Showing posts with label tamil film review. Show all posts
Showing posts with label tamil film review. Show all posts

Sunday, January 14, 2018

குலேபகாவலி - சினிமா விமர்சனம்

Image result for gulebakavali tamil film

ஹீரோ ஒரு திருடன் , அவர் கிட்டே ஒரு ஊர்ல பல வருசங்களுக்கு முன் புதைக்கப்பட்ட புதையல் எடுக்கும் பணி ஒப்படைக்கப்படுது , எப்படி திமுக காங்கிரஸ் ,  கூட கூட்டணி அமைச்சு தேர்தல்ல போட்டியிடுதோ அந்த மாதிரி ஹீரோவும் இன்னும் 3 திருடங்களை கூட்டணி சேர்த்து ( அப்பதானே பலமான கூட்டணி ஆகும்?) அந்த ப்ராஜெக்ட்டை சக்சஸ்ஃபுல்லா எப்படி முடிக்கறார்? என்பதே கதை 

ஹீரோவா நயன் தாராவின்  முன்னாள் காதலர் பிரபுதேவா. ஓப்பனிங் சீன்ல ஒரு செம டான்ஸ் ஆடி இருக்கார் ., அதகளமான டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் , அப்பறம் ஒரு டூயட்ல  ஜிமிக்ஸ் வேலை எல்லாம் காட்டி ஒரு டான்ஸ் , அவ்ளோ தான் ஹீரோ ஒர்க் முடிஞ்சுது , தேவி படத்துல ரீ எண்ட்ரி ஆன மாதிரி  இதுலயும் ஒரு காட்டு காட்டுவார்னு ட்விட்டர்ல பில்டெப் எல்லாம் நான் குடுத்தேன், எல்லாம் வேஸ்ட்

 அதுக்குப்பதிலா ஹன்சிகா இதுல செம காட்டு காட்டி இருக்கார். ஹன்சிகா அவளோ திறமை காட்டி நடிச்ச படமா?னு வியக்க வேணாம் , கிளாமர் காட்டி நடிச்சிருக்கார் . பாடல் காட்சிகளில்   இவர் ஒரு திறந்த புத்தகம் . 3  சீன்களில்  ஹீரோ இவரை ரொம்ப  ஜொள் விடுவது சகிக்கல. குறிப்பா பிரபு தேவா வுக்கு என்னா டேஸ்ட்டோ சிம்பு கரெக்ட் பண்ணி கழட்டி விட்ட/ விடப்பட்ட ஃபிகர்களா பார்த்து  ரூட் போடறார்.

ரேவதி நல்ல பர்ஃபார்மென்ஸ் இதுல . மகளிர் மட்டும் , மஞ்சப்பை படங்களுக்குப்பின் சொல்லிக்கொள்ளும் ஒரு ரோல் , சத்யனை ஓப்பனிங் சீன்ல ஏமாற்றுவது , செண்ட்டிமெண்ட் கதை சொல்லி தப்பிப்பது , க்ளைமாக்ஸில் குதூகலம் காட்டுவது என பின்றார்
 அவருக்கு அடுத்தது நம்ம மொட்டை ராஜேந்திரன் . அம்மா,. சித்தி  என அவர் உருகுவது செம காமெடி . எம்(டன்) மகன் படத்தில் வடிவேலு அப்பாவை வெச்சு ஒரு சுடுகாட்டு காமெடி + குணச்சித்திர ரோல் பண்ணி கைதட்டலை அள்ளி \  இருப்பார் , அதுதான் இதுக்கு இன்ஸ்பிரேசன் போல 

முனீஸ்காந்த் க்கு முக்கிய ரோல் , ஆனாலும் பெரிய அளவில் காமெடி இல்லை 

 வில்லன்களாக ஆனந்த்ராஜ் & கோ வுக்கு   பெரிய வேலை ஏதும், இல்லை

 பாடல்கள்  , இசை எல்லாம் சுமார் ரகம் . ஒளிப்பதிவு , எடிட்டிங் சராசரி  தரம்

கதை சொல்லப்போறேன் பட இயக்குநருக்கு இது கையைக்கடிக்காத முதலீட்டுக்கு மோசம் போகாத சராசரி வெற்றிப்படம்  தான் 

