Showing posts with label FILM REVIEW. Show all posts
Showing posts with label FILM REVIEW. Show all posts

Friday, December 23, 2016

DANGAL(HINDI) - சினிமா விமர்சனம்

 Image result for dangal movie தமிழ் சினிமாவில் ஒரு கமல்ஹாசனோ, விக்ரமோ செய்ய முடியாத சில சாதனைகளை அமீர்கான் செய்துள்ளார். என்ன தான் கேரக்டருக்காக தன்னை வருத்திக்கொள்வதில் உருமாற்றிக்கொள்வதில் கமல் ,விக்ரம் இருவரும் விற்பன்னராக இருந்தாலும் தங்கள் உழைப்புக்கேற்ற வெற்றியைப்பெறுவதில் , அனைத்துத்தரப்பு ரசிகர்களிடமும் தங்கள் படைப்பை முன்னிறுத்துவதில் கொஞ்சம் பின் தங்கியே இருக்கிறார்கள்

 இப்படிச்சொல்வதன் சாராம்சம் அவர்கள் உழைப்பைக்குறை சொல்வதல்ல. அவர்கள் உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பதில் எங்கேயோ தவறு நடக்குது. ஆனால் கலை நுணுக்கம் சார்ந்த கமர்ஷியல் படைப்பு எப்படி படைப்பது? வியாபார ரீதியான பிரம்மாண்ட வெற்றியையும் பெற்று  விமர்சகர்கள் பாராட்டையும் ஒருங்கே பெறுவது என்ற செப்பிடு வித்தையை அட்டகாசமாகக்கற்றவர் அமீர்கான் என்றால் மிகை இல்லை.


ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட படங்கள் ஹிட் ஆவதில் குறிஞ்சி மலர் உதாரணங்கள் தான். லகான் ,சக் தே இந்தியா , தோனி , அஸ்வினி ,  இறுதிச்சுற்று,  சென்னை 28,28-2  வரிசையில் ...



படத்தோட கதை என்ன?ஹீரோ  ஒரு மல்யுத்த வீரர் தன் துறையில் சாதிக்க ஆசைப்படறார்.ஆனா சொந்தக்காரங்க குறுக்கீடுகளால் அது முடியல. தன்னால சாதிக்க முடியாததை தன் வாரிசுகள் மூலமாவது சாதிப்போம்னு நினைக்கறார்.அவருக்குப்பிறந்த 4 பேரும் பெண்கள்.

 அவர் மூடு அவுட் ஆகி இருக்கார். ஒரு கட்டத்தில் நால்வரில் இருவர்  தன் லட்சியத்துக்கு உதவுவாங்க என எதேச்சையாக கண்டுபிடிக்கிறார்.

 அப்பறம் என்ன? ஒரே ட்ரெயினிங்  ட்ரெயினிங்  தான். அவரோட லட்சியம் ஈடேறியதா? என்பது க்ளைமாக்ஸ்

 ஹரியானா வைச்சேர்ந்த மல்யுத்த ப்ரியர்  மாவீர சிங் போகத்  வாழ்வில் நிக்ழ்ந்த உண்மை சம்பவம் தான் படம்


பொதுவாக அனைத்துத்தரப்பினருக்கும் நன்கு தெரிந்த கிரிக்கெட் , கபடி , ரன்னிங் போன்ற விளையாட்டுகளை பின்புலமாக கொண்டு படம் எடுத்து வெற்றி பெறுவது எளிது.ஆனால்; பெரும்பாலோனோர் அதிகம் அறியாத மல்யுத்தம் பின்புலம கொண்டு திரைக்கதை அமைத்து ரசிக்க வைப்பது பிரம்மப்பிரயத்தனம். அசால்ட்டாக ஜெயித்திருக்கிறார் இயக்குநர் நிதேஷ் திவாரி


ஹீரோவா அமீர்கான், ஓப்பனிங் சீனில் ஜிம் பாடியை காட்டும்போது ஆரம்பிக்கும் கை தட்டல் க்ளைமாக்ஸ் வரை அப்பப்ப ஒலிச்சுக்கிட்டே இருக்கு. சிக்ஸ் பேக் சிங்கமா , நடுத்தர வயசு தொப்பை உள்ள ஆளா என கெட்டப் சேஞ்ச் அற்புதம்.

 பொதுவா ஒரு ஹீரோ தயாரிப்பாளரா ஆனா முழுக்கதையும் தன்னைச்சுற்றியே இருக்கனும் என எதிர்பார்ப்பாங்க ( உதா - கமல் , விஜயகாந்த்)ஆனா அமீர்கான் திரைக்கதையின் தேவை கருதி பல இடங்களில் அண்டர் ப்ளே பண்ணி இருக்கார்

அவருக்கு ஜோடியாக வரும் சாக்‌ஷி தன்வார் கனகச்சிதம். வசனங்கள் கம்மி,ஆனால் ஆக்டிங் ஸ்கோப் அதிகம்

 மகள்களாக வரும் சிறுமிகள் 2 பேர் பட்டையைக்கிளப்பி இருக்காங்க . பாய்ஸ் கட்டிங்கில் ஸ்கூல் போகும்போது கூனிக்குறுகுவது , பிராக்டீசில்  சக மாணவனை கலாய்ப்பது வாவ்.

இசை , பாடல்கள் , ஒளிப்பதிவு  எல்லாமே அபாரம் என்றாலும்  பேக் போன் ஆஃப் த ஃபிலிம் ஸ்டண்ட் மாஸ்டரின் அதீத உழைப்பு. மல்யுத்தம் பற்றி பக்காவாக அறிந்து அதன் ரூல்ஸ் & ரெக்குலேஷன் எல்லாவற்றையும் ஃபாலோ பண்ணி படம் நெடுக அவர் காட்டி இருக்கும் டெடிகேஷன் அபாரம்

 திரைக்கதையில் சில இடங்களில் லாஜிக் மிஸ்டேக்ஸ் வருது,ஆனா அபூர்வமான குறிஞ்சி மலரை ரசிக்கும்போது அதன் குறைகளைப்பற்றி பேச நேரம் இருக்காது

வாவ் இயக்கம் 


1  கீதா  தன் கூந்தலை வளர்த்து , நெயில் பாலீஷ் போடுவது , சைட் அடிப்பது என் லேசாக பாதை விலகும்போது அவர் சகோதரி பார்க்கும் துல்லியப்பார்வை அற்புதம்


2  டெலிஃபோனில் தன் ஈகோவை விட்டு மகள் அப்பாவிடம் பேசும் உரையாடல் , வெறும் விசும்பலாக மட்டுமே ஒலிப்பது


