Showing posts with label தமிழருவி மணியன். Show all posts
Showing posts with label தமிழருவி மணியன். Show all posts

Saturday, November 10, 2012

கேப்டனுக்கு தமிழருவி மணியனின் பகிரங்க எச்சரிக்கைக்கடிதம்

விவேகம் இழக்கலாமா விஜயகாந்த்..?

ன்பிற்கினிய விஜயகாந்த் அவர்களுக்கு...



வணக்கம் வளர்க நலம்.


நீங்கள் அமைதியாக ஓர் இடத்தில் தனித்திருந்து ஆத்ம​சோதனை நடத்த வேண்டிய நேரம் இது. சிலர் எவ்வளவு முயன்று தேடினாலும் எதுவும் எளிதில் கிடைப்பது இல்லை. சிலருக்கு எளிதாகக் கிடைத்து விட் டாலும், கிடைத்ததை நிரந்தரமாகத் தக்க​வைத்துக் கொள்வதற்குத் தெரிவது இல்லை.



 சிகரத்தை அடைவது சாதனை இல்லை. அங்கேயே நீடித்து நிற்பதுதான் உண்மையில் உயர்ந்த சாதனை. ஒவ்வொரு சிகரத்தின் பக்கத்திலும் பயங்கரமான ஒரு செங்குத்துச் சரிவு இருக்கும். சிறிது நிலை தடுமாறினாலும் பள்ளமே படுக்கையாகிவிடும். நீங்கள் நிலை தடுமாறுவதைக் கண்டு ஏற்பட்ட கவலையில் பிறந்ததுதான் இந்தக் கடிதம்.



உங்கள் கட்சியில் இருக்கும் அனை​வரும் அடக்கத்துடன் கைகட்டி நிற்க வேண்டும் என்று நீங்கள் வெளிப்படை​யாகவே ஆசைப்​படுகிறீர்கள். கட்சிக்கு வெளியே இருப்பவர்களும் உங்கள் விருப்பு வெறுப்புக்கேற்பவே நடந்துகொள்ள வேண்​டும் என்று உள்ளுக்குள் எதிர்பார்க்கிறீர்கள். இந்த எதிர்பார்ப்புத்தான் உங்களுடைய அனைத்துப் பிரச்னைகளுக்கும் அடித்​தளம்.



இராமானுஜருக்கு வடுகநம்பி என்று ஒரு சீடர் இருந்தார். ஒருநாள் இருவரும் காவிரியைக் கடக்கும்போது, இராமானுஜர் வழிபட்ட சிலையையும், இராமானுஜரின் பாத அணிகளையும் ஒரே மூட்டையாகக் கட்டினார் வடுகநம்பி. பதறிப்போன இராமானு​ஜரிடம் சீடர் சொன்னார்: 'உங்கள் பெருமாள் உங்களுக்கு உயர்ந்தவர். என்னுடைய பெருமான் எனக்கு உயர்ந்தவர்’ என்று. இன்றைய அரசியலில் தலைவர்களாக வலம் வரும் நீங்கள் அனைவரும் வடுக நம்பியின் வாரிசுகளைத்தான் வர வேற்கிறீர்கள்!



மதுரையில் செப்டம்பர் 14, 2005 அன்று தே.மு.தி.க-வைத் தொடங்கிய​போது, உங்களை யாரும் பெரிதாகப் பொருட்​படுத்த​வில்லை. கூடிய கூட்டம்கூட உங்களைத் திரையில் பார்த்துக் கைதட்டிய ரசிகர் பட்டாளம் என்றுதான் பலர் கணக்குப் போட்டனர். ஆனால், 2006-சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட் பாளர்களை நிறுத்தி, ஓர் இடத்தில் நீங்கள் வெற்றி பெற்றாலும், உங்கள் கட்சிக்குக் கிடைத்த 10 சதவிகிதம் வாக்குகள் பல அரசியல்வாதிகளின் விழிகளை வியப்பால் விரிய வைத்தன. அடுத்து வந்த நாடா ளுமன்றத் தேர்தலில் உங்கள் கட்சி பெற்ற 10.1 சதவிகிதம் வாக்குகள் தமிழகத்தில் நீங்கள் தவிர்க்க முடியாத ஓர் அரசியல் சக்தி என்பதை அனைவருக்கும் உணர்த்​தியது.




'மக்களோடும் கடவுளோடும் மட்டுமே கூட்டணி’ என்று சலிப்​பில்லாமல் சொல்லிக் கொண்டிருந்த நீங்கள் 2011-சட்ட​மன்றத் தேர்தலில் ஜெயலலிதா​வுடன் சேர்ந்து நின்றபோது, அதை ஒரு சந்தர்ப்ப​வாதம் என்று வாக்காளர்கள் சந்தேகிக்காமல் வரவேற்கவே செய்தனர். அதற்கு ஒரே காரணம், கருணாநிதி பரிவாரத்திடம் இருந்து தமிழகத்தை எப்படியாவது விடுவிக்க வேண்டும் என்று வாக்கா​ளர்களின் தவிப்பும் தாகமும்தான்.



கருணாநிதியின் குடும்ப அரசியல் மீது மக்களுக்கு விளைந்த வெறுப்பும் விரக்தியும்தான் ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்கி, யாரும் எதிர்பாராத நிலையில் உங்களை  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக்கிய முக்கியக் காரணி என்பதை நீங்கள் இருவருமே உணராமற்போனதுதான் அரசியல் சோகம். 'என்னால்தான் நீங்கள் முதல்வரானீர்கள்’ என்று ஜெயலலிதாவைப் பார்த்து நீங்கள் முழங்குவதும், 'என்னால்தான் உங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற ஏற்றம்’ கிடைத்தது என்று ஜெயலலிதா ஏளனம் செய்வதும் முற்றிலும் அர்த்தமற்ற ஆணவத்தின் வெளிப்பாடு.



கூட்டணி அமைப்பதே ஒரு கட்சி இன்னொரு கட்சியால் பயன்பெற வேண்டும் என்பதற்​காகத்தானே? ஜெயலலிதாவுடன் நீங்கள் சேர்ந்திருக்கா விட்டால், நிச்சயம் 29 தொகுதிகளில் உங்கள் கட்சி வென்றிருக்காது. உங்கள் கூட்டணி அமையாமற் போயிருந்தால், வாக்குகள் சிதறியிருக்கும். அ.இ.அ.தி.மு.க. 150 இடங்களை அடைந்திருக்காது. ஆனால், தட்டுத் தடுமாறியாவது அது ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும். அந்த நிலையில் நீங்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றிருக்க முடியாது. இந்த உண்மை உங்களுக்கு ஏன் புரியவில்லை?



ஜெயலலிதாவை முதல்வர் என்ற முறையில் நீங்கள் மதிக்கப் பழகவில்லை. உங்களை எதிர்க் கட்சித் தலைவர் என்ற மரியாதையுடன் நடத்த ஜெய லலிதாவுக்கு மனம் வரவில்லை. விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் முதல்வருக்கு இல்லை. பக்குவமாய் விமர்சிக்கும் பாங்கு உங்களுக்கு வாய்க்கவில்லை. இந்தக் கொடுமைக்கு, உங்கள் இருவருக்கும் வாக் களித்தவர்கள் எங்கேபோய் முட்டிக்கொள்வது? 'நான் எப்படி ஒருவருக்கு அடிமையாக இருக்க முடியாதோ, அதே போன்றுதான் யாருக்கும் எஜ மானராகவும் இருக்கவியலாது’ என்றார் ஆபிரகாம் லிங்கன். ஆனால், நீங்கள் இருவருமே எல்லாருக்கும் எஜமானர்களாகவே இருக்க ஆசைப்படுகிறீர்கள்.



திரைப்பட உலகில் தனக்கென்று ஓர் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள நீங்கள் தொடக்க நிலையில் படத்தயாரிப்பாளர்களிடம் எவ்வளவு பணிவாக நடந்திருப்பீர்கள். 'தூரத்து இடிமுழக்கம்’ நடிக்கும்​போது காட்டிய பணிவு 'கேப்டன் பிரபாகரன்’ வெற்றிக்குப் பிறகும் இருந்திருந்தால் அதுதான் சிறப்பு. அரசியல் வாழ்வில் அடியெடுத்து வைத்தபோது பத்திரிகையாளரிடம் காட்டிய பாசம், எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றம் பெற்ற பிறகும் நீடித்து இருந்தால் அதற்குப் பெயர்தான் தலைமைப்பண்பு.