Image result for hansika hot

நச் டயலாக்ஸ்

நான் ஒரு டாக்டரா இருக்்கறதால பிறப்பு ,இறப்பு இத எல்லாம் சகஜமா எடுத்துக்க முடியுது

பலமான எதிரி அமைஞ்சாதான் பிஸ்னெஸ்ல ஈசியா டார்கெட் அச்சீவ் பண்ண முடியும்

சாமியைக்கும்பிடறவங்களை விட அந்த சாமி சிலையைத் திருடறவங்களுக்குதான் அதன் உண்மையான மதிப்பு /விலை தெரியும்

காக்கா வலிப்பு வந்தா இரும்புச்சாவி குடுக்கனும்

;சாவி குடுக்க அவ என்ன பொம்மையா?

நான் தனிமையைத்தேடி காசி,ராமேஸ்வரம் னு போலாம்னு இருக்கேன்
ஆனா,அங்கே ஏகப்பட்ட கூட்டம் இருக்குமே?

Image result for hansika hot

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

`1  ஹன்சிகா ஒரு சீன்ல NEVER FINDING FUN னுனு ஒரு வாசக பனியன் சுசீலா கணக்கா போட்டுட்டு வருது , என்ன உள் குத்து அர்த்தமோ தெரில 

2  ஓப்பனிங் சாங் ல  பிரபுதேவா சிலம்பாட்டம்ல சிம்பு படுத்த மேனிக்கு ஒரு ஸ்டெப் போடுவாரே அதே போல் பேட்டர்ன்ல வெரைட்டியா ஆடி இருக்கார் , பிரமாதம் 

3  கிராமத்து வழக்கப்படி ஒரு பரிகாரத்துக்காக ஹன்சிகாவை   முழு நிர்வாணமா ஊர்வலம் வரனும்னு சொல்றாங்க , அப்படி ஒரு கிராமம் எந்த மாவட்டத்துல இருக்கு/னு  தெரில , தெரிஞ்சா ஒரு மினி டூர் போலாம்

Image result for hansika hot

சபாஷ் டைரக்டர்

1  லோ பட்ஜெட்ல  ஓரளவு ரசிக்கும்படி ஒரு காமெடிப்படம் கொடுத்ததுக்கு ஒரு ஷொட்டு

2 ஹன்சிகா வுக்கு சம்பளத்தை மட்டும் கொடுத்துட்டு கடைசி வரை கதை , கேரக்டர் பற்றி அவரை வாயை திறக்காம பார்த்துக்கிட்டது 

3 ரேவதியின் பங்களிப்பு , மொட்டை ராஜேந்திரன் நடிப்பு 

Image result for hansika hot

லாஜிக் மிஸ்டேக்ஸ்  ,திரைக்கதையில் சில ஆலோசனைகள்

1  ஓப்பனிங் சீன் ஃபிளாஸ்பேக்ல 2 பெட்டி நிறைய வைரக்கற்களை ஒரு ஆள் பதுக்கறான். அந்த வைரக்கற்களை ஒரு எலும்புக்கூட்டில் மறைச்சு அந்த 2 பெட்டில ஒரு பெட்டில அந்த எலும்புக்கூட்டை வைக்கறான் , இது எப்படி சாத்தியம், கொள்ளளவு , கன அளவு இது எல்லாம் டேலி ஆகலையே?

2  ஹன்சிகா நிர்வாணமா வருதா? ஊர்வலம் ல சீன் பார்க்கலாம்னு அந்த கிராமத்துல ஒரே ஒரு ஆள் மட்டும் ஒளிஞ்சிருந்து செக் பண்றான் , ஊர்ல பாதி ஆம்பளைங்க அப்படித்தானே இருப்பாங்க ?

3  பல வருசங்களா பெட்டியில் இருக்கும்போது எலும்புக்கூடு எந்த பாதிப்பும் இல்லாம , தூசி படாம க்ளீனா இருப்பது எப்படி?

