Showing posts with label திரைவிமர்சனம். Show all posts
Showing posts with label திரைவிமர்சனம். Show all posts

Wednesday, February 27, 2013

சில்லுனு ஒர் சந்திப்பு - சினிமா விமர்சனம்

 

அந்தக்காலத்துல சீத்தலைச்சாத்தனார்னு ஒரு புலவர் இருந்தாரு. அவர் ஏதாவது தப்பா எழுதிட்டா தன் தலைல தானே எழுத்தாணியால குத்திக்குவாரு. அப்படி குத்தி குத்தி மண்டை செப்டிக் ஆகி சீழ்த்தலை சாத்தனார் ஆகிட்டாரு, பேச்சு வழக்கில் பின் சீத்தலைச்சாத்தனார்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க . அதே மாதிரி ஒரு ஃபிகரு தான் என்ன தப்பா சொன்னாலும் அழகா தன் மண்டைல கொட்டிக்கறாரு ( நல்ல வேளை ... மண்டைல கொட்னாரு ) 


ஹீரோயின் மண்டைல கொட்டிக்கற அழகைப்பார்த்து ஹீரோவுக்கு லவ் வந்து தொலைச்சுடுது. 2 கேனங்களும் லவ் பண்ணுது . இதுல என்ன புதுமைன்னா அவங்க 2  வீட்டு பெற்றோர்களும் மாமா வேலை பார்க்காத குறையா  அவங்க லவ்வுக்கு சப்போர்ட் பண்றாங்க . ( ஒரு சீன்ல மாடில இருக்கும் பெட்ரூம்க்கு 2 பேரையும் அனுப்பிட்டு 2 பெற்றோர்களும் கெக்கே பிக்கே னு இளிக்குதுங்க )

படத்துல வில்லனே இல்லைன்னு தெரிஞ்சதுமே நமக்கு சிச்சுவேஷன் தான் வில்லன்னு தெரிஞ்சுடுது. ஹீரோவுக்கு  +2 படிக்கும்போது ஒரு  லவ் இருந்த மேட்டர் ஹீரோயினுக்கு தெரிஞ்சுடுது , ரொம்ப சென்சிட்டிவ் கேரக்டரான ஹீரோயின் டூ விட்டுட்டு போய்டுது . 

 ஹீரோ அந்த + 2 படிக்கறப்ப லவ்வுன ஃபிகரை இப்போ மீட் பண்றாரு. 2 பேரும் லவ்வைப்புதுப்பிச்சாங்களா? இல்லையா? யார் கூட ஹீரோ ஜோடி சேர்றார்? என்பதே கதை

களவாணி படம் ஹிட் ஆனது இயக்குநர் சற்குணத்தால. விமல் தன்னால தான் அப்டினு நினைச்சுட்டு இருக்கார் போல. ரொம்ப அசால்ட்டு . என்னமோ புருஷனை மதிக்காத பொண்டாட்டி மாதிரி படம் முழுக்க ஏனோ தானோன்னு நடிச்சிருக்காரு . வசனம் பேசும்போது வாய்ஸ் மாடுலேஷன் சுத்தமா வர்லை . கவனம் செலுத்துனா நல்லது . மற்றபடி ஆள் பர்சனாலிட்டி ... 

ஹீரோயின் தீபா ஷா , ஃபிகருக்கு  கண் உதடு 2ம் ரொம்பச்சின்னது . ( இனி ஒண்ணும் பண்ண முடியாது , சும்மா சொல்லி வைப்போம் )  அடிக்கடி தலைல கொட்டிக்கும் சீன், வெட்கப்படுவது என ஸ்கோர் பண்றார். க்யூட்டான நடிப்பு , ஆனா பாப்பாவுக்கு கோபம் சரியா வர்லை . இன்னும் வளரனும் ( ஃபீலிங்க்ஸை சொன்னேன் ) 


 போஸ்டர்ல மார்க்கெட் வேல்யூ ஏத்திக்க இன்னொரு ஹீரோயின் ஓவியா. நேர் கொண்ட பார்வை , நிமிர்ந்த நன்னடை வேணும்னு பாரதியார் சொன்னாலும் சொன்னாரு . ஓவியா டைட் டி சர்ட் போட்டுக்கிட்டு நெஞ்சை நிமிர்த்திட்டு படம் பூரா வருது . என்னமோ ஜிம்ல பெஞ்ச் பிரஸ் எக்சசைஸ் டூ செஸ்ட் பண்ணிட்டு அப்போதான் வெளில வர்ற மாதிரி ஒரு பில்டப் . செம கிளு கிளுப்பு . இவர் +2 கேர்ளா வர்றது கூட ஓக்கே , ஆனா விமல் கூட  + 2 பாய்னு சொல்றது எல்லாம் ஓவரோ ஓவர் 





 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1.  போஸ்டர் டிசைனும் , டைட்டிலும் செமயான லவ் ஸ்டோரி போல என எண்ண வைக்கும் யுக்தி , நல்லா ஒர்க் அவுட் ஆகி  ஓப்பனிங்க்ல தியேட்டருக்கு காலேஜ் ஸ்டூடண்ட்சை வர வெச்சிருக்கு 



2. சின்னத்தம்பி பெரிய தம்பி பிரபு சத்யராஜ்  மாதிரி சின்ன தங்கச்சி பெரிய தங்கச்சி மாதிரி தீபா ஷா , ஓவியா வை முறையே ஹீரோயின் நெம்பர் 1 , நெம்பர் 2 வா புக் பண்ணது 


3. இதே ஹீரோ விமல் நடிச்ச இஷ்டம் படக்கதையை கொஞ்சம் உல்டா பண்ணி இவர் கிட்டேயே கால்ஷீட் வாங்குனது


4. மனோபாலா காமெடி டிராக்கை டபுள் மீனிங்கில் எழுதி சி செண்ட்டர் ரசிகர்களை கவர முயன்றது 



5. ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு , லொக்கேஷன் செலக்‌ஷன் 2ம் குட் 




இயக்குநரிடம் சில கேள்விகள்



1. ஓப்பனிங்க் சீன்ல ஹீரோ ஹீரோயின் 2 பேரும்  பிளஸ் டூ ஸ்டூடண்ட்ஸா டவுன் பஸ்ல டிக்கேட் எடுக்காம பொய் செக்கிங்க்ல மாட்டிக்கறாங்க . ஓக்கே , ஆனா  அதுக்காக 2 பேரையும் போலீஸ் ஜீப்ல ஏத்திட்டு போகுமா? வார்ன் பண்ணி விட்டுடுவாங்க . அதுவும் மாணவியை ஜீப்ல ஏத்திட்டு போக சட்டத்துல இடம் இல்லை 



2.  ஹீரோ கூட சைக்கிள் ல போக ஹீரோயின் தன்னோட சைக்கிளை  ஹேர் பின்னால டயரை குத்தி பஞ்சர் பண்ணிக்குது. அது ஏன் காலம் காலமா அப்படியே பண்றாங்க? வால்ட்யூப்பை ஓப்பன் பண்ணி விட்டா காத்து இறங்கிட்டுப்போகுது . அவன் என்ன செக் பண்ணவா போறான்? 


3. ஹீரோ ஃபோன்ல  “ அங்கே தான் வந்துட்டு இருக்கோம் “னு பன்மைல தான் சொல்றாரு , எதுக்கு “ அவளையும் கூட்டிட்டு வா அப்டினு அம்மா சொல்வதா ஒரு வசனம் ? 



4.  லவ்வர்ஸ் ஹோட்டல்ல சாப்பிடுவதும் , காதலி லவ் பண்ணலைன்னு சொன்னதும் காதலன் தனித்தனி பில் என்பதும் உடனே காதலி கிஸ் கொடுப்பதும் பல படங்களில் பார்த்து சலித்த சீன். அந்த காமெடியை அவ்வளவு நீளமா மொக்கையா கொண்டு போகனுமா? 



5. இந்த அபார்ட்மெண்ட்ல இருக்கும் எல்லா பசங்களுக்கும் நான் தான் டாக்டர் அப்டினு ஓவியா சொல்லும் டபுள் மீனிங்க் காமெடி சகிக்கலை 


 




6.  அமெரிக்கா போறவர் தன் சொந்தக்கார்ல போய் பார்க்கிங்க் பண்ணிட்டு ஃபிளைட்ல போய் அமெரிக்கால செட்டில் ஆவது செம காமெடி , சொப்பன சுந்தரி கார் மாதிரி ஸ்டேண்டில் விட்ட காரை யார் வெச்சுப்பாங்க? அதுக்கு டாக்சில போய் இறங்குவதா காட்டி இருக்கலாம் 


7. க்ளைமாக்ஸ்;ல ஹீரோயின் ஹீரோவுக்கு ஃபோன் பண்றார், அவர் எடுக்கலை , பர பரப்பான சூழல்ல ஒரு எஸ் எம் எஸ் அனுப்ப மாட்டாரா/ ?


8.  கதைக்களம் ஊட்டி, ஆனா ஒரு சீன்ல ஜெமினிகணேஷன் பங்களா வருது , அது கொடைக்கானல் ஆச்சே? 


9. ஹீரோ ஃபாரீன்ல இருந்து ஒரு  நாய் பொம்மை வாங்கிட்டு வர்றார். அதுக்கு ஏன்  அவ்வளவு முக்கியத்துவம்? கதைக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? எடிட்டிங்க்ல கட் ஆகிடுச்சா?


10 .  ஸ்கூல் லவ்வை ஹீரோவே கேவலமா பேசுவதும் , இந்தக்காதலி இல்லைன்னா அந்தக்கதலி என்னும் விதமாய் ஹீரோ பல்டி அடிப்பதும் காதலை கொச்சைப்படுத்தும் உத்திகள் 


11. ஸ்கூல் கலாட்டா என்ற பெயரில் நடக்கும் டீச்சர் - வாத்தியார் லவ் கூத்துகள் , காபி சாப்டியா? என்றால் மேட்டரை முடிச்சுட்டியா? என்ற டபுள் மீனிங்க் காமெடியை ஒரு லேடியே சொல்வது எல்லாம் மலிவான வியாபார உத்தி  





மனம் கவர்ந்த வசனங்கள்



1.  டியர் ஸ்டூடண்ட்ஸ் , லிசன்  ( கவனிங்க ) 


அடேய்.. எங்கேடா பார்க்கறீங்க? போர்டை பார்க்கச்சொன்னா பொண்ணுங்களைப்பார்க்கறீங்க? 



2.  செக்கிங்க் ஆஃபீசர் - டிக்கெட் எங்கே? 

 போன ஸ்டாப்பிங்க்லயே இறங்கிப்போய்ட்டா.. 



3.  என்னை மட்டும் இல்லை , என் பேப்பரைக்கூட உன்னால திருத்த முடியாது 


4. உலகத்தில் 32% பிகருங்க மேரேஜ்க்கு முன்னமே கில்மா கோர்ஸ் கம்ப்ளீட்டட்.




அடடா.அதுல கூட 33%,கிடைக்கலையா?


5. எந்த ஒரு உறவும் அப்டேட் ஆகாம இருந்தா அந்த உறவே முறிய வாய்ப்பு இருக்கு



6. வயசுக்கு வராத பிகரும் வயாக்ரா யூஸ் பண்ணாத ஆணும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை




7. மரணதண்டனையை விடக்கொடுமையான தண்டனை - நம்மை உண்மையா நேசிச்சவங்களை நாம பிரிஞ்சு வாழ நேர்வதே 



8.  நீ பேசிட்டே இருக்கணும். நான் கேட்டுட்டே இருக்கணும். அதுக்குத்தான் நான் எதையும் சொல்லலை


9.நீ இவுங்க மகளோட குடும்பமே நடத்தினாலும், கண்டுக்காத குடும்பம் இது


10.  உலகத்துலயே பெரிய அருவியான நயாகரா அருவியை தெரியாதவங்க கூட இருக்கலாம் , ஆனா வயாக்ரா தெரியாத ஆளே கிடையாது 

 





11.  என்னம்மா நோட்டு(ம்) கசங்கி இருக்கு> ?



`12.  கண்டக்டர் கிட்டே பேசுனே ஓக்கே , டிரைவர் கிட்டேய்யும் பேசுறியே , அவர் நம்ம எல்லாருக்கும் டிக்கெட் எடுத்துடப்போறார்



13.  அம்மா , அடிக்கடி அந்த மேஜர் அங்கிள் துப்பாக்கியை காட்டி பயப்படுத்தறார்



14.  ஃபாரீன்ல கில்மா எல்லாம் ஒரு மேட்டரே இல்லைங்க . ஜஸ்ட் காஃபி சாப்பிடற மாதிரி 

 லேடி - தம்பி , அப்போ எத்தனை காபி சாப்டிருக்கீங்க? 



