 

7.  iamkarki மச்சான் சண்ட போடாத.. கிராண்ட்பா நல்லதுதான் சொல்லும் #காங்கிரசிடம் நமீதா பேச்சுவார்த்தை 

 8. kolaaru திமுக-காங் கூட்டணி முறிவுக்கு காரணம் # காமராஜர் ஆட்சினு காங்கிரஸ் சொன்னதை,என்னாது “ராமராஜன்” ஆட்சியா என திமுக கலாய்தது


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5yqk4gtFCfcE1fJP4dSurxYrvjWIph7dyc_nN_M6YQwb0mMS0SxC0uspbg1oi7wpEDz1UQyZShOoSnVuocPZT9bJfUMzklbPLjAiQAE_c-YREtr4-kySvP1HhrnlUg0E9n_XyyZRjPIc/s400/karuna.jpg
9. RajanLeaks டாஸ் ஜெயிக்கறதுக்கு முன்னாடியே ஒருத்தன் பவுலிங் எடுப்போம்ங்கிறான்! எலெக்சன் வரதுக்கு முன்னாடியே ஆட்சில பங்குங்கிறான்! என்னதாண்டா ஆச்சு! 

10. bharathbharathi போனவாரம் இனி வசந்தகாலம் என கூவிய கைப்புள்ள கட்சி தலைவர் வெங்கல பாலு எங்கப்பா? # இனி இலையுதிர்காலம்.       

11. ChPaiyan ராமதாஸ்: என்னோட எல்லா சீட்டையும் (+1 தவிர) காங்.கே கொடுத்துடுங்க. நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சி என் குடியை கெடுத்துடாதீங்க. 

12. iamkarki அப்பாடா.. இந்த கலவரத்துல கரண்ட் மேட்டர மக்கள் மறந்திருப்பாங்க. தலைவர்கிட்ட நைசா சீட் வாங்கிடணும் - ஆற்காட்டார் மனசாட்சி   


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjINQ4cVQ_EQOyofq590wZw-GMGvRJCAHlbbuqL5Er9a57odL8qL4Y7Y5zHEYB5Pk5QRFFvfBnz0VSod09qvSTxJ41P1ytp_UHl-e70YML5oV5tzpcDlYIT5dElVu5NOvgTj-gfFybgL2k/s400/4.JPG
13. losangelesram தன்மானம், இனமானம், தமிழ்மானம், திராவிட மானம், உன் மானம், என் மானம் எல்லாம் இனிவரும் நாட்களில் அதிகமாக உச்சரிக்கப்படப்போகும் வார்த்தைகள்! 

14.  RajanLeaks RT @kolaaru: திமுக-காங் கூட்டணி முறிவுக்கு காரணம் # திருமா மேக்கப் போடாமல் இருக்கும்மோது சோனியாவை சந்திக்க வைத்தது திமுக -காங் 

15. Pradeesh gpradeesh திமுக காங்கிரஸை கழட்டிவிட்ட சந்தோசத்தில் ரவுண்டுஎண்ணாமல் குடித்து கொண்டிருக்கிறேன். நாளைக்கி திரும்பி அவய்ங்ககூட சேந்தீங்க #கொண்டேபுடுவேன    

16. iamkarki எதிரியான எனக்கு 41 தந்தாங்கஅம்மா. கூட இருந்தவனுக்கு 60 தராம துரத்திட்டாரு அய்யா.இப்போ சொல்லுங்க.யார்நல்லவங்க? #விஜய்காந்த் குரலில் படிக்க 


Saturday, March 05, 2011

கூட்டு களவாணிகள் ரெண்டு பட்டதால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்

http://www.thenaali.com/cpanel/Editor/images/articles/Specials/athiradi%20saravedi/thamizharuvi-manian.jpg
டாக்டர் கலைஞர் சிறந்த ராஜ தந்திரி தான். ஆனால் இலங்கைத்தமிழர்களின் சாபமும்,மீனவர்களின் கண்ணீரும்  அவரை துரத்துகிறது.இப்போ இல்லாட்டி எப்போ என காங்கிரஸ் நினைக்கிறது.பாலைவன ஒட்டகத்துக்கு கூடாரத்தை கொடுத்த கதை ஆகி விடக்கூடாது என தி மு க நினைக்கிறது.

இந்த சமயத்தில் தமிழருவி மணியன் கலைஞருக்கு எழுதிய கடிதத்தை வெளியிடுவது பொறுத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.இது விகடனில் வந்தது.