Image result for hansika hot

சி.பி கமெண்ட் - குலேபகாவலி - புதையலை தேடிப்போகும் திருடர்கள்-மொக்கை காமெடி , ஹன்சிகா கிளாமர் , ரேவதி,மொட்டை ராஜேந்திரன் நடிப்பு மட்டுமே + , விகடன் - 40 ,41  ரேட்டிங் - 2.5 / 5 

 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு) = 40 / 41

குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்) =  3/5

ஈரோடு ஸ்ரீனிவாசாவில் படம் பார்த்தேன். 12 பேர் இருந்தாங்க 

Monday, September 04, 2017

குரங்கு பொம்மை - சினிமா விமர்சனம்

Image result for kurangu bommai

100 கோடி பட்ஜெட்ல படம் எடுத்து அதுக்கு மேல 50 கோடி மார்க்கெட்டிங் செலவு பண்ணி டோட்டல் இன்வெஸ்ட்மெண்ட் 150 கோடில 60 கோடி நட்டம் பார்க்கும் இந்த கால கட்ட கோலிவுட் படங்களுக்கு இடையே ஸ்டார் வேல்யூவை நம்பாமல் முழுக்க முழுக்க திரைக்கதையை மட்டுமே நம்பி லோ பட்ஜெட்டில் படம் எடுத்து 10  மடங்கு லாபம் சம்பாதிக்கும் ஒரு கமர்ஷியலான கலக்கல் படம் தந்த புது முக இயக்குநர்  நித்திலன் அவர்களுக்கு பாராட்டுகளுடன் விமர்சனத்துக்குள் போவோம் 

5 கோடி ரூபா மதிப்புள்ள ஒரு ஐம்பொன் சிலை நடராஜர் சிலை கடத்தப்படுது.தஞ்சாவூர்ல இருக்கும் வில்லன் தன் பால்ய நண்பன் மூலம் நண்பருக்கே தெரியாம நண்பர் மூலமா அந்த சிலையை கை மாற்ற பார்க்கறார். காசுக்கு ஆசைப்பட்டு அடியாளுங்க டபுள் கேம் ஆட அந்த சிலை எங்கெங்கே பயணிக்குது என்பதை மிக சுவராஸ்யமா சொல்லி இருக்காங்க .

ஹீரோவா மைனா விதார்த். கோலிவுட்டில் கதைத்தேர்வில் கலக்குபவர்கள் விஜய் சேதுபதி , விஜய் ஆண்ட்டனி , விதார்த் இவர்கள் மூவரும் தான் . கமல் , விக்ரம் போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் கதைத்தேர்வில் சறுக்கும்போது இவர்கள் மட்டும் தெளிவாக இருப்பது சிறப்பு , வியப்பு 

விதார்த் கெட்டப் பக்கா. அந்த கால கட்ட கமல் போல் ட்ரிம்மாக இருக்கிறார்வ் , காதல் காட்சிகளில் அவர் முகத்தில் தர்மசங்கடம் தான் தெரியுது , அது ஏனோ . ஆனால் அப்பாவை நினைத்து அழும் காட்சிகளில் விட்ட இடத்தை பிடிக்கிறார். சேசிங் காட்சிகளில் ஓக்கே ரகம்
Image result for kurangu bommai

 ஹீரோயினாக புது முகம். அவர் ஆர்ப்பாட்டம் இல்லாத எளிமையான அழகு/ சபாஷ் காட்சிகள் பல அவருக்குபஸ்ஸில் ஹீரோவுக்கு  இடம் கொடுப்பதும் அதை தொடர்ந்து வரும் ரொமான்ஸ் காட்சிகளும் அபாரம்

 ஹீரோவின் அப்பாவாக வரும் இயக்குநர் பாரதிராஜா அபாரமான நடிப்பு . குணா படத்தில் அந்த சிங்கிள் ஷாட் வசனம் பேசப்பட்டது போல் இதில் பாரதிராஜா பேசும் ஒரு  கடந்த கால  நினைவுக்காட்சியை பகிரும் காட்சி செம கலக்கல் 

கே பாலச்சந்தர் பாணியில் சின்ன சின்ன கேரக்டர்களை எல்லாம் மெருகேற்றும் இயக்குநர் டச் அபாரம்/

அந்த பிக்பாக்கெட் திருடன் , வில்லன் , போலீஸ் என ஆங்காங்கே போகிற போக்கில் அனைவரும் அப்ளாஸ் பெறுகிறார்கள் . வித்தியாசமான பல காட்சிகள் தியேட்டரில் ஆடியன்ஸ் அப்ளாஸ் மழையில் நனைகிறது

