Wednesday, February 02, 2011

2011 எலக்‌ஷன் ஜோக்ஸ்

http://www.thenee.com/assets/images/kushpu.jpg 
1.தலைவரே.. எப்படி வெட்கமே இல்லாம மறுபடி அதே கட்சி கூட கூட்டணி வெச்சுக்கிட்டீங்க?

மான அவமானம் பார்த்தா அரசியல்ல குப்பை கொட்ட முடியுமா?

------------------------------------------------------

2.இன்ஸ்பெக்டர்.. நிறைய பேர் டெயிலி என்னை ஃபாலோ பண்றாங்க..


விளையாடாதீங்க மேடம்.. ட்விட்டர்லயும்,ஃபேஸ்புக்லயும் அக்கவுண்ட் வெச்சா ஃபாலோ பண்ணத்தான் செய்வாங்க...

---------------------------------------------------

3.தலைவர் தொழில்ல ரொம்ப சுத்தம்னு எப்படி சொல்றே,,?

ஊழல் பண்றப்ப,. மக்கள் பணத்தை கொள்ளை  அடிக்கறப்ப  கைல கிளவுஸ் போட்டுக்குவாரு..

-----------------------------------------

4. உன் மனைவிக்கு தாடி வளர்ந்திருக்கே..?

பொண்ணு  பார்க்கப்போனப்பவே பொண்ணு பரம சாதுன்னு சொன்னாங்க... இப்ப தான் அர்த்தம் தெரியுது...

----------------------------------------

5.பேச்சு வார்த்தை நடக்குதுன்னு தலைவர் சொல்றாரே,,,?

அதாவது பேரம் நடந்திட்டிருக்குன்னு அர்த்தம்.

------------------------------------------------------
http://3.bp.blogspot.com/_f4APu1ZJrOY/SzM8iOShRQI/AAAAAAAAALM/dGZEG08_t4Q/s400/i+news+roja22.jpeg
6.தலைவரே.. தனியாத்தான் போட்டி இடுவேன்ன்னு சொன்ன நீங்க திடீர்னு இப்படி அந்தர் அல்டி அடிப்பீங்கன்னு எதிர்பார்க்கலை.

ஆக்‌ஷன் ஹீரோன்னா  அப்படி டூப் போடாம பல்டி அடிச்சுதான் ஆகனும்.

------------------------------------------

7.எடிட்டர் சார்.. வயசான நடிகையின் பேட்டின்னு உங்க பத்திரிக்கைல போட்டு என்னை அவமானப்படுத்தீட்டீங்களே..

ஹி ஹி சின்ன மிஸ்டேக் நடந்துடுச்சு  மேடம்.. 18 வய்சான நடிகையின் பேட்டின்னு வந்திருக்கனும்... 18 +  போட்டாலே பிரச்சனை வந்துடுதுன்னு அதை மட்டும் கட் பண்ணிட்டோம்.

-----------------------
8. வேலை வெட்டி இல்லாத பையனுக்கு உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி வெச்சுட்டீங்களே..?

அதனால என்ன? மேரேஜ்க்குப்பிறகு என் பொண்ணுக்கு  சமையல் செஞ்சு போடறது, அவ துணி மணியை துவைச்சு போடறதுன்னு மாப்ளை பிஸி ஆகிடுவாரு..


--------------------------------------

9.ஏய் மிஸ்டர்.. எனக்கு இந்த காதல் கத்திரிக்காய்னாலே பிடிக்காது..


மிஸ்.. பி டி கத்திரிக்காய்தான் எனக்கு தெரியும்.. அதென்ன காதல் கத்திரிக்கா..?


----------------------------------------

10.டாக்டர்.. நீங்க சொன்ன டூத் பேஸ்ட் தான் வாங்குனேன்.. ஆனா வாய் துர்நாற்றம் சரி ஆகல..

அட நாயே.. டூத் பேஸ்ட் வாங்குனே ஓக்கே.. பல் துலக்குனியா?

டிஸ்கி - அரசியல் ஜோக்ஸ்ல எதுக்கு சினிமா நடிகைங்க ஸ்டில்ஸ்..? சினிமால பாலிடிக்ஸ் புகுந்திருக்கற மாதிரி இப்போ அரசியல்ல சினிமா புகுந்திருக்கு..அரசியல் பிரச்சார கூட்டங்களுக்கு ஒரு கிளாமருக்காக நடிகைகளை மேடை ஏத்தப்போறாங்க.. ஆனானப்பட்ட அவங்களே அப்படி செய்யும்போது ஆஃப்டர் ஆல் நான் அவஙக ஸ்டில்லை போடக்கூடாதா?              ( எதுக்கு நடிகைங்க ஸ்டில் போடனும்..? எதுக்கு 7 லைனல் இப்படி ஒரு தன்னிலை விளக்கம் அளிக்கனும்?)

சொதப்பல் vs கலக்கல்


சண்டே அன்னைக்கு கலைஞர் டி வி ல தம்பி அர்ஜூனா அப்ப்டின்னு ஒரு டப்பா படம் போட்டாங்க.. தியேட்டர்ல பாக்க முடியாம போச்சே..சரி டி வி லயாவது பாக்கலாம்னு உக்காந்தேன்..(தியேட்டர்ல ஏன் இந்தப்படத்தை பாக்க முடியலைன்னா வெள்ளிக்கிழமை காலைல 11 மணிக்கு படத்தோட காலைக்காட்சி போட்டாங்க... அன்னைக்கு நைட்டே படத்தை எடுத்துட்டு நைட் ஜங்க்கிள் பயங்கரம்னு ஒரு மலையாளப்படம் போட்டாங்க..(நைட்ல அப்படி என்ன பயங்கரமோ..?)

நீ சந்திக்கற ஒவ்வொரு மனிதனிடமும் ஏதாவது ஒரு நல்ல குணம் இருக்கும்.. அதை நீ ஃபாலோ பண்ணுன்னு பெரியவங்க சொல்ற மாதிரி.. நான் ஒண்ணு கண்டு பிடிச்ச்சிருக்கேன்.. நீ பாக்கும் மொக்கைப்படத்துல கூட பதிவைத்தேத்த ஒரு மேட்டர் சிக்கும்.. விட்ராதே,,

அந்த மாதிரி அந்த மொக்கைப்படத்துல கூட சில இடங்கள்ல வசனம் நல்லாருந்தது..அப்புறம் இன்னொன்னு கண்டு பிடிச்சேன்.. அந்தப்படம் நம்ம தல அஜித் நடிச்ச தீனா படத்தோட உல்டா...
சொதப்பல் படத்தில் பார்த்த கலக்கல் வசனங்கள்

1.வாழ்க்கைல சுவராஸ்யமான சம்பவங்கள் ஒவ்வொருத்தர் லைஃப்லயும் எப்பவாவது  நடந்தே தீரும்.  ( கண்டு பிடிச்சுட்டாரய்யா துர..)

2.காமெடியன் ஹீரோவைப்பார்த்து.. - யாரிவன்..?என்னை விட கிளாமரா இருக்கானே..?

3. ஹீரோவின் அண்ணனின் பஞ்ச் டயலாக் - ரவுடி, தாதாங்கறவன் கும்பலா வந்து மோதறவன் இல்லடா..தனியா வந்து மோதறவன்..( நம்ம கேப்டன் மாதிரி)

4. யூசுவலா லவ்வுல இருக்கறவங்களுக்குத்தான் பிளாங்க் கால்ஸ் வரும்.. ( அட லூசுங்களா.. செல் ஃபோன் வெச்சிருக்கற எல்லாருக்குமே பிளாங்க் கால்ஸ் வரும்..)

5. ஐ ஜி உன்னைக்கூப்பிட்டு வெச்சு மிரட்னாராமே...

ஆமா அவர் கிட்டே சொல்லி வை... ( ஏன் இவர் சொல்ல மாட்டாரா?)
அவரு 3 வருஷ்மா தான் ஐ ஜி யா இருக்கார்.. நான் 13 வருஷமா  ரவுடியா இருக்கேன்.. ( நாயே நாயே.. ரவுடியா இருக்கறதுல என்ன சர்வீஸ் கணக்கு வேண்டி கிடக்கு)


6. சாதாரணமா தூங்கறவன் 10 டூ 11க்குள்ள நைட்ல தூங்கிடுவான்.தண்ணி அடிச்சுட்டு தூங்கறவன் நைட் 1 மணிக்குத்தான் தூங்குவான்.  ( ஓஹோ.. வால்பையன்,ராம்சாமி, தினேஷ்னு யாராவது அனுபவம் மிக்கவங்க சொல்லுங்க.. டீட்டெயிலை..)

7.ஹீரோ - என்னைப்பார்த்து நாய்னு சொல்லீட்டியே...( குரங்குன்னு சொல்லி இருக்கனும்)

ஹீரோயின் - நாய்ன்னா ஸ்மார்ட்னு அர்த்தம்.. ( யாராவது இதைப்படிச்சுட்டு கமெண்ட்ல பதிவு நாய்னு போட்டுடாதீங்க..)

ஹீரோ - உலகத்துலயே நாயை ஸ்மார்ட்னு சொன்னது நீ ஒருத்திதான்.. ( உலகத்துலயே நாய்னு சொன்ன பிறகும் அந்த பொண்ணு பின்னால சுத்தறது நீ தான் )

8. ஒருத்தனுக்கு அம்மா, அப்பா இல்லாம இருக்கலாம்.. ஃபிரண்டு இல்லாம கூட இருக்கலாம்.ஆனா காதல் இல்லாத ஆளே கிடையாது.. ( ஏன் நான் இல்ல.?)  ( டைரக்டர் இந்த இடத்துல ஒரு மிஸ்டேக் பண்ணீட்டார். விக்ரமன் படத்துல வர்ற மாதிரி லா லா ல ல அப்படின்னு ஒரு தீம் மியூசிக் போட்டிருக்கனும்..ஜஸ்ட் மிஸ்.. ( ஆமா அந்த மியூசிக்கைப்போட்டிருந்தா மட்டும் படம் 100 நாள் ஓடிடவா போகுது..?)

Tuesday, February 01, 2011

சினி ஃபீல்டில் எண்ட்ரி ஆன கவிதைக்காதலன் - வாழ்த்தலாம் வாங்க

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=8c5ee07e1b&view=att&th=12de184f2412fab2&attid=0.1&disp=inline&realattid=f_gjmv4m9i0&zw
ஒரு படைப்பாளிக்கு பெரிய சந்தோஷமே தான் மக்களால் அங்கீகரிக்கப்படுகிறோம் என்ற உணர்வுதான்.ஒவ்வொருவரும் எழுதுவதும்,படைப்பதும் இந்த அங்கீகாரத்துக்குத்தான். அதனால் கிடைக்கும் வருமானம் தனி சந்தோஷம் என்றாலும் இந்த அங்கீகாரம்தான் சிறந்தது என்பேன்.

நான் முதன் முதலாக பிளாக் உலகில் வரும்போது கவனித்த இருவர் கேபிள் சங்கரும், கவிதைக்காதலரும்.பதிவுலகின் ரஜினி என போற்றப்படும் சங்கர் சினி ஃபீல்டில் ஆல்ரெடி எண்ட்டர் ஆகி விட்டார்.நம்ம கவிதைக்காதலன் தபு சங்கருக்கு இணையான கவிதைத்திறம் மிக்கவர். அவரது கவிதைகளில் காதல் ரசம் சொட்டும்.

