Sunday, May 24, 2026

பரதநாட்டியம் 2 மோகினி ஆட்டம்(2026)-மலையாளம்/தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா)@நெட் பிளிக்ஸ்

       

    5 கோடி ரூபாய் லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 40 கோடி ரூபாய் வசூலை வாரிக்குவித்த மெகா ஹிட் படம் இது.ஷைஜூ க்ரூப் நடிக்கும் 150 வது படம்.இது அவர் தயாரிப்பில் உருவான படமும்  கூட


முதல் பாகம் பார்க்காதவர்கள் கூட இரண்டாம் பாகம் பார்க்கலாம்.இரண்டும் தனித்தனிக்கதைகள்.   

10/4/2026 முதல் திரை அரங்குகளில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி கண்ட இந்தப்படம் இப்போது 8/5/2026 முதல்  நெட் பிளிக்ஸ் ஓ டி டி யில் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது           


ஸ்பாய்லர்  அலெர்ட்


முதல் பாகத்தின் கதை சுருக்கம் - நாயகனின் அப்பா உடல் நிலை குன்றி  சீரியஸ் ஆக இருக்கும்போது நாயகனை அழைத்து ஒரு குண்டைத்தூக்கிப்போடுகிறார்.எனக்கு இன்னொரு குடும்பம் இருக்கு.நீ தான் இரண்டு குடும்பஙகளையும் சேர்த்து வைக்கனும் என்கிறார்.அக்னி நட்சத்திரம் படத்தில் விஜய குமார் எப்படி கார்த்திக்,பிரபு என இரு வாரிசுகளிடம் சிக்கித்தவித்தாரோ அது மாதிரி  தவிக்காமல் உண்மையை சொல்லி  விட்டு இறந்து விடுகிறார்.நாயகன் எப்படி இரு குடும்பங்களையும் இணைத்தான்? என்பது முதல் பாகத்தின் கதை.


இனி இரண்டாம் பாகக்கதை.


நாயகனின் அப்பா இறந்த பின் அவரது நண்பர்கள் மூவர் கூடிப்பேசுகின்றனர்.அந்த மூவரில் ஒருவன் தான் வில்லன்.

ஊரில் ஒரு கோயில் கட்டி அதில் சட்டத்துக்குப்புறம்பாக உண்டியல் வைத்து லட்சக்கணக்கான பணத்தைக்கொள்ளை அடிக்கிறார்கள் வில்லனும்,அவனது நண்பர்கள்  இருவரும். ஆனால் ஒரு ஆபீசரிடம் வில்லன் இப்போது  மாட்டிக்கொள்கிறான்.


இறந்து போன தன் நண்பன் மேல் பழியைப்போட்டு விட்டால் தான் தப்பித்து விடலாம் என வில்லன் நினைக்கிறான். இது சம்பந்தமாகப்பேச வில்லன் நாயகனின் வீட்டுக்கு வருகிறான்.


வில்லனின் ஐடியாப்படி செயல்பட்டால் தன் அப்பாவுக்குக்கெட்ட பெயர் வரும் என  நாயகன் மறுத்து விடுகிறான்.ஒண்ணாப் பழியை ஏத்துக்குங்க,இல்லைன்னா 50 லட்சம் ரூபாய் பணம் கொடுங்க என வில்லன் மிரட்டுகிறான்.


இப்போது நாயகனின் குடும்பத்தார் ஆறு பேருக்கும் ,வில்லனுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்படுகிறது.இதில் வில்லன் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறான்.

இறந்த வில்லனின் பிணத்தை அப்புறப்படுத்த நாயகனின் குடும்பம் படும் பாடுகள் தான் படத்தின் மீதிக்கதை

நாயகன் ஆக சைஜூ குருப் காமெடி ததும்ப நடித்திருக்கிறார்.முதல் பாதி முழுக்க இவர் ராஜ்ஜியம் தான்.கொலையை மறைக்க இவர் படும் பாடுகள் கலகல.

வில்லன் ஆக வரும் சுராஜ் வெஞ்சாரமூடு கச்சிதமான நடிப்பு.மகளிர் மட்டும் படத்தில் நாகேஷ் பிணமாக வருவது போல் பின் பாதியில் இவரும் பிணமாக அசத்துகிறார்.

மூன்றே காட்சிகளில் வந்தாலும் ஜெகதீஷ் நடிப்பு அருமை

வில்லனின் மச்சான் ஆக வந்து நாயகன் மேல் சந்தேகப்படும் நபர் ஆக பேபி ஜீன் தேர்ந்த நடிப்பு.

கலா ரஞ்சனி ,ஸ்ரீஜா ரவி, இருவருமே பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.


எலக்ட்ரோஹிக் கிலியின் இசையில் ஒரு பாடல் ஓக்கே ரகம்.பின்னணி இசையில் காமெடி ,விறுவிறுப்பு,பரபரப்பு,பதைபதைப்பு அனைத்தையும் கூட்டி இருக்கிறார்.