15.  எனக்கு காபி சாப்பிடற பழக்கமே இல்லைங்க 

 கல்யாணத்துக்கு அப்புறமாவாவது சாப்டுறு, வேற யாராவது உன் காபியை குடிச்சுடப்போறான்


16.  நீ எனக்கு தெரிஞ்சதைப்பேசுனாலும் , தெரியாததைப்பேசுனாலும் எனக்கு அது புதுசாத்தான் இருக்கும் 


17. பொண்ணுங்க ஏன் ஆபத்துல இருந்து அவங்க காதலனை க்காப்பாத்தறாங்க?

 மேரேஜ்க்குப்பிறகு தான் சாகடிக்க வேண்டிய ஆளை வேற யாரும் சாகடிக்கக்கூடாதுன்னுதான் 


18.  வீட்டுக்கு ஒரு மேரேஜ் புரோக்கர் ஓக்கே, ஆனா உங்க வீட்ல  வீடே புரோக்கர் மயமா இருக்கே? 



19.  வெட்கமா இருக்கு 

 ஏன்? வெட்கம்னா உனக்குப்பிடிக்காதா? 


 வெட்கத்தைப்பிடிக்காத  பொண்ணு உலகத்துலயே இல்லை 



20 . கல்யாணம் ஆகும் வரை ஒரு செகண்ட் கூட சலனப்படாத , சலனப்படமாட்டேன்கற  நேர்மையோட நான் இருப்பேன் 



 



21 இந்த உலகத்துல எத்தனை லவ் ஃபெயிலியர் ஆனாலும் மீண்டும் மீண்டும் லவ் தோன்றக்காரனம் சரக்கு இருக்கும் தைரியம் தான்



22.  உன்னைப்பார்த்தா லவ் ஃபெயிலருக்காக குடிக்கற மாதிரி தெரியல , குடிக்கறதுக்காகவே லவ் ஃபெயிலியர் ஆன மாதிரி தோணுது 



23.  பசங்க சைக்காலஜி என்னன்னா மிஸ்டு கால் வந்தா உடனே கூப்பிட்டு பேசிடனும் , அது ஒரு ஃபிகரா இருக்கக்கூட சான்ஸ் இருக்கே..? 



 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 38 


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார் 



 சி பி கமெண்ட்  - ஓவியாவின் தீவிர ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம்,  மற்றபடி படத்துல ஒண்ணும் கிடையாது . அரியலூர் நடராஜா தியேட்டர்ல இந்த டப்பா படத்தை பார்த்தேன் . தியேட்டரும் டப்பா  . தமிழ் நாட்லயே கேண்ட்டீன் கூட இல்லாத  ஒரே தியேட்டர் இதுதானாம், டெண்ட் கொட்டாய்ல கூட கேண்ட்டீன் இருக்கும் . ஹூம்..  படம் பிப்ரவரி 14 க்கே ரிலீஸ் ஆகிடுச்சு, இப்போதான் நான் பார்த்தேன்



Saturday, February 19, 2011

காதலர் குடியிருப்பு - ட்ராஜடி லவ் - சினிமா விமர்சனம்


http://indiamoviez.com/wp-content/uploads/2009/12/KaavalarKudiyiruppuFront.jpg
சயனைடு (குப்பி )என்ற வித்தியாசமான படம் குடுத்த ரமேஷ் இயக்கத்தில் வந்துள்ள காதல் சப்ஜெக்ட் படம்.மனதைக்கனக்க வைக்கும் க்ளைமாக்ஸ், இறுக்கமான, உருக்கமான கடைசி 30 நிமிட காட்சிகள் என பல பிளஸ் பாயிண்ட்ஸ் இருந்தும் படத்தின் முதல் பாதியில் இயக்குநர் ஏன் அவ்வளவு தடுமாறினார் என்றே புரியவில்லை...

நண்பனுக்காக காதலை விட்டுகொடுத்தல்,தனக்கு நோய் இருப்பதால் காதலியாவது நல்லாருக்கட்டும் என காதலிக்காக காதலை விட்டு கொடுத்தல்,குடும்ப நலனுக்காக காதலை விட்டுக்கொடுத்தல் வரிசையில் நன்றிக்கடனுக்காக காதலை விட்டுக்கொடுக்கும் கதை.

ஹீரோ அனிஷ் தேற மாட்டார். (ஹூம், நாம எந்தக்காலத்துல ஆம்பளைங்களை பாராட்டி இருக்கோம்..?# மனசாட்சி)காதல் வரும்போது,ஊடல் கொள்ளும்போது, அம்மாவிடம் பேசும்போது,காதலியிடம் பேசும்போது, என எல்லா சந்தர்ப்பங்களுக்கும் அண்ணனிடம் கைவச,ம் ஒரே முக பாவனை தான். பாவம் அவர் வெச்சுக்கிட்டா வஞ்சனை பண்றார்..? சட்டில இருந்தாத்தானே அகப்பைல வரும்?

இப்படியாக முதல் கோணல் முற்றும் கோணல்ங்கற மாதிரி ஹீரோ செலக்‌ஷன்லதப்பு பண்ணுன இயக்குநர் ஹீரோயின் செலக்‌ஷன் ல அடடே சொல்ல வெச்சுட்டார்.. ( அதானே பார்த்தேன்..)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijYhFWTYHtbuW6AkGT33bXhPVbZAJJnIh_L956kmQboo6cFnsnDIG0ZRDxEAeP5CpsspoWOHnm9W96uXHx6MmzCtL5CA4OZt-3FeJEnh86a3PprAqsSjdCmnVmA8f3SfGLrS0ROjLA_uzb/s400/009-Kavalar-Kudiyiruppu-37.jpg

ஸ்ருதி... இவர் நடிப்புல பாஸ் மார்க் வாங்கிடறார் ஈஸியா..( பொண்ணுங்க எப்பவும் ஈஸியா பாஸ் ஆகிடுவாங்க..) இவர் கிட்டே பர்சனலா எனக்கு பிடிச்சதே இவர் சுடிதாருக்கு போடற துப்பட்டாவை புரட்சித்தலைவி எப்படி கூட்டணிக்கட்சிகளை மதிக்கமாட்டாரோ..( குறிப்பா வை கோ-வை )அந்த மாதிரி படம் பூரா கண்டுக்காம விட்டதுதான்.வாழ்க தமிழச்சி பண்பாடு.



படத்துல இயக்குநர் ரொம்ப நம்பி இருந்த சீன் பாபர் மசூதி இடிப்பு நடந்த சமயத்துல நாட்டுல நடந்த கலவரத்தை படத்துல சாமார்த்தியமா புகுத்துன விதம்.ஆனா பின்னணி இசை, படமாக்கம், எடிட்டிங்க் எல்லாமே ரொம்ப சுமார்தான் அந்த சீன்ல.

கங்கை நதி எங்கேயோ பிறந்து .. பாட்டு 1968 ல நடக்கற கதைல வர்ற சிச்சுவேஷன்கறதை  புரிஞ்சுக்கிட்டு இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் போட்டிருக்கும் பழைய கால மெட்டு இதம்.

சொன்னதைக்கேட்க மாட்டே பாட்டு செம கும்மாளம் என்றாலும் அது ஸ்ரீகாந்த் - சினேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் படத்தில் வரும் சைட் அடிக்கப்போக மாட்டோம் பாட்டின் மெட்டை ஞாபகப்படுத்துது.



http://nowrunning.com/content/movie/2009/kavalarkudiyiruppu/stills/kaavalaar_kudiyiruppu%20(34).jpg
--
உயிரே ... என் உயிரில் ஏன் வந்தாய் பாட்டுக்கான ஓபனிங்க் லீடில் ஹீரோயின் ஒரே ஒரு நெற்பயிரைக்கையில் வைத்துக்கொண்டு சிரித்துக்கொண்டே நிற்கும் காட்சியை படமாக்கிய விதத்தில் இயக்குநர் தனது அழகியல் ரசனையை பதிவு செய்கிறார்.

ஹீரோயினுக்கு ஹீரோ மேல் ஏன் காதல் வருது? என்பதற்கான காட்சி அமைப்பில் ஒரு ஆபத்து என்றதும் ஓடி வந்து ஹீரோ காப்பாத்தறார் என்பதுதான் எனும்போது பெண் எப்போதும் செக்யூரிட்டி பர்ப்பஸ்க்குத்தான் லவ் பண்ணுறாங்க என்ற எண்ணம் வருது.அதே போல் ஹீரோ ஹீரோயின் மேல் எரிந்து எரிந்து விழுகிறார்.. தியேட்டர் இருட்டின் தனிமையில் ஹீரோயின் ஹீரோ தோளில் சாய்ந்து கொண்ட அந்த உடல் நெருக்கத்தில் தான் ஹீரோவுக்கு ஹீரோயின் மேல் காதல் வருகிறது என்று சொன்னதும் ஒரு காதல் சப்ஜெக்ட்டில் முக்கிய மைனஸ்.

பொதுவாக ஒரு காதல் கதை வெற்றி பெற வேண்டுமானால் ஹீரோ - ஹீரோயினுக்குள் காதல் வரும் சம்பவம் கவிதையாக இருக்க வேண்டும்.பிறகு முதன் முதலாக காதலை பரஸ்பரம் எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதிலும் ஒரு கலக்கலான காட்சி அமைப்பு வைக்க வேண்டும்.இந்த இரண்டையும் சரியாக கவனிக்காத காதல் படங்கள் தோல்வி அடைவதை தவிர்கவே முடியாது. காரணம் படம் பார்ப்பவர்கள் மனதில் முதலில் அந்த காதல் ஆழப்பதிய வேண்டுமே...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXMZ_ye7_G7EaWXD5utx7u7pe5jVAPYYDFoNZemKv9zXloKbCToQs-Nt4mL_C8NUc0udef6BXLsvnxyqE0Ro_d6XecCxPhyphenhyphenpKqCea5C8yueOv-4xITcS330gpUgQbR8JNWCwGB4qQ7RJrh/s400/kavalar-kudiiruppu-movie-latest-stills-pics-photo-gallery-01.jpg
வசனகர்த்தா நம் மனதில் குடி கொண்ட இடங்கள்

1. ஹீரோயின் - அத்தை...காலேஜ் சீட் கிடைச்சிருக்கு..ஸ்வீட் எடுத்துக்கோங்க..

ஹீரோ - த்தூ...

சரண்யா - ஏண்டா.. துப்பறே,,?

ஹீரோ - பல் துலக்கறப்ப துப்பாம எப்படி இருக்கறது..?

2. டேய். பைக் வேணாம்டா.. நடந்தே போயிடலாம்டா...

ஏன்?

ஷோ ரூம் காரன் போட்ட பெட்ரோல் தீர்ந்துடுச்சு.

அட த்தூ... ( படம் பூரா துப்பீட்டே இருக்கறாங்கப்பா..)

3. எங்கண்ணன் கூட பிளஸ் டூ எக்ஸாம் எழுதுனே...,அப்புறம் என் கூட, இப்போ என் தம்பி கூட... அவங்க எல்லாம் பாஸ் ஆகிட்டாங்க.. நீ அநேகமா என் பையன் பிளஸ் டூ படிக்கறப்பவும் எழுதுவேன்னு நினைக்கறேன்...

4. எதுக்கு தாரை தப்பட்டையோட ஊர்வலம் வர்றீங்க..?

நான் பிளஸ் டூ ல பாஸ் ஆகிட்டேன்.

அடப்பாவி,.. இது சாவுக்கு அடிக்கற மேளம்டா...

5. ஹீரோயின் - நீ குடிச்சாலும் சரி,வேற ஒரு பொண்ணோட சுத்துனாலும் சரி.. நான் உன்னைத்தான் லவ் பண்ணுவேன். ( நல்ல பொண்ணு போல...)

6. நீ அவளைக்கல்யாணம் பண்ணிக்கலைன்னா அவ செத்துடுவா... ஆனா பண்ணீக்கிட்டா அவங்கம்மா,அப்பா செத்துடுவாங்க... ( அப்போ ஆடியன்ஸ்..?)

சரண்யாவின் நடிப்பு அருமை.ஒரு சராசரி தாயின் பரிதவிப்பை கண் முண் கொண்டு வந்து நிறுத்துகிறார். ஆனால் பேசாம செத்துத்தொலையேன்மா என கோபத்தில் மகன் சொன்னதும் நிஜமாகவே தற்கொலை செய்வது நம்பும்படி இல்லை.

அதே போல் மதக்கலவரம் நடக்கும்போது தனது மாமா மகனுக்கு ஃபோன் பண்ணி ஹீரோயின் கூப்பிடும்போது அவர் சாரி.. நான் வர்லை பைக்ல பெட்ரோல் இல்லை என்பதும்,ஃபோன் ரிசீவரை கையில் வைத்துக்கொண்டே தனது அம்மாவிடம் கலவரம் நடக்கறப்ப நான் போனா மாட்டிக்குவேன் என சொல்வதும் காதில் பூ சுற்றும் காட்சிகள்.

