Showing posts with label ஷங்கர். Show all posts
Showing posts with label ஷங்கர். Show all posts

Sunday, January 25, 2015

ஷங்கர் மணிரத்னம், ஏ ஆர் முருகதாஸை விட முன்னணி இயக்குநர் ஆனது எப்படி? ஒரு அலசல்

ஒரு படம் எடுக்கும் செலவில் அற்புதமான 10 படைப்புகள் தரலாம்."
"பிரம்மாண்டம் என்ற பெயரில் காதில் பூ சுற்றும் வேலை."
"நல்ல நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் வீணடிக்கப்படுகிறது."
"தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. முழுக்க முழுக்க வணிக நோக்கம் கொண்ட சினிமாவுக்குத்தான் மதிப்பு."
இவை மட்டுமின்றி... இன்னும் பல ஸ்டேட்மென்ட்கள் அடுக்கப்படுவதைப் பார்க்கிறேன். இவை எல்லாம் இயக்குநர் ஷங்கர் மீதான தீவிர சினிமா ஆர்வலர்கள் பலரது பார்வை. இயக்குநர் ஷங்கரை முன்வைத்துச் சொல்லப்படும் இத்தகைய மிக முக்கியக் கருத்துகள் அனைத்துமே கவனத்துக்குரியதுதான். ஆனால், தமிழ் சினிமாவுக்கு ஷங்கர் போன்ற இயக்குநர்களின் 'தேவை' குறித்து இவர்கள் மேலோட்டமாகவாவது யோசித்துப் பார்த்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை. 

இன்றைக்கு உலக அளவில் தனக்கான இடத்தில் காலூன்றி உறுதியுடன் இருக்கிறது ஹாலிவுட் - அமெரிக்க ஆங்கிலப் படங்கள். இந்திய அளவில் எடுத்துக்கொண்டால் ஆதிக்கம் செலுத்துவது, பாலிவுட் - இந்தி சினிமா.
ஹாலிவுட்டில் ஷங்கர் போன்ற இயக்குநர்களின் திறமையால்தான் உலக அளவிலான சந்தையை அவர்களால் வசப்படுத்த முடிந்தது. இந்தி சினிமாவும் அப்படித்தான். அவர்களது சினிமா மூலை முடுக்குகளில் சென்றதன் பயனை அவர்கள் மட்டுமா அனுபவிக்கிறார்கள்? வர்த்தக நோக்கம் கொண்டதாக விமர்சிக்கப்பட்டவர்களால் போடப்பட்ட பாதையில் இப்போது பயனடைந்து கொண்டிருப்பவர்கள், சமரசங்களைக் குறைத்துக்கொண்டு பியூர் சினிமா கொடுக்க முயற்சிக்கும் படைப்பாளிகளும்தான்.
எப்படி?
'டெர்மினேட்டர்', 'ராம்போ', 'ஜுராசிக் பார்க்', 'ஸ்பீட்', 'மேட்ரிக்ஸ்', 'மம்மி', 'மிஷன் இம்பாசிபிள்', 'டைட்டானிக்' முதலான படங்கள் பார்த்து ஹாலிவுட் படங்கள் மீது மோகம் கொண்டவர்களில் பலர்தான் பின்னாளில் 'ஏ பியூட்டிஃபுல் மைண்ட்', 'தி பியனிஸ்ட்', 'தி ஏவியேட்டர்', 'பாபெல்', 'கேப்டன் பிலிப்ஸ்', 'ஹெர்' முதலான ஹாலிவுட்டிங் பியூர் சினிமாவைக் கொண்டாடத் தொடங்கினர். இந்த பியூர் சினிமா மீதான ஆர்வம்தான் அவர்களை அடுத்த கட்டமாக, ஈரான், கொரியா முதல் எத்தியோப்பியா வரையிலான உலக சினிமாவுக்குக் கொண்டு செல்கிறது. 

இதேபோல், வர்த்தக அம்சங்கள் நிறைந்ததாக சொல்லப்பட்ட பாலிவுட் படங்களின் அறிமுகம்தான், தமிழகத்தில் இன்று திரையரங்கில் அமர்ந்து 'எ வெட்ணஸ்டே', 'தி லஞ்ச் பாக்ஸ்', 'குயின்', 'அக்லி' முதலான நல்ல முயற்சிகளைக் கொண்டாட வைத்துக் கொண்டிருக்கிறது.
