Showing posts with label SHORT STORY. Show all posts
Showing posts with label SHORT STORY. Show all posts

Sunday, September 02, 2012

926 ஃபவுன்டன் கேட்! - சங்கரி அப்பன் - சிறுகதை

926 ஃபவுன்டன் கேட்!


சங்கரி அப்பன்


காலைக் காற்றில் குளிர் இருந்தது. வின்டர் சீஸன் ஆரம்பமாகிவிட்டது. சரியாக 8.15க்கு 926 ஃபவுன்டன் கேட் பஸ் வந்து நின்றது. காலியான பஸ்ஸில் பள்ளி மாணவர்களுடன் நானும் ஏறினேன். அரக்கப் பரக்க ஓடி வந்து ஏறிக் கொண்டாள் என் சைனீஸ் பஸ் ஸ்டாப் தோழி. மை கீ கார்டைத் தேய்த்துவிட்டு ஸீட்டில் உட்கார்ந்தேன். இமயமலை மனசுக்குள் டென்ட்டடித் திருப்பது மாதிரி பாரமாக உணர்ந்தேன். தினமும் இப்படித்தான் ஒடிந்த மனசுடன் ஏறுகிறேன். எந்த நாட்டில் எத்தனை எத்தனை சௌகர்யங்களுடன் வாழ்ந்தால் என்ன! பெண் மனம் எதிர்பார்ப்பது கணவனின் அன்பைத்தானே!



திங்கட்கிழமை வாரத்தின் முதல் நாள் இப்படியா அமையவேண்டும்! மைக்ரோவேவ் அவனில் சூடாக்கிய பாலில், கார்ன் ஃப்ளேக்ஸ் போட்டு டேபிளில் வைத்து, குடிக்கத் தண்ணீரும் வைத்தாயிற்று. இப்பவெல்லாம் உங்களுக்கு வேலை ரொம்ப ஈஸி. அப்படியிருந்தும் நாலு நாளா என் பேன்ட்ஷர்ட் துவைக்காம போட்டிருக்கே. வாஷிங் மிஷினைத் தட்டிவிடக் கூட வலிக்குதா? சோம்பேறித் தனம் அதிகமாகிவிட்டது..." சொகுசான வாழ்க்கை முறைக்கு மாறின பிறகு இடுப்பொடிய மனைவி வேலை செய்தால்தான் திருப்தியாக இருக்குமா? என்ன உள் மனச் சிக்கலோ புரியலை. இப்படித்தான் சுப்ரபாதத்தை ஆரம்பித்து வைப்பார் என் கணவர் பாபு.



இத பாருங்க மூணு நாளா தூறிட்டிருக்கு. நான் துவைச்சுக் காயப்போட்டுட்டு வேலைக்குப் போயிட்டா... பெரு மழை பெய்து முழுக்க நனைஞ்சுட்டா துணிகளில் துர்வாடை வரும்... அதான்"- காரணம் சொன்னேன். நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு..." ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடி சொல். நல்ல சொற்களே தமிழில் இல்லையோ என்று நினைக்கும் அளவுக்கு இங்கு வந்ததிலிருந்து கெட்ட வார்த்தைகளால் அர்ச்சிக்கிறார். நாலு ப்ரட்டை சாண்ட் விச் பண்ணி ஆறு வயது மகன் சூரியாவுக்கு லஞ்ச் கட்டிக் கொடுத்து நானும் கட்டிக் கொண்டேன்.




சூரி ஸ்கூல் பேக் எடுத்துக்க..." ஓடி வந்த குழந்தையின் கைபிடித்துத் தெருவில் இறங்கியபோது ஏதோ மத்தியச் சிறையிலிருந்து விடுபட்ட மாதிரி இருந்தது. பத்து நிமிட நடை... மகனை பள்ளியில் விட்டுவிட்டு எதிரே உள்ள பஸ் ஸ்டாப்பில் என் அலுவலகம் செல்ல நான் வந்து நிற்கிறபோது மணி சரியாக எட்டு பத்தாகிவிடும். எட்டு பதினைந்துக்கு டான் என்று வந்து நிற்கும் பஸ். அலுங்காமல்... இடிபடாமல்... கசகசவேர்வை இல்லாமல் சுகமாகப் பிரயாணித்தும் மனசு என்னவோ குலுங்கி இடிபட்டு வெலவெலத்து அலறிற்று.



யூ ஆல் ரைட்?" சைனீஸ் தோழி சங்மிங் கேட்டாள். மனசை அவசரமாக மூடி சமன் செய்துவிட்டுப் புன்னகைத்தேன்.


நல்லாயிருக்கேன்... நீங்க எங்கே வேலை பார்க்கறீங்க?"


ஒரு சைனீஸ் ப்யூட்டி பார்லரில் மசாஜ் செய்யும் வேலை. ரொம்ப கஷ்டமாயிருக்கு. எனக்கு சரியா ஆங்கிலம் பேச வராததால் இந்த வேலை. இங்கு வந்து எட்டு வருஷமாச்சு."



அவள் இங்குள்ள ஆஸ்திரேலியரான டான் என்பவரை கல்யாணம் பண்ணி இருக்காளாம். சைனாவில் அவள் மணந்த சைனீஸ் புருஷன் விவாகரத்துப் பண்ணித் துரத்திவிட்டானாம். ஒரே மகனுடன் இங்கு வந்து டானைக் கல்யாணம் பண்ணி செட்டிலாயிட்டாளாம். இரண்டாவது கணவன் அன்பாக இருக்கிறாராம். ஆனால் முதல் கணவன் அவள் பத்து வயது மகனுக்கு ஃபோன் செய்து அம்மாவை விட்டு விட்டு அப்பாவிடம் வந்து விடு என்று கூறிக் கூறி குழந்தையை ப்ரெயின் வாஷ் பண்ணி அவளிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறானாம். சொல்லும்போதே அவள் கண்கள் கலங்கிவிட்டன. பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் கடல் கடந்தாலும் விட்டபாடில்லை.



அலுவலகத்தில் நுழைந்ததும் ரோஜர் எதிர்பட்டார். ஸ்நேகமுடன் ஹாய் தீபா... ப்ளீஸ் கம் டு மை கேபின்..." என்றார். டெலிவரி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கையும் அதன் விலைப் பட்டியல் பற்றியும் ஒரு டிராஃப்ட் தயாரிக்கக் கூப்பிட்டிருக்கார்.



அரை மணியில் முடித்துத் தரவேண்டும் ப்ளீஸ்..." என்று வேண்டுகோள் வைத்தார். பிறகு மென்மையாக என்னைப் பார்த்து தீபா... கேன் ஐ சே சம்திங்?" என்றார். அவர் பர்மிஷன் கேட்டது எனக்குப் பிடித்தது.



சொல்லுங்க..." என்றேன்.



யூ லுக் ப்ரிட்டி அண்ட் யங் இன் சாரி" என்றார். மனசிலேதுமில்லாமல் வந்து விழுந்த இந்தப் பாராட்டுக்கு நன்றி சொன்னேன். பௌர்ணமி நிலா மனசுக்குள் பொழிந்தது போல் அந்தப் பாராட்டில் முழுதாக மகிழ்ச்சியில் நனைந்து போனேன். பாராட்ட வேண்டிய கணவர் ஒரு நாளாவது பாராட்டியிருப்பாரா? நான் ப்ரிட்டியா இல்லையா என்கிற கவனமே இல்லாமல் ஏதோ... டீசென்டாக உடை உடுத்தணும் என்ற எண்ணம் மட்டுமே குறியாக இருந்திருக்கிறேன்


. எப்பொழுதாவது ஏதும் அகப்படவில்லை என்றால்தான் புடைவை அணிவேன். மற்றபடி சூடிதார்... பேன்ட் ஷர்ட்தான். நான் புடைவை அணியும்போது - இடுப்பும்... கழுத்தும் ப்ளா என்று தெரிகிறது. அது என்ன முதுகில், மேலே ஒரு கயிறு கட்டி முடிச்சுப் போட்டிருக்கு. குழந்தை பெற்ற உனக்கு இந்த ஸ்டைல் தேவையா?" என்று சாடுவார்.




நான் சூடிதார் அணிந்தால் - துப்பட்டாவை அலட்சியமா தொங்க விடற... சகிக்கலை" என்பார்.



குளிர் காலத்தில் பேன்ட் ஷர்ட் போட்டால் - துப்பட்டாவும் இல்லே, சுத்தம்... ஆஸி ஸ்டைலுக்கு மாறிட்டே" என்பார்.



கண்களில் முட்டி நிற்கும் நீரைக் கட்டுப்படுத்தி, அப்ப என்னதான் உடை உடுத்தணும் நான்?"



பர்தா... முடியுமா உன்னால? வெள்ளைத் தோலையும் கட்டான சிக் உடலமைப்பையும் கடை பரத்தணும் உனக்கு" என்று என் பெண்மையை அவமானப்படுத்துவார். அவர் மேல் இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையும் எனக்குப் போயிற்று. இதுதானா வாழ்க்கை! மனசுக்குள் இத்தனை கசையடி விழுந்தும் துளிர்க்கப் பார்க்கிறேன்... அடித்த அவரோ சோர்ந்து போகிறார். இந்த முரணில் ஊஞ்சலாடும் பயணம் என்று விபத்துக்குள்ளாகுமோ! பயமாக இருந்தது.



என் ஒரே சந்தோஷம் என் மகன் சூர்யாதான். யூநோ விளையாடுவோம். மோனோப்பலி விளையாடுவோம். பவுலிங் கூட்டிப் போவேன். சேர்ந்து கொலை வெறி டி பாட்டு கேட்போம். அதுக்கு சூப்பராக டான்ஸ் ஆடுவான். வி - கேம்ஸ், கம்ப்யூட்டர் கேம்ஸ் ஆடுவோம். எங்கள் உலகமே தனி. இந்த ஆனந்தத்தைக் கெடுக்க மிஸ்டர் பாபுவால் முடியவேயில்லை. என் மகனின் மினுக்கும் கண்கள். கனிந்த அம்மா என்ற அழைப்பு. துறு துறு தோற்றம். எல்லாம் எனக்குக் கடவுள் தந்த இதங்கள்.



ஏன் உன்னை அப்பா எப்பவும் திட்றார்மா..." என்றான் ஒரு நாள்.



தெரியலைடா..."


ஒரு வேளை நீ ஸ்மார்ட்டா அழகாயிருக்கே. அப்பா குண்டா கறுப்பா இருக்காரே... அதனாலே இருக்குமோ?"


ஆறு வயது குழந்தையின் அப்சர்வேஷன் பவர் என்று வியப்பதா? அதிகப் பிரசங்கி என்று கண்டிப்பதா என்று தெரியவில்லை.


நான் பார்த்த சில பெண்களின் குறைகளைக் கவனிக்கும்போது எனக்கு இன்னும் ஆணாதிக்க நூற்றாண்டுகளின் சொச்சம் இருப்பதாகவே தோன்றுகிறது. என் மலையாளத் தோழி யாமினி சொன்னாள் -



தீபா... நல்ல வேலையை விட்டுட்டார். இங்கே இந்த புலாரா அத்வான இடத்தில் மூன்று ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டு நாய்களை வளர்க்கிறார். இங்குதான் ஆஸ்திரேலியர்களுக்கு நாய் என்றால் கொள்ளை ப்ரியமே... ஒரு குடும்பத்திலேயே இரண்டு மூன்று நாய்கள் வளர்க்கிறார்களே! உயர் ஜாதி நாய்கள் எண்ணூறு டாலர் வரை விற்பனையாகிறது. வருமானம் நல்லாத்தான் இருக்கு... ஆனா..."



ஏன் யாமினி... என்ன பிரச்னை?"


கேட்டால் திடுகிட்டுப் போவே. இரவில் பாம்புகள் வருது. எப்பவாவது நரி கூட வருது. சுத்தி ரெண்டு கிலோ மீட்டருக்கு ஆளே கிடையாது. சதா நாய் குரைக்கும் சத்தம்... என்ன வாழ்க்கை சொல்லு! ஆஃபீசர்ஸ் காலனியில் டீச்சர் வேலை பார்த்திட்டிருந்தேன். என் நாலு வயது பையனும் என் பள்ளியிலேயே படித்துக் கொண்டிருந்தான். நான் இங்கேயே இருக்கேன். என் பையனுடன் நீங்க வாரம் வாரம் வந்திட்டுப் போலாமேன்னு சொன்னேன்.


 ராமன் இருக்கும் இடத்துக்கு சீதை வருவதுதான் நம் பண்பாடாம். வியாக்கியானம் வேறு. என்ன பண்றது? அசோகவனத்து சீதா போல் இங்கு மாட்டிக்கிட்டேன். இந்தச் சூழலுக்குப் பழகிட்டிருக்கேன்" என்று முடித்தாள். உண்மையில் அதிர்ச்சியில் எச்சில் விழுங்க மறந்தேன். மனைவியைக் கண்ணுக்குள் வச்சுக் காப்பாத்தற எழுபது சத ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். முப்பது சதவிகித கோட்டாவில் நான், யாமினி, டேய்ஸி, மினி, சங்கீதா என்று ஒரு குட்டி லிஸ்ட்டே இருக்கு. அவர்களின் உள்கதை - கந்தல்கள், ஆழ்கடல் மனவலிகள். இதையெல்லாம் பார்க்கும் பொழுது, ‘நம்ம நிலை தேவலையப்பா’ என்ற எண்ணம் வரத்தான் செய்கிறது.



லஞ்ச் பாக்ஸ் திறந்து சாப்பிடும்போது டயானா வந்தாள். இந்த ஊர்க்காரி. எனக்கு அவளைப் பிடிக்கும். வெகுளியானவள். மனசில் பட்டதைச் சொல்வாள். நீலக் கண்கள், பொன்நிற முடி, டிபிகல் ஆஸ்திரேலிய வெண்ணெய் நிறம், ரோஸ் உதடுகள், கொஞ்சம் சிகரெட் பிடிப்பாள்.



ஸோ... நீ இன்னும் அந்த ஆள் கூடத் தான் வாழ்கிறாயா?"


என்ன செய்வது? குழந்தை இருக்கே" இவளிடம்தான் மனம் விட்டுப் பேசிக் கொட்டுவேன். யாரிடமும் சொல்ல மாட்டாள்.



தீபா...முட்டாள் மாதிரி பேசாதே. டம்ப் ஹிம். யூ டிசர்வ் எ நைஸ் கெய்" அவள் சொல்வது நிஜம்தான். ஆனால் நைஸ் கையாக என் கணவர் மாறலாம் இல்லையா என்பேன். அவள் இரண்டு பாய் ஃப்ரெண்ட் மாற்றி விட்டாள். தன் வாழ்க்கைக்கு சரியானவனைத் தேர்ந்தெடுப்பதில் ரிஸ்க் எடுக்க மாட்டாளாம்.



முதல் பாய் ஃப்ரெண்ட் அவளைத் துன்புறுத்திய அனுபவம் அவளுக்கு உண்டு. அவன் திருந்தி விடுவான் என்று விட்டுக் கொடுத்து... விட்டுக் கொடுத்து மனம் சிதைந்து பின் வேறு வழியில்லாமல் விட்டாளாம். அதனால் என்னுடைய வலி முழுவதும் புரிந்தவள். சுடு சொற்கள் மனத்தைப் பொத்தலாக்கும் அம்புகள் என்பாள். மனச் சிதைவு நாளாவட்டத்தில் வரும் என்பாள். எதற்கு இந்த வாழ்க்கை? ஜஸ்ட் லீவ் ஹிம். உண்மைதான்.




ஆனால்..."


என்ன ஆனால்? தன்மானம் இழந்து இப்படி ஒரு வாழ்க்கையை எங்களால் வாழ முடியாது தீபா. வொய் ஆர் யூ டேமேஜிங் யுவர் செல்ஃப்?"

ஒரே ஒரு காரணத்துக்காத்தான்" என்றேன்.


எனக்குத் தெரியும். உன்னை மாதிரி பல பெண்கள் வாழ்கிறார்கள் என்கிற நொண்டிச் சமாதானம் தானே."


இல்லே."


பின்னே?" ஒரு நிமிடம் ஆழ்ந்த மௌனத்திலிருந்தேன். பிறகு சொன்னேன்.


குழந்தை. அது ஒரு வரப்பிரசாதம். எந்தத் தவறும் செய்யாத அந்தப் பிஞ்சுக் குழந்தை அப்பா இல்லாமல் வளரும். அல்லது அப்பாவுடன் வளர திணறும். இல்லை அப்பாவுடன் வாரத்தில் இரண்டு நாள் அம்மாவுடன் ஐந்து நாள் என்று பங்கு போடப்பட்டு மனசு ரணப்படும். அதான்...

"

உன்னைப் பார்த்தா எனக்கு பரிதாபமாகத்தான் இருக்கு. இவ்வளவு சென்டிமென்ட்ஸ். ஃபூலா நீ? சரி... நீ செய்ய வேண்டியதை உன் கணவரே செஞ்சிட்டார்..."



என்னது?"


நீ இப்படி உருகறே. அங்கே அவர் ஜாகை மாறப் போறாராம். பின் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புவாராம். என் லாயர் தோழி ஜோனிடம் சொல்லியிருக்கார். என்ன இது தீபா? எப்படியாச்சு? வாட்ஸ் ஹப்பனிங்?"


அதிர்ந்து டயனாவைப் பார்த்தேன். நிஜம்தானா இது!


