Wednesday, January 12, 2011

பிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி? பாகம் - 3

http://www.inneram.com/images/2010/kumudam.gif 
பத்திரிக்கை உலகின் ரஜினி என பெயர் பெற்றதும்,இந்தியாவிலேயே அதிகம்
விற்கும் தமிழ் வார இதழ் என முத்திரை குத்தப்பட்ட்டதும் குமுதம் வார இதழ்.
மேல்தட்டு மக்கள் எப்படி ஆனந்த விகடனை விரும்பி படிக்கிறார்களோ ,அதேபோல் கீழ்தட்டு மக்கள், மற்றும் கிராமப்புற மக்கள் குமுதத்தை அதிகம் விரும்பி படிக்கிறார்கள்.


1. வாசகர் கடிதம் - இந்தியா டு டே இதழுக்கு அடுத்த படியாக  வாசகர் கடிதத்துக்கும் பரிசு கொடுப்பது குமுதம்தான். அஞ்சல் அட்டை என்ற பெயரில் வரும்.புதன் கிழமை வெளியாகும் புக் பற்றி உங்கள் விமர்சனங்களை சனிக்கிழமைக்குள் அனுப்பினால் அடுத்த புதன் கிழமை புக்கில் அது வந்துவிடும்.(வேறு எந்த புக்கும் இவ்வளவு ஃபாஸ்ட்டாக
வாசகர் கடிதத்தை பரிசீலிப்பது இல்லை.)எழுத்துத்துறைக்குப்புதியவர்கள் அஞ்சல் அட்டை பகுதியில் இருந்து ஆரம்பிக்கலாம்.

அதேபோல் ஜால்ரா அடித்துத்தான் எழுத வேண்டும் என்பதில்லை.க்ளிக் கலாட்டா என்ற பகுதியில் வரும் ஃபோட்டோ கமெண்ட்ஸ்களை நக்கல் அடித்துப்போடும் லெட்டர்ஸ்க்கு முன்னுரிமை தருவார்கள்.அரசு கேள்வி பதில்களில் சொல்லப்பட்ட பதில்களை சிலாகித்தோ திட்டியோ எழுதும் கடிதங்கள் போடப்படும். குறிப்பாக லேனா தமிழ்வாணன் எழுதும் கட்டுரைகள்
பற்றியோ,ஆசிரியர் தலையங்கம் பற்றியோ எழுதினால் போட்டுடுவாங்க.

இதற்குப்பரிசு ரூ 50. படைப்பு வந்தால் காம்ப்ளிமெண்ட்ரி காப்பி அனுப்பிடுவாங்க. ( இதில் எல்லா வார இதழ்களும் ஒரு டெக்னிக்கை கடைப்பிடிப்பர்கள்.இதழ் கடைக்கு வந்து 7 நாட்கள் கழித்தே காம்ப்ளிமெண்ட்ரி காப்பி அனுப்பி வைக்கப்படும். ஆர்வக்கோளாறில் நாம் கடையில் வாங்கட்டும் என.)

பிளாக்கில் எப்படி பின்னூட்டமோ அது போல் வாசகர் கடிதம்,நான் ஆரம்பத்தில்  வாசகர் கடிதம் எழுதுவது கேவலம் என நினைத்தேன்.பின் என் எண்ணம் மாறியது. அதிலும் நம் தனி முத்திரையை பதிக்கலாம் என எண்ணம் ஏற்பட்டது.நண்பர்களுடன் சவால் விட்டு ஒரே இதழில் 4 கடிதங்கள் வர வைத்துள்ளேன்.

2. கவிதை - வாரா வாரம் 2 பக்கங்கள் கவிதைக்காக ஒதுக்குவார்கள்.பெரும்பாலும் குட்டிக்கவிதைகள் அனுப்புவது நலம். 4 வரிகள் - 6 வரிகளுக்குள் இருந்தால் நலம். செலக்‌ஷன் செக்‌ஷனில் உள்ளவர்கள் குழந்தைகள் நல விரும்பி போல. பெரும்பாலும் மழலைகள் பற்றிய கவிதைகளே அதிகம் வருகிறது.

திருமயம் பாண்டியன், தஞ்சை அனார்கலி இருவரும் இதில் முத்திரை பதித்தவர்கள். கவிதைக்கான லே அவுட்டும், டிராயிங்கும் பக்காவாக இருக்கும். நமது கவிதை சாதாரணமாக இருந்தால் கூட அவர்கள் பிரசண்ட்டேஷன் அசத்தலாக இருக்கும். எனது கவிதைகள் 28 இதில் வந்துள்ளது.சன்மானம் ரூ 50. குமுதத்தின் சேல்ஸ்,லாபம் இதனுடன் ஒப்பிட்டால் அவர்கள் தரும் சன்மானம் ரொம்பக்கம்மி.
http://www.desikan.com/blogcms/media/1/20080308-Kumudam_sujatha_2.jpg
எஸ் ஏ பி ஒரு முறை லேனாவிடம் டிஸ்கஸ் செய்தபோது சொன்ன வார்த்தை -
குமுதம் புக்கிற்கு வரும் விளம்பர வருமானத்தை கணக்கு போட்டால் ரூ 10 க்கு
விற்கப்படும் புக்கை எல்லாருக்கும் இலவசமாக கொடுத்தாலே ஒரு புக்குக்கு ரூ 1.70 லாபமாம். அப்போ கணக்கு போட்டுக்குங்க. கிட்டத்தட்ட 8 லட்சம் புக் சேல்ஸ் ஆகுது.

3.ஒரு பக்கக்கதை. - குமுதத்தில் ஒரு பக்கக்கதை. ரொம்ப ஃபேமஸ்.சும்மா 20 லைன் இருந்தா போதும்.கடைசில ஒரு நீதி இருக்கனும்.தேவை இல்லாத வர்ணனை தவிர்த்து டைரக்டா மேட்டருக்கு வந்துடனும்.புதுமுக எழுத்தாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இதற்குப்பரிசு ரூ 100.  ப . உமா மகேஷ்வரி ஷேக் சிதார் மந்திர், சேலம் செல்வராஜா, சாயம் வே ராஜாராமன், எஸ். ராமன் ,ஐரேனிபுரம் பால்ராசய்யா போன்றர்கள் இதில் கில்லாடிகள்.எனது கதைகள் 30 வந்துள்ளன.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxzIGWZpsMKWZYZ9v975qViv32bibotQ_9jFMSgajsYqn8n0Bv_Ee8wRMqx7DlTk-Stlpw7aIfK7MD4VgVed2gJ-Lkh1dJzom3lbvY45QqHo3eciNnE-V9DMXXxcRrVJjcYIVRv8P_D3s/s320/sap-manaian1.jpg
4. சிறுகதை - இப்போது ஜனரஞ்சக பத்திரிக்கைகளில் சிறுகதை இலக்கியம் அழிந்து வருவது வேதனைக்குரிய விஷயம். ரூ 400 பரிசு தர்றாங்க.பெரும்பாலும் இப்போ பிரபல நாவல் ஆசிரியர்கள் படைப்புதான் வருது. வாசகர் சிறுகதை அதிகம் வர்றது இல்லை.ரொம்ப அரிதா சில சமயம் வாசகர்களுது போடுவாங்க.அனுப்பி 2 மாதத்தில் தேர்வானா போட்ட்டுடுவாங்க. என்னுடையது 2 கதைகள் வந்துள்ளன்.ரா கி ரங்கராஜன்,கீதா பென்னட் இவங்க கதைகள்
அதிகம் வந்திருக்கு,

5. ஜோக் - கடைசியா நம்ம மேட்டர்.வாரா வாரம் சராசரியா 27 ஜோக் போடறாங்க. இதுக்கும் சன்மானம் ரூ 50 தான்.பெரும்பாலும் அரசியல், டாக்டர் ஜோக் போடறாங்க. என்னுடையது கிட்டத்தட்ட 700 ஜோக்ஸ் வந்திருக்கும். குமுதத்துல ஜோக் எழுதியே வீடு கட்டுனாருன்னு வி சாரதி டேச்சு பற்றி ஒரு ஜோக் உண்டு.

குமுதத்தில் பணியாற்றும் ஜெயாப்பிரியன்,குட்டி மு வெங்கடேஷன் இருவருக்கும் 2 பக்கங்கள் ரெகுலரா ஒதுக்கிடறாங்க. அது போக வாசகர்களுக்கு 16 ஜோக்ஸ் போடறாங்க.20 நாட்களில் போட்டுடுவாங்க. நல்ல ஸ்பீடுதான்.எஸ் எஸ் பூங்கதிர், ப உமா மகேஷ்வரி, தஞ்சை தாமு,எஸ் மோகன்,பா ஜெயக்குமார்,ஜோ ஜெயக்குமார் ஜோக் உலகில் கலக்குபவர்கள்.


குமுதம் எனக்கு எப்பவும் செல்லப்பிள்ளைதான். காவேரி நீர்ப்பிரச்ச்னையை
தீர்ப்பது எப்படி? என்ற கட்டுரைப்போட்டியில் நான் ரூ ஒரு லட்சம் பரிசு
வென்றது 2002 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி. (டாக்ஸ் போக
கைக்கு ரூ 68,000 தான் வந்தது என்றாலும் என்னைப்பொறுத்தவரை
தொகை அதிகம்)

1998 -ல் தீபாவளி மலரில் போட தமிழ்நாட்டின் டாப் 10 ஜோக்
ரைட்டர்ஸை அழைத்தார்கள்,அதில் நானும் ஒருவன்.ஹாய் மதன் எங்களுக்கெல்லாம் ரூ 2000 மதிப்புள்ள வாட்ச் பரிசாக குடுத்து எப்படி ஜோக்ஸ் எழுதலாம் என டிப்ஸ் குடுத்தார்.

பொதுவாக பத்திரிக்கைகளில் நம் படைப்பு வந்தால் அந்த புக் நம் கண்களுக்கு
அழகாக தோன்றும். வர்லைன்னா என்ன புக் போடறாங்க என சலிப்பினை  ஏற்படும். அது மனிதனின் மன ரீதியான தடுமாற்றமே. சிலர் குமுதம் புக்கை
சேல்ஸூக்காக தரம் இழந்ததாக சொல்வார்கள். ஆனால் எல்லா பத்திரிக்கைகளுக்கும் ரோல் மாடலாக குமுதம் விளங்குகிறது.

வெற்றியாளர்களை ஏதாவது குறை சொல்வது நம்உலக வழக்கம்.
ஆனால் வெற்றியாளனாக மிளிர அவர்கள் பட்ட கஷ்டங்கள் அவர்களுக்கு
மட்டுமே தெரியும்.

படைப்புகளை தபாலில் அனுப்ப முகவரி
குமுதம்
த பெ எண் - 2592
சென்னை 600031

கூரியரில் அனுப்ப

குமுதம்
151,புரசைவாக்கம் நெடுஞ்சாலை
சென்னை 600010

டிஸ்கி - டைட்டிலைப்பார்த்து வெறும்  சுய புராணமாத்தான் இருக்கும் என எண்ணி எனது பழைய பாகங்களை மிஸ் பண்ணியவர்களுக்காக

பிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி? பாகம் 2

(ஆனந்த விகடன்)

 

பிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி?

(தினமலர் - வாரமலர்)

 

Tuesday, January 11, 2011

திரும்பிப்பார்க்கிறேன் (தொடர்பதிவு)

http://farm3.static.flickr.com/2395/2323943729_a075be5afc.jpg 
2010 ஜூலை 17-ம் தேதி அன்றுதான் பதிவுலகில் காலடி எடுத்து வைத்தேன்.
ஏ டூ இஜட் நல்ல நேரம் சதீஷ்தான் பார்த்துக்கொண்டார்.டைப்பிங்க் மட்டும்
என் வேலை.அவருக்கும், இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த சவுந்தருக்கும் நன்றி கூறி இந்தக்கட்டுரையை தொடர்கிறேன்.

நான் பிளஸ் டூ படிக்கும்போது ,ஸ்கூல் கணக்கு மாஸ்டர் எதற்கோ ,”
“ஊர்ப்பெயரை ஏம்ப்பா கெடுக்கறே..” என திட்டி விட்டார்.அப்போது
ஆவேசத்துடன் ஊர்ப்பெயரை காப்பாற்றுவேன் என சினிமா ஹீரோ
மாதிரி சபதம் எடுத்து பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பித்தேன்.

முதலில் கவிதைகள்,சிறுகதைகள்தான் எழுதினேன்.சென்னிமலை சி பி
செந்தில்குமார் என்ற பெயரை அச்சில் பார்க்கும்போது மனதுக்குள்
பெருமையாக இருக்கும்.பதிவுலகுக்கும்,பத்திரிக்கை உலகுக்கும்
அடிப்படையில் உள்ள முக்கியமான வேற்றுமை என்ன?

நாம் அனுப்பும் படைப்புகள் எடிட் செய்யப்பட்டு தேர்வு செய்யப்படுபவை
மட்டுமே பிரசுரம் ஆகும்.10 கவிதை அனுப்புனா 1 செலக்ட் ஆகும்.
வாரா வாரம் புக் வந்ததும் படைப்பு வந்திருக்கா?ன்னு ஆவலா
புக் பார்ப்போம்..இந்த சஸ்பென்ஸ் எல்லாம் பிளாக் -கில் இல்லை.

நானே ராஜா நானே மந்திரி கான்செப்ட்தான்,நாம என்ன நினைக்கிறோமோ
அதுதான் எழுத்து,நாம என்ன எழுதறோமோ அதுதான் படைப்பு.பத்திரிக்கை
உலகில் உள்ள படைப்பாளிகளை விட பதிவுலகில் உள்ள படைப்பாளிகளின்
எண்ணிக்கை அதிகமாக இருக்க இதுதான் காரணம்.

பத்திரிக்கைகளில் வந்த ஒரு கவிதையை படித்து விட்டு எங்க ஊர்க்காரர்
நல்லா ஜோக்கா இருக்குப்பா என்றார் ஊர்க்காரர்.. கவிதையே சிரிப்பா இருந்தா
ஜோக் எழுதுனா எப்படி இருக்கும்? என்று நினைத்து ஜோக் எழுத ஆரம்பித்தேன்.

மள மளவென ஜோக் எழுத ஆரம்பித்து கடந்த 18 வருடங்களில் நான் எழுதி
பிரசுரம் ஆனவை 9867 ஜோக்ஸ், 64 கவிதைகள், 8 சிறுகதைகள்,19 ஒரு பக்க
கதைகள்,87 சினிமா விமர்சனங்கள்,145 கட்டுரைகள்.
http://images.rottentomatoes.com/images/spotlights/2008/rtuk_feature_baillie_walsh_03.jpg
பதிவுலகில் என் பிளாக்கிற்கு ரெகுலராக கமெண்ட் போட்டு என்னை ஊக்குவித்தது ரமேஷ் ரொம்ப நல்லவன் சத்தியமா.என் மனதைக்கவர்ந்த எழுத்துக்கள் பன்னிக்குட்டிராம்சாமி,பட்டாபட்டி,சேட்டைக்காரன்,குசும்பன்.காரணம் அடிப்படையில் இவர்களும் காமெடியில் கலக்கலான படைப்புகளை தந்ததுதான்.

போட்டியும் ,பொறமையும் எல்லா படைப்பாளிகளுக்கும் வரும்.எனக்கும்
சிலரைக்கண்டு பொறாமை வரும்.பொறாமையின் விகிதம் அதிகம் ஆகும்போதெல்லாம் நான் ஹாஸ்பிடல்,சுடுகாடு,அநாதை இல்லங்கள் சென்று வாழ்க்கையின் நிலை இல்லாமை தத்துவத்தை எனக்கு நானே உணர்த்திக்கொண்டு என்னை நானே புதுப்பித்துக்கொள்வேன்.