ஹாலிவுட்டும் பாலிவுட்டும் தமிழகத்தில் காலூன்றுவதற்குக் காரணமாக இருந்தவை, அங்கிருந்து வந்த வியத்தகு பொழுதுபோக்கு அம்சங்கள். அவற்றின் மூலம் இப்போது அவ்விரு ஏரியாவில் இருந்தும் வருகின்ற உன்னதப் படைப்புகளுக்கும் உரிய அங்கீகாரம் இங்கே கிடைக்கிறது என்பதை மறுக்க முடியாது.
ஒரு குறிப்பிட்ட மொழி சினிமா தன் எல்லையைக் கடந்து, அந்த மொழி பேசாத மக்களையும் சென்று சேர்வதற்கு அடித்தளமாக இருப்பது பொழுதுபோக்கு என்ற அம்சம்தான். காட்சி அமைப்புகளால் ஏதோ சில பல வகையில் பிரம்மிப்பைத் தரும் பொழுதுபோக்குப் படங்கள்தான் ஒரு சாதாரண பார்வையாளனைக் கட்டிப்போடுகின்றன. அப்படி பொழுதுபோக்குக்காக வேற்று மொழி சினிமாவை கவனிக்கத் தொடங்கும் பார்வையாளன், அந்த மொழியில் கிடைக்கும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய உன்னதப் படைப்பையும் ரசிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவான்.
இந்தியாவை எடுத்துக்கொண்டால், எல்லா ரீதியிலும் முதன்மையாகத் திகழ்வது பாலிவுட்தான். அதற்கு அடுத்த இடத்தைப் பிடிப்பதில், தெலுங்குக்கு கடும் சவாலாக தமிழ் சினிமா திகழ்கிறது என்றால், அதற்கு ஷங்கர், முருகதாஸ் போன்ற இயக்குநர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.
சாதாரண ரசிகர்கள் 2 முதல் 3 மணி நேரம் வரை ஒதுக்கி, மொழி தெரியாத சினிமாவை ரசிப்பதற்கு முதல் தேவை 'பியூர் என்டர்டெய்னர்' என்ற அடையாளம்தான்.
ஷங்கர் போன்றவர்களின் படங்களை முதல் நாளில் பார்த்துவிட்டு கழுவியூற்றும் தீவிர சினிமா ஆர்வலர்களில் சிலர், குறைந்த பொருட்செலவில் ஆகச் சிறந்த படைப்புகளைத் தந்து வரும் சமகால மலையாள சினிமாவுடன் ஒப்பீடு செய்கிறார்கள். அவர்களது ஆதங்கம் சரிதான். 

ஆனால், சாமானிய ரசிகர்களிடம் இந்திய அளவில் தமிழ் சினிமா ஈர்த்துள்ள கவனத்துக்கு இணையாக மலையாள சினிமா பெற்றுள்ளதா என்றால் 'இல்லை' என்பது தெளிவு. காரணம், மலையாளத்தில் ஷங்கர்களும் முருகதாஸ்களும் இல்லை.
ஷங்கர்கள் மீது கூறப்படும் குறைகள் எப்போது தெரியுமா பொருத்தமானதாக இருக்கும்?
தமிழில் பியூர் சினிமா முயற்சிகளே இல்லாத சூழலில், முழுக்க முழுக்க வணிக மசாலாக்களே வலம்வரும் பட்சத்தில், ஷங்கர்கள் தங்கள் பிரம்மாண்டங்களின் பின்னாலேயே சென்றுகொண்டிருந்தால் அவர்களைக் குறை சொல்வது சரியே. ஆனால், தமிழ் சினிமாவின் தற்போதைய நிலை அப்படி இல்லையே.
பாலா, பாலாஜி சக்திவேல், மிஷ்கின், வெற்றி மாறன், ரஞ்சித், ராம், தியாகராஜன் குமரராஜா, வசந்தபாலன், சீனு ராமசாமி, கார்த்திக் சுப்புராஜ் என பியூர் சினிமா ரசிகர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டும் வரும் படைப்பாளிகளின் பட்டியல் நீள்கிறது. இவர்களைப் போன்றவர்களின் முயற்சியின் பலனாக நல்ல படைப்புகளுக்கு வணிக ரீதியிலான வெற்றிகளும் தொடர்ச்சியாகக் கிடைக்கும்பட்சத்தில், தமிழில் உன்னத படைப்புகளின் எண்ணிக்கை வெகுவாகக் கூடுவது நிச்சயம்.
அதேவேளையில், தமிழ் சினிமாவுக்கான சந்தையை இன்னும் விரிவாக்கும் மிகப் பெரிய பொறுப்புகளைச் சுமக்கக் கூடிய ஃபிலிம் மேக்கர்களும் படங்களும் அவசியமாகிறது. அதற்காகத்தான், தமிழ் சினிமாவுக்கு ஷங்கர்கள் தேவை.