கலைஞருக்கு ஒரு திறந்த மடல்! தமிழருவி மணியன்

karunaanithi தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம்! நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை! தமிழகம் கண்ட தலைவர்களில் பல வகைகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர். காமராஜரைப் போலவே பாரம்பரியப் பின்புலம், உயர்குடிப் பிறப்பு, செல்வ வளம், கல்லூரிப் படிப்பு என்று எதுவுமின்றி, விலாசமற்ற ஊரில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, அயராது உழைத்து அரசியல் உலகின் உச்சம் கண்டவர் நீங்கள்.


காமராஜர் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, ஏழையாகவே வாழ்ந்து மறைந்தவர். நீங்கள் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, இன்று கோடீஸ்வரர்களில் ஒருவராகக் கொடிகட்டிப் பறப்பவர். காமராஜர் நாட்டுப் பணியில் தாயின் உறவு உட்பட சகலத்தையும் துறந்தார். நீங்கள் எதையும் துறக்காமல் பொதுவாழ்வின் மூலம் சகல நலன்களையும் வீட்டுடைமையாக்கிக்கொண்ட வித்தகராய் விளங்குகிறீர்கள்!


ஈ.வெ.கி.சம்பத் தி.மு.கழகத்திலிருந்து அவசரப்பட்டு விலகிய பின்பு, அண்ணாவுக்கு அடுத்த நாற்காலியில் அமர்ந்திருந்த நெடுஞ்செழியனை இரண்டாம் இடத்திலேயே இருக்கவிட்டு, முதலிடத்தைப் பிடித்து நீங்கள் முதல்வரானது – உங்கள் சாகசச் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படக்கூடியது!


ஓர் உறையில் இரு வாட்கள் இருக்கலாகாது என்று சிந்தித்த நீங்கள் செயற்குழுவின் ஆதரவைத் திரட்டி, செல்வாக்குமிக்க எம்.ஜி.ஆரையே விரட்டி, தனிக்காட்டு ராஜாவாக மகுடம் சூட்டிக்கொண்ட மகத்துவத்தை யார் மறக்கமுடியும்? அரசியல் விளக்கங்களை எழுதவிடாமல் அன்றைய ‘இந்திரா தர்பார்’, செய்தித் தணிக்கையைக் கொண்டு வந்தபோது, ‘கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்’ என்ற முல்லைக் கவி பாடல் மூலம் இலக்கியப் போர்வையில் அரசியல் வகுப்பு நடத்திய உங்கள் ஆற்றல் யாருக்கு வரும்? 

‘மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது’ என்ற மறக்கமுடியாத வசனத்தைப் ‘பூம்புகார்’ திரைப்படத்தில் தீட்டிய உங்கள் மனசாட்சி முற்றாக உறங்கிப் போனதுதான் தமிழருக்கு வாய்த்த சாபம்.


‘தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில், தமிழ் வீரம் போதித்த அறிஞர் அண்ணா கல்லூரியில் பயின்ற எனக்கு அந்த உணர்வும் மழுங்கி விடுமேயானால், நடைப் பிணம் நிகர்த்தவனாகி விடுவேன்’ (கலைஞர் கடிதம் தொகுதி – 5) என்றீர்களே, எந்தெந்த வகையில் நீங்கள் பெரியாரையும், அண்ணாவையும் இன்று பின்பற்றுகிறீர்கள் என்று எங்களுக்குக் கொஞ்சம் விளக்க முடியுமா?


‘சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை என்ன தெரியுமா? ஐந்து கொள்கைகள்தான். கடவுள் ஒழிய வேண்டும். மதம் ஒழிய வேண்டும். காங்கிரஸ் ஒழிய வேண்டும். காந்தி ஒழிய வேண்டும். பார்ப்பான் ஒழிய வேண்டும். அன்று முதல் இன்று வரை அதே கொள்கைதான் (இறுதிப் பேருரை- 19-12-73) என்றார் பெரியார். இந்த 5 கொள்கைகளில், தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில் பயின்ற நீங்கள் இன்று எதைப் பின்பற்றுகிறீர்கள்? மஞ்சள் துண்டு எந்தப் பகுத்தறிவின் அடையாளம்?

சாய்​பாபாவை வீட்டில் வரவேற்றுப் பேசியதும், உங்கள் வீட்டார் அவர் கால்களில் விழுந்து ஆசி பெற்றதும் பெரியாரின் பகுத்தறிவுப் பாசறை தந்த பாடமா? தன்னை வாழ்த்தினால் ‘நண்பர்’ என்று புகழ்வதும், விமர்சனம் செய்தால் ‘பூணூல்’ என்று எள்ளி நகையாடுவதும் எந்த வகையில் பார்ப்பன எதிர்ப்பு? கஸ்தூரிபாயைத் தன் வழியில் திருப்பியவர் காந்தி. நாகம்மையையும், மணியம்மையையும் தன் மனதின் போக்குக்கேற்ப மாற்றியவர் பெரியார். வீட்டில் கொண்டுவர முடியாத மாற்றத்தை நாட்டில் கொண்டுவருவேன் என்பது நகைப்​புக்குரியது அல்லவா! பக்திப் பரவ​சத்தில் கோயில் கோயிலாகச் சுற்று​வது ஜெயலலிதா மட்டுமன்று, உங்கள் வீட்டு உறவுகளுந்தானே!