நான் அவர் பிளாக்கில் கமெண்ட் போடும்போதே நீங்கள் சினி ஃபீல்டில் நுழையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கமெண்ட் போட்டேன்.அது உண்மையாகி விட்டது. கந்தகோட்டை என்ற படத்தை எடுத்த எஸ் சக்திவேல் என்ற இயக்குநர் எடுக்கும் உயிரைத்தொலைத்தேன் படத்தில் 2 பாடல் எழுதுகிறார். அதை விட பெரிய விஷயம் டைட்டிலில் ,போஸ்டரில் அவர் பெயர் வருகிறது. ( மணிகண்டவேல்)

இதில் என்ன பெருமை என கேட்பவர்களுக்கு. சினி ஃபீல்டில் அவ்வளவு சீக்கிரம் டைட்டிலில் பெயர் போட விட மாட்டார்கள்.முதல் படத்திலேயே அவர் பெற்ற இந்த வாய்ப்பும் ,பெருமையும் நம்மை பெருமை கொள்ள வைக்கிறது.

நேற்றே இறந்து விட்டேன்  என்ற கவிதையை பார்த்து இயக்குநர் இந்த வாய்ப்பு கொடுத்தாராம்.பலர் ஸ்டூடியோ ஸ்டூடியோவாக அலைந்து வாய்ப்பு கேட்டும் கிடைக்காத வாய்ப்பு பதிவு போட்டே இவருக்கு கிடைத்தது ஒரு பதிவர் என்ற முறையில் நம்மை எல்லாம் பெருமை கொள்ள வைக்கிறது.

ஒரு திறமைசாலி அடையாளம் காணப்பட்டால் அது நமக்கு பெருமை. அதே திறமைசாலி நம் நண்பன் என்றால் அந்த பெருமிதம் இரட்டிப்பு ஆகிறது.நமக்கு பதிவு போட மேலும் ஊக்குவிப்பாக இவரது முன்னேற்றம் அமைகிறது.

எனவே இவரது வெற்றியை நமது வெற்றியாக கொண்டாடுவோம்.வாழ்த்துவோம். அவரது ஃபோன் நெம்பர் 9043194811,வயது 24, இன்னும் மணமாகாதவர்.. எனக்கு அண்ணன் மாதிரி..ஹி ஹி

அவரது மெயில் ஐ டி [email protected]

வாழ்த்துங்கள்..


நாளைய இயக்குநர் - 30 01 2011 - விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjJEVcMAaOphjPQVkyW_PlaQb7ug3S3LQwP55dUCrBbzkxnKwbuqrSYCZsXm7OtQlvHAOs2ZU0rMDN9EoOkcy1jQqLy7XZRa7FPzniuPRzbJhf7cr0xK-Q33Vg49DRT_4MvmURTkABLz4/s320/kalaingar-Tv-Naalaya-Iyakkunar_tamilkey-250x130.jpg 
முதல் படமா பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதுன சிறுகதையை குறும்படமா எடுத்த சத்ய சந்தரனோட சொல்ல மாட்டேன் படம் போட்டாங்க. அவர் அமரர் சுஜாதாவோட ரசிகர் போல . வசனங்கள் எல்லாம் ரொம்பவே ஷார்ப்.ஒருபேஷண்ட் டாக்டர்ட்ட வர்றான். சார்.. நான் எது சொன்னாலும் நெகடிவ்வா செய்யற கேரக்டர்ங்கறான். சரி உங்க பிரச்ச்னை என்ன?ன்னு கேட்டா சொல்ல மாட்டேன் அப்ப்டிங்கறான்.. சரி சொல்லாதீங்கன்னதும் சரி டாக்டர்.. சொல்றேங்கறான்.. இப்படி காமெடியா போற கதைல டாக்டரோட லோடு செய்யப்பட்ட ரிவால்வரை பேஷண்ட் கைல எடுக்கறான்.. டாக்டர் பதட்டத்துல அவன் கேரக்டர் ஞாபகம் இல்லாம டேய்.. கன் லோடு பண்ணீ இருக்கு சுட்டுடாதேங்கறார். டப்புன்னு சுட்றான்..

ஹீரோ நடிப்பு வசனம் 2-ம் ஓக்கே.. சுமார் டைரக்‌ஷன்.

2.  சா அறிவழகன் எழுதுன கதை ..டைட்டில் மரண அடி.பிரமாதமான டைரக்‌ஷன்.கதையோட KNOT  என்னன்னா சுடுகாட்டு வெட்டியான் தன்னோட மகனை பரம்பரைத்தொழில் செய்ய பணிக்கறான்.. அவன் அதைக்கேக்காம வேலை வேலைனு அலையறான்.கடைசில அப்பா இறந்ததும் வேற வழி இல்லாம குலத்தொழிலை செய்யறான்..

இந்தக்கதைல 2 விஷயம் பாராட்டலாம். நம்ம அப்பா இருக்கறவரை நமக்கு அவரோட மதிப்பு தெரியறதில்லை.அவர் இறந்த பிறகுதான் அவரோட பெருமையை உணர்றோம். (எனக்கு அப்பா தவறிட்டார்)அதை ரொம்ப இயல்பா எடுத்திருக்காங்க.இன்னொன்னு குலத்தொழில் விஷயம்.நம்ம அப்பா பண்ணுன தொழிலை செய்ய நாம கூச்சப்படறோம்.. அப்புறம் முட்டி மோதி வேற வழி இல்லாதப்ப அதை ஏத்துக்கறோம்..

படத்துல கலக்கலான வசனங்கள்

1. எல்லாருமே பல்லக்குல ஏறி உட்கார்ந்துட்டா அப்புறம் பல்லக்கை சுமக்குறது யாரு?

2. அப்பா.. எதுக்கு உன் கதையை எல்லாம் என் கிட்டே சொல்றே..?

வேற யாரு என் பேச்சை கேக்கறா..?

3. ஒரு மனுஷன் 100 பேருக்கு நல்லது பண்ணீ இருந்தாலும் 4 பேருக்காவது கெட்டது பண்ணாமயா இருந்திருப்பான்..?அதை மனசுல வெச்சுக்கிட்டுத்தான் இந்த வெட்டியான் வேலையை செய்ய முடியும்..

4. வெட்டியான் பையன் வேலை கேட்டு நடையா நடக்கிறானே.. அவனுக்கு ஒரு வேலை போட்டுத்தர்றது?

அது சரி.. அப்புறம் வெட்டியான் வேலையை யார் செய்யறது?இவனுங்களை எல்லாம் மேலே வரவே விடக்கூடாது.

படத்துல ரெண்டே 2 கேரக்டர்.. அப்பா ,பையன்  2 பேர் நடிப்பும் அருமை. கேமராவும் கலக்கல். இந்தப்படத்துக்குத்தான் முதல் பரிசு குடுப்பாங்கன்னு நினைச்சேன்...ஆனா 2வது பரிசுதான் கிடைச்சது.

http://vannitube.com/wp-content/uploads//2010/09/208.jpg
3. அருள் வரதனோட சத்யம் படம் அகதா கிறிஸ்டி எழுதுன WHO IS THE WITNESS  நாவல்ல வர்ற ஒரு சம்பவத்தை அடிப்படையா வெச்சு எழுதப்பட்ட சிறுகதை.

ஒரு கேரளா கிராமம்.. சுடுகாடு.ஒரு ஆள் வெயிட் பண்றான். போலீஸ் ஆஃபீசர் வர்றார்.. யாரப்பா நீ?ன்னு விசாரிக்கறாரு.. 20 வருஷத்துக்கு முன்னே காலேஜ் படிக்கறப்ப பெரிய ஆள் ஆனதும் இந்த தேதில இன்ன நேரத்துல சந்திக்க்றதா பிளான்..அப்படின்னு சொல்ல சரின்னு அவர் கிளம்பி போறாரு. போலீஸ் கூட்டம் வந்து அவனை கைது பண்ணுது. அவன் போலீசால் தேடப்படற குற்றவாளி.. அந்த போலீஸ் ஆஃபீசர்தான் அவனோட நண்பன்.. இந்த ட்விஸ்ட் எதிர்பார்த்ததுதான் என்றாலும் சுவராஸ்யமாவே இருந்தது.. ஆனா 2 பேருக்கும் நடிப்பு சரியா வர்லே.. படத்துல பாரட்ட வேண்டிய அம்சம் கேமரா கோங்கள்.

4. ஆனந்த விகடன்ல கதாவிலாசம் எழுதி இலக்கிய உலகை ஒரு கலக்கு கலக்கின எஸ் ராம கிருஷ்ணன் எழுதுன கதையை வீட்டுக்கணக்குங்கற டைட்டிலோட படமாக்குன அருண் பிரசாத்துக்கு முதல் பரிசு.

கதை என்ன? அப்பா ஒரு உருப்படாத கவிஞன். சினிமாவுக்கு பாட்டு எழுதறேன்.. சான்ஸ் கிடைக்கும்னு கனவோட இருக்கற உதவாக்கரை. அவனோட மனைவி வேலைக்குபோய் சம்பாதிச்சு குடும்பததினை பாத்துக்கறா. (மனைவியோட முகம் ஒரு ஷாட்ல கூட காட்டாம விட்டது டைரக்‌ஷன் டச்..)அவனுக்கு ஒரு மக. அந்த சின்னப்பொண்ணை கடைக்கு அனுப்பி ஓ சி ல சிகரெட் வாங்குறது.. பக்கத்து வீட்ல அஞ்சு பத்து கடன் வாங்குறதுன்னு இருக்கான்.. ஒரு சமயம் ஹவுஸ் ஓனர் காலி பண்ண சொல்லிடறார். அவன் குடும்பத்தோட காலி பண்ணிட்டு போயிடறான்.காலி பண்ணுன வீட்ல அந்த  சின்னப்பொண்ணு அப்பா யார் கிட்டே எவ்வளவு கடன் வாங்கி இருக்கார்னு சுவர்ல எழுதி வெச்சிருக்கா.

கேக்க சாதாரணமா இருக்கற இந்தக்கதைல அந்த சின்னபொண்ணோட நடிப்பு பிரமாதமான தூணா படத்துக்கு கை குடுத்திருக்கு...வெல்டன்..
எங்கப்பா ஒரு நாள் பெரிய ஆளா வருவாரு..உங்க கடனை எல்லாம் அடப்பாரு என எல்லோரிடமும் சலிக்காமல் கூறும்  நடிப்பு கலக்கல்.

ஓ ! தமிழர்களே.. தமிழர்களே..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2rGaOIFumDTRnZLexOosDQL53Np2pm3HwPuFmoHhcbGaHMPKeOIrPj0UUcwFLSnnrggRylBQpym5CvUAn-ETk5DzInCEtWcQN6KnI8AptIEKKXHMx2dKDsNCtdAtg_7sh7eIuqzGqrWTG/s1600/000.jpg
1. தலைவர் திடீர்னு தன்னோட சம்சாரத்தை டைவர்ஸ் பண்றாரே..?

யாருடனும் கூட்டணி கிடையாது ,நான் தனி அப்படின்னு சொன்னதை மெயிண்ட்டெயின் பண்றாரு..

------------------------------------------------------------------

2. டாக்டர்.. உங்க கிளினிக் நாய் என்னைக் கடிச்சிருச்சு...

விளையாடாதீங்க.. அது வாய் இல்லாத ஜீவன் ஆச்சே..

-------------------------------------------

3.இங்கிலீஷ் வாத்தியார் ஏன் அரண்டு போய் இருக்காரு..?

  A  .. E.. I ..O..U    இந்த 5 எழுத்துல ஒரு எழுத்து கூட தன் பேர்ல இல்லாத ஒரு ஃபிகர் பேருசொல்லுங்க பார்க்கலாம் அப்டின்னு பசங்க சவால் விட்டாங்களாம்.

------------------------------------
4. இந்த கடைல திருடுனவனோட நடத்தை சரி இல்லைன்னு எப்படி சொல்றீங்க?

பின்னே என்னங்க.. மெடிக்கல் ஷாப்ல காண்டம் பாக்கெட் திருடி இருக்கான்.

--------------------------------------------------------

5.தமிழர்களே.. தமிழர்களே.. நீங்கள் என்னை கடலில் தூக்கிபோட்டாலும்...