ஐயய்யோ... ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேன். நான் இங்கே அடிக்கோடிட்டு காட்டியிருப்பது, 'ஜென்டில்மேன்', 'இந்தியன்', 'முதல்வன்', 'எந்திரன்' ஆகிய படங்களை இயக்கிய ஷங்கரை! 

  • Its good tat directors like them is not there in Kerala, then they will ruin the industry for sure with their commercial craps. Now people are coming up with good contents in kerala. We dont want any stolen scripts n commercial bullshits
    Points
    100
    about 6 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
       
  • pamaran  
    Last line is the master piece -நான் இங்கே அடிக்கோடிட்டு காட்டியிருப்பது, 'ஜென்டில்மேன்', 'இந்தியன்', 'முதல்வன்', 'எந்திரன்' ஆகிய படங்களை இயக்கிய ஷங்கரை!
    Points
    5185
    about 8 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • shankar  
    தமிழுக்கு சத்யஜித் ரே போன்ற இயக்குனர்கள்தான் தேவை அவரின் பதேர் பஞ்சலி ஜன அரண்யம் ஜல் சாகர் அகந்துக் நாயக் போன்றவை கால பொக்கிஷம். இவைகள் மார்டின் ச்கோர்சே அலேசேண்டேர் பயனே ரோமன் போலன்ஸ்கி இங்கர் பெர்க்மன் போன்ற இயக்குனர்களால் பெரிதும் மதிக்கப்பட்டன
    about 8 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • vadivel  
    I film is new trend of modern life, you know about act.
    about 10 hours ago ·   (0) ·   (2) ·  reply (0) · 
  • C R  
    ஷங்கர் தான் இயக்கம் படம்களில் மட்டுமே பிரம்மாண்டம் காட்டுகிறார். தொழில்நுட்ப வளர்ச்சியின் பல்வேறு பரிமானம்களை சாதாரண ரசிகனுக்கும் சுவைபட கட்டுகின்றார். அதே சமயம் அவருடைய தயாரிப்பு நிறுவனம் இலக்கியத் தரமான சமூக சிந்தனைக்குரிய படைப்புகளை வழங்கி வருகிறது. புதிய இயக்குனர்களும் வைப்பு பெறுகிறார்கள். வாழ்க.
    Points
    845
    about 11 hours ago ·   (6) ·   (0) ·  reply (0) · 
  • Gnanasekaran  
    உண்மையிலேயே ஷங்கர் மாதிரி வேறு எவரால் ஐ போன்ற படத்தை இயக்க முடியும்?
    Points
    1770
    about 13 hours ago ·   (12) ·   (12) ·  reply (0) · 
  • Siva  
    காதலன், பாய்ஸ், ஜீன்ஸ், ஐ போன்ற குப்பைப் படங்களை எடுத்த சங்கரைத்தான் எல்லோரும் கரித்துக் கொட்டுகிறார்கள். வணிகப் படங்களிலேயே வித்தியாசத்தையும் பிரமாண்டத்தையும் காட்டினால் வரவேற்கத் தக்கதே.
    Points
    2110
    about 14 hours ago ·   (6) ·   (15) ·  reply (0) · 
  • Ratan  
    ஷங்கர்கள் தேவைப்படுவதுதான் தமிழ் சினிமாவின் சாபம்.. நமக்குத் தேவை மகேந்திரன்களும் கார்த்திக் சுப்புராஜ்களும்... ஷங்கரின் வக்கிரங்களை சரிக்கும் நிலையில் நாம் இருக்கும் வரை முன்னேறப்போவதில்லை
    Points
    745
    about 14 hours ago ·   (9) ·   (12) ·  reply (0) · 
  • மஞ்சூர் ராசா  
    நீங்க எழுதறதெல்லாம் சரிதான். கொஞ்சம் தமிழிலும் எழுதுங்க. எதற்காக ஆங்கில வார்த்தைகளை அதிகமாக கலக்குகிறீர்கள்? (உ.ம் . பல ஸ்டேட்மென்ட்கள் அடுக்கப்படுவதைப் பார்க்கிறேன், ஃபிலிம் மேக்கர்களும், என பியூர் சினிமா ரசிகர்களை, 'பியூர் என்டர்டெய்னர்',). பியூர் என்ற வார்த்தை எத்தனை இடங்களில் என பாருங்கள்.