மாமா பொண்ணுக்கு ஏதாவது ஒண்ணுன்னா நாங்க எல்லாம் பாய்ஞ்சு போக மாட்டோம்..? ( அதான் உனக்கு மாமா பொண்ணே இல்லை..)என்ன பண்றது..? ஹீரோ வந்து தான் ஹீரோயினை காப்பாற்ற வேண்டும் என்ற ஆகம விதியின் படி.....

படத்துல ரசிக்கற மாதிரி ஒரு சீன்னா  ( சாதா சீனப்பா) ஹீரோ,ஹீரோயின் சந்திப்பின்போது ஹீரோயின் ஹீரோவிடம் உன் ஃபிரண்டை கழட்டி விடு ,நாம ஜாலியா பேசிட்டு இருக்கலாம் என்பதும் அதற்கு நண்பன் நொந்து கொள்வதும் செம காமெடி சீன். ஹீரோவின் நண்பராக நடிப்பவரின் முக பாவனை அருமை. அதனால்தானோ என்னவோ ஹீரோ வசனம் பேசும் காட்சிகளில் கூட கேமரா ஹீரோவின் நண்பன் முகத்தையே காட்டுது.

ஒளிப்பதிவு சுமார் ரகம்தான்.ஹீரோயின்-ன் மாமா மகனாக வருபவர் சல்மான்கான் மாதிரி ஜம் என இருப்பதும்,ஹீரோவாக வருபவர் பேப்பர் பொறுக்குபவர் போல் சீவாத பரட்டைத்தலை,துவைக்காத ஜீன்ஸ் பேண்ட்டுடன் இருப்பதும் தமிழ் சினிமாவின் தலை எழுத்து.

ஏ, பி ,சி என அனைத்து செண்ட்டர்களிலும் இந்தப்படம் 10 நாட்களைத்தாண்டாது.

ஆனந்த விகடன்ல இந்தப்படம் விமர்சனம் போட மாட்டாங்க ,மீறிப்போட்டா 37 மார்க்.(மீறாம போட்டா..?)

குமுதம் ரேங்க்கிங்க்  - சுமார்.



டிஸ்கி 2 -  ஆடுபுலி - Dr ராம்தாஸ் சுய சரிதை? - சினிமா விமர்சனம்

Saturday, February 12, 2011

தம்பிக்கோட்டை - சந்தானம் காமெடி + மசாலா - சினிமா விமர்சனம்

படத்தோட டைட்டிலையும், போஸ்டர் டிசைனையும் பார்த்து இந்தப்படம் தேறாதுன்னு நினைச்சுட்டு உள்ளே போனா ஷாக் சர்ப்பரைஸ்.. சந்தானம் காமெடி படத்தோட முதல் பாதியை காப்பாத்திடுது....

உன்னைப்போல் ஒருவன் கமல் மாதிரி கெட்டப்ல சந்தானம் மொட்டை மாடில நின்னுக்கிட்டு  சிம் மாத்தி மாத்தி ஃபிகருங்களோட கடலை போடறது  நல்ல ஓப்பனிங்க்....

ஹீரோ சித்திரம் பேசுதடி,அஞ்சாதே நரேன்.. பாக்க பாவமா இருக்கார்...(சம்பளம் சரியா தர்லை போல)விஷால் கால்ஷீட் கிடைக்காம இவரைப்பிடிச்சுட்டாங்களோன்னு யோசிக்க வைக்குது கதையோட ஒன்லைன்.

காலேஜ் படிக்கற ஹீரோ சொந்த ஊரை விட்டு வேற ஒரு ஊருக்கு போறாரு ( மலைக்கோட்டை உல்டா)அங்கே ஹீரோயினை பார்க்கறாரு. லவ் பண்றப்ப ஒரு தாதா ,தாதாவோட தங்கை ( இவரும் ஒரு தாதாவே) 2 பேரையும் சமாளிச்சு எப்படி கைப்பிடிக்கறாரு? அப்படிங்கறதுதான் திரைக்கதை.. ( திமிரு உல்டா)...

இந்தக்கதை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? அப்படிங்கற மாதிரி ஃபிளாஷ்பேக்ல பிரபு 4 சீன் வர்றார்..

அக்கா கேரக்டர்ல மீனாவைப்பாக்க சங்கடமா இருக்கு.( நமக்கு பொண்ணுங்களைப்பார்த்தாலே ஒரு இரக்கம் வந்துடுது.. ஹி ஹி )அக்கா தம்பி பாசத்தை போட்டு பிழி பிழின்னு பிழிஞ்சு எடுத்திருக்காரு டைரக்டரு.
ஹீரோயின் பூனம் பஜ்வா.. (இதுவரை ஏனோ தானோன்னு விமர்சனம் படிக்கறவங்க நிமிந்து உக்கார்றாங்க  # ஞான திருஷ்டி)).பசுமையான இலை தழைகளோட கொத்தா வாங்குன ஊட்டி கேரட் மாதிரி அவ்வளவு ஃபிரஷ்...(சைட் அடிக்கறப்பக்கூட சைடு டிஷ் ஞாபகம் ).. பார்ட்டி நல்ல ஃபிகர்தான்.. ( நாம எந்தக்காலத்துல பொண்ணுங்களை குறை சொல்லி இருக்கோம்? # ஷெல்ஃப் ஷொட்டு)

ஹீரோ - ஹீரோயின் சந்திக்கற முத சீன்ல ஹீரோயின் தடுக்கி விழுந்து ஹீரோ மேல படர்ந்து கிஸ் அடிச்சுடறாரு...( நல்லா யோசிக்கறாங்கய்யா சீனு). நரேன் பூனம் பஜ்வாவிடம் தனது காதலை வெளிப்படுத்தும் சீன் செம செயற்கை.அதே போல் ஹீரோயின் அறிமுக காட்சியில் வரும் பாடலில் டான்ஸ் மாஸ்டர் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.

ஹால் டிக்கெட்டை தொலைத்த ஹீரோயின் காட்டும் பதட்டம்,டென்ஷன் எல்லாம் ஓவர் ஆக்‌ஷன். ( நாமதான் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரே தொலைஞ்சாலும் கண்டுக்காத ஆள் ஆச்சே...). ஆனால் அந்தக்காட்சியில் கோட்டை விட்டவர் கோயிலில் சிவப்பு  - சிவப்பு கலர் காம்பினேஷனில் தேவதையாக வரும் சீனில் மனதை அள்ளி சரிக்கட்டி விடுகிறார்.( அந்த ஷாட்டில் நல்லா டைட் க்ளோஷப் ஷாட் வெச்சிருக்கலாம் # ஜஸ்ட் மிஸ்ஸு.)
பெண் தாதாவாக வரும் சங்கீதா ஓவரோ ஓவர் ஆக்டிங்க்.10 சொர்ணாக்கா, 15 நீலாம்பரி கலந்தவனு பில்டப்பு வேற. ஆனா அவர் சேலையை கிராமங்களில் ஆண்கள் லுங்கியை தூக்கிக்கட்டுவது போல் கெண்டைக்கால் தெரிய தூக்கிக்கட்டுவது செம கிளு கிளு (நீ பார்க்கும் மொக்கைப்படத்தில் கூட எதிர்பாராத விதமாக சக்க சீன் இருக்கலாம் மிஸ் பண்ணிடாதே # மனசாட்சி )

இந்த பட விமர்சனத்துக்கு தேவையே இல்லாத ,ஆனா நமக்கு(!!??) தேவையான ஒரு சீன்.தாதா சங்கீதா காலை வேலைக்காரப்பொண்ணு அமுக்குது. அப்போ , “ஏய்.. முழங்காலுக்கு மேலே வராதே.. என் புருஷனே அங்கே எல்லாம் வந்ததில்லை...  ( தியேட்டர்ல ஹீரோ அறிமுக சீனுக்கு கூட எவனும் கை தட்டலை.. இந்த சீனுக்கு செம அப்ளாஸ்)

ஹீரோவோட பேரு படத்துல அழகிரின்னு வெச்சதுல ஏதாவது உள்குத்து இருக்கான்னு தெரியல. ஆனா இந்த கான்செப்ட் ஒர்க் அவுட் ஆகிடுச்சுன்னா இனி ஆளாளுக்கு அழகிரி,ஸ்டாலின், உதய நிதி,அப்படி இறங்கிடுவாங்களோன்னு பயம்.
மாமூல் மசாலாப்படத்தில் பார்த்த மால் வசனங்கள் ( காமெடி)

1. ஏன் எல்லாப்பொண்ணுங்களுக்கும் எஸ் எம் எஸ் அனுப்பிட்டு இருக்கே?

சந்தானம் - பேச ஆசைதான். ஆனா செல்லுல பேலன்ஸ் இல்லை.10 பைசாதான் இருக்கு.

2.  டேய்.. உன்னைப்பார்த்தா என் வயிறு எரியுது..

சந்தானம் - ஏன் ..ராவா குடிச்சியா?

3. டே.. நல்லா கேட்டுக்கோ.. நான் எழுதியே தர்றேன்.. நீ ஃபெயில் தான்.

சந்தானம்  - சார்..நீங்க எழுதிக்குடுத்தா நான் கண்டிப்பா ஃபெயில் தான் ஆவேன். நான் வேற நல்ல ஆள் வெச்சுக்கறேன்.

4. காலேஜ் லெக்சரர் - ராமாயணத்துல மொத்தம் ஆறு காண்டம் இருக்கு..

சந்தானம் - டே மாப்ளை நேத்து நீ வாங்கிட்டு வந்த காண்டம் பாக்கெட்ல 3 தாண்டா இருந்தது.. கடைக்காரன் உன்னை ஏமாத்தீட்டானா?

5. பேங்க், போஸ்ட் ஆஃபீஸ் இங்கே தான் லஞ்ச் டைம் போகக்கூடாது.. ஆனா ஃபிரண்ட் வீட்டுக்கு சாப்பாட்டு டைம் தான் போகனும்.. அதான் நம்ம ஃபிரண்ட்ஷிப் ரூல்ஸ்..

6. சந்தானம்  - ஏம்மா.. அக்கா.. உன் தம்பி போருக்கா போறான்..?இங்கே இருக்கற ஊருக்கு டூருக்குத்தானே போறான்.. எதுக்கு ஆரத்தி எல்லாம் எடுத்து ஓவர் பில்டப் தர்றே,..?

7. போலீஸ் பாதுகாப்போட பெட்ஷீட் போர்த்தி படுத்திருக்கற அந்த ஆள் யாரு?

 டேய்.. அது டெட் பாடிடா...

அய்யய்யோ.. யார்டா அது ..பட்டப்பகல்ல கொலை பண்ணுனது?

சந்தானம்  - மாலைக்கண் வியாதிக்காரனா இருப்பான்..

8. வில்லன் - என் மேல இன்னும் 19 கேஸ் நிலுவைல இருக்கு.. வக்கீல் சரி இல்லை. பேசாம வக்கீலைப்போட்டுத்தள்ளீட்டு அதை 20 கேஸ் ஆக்கிடலாமா?

9. சின்ன வீட்டுக்கு இருக்கற மரியாதை பரம்பரை வீட்டுக்கு இருக்கறதில்லையே அது ஏன்?   ( அது மரியாதை இல்லை.. கிளு கிளுப்பு # படத்துல வராத பிட்டு)

10.வில்லன் - இந்தாங்க கோயிலோட சாவி.. பொழுது சாஞ்சா உடனே என் கைக்கு சாவி வந்தாகனும்.

சந்தானம்  - ஏன் உங்களுக்கு காக்கா வலிப்பு நோய் இருக்கா?

11. இதோ இங்கே உக்காந்து பிச்சை எடுத்துட்டு இருக்கே இந்தப்பொண்ணு தான் கோயிலோட ரிசப்ஷனிஸ்ட்..இந்தப்பொண்ணைத்தாண்டி ஒரு பய உள்ளே வந்துட முடியாது..அதோ காசை எண்ணிட்டு இருக்கே ஒரு தறுதல.. அவன் தான் கேஷியர்.. பிச்சைக்கார நாயிங்களா..

12, ஆர்த்தி  - என்னால இப்போ கோயிலை விட்டு வெளில வர முடியாது...

சந்தானம்  - ஏன்?

 ஏன்னா இப்போ சுண்டல் தர்ற நேரம்.

13.சந்தானம்  - அதென்னடா எல்லாப்படத்துலயும் நீங்க வில்லனோட பொண்ணையே லவ் பண்ரீங்க.. ஊர்ல எத்தனை பொண்ணுங்க இருக்கு...?

14.  ஒரு வருஷம் உன் பின்னாலயே சுத்துனேன் நாய் மாதிரி.. 

