Tuesday, January 25, 2011

விஜய் -ன் டாப் 10 படங்கள்

dd9cdc28-d2a7-495c-ace4-1e758b651a481.jpg (450×256)
பொதுவா டாப் 10 படங்கள் மாதிரி பதிவை யாராவது தொடர்பதிவுக்கு அழைச்சாத்தான் போடறாங்க.. என்னை யாரும் அழைக்காமயே போட 2 காரணம்.

1. என்னை யாரும் மதிக்கற மாதிரி தெரியல ( ஹி ஹி வழக்கமா நடக்கறதுதானே..)2.குடும்பத்துல எல்லாரும் அழைச்சிட்டுபோய் பொண்ணு பாக்கற வைபவம் என்னதான் கலகலப்பு இருந்தாலும் நாமா தனியா போய் சைட் அடிக்கறதுல ஒரு கிளு கிளுப்பு இருக்கத்தான் செய்யுது..

10. கண்ணுக்குள் நிலவு. ஃபாசில் இயக்கிய இந்தப்படம் வசூல் ரீதியா தோல்விப்படமா இருந்தாலும் ,விஜய்க்கும்,அவரது ரசிகர்களுக்கும் இது முக்கியமான படம்.அவர் நடிச்ச படங்கள்லயே அதிக அளவு வித்தியாசமான முக பாவங்களை வெளிப்படுத்துன படம் இதுதான்.வித்தியாசமான சஸ்பென்ஸ் திரில்லர் படம். ஆனா அந்த சஸ்பென்ஸ் ஓவர்டோஸ் ஆகி தங்களை ஏமாத்தறதா ரசிகர்கள் நினைச்சதன் விளைவு படம் அவுட்.தன்னால் கொலை செய்யப்பட்டதா நம்புன பொண்ணு தன் கண் முன்னால உயிரோட வர்றப்ப விஜய் காண்பிக்கும் ஃபேஸ் எக்ஸ்பிரஸ்ஸன்ஸ் டாப் கிளாஸ்.ஷாலினி விஜய் லவ் சீன்ஸூம் ரொம்ப கவிதையா இருக்கும்.ஈரோடு அபிராமியில் 13 நாட்களே ஒடியது.

9. ஷாஜகான் - நண்பனின் காதலியை அவனோடு சேர்த்து வைக்கும் ஹீரோவின் கதைதான். சாதாரண இந்தக்கதை விஜய்-ன் ஸ்பெஷல் ஆனது    விஜய் ஸ்மார்ட்டான கலரில் சர்ட் அணிந்து போட்ட டான்ஸ் ஸ்டெப்கள் ஒண்டர்ஃபுல்.டான்ஸ் மாஸ்டர் சொல்லித்தந்ததை மட்டும் ஆடி விட்டுப்போகாமல் தனது ஸ்டைலில் ஸ்பெஷலாய் ஏதாவது செய்ய வேண்டும் என்ற தவிப்பு இந்தப்பாடலில் எதிரொலிக்கும்.காதலை விட்டுக்கொடுக்கும் பெரும்பாலான படங்கள் கமர்ஷியல் சக்‌சஸ் ஆவதில்லை என்ற பொது விதியின் படி இந்தப்படமும் ஓடவில்லை.ஈரோடு ராயலில் 28 நாட்களே ஓடியது.

8.ஃபிரண்ட்ஸ்- விஜய் -ன் மார்க்கெட் டவுன் ஆகும்போதெல்லாம் அவருக்கு கை கொடுப்பது கேரளாதான். சித்திக் இயக்கிய இந்தப்படம் சத்தமே இல்லாமல் வந்து சக்கை போடு போட்டது.காமெடி கலக்கல் படம். வடிவேல் சர்வசாதாரணமாக விஜய்யை வாடா போடா என சகட்டு மேனிக்கு திட்டுவது போல் காட்சிகள் இருந்தாலும் விஜய் பெருந்தன்மையாக அதில் நடித்து பாத்திரத்துக்கு உயிர் ஊட்டினார்.பன்ச் டயாலக்கை நம்பாமல் திரைக்கதையயும்,காமெடியையும் நம்பினால் சக்சஸ் என்று உணர்த்திய படம்.ஈரோடு சண்டிகாவில் 80 நாட்கள் பின் சங்கீதாவில் 25 நாட்கள் ஓடியது

7.வசீகரா -இந்தப்படம் விஜய்-ன் வித்தியாசமான காமெடி சென்சை உணர்த்திய படம்.படம் முழுக்க நகைச்சுவை தோரணங்கள் கொடி கட்டிப்பறக்கும்.நெஞ்சம் ஒரு முறை வா என்றது பாட்டில் விஜய் சினேகா இருவரும் எம் ஜி ஆர் சரோஜா தேவி போல் ஆடி நடித்த இந்தப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப்பெறாமல் போனது ஏமாற்றம்தான்.ஆனால் இதே போல் ரஜினிக்கும் மிஸ்டர் பாரத்தில் நடந்தது, என்னம்மா கண்ணு சவுக்கியமா? பாடல் காட்சியில் ரஜினி,சத்யராஜ் இருவரும் கலக்கலாக நடனம் ஆடி அவரவர் ஸ்டைலில் அசத்தி இருந்த போதும் ரசிகர்கள் பிரமாதமாய் ரசிக்கவில்லை.ஈரோடு அன்னபூரணி தியேட்டரில் இது 23 நாட்களே ஓடியது.

6.பிரியமுடன் - விஜய்க்கு அவரது கேரியரில் முக்கியமான படம்.கிட்டத்தட்ட சைக்கோ கம் வில்லன் கேரக்டர்..பாஜிகர் படத்தில் ஷாரூக்கான் நடித்த கேரக்டர்.இந்தப்படம் பார்க்கும்போது இது எடுபடாது.. தமிழில் ஓடாது என்றே நினைத்தேன். ஆனால் படம் ஹிட்.கவுசல்யாவின் அப்பாவை பேசிக்கொண்டே மாடியில் இருந்து தள்ளி கொலை செய்யும்போது விஜய் பிரமாதமாய் நடித்தார்.அதேபோல் க்ளைமாக்ஸ்சில் தனது காதலைப்பற்றி சொல்லிக்கொண்டே உயிர் விடும் காட்சியிலும் கலக்கினார்.ஈரோடு ராயல் தியேட்டரில் இது 53 நாட்கள் ஓடியது.

trisha_n_vijay.jpg (400×397)
5.திருமலை. - தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா, ஸ்ரீ வித்யாவுக்கு பாத்ரூமில் சோப்போடுவது மாதிரி சீன்களில் எல்லாம் நடித்து பேரை கெடுத்துக்கொண்ட விஜய் இந்தப்படத்தில்தான் ஆக்‌ஷன் ரூட்டில் பயணிக்க ஆரம்பித்தார்.வாழ்க்கைங்கறது ஒரு வட்டம் மாதிரி இதுல ஜெயிக்கறவன் தோப்பான், தோக்கறவன் ஜெயிப்பான் என பேசிய பன்ச் டயலாக் சூப்பர் ஹிட்.விஜய் -ன் கேரியர் புது பாணியில் வெளிப்பட அடி கோலிய படம்.அதே போல் ஜோதிகாவுக்கு நிகராக டான்ஸ் காட்சியில் முக பாவங்களை சட் சட் என மாற்றி நடித்த படம்.ஈரோடு ராயல் தியேட்டரில் இது 43 நாட்கள் ஓடியது.

4.குஷி -இயக்குநர் எஸ் ஜே சூர்யா செய்த உருப்படியான ரெண்டே காரியம் 1. வாலியில் அஜித்தை இயக்கியது.. 2. குஷி படத்தில் விஜய்யை இயக்கியது. எம் ஜி ஆர் காலத்தில் வந்த அன்பே வா பட KNOT தான். ஆனால் படம் முழுக்க ஜாலியாக போகும். என் இடுப்பை பாத்தியா? -இல்ல பாக்கல போன்ற பிரசித்தி பெற்ற வசனம் இதில் உண்டு.மேட்டோ ரீனா மேட்டோ ரீனா விசில் அடிக்கும் நிலவு தானா..பாட்டில் டான்ஸ் கொடி கட்டி பறக்கும்.கட்டிப்பிடி கட்டிப்பிடிடா கண்ணாளா மும்தாஜின் நடனமும் ஃபேமஸ்.இந்தப்படத்தில் ஜோதிகா பல இடங்களில் ஓவர் ஆக்டிங்க் பண்ணி இருப்பார், விஜய் அண்டர்பிளே ஆக்டிங்க் பண்ணி சமப்படுத்தி இருப்பார். ஈரோடு ஆனூர் தியேட்டரில் இந்தப்படம் 70 நாட்கள் ஓடியது.

3.காதலுக்கு மரியாதை - விஜய் என்றால் விடலைப்பசங்கதான் ரசிகர்கள், சங்கவி கூடத்தான் சுத்துவார் என்ற இமேஜை உடைத்து தமிழ்த்திரை உலகையே கலக்கு கலக்கிய படம் .இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் பிரமாதமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும்வகையில் இருக்கும்.ஷாலினியின் நடிப்பும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் இருக்கும்.2 பேரும் போட்டி போட்டு நடித்திருந்தாலும் இது ஒரு இயக்குநர் படம். ஃபாசில் பின்னி பெடல் எடுத்த படம்.இளையராஜாவின் இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.க்ளைமாக்சில் இருவரின் காதலுக்கும் குடும்பம் ஓக்கே சொல்லும்போது ஒரு பின்னணி இசை வரும் பாருங்க.. சான்ஸே இல்லை..மேஸ்ட்ரோ மேஸ்ட்ரோதான்.இன்னும் கூட லவ் சப்ஜெக்ட் என்றால் இந்தப்படத்தைத்தான் ஸ்டோரி டிஸ்கஷன்போது இயக்குநர்கள் சொல்றாங்க.காவலன் பட விமர்சனங்களில் தினத்தந்தி, த ஹிந்து, ஸ்டார் டஸ்ட் போன்ற பத்திரிக்கைகள் விஜய்க்கு இன்னொரு காதலுக்கு மரியாதை என்றே குறிப்பிட்டுள்ளன.விஜய்-ஷாலினி இருவரும் புக்ஸ்டாலில் முதன்முதல் காதல் பார்வைகளை பரிமாறிக்கொள்ளும் சீன் கவிநயம்.அபிராமி தியேட்டரில் 64 நாட்கள் தேவி அபிராமி தியேட்டரில் 40 நாட்கள் மொத்தம் 104 நாட்கள் ஈரோட்டில் ஓடியது.