கொஞ்சம் பொறுங்க தலைவரே.. இன்னும் 4 மாசம் தான்.. அப்புறம் உங்களுக்கு கம்ப்ளீட் ரெஸ்ட்தான்..

------------------------------------------------------
6. கல்யாணத்துக்கு வந்த தலைவரு என்ன சொல்லி வாழ்த்துனாரு..?

 2 ஜி அலை வரிசையும் ,ஊழலும் போல் இணைந்து வாழுங்கள்னு வாழ்த்துனாரு.

-------------------------------------------------

7. தலைவரோட தத்துப்பிள்ளையாம் இவரு..

ஓஹோ.. அதுக்காக சுனில் தத்துன்னு பேர் வைக்கனுமா?

-----------------------------------------------

8. தலைவர் இதுக்கு முன்னால டி வி ல சமையல் குறிப்பு சொன்னவர் போல..

எப்படி சொல்றே..?

டாஸ்மாக் கிட்டே பேரணி போறப்ப.. இருங்க தேவையான அளவு மப்பு சேத்திட்டு வர்றேண்ட்டு போனாரே...?

------------------------------------------


9.உங்க பொண்ணை அழ விட மாட்டேன்னு மாப்ளை சொல்றாரே.. எப்படி?

அளவிட முடியாத சொத்து அவ பேர்ல இருக்குன்னு சொன்னோம்...

--------------------------------------------------

10.  பெட்ரோல் விலை ,வெங்காயம் விலை இவ்வளவு ஏறும்னு தெரிஞ்சிருந்தா.....

முதல்லயே ஸ்டாக் வாங்கி வெச்சிருப்பீங்களோ...

ம்ஹூம்..ஒரு ஓட்டுக்கு ரூ 2000னு வாங்குனதுக்குப்பதிலா ரூ 10000 வாங்கி இருப்பேன்..

ஹூம்.. எத்தனை  பெரியாருங்க வந்தாலும் தமிழனை திருத்தவே முடியாதப்பா

--------------------------------------------

டிஸ்கி -1.  மேலே உள்ள முதல் படத்தில் தோன்றுவது தூங்கா நகரம் படத்தில் அஞ்சலி (அங்காடித்தெரு).. 2 வது படத்தில் உள்ளது யுத்தம் செய் படத்தில் நீது சந்திரா.. படத்தில் இந்தப்படம் சென்சார் கட்.. எனவே ஒரு சமூக சேவையா இந்தப்படத்தை உங்களுக்கு வழங்கறேன்.. பிடிக்காதவங்க அந்த ஸ்டில் கிட்டே வரும்போது மட்டும் கண்ணை மூடிக்குங்க.. ஹி ஹி

டிஸ்கி 2 - நடிகைங்க பேட்டில எல்லாம் இந்தப்படத்துல என்னோட முழுத்திறமையையும் காட்டி நடிச்சிருக்கேன்னு பேட்டி குடுக்கும்,போது எனக்கு அர்த்தம் புரியல..இப்போ நீது சந்திரா ஸ்டில் பார்த்ததும் புரிஞ்சிடுச்சு.

டிஸ்கி 3 - முறைமாமன் கார்த்திக்கின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க 2 வது ஸ்டில் எடுக்கப்பட்டது.( கிட்டத்தட்ட மிரட்டுனாரு)..அதனால பாராட்டறவங்க என்னையும் , திட்டறவங்க கார்த்திக்கையும் திட்டவும் ஹி ஹி ..கிட்டத்தட்ட அட்ரா சக்க கூட சீன்படம் மாதிரி .. ரிலீஸ் அப்ப பார்த்தாதான் உண்டு.. லேட்டா போனா கட் ஆகிடும் சில.. ஹி ஹி

Monday, January 31, 2011

மீனவ நண்பன்


தலைவா...!

உங்களை கடலில் தூக்கிப்போட்டால்

கட்டுமரமாக மிதப்பீர்களாமே...

ஆனால் நாங்கள் கடலில்

பட்டுப்போன மரமாக

வீசப்படுகிறோம்.

எங்கள் இனங்கள் பிணங்களாய்

மிதக்கின்றன..

நீங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும்

சுருட்டிக்கொள்ளுங்கள்...

அது அரசியல்வாதிகளின் அடிப்படை உரிமை..

ஆனால்

எங்கள் உரிமைகளுக்கு ஒரு கோடியாவது காண்பியுங்கள்..

கூட்டணிக்கட்சித்தலைவர்களுக்கு

இதயத்தில் இடம் கொடுத்தது போதும்..

எங்கள் உயிர் உடலில் தங்க

ஒரு இடம் கொடுங்கள்..

ஓட்டுக்காக இலவசங்களை அள்ளி

வீசுகிறீர்கள்...

எங்கள் உயிர் எங்கள் வசம் தங்க

ஒரு ஏற்பாடு செய்யுங்கள்..

எம் ஜி ஆர் படத்தில் நடித்தே மீனவ நண்பன் ஆனார்...

நீங்கள் அரசியல் மேடையில் நடித்து

மீனவ எதிரி ஆகி விடாதீர்..

கடைசியாக ஒரு வார்த்தை...

இலங்கைத்தமிழர்களைத்தான் காக்க முடியவில்லை..

இங்கே இருக்கிற தமிழர்களையாவது.........

காதல் வானவில் - கவிதை


http://rammalar.files.wordpress.com/2010/12/rainbow1.jpg 
வரும் .......வரும் ...........என 

தோட்டத்துப்பாத்திகளெல்லாம் 

காத்திருக்க 

பாதை மாறிப்போனது ஏன் நதியே?

விதைப்பது வீண் என்று தெரிந்தும் 

பாலைவனத்தில் பதியம் ஏன் சகியே..?

http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-49/rain-cover.jpg
மொட்டு மலர தென்றல் தாலாட்டலாம்.

ஆனால் தென்றலைக்காண மொட்டு..?

மண்ணருகே நீர் இருந்தும் 

வானம் பார்க்கும் பூமியாய் நீ....


உன் அருகே நான் இருந்தும் 

நிலாவைப்பிடிக்க ஆசைப்படும்

சின்னக்குழந்தையாய் நீ...
http://ahshaja.files.wordpress.com/2010/07/love_water_beach_bg2.jpg
பூமிக்குப்பிடித்தது சூரியன் என்பது தெரிந்தும்

மழைச்சாரல் என்னும் கவிதை வழியாகவாவது

மண்ணைத்தொடத்துடிக்கும்

வானவிலாய் நான்.

டிஸ்கி -1 :  இந்தக்கவிதை தினமலர் வார மலர் இதழில் வெளியானது.மேலே உள்ள 5 ஃபிகர்களில் என் ஆள் எது?ன்னு யாரும் கேக்காதீங்க.. அதுல யாரும் என் ஆள் இல்ல..( என்ன ஒரு வருத்தம்?)

டிஸ்கி 2 - கலியுகம் தினேஷ்தான் முதல்ல பாஸ்னு என்னை கூப்பிட ஆரம்பிச்சார்..சரி போனாப்போகுது ஒருத்தர்தானேன்னு நானும் விட்டுட்டேன்,,இப்போ ஆளாளுக்கு தல.. பாஸ்.. அப்படின்னு கூப்பிடறாங்க.. சிலர் ஒரு படி மேலே போய் அண்ணேன்னு கூப்பிடறாங்க.. இதெல்லாம் ரொம்ப ஓவரு.. எனக்கே வயசாகிப்போன மாதிரி ஒரு ஃபீலிங்க் வந்திடுச்சு..அதனால இனி என்னை எல்லாரும்  டேய்  சிபி  , அடேய் செந்தில் இப்படி கூப்பிடுங்க.. ஏன்னா நான் எல்லாருக்கு தம்பி மாதிரி.. ஹி ஹி ஹி 

டிஸ்கி 3 - நேத்து நெட் பக்கம் வராதவங்களுக்காக....

 

2. வாடா போடா நண்பர்கள் - சினிமா விமர்சனம்

 

3. THE GREEN HORNET - காமெடி + ஆக்‌ஷன் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

 

4 உயிரினும் மேலான உடன் பிறப்பே.....

Sunday, January 30, 2011

உயிரினும் மேலான உடன் பிறப்பே.....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUzktyI7M1Whtu1AQmaY2gMH5XxWuhO_gyAg59cfBeqDwB-ch0cbRUXYnXl-H0kYK3KpJXqskG0ZdqMLbOyp6Qfj5ZvNoJYuBUEvCgBYmBZPXs1Y0D6C4cW5fgXVHj_oWQBFd_4OZ8TUMC/s1600/Tamanna-bhatia-actress3.jpg
1.ஆசிரியர் - வெள்ளையர் ஆட்சியை ஏன் எதிர்த்தோம்?

மாணவன் - எத்தனை நாளுக்குத்தான் வெளி ஆட்கள் நம்ம நாட்டை கொள்ளை அடிக்க அனுமதிப்பது?

-----------------------------------------------------

2. பி ஜே பி - காங்கிரஸ் என்ன வித்தியாசம்?

இவங்க கர சேவை செய்யத்துடிக்கறாங்க.. அவங்க கரப்ஷன் ( CORRUPTION) சேவை (ஊழல்) செஞ்சே நம்மளை துடிக்க வைக்கிறாங்க...


-------------------------------------------------------------

3.தலைவ்ரே.. மார்ச் மாசத்துக்குள்ள விலைவாசி குறையும்னு எப்படி சொல்றீங்க?

மாசத்தை சொன்னேன்... வருஷத்தை சொன்னேனா?


-----------------------------------------------

4.அந்த காலேஜ் ஸ்டூடண்ட்  அரசியல்வாதி பையன் தான்னு எப்படி சொல்றே?

க்ளாஸ்ரூம்ல எந்த ஃபிகர்ட்டயும் நான் கிஸ் கேக்கலை.. ஆனா அவங்களா குடுத்தா நான் வேணாம்னு சொல்லமாட்டேன் அப்படின்னானே..?


-------------------------------------------------


5.எந்த செல்ஃபோன் கம்ப்பெனிக்கு மாறுனாலும் இனி நம்ம செல்ஃபோன் நெம்பர் மாறாதாமே..?

இதென்ன பிரமாதம்?  எந்தக்கட்சி கூட கூட்டணியை மாத்திக்கிட்டாலும் நம்ம தலைவர் 25 சீட்தான் வேணும்னு அடமா மாறாம இருக்காரே..?

----------------------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgg_7n9ELn9_pc8M-1jzIcPj8KZqC0xo1f_dYYqeVBEdbmxLxPHXm95OLkIqhPi1-R8P3y1VYFJB64ySmBXCpN8agYST3ZLb8YayrWoRO_BE6XJ1fdB8zvoKYzS-CZynUWMwshrjsQ3GETt/s1600/Tapsee+photos+1.jpg
6.ரொம்ப நாள் கழிச்சு மேடை ஏறுன மகளிர் அணித்தலைவியை பார்த்து தலைவர் கொண்டாட்டம் ஆகிட்டார்.

இருக்கட்டும், அதுக்காக மேடையிலேயே  “ அடி யாத்தே யாத்தே” னு வேட்டியை முகத்துல மூடிக்கிட்டு பாட்டு பாடி ஆடனுமா?

-----------------------------------------------------

7. மிஸ். மோஹனா.. உங்களை நான் 10 வருஷமா லவ் பண்றேன்..

ரொம்பப்பழசான ,  வயசான லவ்வா இருக்கே..?

-----------------------------------------------------------

8.தலைவருக்கு சினிமா நாலெட்ஜூம் இல்ல.. ரவுடிகள் நடமாட்டம் பற்றிய நாலெட்ஜூம் இல்லன்னு எப்படி சொல்றே..?

