Showing posts with label பரதேசி. Show all posts
Showing posts with label பரதேசி. Show all posts

Wednesday, December 26, 2012

பரதேசி - வசனகர்த்தா நாஞ்சில் நாடன் பேட்டி

http://www.shalsaa.com/movie_gallery/Paradesi-Audio-Launch-Stills-12_S_981.jpgபரதேசி’ xclusive

‘‘பாலா, ஒரு வலி கடத்தி!’’

நாஞ்சில் நாடன் பேட்டி
எஸ். சந்திரமௌலி

கடந்த ஐம்பதாண்டுகளில் நான் ஏராளமான தமிழ்ப் படங்களைப் பார்த்து வந்திருக்கிறேன். இன்று தமிழ் மக்கள் மத்தியில் தவிர்க்கமுடியாத ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் சினிமா இன்னமும் ஒரு பொழுதுபோக்காகவே இருப்பது வருத்தம் தருகிறது



 அபூர்வமாக சில படங்கள் மட்டுமே பொழுதுபோக்கு தளத்தைத் தாண்டி, இந்தச் சமூகத்தை, இந்த மண்ணின் சரித்திரத்தைப் படம் பிடித்துக் காட்டி இருக்கின்றன. இயக்குனர் பாலாவின்பரதேசிஅதுபோன்ற ஒரு அரிய முயற்சி. அதற்காகவே அவரைப் பாராட்ட வேண்டும்," என்கிறார் சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன்



 அவர்தான் படத்தின் வசனகர்த்தா. குடும்ப நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்னை வந்திருந்த அவர்பரதேசிபடம் பற்றிய தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்...

சமகாலப் பிரச்னை இல்லையென்றாலும் கூட, பாலாபரதேசிபடத்தில் கையாண்டிருப்பது ஒரு சரித்திரப் பதிவுதான். 1940களில் நிகழ்ந்த மிக முக்கியமான விஷயத்தைத் தான் அவர் கையாண்டு இருக்கிறார். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அனுபவித்த பரிதாபத்துக்குரிய வாழ்க்கை முறையை விவரித்திருக்கிறார் பாலா.



 நம் நாட்டில் தேயிலை, காஃபித் தோட்டங்கள் என்பது இயற்கை இல்லை. ஆங்கிலேயர்கள் இங்கே வந்த பிறகு, மலைவாசஸ் தலங்களை ஏற்படுத்திய காலகட்டத்தில், காடுகள் அழிக்கப்பட்டு, தேயிலைத் தோட்டங்கள் முளைத்தன. அங்கே வேலை செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து படிப்பறிவு இல்லாத, கடுமையாக உழைக்க மட்டுமே தெரிந்த அடிமட்டத்து மக்களுக்கு முன் பணம் கொடுத்து, கூலிகளாக, அடிமைகளாக, பெண்களைத் தோட்டங்களில் தேயிலைப் பறிக்கவும், ஆண்களை கரடு முரடான வேலைகளைச் செய்யவும் கூட்டிக் கொண்டு போனார்கள்.



அங்கே கல்வி, மருத்துவ வசதி வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடையாது. அதிகார வர்க்கத்தினரின் கைகளில் அவர்கள் அனுபவித்த கொடுமைகளின் பதிவுகளே பரதேசி."

கதையில் என்ன விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன?

இந்திய தேயிலைத் தோட்டங்களில் நடக்கும் கொடுமைகளைப் பற்றி, அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பேசி இருக்கிறார்கள். காந்திஜியும் நிறைய பேசியிருக்கிறார். அதன் பிறகுதான், அவர்கள் விஷயத்தில் சில சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இது ஒரு பக்கம் என்றால், இயற்கை கூட அவர்களை மனிதநேயத்தோடு பார்க்கவில்லை.



தேயிலைத் தோட்டங்களில் மழைக் காலத்தில் மலேரியா வந்தால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பலியாவார்கள். ஆங்கிலேயர்களின் தேயிலைத் தோட்டங்களில் அவர்களின் அடக்குமுறைக்கும், மலேரியாவுக்கும் பலியான இந்தியர்கள், உலகப் போர்களில் மாண்ட இந்தியர்களின் எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகம். இதுதான் கதையின் ஆன்மா. உபரியாக, படத்தில் வரும் காதல், பழிவாங்கல், ஊர்த் திருவிழா எல்லாம் சினிமா அம்சங்கள்."

பாலாவோடு பணியாற்றிய அனுபவம்?

இதுபோன்ற ஒரு விஷயத்தை, ஆழமாக ஆராய்ந்து, ஒரு திரைப்படமாக பாலா எடுக்க முன்வந்திருக்கிறார் என்பதே எனக்கு ஆச்சர்யத்தையும், சந்தோஷத்தையும் அளிக்கிறது.
தம்முடைய கல்லூரி நாட்களில் படித்த என்னுடைய ஆரம்பக் காலப் படைப்புக்களில் ஒன்றானஇடலாக்குடி ராசாசிறுகதை தம்மை மிகவும் பாதித்ததாக பாலா எழுதி இருக்கிறார். என்தலைகீழ் விகிதங்கள்என்ற நாவலைத்தான் தங்கர்பச்சான்சொல்ல மறந்த கதையாக எடுத்தார். இயக்குனர் ஞான ராஜசேகரன்பாரதி’, ‘பெரியார்படங்கள் எடுத்தபோது, ஒரு சிறு அளவில் என் பங்களிப்பும் உண்டு. என்னுடையஎட்டுத் திக்கும் மத யானைநாவலைப் படமெடுக்க சிலர் அணுகியபோது நான் மறுத்துவிட்டேன். ஆனாலும், அதைப் பல்வேறு வழிகளிலும் பலரும் எடுத்துப் பயன்படுத்திக் கொண்டார்கள்.



பாலா, ‘நான் கடவுள்படம் எடுக்கத் தொடங்கியபோது, என்னை வசனம் எழுதும்படிக் கேட்டார். ஆனால், அந்தக் கதையில் ஜெயமோகனின் நாவலுக்கும் பங்கு உண்டு என்பதால் அவர் வசனம் எழுதுவதுதான் பொருத்தம் என்று சொன்னேன். ‘பரதேசிபடத்துக்கு வசனம் எழுத வேண்டும் என்று கேட்டபோது, படத்தின் இயக்குனர், இயக்குனர் பாலா என்பதாலும், அவர் படத்தில் கையாளப்போகும் விஷயம் மிக முக்கியமான ஒன்று என்பதாலும் சம்மதித்தேன்."