3  தன் மகள்கள் 2 பசங்களை அடிச்ட்டு வந்துட்டாங்க என்பதை அறிந்து தன் லட்சியம் நிறைவேற பாதை தெரியுது என்பதை ஹீரோ உணரும் இடம், அப்போது ஒலிக்கும் பிஜிஎம்


4  பின் பாதி திரைக்கதையில் பெரும்பாலும் மல்யுத்தக்காட்சிகளே என்றாலும் போர் அடிக்காமல் எடுத்த விதம்



தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

அமீர்கான் ன் ஹிந்திப்படம் பலராலும் சிலாகிக்கப்படுகிறது.மகிழ்ச்சி.ஆனால் அது கிட்டத்தட்ட மாதவன் நடித்த "இறுதிச்சுற்று" கதை தானாம்

2 கதைத்தேர்வில் ,ஈடுபாட்டில் .உழைப்பில் அமீர்கான் =கமல் + விக்ரம்

3 உடல் பலத்துக்குத்தேவையான புரோட்டீன் சத்து சைவத்தை விட அசைவத்தில்தான் அதிகம்னு ஒரு தவறான கருத்து மறைமுகமா சொல்லப்படுது (HINDI)

4 கனகச்சிதமான திரைக்கதை ,பொருத்தமான பின்னணி இசை ,விசிலடிக்க வைக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் உழைப்பு ,ஒருங்கிணைக்கும் இயக்கம் அபாரம் (hindi )

5 கமர்ஷியல் கலந்த கலைப்படங்கள்
1 உதிரிப்பூக்கள்
2 மகாநதி
4 DANGAL
3, MS DHONI



நச் டயலாக்ஸ்

1 வாழ்க்கைல நீ ஜெயிக்கனும்னா எப்பவும் இயங்கிக்கொண்டே இரு.தேங்கி நிற்காதே! (HINDI)

2 தயாரிப்பு நடவடிக்கைகளில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஈடுபட்டால் ஆண் குழந்தைக்கு உத்தரவாதம் என்பது ஐதீகம் ( HINDI )

3 நம்மால எதை சாதிக்க முடியலையோ அதை நம் வாரிசு மூலம் சாதிக்க நினைப்பது தொன்று தொட்டு வரும் பழக்கம் (hindi)

4 யானையைப்போல் பலசாலியாக இருப்பதை.விட புலியைப்போல் ,சிறுத்தையைப்போல் வேகம் உடையவனாக ,நுணுக்கங்கள் கற்றவனாக ஆகு (HINDI)

5 புலியிடம் போய் "நீ யானையைப்போல் பாய்ந்து தாக்கு"ன்னு சொல்வது போல் இருக்கு உங்க பயிற்சி (HINDI)

6 ஒலிம்பிக்ல ஜெயிக்க , பதக்கம் வாங்க ஆளுங்க ரெடியா இருக்காங்க,ஆனா சப்போர்ட்டுக்குதான் ஆள் இல்ல #(HINDI)




சி.பி கமெண்ட்-DANGAL(HINDI)-ரிஸ்க் ஆன கதை.ரஸ்க் ஆன திரைக்கதை.பிரிஸ்க் ஆன இயக்கம்.வாட் எ க்ளைமாக்ஸ் .ரேட்டிங் - 4 / 5


Friday, July 04, 2014

அரிமா நம்பி - சினிமா விமர்சனம்

முன்னாள் அமைச்சர் சசி தரூர்  அவரோட சம்சாரம் சுனந்தா தரூரை போட்டுத்தள்ளிட்டார் -னு பேசிக்கறாங்களே, அதான் படத்தோட KNOT. அதை வெச்சு  கொஞ்சம் கற்பனை கலந்து  திரைக்கதை அமைச்சிருக்காங்க. இது எந்த அளவுக்கு  ஒர்க் அவுட் ஆகி இருக்குனு பார்ப்போம் .

வில்லன்  ஒரு மத்திய அமைச்சர் . அவருக்கு  ஒரு அழகிய கள்ளக்காதலி . பொதுவா கள்ளக்காதலின்னாலே அழகா தானே இருப்பாங்க . ? இவர்  ஒரு சினிமா நடிகை . ( உடனே  இது நடிகை சுகன்யா கதை யா?னு கேட்கக்கூடாது ) 2 பேரும் 4 மாசமா நேசமா  இருக்காங்க . ரிசல்ட்  பாப்பா 3 மாசமா மாசமா  இருக்காங்க. அமைச்சர் கலைச்சிடுன்னு  சொல்றார் . இது என்ன  மைனாரிட்டி ஆட்சியா? டக்னு கலைக்க?  முடியாதுங்கறார்.  சின்ன  மோதல்ல  எசகு பிசகா லைட்டா  ஒரு கொலை நடந்துடுது . 


இது  ஒரு  வீடியோ காமிராவில் எதேச்சையா பதிவு ஆகிடுது . அந்த  வீடியோ  ஹீரோயின் அப்பா  கிட்டே  இருக்கு . அதை கை மாத்த   ஹீரோயினை கடத்தறார்  வில்லன் . ஹீரோ  எப்படி  வில்லனுக்கு  தண்ணி காட்டறார் என்பதே  மிச்ச மீதி விறுவிறுப்பான  டெக்னிக்கல் சேஷிங்க் ஸ்டோரி . 


ஹீரோவா   கும்கி  புகழ் லட்சுமி\ மேனன்  ஜோடி புகழ் விக்ரம் பிரபு . அண்ணனுக்கு ஆக்‌ஷன் காட்சிகள் , ஃபைட் சீன் கள்  எல்லாம் பிரமாதமா வருது . ஆனா   காதல் காட்சிகள் ல பாவம்  ரொம்பவே தடுமாறுகிறார். அதுக்காக அண்ணே  லவ்  சீன் ல  மட்டும்  கொஞ்சம்  ஒதுங்கிக்குங்க , நான் பார்த்துக்கறேன்னு சொல்ல  முடியுமா/ ?  இவருக்கு  நல்ல  எதிர் காலம்  இருக்கு . 