தீபா... நீ என் தோழி. அப்படிப் பார்க்காதே. என்னால் தாங்க முடியலை. உண்மையைச் சொல்லப் போனால், சுதந்திரம் உன்னைத் தேடி வந்திருக்கு. அப்யூஸிவ் கணவனோட வாழ்ந்து நீ அனுபவிச்ச மென்டல் டார்ச்சர் போதும். ஜஸ்ட் ஃபீல் ஹாப்பி... ஸ்மைல்" என்றாள். மென்மையாக அணைத்தாள். தாங்க்ஸ் இந்த நட்புக்கு... நான் வரேன் டயானா." வீட்டுக்கு வரும் வழியெல்லாம் சிந்தித்தேன். இந்த ஊரில் வந்து அவர் கற்றது இதைத்தானா? என் கண்களில் நீரும் என் உதட்டில் ஒரு சின்னப் புன்னகையும் இருந்ததே - அதைப் பார்த்து டயானா என்ன நினைத்திருப்பாள்! என் மனநிலை பிடிபடாமல் அதிசயித்திருப்பாள்.




வீட்டுக்கு வந்தேன். பாபு வர இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. முகம் கழுவி உடை மாற்றி சூடாக டீ குடித்தேன். என் பொறுமைக்குக் கடைசியில் கிடைத்த பரிசு இதுதானா? எங்கள் வீட்டின் எதிரே ஒரு சின்னக் குளம் இருந்தது. அதைச் சுற்றி சிமென்ட் நடைபாதை உண்டு. சனி, ஞாயிறுகளில் குளத்தைச் சுற்றி வாக்கிங் போவேன். குளத்தைச் சுற்றி இரண்டடிக்கு புல் வளர்ந்திருந்தது. அதில் குட்டிக் குட்டி மஞ்சள் பூக்கள் சிரிக்கும். சின்னப் பறவைகள் குளத்தில்நீர் அருந்திவிட்டு ஒருசேர கும்பலாகக் குபீரென வானம் நோக்கி உயரப் பறக்கும். விடுதலை என்கிற உணர்வும் அப்படித்தான் இருக்கும்.



 என் கணவரின் சுடுசொல்லிலிருந்து சுதந்திரம் கிடைக்கப் போகிறதென்று என் மனசும் இப்படித்தான் விடுதலைக்காய் பறக்கிறது. ஆனால் பறவைகள் உயரவே இருந்து விட முடியுமா? மீண்டும் தரை நோக்கி விர்ரென்று பறந்து வந்தமர்கின்றன. தற்காலிக சுதந்திரம் வாழ்க்கைக்குச் சரியான தீர்வாகுமா? ஒரு சிறையிலிருந்து விடுபட்டு தனிமை எனும் இன்னொரு சிறைக்குள் புகுவதற்குப் பேர் சுதந்திரமா? என்னிடம் மனசு விட்டுப் பேசாமல் இப்படியொரு முடிவை அவர் எடுத்தது எவ்வளவு குழந்தைத் தனமானது! பேசிப் பார்க்கலாம்... பிறகு எந்தச் சிறை பெட்டர் என்று முடிவு பண்ணலாம். என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்ததும் மனசு லேசாயிற்று. கார் ஷெட் திறக்கும் ஷட்டர் சத்தம் கேட்டது. பாபு வந்துட்டார்.



டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பப் போறாராம். ஜாகை மாறப் போறாராம். இதையெல்லாம் தீர்மானித்து விட்டு விடுதலை உணர்வுடன் தெரிகிறாரா என்று அவர் முகத்தை ஆராய்ந்தேன். அதில் இறுக்கம் இருந்தது. மருந்துக்குக் கூட ஓரிடத்திலாவது அப்பாடா உணர்வு இல்லை. சிக்கலைத் தீர்க்கத் தெரியாமல் புது சிக்கலை ஏற்படுத்தியிருப்பதை அவர் உள்ளுணர்வு சொல்கிறதா?


 புரியலை. டி.வி.யை ஆன் பண்ணி விட்டு உட்கார்ந்தார். நான் ரிமோட்டை பிடுங்கி ஆஃப் செய்தேன். வாழ்க்கையை ஆஃப் பண்ணிட்டு டி.வி.யை ஓட விட்டு என்ன பிரயோஜனம்?" என்றேன். கத்தி போல் அது அவர் மனத்தில் இறங்கிற்று. கண்ணீர் எட்டிப் பார்த்து விடாதிருக்க உதடு கடித்தேன். அவர் முதல் முறையாகப் பெயர் சொல்லி நிதானமாகப் பேசறார்.



தீபா... உனக்கும் எனக்கும் இந்த ப்ரேக் தேவைன்னு தோணுச்சு."



அதெப்படி எனக்குத் தேவைன்னு நீங்கள் முடிவு பண்ணலாம்? என் கூட பேசிப் பார்க்கணும்னு உங்களுக்குத் தோணவேயில்லையா?"



என்னைக் கல்யாணம் பண்ண இந்த எட்டு வருஷமா நீ சந்தோஷமாய் இல்லையே!"



அம்பு போன்ற சரமாரியான சொற்களைத் தாங்கிக் கொண்டு சிரிக்க நான் என்ன பீஷ்மரா?"

இத பார் தீபா... நீ என்னை மனசுக்குள் கறுப்பு குண்டுன்னு நகையாடறதை என்னால் புரிஞ்சுக்க முடியுது."



தி கேட் இஸ் அவுட் ஆஃப் த பேக். எட்டு வருஷமா இதையா மனசில் ஊறப் போட்டு வச்சிருக்கார்! தாழ்வு மனப்பான்மை, சுயபச்சாதாபம். இதற்கு மருந்துண்டா? நான் பெரிதாகச் சிரித்தேன். என் பெண்மையின் முழு பலத்துடன் ஆங்காரமாகச் சிரித்தேன். துர்க்கையின் கோபம் போல் இந்தச் சிரிப்பின் மூலம் அவர் அறியாமையைச் சாடினேன். முயல் குட்டி போல் இருந்தவள் மெகா சைஸ் துர்க்கையாக அவதரித்ததைப் பயத்துடன் பார்த்தார். மெல்ல நிதானத்துக்கு வந்தேன். பூரண லட்சுமி கடாட்ச அருள் பார்வையுடன் சொன்னேன்.


 சூல் கொண்ட கறுப்பு மேகங்கள்தான் அழகு. வெறும் வெற்று மேகங்கள் வானத்தில் ஃபான்சி பரேட் செய்யத்தான் லாய்க்கு. பூமின்னு பெண்மையைச் சொல்றாங்க. அதனை கறுப்பு மேகங்களால்தான் மழை பொழிவித்துக் குளிர்வித்துத் தழைக்க வைக்க முடியும். உங்களாலும் முடியும்.அன்புநீர் வர்ஷித்தால் நான் மலர்வேன். அது இல்லாததால்தான் நான் சந்தோஷமாய் இல்லே."



கலங்கிய மனக்குட்டைக்குள் இந்த ஜீவ வார்த்தைகள் தெளிவை ஏற்படுத்தும் என்று நம்பினேன். இதுதான் பிரச்னை என்றால் வலி தீரும். ரொம்ப நேரம் பேசாமல் இருந்தார். என் வாழ்வின் ஒளி இந்தச் சில நிமிடங்களில் நிர்ணயிக்கப்படப்போகிறது. காற்றில் படபடக்கும் தீபம் அணையுமா? இல்லை வெற்றி பெற்று சீராக எரியுமா? சிறிது நேரத்தில் தெரிந்து விடும். பக்கத்து வீட்டு சௌத் ஆப்ரிகன் பெண் நைகிக் என் மகனை வீட்டில் விட்டு விட்டுப் போனாள். ஆன்ட்டி ஹீ ஸேஸ் ஹீ வான்ட்ஸ் மில்க்" பாலை கப்பில் ஊற்றிக் கொண்டிருந்தேன்.

தீபா... நான் தப்பு பண்ணிட்டேன். ஸாரி. தீபா... வந்து... இனி உன்னை அலுவலகத்தில் நானே டிராப் பண்ணிட்டுப் போறேன். நீ என் மனைவியல்லவா? உன் மேல் எனக்கு அக்கறை இருக்கு தீபா..." இரும்புக் கதவு உடைந்தது. அவர் மனசில் இயல்பான காற்று சிலுசிலுவென்று வீசுகிறது. பாலை மகனிடம் கப்பில் கொடுத்தேன். அவர் என் வயிற்றில் பாலை வார்த்தார்.

தாங்க்ஸ் ஸோ மச். ஆன நான் 926 ஃப்வுன்டன் கேட் பஸ்ஸிலேயே போகிறேன். ஏன்னா உங்க அலுவலகம் நேர் எதிர்த்திசையில் அல்லவா இருக்கிறது..." என்றேன். அவர் சிரித்தார்.அதில் ஒரு கவிதையின் அழகு இருந்தது. சிரிக்கும்போது ரொம்ப அழகாய் இருக்கீங்கப்பா" என்றான் சூரியா. இதுவரை அவர் இப்படி உயிர்ப்புடன் சிரித்ததை அவன் பார்த்ததேயில்லை.



டயானாவிடம் இந்த வசந்தத்தைப் பற்றிச் சொன்னேன். சொன்னாள் - யூ ஆர் லக்கி. அவர் உணர்ந்தது ஓர் அபூர்வமான விஷயம். என் பாய் ஃப்ரெண்ட் கடைசி வரை அவன் தவறை உணரவேயில்லை. அதான் இவரும் அப்படித்தான் என்று எண்ணி விலகச் சொன்னேன். ஸாரி..." என்றாள்.



ஐ அண்டர்ஸ்டாண்ட்... யூ வில் கெட் எ நைஸ் கெய்..." என்றேன். இருவரும் புன்னகைத்தோம்.


இப்பொழுது நான் பஸ்ஸில்தான் அலுவலகம் செல்கிறேன். 926 ஃபவுன்டன் கேட் வந்து நின்றது. என் வாழ்வும் ஃபவுன்டன் போல் ஆகிவிட்டதால் அந்த பஸ் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. என் சைனீஸ் தோழி சொன்னாள். டு-டே த ஸ்கை இஸ் க்ளியர்."



வானம் மட்டும்தானா நிர்மலமாக இருந்தது, என் மனசும்தான்.

Thursday, August 30, 2012

அணையா நெருப்பு- கமல்ஹாசன்- சிறுகதை

http://www.itimes.com/files/rsz/fit_s_400x600/files/11-2009/92/0af9a91fd626d7766fd9112a0061e021_1257493942.jpg


வேறு ஒரு கதை விவாதத்தில் பிறந்த கிளைக் கதை இது. இது கிளைகூட இல்லை;

 வேறு, வேறு விதை.

‘‘விவசாயிகளின் தளம் போல வானம் பார்த்த பூமி இல்லை நமது விளைநிலம்’’ என்றார் கதை விவாதிக்க வந்த ஒரு நண்பர்.

‘‘ஆம்! இது,  பூமி பார்த்த பூமி’’ என்றேன்.

‘‘சில சமயம் வானமும் பார்க்குமே?” என்று சிரித்தார். ‘‘பார்க்கும்,
எங்கேயும் பார்க்கும். பார்வைதானே கதையே! என் கோணம், என் கதை.’’

‘‘சரி, கதைக்கு ஒரு துப்பு கொடுங்க, துலக்கறேன்’’ என்றேன்.

‘‘துப்பு என்ன… தலைப்பே தர்றேன்.’’

‘‘ம்…?’’

நான் சற்றும் எதிர்பாராத தலைப்பு தந்தார்.

‘‘நான் கற்பிழந்த நாள்.’’

‘‘ஓ! கதையின் நீளம்?’’

‘‘சிறுசு’’ என்றார்.

‘‘கதாநாயகனா? நாயகியா?’’

‘‘நாயகிதான் யதார்த்தமாய் இருக்குமோ?’’

‘‘உண்மைதான். காலம்?’’


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCI8eDWdYLRml51Bkc2T-Jxi-wGvnwE_IAG5A0dTUWQdtpNfMqn-JTs0eDLYSX-htFvHSDZaBzSeanYKQiZyhGwTWctU4nOXRnOu1jrPnrgIfF9lQZYih3x5haFiBMAVlO3RCR3Rl97GQ/s1600/Kamal+Hassan+With+His+Family.jpg

‘‘பகலா, இரவான்னு கேக்கறீங்களா?’’

‘‘இல்லை. நேற்றா, இன்றா, நாளையான்னு கேக்கறேன்?’’

‘‘முந்தானேத்து’’ என்றார் வீம்புக்காக.

சிரித்துவிட்டு, ‘‘How about முன்பு ஒரு காலத்துல?’’

‘‘Why not?’’ என்றார் விட்டுக் கொடுப்புடன்.

‘‘உங்க தலைப்புக்கு ஏத்த மாதிரி ஒரு கதைச் சுருக்கம்… ‘சீதையின் வாழ்வில்
ஒரு நாள்’ – எப்படி?’’

‘‘அம்மாடியோவ்!’’

‘‘ஏன்?’’

‘‘Why not?’’

‘‘கலவரம் வர ஒரு கதை காரணமா இருக்கணுமா?’’

‘‘கலவரம் வர நம்மூர்ல காரணம் வேணுமா என்ன?’’ என்றேன்.






‘‘Agreed. சீதை என்ன சொல்றா? ஏன் அப்படிச் சொல்றா? அவ அப்படிச்
சொன்னதுக்கு என்ன ஆதாரம்?’’

‘‘ஓ! கதையின் கால், ரிஷியின் மூலம் எங்கேன்னு கேக்கறீங்க?
சொல்றேன்.ஆதாரம் கேட்டீங்கன்னா, கையில ஒண்ணுமில்ல. ஆனா, இது அக்னி சாட்சியா உண்மை.’’

‘‘அப்பிடின்னா?’’

‘‘இது எனக்கு அக்னிதேவன் சொன்ன கதை.’’

‘‘ஓ! சீதை சொல்லவில்லையா?’’ என்றார் சுவாரஸ்யம் இழந்தவராக.

‘‘இல்ல… சீதை எனக்குப் பழக்கமில்லை. ஆனால், அக்னி வேறு விஷயம்.’’

‘‘ஓஹோ! அக்னிதேவன் உங்க நண்பரா?’’

‘‘ஆமாம்! ஆனா, ரொம்ப நெருக்கமில்ல. தூரத்து உறவு. அந்தரங்க ரகசியங்களைப் பகிர்ந்துக்கற அளவுக்கு நட்பு. ஒரு தலைக் காதலர்கள் சங்கத்துல என்னைப்  போல் அவரும் சில காலம் உறுப்பினரா இருந்தாரு.’’

‘‘Wow! hot gossip?’’

‘‘No, a warm tale’’ என்றேன்.

துவங்கினேன்… ‘‘அக்னி தேவன் சொன்னபடி அதிக புனைவில்லாமல் சொல்றேன்.’’

http://www.8pmnews.com/wp-content/uploads/2010/06/Kamal-marrigae.jpg

‘‘ராமன், சீதையின் கற்பைச் சோதிக்க முடிவு செய்த நாள். ராவணன் போரில்
செத்துப்போனான். என் போன்ற ஒருதலைக் காதல் ராவணனுக்கும் இருந்தது
சீதையின் மேல்’’ என்று கதை சொல்லத் தொடங்கினான் அக்னிதேவன்.

‘‘இரவெல்லாம் அசோக வனத்தில் குளிருக்காக ராவண சேவகிகள் என்னை
எண்ணெயூட்டி, மட்டை விறகூட்டி வளர்ப்பர். என் கதகதப்பில் காவலாளிகள்
உறங்கினாலும் சீதை உறங்க மாட்டாள். நானும்தான்.

சில சமயம் அனைவரும் உறங்கிய பின் என்னையே வெறித்துப் பார்ப்பாள் சீதை. நான் படபடத்துப் போவேன். சங்கோஜத்தில் நெளிவேன், உறக்கம் இன்றி. விடிந்ததும் காமுற்ற என் மனதை நனைத்து அவிக்கும் பகலும், காற்றும்!

ஒரு முறை ராவணன் மேல் பொறாமையில், ராவணனின் அரண்மனைக்குத் தூது வந்த ராமதூதன் வாலைப் பிடித்துக்கொண்டு இலங்கையையும் ராவணனையும் அழிக்கக் கூடத் துணிந்தேன். கைகூடவில்லை. வீணாக நிறைய அரக்கு உருகியதுதான். மிச்சம்…’’

‘‘சரி! கதையின் தலைப்புக்குக் காரணமான காரியமென்ன? இது சிறுகதை,
ஞாபகமிருக் கட்டும்’’ என்று ஞாபகப் படுத்தினார் நண்பர்.

தடங்கலின் எரிச்சலைக் காட்டாமல் அக்னிதேவன் தொடர்ந்து பேசலானான்…

‘‘காரண காரியம் காதல் தான். சீதையின் கற்புக்கு நானே சாட்சி! ராவணன்
அவளைச் சந்தித்த இரவுகளில், நானும் கூடவே இருந்தேன். அந்தத் தூதுவன்
கணையாழி கொண்டு வந்து நீட்டியபோது அடி வயிறு பற்றிக் கொழுந்துவிட்டு
எரிந்தேன். என்ன பிரயோஜனம்? சீதை கணையாழியை இன்னும் தெளிவாகப்
பார்த்தாள்… என் வெளிச்சத்தில்.

சீதை ராவணனோடு மட்டுமல்ல, என்னுடனும் பேச மறுத்தாள். அவள் நல்லவள். ஒரு வார்த்தைகூட என்னுடன் பேசாதவள்.

அன்று ராமன் அவளை ஊரறியச் சோதிக்க முற்பட்டபோதுதான் என்னுடன்
முதன்முதலாகப் பேசினாள்.

‘‘ராமனன்றி யாருடனும் சேராதவள், நினையாதவள் இன்று மனமொடிந்தேன்! நிதம் பார்த்து ஏங்கினாயே! காத்துவைத்த இந்தக் கற்பு உனதாகட்டும். எனை
ஆட்கொள்’’ என்றாள்.

காதல் ஓர் விநோத நோய். தேரைக்கும் பாறைக்கும் ஏற்பட்ட காதல் போல யாரும் அறியாது நிகழ்ந்த இந்தக் காதல் சங்கமத்தில், என் காமச் சூட்டைவிட காதல் வண்ணம் மேலோங் கியது.