    Points
    590
    about 15 hours ago ·   (23) ·   (2) ·  reply (0) · 
  • Rajeev  
    Stupidus review. ... I movie -expression of hard work and wonder. ..
    about 17 hours ago ·   (7) ·   (2) ·  reply (0) · 
  • hari  
    ஏந்திரன் படத்திற்கு பிறகுதான் தமிழ் சினிமாவின் தரம் மட்டும் வணிக ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட்டன .இன்று விஜய் அஜித் விக்ரம் படங்கள் 100 கோடி வசூல் செய்யும் அளவிற்கு மாறியது .அதற்காக நாம் ஷங்கர் ரஜினி அவர்களுக்கு தமிழ் சினிமா என்றும் கடமைபட்டிருகும் .
    about 17 hours ago ·   (14) ·   (36) ·  reply (1) · 
    • uma  
      வில் ஸ்மித் நடித்த I Robot படத்தை காப்பி அடித்து எடுத்த படம் தான் எந்திரன்.
      about 7 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • Udaya  
    வஞ்ச புகழ்ச்சி அணி: ஐயய்யோ... ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேன். நான் இங்கே அடிக்கோடிட்டு காட்டியிருப்பது, 'ஜென்டில்மேன்', 'இந்தியன்', 'முதல்வன்', 'எந்திரன்' ஆகிய படங்களை இயக்கிய ஷங்கரை! :P
    about 17 hours ago ·   (15) ·   (0) ·  reply (0) · 
  • vinayak  
    உண்மைதான். எனினும் எதார்த்தத்தை கையில் எடுத்த மணிரத்னம் அளவுக்கு ஷங்கரால் பாலிவுட் இல் பிரகாசிக்க முடியவில்லையே . மலையாளத்தில் priyadharshan இயக்கிய பெரு வெற்றி படங்களை அவர் ஹிந்தியில் ரீமேக் செய்து வெற்றிகளை குவித்திருக்கிறார் . இத்தனை வருடங்களில் இதுவரை இந்திய அளவில் ஒரு வெற்றியை கூட ஷன்கர் பெறவில்லை.
    Points
    165
    about 17 hours ago ·   (13) ·   (14) ·  reply (1) · 
    • Ashok  
      எந்திரன் அந்நியன் போன்ற படங்கள் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. வெற்றியும் அடைந்தது. தமிழ் ஒரு படம் செய்து வெற்றி பெற்றவுடன் இந்தியில் அந்த படத்தை வேறு நடிகரை போட்டு படம் எடுக்கும் ஏ.ஆர்.முருகதாசை விட தமிழில் ஒரு நடிகர் இந்தியில் ஒரு நடிகர் என்று இரண்டு படங்கள் எடுக்கும் மணிரத்னத்தை விட தமிழில் படம் செய்து அதை மற்ற மொழிகளில் மொழி மாற்றம் செய்து வெளியிடும் ஷங்கர் தான் பெரியவர். அவர் தான் தமிழ் திரையுலகிற்கு தேவை. மற்ற திரையுலகினர் தமிழ் திரையுலகத்தை திரும்பி பார்க்க செய்யும் ஷங்கர் பாராட்டப்பட வேண்டியவர்.


 நன்றி - த இந்து

Saturday, January 17, 2015

'ஐ' - முதற்கட்ட வர்த்தக, விமர்சன வரவேற்பு எப்படி? - மக்கள் கலவை கருத்து

  •  
      விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'ஐ'. இப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானதால் இப்படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
    தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என அனைத்து மாநிலங்களிலும் ஒரே தேதியில் வெளியானது. இன்று (ஜனவரி 16) இந்தியில் இப்படம் வெளியாகி இருக்கிறது.
    இதுவரை தயாரான தமிழ்ப் படங்களைவிட 'ஐ' படத்தின் பட்ஜெட் அதிகம் (சுமார் ரூ.100 கோடி என்கிறார்கள்.) என்பதால் எந்த அளவுக்கு வசூல் இருக்கும் என்பதை பல்வேறு தயாரிப்பாளர்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
    இந்தியாவில் மட்டும் அனைத்து மொழிகளையும் சேர்த்து சுமார் 5000-க்கும் அதிகமான திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 200 திரையங்குகளில் வெளியாகி இருக்கிறது 'ஐ'.
    ஷங்கர், விக்ரம் உள்ளிட்ட மொத்த படக் குழுவினரும் இந்தியா முழுவதும் படத்தை விளம்பரப்படுத்தியதால் பிரம்மாண்டமான முதல் நாள் வசூல் கிடைத்திருக்கிறது என்கிறது திரையுலக வட்டாரம்.