 ஹீரோயினாக ப்ரியா ஆனந்த் . இது  ரம்ஜான் மாதம் என்பதை எல்லோருக்கும்  சிம்பாலிக்கா உணர்த்த படம்  பூரா  பிறை நிலா க்கள்  தெரிய  வலம் , இடம்  எல்லாம் வர்றார் . இவர்  வீட்டில்  இருக்கும்  பீரோவில் சாதா  ஜாக்கெட்டே இருக்காது  போல . ஆல் 3 இஞ்ச் பிலோ  லோ கட் ஜாக்கெட்  தான் ., சரி அதைப்பத்தி நமக்கென்ன கவலை . வந்தமா? ( படத்தை) பார்த்தமா?னு இருக்கனும் . 


சில  ஹீரோயின்கள்   லோ கட் ஜாக் போடுவதில்  சைக்காலஜிகல் ரீசன் இருக்கு . சுமாரான  ஃபிகர் ஆக இருந்தா   முகத்துல நடிப்பு வர்ல , எக்ஸ்பிரஷன்  வர்லை , வெங்காயம் வர்லைன்னு நாக்கு மேல பல்லைப்போட்டு பேசுவானுங்க . இப்டி  லோ கட்ல வந்தா  ஒரு பய  முகத்தைப்பாக்க மாட்டான் , கமெண்ட் அடிக்க மாட்டான்., வாட் ஏன் ஐடியா ஜி ? 


நேர்மையான  எஸ் ஐ ஆக  எம் எஸ் பாஸ்கர்  குணச்சித்திர நடிப்பில் கலக்கறார் . வில்லனாக  தெலுங்கு சத்யா சக்ரவர்த்தி  பொருத்தமான நடிப்பு . அவரை விட அவரது அடியாளாக வரும் அந்த  முஸ்லீம்  வில்லன் நடிப்பு  கலக்கல். அவருக்கு கீழே  வேலை செய்யும்  ரவுடியின் நடிப்பும்  தூள் 









இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1.   கரண்ட் பாலிடிக்ஸில் பரபரப்பான  கொலை வழக்கான சுனந்தா தரூர் கொலையை  கொஞ்சம் மாத்தி  அதுக்கு தக்கபடி  திரைக்கதை அமைத்த சாமார்த்தியம் 


2  ஏ ஆர்  முருகதாஸ் -ன்  சிஷ்யர் என்ற பெயரைக்காப்பாற்ற  படம்  முழுக்க குறிப்பாக  முன் பாதி டெம்ப்போ ஏற்றும்  விறுவிறுப்பான  திரைக்கதை கலக்கல் 


3  நான்  உன்னில் பாதி   நீ  என்னில் பாதி பாடல் காட்சியில்   குத்தாட்டம்  போடும்  ஹை கிளாஸ்  ஃபிகர் தேர்வு ,  க்ரூப் டான்சர்கள்  மும்பை அழகிகளாக  கொஞ்சம் , ஃபாரீன் ஃபிகர்ஸ்  கொஞ்சம்  போட்டு  பாட்டின் விஷுவலில்   பிரம்மாண்டம் காட்டியது 


4  இசை  டிரம்ஸ் மணி . சும்மாவே இவர்  போட்டுத்தாக்குவார் . சேஷிங் ஸ்டோரின்னா கேட்கனுமா ? அடி தூள்:  ஒளிப்பதிவு , எடிட்டிங்க்  கன கச்சிதம் . லொக்கேஷன்  செலக்சன் பல இடங்களீல்   பிர்மாதம் . ஆர்ட்  டைரக்‌ஷன்  அழகியல் ரசனை  கொண்டவர்  போல 



5   படத்தின்  ஹீரோ   யூ  ட்யூப் , ஃபேஸ் புக்  உபயோகிப்பாளராக காட்டி  டெக்னாலஜியை  சாமார்த்தியமாக நுழைத்தது


6   ஹீரோ   போலீஸை , வில்லன் ஆட்களை அலைக்கழிக்கும் டெக்னிக்கல் வ் வித்தைகள் அபாரம் 


இயக்குநரிடம் சில கேள்விகள் 


1.  என்ன தான் மாடர்ன்  ஃபிகரா  இருந்தாலும்  ஒரு ஃபேமிலி கேர்ள் அதிகம் அறிமுகம் இல்லாத பையனுடன்  தண்ணி அடிப்பாரா? மப்பில் அவர் இருக்கும்போது  இவன் எசகு பிசகா ஏதாவது  செஞ்சுட்டா  கற்பு ஸ்வாஹா ஆகிடாதா? 


2  வில்லனோட ஆள்  ஓப்பனிங்க் சீன்ல   ஹீரோவை சுட கன்னை  ரிலீஸ் பண்றார். அப்போ  ஹீரோ தாக்காம , ஓடாம , நகராம கண்ணை  மூடி பய பாவம் காடறார் . ஏன்? 


3 தன்  செல் ஃபோனை  டிராக் பண்\றாங்கனு  ஹீரோ  சிம்மை கழட்டி  வீசுவது  சரி, அதை ஏன் கொலை நடந்த  ஸ்பாட்லயே போடனும் ? அது சாட்சி ஆகிடாதா? அந்த இடத்தைத்தாண்டிப்[போய் போடலாமே? 


4  வில்லனின்  லீலைகள் , கொலை ஆதாரம்  கொண்ட   வீடியோ அடங்கிய சாட்சி மெம்மரி கார்டு  கைல கிடைச்சதும்   அதை ஏன் ஒரு காபி எடுத்து வெச்சுக்கலை .அட்லீஸ்ட்  ஹீரோயின் செல்  ஃபோனை வாங்கி அதிலாவது   ஒரு காபி டவுண் லோடு ஏன் பண்ணிக்கலை ?

5 செண்ட்ரல்  மினிஸ்டர்க்குனு  தனி பாதுகாப்பு அதிகாரி  இருக்க மாட்டாரா?அவரை அசால்ட்டா  ஹீரோ கார்னர் செய்வது எப்படி?

6  போலீஸ் கண்ட்ரோல்  ரூமில்  செண்ட்ரல்  மினிஸ்டர் வந்து கமிஷனரை கண்ட்ரோல் ல வெச்சு எல்லாருக்கும் ஆர்டர்  போட்டுட்டு   இருக்காரே ?  போலீஸ் இன்சார்ஜ்  சி எம்  கொட நாடு  போய்ட்டாரா?


7   வில்லன் ஆளுங்க  காரில்   பின் சீட்டில் ஏறி  ஹீரோ படுத்துக்கறார். கடைக்குப்போய்ட்டு வரும் வில்லன் ஆட்கள் பின் சீட்டைக்கூடப்பார்க்க மாட்டாங்களா?  அவ்வளவ் தத்திங்களா?