2. துள்ளாத மனமும் துள்ளும் -சார்லி சாப்ளின் படத்தில் வந்த கதையை ஆளாளுக்கு உல்டா பண்ணி இந்த டைமில் 12 படங்கள் வந்தன. கார்த்திக்கின் நிலவே முகம் காட்டு படம் மட்டும்தான் ஞாபகம் இருக்கு.ஈரோடு ராயலில் இந்தப்படம் பார்த்து விட்டு வெளியில் வரும்போது ரசிகர்கள் அடித்த கமெண்ட் 3 மாசத்துக்கு வேற படம் போட மாட்டாங்க..க்ளைமாக்சில் இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவம் இல்லை பாட்டுக்கு சிம்ரன் விஜய் இருவரும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள்.விஜய்க்கு டான்சில் சரிக்கு சரி சிம்ரன்தான்.படத்துல வேற எந்த செலவும் இல்லை. சிம்ப்பிளா வந்து லாட்டரி அடிச்சுது.ஈரோடு ராயலில் 103 நாட்கள் ஓடியது.

1. கில்லி- ரஜினிக்கு எப்படி பாட்ஷா முக்கியமான திருப்பு முனையோ அது மாதிரி விஜய்க்கு கில்லி முக்கியமான படம். அவர் நடித்து அதிக நாட்கள் ஓடிய படமும் இதுவே.. ( 205 நாட்கள்). கபடி வீரராக வரும் விஜய்க்கு படம் பூரா திரிஷாவைக்கூட்டிக்கொண்டு ஓடும் வேலைதான். பிரகாஷ்ராஜின் ஹாய்   செல்லம் டயலாக் செம ஃபேமஸ்..அப்படிப்போடு போடு பாட்டுக்கு விஜய் ஆடும் ஆட்டம் இளசுகளை துள்ளி ஆட வைத்தது.இந்தப்படத்தைப்பார்த்து காப்பி அடித்தே விஷால் பல படங்களில் நடித்தார்.நான் இந்தப்படத்தை பார்க்கும்போது படம் ஓக்கே நல்லாருக்கு என்றுதான் நினைத்தேன்.. ஆனால் படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட்.இதற்குப்பிறகு வந்த விஜய் படங்களை கில்லியோடு ஒப்பிட்டு அதுமாதிரி இது இல்லையே என பேச ஆரம்பித்தார்கள்..இது எல்லா ஹீரோக்களுக்கும் நடப்பதுதான்,,

டிஸ்கி 1 - இந்த லிஸ்ட்டில் காவலன் ஏன் இல்லைன்னா இப்போதானே படமும் வந்தது,, படத்தோட விமர்சனமும் வந்தது..பொண்ணு பார்த்த அனுபவம் கேட்டா லேட்டஸ்ட்டா பார்த்த பொண்ணு (மனைவி)பற்றி யாரும் சிலாகிச்சுக்கறதில்லை.அது மாதிரி...

டிஸ்கி 2 - இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது நல்ல நேரம் சதீஷ், சிரிப்புபோலீஸ் ரமேஷ்,ஃபிலாசபி பிரபாகரன்.. இதுல என்ன காமெடின்னா ரமேஷ்க்கு விஜய்னா உயிரு,,(!!) சதீஷ்க்கு விஜய்னா சொந்த சம்சாரம் மாதிரி( அவங்கவங்க சம்சாரத்தை யார் இப்போ ரசிக்கறாங்க?)  பிரபாகரன் தல அஜித் ரசிகர்.. பாப்போம் என்ன நடக்குதுன்னு..


நாட்டு நடப்பும், நையாண்டி சிரிப்பும்

https://www.cia.gov/library/publications/the-world-factbook/graphics/flags/large/in-lgflag.gif 
1,தமிழக சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன்: குழந்தை பிறப்பு முதல், பராமரிப்பு, கல்வி, மருத்துவம், திருமண உதவி உள்ளிட்ட, வாழ்க்கையின் அனைத்து தேவைகளுக்கும் தி.மு.க., அரசு உதவி வருகிறது. அடுத்த முறை, உட்கார்ந்து சாப்பிடும் வகையில், பொதுமக்களுக்கு வீடு தேடி டிபன் கேரியரில் சாப்பாடு வழங்கும் அளவுக்கு, பல திட்டங்களை கைவசம் வைத்துள்ளோம்.

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - அதுதான் 70 தலைமுறைக்கும் உக்காந்து சாப்பிடற அளவு தலைவர் சேர்த்து வெச்சிருக்காரே.. அப்புறம் என்ன?

2. பெட்ரோலியத் துறை மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி: சர்வதேச கச்சா எண்ணெய் விலை, பெரிய சவாலாக உள்ளது. இந்நிலையில், விலை உயர்வு தவிர்க்க முடியாது. எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டப்படுவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது.

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - அதுவும் கரெக்ட்தான்.. மக்கள் நஷ்டப்பட்டு நாசமாப்போனா நமக்கு என்ன?

3. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: சினிமா மோகத்தால் இளைஞர்கள், தே.மு.தி.க.,வில் சேருகின்றனர்; அவர்களை, பா.ம.க.,வுக்கு இழுத்து வர வேண்டும். வரும் தேர்தலில், பா.ம.க., தனித்து போட்டியிட்டால் கூட, 30 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலை தற்போது உள்ளது.

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - ஆளே இல்லாத டீக்கடைல யாருக்குண்ணே டீ ஆத்தீட்டு இருக்கீங்க?

4. பிரதமர் மன்மோகன் சிங்: அன்னிய நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை குவித்து வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்களை வெளியிட முடியாது. இந்த விஷயத்தில் நாம் பல்வேறு ஒப்பந்தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியுள்ளது.

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - பி எம் சார்.. நல்லா யோசிச்சு சொல்லுங்க..ஒப்பந்தமா? நிர்ப்பந்தமா?
http://www.positivityblog.com/_images/080509_gandhi.jpg

5. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் அறிக்கை: அணி அணியாக அ.தி.மு.க.,வில் இருந்து வெளியேறி, தி.மு.க.,வில் இணைகின்றனர். இந்த உண்மையை மூடி மறைக்கவே, தி.மு.க., உட்பட மாற்றுக் கட்சிகளில் இருந்து, அ.தி.மு.க.,வில் இணைகின்றனர் என்று கூறி, அ.தி.மு.க.,வில் இருப்பவர்களை மீண்டும் அதே கட்சியில் சேர்க்கும் அவலத்தை ஜெயலலிதா அரங்கேற்றுகிறார்.

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - தமிழனோட தலை எழுத்தைப்பார்த்தீங்களா?இந்தப்பக்கம் போனா ஊழலின் ஊற்றுக்கண்.. அந்தப்பக்கம் போனா ஊழல் கடல்.. பாவம் அவனும் தான் என்ன செய்வான்..?


6. அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படும் நடிகர் விஜய் பேட்டி: என் சினிமாக்களில் அரசியல் உள்ளது; ஆனால், ஒரேயடியாக அதை தந்துவிட முடியாது. இப்போதுள்ள தலைமுறை தெளிவாக உள்ளனர். அரசியலை சினிமாவுடன் இணைத்துப் பார்க்கும், பேசும் மன பக்குவம் அவர்களுக்கு உள்ளதா எனத் தெரியவில்லை. அவர்கள் நினைத்தால் எல்லாம் கூடும்.
கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - தம்பி.. அப்பா பேச்சைக்கேட்டுட்டு கட்சி.. சி எம்னு கனவு கண்டுட்டு அப்புறம் உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணானு அவஸ்தைப்பட வேணாம்..வந்தமா.. நடிச்சமா?4 காசு பார்த்தமா?ன்னு இருக்கனும்..ரஜினியே உள்ளே வர யோசிக்கறாரு.. உங்களுக்கென்ன அவசரம்.?

7.இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பரதன் பேட்டி: கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பற்றிய விவரங்களை ரகசியமாக வைத்திருப்பது ஏன்? அவர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்? தங்கள் பணத்திற்கு வரி செலுத்தாமல், பதுக்கி வைத்துள்ளனர். அந்த பணத்தை மத்திய அரசு பறிமுதல் செய்ய வேண்டும்.

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - ஏன்? ஏன்?னு ஏன் கேள்வி கேட்டு கொல்றீங்க? சொந்த செலவுல யாராவது சூன்யம் வெச்சுக்குவாங்களா?அந்த மேட்டர் வெளில வந்தா பாதி பேரு காங்கிரஸ் காரனா இருப்பான்.. மீதிப்பேரு கழக ஆட்களா இருப்பாங்க..

8.ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேச்சு: வாஜ்பாய் பிரதமராக இருந்த போது கூடிய அனைத்துக் கட்சி கூட்டத்தில், இலங்கை ராணுவத்திற்கு எந்த உதவியும் செய்யமாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சோனியாவும் பங்கேற்றார். ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல் காரியமே, சிங்கள அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்தது தான். ஆறு கோடித் தமிழர்களை உள்ளடக்கிய இந்தியாவை ஆளும் காங்கிரஸ், தமிழர்களுக்கு எதிரான முடிவை எடுத்தால், அதை நாம் கண்டிக்கக் கூடாதா?