சென்னை விமான நிலையத்தில் பத்திரிகை​யாளர்கள் அப்படி என்ன கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டு விட் டனர்? ஏன் அந்தப் பதற்றம்? எதற்கு அந்த அனாவசிய ஆவேசம்? அறிவுக்கும் உணர்ச்சிக்கும் இடையில் நடக்கும் போட்டியில் அறிவைத் துறந்து, உணர்ச்சிக்கு ஆட்படுவது அரசியல் தலைமைக்கு அழகல்லவே! ஏகவசனத்தில் உரத்த குரலில் ஓங்கிப் பேசுவது பொதுஇடத்தில் கடைப்பிடிக்கக்கூடிய நயத்தகு நாகரிகமா கேப்டன்?




 'கறுப்பு எம்.ஜி.ஆர்.’ என்று அடைமொழி போட்டுக்கொள்ள ஆசைப்படும் நீங்கள், எம்.ஜி.ஆரிடம் எதையும் கற்கவில்லையே. கூடப்பழகியவர்களுக்கு எம்.ஜி.ஆரின் கோபம் எப்படிப்பட்டது என்று நன்றாகத் தெரியும். இராமா​வரம் தோட்டத்தில் காட்டிய கோபத்தை எம்.ஜி.ஆர். பொதுவிடங்களில் உங்களைப்போல் ஒரு நாளாவது மக்களிடையே காட்டியது உண்டா? உள்ளத்தில் பொங்கும் உணர்வுகளுக்கு ஆடை கட்டாமல் அப்படியே நிர்வாணமாக வெளிப்படுத்துவதை இனியாவது நீங்கள் விட்டுவிட வேண்டும். நீங்கள் கவிஞர் இல்லை; மக்களின் விதி எழுத விரும்பும் ஒரு கட்சியின் தலைவர்.




உங்களுடன் இருந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியின் அரவணைப்பில் ஆதாயம் அடைவதற்கு ஆசைப்பட்டு இடம் மாற முடிவெடுத்து விட்டனர். இதில் அதிர்ச்சி அடைவதற்கோ, ஆச்சர்யப்​படுவதற்கோ என்ன இருக்கிறது? மதுரை சுந்தரராஜனும், மைக்கேல் ராயப்பனும், நடிகர் அருண்பாண்டியனும் காந்தியம் வளர்க்கவா உங்கள் கட்சிக்கு வந்தனர்?



ஏழைக்கும் பாழைக்கும், அனாதைக்கும் அகதிக்கும் வாழ்வில் ஏற்றம் தருவதற்காகவா அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்தார்கள்? உங்களோடு இன்று எஞ்சி இருப்பவர்களில் எத்தனை பேர் நாளை பழுத்த மரம் நோக்கிப் பறக்கப் போகின்றவர்களோ? சித்தாந்த அடிப்படையில் கம்யூனிஸ்ட் ஆனவர்களே கட்சி மாறும் காலமல்லவா இது! பதவி, அதன்மூலம் வந்து சேரும் அதிகாரம், அந்த அதிகாரத்தைக்கொண்டு கொள்ளை​யடிக்கும் கள்ளப்பணம் - இதுதானே இன்று நம் அரசியல்வாதிகளின் ஒரே நோக்கம்! சுயநலம்தானே இவர்களின் மூல மந்திரம்!



அது சரி... நீங்கள் ஏன் கட்சி அரசியலில் கால் பதித்தீர்கள்? கருணா​நிதியிடம் இருந்தும் ஜெயலலிதாவிடம் இருந்தும் தமிழக மக்களைக் காப்பாற்றிக் கரை சேர்க்கவா? ஊழலற்ற அரசியல் சமூகத்தை உருவாக்கவா? நேர்மை சார்ந்த நல்லாட்சியை நடைமுறைப்படுத்தவா? இவை​தான் உங்கள் உண்மையான நோக்கமெனில், வேட்பாளர் தேர்வில் எந்த வகையில் நீங்கள் மாறுபட்டீர்கள்?




சுந்தரராஜன், உங்கள் நெடுநாள் நண்பர். அருண்பாண்டியன், உங்களிடம் நட்புப் பாராட்டிய நடிகர். மைக்கேல் ராயப்பன், பணபலம் படைத்த படத் தயாரிப்பாளர். மற்றவர்கள் உங்கள் ரசிகர் மன்றத் தளபதிகள். காமராஜரைப் போல் தன்னலமற்றவர், கக்கனைப் போல் ஊழலற்றவர், ஜீவாவைப் போல் ஏழைகளின் தொண்டர், பெரியாரைப் போல் சமூகப் போராளி என்ற ஒவ்வொருவரையும் தேர்ந்து தெளித்தா தேர்தல் களத்தில் நிறுத்தினீர்கள்? இல்லையே! கருணாநிதியும் ஜெயலலிதாவும் எதைச் செய்கிறார்களோ, அதையேதான் நீங்களும் செய்வீர்கள் என்றால் எங்களுக்கு எதற்கு இன்னொரு தே.மு.தி.க.? யோசியுங்கள் கேப்டன்!




குறைந்தபட்சம் கோபப்படாத மனிதராகவாவது உங்களால் இருக்க முடிகிறதா? சட்டப் பேரவையில் அமைச்சர்களும், ஆளும் கட்சி உறுப்பினர்களும் உங்களிடம் நடந்துகொண்ட விதம் மெச்சத் தகுந்ததாய் அமையவில்லை என்பது உண்மை. அதற்காக நீங்கள் நாக்கைத் துருத்தியது நியாயமா? பத்திரிகையாளரிடம் பகைமையைக் காட்டியது பண்பாடா? தேர்தல் பிரசாரத்தில் சொந்த வேட்​பாளர் தலையில் அடிப்பது அரசியல் நாகரிகமா? 'ஜெயலலிதாவை உங்கள் எம்.எல்.ஏ-க்கள் பார்த்தது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டதற்குப் பதற்றமின்றி அரசியல் ரீதியாக நீங்கள் பதில் சொல்லியிருக்கலாமே.



 கருணாநிதி ஆட்சியில் அனிதா ராதாகிருஷ்ணன்  கட்சி மாறியதால், அ.இ.அ.தி.மு.க. அழிந்து விட்டதா? அதற்குப் பிறகுதானே அது ஆட்சிக்கு வந்தது. ஈரோடு முத்துசாமியும், சேலம் செல்வகணபதியும் இடம் மாறியதால், அ.தி.மு.க-வின் தடம் நகர்ந்து விட்டதா? சந்தர்ப்பவாதிகள் செல்வதால், எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பறிக்க ஆளும் கட்சி நடத்தும் அரசியல் சூழ்ச்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ என்று சொல்லிவிட்டு விமானம் ஏறியிருந்தால், எந்தப் பிரச்னையும் இல்லையே!



'சென்ற முறை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழ் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் குமாரதாஸ், ஈஸ்வரன், ஹக்கீம் ஆகிய மூவரும் அ.தி.மு.க-வில் இணைந்தனர். அவர்கள் 2006- தேர்தலில் மீண்டும் நிற்பதற்குக் கூட ஜெயலலிதா வாய்ப்பு வழங்கவில்லை. இன்று அவர்களுடைய முகவரியை யார் அறிவார்?



 இன்று இங்கிருந்து செல்ல நினைப்பவர்கள் நாளை என்ன ஆவார்கள் என்பதற்கு அந்த மூவரை​ விடவும் சரியான சான்று தேவையா?’ என்று உங்கள் கட்சியில் சபலத்துக்கு உட்பட்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் சொல்லுங்கள். அதைவிட்டுவிட்டு 'டெங்கு’ காய்ச்சல் பற்றிப் பேசுவதால் என்ன பயன்?



தலைமைக்கு வேண்டிய முதல் பண்பு புலனடக்கம். ஆண்டவனை 'ஐந்தவித்தான்’ என்கிறார் வள்ளுவர். இன்று ஆள்பவர்களும், நாளை ஆள்வதற்கு ஆசைப்படுபவர்களும் ஐந்து புலன்களையும் அடக்கியாள முதலில் முயல வேண்டும். மண்ணை வென்ற மாவீரன் அலெக்சாண்டரைவிட, தன்னை வென்ற ஞானி டயோஜனீசிடம் தான் மக்கள் மரியாதை செலுத்தினர். 'உங்களில் பெரியவனாய் இருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாய் இருக்கக் கடவன். தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தன்னைத் தாழ்த்துகிறவனே உயர்த்தப்படுவான்’ என்று கர்த்தர் சொன்னதை நீங்கள் உட்பட எந்த அரசியல் தலைவரும் உணர்ந்த​தாகத் தெரியவில்லையே.



இராமானுஜர் திருப்பதி மலையை அடைந்தபோது, அவரை வரவேற்க அவருடைய ஞானகுரு திருமலை பெரியநம்பி நேரில் வந்து வரவேற்றார். 'நீங்கள் ஏன் வந்தீர்கள்? யாராவது ஒரு சிறியவரை அனுப்பி வைத்திருக்கலாமே’ என்று இராமானுஜர் சொன்னபோது, 'என்னைவிட சிறியவன் இந்த மலையில் வேறு யாரும் இல்லையே’ என்றார் பெரியநம்பி. நீங்கள் எப்போது பெரிய நம்பியாக மாறப்போகிறீர்கள்?



சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்​களிடம் 'ருத்ரதாண்டவம்’ நடத்தி விட்டு மதுரைக்குச் சென்ற நீங்கள், இஸ்லாமியரின் தியாகத் திருநாள் விழாவில் தலையில் குல்லாய் தரித்தபடி உரையாற்றிய கோலம் கண்டு  சிரிப்புத்தான் வந்தது. வாக்குகளைப் பெறுவதற்கு எந்த வேடமிட்டும் நடிப்பதில் நம் தலைவர்களில் யாரும் யாருக்கும் சளைத்தவர் இல்லை. நபிகளார் அரேபிய மக்களின் அதிபராக இருந்த போதும், அறுந்துபோன தம் காலணியைத் தாமே சீர்செய்து கொண்டவர்; கந்தலாகி விட்ட கம்பளி ஆடையைத் தாமே தைத்துக் கொண்டவர்;



தமது மண் குடிசையைத் தம் கைகளால் சுத்தம் செய்தவர்; அவரது குடும்பம் பல இரவுகள் பசித்த வயிற்றுடன் படுக்கைக்குப் போகும்படி அவரு​டைய வாழ்க்கையில் வறுமை குடி​கொண்டிருந்தது. அவர் கடைசி மூச்சை விட்டபோது, அவர் அணிந்​திருந்த ஆடையில் பல ஒட்டுகள் போடப்பட்டிருந்தன. தலைமை ஏற்பவர் எளிமையாகவும், ஏழைகளின் பிரதி நிதியாக​வும், அகத்திலும் புறத்திலும் உண்மையாகவும் நேர்மை​யாகவும் நபிக​ளாரைப் போன்று நடக்க​வேண்டும் என்று உணராமல், தலையில் தொப்பி வைப்பதும், நோன்புக் கஞ்சி குடிப்பதும் போலி நாடகம் இல்லையா?



போகட்டும். தூய அன்போடும், நல்ல நட்போடும் உங்களுக்கு ஒன்று சொல்ல விழைகிறேன். நீங்கள் மார்க்ஸைப் போன்று மாபெரும் சிந்தனையாளர் என்றோ, காந்தியைப் போன்று சத்திய சோதனையில் ஈடுபட்டிருப்பவர் என்றோ, பெரியாரைப் போன்று புரட்சியாளர் என்றோ, அம்பேத்கரைப் போன்று அறிவாயுதம் ஏந்தி தாழ்த்தப்பட்ட மக்களின் விடியலுக்காக அல்லும் பகலும் அயராது உழைப்​பவர் என்றோ, தமிழக வாக்காளர்களில் 10 சதவிகிதம் பேர் வாக்களிக்கவில்லை.



 இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தே.மு.தி.க. உங்கள் தலைமையில் மலரும் என்பதுதான் அவர்​களுடைய எதிர்பார்ப்பு. ஆனால் நீங்களோ, உங்கள் தளபதிகளோ, எந்தவகையிலும் மாற்றாக வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் உங்கள் நடைமுறைகள் நிரூபித்து வருகின்றன. தனித்திருந்து யோசியுங்கள். தவறுகள் புலப்படும். இனியாவது புதிய பாதையில் பயணம் புறப்படுங்கள். அதற்கு முன்பு கர்த்தர் சொன்னதைக் கவனத்தில் நிறுத்துங்கள். ''வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது. வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.’



- என்றும் அன்புடன்


தமிழருவி மணியன் 


 நன்றி 0 ஜூ வி 

Saturday, March 17, 2012

ஈழத்தமிழருக்கு ஆதரவு கேட்டு பாரதப்பிரதமருக்கு தமிழருவி மணியனின் சாட்டையடி கடிதம்

ன்பிற்கினிய பாரதப் பிரதமர் மாண்பு​மிகு மன்மோகன்சிங் அவர்களுக்கு... வணக்கம்! 


இந்திய ஜனநாயகம் இந்த எளிய​வனுக்​கும் வழங்கியிருக்கும் உரிமையின் அடிப்​படையில் உங்களுக்கு இந்த முடங்கலின் மூலம், என்னை உறங்கவிடாத உணர்வுகளை வெளிப்படுத்த விழைகிறேன்.


தமிழகத்தில் உள்ளவர்கள் தலைசிறந்த பண்பாட்​டுக்கு உரியவர்கள்; அன்பு சார்ந்து, அமைதி காத்து, இந்திய ஒருமைப்பாட்டை இதயங்களில் இருத்தி, சக மனிதர்களை உடன் பிறந்த சகோதரர்களாகப் பாவித்து வாழப் பழகியவர்கள். ஒன்றுபடுவது ஞானம், வேறுபடுவது அஞ்ஞானம் என்ற வாழ்வியல் விழுமியத்தை, 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்ற வேத வாசகத்தின் மூலம் உலகுக்கு உணர்த்தியவர்கள். இந்தியாவின் ஓர் அங்கமாக இவர்கள் இருப்பதே இந்த மண்ணின் மகத்தான பெருமை என்பதை மத்திய அரசுக்குத் தலைமை ஏற்றிருக்கும் நீங்கள் முதலில் உணர வேண்டும்.


எங்கள் போற்றுதலுக்குரிய பெரியார், 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்று குரல் கொடுத்தார். நாங்கள் செவிசாய்க்கவில்லை. அன்பிற்கினிய அண்ணா, 'திண் ணையில் அமர்ந்தாவது திராவிட நாடு கேட்பேன்’ என்று மேடைதோறும் முழங்கினார். அவரை நாங்கள் ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்தோம். ஆனால், அவருடைய பிரிவினைக் கோரிக்கையை நிரா கரித்தோம். சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், 'சுய நிர்ணய உரிமையுடன் கூடிய தமிழரசு காண்போம்’ என்று எங்கள் கைகளைப் பிடித்து வேண்டினார். 


தேசிய மயக்கத்தில் இருக்கும் நாங்கள் அவரைத் திரும்பிப் பார்க்கவும் மறுத்தோம். இன்றும், 'தமிழ்த் தேசியம்’ பேசுபவர்களை நாங்கள் பெரிதாக ஆதரித்து விடுவது இல்லை. இன்றுவரை இந்தியராய் இருப்பதற்கு நாங்கள் கொடுத்திருக்கும் விலை மிக அதிகம். ஆனால், இறுதிவரை நாங்கள் இந்தியராய் நீடிப்பது இனி உங்கள் கைகளில்தான் இருக்கிறது.


மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்ஆப்பிரிக்காவில் மகாத்மா​வாக மலர்ந்ததற்கு முதற்காரணம் தமிழர்கள். 'அடுத்த பிறவியில் வள்ளுவத்தை வாசிப்பதற்காகத் தமிழனாய்ப் பிறக்க விரும்புகிறேன்’ என்றார். இந்தியாவைவிட்டு வெளியேறி அந்நிய மண்ணில் வெள்ளையருக்கு எதிராக நேதாஜி படை திரட்டியபோது, அவருக்குப் பின்னால் வெள்ளமெனத் திரண்​டவர்கள் தமிழர்கள். 

 அதனால்தான், 'இன்னொரு பிறவி இருந்தால் தமிழனாய்ப் பிறக்கும் வரம் எனக்கு வாய்க்க வேண்டும்’ என்றார் அந்த வீரத்தின் விளைநிலம். ஆனால், உங்கள் அரசோ தமிழர் நலனுக்கு எதிராகச் செயற்படுவதையே ஆட் சிச் சாதனையாக அரங்கேற்றி வருகிறது.



விடுதலை வேள்வியில் நாட்டு மக்கள் ஈடுபட்டி​ருந்தபோது, மாநில உரிமைகள் பற்றி ஆயிரம் வாக் குறுதிகளை அன்றைய காங்கிரஸ் தலைமை அள்ளி வழங்கியது. 'ஒவ்வொரு மாநிலமும் பரிபூரண சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும். மாநிலங்கள் விரும்பி விட்டுக்கொடுக்கும் அதிகாரங்கள் மட்டுமே மத்திய அரசிடம் இருக்க வேண்டும்’ என்று இடை விடாமல் வலியுறுத்தினார் மகாத்மா. 


புதுடெல்​லி யில் 2.4.1942 அன்று கூடிய காங்கிரஸ் செயற்குழு, 'ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்களை அவர்களுடைய விருப்பத்துக்கு எதிராக இந்திய ஒன்றியத்தில் இருக்கும்படி வற்புறுத்த விரும்பவில்லை’ என்று தீர்மானம் தீட்டியது. ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டம் மாநிலங்களை மாண்புமிகு மாநகராட்சிகளாக மாற்றிவிட்டது. இந்தியராய் இருப்பதற்கு எங்கள் உரிமைகளை இழந்து நின்றோம். எதிர்த்துப் போர்க்கொடி பிடிக்கவில்லை.