8  வில்லனோட ஆட்கள்  சேசிங்க் பண்றப்ப  ஹீரோ முன்னால்  ஒரு  ரிவால்வர்  விழுது ., அதை ஏன் அவர் எடுத்துக்கலை ? ஓட வேண்டியதில்லையே ? சுடலாமே?


9 ஹீரோ  நிராயுதபாணியா ஓடிட்டே  இருக்கார் . ஆனா வில்லன் ஆட்கள் அத்தனை பேரும்  ரிவால்வரில்  சுட்டுட்டே  இருந்தும்   ஹீரோ  மேல  ஒரு தூசு  கூட படலை .


10   வில்லன்  ஒரு மினிஸ்டர் . அவர் க்ளைமாக்சில்   அத்தனை  போலீஸ்  முன்பு  ஹீரோவிடம் நான் தான் அவளை  கொன்னேன் என சொல்வது ஏனோ?> அதுவே  ஒரு ஸ்டேட்மெண்ட் ஆகி விடாதா?


11  செண்ட்ரல்  மினிஸ்டர்   கள்ளக்காதலியுடன்  கில்மா பண்ணறப்ப  காண்டம்  யூஸ் பண்ணாம  செய்வாரா? பின்னாளில்  டி என் ஏ டெஸ்ட்டில்  மாட்டிக்குவார்  என்ற பயம்  வராதா? எப்படி  காதலி கர்ப்பம் ஆனார் ?


12   ஃபைவ் ஸ்டார்  ஹோட்டலில்  காமிரா கண்காணிக்கும் என்பது  தெரியாதா?   மினிஸ்டர் எப்படி அசால்ட்டா அப்படி ஒரு சாட்சியை  உருவாக்கறார் ?


மனம் கவர்ந்த வசனங்கள்


1. பொண்ணு கூட பார்ட்டிக்குப்போகும்போது குடிச்ட்டு போலாமா?



நீ அவளை கோயில் லயா பார்த்தே?பப் ல தானே மீட்? # அ ந



2 மிஸ்! உங்க கால் வலிக்கலையா?




ஏன்?



நேத்து உங்களைப்பார்த்ததுல் இருந்து என் மனசுல "ஓடிட்டே"இருக்கீங்க # அ ந


3 பொண்ணுங்க நாங்க பில் பே பண்ற மாதிரி நடிப்போம்.ஆனா பசங்க தான் பில் பே பண்ணனும் # அ ந



4 ஒரு பையனைப்பத்தி ஒரு பொண்ணு தெரிஞ்சுக்க 2 நாள் எல்லாம் தேவை இல்லை.ஒரே ஒரு டின்னர் போதும் # அ ந


5 ஹீரோ வும் ஹீரோயினும் ( குடும்பப்பெண் ) முதல் மீட் லயே சரக்கு அடிக்கறாங்க.வாட் எ முன்னேற்றம்? # அ ந


6 பொண்ணுங்களை இம்ப்ரெஸ் பண்ண ஒரே வழி பணம் தான்.ஷாப்பிங் ,செலவு #,அ ந




படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S  


அரிமா நம்பி திரைக்கதை அமைத்த விதம் அமரர் சுஜாதா வின் நில்லுங்கள் ராஜா வே நாவல் ஸ்டைல். # ஏ ஆர் முருகதாஸ் சிஷ்யர் தான் இயக்குநர்


2 முன்னாள் அமைச்சர் சசி தரூர் செய்ததாக சந்தேகப்படும் கொலை வழக்கு பற்றிய படம் தான் அரிமா நம்பி # கொளுத்திப்போடு




சி பி கமெண்ட் - அரிமா நம்பி - பொலிடிக்கல் க்ரைம் த்ரில்லர் - முன் பாதி விறுவிறுப்பு ,பின் பாதி சுமார் = விகடன் மார்க் = 41 .ரேட்டிங் = 2.5 / 5



எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 41 


 சிபி மார்க் = 42 





குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் =  2.5  /  5
  
இந்நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்கியோர் நெய்வேலி மகாலட்சுமி


Sunday, March 23, 2014

NON-STOP - சினிமா விமர்சனம்

தினமலர் விமர்சனம்

கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக மலேசியா - கோலாலம்பூரில் இருந்து சீனா - பீஜிங்கிற்கு, இருநூற்று சொச்சம் பயணிகளுடன் கிளம்பிய போயிங் விமானத்தை காணாமல் உலகமே வியப்புடன் தேடிக்கொண்டிருக்கும் சூழலில், இந்தியா முழுக்க ஆங்கிலத்திலும், தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் வெளிவந்திருகு்கும் விமான கடத்தல் பற்றிய த்ரிலிங்கான ஹாலிவுட் படம் தான் 'நான்-ஸ்டாப்'.

ஹாலிவுட் ஹீரோ லியம் நீசன் நடிக்க, ஸ்பானிஷ் இயக்குநர் ஜாம் கொல்லெட் செர்ரா இயக்கத்தில், பிரெஞ்சு -அமெரிக்க படமாக, ஐம்பது மில்லியன் டாலர் பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக இங்கு இப்பொழுது வெளிவந்திருக்கும் 'நான்ஸ்டாப்', கடந்த ஜனவரி மாதமே பிரான்ஸிலும், பிப்ரவரி மாதம் அமெரிக்காவிலும் வெளியாகி இதுவரை எண்பது மில்லியன் டாலர் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்திருப்பதும் ஹைலைட்!



கதைப்படி, தன் எட்டு வயது மகளை கொடூர நோய்க்கு பலி கொடுத்துவிட்டு, அந்த சோகத்தில் குடிக்கு அடிமையாகி, அதனால் மனைவியின் விவகாரத்துக்கும் ஆளாகி, நியூயார்க் போலீஸ் பதவியிலிருந்தும் விலக்கப்பட்டு, ஒருவழியாக ரகசிய விமான பாதுகாப்பு அதிகாரி எனும் பதவியில், ஏர்மார்ஷல் அந்தஸ்த்துடன் நியூயார்க் நகரில் இருந்து லண்டனுக்கு விமானத்தில், அவ்விமான ரகசிய பாதுகாப்பு அதிகாரியாக பறக்கிறார் பில்மார்க்ஸ் எனும் ஹீரோ லியம் நீசன்.