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - எந்தக்காலத்துல  எந்த அரசியல்வாதி சொன்னதை செஞ்சிருக்கான்?ஏன் நீங்க கூடத்தான் என் ஒரே தலைவன் கலைஞர்தான் அப்படின்னு வீர வசனம் பேசுனீங்க..இப்போ அம்மா பின்னால ஓடலையா?


டிஸ்கி 1 - சிறுகதைகள் பத்திரிக்கைகளில் பெரிய வரவேற்பை இப்போது பெறுவதில்லை..பிளாக் உலகில் கதைகள் ரொம்ப குறைவான அளவிலேதான் வருது.. அப்படியே வந்தாலும் சும்மா நட்புக்காக லைட்டா ரீட் பண்ணிட்டு ஓட்டும் கமெண்ட்டும் போடறதை பாக்கறேன்..அதனால கதை போடலாமா? அல்லது மின்னல் கதைகள் மாதிரி குட்டி கதைகள் ( 8 லைன்)போடலாமா? அப்படின்னுயோசிக்கறேன்..


டிஸ்கி 2 - வழக்கமா நான் போடற சினிமா பதிவை விட கவிதை,கட்டுரைகளுக்கான ஹிட்ஸ் 13 மடங்கு கம்மியா இருக்கு.இருந்தாலும் நான் கலந்து கட்டி அடிக்கக்காரணம் இவனுக்கு சினிமாவை விட்டா எதுவும் தெரியாதுன்னு சொல்றவங்க வாயை அடைக்கத்தான்..

Monday, January 24, 2011

விட்டுச்சென்றவளுக்கு ஒரு விண்ணப்பம் -


தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில் 1999 ஆண்டில் நான் எழுதியகவிதை இது.இப்பூது படிப்பதற்கு எனக்கே அபத்தமாகத்தான் தெரிகிறது.பதின்ம பருவங்களில் நாம் செய்தது,எழுதியது எல்லாம் அபத்தமாக இப்போது தோன்றினாலும் வாழ்வியல் ரசனைகளையும் அவைதானே தருகின்றன.

வேண்டாம் என்று நீ

விலகிப்போனாலும்

காற்றின் ஒரு மூலக்கூறாய் மாறி

உன் சுவாசத்தில் நிரம்புவேன்.

நான் பார்க்கின்ற

அதே நிலாவையும்,சூரியனையும்

எங்காவது ஒரு மூலையில் இருந்து

நீயும் பார்க்கிறாய் என்பதால்

அங்கே குடியேற குறுக்கு வழியோ ,

என் முகம் அதில் பிரதிபலிக்க

விஞ்ஞான முறையோ தேடுகிறேன்.

திட்டமிட்ட பயணத்திலோ,

எதேச்சையாகவோ

நம் சந்திப்பு ஒருமுறை

நிச்சயம் நிகழும்.

அப்போது

உன் உதடுகளால் முடியாவிட்டாலும்

கண்கள் மூலமாவது

ஒரு புன்னகை சிதறவிடு.

அத்தினி ,சித்தினி, மச்சினி



1. என் மச்சினி டென்த் படிக்கறப்ப எல்லா சப்ஜெக்ட்லயும் ஒரு மார்க் தான் எடுத்தாங்களாம்.

அதுக்காக அவங்களை ஒரு மார்க்கமான பொண்ணுன்னு சொல்றதா?

--------------------------------------------------------------------------

2. காதலி கிட்டே உளறி மாட்டிக்கிட்டியாமே..?

நானும் எத்தனையோ ஃபிகரை லவ் பண்ணி  இருக்கேன்..உன்னை மாதிரி செம கட்டையை பார்த்ததில்லைன்னு பேச்சுவாக்குல சொல்லீட்டேன்.

--------------------------------------------------------------------------------------------

3.அவன் சரியான குடிகாரப்பையனா இருக்கானே...

எப்படி சொல்றே,?

ஒண்ணே முக்கால் லட்சம் கோடிக்கு ஊழல் நடந்திருக்குன்னு சொல்றேன்.. அடடா.. 8 லட்சம் கோடி குவாட்டர் வாங்கி இருக்கலாமே அப்படின்னு அங்கலாய்க்கிறானே....

------------------------------------------------------

4.தலைவர் எப்பவும் மேட்சிங்காதான் நடந்துக்குவார்...

அதுக்காக டீ குடிக்கக்கூட டி நகர் போகனுமா?


---------------------------------------------------------------------------

5.தலைவரே.. விலைவாசி பயங்கரமா ஏறிடுச்சு..

எனக்கு ஒரு வாரம் டைம் குடுங்க...

ஓஹோ.. ஏறுன விலைவாசிய இறக்கிடுவீங்களா?

ம்ஹூம், விலைவாசி ஏறுனதுக்கு என்ன காரணம்னு கண்டு பிடிச்சுடுவேன்.


----------------------------------------------------

6.ஊழல் பண்ணுன தலைவருக்கு இலக்கிய உலகில் மவுசு வந்துடுச்சாமே..

ஆமா.. இவ்வளவு பெரிய ஊழலை திறமையா செஞ்சது எப்படி?ன்னு புக் எழுதச்சொல்லி வற்புறுத்தறாங்களாம்.

--------------------------------------------------------------

7.நிருபர் - மேடம்,, உங்க முத காதல் பற்றி சொல்ல முடியுமா?

நடிகை - நீங்க டூ லேட்.. நான் இப்போ என்னோட 85வது காதல்ல இருக்கேன்.. எப்படி முதல் காதல் ஞாபகம் இருக்கும்?

----------------------------------------


8.கண்டக்டர் - டிக்கெட்.. டிக்கெட்


லேடி - யோவ்.. யாரைப்பார்த்து என்ன வார்த்தை சொன்னே...?

-------------------------------------------------------------

9.தலைவரு கோபமா இருக்கறது தெரியாம குழந்தைக்கு பேர் வைக்க சொன்னது தப்பா  போச்சு..

ஏன்?என்னாச்சு?

ங்கொய்யால ...ன்னு வெச்சுட்டாரு.

-----------------------------------------

10. தலைவரே... மகளிர் அணித்தலைவிக்கு குழந்தை பிறந்திருக்கு.. பேர் வைக்கனும்..

ஏய்யா.. மகளிர் அணித்தலைவியை வெச்சிருக்கறது.. நீ.. பேர் மட்டும் நான் வைக்கனுமா?


டிஸ்கி 1 -டைட்டில் கேட்சிங்கா இருக்கான்னு மட்டும் பாருங்க.. பதிவுக்கு மேட்சிங்கா இருக்கான்னு கேட்டுடாதீங்க..நேத்து கே பாக்யராஜ் படம் டி வி ல பாத்தப்ப அவரு சொன்ன ஒரு லைன் பிடிச்சது.. அப்படியே டைட்டில் ஆக்கிட்டேன்.

டிஸ்கி 2 - தொடர்ந்து 7 வது வாரமா தமிழ்மணத்துல முதல் இடம். ஆதரவுக்கு நன்றி.. போன வாரம் 2 நாள் தமிழ்மணம் ஓட்டுப்பட்டை வேலை செய்யலை,, திரை மணம் 2 நாள் ரிப்பேர். இதையும் மீறி ஜெயிச்சது பெரிய விஷயம் தாங்க்ஸ் டூ ஆல்

Sunday, January 23, 2011

சைனீஷ் சினிமா விமர்சனம்-FIRE BALL 19+


கோலிவுட்டுக்கு ஒரு வெண்ணிலா கபாடிக்குழு எப்படியோ,பாலிவுட்டுக்கு ஒரு லகான் (அமீர்கான்) எப்படியோ,ஹாலிவுட்டுக்கு பிளட் ஸ்போர்ட்  (ஜீன் கிளாட் வேண்டம்)எப்படியோ அதே போல் சைனீஷ் பட உலகிற்கு ஒரு ஃபயர் பால் ( FIRE BALL).

பேஸ்கட்பால் விளையாட்டை இவ்வளவு வன்முறையாகச்சொன்ன ஒரே படம் இதுவாகத்தான் இருக்கும்.1985 களில் தமிழக கிராமங்களில் ஊமைப்பந்து என ஒரு விளையாட்டு விளையாடுவார்கள்.குழுவில் உள்ள வீரர்களை ஓட விட்டு பந்தை அவர்கள் மீது எறிந்து அது அவர்கள் மேல் பட்டால் அவுட்.அந்த விளையாட்டையே கொஞ்சம் மாடர்ன் ஆக்கி ,வன்முறையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு திணித்தால் ஃபயர்பால் கேம் ரெடி.

அதாவது 2 டீம்.பேஸ்கட் பால் கிரவுண்டில் இறங்கும்.பாலை (BALL)எடுத்து யார் வலைக்குள் போடுகிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள்.ஆனால் அதற்குள் அவர்களூக்குள் அடித்துக்கொள்ள வேண்டும்.நோ ரூல்ஸ்,நோ கண்ட்ரோல்,நோ அம்ப்பயர்.எப்படி இருக்கும்.?அடி போட்டு பின்னு பின்னு என பின்னுகிறார்க்ள்.