பதிவுலகில் பழக்கம் ஆனவர்களை எல்லாம் நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது காலம் அனைவரையும் சந்திக்க வைக்கும் என எதிர்பார்க்கிறேன். சவுந்தர் தமிழ்மணம் டாப் 20 இல் 10 வது இடம் பெற்றதும்.அதற்கு நன்றி சொல்லி ஒரு பதிவு போடலையா?என சவுந்தரிடம் கேட்டேன்.இதுக்கெல்லாமா பதிவு போடுவாங்க? என அவர் என்னையே திருப்பிக்கேட்டு சிரித்தார். நான் முதல் வாரம் தமிழ்மணம்
தர வரிசையில் 13வது இடம் பிடித்த போது செய்த அலப்பரைகளை நினைத்துப்பார்த்தேன். இதுல ரமேஷ் வேற  உசுப்பேத்தி தூண்டி விட்டாரு.

நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களிடமும் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கும் என்ற அறிஞர்கள் சொன்னது போல் நானும் பதிவுலகில் ஒவ்வொருவரிடமும் இருந்து ஏதாவது கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்.

கலியுகம் தினேஷின் நண்பர் எழுதிய மைனா படத்தின் பாட்டு ஒன்றின் ரீமிக்ஸ் என் மனதைக்கவ்ர அதை இசை அமைப்பாளரும், தேநீர் விடுதி படத்தின் இயக்குநரும் ஆன எஸ் எஸ் குமரன் அவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தேன்.திரை உலகில், பத்திரிக்கை உலகில் உள்ள என் பழக்கம், நட்பு இவற்றை பயன்படுத்தி பதிவுலகில் உள்ள திறமைசாலிகளை ,நல்ல படைப்பாளிகளை ஊக்குவிக்கும் எண்ணம் உள்ளது. 

வழக்கம் போல் பதிவு நீளம் ஆகி விட்டதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்
தேவைப்பட்டால் இதன் அடுத்த பாகத்தை மீண்டும் எழுதுவேன்.இந்த தொடர்
பதிவுக்கு நான் அழைப்பது என் ஆதர்ச எழுத்தாளர்களான
பன்னிக்குட்டி ராம்சாமி,பட்டாபட்டி,சேட்டைக்காரன், ஆகியோரை.
குசும்பன் எனக்கு பழக்கம் இல்லை.எனவே அவரைத்தவிர மற்ற 3 பேரையும்
அழைக்கிறேன்.

Monday, January 10, 2011

ஃபிகர்களோட கடலை போட ......

http://www.unp.co.in/attachments/f44/6819d1242315852-neha-sharma-new-face-in-tamil-cinema-neha3.jpg
1. நான் உங்களுக்கு 5 ஃபிகர்களோட ஃபோன் நெம்பர் தர்றேன்,வெரி ஸ்வீட் கேர்ள்ஸ். ஜாலியா கடலை போடலாம்.எவ்வளவு நேரம் வேணாலும் அவங்களோட பேசலாம்..
ஏர்டெல் -121
ஏர்செல் - 55333
ரிலையன்ஸ் - 369
பி எஸ் என் எல் -123
வோடஃபோன் -111

இந்த மேட்டர் யாருக்கும் தெரிஞ்சிட வேணாம்,நமக்குள்ளயே இருக்கட்டும்.



2. ஒரு குட்டி எலி ஒரு பெரிய பூனை கிட்டே மாட்டிக்கிச்சு,அது தன் உயிரைக்காபாத்திக்க , " பூனை அண்ணே பூனை அண்ணே,நான் எங்கம்மா அப்பாவுக்கு ஒரே பையன்,என்னை  விட்டுடுங்கன்னு கதறுச்சு,அதுக்கு அந்த பூனை என்ன சொல்லிச்சு?தெரியுமா?

மியாவ்னு..

(எலி எப்பவும் தனியா ஒரே ஒரு குட்டி மட்டும் போடாதுன்னு யாரும் கமெண்ட்
போட்டுடாதீங்க.மொக்கைல,ஜோக்ல எல்லாம் லாஜிக் பாக்கக்கூடாது)



3. நல்ல நேரம், கெட்ட நேரம் என்ன வித்தியாசம்?

எதிர்ல உள்ள ஃபிகர் போட்டிருக்கற தாவணி (இந்தக்காலத்துல எந்த ஃபிகர்
தாவணி போடுது? # DOUBT)) காத்துல விலகுனா அது நமக்கு நல்ல நேரம்.அந்த டைம்ல கரெக்ட்டா நம்ம கண்ணுல தூசி விழுந்தா அது நமக்கு கெட்ட நேரம்.


4. ஜட்ஜ் - உனக்கும்,உன் புருஷனுக்கும் டைவர்ஸ் தர முடியாதும்மா...

லேடி - ஏன் சார்?

ஜட்ஜ் - டைவர்ஸ் தரனும்னா வலுவான காரணம்வேணும்மா.

லேடி - என் புருஷன் ஒரு குடிகாரன் சார்.

ஜட்ஜ் - செல்லாது செல்லாது,நாட்ல 90% பேரு குடிகாரப்பசங்கதான்.

லேடி - என்னை விஜய் படத்துக்கு கூட்டிட்டுப்போய் கொல்லப்பாத்தாரு

ஜட்ஜ் - அவ்வளவு பெரிய கொடுமைக்காரனா?ஓக்கே டைவர்ஸ் சேங்க்‌ஷன்.

http://www.koolbollywood.com/wp-content/uploads/2010/07/Fashion-gets-new-face-with-Sonam-Kapoor%E2%80%99s-AISHA.jpg
5. என்னதான் சிங்கம் மாதிரி கம்பீரமா ,தனியா பஸ் ஸ்டேண்ட் போனாலும் கடைசில பஸ் வந்தா பன்னி மாதிரி கூட்டமா ஏறிதான் ஆகனும்.



6. காதலியின் வீட்டுக்கு ஒவ்வொரு முறை செல்லும்போதும் தவறு செய்து விட்டோமோ என குற்ற உணர்ச்சி... ஏன்னா அவளோட தங்கச்சி அவளை விட செம ஃபிகர்.. (இந்த மாதிரி கவிதை எழுதுனா செட் ஆனதும் அப்பீட் ஆகிடும்.)

7. ஒரு விடுகதை, 1  - 11 - 111 இந்த 3க்கும் என்ன வித்தியாசம்?

1 - தனியா இருக்கு.
11 - ஜோடியா இருக்கு
111- ஃபேமிலியா இருக்கு

யாரப்பா அது கல்லை எடுக்கறது?


8. ஃபிரண்டுக்கும், லவ்வருக்கும் என்ன வித்தியாசம்?

ஃபிரண்ட் கிட்டே நீதான் என் பெஸ்ட் ஃபிரண்டுன்னு சொல்லலாம்
லவ்வர் கிட்டே நீதான் என் பெஸ்ட் லவ்வர்னு சொல்ல முடியுமா?

(அப்படி சொல்லீட்டா நமக்கு பல லவ்வர் இருக்கற மேட்டர் வெளில வந்துடாது?)

கைவசம் சரக்கில்லாதபோது பதிவு போடுவது எப்படி?

http://www.freefoto.com/images/11/12/11_12_9---Compact-Disc_web.jpg?&k=Compact+Disc 
டிஸ்கி

டிஸ்கி 1 - பதிவை விட டிஸ்கி ரொம்ப நல்லாருக்குன்னு ஏகோபித்த ஆதரவு கிடைச்சிருக்கு. சரி சரி ரெண்டே ரெண்டு பேர் அப்படி சொன்னாங்க,1.கோமாளி செல்வா 2.விக்கி உலகம்காத்து வாங்கிட்டிருக்கற.படத்தோட பேப்பர் விளம்பரத்துல மக்களின் ஏகோபித்தஆதரவு பெற்ற அப்படின்னு விளம்பரம் போடறது இல்லையா?அந்த மாதிரி....(டேய் ,மரமண்டை..பதிவு நல்லாலைன்னு இதை விட நாசூக்கா எப்படி சொல்ல முடியும்?)

டிஸ்கி 2 - பதிவின் டைட்டிலில் 18+ அப்படின்னு போடறதுல 2 டேஞ்சர் இருக்கு.
ரொம்ப நல்லவங்க (?!) யாரும் பிளாக் பக்கம் வர்றதில்லை.அப்புறம் வர்றவங்க
அவங்க எதிர்பார்க்கற மேட்டர்(!!!)இல்லைன்னதும் ஏமாற்றம் அடைஞ்சு திட்டறாங்க. ஏ படத்துக்கு போய்ட்டு அதுல சீன் எதுவும் இல்லைன்னா சரி சரி அடுத்த டைம் பார்த்துக்கலாம்னு சமாதானம் அடையறதில்லையா..அப்படி ஒரு பக்குவத்துக்குநாம வந்துடனும்.

டிஸ்கி 3 - பொண்ணு பாக்கப்போறப்ப பொண்ணை விட பொண்ணோட தங்கச்சியோ, பொண்ணோட தோழியோ,(சில சமயம் பொண்ணோட அம்மாவோ)செமயா இருக்கும், அதை மனசுக்குள்ளயே வெச்சுக்கனும்,வெளில சொல்லக்கூடாது..அந்த மாதிரிதான்.. பதிவுங்கறது பொண்ணு மாதிரி..டிஸ்கி கொழுந்தியா மாதிரி (கண்டு பிடிச்சுட்டாருய்யா துரை)

டிஸ்கி 4 - போணி ஆகாத தமிழ்ப்படத்துல கதைக்கு சம்பந்தமே இல்லாம ஒரு
குத்தாட்ட பாட்டு வரும்.அது படத்துக்கு எக்ஸ்ட்ரா பூஸ்ட்..அந்த மாதிரிதான் பிளாக்ல போடற இமேஜ் (ஃபோட்டோ).சும்மா கிளாமருக்கு...ஆனா கமெண்ட் போடறவங்க 24 பேரா (PARAGRAPH)எழுதி இருப்பதைக்கண்டுக்காம ஸ்டில் சூப்பர்,ஃபோட்டோ அருமைன்னு கமெண்ட் போட்டு வெறுப்பேத்தறாங்க..

டிஸ்கி 5 - எப்படி கமெண்ட் போடறதுன்னு நானே சொல்லித்தர்றேன்.
ஆஹா பதிவு அருமை,இந்த மாதிரி மேட்டர் நான் எங்கேயும் படிச்சதே இல்லை.. எப்படி உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி எல்லாம் தோணுது..இப்படி டெம்ப்ளேட் கமெண்ட்டாபோடனும்..(ஹி ஹி ஹி )
http://upload.wikimedia.org/wikipedia/commons/0/04/Key_to_the_City_of_London,_Charles_Lindbergh.JPG
டிஸ்கி 6 - சினிமா விமர்சனம் போடறதை சிலர் நக்கல் அடிக்கறாங்க. அது எவ்வளவு பெரிய தியாகம்னு உங்களுக்கு தெரியுமா?ரெண்டரை மனி நேரம் ஒரு மொக்கைப்படத்தை பொறுமையா உக்காந்து பாக்கனும்.அதுக்கு ஒரு மணி நேரம் விமர்சனம் மாங்கு மாங்குன்னு எழுதனும்,அப்புறம் நல்ல ஸ்டில்லா தேடனும்.விமர்சனம் போட்ட பிறகு அந்தப்பட உதவி
இயக்குநர்களிடம் இருந்தோ,சினி ஃபீல்டு சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து வரும் திட்டுக்களை எல்லாம் வாங்கனும்..நான் எவ்வளவு பெரிய தியாகி?ன்னு இப்பவாவது புரிஞ்சுக்குங்க..

டிஸ்கி7-அவ்வளவுகஷ்டப்பட்டுஏன்அந்ததியாகத்தைசெய்யனும்?அதுலயும்ஒருசுயநலம் இருக்கு.கவிதை,ஜோக்,சிறுகதை போன்ற படைப்பிலக்கியங்கள்
40% ஆதரவும் (ஹிட்ஸ்),அரசியல் சமூக விழிப்புணர்வு பதிவுகளுக்கு 60% ஆதரவும், வம்பு சண்டைக்குப்போய் அடுத்தவங்களை தாக்கி போடற பதிவுகளுக்கு 75% ஆதரவும் கிடைக்கறப்ப சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகளுக்குத்தான் 100% ஆதரவு கிடைக்குது,வாழ்க தமிழனின் ரசனை.

டிஸ்கி 8 - இந்த லட்சணத்துல ஹிட்ஸுக்கு நான் அலைகிறேனா?அப்படின்னு
ஏன் பதிவு போட்டேன்னா அன்னைக்கு நிஜமாவே என் கைவசம சரக்கில்லை.
சரி ,இதை வெச்சு அன்னைக்த்த (என்ன மோசமான ஒரு  சொல்லாடல்?)பொழுதை ஓட்டிடலாம்னுதான்.

டிஸ்கி 9 -என் மேல சொல்லப்படற சில குற்றச்சாட்டுக்கள் என்னன்னா நான்
சில சமயம் மத்தவங்க பிளாக்ல கமெண்ட்ஸ் போடறப்ப இங்கிலீஷ்ல போடறேன்.அது ஏன்னா நான் காலைல,நைட்ல மட்டும்தான் வீட்ல இருந்து நெட் யூஸ் பண்றேன், பகல் டைம்ல ஃபீல்டுல இருக்கறப்ப (ஆன் டியூட்டி) நெட் செண்ட்டர்ல இருந்துதான் கமெண்ட் போடறேன்,தமிழ் ஃபாண்ட் இருக்காது...

டிஸ்கி 10 - என் பிளாக்ல கமெண்ட்ஸ் போடறவங்க அதுக்கான பதில்
கமெண்ட்ஸை மறுபடி அன்னைக்கு நைட்டோ அடுத்த நாள் காலைலயோ
வந்து பாத்துக்குங்க..(ரிப்பீட் ஆடியன்ஸை வரவழைக்க இப்படி ஒரு ஐடியாவா?)

டிஸ்கிக்கே ஒரு டிஸ்கி - இன்னைக்கு ஏன் எந்த மேட்டரும் இல்லாம ,வெறும்
டிஸ்கியாவே போட்டு கொல்றேன்னு பாக்கறீங்களா? ஹி ஹி இன்னைக்கும்
கைவ்சம சரக்கில்லை. DISC + KEY = DISKY (ஃபோட்டோவுக்கு விளக்கம்)

நேத்து நெட் பக்கமே வராதவங்களுக்கும், எப்போ பாரு மொக்கை பதிவாவே போடறியே, உருப்படியா என்னைக்காவது எழுதி இருக்கியா? என திட்டுபவர்களும் படிக்க

பெண்மையை கேவலப்படுத்தும் BSNL-ன் அத்து மீறிய விளம்பரம்

Sunday, January 09, 2011

பெண்மையை கேவலப்படுத்தும் BSNL-ன் அத்து மீறிய விளம்பரம்

 http://telecomtalk.info/wp-content/uploads/2009/04/bsnl-postpaid-plans-1024x703.jpg
சமீபத்துல ஒரு மொக்கைப்படத்துக்குப் போயிருந்தேன்,(நாம என்னைக்கு
நல்ல படத்துக்கு போயிருக்கோம்?)அது என்னமோ தெரியல ,என்ன மாயமோ
புரியல,நான் போற படம் எல்லாம் மொக்கையாவே ஆகிடுது.(நன்றி - குணா
வசனகர்த்தா பாலகுமாரன்)

படம் போடறதுக்கு முன்னால சில விளம்பரங்களை போட்டாங்க..
அதுல BSNL-ன் 3G  சேவை பற்றிய விளம்பரமும் வந்துச்சு.ஆ ராசோவோட
ஸ்பெக்ட்ரம் ஊழல் கூட எனக்கு இவ்வளவு பெரிய ஷாக் குடுக்கல,(வழக்கமா
அரசியல்வாதிங்க பண்றதுதானே - வாழ்க தமிழனின் சகிப்புத்தன்மை)

ஆண்கள் உபயோகப்படுத்தும் ஷேவிங்க் கிரீம் விளம்பரத்தில்,அடுத்தவனோட புது பொண்டாட்டிய கரெக்ட் பண்ண ஐடியா குடுக்கும் மெண்ட்டோ ஃபிரஸ் விளம்பரத்தில் என பெண்களை போகப்பொருளாய்,பகடைக்காயாய் சித்தரிக்கும் விளம்பரங்கள் அதிகரித்து வரும் சூழலில் BSNL-ன் 3G  சேவை பற்றிய விளம்பரமும் நெம்பர் ஒன் மோசமான விளம்பரம் என பெயர் பெற்றுள்ளது.