அண்ணா இறுதி நாள் வரை காங்​கிரஸை ஆதரிக்கவில்லை. மதுவிலக்கை எதிர்க்கவில்லை. ஆனால், நீங்கள் இரண்டு நிலைகளிலும் அண்ணா வழியில் நிற்க​வில்லையே; ‘என்னைப் பொறுத்த வரையில் பதவி முடிவு மட்டுமல்ல, வாழ்வின் முடிவே ஏற்படப் போகிறது என்று தெரிந்தாலும், அப்​போதும் என் நினைவு உள்ளவரையில் பெரியாரையும் அண்ணாவையும் அவர்கள் தந்த லட்சியங்களையும் கொள்கைகளையுந்தான் கூறிக்​கொண்டிருப்பேன். மரணப் படுக்​கையில் என் நாக்கு அசையும் சக்தியை இழந்துவிடுமானால், என் நெஞ்சத் துடிப்புகள் கழகத்தின் பெருமைக்குரிய கொள்கைகளையே ஒலித்துக் கொண்​டிருக்​கும். அம்மா, அப்பா என்று சொல்லி உயிர் பிரியப் போவதில்லை.

‘அண்ணா! அண்ணா!’ என்று சொல்லித்தான் இந்த உயிர்த் துடிப்புகள் இறுதியாக அடங்​கும்’ (கலைஞர் கடிதம் தொகுதி – 5) என்று சொன்ன நீங்கள் அண்ணா எதிர்த்த காங்கிர​ஸின் உறவுக்காக ஏங்கி நின்றதும், நிற்பதும் நியாயந்தானா கலைஞரே?


‘சித்ரவதை, தூக்கு மேடை, கால் வேறு கை வேறாக வெட்டிக் கடலில் எறிவது போன்ற எந்தக் கொடுமையையும், கொண்ட கொள்கைகளுக்காகத் தாங்கத் தயார்! இது அண்ணாவின் மீது ஆணையாக எடுத்துக்கொண்டுள்ள சூளுரை’ என்று சொன்ன கலைஞரே… உங்களால் ஈழத் தமிழருக்காக மூன்று மணி நேரத்துக்கு மேல் உண்ணாவிரதம்கூட இருக்க இயலவில்லையே? எதையுமே நீங்கள் அழகாக எழுதுகிறீர்கள். உணர்வு ததும்பப் பேசுகிறீர்கள்… ஆனால், எழுத்துக்கும் பேச்சுக்கும் எதிராகவே நடக்கிறீர்கள். அது ஏன்?


‘முந்திரா ஊழல் முப்பத்து முக்கோடி தேவர்களும் அறிந்த விவகாரம். அமீர்சந்த் பியாரிலால் விவகாரம், அதிலே சிக்கிக் கொண்டு தவித்த தவிப்பு, இதெல்லாம் ஈரேழு பதினாலு உலகமும் சிரிப்பாய்ச் சிரித்ததை யாரும் மறந்து விடவில்லை’ என்றும் ‘காங்கிரஸ் மாளிகை பாழடைந்த மண்டபமாகி விட்டது. அதிலே வெளவால்​கள் குடியேறத்தான் செய்யும்’ என்றும் (கலைஞர் கடிதம், தொகுதி – 1) 1968-69-களில் உடன்பிறப்புகளிடம் கடிதங்கள் மூலம் காங்கிரஸ் எதிர்ப்பைக் கடுமையாக விதைத்து​விட்டு, 1971 தேர்தலில் அதே காங்கிரஸைக் கட்டித் தழுவியபடி களத்தில் நின்றீர்களே… அந்த நட்புக்குச் செலுத்திய நன்றிதான் கழகத்தின் மீது காங்கிரஸ் பொழிந்த புகழு​ரைகள்(!).


நீங்கள் பதவிப் பல்லக்கில் பவனி வருவதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் தோள் கொடுத்தால் காங்கிரஸ் சமதர்மம் இனிக்கும். சுமப்பதை விட்டுவிட்டு, அவர்களும் உங்களோடு சேர்ந்து பல்லக்கில் சவாரி செய்ய நினைத்தால் காங்கிரஸின் ஆதிக்கம் கசக்கும். ‘சமத்துவம் இன்மையே… உனக்குப் பெயர்தான் இந்து மதமா?’ என்று கேட்டார் அண்ணல் அம்பேத்கர்.