முதன்முதலில் சினிமாவுக்கு வசனம் எழுதியது?

என்னுடைய இடலாக்குடி ராசாவின் தாக்கத்தில் தம்முடைய பட ஹீரோக்களை உருவாக்கியதாகச் சொன்ன பாலா, பரதேசி படத்தின் முக்கிய பாத்திரமே அந்த ராசா தான் என்று முதலில் என்னிடம் சொன்ன போது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
ஆனாலும், 60 வயதுக்குப் பிறகு நமக்கு சினிமாவெல்லாம் தேவைதானா? நம்மால் சினிமாவுக்கு வசனம் எழுத முடியுமா? என்றெல்லாம் தயக்கம் இருக்கவே செய்தது. ஆனால், ஜெயமோகன் போன்ற சில நண்பர்கள்உங்களால் முடியும்; தள்ளிப் போடாமல், உடனே உட்கார்ந்து ஒன்றிரண்டு காட்சிகளுக்கு வசனம் எழுதுங்கள்; அதன்பிறகு, தானாகவே வேலை சூடு பிடிக்கும்என்று ஊக்கமளித்தார்கள். சென்னைக்கு வந்து கதை விவாதத்தில் கலந்து கொண்டேன். கையோடு உட்கார்ந்து ஏழெட்டு நாட்களில் பாதி படத்துக்கான வசனத்தை எழுதி முடித்துவிட்டேன்."

ஷூட்டிங் போனீங்களா?

போனேன். என்னை ஹீரோயினின் அப்பா என்று நினைத்து விட்டார்கள். நான் தான் படக் காட்சிகளுக்கு வசனம் எழுதினேன் என்றாலும், காகிதத்தில் பதிவான எழுத்து, பாலா போன்றவர்களின் கையில் நடிகர்களின் உடல் மொழியால், திரையில் பதிவாகும்போது, அது இன்னமும் உயிர்ப்பு பெறுவதைக் கண்டு பிரமித்துப் போனேன். கதாபாத்திரங்கள் கதையில் அனுபவிக்கும் உடல்ரீதியான, மனரீதியான வலிகளை, திரை மூலமாக அப்படியே படம் பார்க்கிறவர்களுக்கு பாலா கடத்தி விடுகிறார். பாலா ஒரு மிக நுணுக்கமான வலி கடத்தி!" - பேசும் நாஞ்சில் நாடனின் கண்களில் விரிகின்றன அந்தக் காட்சிகள்...


நன்றி - கல்கி , புலவர் தருமி  


http://www.thehindu.com/multimedia/dynamic/00477/CB15_TY26SIRPI_GAM2_477857g.jpg

Tuesday, November 27, 2012

பரதேசி - ஆடியோ விழாவில் பாலா, பாலுமகேந்திரா ,வைரமுத்து பேசியது என்ன?


விக்ரம் - சூர்யாவை விட நான் தான் சிறந்த நடிகன்! - 'பரதேசி' பாலா 

 

'அவன் - இவன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டைரக்டர் பாலா அடுத்து டைரக்ட் செய்து வரும் படம் 'பரதேசி'.


அதர்வா, வேதிகா, தன்ஷிகா மற்றும் பலர் நடித்து வரும் இந்தப் படத்தின் பிரபல இரட்டை டைரக்டர்களில் ஒருவரான ஜெர்ரி இந்தப் படத்தில் கங்காணி என்ற முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.


நேற்று நடந்த இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸை ஒட்டி டைரக்டர் பாலா சிறப்பு பேட்டியளித்தார். அந்தப் பேட்டி இதோ உங்களுக்காக...


கேள்வி : 'பரதேசி' என்ன மாதிரியான கதை?


பரதேசின்னா வேற ஒண்ணுமில்லை. பஞ்சம் பொழைக்கப் போற ஒரு கூட்டம். அவங்களோட கதை, அதுதான்.



கேள்வி : உங்கள் படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் எல்லோருமே சினிமாவில் சீக்கிரம் பாப்புலராகி விடுகிறார்கள், ஆனால் ஹீரோயின்கள் அந்தளவுக்கு பிரபலமாவதில்லையே?



பதில் : ( சில நொடிகள் யோசிப்புக்குப் பின்...) பிதாமகன் படத்துல நடிச்ச சங்கீதா, அவ ஒரு நல்ல நடிகையாத்தானே இருக்கா... நெறைய படங்கள் நடிச்சிருக்கா? ஹிட் கொடுத்திருக்கா...? அப்புறமென்ன..? அந்த லைலா பொண்ணுக்கும் எனக்கு லவ்வுன்னு எழுதியே அந்தப் பொண்ணை வீட்டுக்கு அனுப்பிட்டீங்க, அப்புறம்.., ஆனால் இந்தப் படத்துல நடிச்சிருக்கிற ரெண்டு ஹீரோயின்களுக்கும் கண்டிப்பாக சினிமாவுல நல்ல சான்ஸஸ் இருக்கு.



கேள்வி : இந்தப் படத்துக்காக மலைகளையெல்லாம் சொந்தமா வாங்கி ஷூட்டிங் நடத்தினீங்களாமே..?


பதில் : என்னது மலையா..? அதெல்லாம் இல்லீங்க, ரெண்டாவது மலைகளையெல்லாம் விலைக்கு வாங்க முடியாது, விட்டா திருநீர் மலையையே நான் வாங்கிட்டேன்னு சொன்னாலும் சொல்வீங்க போலிருக்கு. படத்துக்காக சில காட்சிகளை காடுகள்ல எடுக்க வேண்டியிருந்தது, அதுக்கு வனத்துறையினர் ரொம்ப கெடுபிடி பண்றதுனால நானே சொந்தமா ரெண்டு ஏக்கர் நிலத்தை வாங்கி அதுல காடு மாதிரி செட்போட்டு ஷூட்டிங் பண்ணினேன். ஆனால் மரங்களையெல்லாம் வெட்டல. அத ஒரு நியூஸா போட்டு பிரச்சனை பண்ணிடாதீங்க.