அட்லாண்டிக் கடலின் மத்தியில் 40 ஆயிரம் அடி உயரத்தில் நடு இரவில் பில்மார்க்ஸ்க்கு செல்போனில் ஒரு மெஸேஜ் வருகிறது. அதில் 150 மில்லியன் பணத்தை தாங்கள் சொல்லும் வங்கி கணக்கொன்றில் போட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அந்த பிளைட்டில் பயணிக்கும் ஒவ்வொருத்தரும் இருபது நிமிடத்திற்கு ஒருவராக கொல்லப்படுவார்கள் என்று மிரட்டும் அந்த மெஸேஜை பார்த்துவிட்டு ஆக்ஷ்னில் இறங்குகிறார் பில்மார்க்ஸ் எனும் ஹீரோ லியம் நீசன்!



 அந்த விமானத்தில் இருக்கும் ஒவ்வொருத்தரையும் சந்தேகப்படும் பில்மார்க்ஸ், விமான பணிப்பெண் மற்றும் தன் பக்கத்து இருக்கை பெண் உள்ளிட்டோர் உதவியுடன் நடக்க இருக்கும் கொலைகளை தடுத்தாரா? அல்லது தீவிரவாதிகளிடம் சிக்கி சின்னாபின்னமானாரா...? அல்லது அவரே தீவிரவாதியா...? என்பதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், படம் பார்க்கும் நாமே அந்த விமானத்தில் பயணிப்பது போன்ற திகிலுடன் இருக்கும் படம்தான் 'நான்-ஸ்டாப்!'

சமீபகாலமாக அனிமேஷன், கிராபிக்ஸ், வேற்றுகிரகவாசிகள், டைனோசர் மாதிரி ஜந்துக்கள்... என நம்பமுடியாத விஷயங்களில் படமெடுத்து நம்மை போரடித்த ஹாலிவுட் படங்களில் இருந்து சற்றே வித்தியாசமாக, நம்பும் படியான திரைக்கதை, ப்ளைட் ஹைஜாக், ஏர்மார்ஷல் ஹீரோ, பரந்து விரிந்த ஆகாயம், அதில் பறக்கும் விமானம்... என படம் பார்க்கும் நம்மையும், திகில் உலகத்திற்கு கடத்தி கொண்டு விமானத்தில்போய் திரும்புவது 'நான்-ஸ்டாப்' படத்தின் பெரிய ப்ளஸ்!



ஹீரோ லியம் நீசன் ஆகட்டும், அவருடன் இணைந்து நடிக்கும் மற்ற ஆண், பெண் நட்சத்திரங்கள் அத்தனைபேரும் ஆகட்டும் அனைவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

ஹீரோ லியம் நீசனும், டைரக்டர் ஜாம்கொல்லெட் செல்ராவும் இணைந்து ஏற்கனவே 'அன்நோன்' எனம் மெகாஹிட் தந்தவர்கள். எனவே அந்தவரிசையில் இசை, ஒளிப்பதிவு, டெக்னிக்கல், டைரக்ஷ்ன் என எல்லாவற்றிலும் மிரட்டியிருக்கும் 'நான் ஸ்டாப்' மெய்யாலுமே 'நான் ஸ்டாப்' தான்!!

THANX -DINAMALAR

  • நடிகர் : லியம் நீசன்
  • நடிகை : ..
  • இயக்குனர் :ஜாம் கொல்லெட் செர்ரா
a

diski - குக்கூ - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2014/03/blog-post_8524.html

Wednesday, October 16, 2013

Elysium (2013) - சினிமா விமர்சனம்


.

செவ்வாய் கிரகத்திலும் வாழலாம் என்று நிரூபிக்கப்பட்டு, இப்போது அங்கு வாழ அட்வான்ஸ் புக்கிங் செய்யும் காலம் ஓடிக் கொண்டிருக்கிறது


 ஒரு புதிய உலகம், சொர்க்கம் போன்ற அனுபவம் எவ்வித வியாதியையும் தீர்க்கக் கூடிய மருத்துவ வசதி கொண்ட தேவலோகம் (மானுடனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு) படம் தொடங்கும் முதல் பதினைந்து நிமிடங்களிலேயே கண்டிப்பாக இயக்குனர் ஏதோ வித்தயாசமாக சொல்லப் பார்க்கிறார் என்ற ஓர் எதிர்பார்ப்பு எழுகின்றது.

சிறு வயதிலிருந்தே எலைஸியம் எனப்படும் இந்த உலகத்தில் வாழ வேண்டும் என்பதுதான் கதாநாயகன் மேட் டேமனின் லட்சியம். இதற்காக ஒரு பெட்டிதீஃபாக மாறி காசுகளைச் சூறையாடுகிறார். ஹீரோவின் சிறு வயது ஜிகுரி தோஸ்த் தான் நாயகி அலைஸ் பிராகா.




எலைஸியம் பணம் படைத்தவர்களின் உலகமாய் மாற, இச்செல்வந்தர்கள் வாழ்க்கை நடத்த, சாதாரண மனிதர்கள் அமெரிக்காவில் அடிமைகள் போல் ட்ரீட் செய்யப்படுகின்றனர். அதில் ஒருவராய் ஹீரோ, லாஸ் ஏஞ்ஜல்சில் நடக்கும் ஒரு பாதி கதைக்களம்.  ரோபோட் உற்பத்தி செய்யும் இடத்தில் நாயகன் வேலை பார்க்கிறார். ஒரு முறை ஹீரோ மைனிங் அறையில் மாட்டிக் கொண்டு, அதிகமான ரேடியேஷனால் தாக்கப்பட்டு, கடும் பாதிப்பை அடைகிறார்.  ரேடியேஷன் தாக்குதலால் வெகு சில நாட்களுக்குள் உயிர் இழக்கும் சூழல் நாயகனுக்கு. அதற்குள் எப்படியாவது எலைஸியம் போய் தன் நோயை தீர்த்து உயிரை காத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் நாயகன் தவிக்கிறார்.

இதன் பின் மேட் டேமன் எலைஸியம் சென்றாரா உயிர் பிழைத்தாரா என்பது க்ளைமாக்ஸ்.


முதலில் ஏதோ நடக்கும் ஏதோ நடக்கும் என்று தோன்ற வைக்கும் திரைக்கதை, கடைசி வரை ஏதோ வித்தியாசமாக நடக்கும் என நம்ப வைத்தே கடுக்காய் கொடுக்கிறது. க்ளைமாக்ஸ் வந்தவுடன் என்னது சிவாஜி செத்துட்டாரா? என்ற அனுபவத்தையே தருகின்றது க்ளைமாக்ஸ்.