    தமிழில் முதல் நாளில் மொத்தமாக ரூ.10.5 கோடி வசூல் கிடைத்துள்ளதாம். அதில் நிகர வசூல் ரூ.8 கோடி. ஆந்திரா மற்றும் தெலுங்கானா இரண்டையும் சேர்த்து ரூ.7.5 கோடி வசூலாகி இருக்கிறதாம். கேரளாவில் எவ்வளவு வசூல் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
    அனைத்துத் தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக இப்படம் நிறைவேற்றியதா என்றால், 'இல்லை' என்றே சொல்லலாம். படம் பார்த்தவர்கள் விக்ரமின் நடிப்பையும் உழைப்பையும் கொண்டாடுகிறார்களே தவிர, இயக்குநர் ஷங்கரின் திரைக்கதை அமைப்பில் புதுமை என்று எதுவுமே இல்லை என்றே சொல்கின்றனர்.
    திரையரங்குக்குச் சென்று ரசிக்கக் கூடிய சாமானிய ரசிகர்கள் திருப்தி அடையும் அம்சங்கள் இருப்பினும், ஷங்கர் படத்துக்கே உரிய 'ரிப்பீட் ஆடியன்ஸ்' என்ற மேஜிக்கை 'ஐ' கைப்பற்றவில்லை.
    விமர்சகர்கள் மத்தியில் இப்படத்துக்கு கலவையான விமர்சனமே கிடைத்தது. பலரும் சுஜாதா இல்லாதது ஷங்கர் படங்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதற்கு 'ஐ' ஓர் உதாரணம் என்று கருத்து பதிந்து வருகிறார்கள்.
    சமூக வலைதளங்களில் 'ஐ' படத்துக்கு கலவையான விமர்சனமே கிடைத்திருக்கிறது. விக்ரமின் ரசிகர்களிடம் மட்டுமே 'ஐ'க்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது. பலரின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை.
    விக்ரமின் திறமையையும், மேக்கிங்கையும் சிலாகிக்கும் இணைய விமர்சகர்கள் பலர், திரைக்கதையையும் வசனத்தையும் கழுவியூற்றி வருகின்றனர். குறிப்பாக, திருநங்கை கதாபாத்திரத்தைக் கையாண்ட விதம் இயக்குநரின் பொறுப்பற்றத்தன்மையைச் சுட்டிக்காட்டுவதாக அவர்கள் அடிக்கோடிட்டுள்ளனர்.
    ஆந்திராவில் வசூல் ரீதியில் முதல் நாள் பெரியளவில் இருந்தாலும், அங்கு படம் பார்த்த சினிமா ஆர்வலர்களில் பெரும்பாலானோர் சமூக வலைதளத்தில் "இந்தப் படத்துக்கு ஏன் இவ்வளவு பில்டப்" என்கிற ரீதியில் கருத்து பதிந்து வருகிறார்கள்.
    இது விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் அதிகமாக இருக்கும். ஆனால், திங்கட்கிழமைதான் இப்படம் வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றுள்ளதா? இல்லையா? என்பதை முடிவு செய்ய முடியும்.
    தமிழில் U/A சான்றிதழுடன் வெளியாகி இருப்பதால், தமிழக அரசுக்கு 30% வரி கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆந்திரா, கேரளா, இந்தி, வெளிநாடு ஆகிய இடங்களில் விநியோகஸ்தர்கள் மூலம் வெளியாகி இருப்பதால் வரும் நாட்களில்தான் தயாரிப்பாளரின் வருவாய் நிலவரம் என்று தெரிய வரும்.
     
     
    t, Health and Safety Coordinator at Saudi Iron & Steel Company(HADEED) 
    நல்ல படம்
    Points
    560
    about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
  • vignesh  
    பரவை முனியம்மா ஒரு படத்தில் சொல்லுவர், " இந்த கருமத்தை தான் ராத்திரி முழுக்க கண் முழிச்சு ஒட்டுநீங்களான்னு?" . அது போல இந்த படத்தை தான் மூணு வருஷமா எடுத்தீன்களான்னு கேக்க தோணுது . பெருச்சாளி வேஷத்துல புதுமை பண்ணுவாங்கன்னு பாத்தா, அது ஒரு பாட்டு சீனுக்கு தானாம். கஷ்டம் டா சாமி. நன்றாக உழைத்திருந்தும் வீழலுக்கு இறைத்த நீர்...