‘சுயநலமே… உனக்குப் பெயர்தான் தி.மு.கழ​கமா?’ என்று கேட்கத் தோன்றுகிறது கலை​ஞரே! ‘பதவிகளுக்காக, பவிசுகளுக்காக, அந்தஸ்துகளுக்காக, அதிகாரங்களுக்காக இந்த இனத்தைக் காட்டிக் கொடுக்கிற இழி செயலுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கின்ற ஒரு சாதாரணத் தொண்டன்கூடத் தயாராக இல்லை’ (முரசொலி 7-7-1981) என்று வீர முழக்கமிட்டவர் நீங்கள். ஆனால், ஈழம் எரிந்தபோது, நம் இனம் கரிந்தபோது களத்துக்கு வராமல் பாசறையிலேயே பதுங்கிவிட்டது ஏன் கலைஞரே?

‘தியாகத் திருவிளக்கு சோனியா காந்தி’ என்று பரவசம் பொங்கப் புகழ்மாலை சூட்டிய நீங்கள், வீரத்தின் விளைநிலம் பிரபாகரனை ஈன்ற பார்வதி அன்னையை மனிதநேயமின்றி விமான நிலையத்தில் பாதம் பதிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்​பிய இந்திய அரசின் வன்கொடுமைக்கு எதிர்ப்புக்​குரல் எழுப்பாதது ஏன் கலைஞரே? பதவி நாற்காலியைத் தக்க வைத்துக்கொள்ள சோனியா காந்தி என்னும் ‘சொக்கத் தங்கத்தின்’ கருணைப் பார்வைக்கு இவ்வளவு தூரம் முதுகு வளைந்திருக்க வேண்டுமா முத்தமிழறிஞரே!


கலைஞரே… கடந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் இரண்டு முறை மட்டும் புதுடெல்லிக்குப் புறப்பட்டீர்கள். பிரபாகரன் சடலம் என்று ஒரு சடலத்தை ஊடகங்கள் ஓயாமல் காட்டிக் கொண்டிருந்தபோது, உலகத் தமிழர்கள் செய்வதறியாது சோகம் கனக்க விழிநீர் வெள்ளமாய்ப் பெருக்கியபோது, தள்ளு வண்டி​யில் அமர்ந்தபடி சோனியாவிடம் உங்கள் மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும் அமைச்சர் பதவி கேட்டு அலைக்கழிந்தீர்கள். 

அதற்குப் பின்பு ஆயிரம் பிரச்னைகள் தமிழகத்தில் அரங்​கேறின. ராமேஸ்வரம் முதல் நாகப்பட்டினம் வரை அன்றாடம் மீனவர்கள் சிங்களரால் வேட்டையாடப் பட்டனர். இன்று வரை 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நீங்கள் கைநோக மன்​மோகன்சிங் அரசுக்குக் கடிதம் எழுதிக் கடமை​யாற்றினீர்கள்.

இப்போது இரண்டாவது முறை​யாக முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கும் போர்வையில் புதுடெல்லி சென்று ஆ.ராசாவைக் காக்கவும், காங்கிரஸ் கூட்டணி நிலைக்கவும் அரும்பாடு பட்டீர்கள். உங்கள் கொள்கைப் பிடிப்பு, நினைக்கும்போதே நெஞ்சமெல்லாம் சிலிர்க்கச் செய்கிறது கலைஞரே!


‘எந்தப் பதவியானாலும், எந்த மட்டத்திலா​னாலும் அதனைத் தேடிப்போய் நெருக்கடி கொடுத்துப் பெற முனையும்போதோ, அல்லது பெற்றுவிட்ட பிறகோ, உன்னைப் பற்றி உனக்கே ஒரு வெறுப்பு தோன்றும், உனக்குத் தோன்றுகிறதோ இல்லையோ, நாட்டுக்குத் தோன்றும்’ (கலைஞர் கடிதம் – தொகுதி 1) என்று உடன்பிறப்புக்கு எவ்வளவு தெளிவாக 9-11-68-ல் நீங்கள் கடிதம் தீட்டியிருக்கிறீர்கள்! 

அவ்வளவும் சத்திய வார்த்தைகள். இன்று உங்களைப் பற்றி நாட்டுக்கு அப்படித்தான் தோன்றி​விட்டது. ‘வாண்டையார், வடபாதி மங்​கலத்தார், நெடும்பலத்தார், குன்னியூரார், மூப்பனார், மன்றாடியார், பேட்டையார், பெரும்பண்ணையார், செட்டி நாட்டார், சிவகங்கை சீமையார்’ என்று அண்ணா அன்று மேடைதோறும் காங்கிரஸில் இருந்த பணக்காரர்களைப் பட்டியலிட்டார்;

சென்னையில் 1951 டிசம்பரில் நடை​பெற்ற தி.மு.க. முதல் மாநில மாநாட்​டில், ‘தமிழகத்தில் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.கழகம்தான்’ என்று பிரகடனம் செய்தார். நீங்களும் பல்வேறு தருணங்களில் ‘நானும் ஒரு கம்யூ​னிஸ்ட்’ என்று ‘நகைச்சுவை’ ததும்பப் பேசியிருக்கிறீர்கள். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குபேர​புரியின் வாரிசுகளாக விண்ணிலும் மண்ணிலும் வலம் வருகின்றனர். இந்த ரசவாத மாற்றம் எப்படி நிகழ்ந்தது கலைஞரே! 