கேள்வி : உங்க படங்கள்ல நடிச்ச சூர்யா, விக்ரம், ஆர்யா, அதர்வா இவங்கள்ல யார் சிறந்த நடிகர்ன்னு சொல்வீங்க?



பதில் : விஷாலை விட்டுட்டீங்க...என்றவுடன் ( நிருபர் ஆமாம்.. விஷாலும் என்று சொல்கிறார்) கேள்வியைக் கேட்டு சிரித்தவர் தாடையை தடவிக்கொண்டே.., இவங்கள்ல யாருமே சிறந்த நடிகன் கிடையாது. அவங்களை விட நான் தான் சிறந்த நடிகன்
என்றவுடன் ஒரே சிரிப்புச் சத்தம்.



கேள்வி : விளிம்பு நிலை மனிதர்களோட வாழ்க்கையைப் பத்தி மட்டுமே எப்போதுமே உங்க படங்கள்ல நல்ல கருத்துக்களை சொல்றீங்க? கமர்ஷியல் படம் பண்ணும் எண்ணம் இல்லையா..?



பதில் : கமர்சியல்ன்னா எதைச் சொல்றீங்க? அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. அப்போதைக்கு என்ன தோணுதோ அதைத்தான் நான் படமா எடுப்பேன். இந்தப் படத்தை எடுத்து முடிக்கிறதுக்கே போதும் போதும்னு ஆயிடுச்சி, அடுத்தப் படத்தைப் பத்தி யோசிக்கவே இல்லை.


கேள்வி : இந்தப்படம் 'எரியும் பனிக்காடு'ங்கிற நாவலைத் தழுவி படமா எடுத்திருக்கீங்க, இப்படி நாவலையோ, சிறுகதையையோ படமா எடுக்கிறப்போ இருக்கிற சவுகரியம் எப்படி இருக்கு?



பதில் : ம்... நாமளே ஒரு கதையை சொந்தமான யோசிச்சி அதை படமா பண்றதை விட இது இன்னும் ஈசியா இருக்கு, ரெண்டாவது முழுக்க முழுக்க இது 'எரியும் பனிக்காடு' நாவல் கிடையாது, அதுல எனக்கு பிடிச்ச ஒருபகுதியை எடுத்துக்கிட்டு என்னோட கற்பனையையும் கலந்து படமாக்கியிருக்கேன்.



கேள்வி : நல்ல கலரா, அழகா இருக்கிற ஹீரோயின்களுக்கு கருப்பு சாயத்தை தடவி மேக்கப்பெல்லாம் போட்டு அவங்களை கருப்பா காட்டுறதை விட ஏற்கனவே கருப்பா இருக்கிற ஒரு ஹீரோயினை நடிக்க வெச்சா இன்னும் ஈசியா இருக்கும்ல?



பதில் : யாரு வேதிகாவா..? அந்தப் பொண்ணு கலர்னு சொல்லுங்க, ஆனா அழகுன்னு சொல்லாதீங்க..என்றவுடன் அங்கு சிரிப்பு சத்தம், (அப்போது, இதற்கு என்ன அர்த்தம் என்று வேதிகா பக்கத்தில் இருக்கும் ஒளிப்பதிவாளர் செழியனிடன் ஆங்கிலத்தில் விளக்கம் கேட்டுக் கொள்கிறார்.) இல்லை அப்படின்னு கிடையாது, இந்தப் படத்துல கூட ஒரு கலர் கம்மியான மாலதிங்கிற ஒரு பொண்ணை ஒரு முக்கியமான கேரக்டரில் நான் அறிமுகப்படுத்துகிறேன். கேரக்டருக்கு யார் பொருத்தமா இருப்பாங்களோ அவங்களை நடிக்க வைப்பேன். கலரெல்லாம் பாக்கிறது இல்லை.



கேள்வி : இளையராஜாவை போடாம எதுக்கு ஜி.வி.பிரகாஷை மியூசிக் டைரக்டரா போட்டுருக்கீங்க?



சூர்யா,அடுத்து விக்ரம்,அடுத்து ஆர்யா, அப்புறம் சூர்யா,விக்ரம்ன்னு ஒரே ஆட்களோட வேலை பார்த்துக்கிட்டிருக்கீங்க? புதுப்புது ஆட்களோட வேலை பார்க்க மாட்டீங்களான்னு நீங்க தான் விமர்சனத்துல எழுதுனீங்க...? அதனால தான் இந்தப் பையனை கமிட் பண்ணினேன். ஆனா இப்போ நீங்களே எதுக்கு ஜி.வியை போட்டீங்கன்னு கேட்குறீங்க..


இவ்வாறு டைரக்டர் பாலா கூறினார்.

http://www.thamizhthirai.com/wp-content/gallery/paradesi-first-look/paradesi_first_look_exclusive_stills_01_0.jpg


பாலா என் மூத்த மகன் : பரதேசி ஆடியோ விழாவில் நெகிழ்ந்த பாலுமகேந்திரா!


"பாலா என் வீட்டிலேயே வளர்ந்த என் மூத்த மகன், அவன் தேசிய விருது வாங்கிய போது நான் பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை" என்று டைரக்டர் பாலுமகேந்திரா பேசினார்.

டைரக்டர் பாலா லேட்டஸ்ட்டாக தயாரித்து, டைரக்‌ஷன் செய்து வரும் 'பரதேசி' படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் இன்று சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்டு பேசிய ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான பாலுமகேந்திரா "பாலா என் மூத்த பிள்ளை" என்று நெகிழ்ந்தார்.

தொடர்ந்து பேசிய அவர்.., " என்னுடைய 'வீடு' படத்தின் போது பாலா என்னிடம் வந்து சேர்ந்தான். அவனையும், ராம் என்பவனையும் பாடலாசிரியர் அறிவுமதி என்னிடம் கொண்டு வந்து விட்டுப் போனார். நான் பாலாவை யூனிட்டில் சேர்த்துக் கொள்ளவே இல்லை.

ஆனால் அவன் சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்த நான் “ யாருப்பா..நீ நான் உன்னை பார்த்ததே இல்லையே..? என்று கேட்டேன். அதற்கு அவன் நான் உங்கள் படத்தில் தான் வேலை செய்கிறேன். மதுரையில் படித்து விட்டு உங்களிடம் சேர வேண்டும் என்று வந்து விட்டேன், நீங்கள் தான் என்னை கண்டுகொள்ளவே இல்லை என்றான், அன்றிலிருந்து அவனை நான் என்னிடம் சேர்த்துக் கோண்டேன். அவன் என் வீட்டில் ஒருவனாக வளர்ந்தான்.