    Points
    125
    about 4 hours ago ·   (16) ·   (2) ·  reply (0) · 
  • South Movemen  
    story good compare recent tamil movie.
    Points
    135
    about 4 hours ago ·   (0) ·   (2) ·  reply (0) · 
  • oorvambu  
    லிங்கா,, கத்தி,, போன்ற குப்பைகளுக்கு ஐ எவ்வளவோ பரவாயில்லை,, கதாநாயகன் அடித்தே பார்த்தவர்களுக்கு,, அவனை சற்று கோரமாக பார்க்க அலுப்பு தட்டுகிறது,, ஷங்கர் மற்றும் விக்ரமின் உழைப்பு பாரட்ட வேண்டிய படம்,, பார்க்க பிடிக்காதவர்கள்,, விஜயின் சுறா என்று ஒரு படம் இருக்கிறது,, நான்கு முறை பார்த்தல் நாக்கு தள்ளி சாகலாம்,,,,
    Points
    6940
    about 5 hours ago ·   (15) ·   (12) ·  reply (0) · 
  • jayavelu.v.  
    awesome movie... congrats to vikram, shankar , pc sir, and whole team.. this is the time to proud to be a tamilian...
    about 5 hours ago ·   (0) ·   (2) ·  reply (0) · 
  • jayavelu.v.  
    a milestone film in tamil "I" in indian cinema history... some may critisise negatively.. but this film is reaching so height in terms of vikram hardworking acting( can any actor do this role in world!!!) director shankar's unimaginable scenes ( in songs).. legend p.c. sir's cinematography... art direction... emy's beauty... in another level... CONGRATS TO SHANKAR, VIKRAM, PC... AND WHOLE TEAM... so many awards waiting to this team... this film is the inspiration who loves to achieve in cinema industry.....
    about 5 hours ago ·   (2) ·   (2) ·  reply (0) · 
  • காமாட்சி  
    விக்ரமனின் நடிப்பு அருமை... மிகவும் சிரத்தை எடுத்து நடித்துள்ளது படத்தில் தொிகிறது.. சங்காின் படத்திற்கே உாிய சமுதாயத்திற்குாிய கருத்து எதுவும் இல்லாதது குறை.... எதிா்பாா்த்த அளவுக்கு நிச்சயமாக இல்லை....... விக்ரமின் நடிப்பிற்காக ஒரு தடவை பாா்க்கலாம்...... ஆனால் தியேட்டாில் டிக்கெட்டின் விலை அதிகமாக உள்ளது.... அரசு விதிமுறைகளின் படி குறைந்த விலையில் டிக்கட் விற்றால் நிறைய போ் படம் பாா்க்க தியேட்டருக்கு வருவாா்கள்.........
    about 7 hours ago ·   (7) ·   (0) ·  reply (0) · 
  • rubanpaul  
    inga enna nadukuthunne purilla.....hollywooda poi paarunga evlo mokkayaana padangalla vanthutu irikkunnu....bollywood sollave vena summa ethukeduthaalu bodyya kaatrathum comedyndra perla varatu mokkaya podrathuma irukka....."i" mathiri oru unmayaana effort irinta padatha "naa vikrama mattum sollala shankar illana itha mathiriyaana makking namaku kedachurukkathu.so chinna chinna laging ellathayum vitutu "i" ya kondaduvom.........pls
    about 8 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
  • prakashpeak  
    Vikram நடிப்பில் நான் மெர்சலாயிட்டேன் ..awesome
    about 10 hours ago ·   (4) ·   (3) ·  reply (0) · 
  • vijayan  
    விக்ரமை ஏமாற்றிவிட்டார் சங்கர் மகா கலைஞனின் உழைப்பு வீன் விக்ரம் சந்தானம் எமி சீன மலைகள் அழகு எங்கே சங்கர்
    about 10 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
  • Karthick Bala  
    Alll these idiots who are speaking wrong about the film must see one thing....I watched this movie in two diffrent theatres and in both the theatres audience gave a standing ovation when the film is over...Also here they says vikram fans are repeatedly watching the film no every one are watching the film go and look at the amazing response that they got for the film....Sharukh khan happy new year no story and the film is collecting money and reviews are good...