இந்த விளையாட்டில் அடிபட்டு கோமா ஸ்டேஜில் இருக்கும் அண்ணனை மருத்துவ சிகிச்சை செய்து காப்பாற்ற ஜெயிலில் இருக்கும் தம்பி பெயிலில் வருகிறான்(அண்ணன்,தம்பி 2 பேரும் ஒருவரே-வாழ்க் டபுள் ஆக்ட்பாலிசி)
கஜினி சூர்யா மாதிரி கெட்டப்பில் இறுகிய முகத்துடன் வரும் ஹீரோ கதாபாத்திரத்துடன் ஒன்றி விடுகிறார்.மேட்ச் ஃபிக்சிங் நடக்கும் 2 குரூப்களீடம் சிக்கி விளையாட்டு குழுக்கள் எப்படி சின்னாபின்னன்மாகின்றன என்பதே கதை.
கேம் ட்ரூப்பில் இருப்பவர்களை ஒவ்வொருவருக்கும் ஒரு செண்ட்டிமெண்ட் டச் குடுத்து உலவ விடிருப்பது டைரக்டரின் சாமார்த்தியம்.வீட்டு வாடகை கட்ட முடியாததால் துரத்தப்படும் ஒரு அம்மாவின் மகன்,மோசமான தொழிலை கணவன் செய்கிறான் என தெரிந்தும் வேறு வழி இல்லாத நிலையில் அவனை ஏற்றுக்கொண்டு இருக்கும் மாசமான மனைவி (கர்ப்பவதி),இப்படி கேரக்டர்களை உருவாக்கி இருப்பது அவர்கள் மேல் ஈடுபாடு காட்ட உதவும் திரைக்கதை சாமார்த்தியம்.
இந்த மாதிரி கடுமையான படங்களில் வசனங்கள் பொதுவாக ரொம்ப ட்ரையாக (DRY) இருக்கும்.இந்தப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல.இருந்தாலும் பாலைவனத்தில் நீரூற்று போல ஆங்காங்கே சில பளீச் வசங்கள் உண்டு.

கோர்ட்ல இருந்து உனக்கு சம்மன் வந்திருக்கு.
ஹூம்,நல்லவனா வாழ விடமாட்டாங்களே?

மனசாட்சியை கழட்டி வெச்சிட்டுதான் சில தொழிலை  செய்ய வேண்டி இருக்கு.

என் கிட்ட அவ பணம் கடன் வாங்கி இருக்கா.பணத்தை கொடுத்துக் கழிக்கிறாளா?படுத்துக் கழிக்கிறாளா?
 தமிழ் படம் ஏதாவது பார்த்திருப்பாரோ டைரக்டர் என சந்தேகப்படும் அளவு ஏகப்பட்ட தமிழ்ப்பட ஃபார்முலாக்கள் ஆங்காங்கே.
படத்தின் ஹீரோயின் நிலாப்பெண்ணே பட ஹீரோயின் திவ்யபாரதியின் சாயலில் இருக்கிறார்,மாசு மரு இல்லாத,மச்சம் ஒன்றைக்கூட சருமத்தில் மிச்சம் வைக்காத அழகு முகம்.செர்ரிப்பழங்களை தோற்று விடச்செய்யும் அழகு சிவப்பில் அதரங்கள்.உடல்நிலை சரி இல்லாத காதலனாக இருந்தாலும் எஸ்கேபாகாமல் கடைசி வரை கூடவே இருந்து கவனித்துக்கொள்ளும் கதாபாத்திரம்.மிக நன்றாக செய்திருக்கிறார்.

மருத்துவ சிகிச்சைக்கான செலவுப்பணத்துக்கு அவள் விலைமகளாக பணி புரிந்துதான் பணம் ஈட்டுகிறாள்ள் என்பதை மிக நாசூக்காக ,ஒரே ஒரு லாங் ஷாட்டில் 2 செகண்டில் சொல்லி விடுவது டைரக்டரின் சாமார்த்தியம்.படத்தின் டைட்டில் போடும்போது திரைக்கதை என்ற லிஸ்ட்டில் 6 பேர் பெயர் வருகிறது.எனக்குத்தெரிந்து எந்த தமிழ்ப்படத்திலும் அப்படி வந்ததாக வரலாறே இல்லை.இருக்கவே இருக்காங்க  அப்பாவி  உதவி டைரக்டர்கள் குழு.

படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய 2 முக்கிய மைனஸ்கள்-

1.ஒளீப்பதிவு. மகா மட்டம்.தன்னை மேதை எனவும் ,ஆடியன்ஸை முட்டாள் எனவும் நினைக்கும் ஒரு ஒளிப்பதிவாளர்தான் இப்படி மோசமாக பணீயாற்ற முடியும்.லைட்டிங்க் அடிப்பது பார்ப்பவர் கண்களை உறுத்துகிறது.படம் பார்ப்ப்த்ற்குள் கண் வலி வந்துவிடும் போல.

2.பிண்ணனி இசை.என்னதான் சண்டைப்படமாக இருக்கட்டும்.இப்படியா டம் டம் டமால் டமால் என 2 மணி நேரம் நான் -ஸ்டாப் ஆக இசை அமைப்பது?

காதலனான அண்ணன் ஹாஸ்பிடல் பெட்டில். (HOSPITAL BED)காதலனின் தம்பி அதே முகச்சாயல்.கூடவே தங்க,பழக வேண்டிய சூழல் ,இவை அனைத்தையும் பிரமாதமாக கண்களில் வெளீப்படுத்தி கோல் போட்டிருக்கிறார் ஹீரோயின்.ஆனால் இருவரும் இணையும் காட்சிக்கான லீட் ஜீன் கிளாட் வேண்டம்மின் ஹார்டு டார்கெட்டிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

மாற்றான் தோட்டத்து மல்லிகையை மணம் நுகரும் மசாலாக்காட்சியைக்கூட அழகியல் உணர்வு வெளிப்படுவது மாதிரி எடுத்தது  சபாஷ் டைரக்டர் என சொல்ல வைக்கிறது,

மேற்கூறிய காட்சிகளில் கத்திரியுடன் அத்து மீறி நுழைந்து முக்கியமான சீன்களை கட் செய்த இந்திய சென்சார் குழுவை அகில இந்திய அஜால் குஜால் சீன் பட ரசிகர் மன்றம் இளைஞர்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறது.

படத்தின் நீதி -பணத்திற்காக வாழ்க்கையைத்தொலைக்கிறோம்.அது தெரிவதற்குள் நமக்கு வாழ்க்கை முடிந்து விடுகிறது.

Saturday, January 22, 2011

MY MISCALCULATIONS - சினிமா விமர்சனம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWmEUbc9BYTUIzUA9-rCbmSz8CVz3JT-ImaAhQYtXZLEAekwjwNlI21wGtOfMcja_nhyYDFASb3VouAaRnqz5czS5a7H5iYBlJabpC951KwfCo9DTQnLtejqTBnuLVN4bNGOUk0ucHX2Y/s1600/Siruthai-Movie-Stills-16.jpg
 கருத்துக்கணிப்புகள் என்றுமே சுவராஸ்யமானவை, அவை அவ்வளவாக பலிக்காது என்ற போதும்.பொங்கல் ரிலீஸ் படங்களைப்பற்றி நான் விமர்சனம் எழுதிய போது  பல கருத்து வேறுபாடுகளும் ,விமர்சனங்களும் எழுந்தன.நான் சொன்னதும்.. இப்போ நடப்பதும் - ஒரு அலசல்

கமர்ஷியல் சக்சஸ் ஆன சிறுத்தைக்கு நான் எதிர்பார்த்த விகடன் மார்க் 44. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக விகடன் 39 வழங்கி இருக்கிறது.இது எனக்கு விழுந்த முதல் அடி.ஆனால் அவர்கள் 8 பேர் ஆசிரியர் குழுவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பார்த்த கலவையான அனுபவம் + மார்க். ஏன் இவ்வளவு குறைவா போட்டிருக்கீங்க என அதில் பணியாற்றும் நண்பரிடம் கேட்டபோது  ரீமேக் படங்கள், வன்முறையை தூண்டும் படங்கள் இவற்றுக்கு மைனஸ் மார்க் உண்டு என்றார்.


மேலும் கார்த்தி படத்தின் பின் பாதியில்  (திருடன் போலீஸ் ஆன பிறகு) செய்யும் காமெடி சேஷ்டைகள் படத்துக்கு மைனஸ் எனவும் படத்தின் சீரியஸ்னெஸ்சை அது பாதிக்கிறது எனவும் கூறினார்.ஆனால் மக்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. படம் ஜாலியா போகுது. நல்ல எண்ட்டர்டெயினிங்க் படம் என்றே ரிசல்ட் வந்திருக்கிறது.




பத்திரிக்கைகளில் வரும் விமர்சனங்கள் பல முறை பொய்த்துப்போனதற்கு ஒரு உதாரணம் கேப்டன் பிரபாகரன் வந்த போது ராணியில் அதற்கு அளிக்கபட்ட மார்க் 37.அது மெகா ஹிட் ஆகி கேப்டனின் லைஃப் டைம் அச்சீவ்மெண்ட் படம் ஆனது. ஈரோடு கிருஷ்ணாவில் அது 143 நாட்கள் ஓடி  போட்ட முதலை விட 7 மடங்கு லாபம் ( தியேட்டர்காரர்களுக்கு) சம்பாதித்து குடுத்தது,


என்னதான் சமாதானம் சொல்லிக்கொண்டாலும் ஏ , பி , சி  என எல்லா செண்ட்டர்களிலும் பட்டையை கிளப்பும் ஒரு படத்துக்கு ஆனந்த விகடன் அளித்த மார்க் அதிர்ச்சிதான்.
http://imagehosting.nazdrovia.net/images/tapsee5.jpg



அடுத்து ஆடுகளம். இந்தப்படத்துக்கு நான் எதிர்பார்த்த விகடன் மார்க் 43. ஆனால் விகடன் அளித்த மார்க் 44. ஒரு மார்க் தான் அதிகம் என்றாலும் என் கணிப்பு  தவறுதான். அதே போல் இந்தப்படம் சிட்டியில் சுமாராத்தான் போகும் என நான் நினைத்தேன். கிராமக்கதை அதுவும் சேவல் சண்டை அதிகம் என்பதால் நகர்ப்புற மக்களை அதிகம்  கவர முடியாது என நான் நினைத்தேன்.ஆனால் விகடனின் பார்வை வேறு விதமாக இருக்கு.படம் எதார்த்தமா எடுக்கபட்டதாலும் ,நடிகர்களின் ஜீவனுள்ள நடிப்பு பிரமாதம் என்பதாலும் பொங்கல் ரேசில் இதுதான் ஃபர்ஸ்ட் என்பது போல் விமர்சனம் வந்திருக்கு.