பொதுவாக நான் எல்லா படங்களின் ஆடியோ ரிலீஸுக்கும் வருவேன். ஆனால் என் மனைவி வரமாட்டார். ஆனால் இந்த பரதேசி படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷனுக்கு என் மனைவி அகிலாவை கூப்பிட்டபோது அவள் உடனே வந்து விட்டாள். அந்தளவுக்கு அவன் மீது ஒரு தாய் போல அவள் பாசம் வைத்திருக்கிறாள். அதனால் தான் இந்த விழா எனக்கு முக்கிமானது" என்று பேசிய பாலுமகேந்திரா.., தொடர்ந்து.., "பாலாவும் தேசிய விருது வாங்கி விட்டான், என்னுடைய இன்னொரு பிள்ளை வெற்றிமாறனும் தேசியவிருது வாங்கி விட்டான், எனது ரெண்டு பிள்ளைகளும் தேசிய விருது வாங்கியதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். ஒரு அப்பாவுக்கு இதைவிட வேறு என்ன சந்தோஷம் வேண்டும்.


"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்"  என்ற குறளைப் போல நான் மகிழ்கிறேன்" என்றார்.

விழாவில் நடிகர்கள் சூர்யா,விக்ரம், ஒளிப்பதிவாளர் செழியன், கவிப்பேரரசு வைரமுத்து, ஹீரோ அதர்வா,ஹீரோயின்ஸ் வேதிகா, தன்ஷிகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


டைரக்டர் பாலாவின் 'பரதேசி' படத்துக்காக தனது உடல் எடையைக் குறைத்திருக்கிறாராம் நடிகர் அதர்வா.


ஆர்யா-விஷால் இணைந்து நடித்த 'அவன் - இவன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு பாலா சைலண்ட்டாக டைரக்‌ஷன் செய்து வரும் படம் தான் 'பரதேசி'.

அதர்வா ஹீரோவாகவும், வேதிகா ஹீரோயினாகவும் நடித்து வரும் இந்தப் படத்துக்காக தனக்கு பழக்கப்பட்ட ஏரியாவான தேனி,கம்பம் உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங்கை நடத்தி வருகிறார். மேற்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் ஆக்டிங் என்ற பெயரில் நடிகர் அதர்வாவை பிழிந்து எடுத்துக் கொண்டிருக்கிறாராம் பாலா.

அதன் ஒரு பகுதியாக அதர்வாவை சுமார் 10 கிலோ வரை உடல் எடையை குறைக்கச் சொல்லியிருக்கிறார். கேரக்டருக்கு இந்த எடைக்குறைப்பு முக்கியம் என்று பாலா சொன்னதால் அதர்வாவும் வேறு வழியில்லாததால் ரொம்பவும் மெனக்கட்டு தனது உடல் எடையைக் குறைத்தாராம்.

இதுவரை இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா என இசைக் கூட்டணி போட்ட பாலா இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷை மியூசிக் டைரக்டராக கமிட் செய்திருக்கிறார். படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் இந்த மாதம் 25-ஆம் தேதி படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார் டைரக்டர் பாலா.


என்னமோ போங்க.. எடையைக்குறைக்க அந்த மெடிசின் இந்த மாத்திரைனு டிவில காட்டுறதெல்லாம் வொர்க்கவுட் ஆகுதோ இல்லையோ இந்த பாலா மெடிசின் மட்டும் கரெக்டா வொர்க்கவுட் ஆகுது; சேது விக்ரம், செய்யாத படத்துக்கு அஜீத், இப்பொ அதர்வா என.




http://www.tamil.haihoi.com/news/Dhansika%20Character%20In%20Paradesi_HaiHoi_214.jpeg
நான் பாடல்களை திருத்த அனுமதிப்பதில்லை என்று யாரோ தவறான வதந்தியை பரப்பி விட்டிருப்பதாக கவிஞர் வைரமுத்து கூறினார்.




டைரக்டர் பாலாவின் ’பரதேசி’ படத்தின் எல்லா பாடல்களை எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து ஆடியோ ரிலீஸ் பங்ஷனில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்...



இந்த 'பரதேசி' படம், தமிழ் திரையுலகில் முக்கியமான படமாக இருக்கும். படத்தில், ஒரு விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கை காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. பாலா, ஒரு சராசரி கலைஞன் அல்ல. மனிதர்களின் மறுபக்கத்தைப் பார்க்க பாலா ஆசைப்படுகிறார். இங்கே மாறுபட்டு சிந்திக்கிறவன் தான் எப்போதுமே கவனிக்கப்படுகிறான். அந்த வகையில் இயக்குனர் பாலா மாறுபட்டு சிந்திக்கிறவர்.


வைரமுத்து தனது பாடல்களில் திருத்தங்களை செய்யவிடுவதில்லை என்று என்னைப் பற்றி யாரோ சிலர் வதந்தியை பரப்பியிருக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை., நியாயமான திருத்தங்களை நான் எப்போதும் செய்து வருகிறேன். பொருந்தாத திருத்தங்களை நான் ஏற்றுக்கொள்வதில்லை.


இந்த படத்தில் கூட , ‘கண்ணீர்தானா கண்ணீர்தானா செந்தேனீரில் செம்பாதி கண்ணீர்தானா?’ என்று ஒரு பாடல் எழுதியிருந்தேன். இதை, ‘செந்நீர்தானா செந்நீர்தானா செந்தேனீரில் செம்பாதி கண்ணீர்தானா?’ என்று மாற்றிக் கொள்ளலாமா? என டைரக்டர் பாலா என்னிடம் கேட்டார். பாலாவின் திருத்தம் எனக்கு நியாயமாக இருந்தது. அவருடைய திருத்தத்தை ஏற்றுக் கொண்டேன்.


நான் எல்லா இயக்குனர்களும் சொல்லும் திருத்தங்களையும் நியாயமான காரணமாக இருந்தால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வேன். அப்படித்தான் பெரும்பாலான இயக்குனர்கள் என் பாடல்களை என் அனுமதியோடு திருத்தியிருக்கிறார்கள், ஆனால் பாரதிராஜா மட்டும் தான் என் பாடல்களை இதுவரை திருத்தியதேயில்லை.