என் முதல் காதல் நாசமாய்ப் போனதே… அதுபோல் இதுவும் ஆகும் என்று தோன்றியது.

அவளை எனதாக்கிக் கொள்ளும் அவசரத்தில், அவளையே கரிக்கிச்
சாம்பலாக்கிவிடுவேன் நான். தெரியும் எனக்கு. தோற்ற என் முதல் காதல் தந்த
அனுபவம் இது.

‘முதல் காதல் யாருடன்?’ என்று நண்பர் கேள்வியைக் கேட்கும் முன், சுடச்சுட
வந்தது பதில்.

‘‘முதல் காதல் காட்டுடன், வனமோகினியுடன். நான் அப்போது மலைமகன். விடலை. என் காதலைச் சொன்னவுடன் வெகுண்டு வெடித்தார் தந்தையார். என்னை வீட்டைவிட்டு வெளியேற்றினார். குழம்பிப் போனேன்.

காதலியைத் தேடிப் போனேன். பல நாள் கனவிலே செய்ததை அன்று நினைவில் செய்தபோது, காதலி கரிந்துபோனாள். என் காதலும்தான்! என் காதல் தோற்ற கோபத்தில் காதல், காமம் என்ற வார்த்தை களைக் கேட்டாலே எரிந்து விழுந்தேன். சிவனின் மகன் மாறன் கரிந்ததும் என்னால் தான். அந்நிலை இன்று இவளுக்கும் ஆகும். தெரியும் எனக்கு. இவளுடன் ஒன்று சேருவதை விட இவளைக் காப்பதே என் கடமை என்றது காதல்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQ-qT9mtDqSLXtcs2M8Kecz8RYytkRXFAvq77-eLr6IqnD5wrzG4ilgMwkePXSZrtG85vmyw-fjOXGB_6mL1gn_tdCBihcC7xTpO7ttR4XefPnUQPhMB6N1plIHgu14wtuIy8PUwZ7jNQ/s1600/Actresses-who-were-Pregnant-before-Marriage-1583.jpg

என் கைக்குள்ளே வந்த சீதையிடமோ குரோதமும் ஆதங்கமுமே தெரிந்தது. மோதியழ ஒரு தோள் நான். அவ்வளவே!

அவள் என் மேல் அன்று பொழிந்தது காதல் மழையல்ல, கருணை மழை! உதட்டளவில் தானமாகக் கொடுத்தாள் காதலை.

‘‘உன்னுடன் வருகிறேன் என்றவளை ஏன் வேண்டாம் என ஒதுக்குகிறாய். ஏற்க என்னை!’’ என்றாள்.

‘‘சீதா! காதல் ஒன்று சேருவதில் மட்டுமே வருமெனில், ராமனின் காதல்
இந்நேரம் வெகுவாகக் கூடி இருக்க வேண்டுமே! கூடியபின் குறையும் குணம்
உள்ளது காதல்.

என்னருமை சீதா! காமத்தில் நான் குளித்து நனைந்தால், யாருக்கும் இன்றி
அவிந்தேபோவேன். நீ அயோனிஜா, மீண்டும் உன் தாய் வீட்டுக்கே போவாய்.
மற்றவர்போல், கடைசியிலேனும் என் கைவசப்படுவாய் என்ற நம்பிக்கையும் இல்லை  எனக்கு.

என்னைப் போல் நீயும் நியதிகளுக்கு அப்பாற்பட்டவள். உன் கற்பும் கலையாமல், நம் காதலும் கரையாமல் இருக்க, நாம் கூடவே கூடாது.

என்னைக் கடந்து செல், உன் சுயநல ராமனிடம்! இந்தக் கூடாத கூடலில்,
நியதிகளுக்குள் அடங்காத நானே கருத்தரிப்பேன்! நம் காதலின் நினைவாக உன் வடிவில் ஒரு குமாரத்தியைப் பிரசவிப்பேன்! அவளுக்கு திரௌபதை என்று பெயரிடுவேன். சம்மதமா?’’ என்றேன்.

சீதை என் காதல் கேட்டுக் கண்கலங்கினாள். ‘இத்தகைய காதலை நான் அனுபவித்ததே இல்லை. இத்தகைய ஆணையும் நான் சந்தித்தது இல்லை. இனியும் அது நிகழாது.

உன் இந்த அன்புச் சூட்டில் உன் கை தவழ்ந்து வெளியேறிய பின், உன்
நினைவாகவே இருப்பேன். என் கற்பு, ராமன் போன்றவர் வாழும் பிரதேசத்தில்
அழுகித்தான் போகும். என் கற்பு உன்னிடமே இருக்கட்டும். அதை,
பிறக்கப்போகும் நம் மகள் திரௌபதைக்கு திருமணச் சீராக விட்டுச்
செல்கிறேன்’’ எனக் கூறி விடைபெற்றாள்.

அவள் கண்ணீரும் காதலும் என்னை நனைக்க, என் கைகள் தளர்ந்து போயின.

அன்று கைவிட்டுப் போனவள்தான், பிறகு பார்க்கவில்லை. என் மகள் திரௌபதையின் வாழ்வில் இத்தகைய சந்தேகக் கணவர் யாரும் வாய்க்காமல் காப்பேன். கற்பு என்ற சிறையில் சீதைபோல் அவள் சாகாமல் காப்பேன். என் மேல் ஆணை!’’

தன் தலையையே சத்தியத்தின் சாட்சியாக்கினான் அக்னி என்று முடித்து, என்
குரலை மாற்றிக்கொண்டு நானானேன்.

விவாதம் தொடர்ந்தது.

- வெளியான தேதி: 28 மே 2006


http://i.ytimg.com/vi/fOnfqEy5JNo/0.jpg

Tuesday, August 21, 2012

மணி அத்தையும் முளைப்பாரியும்!-தே.புதுராஜா - கல்கி 3 ம் பரிசுக்கதை


 மூன்றாம் பரிசுக் கதை



மணி அத்தையும் முளைப்பாரியும்!



தே.புதுராஜா



அன்றொரு ஞாயிற்றுக் கிழமை காலைப் பொழுது, தமிழ் தினசரி ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அருகில், எம்.பி.ஏ., முதலாமாண்டு படிக்கும் என் மகள், ‘நெட்டில்’ எதையோ ‘வலை’ போட்டுத் தேடிக்கொண்டிருந்தவள் திடீரென்று, டாடி... வாட் இஸ் மொல்பரி?" என்றாள் கண்களைக் கணினித் திரையை விட்டு அகற்றாமலேயே.



மல்பெரியா...? அது செம்பருத்தி மாதிரி ஒரு வகைச் செடிடா. பட்டுப் புழு வளர்க்கிறதுக்காக பயிர் செய்வாங்க. அந்தச் செடியோட இலைகளைச் சாப்பிட்டுத்தான் பட்டுப் புழுக்கள் எல்லாம் கூடு கட்டும்" என்கிறேன் நான்.



ஐயோ... டாட்... ஐ நோ தட். ட்வெல்த் பயாலஜில படிச்சிருக்கேன். பட், நான் கேட்டது அது இல்ல. ம்... இந்த... வில்லேஜ் ஃபெஸ்டிவெல் டைம்ல கேர்ள்ஸ் எல்லாம் தலைல வெச்சுத் தூக்கிட்டுப் போவாங்களாமே..." என்றவள் கேள்வியை முடிப்பதற்குள் எனக்குப் புரிந்துவிட்டது.



ஓ... அதுவாடா, அது ‘மெல்பரி’ இல்லடா, முளைப்பாரி" என்று நான் பதில் சொல்லும் போதே என் மண்டைக்குள் காலச்சக்கரம் ‘ரிவர்ஸ் கியரில்’ நாற்பதாண்டுகள் பின்னோக்கிச் சுழன்றது. ‘முளைப்பாரி’ என்றதுமே கூடவே மணி அத்தையின் முகம் மனசுக்குள் வருவதைத் தவிர்க்க இயலாது. கூடவே, தாங்க முடியாத மனவேதனையும்!



எனக்கு நான்கோ ஐந்தோ வயதிருக்கலாம் அப்போது. பள்ளி செல்லாத பருவம் என்பது தெளிவாகத் தெரிகிறது. அன்றுதான் முதன்முதலில் மணி அத்தையைப் பார்த்தேன். அதுவரையிலும் பின்கொசுவம் வைத்து வரிந்து கட்டிய அம்மாவையும், முக்கால் பாவாடையும் குரங்குக் குப்பாயமும் போட்ட அக்காவையும் மட்டுமே பார்த்த என் கண்களுக்கு, தாவணி கட்டிய பன்னிரண்டு வயது மணியத்தையின் தோற்றமும், அவள் சிரித்த முகமும் குரவை மீன் கண்களும் ஒருவித ஈர்ப்பாக இருந்தன. கருப்பும் இல்லாது வெளுப்புமில்லாது ஒரு நிறம்!



அப்பாவுக்கு மீசை இல்லாவிட்டால் இப்படித்தான் இருப்பாரோ... என்று நினைக்கத் தோன்றும். அதனாலேயே அவளிடம் சுலபமாக என்னால் ஒட்டிக் கொள்ள முடிந்தது.



அன்பென்றால் அப்படியோர் அன்பை அதுவரையிலும் நான் யாரிடமும் உணர்ந்ததில்லை. என்னதான் அம்மா - அப்பாவின் பாசம், தாத்தா- பாட்டியின் அக்கறையான அன்பு என்றாலும் அத்தைமார்களின் அன்பென்பது சற்றுச் செல்லம் கலந்த ஸ்பெஷல். அதை அனுபவித்தவர்கள் நிச்சயம் ஒத்துக் கொள்வார்கள்.



அந்த வயதுக்கே உரிய ஆனால் அதே குறும்புத்தனத்தை நான் மணி அத்தையிடம் காட்டியபோது, அப்படியே இடக்கையால் என்னை அணைத்துக்கொண்டு வலது உள்ளங்கையில் உதைத்த என் பாதத்தை ஏந்திப் பிடித்து அப்படியே ‘என் செல்லக் குட்டி...’ என்றவாறு பாதத்தில் அழுத்தமாகஒரு முத்தம் கொடுத்துச்சு. அப்பவே என்னோட சேட்டை, குறும்பு எல்லாமே தூள்தூளாகிக் காணாமப் போச்சு. அன்னிலேர்ந்து மணி அத்தையோட அன்புக்கு நான் அடிமை! அவருக்கு நான்னா உசிரு.



மணி அத்தையோட கூட்டுக்கா அக்கா ஒண்ணு பக்கத்துத் தெருவில இருந்து தெனக்கும் வரும். எங்கப்பத்தா, சித்தப்பா எல்லாமே அதை ‘மூக்கையா மக’ன்னுதான் கூப்பிடுவாங்க. மணி அத்தை எப்பவும் வாடி, போடின்னுதான் பேசுவாங்க. அந்தக்காவுக்கும் என்னைய ரொம்பப் புடிக்கும். ‘அழகு பெத்த பய’ன்னு என் கன்னத்தைப் புடிச்சுக் கொஞ்சும். ஆனாலும் எம்மேல அந்தக்காவுக்குக் கொஞ்சம் பொறாமைதான். ஏன்னா அதுக்கு மட்டுமே சொந்தமான மணி அத்தை பாசம் பூராவும் இப்ப என் பக்கம் திரும்பிடிச்சே! அந்தளவு அவங்களுக்குள்ள ஒரு நெருக்கம்! என்னமோ சொல்வாங்களே ‘உசிர் தோழி’ன்னு... அதை நான் அவங்ககிட்டத் தான் பார்த்தேன். ஒருநாள் கூட அவங்க ரெண்டு பேரும் பார்க்காம இருக்கவே மாட்டாங்க. அப்படியொரு கூட்டு.



மணி அத்தை ஒருநாள் வாசலில் உட்கார்ந்து மடியில என்னை வெச்சுக் கொஞ்சிக்கிட்டிருந்துச்சு. அப்ப அப்பத்தா வந்து, ஏலா... மணி... அந்தா அந்தச் சருவச் சட்டில மொச்சப் பயத்த ஊறவெச்சு மொளக்கட்ட வெச்சிருக்கேன். அதயெடுத்து தோலப் பிதுக்கிட்டு புளிச்சாறு வையி. பெறகு அந்த ரெண்டாவது அடுக்குப் பானைல சாம அரிசி இருக்கு. அதில ஒரு அரப்படி போட்டு வடிச்சு வையி. ஒழவுக்குப் போன ஙொண்ணன் உச்சிக்கு வீட்டுக்கு வந்திருவான் கஞ்சிக்கு


. அதுக்குள்ள கஞ்சி தண்ணி காய்ச்சி வக்கிற சோலியப் பாருடீ. அதவிட்டுப்புட்டு ஒஞ்சோட்டுக்காரி அந்த ‘அமுக்கி முத்தம்மா’ மூக்கையா மக கூட சேந்து சொட்டாங்கல்லு ஆடுறதும் சோழிமுத்து ஆடுறதுமிண்டு பொழுதப் போக்கடிக்காத. நான் பேச்சியக்கா கூட மேற்கு மலைக்கு வெறகுக்குப் போயிட்டு வாரேன்"ன்னுட்டே மூலையிலேர்ந்த பானைலேர்ந்து புளிச்சதண்ணிய ரெண்டு சொம்பு மோந்து குடிச்சுப்புட்டு, சும்மாட்டுத் துணியும், வெட்டறுவாளும் எடுத்துக் கக்கத்தில வெச்சிக் கிட்டுக் கௌம்பிடிச்சு அப்பத்தா.



அப்பத்தா போனொன்னே மணி அத்தை என்னைப் பார்த்து எஞ்செல்லக் குட்டி... இங்கனயே ஒக்காந்து வெளாடுவியாம். அத்தை உனக்கு மொச்சப் பயறு உரிச்சு புளிச்சாறு வெச்சு, சாமக்கஞ்சி காய்ச்சி ஊட்டி விடுவனாம்"ன்னு சொல்லிக்கிட்டே உள்ளே போய் சருவச்சட்டிய எடுத்திட்டு வந்த அத்தை அப்பிடியே அதையே வெச்ச கண்ணு வாங்காமப் பறந்துகிட்டு நிக்கிது. நான் என்னமோ ஏதோன்னு அத்தை மொகத்தைப் பார்க்கிறேன்.


அந்த மொளச்ச பயத்தை அப்பிடியே கையில அள்ளிப் பார்த்த அத்தை, ஆத்தத்தோ... இப்பத்தான் தொப்புள்கொடி அறுத்த பச்சப் பிள்ள கணக்கா இருக்கேத்தே...! இதப்போயி எப்பிடி மனசொப்பி உரிச்சுப் புளிச்சாறு வக்கிறது?"ன்னுட்டு சட்டிய கீழ வெச்சிட்டு வீட்டுக்குள்ள ஓடிப் போயி ஒரு கொத்தை எடுத்து வருது. கொல்லப் பக்கமாய்ப் போயி மண்ணப் போட்டுக் கொத்துது. பெறகு அந்தப் பயறு பூராத்தையும் மண்ணில கொட்டித் தண்ணியத் தெளிச்சு விட்டுட்டு, பொழச்சுப் போங்க"ன்னுட்டுத் திரும்பி வருது. இப்ப அத்தை மொகத்தப் பாக்கணுமே... அம்புட்டுச் சந்தோஷம்! எனக்கு ஒண்ணும் புரியலை.





பிறகு கொஞ்ச நேரத்திலேயே மணி அத்தை சாமக்கஞ்சி காச்சி, மௌகு ரசம் வச்சு, தேங்காத் தொவையல் அரச்சு எனக்கு ஊட்டி விட்டுச்சு. அப்பா! என்னா ருசி! அப்பிடியே சர்ர்...ன்னு நாக்கில ஊறிச்சு. எத்தனை காலமானாலும் அந்த ருசி நாக்க விட்டுப் போகாது.



பிறகு, சித்தப்பா வந்து மொணங்கிக்கிட்டே சாப்பிட்டு அப்பிடியே தூங்கிடிச்சு. ஆனா அதுக்குப் பிறகு வெறகுக் கட்டோட வந்த அப்பத்தாதான் மணி அத்தையைப் பேயோட்டிருச்சு.

ஏண்டீ... கேனப்பய மகள... நான் என்னா சொல்லிட்டுப் போனேன். நீ என்னாடி செஞ்சு வெச்சிருக்கவ? எங்கடி மொச்சப் பயத்த?"



அப்பத்தா, அத்தை, அதை மண்ணில கொட்டிடுச்சு" என்று விவரம் தெரியாமல் நான் போட்டுக் கொடுக்க, அப்பத்தா மாரியாத்தா கணக்கா கத்துது! சித்தப்பாவும் எந்திரிச்சு அது பங்குக்குத் திட்டுது மணி அத்தையை. அதோட மணியத்தையோட கூட்டுக்கார அக்காவையும் சேத்துத் திட்டுது. அதாலதான் மணி அத்தை கெட்டுப் போகுதாம்! இப்பிடியே காலம் ஓடுது. நானும் பள்ளிக்கொடம் போயி இப்ப மூனாப்பு படிக்கிறேன்!



அன்னிக்குப் பொழுதுசாய நேரம் மணியத்தையோட கூட்டுக்காரக்கா வேகவேகமா, நல்லநாய் சாட்டிட்டாய்ங்கடீ. இந்த வருசமாச்சும் எப்பிடியும் மொளப்பாரி எடுத்திடணும்டி. நானும் போன ரெண்டு வருசமா நெனச்சிக்கிட்டேருக்கேன். ஒண்ணுந் தோதுப்படலடி. இந்த வட்டம் உங்க வீட்லயே ரெண்டு பேரும் சேந்து மொளப்பாரி வளக்கலாம்டி மணி. நீ என்னாடி சொல்றே?"