Image result for kurangu bommai
 சபாஷ் இயக்குநர் 

1 திரைக்கதை தெளிவாக சொல்லப்பட்ட விதம் , நான் லீனியர் முறையில் இருந்தாலும் ஆல் செண்ட்டர் ஆடியன்சுக்கும் புரியும்படி சொன்ன விதம் 

2  ஹீரோ ஹீரோயின்  ரொமான்ஸ் காட்சிகள் 

3 பிக் பாக்கெட் திருடன் , வில்லன்  பாத்திரப்படைப்பு  நடிப்பு அற்புதம் 

4  எடிட்டிங்க் , பின்னணி இசை , ஒளிப்பதிவு எல்லாம் அருமை 

5  படத்தில்  வரும் சின்ன சின்ன கேரக்டர்கள் எல்லாம் தங்கள் பணத்தேவை பற்றி புலம்பும்போது வில்லன் மட்டும் நான் என்  நண்பனுக்காக வந்தேன் என்பது 

6 ஒண்ணே முக்கால் மணி நேரத்தில் படத்தை முடித்தது 

இயக்குநரிடம் சில கேள்விகள் 

1  ஒரு டெட் பாடி  மற்றும் இறந்த உடலின் தலை ஒரு பையில்; இருந்தால் அதிலிருந்து ஊரையே தூக்கும் வாடை வராதா?

2  துரோகம் செய்யும் அடியாள் தன் வீட்டுக்கு்ள்ளேயே சிலை , பணத்தை வைத்திருப்பது எப்படி சேஃப்டி ஆகும்?

3  லாரியில்  பின் கட்டப்பட்ட குழந்தை என்ன ஆச்சு? தகவலே இல்லை 

4 போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் விபத்து செயற்கைத்தனம் 

5 சர்வ சாதாரணமாக துப்பாக்கி சூடு நடைபெறுவது 

6 ஹோட்டலில் முகம் தெரியாத பெண்மணி  ஹீரோவிடம் செல்ஃபோனை ஒப்படைப்பது செயற்கை 

7 கஞ்சா கறுப்பு வால் க்ளாக் சீன் வாட்சப் ல சுட்டது
Image result for kurangu bommai

நச் வசனங்கள் 

1 மிஸ் , உன்னை நம்பி என் வாழ்க்கையை ஒப்படைக்கலாமா? #KuranguBommai 

2 ஜோசியரே, எனக்கு ஜோசியம் பார்க்கனும்

என்ன தொழில் பண்றே?

ஐசிஐசிஐ பேங்க்ல....

டேய்

சரி , பிக்பாக்கெட் அடிக்கற தொழில்தான் #KuranguBommai

3 ஏழைகளிடம் ஏமாறுவதில் ஒரு சுகம் இருக்கு #KuranguBommai

4 சார்..

ம், சொல்லுங்க 

 இங்கே பக்கத்துல எதுனா நல்ல போலீஸ் ஸ்டேசன் இருக்கா? #KuranguBommai

5 ஹலோ ,. சார், மிஸ் ஆன அந்த பேக் என்னுதுதான்

சரி

 எங்கே வந்து அதை வாங்கிக்கனும்?

 எங்கே மிஸ் பண்ணுனீங்களோ அங்கே வந்து #KuranguBommai

6 ஏண்ணே , உடம்பு நல்லாதானே இருக்கு? ஏன் இருமறே?

காலைல  சிகரெட் குடிச்சப்ப இரும மறந்துட்டேன் #KuranguBommai

7 நான் எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா? ஏவிஎம் சரவணனே என் கிட்டே கை கட்டி தான் பேசுவார்  #KuranguBommai

8  அண்ணே , நல்லாருக்கீங்களா?

 இல்லை, நாண்டுக்கிட்டு இருக்கேன்  #KuranguBommai

9 நானே கட்டப்பஞ்சாயத்து பண்ணி , கந்து வட்டிக்கு பணம் குடுத்து உழைச்சு சம்பாதிச்ட்டு இருக்கேன் ,இவன் வேற #KuranguBommai

10   ஊருக்குதான் அவன் கெட்டவன் , எனக்கு அவன் நல்லவன்  #KuranguBommai

11 எந்த ஊரு?

