Showing posts with label CRIME. Show all posts
Showing posts with label CRIME. Show all posts

Tuesday, February 22, 2011

சன் டி வி பெண் ஊழியர் மர்ம மரணம் - குற்றம் நடந்தது என்ன?

http://www.cinemaexpress.com/Images/article/2010/3/17/15suntv.jpg 
எனது சொந்த ஊரான சென்னிமலையில் ஊரின் செண்ட்டரான இடமான வண்டிப்பேட்டை பஸ் ஸ்டாப்பில் குமரன் சிலை எதிரே கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஃபேன்சி ஸ்டோர்  & ஜவுளிக்கடை வைத்திருப்பவர் ஆறுமுகம் என்பவர்.ஆறுமுகம் கடை என்றால் ஊரில் தெரியாத ஆள் இல்லை. அந்தளவு ஃபேமஸ்.

இவரது மகன் நாகராஜன்.இவரது மகள் சங்கீதா. இவர் எம் எஸ் சி விசுவல் கம்யூனிகேஷன்  ( VISUAL  COMMUNICATION)படித்து சென்னையில் சன் டி வியில் நிருபராக வேலை பார்த்து வந்தார்.19.2.2011 சனி அன்று இவர் ரயிலில் அடிபட்டு மரணம் அடைந்ததாக 21.2.2011 தேதி இட்ட தினத்தந்தி நாளிதழில் படித்து அதிர்ச்சி அடைந்தேன்.( 2-ம் பக்கம்).

நான் விசாரித்த தகவல் மற்றும் எனது சந்தேகங்களை உங்கள் முன் வைக்கிறேன்.

1. சன் டி வி-யின்  ஐ டி கார்டு  TAG எப்போதும் இவர் அணிந்திருப்பார்,அல்லது இவரது கைப்பையில் அது இருக்கும்.விபத்து இரவு 7 மணிக்கு  நடந்ததாக கூறப்படுகிறது.ரயில்வே போலீஸ் இவரது ஹேண்ட்பேக்கை பார்த்து அவரது அட்ரஸ்,வேலை பார்க்கும் நிறுவனம் என எங்கேயும் தகவல் சொல்லாமல் விட்டது ஏன்? இரவு 10 மணிக்கு அவரது அறைத்தோழிகள் விசாரித்த பிறகே செய்தி அவர்களுக்கு தெரிந்திருக்கிரது.

2. போலீஸ்-இன் F I R  காப்பியில் (FIRST INFORMATION REPORT) விபத்தைப்பார்த்த ஆட்களின் சாட்சியம் பதிவு செய்யப்படவில்லை,ரயில்வே ஊழியர் ஒருவரின் கூற்றுப்படி செல் ஃபோனில் பேசியபடி வந்ததாகவும்,அது ரயில்வே டிராக்கில் விழுந்திருக்கலாம் எனவும்,அதை எடுக்க இவர் முயலும்போது அனந்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதாகவும் தெரிகிறது.ஆனால் எல்லாம் ஒரு அனுமானமே (ASSUMPTION). ஏன் ரயில் நிலையத்தில் உள்ள பொது மக்களிடம் ஸ்டேட்மெண்ட் வாங்கவில்லை?

3. சாதாரணமாக ஒரு யானை இறந்தாலே புகைப்படம் போடும் பத்திரிக்கைகளில் இந்த விபத்தில் ஏன் டெட் பாடியை ரயில்வே டிராக்கில் இருப்பது போல் காட்டவில்லை.?

4. செய்தியில் தனியார் தொலைக்காட்சி என்றுதான் போட்டு இருக்கிறார்கள். சன் டி வி பெயரை இருட்டடிப்பு செய்தது ஏன்?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiosT4fVGQzPnf7fhTWql-m9Mh3NPp21jkFmEsWTjlMcF7kyOQvy7DJx0xtge1M952v1IhbY0eiSLfBGQfGZZSeJfq0Xu_WlTxY28Ri4MN0ARch3tPxvDH1dBYUf_Te3duLxazewqypLyYV/s1600/Train.jpg
5. கடைசியாக அவர் யாருடன் செல் ஃபோனில் பேசினார் என்பதை போலீஸ் ஏன் ட்ரேஸ் அவுட் செய்யவில்லை?

6. சங்கீதாவுக்கு வரும் மார்ச் மாதம் 7-ந்தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.அவர் மன ஒப்புதலுடனே இந்த மேரேஜ் நடக்கிறது என்பதற்கு ஆதாரம் உள்ளது.( கல்யாணப்பத்திரிக்கைகளை நண்பர்களுக்கு கொடுத்திருக்கிறார்,வருங்கால கணவருடன் ஃபோனில் அடிக்கடி பேசி இருக்கிறார்). எனவே தற்கொலையாக இருக்க வாய்ப்பே இல்லை.

7. மாதம் ரூ 30,000 சம்பளம் வாங்கும் இவர் ஏன் ரயிலில் பிரயாணம் செய்து ஆஃபீசுக்கு போறார்?பத்திரிக்கை செய்தியில் ஸ்கூட்டி வைத்திருப்பதாகவும் அவர் குடி இருக்கும் காவேரி நகரில் இருந்து சைதாப்பேட்டை வரை ஸ்கூட்டியில் போய் அங்கே வண்டியை பாஸ் போட்டு நிறுத்தி விட்டு ரயிலில் ஆஃபீசுக்கு போவார் என கூறுகிறார்கள்.இது பற்றி போலீஸ் ஏன் எதுவும் விசாரிக்கவில்லை?

8. பத்திரிக்கை செய்தியில் தனியார் டி வி சப் - எடிட்டர் மரணம் என உள்ளது.ஆனால் அதே பேப்பரில் இரங்கல் செய்தியில் அவர் நிருபர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எங்கும் சன் டி வி பெயர் இல்லை. இந்த முரண்பாடு ஏன்?நிருபர் என போடும்படி நிர்ப்பந்தம் ஏதாவது நடந்ததா?