எனக்கென்னமோ கொஞ்சங்கூட ஒப்பலடி. பாவம், கானப்பயத்தையும் தட்டாம்பயத்தையும் தண்ணி ஊத்தி வளத்திட்டு பாங்கெணத்தில கொண்டு போய் கொட்றதுக்கு எப்பிடி டீ மனசு ஒப்புது உங்களுக்கு?"ன்னுச்சு மணி அத்தை.



இவ ஒருத்தி... சீமைலயில்லாதவ! எதெதுக்குத்தான் பாவ புண்ணியம் பாக்கிறதிண்டு வெவஸ்தயே இல்ல?"


எனக்கு ஒப்பல. வேணுமிண்டா நான் மாவௌக்கு எடுக்கிறேன்"ன்னுச்சு மணி அத்தை.



க்கும்டி.. மாவௌக்கெடுக்கிறதுன்னா கிள்ளுக்கீறன்னு நெனச்சியா?"

இங்க பாரு... எங்க வீட்ல ரெண்டு ஓட்டப்பான கெடக்கு. நான் போய் எடுத்துட்டு வாரேன். நீ காப்படி கானப்பயறு, தட்டாம்பயறு, ஒரு அரைக்காப்படி பாசிப் பருப்பும் மட்டும் எடுத்து வை"ன்னுட்டு ஓட்டோட்டமா ஓடிப் போச்சு.

மணி அத்தை கூட்டுக்காரிக்காக ஒத்துக்கிச்சு.

கோபமாய் வந்த அப்பத்தா, மணி அத்தையைப் பார்த்துக் கத்துது.

பயத்தப் பூரா அள்ளிக்கிட்டுப் போயி? என்னாடி செய்யப் போறவ?"


கோயிலுக்கு மொளப்பாரி வௌக்கப் போறோம்த்தா."


ஙொண்ணஞ் சொன்னது சரியாத்தான் போச்சு. ஏன்டி, அந்த அமுக்கி முத்தம்மா கூடச் சேந்து வீணாப் போறவ. ஒனக்கெதுக்கு அந்தச் சோலி? பேசாம பயத்தக் கொண்டு போய் பானைல போட்டுட்டு வேற சோலி கெடந்தாப் பாரு. அந்தச் சிரிக்கி மூக்கையா மக இங்கன வரட்டும் பேசிக்கிறேன்."



ஏன் ஆத்தா எல்லாப் பேரும் அவளவே வய்யிறீங்க? நீங்க நெனக்கிற மாதிரிலாம் அவ கெட்டவ கெடையாது ஆத்தா. அவ உடுத்திச் சிங்காரிச்சிட்டு வாறதைப் பார்த்து எல்லாமே அவள மோசமா நெனக்கிறீக. ஆனா அவளுக்குப் பச்சப்புள்ள மனசு ஆத்தா."

க்கும்... ஒடனே ஒசாரத்துக்கு வந்திருவியே ஒஞ்சோட்டுக்காரிக்கு. உன்னோட சோட்டுக்காரி சரியில்லைன்னு உன் அண்ணந்தான் சொல்லிருக்கான். பாத்துடி மணி. ஒன்னிய கரை சேக்கிற வரைக்கும் நான்தான வயித்தில நெருப்பக் கட்டிக் கிருக்கணும்?"



ஆத்தா... எனக்கும் இந்த மொளப் பாரியும் களுதையெல்லாம் ஒப்பலதான் ஆத்தா. பாவம் அவ ஆசப்பட்றாளேண்டு தான் இந்த ஒத்த தடவ மட்டும் சரின்னு சொன்னேன் ஆத்தா"ன்னு சொல்லி அப்பத்தாவ ஒருவழியா ஒத்துக்க வச்சிச்சு மணி அத்தை.



ரெண்டு மண் பானையோட வந்த மூக்கையா மக, அதை அப்பிடியே பண்ணருவாளக் கொண்டி கொத்திக் கொத்திப் பக்குவமா ஒடச்சிச்சு. மேல்பாதியைக் குப்புறக்கா கவுத்துப் போட்டு கீழ்ப்பாதிய அது மேல வச்சு செம்மண்ணும், மணலும், காஞ்ச பசுஞ்சாணியும் கலந்து அதில ரெப்பிச்சு. நல்லா சமமா பரப்பின மண் மேல நடுக்கொண்டு வட்டமாய் கொஞ்சம் கானப்பயத்த தூவுது. அதச்சுத்தி இன்னொரு வட்டமாய் கொஞ்சம் தட்டாம் பயத்தையும், ஓரமா பாசிப் பயத்தையும் ஒரு வட்டமாய்த் தூவிச்சு. மிச்ச மண்ண அள்ளி அது மேல தூவி, கொஞ்சம் தண்ணியத் தெளிச்சு ஓரமாய் வச்சிருச்சு. அதே மாதிரி ரெண்டு தயார் பண்ணிட்டு, இந்தாடி மணி... அம்புட்டுதாண்டி. இப்பிடியே இதுகள தூக்கிட்டுப் போயி வெயில் படாத மூலையில வச்சு பஞ்சாரத் தப்போட்டு மூடி வையி. தெனமும் விடியக் கருக்கல்லயம் பொழுதுசாய நேரத்திலயும் கொஞ்சம் தண்ணிய தெளிச்சு மூடிட்டா போதும். எட்டா நாள் எடுத்துப் பாத்தா அம் புட்டழகா வளந்திருக்கும் மாளப்பாரி! செப்புப் பானையை வௌக்கிச்சோடி அது மேல அப்பிடியே தூக்கிவச்சி கொண்டுக்குப் போக வேண்டியதுதான். நான் வாறண்டீ மணி"ன்னு கௌம்பிடிச்சு அந்தக்கா.



ஒரு வாரம் ஓடிப் போச்சு. பொழுது விடிஞ்சா கோயில் நல்ல நா. ஊரே சடங்கான கொமரிப்பிள்ளை கணக்கா சிங்காரிச்சு நிக்கிது. தெருவுக்குத் தெருவு எங்க பாத்தாலும் வேப்பிலையும், மாவிலையுமா தொங்குது. வாழமரம் வேற கட்டியிருக்கு. திரும்பின பக்கமெல்லாம் கொழா ரேடியா காதைப் பொளக்குது. பள்ளிக்கொடம் விட்டொன்னே நேரா அப்பத்தா வீட்டுக்குத் தான் போனேன். மணி அத்தையைப் பாக்க. வீட்ல யாரையும் காணோம். சித்தப்பா மட்டும் இடுப்பில ஒரு துண்டைக் கட்டிக்கிட்டுக் கண்ணாடியைப் பாத்து மொகமழிச்சிக்கிட் டிருந்திச்சு.





மணி அத்த எங்க சித்தப்பா?" என்றேன்.



தெருக் கொழாய்ல தண்ணி புடிக்கப் போயிருக்கும்டா. போய்ப் பாரு"ன்னிச்சு சித்தப்பா.




சரின்னிட்டுக் குடுகுடுன்னு வெளிய ஓடியாந்தனா அப்பத்தான் மூக்கையா மக வருது எதிர.




எங்டகா ஙொய்த்தய? மொளப்பாரிக்குத் தண்ணி கிண்ணி ஊத்தினாளோ என்னமோ"ன்னுக்கிட்டே வீட்டுக்குள்ள போச்சு. கொஞ்ச நேரத்தில அழுதுகிட்டே வெளிய ஓடியாந்திச்சு. அப்பத்தான் இடுப்புல தண்ணிக் கொடத்தோட மணி அத்தை வருது எதிர்ல. ஏய்.. .என்னாடி அழுகிறவ? ஆத்தா ஏதாச்சும் வஞ்சிச்சா? சொல்லுடி"ன்னு பதறிப் போயி கேக்குது மணி அத்தை.

மணி... நான் உசிரோடு இருக்க மாட்டேண்டி. எங்கூடப் பெறந்தவங்கெணக்காத்தானடி நெனச்சேன் நானும்... இப்பவே நாண்டுக்கிட்டுத் தொங்கலைன்டா நான் மூக்கையாவுக்குப் பெறக்கலடி..."ன்னு அழுதுக்கிட்டே வேகமா ஓடுது அந்தக்கா.

விடியக்கருக்கல்ல கொட்டுச் சத்தம் கேட்டு எந்திரிச்சுப் பாத்தா தெருவுல ஆம்பளையும் பொம்பளையும் மஞ்சத் தண்ணியைக் கலக்கி வச்சிக்கிட்டு அவுக அவுக மொறப் பிள்ளைக மேல ஊத்தி ஒரே அலம் பல் பண்ணிட்டுத் திரியுதுக. அத்தையோட மொகத்திலதான் சிரிப்பே காணோம்.



பொழுதுசாய நாலு மணிக்கெல்லாம் கோயில்லேர்ந்து கொழா ரேடியால கூப்பிடுறாய்ங்க. மொளப்பாரி தூக்கிற பொம்பளப் பிள்ளைகள்லாம் உடனே கௌம்பி கோயில் மண்டபத்துக்கு வரவும்"ன்னு. மணி அத்தை அவசரமாய் தயாராகுது. மூக்கையா மக வந்து வீட்டுக்கு வராம தெருவோரமாய் நிக்குது. ‘அமுக்கி முத்தம்மா’வா வாற அக்கா இன்னக்கென்னமோ ‘அழுக்கு முத்தம்மா’வா வந்திருக்கு. எனக்கே ஆச் சர்யமாய்ப் போச்சு. பெறகு மணி அத்தைதான் ரெண்டு மொளப்பாரியையும் தூக்கிட்டு வந்து ஒண்ண அது கூட்டுக்காரிகிட்ட குடுத்திட்டு, இன்னொன்ன தூக்கி மண்டைல வச்சிக்கிட்டு அப்பிடியே கோயில் மண்டபம் போகுதுக. நானும் கூடவே போறேன்.



ஒரு சுத்துச் சுத்தி திரும்ப கோயில் மண்டபத்துக்கு வந்திட்டு கோயில் கெணத் தில தொப்புக்கட்டி தொப்புக்கட்டின்னு மொளப் பாரிய போடுதுக. அப்பத் தான் பாக்கிறேன் மணி அத்தையை. வரிசையில காணம்! மூக்கையா மககிட்ட கேக்கிறேன்.



ஓட்டோட்டமா அப்பத்தா வீட்டுக்குத் தான் போனேன். அங்கன நான் பாத்தது மணி அத்ததானா? மூஞ்சியெல்லாம் வீங்கி, கண்ணுலாம் செவந்து, ஒதட்டுக்கிட்ட காயம் வேற. பாக்கவே என்னமோ மாதிரி இருந்திச்சு. நான் கிட்டப் போயி, என்னாத்தே?"ன்னவொடனே என்னிய அப்பிடியே கட்டிப்புடிச்சிட்டு அழுதுச்சு. ஒடனே கண்ணத் தொடச்சிட்டு, ஒண்ணு மில்லடா செல்லம். நீ வெரசா பள்ளிக் கொடம் கௌம்பு"ன்னு சொல்லி என் கன்னத்தில அழுத்தமா ஒரு முத்தம் குடுத்திச்சு.

பொழுதுசாய பள்ளிக்கொடம் விட்டு அப்பத்தா வீட்டுக்குப் போகலாமின்னுட்டுப் போனா ஊர்ப் பொம்பளைகளும் பெரிசுகளும் கூடி நிக்கிதுக. ஒரே ஒப்பாரிச் சத்தம்! கூட்டத்துக்குள்ள முண்டியடிச்சு உள்ள போயி பாக்கிறேன். மண்டையே வெடிக்கிறாப்ல இருக்கு. கூடியிருந்த பொம்பளைக பேசிக்கிச்சுக.

யே... யாத்தே.... அப்பிராணிப்பிள்ள இந்த மணி போயி இப்பிடிச் செய்வாளாக்கா? அந்த மூக்கையா மகதான் என்னமோ செஞ்சு பாவம் இந்தப் பச்ச மண்ணையும் சேத்துக் கூட்டிட்டுப் போயிருப்பா. சாவுல கூட ரெண்டு பேருக்கும் எம்புட்டு ஒத்தும பாத்தியாக்கா? தாவிணித் துணியைப் போட்டு ரெண்டு பேரும் இடுப்பச் சேத்துக் கட்டியிருக்காளுக. ரெண்டு பேர் சடையும் ஒண்ணா முடிஞ்சு, ரிப்பன் துணியப் போட்டு ரெண்டு பேர் கால்களையும் ஒண்ணாக்கட்டி, கைக்குக் கைகோத்த மேனிக்கி ஒண்ணா குருவனூத்துப் பாலத்தில ஏறி பெரியாத்தில தவ்வி யிருக்காளுக!



அங்கேருந்து ஒரு மயில் தொலவுல மரத்துப் பாலத்துக்கிட்டத்தான் கண்டுபுடிச்சுத் தூக்கியிருக்காக. காட்டுப் பொணத்த வீட்டுக்குக் கொண்டு வரப்பிடாதின்னு அங்கனயே எரிச்சுப்பிட்டு வந்திட்டாகலாம்கா. பாவி மக... மூஞ்சியக் கூட பாக்க முடியாமப் போச்சேக்கா..."ன்னு மூக்கச் சிந்திக்கிட்டு அழுகுதுக.



‘மணி அத்தை செத்துப் போச்சா!?’ என்னால ஏத்துக்கவே முடியலை.



நேத்து நீ தூங்கினப் பெறகு நான் அப்பத்தா வீட்டுக்குப் போயிருந்தேன்டா. அப்ப.. சித்தப்பா மணியத்தையப் போட்டு வௌக்கமாத்தக் கொண்டி அடிச்சிச்சு. மொளப்பாரியத் தூக்கிட்டு மந்தக்காட்டுக்கு எவனப் பாக்கலா போனேன்னு கேட்டு ரொம்ப நேரமா அடிச்சிச்சு..." அக்கா சொல்லிக்கிட்டிருக்கும் போதே என்னையறியாம மணியத்தே...."ன்னு கத்திட்டேன். அக்காவும் என்னய கட்டிப்புடிச்சிக்கிட்டு அழுகுது. எப்படா விடியும்னு முழிச்சிக்கேருத்தேன்.


 பொழுது விடிஞ்சொன்ன எந்திரிச்சு ஒரே ஓட்டமா மந்தக்காட்டுக்கு ஓடுறேன். அங்கன போயி மூச்சு வாங்க ஆவலா நாலாபக்கமும் தேடறேன். ஒரு மூலையில வரப்போரமா ஈர மண்ணில மணி அத்த கொட்டின (நட்டுவச்ச) மொளப்பாரி! ஓடிப் போயி கிட்டத்தில ஒக்காந்து அதுகளத் தடவிப் பாக்கிறேன். அப்படியே எம்மணியத்தையோட சிரிச்ச மூஞ்சி அதில தெரியுது! என் மணியத்தை சாகல... என் மணியத்த சாகல..."ன்னு கத்துறேன்.



சித்தப்பாவப் பார்க்கப் புடிக்கலை.எனக்கு அதுக்குப் பெறகு அந்த வீடு மட்டுமில்ல. அந்த ஊரே ஒப்பாமப் போச்சு.



ஹும்... காலம் உருண்டோடிப் போச்சு. போன வருஷம் அந்த மனுசன் சாவுக்குக் கூட நான் போகவேயில்லை. இதோ... இப்ப எனக்கும் ஒரு வயசுக்கு வந்த மக இருக்கா. பேர் ‘மணிப்பிள்ளை’!



டாட்... டாட்... என்ன டாட்... ஒரு மாதிரியா ஃபீல் பண்றீங்க..." என்று என் மகள் என்னை உலுக்க...



ஆங்... மணியத்தை... மொளப்பாரி..." என்று நான் உளற...



ஓ... டாட்... இன்னும் நீங்க அதப்பத்திதான் திங்க் பண்ணிட்டு இருக்கீங்களா? ‘தி மேக்கிங் அஃப் மொல்பாரிய’ கிராம் ஃபெஸ்ட் டமில்நாட் டாட்காம்ல போயிட்டு நான் பார்த்திட்டேன் டாட்" என்கிறாள் என் மகள்.



இப்போதுதான் நன்றாகக் கவனித்தேன் என் மகளின் கண்களை. ஆம், மணி அத்தையேதான்!


 நன்றி  கல்கி, புலவர் தருமி

Saturday, August 18, 2012

பால்காரம்மா - எம்.ஜி.கன்னியப்பன் - மூன்றாம் பரிசுக் கதை-கல்கி

மூன்றாம் பரிசுக் கதை



பால்காரம்மா



ஓவியம்: தமிழ்


எம்.ஜி.கன்னியப்பன்


நடுவர் கமென்ட்ஸ்!


மனிதாபிமானம் குருத்துவிடும் கதை. மனிதநேயமும், அன்பும், ஆதரவற்ற இதயங்கள் மீது பொழியும் கருணையும் இன்றும் வற்றிவிட வில்லை என்பதை வலியுறுத்துகிறது. மனத்தில் வெகுநேரம் வலம் வரும் சோகம் ததும்புவது.


- வெ.இறையன்பு, ஐ.ஏ.எஸ்.



தாயின் மனதை யார்தான் கணிக்க முடியும்... உதவி செய்யும் மனம் அடுத்த முறை தயங்குவது, அது அன்பு மட்டுமே செய்யத் தெரிந்த ஒருத்தியினால் என்பது இதில் நான் ரசித்த முரண்.

- ரோஹிணி



அன்று தீப்பற்றிக் கொள்ளாத ஞாயிற்றுக்கிழமை. பரபரப்பு இல்லை. புரண்டு போத்திக் கொண்டு எட்டு வரை தூங்கலாம். டி.வி. பார்க்கலாம். காயமின்றி ஷேவ் செய்யலாம். மதியம் தூங்கலாம். மாலையில் குளிக்கலாம்.