ராக்கெட் ராஜாங்கறது  சயிண்ட்டிஸ்ட் ஆளா?ன்னு கேக்கறாரே..

-------------------------------------------------------

9.தலைவ்ரே.. நேர்மையான ஆட்சி நடத்துவீங்களா?ன்னு நிருபர் கேக்கறரு..

இன்னுமாய்யா இந்த உலகம் என்னை நம்புது...

------------------------------------------------------

10  அசிஸ்டெண்ட் டைரக்டர் - சார்... வீடு வாடகைக்கு வேணும்...

ஹவுஸ் ஓனர் - ஸாரி.. சினிமாக்காரனுக்கு வீடு தரமாட்டோம்.

அசிஸ்டெண்ட் டைரக்டர் - சினிமாக்காரரை நம்பி சி எம் சீட் தர்றீங்க.. நாட்டை தர்றீங்க.. சிம்ப்பிளா ஒரு வீட்டை வாடகைக்கு தர மாட்டேங்கறீங்களே...

--------------------------------------------

டிஸ்கி 1 -- வட போச்சே....


டிஸ்கி 2 - போன இடுகைல தாப்ஸி பற்றி போட்ட கமெண்ட்டுக்கும், தமனா பற்றி சொன்னதுக்கும் கடும் எதிர்ப்பு.. அதனால 2 பேர் ஃபோட்டோவும் போட்டுட்டேன்.. யாரை வேணாலும் ரசிச்சுக்குங்க..( காசா.. பணமா?). 2 பேருக்கும் உள்ள ஒற்றுமை என்னன்னா 2 பேரும் வெளில எங்காவது போறப்ப தலை சீவ மாட்டாங்க போல..அப்புறம் ரொம்ப ஓப்பன் டைப்.. ஹி ஹி

டிஸ்கி 3..- நேத்து நெட் பக்கம் வராதவங்களுக்காக....

1.

பதினாறு - டீன் ஏஜ் வில்லேஜ் லவ் - சினிமா விமர்சனம்

 

2.

வாடா போடா நண்பர்கள் - சினிமா விமர்சனம்

 

3.

THE GREEN HORNET - காமெடி + ஆக்‌ஷன் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்





Saturday, January 29, 2011

பதினாறு - டீன் ஏஜ் வில்லேஜ் லவ் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgte2Di1pC5KWzZwwigqHsE-S7x5OHzpgaborjJ-nCnY636gZT2RKnqbIUIO0OPu46q1F6Crk98tR77VJW_K6m-0zXXSP47h7zFz8x7EAAH9ax9wUH0M-n-WTHfRdENkYqfBTiGXblYREw/s320/pathinaru+Songs+Free+download+Cd+Covers.jpg

ஆனந்த விகடனில் தொடராக வந்த சொர்ணமுகி படத்தோட ஒன்லைன் தான்
கதை..(கே எஸ் அதியமான் டைரக்‌ஷனில் ஆர் பார்த்திபன் நடித்த படம்).அதாவது  காதலி ஒரு சிக்கலான கட்டத்தில் ஒரு கால அவகாசம் கொடுத்து காதலனை வரச்சொல்ல அவனால் வர முடியாமல் போவதால் ஏற்படும் குழப்பங்களும், பிரச்சனைகளும்தான் திரைக்கதை.

படத்தோட மெயின் கதையை விட சில சமயங்களில் கிளைக்கதை எனப்படும் ஃபிளாஷ்பேக் கதை ஆழமாகவும்,மனதைத்தைப்பது போலவும் அமைந்து விடுவது உண்டு.. அது படத்தின் மெயின் கதையை டாமினேட் பண்ணும்போது ஏற்படும் சிக்கல் இந்தப்படத்துக்கும் ஏற்படுகிறது.

அழகி படத்தில் வருவது போல் காட்டப்படும் அந்த கிராமத்துக்காதல் கதையில் வரும் ஹீரோயின் நல்ல நடிப்புத்திறமையும்,சட் சட் என மாறும் முக பாவமும் பிளஸ் என்றால் அவரது இளமை கூடுதல் போனஸ்.(இமேஜில் தேடிப்பார்த்தால் அவரது ஃபோட்டோ கூகுளில் கிடைக்கல)

டென்த் படிக்கும்  மாணவர்களின் காதல் கதை என்பதால் இது அடலசண்ட் லவ்வை உற்சாகபடுத்துவதுபோல் அல்லாமல் டீன் ஏஜ் காதல் செல்லாது ..ஆகாது என்பது போல் நீதி உணர்த்திய இயக்குநர் அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் திரைக்கதையில் ஜால வித்தை காட்ட தவறி விட்டார்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNMtvIvJaqQja9f9nYn3wLRZoQHaK9fnqTJIvG3-visMVTZDbGYV_oI4PQhf7w3mFYVOBwU4rvzJgAzRZBh-Z3rA0P98WQXGC3lUtTlwO4SqFVFawCpEQH5g8J3ycT5AwVNTabqwsxccQ/s1600/Madhu+Shalini+In++16+pathinaaru+movie+Stills+%25286%2529.jpg
மெயின் கதையின் ஹீரோயின் இவர்தான். பார்ட்டி படு சுமார்தான். ஆனால் இவரது அம்மாவாக வருபவர் செம கலர் + ஷைனிங்க். ( அது என்னமோ தெரியல..ஹீரோயின் தங்கையா வர்றவரோ, தோழியா வர்றவரோ நம்ம கண்ணுக்கு கலக்கலா தெரியறாங்க..( சரி டீன் ஏஜ்ல இதெல்லாம் சகஜம்..)


படத்தோட ஓப்பனிங்க் சீன்ல வர்ற டூயட்ல ஹீரோயின் பல கிஃப்ட்களை ஹீரோவுக்கு கொடுக்க ஹீரோ ஹீரோயினுக்கு ஒரே ஒரு சின்ன கிஃப்ட் பாக்ஸ் குடுக்க அதை ஓப்பன் பண்ணி பார்த்தால் அந்த நகைப்பெட்டி காலி,, செம நக்கலோடு டூயட் தொடர்கிறது..

காட்டு செடிக்கு காவல் கிடைச்சிடுச்சு என தொடங்கும் பாடல் ஃபிளாஷ்பேக்கில் வரும் காதலை அழகியலோடு அணுகும் அற்புத தொடக்கம்.இயக்குநர் கவிநயம் மிக்கவர் என்பதற்கு அந்த ஒரே ஒரு பாடலே போதும்.

அந்தப்பாட்டில் ஆசிரியர் மாணவிக்கு தண்டனையாக முட்டி போட வைப்பது பழசு என்றாலும் அவள் அரிசி பரப்பிய தரையில் முட்டி போடுவது புதிய கிராமக்கலாச்சாரப்பதிவு.

  https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAPVw2VkDjSv935tFOIxkqNEbuLEAOc_8Rj0yVEno3GvmPjynKesmXBfmKmSOnjyUZeZYORcqBVOLn3zzdXJE3aPRx4bS8YQfviQhyzUqnzHubycmuWZNAH5epDCMeaDQiAZaTzx4Ki9FU/s1600/16_tamil_movie_stills_photos_01.jpg அட
டென்த் படிக்கும் பெண்ணாக வருபவர் சிறுமியாக வரும் சீனிலும் சரி, வயதுக்கு வந்த பருவக்குமரியாக வரும்போதும் சரி அவர் காண்பிக்கும் பாடி லேங்குவேஜ் மாற்றம் அபாரம்.. (இப்போ இருக்கற முன்னணி ஹீரோயின்கள் கவனிக்க.)


களவாணி படத்தில் எல் சி 311 கூட்டு என்பதை மகேஷ் என மாற்றுவது மாதிரி இதிலும் 16 என்ற எண்ணை  I G  கற்பிதம் செய்வது அழகு..  ( ஐ - இளவரசி ஜி -கோபி

ஆனால் இடைவேளைக்குப்பிறகு தனது காதலில் நாயகி உறுதியாக இருப்பது போல் காட்ட நினைத்தவர் வீம்பு பிடித்த பெண்ணாக காட்டியது திரைக்கதை கோளாறா? கேரக்டர் வடிவமைப்பில் ஏற்பட்ட பிழையா?

பொதுவாக எல்லாரையும் நல்லவராக காட்ட நினைக்கும் இயக்குநரின் நல்லஎண்ணம் புரிகிறது. ஆனால் முறை மாமனை, நல்லவனாக காட்டியதால் அவர் மீது பரிதாபம் ஏற்பட்டு  இந்த காதல் ஜோடி சேர்ந்துதான் ஆக வேண்டுமா? என்ற எண்ணம் நமக்கு ஏற்படுவது படத்தின் வெற்றிக்கு மாபெரும் மைனஸ்.

படத்தின் வசனகர்த்தா பட்டையை கிளப்பிய இடங்கள்


1. அவசர அவசரமா வாழ்ந்துட்டு சீக்கிரமா சாகறதுக்காகத்தான் மனுஷன் படைக்கப்படுகிறானா?

2.  ஹீரோயின் - ஹலோ...

ஹீரோ - எஸ் .. கோடம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்...

ஹீரோயின் - விளையாடாதீங்க.. நான் தான்.

3. என் ஃபியூச்சரை டிசைடு பண்ண பேரண்ட்ஸா உங்களுக்கு எப்படி ரைட்ஸ் இருக்கோ அதே மாதிரி எனக்கும் ரைட்ஸ் இருக்கு.

4. டே.. மச்சான்.. இந்து காலேஜ்ல டி சி வாங்கிட்டு வீட்டுக்கு போயிட்டா..

இப்போ என்னடா பண்றது?

நீயும் டி சி வாங்கிட்டு போயிடு.. அதுதான் காதலுக்கு மரியாதை.


5. பீச்ல அலை வந்து மோதுதே அது மாதிரி தான் காதலும்..

டேய். அவன் இதுவரைக்கும் பீச்சுக்கே போனதில்லையா? இப்படி விளக்கறே.. ( நையாண்டி டூ டி ஆர்?)

6. அவங்க ரொம்ப நல்லவங்களா தெரியறாங்க...

எப்படி சொல்றே..?

கார் வெச்சிருக்காங்களே...?

7. அடப்பாவி.. இந்த ஆண்ட்டி யார்டா? எப்போ கரெக்ட் பண்ணுனே.?எங்க கிட்டே சொல்லவே இல்ல..?

டேய்.. கொல்லாதீங்கடா..இது என் ஆளோட அம்மாடா..

ஓ சாரி .. நிஜமான ஆண்ட்டியா?

8. எல்லாமே உன்னாலதான்னு நான் சொல்ற மாதிரி என் கிட்டே நிறைய விஷயங்கள் இருக்கு.. ஆனா என்னாலதான்னு நீ சொல்ற மாதிரி உன் கிட்டே எதுவுமே இல்லையா?


9. என்னை உனக்கு பிடிக்கலைன்னு தெரியும்.. இருந்தாலும் இப்படி என் பைக் பின்னால நீ உக்காந்து வர்றது மனசுக்கு சந்தோஷமா இருக்கு.

10. டேய், சொந்த மாமன் மகளை பைக்ல கூட்டிட்டு போறது பெரிய விஷயமாடா..இந்த அலட்டு அலட்டறியே..?நாங்க எல்லாம் சினிமாக்கே கூட்டிட்டு போயிருக்கோம்..

எது அந்த 5 வயசு பொண்ணைத்தானே...

11. என்னடா..ஃபோட்டோ எடுக்கறப்ப யூனிஃபார்ம் போட்டுட்டு வந்திருக்கே..?வேற டிரஸ் போட்டுட்டு வா  போ..

என் கிட்டே இருக்கறதே இந்த ஒரு டிரஸ்தான்,அதுவும் நீ எடுத்துக்குடுத்ததுதான்.

12. மாலைக்கும் ,கழுத்துக்கும்  என் கழுத்து நின்னுச்சுன்னா அது உனக்கு மட்டும்தான்.