சுதந்திர இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, தெலுங்கர்கள் 'விசால ஆந்திரா’ வேண்டும் என்றனர்; கன்னடர் 'சம்யுக்த கர்னாடகா’ என்று குரல் கொடுத்தனர். மலையாளிகள் 'ஐக்கிய கேரளா’ என்ற கோரிக்கை வைத்தனர். இந்தியராய் இருக்க விரும்பிய நாங்களோ அகன்ற தமிழகத்துக்கு ஆசைப்படவில்லை. சித்தூர், புத்தூர், திருப்பதி, திருக்காளத்தி ஆகிய தமிழர் பகுதிகளைத் தெலுங்கருக்குத் தாரை வார்த்தோம்.

 மாதேசுவரன் மலை முதல் நந்திமலை வரை வாழ்ந்த நிலப் பரப்பையும், பெங்களூரு முதல் தங்கவயல் வரை சொந்தமான தமிழர் மண்ணையும் எங்கள் கன்னட சகோதரர்களுக்குச் சீதனமாகத் தந்து மகிழ்ந்தோம். ஏராளமான ஆறுகள் பெருக்கெடுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை, 'குளமாவது? மேடாவது? எல்லாம் இந்தியாவில்தானே இருக்கின்றன’ என்று தேசியத் தத்துவம் பேசி மலையாளிகளுக்கு 'மொய்’ எழுதிவிட்டு, இன்று முல்லை - பெரியாறு அணைக்காக அழுது​கொண்டு இருக்கிறோம். பிரதமரே... இவ்வளவு இழப்புகளும் எதற்காக? இந்தியராய் தமிழர் இருப்பதற்காக!


பிரிட்டனின் பிடியில் இருந்து இலங்கை விடுபட்டு 1948 பிப்ர வரியில் சுதந்திரம் அடைந்து ஆறு மாதங்கள் ஆவதற்கு முன்பே காடாய், மேடாய், களர்நிலமாய் இருந்த மத்திய மேட்டு நிலத்தை ரப்பர், காபி, தேயிலைத் தோட்டங்களாக மாற்றி இலங்கையின் பொருளாதார வளத்தைப் பெருக்குவதற்குத் தங்கள் வியர் வையை, ரத்தத்தைச் சிந்திய எங்கள் தாயகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்து, ஆதரவற்ற அனாதைகளாக்க முதல்பிரதமர் டி.எஸ்.சேனநாயகா மூன்று மசோதாக்களை இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டமாக்க முயன்றபோது, நேருவின் மத்திய அரசு மௌனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது. மலையகத் தமிழர்களின் உரிமை காக்க 1939-ல் 'இலங்கை இந்தியன் காங்கிரஸ்’ என்ற அமைப்பை ஆரம்பித்து வைத்ததே நேருதான் என்பது எவ்வளவு பெரிய இயற்கை முரண்!



விடுதலை பெறுவதற்கு முன், இலங்கை நாடாளு​மன்றத்தில் எட்டு உறுப்பினர்களையும், 'செனட்’ எனப்படும் மூத்தோர் அவையில் இரண்டு உறுப் பினர்களையும் பெற்றிருந்த இந்தியத் தமிழர்கள், ஒரு நொடியில் நாடற்றவர்களாக ஆக்கப்​பட்டனர். இந்த அநீதியை எதிர்க்காமல், அவர்களை அகதிகளாக்க 1964-ல் சாஸ்திரி சிரிமாவோ ஒப்பந்தத்தை இந்திய அரசு அங்கீகரித்து, ஐந்து லட்சம் தமிழர்களைத் திரும்ப அழைத்து நடுத்தெருவில் நிறுத்தி நிலைகுலையச் செய்த போதும், நாங்கள் ஈர விழிகளுடன் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம், 'இந்தியர்’ என்ற மகுடத்தை இழந்து விடாமல் இருக்க!


தமிழகத்தின் தென்பரப்பில் உள்ள ராமேஸ்வரத்தில் இருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள கச்சத்தீவு எங்க ளுக்குச் சொந்தமானது. பல நூற்றாண்டுகளாக ஒரு தேசியஇனத்துக்குச் சொந்தமான நிலப்பரப்பை, அந்த இனத்தின் அனுமதி இன்றிப் பக்கத்து நாட் டுக்குப் பரிசாய் வழங்கும் பாதகச் செயலை எந்த அரசும் செய்யத் துணியாது. ஆனால், இந்தியப் பிரதமராக இருந்த இந்திராகாந்தி தன்னுடைய சீதனப்பொருளை அடுத்தவருக்குத் தருவது போல் திருமதி பண்டாரநாயகாவிடம் 1974-ல் கச்சத்தீவை ஒப்படைத்தது எந்த வகையில் நியாயம்?


காங்கிரஸை 1969-ல் தன் சுயநலத்துக்காக இரண்​டாகப் பிளந்த இந்திரா காந்தியின் குடும்ப அரசியலை, அன்று தொட்டு எதிர்த்த கூட்டத்தில் நான் ஒருவன். இந்திரா காந்தியின் எந்த அரசியல் நிலைப் பாட்டையும் ஏற்றவன் இல்லை நான். உலகின் மீன் வளம் நிறைந்த பகுதிகளில் ஒன்றான கச்சத்தீவை நேருவின் மகள் சட்ட வரம்பை மீறி இலங்கையிடம் சமர்ப்பித்​த போதும் எதிர்ப்புக் குரல் எழுப்பியதோடு நிறுத்திக் கொண்டோம். ஏன்..? இந்தியராய் இருப்பதற்கு!


இந்தியப் பிரதமரே... உலகில் உள்ள கடற்கரை நாடுகள் அனைத்திலும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது உண்டு. எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் என்று சொல்லி எந்த நாட்டுக் கடற்படையும் மீன​வரைச் சுடுவது இல்லை. நம் பகை நாடான பாகிஸ்தான்கூட, குஜராத்தில் உள்ள சௌராஷ்டிராப் பகுதியில் மீன்பிடிக்கும் இந்தியரை எல்லை தாண்டியதாக ஒரு முறையும் சுட்டது இல்லை.

 ஒருவரையும் கொன்றது இல்லை. உலகிலேயே மீனவரைச் சுட்டுக் கொல்லும் ஈனச் செயலை இலங்கை மட்டும்தான் இன்று வரை செய்து வருகிறது. ஆயிரக்கணக்கான தமிழகத்து மீனவரை - அதாவது நம் 'இந்திய’ மீனவரை ஊனப்படுத்தி, 400-க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்களின் - அதாவது 'இந்திய’ மீனவர்களின் உயிர் குடித்த இலங்கை அரசுக்கு வெண்சாமரம் வீசும் வேலையில் உங்கள் அரசு ஆனந்தம் அடைவதைப் பார்த்தும் நாங்கள் ஆத்திரப்படவில்லை. 'தேசியஉணர்வு’ எங்களைத் தேம்பி அழச் செய்வதோடு தடுத்து விடுகிறது; எங்கள் முதல்வர்களை உங்களுக்குக் கடிதம் எழுதுவதோடு நிறுத்தி விடுகிறது.


இந்திய அரசியலமைப்புச் சட்டம் எங்கள் உயர் தமிழுக்கு வட்டார மொழிக்குரிய தகுதியைத்தான் தந்திருக்கிறது. 'இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட மொழியே உயர்தனிச் செம்மொழி’ என்று மொழியியல் அறிஞர்கள் வைத்திருக்கும் வரையறையைப் புறந்தள்ளி, எங்கள் தமிழோடு கன்னடமும் தெலுங்கும்கூட 'உயர் தனிச் செம்மொழிகள்’ என்று அங்கீகரித்திருக்கும் உங்கள் 'அரசியல்’ நியாயமானது என்று எந்த நேர்மை யாளரும் ஏற்க முடியாது.
இந்தியைப் போன்று தமிழும் தேசத்தின் ஆட்சி மொழி அந்தஸ்தைப் பெற வேண்டும் என்று மதுரை ஒத்தக்கடை வீதியில் நாங்கள் ஓங்கிக் குரல் கொடுப்பதற்கு மேல் எதையும் செய்ய மாட்டோம். எங்களுக்குத் தமிழா முக்கியம்? 'இந்தியர்’ என்ற அடையாளம் அல்லவா அதிமுக்கியம்!