மனைவி திவ்யா மணக்க மணக்கப் போட்டிருந்த காஃபியைக் குடித்துவிட்டு நாக்கில் இனிப்புச் சுவை குறையுமுன் ஒரு நிக்கோடின் குச்சியையும் தீப்பெட்டியையும் எடுத்துக் கொண்டேன். மொட்டை மாடி அதற்கெல்லாம் வசதியாக இருந்தது.





மாடி செல்லும் முன் பெட்ரூமை எட்டிப் பார்த்தேன். என் ஐந்து வயது கீர்த்தனா கடந்த ஆறு நாட்களுக்கான அதிகாலைத் தூக்கத்தை நிறைவு செய்து கொண்டிருந்தாள். சத்தமில்லாமல் கதவைச் சாத்திவிட்டு மாடிக்கு வந்தேன். முனையைப் பற்றவைத்துக் கொண்டு நுரையீரலை நிரப்பினேன்.





சென்னைக்கு வந்து ஒன்பது மாதங்கள். பிரபலமான கம்ப்யூட்டர் நிறுவனத்தின் கோவை கிளையிலிருந்து சென்னை மெயின் பிராஞ்சுக்கு மாற்றியிருந்தார்கள். இங்கு எல்லாமே புதிது. மக்கள், பேச்சு, வேலை, நடவடிக்கை, நட்பு, ட்ராஃபிக் எல்லாமே... அதிலும் சொந்த வீடு இல்லை என்றால், மாதமொருமுறை 'TOLET' போர்டைத் தேட வேண்டியதுதான்.



சிகரெட்டைப் பாதியோடு மிதித்து அணைத்துவிட்டு, ஹால்ஸ் போட்டுக் கொண்டு கீழே வந்தேன். திவ்யா காய்கறி கேரி பேகுடனும் அன்றைய தினசரியுடனும் வந்தாள். பேப்பரைக் கொடுத்தாள்.



இன்றைக்கு என்ன ஸ்பெஷல்?"



மீன்... சங்கரா மீனே... கிலோ இருநூறு சொல்றாங்க... அரைகிலோதான் வாங்கினேன்... போதுமில்ல?"



தாராளமா போதும். கீர்த்துக்குட்டி எழுந்துட்டாளா?"


இல்லை..." பேப்பரைப் பிரித்து தலைப்புகளை மேலோட்டம் பார்த்தேன்.


ஏம்மா... கீழே ஒரே சத்தமா இருக்குது... என்னாச்சு?"



வழக்கம் போலத்தாங்க... எதிர்வீட்டு பால்காரம் மாவுக்கும், அவங்க மருமகளுக்கும் சண்டை.

"

என்னதான் அவங்க பிரச்னை?"



மாமியார் வீட்டுல இருக்கிறது மருமகளுக்குப் பிடிக்கலை. என்ன காரணம் காட்டியாவது வீட்டை விட்டு விரட்டிடணும்னு முடிவு பண்ணிட்டா... அதுக்குத்தான் இந்த ஆர்ப்பாட்டம்."



வயசானவங்க எங்க போக முடியும். யோசிக்க வேணாம். அந்தம்மாவோட பையனும் கேட்டுக்கிறதில்லையா?"



என்னத்த கேட்க முடியும். நீங்களே பாத்திங்கில்ல ரோடுன்னு கூடப் பார்க்காம புருஷனை என்ன மாதிரி அசிங்கம் அசிங்கமா திட்டிச்சின்னு."



கூடப் பொறந்தவங்க யாரும்... கேட்க மாட்டாங்களா?"



அந்தம்மாவுக்கு அவர் ஒரே பையன் தான். தவமிருந்து பெத்திருப்பாங்க பாவம். வீடு வாசல்னு சேர்த்து வெச்சி என்ன பண்றது. கடைசி காலத்துல ஒரு வாய் சோறுக்கும் கட்ட துணிக்கும் கலங்குறாங்க."



மீன் கவரை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள் திவ்யா.



பால்காரம்மா பால் போடும் அம்மா வாகத்தான் எங்களுக்கு அறிமுகமானார். குடிவந்த இரண்டாம் நாள். அதிகாலை ஆறு மணிக்கு காலிங்பெல் ஒலிக்க, சின்னதும், பெரியதுமான பால்பாக்கெட்டுகளுடன் நின்றிருந்தார்.



தம்பி... இங்க நாலஞ்சு தெருவுக்கு நான்தான் பாக்கெட் போடுறேன். உங்களுக்கும் தேவைன்னா சொல்லுங்க. நாளையிலேர்ந்து கொண்டு வந்து போடுறேன். மாசம் ஐம்பது ரூபாய் சேர்த்துக் கொடுத்தா போதும்" என்றார்.



அதைச் சொல்வதற்குள் இரண்டு முறை வலது இடதுக்குமாக இடுப்புக்குப் பாத்திரத்தை மாற்றிக் கொண்டார். காலம் காலமாகப் பால் போடும் பெண்ணாகத் தெரியவில்லை. ஏதோ வறுமைக்குத் தள்ளப்பட்டு வாழ்ந்து கொண்ட குடும்பத்து முதியவள் போல இருந்தாள்.

கேட்ட பாவனையில் ஐம்பது ரூபாய் விட்டுப் போய்விடக் கூடாதே என்ற கவலை தெரிந்தது.

நான்கைந்து வீடுகள் தள்ளிப் போனால் மளிகைக் கடையிலேயே பால் கிடைக்கும் என்றாலும் அந்த அம்மாவுக்கு மாதம் கொடுக்கும் ஐம்பது ரூபாயில் ஒன்றும் குறையப் போவதில்லை.



சரிங்கம்மா நாளை லேர்ந்து போடுங்க. முன்னாடியே பணம் அட்வான்ஸ் கட்டணுமா?"



வேண்டாம்மா. எதிர்த்த மாதிரிதான் என் வீடு. இந்தக் கெழவிய ஏமாத்தி ஓடிப்போயி மாடியா கட்டப் போறீங்க. எத்தனை லிட்டர் தேவைப்படும் தம்பி?"




ஒரு லிட்டர் போதும்மா. ரெண்டு அரையா போட்டுடுங்க."



சரிப்பா. கேட்டுல ஒரு பை மட்டும் கட்டிவைங்க பால் போட்டதும் பெல் அடிக்கிறேன். எப்பவேணாலும் எடுத்துக்கங்க" என்று தொழில் விருத்தியான சந்தோஷத்தில் இறங்கிப் போனார்.



இன்று வரை அவர் பால் போடுவதோடு, மதிய நேரங்களில் திவ்யாவுடன் பேச்சுத்துணைக்கு இருப்பார். மகன், மருமகளைப் பற்றிய மனக்குறைகளைக் கொட்டுவார். அவர் கணவருடனான பிரியம், அவர் இருந்த வரைக்குமான கவனிப்பு எல்லாம் ஒன்று விடாமல் சொல்லுவார். கீர்த்தனாவும் பாட்டி பாட்டி என ஒட்டிக் கொண்டாள். நான் வெளியூர் செல்லும் நேரங்களில் வீட்டில் வந்து படுத்துக் கொள்வார். கீர்த்தனாவைப் பள்ளியிலிருந்தும் அழைத்துக் கொண்டும் வந்திருக்கிறார். வேண்டாம் வேண்டாமென மறுத்தும் கேட்காமல் காய்கறி நறுக்குவது, மீன் சுத்தப்படுத்துவது, கோதுமை அரைத்துக் கொடுப்பது என சின்னச் சின்ன உதவிகளைச் செய்வார்.



ஒருநாள் மகன் குடும்பத்துடன் திருப்பதி சென்றபோது வீட்டில் தனியாகக் குளிர் ஜுரத்தில் முனகிக் கொண்டிருந்த பால்காரம்மாவை திவ்யா தான் ஆஸ்பிடலுக்கு அழைத்துச் சென்று வைத்தியம் பார்த்தாள். திரும்பி வந்த மகன் விஷயத்தைக் கேள்விப்பட்டு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லவில்லை. காப்பாற்றிய கோபமோ என்னவோ.



ஒரு பண்டிகையின் போது அந்த அம்மாவுக்கும் ஒரு நூல் புடைவை எடுத்துக் கொடுத்தேன். கட்டிய அன்று பெரிய ரகளை. வீடுவீடா போய் துணி பிச்சை கேட்குறியா, கட்டிக்கத் துணி எடுத்துத் தரக்கூடவா வக்கத்துப் போயிட்டோம்," என்று ஒன்றுமில்லாத விஷயத்துக்கு பெரிதாகத் தெருவையே வேடிக்கை பார்க்க வைத்துவிட்டாள் மருமகக்காரி.





அந்த அம்மாளின் ஒவ்வொரு நாளும் நரகமாகத்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. என்னங்க" திவ்யா சமையல் அறையிலிருந்து குரல் கொடுத்தாள்.



சென்றேன்.



என்ன?"

எங்கப்பா நேத்து ஃபோன் பண்ணியிருந்தாரு. ஊர்ல இருந்த காட்டை வித்துட்டாங்களாம். அதைப் பங்கு பிரிச்சதுல எனக்கு இருபது ரூபாய் வருதாம். என்ன பண்ணலாம்?"



உனக்கு என்ன தோணுதோ செய்ம்மா."



எத்தனை காலத்துக்கு வாடகை வீட்டிலேயே காலம் தள்ளுறது. நமக்குன்னு சொந்த வீடு, வாசல்னு இருக்க வேணாமா?"



வேணும்தான். இருபது லட்சத்தை வெச்சிக்கிட்டு சென்னைல வீடு வாங்க முடியாது. வாசல் மட்டும்தான்..."



உங்க ஆஃபீஸ்ல லோன் போடுங்க. உங்கப்பாகிட்ட பணம் கேளுங்க. ஐம்பது அறுபதுல வாங்க முடியாதா..."



முடியும்மா... நல்ல ஐடியாதான். முயற்சி பண்றேன்."



அடுத்த மாதமே பால்காரம்மாவிடமிருந்து அந்தச் செய்தி வந்தது. அவரது மகன் வீட்டை விற்றுவிட்டு மனைவியின் சொந்த ஊரில் செட்டிலாகப் போவதாகக் கூறினார்.



பால்காரம்மாவின் வீடு இருபது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக இருந்தாலும், பார்க்க லட்சணமாகத்தான் இருந்தது. திவ்யாவுக்கும் வீடு பிடித்திருந்தது.



நேராக பால்காரம்மாவின் மகனைப் பார்த்துப் பேசினேன்.

இங்க பாருங்க சார். புரோக்கர்கிட்ட போனா கமிஷனுக்காக விலையை ஏத்தி விட்டு நீங்க விற்க முடியாத மாதிரியும், நான் வாங்க முடியாத மாதிரியும் பண்ணிடுவாங்க. அவங்களுக்குக் கொடுக்கறதை நாம பிரிச்சுக்குவோம். அதனால என்ன விலையோ சொல்லுங்க. கூடக் கொறைச்சி நாமளே பேசி முடிச்சுக்குவோம்."



பின்னால் நின்றிருந்த மனைவியை ஒருதரம் திரும்பிப் பார்த்துவிட்டுத் தலையாட்டினார்.



பல தொகைகள் பேசப்பட்டு பின் ஐம்பது லட்சம் என முடிவானது. ஒரு நல்ல நாளில் பத்திரப்பதிவும் பணம் செட்டில் செய்வதாகவும் முடிவாயிற்று.



அந்த நேரத்தில் அதைக் கேட்கக் கூடாதுதான் இருந்தாலும் மனம் தாங்காமல் கேட்டு விட்டேன்.



அம்மா உங்க கூடவே வர்றாங்களா...?"



இல்லைங்க சார். கிராமத்துல எதுக்கு? நாற்பது வருஷமாய் இங்க பழகிட்டு, திடுதிப்புன்னு புது இடத்துக்குக் கூட்டிட்டுப் போனா அந்தரத்துல விட்ட மாதிரி ஆயிடும். அதனால ஒரு நல்ல முதியோர் இல்லத்துல விட்டுட்டு மாதா மாதம் பணம் அனுப்பலாம்னு இருக்கோம். ஆறு மாதத்துக்கு ஒரு தடவை வந்து பார்த்துட்டும் போகலாம்" என்றார்.



சுவரின் மூலையில் ஒட்டி அமர்ந்திருந்த பால்கார அம்மா முந்தானையில் கண்களை ஒற்றியபடி பேச எதுவுமில்லை என்பது போல இருந்தார்

.

பேரம் திருப்தியாக அமைந்ததால், பால்காரம்மா மருமகள் கொண்டு வந்து கொடுத்த காஃபியைக் குடித்துவிட்டு வெளியே வந்தேன். தம்பி... தம்பி..." என்று அழைத்தபடி பின்னாலேயே வந்தார் பால்காரம்மா. நின்றேன்.



இந்த வீட்டைக் கட்ட கொஞ்சநஞ்ச மில்லப்பா. பார்த்துப் பார்த்து இழைச்சிக் கட்டினது. எம்புள்ள விக்கிறேன்னு சொன்னதும் எனக்கு உசுரே போயிடுச்சு. நீங்க வாங்குறீங்கனதும் மனசுக்கு ஆறுதலாய் இருக்கு" சற்று நேர அமைதிக்குப் பின் தம்பி எனக்காக ஒரு உதவி செய்வியா?"



என்னம்மா செய்யணும் சொல்லுங்க...?"





இந்த வீட்டுல எம்புருஷனோடு சேர்ந்து சாகத்தான் முடியலை. அவர் வாழ்ந்த இந்த வீட்டுலயாவது கொஞ்ச காலம் இருந்துட்டுக் கண்ணை மூடிடறேனே... எங்கயாச்சும் ஒரு மூலையில இருக்க எடம் கொடுப்பா."



கும்பிட்ட அவரின் கையைப் பிடித்துக் கொண்டேன். சரிங்கம்மா" என்று விடுவித்தேன்.



நடந்த அனைத்தும் திவ்யாவிடம் சொன்னேன். மறுப்பு ஏதும் காட்டவில்லை. அத்தோடு இன்னொரு யோசனையும் இருந்தது. செலவோடு செலவாக இரண்டு லட்ச ரூபாயை பால்காரம்மா பெயருக்கு ஃபிக்ஸட் டெபாஸிட் செய்து, அதில் வரும் வட்டித் தொகை, அவருக்கு உதவியாக இருக்கும்படி செய்ய வேண்டும்.




இன்னும் ஒரு வாரத்தில் வீட்டைக் காலி பண்ணிக் கொடுப்பதாக பால்காரம்மா மகன் கூறினார். நினைத்த படியே பால்காரம்மா பெயரில் இரண்டு லட்ச ரூபாயை டெபாஸிட் செய்தேன். பத்திரப்பதிவு, திவ்யா பெயரில் செய்யப்பட்டது. எல்லாம் முடிவடைந்த நிலையில், அன்று காலை பால்காரம்மாவையும் அவருக்கான உடைகளையும் விட்டுவிட்டு அவரின் மகன் குடும்பம் வீட்டுப் பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு கிளம்பிப் போனார்கள்.




அன்று மதியமே நாங்களும் பால் காய்ச்சிக் குடிவந்தோம். ஒவ்வொரு பொருட்களாக புது வீட்டில் கொண்டு வந்து சேர்த்தோம். கீர்த்துக்குட்டிக்கு சந்தோஷத்தில் துள்ளிக் கொண்டிருந்தாள்.



பால்காரம்மாவுக்கு மாடியென்றால் படியேறும் சிரமம் இருக்கும் என்பதால் ஏற்கெனவே அவர் இருந்த கிணற்றை ஒட்டிய அறையையே ஒதுக்கிக் கொடுத்தேன். தம்பி என் வயித்துல நீ புள்ளையா பொறந்திருக்கக் கூடாதா" என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். இரவு சப்பாத்தி சாப்பிட்டு விட்டு அந்த அறையில் போய்ப் படுத்தும் கொண்டார்.



மறுநாள் அதிகாலை கதவு தட்டும் ஓசை கேட்டு நெஞ்சின் மேலிருந்த கீர்த்திக் குட்டியின் கையை விலக்கிவிட்டு எழுந்து வந்து கதவைத் திறந்தேன்.



பால்காரம்மா துணிகள் திணிக்கப்பட்ட பையோடு நின்றிருந்தார்.



என்னம்மா... பையோடு எங்க கிளம்பிட்டீங்க?"


தலைகவிழ்ந்தபடி சொன்னார்.


எம் புள்ளைகிட்டேயே போறேம்பா."



அவருதான் உங்களை வேணாம்னு விட்டுட்டுப் போயிட்டாறேம்மா."



இப்போது என் முகம் பார்த்தே பேசினார். அம்மாவை வேணாம்னு வெறுத்து விட்டுட்டுப் போற பிள்ளைங்க இருக்கலாம்பா... பிள்ளை வேணாம்னு ஒதுக்குற அம்மா இருக்க முடியுமா...

"

சட்டையை மாட்டிக்கொண்டு பைக் சாவியுடன் வெளியே வந்தேன்.



கோயம்பேடு பஸ் நிலையத்தில் மருமகளின் ஊரைக் கேட்டு, சிதம்பரம் போகும் பஸ்ஸில் அமரவைத்து ஆயிரம் ரூபாயைக் கையில் கொடுத்தேன். கண்டக்டரிடம் இடம் பார்த்து இறக்கிவிடச் சொன்னேன்.



வீடு வந்தேன். வாயில் ஓரமாக பைக்கை நிறுத்திவிட்டு படியேறப் போனேன். தெருவில் ஐஸ் வண்டி போல் இருந்த மூன்று சக்கர பால்வண்டி கைப்பிடியைத் தள்ளிக் கொண்டு ஒரு வயதான பெண்மணி நின்றாள்.

தம்பி."

என்னம்மா?"

புதுசா குடிவந்திருக்கீங்க போல... உங்க வீட்டுக்கு நாளைலேர்ந்து பால் போடலாமாப்பா..." என்றார் புன்னகையுடன்.

உங்களுக்கு எத்தனை பிள்ளைங்கம்மா?" என்றேன்.