ஒரு பஸ்சில் ஒரு நவ நாகரீக மங்கை மிடியுடை அணிந்து அமர்ந்துள்ளார்.(மாடர்ன் கேர்ள் சுடிதாரோ ஜீன்சோ போட மாட்டாரா?)அருகில் அமர்ந்து உள்ள இளைஞனிடம் வழிகிறாள்.அந்த இளைஞன் ஃபிகர் நமக்கு சிக்னல் குடுத்துடுச்சு,என அடுத்த கட்ட  நடவடிக்கையில் இறஙகுகிறான். இப்போதான் கதை(!?)ல ஒரு பெரிய ட்விஸ்ட். ஸ்டேண்டிங்கில் நிற்கும் இன்னொரு இளைஞன் கையில்  BSNL-ன் 3G  சேவை உள்ள ஒரு ஃபோனை வைத்துக்கொண்டு அவனது கேர்ள் ஃபிரண்டிடம் படம் காண்பிக்கிறான்.உடனே  சிட்டிங்கில் இருக்கும் சிட்டு (சி-னாவுக்கு சி-னா,நமக்கு எதுகை மோனை நல்லா வருதே கவிஞன் ஆகிடலாமோ? #டவுட்) உடனே பச்சோந்தி ஆகி அருகில் இருக்கும் இளைஞன் மீது எரிந்து விழுகிறாள்.

ஏய், மிஸ்டர், கையையும் காலையும் வெச்சிட்டு சும்மா இருக்க மாட்டீங்க?
எந்திரிங்க ,எந்திரிங்க  முதல்ல என அவனை துரத்தி விடுகிறாள்.(இவருக்கான
டப்பிங்க் வாய்ஸ் மகா மட்டம்),பிறகு ஸ்டேண்டிங்கில் இருக்கும் இளைஞனிடம்
மிஸ்டர்,நீங்க இங்கே வந்து உட்கார முடியுமா? என கேட்கிறாள்.உடனே ஷாக் சர்ப்பரைஸ் ஆகும் அவன், அவனது கேர்ள் ஃபிரண்டை அம்போ என விட்டு விட்டு( ராம்தாசை கழட்டி விட்ட கலைஞர் மாதிரி)அவள் அருகே போய் அமர்ந்து கொள்கிறான்.

க்ளைமாக்சில் அந்தப்பெண் அவளது காலைத்தூக்கி அவனது காலில் போட்டு
அவனது தோளில் சாய்ந்து கொள்கிறாள்,(ஏதோ 10 வருடம் காதலித்த காதலனுடன் இருப்பது போல).விளம்பர வாசகம் வருகிறது. BSNL-ன் 3G  சேவை பெற்றிடுங்க, கொண்டாடுங்க என.

கலாச்சார சீர்கேட்டின் உச்சம் அல்லவா இது?முன்னே பின்னே அறிமுகம் இல்லாத  இளைஞனுடன் ஒரு பெண் இப்படி நடப்பதாக காட்டுவது பெண் இனத்தையே கேவலப்படுத்துவது போல் உள்ளது.நான் இடைவேளையில் தியேட்டர் ஆப்பரேட்டரிடம் ,இந்த விளம்பரம் எத்தனை நாளா வருது? என்றேன்?அது ஒரு மாசமா வருதே என்றார் சர்வ சாதாரணமாக. சும்மா சின்ன விஷயத்துக்கு எல்லாம் பொங்கி எழும் பெண்னிய அமைப்புகள்,மாதர் சங்கங்கள் எல்லாம் என்ன செய்கின்றன?

பொறுப்புள்ள இடத்தில் ,நாடு முழுதும் பரவி இருக்கின்ற, அரசு மேற்பார்வையில் இயங்கும் ஒரு நிறுவனம் இப்படி நடக்கலாமா? அந்த விளம்பரம் தடை செய்யப்பட வேண்டும். வருத்தம் தெரிவிக்கப்பட வேண்டும்.

இந்த மேட்டரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஹிந்து நாளிதழுக்கும்,தமிழில்
குமுதம் இதழுக்கும் அனுப்பி இருக்கிறேன்.அதிகமான மக்களை போய்ச்சேர..

பார்ப்போம்.

பொங்கலும் இளைய தளபதியும்

http://www.moviestarsmovies.com/Images/KateWinslet.jpg
1. 2001 பொங்கல் ஃபிரண்ட்ஸ் பொங்கல்,2005 பொங்கல் திருப்பாச்சி பொங்கல்
2007 பொங்கல் போக்கிரி பொங்கல்,2011 பொங்கல் காவலன் பொங்கல்,

நான் என்ன கேக்குறேன்ன்னா தமிழன் சந்தோஷமான பொங்கலை கொண்டாடவே
முடியாதா? #  டவுட்


2.நவீன திருவிளையாடல் ஆர்கியூமெண்ட் இன் டாஸ்மாக்

அன்புக்கு - பார்  ,அறிவுக்கு - பீர், அழகுக்கு - ஒயின் , பண்புக்கு - பிராந்தி,
பாசத்துக்கு - குவாட்டர், நேசத்துக்கு -நெப்போலியன் ,சண்டைக்கு - ஃபுல்
நட்புக்கு - கட்டிங்க் ,வம்புக்கு - ஓல்டு மங்க் ,வெறுப்புக்கு -விஸ்கி

வாங்க - நீ,  குடிக்க - நான்


3. டீச்சர் - நான் இங்கே நாய் மாதிரி கத்திட்டு இருக்கேன்..லாஸ்ட்
பெஞ்ச்ல ஆளுங்களையே காணோமே..?

உங்களுக்கு பொறை பிஸ்கெட் வாங்க போய் இருக்காங்க..


4. வைவா எக்சாம் 5 நிமிஷம்தான்னு சொன்னாங்களேன்னு நம்பி போனேன்,
அங்கே 5 பேரும்மா,மாத்தி மாத்தி கேள்வி கேட்டாங்க,என்னால முடிஞ்ச வரை
பதில் சொன்னேன்,திடீர்னு ஒருத்தன் ஹெச் ஓ டி -க்கு ஃபோனைப்போட்டு
மச்சான் ஃபிரியா இருந்தா வாடா ,ஒருத்தன் சிக்கி இருக்கான் அப்படின்னு
சொன்னான்,அவன் பிஸியா இருக்கானாம் என்னை கிரவுண்ட் ஃபுளோருக்கு
வரச்சொன்னான்.ஹெச் ஓ டி தானே கூப்பிடறார்னு நானும் நம்பி
கிரவுண்ட் ஃபுளோருக்கு போனேன்,அங்கே மொத்தம் 8 பேரும்மா,

அவங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொஸ்டீன்ஸ் கேட்டாங்க.
நானும் எவ்வளவு  நேரம்தான் ஆன்சர் தெரிஞ்ச மாதிரியே நடிக்கறது?
அதுல ஒருத்தன் சொன்னான் - எவ்வலவு கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறாண்டா
 இவன் ரொம்ப அறிவாளின்னு...அவ் அவ்


http://img.listal.com/image/5988/600full-kate-winslet.jpg

5. ஒரு  ஸ்கூல்ல குழந்தைகளுக்கான போட்டி நடந்தது,
போட்டியோட தலைப்பு -அப்பா எனக்காக செய்த அழகான விஷயம்


பரிசு பெற்ற பதில் - எங்கம்மாவை கல்யாணம் பண்ணுனது


6. சுயநலம் இல்லா பொது நலம்

கடவுளே,எனக்குன்னு நான் எதுவும் உன் கிட்டே கேட்கலை,
எங்கம்மாவுக்கு மட்டும் நல்ல சூப்பர் ஃபிகர் மருமகளா வேணும் அவ்வளவுதான்.


7.  காதல் என்பது பீர் போல ,கூலிங்க் இல்லை என்றால் கசக்கும்
ஆனா ஃபிரண்ட்ஷிப் என்பது சரக்கு மாதிரி,கூலிங்க்
இல்லைன்னாலும் கிக் இருக்கும்.


8. மரணம் மனிதனின் கண்களுக்கு தெரிவதில்லை,அதனால்தான் அவன்
பெண்களை நேசிக்கிறான்.


9. விஜய் சார் ! ஜோஸ்  ஆலுக்காஸ் விளம்பரத்துல ஏன் நடிச்சீங்க?

டி வி லயாவது நான் நடிச்ச படம் 100 நாள் ஓடட்டும்னுதான்.


10. பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் ஜோக்

பெற்றோரை விட பெரியவங்க,மரியாதைக்கு உரியவங்க யாரும் இல்லை
so  சீக்கிரமா கல்யாணம் பண்றோம்,பெற்றோர் ஆகறோம்.


டிஸ்கி -1 : கேட் வின்ஸ்லேட்டுக்கும், இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு யாரும் கேக்காதீங்க.. ஏன்னா எனக்கும் பதில் தெரியாது. சும்மா கிளாமருக்கு...

டிஸ்கி 2 - விஜய் ரசிகர்கள் இதுக்கெல்லாம் கோபப்படக்கூடாது..சும்மா ஜாலிக்குத்தான்...(ஃபோன் பண்ணி திட்டறாங்க...அவ் அவ்)

Saturday, January 08, 2011

தத்துவம் மச்சினி தத்துவம் 17 3/4 +

http://narumugai.com/wp-content/uploads/2010/10/Namitha1-300x300.jpg
1. யாராலும் திருடி படிக்க முடியாத ரகசிய புத்தகம் - கனவு


2. அமைதியை விட வலிமையான சத்தம் உலகில் இல்லை.
உன் அமைதியை ஒருவன் புரிந்து கொண்டால் உன் வார்த்தைகளை
அவன் தவறாக ஒரு போதும் புரிந்து கொள்ளமாட்டான்.


3. கணிணிக்குள் வாழ்க்கையை தேடுகிறோம்,கடைசியில்
உழவனின் உழைப்பைத்தின்று வாழ்கிறோம்.


4.நாம வாழனும்னா எத்தனை பொண்ணுங்களை வேணாலும் சைட்
அடிக்கலாம்,ஆனா சாகனும்னா ஒரே ஒரு பொண்ணை மட்டும்
லவ் பண்ணுனா போதும்.லைஃப் க்ளோஸ்.


5. உங்கள் மேலான ஆதரவுக்கு நன்றி ,உங்கள் ஆதரவு இல்லாம நாங்க
போன வருஷ டார்கெட்டை அச்சீவ் பண்ணி இருக்க முடியாது..உங்கள்
ஆதரவை இனி வரும் காலங்களிலும் எதிர்பார்க்கிறோம்-
இப்படிக்கு டாஸ்மாக் மேனேஜர்.



6. என்னடா?ரொம்ப குறைஞ்ச மார்க் வாங்கி இருக்கே?

அப்பா, உங்களுக்கே தெரியும்.. விலைவாசி எல்லாம் ரொம்ப ஏறிப்போச்சு.
எதையும் அதிகமா வாங்க முடியல..

நீதி - நம்ம மேல இருக்கற தப்பை மறைக்க 1008 வழி இருக்கு.



7. ஒரு நாள் ஒரு கிளிக்கு மேரேஜ் பண்ண ஒரு போட்டி வெச்சாங்க.
அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு.போட்டில காக்கா ஜெயிச்சுடுச்சு.
காக்கா கிளிக்கு தாலி கட்டறப்ப “கல்யாணத்தை நிறுத்துங்க”ன்னு ஒரு குரல்.
போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க. நினைவு இருக்கா?
ரெண்டாங்கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டியோட வடையை திருடிடுச்சே..
அதான்.

நீதி 1 - முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

நீதி 2 - நாங்களும் ரெண்டாங்கிளாஸ் வரை படிச்சிருக்கோம்.


8.  படிச்சிருக்கொம். அப்படின்னு டைப் பண்ணும்போதுதான் ஒரு மேட்டர் ஞாபகத்துக்கு வருது. அது ஏன் பொண்ணுங்க எல்லாரும் திட்டறப்ப, : ஏய் ,மிஸ்டர்,பார்த்தா படிச்சவானாட்டம் இருக்கே.. இப்படி இண்டீசண்ட்டா நடந்துக்கறியே?”அப்படின்னு திட்டறாங்க?

#டவுட் 1 - அப்படி என்ன இண்டீசண்ட் புரொபோசல் இவன் பண்ணி இருப்பான்?
#டவுட் 2. - படிக்காத பையன் கிண்டல் பண்ணுனா எப்படி திட்டுவாங்க?



9. ஒரு பொண்ணு இறந்துட்டா..அவளோட ஆவி மேல் லோகம் போச்சு,
அவளோட இதயம் இன்னும் துடிச்சுக்கிட்டே இருக்கறதைப்பார்த்து கடவுள்
ஆச்சரியப்பட்டாரு.”இது எப்படி சாத்தியம்?”னு அந்த ஃபிகர் கிட்டே கேட்டாரு.
அதுக்கு அந்த ஃபிகர் சொல்லுச்சு.”நான் இறந்தாலும் என் காதலன் என் இதடத்துக்குள் இன்னும் உயிரோடதான் வாழ்கிறான்,”
உடனே கடவுள் அந்த ஃபிகரை நரகத்துக்கு அனுப்பிட்டாரு.. ஏன்?
ஓவர் ஆக்டிங்க் பண்ணுனதுக்காகவும்,ஆ ராசாவை விட அதிகம பொய்
பேசுனதுக்கும்.

10. இன்கம்டாக்ஸ் டிப்பார்ட்மெண்ட் எல்லா பொது இடங்களிலும்
மறைமுக காமிரா செட் பண்ணி வெச்சிருக்காங்க.. அதனால யாரும்
வெங்காயமோ ,தக்காளியோ வாங்காதீங்க..


டிஸ்கி 1 - இதெல்லாம் நான் குங்குமம் பத்திரிக்கைக்கு அனுப்பி.....

வராத மேட்டர்ஸ்(ஆல் ரிஜக்ட்டட்).

டிஸ்கி 2- நமீதா நம்மை(?!) மச்சான்னு கூப்பிடறப்ப நாம் ஏன் அவங்களை மச்சினின்னு கூப்பிடக்கூடாது? (#டவுட்)

டிஸ்கி 3 - டைட்டில்ல 18 + அப்படின்னு போட்டா தாக்கி பதிவு போடறாங்க.. அதனால இனி 17 3/4 + போடலாம்னு ஒரு ஐடியா,மற்றபடி இதுல ஏ ஜோக்ஸ் எல்லாம் இல்ல.ஒரு முன்னோட்டம்தான்...

Friday, January 07, 2011

கேப்டன் போடும் கணக்கு

ஆர்.டி.ஓ ஆஃபீசருக்கும்,விஜய்காந்த்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.என்ன அது?
ஆர்.டி. ஓ ஆஃபீசர் 8 போட்டு காட்ட சொல்வார்.விஜய்காந்த் 8 % ஓட்டு கைவசம் இருக்கு என்பார்.
இது பழைய கணக்கு.இப்போது இவரின் ஓட்டு 12.8 %.தி.மு.க,அ.தி.மு.க,காங்கிரஸ் போன்ற பாரம்பரியமான கட்சிகள் பல வருடங்களாக கட்டிக்காத்து வந்த தொண்டர்கள்,மக்கள் ஆதரவு,ஓட்டு வங்கி இவை அனைத்தையும் குறுகிய காலத்தில் அசைத்துப்பார்க்க ஆயத்தமானவர்.
கே.பாக்யராஜ்,டி.ராஜேந்தர்,சிவாஜி போன்றவர்கள் சினிமா புகழில் வந்த செல்வாக்கை அரசியலில் புகுத்தி தனிக்கட்சி தொடங்கிய போது மக்கள் ஆதரவு பெரிய அளவில் கிடைக்கவில்லை.ஆனால் விஜய்காந்த் தனி ரகம்.