13.  ஊரே கூடி தேர் இழுத்தாலும் தேர் போய் சேரும் இடம் கோயில்தான்..என் கோயில் என் ஆள் கோபிதான்.

14. காதல்ல தோத்துப்போன யாரோ ஒருத்தரோட கதையைப்படிச்சாஎங்க மனசு மாறிடுமா?

15. காதலிக்காத ஒரு ஆளைக்காட்டுங்க.. நான் காதலிக்கறதை விட்டுடறேன்னு சொல்றியே...அப்படிக்காதலிச்சு கல்யாணம் பண்ணுனவங்க சந்தோசமா இருக்கறதைக்காட்டு...பார்ப்போம்.. விரல் விட்டு எண்ணிடலாம்.

16. மரணம்கறது ஒரு சம்பவம்..ஆனா என்னைப்பொறுத்தவரை நம்ம நினைவுகள்ல இருந்து நம்ம மனசுக்கு பிடிச்சமானவங்க எப்போ போறாங்களோ (பிரியறாங்களோ) அதுதான் மரணம்.

17 நான் செத்துப்போயிட்டேன்னு நினைச்சு அவ இப்படி நடைப்பிணமா வாழ்ந்திட்டு இருக்கா. நான் உயிரோட இருக்கறது தெரிஞ்சா அவ செத்துப்பொயிடுவா..

தமிழ்ப்படம் படத்துல ஹீரோவா நடிச்ச ஷிவா இந்தப்படத்துல சீரியஸ் ஹீரோவா நடிக்க வேண்டிய கட்டாயம். ஆனா அவர் சும்மா கெஸ்ட்
ரோல் மாதிரிதான்.மதுஷாலினிதான் ஹீரோயின்.அவங்க நடிப்பும் சுமார்தான்.

கிளைக்கதையில் வரும் பாத்திரங்கள் அனைவரின் நடிப்பும் டாப்.ஆனால் என் வருத்தம் எல்லாம் ஒரு சூப்பர் ஹிட் ஆக வேண்டிய படத்தை இயக்குநர் கவனக்குறைவால் சாதாரண லவ் சப்ஜெக்ட் ஆக்கி விட்டார் என்பதுதான்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே

எத்தனை நாள் ஓடும்?  ஏ செண்ட்டர்களில் படம் ரிலீஸ் ஆன மாதிரியே தெரியல.. 25 நாள் ஓடலாம். காதலர்கள் பார்க்கலாம்.



THE GREEN HORNET - காமெடி + ஆக்‌ஷன் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://www.moresay.com/wp-content/uploads/2009/07/cameron-diaz-green-hornet-01.jpg
படத்தோட டைட்டில் போட்டதும் சப் டைட்டிலா “ நீதியைக்காக்க சட்டத்தையே புறந்தள்ளியவன் கதை”ன்னு போட்டதும் ஏதோ எஸ் ஏ சந்திரசேகர் டைரக்‌ஷன்ல நடிச்ச கேப்டன் படத்துக்குத்தான் வந்துட்டமா?ன்னு ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்..அப்புறம் படம் ஓட ஆரம்பிச்சதும்தான் அப்பாடான்னு ஒரு ஆசுவாசம்..( எவ்வளவு பழைய வார்த்தை?)

ஒரு பிரபல பத்திரிக்கையின் நிர்வாக இயக்குநர் மர்மமான முறையில் இறக்கிறார். அவரது வாரிசு  பகலில் எடிட்டராகவும் இரவில் அநியாயங்களை எதிர்க்கும் ராபின் ஹூட்டாகவும் டபுள் கேம் ஆடறார்.அவருக்கு உதவியா டெக்னிக்கல்ல கில்லாடியான அப்பாவோட பி ஏ இருக்கார்.இந்த சாதாரண கதையை முடிஞ்ச வரை காமெடியா ,ஜாலியா பொழுது போற மாதிரி சொல்லி இருக்காரு டைரக்டரு..

சேத் ரோகன் -ஜே சவ் 2 பேரும் இணைஞ்சு பண்ற காமெடி கூத்துக்கள் கலகல கலக்கல்.பொதுவா 2 ஹீரோ சப்ஜெக்ட்னாலே ஹாலிவுட்ல ஒரு பாணி வெச்சுக்கறாங்க..ஒரு ஆள் லொட லொடன்னு பேசிட்டே இருப்பாரு..இன்னொரு ஆள் ஆக்‌ஷன்ல அதகளம் பண்ணுவாரு. அதே ஃபார்முலா தான் இதுலயும்.

http://www.shockya.com/news/wp-content/uploads/the_green_hornet_seth_rogen.jpg
படத்துல ஹீரோவுக்கு பி ஏ வா வர்றவரு ஆரம்பத்துல எந்திரன் மாதிரி காஃபி போடற ஸ்டைல் சூப்பர்.அவர் ஜேம்ஸ்பாண்ட் சயிண்டிஸ்ட் கணக்கா பல பல நவீன சாதனங்களை கண்டு பிடிக்கறதும்,அதிரடி ஆக்‌ஷன்ல இறங்கறதும் காதுல பூ சுத்தற ரகம்னாலும் ரசிக்க வைக்குது.படம் முதல் ஒரு மணி நேரம் ஜாலியா போகுதுன்னா அதுக்கு காரணமே காமெடியா எழுதப்பட்ட வசனங்களும், அதுக்குத்தகுந்த சீன்களும்தான்.

கேமரூன் டயஸ் படத்தின் கதைக்கு தேவை இல்லாத கேரக்டர் என்றாலும் சும்மா கிளுகிளுப்புக்காகவும் ( சீன் எல்லாம் இல்ல) கிளாமருக்காகவும் வந்துட்டுப்போறாரு. எப்போ அவரு எனக்கு  36 வயசு ஆகுதுன்னு ஹீரோ கிட்டே சொல்றாரோ அப்பவே பார்வையாளனுக்கு கிக் போயிடுது.. ( பார்வையாளன்னு நான் சொன்னது என்னைத்தான் ஹி ஹி ஹி )

அந்த 36 வயசு ஆண்ட்டிக்கு 22 வயசு ஹீரோக்கள் 2 பேரும் அடித்துக்கொள்வதும், அலைவதும் ஓவர் என்றாலும் ரசிக்க முடிகிறது. ( நாம எதைத்தான் ரசிக்கலை? ) வில்லனா வர்றவர் அசல் தெலுங்கு படத்துல வர்ற வில்லன் மாதிரியே பன்ச் டயலாக் பேசறார்.

சாம்ப்பிளுக்கு ஒண்ணு

என்னை ரத்த நிற டிரஸ்ல பார்க்கறவங்க ரத்தம் உறைஞ்சு போய் நின்னுடுவாங்க.. ( என்னே ஒரு கேவலமான டயலாக்..?)

http://www.thedipaar.com/pictures/52cameron_diaz.jpg
படத்தில் கலக்கிய காமெடி வசனங்கள்

1. வில்லன் - என் வாழ்க்கையின் லட்சியம்,கொள்கை,ஆசை எல்லாமே ஒண்ணுதான்.. அது லாஸ் ஏஞ்சல்லியே நான்தான் பெஸ்ட் ரவுடின்னுபேர் வாங்கனும்.. ( ஆஹா .. இதுவல்லவோ லட்சியம்..?)

2. யார் என்னைப்பார்த்தாலும் பார்த்தவுடனே பயம் வரனும்.. அதுக்கு நான் என்ன செய்யனும்,?

என்னை மாதிரி கொலை பண்ரதுக்கு முன்னால பஞ்ச் டயலாக் பேசனும்.

3. ------- இந்த நகரம் உனக்கு தெரியுமா?

ம்.. எனக்கு ஜப்பான்னா ரொம்ப பிடிக்கும்.

அது சைனால இருக்கு.. சும்மா கதை விடாதே..

4. உன் ஹார்ட் பீட் ஃபாஸ்ட் ஆகறப்ப உன்னை சுத்தி இருக்கறது எல்லாமே ஸ்லோ மோஷன் ஆகிடுதே.. ( நல்ல கற்பனை)

5.  டேய்.. உன் கிட்டே ஒண்ணு கேக்கனும்.. அதுக்கு முன்னால உலக அழகியை விட பிரமாதமா ஒரு ஃபிகர் இருக்கே ..உன் முன்னால.... பார்ட்டி யாரு.? எனக்கு தெரிஞ்சாகனும்.


6. நாம இப்போ எங்கே போறோம்?

நீதானே வண்டி ஓட்டறே..?உனக்கே தெரியலைன்னா எப்படி?

7. ஹாய்.. அபின் பொட்டலம் வேணுமா..?

உன்னைப்பொட்டலம் கட்ட வந்திருக்கேன்..

8.  என் பேரு செக்னோஸ்கி..

பேர்ல கூட விஸ்கி வெச்சிருக்கியே..?

9. அடடா.. பஞ்ச் டயலாக் பேசறதுக்குள்ள செத்துட்டானே..

10. நியூஸ் பேப்பர்வளர்ச்சிக்காக இதை எல்லாம் பண்ற மாதிரி எனக்கு தெரியல..அந்தப்பெண்ணை இம்ப்ரெஸ் பண்ண பண்றே..


11. எனக்கு மட்டும் எதுக்ல்கு பாதுகாப்புக்கு கன் (GUN) குடுத்திருக்கே..?

ஏன்னா டேலண்ட்டா ஃபைட் போட உனக்கு தெரியாது..

12. பாஸ்.. உங்களை மீட் பண்ண நிறைய பேர் வெயிட்டிங்க்.

வெயிட் பண்ணட்டும்.. அதானே அவங்க வேலை..?

13. அந்தப்பொண்ணைப்பார்த்தா உனக்கு என்ன தோணுது,,?

என்னை இம்ப்ரெஸ் பண்ண ஓவரா சீன் போடற மாதிரி தோணுது..

இந்த மாதிரி ஜாலியான படங்கள் தொடர்ந்து வருவதால்தான் தமிழ்ப்படங்கள் போதிய வரவேற்பை பெறுவதில்லை.சும்மா குண்டுச்சட்டியில் குதைரை ஓட்டாமல் இப்படி வெரைட்டையா காமெடி படம் கொடுத்தால் நம்மாளுங்களும் ஜெயிக்கலாம்.

ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல படம் பார்த்தேன்.செம கூட்டம்.30 ரூபா டிக்கெட் 40 ரூபா. ஹூம்..10 ரூபா போச்சு..

Friday, January 28, 2011

வாடா போடா நண்பர்கள் - சினிமா விமர்சனம்

http://www.sevanthi.com/images/FilmPics/VadaPodaNanbargalMain35.jpg
ஹீரோக்கள் 2 பேர் ,ஹீரோயின் 1 ஆள் என்றதுமே அது முக்கோணக்காதல் கதைதான் என நினைத்துப்பார்த்தால் ம்ஹூம்..சம்திங்க் டிஃப்ரண்ட்தான்.. எல்லாம் இடைவேளை வரைதான்.அதற்குப்பிறகு....

காதல் கோட்டை படத்தின் ஒன்லைன் தான் கதை.அதுல பாக்காமயே 2 பேரு லவ் பண்ற மாதிரி இதுல பாக்காமயே நண்பர்கள் ஆன 2 ஆண்களின் கதை.


நெட் செண்ட்டர் (சுத்த சைவம்) என போர்டை பார்த்ததுமே காமெடி களை கட்டப்போகிறது என்பது தெரிந்து விடுகிறது.ஹீரோவும்,காமெடியனும் நெட் செண்ட்டர் வைத்திருப்பவர்கள் என கதைக்களன் வைத்தது இயக்குநரின் புத்திசாலித்தனம்.


http://www.kodambakkamtoday.com/wp-content/uploads/2010/06/vada-poda-nanbarkal_kodambakkamtoday_com.jpg அட
ஹீரோ எது செய்தாலும் அல்லது என்ன சொன்னாலும் வாவ் கிரேட் என வியக்கும் ஹீரோயினை தமிழ் சினிமாவில் மட்டுமே பார்க்க முடியும்.(நாம என்ன சாகசம் பண்ணுனாலும் ரியல் லைஃப்ல கண்டுக்கவே மாட்டாங்க..)