கதையில் ஹீரோ போய் எலைஸியம் ரீச் பண்ணுவாரா? இது ஒரு முதல் நாட், அப்படி சேருவார் என்றால், அது எப்படி சாத்தியம்? இது தான் கதையின் மையமா என்றால் அதுவும் பெரிசா சொல்லப்படலை. ஒரு பக்கம் ஜோடி பாஸ்டர் எலைஸியமின் பிரஸிடண்ட் ஆக பல சகுனி வேலைகள் செய்கிறார். சரி இது அரசியல் நையாண்டியாக இருக்குமோ!! என்று நினைத்தால் அதுவும் நடக்கலை. கடைசியில் ஏதோ பழைய படங்களில் டைரிக்கு சண்டை போடுவது போல் ஒரு சிப்பிற்கு சண்டை போட்டு, வாரி வாரி விழுகிறது திரைக்கதை.



படத்தை பொருத்தவரை நிறைய இடங்கள் துகள்களாக ரசிக்க வைக்கிறது. இயந்திர உலகத்திலே மெஷின்கள் நம்மை ஆளப்போகும் காலம் வெகு தூரம் இல்லை என்பதை சொல்லாமல் உணர்த்தும் காட்சிகள். வெளிநாடு செல்ல இசைவு விசா இன்றி வாழும் மனிதர்களைப் போல் வேற்றுலகம் செல்ல விசா இன்றி வாழும் மனிதர்களை காட்டியிருப்பது அழகிய கற்பனை.

என்னதான் இப்படி துகள்களாக சில காட்சிகள் ரசிக்க வைத்தாலும், மைய அஸ்திவாரம் ஆட்டம் கண்டிட கடைசியில் அதிருப்தியே மிச்சமாகிறது.

ஸ்டீபன் ஸ்பீல்பர்க் படத்தில் காணப்பட்ட பிரம்மாண்டம் இல்லை, சரி! க்ருஸ்டோபர் நோலான் படத்திலிருப்பது போன்ற அட்டகாசமான கதைக்களம்.. அதுவும் இல்லை. சரி!!! ட்ரான்ஸ்பார்மர்ஸ் இயக்குனர் ‘மைக்கேல் பே’ படத்தில் காணப்படுகின்ற மசாலா பாக்டர் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.



வில் ஸ்மித் ‘ஐ ரோபோட்’ இருபது வருடங்களுக்கு முன் வெளியான ஜேம்ஸ் கேமரூனின் ‘டெர்மினேட்டர்’ கொடுத்த திருப்தியில் கால் சதவீதம் கூட எலீஸியத்தில் கிடைக்கவில்லை.

மொத்தத்தில் எலைஸியம் – இது சொர்க்கத்தின் வாசற்படியும் அல்ல, நரகத்தின் படுகுழியும் அல்ல, திரிசங்கு சொர்க்கம்.  

  • நடிகர் : மேட் டேமன்
  • நடிகை : அலைஸ் பிராகா
  • இயக்குனர் :நெய்ல் புளோம்காம்ப்
நன்றி : தினமலர்

Friday, October 11, 2013

நய்யாண்டி- சினிமா விமர்சனம்

 

ஒரு  ஊர்ல  ஒரு  குடும்பம் , அந்த குடும்பத்துல 3 பசங்க , முறையே   40,38 ,25  வயசுல   3 பசங்க . 3 பேருக்கும்  மேரேஜே ஆகலை .3 வது பையன் தான் நம்ம ஹீரோ . அவர் ஊர்த்திருவிழாவுல  ஒரு பொண்ணைப்பார்த்து தமிழ் சினிமா வழக்கப்படி பார்த்ததும் காதல் ல விழுந்துடறாரு. ஆரம்பத்துல  பிகு பண்ணினாலும் பின் ஓக்கே சொல்லிடுது, அண்ணன்க 2 பேருக்கும்  மேரேஜ் ஆகாம எப்படி தம்பிக்கு மேரேஜ் ஆகும், ? அதனால தாலியை (மட்டும் )கட்டி தன்  வீட்டுக்கே  கூட்டிட்டுப்போய் கணக்குபிள்ளையா சேர்த்து  விட்டுடறாரு  ஹீரோ . 

காஞ்ச மாடுங்க 2 வீட்ல  இருக்கே  அதுங்க 2 ம்  தம்பி மனைவின்னு தெரியாம காதல் , ஜொள்ளுன்னு அலையுதுங்க. அவங்க கிட்டே மாட்டி யும் , மாட்டாமயும்  ஹீரோயின் எப்படி அவஸ்தைப்படறார்? என்பதை காமெடி(ன்னு நினைச்சு)ப்படமாக்கி இருக்காங்க . உஷ் அப்பா  முடியல .


மேலப்பரம்பில் யான்  வீடு என்ற ஜெயராம் - ஷோபனா நடிச்ச மலையாளப்படத்தை  உல்டா பண்ணி ஆல்ரெடி  ஆர் பாண்டிய ராஜன் சத்தமே இல்லாம தாய்க்குலமே தாய்க்குலமே என ஒரு டப்பாப்படம்  கொடுத்தாரு , பின்  கிட்டத்தட்ட இதே சாயலில் தென் காசிப்பட்டணம் வந்தது . இப்போ  இது . டைட்டில் ல யே அண்ணன் சற்குணம் சரண்டர் ஆகிடறார். இது ஒரு ரீ மேக் ஸ்டோரின்னு .. இருந்தாலும்  களவாணி , வாகை சூடவா போன்ற பிரமாதமான படம்  கொடுத்தவர்ட்ட இப்படி ஒரு லோ கிளாஸ் படத்தை எதிர்பார்க்கலை . யூ  டூ சார் ? 



தனுஷ்  தான்  ஹீரோ .  கமலுக்கு இணையான  நடிகர் என்று இணையத்திலே பாராட்டுப்பெறும்  ஹீரோ .  தன் அண்ணன் செல்வராகவன் படங்களில் மட்டும் பட்டாசுக்கிளப்பும்  இவர் ஆடுகளம்  தேசிய விருது  வாங்கிய பின் செலக்டிவ்வாக படங்களை ஒத்துக்கொள்பவர் ஏனோ  இம்முறை சறுக்கி விட்டார் . இவர் நடிப்புக்கு ஸ்கோப் எங்குமே இல்லை, படம்  நெடுக நாயகியைச்சுற்றியே  கதை  நகர்கிறது.