அதேபோல எல்லோரும் பாரதிராஜா படங்களில் வரும் நல்ல இனிமையான பாடல்களைப் போல தாருங்கள் என்று கேட்கிறார்கள், அதுதான் சொன்னேன், பாரதிராஜா என் பாடல்களை திருத்துவதிலை அதனால் அந்தப் பாடல்கள் பிரபலமாகி விடுகிறது.


இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

 நன்றி - சவுண்ட் கேமரா ஆக்‌ஷன், நக்கீரன், தினமணி

http://chennaionline.com/images/articles/October2012/7ed70fca-9621-4f3b-bf1e-e4a3043d5445OtherImage.jpg



டிஸ்கி 1 - பரதேசி படத்தின் திரைக்கதை நெட்டில் வெளியானது
டிஸ்கி 2 - பரதேசி - கலக்கல் ட்ரெய்லர்,
டிஸ்கி 3 - பாலாவின் பேட்டி

http://www.adrasaka.com/2012/10/blog-post_7245.html


http://sim.in.com/f4f460a229d5c7e281072787ca350276_ls.jpg 

Sunday, November 25, 2012

பரதேசி படத்தின் திரைக்கதை நெட்டில் வெளியானது

எரியும் பனிக்காடு எனும் நாவலைத்தான் பாலா பரதேசி ஆக்கி இருக்கிறார். அது பற்றி திரு எஸ் ராம கிருஷ்ணன்


சமீபத்தில் நான் வாசித்த தமிழ்நாவல்களில் முக்கியமானது எரியும்பனிக்காடு. பி.எச்.டேனியலால் எழுதப்பட்ட இந்த நாவல் ரெட் டீ என்ற பெயரில் ஆங்கிலத்தில் முப்பத்தியெட்டு வருடங்களுக்கு முன்பாக வெளிவந்தது.

இந்த நாவல் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழ்நாட்டின் வால்பாறையில் தேயிலை தோட்டம் உருவானதையும் அங்கு வேலைக்குச் சென்ற கூலிகளின் அவலவாழ்வையும் விவரிக்கிறது. தமிழக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வை நுட்பமாக விவரிக்கும் ஒரே நாவல் இது தான் என்பேன். இந்த நாவலைத் தமிழாக்கம் செய்தவர் இரா. முருகவேள்.

1940 ம் ஆண்டுகளில் தலைமை மருத்துவ அதிகாரியாக வால்பாறை காரமலை எஸ்டேட்டில் கால் பதித்த டேனியல் அங்குள்ள நிலவிய சகிக்க முடியாத மனிததன்மையற்ற சூழலைக்கண்டு அதை எதிர்த்துக் குரல் தந்ததோடு தென்னிந்திய தோட்ட உத்தியோகிஸ்தர்கள் சங்கம் என்ற ஒன்றையும் நிறுவி தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்காக துணை நின்றிருக்கிறார்.

தேயிலைத் தோட்டத்தின் பனிமூட்டத்தில் மறைந்து போயிருந்த ஆயிரமாயிரம் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வை நேர்த்தியாக பதிவுசெய்திருக்கிறது டேனியலின் நாவல். பிளான்டேஷன் பனோரமா என்ற கட்டுரைத்தொகுப்பும் டாக்டர்ஸ் டேல்ஸ் என்ற சிறுகதை தொகுப்பையும் ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறார் டேனியல்.  அவை இன்னமும் தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. 1969ல் இந்த நாவல் வெளியான போது அதற்கு முன்னுரை எழுதியிருக்கிறார் துணை குடியரசு தலைவர் விவிகிரி.

**

1925 ஆண்டின் டிசம்பரில் நாவல் துவங்குகிறது.  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமத்தில் வசிக்கும் அன்றாட வேலை செய்து பிழைக்கும் கருப்பனின் வாழ்வு விவரிக்கபடுகிறது. ஆறுமாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்ட கருப்பன் வேலை கிடைக்காத காரணத்தால் மிகுந்த சிரமப்படுகிறான். அவன் மனைவி வள்ளி இருப்பதைக் கொண்டு காலத்தை ஒட்டுகிறாள். நாளைக்கு என்ன செய்வது என்ற கவலை அவன் மனதை அரிக்கிறது. வேலை தேடி அதிகாலையில் அருகாமையில் உள்ள ஊரான கயற்றாறுக்கு புறப்படுகிறான்.

கயற்றாறின் அன்றைய காட்சி விவரிக்கபடுகிறது. உணவங்ககளில் தலித் மக்களுக்கு தனிக்குவளை தரப்படுவது. அவர்கள் தரையில் உட்கார்ந்து தனியே சாப்பிட வேண்டும் என்று கட்டாயபடுத்துவது. சிரட்டையில் உணவை கொண்டுவந்துவைத்துவிட்டு போய்விடும் பழக்கம் என யாவும் விவரிக்கபடுகிறது. அந்த அவலங்களுக்கு நடுவே வேலை கேட்டு யாசிக்கிறான் கருப்பன்.

அப்போது தேயிலை தோட்டங்களுக்கு ஆள்பிடிக்கும் கங்காணியான சங்கரபாண்டி. அவன் தேயிலை தோட்டத்தில் வேலை செய்தால் கைநிறைய பணம் சம்பாதிக்கலாம் நீ உன் மனைவியை கூட்டிக் கொண்டு வந்துவிடு என்று ஆசைவார்த்தை காட்டி அவனை நம்ப வைத்து முன்பணம் தந்து அனுப்பி வைக்கிறான்

வேலையில்லாமல் கரிசல்காட்டில் கிடப்பதை விட தேயிலை தோட்டவேலைக்கு போகலாம் என்றுகருப்பனும் அவன் மனைவியும் கிளம்புகிறார். அவர்களைப் போல கூலிகளாக அழைத்துவரப்பட்டவர்கள் ஒன்றாக ரயிலில் பயணம்செய்கிறார்கள். பலிமுகாம்களுக்கு ரயிலில் யூதர்கள் அழைத்துச் செல்லப்பட்ட காட்சிகளை நினைவுபடுத்துவது போன்றிருக்கிறது இந்த ரயில் பயணவிவரணை.