நான் என்ன வோடஃபோன் கனெக்‌ஷனா?

15. சந்தானம்  - நீ கனகா மடில படுக்கனும்கறதுக்காக நான் கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல நான் படுக்க முடியாது.. 

16. லவ் பண்றவனை ஃபிரண்டா வெச்சுக்கிட்டா அவன் தூக்க மாத்திரை சாப்பிட்டுத்தான் படுக்கனும் இல்லைன்னா தூங்க விடமாட்டானுங்க..

17. சந்தானம்  - என்னது முருகரை விநாயகர் கும்பிடுது?

ஆர்த்தி - 108 தடவை ஸ்ரீராம ஜெயம் எழுதி ஆஞ்சநேயர் மேல சாத்தறேன்..

சந்தானம் - அதை எழுதுனதுக்கு பிட் எழுதி இருந்தாக்கூட பாஸ் ஆகி இருப்பே..?

18. திருவிழாங்கற கான்செப்ட் ஏன் வந்துது தெரியுமா?

ஊர்ல மாசாமாசம் ரேப் நடக்கும். ஊர்ப்பெருசுங்களுக்கு அது பொறுக்கல.. இனி வருஷம் ஒரு தடவை மட்டும் தான் அதெல்லாம் நடக்கனும்கறதுக்காகத்தான் திருவிழாவையே கண்டு பிடிச்சானுங்க..

19..சந்தானம்  -  மேடம் .. உங்க செயினை விட்டுட்டு போறீங்களே...

ஆர்த்தி - விளையாடாதீங்க.. அது யானையைக்கட்டற சங்கிலி.

20.ஆர்த்தி - அவங்கப்பாவுக்கு மேட்டர் தெரிஞ்சா பிரச்சனை ஆகிடும்.

சந்தானம் - ஏன் ? உங்கப்பனுக்கு தெரிஞ்சா ஒண்ணும் சொல்ல மாட்டானா?

ஆர்த்தி -  தோலை உரிச்சிடுவார்.

சந்தானம்  - அப்போ சாத்துக்குடிப்பழம் 2 கிலோ வாங்கித்தர்றேன்...உக்காந்து உரிச்சுத்தர சொல்லுங்க..
அப்புறம் படத்தோட க்ளைமாக்ஸ் நெருங்கறப்ப வர்ற தம்பிக்கோட்டை கனகா தாலி கட்ட வரவா பாட்டு அப்படியே அச்சு அசல் கில்லி பட அப்படி போடு பாட்டு நடனத்தின் காப்பி..

ஒரு சீன்ல கரண்ட் போயிடுது.. உடனே எல்லாரும் மெழுகுவர்த்தி பற்ற வைத்து போற மாதிரி வருது.. அவ்வளவு பெரிய மாளிகைல எமர்ஜென்சி லைட்டே இருக்காதா? ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் படமெங்கும் விரவி இருக்கின்றன,

வித்தியாசமான படம் விரும்பும் தமிழ்ப்பட ரசிகர்களுக்கு இந்தப்படம் சாதா.மற்றபடி மாமூல் மசாலாப்படம்னா ஓக்கே என்பவர்களுக்கு இந்தப்படம் இருக்கும் தோதா.. ( மனசுக்குள்ள இவனுக்கு டி ஆர்-னு நினப்பு) 

படம் ஏ பி செண்ட்டர்ல தலா ஒரு மாசம் ஓடிடும். சி  செண்ட்டர்ல 15 நாட்கள் ஓடிடும்.

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே

டிஸ்கி 1 - படத்துல முக்கிய கேரக்டர்களா வர்ற பிரபு - மீனா ஸ்டில்ஸ் ஏன் போடலை? ஏன்னா அட்ரா சக்க யூத்துங்களுக்கு மட்டும் இடம் தரும் ஹி ஹி

டிஸ்கி 2

பிரகாஷ்ராஜ்-ன் பயணம் - ஹைஜாக்





தமிழ்வாணன் -ன் நந்தி - கிராமத்துக்காதல் -
 


 

Friday, February 11, 2011

பிரகாஷ்ராஜ்-ன் பயணம் - ஹைஜாக் ஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்



மொழி,அபியும் நானும் போன்ற நெஞ்சை நெகிழ வைக்கும் படங்களை எடுத்த ராதா மோகன் தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி ஆக்‌ஷன் அவதாரம் எடுத்துள்ள படம் பயணம்.
தீவிரவாதியின் விடுதலை கோரி ஒரு விமானம் கடத்தப்படுகிறது.பயணிகளின் தவிப்பு,அதிகாரிகளின் மீட்பு நடவடிக்கைதான் திரைக்கதை.

நாகார்ஜூன் தெலுங்கில் சூப்பர்ஸ்டார் ஆக இருந்தாலும் இந்தப்படத்தில் அண்டர் ப்ளே ஆக்டிங்க் செய்திருப்பது வரவேற்கத்தக்கது.ஆனால் பாடி லேங்குவேஜ்ஜில் அவர் காட்டிய மிடுக்கை கொஞ்சம் கெட்டப்பிலும் காட்டி இருக்கலாம்.நேஷனல் செக்யூரிட்டி கார்டாக வரும் அவர் க்ளோஸ் ஹேர் கட் பண்ணி இருந்தால் கூடுதல் கம்பீரம் சேர்த்திருக்கும்.படத்தில் அவருக்கு ஜோடி ஏதும் இல்லை என்பது டூயட்டை வெறுக்கும் பார்ட்டிகளுக்கு நிம்மதி.


படத்தின் தயாரிப்பாளர் என்பதற்காக படம் முழுக்க வர வேண்டும் என்ற சில்லித்தனமான எண்ணம் எதுவும் இல்லாமல் கதை எந்த அளவு அனுமதிக்கிறதோ அந்த அளவு மட்டும் பிரகாஷ்ராஜ் வந்து போவது அழகு
படத்தில் சின்ன சின்ன கேரக்டர்களைக்கூட கவனிக்க வைக்கும் அளவு முக்கியத்துவம் கொடுக்கும் வெகு சில இயக்குநர்களில் ராதாமோகனும் ஒருவர். மனித நேயங்களுக்கும் , உறவுகளுக்கும் மதிப்புக்கொடுக்கும் அவர் இந்த ஆக்‌ஷன் படத்தில் கூட தனது பாணியில் மாறாமல் டைரக்‌ஷன் டச்சை வெளிப்படுத்திய விதம் பாராட்டத்தக்கது.
பயணிகளாக வருபவர்களில் கவனிக்க வைப்பவர்கள் டீலா நோ டீலா ரிஷி, பாதிரியாராக வந்து குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தும் எம் எஸ் பாஸ்கர்,ஷைனிங்க் ஸ்டாராக வந்து கலகலப்பு ஊட்டும் பப்லு என வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம்.

இடைவேளை வரை , படம் எதிர்பார்த்த, நமக்கு பழக்கப்பட்ட ஒரே திசையில் பயணிக்கும்பொது, கைதியான தீவிரவாதி விபத்தில் இறந்து விட்டார் என்றதும் திரைக்கதையில் புதிய திருப்பம்.. அதைத்தொடர்ந்து கதையின் போக்கில் ஏற்படும் மாற்றம் நல்ல திரைக்கதை ஆசிரியரின் உத்தியுடன் சொல்லப்படும் ட்விஸ்ட்கள் சபாஷ் சொல்ல வைக்கின்றன.
டம்மி தீவிரவாதியாக வருபவரின் பயந்தா கொள்ளித்தன நடிப்பு கலக்கல் ரகம். கிட்டத்தட்ட கோல்மால் படம் போன்ற KNOT.படத்தில் பாடல்களே இல்லாதது, தீவிரவாதிக்கு குழந்தையிடம் ஏற்படும் அன்பு அன்று அங்கங்கே அழகியல் அம்சங்கள்.

வசனகர்த்தா நம் இதயங்களில் பயணம் செய்த இடங்கள்.


1.டைரக்டர் - சார்.. ஃபைட் சீன் ரெடி பண்ணீட்டேன். நீங்க 50 பேரை அடிக்கற மாதிரி...
ஹீரோ - இப்போ வர்ற பசங்க எல்லாம் 30 பேர் 40 பேரை சர்வ சாதாரணமா அடிக்கறாங்க..நான் அட்லீஸ்ட் 100 பேரையாவது அடிக்கனும்.ரெடி பண்ணுங்க. டவுட்னா கில் பில் ( KILL BILL) படம் பாருங்க.

2. ஊர்ல பல பேர் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கோட தங்களோட பேரை எழுதறாங்கன்னா அதுக்குக்காரணமே உங்களை மாதிரி நியூமராலஜிஸ்ட்ஸ்தான்.
3. சிவாஜி, சிரஞ்சீவி, நிரோத் எல்லாமே கூட்டுத்தொகை 5 வருது.. செம ஃபேமஸ்.
யோவ்,சிவாஜி, சிரஞ்சீவி, ஓக்கே.. எதுக்கு சம்பந்தமே இல்லாம நிரோத் இங்கே வருது..?

மக்கள் மத்தில பிரபலம் ஆகிடுச்சுல்ல?

4.என்னது? தீவிரவாதிங்களா? ஏன்னா..நம்ம ஊர்ல கூட இந்த மாதிரி ஆளுங்க இருக்காங்களா?

ம்.. இருப்பாங்க.. ஏன். இப்போ உங்க வீட்ல இல்ல?

5. இந்தப்படம் ஓடுச்சா?

படம் பூரா ஹீரோதான் ஓடிட்டே இருந்தாரு..படம் ஓடலை.
படம்தான் பார்க்க நல்லாலைன்னா கதை என்னன்னு கேக்கறதுக்குக்கூட நல்லாலையே..?

6. பேசினா தீர்க்க முடியாத பிரச்சனைகள் இந்த லோகத்துல இருக்கோன்னா?

7.இந்தியாவுக்கே இப்போ நேரம் சரி இல்ல. கடக ராசி,, ஏழரை நாட்டு சனி நடக்குது..

ஏழு நாடு கூட ஏதோ ஒத்துக்கலாம். இந்த அரை நாடு... எங்கே..?

8. இந்த கோயில் , சாமி எல்லாம் இல்லைன்னா என்ன ஆகி இருக்கும்?

மக்கள் எல்லாம் ஒழுங்கா இருந்திருப்பாங்க.இருக்காங்காட்டிதான் என் மதம் உன் மதம்னு அடிச்சுக்கறாங்க.

9.இந்தியாவுல 40 கோடி பேர் கழிப்பறை இல்லாம கஷ்டப்படறாங்க.. அதைக்கட்ட வழியைப்பாக்காம இங்கே ஒரு கோயிலை இடிச்சு இன்னொரு கோயிலை எப்போ கட்டலாம்னு டைம் பார்த்துட்டு இருக்காங்க..

10. இன்னும் எத்தனை நாளுக்கு தீவிரவாதிங்க கிட்டே பேசிட்டே இருப்பீங்க?
11.இவனுங்களுக்கெல்லாம் ( அரசியல்வாதிகள்) எலக்‌ஷன் பற்றி மட்டும்தான் கவலை..பயம் எல்லாம், மக்கள் பற்றி கவலையோ ,அக்கறையோ கிடையாது.

12. முடிவு எடுக்க டிலே (DELAY) பண்றதும், தப்பான முடிவு எடுக்கரதும் ஒண்ணுதான்.

13. வியட்நாம் போர் ஒரு முடிவுக்கு வர காரணமா இருந்தது ஒரு ஜர்னலிஸ்ட் எடுத்த புகைப்படம்தான். அதே ஜர்னலிஸ்டாலதான் ஒரு நாட்டின் இளவரசியே அகால மரணம் அடைஞ்சாங்கங்கறதையும் மறந்துடக்கூடாது.( டயானா)
14 . தீவிரவாதி - நம்மோட முதல் எதிரி கண்ணீர், அடுத்தது செண்ட்டிமெண்ட்.

15. கம்ப்யூட்டர் படிச்சு அலுங்காம குலுங்காம அமெரிக்கா போயிடறீங்க.. ஏன் காஷ்மீர் போய் பாருங்களேன்.
16. சார்.. கூல் டவுன்..
உங்களை மாதிரி ஜோசியம் படிச்சிருந்தா கம்முனு உக்காந்திருப்பேன். காந்தியும், கம்யூனிசமும் ,காரல்மார்க்ஸூம் படிச்சுட்டனே.

17. என்னை அடிச்சு ஆக்‌ஷன் ஹீரோ ஆகனும்னு பார்க்காதே.. ஏன்னா என்னை என் மனைவி கூட அடிப்பா.. அவ்வளவு ஏன்? என் 4 வயசு பையன் கூட அடிப்பான்.