 பீகார்

 பீகார்ல எந்த ஊரு?

 க்யா?

நல்ல ஊருதான்  #KuranguBommai

சி பி கமெண்ட் - குரங்கு பொம்மை− எளிமையான,அபாரமான திரைக்கதை,இயக்குனரின் கதை சொல்லும் உத்தி,நெறியாள்கை அற்புதம்,விகடன் 55 ,ரேட்டிங் 4/5,ஆல் செண்ட்டர் ஹிட்

Saturday, June 04, 2016

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் -சினிமா விம்ர்சனம்

இளைய தளபதி க்கு  சூப்பர் ஹிட் ரொமாண்டிக் ஃபிலிம் ஆக அமைந்த துள்ளாத மனமும் துள்ளும் தான் இயக்குநர் எஸ் எழிலின் முதல் படம். . சின்ன பூவே மெல்லப்பேசு இயக்குநர் ராபர்ட் ராஜ்செகரன் இடம் உதவி இயக்குநராகப்பணி ஆற்றியவர், பின் பன்னீர் , ஆர் பார்த்திபன் இவர்களிடம் பணி ஆற்றினார்.

1999 ல் ரிலீஸ் ஆன து ம து சார்லி சாப்ள்ன் படமான சிட்டி லைட்ஸ் ஹாலிவுட் பட உல்டா தான் என்றாலும் தமிழ் நாடு கேரளாவில் செம ஹிட். 2வது படம் பிரபுதேவா வுடன் பெண்ணின் மனதைத்தொட்டு(2000) அவுட். ( இதில் முதலில் விஜய் தான் நடிப்பதாக இருந்தது, பின் அவர் நல்ல நேரம் ஜகா வாங்கினார்)

3 வது படமாக அஜித் குமார் உடன் பூவெல்லாம் உன் வாசம் (2001) தமிழக அரசின்  விருது பெற்றது ( சிறந்த குடும்பப்படம்), மீடியம் ஹிட்.4  வது படமாக  அதே அஜித் உடன் ராஜா (2002) எடுபடலை.

3 வருச கேப். 2005 ல் அமுதே என தோல்விப்படம். 2007 ல்  தீபாவளி என  மீடியம் ஹிட் படம் ஜெயம் ரவி யுடன்

 மீண்டும் 5 வருசம் கேப். 2012 ல் சிவகார்த்திகேயன் உடன் மனம் கொத்திப்பறவை  மீடியம் ஹிட் . 

 2013 ல் விமல் உடன் தேசிங்கு ராஜா , 2014 ல் வெள்ளக்கார துரை இரண்டும் பி சி யில் நல்லாப்போச்சு . காமெடி சப்ஜெக்ட்ஸ்

 இப்படி ஏற்ற இறக்கம் கொண்ட எழில் சாரின் புதிய படம் தான்  வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ( 10 வது படம்)  

 ஒரு உபரி தகவல் இவரிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணி ஆற்றியவர்கள் தான் கரு பழனியப்பன் &  சுசீந்தரன் ( குருவை மிஞ்சிய சிஷ்யர்கள்)

கதைப்படி ஒரு மினிஸ்டர்  காலம் பூரா ஊழல் பண்ணி சாகக்கிடக்கும்போது இதுவரை நாம புண்ணியமே செய்யலை பாவம் தான் பண்ணி இருக்கோம்னு உணர்ந்து அந்த ஊழலில் சம்பாதிச்ச 500 கோடி பணத்தை தன் நம்பிக்கைக்கு உரிய எம் எல் ஏ விடம் சொல்றாரு. சொல்லி சிவலோக பதவி அடைஞ்சிடறாரு.