தி.மு.க,அ.தி.மு.க 2 கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என துணிந்து கருத்து கூறினார்.இவர் ஒரு குடிகாரர் என ஜெ கூறிய போது அருகில் இருந்து ஊற்றிக்கொடுத்தாரா எனக்கேட்டு அதிர வைத்தார்.
இவர் போகும் இடங்களெல்லாம் கூட்டம் கூடினாலும் ,கலைஞர் சொல்வது போல் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது.
 எம் ஜி ஆர்க்குப்பிறகு எந்த நடிகரும் அரசியலில் வென்ற சரித்திரம் இல்லை என கலைஞர் நினைக்கிறார்.விதிவிலக்காக விஜயகாந்த் திகழ ஒரு வாய்ப்பு இருப்பதாக அவரது ரசிகர்கள் நினைக்கிறார்கள்.பொதுவாக நடிகர்களின் 100வது படம் ஹிட் ஆவதில்லை.(விதிவிலக்கு எம்.ஜி ஆரின் ஒளிவிளக்கு,சிவாஜியின் நவராத்திரி)ரஜினி சம்பளம் வாங்காமல் நடித்துக்கொடுத்த ஸ்ரீ ராகவேந்திரர்,கமலின் முதல் சொந்தப்படமான ராஜபார்வை,சத்யராஜின் சொந்தப்படமான வாத்தியார் வீட்டுப்பிள்ளை 3 படங்களும் அவரவரின் 100வது படம்தான்.3மே தோல்விப்படங்கள்.ஆனால் விஜயகாந்த்தின் 100வது படம் கேப்டன் பிரபாகரன் சூப்பர் ஹிட் படம்.அதற்கும்,அரசியலுக்கும் என்ன சம்பந்தம் என கேட்டால் அவரது ரசிகர்கள் சினிமாவில் விதிவிலக்காக 100வது படத்தை வெற்றிப்படமாக்கியவர்ரால் அரசியலிலும் ஏன் வெற்றி பெற முடியாது என்கிறார்கள்.
நடுநிலையாளரும்,சிறந்த அரசியல் நையாண்டி பத்திரிக்கையாளருமான சோ அவர்கள் ஒரு வாசக்ரின் கேள்விக்கு அளித்த பதில் சிந்திக்க வைக்கிறது.
கே- 2011 சட்ட மன்றத்தேர்தலில் அ.தி.மு.க + ம தி மு க + காங்கிரஸ்+ தே மு தி மு க + கம்யூனிஸ்ட் கூட்டணி அமைந்தால் அந்தக்கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?
ப- அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் அது கூட்டணி அல்ல.அதுதான் அசெம்ப்ளி.
அவரது கருத்து சரிதான்.ஏனெனில் அரசியலில் அரித்மேட்டிக் கால்குலேஷன் இருக்கிறது.ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீத ஓட்டு உண்டு.

அ.தி.மு.க 26 %,  தி. மு.க 28 %,காங்கிரஸ் 20 %.,பா ம க 4 %,ம தி மு க 3%, என ஒரு கால்குலேஷன் உண்டு.கலைஞர் சிறந்த ராஜ தந்திரி என்பதால் சோ நினைப்பது போல் ஒரு கூட்டணி அமைக்க விடமாட்டார்.
விஜயகாந்த் நினைப்பது என்ன?தி மு க கூடவோ,அ.தி.மு.க கூடவோ கூட்டணி வைத்தால் அதிக பட்சம் 25 சீட் தான் கிடைக்கும்.அதுவே காங்கிரஸ் கூட தனியாக கூட்டணி வைத்தால் 50 % சீட் நிச்சயம்.கட்சியை வளர்த்து விடலாம்.
ராகுல்காந்தி அதேபோல் காங்கிரசை தனிப்பெரும் சக்தியாக வளர்க்க நினைப்பதால் எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல் ராகுல் விஜய்காந்த் கூட்டணியில் ஆர்வமாக உள்ளார்.பொதுவாக ஜெ யாரையும் மதிக்க மாட்டார் என்ற பேச்சு முத்துசாமி கட்சியை விட்டு விலகியபோது நீர்த்துப்போனது.எப்போதுமில்லாத அதிசியமாக “எப்போது வேண்டுமானாலும் கட்சியினர் என்னை சந்திக்கலாம் எனக்கூறி அ தி மு க தொண்டர்கள் மனதில் ந்ம்பிக்கையை விதைத்தார்.
மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.விஜயகாந்த் தனியாக நின்றதால் கிடைத்த 12% ஓட்டுகள் தி மு க வுடனோ,அ தி மு க வுடனோ கூட்டணி வைத்தால் அதே அளவு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.
எனவே இப்போது இருக்கும் நிலவரப்படி விஜயகாந்த் காங்கிரஸ் உடன் கூடணி காண்பதே அவரது கட்சி வளர்ச்சிக்கு நல்லது.ஆனால் 50 வருடங்களுக்கு மேல் பொது வாழ்க்கையில் அனுபவம் நிறந்த கலைஞர் அதற்கு வழி விடுவாரா என்பதில்தான் கேப்டனின் எதிர்காலமும் ,தமிழக அரசியலின் போக்கும் தீர்மானிக்கப்படும்.
பி.கு-என்னைப்பொறுத்தவரை அவர் அரசியலில் பிரகாசிப்பதே நல்லது ஏன் எனில் எங்கள் ஆசான்,சபரி,காந்தி பிறந்த மண் மாதிரி படங்களில் அவரைப்பார்ப்பதற்கு அது ஒன்றும் மோசம் அல்ல.

THE SORCERER'S APPRENTICE (மாயவளையம்)- சினிமா விமர்சனம்


உல்டா பண்ணுவதில் நாம்தான் நெம்பர் ஒன் என நம்மாளுங்க யாரும் இனி மார் தட்டிக்க முடியாது.ஹாலிவுட் ஆட்களும் அந்த வேலையை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.டிஷ்னி யின் மாயவளையம் அர்னால்டு ஸ்வார்சனேகர் நடித்த ஜட்ஜ்மெண்ட் டே(தி டெர்மினேட்டர்-2) படத்தை மாயாஜாலம்,மந்திரம் மிக்ஸ் பண்ணி சின்ன பசங்க பாக்கற அம்புலி மாமா,ஹாரிபாட்டர் டைப் படம் ஆக்கீட்டாங்க.

ஜட்ஜ்மெண்ட் டே(தி டெர்மினேட்டர்-2) படத்தில் ஹீரோ சிறுவனை காப்பாற்றுவார்.படம் பூரா வில்லன் சேஸ் பண்ணுவார்.இதில் ஒரு ஹீரோ ஒரு பையனை காப்பாற்ற,வில்லன் இன்னொரு பையனுடன் அவர்களை துரத்துகிறார்.மந்திர மோதிரம்,மில்லேனியத்தின் விடிவெள்ளி என பில்டப் வேறு.

படத்தோட ஓப்பெனிங் சீன் அருமை.நியூயார்க் நகரின் அழகை அள்ளி
கொட்டுகிறது,குறிப்பா பாலம் பிரம்மாண்டம். புதையல் வேட்டையில் வந்த (தெ நேஷனல் ட்ரெஸ்ஷர்)  நிக்கோலஸ் கேஜ்தான் ஹீரோ.ஆனால் அவர் பூந்தோட்டக்காவல்காரன் விஜயகாந்த் மாதிரி கெஸ்ட் ரோல் தான்.
17 வயது பையனாக வரும் மெய்ன் ஹீரொ நண்பர்களுடன் அளவளாவும்
ஆரம்பக்காட்சியே கலகல.”10 வருஷம் கழிச்சு அவளை பார்த்திருக்கே,அவ்ளை கரெக்ட் பண்றதை விட்டுட்டு ஆண்ட்டனாவை கரெக்ட் பண்ணிட்டு வந்து
இருக்கியே?”

படத்தின் டைரக்டருக்கு காமெடி ரொம்ப இயல்பா வருது.சீரியஸான காட்சிகளில்,ஆபத்தான காட்சிகளில் கூட போகிற போக்கில் நகைச்சுவையை
அள்ளித்தெளித்து விட்டு போகிறார் . ஒரு உதா...

மந்திர வளையத்துக்குள்ள ஒரு தடவை உள்ளே வந்துட்டா மறுபடி வெளீயே போக முடியாது.
அப்போ ஒரு தடவை சூசூ போய்ட்டு வந்துடட்டா?

வில்லனாக வருபவர் பிரதாப்போத்தன் மாதிரி வந்து அவர் பங்குக்கு லந்து பண்ணுகிறார்.மீண்டும் ஒரு உதா..

என்கிட்ட ஒரு பையன் இருக்கான்,ஆனா அவனுக்கு ஒண்ணும் தெரியாது.

அப்ப அவன் தான் இந்த வேலைக்கு கரெக்ட்டா இருப்பான்.



கேஜ் மாங்கு மாங்கு என சாப்பிடுவதைப்பார்த்து யங் ஹீரோ வியந்து நின்றதும்

“தப்பா நினைக்காதே,நான் சாப்பிட்டு 10 வருஷம் ஆச்சு”

என்றதும் தியேட்டரே கை தட்டலால் அதிர்கிறது.

ஹீரோயின் மிச்சமான ஃபிகர்.(17 1/2(பதினேழரை)வயது} ( பர்த் சர்ட்டிஃபிகேட் பார்த்த மாதிரியே சொல்றானே?)ஃபிரிட்ஜ் ஃப்ரீசரில் வைத்து எடுக்கப்பட்ட எலுமிச்சம்பழம் மாதிரி என்னா ஒரு ஃப்ரெஷ்னெஸ்,என்னா ஒரு கலர்?அவரது கூந்தல் அழகு தங்க இழைகளால் வார்த்து நெய்யப்பட்ட சுப்பையா பாவு மாதிரி அலை பாயும் அழகு..அடடா!


முக அழகில் மடோனாவாவின் மினியேச்சர்,பளிங்குக்கற்களில் ஊற்றிய பாதரசம் போல் கண்கள்,கோதுமை அல்வாவை 2 துண்டுகளாக வைத்தது போல் உத்டுகள்,ஒயிட் வாஷ் செய்யப்பட்ட சோளக்கருது முத்துக்கள் தர்ப்பூசனிப்பழத்தில் பதித்துவைத்தது போல் பற்கள்,இடை அழகில் இலியானாவின் க்ளோனிங்க்,நடை அழகில் நேருக்கு நேர் சிம்ரன்,ஷெரன் ஸ்டோனின் கட்டழகு,என இமைக்காமல் ரசிக்க வைக்கும் அழகுப்பொக்கிஷம்.
இருவருக்கும் இடையே நடக்கும் காதலா,நட்பா வசனங்கள் ரொம்ப அழகு,

என்னை உனக்கு கொஞ்சமா பிடிச்சிருக்கா,நிறையா பிடிச்சிருக்கா?

......யோசிச்சு சொல்றேன்

என்னை ரொம்பத்தெளீவா குழப்பறே!




இந்த ஜோடிகளின் அலம்பல் பத்தாதென்று கேஜின் ஜோடியாக வரும் வெரோனிக்கா வேறு இதழ் ஒத்தடம் கொடுத்து அவரையும்,நம்மையும் சூடேற்றுகிறார்.

அங்கங்கே வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் சில பிரமிப்பு,சில சும்மா உதார்.மம்மி
படத்தில் வருவது போல் பல காட்சிகள்.சேசிங் காட்சிகள் அதிகம்.கார் மாடல் மாறுவது,வில்லன் கடைசி வரை ஹீரோவை டாமினேட் செய்வது ,என பல காட்சிகள் சிறுவர்களை கவருவது உறுதி.

காதில் பூ சுற்றும் காட்சிகளும்,லாஜிக்கே இல்லாத காட்சிகளும்
அதிகம்.ஆனால் ரசிக்க வைக்கும் அளவில்தான் அமைத்திருக்கிறார் டைரக்டர்.ஆங்கில பதிப்பில் பார்த்தால் பல வசனங்கள் புரியாமல் போக வாய்ப்புண்டு.

க்ளைமாக்ஸில் பேயாக மாறும் வெரோனிக்காவைப்பார்த்து யாரும் பயம் கொள்ளவே இல்லை.ஏனெனில் அவர் அப்போதுதான் லோ கட்டில்,லோ ஹிப்பில் கிளாமராக தெரிகிறார்.

15 வயசு முதல் 18 வயசு வரை உள்ள டீன் ஏஜ் பசங்களும்,அம்புலி மாமா,பாலமித்ரா காமிக்ஸ் ரசிகர்களூம்,ஹாரிப்பாட்டர் ரசிகர்களும் பார்க்ககலாம்.

டிஸ்கி 1 - தமிழன் தமிழ்ப்படம்தான் பாக்கனும்,தமிழ்ப்படத்துக்குதான் விமர்சனம் பண்ணனும்னு யாரும் சொல்லிடாதீங்க..ஃபாரீன்ல ஸ்விஸ் பேங்க்ல தமிழன் (அரசியல்வாதிங்க)அக்கவுண்ட் வெக்கறது இல்லையா?

டிஸ்கி 2 - ரெண்டு நாளுக்கு முன்னால ஒரு காமெடி நட்ந்துச்சு,நான் என் பதிவை இண்ட்லில இணைச்சுட்டு வர்றேன்,அதுக்குள்ள யாரோ தமிழ்மணத்துல இணைச்சு மைனஸ் ஓட்டு போட்டுட்டு போய்ட்டாங்க..என்ன அவசரம்?  நண்பேண்டா....

டிஸ்கி 3 - சின்ன பசங்க பாக்கற படம்னு சொல்லிட்டு ஸ்டில் ஏடாகூடமா இருக்கேன்னு பாக்க வேணாம்,(அதான் பாத்துட்டீங்களே?). இது படத்தில் இருந்து நீக்கப்பட்ட ஸ்டில்,எதேச்சையா கிடைச்சுது,எஞ்ஜாய்

Thursday, January 06, 2011

விஞ்ஞான சிறுகதைகள்

விஞ்ஞான சிறுகதைகள்..குட்டி குட்டியாய் எழுதி இருக்கும் இவை நான் கல்கி வார இதழில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் எழுதியவை..படிக்க சிரமமாய் இருப்பின் க்ளிக் செய்து படிக்கவும்..

நான் ஹிட்ஸ்க்கு அலைகிறேனா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv9a8IOHdvF0gfiPaKx9SCDZahJdFq5JguoDX6aLiDZn5uzbcPDwcqmTlHw9UUWyRxLJyy3-9Vg3cHsbNX5a29GD9pjuu_30upFrg2s5wp6mBiRFsgzgYfLHEypOosb7uRr6tlN_kQkiY/s1600/rok.jpg
நல்ல நேரம்  சதிஷ் நேற்று சேட்டிங்கில் வந்தார்..
அவர் கேட்ட கேள்விகளும் ,நான் அளித்த பதில்களும்..


1.ஹிட்ஸ் பதிவு எழுதி பரபரப்பை கிளப்புவது எப்படி?

அது ரொம்ப ஈசி ஆச்சே... ஹிட்ஸ்க்காக எழுதுவது தப்பு..அது வேண்டாம்..அப்ப்டின்னு தாக்கி எழுதுனா சூப்பர்ஹிட் ஆகிடுமே...


2..ஒரு நாளைக்கு மூன்று பதிவுகள் யாரிடம் போட்டி போடுகிறீர்கள்?