அதே மாதிரி கோடம்பாக்கத்தில் பரவி வரும் இன்னொரு க்ளிஷே காட்சி ஹீரோயின் படத்தின் முதல் 3 ரீல் மாடர்ன் டிரஸ் போட்டு கிளாமராக வருவார்..4வது ரீலில் சேலையில் வரும்போது ஹீரோ காணாததைக்கண்டவன் போல் அட.. அம்சமா இருக்கே என வியப்பான்..
மேலே சொன்ன 2 மேட்டர்களும் இந்தப்படத்திலும் இருக்கு.
தாய் தந்த பிச்சையிலே எனும் குத்தாட்டப்பாட்டு நமக்கு மாறுபட்ட 2 அனுபவங்களைத்தருகின்றன.

1.நடன அமைப்பு, கேமரா கோணம் என இயக்குநர் பார்த்து பார்த்துபண்ணி இருக்கார்.

2.ஒரு பாட்டு சீனுக்கு ஏன் ரிஸ்க் எடுக்கனும்னு க்ரூப் டான்சர்களை ரொம்ப முத்தல் முகங்களா (எல்லாமே 35 வயசு பார்ர்ட்டிங்க)போட்டு கொன்னெடுத்துட்டாரு..)

படத்தில ரசிக்கற மாதிரி சீன்ஸ்னா

1. ஹீரோயின் முதன் முதலா ஹீரோ வீட்டுக்கு (ரூம்) வர்றப்போ அங்கே கட்டில்ல கிடக்கற அலங்கோலமான ஆணின் உள்ளாடைகளை வெட்கபட்டுக்கொண்டே அவன் எடுத்து மறைத்து வைக்க உடனே ஹீரோயின் இதுல வெட்கப்பட என்ன இருக்கு ?என் ரூம்க்கு வந்தாலும் இதே நிலைமைதான் என சிரித்த படியே கூறுவது.... பின் அதே நிகழ்வு ஹீரோயின் ரூம்க்கு ஹீரோ போகும்போது நடப்பதும் அந்த் சீனில் ஹீரோயினின் வெட்கமும் டாப் கிளாஸ்..(இந்த காலத்துல பொண்ணுங்க வெட்கப்படறதைப்பார்க்கறதே அபூர்வம் பாஸ்)

http://www.koodal.com/cinema/gallery/movies/vaada_poda_nanbargal/vaada_poda_nanbargal_39_910201034940123.jpgஅட
மேலே பிங்க் கலர் டிரஸ் போட்டிருக்கறதுதான் ஹீரோயின்.இங்கே பாக்க சுமாரான ஃபிகரா தெரிஞ்சாலும் படத்துல பாஸ் மார்க் வாங்கற அளவு நடிச்சிருக்கு.நேர்ல எப்படியோ..

2.குடைக்குள் மழை சுதாவா பீச்ல ஒரே ஒரு சீன் வர்ற அந்த ஃபிகர் செம கலக்கல் ரகம்.பேசாம அல்லது பேசி அக்ரீமெண்ட் போட்டு அந்த பார்ட்டியை ஹீரோயின் ஆக்கி இருக்கலாம்.

3. அப்பா தம் அடிக்கறப்ப ஹீரோ சாதரண பேப்பரை ஆஸ்ட்ரே மாதிரி டிசைன் பண்ற சீன் அட்டகாசம்.

படத்தில் இயக்குநரை கண்டிக்கவைக்கும் சீன்கள்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6j9jSsBgZ5gRBUN80cWM_mhGiHnRvbjObOGU9ypZQYgIR6CwXrkbF9dvBT2xZiiyER0BKwvdqYhgdmHB_-VtobdIKOyLVI_UWeTpcQoZP2hQ-QejOgaKDE5wQkBaauoxJyeHUGUxP-Qs/s1600/Vaada-Poda-Nanbargal-Movie-Stills-www.beautyanaels.com-7.jpg அட
1.ஒரே நாள்ல ஏ டி எம் ல 2 லட்சம் எடுக்கற மாதிரி சீன் வருது..எனக்கு தெரிஞ்சு அதிக பட்சம் ரூ 50000 தான் எடுக்க முடியும்.

2. தங்களோட காதலை பரஸ்பரம் வெளீப்படுத்திக்காத நிலைல ஹீரோயின் ஹீரோ கிட்டே ரெஸ்ட்டாரண்ட்ல நீ யாரையாவது லவ் பண்றியா?ன்னு கேக்கறப்ப ஹீரோ விழுந்து விழுந்து சிரிக்கறாரு.. ஏன் எதுக்குன்னே தெரியல..செம கடுப்பைக்கிளப்பிய சீன் அது.

3.அவ்வளவு பெரிய கம்பெனி ஓனர் ஒரு இண்ட்டர்வியூல தான் செலக்ட் பண்ணுன ஆளை (ஹீரோ) சாரி.. இப்போதான் என் பையன் வேற ஆளை செலக்ட் பண்ணீட்டானாம் என சாரி கேட்பது சொதப்பல்.

படத்தில் வசனகர்த்தா கலக்கிய இடங்கள்

1. இது உங்க கிராமம் இல்ல.. இங்கே எதையும் மிஸ்யூஸ் பண்றவங்க தான் ஜாஸ்தி.இது நகரம்.. (இயக்குநருக்கு சிட்டி ஆள்ங்க மேல என்ன காண்ட்டோ?)

2. மேடம் ..சிக்ஸ் (6) க்கு போங்கன்னுதான் சொன்னேன்.. ஏன் இப்படி நெளியறீங்க..?


3. என் நெட் செண்ட்டரை அவன் நீலாங்கரை கெஸ்ட் ஹவுஸா மாத்தீட்டான்.

4.மியூசிக் ஒரு டிவைன் ஆர்ட்..அது நல்ல மனுஷன் கிட்டே இருந்துதான் வரும்..நல்ல மனுஷனுக்குதான் புரியும்.

5. மேடம்..ஃபர்ஸ்ட் டைம் வீட்டுக்கு வந்திருக்கீங்க.. என்ன சாப்பிடறீங்க..?டீ..காஃபி..போர்ன்விடா..பூஸ்ட்..இதெல்லாம் இல்ல..லெமன் ஜூஸ் சாப்பிடறீங்களா?

6.ஃபிரண்ட்ஷிப்  மேல பிராமிஸ்...

ஃபிரண்ட்ஷிப்  மேல பிராமிஸ் பண்ண முடியாது.. ஏன்னா ஃபிரண்ட்ஷிப்பே ஒரு பிராமிஸ்தான்..

7.பொண்ணுங்களோட வீக்னெஸ்சை தெரிஞ்சுக்க ஆண்கள் என்ன வேணாலும் செய்யத்தயாரா இருப்பீங்கன்னு எனக்கு தெரியாதா?

8. ஹீரோயின் - பை அண்ணா.நாங்க 2 பேரும் பார்ட்டிக்கு போயிட்டு வந்து மேட்டர் என்னன்னு சொல்றோம்..

காமெடியன் - என்னது ?அண்ணன் கேரக்டரா?

9.எனக்கு சாமி பிடிக்கும் ..கோயில் பிடிக்காது..கிரிக்கெட் பிடிக்கும்..அதை பாக்கறவங்களை பிடிக்காது......

10. என்னடா இது ஏ டி எம் செண்ட்டர் வாசல்ல நெம்பர் டூ போக கியூல நிக்கற மாதிரியே நிக்கறானுங்க..கைல ஒரு பக்கெட்தான் இல்ல..

11. ரோஜா செடிக்கு தண்ணீர் ஊற்றும் சீனில் காமெடியன் -ஹூமிந்த மாதிரி ஆர் கே செல்வமணி கூட ரோஜாவை கவனிச்சிருக்கமாட்டார்.

12. ம் ம் ஆள் பட்டாபட்டி போட்டிருந்தாலும் பாண்டி பஜார் கூட்டிட்டுப்போய் பக்காவா ரெடி பண்ணுனா தேறிடுவான் போல..

13, மனசு சரி இல்லைன்னா மனசுக்கு பிடிச்ச இடத்துக்கு போ.. அல்லது மனசுக்கு பிடிச்சவங்களை போய் பாரு..

14.  நீ அவனை லவ் பண்றியா?

தெரியல.. ஆனா அவன் எது செஞ்சாலும் பொயட்டிக்கா இருக்கு.அவன் எச்சில் துப்புனாக்கூட அழகா இருக்குடி..அவனைப்பாக்கலைன்னா பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு.அவன் என்னைத்தொட்டா செத்துடலாம் போல இருக்குடி..

அடி போடி பைத்தியம்.. இதுக்கு பேருதாண்டி லவ்.

பாடல்  வரிகள் ரொம்ப கேவலமா இருக்கு.
சென்னைப்பட்டினத்தில் என் பேரை நீ சொன்னா ஜீன்ஸ் பேண்ட் எல்லாம் எழுந்து நிக்கும் போன்ற இலக்கிய நயம் மிக்க பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் யார்?னு தெரியல.

க்ளைமாக்ஸில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நண்பனை சட்டுபுட்டுன்னு ஹாஸ்பிடலில் சேர்க்காமல் பிதாமகன் விக்ரம் ரேஞ்சுக்கு அலப்பறை பண்ணும் இன்னொரு ஹீரோவின் நடிப்பு சகிக்கல.

ஒரு சீனில் ஹாஸ்பிடலில் நர்ஸ்..” ஏன் எல்லாரும் கூட்டமா இங்கே இருக்கீங்க?எல்லாம் எந்திருச்சு வெளில போங்க” அப்படின்னு சொல்றாங்க..அப்பவே கிளம்பி வந்திருக்கனும்.

எனக்கு என்ன டவுட்னா இடைவேளை வரை சாந்தமா வரும் 2 ஹீரோவும் இடைவேளைக்குப்பிறகு டாய்.. டூய் என உச்சஸ்தாதியில் கத்துவது ஏன்னே தெரியல.. ( ஒரு வேளை சம்பள பாக்கியோ என்னவோ)

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 36 ( சப்போஸ் விமர்சனம் போட்டா. இளைஞன் மாதிரி போடாம விடத்தான் சான்ஸ் அதிகம்)

எதிர்பார்க்கப்படும்  குமுதம் ரேங்க் - சுமார்

எத்தனை நாள் ஓடும்?  எல்லா செண்ட்டர்லயும் சேர்த்து 7 நாள் ஓடலாம்.

சேட்டைக்காரன் VS சேஷ்டைக்காரி - பிரச்சனைகள்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiU9PmehVV8qec1o5gRRaHzjt6rFy3O0W0_iiQuWIL1m_4Y8z8PlJJkSqmIDhdkJu37ggJsIx2MEbk_dtj4xAlvSH9OgFRkCE1eI-5fjQt5k5WVQc-aLPUmdYw9mgckUe28RMMPlApJ4F3c/s1600/smile.jpg
உலகத்துலயே ரொம்ப சந்தோஷமான விஷயம் குழந்தைகளோட டைம் பாஸ் பண்றதுதான். மத்தவங்களோட பழகறப்ப அவங்களுக்குத்தகுந்தபடி ஒரு முகமூடி போட்டுக்கற மாதிரி குழந்தைகளோட பழகறப்ப நாமும் ஒரு குழந்தை ஆகிடறோம்.ஆனா ஒரே ஒரு விஷயம் நாம் நம்ம புத்திசாலித்தனத்தையும்..,மேதாவிலாசத்தையும் ( நாமா கற்பனை பண்ணிக்கறது..) தூக்கி கடாசிட்டு நாமும் குழந்தையாவே ஆனாத்தான் அவங்களோட எஞ்சாய் பண்ண முடியும்.