அந்த எம் எல் ஏ கிட்டே எடுபுடியா இருப்பவர்கள் தான் நம்ம ஹீரொவும் காமெடியனும். பணம் இருக்கும் ரக்சியம் தெரிஞ்ச எம் எல் ஏ கோமாவில். மினிஸ்டரோட மச்சான்  அந்த பண ரகசியத்தை தெரிஞ்சுக்க செய்யும் முயற்சிகள் தான் படம்

எம் எல் ஏ வா ரோபோ சங்கர் அதகளம் பண்றார். க்ளைமாக்சில் இவர்  கதை சொல்லும் காமெடி எபிக். நாகேஷின் கதை சொல்லும் காமெடி போல் இதுவும் நீண்ட நாட்களுக்கு பேசப்படும். ரோபோ சங்கரின் மறக்க முடியாத காமெடி ஆக இது நிலை நிற்கும்.  படத்தின் முதுகெலும்பே இவர் தான்.  10 வயசு பையனாக இவர் செய்யும் சேஷ்டைகள் செம

 எடுபுடியாக புஷ்பா புருசனாக வரும் சூரிக்கும் நல்ல காமெடி போர்சன். இதுவரை சூரி காமெடி பண்ணிய படங்களில் 3 தான் எனக்கு பிடிச்சிருக்கு  1 வெண்ணிலா கபாடி குழு புரோட்டா காமெடி  2 இது நம்ம ஆளு 3 வே வ் வெ

படத்தின் திரைக்கதையோடு ஒட்டி வருவதால் காமெடி ஒர்க் அவுட் ஆகி வருது

படத்தின்  ஹீரோ விஷ்ணு. ஹேர் ஸ்டைலில் மாற்றம் , பாடி லேங்குவேஜ் குட் . ஆனால் பெரிய அளவில் ஸ்கோர் செய்ய வாய்ப்பில்லை. படம் முழுக்க  ரோபோ சங்கரும்  சூரி யும் ஆக்ரமிப்பதால் ( போஸ்டரில் கூட ) ஹீரோ பெரிதாக எடுபடவில்லை

 ஹீரோயின் நிக்கி கல்ராணி க்கு ஒப்பனிங் சீனில் ஃபைட் எல்லாம் இருக்கு. பீச் ஓரமாக நம் நாக்கு ஈரம் ஆக ஸ்லோ மோஷனில் ஜாகிங்க் எல்லாம் போறார். ஐ லைக் இட்.ஹீரோயினுக்கு யார் வேணாலும் எவ்ளோவ் வேணாலும் சம்பளம் தந்துடலாம். ஒரு நல்ல ரசனை உள்ள இயக்குநரால்தான் இது போல் ஸ்லோ மோஷன் சீன் வைத்து நின்னு நிதானமா அவரும் ரசிச்சு நம்மையும் ரசிக்க வைக்க முடியும்

ஆடுகளம் நரேன் மொட்டை ராஜேந்திரன்  எக்ஸ்ட்ரா காமெடி.

 லாஜிக் எல்லாம் பார்க்காமல் சிரிச்ட்டு வர ஒரு படம். போட்ட முதலீட்டைப்போல் 3 மடங்கு லாபம் சம்பாதிக்கும் , சி செண்ட்டரில் சூப்பர் ஹிட் ஆகும், பி யில் சுமாராகப்போகும். ஏ  செண்ட்டரில் டவுட் தான்

நச் டயலாக்ஸ்

ஒரு பொண்ணு க்கு 8 மாப்ளைகளா?,கூட்டுக்குடும்பம்கறதை இப்டி புரிஞ்சுட்டாங்களா?

ஏன்டா.புஷ்பா புருசன் கற போஸ்ட் பெரிய கவர்னர் போஸ்ட்டா?,அவளே ஒரு ரெக்கார்டு டேன்சர்

காலேஜ் படிக்கறவனுக்கு தெரிஞ்சா பரவால்ல காஜா எடுக்கறவனுக்கு எல்லாம் புஷ்பா நெம்பர் தெரிஞ்சுருக்கு

ஓம் க்ரீம் ஐஸ்க்ரீம்

இவன் நிஜ சாமியார்தானா?