நியூ இயர் அன்னைக்கிஆஃபீஸ் லீவ். அதனால தெரியாத்தனமா 3 போஸ்ட் போட்டுட்டேன்.. அது ஒரு குத்தமாப்பா.. ஆளாளுக்கு வறுத்து எடுக்கறீங்களே , அது ஒண்ணுமில்ல நியூ இயர் அன்னைக்கு தமிழ்மணம் ஓட்டுப்பட்டை வேலை செய்யலைய்யாம்

அது தெரியாம பதிவு போட்டு 3 மணி நேரம் ஆகியும் நமக்கு ஓட்டே விழலையே பதிவு ஊத்திக்கிச்சோன்னு நினைச்சு இன்னொரு பதிவு போட்டேன், அதுவும் எடுபடலை... அப்புறம் இன்னொரு பதிவு... அப்புறம் அடுத்த நாள்தான் மேட்டர் தெரிஞ்சிது... நாட்ல 1008 பிரச்சனை இருக்கு அதை எல்லாம் விட்டுட்டு ஒரு மொக்கைப்பதிவர் 3 போஸ்ட் போட்டதைப்பத்தி ஆராய்ச்சி பண்றீங்களே.. இது நியாயமா?




3. நீங்க 24 மணி நேரமும் பதிவிடுவதையே சிந்திப்பீர்களா..?

அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை.. 2 மணி நேரம் நெட்ல செலவு பண்ணுவேன்..
அப்பப்ப கைல சரக்கு இல்லைன்னா என்ன மேட்டர் போடலாம்னு சிந்திப்பேன்.. அவ்வளவுதான்..


4.ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் இண்டெர்நெட்டில் செலவு செய்கிறீர்கள்?

காலைல ஒரு மணீ நேரம், நைட் ஒரு மணீ நேரம் அவ்வளவுதான். எப்பவாவது ஃபீல்டு ஒர்க்னு வெளில போறப்ப நெட் செண்ட்டர் போவேன்..

5.கமெண்ட்ஸ்,ஓட்டு அதிகம் வாங்குவது அவசியமா?

என்னைப்பொறுத்த்வரை தேவை இல்லைன்னுதான் நினைக்கறேன்.படிக்கறவங்க நல்லாருக்குன்னு சொன்னாலே போதும்.ஆனா குறைஞ்ச பட்சம் 8 ஓட்டாவது வாங்குனாத்தான் தமிழ்மணம் முகப்புல வருது, அதனால ஓட்டைப்பற்றி கவலைப்பட வேண்டி வருது.. கமெண்ட்ஸ் நிறைய வந்தா நமக்கு உற்சாகமா இருக்கும். ஏன்னா ஒரு படைப்பாளிக்கு சன்மானமா கிடைக்கறது அங்கீகாரம்தானே..எல்லா படைபாளிகளும் மக்களோட அங்கீகாரத்துக்குத்தானே ஏங்கறாங்க..?






6.தரம் உள்ள பதிவு,தரமற்ற பதிவு என எப்படி கண்டுபிடிப்பது?

மக்களுக்கு யூஸ் ஆகற மாதிரி எழுதப்படும் எல்லாபதிவும் தரமானதுதான். தொப்பி தொப்பி, விக்கி உலகம், தேவியர் உள்ளம் திருப்பூர் ஜோதி,ம தி சுதா போன்றவர்களுடைய எழுத்துக்களை உதாரணமாய் சொல்லலாம்.நான் , நீ எழுதறதெல்லாம் சும்மா டைம் பாசிங்க்குக்கு. நீயாவது அப்பப அரசியல் கட்டுரை போட்டு அசத்தறே.  ஆனா நான் மொக்கை ஜோகஸ்

, சினிமா விமர்சனம்னு காலத்தை ஓட்டறேன்.. பலர் சுட்டிக்காட்டறாங்க..கொஞ்சம் கொஞ்சமா திருந்தலாம்னு ஐடியா..

7.எதிர்காலத்தில் வலைப்பதிவர்களுக்கு அங்கீகாரம்,வளர்ச்சி எப்படி இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

 கரு பழனியப்பன் சென்னைப்பதிவர்களை அழைத்தது ஒரு திருப்பு முனை. நாளாவட்டத்தில்  எல்லா இயக்குநர்களுமே..அதை ஃபாலோ பண்ணலாம்.பத்திரிக்கைகள் வலைப்பதிவுகள உன்னிப்பா கவனிக்க ஆரம்பிச்சிருக்காங்க..மாற்றம் வரும்.

Wednesday, January 05, 2011

சி பி ஐ விசாரனையில் தலைவரின் காமெடி கூத்துக்கள்

http://www.eurweb.com/wp-content/uploads/2010/06/angelina-jolie.jpg
1. மகளிர் அணியை கலைச்சிடலாம்னு தலைவர் சொன்னாராமே?

நீ வேற ,அவரால கர்ப்பம் ஆன மகளிர் அணித்தலைவியை கலைக்கச்சொன்னாரு,அவ்வளவுதான்...


2.டாக்டர்,எனக்கு சோக நினைவுகள் வர்றப்ப 5 கி மீ என்னையும் அறியாம நடந்துடறேன்...


ஓஹோ,தூக்கத்துல நடக்கற வியாதி மாதிரி உங்களுக்கு துக்கத்துல நடக்கற வியாதியா?



3.தலைவர் கட்சியை க்ளோஸ் பண்ணீட்டாராமே?

ம்க்கும் ,நாங்களும் அப்படித்தான் நினைச்சோம்.எலக்‌ஷன் வரப்போகுதுன்னு தெரிஞ்சதும், கட்சியை மறுபடி ரீ - ஸ்டார்ட் பண்ணீட்டாரு...



4. நிருபர் - மேடம்,ஏன் டைவர்ஸ் பண்றீங்க?


நடிகை - 3 மாசத்துக்கு ஒரு தடவை ஒரு புதுப்படத்துல நடிக்கறப்ப ஹீரோவை மாத்தற மாதிரி 6 மாசத்துக்கு ஒரு தடவை புருஷனை மாத்தறது எனக்கு பழகிடுச்சு...



5. தலைவரே... கொள்கைதான் ஒரு கட்சிக்கு முக்கியமா?

அது ஆட்சிக்கு வர்ற வரை. ஆட்சிக்கு வந்துட்டா அடிக்கப்போற கொள்ளை தான் முக்கியம்.


6. டாக்டர், ஃபீஸ் ரொம்ப ஓவரா வாங்கறீங்களே?

சும்மாவா? நர்சுங்க எல்லாம் சூப்பர் ஃபிகருங்களா அப்பாயிண்ட் பண்ணி இருக்கேனே?




7.தலைவர் திடீர்னு  “ நான் ஒரு மாசத்துக்கு தொடர் மவுன விரதம்”னு அறிக்கை விட்டிருக்காரே?


சி பி ஐ விசாரனைக்கு டிமிக்கி தரத்தான்.



8. டாக்டர்,24 மணி நேரமும் தலை வலி என்னை விட்டுப்போறதே இல்லை..

விடுங்க,பொண்டாட்டீங்க எப்பவும் புருஷன் கூடவே தான் இருப்பாங்க..

.

9. நம்ம ரமேஷ் ரொம்ப மச்சக்காரண்டா.. அவனோட மனைவிக்கு 3 தங்கச்சிங்க தெரியுமா?

அப்போ மச்சினிக்காரன்னு சொல்லு.



10. தலைவர் இப்போ வாக்குறுதி அளிக்கபோறார்னு எப்படி கரெக்டா சொல்றீங்க?

இப்போ தலைவர் அவர் இஷ்டத்துக்கு புளுகுவார் அப்படின்னு மேடைல ஓப்பனா சொன்னாங்களே?

பிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி? பாகம் 2

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfaWtp6YYKUgMoIcSDTaKQqc_cm0aIF_a34-SMkAX_p2jKno8RN1x-zUuvxfDgRImLdLXyIO7fHL5jrcNm-k6K3gi5g3a-VrrPrcnoeR0lDd6yUcyUDwpmoJscx9fzjh1BZF8w5ddBn-I/s200/vikatan.jpg 
கோடம்பாக்கத்திலும் சரி,இலக்கியவாதிகள்,படைப்பாளிகள்,எழுத்தாளர்கள்,வாசகர்கள் வட்டத்திலும் சரி ஆனந்த விகடனில் ஒரு படைப்பு வருகிறது என்றால் அதற்கு கிடைக்கும் 
மரியாதையே தனி.எஸ் பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த காலகட்டம் ஆனந்த விகடனின் பொற்காலம் எனலாம்.மற்ற இதழ்களில் 10 ஜோக்ஸ் வருவதும் ஆனந்த விகடனில் ஒரு ஜோக் வருவதும் ஒன்றுதான்.

அதே போல் கவிதைகள் கணையாழி இதழில் வந்தால் பெருமைதான் என்றாலும் ஆனந்த விகடனில் வந்தால் 8 லட்சம் வாசகர்களை அது சென்றடைகிறது என்பதால் அதன் வீச்சு அதிகம்.

படைப்பு அனுப்பி 7 நாட்களில் பரிசீலித்து பிரசுரம் செய்து விடுகிறார்கள் என்பது மற்ற பத்திரிக்கைகளோடு ஒப்பிடுகையில் செம ஸ்பீடு.வாரா வாரம் வியாழன் அன்று விகடன் வருகிறது என்றால் நாம் புதன் கிழமை ஒரு படைப்பை அனுப்பினால் அது பிரசுரிக்க தகுதி பெற்றால் அடுத்த வியாழன் அன்று பிரசுரம் ஆகி விடும்.

முகவரி - ஆனந்த விகடன், 757,அண்ணா சாலை,சென்னை 600008. மெயில் அட்ரஸ் [email protected]

1.ஜோக்ஸ் - அந்தந்த வாரத்தில் டாப்பிக்கல் மேட்டர் என்ன என்று பாருங்கள்.அதை நையாண்டி செய்து எழுதுங்கள்.அரசியல் நையாண்டிகளுக்கு முன்னுரிமை தருவார்கள்.டாக்டர் ராம்தாஸ்,கலைஞர், ஜெ ,கேப்டன் இவர்களது அறிக்கைகளை தொடர்ந்து கவனித்து வாருங்கள்.(அதுவே செம காமெடியாக இருக்கும் )அதை நக்கல் அடித்து எழுதினால் போதும்.உதாரணத்துக்கு ஆ ராசா மேட்டர் பாப்புலர் ஆன வாரத்தில் ஜோக்பாட் அந்தஸ்துடன் ரூ 300 பரிசு பெற்ற  ஒரு ஜோக் 

என் பையனை ராசா மாதிரி வளர்க்கப்போறேன்..

வேணாம்ங்க.. நல்ல படியா வளருங்க..

மேட்டர் ரொம்ப சிம்ப்பிளாகவும், சுருக்கமாகவும், சொல்ல வந்த கருத்தை நச் என சொல்லி இருப்பதையும் பாருங்கள்.தனி மனித அந்தரங்க தாக்குதல்கள் இல்லாமல் பொது வாழ்க்கை பற்றி மட்டும் எழுதுங்கள்.ஏ ஜோக்குகள்,வக்கிர எழுத்துக்கள் இவற்றை தவிர்க்கவும்.உத்வேகத்துடன் எழுத வேண்டும்.ஒரு ஜோக்கிற்கு ரூ 100 சன்மானம் தர்றாங்க.இதில் என்ன காமெடி என்றால் ஆனந்த விகடன் ரூ 6 என விற்கப்பட்ட போதும் சன்மானம் ஒரு ஜோக்கிற்கு ரூ 50 என தந்தார்கள்.இரண்டரை மடங்கு விலை ஏறிய பிறகு விலை ஏற்ற மற்றும் விகிதாச்சார முறைப்படி பார்த்தால் ரூ 250 தர வேண்டும். ஆனால் அப்படி எல்லா, காசை கணக்கு பார்த்து எழுதினால் முன்னேற முடியாது.

நமது படைப்பு பிரசுரம் ஆக வேண்டும் என்ற உத்வேகத்துடன் எழுத வேண்டும்.பொதுவாக ஒரு துறையில் நாம் இறங்கி வெற்றி பெற வேண்டும் எனில் அதே துறையில் வெற்றி பெற்ற மற்ற சாதனையாளர்களை கவனிக்க வேண்டும்.காப்பி அடிக்க அல்ல. இன்ஸ்பைரேஷனுக்காக. 
ஆனந்த விகடனில் ஜோக் எழுதி சாதனை படைத்தவர்கள் 3 பேர்.
1. ஹாய் மதன்.  2 படுதலம் சுகுமாரன் 3 . வி சாரதிடேச்சு

முன்ஜாக்கிரதை முத்தண்ணா,சிரிப்புத்திருடன் சிங்காரவேலு போன்ற தலைப்புகளில் மதனின் ஜோக்குகள் பக்கம் பக்கமாக வந்து ஹிட் ஆனது. இவருக்கு கார்ட்டூன் போட வரும் என்பது ஒரு பிளஸ் பாயிண்ட்.ஆனால் நாம் ஜோக் மட்டும் கார்டில் எழுதி அனுப்பினால் போதும் .ஒரு கார்டுக்கு 2 ஜோக் மட்டும் எழுதவும்.எழுதி கீழே உங்கள் பெயர் ,ஊர் பெயர் எழுதவும்,பின் பக்கத்தில் அட்ரஸ் எழுதவும்.ஊரின் மெயின் போஸ்ட் ஆஃபீசில் போஸ்ட் செய்யவும்.

எம் ஜி ஆரின் ஆட்சிக்காலத்தில் ஆனந்த விகடனில் வந்த அட்டைப்பட ஜோக்கிற்காக அதன் ஆசிரியர் ஒரு நாள் சிறையில் இருந்த வரலாற்று சிறப்பு மிக்க ஜோக்கை எழுதி புகழ் பெற்றவர் படுதலம் சுகுமாரன்,

வி சாரதி டேச்சு வார்த்தை ஜால ஜோக் எழுதுவதில் கில்லாடி.ஒரு சாம்ப்பிள்.,
நானும் ,ரஜினியும் ஒரே இலைலதான் சாப்பிட்டோம்.

நிஜமாவா? அவ்வளவு நெருக்கமா?

ம்ஹும்,அவரும் வாழை இலைலதான் சாப்பிட்டார்,நானும் வாழை இலைலதான் சாப்பிட்டேன்.

நீங்க 10 ஜோக் எழுதுனா அதை உங்க நண்பர்கள்,நலம் விரும்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.ஏன்னா நாம எது எழுதுனாலும் நம்ம மனசுக்கு அது பிரமாதம் என்றுதான் தோன்றும்.மற்றவர்கள் சொல்வதே சரியாக இருக்கும்..

டாக்டர்கள் ஜோக்,சினிமா சம்பந்தப்பட்ட ஜோக் ஈசியா செலக்ட் ஆகும்.சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்களைக்கண்டு நாம் பொங்கி எழுவோமே,அந்தக்கோபத்தைக்கூட ஜோக்காக மாற்றலாம். 2 பக்க கட்டுரையை விட 2 வரி ஜோக்கின் வீரியம் அதிகம்.

ஒரு பத்திரிக்கையை வாங்கினால் ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதி பிடிக்கும்,ஆனால் எல்லோருக்கும் பிடித்த பகுதி ஜோக் தான்.சிந்திக்க ,எழுத எல்லாத்துக்கும் ஜோக்தான் பெஸ்ட்.

ஆரம்பத்தில் நான் கவிதைதான் எழுதி வந்தேன்..அது மக்களை போய் அதிகம் ரீச் ஆகவில்லை(ஒரு வேளை எனது சரக்கு சரி இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம்)பிறகுதான் என் ரூட்டை மாற்றினேன்.

ஆனந்த விகடனில் வந்த எனது முதல் ஜோக்

ஜட்ஜ் - பஸ்ல மணிபர்சை  பிக்பாக்கெட்அடிச்சியா?

கைதி - மணி பர்சை பாலு அடிச்சான்,கந்தசாமி பர்சைத்தான் நான் அடிச்சேன்.

ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் வந்த எனது முதல் ஜோக்

என் ரத்தத்தின் ரத்தமே அப்படின்னு மேடைல பேசுனது தப்பா போச்சு.

ஏன் தலைவரே?

கட்சி பல குரூப்பா பிரிஞ்சிடுச்சு.