நாற்பதாண்டுகளுக்கு முன்பு நடைபாதை மனிதர்களாக இருந்த உங்கள் அமைச்சர்களும், தானைத் தளகர்த்தர்களும் தமிழகத்து அம்பானி​களாய் உருமாறிய ரகசியத்தை உருக்​குலைந்து நிற்கும் எந்தமிழர் அனைவருக்கும் நீங்கள் சொல்லிக் கொடுத்து விட்டால் இலவசங்​களுக்கே இடமிருக்காது கலைஞரே!


ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா சிக்கிச் சிறைப்பட்டதும், சி.பி.ஐ. கரங்கள் கலைஞர் தொலைக்காட்சி வரை விரிந்ததும் உங்கள் அம்பறாத் தூணியில் தூங்கிக் கொண்டிருந்த ஆரிய – திராவிட அம்பெடுத்து வீசி விட்டீர்கள். காமராஜரின் வேட்பாளராக சஞ்சீவரெட்டியும், இந்திராவின் வேட்​பாளராக வி.வி.கிரியும் குடியரசுத் தலைவர் தேர்தலில் நின்றபோது நீங்கள் வி.வி.கிரியைத்தானே வெற்றி பெறச் செய்தீர்கள். 

இந்திராவும், கிரியும் உங்கள் வார்த்தையில் ஆரியர்; காமராஜரும், சஞ்சீவரெட்டியும் திராவிடர். அப்போது எங்கே போனது உங்கள் இனமான உணர்வு? ‘இராமன் இரு பேச்சாளன் இல்லை’ என்பான் வான்மீகி. இரு பேச்சு இல்லாமல் நீங்கள் இல்லை என்பதுதானே உண்மை கலைஞரே!


ஆறாவது முறை நீங்கள் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறீர்கள். நல்லது. ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன சாதித்​தீர்கள்? மாநில சுயாட்சி வாங்கிக் கொடுத்து விட்டீர்களா? தமிழை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கி விட்டீர்களா? உங்களால் ஊழல் வழக்குகளுக்குள்ளான கண்ணப்பன், செல்வ​கணபதி, இந்திரகுமாரி, ரகுபதி, முத்துசாமி போன்​றவர்களைக் கழகத்தில் சேர்க்காமல் அரசியல் ஆரோக்கியம் காத்தீர்களா?

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு மேலவையைக் கொண்டுவர நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் பத்தில் ஒரு பங்காவது தமிழை உயர் நீதிமன்ற மொழியாக்க முனைந்தீர்களா? நிர்வாக மொழியாகத் தமிழை நூறு விழுக்காடு நடைமுறைப்படுத்தி விட்டீர்களா? ‘உணவு, உடை, குடியிருப்பிடம் எனும் மூன்று அடிப்படைத் தேவைகளைக்கூட 17 ஆண்டு ஆட்சிக்குப் பிறகும் நிறைவேற்றிக் கொடுத்திட இயலாத காங்கிரஸ் ஏன் ஆட்சியில் நீடிக்க வேண்டும்?’ என்று கேட்டார் அண்ணா… அதையே உங்களிடம் நாங்கள் கேட்கிறோம். ஊழலற்ற ஆட்சிக்கும் உங்களுக்கும் என்றாவது தொடர்பிருந்ததுண்டா?


ஈழத் தமிழர் நலன் காக்கத் தவறிய நீங்கள் ஆட்சியில் நீடிப்பதால், உலகத் தமிழருக்கு என்ன நன்மை? தாயக மீனவர் மீது நடக்கும் தாக்குதலைத் தடுக்க முடியாததும் உண்மை தானே! வீதிக்கு வீதி மதுக்கடை திறந்து ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழை மக்களை மயக்கி வாங்கி, இலவச நாடகம் நடத்தி அதே மக்களிடம் பிச்சைக்கார மனோபாவத்தை வளர்க்கும் உங்க​ளுக்கு ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று லட்சக்கணக்கான மகளிர் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா?