கேள்வி அவருக்கு ஆச்சர்யமாக இருந்திருக்கும். சற்று நேரம் உற்றுப் பார்த்தார்.



அந்தக் கொடுப்பினை எனக்குக் கிடைக்கலேப்பா" என்றார்.



நாளையிலேர்ந்து எங்க வீட்டுக்குப் பால் போடுங்கம்மா" என்று சொல்லி விட்டுப் படியேறினேன்.



நன்றி - கல்கி, புலவர் தருமி 

Sunday, August 12, 2012

இரண்டணா - சுஜாதா - சிறுகதை

இப்போதும் சிலர் இரண்டணா நாலணா என்ற சொற்களைப் பயன்படுத்தினால் சுதந்திரத்துககு முன் பிறந்தவர்கள் என்று நிச்சயமாக சொல்லலாம் இரண்டணா ஒரு தனி நாணயம். பித்தளை. சதுர வடிவில் இருக்கும். ஒரணா போல அசிங்கமான நௌ¤நௌ¤கள் இல்லாமல் கூர்மையான முனைகளை மழுப்பி ஒருபககததில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் தன் தலையில் கிரீடத்துடன் சைடுவாகாக பார்த்ததுக கொண்டிருப்பார். அவர் கிரீடத்தை துக்கிப் பார்ததால் அப்போது தான் கிராப்பு வெட்டிக் கொண்டிருக்கலாம் என்று தோன்றும்





இரண்டணா அந்த தினங்களின் பொருளாதாரத்தில் முக்கியமான நாணயம் இந்த நாட்களின் எட்டுபைசாவுக்கு சமம் என்று அதை அலட்சியம் பண்ணிவிடாதீர்கள் நான் சொல்லும் நாட்களில் சீரங்கம் திருச்சி பஸ் கட்டணம் இரண்டணா. பெனின்சுலர் கபேயில் தோசை இரண்டணா . கிருஷ்ணன் கோட்டை வாசலில் இலநதைப்பழம் லேக்கா உருணடை கொடுக்காப்புளி எல்லாமே காலணாதான் அதாவது இரண்டணாவில் எட்டில் ஒரு பங்கு. டிபிஜி கடையில் அழிக்கும் ரப்பர் கட்டைபேனா மசிக்கூடு ரூல்டு பேப்பர் ப்ளாட்டிங் பேப்பர் வாங்கியும் இரண்டணாவுக்கு சில்லரை தருவார் அல்லது ஒரு புளிப்பு மிட்டாய் தருவார் .



 வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது மார்கழி மாதத்தில் பகல் பத்தில் தேர்முட்டியருகில் தரையில் பள்ளம் தோண்டி துருத்தி வைத்து சாணி பூசி பெரிய வாணலி அமைத்து அதில் கொள்ளிடம் மணலைக் கொட்டி அதனுடன் வருக்கப்பட்டு உற்சாகமாக வெடிக்கும் பட்டாணி ஒரு பை நிறைய இரண்டணாவுக்கு கிடைக்கும், இரவு பெடரமாக்ஸ் வெளிச்சத்தில் பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதை கொக்கோகம் போன்ற புத்தகங்கள் எங்கேயோ பார்த்துக்கொண்டு வாங்கலாம். ரங்கராஜாவில் ‘காப்டன் மார்வல் ‘படம் தரைடிக்கெட் இரண்டணா. தங்கராசு மிதிவண்டி நிலையத்தில் அவர்சைக்கிள் இரண்டணாவுக்கு எடுக்கலாம் அதற்கு கீழே ஒரணா அரையணா காலணா தம்பிடி போன்ற பரிவார நாணயங்கள் இருந்ததால் இரண்டணா இருக்கிறவன் ஆகாகான் போல உணரலாம்



விகடன் பத்திரிகை நீல நிறத்தில் அச்சிட்ட சிறுவர் மலருடன் இரண்டணா .ஒரு பாக்கெட் கலர்கலராக இருக்கும் பலப்பம் இரண்டணா. லிப்ஸ்டிக் போல சிவப்படிக்கும் மிட்டாய் ஐஸ்கட்டியை சரக்சரக் கென்று தேய்த்து சர்பத் ஊற்றி உறிஞசுவதுடன் ஒரு காத்தாடி தலையாரி பம்பரம் எல்லாம் வாங்கலாம் என்ன என்ன வெல்லர்ம இரண்டணாவில் வாங்கலாம்!




அப்பேற்பட்ட இரண்டணா நாணயத்தை தொலைத்துவிட்டேன் சொல்கிறேன் பாட்டி என்னை ஒரு ஆழாக்கு எண்ணெய் வாங்கிக்கொண்டு வா என்று இரண்டணா கொடுத் அரையர் கடைக்கு அனுப்பினாள் கூடவே ஒரு கிண்ணியும் கொடுத்தாள். ஈயம் பூசினது வாயகன்றதுநான் அந்தவயசில் ஸ்தலத்திற்கு ஸ்தலம் ஓட்டம் தான் ஒரு நிமிஷத்துக்குள் அரையர் கடைக்கு வந்து “மாமா ஒரு ஆழாக்கு எண்ணெய்” என்றேன் அரையர் கடை என்று எப்படி பெயர் வந்தது தெரியாது கடை சொந்தக் காரர் அரையர் இல்லை அய்யங்கார்தான்.


ஆனால் கோவில் அரையர்கள் பரம்பரையெல்லாம் கீழ உத்திர வீதியில் இருந்தார்கள் இநத அரையர் எங்கள் வீட்டிற்கு எடடுவீடு தள்ளி இருந்தார் சாதி வழக்கத்துககு மாறாக பலசரக்கு கடைவைத்திருநத ஒரே அய்யங்கார் சன்னமான குரலில் வரவேற்பார் எப்போதும் பலகையில் உட்கார்ந்து கொண்டிருப்பார் நிலக்கடலையோ முந்திரிப்பருப்போ எதையும கண்ணெதிரே ,இருந்தாலும் வாயில் போட்டுக் கொள்ள மாட்டார். கையில் பனை விசிறிக்கொண்டு இருப்பார் அவர் கடையில் ஏலக்காய் கிராம்பு கோதுமை அரிசி லவங்கப்பட்டை சீமெண்ணை எல்லாம் கலந்து ஒரு சுகமான வாசனை வீசும்




“என்ன எண்ணைடா நல்லெண்ணையா தேங்கா எண்ணெயா ஆமணக்கு எண்ணெயா விளக்கெண்ணையா வேப்பெண்ணையா ” என்றார்



அப்போதுதான் இவ்வளவு எண்ணெய் இருப்பது தெரிந்து நான் மீண்டும் பாட்டியிடம் ஓடி வந்து “என்ன எண்ணை பாட்டி?”



“உன்னை கன்னம் கன்னமா இழைக்கணும் நம்மாத்தில எப்பவாவது நல்லெண்யைதவிர எதாவது பயன்படுத்துவமா நல்லெண்ணைதாண்டா”




மீண்டும் ஓடிப்போய் “ ஒரு ஆழாக்கு நல்லெண்ணை மாமா”



“நல்லெண்ணை ஆழாக்கு ரெண்டரை அணா ஆச்சேப்பா பாட்டி கிட்ட போய் இன்னும அரைணா வாங்கிண்டு வரயா” நான் மீண்டும் ஓடி வந்து சொல்ல“ ஏண்டா மடயா ஆழாக்கு ரெண்டரை அணான்னா ரெண்டணாவுக்கு உண்டானதை வாங்கிண்டு வரதுக்கென்ன புத்திகிடையாதா உனக்கு” இப்படி பரபக்கபரக்க ஓடிண்டேருப்பியா“




”நீ சொல்லவே இல்லையே பாட்டி“ என்றேன் நியாயம் தானே ”காதுல வாங்கிக்கோ அரையர் கிட்டபோயி போன வாரம்தான் ரெண்டணா ஆழாக்கு ஒரு முழு ஆழாக்கு கொடுத்தாரேன்னு கேளு இல்லைன்னா முக்காலே மூணுவீசம் ஆழாக்கு போடச் சொல்லு நன்னா பார்த்து எல்லா எண்ணெயும் பாத்திரத்தில விழுந்து கீழசொட்டாம வாங்கிண்டு வா வரப்ப ஓடி வராதே கொட்டிடப்போறே “ இந்த எச்சரிக்கைகளுக்கெல்லாம் தேவை இல்லாதபடி அடுத்த முறை அரையர் கடைக்கு போக விடாமல் வழியில் ஒரு சம்பவம் நிகழந்தது




ராஜன் கேர்ள்ஸ் ஸ்கூல் எதிரில் தெரு நடுவில் தேர்முடடியருகில் கொட்டு சப்தம் கேட்டது அதைக் கடந்துதான் அரையர் கடைக்கு போக முடியும் கூட்டம கூடிக்கொண்டிருந்தது நையாண்டி மேளம் கேட்டது . மத்தளம் அவ்வப்போது உருமியது பைஜாமா அணிந்த ஒரு சிறுமி அலட்சியமாக உள்ளங்கைகளை தரையில அழுத்தி பல்ட்டி அடித்து சுற்றி வந்தாள் அவளைவிட சற்றே பெரிய சிறுவன் ஒரு கழியை லாவகமாக துக்கி நிறுத்த மஸ்தான் தரையில் வட்டம வரைந்து அதில் பாம்புப் பெட்டிகள் ஒரு மகுடி வேறு என்னஎன்னவோ உபரகணங்கள் கோழிமூககு இறகு போர்த்திய போர்வை கருப்புத் துண்டு என்று பலவித உபகரணங்களை பரப்பிக் கொண்டிருக்க ”வாங்க வாங்க நாகூர் பாபா மோடி மஸ்தான் பரம்பரை , மனுசனை பாம்பாக்குவேன் பாம்மை மனசனாக்குவேன் “ ஒரு கீரி ஆணியில் தனிப்பட்டு சுற்றி வந்து கெர்ணடிருக்க மோடி மஸ்தான் என்னையே பார்த்து ”பயப்படாத பக்கத்ல வந்து குந்து“ என்று என்னை அழைத்தான் அந்த பரட்டைததலை சிறுமி சின்ன பல்வரிசையில் என்னைப் பார்த்து சிரித்தாள்




ஆழாக்கு எண்ணெயை மறந்தேன் முதல் வரிசையில்போய் உட்கார்ந்துகொண்டுவிடடேன் அவ்வப்போது மத்தளம் தட்டிக்கொண்டு அவன் இடைவிடாமல் பேசினான்




”கந்துமதக்கரியை வசமாக்கலாம் கரடிபுலி வாயைக் கட்டுவேன் சிங்கத்தை முதுகிலல போட்டுப் பேன் பாம்பை எடுத்து ஆட்டுவேன் … இது என்ன?“ என்ற சபையோரில் ஒருவரை கேட்டான்




”ஒரணா“ ”என்னது ஒக்காளியா“ என்று கேட்க சபையில் சிரிப்பு ”நெருப்பில அரதம்வச்சு வேதிச்சு வித்துருவேன் வேற யாருமபார்க்காம உலகத்தில உலாவுவேன் எப்பவும் இளமையா இருப்பேன் மத்தொருவன் சரீரத்தில பூந்துருவேன் தண்ணில நடப்பேன் நெருப்பில குந்துவேன் எல்லாம் எதுக்காக?“ என்று கேள்வி கேட்டு தயங்கி தன் சட்டையை நீக்கி பட்டென்று வயிற்றில் எதிரொலிகேட்கத் தட்டி ”பாழும் வவுத்துக்காக!“




”நீ காசு கொடுக்கவாணாம் உன் காசை உம் மடிலயே வெச்சுக்க வித்தை பாரு பாத்து மஸ்தான் குஷியாயிருச்சுன்னு ஒரணா ரெண்டணா கால் ரூபா அரை ரூபா ஒரு ரூபா தட்ல போடு பச்சைப்புள்ளையை பந்தாடப் போக்ஷற்ன்“ எல்லாரும் பலமா கைத்தட்டுங்க என்று சொல்லி நாங்கள் கைதட்ட காத்திராமல் உய் உய் என விசிலடித்தான்




நான் அவன் வித்தையில் பரிபூர்ணமாக ஐக்கியமானேன் ”தகிரியமுள்ளவங்க யாராச்சும் இருந்தா வாங்க“ என்று கேட்க ஒரு சிறுவன் முன்னால்வந்து நின்றான் அந்தப் பையனை கூப்பிட்டு அவன்முன் விரல்களை என்னவோ பண்ண அவன் சட்டென்று துங்கிப்போக அழுக்குத் துணடால் போர்த்திப் படுக்க வைத்தான் ”யார் வூட்டுப் புள்ளையோ இது“ என்றான் தரையில் ஒரு முகம் வரைந்தான் அந்த முகத்திற்கு ஒரு வாய் மட்டும் பெரிசாக வரைந்தான் பக்கத்தில் ஒரு பேனாக்கத்தியை வைத்தான் பாம்புப் பெட்டியைத திறந்து அதை உசுப்பிவிட ஒரு முறை அவன் மணிக்கட்டில் கொத்தியது த என்று அதை அதட்டினான்



உள்ளுணர்வில் அஙகிருந்து விலகவேண்டும என்றுதான் தோன்றியது ஆனால் கட்டிப்போட்டவன் போல ஆகிவிட்டேன சன்மத்துககு இந்த இடத்தைவிட்டு விலகப் போவதில்லை கீரிப்பிள்ளை ஒன்றுக்குப்போனது அந்த பைஜாமா சிறுமி பெரிய கொம்பை வைத்துக் கொண்டு அவன் தோளிலிருநது கயிற்றுக்கு எவ்வி அதன்மேல லாவகமாக நடந்தாள் அதன்பின் கழி முனையில் படுத்திருக்க இவன் கீழே இருந்து பாலன்ஸ பண்ணி அவளை சுற்றினான் இந்த நேரத்தில் எல்லாம் பையன் கண்மூடிப் படுத்திருந்தான் எனக்கு மிகவும் கவலையாக இருந்தது ”யார் பெத்தபுள்ளையோ இதை எழுப்பவாணாமா?“




”வித்தை பாத்திங்கோ இப்ப நம்ம ராணி தட்டு கொண்டாருவா ஒரணா ரெண்டணா“ என்று சொன்னபோது சபையோர் மெல்ல எழுநதிருக்க ”ஏய்!“ என்று குலை நடுங்குமாறு ஒரு அதட்டுப் போட்டான் ”பாப்பார தெருவில வித்தை காட்டிட்டு காசு வாங்காம போகமாட்ன் நீ மட்டும காசு தராம வூட்டுக்கு போனே என்ன ஆகும்பாரு“ என்று கையில் அந்த பேனைக்கத்தியை எடுத்து தரையில் வரைந்திருந்த வாயில் கீறினான் படுத்திருந்த பையன் வாயிலிருந்து ரத்தம் வடிந்தது ”இதான் உனக்காகும் ராத்தரி“ அப்டியே எல்லோரும் மூச்சடங்கி கதிகலங்கி ப்போய் நின்றோம் மௌமான சூழ்நிலையில் அவன் கத்தியைக் காட்டிக்கொண்டே மெல்ல எங்களிடம வந்தான் நான் எனனிடமிருந்த இரண்டணாவைப் போட்டதை அவன் பார்க்கக் கூட இல்லை உடுக்கை அடித்துக் கொண்டே சற்றி வந்தான் கீரி சுற்றிக் கொண்டு இருந்தது வித்தை எப்போது முடிந்தது ஞாபகமில்லை மெல்ல கனவிலிருந்து விடுபட்டவன்போல நடந்து வந்தேன்




வீட்டின் அருகில் வந்தபோதுதான் நிஜ உலகத்து நிதர்சனங்கள் எனக்கு உரைக்க ”எங்கே இரண்டணா“ என்பதுமட்டுமின்றி எங்கே கிண்ணி? கிண்ணியையும் வைத்துவிட்டு வந்துவிட்டேன பாட்டி சமயலறையிலிருநது குரல் கொடுத்தாள்” ஏண்டா இத்தனை நாழி எண்ணையை மோடைமேல வச்சுட்டு பாடம் படிக்கபோ“ என்றள் மீண்டும தெருக்கோடிக்கு ஓடினேன் அதற்குள் வித்தைக்காரன் சாமக்கிரியைகளை கவர்நதுகொண்டு சென்றிருக்க வேண்டும விறிச்சோடியருந்தது தெரு. போய்விட்டான்





நான் செய்வதியறியாது திகைத்து நிற்க தெற்கு சித்திரை வீதி மூலையில் மீண்டும் கொட்டு சப்தம்எதிரொலிததது சப்தம் வந்த திசையை நோக்கி ஓடினேன் தெற்குவாசல் அருகில் வாணி விலாஸ் பிரஸ் எதிரில் அவன் அடுத்த டேரா போடடிருக்க மெல்ல கூட்டம் கூடிக் கொண்டிருந்தது வித்தைககாரன் அருகில் சென்க்ஷற்ன அந்தப்பையன், வாயில் ரத்தம் வந்து கிடந்தவன் பைஜாமா பெண்ணுடன் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தான்




வித்தைக்காரன் எங்கள் விட்டுக் கிண்ணியை திருப்பித் திருப்பிப் பார்ததுக் கொண்டிருந்தான் இது எவ்வளவு பெறும் என்பதுபோல் ”வா தம்பி“ ”நான் வந்து கீழ சித்திரைவீதில விததை பார்க்க வந்தேங்க கிண்ணியை விட்டுட்டு போய்ட்டடங்க அந்த கிண்ணி என்னுது“ ”தம்பி வந்தியா கிண்ணி தரேன் ஆனா ஒருகண்டிசன் “என்ன ”எங்கூட வரியா வித்தைகாட்ட லர்ல்குடி பிச்சாண்டாரகோவில் இந்தபக்கம் குளித்தலை அந்தப்பக்கம் புதுக்கோட்டை வரைக்கும போகலாம்“ என்றாள். பைஜமா சிறுமி என்னைப் பார்த்து மோகனமாக சிரித்தாள்




”ஏபிசி புஸ்தவம் வெச்சிருக்கியா“ என்று கேட்டாள் நான் அங்கேயே உட்கார்ந்து கொண்டு விசும்ப ஆரம்பித்தேன் ”என் கிண்ணியை கொடு“ ” கொடுக்கறேன் கொடுக்கறேன் “ அவன் என்னிடம அந்த கிண்ணியை கொடுக்காமல் அவவப்போது நீட்டி நீட்டி கொடுப்பதுபோல் கொடுதது கையை இழுத்துக கொண்டான் நான் பெரிசாக அழ ஆரமபித்ததும் கொடுத்தான் ”கிண்ணியை கொடுத்துடடு வந்துரு நல்ல ஐயர் வூட்டு சாப்பாடு போடடறேன் ஊர் உலகமெல்லாம் சுத்தலாம் பனாரஸ் அலகாபாத் கல்கத்தா “ நான் வீட்டுக்கு திரும்பும்போது அந்தப் பெண் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள் ”வரல்ல? வரப்ப ஏபிசி பொஸ்தவம் கொண்டுட்டுவா” என்றாள் நான் ஓடிவந்து அவசரமாக என் உண்டியலை உடைதது எட்டு காலணா சேர்த்து அரையர் கடைக்கு போய் எண்ணை வாங்கிக்கொண்டு வந்து விட்டேன், *





பாட்டி திட்டுவாளோ என்று நான் வித்தைக்காரருடன் போயிருந்தால் என்ன ஆகியிருப்பேன் என்று இந்த வயசில் எப்போதாவது எண்ணிப் பார்ப்பேன் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு ஒருகையால் மத்தளம் தட்டிக்கொண்டு மற்றொரு கையால்புல்லாங்குழல் வாசிக்க அந்தப் பெண் சுழனறு சுழன்று ஆட…. எது எப்படியோ இந்தக் கதையை எழுதியிருக்க மாட்டேன்.