ரயிலில் பயணம் செய்து இறங்கி நடந்து மலையேறி அவர்கள் தேயிலைத் தோட்டம் உள்ள மலைப்பகுதிக்கு செல்வதற்குள் இருட்ட துவங்கிவிடுகிறது. இந்த பயணம் நாவலின் மிக முக்கிய பகுதியாக விவரிக்கபடுகிறது. கண்முன்னே விரியும் காட்சிகள் போல எழுத்தின் வழியே அவை நமக்கு புலப்படுகின்றன.

அவர்கள் நினைத்தது போலின்றி தேயிலை தோட்டத்து வேலை ஒரு அடிமை வாழ்வு என்பது போய் இறங்கிய முதல் நாள் இரவே தெரிந்து போய்விடுகிறது. அந்த மலையிலிருந்து எவரும் தப்பிபோக முடியாது என்ற நிலையில் அவர்களை ஆடுமாடுகளை போல கொட்டடியில் அடைக்கிறார்கள். குளிரும், கடினமான மலையில் ஏறி நடந்த வேதனையும் அவமரியாதையாக நடத்தபடுவதும்  அவர்களை உறக்கமற்று செய்கிறது.

மறுநாள் அவர்கள் கூலிகளாக பதிவு செய்யப்படுகிறார்கள். அங்கு காரணமில்லாமல் கருப்பன் அடிபடுகிறான். அவன் மனைவியை பகிரங்கமாக ரசிக்கிறான் எஸ்டேட் நிர்வாகி. இங்கே நடப்பவற்றை சகித்து கொண்டால் மட்டுமே வாழமுடியும் எதையும் சகித்து கொள்ளுங்கள் என்று உடன் இருந்தவர்கள் அமைதிபடுத்துகிறார்கள். ஆனால் கிராமத்து மனிதர்களான கருப்பனுக்கும் வள்ளிக்கும் இந்த அவமானங்கள் மிகுந்த வலியை உருவாக்கின்றன.

அங்கிருந்து வெளியேறி போகவே முடியாது என்ற  நிலையில் உடல்வருத்தம் பாராமல் அடிமை வாழ்வை நடத்த துவங்கி மூன்று ஆண்டுகள் கூலிகளாக அவர்கள் வேலை செய்வதையும் அந்த நாட்களில் பாலியல் ரீதியாக வள்ளி சந்திக்கும் நெருக்கடியும் கருப்பன் அவமதிக்கபடுவதும் அடிவாங்குவதும், அவர்களை போன்ற சக தொழிலாளர்களை வெள்ளைகார முதலாளிகளும் அவர்களது ஏவல் நாய்களும் பன்றிகளை விடவும் மிக மோசமாக நடத்தும் விதமும் விஸ்தாராமாக விவரிக்கபடுகிறது.

ஒருவகையில் அன்றைய தேயிலைத் தோட்டம் ஒரு இருண்ட உலகம். ஒரு நரகம். அதன் அவலங்கள் உலகம் அறியவில்லை. முறையான சாலைகள் கிடையாது. கடுங்குளிர். போதுமான உணவில்லை. போதுமான உடையில்லை. உறக்கமில்லை. நோய்மை எதிர்பாராத சாவு, நம்பிக்கையிழப்பின் உச்சநிலை என்று நாவல்  காட்டும் மலைவாழ்வு அதிர்ச்சியானதொரு உண்மை.

தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது, பெண்கள் பாலியல் ரீதியாக தொடர்ந்து வன்முறைக்கு உள்ளாகிறார்கள், ஆண்கள் காரணமின்றி அடித்து நொறுக்கபடுவது. அன்றாட உணவிற்கு கூட போராட வேண்டிய சூழல் என நீளும் தேயிலைத் தோட்ட வரலாறு கண்முன்னே கதையாக விரிவடைகிறது.

நாவல் வாசிப்பின் ஊடாக வாசகன் திகைத்தும் கலங்கியும் நிற்கும் தருணங்கள் நிறைய உள்ளன. குறிப்பாக தேயிலை தோட்டத்தில் திடீரென காய்ச்சல் பரவுகிறது. மலேரியா போன்ற கடும் சுரத்தில் பாதிக்கபட்டு நடுங்குகிறார்கள். ஆனால் அவர்களுக்கு வைத்தியம் செய்வதற்கு முறையான மருத்துவர்கள் கிடையாது. கம்பௌண்டராக இருந்த ஒருவர் மருத்துவராக வேலை செய்கிறார். அவராலும் அத்தனை நோயாளிகளையும் கவனிக்கமுடியவில்லை.

கருப்பனுக்கும் காய்ச்சல் அடிக்கிறது. நடுங்குகிறான். மருத்துவர் வந்து மருந்து தருகிறார். வள்ளி செய்வதறியாமல் தடுமாறுகிறாள். நோய்மையிலும் மறுநாள் காலை வேலைக்கு கிளம்பும்படியாக கங்காணி மிரட்டுகிறான். தன்னால் முடியாது என்று கருப்பன் சொன்னதும் அவன் மனைவியை வேலைக்கு அனுப்ப சொல்லி கத்துகிறான். வேறுவழியில்லாமல் அவள் வேலைக்கு செல்கிறாள். நோய் முற்றி இறந்தவர்கள் அதே மண்ணில் புதைக்கபடுகிறார்கள். நோய் பலரை காவு கொள்கிறது. அதே நேரம் இதே எஸ்டேட்டில் வெள்ளைகாரர்கள் மதுவிருந்து நடத்தி தங்கள் வாரஇறுதி கொண்டாட்டங்களை இசையோடு கழிக்கிறார்கள்.

எளிய மனிதர்களின் வாழ்க்கை எந்த அர்த்தமும் இன்று காலனிய பிரபுக்களுக்கு அடிமைதொண்டு செய்தவற்கே முடிந்து போகிறது. குளிரில் பெண்கள் விரல்கள் எரிய தேயிலை கொழுந்து கிள்ளுகிறார்கள். ஆனால் அதை எடைபோடும் ஆள் பாதியை தனது கள்ளமனைவியின் பெயரில் பதிவு செய்துவிடுகிறான். அழகான பெண்ணாக இருந்தால்இச்சைக்கு மயங்கும்படியாக வற்புறுத்துகிறான்.