பொதுவா விகடன்ல நல்ல படங்களுக்கு 2 பக்க விமர்சனம் போடுவாங்க. ஆனா பொங்கல் ரிலீஸ்ல எல்லா படங்களுக்குமே ஒரு பக்க விமர்சனம் தான் போட்டிருக்காங்க..ஏன்?னு தெரியல.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEcmldHYOCUV5vAwedY0gcekKirP0-wj_lb1YDjdtV2jyJB5FinTEmj6hsU46IGTtmuvMTmXux9Sc8cyIMYXFS4v3b7jcHwLkG-iUy6WTGezkXh7ICSPMA_xh6pcgHXWsjiV7zhXXYn2mI/s1600/Kavalan_9.jpgADA
அடுத்து காவலன் படம் விகடன்ல 45 மார்க் எதிர்பார்த்தேன். ஆனா 42 மார்க்தான் போட்டிருக்காங்க.விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமா இருந்திருக்கும்.
படத்துல விஜய் நடிப்பு நல்லாருக்கு என விமர்சனம் எழுதி இருந்தாலும் மொத்த படத்தோட விமர்சனம் அப்ப்டி ஒண்ணும் படம் பிரமாதம் இல்லைன்னு எழுதி இருக்காங்க.பார்வைகள் வேறுபடுது.பார்ப்போம்.ரசிகர்களின் இறுதி தீர்ப்பு எப்படி இருக்கும்?னு..


ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல காவலன் ரிலீஸ் ஆனதை விஜய் ரசிகர்கள் வருத்தமா பார்க்க தேவை இல்லை. இதே ஸ்டார் தியேட்டர்லதான் முதல் மரியாதை, கரகாட்டக்காரன் போன்ற மெகா ஹிட் படங்கள் ரிலீஸ் ஆகி முதல் 7 நாட்கள் காத்து வாங்கி அப்புறம் மக்களின் மவுத் டாக் மூலம் படம் வெற்றி அடைந்தது.


என்னைப்பொறுத்தவரை காவலன் படம் ஓடனும்னு நினைக்கிறேன். காரணம், இந்த மாதிரி வெரைட்டி சப்ஜெக்ட் படம் எடுபட்டாத்தான் தொடர்ந்து விஜய் மற்றும் முன்னணி ஹீரோக்கள் நல்ல சப்ஜெக்ட்ல நடிப்பாங்க.. இல்லைன்னா பழையபடி பஞ்ச் டயலாக்.. தாதா கதைன்னு போயிடக்கூடிய அபாயம் உண்டு.


டிஸ்கி  - திடீர்னு விஜய்க்கு ஏன் ஆதரவா எழுதறீங்க?ன்னு சிலர் கேக்கறாங்க.ஒரு மனுஷன் தோல்வில இருக்கறப்ப மேலும் மேலும் வெந்த புண்ல வேல் பாய்ச்சக்கூடாது.2 ஹிட் குடுக்கட்டும்.. மீண்டும் மசாலா படத்துல பஞ்ச் டயலாக் பேசறப்ப கிண்டல் அடிப்போம்.

3 லைன்ல எழுதிட்டா அது ஹைக்கூவா?

http://www.howtogetridofstuff.com/wp-content/uploads/how-to-get-rid-of-chapped-lips.jpg 
1. உச்சரிக்கும்போது

உதடுகள் கூட ஒன்று சேர்வதில்லை

காதல்



http://vadakaraivelan.files.wordpress.com/2008/09/currencyjpg.jpg
2. தொட்டுப்பார்க்க மட்டுமே சொந்தம்

பேங்க் காஷியர்

எண்ணும்  பணம்.



http://upload.wikimedia.org/wiktionary/ta/thumb/3/36/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF.jpg/210px-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF.jpg
3. கல்லறையே கருவறை

சமாதியில் 

முளைத்த செடி.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEga8PUz5EgMVlQH-NRxWB94fDkcAJn58NwMe8D2OVK82H0H9yOdNkU1KIpgaiIs7PqlyawxwXgwzNcgT-mB_C85-7fj1wDjtssBi7S6ugHAbNnvGBQehiuPn4jNMO_axUgDVb01wFc11UA/s400/roma.jpg
4.மச்சினியை ரசிக்கையில்

மனைவியின் முகம் ஞாபகம்.

இடமாறு தோற்றப்பிழை.


5.நிழலை விட நீ மோசம்...

இரவில் கூட என் 

பின்னாலேயே வந்து விடுகிறாயே..உன் நினைவுகள்.





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUfHC5tmHLj1GVh-yffNF7zFwIP_dCr4KtwapSW5mLMLwjKFsKG99zJjQXN77Mi98n8NvAD9EhGqsQeQdiAn-zIA5zOaygFTXdbepT3LD326Sm8DYQj_FlKuhKbuQFyqYnQvRbOV7mRo0o/s800/anjali_or_anupama092.jpg
6.   கூட வரும் மனைவி மட்டும் கண்ணகியாகவும்

எதிர்ப்படும் மற்றவர் மனைவிகள் மாதவிகளாகவும்

இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறது ஆணகள் மனது.

டிஸ்கி 1- ஹைய்யா .. நானும் ஹைக்கூ எழுதிட்டேன்.. இதுதான் முதல்ல வெச்ச டைட்டில் .ஆனா இதைப்படிச்சுட்டு நீங்க என்ன சொல்லப்போறீங்கன்னு யோசிச்சுப்பார்த்து அந்த கமெண்ட்டையே டைட்டில் ஆக்கீட்டேன்.ஹி ஹி எங்களை எல்லாம் யாரும் இறக்க முடியாது.. நாங்களே இறக்கிக்குவோம்ல..


டிஸ்கி 2 - மேலே உள்ள படங்களில் இருப்பது என் மச்சினியும் அல்ல மனைவியும் அல்ல.. ஆனா அப்படி இருக்க அவங்களுக்கு சம்மதம்னா நமக்கும் சம்மதமே.. ஹி ஹி ....இப்படிக்கு கிடைச்ச ஃபிகரை வளைச்சுப்போட துடிப்போர் சங்கம்.கவர்மெண்ட் அப்ரூவ்டு ( ரொம்ப முக்கியம்)

Friday, January 21, 2011

ஃபிகரும் , ஃபிகர் சார்ந்த இடங்களும்....

http://www.twitoos.com/photos/Aadukalam-heroine-tapsee-pics_F3A7/aadukalam-heroine-tapsee-hottest.jpg 
1.  எதிர் வீட்டு ஃபிகர் மாடில துணி காயப்போடும்போது  சரியாத்தெரியாம                 ( முகம்தான். ஹி ஹி ) அவஸ்தைப்பட்டேன்..இப்போ அடுத்த தெரு அகிலா கூட அம்சமா தெரியறா... தாங்க்ஸ் டூ வாசன் ஐ கேர்...

---------------------------------------------------------

2.  ஒரு ஃபிகரு 60 கிலோ வெயிட் இருந்தாலும் ஈசியா தூக்கிட முடியுது..ஆனா 14 கிலோ 400 கிராம் வெயிட் உள்ள கேஸ் சிலிண்டரைத்தூக்க முடியறதில்லை..ரொம்ப சிரமமா இருக்கு.. அது ஏன்?

ஹி ஹி .. அது வாலிப வயசு...

--------------------------------------------------


3.மேரேஜ் லைஃப்-ங்கறது பார்க்ல வாக்கிங்க் போறது மாதிரி..செம ஜாலி...

எனக்கென்னவோ ஜூராசிக் பார்க் மாதிரி தோணுது...

----------------------------------------------------------------------------------



4. ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ண 4 டிப்ஸ்

1.ரப்பர்   .2 . பென்சில்.  3. ஸ்கேல்.  4.  பேப்பர்.

----------------------------------------------------------------------------

5.கொசு வீட்டுக்கு வராம இருக்க என்ன செய்யனும்?

1. வீட்டு அட்ரசை தப்பா குடுத்திடனும்.

2.வீட்டை சுத்தி முள் செடியை நடனும்.

3.கொசுவை திருப்பி கடிக்கனும்.

4.கொசு வர்ற நேரம் பார்த்து போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணி கொசுவை ஜெயில்ல போடனும்.

-http://www.thefunfacts.com/wp-content/uploads/2011/01/Aadukalam-Heroine-Tapasee-Pannu-Hot-Pictures.jpg-----------------------------------------------------------------------------------
6. என் மனைவி சீரியலுக்கு அடிக்ட் ஆகிட்டா.. 

நீங்க..?

வேலைக்காரிக்கு அடிக்ட் ஆகிட்டேன்.

-----------------------------------------------------------------------

7. அப்பா.. காலேஜ்ல என் கூட படிக்கற பரிமளா கூட எனக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சு..

பிஸிக்கலா எந்த டச்சும் வெச்சுக்காதே.. மீறினா பயலாஜிக்கலா பிராப்ளம் வரும்போது மாட்டிப்பே..

------------------------------------------------

8 ஏண்டா... எவ்ளவ் தைரியம் இருந்தா டீச்சருக்கே லவ் லெட்டர் குடுத்திருப்பே..அவங்க உனக்கு அம்மா முறை ஆகுதுடா...

சாரி டாடி.. அவங்க உன் ஆள்னு எனக்குத்தெரியாது.... தெரிஞ்சிருந்தா இப்படி ஊடால பூந்திருக்க மாட்டேன்.

-------------------------------------------------------------------------

9.தலைவரே.. காகித உற்பத்தில இந்தியாவுலயே நாம 2வது இடமாமே...எப்படி?

ஆளாளுக்கு டெய்லி அறிக்கை விடறாங்களே.. அதான்.

-------------------------------------------------------------------------

10. தலைவரே.. நில பேர ஊழல்ல உங்களுக்கு சம்பந்தமில்லைன்னு எப்படி சொல்றீங்க?

நாம எந்தக்காலத்துல பேரம் பேசி இருக்கோம்..?வளைச்சுப்போடறதுன்னு முடிவு பண்ணீட்டா கட்டப்பஞ்சாயத்துதான்..