போகட்டும். இந்தியராய் இருப்பதற்கு இழக்கக் கூடாதவற்றை எல்லாம் இழந்து விட்டோம். எங்கள் இனம் ஈழத்தில் அழிவதற்கு இலங்கை அரக்கரிடம் ஆயுதம் அளித்தீர்களே... அதைப் பொறுத்தோம். முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் 40 ஆயிரம் தமிழர் பலியிடப்பட்ட போதும் ராஜபக்ஷேவுக்கு டெல்லியில் 'ரத்தினக் கம்பள வரவேற்பு’ வழங்கி ரசித்தீர்களே... அதையும் பொறுத்தோம். 


முள்வேலிக் கம்பிகளுக்கிடையில் மூன்று லட்சம் தமிழர் முடக்கப் பட்டபோது, இலங்கை அரக்க அரசுக்கு 1,000 கோடி ரூபாய் தருவதாக அறிவித்துக் கொலைகாரக் கூட்டத்தையே மறுவாழ்வு தரும்படி வேண்டி நின்றீர்களே... அதையும் பொறுத்தோம்.


'உயிரினும் சிறந்தன்று கற்பு’ என்று போற்றி வாழ்ந்த எம் குலப் பெண்களைச் சிங்களர் வன்புணர்ச்சி செய்து வதைத்த செய்தி வந்ததே... அதையும் பொறுத்தோம். பிரிட்டனின் 4-வது சேனலில், எம் இனத்தவரை எட்டி உதைத்து, கைகளைப் பின்னால் கட்டி, கண்களைத் துணியில் மறைத்துச் சுட்டு வீழ்த்திய மனிதகுல அநாகரிகத்தைக் கண்டபோதும் பொறுத்துக்கொண்டோம். இன்​னமும் பொறுப்பதற்கு என்ன இருக்கிறது பிரதமரே?


தமிழினப் படுகொலையைத் திட்டமிட்டு நடத்தியவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று 24 நாடுகளின் ஆதரவோடு ஐ.நா-வில் சுவிட்சர்லாந்து கொண்டுவந்த தீர்மானத்தை முறியடிக்க இந்திய அரசு முனைந்தது நியாயந்தானா? இன்று, ஜெனிவாவில் மனித உரிமைகள் அமைப்பின் முன் இலங்கை அரசைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் தீர்மானத்தை உங்கள் அரசு ஆதரிக்கத் தயங்குவது நாகரிக அரசின் நல்ல​ அடையாளமா? அபிசீனீயா மீது ஆக்கிரமிப்பு நடத்தி​யதற்காக, ரோமாபுரியில் விமானத்தில் வீற்றிருந்த நேருவை விருந்தோம்ப வருந்தி அழைத்த முசோலினியைச் சந்திக்க மறுத்த ஆசியஜோதி அமர்ந்து ஆட்சி நடத்திய நாற்காலியில் நீங்கள் அமர்ந்து இருப்பதை மறந்து விட்டீர்களா?


ஈழப்போரில் இலங்கை ராணுவம் நிகழ்த்திய மனித உரிமை மீறல் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடுக்க மற்ற உலக நாடுகளுடன் சேர்ந்து பிரிட்டன் குரல் கொடுக்கும் என்றும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்தது உங்கள் செவிகளில் சேரவில்லையா? 'சேனல் 4 ஒளிப்பதிவைக் கண்டு உறைந்து போய்விட்டேன்’ என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் சொன்னது உங்கள் சிந்தையில் பதியவில்லையா?  ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்​தின் கண்டனம் உங்கள் கண்களில் படவில்லையா?


மாண்புமிகு பிரதமரே... உங்கள் மனச்சான்றோடு கொஞ்சம் பேசிப் பாருங்கள். காஷ்மீர் தீவிரவாதி களை அழிக்க இந்திய ராணுவம் என்றாவது விமானத் தாக்குதல் நடத்தியது உண்டா? 'ஈழத் தமிழரும் இலங்கை மக்களே’ என்று சொல்லும் ராஜபக்ஷே அரசு சொந்த மக்கள் மீதே வான் வழியாக ரசாயனக் குண்டுகளைப் பொழிந்து பல்லாயிரவரைப் படுகொலை செய்தது மனித உரிமை மீறல் இல்லையா?

 இன அழிப்பு இல்லையா? சர்வதேசப் போர் விதிமீறல் இல்லையா? எந்த நாட்டுக்கு எதிராகவும் தீர்மானம் கொண்டுவருவது இந்திய மரபு இல்லை என்று சொல்லி இந்த மண்ணின் பண்பாட்டுப் பெருமையைப் படுகுழியில் தள்ள எப்படி உங்கள் அரசுக்கு மனம் வந்தது?


'தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால், தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும் நாகரிகத்தையும் மறந்தான்’ என்றார் பெரியார். உண்மைதான். முல்லை-பெரியாறு, காவிரி, பாலாறு என்று எந்தப் பிரச்னையிலும் தமிழர் உரிமை நிலைத்திட 'இந்தியன்’ என்ற உணர்வு இதுவரை உதவவில்லை. 'ஆட்சிக்கு முட்டுக் கொடுத்தால், மம்தாவுக்கு அள்ளிக் கொடுப்போம். சாமரம் வீசவில்லை என்றால், 'தானே’ புயல் அழிவுக்கும் கிள்ளியே கொடுப்போம்’ என்று ஓரவஞ்சனையோடு நடக்கும் நியாயமற்ற உங்கள் அரசு எங்களுக்கு எதற்கு?


கட்சி ரீதியாக நாங்கள் பிரிந்துகிடந்ததுவரை எங்களை உங்களால் எளிதில் புறக்கணிக்கமுடிந்தது. இன்று உலகின் எட்டாவது அதிசயமாய் முதல்வர் ஜெயலலிதாவும், கலைஞரும், காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளும் ஈழத் தமிழரின் இன்னல் தீர்க்க ஒன்றுபட்டு நிற்கின்றனர்.

 இலங் கைக்கு ஆதரவாக இந்திய அரசு இனி இருந்தால், தமிழ் நிலத்தில் காங்கிரஸ் கல்லறைக்குச் சென்று விடும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமர் என்று சரித்திரம் படைத்த உங்களுக்கு அதுகுறித்துக் கவலைப்பட நேரம் இருக்காது. ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கவலைப்பட்டாக வேண்டும்.


இந்தியஅரசு, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து எங்களை முதலில் தமிழராகவும், முடிவில் இந்தியராகவும் இருக்கச் செய்ய வேண்டும் என்று உங்களை அன்புடன் வேண்டுகிறேன். உங்கள் நம்பிக்கைக்குரிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தமிழில் தீட்டப்பட்ட என் கடிதத்தின் சாரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உங்களுக்குச் சொல்வார் என்று நம்புகிறேன்.


இனஉணர்வை மதித்து என்னை இந்தியனாக இருக்க விடுவீர்கள் என்ற ஆழ்ந்த    நம்பிக்​கையுடன்,


தமிழருவி மணியன்

Thursday, April 14, 2011

துக்ளக் சோ ஒரு ஆணாதிக்கவாதி.ஆனால் ஜெ விஷயத்தில் மட்டும்.....தமிழருவி மணியன் பரபரப்பு பேட்டி..-காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5L5lSffKLz2LqnKyzQH8pcTTnewRWdTRi8CvkGzP7bxNSbfhoSrUn1HHWRYfIJTCpCA_zHHv2LiWlkoTsBBEVut3CYVcTrPdHeydlQYq0RRjaL2MXkImP9i9prdf-Ju15hdEwkhTEHtc/s400/modi_cho=Dondu.jpg 

1. மறைமுகமாக உங்கள் ஆதரவு ஜெயலலிதாவுக்குத்தான் என்பதை நாங்கள் அறிவோம். இவ்வளவுக்குப் பிறகும் ஜெயலலிதா தன் மனநிலையை மாற்றிக்கொள்வார் என்று நம்புகிறீர்களா?''
 
''மறைமுகமாக அல்ல... நேர்முகமாகவே நான் இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன். நடுநிலை, அரசியலில் சாத்தியம் இல்லை. வெள்ளையருக்கும் இந்தியருக்கும் இடையில், காந்தி நடுநிலையிலா நடந்தார்? ஒன்றை எதிர்த்து மற்றொன்றை ஆதரிப்பதற்குப் பெயர்தான் அரசியல்.

தமிழகம் இதுவரை கண்ட ஆட்சிகளிலேயே மிகவும் மோசமானது இப்போது நடந்துகொண்டு இருக்கும் ஆட்சி. நாளை ஜெயலலிதா வந்தாலும், இதைவிட மலினமான ஒரு நிர்வாகத்தை நடத்திவிட மாட்டார்.

இந்திய அரசியலில், இதுவரை யார் வரக் கூடாது என்றுதான் வாக்களித்து இருக்கிறார்கள். இந்திரா காந்தி கூடாது என்பதற்காகத்தான், மொரார்ஜிக்கு வாக்களித்தார்கள். கலைஞர் வரக் கூடாது என்றுதான், மக்கள் தொடர்ந்து எம்.ஜி.ஆரை ஆதரித்தார்கள்.