நாவல் முழுவதும் வள்ளியின் மீது இச்சை மிகுந்த கண்கள் விழுந்து கொண்டேயிருக்கின்றன. ஒரு பக்கம் தொழிலாளர்கள் கீழ்தரமாக நடத்தபடுகிறார்கள். இன்னொரு பக்கம் தேயிலைத் தோட்டத்தை நிர்வாகம் செய்கின்றவர்கள் அதை சுரண்டி வாழ்கிறார்கள். அப்படி சுரண்டி வாழ்வதற்காக தனது மனைவியை வெள்ளைகாரனுக்கு கூட்டிக் கொடுக்கிறார்கள். வீட்டில் விருந்து தந்து  வெள்ளைகார பிரபுக்களை குளிப்பாட்டுகிறார்கள். ஒருவருக்கொருவர் குழிதோண்டி புதைத்து கொள்கிறார்கள். பிழைப்பிற்காக மனிதர்கள் எந்த அளவு மோசமாக நடந்து கொள்வார்கள் என்பதற்கு இந்த நாவலில் வரும் ஒட்டுண்ணிகள் சிறந்த உதாரணம்.

நாவலின் சிறப்பு அது கவனம் கொள்ளும் அடிநிலை மக்களின் வாழ்வு. நேரடியான அனுபவம் கொண்டவர் டேனியல் என்பதால் துல்லியமாக அதை விவரித்திருக்கிறார். அதுபோலவே இயற்கையை உற்று நோக்கி அவதானிக்கும் கூர்மை அவருக்கு இருந்திருக்கிறது. ஆகவேதான் தேயிலைத் தோட்டங்களில் உள்ள பறவைகள், பூச்சிகள், விதவிதவிதமான பூக்கள், ஒடைகள், மழைக்காலத்தின் அடைமழை. ஆளை மறைந்து பெய்யும் பனி என்று இயற்கையின் அத்தனை நுட்பங்களையும் தன் எழுத்தில் பதிவு செய்திருக்கிறார்.

மருத்துவர் என்பதால் அவருக்கு நோய்மை பற்றியும் அதனால் உருவாகும் வலியும் உளப்பிரச்சனைகளும் நன்றாக தெரிந்திருக்கிறது. இந்த நாவலில் எல்லா கதாபாத்திரங்களின் மனநிலைகளும் விரிவாக வெளிப்படுத்தபட்டுள்ளன. மோசமான குணமுடைய கதாபாத்திரங்கள் கூட அப்படி நடந்து கொள்வதற்கான காரணங்கள் விவரிக்கபடுகின்றன.

நாவலின் ஊடாக டேனியல் போல இரக்கமனது கொண்ட மருத்துவராக  ஆபிரகாம் என்ற ஒரு கதாபாத்திரம் அறிமுகமாகிறார்.  தேயிலை தோட்ட தொழிலாளர்களின் ஆரோக்கியம் குறித்து முதலாளிகளுடன் போராடுகிறார். தொழிலாளர்களை பரிவோடு கவனிக்கிறார். வள்ளி கருப்பன் இருவருமே இவரது வருகைக்கு பிறகு ஆறுதல் அடைய துவங்குகிறார். நோய்வாய்பட்ட  வள்ளி மீண்டும் தனக்கு ஒரு புதுவாழ்வு பிறக்க போகிறது என்று நம்பிக்கை கொள்கிறாள். அவர்களை போலவே அங்கிருந்த பலரும் தங்களுக்கு இனிவிடிவு காலம் என்று நம்புகிறார்கள். ஆனால் எதிர்பாராமை அவர்கள் மீழ கவிழு கருப்பனின் கனவு நிர்மூலமாக்கபடுகிறது.

நாவலின் அத்தியாயங்கள் துவங்கும் போது அதற்கு பொருத்தமானதொரு மேற்கோள்கள் டேனியலால் இணைக்கபட்டிருக்கின்றன. அவர் எந்த அளவு ஆழ்ந்து இலக்கியம் படித்தவர் என்பதை அது ஒரு பக்கம் நிருபிக்கிறது.  டிக்கன்ஸில் துவங்கி காந்தி, தோரு, லாங்பெல்லோ என்று விரிந்து பைபிள் வரையான பல்வேறு முக்கிய பகுதிகள் மேற்கோள்களாக தரப்படுகின்றன. ஒருவகையில் இந்த மேற்கோள்கள் அத்தியாயங்களின்  பிரதான அம்சத்தின் குறியீடுகளை போல காணப்படுகின்றன.

உயிரியல் ரீதியாக பார்த்தால் விலங்குகளிலேயே வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவன் மனிதன் தான். திட்டமிட்டு தனது சொந்த இனத்தை வேட்டையாடும் ஒரே விலங்கும் மனிதன் தான் என்ற வில்லியம் ஜேம்ஸின் மேற்கோள் தான் இந்த நாவலின் மொத்த சாரமும்.

நான் வாசித்தவரை இந்திய நாவல்களில் மிக அரிதாகவே தோட்ட தொழிலாளர்களின் வாழ்வு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மலையாளத்தில் விஷகன்னிகா என்ற நாவலை வாசித்திருக்கிறேன். புதுமைபித்தன் துன்பக்கேணி என்ற நீண்ட சிறுகதையை எழுதியிருக்கிறார். மலையக தேயிலை தோட்ட வாழ்வு பற்றிய தனித்த நாவல்கள் இலங்கையில் வெளியாகி உள்ளன.  சமீபத்தில் கூட டார்ஜலிங் என்ற பெயரில் தேயிலை தோட்டம் குறித்து ஆங்கில நாவல் வெளியாகியிருக்கிறது.

டேனியலின் கதை சொல்லும் குரலின் அண்மையும், கதையின் ஊடாக அவர் காட்டும் இருளும்வெளிச்சமும் மிக முக்கியமானது. குறிப்பாக நாவல் முடியும் போது ஏற்படும் மனவெழுச்சி சொல்லில் அடங்காதது.

தேயிலை தோட்டங்களின் பசுமைக்கு பின்னால் அதை உருவாக்கிய மனிதர்களின் எலும்புகள் புதையுண்டு கிடப்பதையும் பிழைக்க வந்து அங்கேயே மடிந்து போன நூற்றுக்கணக்கான மக்களின் வலி நிரம்பிய குரல்கள் இன்றும் காற்றில் கேட்பதையும் நாவலின் வழியே உணர முடிகிறது.