 நஸ்ரியா தான் நாயகி . துறு துறு நடிப்பு , அழகிய முகம்  என மனதைக்கொள்ளை  கொள்ளும்  பர்சனாலிட்டி . இவரிடம் ஒரு வியக்கத்தக்க  குணம்  பானுமதி ,நதியா , ரேவதி , சுஹாசினி வரிசையில்   தன் உடல் அழகு வெளிப்படுவதை விரும்பாத அபூர்வ நடிகை . ஒரு சீனில்  கூட  கண்ணியக்குறைவாக ஆடை  விலகவில்லை, பெரும்பாலான காட்சிகளில் முழுக்க  மூடிய சுடிதார் , சேலை கட்டிய காட்சிகள் 6 லும்  இழுத்துப்போர்த்திய பாங்கு அபாரம் .   ஆனால் நெருக்கமாக நடிக்கிறார் , என்ன கொள்கையோ? 


சிங்கம்புலி , புரோட்டா சூரி , ஸ்ரீ மன் , சத்யன்  என காமெடிப்பட்டாளங்கள் உண்டு .மனதில் பெரிதாக ஒட்டவில்லை 




 

 மேலே உள்ளது கிராஃபிக்ஸ் லோ ஹிப்

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1.  அய்யய்யோ  போச்சு என நஸ்ரியாவை அலற விட்டு பப்ளிசிட்டி செய்தது . இது 10 பைசா  செலவில்லாமல் கிட்டத்தட்ட  கோடி ரூபாய் செலவு செய்தால் என்ன விளம்பரம் கிடைக்குமோ அதைப்பெற்றது , வெரி குட்  ஐடியா 


2  இது  குடும்பப்படம் , காமெடிப்படம் என்றெல்லாம் தனுஷ் , நஸ்ரியாவை நம்ப வைத்து   ஒரு லோ கிளாஸ் மலையாள  கில்மாப்படத்தில் நடிக்க வைத்தது 


3  சர்ச்சைக்குள்ளான  “இனிக்க இனிக்க “ ரொமாண்டில் பாட்டு செம  கிக் . இதில் துளி  கூட  சீன் இல்லை , ஆனால் செம கிக் உண்டு . நெருக்கமான காட்சிகள் , உரசல்கள்  ஆஹா! 


4 , ஸ்ரீ மன் - சத்யன்  இருவரின் காம்பினேஷன் காமெடி காட்சிகள் 


5  அந்த  ராப் சாங்க் மாதிரி வரும் “குமரிப்பொண்ணுங்க பார்த்தா” செம  டான்ஸ். ஆர்ட் டைரக்‌ஷனும் , நடன இயக்குநரும்  செம உழைப்பு , சபாஷ் 




இயக்குநரிடம்  சில  கேள்விகள் 


1.  வீட்டில் ஆல்ரெடி மேரேஜ் ஆகாத அண்ணன்கள் இருக்காங்கன்னு தெரியாதா? கன்னிப்பொண்ணை எந்த தைரியத்துல  கூட்டிட்டு வர்றாரு ? மேரேஜ் ஆன ஆனால் கணவனைப்பிரிந்த பெண் என்றாவது  பொய்  சொல்லி இருக்கலாமே? 


2  வில்லன் ஆட்டோ டிரைவரிடம் வாய்ச்சண்டை போடும்போது  நஸ்ரியா  ஏன் எட்டிப்பார்க்கிறார்? தலையை மறைச்சு  அமர்ந்தவர் அப்படியே  இருப்பதுதானே? 


3  ஸ்ரீ மன், அம்மா , நஸ்ரியா மூவரும்  கோயில் போறாங்க . ஆனா   ரிட்டர்ன் வரும்போது  அம்மாவை ஆட்டோவில் காணோம் . ஸ்ரீமன் , நஸ்ரியா மட்டும் பக்கம் பக்கமா இருப்பாங்க . அடுத்த ஷாட்டில் நடுவில் அம்மா எப்படி வந்தார் ? கண்ட்டிநியூட்டி மிஸ்சிங்க் ? 


4  என்ன தான் காமெடி என்றாலும்  சிங்கம்புலி வாயில் உள்ள தங்கப்பல்லை சூரி  பிடுங்கி ஓடுவது எல்லாம் உவ்வே ரக காமெடி . இதில் ஒரு பல் டாக்டரிடம் விவாதித்தேன். தங்கப்பல் , வெள்ளிப்பல் கட்டுபவர்கள்  நிலையாக வாயில்  இருப்பது போல் தான் கட்டுவார்களாம். சாதா பல் தான் தினமும் இரவு  கழட்டி  வெளியே எடுத்து வைத்து காலையில்  மீண்டும் எடுத்துப்பொருத்துவது போல்  இருக்குமாம் . அப்படி  இருக்கும்போது தங்கப்பல்லை அவ்வளவு  எளிதாக என்னமோ பாக்கெட்டில்  இருந்து பேனாவை அடிப்பது போல் எடுப்பது எப்படி ? 

மேலே உள்ளது  ஒரிஜினல்

5  புரோட்டா  சூரி பேசும் வசனங்களில்  ஒரு சீனில்  கூட சிரிப்பே வரவில்லை . சிச்சுவேஷன் காமெடி  ஸ்ரீமன் , சத்யன் காமெடியில் தான் . ஆனால் தம்பி மனைவி என தெரியாமல் அண்ணன்கள் ஆசைப்படும் கலாச்சாரத்தை மீறிய சிச்சுவேஷன் என்பதால் அதையும் ரசிக்க முடியவில்லை. இந்தப்படத்தை எப்படி  குடும்பத்தோடு மக்கள் உக்காந்து பார்ப்பாங்கன்னு நினைச்சீங்க ? இது போன்ற  உறவுகளைச்சீரழிக்கும் , கூட்டுக்குடும்பத்தை கேலி செய்யும் படங்களுக்குத்தடை விதிக்க வேண்டும் 


6 நஸ்ரியா  தன் கணவர் தனுஷிடம் அடிக்கடி “ நம்ம 2  பேருக்கும் இடையே  எதுவும் கூடாதுன்னு அன்னைக்கே சொன்னேனே?”ன்னு சொல்லுது . அதுக்கு என்ன காரணம்னு சொல்லவே  இல்லை 


7 ஸ்ரீமன்க்கு  பார்த்த பொண்ணை சில காலம் கழித்து அவர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு ஃபோன் பண்ண பொண்ணோட  போட்டோ பின்னால பார்க்கறார் , ஃபோன்  நெம்பர்  இருக்கு , பண்ணுனா பொண்ணே எடுக்குது . பொண்ணோட நெம்பரை   டைரக்டா எப்பவும்  புரோக்கர்ங்க தர மாட்டாங்க .அதே போல் மேரேஜ் ஆகிடுச்சு என சொல்லும்  அந்தப்பெண் குழந்தையுடன் இருக்கு . இப்போ இருப்பது புருஷன் வீடு . ஃபோட்டோவில்  இருப்பது பழைய  அம்மா வீட்டு ஃபோன்  நெம்பர் .