நீங்களும், உங்கள் வாரிசுகளும், கழக உடன்பிறப்புகளும் அதிகாரத்தைத் தொடர்ந்து சுவைக்கவும், சொத்துகளை எல்லையின்றிக் குவிக்கவும், மணற் கொள்ளையிலிருந்து அரிசிக் கடத்தல் வரை அமோகமாக நடத்தவும் ‘திருமங்கலம் ஃபார்முலா’வை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். எந்தப் பணத்தை நம்புகிறீர்களோ அது தான் உங்கள் காலையும் வாரப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்!


இப்படிக்கு,
ஐந்தாவது முறையாவாது நல்லாட்சி தருவீர்கள் என்று நம்பி ஏமாந்த,
தமிழருவி மணியன்

தப்பு - கில்மா பட விமர்சனம் 18 கூட்டல்

http://whatslatest.com/blog/wp-content/gallery/sneha-aruvadai/sneha_saree2.jpg 
சீன் படம் பார்க்கறவங்களை எல்லாம் சிலர் கேவலமா நினைச்சிட்டு இருந்தாங்க..அவங்க எவ்வளவு பெரிய தியாகிங்க என்பதையும்,பல சிரமங்களை அவங்க சந்திச்ச பின்னால தான் முக்தி நிலை(!1) அடையறாங்க என்பதையும் இப்போ எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்றேன்.இதுக்குப்பிறகாவது சமூகத்துல அவங்களுக்கு ஒரு மரியாதை கிடைக்கனும்.. ஹி ஹி

ஈரோடு அன்னபூரணி தியேட்டர்ல இந்தப்பட போஸ்டரைப்பார்த்ததுமே ஓக்கே ,போயிடலாம்னு ஸ்கெட்ச் போட்டுட்டேன்..(ஆமா ,பெரிய தாதா).சாதா படம் பார்க்கறதுன்னா பக்கத்து வீட்டு பரிமளாவுல  இருந்து( வயசு 16 ,டென்த்) அடுத்த தெரு அமலா (வயசு 18, பிளஸ் டூ)வரை விளம்பரம் பண்ணீட்டுதான் போவோம்.ஆனா இந்த மாதிரி படத்துக்கு நண்பன் கிட்டே கூட சொல்ல முடியறதில்லை.(சாரி, சதீஷ்)தியேட்டர்ல பைக் பாஸ் போடற ஆள் முதல் டிக்கெட் கிழிக்கற ஆள் வரை நம்மளையே குறு குறுன்னு பார்க்கறாங்களோன்னு  ஒரு குற்ற உணர்வோட தான் படம் பார்க்க வேண்டி வருது....

ஒவ்வொரு முறை சீன் படம் பார்க்கப்போறப்பவும்,படத்துல சீன் இல்லைன்னா இனிமே இந்த மாதிரி படத்துக்கே போகக்கூடாதுன்னு மனசுல சங்கல்பம் எடுப்போம்.ஆனா அது பிரசவ வைராக்கியம் மாதிரிதான்.அடுத்த பட போஸ்டரைப்பார்த்ததும் கால் தானா தியேட்டர் பக்கம் போகும்.இது எந்த மாதிரின்னா ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும் இந்த முறையாவது தமிழனுக்கு விடிவுகாலம் வராதா?ன்னு ஓட்டை(vote) மாத்தி போடுவோம்.ஆனா தொடர்ந்து தி மு கவும், அதிமுகவும் ஜெயிக்குதே ஒழிய தமிழன் தோத்துட்டுதானே இருக்கான்?அது மாதிரி..(இனிமே யாராவது என் சினிமா விமர்சனத்துல கருத்தே இல்லைன்னு சொல்வீங்க.?)
http://whatslatest.com/blog/wp-content/gallery/comedy2010awards/cfa_7.jpg
டைரக்‌ஷன் அகிலன்னு டைட்டில்ல போட்டதும் அதிர்ந்து போயிட்டேன்.சித்திரப்பாவை,பாவை விளக்கு போன்ற காலத்தால் அழிக்க முடியாத நாவல்களைப்படைச்சவராச்சே..அப்புறம்தான் தெரிஞ்சுது அவர் வேற இவர் வேறன்னு.

இது ஒரு முக்”கேன” காதல் கதை.

கொடைக்கானல்க்கு ஒரு மேரேஜ் ஆன தம்பதி ( மேரேஜ் ஆனாத்தான் அது தம்பதி..?)ஹனிமூனுக்காக வர்றாங்க..வர்ற வழில ஒரு ஆள் மயங்குன நிலைல ரோட்டோரமா கிடக்கான்.ஹீரோ ( இவன் படு கேவலமா இருக்கான்)அந்த ஆளை காப்பாத்தி கார்ல போட்டு எடுத்துட்டு போறான்.இந்த தாடிக்காரன்தான் வில்லன்.