-------------------------------------------------------------------

டிஸ்கி - டைட்டில் ஜோக்ஸை மையமா வெச்சு தயாரிக்கபட்டது. அதுக்கான ஸ்டில் எதேச்சையா அமைஞ்சது...நீங்க தேவை இல்லாம அந்த ஃபிகரையும் ,ஃபிகர் சார்ந்த இடங்களையும் கவனிச்சுட்டு இருக்காம ஜோக்சை மட்டும் கவனிக்கவும்.. ஹி ஹி ஹி .

எனக்கினி கேர்ள் ஃபிரண்ட் வேணாமடா...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhab9kGqJ7DV_fJyGLeQjIvEzFbMLCAvF1yzyzlcGsCpR_o4FJPw3fqlJ5uW-7oqIm1iGP2WphOCAMnBhQH-cReQL0ZxqG38sQQlxm8PRqZQ1fpcmOSlTGjHVuPzAeRimzLp4g-YAzrCLM/s320/1.jpg
தோழி..!

நாம் இருவரும் சினேகமாய் இருந்தது

நினைவு இருக்கிறதா?

சேர்ந்து படிக்கும் வரைதான் சினேகிதமா?

செடியில் இருக்கும் வரை தான்

காம்போடு  பூவுக்கு  சினேகிதமா?

அறுவடை முடியும் வரை தான்

விவசாயிக்கு அரிவாளோடு  நட்பா?


மழை பெய்யும் வரை தான்

பூமியோடு வானத்துக்கு தொடர்பா?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhk9GxDiw6G0dvZCZePZ0yBbKdYejPr7ZuAWJ-SPVUJkKaSx_SJ_LhYpunrZwpWeKVDdKB0eAbiQTBDbwyAMj1i5hnBlZBi2_EW1RnXj7pLxTtwBno_vRtUyd1L-LbhDde17oHQZrSl_Pg/s640/manchari%20in%20Rain.jpg

சூரியன் மறையும் வரை தான்

நிலாவோடு பூமிக்கு தொடர்பா?

இல்லை தோழி..

நீ நினைப்பது போல் பகலில் நிலா

மறைவதில்லை..

மறைக்கப்படுகிறது.

உன் மாற்றத்தை கண்டு கலங்குது மனசு..

பெண் நட்புக்கு தனி அகராதியா?

நெஞ்சை நெருடுது

சொல்லிக்கொடுக்கபட்ட

பரம்பரை டியூஷன்.

Thursday, January 20, 2011

தேரடி வீதியில் தேவதை வந்தால்.....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAWIz8G8mj2kl2HF5TnAg7albf2dDaDo_6sHP5of4TJ3GEHGcsZXlgRRdZMWQxGn0k6g1dh_-h97NDfVR2zhhpE2xQkwxVcx7X-sxKCllyd-W0F1Om1Vozr6lf399mNWZEBAkJb6oEsWMi/s1600/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D.jpg

தைப்பூசத்திருவிழா ஸ்டார்ட் ஆகிடுச்சு. இனி ஒரு வாரத்துக்கு மஜாதான். எங்க ஊரோட மக்கள் தொகை கிட்டத்தட்ட ஒரு லட்சம்தான் இருக்கும். ஆனா இந்த விழாவுக்கு 4 லட்சம் மக்கள் கூடிடுவாங்க. இந்ததேர்த்திருவிழா பற்றி சொல்றதுக்கு முன்னே எங்க ஊர்ப்பெருமையை பற்றி 4 லைன் தம்பட்டம் அடிச்சுக்கறேன்.


தமிழ்நாட்லயே அதிக அளவில் பெட்சீட்  தயார் ஆவது இங்கேதான்.சென்குமார்,சென்கோப்டெக்ஸ்,சென்டெக்ஸ் உட்பட இங்கே ஏகப்பட்ட தறிப்பட்டறை இருக்கு. நெசவாளிகள் குடும்பம் அதிகம் உள்ள ஊர். எங்கப்பாவும் ஒரு நெசவாளிதான்.ஜக்காடு பெட்ஷீட் நெசவு நெய்வாரு.. நின்னுக்கிட்டே ஒரே ஒரு மிதியை அழுத்திக்கிட்டே இருக்கனும்..

மாட்டு வண்டி மலை ஏறுன கதை 20 வருஷத்துக்கு முன்னே ரொம்ப ஃபேமஸ் ஆச்சு. சென்னிமலைல 1350 படிகள். சாதாரண வேகத்துல ஏறுனா 28 நிமிஷம் ஆகும், அதே இறங்க 7 நிமிஷம் தான் ஆகும்.நல்லா கொழு கொழுன்னு வளர்க்கப்பட்ட 2 காளைகள் மாட்டு வண்டியில் பூட்டப்பட்டு மலை ஏறுச்சு. அதை 8 லட்சம் ஜனங்க பார்த்தாங்க.அதுக்கப்புறம்தான் எங்க ஊர் ஃபேமஸ் ஆச்சு.

மலை மேல ஒரு சுரங்கப்பாதை இருக்கு. அது மன்னர் காலத்துல கட்டப்பட்டது. பழநி வரை போகுமாம். எல்லாம் சொல்ல கேள்விதான்.யாருக்கு அதை டெஸ்ட் பண்ண தைரியம் இருக்கு.?

இந்த 7 நாள்ல ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்.தினமும் ஆர்க்கெஸ்ட்ரா,நாடகம்,கரகாட்டம்,தப்பாட்டம்,ஒயிலாட்டம்,மயிலாட்டம், சினிமா ( திரை கட்டி படம் போடறது) னு  ஒரே கலக்கல்தான்.தெப்பத்தேர் அன்னைக்கு வாண வேடிக்கை நடக்கும் பாருங்க.. 5 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள்..வெடிகள் ஒரு மைதானத்துல வெடிப்பாங்க.. ( எல்லாம் கோயில் காசுதான்) நாம எந்தக்காலத்துல காசு குடுத்து வெடி வெடிச்சிருக்கோம்?

இன்னைக்கு காலைல 6 மணிக்கு தேர் வடம் பிடிச்சாங்க.. மக்களோட ஆரவாரத்தோட தேர் இழுக்கறதைப்பார்க்க கண் கோடி வேணும்.மனிதன் தனியா இருக்கும்போது ஒரு மாதிரியும், கூட்டமா இருக்கும்போது வேற மாதிரியும் நடந்துக்குவான். நல்லா நோட் பண்ணி பாருங்க..அமைதியா இருக்கற பசங்க எல்லாம் இந்த விழாவுல ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க.

ஈஸ்வரன் கோவிலை சுற்றி நால்ரோடு இருக்கு .அந்த நாலு வீதிலயும் தேர் சுற்றி வரும்.ஒவ்வொரு டர்ன்லயும் தேர் திரும்ப படாத பாடுபடும். தேர்சக்கரத்தை கண்ட்ரோல் பண்ண ஒரு மரக்கட்டை வெச்சிருப்பாங்க.. அதை முட்டுக்குடுத்துதான் திருப்புவாங்க..சில சமயம் தேர் வர்ற வேகம் பார்த்தா நம்ம மீது விழுந்துடுமோன்னு பயமா இருக்கும். ஆனா விழாது.

தேர் நிலை சேர்ந்ததும் மக்கள் வெண்ணெய், உப்பு,மிளகு, எலுமிச்சை இதை எல்லாம் வீசுவாங்க... எதுக்கு வீசறாங்கன்னு அவங்களுக்கே தெரியாது. எல்லாம் ஒரு ஐதீகம்தான்.

பக்தி, கடவுள் நம்பிக்கை இதை எல்லாம் தாண்டி இந்த விழாவுல நான் பாக்கறது மக்கள் உற்சாகமா, ஒற்றுமையா,சந்தோஷமா, சொந்தக்காரங்களோட சிரிச்சி பேசி மகிழ்வதைத்தான்.வெளி ஊர் ஆட்களும் ,உள்ளூர் ஆட்களும் கூடி மகிழ்வதை பார்க்கவே சந்தோஷமா இருக்கும்.

விழாவோட இறுதி நாள்ல சத்தாவரம் நடக்கும். அதாவது தெய்வ  தரிசனம்.இரவு 7 மணில இருந்து மறு நாள் காலை 8 மணி வரை கூட்டம் பின்னி எடுக்கும். 4 வீதிகள்லயும் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் கூடி தேர்க்கடையை சுத்தீட்டே இருப்பாங்க.எவனும் எதையும் வாங்க மாட்டான். சும்மா பாவ்லா காண்பிப்பாங்க.
http://staff.science.nus.edu.sg/~sivasothi/blog/images/20070206-jeff_ooi-thaipusam.jpg
கூட்டத்துல ஃபிகருங்களை இடிக்கறது,ஆண்ட்டிகளை உரசறதுன்னு நம்மாளுங்க பண்ற லோலாயம் இருக்கே.. அட அட.. இதுக்குன்னே 80 கி மீ நடைப்பயணமா வர்ற ஆளுங்களும் உண்டு.

அதனால உள்ளூர் பெண்கள் யாரும் அன்னைக்கு நைட் வெளில வர மாட்டாங்க..உள்ளூர் ஆண்கள் .. நைசா அவங்களை தூங்க வெச்சுட்டு மிட் நைட்ல கிளம்பிடுவாங்க.. ராத்திரி ரவுண்ட்ஸ் அப்பை ஜூனியர் விகடன் நிருபரை விட பிரமாதமா பண்ணுவாங்க..

தேர்க்கடைகள் ஏராளமா இருக்கும்.இதுல அவனவன் லவ்வர், கேர்ள் ஃபிரண்ட்ஸ் (கவனிக்க - பன்மை)க்கெல்லாம் ஜிமிக்கி,வளையல்,தோடு அது இதுன்னு ஏதாவது வாங்கிகுடுப்பாங்க.