18. என் கிட்டே கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்ல போய் 3 மாசம் இருந்துட்டு வந்துட்டே... ஆனா நான் ஒரு தடவை கூட உன் கிட்டே சாரி கேட்கலையே.. தப்பு சாரி கேட்டிருக்கனும்.

19. மழலை - அங்கிள் நீங்க யாரு? உங்க பேரு என்ன?

பேரே கிடையாது எங்களுக்கு.. நாங்க இறைவனால் படைக்கப்படற போராளிகள்.
கரப்பான் பூச்சிக்கே ரியல் லைஃபில் பயப்படுபவர்தான் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோ என ஒரு வாரு வாரி இருப்பது வெல்டன் ராதா பாரதி என சொல்ல வைக்கிறது.அதே போல் சீரியஸான இந்தக்கதையில் முடிந்த வரை எங்கெல்லாம் காமெடி மசாலாவை தூவ முடியுமோ அங்கெல்லாம் கலகலப்பாய் கொண்டு செல்வது இயக்குநரின் ஸ்பெஷல் டச்.
ஆனால் அதே சமயம் படம் படு சீரியஸாக செல்லும்போது ஆங்காங்கே வரும் காமெடிகள் படத்தின் வேகத்துக்கும், டெம்ப்போவுக்கும் ஸ்பீடு பிரேக்கர் ஆகி இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எல்லா மனிதரும் நல்லவரே என்ற இயக்குநரின் கான்செப்ட் பிரமாதம் தான் என்றாலும் இவரது படங்களில் வரும் அனைவரும் நல்லவர்களாகவே வருவதும் எல்லாருமே எம் ஏ சைக்காலஜி முடித்தவர் போல் தத்துவம் பேசுவதும் களைய வேண்டிய குறைகள்.

பிருத்வி எனும் பப்லுவை ஆக்‌ஷன் ஸ்டார் ஆக காண்பித்து தமிழ் சினிமா ஹீரோக்களை செம இறக்கு இறக்குனது கலகல.. ( நிஜத்தில் இவரது முதல் படத்துக்கு கால்ஷீட் கேட்டு ஒரு முன்னணி ஹீரோவை அணுகிய போது அவர் நடிக்க மறுத்து விட்டார்.. அந்த கோபத்தைத்தான் இப்படி காட்டி தீர்த்துக்கொள்கிறார்.)

காமெடியில் கை கொடுத்து ஹீரோ அடிக்கும் நக்கல் பஞ்ச டயலாக்ஸ்.
1.நீ அடிக்கடி அடிப்பியே ஒரு பாழாப்போன பஞ்ச் டயலாக்.. அதென்ன?

ரத்தத்துல வேணா பல குரூப் இருக்கலாம்.ஆனா மனுஷங்க எல்லாம் ஒரே குரூப்தான்.

2, நீங்க பார்க்கத்தான் சைலண்ட்.. ஆனா வயலண்ட்..போய் அட்டாக் பண்ணுங்க.

3. தாய்க்கு ஒரு ஆபத்துன்னா ஆம்புலன்சுக்கு ஃபோன் பண்ணுவேன்

ஆனா தாய் நாட்டுக்கு ஒரு ஆபத்துன்னா நானே ஓடிப்போய் காப்பாத்துவேன்..

மொழி,அபியும் நானும் படங்கள் போல எல்லாத்தரப்பு ரசிகர்களுக்கும் இந்தப்படம் பிடித்து விடும் என சொல்லி விட முடியாது.ஆனாலும் தமிழில் இது வரவேற்கத்தக்க ஒரு முயற்சியே..
 
ஏ, பி செண்ட்டர்களில் 40 டூ 50 நாட்கள் ஓடலாம். சீ செண்ட்டர்களில் 15 நாட்கள் ஓடலாம்,
 
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42
 
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே

diski - தமிழ்வாணன் -ன் நந்தி - கிராமத்துக்காதல் - சினிமா விமர்சனம்


Saturday, January 15, 2011

காவலன் - விஜய் -ன் புதிய பரிமாணம் - சினிமா விமர்சனம்

http://www.songs4u.net/wp-content/uploads/2011/01/Kavalan-2010.jpg
காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் ஒன்லைன் தான் காவலன் கதையும்,
ஆனால் வித்தியாசமாக திரைக்கதை அமைத்து காமெடியை காதல் உணர்வில்
கலக்கி சித்திக் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறார்.

ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக பரிமளித்த பின்னும், மாஸ் ஓப்பன் உள்ள ஒரு ஹீரோ இந்த மாதிரி காமெடி கம் காதல் கதையில் நடிக்க ஒத்துக்கொண்டதும்,தனது புதுமையான நடிப்பினை வெளிப்படுத்தி மனம் கவர்ந்ததும் விஜயை பாராட்ட வைக்கிறது.

தொடர்ந்து 6 தோல்விப்படங்கள் கொடுத்த அயர்ச்சி, அரசியல் கட்சி
ஆரம்பிக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பம், இந்த சாஃப்ட் சப்ஜெக்ட்டை
ரசிகர்களும் ,மக்களும் ஏற்றுக்கொள்வார்களா என்ற தயக்கம் இதெல்லாமே
விஜய் -ன் முகத்தில் ஏற்றுக்கொண்ட கேரக்டரின் தன்மையை மீறி
தெரிவதும், அவரது முகத்தில் ஒரு டல்னெஸ் தெரிவதும் வருத்தம் தரக்கூடிய
மாற்றம்.

ஆனால் இதெல்லாம் படத்தின் இடைவேளை வரைதான்.
கதையின் ஜீவனாக விளங்கும் படத்தின் பின் பாதியில் விஜய் -ன்
கலக்கலான நடிப்பு பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது.அது வரை
வடிவேலுவும், இயக்குநரும் படத்தை தாங்கி நிற்பதும், அதற்குப்பிறகு
விஜய் தூண் மாதிரி நின்று படத்தை காப்பாற்றுவதும் ரசிக்க வைக்கும்
ஆரோக்கியமான போட்டி.
http://pirapalam.net/wp-content/uploads/2010/08/Kaavalkaran-On-Location-4.jpg
வடிவேலு வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட கேரக்டர்தான் என்று தெரியாத
வண்ணம் அவருக்கு புத்திசாலித்தனமாக காட்சிகளை ஒதுக்கி இருக்கிற
விதம் அழகு.பஸ் கூட்டத்தில் முன் பின் தெரியாத பெண்ணின் மடியில்
அமர்வது..காந்த டிரஸ் போட்டு இரும்புக்குண்டினால்  முக்கிய இடத்தில்
அடி வாங்குவது.,என வடிவேல் கேப் கிடைக்கிற இடத்தில் எல்லாம்
பொங்கல் வைக்கிறார்.

அசினின் அப்பாவாக வரும் ராஜ்கிரண் கண்ணியமான ,கச்சிதமான நடிப்பு.
அசினுக்கு அம்மாவாக ரோஜா வருவது காலத்தின் கட்டாயம்.ஆரம்பக்காட்சிகளில் ரோஜா விஜய்யை தேவை இல்லாமல் கண்டிப்பது.. டீஸ்  செய்வது தேவை அற்ற தெனாவெட்டு..( விஜய் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்ப்பைப்பெறும் அளவு அவருக்கு ஓவர் இடம் கொடுத்தது இயக்குநரின் தவறு)

அசினின் தோழியாக வருபவர் நல்ல ஃபிகர்தான். அவர் வரும் காட்சிகளில்
துப்பட்டாவை போனால் போவுது போட்டுக்கலாம் என்பது போல்
அலட்சியமாக உடுத்தி இருப்பதை வன்மையாக பாராட்டுகிறேன்.. ( ஹி ஹி )
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1gIa9DSi9wcI3E6W1OW-xPS9n6S_MLF1z4thVi5INAHtDGStyBQPyCM1sTEn6ajP3uUtKfhVgqpViTi2QwM9CSwpaI8AXGRf4idZS8TIj_rDjeS9-q5Pyq4KhtJqUtfEzUxZssxwp8L0/s1600/vi-18-09-2010-350.jpg a
படத்தின் ஓப்பனிங்க் பாட்டான விண்ணைக்காப்பான் ஒருவன்,,பாட்டில் விஜய் -ன் டான்ஸ் வழக்கம் போல் கலக்கல்.அதேபோல் ஓப்பனிங்க் பாக்சிங்க் ஃபைட்டில் அவரது ஆக்ரோஷம் அப்ளாஸ் அள்ள வைக்கும் நடிப்பு.

டான்ஸ் மாஸ்டரை காலேஜை விட்டு துரத்தி விட்டு விஜய் டான்ஸ்
பிராக்டீஸ் தருவது செமயான சீன் தான். ஆனால் அந்தக்காட்சியில் விஜய்
இன்னும் நல்லா பண்ணி இருந்திருக்கலாம்.( வாடி வாடி கை படாத சி டி பாட்டு
 டான்ஸ் மாதிரி அந்தப்பாட்டை கலக்கல் ஹிட் ஆக்கி இருக்க வேண்டியதை
ஹேர் இழையில் தவற விட்டு விட்டார்கள்.)

அசினின் நடிப்பில் பழைய நளினம் மிஸ்ஸிங்க்.கஜினி ஹிந்தி படத்துக்குப்பிறகு  அவரிடம் பழைய துள்ளலை பார்க்க முடிய வில்லை.இருந்தாலும் கதையின்  தன்மையும், கேரக்டரின் போக்கும் அந்தக்குறை பெரிய அளவில் தெரியாமல்  மறைத்து விடுகிறது.
http://www.4tamilmedia.com/ww5/images/stories/cinema/kavalan.jpg
காமெடியில், செண்ட்டிமெண்ட்டில் வசனகர்த்தா கலக்கிய இடங்கள்

1. ராஜ் கிரண் - நம்பிக்கைக்கு உரியவன் எதிரியா இருந்தாலும் மன்னிப்பேன்.
ஆனா நம்பிக்கை துரோகி நண்பனா இருந்தாலும் மன்னிக்க மாட்டேன்.

2. பேர் வைக்கிறவன் குணம் தான் குழந்தைக்கு வரும்..

3. பலம் பலவீனத்தை அடக்கி ஆள்றது நாட்டுக்கு ஒத்து வராது,காட்டுக்குத்தான் அது சரி .அன்பாலதான் எதிரியை ஜெயிக்கனும்.

4. இனிமே டியூட்டிங்கற போர்வைல லேடீஸ் டாய்லெட் இருக்கற பக்கம் போவியா?

உங்க அனுமதி இல்லாம போகமாட்டேங்க எங்கேயும்.
.
சரி சரி போ..

எங்கே ?லேடீஸ் டாய்லெட்டுக்கா?

5. காலேஜ் புரொஃபசர் லிவிங்க்ஸ்டன் - எப்போ பாரு இவன் லேடீஸ் டாய்லெட் பக்கமே போறானே.. அப்படி அங்கே எனதான் இருக்கும்?நாமும் போய் பார்ப்போம்..

6. வடிவேல் - பார்வதி நம்பியார்னு சொல்றியே.. அது யாரு?

ஹய்யோ.. அது பார்வதி நம்பியார் இல்லை.. பிரைவேட் நெம்பர்.

7. விஜய் - நான்சென்ஸ்.. ஸ்டுப்பிட்

வடிவேல் - கூப்பிட்டீங்களா? பாஸ்?

விஜய் - இல்லை.. உன்னை திட்டுனேன்..

8. வடிவேலுவின் ஃபிகர் - பாடிகார்டு இப்போ யூனிஃபார்ம் போடல..


வடிவேல் - உனக்கு எப்படி தெரியும்?


ரூம்ல எட்டிப்பார்த்தேன்.

பாத்துட்டியா?எவ்வளவு தைரியம் இருந்தா அதை என் கிட்டேயே வந்து சொல்வே?


9. நல்லா வேலை செய்யறதால ஓனர் அவளை எப்பவும் பிரக்னெண்ட்டா வெச்சிருக்காரு..


என்னது?இங்கிலீஷ் தெரியலைன்னா பரவால்ல ,அதை கொலை பண்ணாதே.. பர்மணண்ட்டா வெச்சிருக்காரு.

10. எதுக்குடா அடி வாங்குனே?

நான் என்ன அமவுண்ட் குடுத்தா வாங்குனேன்?

சரி எத்தனை பேர் அடிச்சாங்க?

 கவுண்ட் பண்ண எல்லாம் டைம் இல்ல.

11. டாக்டரை பார்க்கப்போறேன்.

அவர் பேர் என்ன?

அது  அது.. வந்து பேர் தெரியாது.. ஆனா அவரை நான் டாக்டர் டாக்டர்னுதான் கூப்பிடுவேன்.

12. இப்போதான் முத தடவையா என் காதலியை பார்க்கப்போறேன்.

அவ அழகா இல்லைன்னா?