நன்றி - சுஜாதா , உயிர் மெய், சிறுகதைகள்

Saturday, August 11, 2012

அப்பா அன்புள்ள அப்பா - சுஜாதா - சிறுகதை

செய்தி வந்த உடனே பஸ் பிடித்து சேலம் போய்ப் பார்ததால் அப்பா படுக்கையில் உட்கார்ந்திருந்தார்.




“எங்கே வந்தே” என்றார்.



“உனக்கு உடம்பு சரியில்லைன்னு” என்று மழுப்பினேன்.



“நேற்று வரை சரியில்லாமல்தான் இருந்தது. டாக்டர்கள் என்னமோ பண்ணி உட்கார வைத்து விட்டார்கள்.சாப்ட்டியா?”என்றார்” எனக்கு என்ன வாங்கிண்டு வந்தே?”



“என்னப்பா வேணும் உனக்கு”



“உப்பு பிஸ்கட். கொஞ்சம் பாதாம் அல்வா. அப்பறம் ஒரு சட்டை வாங்கிக் கொடுத்து விட்டுப் போ-”



சட்டையைப் போட்டு விட்டதும் “எப்படி இருக்கேன்” என்றார்.



பல்லில்லாத சிரிப்பில் சின்னக் குழந்தை போலத்தான் இருந்தார்.



நர்ஸ் வந்து “தாத்தா உங்க மகன் கதைகள் எல்லாம் படிச்சேன். ரொம்பஇன்டெலிஜெண்ட்” என்றதற்கு “நான் அவனை விட இன்டெலிஜெண்ட்” என்றார்.




பேப்பர் பேனா எடுத்து வரச்சொல்லி “உன் முன்னோர் யார் என்று அபபுறம் தெரியாமல் போய் விடும்” என்று வம்சாவழியைச் சொல்லி எழுதிக் கொள்ளச் செய்தார். ஞாபகம் தௌவாக இருந்தது. முதன் முதன் முதல் திருவாரூரில் நுறு ரூபாய் சம்பளத்தில் பதவியேற்ற தேதி சொன்னார். கணக்கம் பாளையம் பின்கோடு நம்பர் சொன்னார். “பழைய விஷயங்கள் எல்லாம் ஞாபகம் இருக்கிறது. சமீப ஞாபகம்தான் தவறிப்போகிறது. நீ வந்தால்கேட்கவேண்டும் என்று ஏதோ ஒன்று. என்ன என்று ஞாபகம் இல்லை. ஞாபகம் வந்ததும் ஒரு காகிதத்தில் குறித்து வைக்கிறேன்”




“அப்பா உனக்கு எத்தனை பென்ஷன் வருகிறது தெரியுமோ?”




“தெரியும் .ஆனால் பணத்தில் சுவாரஸ்யம் போயவிட்டது. எத்தனை இருந்தால் என்ன? நீங்கள் எல்லாம் என்னைக் காப்பாற்றாமலா போவீர்கள்?”




“ஏதாவது படித்துக்க காட்டட்டுமா அப்பா?”




“வேணட்ம். நிறையப் படித்தாயிற்று. இப்போது அதெல்லாம் எதற்கு என்று ஒரு அலுப்பு வந்து விட்டது. நீ போ உனக்கு எத்தனையோ சோலி இருக்கும். அமமாவின் வருஷாப்திகம் ஏப்ரல் ஒண்ணாம் தேதி வருகிறது. அப்போது வநதால் போதும். நான் படுத்துக் கொள்ளட்டுமா? களைப்பாக இருக்கிறது. காலையில் போவதற்குள் ஒரு முறை சொல்லிவிட்டுப் போ” என்றார்.




பெங்களூர் திரும்பிவந்து ஒரு வாரத்துககுள் மறுபடி சீரியஸ் என்னனனனறு தந்தி வந்தது.




என்.எஸ் பஸ்ஸில்” என்ன ஸார் அடிக்கடி சேலம் வர்றிங்க?”




“எங்கப்பா சீரியஸா இருக்கார்ப்பா”




“ஓ அப்டிங்களா? டேய் அந்த மல்லி மூட்டையை பாத்து இறக்குங்கடா”



ஸ்பெஷல் வார்டில் அவரைப் பார்த்து திடுக்கிட்டேன். படுக்கையில் கண்மூடிப் படுத்திருந்த முகத்தில் தாடி. காலில் பட்டர்ஃப்ளை ஊசி போட்டு சொட் சொட்டெனறு ஐவி க்ளுக்கோஸ் உள்ளே போய்க்கொண்டிருந்தது. சுவாச மூக்கில் ஆக்ஸிஜனும் ஆஸ்பத்திரி வாசைனயும் வயிற்றைக் கவ்வியது.




கண்ணைக் கொட்டிக்கொட்டிக் கண்ணீரை அடக்கிக்கொண்டு “அப்பா அப்பா” என்கிறேன்.

கண்ணைத் திறக்கிறார் பேசவில்லை. “நான்தான் வந்திருக்கிறேன்” என்று கையைப் பற்றுகிறேன்.




பேசும் விருப்பம் உதடுகளில் தவிக்கிறது.கையை மெல்லத் துக்கி முக்கில் இருக்கும் குழாய்களை அகற்றப் பார்க்கிறார். தோற்கிறார்.




“நீ போனப்புறம் ஒரு நாளைக்கு சரியா இருந்தார் அதுக்கப்புறம் இப்படி”



படுக்கையில் பூஞ்சையாக நெற்றியைச் சுருக்கிகொண்டிருக்கும் அபபாவைப் பார்க்கிறேன். இவரா ஆயிரம் மைல் தனியாகக் கார் ஓட்டிக்கெண்டு சென்றவர்? இவரா மின் வாரியத்தை தன் டிஸிப்ளினால் கலக்கியவர் “நல்ல ஆபிஸர்தான் ஆனா கொஞ்சம் முன் கோபிங்க”




இவரா அணைக் கட்டின் பாரப்பெட் சுவரின் மேல் ஏறிக்கொண்டு விளிம்பில் ஒரு ஃபர்லாங் நடந்தவர்?”என் வில் பவரை டெஸ்ட் பண்ணிப் பார்ககணும் போலிருந்தது” இன்ஜினியரிங் படிப்பையும் இளம் மனைவியையும் விட்டு விட்டு காஙகிரசில் சேருகிறேன் என்று காணமால் போனவர் இவரா?”ஐ வாஸ் கிரேஸி தட் டைம்”.




மேல் நர்ஸ் வந்து அவரை உருட்டி முதுகெல்லாம் யுடிகொலோனும் பேபி பவுடரும் போடுகிறார். “பெட்ஸோர் வந்துரும் பாருங்க”




ஸ்டாஃப் வந்து பக்கத்துககு ஒரு ஊசி கொடுத்து “நீங்கதான் ரைட்டர்ங்களா?” என்கிறார். நான் ஆஸபத்திரியைத் திகைத்துப் போய்ப் பார்க்கிறேன்.




ஆஸபத்திரியிலிருந்து தப்பிப்பதைப் பற்றி ஸர்வைவல் புத்தகங்கள் ஆங்கிலத்தில் எழுதீயிருக் கிறார்கள். டாக்டர்கள் எல்லோரும் நல்லவர்கள். ஆனால் ஸ்பெஷலிஸ்டுகள்.



“ஒரு ஸிடி ஸ்கான் எடுத்துரலாமே டாக்?”




“முழுங்கறதுக்கு ரொம்ப கஷ்டப்படறார், ஒரு பேரியம் மீல் கொடுத்துப் பார்த்துரலாம். அப்றம் ஒரு ஆன்ஜியோ”



“ஃப்ளுயிட் ரொம்ப கலெகட் ஆயிருச்சு. புட் ஹிம் ஆன் எ ஹெவி டோஸ் ஆஃப் லாஸிக்ஸ்” எல்லா டாக்டர்களுமே திறமைசாலிகள்தான், நல்ல நோக்கமுள்ளவர்கள் தான், ஆனால் ராத்திரி முழுக்க அவர் அருகில் கீழே படுத்திருக்கிறேன். துக்கமில்லை. கொஞ்ச நேரம் வராந்தாவில் உட்கார்ந்து காற்று வாங்குகிறேன். கான்க்ரீட் மேடையில் வேப்ப மரம் முளைத்திருக்கிறது. காகங்கள் ஸோடியம் விளக்குகளைச் சூரியன் என்று குழம்பிப்போய் இரை தேடச் செல்கின்றன. இங்கிருந்து அப்பா தெரிகிறார். அசையாமல் படுத்திருக்கிறார். முகத்தில் வேதனை எழுதியிருக்கிறது. கூப்பிடுகிறாரா? கிட்டப்போய்க் கேட்கிறேன்.




“என்னப்பா?”



“போதும்ப்பா என்னை விட்டுருப்பா” என்று மெல்லச் சொல்கிறார்.வில்லியம் ஹண்ட்டரின் கட்டுரை ஞாபகம் வருகிறது. If I had strength enough to hold a pen. I would write how easy and pleasant it is to die.




பொய்!




ஆனால் இவர் அவஸ்தைப் பட்டால் எனக்கு அபத்தமாகத்தான் படுகிறது. இவர் செய்த பாவம் என்ன? ப்ராவிடணட் பண்டில் கடன் வாங்கி பையன்களைப் படிக்கவைத்ததா? அவர்களுக்கு வரதட்சணை வாங்காமல் கல்யாணம் செய்துவைத்ததா? ஏழை உறவினர்களுக்கும் ஆசிரியருக்கும் மாசாமாசம் பென்ஷனிலிருந்து பணம் அனுப்பியதா? குடும்ப ஒற்றுமைக்காகப் பாடுபட்டதா? பிரபநதத்தில் ஒரு வரி விடாமல் மனப்பாடமாக அறிந்ததா?




காலை ஐந்து மணிக்கும்பிக்கத்தில் இருக்கும் சர்ச் எழுந்து ஒலி பெருக்கி மூலம் ஏசுநாதரைப் பேசுகிறது. அப்பாவுக்கு இது கேட்குமா? ரேடியோ சிலோனில் சுவிசேஷத்தை தவறாத ஆர்வததுடன் கேட்கும் தீவிர வைஷ்ணவர் “பைபிளில் பல இடஙகளில் நம்ம சரணாகதி தத்துவம் சொல்லியிருக்கு தெரியுமோ? சில இடஙகளில் ஆழ்வார் பாடல்க ளுக்கும் அதற்கும் வித்தியாசமே தெரிவதில்லை” பங்களூரில் குரான் முழுவதையும் படிக்கச் சொல்லிக் கேட்டது நினைவுக்கு வருகிறது.




ஆஸபத்திரி புது தினத்துக்குத் தயாராகிறது.மணி அடித்துவிட்டு சில்லரை கொடுக்காதவர்களை யெல்லாம் விரட்டுகிறார்கள். டாக்டர் ரவுண்ட்ஸ் வருகிறார். “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருப்பார்னு சொல்லமுடியாது.இன்னிக்கு கொஞ்சம் இம்ப்ருவ்மெண்ட் தெரிகிறது. கன்னத்ததைத் தட்டி “நாக்கை நீட்டுங்கோ” மெல்ல நாக்கை நீட்டுகிறார்.




“பேர் சொல்லுங்கோ”



“சீனிவாசரா..”



“அஃபேஸியா அத்தரோ சிலிரோஸிஸ் .ஹி இஸ் மச் பெட்டர நௌ. டோண்ட் ஒர்ரி”



புதுசாக பல்மனரி இடீமா உன்று சேர்ந்து கொண்டு அவரை வீழ்த்தியது.



சென்ற மாதம் இருபத்திரண்டாம் தேதி பிற்பகல் மூன்று மணிக்கு இறந்து போனார் உடன் அப்போது இருந்த சித்தி “கண் வழியா உசிர் போச்சு “என்றாள். பம்பாயிலிருந்து தம்பி வரக் காத்திருந்து மூன்று பிள்ளைகளும் அவரைச் சுற்றி நின்று கொண்டு அவர் மார்பைக் கண்ணீரால் நனைத்தோம்..வீட்டுக்குக் கொண்டு வந்ததும் வாசலில் நெருப்புக் கொண்டுவைத்தார்கள்.

நண்பர்கள் வந்தார்கள். ஆஸபத்திரி வண்டியில் எடுத்துக் கொண்டு போய் “வீட்டில் ஒருவரில்லை வெட்டவெளியாச்சுதடி காட்டில் எரித்த நிலா கனவாச்சே கண்டதெல்லாம்” என்று முழுமையாக எரித்தோம்.



காலை எலும்புகளைப் பொறுக்கிச் சென்று பவானி போய்க் கரைத்தோம்.இந்து பேப்பரில் இன்ஸர்ஷன் கொடுத்தோம். “மாலை மலர்ல செய்தி வந்திருந்ததே பார்த்திங்களோ?”



உறவுக் காரர்கள் வந்தார்கள். சினிமாவுக்குப் போனார்கள். வாத்தியார் கருட புராணத்தின் பிரதியை என்னிடம் கொடுத்தார். பிராமண போஜனம் செய்விக்காதவர்களை யெல்லாம் சிரித்துக்கொணடே கொடுமைப் படுத்திக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு நதியைக் கடப்பதற்கு கோதானம் இல்லையென்றால் ஒரு தேங்காய் கிஞசித்து ஹிரண்யம்! அப்பா மரணத்தைப் பற்றி ஒரு முறை சொன்னது ஞாபகம் வருகிறது “அது ஒரு முற்றுப் பள்ளி.வி ஸீஸ் டு எக்ஸிஸ்ட்.எபிக்யுரஸ் சொன்னதை மறுபடி படி”




“Death is nothing to us since so long as we exist death is not with us but when death comes. we do not exist”.




ஒன்பதாம் நாள் பத்தாம் நாள் பதினோராம் நாள்.. பிரேதத்தின் தாகமும் தாபமும் திருவதற்காக அதன் ரெப்ரசெண்டேடிவ்வாக வந்த “ஒத்தன்” என்னைப்பார்த்து சிரித்து “நீங்க எழுதின ரத்தத்தின் நிறம் சிவப்பு குங்குமத்தில நன்னா இருக்கு ஸார் அடுத்ததடவை ஒரு ஸோஷல் தீமா எடுததுண்டு எழுதுங்களேன்”

சேலம் கடைத் தெருவில் பத்தாறு வேஷ்டிகளுக்கும சொம்புகளுக்கும் அலைந்தோம். ங்கத்திலிருந்து ப்ரபந்த கோஷ்டி வந்து எங்கள் தலையில் பரிவட்டம் கட்டி நாலாயிரமும் ராமானுச நுத்தந்தாதியும சரம ஸ்லோகமும் சொல்லிவிட்டு”எனக்கினி வருத்தமில்லை” இரண்டு மணி பஸ் பிடித்துப் போனார்கள்.



“அவ்வளவு தாம்பா பிள்ளைகள்ளாம் சேர்ந்துண்டு அவரை பரமபதத்தில ஆசார்யன் திருவடி சேர்த்துட்டேள். இனி அந்த ஆத்மாவுக்கு ஒரு குறையும் இல்லை! மாசிய சோதம்பத்தை மட்டும் ஒழுங்கா பண்ணிடுஙகோ”.




சுபஸ்வீகாரம். எல்லோரும் பந்தி பந்தியாக சாப்பிடுகிறோம். எட்டணா தட்சணைக்காக வாசல் திண்ணையில் ஒன்பதுபேர் காலையிலிருந்து காத்திருக்கிறார்கள். காஷவுல்ட்டியில் எனக்கு ட்ரங்க் டெலிபோன் வருகிறது.தொடர் கதைக்கு டைட்டில் கேட்டு. பங்களுர் திரும்பி வருவதற்கு முன் அப்பாவின் அந்த கடைசிக் குறிப்பைப் பார்க்கிறேன். Ask Rangarajan about Bionics ஓவர்சீஸ் பாங்கில் மிசையில்லாத என்னைப் பார்தது சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்கிறார்கள். அப்பாவின் ‘எய்தர் ஆர் சர்வைவர்’ அக்கவுண்டில் அவர் தகனத்துககு ஆன செலவு முழுவதும் இருக்கிறது.