    Points
    180
    about 10 hours ago ·   (5) ·   (1) ·  reply (0) · 
  • Kumaravel.M  
    இதெல்லாம் நம் இண்டுஸ்ரில சகஜம் என்று சொல்லிவிட்டு அந்தமெட்டரைஎ பில்டுப் செய்து இருக்கிறாய் ஷங்கர்.... பலர்மத்திஎல் அம்மணமாக வரும் நாயகியை பார்த்து காதலில் vizhugirar விக்ரம் ஒரு ad பிலிம் டைரக்டர் சீனாவிற்கு சென்று அங்குவைத்து, இவனுக்கு ஒண்டுமே நடிக்கவரவில்லை என்று மண்டையை பிப்பது மட்டுமில்லாமல், நாயகிடம் ஒரு ஐடியா கொடுக்கிறார் எல்லார்க்கும் விக்ரம்மேல் பொறமை போரமையாகவருகிறது பழிதீர்துவிட்டு விக்ரம்மை பார்த்து எல்லாராலும் கூடி சிரிக்கும்பொழுது சன் டிவி மேகசிரியால்கள் நிவிற்குவருகிறது அதுக்கு அப்பரம் ரயிலேறி சண்டைபொற்றரு.... தேனியை கொண்டுபொஇவிட்டு கடிக்கவுற்றாரு.... பெட்ட்ரோல உடம்புல ஊதும்போது வில்லன் தலைய சொற்றிகிகிட்டு நிக்குறாரு ( மப்பாம்...!) அப்பே நெருப்புபதவேக்குறாரு ...... கடசிய ஹெரொஇனி விக்க்ரமோட கைய கோத்துக்கிட்டு ஓடுது....
    Points
    330
    about 16 hours ago ·   (1) ·   (2) ·  reply (0) · 
  • azim  
    sankar than pdamana endhiranaye kalaikkumpothu sollava vendum i pada vasool total first day 120 crores vikram national award winner avarukku nalla kadhayathan select pannuvaru athuthan i
    about 17 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • karthick  
    Hard work will never failure that is vikram in ஐ .
    about 18 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • gv  
    ஷங்கர்கிட்ட இருக்கிறது ஒரே ஒரு கதைதான் .. அதாவது ஒரு சாமானியன் அநியாயம் பண்றவங்களை காலி பண்றது .... அதை விட்டா கிராபிக்ஸ் , லொகேஷன் ,ம்யுசிக் வச்சு பஜனை பண்றதுதான் அவர் வழக்கம் ... உள்ளத்தை தொடும் , மனதில் நிற்கும் நல்ல கதை, திறமையான டைரக்ஷன் அவர் படத்துல எப்பவும் கிடையாது . இது மட்டும் விதி விலக்கா என்ன ?
    about 19 hours ago ·   (11) ·   (4) ·  reply (0) · 
  • நரேஷ்  
    செகண்ட் ஆப் சான்சே இல்ல,தியெட்டர்ல pin drop silent,படம் முடிஞ்சதும் யாருமே ஒரு குறைகூட சொல்லாமல் வெளியே போனார்கள்,பேய் படங்கள்ல பயப்படறத விட அதிகமா இந்த படம் மிரட்டிருக்கு,யாரும் கிளைமாக்ஸ்ல சீட் நுனிக்கு வரலதான்,ஆன இருக்கையோட கைப்பிடிய அழுத்தமா பிடிச்சிட்டிருந்துருப்பாங்க.in second half shankar truly mesmerize the people.படம் பாத்துட்டு வந்த எல்லாருமே மெர்சலாய்ட்டாங்க.மனசாட்சியே இல்லாம இந்த படத்த போய் நல்ல இல்லனு எப்படி சொல்றாங்க.
    about 19 hours ago ·   (1) ·   (1) ·  reply (0) · 
  • kovai  
    ஏங்க படத்தை தவறா "முதற்கட்ட வர்த்தக, விமர்சன வரவேற்பு" பன்றிங்க!... 'ஐ' படம் "அதுக்கும் மேலே" ...
    Points
    400
    about 19 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • Rayees Ahamed Intern at Gyeongsang National University 
    நான் வடஇந்தியாவில் உள்ளவன். இங்கு மக்கள் மத்தியில் படத்திற்கு நல்ல எதிபார்ப்பு கிடைத்துள்ளது... நானும் படம் பார்த்தேன்... புதுமையான முறையை தேர்ந்தெடுத்துள்ளார். மேக்கப் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்திய சினிமாவிலும் இது போல் படம் எடுக்க முடியும் என நிரூபித்துள்ளார். அதற்கு மேல் என்ன வேண்டும்? எல்லா நேரமும் ஒரே மாதிரியான பிரமாண்டத்தை கொடுத்தால் உங்களுக்கும் 'போர்' அடித்துவிடும்.... 'தி இந்து' வில் மட்டும் தான், 'ஐ' க்கு எதிரான விமர்சனம் எழுதப்பட்டுள்ளது. இதை எழுதியவருக்கு படம் பிடிக்கவில்லையோ என்னமோ? உண்மையான விமர்சனம் அறிய, உங்களின் "'ஐ'க்கு நீங்கள் தரும் மதிப்பெண்?" கேள்வியில் மக்கள் அளித்த சதவிகித்தை பாருங்கள் தெரியும்!!