என் வாக்கு... ஜெயலலிதா வர வேண்டும் என்பதற்காக அல்ல; கலைஞர் மீண்டும் வரக் கூடாது என்பதற்காக!
ஜெயலலிதா மாற வேண்டும் என்பது என் இதய விருப்பம். ஆனால், சிறுத்தையின் உடலில் உள்ள புள்ளிகள் சாகும் வரை மறையாது என்பது இயற்கையின் நியதி!''

கரும்புள்ளிகள் கொண்டவைகள் சிறுத்தை அல்ல .. சிறு மதி படைத்த அல்லது மதி கெட்ட கழுதைகள்

2.'' 'காந்திய மக்கள் இயக்கம்’ என்று ஆரம்பித்திருக்கிறீர்கள். உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்... காந்தியின் கொள்கைகள் இன்றைய சூழலுக்கு ஏற்புடையதாக இருக்குமா?''

''நம் சமுதாயம் சகல மட்டங்களிலும் ஆரோக்கியம் இழந்து அழுகிப்போனதற்கு ஒரே காரணம், காந்திய வழியில் இருந்த நாம் விலகி நடந்ததுதான். கிராமம் வரை அதிகாரப் பரவல், தற்சார்புப் பொருளாதாரம், சிறுதொழில் வளர்ச்சி, தாய்மொழி வழிக் கல்வி, ஆடம்பரம்அற்ற எளிய வாழ்க்கை முறை, புலனடக்கம், கட்சிகளற்ற ஜனநாயகம் என்ற காந்தியத்தின் தடத்தில் நாம் கால் பதித்து நடந்திருந்தால், ஊழலற்ற பொது வாழ்வு, ஏழ்மை இல்லாத இந்தியா இந்நேரம் உருவெடுத்து இருக்கும். 

காந்தியின் எல்லாக் கொள்கைகளையும் கண் மூடிப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நான் குறிப்பிட்ட கொள்கைகள் எந்த நிலையிலும் ஏற்கத்தக்கவை. போராட்ட முறையில் காந்தியப் போர் முறை ஒன்றுதான் உன்னதம். அதிக உயிர்ச் சேதம் இன்றி, அதிகாரத்தைப் புரட்டிப் போடும் அகிம்சை.

இந்த ஆயுதம்தான் முபாரக்கை எகிப்தில் முடக்கியது. இந்த ஆயுதத்தை ஈழத்தில் மக்கள் தொடர்ந்து பிரபாகரன் தலைமையில் ஏந்தி வீதிகளில் நின்று இருந்தால், ஈழம் தமிழரின் தன் நாடாய் இந்நேரம் பிறந்து இருக்கும். இவ்வளவு அழிவுகளை என் இனம் அங்கு சந்தித்து இருக்காது. ஒரு லட்சம் தமிழர் என்னோடு காந்திய மக்கள் இயக்கத்தில் சேர்ந்து நடந்தால், எந்த அரசியல்வாதியும் தவறு இழைக்க முடியாத சமூகத்தை நான் சமைத்துக் காட்டுவேன்.

இழப்புகளையும் வலிகளையும் என்னோடு சேர்ந்து அனுபவிக்க நீங்கள் தயாரா? முதல் நிபந்தனை, நாம் பதவி மறுப்பாளர்களாகப் பணியாற்ற வேண்டும்!''

இந்த ஆட்டத்துக்கு யாரும் தயாரா இருக்கமாட்டாங்கன்னு நினைக்கறேன்.. நோகாம நோம்பி கும்பிடத்தான் தமிழன் பார்ப்பான்.. 

'3. 'உங்கள் இளம் பிராயக் காதல் அனுபவம் குறித்துக் கொஞ்சம் பகிர்ந்து கொள்ள முடியுமா?''

''என் காதலி... தெய்வத்தின் சிருஷ்டியில் அவள் ஒரு தேவதையின் வார்ப்பு. அவள் பூக்களில் அனிச்சம்; புள்ளினங்களில் அசுணம். அவளுக்கு மலர்களைவிடவும் மென்மையான மேனி; பளிங்கைவிடவும் பரிசுத்தமான உள்ளம். அவளைச் சந்திப்பதற்கு முன்பு, என் இதயம் வெறும் கருங்கல்லாய்க் கிடந்தது. தன் நயன உளிகளால் அவள்தான் அதைச் செதுக்கிச் செதுக்கி ஒரு சிலையாக மாற்றினாள். இப்பாது சிலை இருக்கிறது. அந்தச் சிற்பியைத் தான் காணோம்!''


4. 'துக்ளக்’ ஆசிரியர் சோ பற்றி தங்கள் கருத்து?''

''நெஞ்சில் பட்டதை நேர்படச் சொல்பவர். பெரும்பான்மைக் கருத்தோடு இயைந்துபோவதுதான் எழுத்துலகத் தர்மம் என்று ஏற்காதவர். ஒரு தனிமனிதனின் பேனாவை மட்டுமே நம்பி, ஓர் இதழை 41 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்த முடியும் என்று சாதித்தவர். 

பொய்யாக யாரையும் புகழ்ந்து பேசத் தெரியாதவர். ஆனால், பெண்களுக்கு எதிரான சிந்தனைகளை விதைக்கும் ஓர் அழுத்தமான ஆணாதிக்கவாதியாகத் தன்னை வேண்டும் என்றே வெளிப்படுத்திக்கொள்பவர். இதில் ஜெயலலிதாவுக்கு மட்டும் அவ்வப்போது விதிவிலக்கு வழங்குபவர்!''


அவ்வப்போது என ஏன் மழுப்பறீங்க...? அவர் ஆண்டாண்டு காலமா அம்மா புகழ் தான் பாடிட்டு இருக்கார்.. அதற்கு இருவரும் பிராமணர்கள் என்ற  ஜாதி உணர்வும் ஒரு காரணம்


5. ''உங்களுக்கு மிகவும் பிடித்த பெண் கவிஞர்களின் படைப்புகள் எவை?''
''பாசாங்கு மொழியில், சரிகை வேலைப்பாடுகள் இல்லாமல், மண்ணின் ஈரம் மணக்க ஒவ்வொரு வார்த்தையிலும் வாழ்க்கையின் நிறத்தை இயல்பாய் வடித்தெடுத்த இளம்பிறையின் 'நீ எழுத மறுக்கும் எனதழகு’ என்ற படைப்பும், ஒரு பெண்ணின் நுண்மையான அந்தரங்க உணர்வுகளைக் கலை வடிவம் கொஞ்சமும் கலையாமல் அப்படியே எழுத்தில் இறக்கிவைக்கும் அற்புதத்தை நிகழ்த்திய சல்மாவின் 'ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ என்ற படைப்பும்!''


6. ''முழுக்க முழுக்க சுயநலவாதிகளாக இருந்துகொண்டு, பொது நலத்துக்காகவே வாழ்வதுபோல் வலம் வர இந்த அரசியல்வாதி களால் எப்படி முடிகிறது?''

'' 'வேஷங்கள் போட்டுப் போட்டு... அது
தோல், சதை, எலும்புக்குள் இறங்கி,
 வேஷமே உங்கள் இயல்பாகிவிட்டது’

-என்ற புவியரசின் கவிதையை நீங்கள் படித்து இருந்தால், இந்த ஐயம் உங்களுக்குள் உருவாகி இருக்காது. அரசியல் உலகில் அடுத்தவர் குருதியில் ஆயுளைப் பெருக்கிக்கொள்ளும் கொசுக்களின் கூட்டமே அதிகம். சொந்த நலனுக்காக நம் தேசத்தைக்கூடத் தெருவில் நிறுத்தத் துணியும் இந்த முகமூடி மனிதர்களின் சுய முகம் காண்பது அவ்வளவு எளிதான செயல் அன்று!''

 அது ரொம்ப ஈசிங்க.. யார் எல்லாம் வலியனா வந்து மக்களே.. உங்கள் நன்மைக்காகத்தான் என் உடல் ,பொருள்,ஆவி எல்லாம் என கப்ஸா விட்டு ஓட்டுக்கேட்கறாங்களோ அவங்க எல்லாருமே சுயநல வாதிகள் தான்.. தம்  மகன்,மகள், மக்கள் நல்லாருக்கனும்னுதான் எல்லாரும் பார்க்கறாங்க.. நாட்டு மக்களின் நலம் காண்பவர்கள் யாருமே இல்லையே?


7. ''உலகமயமாக்கலால் கல்வி முறை, நாகரிகம், பழக்க வழக்கம், ஏன் வாழ்க்கை முறையே மாறிப்போன இந்நாளில், காந்தியம் இனியும் சாத்தியமா?''