என் பொண்டாட்டி வைக்கும் சட்னி கூட பத்தினி தான்.என்னைத்தவிர ஒரு பய கை வைக்க முடியாது

அரசியல்வாதியை நம்பினாலும் அவ்ன் கூட இருக்கும் அடியாளை நம்பாதே#VVV

7 பணம் சொத்து ஏராளமா சேர்த்துட்டேன்.ஆனா புண்ணியம் கொஞ்சம் கூட சேர்க்கலை

தலைவரே" இது தான் ஊருக்கே தெரியுமே

யோவ் டெய்லரே.எப்போ ஜாக்கெட் தைச்சு தருவே?
6 மாசம்.ஆகும் அதுவரை நான் என்ன செய்வே ன்?
ஜாக்கெட்டே போடாதே

ஏன்டா.புஷ்பா புருசன் கற போஸ்ட் பெரிய கவர்னர் போஸ்ட்டா?,அவளே ஒரு ரெக்கார்டு டேன்சர்

10 இந்த கடத்தல் நாடகத்துக்கு நாம வெச்ச பேரு ஆபரேசன் ஜாக்கெட் 2

யோவ்.ஜாக்கெட் 1 னையே இன்னும் கிழிக்கலை.அதுக்குள்ளே.ஆபரேசன்.2,வா?

11 ஒரு மனுசன் ஆவியா அலையலாம்

ஆனா ஆவி ஆன பின்பும் அலைய்க்கூடாது#VVV

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் -138 நிமிடம்

நிக்கி கல் ராணி க்கு ஓப்பனிங் சீன் பைட்

ரோபோ சங்கரின் கோமா ஆக்டிங் காமெடி எபிக்

சபாஷ் டைரக்டர்

1  அய்யோ பாவம் ஆம்பளை, நான் சொல்லப்போறேன் சாங்க்ல
ஆரவல்லி சூரவல்லி, குத்தீட்டிக்கண்ணாலே என பாடல்கள் எல்லாம் தர லோக்கல் டப்பாங்குத்து ஹிட் சி சத்யா தான் இசை , பிஜிஎம் ஓக்கே ரகம்

2   வசனம்  எழிச்சூர் அர்விந்த். இரண்டே இரண்டு மெயின் காமெடி மேட்டரை வைத்து 34 ஜோக்சை வைத்து ஒரு காமெடி ராஜாங்கமே நடத்தி இருக்கார்

3   படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை சோகம் என்றால் கிலோ என்ன விலை என கேட்கும் அளவு  செண்ட்டிமெண்ட் சீனே வைக்காமல் முழுக்க முழுக்க சிரிக்க வைத்ததற்கு சபாஷ்

லாஜிக் மிஸ்டேக்ஸ்  & திரைக்கதையில் சில ஆலோசனைகள்

 இது போன்ற படங்களுக்கு லாஜிக்கே பார்க்கத்தேவை இல்லை

சி.பி கமெண்ட்-வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் -,சி சென்ட்டர்.ரசிகர்களுக்கான காமெடிப்படம்.ரோபோ சங்கர் .புஷ்பா புருசன் ராக்கிங் ,விகடன் =40 ரேட்டிங் =2.5/5

 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு)= 40

குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்) = ஓக்கே

Friday, June 03, 2016

டிஸ்கி - இறைவி  - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2016/06/blog-post_6.html

கொள்ளையர்'களை விரட்ட காசு வாங்காத 75% பேர் ஓட்டுப் போட்டாலே போதும்.. சீமான் # மொத்த வாக்குப்பதிவே 65% டூ 70% தாங்க வரும்.அதுல 50% காசு வாங்கினவன்

============

2 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உங்கள் வீடு தேடி வருவார்கள்-ஸ்டாலின் # யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை பட போஸ்டரை ஒட்டி வைச்சுடனும் வாசல்ல

============

3 ஜெ ஆட்சியை அகற்றிட, பூமி பூஜை போட வந்துள்ளேன்- ஸ்டாலின் # பூமிகாவை பூஜை குத்துவிளக்கு ஏற்றச்சொல்லுங்க. மேட்சுக்கு மேட்ச். பகுத்தறிவு போயே போச்

=============

4 தி.மு.க. தேர்தல் அறிக்கை பொக்கிஷம்: மு.க.ஸ்டாலின் - இயக்குநர் சேரன் -ன் பொக்கிஷம் போல் மக்கள் மத்தியில் எடுபடாம போய்டப்போகுது

==================

5 இளம் தலைமுறையினரை நம்பியே தேர்தலை சந்திக்கிறோம் வைகோ # அஜித், விஜய் ரசிகர்களை மொத்தமா கவர் பண்ணிட்டா கப்பு நமக்குத்தான்

=================

6

குடிநீருக்குப் பதிலாக பீர் அருந்துவது நம் பண்பாடல்ல- சிவசேனா # இப்பவெல்லாம் தண்ணி-ன்னாலே தமிழன் சரக்குன்னு தான் நினைக்கான்

=====================

7  

ஆறுமுக கூட்டணிக்கு இனி ஏறுமுகம் தான்: திருச்செந்தூரில் பிரேமலதா பிரச்சாரம் # ஆறுமுகமும் விழிப்பது நரிமுகம் தானா?