    Points
    450
    about 19 hours ago ·   (5) ·   (0) ·  reply (0) · 
  • NAVANITHAM  
    Shankar is not a talented director like the late Balachander.Most of his films based on ultapulta of other languages stories.He gets warn for winter on someone 's big money.😎
    about 19 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • Baskaran  
    'ஐ' படம் சூப்பர் விக்ரம்நடிப்பு மிக அருமை படம் சூப்பர் வெற்றி வெற்றி வெற்றி..'ஐ' பவர் புல்
    Points
    105
    about 20 hours ago ·   (2) ·   (2) ·  reply (0) · 
  • suresh  
    சிங்கார வேலன்கள் சீமான்கள் வேல் முருகன்கள் போன்ற கைகூலிகள் படத்தை வாங்காமல் இருந்தால் இந்த படம் நல்ல வசூல் பெரும்.
    about 20 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • RAJESH  
    சுஜாதா சார் some how please come back
    about 20 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • arv  
    சூப்பர் ..... படம் . விக்ரம் நடிப்புக்கு மறுபடியும் பாக்கலாம். Mr . தமிழ்நாடு. Chiyaan.
    Points
    140
    about 21 hours ago ·   (0) ·   (1) ·  reply (0) · 
  • Indiya Tamilan  
    சிவாஜி,கமலுக்கு பின் தமிழுக்கு கிடைத்துள்ள விக்ரம் போன்ற மகா கலைஞன் தனது உழைப்பை அர்ப்பணித்து இருப்பது படத்தை பார்த்தால்தான் தெரியும். உண்மையை சொல்ல போனால் விக்ரம் மரியாதைக்குரிய சிவாஜி,கமல் இருவரையும் தாண்டி ஒருபடி போயுள்ளார் நடிப்பில்.
    Points
    265
    about 21 hours ago ·   (11) ·   (2) ·  reply (0) · 
  • malai  
    ஆயா வடை சுட்ட கதையை கூட ஷங்கரால் மட்டும் தான் 100 கோடி செலவு வைத்து எடுக்க முடியும் என்பது மீண்டும் நீருபனம்... இந்த படத்திற்கு கொடுத்த buildup ரொம்ப ஓவர்... சரியான கமெண்ட்
    about 21 hours ago ·   (9) ·   (1) ·  reply (0) · 
  • Sriramachandran Manickam at State Government 
    சரி.விடுங்கள். விக்ரம் சரியா என பார்த்து விட்டு நிறுத்துங்கள். சங்கர் நன்றாக தான் செய்துள்ளார். பிரம்மாண்டத்தை குறை சொல்ல முடியாது. உங்களது எதிர்பார்ப்பு அதிகம். அவ்வளவு தான்.
    Points
    1195
    about 21 hours ago ·   (3) ·   (2) ·  reply (0) · 
  • paulselvadhas  
    ஏன் இந்த படத்திற்கு என்ன குறை இந்து ?nalla தமிழ் சினிமாவிற்கு எதிரி வேறு எங்கும் இல்லை .தமிழ்நாட்டிலேயே இருக்கிண்டனர்
    about 22 hours ago ·   (54) ·   (8) ·  reply (0) · 
  • Anbu  
    ஆந்தரவிலும் கேரளாவிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆந்தரவில் முதல் நாள் அன்று பவன் கல்யாண் ரசிகர்கள் சிலர் தவறான விமர்சனம் செய்தார்கள், ஆனால் இப்பொழுது படம் அங்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பொறுத்திருந்து பாருங்கள் ....
    Points
    160
    about 22 hours ago ·   (21) ·   (1) ·  reply (0) · 
  • Raju  
    படம் சூப்பர்.. விக்ரம் உழைப்பு பாராட்ட பட வேண்டிய படம்.. ஷங்கர் படம் பிரமாண்டம் ..பாட்டு கலர்புல்..
    about 22 hours ago ·   (28) ·   (1) ·  reply (0) · 
  • Anbu  
    விக்ரமின் நடிப்பு மிக அருமை. மற்றபடி ஷங்கரின் வித்தை ஒன்றும் இல்லை. என்னக்கு படம் திருப்தியாக இருந்தது.


    நன்றி  - த இந்து