1. அப்பா.. நாம 2 பேரும் ஒளிஞ்சு விளையாடலாமா?

ஓக்கே நீ முதல்ல போய் ஒளீஞ்சுக்கோ...
ஓகே ஜூட்டா...


ஜூட் டாடி..


ஆ.. கண்டு பிடிச்சுட்டேன்.. சத்தத்தை வெச்சே கண்டுபிடிச்சுட்டேன்...

போங்கப்பா.. என்னை ஏமாத்தீட்டே..

---------------------------------------------------------------------------

2.  அப்பா.. என்ன யோசிச்சுட்டு இருக்கே..?

ஜோக் எழுத KNOT யோசிக்கறேன்..

அதுக்கு ஏன் சோகமா ,சீரியஸா இருக்கே?சிரிச்சுட்டே யோசிச்சாத்தானே ஜோக் தோணும்..

---------------------------------------------------------------------

3.  எனக்கு ஒரு முத்தம் குடு...

சாரி டாடி.. அம்மாவுக்கு மட்டும்தான் தருவேன்...

சரி.. நான் இப்போ உனக்கு ஒரு முத்தம் தர்றேன்.. பிடிச்சிருக்கா?

ம்ஹூம்.. அம்மா குடுத்தாதான் பிடிக்கும்..

பிடிக்கலையா? அப்போ திருப்பி குடு..

ம்ச்

ஆ.. நல்லா ஏமாந்தியா? உன் கிட்டே முத்தம் வாங்கீட்டேனே?

 ------------------------------------------------------------------------------

4. அப்பா.. கதை சொல்லுப்பா..

அம்மா கிட்டே போய் கேளு.. நான் பத்திரிக்கைக்கு கதை எழுத யோசிச்சிட்டு இருக்கேன்..

என்னப்பா... முகமே தெரியாத யாருக்காகவோ கதை எழுதறே.. உன் கூடவே இருக்கற எனக்கு கதை சொல்ல மாட்டேங்கறியே.. ( பளார்.. வேதம் புதிது-ல சத்யராஜ்க்கு கிடைச்ச மாதிரி..)

http://www2.hiren.info/desktopwallpapers/thumb/child-playing-with-bubbles.jpg

5. ஸ்கூல்ல என்ன என்ன குறும்பு பண்ணுனே..இன்னைக்கு?

எதுவும் செய்யலை டாடி..

பொய் சொல்லாதே.. GOD CAMERA வெச்சு பார்த்துட்டேன்..

அதென்ன காட் கேமரா..?

யார் யார் என்னென்ன தப்பு பண்றாங்க?ன்னு காட் கேமரால தெரிஞ்சிடும்..

அப்படியா? ஹைய்யா.. அப்பா.. கேமராவை ஆன் பண்ணுங்க.. நீ இங்க ஆஃபீஸ்ல என்ன என்ன தப்பு பண்ணுனீஙகன்னு பார்க்கலாம்.

------------------------------------------------------------

6.  அப்பா.. உங்க மேரேஜ் ஆல்பத்துல என்னை மட்டும் காணோமே...?

அது வந்து... நீ தூங்கப்போயிட்டே..

சும்மா பொய் சொல்லாதீங்கப்பா..உங்க கல்யாணத்துக்கு அப்புறமாதான் நான் பொறந்தேனாம்.. அம்மா சொன்னாங்களே..

http://media.nowpublic.net/images//80/6/80610c54ed55ef5382d93acd7e980860.jpgஅட..

7. அப்பா.. எனக்கு டிஃபனுக்கு போட்டாச்சா?

இரு.. ஃபர்ஸ்ட் எனக்கு போட்டுக்கறேன்..  ( சுயநலம்)

அப்பா.. இவ்வளவு சாப்பாடு போட்டுக்கறியே.. இத்தனை எதுக்கு?

நான் பெரிய ஆள் இல்லையா? அதிகம் பசிக்கும்..

அப்போ அம்மாவும் பெரியவங்கதானே.. அவங்க டிஃபன் பாக்ஸ் சின்னதா இருக்கு.. உங்களுது மட்டும் பெரிசா  இருக்கே..?

--------------------------------------------------------------

8. அப்பா.. காசு எவ்வளவு வெச்சிருக்கே..?

எதுக்கு கேக்கறே..?

ஸ்கூல்ல சர்க்கஸ் கூட்டிட்டு போறாங்க.. பணம் 60 ரூபா வேணும்..

அடேங்கப்பா.. 60 ரூபாயா? பேசாம நான் உன்னை காலைல சர்க்கஸ் கூடாரத்துக்கு வாக்கிங்க் போறப்ப கூட்டீட்டு போறேன்.. சிங்கம், யானை,ஒட்டகம்  இதெல்லாம் காட்டறேன்..ஃபிரீயாவே பார்த்துக்கோ..

போங்கப்பா.. ஜோக் எழுதறப்ப 10 ஜோக் சேர்த்து எழுதி சம்பாதிப்பா....

------------------------------------------------------------------------------

9. அப்பா.. நானும் ஜோக் எழுதறேன்...

எப்படி? எழுது பார்ப்போம்...

இதோ உங்க ஜோக்கை பார்த்து எழுதறேன்...

இது செல்லாது.. சொந்தமா யோசிச்சு எழுதனும்..

நீங்க கூட டைரியை பார்த்துத்தானே எழுதறீங்க...?

அது.. நான் ஏற்கனவே யோசிச்சு எழுதுன ஹின்ட்ஸ்..அதை வெச்சு டெவலப் பண்ணி எழுதறேன்..

அப்பா சொத்து பிள்ளைங்களுக்குத்தானே.. அப்போ உங்க ஜோக்கும் எனக்குத்தானே சொந்தம்?

-------------------------------------------------------------

10.  ஆஃபீஸ்க்கு லேட் ஆகிடுச்சு.. கிளம்பறேன்..

அப்பா.. இன்னைக்கு எனக்கு ஸ்கூல் லீவ்.. என் கூட கொஞ்ச நேரம் விளையாடிட்டுப்போப்பா..

மேனேஜர் அடிப்பாரு... நான் போறேன்.

என்ன்னப்பா.. இவ்வளவு பெரிய ஆளா இருக்கே..நீயும் திருப்பி அடி..


டிஸ்கி 1 - இந்தப்பதிவுக்கு நான் முதல்ல வெச்ச டைட்டில் குழல் இனிது.. யாழ் இனிது என்பர்......(பேபி ஸ்பெஷல்) என்பதுதான். மறுபடி யோசிச்சு பார்த்தா அதுல கிளாமரும் இல்ல.. கிக்கும் இல்ல. ஏற்கனவே என் பிளாக் காத்து வாங்கிட்டு இருக்கு ..அதனால சும்மா அட்ராக்‌ஷனுக்காக இப்படி டைட்டில் வெச்சேன்.. சேட்டை அண்ணன்கிட்டே அனுமதி வாங்கிட்டுத்தான்..

டிஸ்கி 2 - பொதுவா யாரையாவது தாக்கி போடற பதிவுக்குத்தான் வரவேற்பு  அதிகமா இருக்கு.. ஆனா என் கூட யாரும் வமபு சண்டைக்கே வரமாட்டேன்கறாங்க.அது ஏன்னு தெரியல..(நாம டம்மி பீஸ்ங்கற ரகசியம் எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு போல.)

டிஸ்கி 3  இதுல சேட்டைக்காரன் நான் தான், சேஷ்டைக்காரி  என் 7 வயசு பொண்ணு அபிராமி ஸ்ரீ

Thursday, January 27, 2011

ராக்கெட் ராஜா -ஆ ராசா என்ன வித்தியாசம்?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAz7iNJT8jeAgrrjHq9qcsXfGeVRqRyl1otKEEKjbpSZ9hLp6Jp-4J1IWGG1pgyoXDbXiOF2sOY5ZQvdk7AaLy3E-NSiU5uWT0GzgSLHU-0nUCDLep0b1DQD4ACP4yT4W6WPHICxw4Ahvt/s1600/Taapsi-Hot-Photo-Gallery-1-8.jpg
1. தலைவரு இவ்வளவு ஓப்பனா பேசுவார்னு யாரும் எதிர்பார்க்கலை..

எப்படி சொல்றே..?

எனது கட்சியின் கொள்கை என்ன?னு யாராவது கண்டு பிடிச்சா அவங்களுக்கு நான் செஞ்ச ஊழல் ல 50% ஷேர் தந்துடறேன்னாரே..?

---------------------------------------------

2.முதுமைக்கும், பழைமைக்கும் விடை குடுப்போம்னு ஏன் தலைவரே சொன்னீங்க..?

பின்னே என்னய்யா..இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் 40 வயசான நாகலட்சுமியை மகளிர் அணித்தலைவியா வெச்சுக்கறது..?

-------------------------------------------------


3. நானோ காருக்கு தேசிய விருது கொடுத்துட்டாங்களாம்..

சுத்தம்.. விருது குடுத்தாச்சா? இனி அந்தக்கார் ஓடுன மாதிரிதான்...

---------------------------------------------------

4.என்னங்க.. உங்க படத்துக்கு ஈரோடு மாவட்டத்துல இருக்கற பள்ளிபாளையம் ஊர்ப்பெயரை  டைட்டிலா வெச்சிருக்கீங்க?

அதனால என்ன? பவானின்னு டைட்டில் வைக்க்றப்ப பள்ளிபாளையம்னு வைக்கக்கூடாதா?அங்கேயும் ஆறு ஓடுது.. இங்கேயும் ஆறு ஓடுது..

--------------------------------------------------------

5.என் ஆள் மோஹனா என் காதலுக்கு ஓக்கே சொல்வாளா மாட்டாளா?னு சீட்டு பார்த்து சொல்லுங்க ஜோசியரே...

ஆஹா.. பேஷ் பேஷ்..கிளி  சிக்குமா? சிக்காதா?ன்னு கிளி ஜோசியமா?

-------------------------------------------------
http://indianewz.com/wp-content/uploads/2010/07/tapasee-07.jpg
6.வழக்கமா தலைவர் ரெஸ்ட்டா இருக்கறப்ப சின்ன வீடு ஷில்பா வீட்டுக்கு போவார் ..இன்னைக்கு ஷில்பா வுக்கு உடம்பு சரி இல்லையாம்..அதனால அவங்களை ரெஸ்ட் எடுக்க சொல்லீட்டு இவர் கிளம்பிட்டார்..

ஓஹோ.. ஓய்வுக்கே ஓய்வு குடுத்தவர்னு பாராட்னாங்களே.. இந்த அர்த்தத்துலதானா?

--------------------------------

7.டாக்டர்.. நீங்க சவப்பிரியராமே..?

வேண்டாதவங்க கட்டி விட்ட கதை அது.. சைவப்பிரியன் அவ்வளவுதான்..

---------------------------------------

8.  சிறுத்தைல வந்த ராக்கெட் ராஜா  -- ஆ ராசா என்ன வித்தியாசம்?

ராக்கெட் ராஜா சின்னத்திருடன்.... ஹி ஹி ஹி

------------------------------------------------------------------

9.தலைவருக்கு ரொம்பத்தான் ஆசை...


ஏன்?

வீட்டு வேலைக்கு ஆடுகளம் தாப்ஸி மாதிரி கலக்கலான ஆங்கிலோ இண்டியன் ஃபிகர் தேவைனு பேப்பர்ல விளம்பரம் குடுத்திருக்காரே,,?

--------------------------------------------------

10. தலைவர் அடிக்கடி “உங்களால் எண்ணிப்பார்க்க முடியுமா?” ன்னு மேடைல பேசறாரே.. ?