சுரங்க தொழிலாளர்களை பற்றிய எமிலி ஜோலாவின் நாவல் சுரங்க தொழில் முறைக்கே பல புதிய சட்ட மாற்றங்களை கொண்டுவந்தது. டிக்கன்ஸின் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய பதிவுகள் புதிய சட்டங்கள் உருவாக காரணமாக இருந்திருக்கின்றன. அந்த வகையில் ஒரு போராளியாக மலையக மக்களின் வாழ்வை செம்மைபடுத்த முன்நின்ற டேனியலின் படைப்பு நேர்மை நாவல் முழுவதும் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது.

நேரடியாக தமிழில் எழுதப்பட்டது போன்ற நெருக்கத்தை மொழிபெயர்ப்பில் கொண்டு வந்த  மொழிபெயர்ப்பாளர் முருகவேள் பாராட்டுக்கு உரியவர். நாவலை வெளியிட்ட விடியல் பதிப்பகத்திற்கு இந்த நாவல் வெளிவரக்காரணமாக இருந்த நண்பர்களும் குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.

நாம் குடிக்கும் ஒவ்வொரு கோப்பைத் தேநீருக்கு பின்னாலும் முகம் தெரியாத மனிதர்களின் வியர்வையும் கண்ணீரும் கலந்திருக்கிறது என்பதை இந்த நாவல் அழகாகப் பதிவு செய்திருக்கிறது. அவசியம் வாசிக்கப்பட வேண்டிய நாவல் என்று இதைச் சிபாரிசு செய்கிறேன்.

எரியும் பனிக்காடு. பி.எச்.டேனியல்.  தமிழில் இரா. முருகவேள். விடியல் பதிப்பகம். கோவை.  விலை ரூ.150.


நன்றி - எஸ் ராம கிருஷ்ணன்

பரதேசி - கலக்கல் ட்ரெய்லர், பாலாவின் பேட்டி

http://chennai365.com/wp-content/uploads/Poster/Paradesi-Movie-Latest-Posters/Paradesi-Movie-Latest-Posters-Stills4355Aa12.jpg

பாலாவின் பரதேசி படம் விரைவில் ரீலிஸ் ஆகும் என கூறப்படுகிறது. தேசிய விருது இயக்குனர் பாலா இயக்கியுள்ள படம் பரதேசி. நடிகர் முரளியின் மகன் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். தன்ஷிகா மற்றும் வேதிகா ஹீரோயினாக நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்



. இந்தப் படம் மலையாள நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. படத்திற்கு பரதேசி என்று பெயரிட்டிருக்கிறார் பாலா. படத்தின் சூட்டிங் முழுமையாக முடிந்துள்ள நிலையில், தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. இதனையடுத்து பாலா,


. இதனால் அடுத்த மாதம் மத்தியில் பரதேசி படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறும் என படக்குழு தெரிவித்துள்ளது. பரதேசி படத்துக்கு பிறகு விஷாலை வைத்து படம் இயக்க பாலா திட்டமிட்டு இருக்கிறாராம்.


நன்றி - தினமலர்



பாலாவின் ’பரதேசி’! சில தகவல்கள்!


அவன்-இவன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கும் படம் ’பரதேசி’. நடிகர் முரளியின் மகன் அதர்வா,தன்ஷிகா,வேதிகா ஆகியோர் ஹீரோ ஹீரோயின்களாக நடிக்க நடிகை உமா ரியாஸ்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘எரியும் தணல்’ என்ற மலையாள நாவலைத் தழுவி எடுக்கப்படும் பரதேசி. தமிழ்நாட்டின் மலைக்கிராமப் பகுதிகளில் படமாக்கப்பட்டுக்கொண்டிருந்த பரதேசி, கேரளாவின் சில பகுதிகளிலும் படமாக்கப்பட்டது. மூணார், குற்றாலம் போன்ற பகுதிகளில் கடைசிகட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு இப்போது டப்பிங் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறது பரதேசி யூனிட்.


இந்த படத்தில் 
வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை தன்ஷிகா அரவான் படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தன்ஷிகாவின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படாமல் போனதால் தன்ஷிகாவிற்கு எமாற்றமே.ஆனாலும் மனம் தளராமல் பாலா படத்திலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் தன்ஷிகா. 

பாலா படத்தில் நடிக்கும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சினிமா உலகில் ஒரு நல்ல மார்கெட் கிடைக்கும். எனவே தன்ஷிகா அரவானில் விட்டதை பரதேசியில் பிடிக்கிறாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த மாத இறுதியில் பரதேசி படத்தின் இசை வெளியிடப்படும் எனத் தெரிகிறது. பரதேசி படத்தின் மொத்த ஷூட்டிங் ஷெட்யூல் 90 நாட்கள் தான் என்கிற போது படம் ரிலீஸ் செய்ய தாமதம் ஆகாது என்கின்றனர் படக்குழுவினர்.
 
 நன்றி - நக்கீரன் 

http://www.cinegemini.com/wp-content/uploads/2012/10/bala-in-paradesi-movie-stills-adharvaa-murali-9.jpg

1930-களில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக அதர்வா முரளி மற்றும் கதாநாயகிகளாக வேதிகா C குமார், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.



திரைப்படத்தின்  படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாலூர், மானாமதுரை மற்றும் கேரள மாநிலம் மூணார், தலையார், தேனி மாவட்ட கண்ணக்கரை வனப் பகுதிகளில் இடைவிடாது நடைபெற்று முடிவடைந்துள்ளது.



சிறப்பு தகவல்கள்:


http://www.galatta.com/assets/gallery/movie/paradesi-9683/image-big/paradesi-18.jpg

இயக்குனர் பாலா இசை அமைப்பாளர் G V பிரகாஷ் குமார், ஒளிப்பதிவாளர் செழியன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், படத்தொகுப்பாளர் கிஷோர் ஆகியோருடன் முதன் முறையாக இணைந்து பணி புரிந்திருக்கிறார்.

பரதேசி படத்தின் படப்பிடிப்பு 90 நாட்களில் முடிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 இத்திரைபடத்தின் பாடல் மற்றும் டிரைலர் லண்டனில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.




இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளியிட உறுதி செய்யப்பட்டுள்ளது.


நன்றி - தமிழ் மீடியா  

ஆனந்த விகடனில் வந்த பரதேசி பாலாவின் பேட்டி -http://www.adrasaka.com/2012/10/blog-post_7245.html