நன்றி - சுஜாதா , உயிர் மெய், சிறுகதைகள்

Thursday, August 09, 2012

உயிர்வதை! - வில்லவன் கோதை -சிறுகதை

சிறுகதை

உயிர்வதை!

வில்லவன் கோதை

ஜோதி, இன்னிக்கு நைட்டே நாகப்பட்டினம் கிளம்பறோம். பத்து மணிக்கு கம்பன் எக்ஸ்பிரஸ். நாளைக்கு நாகப்பட்டினத்துல ஹால்ட். மறுநாள் ஞாயிறு மார்னிங் திருக்கண்ணபுரம். வேண்டுதல முடிச்சிட்டு அன்னிக்கு நைட்டே சென்னை ரிட்டர்ன். தேவையானதை எடுத்து வெச்சுக்க. ஒங்க அம்மாகிட்டயும் பேசிடு. வாசுவுக்கு சொல்லிட்டேன்" அலுவலகத்திலிருந்து படபடவென்று பேசினான் சுரேஷ்.
வர்றப்ப சாமி பாவாடையை மறக்காம வாங்கிட்டு வந்துடுங்க..."
இடுக்கோடு இடுக்காக சுரேஷுக்கு நினைவூட்டினாள் ஜோதி.
சரி... அனுவுக்கு..."
பட்டுப் பாவாடைச் சட்டை... அம்மா எடுத்துட்டு வந்துடுவாங்க."
ம்...சரி!"
- துண்டித்தான் சுரேஷ். இரண்டு வருடம் நின்றிருந்தது குலதெய்வ வழிபாடு. நெடு நாளாக நெஞ்சை அழுத்திக்கொண்டிருந்த ஒரு சுமை இப்போது மெல்ல தளர்வதை உணர்ந்தாள் ஜோதி.
சுரேஷைக் கைப்பிடித்து, சென்னைக்கு வந்து பத்து வருடங்கள் ஓடிவிட்டன. சமீப காலங்களில் எத்தனையெத்தனை கஷ்டங்கள். அத்தனைக்கும் இதுவேகூட ஒரு காரணமென்று உறுதியாக நம்பினாள் ஜோதி.
இந்த வருடம் கூடுதலாக தங்கள் குழந்தை அனுவுக்கு மொட்டை போட்டு, காது குத்தவும் போகிறார்கள். இரண்டு வருடத்துக்கு முன்பே செய்யவேண்டியது. அனுஷா இப்போது ஆறு வயது முடிந்து யூகேஜி வந்துவிட்டாள்.
இந்த சந்தோஷ சமாச்சாரத்தை அம்மாவோட பகிர்ந்துகொள்ள தொலைபேசி எண்களை அழுத்தினாள் ஜோதி.
அடுத்தகணம் தொலைபேசி மணி நன்னிலத்தில் ஒலித்தது.
அம்மாதான் எடுத்தாள்.
அம்மா... அவருக்கு லீவு கெடச்சிட்டாம். வர்ற ஞாயித்துக்கிழமை அனுவுக்கு காது குத்தல். நீங்கெல்லாம் அண்ணாவோட நேரா கோயிலுக்கே வந்துடுங்க. தோடும் ஜிமிக்கியும் துக்னோண்டு எடுத்துக்கிட்டு வந்து நிக்காதே! செத்த பெரிசாவே எடுக்க வாசுகிட்டே சொல்லு. அனுவுக்கு பட்டுப் பாவாடைச் சட்டை அரக்கு கலர்தான் நல்லா இருக்கும். திருபுவனம் சொஸைட்டியிலேயே எடுத்துடு. ஜிமிக்கி மாயவரம் ஏஆர்சிலேயே வாங்கச்சொல்லு" - தகவலைப் பகிர்ந்த திருப்தியில் தொலைபேசியை வைத்தாள் ஜோதி.
மூவருக்கும் இரண்டுநாள் பயணத்துக்குத் தேவையான துணிகளைத் தேடித்தேடி சேகரித்தாள்.
மூலைக்கு மூலை இறைந்து கிடந்த அனுவின் விளையாட்டுச் சாமான்களைப் பொறுக்கி எடுக்கும்போதுதான், சின்னஞ்சிறு குட்டி நாய் ஜானி ஞாபகம் வந்தது.
அது இந்த நடுத்தரக் குடும்பத்தோடு கலந்து ஏறத்தாழ ஆறுமாதமிருக்கலாம். அனு இப்போதெல்லாம் பள்ளியில் கழிக்கும் நேரத்தைத் தவிர பெரும்பாலும் ஜானியோடுதான்.
இந்த இரண்டு நாள் பயணத்துக்கு ஜானிக்கு ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும்.
வீட்டின் சுற்றுச்சுவரின் கதவுகளுக்கிடையே இரண்டு கால்களை உயர்த்தி, கம்பிகளுக்கிடையே தலையை நுழைத்து வாலை விசிறியவாறே அனுவின் வருகையைப் பார்த்திருந்தது ஜானி.
சுரேஷ், அனுவோடு பைக்கிலிருந்து இறங்கினான்.
ஒன்னவர் பிஃபோராவே கௌம்பிட்டேன். சாமி பாவாடை வாங்கிக்கிட்டு அப்படியே இவளையும் பிக்கப் பண்ணிட்டு வந்துட்டேன்."- உள்ளே நுழைந்தான் சுரேஷ்.
முதுகை இறுக்கிய புத்தகச் சுமையைத் தளர்த்தி வராண்டாவில் வீசிவிட்டு ஜானியை அள்ளிக் கொண்டாள் அனு.
நாமெல்லாம் ஊருக்குப் போறோம்.. செல்லம்!"
ஜானியின் முகத்தோடு முகம் வைத்தாள் அனு.
ஜானி இல்லை.. நாம மட்டுந்தான்டா தங்கம்."
ஏம்மா..." குழந்தையின் முகம் மாற்றம் பெற்றது.
அனு ! ஊர்ல ஒன்னோட விளையாட புதுசா ஒரு ஃப்ரெண்ட் வெயிட் பண்றான்." அனுவை சமாதானப்படுத்திக்கொண்டே வியர்வை வாசம் நிறைந்த ஆடைகளைக் களைந்தான் சுரேஷ்.
ஜோதி! கிருஷ்ணா ஒரு குட்டி ஆட்ட வாங்கிட்டானாம். கிடா வெட்டித்தான் காது குத்தணுமாம். அவன் ஃப்ரெண்ட்ஸெல்லாம் வர்றாங்களாம்."
இது என்ன புதுப்பழக்கம்..." -முகம் சுளித்தாள் ஜோதி.

மனுஷா ரசனைக்குத் தகுந்தாற்போல பழக்கங்களும் மாறிக்கிட்டுத்தான் வருது..." -நிகழப்போகும் ஓர் உயிர் வதையை அங்கீகரித்தான் சுரேஷ்.
கடாவெட்டா ... என்னப்பா அது..."- அனு, அப்பாவை வியப்போடு பார்த்தாள்.
ஆட்டுக்குட்டியை சாமிக்கே குடுத்துடுறது..."
சுருக்கமாகப் பதிலளித்த சுரேஷ் குளியலறைக்குள் நுழைந்தான்.
காப்பிக்குப் பாலைக் காய்ச்சி வைத்து விட்டு அனுவைக் குளிப்பாட்ட ஜோதி தேடியபோது, அனு சோபாவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். ஜானியும் அவள் பிஞ்சு கைகளில் சுகமாகச் சிறைப்பட்டுக் கிடந்தது.
விர்ரென்று ஆட்டோ வட்டமடித்து கிருஷ்ணா வீட்டு வாசலில் நின்றது. முன்னால் பைக்கில் வந்த கிருஷ்ணாதான் குழந்தை அனுவை வாங்கிக்கொண்டான்.
சுரேஷும் ஜோதியும் உடைமைகளை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தனர்.அடுத்த அரைமணியில் கிருஷ்ணாவின் மனைவி கங்கா ஃபில்டர் காபியுடன் உபசரித்தாள். அனு வீட்டின் பின்புறம் தனக்காக காத்திருக்கும் புதிய நண்பனைக் காண ஆவலோடு ஓடினாள்.
வாயிலின் ஓரத்தில் வளர்ந்திருந்த கிளுவ மரத்தின் அடியில் அந்த வெள்ளாட்டுக்குட்டி கயிற்றால் கட்டப்பட்டு கொஞ்சம் கிளுவ இலைகள் உணவுக்காக போடப்பட்டிருந்தது. தன் நுனிப்பற்களால் இலைகளைக் கடிப்பதை நிறுத்தி, தலையைத் தூக்கி தன்னைக் கூர்ந்து நோக்கும் சிறுமியை நோட்டமிட்டது அந்தக் குட்டி ஆடு. அனுவுக்கு அந்தப் புதிய நண்பனை மிகவும் பிடித்து விட்டது. அனுவும் நட்பாகப் பேசி அந்தக் குட்டி ஆட்டின் நெஞ்சுக்குள் நுழைந்துவிட்டாள்.
தமிழகத்தின் பிற மாவட்டங்களைப் போல ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் குலதெய்வ வழிபாட்டு இடங்கள் ஊருக்கு வெளியே எல்லையோரங்களில் அமைந்திருக்கவில்லை. பிரமிப்பூட்டும் உயரங்களில் வண்ணம் பூசப்பட்ட சுடுமண் சிற்பங்கள் கொடூரமான ஆயுதங்களுடன் நின்றதில்லை.
அந்நாட்களில் மூதாதையர்களின் நினைவாக நடப்படும் நினைவுக் கற்களை பெரும்பாலும் தங்கள் தங்கள் வீடுகளுக்குப் பின்புறமே நடப்பட்டு, காலம் காலமாக குல தெய்வங்களாக வழிபட்டு வந்திருக்கின்றனர். அவர்களுக்கு மிகவும் பிரியமான மீனையும் மாமிசத்தையும் படைத்துக் கொண்டாடினர். மதுவையும் சுருட்டையும் கூட வழிபாட்டின் போது படையலிட்டு மகிழ்ந்தனர். அதன் வளர்ச்சிதான் இந்த உயிர்வதை.
சரியாக காலை பதினொரு மணியளவில் பத்து, பதினைந்து பேரை சுமந்து கொண்டு அந்த மகேந்திரா வேன் திருக்கண்ணபுரத்தை அடைந்தது.
சிறப்புமிக்க வைணவ தலங்களில் ஒன்றான சௌரிராஜ பெருமாள் திருக்கோயிலும் எதிரே விரிந்து கிடந்த திருக்குளமும் ரம்மியம். கோயிலைச் சுற்றிப் படர்ந்து கிடந்த வீடுகளைக் கடந்து கிழக்கு மூலையில் ஒதுங்கிக் காணப்பட்ட அங்காள பரமேஸ்வரி ஆலயத்தை அடைந்தபோது முன்னதாகவே மேலும் ஒரு மகேந்திரா வேன் இளைப்பாறுவதை சுரேஷ் பார்த்தான். அந்த வேனில் சம்பந்திக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான் நன்னிலத்திலிருந்து வந்திருந்தார்கள். மாமியும் மைத்துனனும் வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்றார்கள். ஜோதியும் வாசுவும் நெகிழ்வோடு பார்க்க அனு ஓடிப்போய் பாட்டியோடு ஒட்டிக்கொண்டாள்.
இரண்டு வேன்களிலிருந்தும் வந்தவர்கள் ஏறத்தாழ முப்பது பேர்களுக்குள் இருக்கக்கூடும். வேன்களிலிருந்த வேண்டுதலுக்குத் தேவையான அத்தனை பொருள்களும் இறக்கப்பட்டன. அனுவுக்கு பிரியமான குட்டி ஆடும் இறக்கப்பட்டது.
திருப்புகலூரிலிருக்கும் சுரேஷின் சித்தப்பா செல்வம் வழிபாட்டுக்குத் தேவையான ஏற்பாடுகளை முன்னதாகவே செய்திருந்தார். பத்தாண்டுகளுக்கு முன்னால் குறுகிய கொட்டகையில் வாசம் செய்த அங்காளம்மை இப்போது சற்று விரிவான வளாகத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தாள். அவளைக் கடந்து சுற்றுச்சுவரையொட்டி வீரன் பெரியாச்சி முனி என்ற காவல் தெய்வங்களும் தனித்தனியே நின்றிருந்தன. கருவறைக் கோபுரம் வண்ணப்பூச்சு செய்து புதுப்பிக்கப்பட்டிருந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே சுரேஷின் சித்தப்பா செல்வம் பூசாரியைத் தேடி வழிபாட்டுக்குச் சொல்லியிருந்தார். கிடா வெட்டுவதற்கும் தனியாக ஒரு ஆளை பேசியிருந்தார்.
கோயில் பூசாரி பாலகுரு குடம்குடமாக தண்ணீர் விட்டு தெய்வங்களை நீராட்ட தொடங்கியிருந்தான். வாசம் மிக்க சாம்பிராணி புகை சூழ தீபாராதனையை அத்தனை பேரும் பரவசத்துடன் கண்டுகளித்தனர்.
மொட்டையடிக்க பேசப்பட்ட முருகேசன் சைக்கிளில் வந்து இறங்க ஆட்டுக் குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்த அனுவைத் தூக்கி வந்தான் மாமன் வாசு. தனித்தனியே வட்டமிட்டுக் கதை பேசிய இரண்டு குடும்பத்தினரும் பரபரப்பாயினர்.
வாசுவின் மடியில் அனு அமர்ந்திருக்க கத்தியில் ப்ளேடை மாற்றிய முருகேசன் லாகவமாக முடியை வழித்தெடுத்தான்.

செருமிச்செருமி அழுத அனுவை நீராட்டி, பட்டுப் பாவாடைச் சட்டையை அணிவித்தாள் ஜோதி. வழவழப்பான சிவந்த தலை முழுதும் குளிர்ச்சிக்கு மணம் கமழும் சந்தனம் பூசப்பட்டது. இன்னும் அனுவின் அழுகை நின்றபாடில்லை. அழுகையை நிறுத்த அவளுக்குப் பிரியமான குட்டி ஆட்டிடம் கொண்டு போனான் வாசு. அடுத்த கணம் அனுவின் அழுகை தடம் மாறி இயல்பு நிலைக்கு வந்தது. ஆட்டின் கழுத்தை இழுத்து இறுக்கி முத்த மிட்டாள். மொட்டையடிக்கப்பட்ட அனுவை அறியாது ஆடு மிரண்டது.
அனுதாண்டா தங்கம்...!"
ஆட்டுக்கு தன்னைப் புரிய வைக்க மெல்ல மெல்ல முயற்சித்தாள் அனு.
சூரியன் மேல் திசையில் சரியத் தொடங்கினான். மணி ஒன்றைத் தாண்டிற்று. காதுகுத்தும் நிகழ்ச்சிக்கு வரவழைக்கப்பட்ட பொற்கொல்லன் சண்முகம் கைப்பையுடன் காத்திருந்தான்.
ஆடு அறுப்பதற்குச் சொல்லப்பட்ட உள்ளூர்க்காரன் வந்து சேரவில்லை.அவனை எதிர்பார்த்துப் பயனில்லை என்பதை உணர்ந்த சித்தப்பா செல்வம் பக்கத்திலிருக்கும் திருமருகலிலிருந்து யாரோ ஒருவனை டி.வி.எஸ்.50யில் அழைத்து வந்தார்.
வந்து இறங்கியதுமே கத்திகளை எடுத்து கருங்கல் தரையில் தீட்டத் தொடங்கி விட்டான். அனு அவனை அச்சத்தோடு பார்த்தாள்.
என்ன செய்யப் போறீங்க..." -நடக்கப் போவது அனுவுக்கு மெல்ல புரிந்தது. அனு உயர்ந்த குரலெழுப்பி அழத் தொடங்கி விட்டாள்.
வெட்டாதீங்க... ப்ளீஸ்..."
மாமா வெட்டப் போறாங்க மாமா... சொல்லுங்க மாமா..."
அனுவின் அழுகுரலைக்கேட்டு ஜோதியும் சுரேஷும் ஓடிவந்தார்கள்.
அப்பா! ஆட்டுக்குட்டிய வெட்டச் சொல்லாதீங்கப்பா... பாவம்பா... அம்மா சொல்லுங்கம்மா... பாட்டி!... பாட்டி...நீங்க சொல்லுங்க."
குட்டியின் கழுத்தை இறுகப் பற்றியவாறு ஒவ்வொருவரையும் உதவிக்கு அழைத்தாள் அந்தச் சிறுமி.
அவள் காட்டிய பிடிவாதம் சுரேஷை நிலை குலையச் செய்தது.
சரி. வேண்டாம்மா..."
ஒரு முடிவுக்கு வந்தான் சுரேஷ்.
கொழந்தைக்கு என்னங்க தெரியும்."
கூட்டத்திலிருந்து ஒரு குரல் எழுப்பிற்று.
வாசு... குட்டியக் கோயில் நிர்வாகத்துக்கிட்ட விட்டுடு....காது குத்தற வேலையைப் பாருங்க.. சாப்பாட்ட சித்தப்பா பாத்துக்குவார்."
குழுமியவர்களிடையே ஏற்பட்ட சிறு சலசலப்பைத் தவிர்த்து அடுத்த வேலையைக் கவனிக்கத் தொடங்கினான் சுரேஷ்.
சடங்குகள் சம்பிரதாயங்கள் என்று சொல்லப்பட்டதை மீறி, குழந்தையின் குரலுக்கு முதன் முதலாகக் கட்டுப்பட்டான் சுரேஷ்.



நன்றி - கல்கி , புலவர் தருமி