3 பேரும் எஸ்டேட் பங்களாவுக்கு போனா அங்கே ஒரு ஓமனாக்குட்டி வேலைக்காரியா இருக்கு.( அதென்ன இந்த மாதிரி படத்துல வேலைக்காரிங்க எல்லாம் கேரளாப்பார்ட்டியாவே இருக்கு?#டவுட்டு).டைட்டில் போட்டப்ப மலேசியா ஷகிலா தாரிணின்னு போட்டாங்களே அந்த பார்ட்டிதானா?இதுன்னு முகத்தை பார்த்தேன். ஸ்  அப்பா.. 3 நாளுக்கு சாப்பாடு இறங்காது..ரொம்ப ஒர்ஸ்ட்.இயக்குநருக்கு என்ன டேஸ்ட்டோ?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLpWehGynAAokTOvPTqywMX5ZksAckq9hGG9t2_otl-O21Cnh9klqW1M-zmyz_5IjT2YOk6NMTJUY6WjRL8ZyY2KlHNf1Mwy9Y61SjlvewqdtVH8KQBhGZkivQh9ht32qcb586ca7DSJY/s1600/thappu+tail+movie+stills03.jpg
தம்பதிகள் 2 பேரும் டாக்டர்ஸ்.(அப்படின்னு அவங்களா சொல்லிக்கறங்க.. ஒரு சீன்ல கூட அப்படி தெரியவே இலை)ஹீரோவுக்கு ஒரு லவ்வர்.அவளோட ஆசைப்படி மனைவியை கொலை பண்ணத்தான் இங்கே கூட்டி வந்திருக்கார்.ஹீரோ டைரக்டா கொலை பண்ண பயந்துட்டு ஒரு ஆளை செட் பண்ணி கூட்டிட்டு போறார். அந்த ஆள் தான் ரோட்டோரமா கிடந்தானே தாடிக்காரன்.. அவன். அவன் வந்த வேலையை விட்டுட்டு ஹீரோயின் அழகுல மயங்கி( !!!) அவ பாத்ரூம்ல குளிக்கறப்ப (டர்க்கி டவல் கட்டிட்டுதான்) செல் ஃபோன்ல படம் பிடிக்கிறான்.

அப்படி எடுத்த படத்தை அவ கிட்டேயே காட்டி மிரட்டறான்.நீ எனக்கு வேணும்.இல்லைன்னா இதை நெட்ல விட்டுடுவேன்கறான்.அப்பத்தான் கதைல ஒரு ட்விஸ்ட்.ஹீரோயின் சொல்றா.. என் புருஷனை போட்டுத்தள்ளிடு நான் உனக்குத்தான்கறா... (பத்தினி தெய்வம் பங்கஜம் வாழ்க)
http://tamil.chennaivision.com/wp-content/uploads/2011/02/thappu.jpg
திரைக்கதைல திருப்பம் வேணுமே.. இப்போ புருஷனும்,ஹீரோவும்,டாக்டரும் ஆன அந்த கேவலமான ஜந்து ( செம மொக்க ஆள்) ,அநேகமா அந்தாளு தான் புரொடியூசரா இருக்கனும்,அவனுக்கு ஒரு லவ்வர் இருக்கா அப்படின்னு சொன்னேனே அவளுக்கு ஒரு காதலன்.. இருங்க தலையை சுத்துது,... தண்ணி குடிச்சுக்கறேன்.

பய புள்ளைங்க, இவங்க பாட்டுக்கு ஈசியா படத்தை எடுத்துட்டாங்க,படத்தோட கதை யை விளக்கறதுக்குள்ள அம்மா ஆட்சியே வந்துடும் போல இருக்கே,..?

அவங்க 2 பேரும் (எவங்க 2 பேரும்?) அஜால் குஜாலா இருக்கறப்ப (பெட்ஷீட் ஃபுல்லா மூடி இருக்குப்பா#ஏமாற்றம்) ஹீரோ எண்ட்ரி ஆகிடறாரு. நானும் பல வருஷமா பார்க்கறேன்.இந்த மாதிரி படத்துல ஹீரோவே இருக்கக்கூடாது.கரெக்ட்டான டைம்ல வந்து காரியத்தை கெடுத்துடுவாங்க..

அவங்க 2 பேருக்கும் சண்டை.. அவன் காதலியை பிரிஞ்சு ரிட்டர்ன் மனைவி கிட்டேயே வர்றான். அவன் ஏற்பாடு பண்ண ஆளே அவனை போட்டுத்தள்ளிடறான்.ஹீரோயின் வில்லனுக்கு விஷத்தை வெச்சு குடுத்து கொன்னுடறா  . சுபம் (டைட்டில் கார்டுல தான் சுபம்.ஆடியன்ஸ்க்கு கபம்.
http://www.cinemaexpress.com/Images/article/2010/5/2/meera.jpg
இயக்குநருக்கு சில கேள்விகள்

1. இந்தப்படத்துல 3 பெண்கள் இருக்காங்க, ஒண்ணாவது கண்ல பார்க்கற மாதிரி இருக்கா?