''நோய் நிறைந்த இடத்தில்தானே மருத்துவர் தேவை. வெள்ளாடு மேயும் விளைநிலத்துக்குத்தானே வேலி தேவை. வெறுப்புக்கு மாற்றாக அன்பு, போட்டிக்குப் பதிலாக ஒத்துழைப்பு, தன்னலத்துக்கு எதிராகத் தியாகம், புற ஆரவாரங்களுக்குப் புறம்பாக அக நாகரிகம் வளர்த்தெடுப்பதுதான் காந்தியம். 

உலகமயமாக்கல் சீதனமாய் நம்மிடம் கொண்டுசேர்த்த நுகர்வு வெறியின் முற்றுகையில் மூழ்கி இருக்கும் இளைய சமூகத்தின் வாழ்வை முறைப்படுத்து வதும், நெறிப்படுத்துவதும் காந்தியத்தால் மட்டுமே சாத்தியப்படும்!''

 ஏன் ? இன்று ஒரு அன்னா ஹசாரே தயார் ஆனது போல் நாளை ஒரு நல்ல  அஹிம்சாவாதி தலைவர் தோன்ற மாட்டார் என்பது என்ன நிச்சயம்?
 http://3.bp.blogspot.com/_afw-8cBe43U/SSoUvaJBQxI/AAAAAAAAAXg/-5oyOuTAJQ8/s400/THUGLAK.jpg

8. ''ஒரு அரசாங்கமே வீதிக்கு வீதி மதுக் கடைகளை நடத்துவதும், அதனால் இவ்வளவு வருமானம் என்று சொல்வதும், யாரும் பெரிதாக இதை எதிர்க்காததும், வெட்கக்கேடான செயல்தானே? இந்த நிலை எப்போது மாறும்?''

''அரசு வருவாய் அதிகரிக்க 'விலைமகளிர் விடுதி’ நடத்தாதவரை நல்லது என்று மன நிறைவுகொள்ளுங்கள்.

குடிப்பவரையும் கெடுக்கும்: குடும்பத்தையும் கெடுக்கும் என்று குடிமக்கள் உணராதவரை மதுக் கடைகளுக்கு மூடு விழா நடக்கும் வாய்ப்பு இல்லை!''

 குஜராத் மோடி கிட்டே போய் ஒரு மாசம் டியூஷன் எடுத்துட்டு வரசோல்லனும்...மூச்சுக்கு மூச்சு மற்ற தேசங்களோடு ஒப்பிட்டு மின் வெட்டு,விலைவாசி உயர்வு என எல்லா பிரச்சனைக்கும் சப்பைக்கட்டு கட்டும் அரசியல்வாதிகள் ஏன் குஜராத்துடன் தமிழகத்தை ஒப்பிட்டு பேச மறுக்கிறார்கள்?


'9. 'பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா, பகுத்தறிவுத் தந்தை பெரியார்... இவர்கள் எல்லாம் இன்று உயிரோடு இருந்தால்..?''

''காமராஜர் கதர் ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு, சத்தியமூர்த்தி பவனை இழுத்து மூடிஇருப்பார். 'காங்கிரஸுக்கும் கழகத்துக்கும் ஒரே லட்சியம்தான்’ என்று கலைஞர் சொன்னதைக் கேட்டதும், கழகத்தைக் கலைத்துவிடும்படி அண்ணா 'தம்பிக்கு’க் கடிதம் எழுதிக்கொண்டு இருப்பார். பெரியார் முதல் வேலையாக, வீரமணியைத் திராவிடர் கழகப் பொறுப்பில் இருந்து விலக்கி இருப்பார்!''


தங்கபாலு பண்ற காமெடிகளையும், கோஷ்டி சண்டைகளையும் பார்த்து அவங்க தற்கொலை தான் பண்ணிக்குவாங்க.. 

10. ''திராவிடக் கட்சிகள்போல் சிறந்த மேடைப் பேச்சாளர்கள் காங்கிரஸில் உருவாவது இல்லையே... ஏன்?''

''சிறப்பாகப் பேசத் தெரியாதவர்களும் ஒழுங்காக எழுத முடியாதவர்களும்தான் காங்கிரஸ் கட்சியில் தலைவர்களாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. தமிழ்நாடு காங்கிரஸ் என்பது குள்ளர்களின் சாம்ராஜ்யம். இந்தக் குள்ளர்கள் ஒருபோதும், தம்மைவிட ஓர் அங்குலம் உயரமானவர்களைக்கூட உடன் இருக்க அனுமதிப்பது இல்லை!''

அவங்களுக்கு சண்டை போடவும்,சொம்பு தூக்கவுமே நேரம் சரியா இருக்கு... 
 http://velichathil.files.wordpress.com/2010/12/homeattai1.jpg

'11.'இன்றைய இளைஞர்களிடம் தேச பக்தி வளர்ந்துள்ளதா? குறைந்துள்ளதா?''

''இந்தியாவும் பாகிஸ்தானும் கிரிக்கெட் களத்தில் மோதும்போது தேச பக்தி பொங்கி வழிகிறது. சக மனிதரின் துயர் துடைப்பதில் தன் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற சிந்தனைக்குச் சிறிதும் இடமின்றி, சுய நலத்தில் சுருங்கிவிடுவதில் தேச பக்தி வைகை மணல்போல் வறண்டுவிடுகிறது. தேச பக்தி என்பது வெறும் மண் சார்ந்தது இல்லை; மக்கள் நலன் சார்ந்தது!''

 ஏன்? கார்கில் போர் வந்த போது, இலங்கைத்தமிழர்கள் கொலை செய்யப்பட்ட போது இளைஞர்களிடம் தேச பக்தியும் ,மனித நேயமும் வெளிப்பட வில்லையா?


12, ''இன்றைய இளம் தலைமுறையினர் அறிவுரை கூறினால் எள்ளி நகையாடுகிறார்களே...?''

''வரைமுறையற்ற வாழ்வை நடத்துபவர் வள்ளுவம் பேசுவதையும், மதுவின் போதையில் மயங்கி நிற்பவர் மகாத்மாவின் பாதையில் நம்மைப் பயணிக்கச் சொல்வதையும், மாமிசம் நாறும் வாயோடு வந்தவர் வள்ளலாரின் உயிர் இரக்கம் குறித்து உரை நிகழ்த்துவதையும் பார்க்கும் இளைஞர்கள் எள்ளி நகையாடாமல் என்ன செய்வார்கள்?

'என் வாழ்வே என் செய்தி’ என்று மகாத்மாவைப்போன்று எத்தனை மனிதர்களால் சொல்ல முடியும்? ஆயிரம் வார்த்தைகளைவிட, ஒரு நற்செயல் வலிமையானது. அவர்களுக்கு முன் மாதிரியாக நாம் வாழும் வாழ்க்கையில் நடந்து காட்டுவோம். வார்த்தைகளால் வானத்தை வளைக்க முடியாதே!''

டெயிலி மட்டன் சிக்கனா உள்ளே தள்றவன் மத்தவங்களை மட்டும் சைவம் சாப்பிட்டா உடம்புக்கு நல்லதுன்ன்னானாம்,, அந்த மாதிரி... 

13. ''ஆசை - நப்பாசை - பேராசை... என்ன வித்தியாசம்?''

''எம்.ஜி.ஆரைப் போல் திரையுலகில் ஒரு நடிகராக வலம் வர விரும்புவது ஆசை. அவரைப் போல் கட்சி தொடங்கி ஐந்தே ஆண்டுகளில் ஆட்சியைக் கைப்பற்ற விரும்புவது நப்பாசை. முதல்வர் நாற்காலிக் கனவில் மூழ்குவது பேராசை.''

 குஷ்பூ அரசியலுக்கு வந்தது ஒரு ஆசைல... நடந்த எலக்‌ஷன்ல எம் எல் ஏ சீட் கிடைக்கும்னு நினைச்சது நப்பாசை..எதிர்காலத்துல தி மு கவுல நல்ல எதிர்காலம் இருக்கும்னு  நினைச்சா அது பேராசை.
 http://1.bp.blogspot.com/_afw-8cBe43U/SRJ5Rbbb0nI/AAAAAAAAAXA/CRZh92ZgavY/s400/THUGLAK+6NOV.jpg

14. ''விஜய்காந்த் நேர்மையான அரசியல்வாதியா... அல்லது அப்படி நடிப்பவரா?''

''அரசியல் உலகில் நேர்மை உறங்கும் நேரம் இது. உண்மையைப் பற்றிப் பேசுவதைவிட, உண்மையாக வாழ்வதுதான் முக்கியம். விஜய்காந்த் நேர்மையான அதிகாரியாக நடித்திருக்கிறார். நேர்மையான அரசியல்வாதியாக நடப்பாரா? காலம் எந்த முகமூடியையும் ஒருநாள் கழற்றிப் போடும். அதுவரை காத்திருங்கள்!''