8  நஸ்ரியா கழுத்தில்  தாலி  இருப்பது ஆண்கள் கண்ணுக்கு வேணா தெரியாம  இருக்கலாம் , ஹீரோவோட அம்மா கண்ணுக்குக்கூடவா  தெரியல 






மனம் கவர்ந்த வசனங்கள்


1. பொண்ணுங்களுக்கு எப்பவும் " வீரம்" தான் பிடிக்கும்



நாங்க எல்லாம் கரண்ட் கம்பிலயே கபடி விளையாடுவோம் # புரோட்டா சூரி மரண மொக்கை பஞ்ச்



3   நாம போய் பொண்ணுங்க முன்னால நிக்கறதை விட நம்மைப்பத்தின நியூஸ் தான் முதல்ல போய் நிக்கனும் # தனுஷ் பஞ்ச்



  ஏன்  ஓல்டு லேடி , எங்க தாத்தா  வீரியம் மேட்டர் உனக்கு எப்படித்தெரியும் ?  அப்பவே  வில்லங்கமா விளையாடி  இருக்கே? 


5  புறா  உனக்கு  , பொண்ணு எனக்கு 


6  நீ என்ன பிளான் பண்னாலும்  என்னை மாட்டி விடாம பிளான் பண்ண மாட்டே  போல 


7  , மணி  இருக்கு , 


அடிக்குமா? 


8   என்ன பண்றே? 


 கணக்கு பண்றேன் 


 அதை என் கிட்டே கேளு 


 உனக்குத்தான் கணக்கு வராதே ? \



9  பொண்ணுக்கு மை வெச்சா கரெக்ட் ஆகிடும்னு மலையாள ஜோசியர் சொன்னார் , ஆனா கர்ப்பம் ஆகிடும்னு சொல்லலையே?




படம் பார்க்கும்போது போட்ட லைவ் கமெண்ட்ஸ் ட்வீட்ஸ் 


1. நய்யாண்டி அப்டேட் - படத்தில் முதல் 40 நிமிடங்கள் இளைய தளபதி விஜய் போலவே தனுஷ் கிளப்பிட்டாராம் .சூப்பர் இல்ல?



2 நய்யாண்டி = வாகை சூட வா ய்ப்பே இல்லை # பாரீன் ட்வீட்டர் அப்டேட் ரிசல்ட் படி


3 தனுஷ் ன் அட்டர் பிளாப் லேட்டஸ்ட் தர வரிசை .3 ,மயக்கம் என்ன ,மரியான் ,நய்யாண்டி




=================


4 நச்ரியா - சார்.இவ்ளவ் மார்க்கெட்டிங் பண்ணியும் படம் ஊத்திக்கிச்சாமே?


 சற்குணம் - டிராமாவை அவசரப்பட்டு முடிச்சிருக்கக்கூடாதோ? 


===================

5 சுள்ளான் க்குப்பின் இதில் தான்யா தனுஷ் ஆக்சன் அவதாரம் எடுத்திருக்காரு.ஓப்பனிங் சீன்ல 6 மீட்டர் விட்டம் உள்ள வட்டக்கிணத்தையே தாண்டிட்டாரு


=================


6 படத்தோட ரிசல்ட்டை தனுஷே சொல்றாரு - அரோகரா


===================


7 சார்.நஸ்ரியா சார்.ஸ்லோமோஷன் ல ஓடி வருது சார்


===================


8 ஏம்மா என்னமோ கற்புக்கரசி மாதிரி பேசுனே? முத கனவுப்பாட்டிலயே இந்தத்தடவு தடவறாரு.கம்முன்னே இருக்கே?


=================



தனுஷ் கமல் மாதிரியே ஆக்டிங்.அடேங்கப்பா.அபூர்வ சகோதரர்கள் அப்பு மாதிரி மாஸ்க் போட்டு நடிப்பு.செம செம


=======================

10  பின்னால நிக்குற பாட்டு கான்செப்ட் விஜய் ன் ஏ பாப்பா நீ கொஞ்சம் நில்லு எதுக்கு உனக்கு இத்தனை லொள்ளு பாட்டின் உல்டா




===============

11 தென்னக புரூஸ்லீ இப்போ ஜெட்லீ ஆகி மரத்துக்கு மரம் தாவறார்.அமேசிங் பர்பார்மென்ஸ்


====================


12 நய்யாண்டிக்கு முதல்ல வெச்ச டைட்டில் சொட்ட வாழக்குட்டி .ஆனா வெச்சிருக்க வேண்டிய டைட்டில் வனரோஜா


================


13 அபாரமான குடும்பக்கதை.தம்பியோட சம்சாரம்னு தெரியாம 2 அண்ணண் க்ளும் அதுக்கு ரூட்டு விடறாங்க # நய்யாண்டி இடைவேளை


===============

14  சார்.டைட்டிலுக்கு விளக்கம் சொல்லுங்க.



அவார்டு பட டைரக்டர் ,ஹீரோ னு நம்பி வந்து ஏமாந்து போகப்போறாங்களே ஆடியன்ஸ்.ஸெம நையாண்டி இல்ல? 


===============

15  நஸ்ரியா ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி.நஸ்ரியா ரொம்ப "சின்ன"ப்பொண்ணு ..இப்போ தான் +2 முடிச்சுதாம் ;-)# க்ளூ


=============

16 உலகப்புகழ் பெற்ற, சர்ச்சைக்கு ஆளான்  இனிக்க இனிக்க பாடல் ஓடுது.இமைக்காம பார்க்கனும்


---------------


ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-38


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்

ரேட்டிங் =   2  / 5


சி பி கமெண்ட்  -நய்யாண்டி - சி செண்ட்டர் ஆடியன்ஸ்களுக்கான லோ கிளாஸ் (சீன் இல்லாத)கில்மா காமெடிப்படம் - விகடன் மார்க் -38 , ரேட்டிங்க் - 2 / 5

டிஸ்கி -

வணக்கம் சென்னை - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2013/10/blog-post_7207.html

 

டிஸ்கி-நய்யாண்டி - ஃபாரீன் ட்விட்டர் விமர்சனம் http://www.adrasaka.com/2013/10/blog-post_7207.html

சந்தானம் காமெடி டயலாக்ஸ் இன்னும்  இருக்கு , அது  தனிப்பதிவாக நாளை வரும்