2. கவிதை 

ஆனந்த விகடனில் கவிதை எழுதி வரவைப்பதும் ,அரசியல்வாதியை நேர்மையாக நடக்கவைப்பதும் ஒன்றுதான். மிக அரிது. ஆனால் ஆதலையூர் சூர்யகுமார்,நாவிஷ் செந்தில்குமார்,டி அய்யப்பன் போன்றவர்கள் சர்வசாதாரணமாக கலக்கி வருகிறார்கள். ஒரு பக்க கவிதைக்கு ரூ 300 தர்றாங்க. கவிதையின் சைஸை பொருத்து ரூ 100 ,  ரூ 200 என மாறும்.

ஏ4 வெள்ளைத்தாளில் எழுதி கவரில் வைத்து அனுப்பவும்.காதல் கவிதைகள் எழுதுவதை விட வித்தியாசமான அனுபவங்கள், சமூக அவலங்கள்,பெண்கள் மனது, குழந்தைகள் சம்பந்தப்பட்ட கவிதைகள் அதிகம் வருகிறது.

3. சிறுகதை - முன்பெல்லாம் விகடனில் 4 கதை வந்தது.இப்போ ட்ரெண்ட் மாறிடுச்சு. கதையை யாரும் விரும்ப்பி படிக்கறதில்லை,பொறுமையும் இல்லை.மேம்போக்காக புரட்டுவதே  ஃபேஷன் ஆகிடுச்சு. ஏ4 ஷீட்டில் 8 பக்கம் வரும்படி எழுதினால் விகடனில் 3 பக்கம் வரும்படி அமையும். 2 மாதம் கழித்து வரும் (செலக்ட் ஆனா) . நீங்கள்  படைப்பு அனுப்பி 1 மாதத்தில் உங்களுக்கு தகவல் வந்துடும். உங்க கத செலக்ட் ஆகி இருக்கு. இந்த கதை வேறு புக்குக்கு அனுப்பலை, என் சொந்தக்கற்பனையே என உறுதி மொழிக்கடிதம் கேட்டு வாங்கிக்கொள்வார்கள்.
பொதுவாக விகடனில் கட்டுரைகள் எழுத உள்ளேயே ஆள் இருக்காங்க. அதனால அதை விட்டுடுங்க. இப்போ புதுசா அலை பேசுதே என்ற பகுதியில் ட்விட்டரில் நம் மக்கள் ட்வீட்டுவதை போடறாங்க, இதில் சாதனை படைக்கும் அளவு படைப்புகள் வந்தது பரிசல்காரன் கிருஷ்ணகுமார், திருப்பூர்.இவரை எனக்கு 15 வருடங்கள் முன்பே தெரியும். மாத இதழ்களில் கவிதையில் கலக்கியவர். கே பி கிருஷ்ணகுமார் திருப்பூர் என வரும், பட்டுக்கோட்டை பிரபாகர் நடத்தும் ஊஞ்சல் மாத இதழில் பின்னி எடுத்தார்.
சிலர் பத்திரிக்கைகளுக்கு படைப்பு அனுப்பும்போது எடிட்டருக்கு கவரிங்க் லெட்டர் வைத்து அனுப்புவது உண்டு. டியர் சார் ஒரு கவிதை அனுப்பி இருக்கேன் ,தயவு செஞ்சு பிரசுரிக்கவும்  என இருக்கும் இது தேவை இல்லாதது. அதே போல் பத்திரிக்கைக்கு ஃபோன் போட்டு சார் நான் அனுப்புன மேட்டர் வந்துச்சா? செலக்ட் ஆச்சா? எனவும் கேட்க வேண்டாம் . 

தகுதி உடைய படைப்புகள் தானாக தேர்வு பெறும். ஆர்வக்கோளாறில் நம் தகுதியை இழக்கக்கூடாது.

வலைப்பூக்கள் நடத்தும் பதிவர்கள் அனைவரும் பத்திரிக்கை உலகை கலக்க வேண்டும் என்பதே என் ஆசை.ஏன் எனில் பதிவுலகம் அதிக பட்சம் 10,000 பேர் படிக்கறாங்க. அதிலும் நம்ம எழுத்தை எல்லாம் அதிக பட்சம் 2000 பேர்தான் படிக்கறாங்க. ஆனால் பத்திரிக்கை யில் எழுதினால் அது குறைந்தபட்சம் எட்டு லட்சம் மக்களை சென்றடைகிறது என்பதை மறக்க வேணாம்.மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

டிஸ்கி - 1. அடுத்த வாரம் என்றதும் அப்பாடா ,பிளாக் 6 நாள் லீவா?தப்பிச்சோம்டா சாமி என யாரும் மனப்பால் குடிக்கவேண்டாம் (அதென்ன மனப்பால்?மன டீ ,மன காப்பி எல்லாம் கிடையாதா?) இந்தத்தொடர் அடுத்த வாரம் மீண்டும் வரும் , மற்றபடி எனது மொக்கை ஜோக்குகள்  தினமும் தொடரும்

டிஸ்கி 2 - சிலர் என்னை வம்புக்கு இழுத்து பதிவு போடறாங்க,நான் கோபப்பட்டு பதிலடி கொடுப்பேன்,பதிவுலகில் அடுத்த சண்டையை ஆரம்பிப்போம் என ,அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது சாரி எனக்கு சண்டை போடத்தெரியாது,மொக்கை பதிவுகளை மட்டுமே எழுத தெரியும்.எந்த எழுத்து நல்ல எழுத்து என்பதை காலம் தீர்மானிக்கும்.

Tuesday, January 04, 2011

நயன் தாராவை வரவேற்க காத்திருந்த ஜட்ஜ்

http://www.nayantharapictures.com/wp-content/uploads/2010/01/nayanthara-sexy.jpg
1. தலைவரே, ஆண்டவனுடன் மட்டும்தான் கூட்டணின்னு சொன்னீங்க..இப்போ ஆளுங்கட்சி கூட கூட்டனி வெச்சுட்டீங்களே?

ஆமா, ..அவங்களும் இந்த நாட்டை ஆண்டவர் தானே...?

2.எலக்‌ஷன் ந்நடக்கரதுக்கு முன்னாலயும்,இப்போவும் தலைவர்கிட்டே என்ன மாற்றம் தெரியுது?

மக்களுடன் கூட்டணின்னு முதல்ல சொன்னவர் இப்போ மக்குகளுடன் கூட்டணி அப்படிங்கறாரு...

3. டியர், நீ நினைக்கற  நினைக்கற மாதிரி என் கிட்டே அவ்வளவு பணம் இல்ல..
அப்படி அவ்வளவு பணம் இருந்தா நான் சிங்கப்பூர்ல போய் செட்டில் ஆகி இருப்பேனே?

யார் அந்த சிங்கப்பூர் சிறுக்கி?

4. தலைவரே.. யார் கூடவும் கூட்டணி இல்லைன்னு ஏன் சொல்றீங்க?


அப்புறம் ஊழல்லயும் பங்கு தரனுமே?

5.டாக்டர் ஏன் குழப்பமா இருக்கறாரு?

கட்சில சேர்ந்ததும் அவருக்கு மறுபடி ஒரு டாக்டர் பட்டம் குடுத்துட்டாங்களாம்...

6.தலைவ்ரே.. புது வருஷத்துக்கு உங்க லட்சியம் என்ன?

வேறென்ன? புதுசா ஏதாவது ஊழல் பண்ண வேண்டியதுதான்..

7. டாக்டர், ஆபரேஷன் பண்ணிக்காப்பாத்துன நீங்கதான் என் தெய்வம்.

சாரி.. ஒரு தெய்வக்குத்தம் நடந்துடுச்சு...ஆபரேஷன் ஃபெயிலயர் ஆகிடுச்சு...

8. தலைவருக்கு பதவி மேல ஆசை இல்லைன்னு சொல்றாரே..?

ஆமா,அவருக்கு மகளிர் அணித்தலைவி மேல தான் ஆசை.

9. அந்த டாக்டர் ஃபாரீன்ல போய் எம் பி பி எஸ் படிச்சவராம்...

அதுக்காக ஆபரேஷனையும் ஃபாரீன்லதான் வைப்பேன்னா எப்படி?

10. நடிகையை பார்க்கற ஆவல் பொது மக்களுக்கு இருக்கறது சகஜம்தானே..?

அதுக்காக நயன் தாரா வர்றார்னு தெரிஞ்சதும் ஆவலை அடக்கமாட்டாம ஜட்ஜே கோர்ட் வாசல்ல வந்து வெயிட் பண்றதா?

கட்சியைக்கலைக்க முடிவெடுத்த தலைவர்

http://www.tamilulagam.net/main/images/stories/sonia-agarwal.jpg
1. தினமும் அதிகாலை 5 மணிக்கே தலைவர் எந்திரிச்சிடறாரே.?.

அப்போதானே நிறைய  ஊழல் பண்ண முடியும்?.

2.நிருபர் - மேடம், உங்க ஹாபி என்ன?

நடிகை - கல்யானம் பண்ணிக்கறதும், டைவர்ஸ்  பண்றதும்... .


3.மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்னு தலைவர் சொல்றாரே?
கடமையா? கட்சியா?

ஊழல்தான்.


4. இங்கிலீஷ் பட டி வி டி பார்த்து  நெட்டுரு போட்டு திருடற  ஆள் நான் இல்லை...

ஓக்கே டைரக்டர் சார்.உங்களோடது சொந்த சரக்கா?

ஏன்? தமிழ்ப்படத்தை பார்த்து சீன் உருவக்கூடாதா?நான் தமிழன்,தமிழ்ப்படத்தைத்தான் உல்டா பண்ணுவேன்..


5.எனக்கும் ,என் மனைவிக்கும் ஒத்து வர்லை.

சரி, டைவர்ஸ் பண்ணி விட வேண்டியதுதானே?

ஏதோ என் மனைவிக்கு கூட பிறந்தவங்க 2 பேரு இருக்காங்க அப்படிங்கற ஒரே காரனத்துக்காக எல்லாத்தையும் பல்லைக்கடிச்சுட்டு பொறுத்துக்க வேண்டியதா இருக்கு....
http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/nnozizi//mywebdunia/UserData/DataC/cinemakisukisu/images/restricted/06-12-2008/sonia_agarwal_131621.jpg
6.ஜட்ஜ் - ரூ 500 திருடுன உனக்கு ரூ 5000 அபராதம்.

கைதி - என்னங்க லாஜிக்கே இல்லாத தண்டனையா இருக்கு..?

7. நிருபர் - மேடம்,பொங்கலுக்கு உங்க படம் ஏதாவது  ரிலீஸ் ஆகுதா?

நடிகை - இல்லை.அதுக்குப்பதிலா என் பேபியை ரிலீஸ் பண்றேன். நான் இப்போ 3 மாசம்.


8.விவசாயம் தழைக்கப்பாடுபடுவோம்னு தலைவர் அறைகூவல் விடுக்கறாரே?

உர ஊழலுக்கு அடிகோல் போடறார்னு அர்த்தம்.


9.நிருபர் - மேடம்,உங்களை பேட்டி எடுக்க வந்திருக்கோம்..

நடிகை - எனக்கு வேணும்,நீங்க பாட்டுக்கு எடுத்துட்டு போயிட்டா?நான் என்ன பண்றது?



10.மேடைல பேச வந்த தலைவர் 356 னு  பேசிட்டு உக்காந்துட்டாரே?என்ன அர்த்தம்?

கட்சியை கலைக்கப்போறாராம்.

டிஸ்கி 1 - சனி ,ஞாயிறு நெட் பக்கமே வராதவங்களுக்காக

1.  புத்தாண்டில் நாம் எடுக்க வேண்டிய சபதங்கள்

2. முன்னணி தமிழ் சினிமா ஹீரோக்கள் ஜோக் அடித்தால்....

3.சிந்தாமணி கொலை வழக்கு - சினிமா விமர்சனம் 18

4.அல்டாப்பு அரசியல்வாதி VS பில்டப்பு நடிக

5.ஊர் வம்பு உடம்புக்கு ஆகாது தம்பி..

6.

 7. கோட்டி - சினிமா விமர்சனம்


Monday, January 03, 2011

கோட்டி - சினிமா விமர்சனம்

http://indiageez.com/wp-content/uploads/2010/12/kotti_movie_wallpapers_posters_stills_02.jpga
படத்தோட போஸ்டர் டிசைனையும்,சாய்குமாரோட ஆவேச முகத்தையும்
பார்த்ததுமே ஏதோ டப்பிங்க் படமோ என்ற பயத்தோடு அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றும் முருகன் மந்திரம் அவர்களுக்கு ஃபோன் ஃபோட்டு படத்தை பற்றி விசாரித்தேன்.நேரடி தமிழ்ப்படம் என்று உறுதி ஆனதும்தான் தியேட்டருக்கே போனேன்.

படத்தோட ஹீரோ கம் டைரக்டர் பேரு சிவன் (அறிமுகம்).ஆர் பாண்டியராஜனின்  பாடி லேங்குவேஜ்,லிவிங்க்ஸ்டனின் முக சேஷ்டைகள்,ஆர் பார்த்திபனின் தெனாவெட்டு என கலந்து கட்டிய கலவையாக படத்தின் இடைவேளை வரை காமெடி  போர்ஷனை கையில் எடுத்துக்கொண்டு இவர் செய்யும் அலப்பறைகள் கலக்கல். ஆனால் அவரது முக அமைப்பும்,தோற்றமும் ஒரு ஹீரோவுக்கு உண்டான கெத்தை தரவில்லை. ஆனால் பக்காவான ஸ்கிரிப்ட் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகலாம் என்ற லேட்டஸ்ட் கோடம்பாக்க விதிப்படி இவரும் ஹீரோ ஆகி இருக்கிறார்.

ஹீரோயின் பாக்யாஞ்சலி.நல்ல முக வெட்டு.ஹோம்லியான ஃபிகர்.60 மார்க்
போடலாம்.காதல் காட்சிகளிலும்,சோக காட்சிகளிலும் முக உணர்வை வெளிப்படுத்துவதில் சிக்சர் அடிக்கும் இவர் நகைச்சுவைக்காட்சிகளில் தடுமாறுகிறார்.வழக்கமாக படம் முழுக்க போர்த்தி அடக்க ஒடுக்கமாக வரும் ஹீரோயின்கள் டூயட் சீன்களில்  மட்டும் கவர்ச்சிப்பாவையாக வருவது வழக்கம்.ஆனால் இவர் படம் முழுக்கவே டீசண்ட்டாக வருவது அழகு. (ஹூம்,வட போச்சே...)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijDnDQbKwE9E-JC5Cstxi1F9FtWWHR1JCmkjK22oD8ldxOr4jJ_JYIhnzun54pmudtdEbxmgV9a9xMFBiw536RZR2crJpcJnMXqXgn7yB5LDN__3MOO2Ck0QXX-WBGkcXCzI3iYhP4oEw/s1600/Kotti-Movie-Stills-10.jpg
படத்தோட ஓப்பனிங்க் சீன்லயே ஹீரோ ஏதோ ஐ டி கம்பெனியில் ஒர்க்
பண்ணுபவர் மாதிரி கையில் ஃபைலோடு பஸ் ஸ்டாப்பில் நிற்பதும்,பின் அவரது ஃபைலில், ஊரில் உள்ள எல்லா தியேட்டரிலும் என்ன படம் ஓடுகிறது என்ற பேப்பர் கட்டிங்க்ஸ்ஸின் தொகுப்புதான் என்பது தெரிய வரும்போது செம காமெடி.


பஸ் ஸ்டாப்பில் பக்கத்தில் நிற்பவர் சிகரெட் லைட்டரை சங்கிலியில் கட்டி பேண்ட் பாக்கெட்டில் இணைத்து முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக நட்ந்து கொள்வதும் சிரிப்பை வரவழைக்கிறது.இன்னொருவர் கையில் ஆனந்த விகடன் புக்குடன் பக்கத்தில் நின்று குறுக்கே குறுக்கே பேசி கலகலப்புக்கு உத்தரவாதம் தருகிறார் .இந்த மூவர் கூட்டணி இடைவேளை வரை படத்தை காமெடியாக கொண்டு செல்கிறது.