=================

 காங்கிரஸ் பலவீனமாக இருந்ததால் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை: ப.சிதம்பரம் # நாம என்னைக்கு பலமா இருந்திருக்கோம்? கேட்டது கிடைக்க?

=================

9  மதுவிலக்கை ஒரே கையெழுத்தில் நிறைவேற்றமுடியாது-ஜெ # அப்போ2கையெழுத்துபோடுங்க, இரட்டை இலை இரட்டைக்கையெழுத்து. செய்வீர்களா?நீங்கள் செய்வீர்களா?

================

10  கருணாநிதி ஆட்சியில் வேதனை மேல் வேதனை.

என் ஆட்சியில் சாதனை மேல் சாதனை-ஜெ # உங்க 2 பேராலும் ரோதனை மேல் ரோதனைங்க

================

11 2006ல் கொடுக்கப்பட்ட பல வாக்குறுதிகளை மீண்டும் 2016லிலும் திமுக கொடுப்பது ஏன்? -ஜெ # நல்லாட்சி அமைப்போம்னு நீங்க மீண்டும் மீண்டும் பொய் சொல்லலை? அதுபோல்

=================

12 திமுக தேர்தல் அறிக்கையில் 2 ஏக்கர் நிலம் கொடுப்போம் என்று சொன்ன திமுக அதை நிறைவேற்றியதா?-ஜெ # தமிழகத்தை அடமானம்தான் வைக்கனும்

=================

13 படிப்படியாக மதுவிலக்கு என ஜெ.கூறுவதை மக்கள்ஏற்க மாட்டார்கள்-கனிமொழி # ஊழல் அற்ற ஆட்சி அமைப்போம்னு கலைஞர் சொல்றதையே ஏத்துக்கிட்டாங்க, இதை ஏத்துக்கமாட்டாங்களா?

================

14 வேட்பாளர் லாம் நாஞ்சொல்லணுமா? நீங்களே பாத்து ஓட்டு போடுங்க. - கேப்டன் # வேட்பாளர் பேர் தெரியாதுன்னு சொல்லுங்க,பேர் சொல்லத்தேவை இல்லைனு சொல்லாதீங்க

==================

15 டில்லி போக்குவரத்து கட்டுப்பாடு: விதி மீறிய பா.ஜ., - எம்.பி.,க்கு ரூ. 2,000 அபராதம் # சாமான்யனுக்கு விதிக்கப்படும் அதே அபராதம் அரசு பதவியில் இருப்பவருக்குமா?பல மடங்கு உயர்த்தனும்

=====================

16  

ஆர்.கே. நகர் தொகுதி மக்களின் காதில்,  ஜெ நன்றாகவே பூ சுற்றுகிறார்; -சிம்லா # பூவையர்  என்பதால் காதில் பூ வைக்கறார் போல

=========================

===================

18 அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு எதிரான புனித போர்-   விஜயகாந்த் # மனிதரில் மாணிக்கம் போல் புனிதரில் புரட்சிக்கலைஞர்னு பேர் வாங்க ஆசையா?

========================

19  ராணிப்பேட்டையில்  கத்தியைகாட்டி விரட்டிய தி.மு.க., - மா.செ., ஆட்கள்  # லேட்டஸ்ட் ரிலீஸ் தெறி யைக்காட்டி மிரட்டி இருக்கலாமில்ல? அவனவன் ஓடி இருப்பான்-- 

====================

20 திருவாரூர் தொகுதியில் வென்ற கருணாநிதி, தொகுதிக்கே சென்றது கிடையாது-முத்தரசன்  # நான் ஒரு தடவை ஒரு தொகுதில ஜெயிச்சுட்டன்னா அடுத்த தேர்தல் வரும் வரை அந்தப்பக்கமே எட்டிப்பார்க்கமாட்டேன்

=======================