அவர் செஞ்ச ஊழல்ல கிடைச்ச பணத்தை எண்ணிப்பார்க்க முடியுமா?ன்னு கேட்கறாரு.. முடிஞ்சா கவுண்ட் பண்ணிக்காமிச்சிடு..

---------------------------------------------

டிஸ்கி 1- கழகக்கண்மணிகளின் கவனத்துக்கு வரும்வரையே ஜோக் 8 இருக்கும்.அதே போல் பதிவின் டைட்டில் எந்நேரமும் மாற்றப்படும் அபாயம் இருக்கலாம்.( யாருக்கு அபாயம்? ஹி ஹி எனக்குத்தான்)

டிஸ்கி 2 - நாட்டில் பல பிரச்சனைகள் இருந்தாலும் இப்போது கோலிவுட்டில் கிளம்பிய முக்கியப்பிரச்சனை கலக்கல் கலர் தமனாவா? வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா? புகழ் தாப்சியா? என்பதுதான்.. எனது ஓட்டு இப்போதைக்கு தாப்சிதான்.. ஏன்னா அதுதான் ஃபிரஸ் ஹி ஹி

Wednesday, January 26, 2011

SEASON OF THE WITCH - (சூனியக்காரி) - ஹாலிவுட் சினிமா விமர்சனம


http://www.bscreview.com/wp-content/uploads/2011/01/Season-Of-The-Witch-Photo.jpg

சின்னப்பசங்க படிக்கிற அம்புலிமாமா கதைதான்.நம்மாளுங்க தமிழ்ல வர்ற பாலமித்ரா..ரத்னபாலா கதைகளை எல்லாம் இளக்காரமா பேசுவாங்க.. ஆனா அதே கதை ஹாலிவுட்ல சொல்லப்படும்போது பிரமிப்பா பார்ப்பாங்க.. ஹாரிபாட்டர் கதைகள் ஃபேமஸ் ஆனது இப்படித்தான்.

அந்தக்காலத்துல ( எந்தக்காலத்துல?..) நடக்கறதா சொல்லப்படும் கதை.ஊர்ல சூன்யக்காரிகள்..சூன்யக்காரிக்கு உதவியா இருந்த பொண்ணு ..( பொண்ணுன்னாலே சூன்யக்காரிதான் என்பது டைரக்டரின் வாதம்) என எல்லாருக்கும் மரண தண்டனை கொடுப்பது போல கதை ஆரம்பிக்குது.அப்புறம் ஒரு சூன்யக்காரியை ( பார்ட்டி நல்ல ஃபிகர் - திகில் படம் பார்க்கற களேபரத்துலயும் உனக்கு கிளு கிளுப்பு கேக்குது..?) சில வீரர்கள் கூண்டில் அடைத்து 500 மைல் தள்ளி இருக்கற ஒரு இடத்துக்கு அழைச்சுட்டு போறாங்க..

எதுக்கு 500 மைல்? என்ன சார் நீங்க... படத்தை வளர்த்த வேணாமா? அங்கே ஸ்பாட்டுக்கு போவதற்குள் அவர்கள் சந்திக்கும் இடர்ப்பாடுகள் தான் கதை.

பொதுவா இந்த மாதிரி பயணக்கதைகள்னாலே ஒரு ஆபத்து இருக்கு.. கொஞ்சம் ஏமாந்தாலும் திரைக்கதை போர் அடித்துவிடும்.விதி விலக்காய் ஹிட் அடித்த படங்களில் ஞாபகம் உள்ளவை மைனா, திருடா திருடா,கண்டேன் காதலை ( ஜப் வி மெட்). கோட்டை விட்டதில் நினைவு உள்ளவை கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-AobH2vjTdwQ0dsqEiapf_Gk6_wUY7h0sBjlU6Ik9JNWKgmYe3zoY_tCcenqt_-cDNJhaMwTNJ0B_yUa43WfHHHUBpSoXhG-yJLltkBzmT6QmJ_hIDddwVfEmLf578M2DNooL8AjjB3g/s400/Claire+Foy+in+Season+of+the+Witch.jpg
மேலே இருப்பதுதான் சூன்யக்காரி.. அந்த ஃபிகர்  சூன்யக்காரி.யா? சூட்சுமக்காரியா?ன்னு எல்லாரும் ஒரு முடிவுக்கு வர்றதுக்குள்ள படத்துல இடைவேளை வந்துடுது.

THE NATIONAL TREASURE (புதையலைத்த்தேடி) படத்துல ஹீரோவா நடிச்ச நிக்கோலஸ் கேஜ் தான் இந்தப்படத்தோட ஹீரோ.. கடைசில செந்தூரப்பூவே கேப்டன் ரேஞ்சுக்கு உயிர்த்தியாகம் எல்லாம் செய்யறாரு.இதே மாதிரி ஸ்டீரியோ டைப் படங்கள்ல நடிச்சுட்டு இருந்தா மார்க்கட் கோவிந்தாதான்.

ஹீரோயின் அந்நியன் படத்தில் விக்ரம் க்ளைமாக்ஸில் ரெமோவாக,அந்நியனாக,அம்பியாக சட்சட் என முகம் மாறுவாரே அது மாதிரி...நம்ம டாக்டர் ராம்தாஸ் எலக்‌ஷனுக்கு எலக்‌ஷன் அய்யா.. அம்மா அப்படி மாத்தி  மாத்தி பல்டி அடிப்பாரே .. அந்த மாதிரி அடிக்கடி மாறும் முக பாவனைகள் அற்புதம்.அவர் நல்லவரா? கெட்டவரா? என ஒரு முடிவுக்கே வர முடியாதவாறு கேரக்டர் சித்தரிப்பு அருமை.
http://www.horror-asylum.com/news/pics/little-dorrits-claire-foy-witches-it-up-in-season-of-the-witch.jpg
வசனகர்த்தா வசப்படுத்திய இடங்கள்

1. நான் உங்களோட வந்தது ஆள்றதுக்குத்தான்.. இத்தனை உயிர்களை கொல்றதுக்கில்லை...

எல்லாம் ஆண்டவன் கட்டளைப்படிதான் செஞ்சுட்டு வர்றேன்..

ஓஹோ.. அப்போ நீங்களும்,ஆண்டவனும் அடிக்கடி பேசிக்குவீங்களா?

2.  இதுக்கு முன்னால வேற யாராவது அங்கே போயிருக்காங்களா?

இல்லை...

அப்போ நாம கண்டிப்பா அங்கே போறோம்.


3. நான் செஞ்ச அசிங்கமான சிலை இன்னும் அங்கேயேதான் இருக்கு.

அப்போ அது உன்னை மாதிரியேதான் இருக்கும்னு சொல்லு.


4. உன் கெட்ட நேரம்.. எங்க கிட்டே மாட்டிக்கிட்டே..

இந்த சூன்யக்காரியையும் அங்கே கூட்டிட்டா போறோம்?

பின்னே.. அங்கே கும்மாளம் போடவா போறோம்?


5. ஒரு பொண்ணு நினைச்சா இந்த உலகத்தையே தலைகீழா மாத்திட முடியும்.

பொண்ணுங்களை நம்பி ஏமாறுவதை முதல்ல நிறுத்து..

6.நம்ம கிட்டே இருக்கற பலவீனங்களை தனக்கு சாதகமா பயன்படுத்திக்கறது பொண்ணுங்களுக்கு கை வந்த கலை.

7. நீங்க என்னை தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க...

ஏன்னா நீ தப்புதப்பாத்தானே காரியங்களை பண்ணீட்டு வர்றே..?

8. பாதிலயே வந்த வாழ்க்கை இது.. பாதிலயே போயிடும்.. அதுக்குள்ள பாவங்கள் செஞ்சு மேலும் நாம பாவிகள் ஆகனுமா?


9. சூன்யக்காரிகள்னு அபாண்டமா பழி போட்டு அப்பாவிப்பொண்ணுங்களை கொல்றீங்களே.. அவங்களுக்கு நிஜமாவே அப்படி ஒரு சக்தி இருந்தா தன்னைத்தானே காப்பாற்றி இருக்கலாமே... ( வாட்  எ லாஜிக் கொஸ்டீன்)

10. இப்போ நாம எங்கே இருக்கோம்?

வழிகாட்டி - எனக்கே தெரியலை.

11. நாம எல்லாருமே பொணமாத்தான் போய்ச்சேருவோம்னு நினைக்கிறேன்.

நான் உயிரோட இருக்கறவரை அது நடக்காது..

அப்போ முதல்ல சாகப்போறது நீ தான்.

12. நாம கஷ்டப்படறதைப்பார்த்துக்குட்டு சும்மா இருக்கறவன் எப்படி ஆண்டவனா இருக்க முடியும்? ( செம கேள்வி)

13.  சூன்யக்காரி - நான் பேச ஆரம்பிச்சா ஆண்டவனால கூட பதில் சொல்ல முடியாது.

நம்பவே முடியல..யார்னே தெரியாத ஒருத்தியை காப்பாற்ற இத்தனை பேரா?

சிதைந்து போன தொங்குபாலத்தில் சூன்யக்காரியின் வண்டியை கடக்க வைக்கும் இடம் செம விறு விறுப்பு.அந்த ஒரு இடத்தில் மட்டும் இசை அமைப்பாளர் ஆடியன்சின் டெம்ப்போவை ஏற்றும்படி கலக்கலாய் மியூசிக் போட்டிருக்கிறார்.

மற்றபடி ஜஸ்ட் பாக்கலாம்.படத்துல பெரிசா சொல்ற அளவு ஒண்ணும் இல்ல.
ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல இந்தப்படம் பார்த்தேன். ரொம்ப பயமா இருந்துச்சு.. ஹ்ஹி ஹ்ஹி  தியேட்டர்ல மொத்தமே 23 பேர்தான்..ஏதோ 1000 பேர் இருந்தாலாவது ஆயிரத்தில் நான் ஒருவன்னு பெருமையா சொல்லிக்கலாம்..

குடியரசு தின ஸ்பெஷல் சிந்தனைகள்

http://www.udumalaiinfo.com/news/wp-content/uploads/2010/01/indexphp.jpg
1.  குடியரசு விழா கொண்டாட

     தேடப்படுகிறது

     தியாகிகள் லிஸ்ட்.

http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/nnozizi//mywebdunia/UserData/DataU/unnikris/images/restricted/20-03-2009/babies_107_.bmp

2. எட்டு மணிக்கு வரும் கலெக்டருக்காக

    ஆறு மணியிலிருந்தே பசியோடு

   காத்துக்கொண்டிருந்தன குழந்தைகள்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJ1HFx7UkyiMIkKYltZrxiFubbutW0aTxqyFbllTle00HdRiEtZa0fbEhb4qU7TvujYkC0hmyNTHT4Ieomw6174ncntEmBC22Cf6lcVrKlxOgasO-JiZ0AZAiSdW5itKBvNWqiW0KxqL4/s1600/pic_1178393734.jpg

3.  ஆகஸ்ட் 14, அக்டோபர் 1,ஜனவரி 25

  குடி மக்களிடம் விழிப்புணர்வு

விடிஞ்சா டாஸ்மாக் லீவ்..இப்பவே வாங்கி ஸ்டாக் வெச்சுக்கோ..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMLMpwqrsaGzb4zSfrg0nuVwwqxOz-nSyiSQbgC0BFJAwZeP7qbk2RiUqNSKekXn26ticI5yJ69dTO-CSheFp9jxPmX0WtfdcwfF-9lXAifyzhtqx5fd0HIyHcK8S2Aq6F4rzM5bYfDVmz/s400/Boss.JPG


4. குடியரசு தின ஸ்பெஷல் நிகழ்ச்சி

கலைஞர் டி வி யில்

நமீதாவின் மனம் திறந்த பேட்டி.