பப்லு அஜூவின் ஒளிப்பதிவு கச்சிதம்.சபீக்கின் எடிட்டிங்கில் படம் 155 நிமிடங்கள் ஓடுகிறது


விஷ்ணு ஆர் பிரதீப் உடன் இணைந்து திரைக்கதை எழுதி தான் மட்டும் தனித்து இயக்கி இருக்கிறார் இயக்குநர். கிருஷ்ணதாஸ் முரளி

சபாஷ்  டைரக்டர்

1 புராணக்கதையில் ராமர் மிக்சர் சாப்பிட்டார்,ஒரு மோகினியை சந்தித்தார் என அளந்து விடும் காட்சிகள் காமெடிக்கலக்கல்

2 க்ளைமாக்ஸுக்கு 20 நிமிடம் முன் வரும் போலீஸ் ஆபீசர் வினய் போர்ட் விசாரணை செய்யும் அனைத்துக்காட்சிகளும் நகைச்சுவை சர வெடி

3 கலாரஞ்சனி தன் முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டுபடம் முழுக்க பல வில்லங்கங்களை இழுத்து விடுவது செம

4  தெரியாம கொலை பண்ணிட்டோம் ,போலீஸ் ஸ்டேஷன்ல போய் சமாதானமாப்போய்க்கலாமா?என்று சமாதானம் பேச முடியாதா?என அப்பாவியாகக்கேட்பது காமெடி அதகளம்.

5 ரஜினியின் கூலி பட ரெபரன்சை வைத்து ஜெகதீஷ் செய்யும் சேட்டைகள் அருமை.

6 ஜீத்து ஜோசப்பின் திரிஷ்யம் படத்தை நையாண்டி செய்த விதம் நல்ல ஐடியா

7 பிண நாற்றம் அடிக்காமல் இருக்க சாம்பிராணிப்புகை போட்டு வீட்டுக்கு வந்தவர்களை சமாளிக்கும் காட்சி செம


  ரசித்த  வசனங்கள் 

1 கூட்டத்தில் ஒரு ஆளா இல்லை அவர்.கூட்டத்துக்கே தல அவர்தான்.

2 கத்திப்பேசாதீஙக,அமைதியாக்கத்துங்க.

3 ஊரே சேர்ந்து அடிச்சுக்கொன்ன பாம்பு கதை மாதிரி ஆகிடும்


ஆம்,அந்தப்பாம்பு செத்துப்போயிடுச்சு.

4 ராமாயணத்தில் எப்படி மோகினி?

5 நீ வந்ததும் உன் கிட்டே கேட்கலாம்னு இருந்தோம்.


எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?நான் என்ன சீரியல் கில்லரா?

6 கஞ்சா கேஸ்ல மாட்டினா எப்படி தப்பிக்கிறது?


தெரியலை.எனக்கு மாட்டிக்க மட்டும் தான் தெரியும்,தப்பிக்கத்தெரியாது.


7 ஆட்டோ..


எங்கே போகனும்?

எங்கே வேணாலும் போங்க


8 வாழைக்குலையை விக்கப்போறேன்.

இந்தக்கொலையை என்ன பண்ண?

9  என்னய்யா சொல்றே? ஒரே அப்பா,இரு வேறு அம்மாக்களுக்குப்பிறந்த இரு மகன்கள் ஒரே முகச்சாயலில் இருக்காஙகளா?அது எப்படி முடியும் ?


என் அப்பாவால் முடியும்



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 வில்லன் நாயகனின்  வீட்டில் கொலை ஆகும் காட்சி கொஞ்சம் கூட நம்பும்படி இல்லை.இன்னமும் நம்பகத்தன்மையுடன் எடுத்திருக்க வேண்டும்

2 என்னதான் காமெடிக்கு என்றாலும் கடைசியில் விசாரணை செய்யும் போலீஸ் ஆபீசர் மடத்தனமாய் என்கொயரி செய்வது ,முட்டாள் தனமாய் நடந்து கொள்வது ஓவர் டோஸ்

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் கலக்கலான காமெடிப்படம் பார்க்க விரும்புகிறவர்கள் பார்க்கலாம்.ரேட்டிங்க் 3/5


Bharathanatyam 2 Mohiniyattam
Theatrical release poster
Directed byKrishnadas Murali
Written byKrishnadas Murali
Vishnu R. Pradeep
Produced byLini Mariam David
Anupama B. Nambiar
StarringSaiju Kurup
Suraj Venjaramoodu
Jagadish
Vinay Forrt
Baby Jean
Kalaranjini
Sreeja Ravi
CinematographyBablu Aju
Edited byShafeeque V. B.
Music byElectronic Kili
Production
companies
Thomas Thiruvalla Films
Saiju Kurup Entertainments
Release date
  • 10 April 2026
Running time
155 minutes
CountryIndia
LanguageMalayalam
Budget₹5–6 crore[1]
Box officeapprox. ₹38–40 crore[1]