ஹீரோவின் தங்கை ஹீரோவிடம் அண்ணே என்னை தின பச் ஸ்டாப்பில் கலாட்டா செய்கிறான் என்று புகார் செய்ததுமே ஏதோ ஃபைட் சீன் வரப்போகிறது என பார்த்தால் அவன் சின்ன பொடியன். மேலும் ஹீரோயினின் தம்பி.ஹீரோவின் தங்கையை ஹீரோயினின் தம்பி லவ் பண்ணுவதும்,ஹீரோ ஹீரோயினின் காதலுக்கு அவன் குறுக்கே நிற்பதும் என டைரக்டர் கையாண்ட காமெடி டிராக் நல்லாவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

http://www.koodal.com/cinema/gallery/events/2010/306/kotti-movie-audio-launch-stills_1_032057123.jpg

ஆனால் இந்த காமெடி கொண்டாட்டம் எல்லாம் இடைவேளை வரைதான்.படம் கதைக்குள் போக ஆரம்பித்ததும் தாதா கதை என்று புரிய ஆரம்பித்ததும் கொட்டாவி வருகிறது.ஊரில் 2 கேங்க்.தாதா கோஷ்டிகள் 2ம் யார் பெரியவன் என்ற ஈகோ பிராப்ளத்தில் அடித்துக்கொள்வதும், ஒரு தாதாவின் மகன் ஒரு கட்டத்தில் இன்னொரு கோஷ்டியை பழி தீர்ப்பதும்தான் கதை என்ற உண்மை
உரைத்ததும் அடடா டைரக்டர் ஒரு நல்ல காமெடி படத்தை தராமல் மிஸ் பண்ணி விட்டாரே என்ற ஆதங்கம் எழுகிறது.
 

 NAUGHTY (நாட்டி)என சொல்ல வைக்கும் கோட்டியின் காமெடி வசனங்கள்



1. எக்ஸ்க்யூஸ் மீ சார்,உங்களை ஒண்ணு கேக்கலாமா?


கடனைத்தவிர எது வேணாலும் கேக்கலாம்.



 2.அய்யரே.. ஆம்பளைங்க சைடு வரவே மாட்டீங்களா? லேடீஸ் பக்கமே டேரா போட்டு இருக்கீங்களே?


செத்த இருங்கோ...


செத்தா எப்படி இருக்க முடியும்?



.3. தேங்காய் ,பழம் ஏதாவது வாங்கிட்டு வந்திருக்கிறாயா?


இல்ல அய்யரே..யாராவது வீதில தேங்காய் உடைச்சா பொறுக்கறதோட சரி...


நாயே நாயே,, அப்புறம் எதுக்கு கோயிலுக்குள்ள வந்தே..போ போ வீதிக்கே போ


4. உன் பேரென்ன?


கோட்டி


ஓம் கோட்டியாஹியே நமஹ...


சாரி ,நமஹ கிடையாது.. வெறும் கோட்டி மட்டும்தான்.


ஹய்யோ... உன் ராசி என்ன?


கன்னி ராசி...


நட்சத்திரம்?


வால் நட்சத்திரம்.


5. டேய்..அவங்கவங்க குழந்தையை கோயிலுக்கு நேர்ந்து விடுவாங்க..உன்னை டீக்கடைக்கு நேர்ந்து விட்டாங்களா? எப்போ பாரு டீக்கடையிலேயே இருக்கியே...


6. நீ ஏண்டா என்னை அடிச்சே...?


நீ இப்போ சைட் அடிச்சியே..அவ என் தங்கச்சிடா..


ஓ மச்சானா?


7. பண்றது வாத்தியார் வேலை,செய்யறது பூரா செக்ஸ் டார்ச்சர்.


அய்யா மன்னிச்சிடுங்கய்யா...


தப்பு பண்ற எல்லாருமே நுனி நாக்குல மன்னிப்பை வெச்சுக்கிட்டேதாண்டா தப்பு பண்றாங்க...


8. ஹீரோயின்
- ஹலோ..கோட்டி..?நான் வீட்ல தனியாதான் இருக்கேன்,வாங்க ,பேசலாம்.


ஹீரோ - நானும் தனியாதான் இருக்கேன்,இப்படியே பேசு..


ஹீரோயின்  -அய்யோ மரமண்டை...வந்தா கிஸ் கிடைக்கும்.


9. ஹீரோயின் - ஏய் ,என்ன பண்ணுனே இப்போ..?


ஹீரோ - முத டைம் கட்டிப்பிடிக்கற அனுபவமா? அதான் வெட்கம்..


ஹீரோயின்  - அப்போ நான் இதுக்கு முன்னால 5 பேரை கட்டிப்பிடிச்சிருக்கேனா?எனக்கும் இதுதான் ஃபர்ஸ்ட் டைம்...


10. ஹீரோ - டியர், நான் ஒரு கவிதை எழுதி இருக்கேன் ,படிக்கறேன் கேளு...

பூமி சுத்தலை நான் .சுத்தறேன்.மழை பெய்யலை ஆனா நான் நனையறேன்..


ஹீரோயின் - முடியல


ஹீரோ - என்னால முடியும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiup61daaMZX3MoPTkHy6gh0pqk6ets1u5m04btwnpqhrpTWE57IoNM8JanjIfTubJLIb7RPUxGgPsNm1vGu3lHJ0xPMjyj42EaKhcva_oWBmKFmEj2T45j7bA1BjVs7UzpP0dfaIqV292-/s1600/Tamil_Film_Kotti%2527s_Picture1.jpg
சோப்ளாங்கி மாதிரி இருக்கும் ஹீரோ இடைவெளை வந்ததும் பாட்ஷா ரேஞ்சுக்கு ஃபைட் பண்ணுவது ஓவர். (தனுஷை விட ஒல்லி)சாய்குமார்- யுவராணியின் நடிப்பு கனகச்சிதம்.


ஒளிப்பதிவு,இசை ,எடிட்டிங்க்,ரீஇ ரெக்கார்டிங்க் போன்ற டெக்னிக்கல் அயிட்டங்கள் எபவ் ஆவரேஜ்.2 பாடல்கள் தேறுகின்றன. படத்தில் செலவு ஏதும் இல்லை என்பதால் ஹீரோ கம் இயக்குநருக்கு இந்தப்படம் ஒரு வெற்றிப்படமே...


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே


ஏ செண்ட்டர்களில்  30 நாட்கள் பி செண்ட்டர்களில் 20 நாட்கள் சி செண்ட்டர்களில் 10 நாட்கள் ஓடலாம்.

டிஸ்கி 1 - சனி ,ஞாயிறு நெட் பக்கமே வராதவங்களுக்காக

1.  புத்தாண்டில் நாம் எடுக்க வேண்டிய சபதங்கள்

2. முன்னணி தமிழ் சினிமா ஹீரோக்கள் ஜோக் அடித்தால்....

3.சிந்தாமணி கொலை வழக்கு - சினிமா விமர்சனம் 18

4.அல்டாப்பு அரசியல்வாதி VS பில்டப்பு நடிக

5.ஊர் வம்பு உடம்புக்கு ஆகாது தம்பி..

6.

 

 

Sunday, January 02, 2011

ஊர் வம்பு உடம்புக்கு ஆகாது தம்பி...

1. துக்ளக் ஆசிரியர், "சோ' பேட்டி: "ஸ்பெக்ட்ரம்' பிரச்னையில், ஜெயலலிதா அளித்த பேட்டி, திருப்புமுனையாக அமைந்தது. உலக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவு நடந்துள்ள இந்த இமாலய ஊழல் குறித்து, மக்களிடையே மிகுந்த கவலை எழுந்துள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு துறையும் கருணாநிதியின் குடும்ப கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. ஆட்சி மாற்றமே இந்த முறைகேடுகளுக்கெல்லாம் தீர்வாக அமையும்.

கவுண்டமணியின்  COUNTER கமெண்ட் -  அடுத்து அம்மா வருவாங்க.. 5 வருஷம் அவங்க ஊழல் பண்ணுவாங்க...ஏன்னா இவங்க 2 பேரும்தானே தமிழ்நாட்டை காண்ட்ராக்ட் எடுத்திருக்காங்க..?

2.அ.தி.மு.க., தலைமை நிலையச் செயலர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ., பேச்சு : தமிழக மக்களின் நலனில் அக்கறை இல்லாத கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு மக்கள், தேர்தலில் தக்க பாடம் புகட்டுவர். மகன் துணை முதல்வர்; மற்றொருவர் மத்திய அமைச்சர்; மகள் எம்.பி.,; பேரன் மத்திய அமைச்சர் என இது போன்ற குடும்ப அரசியல், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை.

கவுண்டமணியின்  COUNTER கமெண்ட் -    இப்பவாவது தமிழகம் எல்லாருக்கும் ஒரு முன்னோடி மாநிலமா திகழுதுன்னு ஒத்துக்கறீங்களா?

 3. புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி அறிக்கை: அ.தி.மு.க.,வுடன் நாங்கள் கூட்டணி சேர்ந்தது முதல், தி.மு.க.,வினர் கலங்கிப் போய் உள்ளனர்.

கவுண்டமணியின்  COUNTER கமெண்ட் -   நாட்ல கொசுத்தொல்லை ஜாஸ்தி ஆகிடுச்சு..புண்ணாக்கு விக்கறவன்,குண்டூசி விக்கறவன் எல்லாம் தொழில் அதிபர்னு சொல்லிக்கிட்டு திரியற மாதிரி லெட்டர் பேடு வெச்சவரெல்லாம் கட்சித்தலைவராம்... அண்ணே ..நீங்க என்ன சொன்னீங்க...?


4. தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம்: தற்போது மழைக்காலங்களில் தொற்று நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 7,000 தற்காலிக பணியாளர்கள் வட்டார அளவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கவுண்டமணியின்  COUNTER கமெண்ட் -    எல்லாம் நம்ம கட்சி ஆளுங்கதானான்னு நல்லா செக் பண்ணித்தானே நியமிக்கறீங்க...?


5. ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: ஈழப் பிரச்னையில் கருணாநிதி, மக்களை திரட்டிவிடக் கூடாது என்பதற்காக, ஸ்பெக்ட்ரம் அலைவரிசை பிரச்னையை காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை. ஊழல் பணத்துக்காக கருணாநிதி, ஈழ மக்களை காவு கொடுத்து விட்டார். ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து, ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்வோம்.

கவுண்டமணியின்  COUNTER கமெண்ட் -   அம்மாகிட்டே பர்மிஷன் வாங்கிட்டீங்களா?அப்புறம் உங்களை கூட்டணியை விட்டு துரத்திட போறாங்க...?அப்புறம் நீங்க பேக் டூ பெவிலியன் மாதிரி மறுபடி தானைத்தலைவா...என்னை ஏற்றுக்கொள்ளவா அப்படின்னு பல்டி அடிக்க வேண்டி வரும்...



6   தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி: தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்கின்றன. எனவே, ஓட்டுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க நாங்களும் வலியுறுத்தியுள்ளோம்.

கவுண்டமணியின்  COUNTER கமெண்ட் -   ஆமாய்யா...நீங்களே கோடி கோடியா சம்பாதிச்சுக்குங்க.. ஏதோ 5 வருஷத்துக்கு ஒரு தபா நாங்க ரூ 2000 சம்பாதிக்கறது உங்க கண்ணை உறுத்துதா?

7.பத்திரிகை செய்தி: தமிழக அளவில், "டாஸ்மாக்' மது விற்பனையில் தர்மபுரி, கோவை, சென்னை, சேலம் ஆகிய மாவட்டங்கள் முதல் நான்கு இடங்களைப் பெற்றுள்ளன. இதில், தர்மபுரி மாவட்டமே மது விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து வருகிறது.

கவுண்டமணியின்  COUNTER கமெண்ட் -    ஆஹா, மாது விற்பனைன்னா சேலம், மது விற்பனைன்னா தர்மபுரி...நல்ல ஊரு நம்ம ஊரு


8. தமிழக முதல்வர் கருணாநிதி: இன்றைக்கு இலவசத்தை கேலியாக, இழிவாக சிலர் பேசுகின்றனர். பத்திரிகைகள் எல்லாம் கருணாநிதி ஆட்சி என்றாலே இலவசம் தான் என்று எழுதுகின்றன. தமிழகத்தில் ஏழைகள் நடமாடும் வரை, தி.மு.க., அரசு, இலவச திட்டங்களை தொடர்ந்து வழங்கும்.

கவுண்டமணியின்  COUNTER கமெண்ட் -  தலைவரே.. ஒண்ணும் கவலைப்படாதீங்க.. போற போக்கைப்பார்த்தா மக்கள் நடக்கக்கூட சக்தி இல்லாம ஜி ஹெச்ல போய் படுத்துக்கப்போறாங்க...ஏழைகள் நடமாட்டம் குறைஞ்சிடும்...

9. மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா: பாகிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படவுள்ளது. டில்லி வந்தடையும் வெங்காயத்தை உடனடியாக பொதுமக்களுக்கு வினியோகிக்க நடவடிக்கை எடுக்கும்படி, டில்லி முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கவுண்டமணியின்  COUNTER கமெண்ட் -    பாகிஸ்தான்காரங்கதான் நமக்கு பங்காளிங்க ஆச்சே,வேற நாடே உங்களுக்கு கிடைக்கலையா?

10. பத்திரிக்கைச்செய்தி - டைவர்ஸுக்கு ஒத்துக்கொண்ட ரம்லத்..செட்டில்மெண்ட் செய்த பிரபுதேவா -நயன் தாரா மகிழ்ச்சி.

கவுண்டமணியின்  COUNTER கமெண்ட் -   அம்மணி ,ரொம்ப சந்தோஷப்பட்டுக்காதீங்க.. அடுத்த செட்ட்டில்மெண்ட் உங்களுக்குத்தான்...உங்களுக்காக ரம்லத்தை கழட்டி விட்ட அண்ணன் நாளைக்கு  வேற ஒரு ஃபிகருக்காக உங்களை கழட்டி விட மாட்டார்னு என்ன நிச்சயம்?

டிஸ்கி  - சிலர் தனி மெயிலில் தொடர்பு கொண்டு டைட்டிலுக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம் ?என கேட்கிறார்கள்...அரசியல்வாதிகள் அவங்களுக்கு கிடைச்ச சான்சை பயன்படுத்தி ஆட்டையை போடறாங்க..அதை எல்லாம் நீ கண்டுக்கக்கூடாது...மீறி கண்டுக்கிட்டா உனக்குத்தான் ஏதாவது பிரச்சனை வரும் என என்னைப்பார்த்து நானே சொல்லிக்கொண்டது....ஹி ஹி

அல்டாப்பு அரசியல்வாதி VS பில்டப்பு நடிகை

http://www.gtbc.fm/upload/GTBCFM760131156.jpg
1 தலைவர் சொன்னதைக்கேட்டு சி பி ஐ ஆஃபீசர்ஸ் ஆடிப்போயிட்டாங்களாமே?

ஏன் இந்த அளவு ஊழல் செஞ்சீங்கன்னு கேட்டதுக்கு “குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை”ன்னு சொன்னாராம்.

2.தான் ஒரு பச்சைத்தமிழன்கறதை அந்த டைரக்டர் நிரூபிச்சுட்டார்.

எப்படி?

பச்சை பச்சையா வசனம் எழுதித்தான்.

3. இதுதான் என் சம்சாரத்தோட தங்கச்சி...

ஏன் சுத்தி வளைக்கறே? மேரேஜ்க்குப்பிறகு தானா அமைஞ்ச முறைப்பொண்ணுன்னு சொல்லு.

4.தயவு செஞ்சு யாரும் லீவ் மட்டும் கேட்டுடாதீங்க...

ஓகே மேனேஜர் சார்... 24 மணி நேரம் பர்மிஷன் மட்டும் குடுத்துடுங்க.

5. தலைவர் தான் ஒரு தன்னிகரற்ற தமிழர்னு நிரூபிச்சுட்டார்.

எப்படி?