அழகுங்கறது கண்ணுக்குத்தானே.. மனசுக்கு இல்லையே?
http://reviews.in.88db.com/images/kaavalkaaran/kavalan-Latest-Movie-Stills-4.jpg
13. நீதான் அவ கூட சண்டை போட்டுக்கிட்டியே.. மறுபடி அவ கூப்பிடுவான்னு எப்படி நம்பறே..?

உண்மையான காதல் இருந்தா கண்டிப்பா கூப்பிடுவா..

14. ஆசைப்பட்டு அடையறதுக்கு இது பணம் இல்ல. குணம்.பிறப்புலயே வர்றது.

15. அசின் -டெயிலி யூனிஃபார்ம் போட்டுட்டு வர்றியே ,நீ என்ன எல் கே ஜி யா?

விஜய் - ஹி ஹி


வடிவேல் - அப்போ நீ எல் கே ஜி மாதிரி பெரிய பெரிய் படிப்பெல்லாம் படிச்சிருக்கிறியா? சொல்லவே இல்ல..

16. விஜய் -அயன்பாக்ஸ்ல சூடு பட்டதுல என் பேண்ட்ல ஓட்டை விழுந்திடுச்சு,

வடிவேல் -எனக்கு ஒரு டவுட், அயன்பாக்ஸ் ஒண்ணுதான் இருக்கு, ஆனா ஓட்டை 2 இருக்கே.. எப்படி?

17. ஃபோன் அவருது.. டோன் என்னுது..

என் லவ்வர் உனக்கு எதுக்கு ஃபோன் தரனும்?

18. ஆசைப்பட்டு ஆட்டையைப்போட்டிருந்தாலும் பரவால்லை,ஓட்டையை போட்டுட்டியே பேண்ட்ல..

19. தேவை இல்லாம தேரை இழுத்து தெருவுல விட்டது நீதானா..?

20. குள்ள அமிதாப் - என் உயரத்துக்கு இந்த மலர் மாலை ஆர்ச் மாதிரி இருக்கு..பூச்செண்டு இவ்வளவு பெருசு எதுக்கு?என் சைஸுக்கு ரோசாப்பூவே அதிகம்.

21. அவன் யாரு?     பாடிகாட்.


நீ யாரு?                       அவனுக்கு ஜோடிகாட்

22. நம்பறவங்களை அவன் சந்தேகப்பட மாட்டான்,ஏமாத்தவும் மாட்டான்.

23. வடிவேலுவின் ஆள் - நாங்க யாரும் பாடிகாட்டை முழுசா பார்த்ததில்லை.

வடிவேல் - நீ எதுக்கோசரம் அவனை அந்த கோலத்துல பாக்கனும்?

ஹய்யோ அவன் முகத்தை சொன்னேங்க..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjD1W7ZaY6mVAmAGI6LTQMxNw2PlVHW2K0X3REcID5LHw7NZY6Xa31So1U8cjsacvST_79WVdJLgak0MxDuOO-sbykGJjX5U-LAbYENRxiTxrI4uL7wP0xMG7XDFsp1aXQb9AEiI5BEKEA/s1600/kavalan16.jpg
யாரது? யாரது? பாட்டு நல்ல மெலோடி.பட்டாம்பூச்சி பாட்டில் விஜய் ஏன் எண்ணெய் வழிந்த முகத்தோடு வர்றார்னு தெரியல.

கண்ணுக்குள் நிலவு படத்துக்குப்பிறகு விஜய் இந்தப்படத்தில் இதுவரை காட்டாத பல ஃபேஸ் எக்ஸ்பிரஸ்ஸன்சை காட்டி கலக்கி விட்டார்.இந்தப்படத்தின் வெற்றி அவருக்கு புதிய தெம்பைத்தந்து தொடர்ந்து வித்தியாசமான கேரக்டர்கள் செலக்ட் பண்ண அடிகோலும் என எதிர்பார்க்கலாம்.

இந்தக்கதையில் ஆக்‌ஷன்,காமெடி இல்லாமல் முழு நீள காதல் படமாகவும் எடுத்திருக்கலாம்.. ஆனால் செக்யூரிட்டிக்காகவும்,கமர்ஷியல் காம்ப்ரமைஸூக்காகவும் அதை எல்லாம் மிக்ஸ் பண்ணி இருக்கிறார்கள். 

இந்தப்படத்தில் விஜய்க்குப்பஞ்ச் டயலாக்ஸே இல்லை.குடும்பத்துடன் காண வேண்டிய காதல் கம் காமெடி ஃபிலிம்.

ஏ செண்ட்டர்களில் 75 நாட்கள், பி செண்ட்டர்களில் 50 நாட்கள், சி செண்ட்டர்களில் 25 நாட்கள் ஓடலாம்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 45

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று.

டிஸ்கி - இது ஒரு மீள் பதிவு..காரணம் திடீர்னு இந்த போஸ்ட்டையே காணோம்.என் பிளாக் பாஸ்வோர்டு எனக்குக்கூட அப்பப்ப மறந்துடுது.. சிலர் எப்படியோ கண்டு பிடிச்சு உள்ளே வந்து என்னென்னவோ பண்ணிடறாங்க..ம் ம்.

நான் யார் வழிலயும் குறுக்கிடறதில்லை.. மீறி என் வழில யாராவது குறுக்கிட்டா....ஹி ஹி ஒதுங்கி போயிடுவேன்.. அல்லது  ரிட்டர்ன் பேக் தான்..ஹா ஹா ( நம்மாலயே முடியல.. எதுக்கு பஞ்ச் டயலாக்?)

Wednesday, November 10, 2010

வல்லக்கோட்டை -குப்பைப்படத்தை கும்மி அடிக்கும் காமெடி விமர்சனம்


ஆக்‌ஷன் போங்கு அர்ஜூனும் பொணரஞ்சக இயக்குநர் வெங்கடேஷும்

வாங்க ,வெங்கடேஷ்,வாடா உலகத்தரமான படத்தை இயக்கியதற்குப்பிறகு அடுத்த உலகப்படம் இதுதானா சார்

அர்ஜூன்,சும்மா நக்கல் அடிக்காதீங்க.அங்கே மட்டும் என்ன வாழுதாம்?திருவண்ணாமலைனு ஒரு டப்பா படத்தை குடுத்தவர்தானே நீங்க?

ஏன்?வந்தே மாதரம் உங்க கண்ணுக்கு தெரியலையா?

அதுல நீங்க ஹீரோ கிடையாதே?மம்முட்டிதானே ஹீரோ.நீங்க செகண்ட் ஹீரோ,டம்மி பீசு.

சரி,இப்படி 2 மொக்கைகளை ஒண்ணு சேர்த்து ஒரு படம் பண்ணனும்னு புரொடியூசருக்கு ஐடியா வந்தது எப்படி?

அதுவா,புரொடியூசரு பி எஸ் சி மேத்ஸ் படிச்சவராம்.மைனஸ் இண்ட் மைனஸ் = பிளஸ் அப்படினு படிச்சிருக்காராம்.2 உதவாக்கரைகளை இணைச்சா ஏதோ தேறும்னு தப்பு கணக்கு போட்டிருக்கார்.

சரி படத்துக்கு ஏன் வல்லக்கோட்டைனு கேவலமா டைட்டில் வெச்சிருக்கீங்க?அடிக்கடி வாயு புத்திரன்னு படம் பூரா பில்டப் குடுத்தீங்களே,அதையே டைட்டில் ஆக்கி இருக்கலாமே?

அப்படித்தான் முதல்ல வெச்சோம்,அது தூய தமிழ் டைட்டில் இல்லைனு சொல்லிட்டாங்க,சரி வரி விலக்குக்கு ஆசப்பட்டு தூய தமிழ்ப்பெயரா வெச்சுட்டோம்.



அட
சார்,நடிக்கறப்பத்தான் கதை என்னன்னு சொல்லலை,இப்பவாவது சொல்லுங்களேன்.

சந்தடி சாக்குல நடிச்சேன்னு எல்லாம் ரீல் விடாதீங்க,கதை என்னன்னா....
சிறைக்கைதி ஒருத்தன் சக கைதியின் தம்பியை காப்பாத்த வாக்கு தர்றான்.அவனோட தம்பி ஹாஸ்பிடல்ல.அவனை காப்பாத்த எடுக்கும் முயற்சில அவன் பல சிக்கல்ல மாட்டி இருக்கறதா தெரிய வருது.இதுக்குள்ள ரிலீஸ் ஆகி வர்ற சக கைதி பணத்துக்காக ஆசைப்பட்டு தம்பிக்கு எதிரா வேலை செய்யறான்.ஹீரோ அப்பப்ப வாயு புத்திரன் அவதாரம் எடுத்து அந்நியன் ரேஞ்சுக்கு அநியாயத்தை தட்டி கேக்கறார்.(தட்டாம கேக்கக்கூடாதா?)
சக கைதி தாந்தான் வாயுபுத்ரன்னு ஊரை நம்ப வெச்சு ஏமாத்தறார்......

சார்..தலையை சுத்துது,ஒண்ணும் புரியலை...இதுக்கு கதை என்னனு கேக்காமயே இருந்திருக்கலாம்.ஹீரோயின் புதுசு போல,ஃபிகர் நல்லாத்தான் இருக்கு...?

ஃபிகர் நல்லாருக்கு..ஆனா டூயட் சீன்ல உங்க பக்கத்துல நிக்கறப்ப அப்பா ,பொண்ணு மாதிரி இருக்கு...

சரி சரி.. பப்ளீக் .பப்ளிக் 


அட
குப்பையில் கிடைத்த மாணீக்க வரிகள்


1.டெரர் தென்னரசாக வரும் வெண்ணிற ஆடை மூர்த்தி - யோவ் நான் ஒரு ஜெயிலர்யா,ஜெயிலர்ட்ட பேசற மாதிரி பேசுங்க ,என்னவோ டெயிலர்ட்ட பேசற மாதிரி பேசறீங்களே..?

2.நல்ல நடத்தை இருந்தா ரிலீஸ் பண்ணுவாங்களாமே. /நான் நல்லா நடப்பேன் பார்க்கறீங்களா?

 எங்கே நட...

அட மூதேவி ,இப்படி நடந்தா ரிலீஸ் ஆனாக்கூட நீ ஊர் போய்ச்சேர ஒரு வாரம் ஆகுமேடா..

3.சார், எனக்குப்பதிலா அவரை ரிலீஸ் பண்ணுங்க,ஊர்ல ஏதோ முக்கிய வேலை இருக்காம்.

இது என்ன டி வி சீரியல்னு நினைச்சியா?யாரோட கால்ஷீட்டாவது கிடைக்கலன்னா இனி இவருக்குப்பதில் இவர்னு டைட்டில்ல காண்பிச்சு மாத்த?

4. வில்லன் சார்,உங்க பேரை சொல்லுங்க...

எதுக்கு?

இல்லை ,உங்க பேரை கேட்டா உச்சா போயிடுவாங்கனு எல்லாரும் பில்டப் குடுத்தாங்க..எனக்கு இப்போ உச்சா போகனும்..

5.டே நாயே இது ஜெயில்,பிரைவேட் பாத்ரூம் கிடையாது..உலகத்துலயே ஜன்னல் வெச்ச ஜட்டி போட்டிருக்கறது நீ ஒருத்தன் தாண்டா.

6. சார் நீங்க எனக்குத்தாத்தா மாதிரி...

அடப்பாவி ஊர்ல தாதா மாதிரி பில்டப் குடுத்து வெச்சிருக்கேன்,என்னை தாத்தா ஆக்கீட்டியே..

7.நான் இந்த ஜெயில்ல சப்பற வயசரா இருக்கேன்.

என்னடா உளர்றே.. ஓ சூப்பர்வைசரா இருக்கியா?உனக்குதான் இங்கிலீஷ் வர்லையே விட்டுட வேண்டியதுதானே,,

8.இப்படியே நீந்திப்போனா கரை வந்துடுமா?

அந்தப்பக்கம் போனா கரை வராது,ரத்தக்கறைதான் வரும் .அது வில்லன் ஏரியா.

9. ஏப்பா,அவனா உன்னை தண்ணில தள்ளி விட்டான்?

நான் என்ன மானங்கெட்டவனா?அவன் தள்ளி விடறவைக்கும் வேடிக்கை பார்க்க,நானே குதிச்சுட்டேன்.

10.

ஷகீலா தோளில் கை வைத்து கஞ்சா கருப்பு  - இதை மெயிண்டைன் பண்ணறது ரொம்ப சிரமமா இருக்கே....

ஓகே வெங்க்டேஷ் சார்,எப்படியோ கஷ்டப்பட்டு 10 வசனம் சொல்லீட்டீங்க.14 ரீல் படத்துல நீங்களே 10 வசனம்தான் ரசிச்சா சராசரி ஜனங்க எத்தனையை ரசிக்கப்போறாங்க.. சார் ஒரு டவுட்,அந்த பக்கெட் ஃபைட் ரொம்ப கேவலமா இருக்கு....