2.எந்த ஊர்ல வேலைக்காரப்பெண் லிப்ஸ்டிக் போட்டுட்டு 3 கிலோ ரோஸ் பவுடர் போட்டிருக்கு?ஹீரோயினுக்கே அரை கிலோ பவுடர்தானே..?

3. எந்த வீட்லயாவது அல்லது பங்களாவுலயாவது பாத்ரூம் ஜன்னல் 10 க்கு 10 சைஸ்ல கதவை விட பெரிசா இருக்கா?( தெரிஞ்சா யூஸ் ஆகுமேன்னு கேட்கறேன்)

4. ஹீரோயின் படம் பூரா ஒண்ணா குளிக்கறா அல்லது ஜிம் ல நீச்சல் டிரஸ் போட்டுட்டு எக்சசைஸ் பண்றா.. அது ஏன்?

5. இந்த 3 பெண்களுக்கும் அடிக்கடி க்ளோசப் சீன் எடுக்கறப்ப ஒளிப்பதிவாளர்க்கு வாமிட் வந்திருக்குமே.. எப்படி சமாளிச்சீங்க?

6. பட்டையைக்கிளப்புறியே,பந்திக்கு முந்திக்கறியே பாட்டுக்கு அவார்டு கிடைக்குமா?( ஆஹா, என்னே இலக்கிய நயம் செறிந்த வரிகள்?)

7. தீப்பிடிச்ச காடுன்னு ஒரு டூயட் பாட்டு எடுத்தீங்களே.. அதுக்கு டான்ஸ் மாஸ்டரே இல்லாம எப்படி சமாளிச்சீங்க..?

இந்தப்படம் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடங்கள்

1. யாராவது மனைவியை கொலை பண்ற ஐடியா இருந்தா நீங்களே கொன்னுடுங்க.. ஆள் வைக்காதீங்க...

2. இதே அட்வைஸ் தான் மனைவிகளுக்கும். யாராவது கணவனை கைமா பண்றதுன்னா அவன் சாப்பாட்ல விஷம் வெச்சுக்குடுத்துடுங்க. மேட்டர் ஓவர்.

3.கள்ளக்காதலி வீட்டுக்கு போறப்ப காலிங்க் பெல் அடிச்சுட்டு போங்க.. நீங்க பாட்டுக்கு திடு திப்புன்னு போனா பாப்பா என்ன பண்ணும்? அவளோட கள்ளக்காதலனை சேஃப்டியா வழி அனுப்பவேணாமா?

4. பெட்ரூம்ல அஜால் குஜால் மேட்டர் பண்றவங்க தயவு செஞ்சு பெட்ரூம் கதவை தாழ் போட்டுக்குங்க, அட்லீஸ்ட் வாசல் கதவை யாவது சாத்துங்க..

5. பாத்ரூம்ல குளிக்கற லேடீஸ் பாத்ரூம் ஜன்னல் கதவை எல்லாம் சாத்தீட்டு குளிங்க.

6. கடைசி நீதி என்னான்னா ஏ என போஸ்டர்ல இருந்தா அந்த படத்துகே போகாதீங்க.. ஏன்னா இப்பவெல்லாம் யு படத்துல இருக்கற சீன் கூட ஏ படத்துல இருக்கறதில்லை.

டிஸ்கி 1 - படத்துல இருக்கற ஸ்டில்ஸ் போட்டா என்னை எல்லாரும் சேர்ந்து உதைப்பீங்க என்பதால் சினெகா மற்றும் அழகான சில ஸ்டில்கள்.டாப்லெஸ்சா  ஹீரோ இருக்காரே சாரி அவர்தான் வில்லன் அந்த இரு ஸ்டில் மட்டும் பட ஸ்டில்.

டிஸ்கி 2 - டாப்லெஸ் வில்லன் பாருங்க தலைமுடிக்கு ரப்பர் பேண்ட் போட்டு அடக்கமா தலையை சீவி இருக்காரு. ஹீரோயின் ( மற்ற ஹீரோயின்கள் மன்னிக்க) பாருங்க தலை விரி கோலமா இருக்காங்க.. ஹூம்..

டிஸ்கி 3 - இந்த அற்புதமான ,அபூர்வமான படத்துக்கு முதல்ல திருட்டு சிறுக்கின்னு டைட்டில் வெச்சாங்களாம். சென்சார்ல விடலையாம்.(படத்தையே விட்டிருக்கக்கூடாது.)