சி பி ஐ இப்படி நெருக்கறாங்களே?ன்னு கேட்டதுக்கு “ தை பிறந்தால் வழி பிறக்கும்”னு நம்பிக்கையா சொன்னாரே?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwgH6n4T3OPUVqJ5bwVt1zglYkHTbubvZflroWBm3DehCpVpemeMNhVZpfa4tLTAPD3Jzulw7bzt54FAzooZlwRgzB6vGYnHkltZwIYklJNG63hACRYnnDsomiFtLLBunK8dSClanbFRo/s1600/mallikasarawath.jpg
6. உங்களுக்கு பிடிச்ச வெப்சைட் எது?ன்னு தலைவர்கிட்டே கேட்டது தப்பா போச்சு.

ஏன்?

பொறுப்பான பதவில இருக்கற என் கிட்டே போய் சைட் , பொண்ணுங்கன்னு பேசறது தப்புங்கறாரு...

7. மேடம்,ஒரே ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட ரூ 1 கோடி சம்பளம்            வாய் கூசாம கேக்கறீங்களே?

ஆடியன்ஸ் பார்த்தா கண் கூசற மாதிரி டிரஸ் போட்டிருக்கனும்னா சும்மாவா?

8. வர வர கட்சில யாரும் என்னை மதிக்கறதே இல்லைன்னு தலைவர் புலம்பறாரே?

கட்சில இருக்கறதே அவரோட சம்சாரமும்,மகனும்தான்.எப்படி மதிப்பாங்க?

9.தலைவர் ஏன் மூடு அவுட்டா இருக்காரு?

2010 -ன் டாப் 10 ஊழல்வாதிகள் லிஸ்ட்ல  அவர் பேரு இல்லையாம்.

10. பேசத்தெரியாம பேசி தலைவர் நல்லா மாட்டிகிட்டாரு?

எப்படி?

வெங்காய விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து சாதனை படைத்தது எங்கள் ஆட்சியில்தான் அப்படின்னு உளறிக்கொட்டீட்டாரே?

டிஸ்கி 1 - குத்தாட்ட நடிகை என்ற அடிப்படையில்தான் மாளவிகா ஸ்டில்லும்,மல்லிகா ஷெராவத் ஸ்டில்லும்.மற்றபடி ஜோக்ஸுக்கும் ,ஸ்டில்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ( சம்பந்தா சம்பந்தம் இல்லாம கண்ட ஸ்டில்லை போட்டுட வேண்டியது.. அதுக்கு ஒரு வியாக்கியானமும் ,விளக்கமும் எதுக்கு?)

டிஸ்கி 2 - நியூ இயரை முன்னிட்டு நெட்டுக்கு லீவ் போட்டவங்களுக்கு

சிந்தாமணி கொலை வழக்கு - சினிமா விமர்சனம் 18 +


  டிஸ்கி 3 - 

முன்னணி தமிழ் சினிமா ஹீரோக்கள் ஜோக் அடித்தால்.....

 

டிஸ்கி 4 - நல்ல பதிவு போட்டா யாரு படிக்கறாங்க? அட்டர் ஃபிளாப் ஆன  நல்ல பதிவு

 

புத்தாண்டில் நாம் எடுக்க வேண்டிய சபதங்கள்

 

Saturday, January 01, 2011

சிந்தாமணி கொலை வழக்கு - சினிமா விமர்சனம் 18 +

http://www.dailythanthi.com/thanthiepaper/13122010/MDSG423131-M.jpg
டைட்டிலைப்பார்த்ததும் ஏதோ மர்டர் கம் புலனாய்வுப்படம் என நினைத்துப்போனால் அது ஏதோ ரெண்டுங்கெட்டான் படம் போல. ஆர் கே நடித்த  எல்லாம் அவன் செயல் என்ற படம் மலையாளத்தில் வந்த  சிந்தாமணி கொலை வழக்கு என்ற படத்தின் ரீ மேக்.ஆனால் அந்த 2 படங்களுக்கும் இந்தப்படத்துக்கும் சம்பந்தம் இல்லை.இது வழக்கமாக சீன் பட லேபிளில் வெளி வந்து சீன் இல்லாத சீன் படம் என்ற லேபிளில் வகைப்படுத்தலாம். (புது வருஷமும் அதுவுமா மாட்டுனேன் பாரு...)

பிரபல நாவல் ஆசிரியை தான் எழுதும் நாவலுக்காக தனிமையான பங்களாவில் வந்து தங்குகிறார். அங்கே அவரை 4 இளைஞர்கள் ரேப் செய்கிறார்கள்.இவர் அவர்களை மறுபடி ரேப் செய்வது போல் பாவ்லா காண்பித்து பழி வாங்குகிறார்.( என்ன கேவலமான கதை..?)

ஏதோ ஒரு ஆங்கிலப்படத்திலிருந்து சுட்டிருக்கிறார்கள்.படத்தின் பெயர் சட்டென ஞாபகம் வர மாட்டேங்குது.இந்தக்காலத்தில் ஆனானப்பட்ட ராஜேஷ்குமாருக்கே ஒரு நாவலுக்கு ரூ 5000 தான் தர்றாங்க. இதுல ஒரு லேடி நாவல் ஆசிரியை நாவல் எழுத ரூ 20000 அட்வான்ஸ் குடுத்து ரூ 5000 வாடகையில் பங்களாவில் தங்குவது செம காமெடி.

4 இளைஞர்களாக வருபவர்கள் அடிப்படை நாகரீகமும்,நடிப்பு என்றால் என்ன என்றே தெரியாதவர்களாகவும் வருவது ரொம்ப கொடுமை.அந்த நாவல் ஆசிரியையாக வரும் மோனலிசா எனும் நடிகை பார்க்க சுமாராக இருந்தாலும் எப்போ பாரு சிரிச்சிக்கிட்டே இருப்பது மகா எரிச்சல்.நல்ல வேளை ரேப் சீனில் சிரிக்கலை.
http://www.seithy.com/admin/upload/Ellam-Avan-Seyal-Stills__14_seithy.jpg

கேமரா ஆங்கிள்கள் எவ்வளவு மோசமாக ஒரு படத்துக்கு இருக்க முடியும் என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம்.நாவலில் வரும் சம்பவங்கள் போலவே கொலை நடந்திருக்கிறதே என போலீஸ் விசாரிக்கும் ஆரம்பக்கட்ட காட்சிகள் கொஞ்சம் விறு விறுப்பு.அதுவும் இடைவேளைக்கு பிறகு அவர்கள் ஆப்செண்ட்.க்ளைமாக்சில் திடீர் என படம் முடிவது அதிர்ச்சி.போலீஸ் என்ன ஆச்சு? கேஸ் என்ன ஆச்சு? அந்த நாவல் ஆசிரியை என்ன ஆனார்? என எந்தக்கேள்விக்குமே பதில் இல்லை.


வசனத்துக்கு வேலையே இல்லாத இந்தப்படத்தில் தேறிய 3 வசனங்கள்-

1.  ஏய், உனக்கு பாய் ஃபிரண்டே இல்லையா?

இல்லை,ஏன்?

எனக்கு கேர்ள் ஃபிரண்ட் ஆகிடறியா?

2. மேடம், உங்க முதல் நாவல் ல ஹீரோயினுக்கு உங்க பேரையே வெச்சிருக்கீங்களே?ஏன்?

இந்த உலகத்துலயே என் பேரை விட அழகான பேரு எது?

3. பொண்டாட்டிக்கு பயப்படற ஆளுங்க எதுக்கு மத்த பொண்ணு மேல ஆசப்படனும்?

சம்ஹாரம் என்ற பாடல் சீனில் வைஜயந்தி ஐ பி எஸ் படத்தில் வருவது போல் ஹீரோயின் உடற்பயிற்சி செய்வது செம காமெடி...அதற்கு பேசாமல் ஒரு குத்தாட்டப்பாட்டே எடுத்திருக்கலாம்.

எச்சரிக்கை 1 - இந்தப்படத்துக்கு யாரும் போயிடாதீங்க....படத்துல கதை இல்ல சீனும் இல்ல.

எச்சரிக்கை 2 - சமூக விழிப்புணர்வுக்கட்டுரைகள் எழுதுவதில்லை என என் மீது ரொம்ப நாளாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது,இப்போ இந்த விமர்சனத்தின் மூலம் பலரை எச்சரித்ததன் மூலம் நானும் ஒரு சமூக விழிப்புணர்வு கட்டுரையாளன் ஆகி விட்டேன்...( யாரப்பா அது கல்லெல்லாம் எடுக்கறது..? நோ பேட் வோர்ட்ஸ்..அவ் அவ் )

முன்னணி தமிழ் சினிமா ஹீரோக்கள் ஜோக் அடித்தால்.....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPJah30Q8wP_awUe4bxDnUsobCzoc6WhXbU4HIJYohZurjICzfRXQv_Tcfatq8VEmgoqFg8mnt-OS80D7cEs-QQShAgZdXmFCdgoY4WOr5lgZ-NfPzAMay0UtNEQ3WHif-TUAN9-G1HnOX/s400/odum.jpg
1. கமல் - எனக்கு பொண்ணுங்களே பிடிக்காது..அப்புறம் முத்தம் தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை.

2. ரஜினி - எனக்கு வயசு 20. என் அடுத்த படத்துல அனாகா என்கிற அம்லாபால் தங்கச்சிதான் ஜோடி.அரசியலுக்கு வருவேனா? வரமாட்டேனா ?அப்படிங்கறதை 2011 முடிஞ்சாக்கூட சொல்ல மாட்டேன்.

3. கே பாக்யராஜ் - எனக்கு டான்ஸ் நல்லா வரும்.சித்து பிளஸ் டூ படம் பட்டி தொட்டி எல்லாம் நல்லா ஓடுது.


4.தனுஷ் - தமிழகத்தின் அர்னால்டு நான்தான். பொங்கலுக்கு வர்ற ஆடுகளம் ஆக்‌ஷன்ல மைல்கல் படம்னு பேர்வாங்கும்.

5.ராஜ்கிரண் - எனக்கு ஜீன்ஸ் பேண்ட் ரொம்ப மேச்சிங்க் டிரஸ்.ராஜ் டிவி என்னுதுதான்னும்,கிரண் எனக்குப்பிடிச்ச நடிகைன்னும் சிலர் சொல்றாங்க அது உண்மை இல்ல.
http://narumugai.com/wp-content/uploads/2010/12/Nayanthara3.jpg
6. சிம்பு - நான் என் லைஃப்ல ஒரே ஒரு பெண்ணை மட்டும்தான் லவ் பண்ணுவேன்.


7. விஜய்காந்த் - விருதகிரி எம் ஜி ஆர் நடிச்சு டைரக்ட் பண்ணுன உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி கலக்கிட்டு இருக்கு.அதனாலதான் விருதகிரி 10வது நாள் போஸ்டர்ல உலகம் சுற்றும் வாலிபன் பட ஸ்டில்ல்லை போட்டிருக்கேன்.

8. அஜித் - மங்காத்தா படம் ஒரு ஆத்தா செண்ட்டிமெண்ட் படம்.

9. பிரபுதேவா - என் அடுத்த படம் டைட்டில் ஒருவனுக்கு ஒருத்தி.

10. விஜய் - எங்கம்மா சத்தியமா நானும் ஒரு ஹீரோ,நம்புங்க

டிஸ்கி 1- காலைல 7 மணிக்குத்தானே ஒரு பதிவு போட்டே ,அதுக்குள்ள என்ன மறுபடி ஒரு பதிவு?ன்னு கேக்கறீங்களா? அது அட்டர் ஃபிளாப் ஆகிடுச்சு.அதான்.( புது வருசம் ஓப்பனிங்கே சரி இல்லையே).

டிஸ்கி 2 - ஹீரோக்கள் பற்றிய பதிவுக்கு ஹீரோயின் நயன்தாரா ஸ்டில் எதுக்கு? காரணம் 1 - ஹீரோக்கு ஜோடி வேணாமா?  காரணம் 2 - பிரபுதேவா ஸ்டில் போட்டு உங்களை கடுப்பேற்றவிரும்பவில்லை.அதுக்கு சப்ஸ்டிடியூட்டா...நயன்

புத்தாண்டில் நாம் எடுக்க வேண்டிய சபதங்கள்

health-studies.jpg (400×314)
1. தினமும் அதிகாலை 5 மணிக்கு துயில் எழ வேண்டும்.

2. காலைக்கடன்களை முடித்த பிறகு வெறும் வயிற்றில் 4 டம்ளர் தண்ணீர் குடுக்க வேண்டும்.

3. அருகில் உள்ள மைதானத்தில் 4 கி மீ நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

4. நேரம் இருந்தால் யோகா,மூச்சுப்பயிற்சி (பிராண யாமம்) உடல்பயிற்சி செய்ய வேண்டும்.

5.குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும். (சுடுநீரில் குளித்தால் சோம்பலும் ,தூக்கமும் வரும்)

6.காலை உணவை தவிர்க்கக்கூடாது.சிலர் பட்டினி இருந்தால் மெல்லிய தேகம் கிடைக்கும் என தவறாக நினைக்கிறார்கள்.

7.உணவு சாப்பிடும்போது பாதி வயிறு மட்டும் சாப்பிட்டு, கால் வயிற்றில் தண்ணீர் குடித்து கால் வயிற்றை காலியாக விட வேண்டும்.

8.அலுவலகத்தில் வேலை செய்யும்போது பர்சனல் செல் அழைப்புகளை தவிர்க்க வேண்டும்.

9.மதிய உணவில் மோர் சேர்த்துக்கொள்வது நல்லது.

10 இரவில் 8 மணியிலிருந்து 9 மணிக்குள் டின்னரை முடித்து விட வேண்டும்.
health.jpg (378×311)
11. இரவு 10 மணிக்கு தூங்கி விட வேண்டும். செகண்ட் ஷோ சினிமா பார்ப்பது,தூக்கத்தை கெடுக்கும் காரியங்கள் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.

12. பெரியவர்களுக்கு 7 மணி நேரத்தூக்கமும் குழந்தைகளுக்கு 9 மணி நேரத்தூக்கமும் அவசியம்.

13. சைவ உணவே சிறந்தது. அசைவ உணவு மிருக உணர்வை,பொறாமை குணத்தை ,கோபத்தை அதிகமாக்கும் சக்தி படைத்தது. தவிர்க்க முடியவில்லை எனில் குறைக்க முற்சிக்கவும்.

14. குடும்பத்துடன் பேச நேரம் ஒதுக்குங்கள்.குறிப்பாக குழந்தைகளுடன் தினமும் ஒரு மணி நேரம் செலவு செய்யுங்கள்.

15. வாரம் ஒரு முறை விடுமுறை நாளில் குடும்பத்துடன் வெளியே செல்லவும்.அது நண்பர் வீடோ, பார்க்கோ,பீச்சோ எதுவாகவும் இருக்கலாம்.

16.ஈகோ பார்ப்பதை விட்டுத்தள்ளுங்கள்,வாக்குவாதம் செய்வதை தவிருங்கள்.

17. உடல் ஆரோக்கியம் மிக முக்கியம் .6 மாதத்திற்கு ஒரு முறை பற்களை சுத்தம் செய்ய பல் மருத்துவரை அணூகவும்.முழு உடல் பரிசோதனையை 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு வருடத்துக்கு ஒரு முறை செய்வது நல்லது.

18. பத்திரிக்கை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து வாரம் குறைந்த பட்சம் ஒரு புக்காவது படிக்கவும்.

19.பட்டி மன்றம்,நகைச்சுவை அரங்கம் ,விழாக்கள்,ஊர் பண்டிகைகள் இவைகளில் கலந்து கொள்வது மனதை லேசாக்கும்.

20.பிறந்தநாள்கள் ,பார்ட்டிகள் இவற்றில் அநாதை ஆசிரமங்களுக்கு நம்மால் இயன்ற உதவி செய்வது நல்லது.

டிஸ்கி - மொக்கைப்பதிவு போடும் நானே நல்ல பதிவு போடும்போது நல்ல பதிவு போடும் நீங்கள் இன்னும் சிறந்த பதிவுகளாக போடலாமே...