நீங்க போடற எல்லா ஃபைட்டுமே கேவலமாத்தான் இருக்கு அதுக்காக எல்லாத்தையும் கட் பண்ண முடியுமா?

அது சரி சார்,ஒரு சீன்ல போலீஸ் ஹீரோயின் கிட்டே “என் கூட ஒரு நைட் படுத்துடு,இல்லைன்னா பொய்க்கேஸ் போட்டுடுவேன்”னு  சொல்ற மாதிரி கேவலமா ஒரு வசனம் வருதே ,மாதர் சங்கங்கள் எதிர்க்க மாட்டாங்களா?

உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி அர்ஜூன்,என்னமோ உங்க படத்துக்கு  லேடீஸ் கூட்டம் அலை மோதற மாதிரி பில்டப் குடுக்கறீங்களே...

சரி சரி சரக்கு ரெடியானு  ஒரு டப்பாங்குத்து பாட்டு வெச்சிருக்கீங்களே,அது வேணா பாக்கற மாதிரி இருக்கு.கடைசியா ஒரு கேள்வி, இந்தப்படத்தை என்ன தைரியத்துல தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணுனீஙக?

ஏதோ ,லீவ் டைம்ல ரிலீஸ் ஆனா வெள்ளீ சனி ஞாயிறு அப்படினு 3 நாளாவது ஓடும்னுதான்.

ஆனந்த விகடன்,குமுதம் மதிப்பீடு எப்படி இருக்கும்?

இந்தப்படத்துக்கு எல்லாம் விமர்சனம் போட அவங்களுக்கு என்ன தலை எழுத்தா?வீணாப்போன படத்துக்கு எல்லாம் விமர்சனம் போடற அட்ராசக்க வேணா போடும்.

டிஸ்கி  - ராம்சாமி - டேய் நாயே,இங்கே வா உன் பேர் என்ன?

சி பி  - என் பேரு சி பி எஸ் .

ராம்சாமி - என்னவோ பெருசா ஐ பி எஸ் படிச்ச மாதிரி பில்டப் எதுக்கு?இந்தப்படத்துக்கு விமர்சனம் எழுதுன்னு யாரவது கேட்டாங்களா?

இல்லைண்ணே...

ராம்சாமி - அப்புறம் என்ன இதுக்கோசரம் எழுதுனே,நீயே டைட்டில்ல குப்பைன்னு சொல்லிட்டே இல்ல..இனிமே எந்தப்படத்துக்கும் விமர்சனமே எழுதக்கூடாது,.. புரிஞ்சுதா..

சரிங்கண்ணே... 

ராம்சாமி - இன்னைக்கு ஒரு அடிமை சிக்கீட்டான்யா

Saturday, September 11, 2010

துரோகி -சினிமா விமர்சனம்

அக்னி நட்சத்திரம் படத்தில் வருவது போல் இரண்டு நண்பர்கள் அடிக்கடி மோதிக்கொள்வதும்,இருவருக்கும் ஒரு பிரச்சனை வரும்போது இணைந்து எதிரியை வீழ்த்துவதும்தான் கதை.
படத்தோட ஓப்பனிங்கில் கெஸ்ட் ரோல் செய்தாலும் அதை பெஸ்ட் ரோல் ஆக மாற்றிய பூஜாவுக்கு ஒரு பூங்கொத்து.அழுகிற காட்சியில் கூட அழகாக இருக்கும் ஒரு சில நடிகைகளில் பூஜாவும் ஒருவர்.ஆனால் கஜினி படத்தில் அசின் மடார் என மட்டையால் அடிக்கப்பட்டு வில்லனால் சாகடிக்கப்பட்ட காட்சி கொடூரம் இதிலும் .இயக்குநர் இன்னும் கொஞ்சம் மென்மையாக அந்த காட்சியை கையாண்டிருக்கலாம்.

சத்ரியன் படத்தில் விஜயகாந்த்தின் ரவுத்திரம் எப்படி வந்தது என்பதை விரிவான ஃப்ளாஷ்பேக்கில் காட்டியது போல் இதிலும் ஒரு நீண்ட ஃப்ளாஷ்பேக் உண்டு,ஆனால் அதை படத்தின் ஆரம்பத்திலேயே காட்டியது இயக்குநரின் புத்திசாலித்தனம்.

அநியாயத்தைக்கண்டு பொங்கி எழும் சமூக சேவகி பூஜா (டீச்சர்) வில்லன் க்ரூப்பால் கொல்லப்படும்போது 2 நண்பர்கள் கம் மாணவர்கள் அதைப்பார்த்து கொலையாளியை திட்டம் போட்டு தாக்குகிறார்கள்.போலீஸ் விசாரணையில் அடிக்கு பயந்து ஒருவன் அடுத்தவனை காட்டிக்குடுத்து துரோகி ஆகிறான்.அப்போ வளரும் வன்மம் கடைசி வரை தொடர்கிறது.

போலீஸ் ஸ்டேஷனில் அந்தப்பையனை விசாரிக்கும்போது ஒரு ஃபோன் வருகிறது.உடனே ஃபோனை எடுத்துப்பேசிய எஸ்.ஐ அந்தப்பையனின் அம்மாவிடம் “நீ உன் புருஷன் கூடப் படுத்தியா? இப்போ ஃபோன் பண்ணுனானே அவன் கூடப் படுத்தியா?எனக்கேட்பது குரூரம் என்றாலும் போலீஸ் ஸ்டேஷன்களில் அப்படித்தானே நடக்கிறது?

இவர்தான் ஸ்ரீகாந்துக்கு ஜோடி,இவரது நெருக்கமும்,காதலில் காட்டும் இறுக்கமும் ரொம்ப ஓவர்,இருந்தாலும் ரசிக்க முடிகிறது.பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோவை ஹீரோயின்(கள்) விழுந்து விழுந்து காதலிப்பது போலும் ஹீரோ ஏதோ போனால் போகிறது என்று ஒப்புக்கு சப்பாணியாக லவ் பண்ணுவது போலும் காட்டப்படுவது மேல்சாவனிசம் தவிர வேறொன்றும் இல்லை.

ஸ்ரீகாந்த் க்ளோஸ் கட்டிங்,மும்பை ஸ்டைல் மீசை என ஆள் கலக்கலாக வருகிறார்.இவரது கேரக்டரைசேஷனில் இயக்குநர் ஒரு தவறு செய்து விட்டார்.இவரை இன்ஸ்பெக்டராகப்போட்டு விஷ்ணுவை(வெண்ணிலா கபாடிகுழு,பலே பாண்டியா ஹீரோ) ரவுடியாகக்காண்பித்திருக்க வேண்டும்.இயக்குநருக்கு என்ன நெருக்கடியோ?

விஷ்ணு அவரளவில் நன்றாக நடித்திருந்தாலும் இன்னும் பயிற்சி தேவை.போலீஸ் கேரக்டருக்காக சூர்யா,டாக்டர் ராஜசேகர் செய்த ஹோம் ஒர்க்கை எல்லாம் ஃபாலோ பண்ணனும்.(காக்க காக்க,இதுதாண்டா போலீஸ்)

இயக்குநருக்கும், விஷ்ணுவுக்கும் ஒரு கேள்வி.எந்த ஊரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாடியோடும், ஃபங்க் தலையோடும் வர்றார்? (அட்லீஸ்ட் ஐயப்ப சாமிக்குமாலை போட்டிருக்கார் என்றாவது சமாளித்து இருக்கலாம்.)
(பூனம் பஜ்வா)
விஷ்ணுவுக்கு ஜோடி.முன் பின் தெரியாத ஒரு நபருக்கு பப்ளிக் ப்ளேஸில் ஒரு 20 வயசுப்பெண் முத்தம் கொடுப்பதும், இப்போ என்ன முத்தம் குடுத்தா கற்பா போச்சு என்பதும் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது.பெண்கள் என்றால் கிள்ளுக்கீரையா?
படத்தோட மெய்ன் கான்செப்ட் ஹீரோக்களின் முன் விரோதமும்,நட்பும்தான்.ஆனால் 2 ஹீரோயின்களின் காதல் காட்சிகளில் ஹீரோக்கள் காணாமல் போகிறார்கள்.இந்த இயக்குநர் முழுக்க முழுக்க ஒரு காதல் கதை எடுத்தால் பிரமாத வெற்றி அடைவார் என்பது என் தனிப்பட்ட கருத்து.

சிற்சில காட்சிகளில் இயக்குநரின் புத்திசாலித்தனம் தெரிகிறது,
ஹீரோவின் அப்பா ஒரு அர்ச்சகர்,அவருக்கு பையனை அவனது ரவுடித்தனத்தை பிடிக்காததால் சின்ன வயசுல இருந்தே அவனைக்கண்டு கொள்வதில்லை.2 பேருக்கு கோயிலில் நடக்கும் உரையாடல்.

”என் பையன் செத்து 18 வருஷம் ஆச்சு.”

எங்கப்பா பொறந்து 50 வருஷம் ஆச்சு,அவர் பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணனும்”

போலீஸ் இண்ட்டர்வியூவுக்கு செல்லும் விஷ்ணுவை ஸ்ரீகாந்த் விஷ்ணுவின் தங்கையுடன் ஜல்சாவில் இருப்பது போல் செட் பண்ணப்பட்ட செல்ஃபோன் சவுண்ட் மூலம் அவரை டார்ச்சர் செய்வது ரசனையான சீன் என்றாலும் மோசமான முன்னுதரணம்.(இனி இதைப்பார்த்து எத்தனை பேர் இதே மாதிரி சீன் வைக்கப்போறாங்களோ?)
இவர் ஆடும் குத்தாட்டம் சி செண்ட்டர் ரசிகர்களுக்கு செம டானிக்.டீசண்ட்டாக அந்த குத்துப்பாட்டை எடுத்த இயக்குநருக்கு ஒரு ஷொட்டு.

வசனகர்த்தாவின் தயவில் சில பளிச்கள்.

1.மாப்ளை போலீஸ்க்கு ட்ரை பண்றாரு,அவர் ஃபிரண்டு நீ?

பக்கத்து வீட்டு பொண்ணுக்கு ட்ரை பண்றேன்.

2.நீங்க லவ் மேரேஜா?அரேஞ்ஜ்டு மேரேஜா?

2ம் தான்.

புரியலையே?

லவ் தனி, மேரேஜ் தனி,ஒருத்தியை லவ் பண்ணுனேன்,வேற ஒருத்தியை மேரேஜ் பண்ணிக்கிட்டேன்.

3.பொண்ணைப்பார்த்தா பையன் வெட்கப்படறான்,பையனைப்பார்த்தா பொண்ணோட அம்மா வெட்கப்படுது,என்னய்யா நடக்குது இங்கே?

4.துரத்தி துரத்தி உன்னை லவ் பண்றேன்னு பயமா இருக்கா?இந்தப்பிரச்சனைக்கு ஒரே சொல்யூஷன் தான், பேசாம என்னை லவ் பண்ணிடு,ஆல் பிராப்ளம் சால்வ்டு

ஓடும் ரயிலில் பயணம் செய்யும் ஹீரோயின் ஓடி வரும் ஹீரோவுக்கு கை கொடுத்து ஏற்றி விடும் காட்சி ரொம்ப அசிரத்தையா எடுக்கப்பட்ட காட்சி,ஒரு ரிஃப்ளக்‌ஷன் கூடவா ஹீரோயின் கிட்ட் இருக்காது?

படத்தின் வில்லனாக வரும் தியாகராஜன் மலையூர் மம்பட்டியான்,நீங்கள் கேட்டவை படத்துக்கு பிறகு இதில் ஜொலிக்கிறார்.மிரட்டலான் நடிப்பு, ஆகிருதியான தோற்றம்.(இந்தப்படத்தில் பிரசாந்த் ஏன் நடிக்கலை?).ஒளிப்பதிவு ரொம்ப மோசம்.பாடல்கள் ,இசை சுமார் ரகம்.

படம் பாஸ் ஆகி விடும்.

பி,சி செண்ட்டர்களில் 30 நாட்கள் ஓடும்.ஏ செண்ட்டர்களில் ஓட இன்னும் விளம்பரம் வேண்டும்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்தவிகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேட்டிங் -ஓகே

Wednesday, September 01, 2010

ராமர்-சினிமா விமர்சனம் -நித்யானந்தாவின் கதை?