பலூன் சுடறது..,ரிங்க் வீசி சோப்,பிஸ்கட் பாக்கெட் ஜெயிக்கறது,ராட்டன் தூரினு ஊரே களேபரமா இருக்கும்.முன்ன பின்ன பாக்காத ஃபிகரை கணக்கு பண்றவங்க இங்கே அதிகம்.ஸ்கூல்ல படிக்கறப்ப மேத்சே போட மாட்டான்.. ஆனா ஃபிகரை மேத்தமேட்டிக்ஸ் பண்றதில பி ஹெச் டி பண்ணி இருப்பான்.
http://www.noexpectations.com.au/images/thaipusam-0206-00234-display.jpg
கரும்பு ,பொரி கடலை,பட்டாணி சுண்டல் இந்த 7 நாள்ல செமயா சேல்ஸ் ஆகும்.வேல் குத்தறது, அலகு குத்தறது.. அரோகரா அரோகரா போடறதுன்னு ஒரே களேபர பூமியா காட்சி அளிக்கும். ( அலகு குத்தறதை  கண்ல பாக்க முடியாது).

அண்ணமார்,தேவகிரி, பாலமுருகன் அப்படின்னு 3 சினிமா தியேட்டர் இருக்கு.. (அதானே பார்த்தேன்,.. ஆன்மீகக்கட்டுரைல கூட சினிமா மேட்டரை நுழைச்சிடுவியே?)இந்த தரிசனம் அன்னைக்கு விடிய விடிய சினிமா நடக்கும். காட்சி நேரம் காலை 10, 1 , 4 , 7 , 10, 1, 4 , 7  அப்படின்னு 8 ஷோ போட்டுடுவாங்க.செம கலெக்‌ஷன்தான்

ஈரோட்ல இருந்து சென்னிமலை வர டவுன் பஸ் நெம்பர் 11 . டிக்கெட் விலை ரூ 6.   L S S  பஸ்னா ரூ 6.50. விழாக்கால பேருந்துன்னு போர்டு போட்டான்னா ரூ 10 ரவுண்டா வசூல் பண்ணிடுவாங்க..சர்வீஸ் பஸ்ல ரூ 10.  ஈரோடு டூ பழநி வர்ற சக்தி முருகன் பஸ் உட்பட 13 சர்வீஸ் பஸ் இருக்கு.சக்தி முருகன் பஸ்ல மிச்சமான ஃபிகருங்க எல்லாம் வரும். ( அதென்ன மிச்சமான?- நாம ரசித்த அழகு போக மிச்ச அழகே 100% இருக்கும்)

படிக்கறவங்க யார் வேணாலும் வாங்க. நல்ல விருந்தோம்பல் உண்டு.

டிஸ்கி 1 - ஆன்மீக கட்டுரைதான் டைப் அடிச்சேன்.. மறுபடி படிச்சு பாக்கறப்ப சராசரி ரசிகனுக்கு போர் அடிக்கக்கூடிய தகவல்களை..ஸ்தல புராணங்களை எடிட் பண்ணிட்டு பார்த்தா அப்புறம் கட்டுரை இப்படி  அமைஞ்சிடுச்சு.. சாரி...

டிஸ்கி 2 - நாளைக்கு வெள்ளிக்கிழமை. வழக்கமா பக்தர்கள் வெள்ளிக்கிழமைலதான் விரதம் இருப்பாங்க.ஆனா நான் சினிமா பதிவு போட்டு 4 நாள் ஆகுது. அந்த விரதத்தை முடிக்கப்போறேன்.. ஹி ஹி

வாயைக்குடுத்து வாங்கிக்கட்டிக்கறாங்கப்பா

 http://www.bharatstudent.com/ng7uvideo/bs/gallery/normal/events/kw/2008/nov/lankanatrocitiesstarsfastinprotest/lankanatrocitiesstarsfastinprotest_050.jpg
1. தமிழக நிதியமைச்சர் அன்பழகன்: அரசின் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு பெறும் பயனாளிகளுக்கு முதல் நாள் பட்டா வழங்கப்படும்; அடுத்த நாள் வீடு வழங்கப்படும்; அதற்கு அடுத்த நாள் பயனாளிகள் குத்துவிளக்கு ஏற்றலாம்.

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - நீங்க ரொம்ப கிரேட்டுங்கண்ணா.. ஆட்சி போகப்போறது தெரிஞ்சும் இன்னும் நல்லது பண்றீங்களே..?அது ஏன் உதவித்தொகை வழங்கறதை மட்டும் தவணை முறைல பண்றீங்க? ஊழல் பணம்,லஞ்சப்பணம் இவைகளை மட்டும் சிங்கிள் பேமெண்ட்டா வாங்கிக்கறீங்க..?

2. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன்: சென்னை நகரில் குற்ற கண்காணிப்பிற்காக 15 கோடி ரூபாய் செலவில், 1,000 கேமராக்கள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்தாண்டில் நடந்த குற்ற சம்பவங்களில் 77 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - அதெல்லாம் சரிதான். அந்த 1000 கேமராக்கள் வழங்கப்பட்டதுல ஏதும் ஊழல் இல்லையே..? க்ரைம் 77% கண்டுபிடிச்சதெல்லாம் ஓக்கே தான்.. எத்தனை கேஸ்ல தண்டனை வாங்கித்தரப்பட்டதுன்னு பாருங்க முதல்ல..


3. தமிழக காங்., எம்.எல்.ஏ., பீட்டர் அல்போன்ஸ்: மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலபாரதி, பதட்டத்துடன் பேசுகிறார். சிலர் பெண்ணை வைத்துக் கொண்டு மாப்பிள்ளை தேடுவர்; சிலர் மாப்பிள்ளையை வைத்துக் கொண்டு பெண் தேடுவர்; ஆனால், இவர்கள், கல்யாண மண்டபத்தை வைத்துக் கொண்டு மணமக்களைத் தேடும் நிலையில் உள்ளனர்.


கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக்  -நாங்க கூடத்தான் அரசியல்ல நல்லவங்களைத்தேடிட்டு இருக்கோம்.. கிடைக்க மாட்டேங்குதே..தேனை எடுக்கறவன் புறங்கையை நக்கறதைக்கூட மன்னிச்சிடலாம்..ஆனா மொத்த தேன் கூட்டையும் ஆட்டையப்போட்டுடறானுங்களே...

4.தமிழக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அன்பரசன்: ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியை, "சாட்டிலைட் சிட்டி'யாக மாற்றும் திட்டம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.


கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - சாட்டி “லைட்”  ங்கறதால லைட்டாதான் ஊழல் நடக்கும்னு யாரும் நம்பிடாதீங்க.. ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும்னு நினைக்கறேன்.


 http://www.voicetamil.com/wp-content/uploads/2009/07/kanimoli-karunanidhii.jpg
5. தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி: "வீட்டை கட்டிப் பார்; கல்யாணத்தை பண்ணிப் பார்' என்று சொல்வர். கல்யாணம் செய்ய 25 ஆயிரமும், வீடு கட்ட 75 ஆயிரம் ரூபாயும் இந்த அரசு தான் கொடுக்கிறது. சும்மா கொடுத்த மாட்டை, பல்லைப் பிடிச்சு பார்க்கக் கூடாது.


கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - இந்தாளுக்கு லொள்ளைப்பாரு.. எகத்தாளத்தை பாரு.. என்னமோ கஷ்டப்பட்டு கூலி வேலை செஞ்சு வந்த சொந்தப்பணத்துல அள்ளிக்குடுக்கற மாதிரி உதார் விடறதை..நீங்க செய்யற தப்பை மறைக்க அரசாங்கப்பணத்துல அதாவது மக்கள் வரிப்பணத்துலருந்து எடுத்து தர்றீங்க.. அதுல எத்தனை ஊழலோ ..அடுத்த ஆட்சி வந்தா தானே தெரியும்?

6. தமிழக துணை முதல்வர் ஸ்டாலின்: கூட்டுறவு கடன் தள்ளுபடியால், பொள்ளாச்சி அ.தி.மு.க., எம்.பி., சுகுமார், ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கடன் தள்ளுபடி பெற்றுள்ளார். உடுமலை தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சண்முகவேல் ஒரு லட்சத்து 39 ஆயிரம் ரூபாயும், அவரது மனைவி மனோன்மணி ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாயும் கடன் தள்ளுபடி பெற்றுள்ளனர்.


கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - இப்போ என்ன சொல்ல வர்றீங்க ?அம்மாகட்சி ஆளுங்களை விலை குடுத்து வாங்க ஆரம்பிச்சாச்சுன்னு சொல்றீங்களா?இல்ல.. மறைமுகமா அந்த கட்சி ஆளுங்களுக்கு அழைப்பு விடறீங்களா?


7. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: பள்ளிகளில், சினிமா பாடல்களுக்கு, குழந்தைகளை நடனம் ஆடச் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோல், நம் வீர விளையாட்டுகள் மறைந்து, இப்போது தெருவெல்லாம், கிரிக்கெட் விளையாடுகின்றனர். கிரிக்கெட் ஒரு சூதாட்ட விளையாட்டு. எனவே, கிரிக்கெட் விளையாட்டை தமிழகத்திலிருந்து ஒழிக்க வேண்டும். இதற்காக, மாநிலம் தழுவிய பிரசார இயக்கத்தை மேற்கொள்ள உள்ளோம்.


கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - பரவால்லைய்யா .. காமெடி பீஸா இருந்தாலும் அப்பப்ப நல்ல வார்த்தை எல்லாம் சொல்றீங்கோ...அது இருக்கட்டும்.. கோபாலபுரத்துக்கும் , போயஸ் தோட்டத்துக்கும் மாறி மாறி நடைப்பயணம் போறீங்களாமே.. அது எதுக்கு?


8.முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேச்சு: ஒருவருக்கு பதவி கொடுக்க முடியவில்லை என்ற கோபத்தில், சட்ட மேலவையை எம்.ஜி.ஆர்., கலைத்தார். யாருக்கோ பதவி கொடுக்க வேண்டும் என்ற விருப்பத்தில், சட்ட மேலவையை கருணாநிதி மீண்டும் கொண்டு வர முயற்சிக்கிறார்.நாங்கள் வரும் தேர்தலில் தனியா நின்று எங்கள் பலத்தை நிரூபிப்போம்.


கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - எலக்‌ஷன் டைம்ல 20 ஷீட் வேணும், 30 ஷீட் வேணும்னு லோ லோ-னு அலைவீங்க.. இப்போ சோலோ
வா நிக்கறதைப்பத்தி பேச ஆரம்பிச்சீட்டீங்களே.. தேவலை காங்கிரஸ் காரங்க உப்பு போட்டு சோறு சாப்பிட ஆரம்பிச்சீட்டீங்களா?



9.ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: தமிழக மீனவர்களின் உயிர், மத்திய அரசுக்கு கிள்ளுக்கீரையாகி விட்டது. தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு. "தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதால் தான் பிரச்னை ஏற்படுகிறது' என, பிரதமரும், உள்துறை அமைச்சரும், இலங்கை அரசுக்கு ஆதரவாக கருத்து கூறுகின்றனர். ஒவ்வொரு முறையும், தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் போது, பிரதமருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதுவதும், அனுதாபம் தெரிவிப்பதும், ஊரை ஏமாற்றும் கபட நாடகம்.


கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - வந்துட்டாருய்யா கவர்னரு.. யாரு இப்போ ஊரை ஏமாத்தலை..?அரசியல்வாதிங்கன்னாலே ஊரை அடிச்சு உலையில போடறவங்கன்னுதானே அர்த்தம்..?எரியற கொள்ளில எது நல்ல கொள்ளின்னு பார்த்தா ஒரு பயலும் தேறலையே..?

10 . .தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு: சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சியினரும், கூட்டணி தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். பா.ஜ.,வை பொறுத்தவரை, தி.மு.க., மற்றும் காங்கிரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறோம். தற்போதைய சூழ்நிலையில், பா.ஜ., பலத்தைக் காட்ட வேண்டிய தருணம். தனித்து போட்டியிடுவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.



கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - சிங்கம் சிங்கிளாதான் நிக்கும்கற பஞ்ச் டயலாக் எல்லாம் இங்கே எடுபடாது.. அசிங்கபட்டு போயிடுவீங்க.ஆனானப்பட்ட அம்மாவே தனியா நிக்க பயப்படறாங்க.. உங்களுக்கென்ன? 


டிஸ்கி 1  - எங்க ஊர்ல (சென்னைமலை)இன்னைக்கு தைப்பூச தேர்த்திரு விழா.. அதனால முதன்முதலா ஒரு ஆன்மீக கட்டுரை ரெடி பண்றேன்.எப்போ எங்கப்பா இறந்தாரோ (7.7 2006) அப்பவே எனக்கு கடவுள் நம்பிக்கை குறைஞ்சிடுச்சு.. இருந்தாலும் இன்னும் நாத்திக வாதி ஆகிடலை.அதனால ஆன்மீகக்கட்டுரை போட்டா தப்பில்லைன்னு தோணுது.. அதுல பக்தியை விட அதிகமா ஊர்ப்பெருமையும்..கோயில் தல வரலாறும் இருக்கும்.கபர்தார்.



டிஸ்கி 2 - தியேட்டர்ல நல்ல படம் ஓடுதோ ,குப்பைப்படம் ஓடுதோ தியேட்டர்ல கூட்டம் குறைஞ்சிட்டா படத்தை தூக்கிட்டு புதுப்படம் போடற தியேட்டர் ஓனர் மாதிரி நானும் இப்போவெல்லாம் பிளாக்ல கூட்டம் குறைஞ்சிட்டா புது போஸ்ட் போட்டுடறேன்..ஆன்லைன்ல 10 பேருக்கும் குறைவா இருந்தா தூக்கிடுவேன். அதான் என் அளவுகோல் .

Wednesday, January 19, 2011

ஜாலிலோஜிம்கானா ஜோக்ஸ்

http://thebollywoodactress.com/wp-content/uploads/2008/06/ileana.jpg 
1.தலைவர் நாலும் தெரிஞ்சவர்னு எப்படி சொல்றே?

இதுவரை 4 தடவை கட்சி மாறி இருக்காரே?

 ---------------------------------------------------------------------

2. தலைவரே.. அரசியல்வாதிகள் ஆபத்தானவர்களா? -னு ஒரு கருத்தரங்கம் நடக்குது..அதுக்கு உங்களை தலைமை தாங்க கூப்பிடறாங்க..
அது அப்புறம் பார்த்துக்கலாம்.. மகளிர் அணித்தலைவியை ரேப் பண்ணீட்டேன், ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகனும்..

--------------------------------------------------------------

3.இந்தப்படத்துக்கு சென்சார் சர்ட்டிஃபிகேட் வாங்க முடியலயா? ஏன்?

படம் போட்ட 10வது நிமிஷத்துலயே  செம போர்னு சென்சார் ஆஃபீசருங்க கிளம்பிட்டாங்களாம். முழுப்படத்தை பார்த்தாத்தானே சென்சார் சர்ட்டிஃபிகேட் தர முடியும்?

---------------------------------------------------------------

4. மகளிர் அணித்தலைவியோட கர்ப்பத்தை கலைச்சே ஆகனும்னு தலைவர் அடம் பிடிக்கிறாரே.. ஏன்?

அப்படி செய்யலைன்னா கட்சியை கலைக்க வேண்டியது வருமாம்.

-------------------------------------------------------

5. படம் பூரா ஹீரோயின் தூங்கி வழிஞ்சிக்கிட்டே இருக்காங்களே.. ஏன்?

அந்தப்படம் அவங்களோட ட்ரீம் புராஜக்ட்டாம். (DREAM PROJECT).

----------------------------------------------------------------------
http://i0.peperonity.info/c/5230FA/765164/ssc3/home/065/wallpaperzone3/ileana05_ballia_peperonity.jpg_320_320_0_9223372036854775000_0_1_0.jpg
6.டாக்டர் .. நீங்க முன்னுக்குப்பின்முரணா நடந்துக்கறீங்களே..?

எப்படி?

சமாதானத்துக்கான வெள்ளை நிற டிரஸ் போட்டிருக்கீங்க.. ஆனா கைல வன்முறைக்கான ஆயுதங்களான கத்தி ,கத்திரி எல்லாம் வெச்சிருக்கீங்களே..

-----------------------------------------------

7.தலைவர் பெண்களை ரொம்ப மதிக்கற டைப்பாமே..?

ஆமா.. 16 வயசு  ட்டூ  21 வயசுப்பொண்ணுங்களை ரொம்ப மதிப்பார். மடிக்கப்பார்ப்பார்.. ஆராதிப்பார்..

------------------------------------------.


8.பேங்க்ல லோன் செக்‌ஷன்ல வேலை செஞ்சது தப்பா போச்சு..

ஏன்?


கடன்காரப்பயலே அப்படின்னு எல்லாரும் கூப்பிடறாங்க..

-------------------------------------------------------------------------------

9. எக்சாம் சூப்பர்வைசர் -ஏண்டா எக்சாம் எழுதறப்போ காதுல  வாட்சை வெச்சு இருக்கே...?

ஸ்டூடண்ட் -  காலம் பதில் சொல்லும்.(அப்படின்னு சொல்வாங்க..எக்சாம் கொஸ்டீன் பேப்பருக்கு அது பதில் சொல்லுதா?ன்னு பாக்க)

---------------------------------------------------

10.நான் உங்களுக்கு எஸ் எம் எஸ் அனுப்புனா நீங்களும் பதிலுக்கு  எஸ் எம் எஸ் தான் அனுப்பனும்னு இல்ல..ஒரு வாஷிங்க் மிஷின், ஹோம் தியேட்டர், ஒரு ஃபிரிட்ஜ் இப்படி எது வேணும்னாலும் அனுப்பலாம்.. இது எல்லாத்தையும் வெச்சுக்க ஒரு சின்ன வீடு கூட வாங்கித்த்ரலாம்..அது உங்க சவுகர்யம்..அதுக்காக உங்க சின்ன வீடு பிங்க்கியை அனுப்பிடாதீங்க.. அது ரொம்ப ராங்கி ன்னு கேள்விப்பட்டேன்.


-----------------------------------------------

டிஸ்கி 1 - இப்போவெல்லாம் யார் என்ன பதிவு போட்டாலும் அது என்னைத்தான் தாக்கிப்போடறதா  நானே நினைச்சுக்கறேன். இது பிரமையா? அல்லது நாம தப்பு நிறைய பண்றமா? -னு தெரியல..உப்பு தின்னவன் தண்ணி குடிக்கனும்..தப்பு செஞ்சவன் வருந்தி ஆகனும்..கொஞ்சம் கொஞ்சமா திருந்தனும்.அதனால சினிமா மேட்டரை குறைச்சுட்டு சிறுகதை ,கவிதை,இலக்கியம்னு இறங்கலாம்னு ஐடியா..

டிஸ்கி 2  - ஆடுன காலும் ,பாடுன வாயும் சும்மா இருக்காதும்பாங்க.. அது மாதிரி சினிமா பாக்கறவன் கண்ணும் சும்மா இருக்காதுன்னு நினைக்கறேன்.. பார்ப்போம். ( சினிமாவை பார்ப்போம்னு அர்த்தம் இல்லை.. என்ன நடக்குதுன்னு பார்ப்போம்)

டிஸ்கி 3 - ஜாலிலோஜிம்கானா அப்படிங்கற வார்த்தையே தமிழ்ல கிடையாது..அப்ப்டினு கேக்கறவங்களுக்கு நம்ம வாழ்க்கையே அர்த்தம் இல்லாததுதான்..அதுக்கே நம்மால அர்த்தம் கண்டுபிடிக்க முடியல.. ஹி ஹி இதுக்கு மட்டும் அர்த்தம் கண்டு பிடிக்க முடியுமா?