அன்புள்ள இயக்குநர் ஆதிராஜா அவர்களுக்கு வணக்கம்.உங்க படம் ராமர் டைட்டிலும்,படத்தோட ஒன்லைன் ஸ்டோரியும் நல்லாருக்கு.ஆனா படத்தோட திரைக்கதை,ட்ரீட்மெண்ட் எல்லாம் ரொம்ப சொதப்பல் ஆகிடுச்சே?பகவத்கீதைல கிருஷ்ணன் சொன்ன மாதிரி நல்ல விஷயங்களை முதல்ல பார்ப்போம்.

முதல்ல படத்தோட ஒன்லைன் ஸ்டோரி..ராமருக்காக சீதை தீ குளித்தாள் அன்று.சீதை சொன்னதுக்காக ராமர் தீ குளித்தார் இன்று.கேட்கவே ரொம்ப நல்லாருக்கு.ஒரு நல்ல காதல் கதைக்கான கான்செப்ட் இதுல அடங்கியிருக்கு.
ஹீரோ கற்றது தமிழ் ஜீவா மாதிரி தோற்றத்திலும்,கெட்டப்பிலும்.முதல் படம் என்ற அளவில் ஓகே தான்.ஹீரோயின் கேரளத்துப்பைங்கிளி.நந்திதாதாஸ் மாதிரி சாயல்,கண்ணியமான தோற்றம்,நல்ல நடிப்புத்திறமை,டீசண்ட் லுக்.

ஹீரோவுக்கு நித்யானந்தா என பெயர் வைத்தது சும்மா ஒரு பரபரப்புக்காக என நினைக்கிறேன்,மற்றபடி அவருக்கும் ,படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ஹீரோயினின் பெயரும்,கேரக்டரும் பூ வேலி கவுசல்யா மாதிரி.(மஹா ).

படத்தோட ஓபனிங்லயே ஒரு நல்ல காமெடி சீன் வெச்சு இருக்கீங்க.501 சோப் வேணும்னு கேட்பதற்கு மவுன விரதம் இருக்கும் ஒரு அப்பாவிபையன் ஒரு மளிகைக்கடை மலையாளக்குட்டியிடம் எப்படி கேட்பான்?அது ஒரு டீசண்ட்டான ஏ காமெடி.


RAMAR

அவ்வளவுதான் படத்துல 

இருக்கற பிளஸ்.இனி எல்லாம் மைனஸ்தான்.கோகுலத்தில் சீதை கார்த்திக் மாதிரி இந்தப்பட ஹீரோவும் பார்க்கற பொண்ணை எல்லாம் அடைய நினைக்கறவன்.ஹீரோயினிடம் அவனே அதை ஒத்துக்கொள்வது போல் ஒரு சீன் வேற வெச்சிருக்கீங்க.”மனசுக்குப்பிடிச்ச எந்தப்பெண்ணை பார்த்தாலும் நான் கேட்கற முத கேள்வி படுக்க வர்றியா?” என ஹீரோ சொல்லும்போது நமக்கே அவன் மேல் கோபம் வருது,ஹீரோயினுக்கு எப்படி இருக்கும்?ஹீரோவுக்கு 20 வயசுதான் இருக்கும்,ஆனா ஹீரோயின் ரொம்ப மெச்சூர்டா 28 வயசு மதிக்கத்தக்கவங்களா வர்றாங்க.இதை நீங்க கவனிசிருக்கலாம்.


கேமரா ரொம்ப சுமார் 1980 களில் வந்த படங்கள் போல் ரொம்ப பழைய ஸ்டைல் கேமரா ஆங்கிள்கள்.ஹீரோ வரும்போது நீங்க யூஸ் பண்ணி இருக்கற பேக்கிரவுண்ட் மியூசிக் கொடி பறக்குது படத்துல ரஜினிக்கும்,ரெட் படத்துல அஜித்துக்கும் யூஸ் பண்ணுனது.


காதல் தேசம் படத்தில் வருவது போல் 2 நண்பர்கள் ஒரே பொண்ணை காதலிக்கிறார்கள்.கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் வருவது போல் காட்சி அமைப்புகள்.நண்பனின் காதலி என தெரிந்ததும் அவனை போட்டுத்தள்ளும் அளவு ஹீரோவுக்கு வெறி.இந்த இடத்தில்தான் நீங்க ஸ்லிப் ஆகிட்டீங்க.பிரியமுடன் படத்துல காதலுக்காக கொலையே செய்யற அளவு ஹீரோ போனாலும் படம் பார்க்கறவங்க அதை ஏத்துக்கற மதிரி ட்ரீட்மெண்ட் இருந்தது,ஆனா இந்தப் படத்துல அது சுத்தமா இல்லை.

நீட்டான காதல் கதையா இதை எடுத்திருக்கலாம்.எதுக்கு தேவை இல்லாம ஹீரோ தாதாவின் அடியாள் என காண்பித்து தேவை இல்லாமல் வன்முறை,சண்டை,கத்திக்குத்து?நண்பனின் காதலிதான் தன் காதலி என ஹீரோவுக்கு ஏன் 6 ரீல் வரை தெரியாமலே போச்சு எனதற்கு நீங்கள் படத்தில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

ஒளிப்பதிவாளர் மிக முக்கியமாக 2 தவறுகள் செய்திருக்கிறார்.1.ஹீரோயினுக்கு வலது புருவத்துக்கு கீழ் ஒரு தழும்பு இருப்பது தெரிந்தும் ஏன் க்ளோசப் ஷாட்களை அங்கேயே வைத்து அழகியல் பதிவு மரபை உடைக்க வேண்டும்?ரைட் க்ளோசப் ஷாட்டே வைக்காமல் ,லெஃப்டிலேயே கடைசி வரை வைத்திருக்கலாம்.அடுத்து வில்லன் க்ரூப் அடிக்கடி சரக்கு அடித்து,நான் - வெஜ் சாப்பிடுவதை டைட் க்ளோசப்பில் அடிக்கடி ஏன் காண்பிக்கறீங்க?சைவப்பார்ட்டிகளுக்கு குமட்டுது.(ஒரு சீனில் கேமரா எச்சில் இலை மீது மீந்து போன சிக்கன் பீஸ்களை 20 செகண்ட் காண்பிக்கிறது)

ஒரு சீனில் ஹீரொ ஹீரோயினை கடலில் தள்ளி கொலை செய்வதாய் பயமுறுத்துகிறார்.அப்போ 6 இஞ்ச் ஆழம் மட்டும் உள்ள கடற்கரையோரம் எடுத்தது செம காமெடி.பேட்ச் ஒர்க்கிலாவது லாங்க் ஷாட் வைத்து சமாளித்திருக்கலாம்.

மஹாவா?உன் உயிரா? என ஹீரோவிடம் நண்பன் கேட்கும் சீன் விஜய் நடித்த லவ் டுடே படத்தில் வரும் ஃபேமசான ”ஃபிரண்டா?ஃபிகரா?” டயலாக்கின் காப்பி.

நல்ல எமோஷன் பாட்டு என நீங்கள் வைத்த அடி உனக்குள் பாட்டு முகவரி படத்தில் ஏ நிலவே ஏ நிலவே, நீ விண்ணை விட்டு பாட்டின் சுடப்பட்ட வடிவமே. 






காதலை சொல்லும் அந்த முக்கியமான சீனில் ஹீரோயின் 80 % நடிப்பை

வெளிப்படுத்தும்போது ஹீரோ மட்டும் 10% நடிப்பை மட்டுமே கொடுத்து சொதப்பியதை நீங்கள் கவனிக்கவில்லையா?

காதல் வெண்ணிலா சோகப்பாட்டில் எதற்கு ஸ்டெப் டான்ஸ் வைத்தீர்கள?ஸ்டோரி டிஸ்கஷனில் டான்ஸ் மாஸ்டரிடம் சிச்சுவேஷனை நீங்கள் சரியாக சொல்லவில்லையா? 

படத்தில் வரும் ரசிக்கத்தக்க வசனங்களில் சில.

1.டேய்,அப்படி அவ கிட்டே நீ என்னத்தை கண்டே?

முதமுதலா நான் என்னை ரசிச்சதே நான் அவளைப்பார்த்த பின்புதான்.

2.அன்பால சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை,அதுவும் ஒரு பொண்ணோட அன்பால..

3.யார் மேல நாம அதிகம் அன்பு வைக்கிறமோ ,அவங்க நம்மை விட்டு சீக்கிரமே பிரிஞ்சிடறாங்க.

4.ஆண்கள் அழிஞ்சு போறது ஏன் தெரியுமா? 5 நிமிஷ சுகத்துக்காக 24 மணி நேரமும் பொண்ணு பின்னாலயே அவன் சுத்தறதாலதான்.

5. ஆத்திரத்தோட அலசற எந்த விஷயமும் தீர்வைத்தராது

6.சில பேர் கண்ணீ ர்க்கு ஆறுதல் கிடைக்கும்,ஆனா என் கண்ணீ ரே உனக்கு ஆறுதலா இருக்கு ,இது விதியின் விளையாட்டு.

7. ஒருத்தன் சந்தோஷமா இருக்கறதே அவனுக்குப்பிடிச்ச பொண்ணோட மடியில படுத்திருக்கறதுதான்.



சவுண்ட் ரிக்கார்டிங் முடித்து பின் எடிட்டிங் டேபிள்க்கு நீங்க போகவே இல்லைனு நினைக்கிறேன்.ஒரு சீன்ல ஹீரோயின் பளார்னு அறையறா.25 செகண்ட் கழிச்சு சத்தம் கேட்குது.வில்லனின் கொடூரத்தைக்காட்ட கை நீட்டிப்பேசியவன் கையை ஹீரோ வெட்டுவ்து கொடூரம்+தேவை இல்லாத சீன்.

சோகம் ஆகட்டும்,கோபம் ஆகட்டும் அதை படத்தின் பாத்திரங்கள் வெளிப்படுத்துவது ரொம்ப அளவுக்கதிகம்.ஓவர் எக்ஸ்போஷன்.இது சினிமாவா?டிராமாவா?

சத்ரியன் படத்தில் திலகன் விஜய்காந்திடம் நீ பழைய ஏ சி பன்னீர் செல்வமா வரனும் என்பார்.மிக ரசனையான சீன் அது.அந்த சீனை இந்தப்படத்தில் வைத்திருக்கிறீர்கள்.எடுபடவில்லை.

புதிதாய் ஒரு பூகம்பம் என் நெஞ்சில் பூத்தது பாட்டு கூட அமர்க்களம் படத்தில் சத்தம் இல்லாத பாட்டின் உல்டாவே.

பொதுவாக காதலி கத்திக்குத்து பட்டுக்கிடக்கையில் காதலன் அவளைக்காப்பா
ற்றுவானா?வில்லன் க்ரூப்பை அழித்து விட்டு பிறகு சாவகாசமா போவானா?லாஜிக் இல்லா மேஜிக் அது.
ஹீரோவைத்தேடி வில்லன் க்ரூப் லிஃப்டில் போவதும்,ஹீரோ படிக்கட்டில் இறங்குவதும் தூள்,ரன்,தில் என பல ஹிட் படங்களில் துவைத்துக்காயப்போட்ட சீன் ஆச்சே.

கடைசியாக க்ளைமாக்சில் ஒரு பெரிய தவறு செய்துவிட்டீர்கள்.
நான் என்ன செஞ்சா எனக்கு உன்னை பிடிக்கும்? என ஹீரோ கேக்கறான்,அதுக்கு ஹீரோயின் செத்துப்போடா என்கிறாள்.ஏனெனில் ஹீரோ நிச்சயம் ஆன நிலையில் ஹீரோயினின் காதலனை கொன்றவன்.நமக்கே சீக்கிரம் படத்தை முடிங்கப்பா என தோன்றுகிறது,ஹீரோ பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்துகொள்கிறான்.அப்போது ஹீரோயின் ஏன் அவ்வளவு தூரம் கதற வேண்டும்?தன் கண் எதிரே ஒரு உயிர் அநியாயமாக போகிறதே என்ற அதிர்ச்சி மட்டும் கண்ணில் கான்பித்தால் போதாதா?10 வருஷம் குடும்பம் நடத்திய புருஷன் செத்துப்போனது மாதிரி அவரது கதறல் பாத்திரப்படைப்பில் குழப்பத்த்தை ஏற்படுத்துகிறது.இது ஹீரோயினின் தவறா?அதை கவனிக்காமல் விட்ட டைரக்டரான உங்கள் தவறா?

இறுதியாக ஒரு வார்த்தை .காதல் படம் எடுக்கும் எல்லா இயக்குனர்களும் கவனிக்க வேண்டியது.காதல் என்பது ஒரு மிக மெல்லிய உணர்வு,அது தானாக வர வேண்டும்,கட்டாயப்படுத்தி வராது.

இந்தப்படம் பி ,சி செண்ட்டர்களில் ஒரு வாரம் ஓடலாம்.ஏ செண்ட்டர்களில் இன்னும் போடவே இல்லை என நினைக்கிறேன்.பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சார்.