பொது இடத்தில் தன் கட்சி வேட்பளரையே அடிப்பவர் எப்படி நேர்மையா இருப்பார்? பொறுமைசாலிகளே அரசியலில் திணறும்போது..... இந்த மாதிரி அவசர புத்திக்காரர்கள், ஆத்திர புத்திக்காரர்கள்   கட்சித்தலைவராக இருப்பது தமிழனின் துர் அதிர்ஷ்டம்

Thursday, April 07, 2011

ஜெ-வை விட கேப்டனே டேலண்ட்- தமிழருவி மணியன் அதிரடி பேட்டி VS ஆனந்த விகடன் - காமெடி கும்மி

1.  ''தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பற்றி உங்கள் அரசியல் கருத்து என்ன?'' 

''எம்.ஜி.ஆரை எப்படிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை, ஜெயலலிதாவைவிட மிகச் சரியாக அறிந்துவைத்திருப்பவர்!''

அது கரெக்ட்டுங்க.. ஆனா 41 வேட்பாளரையும் மகாராஜா ஆக்கனும்னு பார்க்கறாரு.. வலிக்குதுங்க.. அவ் அவ்வ்வ்வ்வ் ....



2. '' 'ஒருநாள் முதல்வர்’ வாய்ப்பு உங்களிடம் வந்தால்..?'' 

 ''வாக்குச் சாவடிக்கு வந்து வாக்கு அளிக்காதவர்களின் ரேஷன் அட்டைகளையும் பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்யும்படி உடனே ஆணை பிறப்பிப்பேன். சட்டம் அதற்கு இடம் தராது என்கிறீர்களா? நான் முதல்வராகும் வாய்ப்பும் வராதே!''

நடக்கும் என்பார் நடக்காது.. நடக்காது என்பார் நடந்து விடும் .

.
3. ''அரசியல்வாதிகளின் வாரிசுகள் எந்தத் தியாகமும் இன்றி பதவிக்கு வருவதை எப்படிப் பல வருடங்கள் கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்?'' 

''பொதி சுமக்கும் கழுதை, எந்த மூட்டை தன் முதுகில் ஏற்றப்படுகிறது என்றா பார்க்கிறது? வண்டி இழுக்கும் காளை, யார் அமர்ந்திருக்கிறார்கள் என்று அறிந்த பின்பா அடியெடுத்துவைக்கிறது. கழுதை, காளை, தொண்டர் மீது நாம் பரிதாபப்படத்தான் முடியும்!''

நடப்பது மன்னராட்சியா? மன்னரோட வாரிசு  மக்கள் ஆட்சியா?


'4. 'என்னதான் கருணாநிதி மீது ஊழல், குடும்ப அரசியல், அதிகார துஷ்பிரயோகம் என்று குற்றச்சாட்டுகள் இருந்தாலும்... சமத்துவபுரம், அருந்ததியர்க்கு உள் இட ஒதுக்கீடு, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு, திருநங்கையர் நல வாரியம் என்று ஒதுக்கப்பட்டோருக்கு உரிய திட்டங்கள் அவர் ஆட்சியில்தானே நிறைவேறின? இவை எல்லாம் ஜெயலலிதா ஆட்சியில் நிறைவேற்றப்படாது என்பது உண்மைதானே?''


'' 'என்னதான் ஆசிரியர், வகுப்பறையில் மாணவர்களுக்கு முன்பு மது அருந்தினாலும், சிகரெட் புகைத்தாலும், வெற்றிலை போட்டுத் துப்பினாலும், இடையிடையே கொஞ்சம் பாடம் நடத்துகிறாரே, அது போதாதா?’ என்று கேட்பது போல் இருக்கிறது உங்கள் கேள்வி.

ஆசு இரியர்தான் ஆசிரியர். குற்றம் களைபவராக இருப்பதுதான் ஆசிரியரின் முதல் லட்சணம். ஊழலின் நிழல் படாத, மக்கள் நலன் சார்ந்த, செப்புக் காசும் கொள்ளை அடிக்காத நேரிய நல்லாட்சியை வழங்குவதுதான் அரசியல்வாதிக்கு உரிய அடிப்படை இலக்கணம்.

இட ஒதுக்கீடு, நல வாரியம் எல்லாம் வாக்கு வங்கியை விரிவுபடுத்தும் ஜால வித்தைகள். வித்தை காட்டுவதில் கலைஞர் வித்தகர். வாக்கு சேகரிக்க எவை எல்லாம் பயன்படுமோ, அவற்றை ஜெயலலிதாவும் செய்வார். அவர் உயர் சாதி மனோபாவம் உள்ளவர் என்பதுதான் உங்கள் மறைமுகமான குற்றச்சாட்டு. அரசியல்வாதிகள் ஓட்டுப் பொறுக்குவதில் சாதி பார்ப்பதே இல்லை!''

தி மு க , அதிமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்... தி மு க கமுக்கமா ,விஞ்ஞானபூர்வமா அடிப்பாங்க.. அதிமுக வுக்கு அந்த வல்லமை பற்றாது.. டாம் டூம்னு அடிச்சு ஈஸியா மாட்டிக்குவாங்க.. 

5. ''டி.வி, கிரைண்டர், மிக்ஸி, ஆடு, மாடு... அடுத்து?'' 


''வீட்டுக்கு ஒரு கட்டில்... பக்கத்தில் ஒரு தொட்டில்!''

முதன் முதலாக  முதன் முதலாக  இலவசமாக இலவசமாகத்தான்... 

ஏமாளி...தமிழா...


6. ''வைகோ...?'' 

''நெறி சார்ந்த அரசியல்வாதி. கொள்கைப் பிடிப்புள்ள லட்சியவாதி. பேச்சில் எரிமலை. செயலில் புயல். எல்லாம் இருந்தும், இன்று இலவு காத்த கிளி!''

வகை தொகை இல்லாமல் வகையாக ஏமாற்றப்பட்ட புலி... 

7. ''இத்தனை இடர்கள், முரண்பாடுகள், அநீதிகள், ஊழல்கள் இருந்தும் இந்த நாட்டை எது கட்டிக் காத்துக்கொண்டு இருக்கிறது? மக்கள் ஏன் எழுச்சிகொண்டு போராடவில்லை?'' 

''மதங்களால் பிரிந்து, சாதிகளால் சரிந்து, ஆள்பவரின் ஊழல் முறைகேடுகளால் சிதைந்து, மேலான வாழ்வியல் விழுமியங்களை மெள்ள இழந்து வரும் இந்தியா, இன்று வரை கட்டுக் குலையாமல் காப்பாற்றப்படுவதற்கு, நம் முன்னோர்கள் அமைத்துவைத்த ஆன்மிக அடித்தளம்தான் முக்கியக் காரணம்.

உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள் இயல்பாக எழுச்சிகொள்வது இல்லை. சமூக லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் சுயநலமற்ற அறிவுஜீவிகளின் நெருப்பு எழுத்துக்களும், கந்தக வார்த்தை களும்தான் சாதாரண மக்களைச் சரித்திரம் படைக்கச் செய்யும்.

மேல்தட்டு வர்க்கம், யார் எப்படிப் போனாலும் தன்னலனைக் காப்பதில் தனிக் கவனம் காட்டும். அடித்தட்டு வர்க்கம் வயிற்றுப் பசியாற வழி தேடுவதிலேயே அன்றாடம் அலைக்கழிப்புக்கு ஆளாகும். ஓரளவு வாழ்க்கை உத்தரவாதம் உள்ள நடுத்தர வர்க்கத்தினரால்தான் எந்த இடத்திலும் புரட்சிக்குப் பூபாளம் வாசிக்கப் படும்.

ஆனால், இந்த மண்ணின் துர்பாக்கியம்... நடுத்தர வர்க்கம் 'மானாடுவதிலும் மயிலாடுவதிலும்’ மயங்கிக்கிடக்கிறது. அறிவுஜீவிகள் என்று பெயர் பெற்றவர்களோ, அதிகார பீடத்தில் யார் அமர்ந்தாலும் சலுகைகளுக்காக அன்றாடம் சாமரம் வீசுவதை வாழ்க்கை நெறியாக வகுத்துக்கொண்டனர். பின், மக்களிடம் எப்படி வரும் போராட்டத்துக்கான எழுச்சி?

செகண்ட்ஷோ சினிமா பார்க்கறது உலகிலேயே தமிழன் தான் அதிகமாம்.. அதனால விழிப்புணர்வு கம்மி.. பாவம் லேட் நைட்ல படுக்கறான்.. 


8.''இன்றுள்ள அரசியல் நாகரிகம்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' 

''கேழ்வரகில் நெய் வந்தால், கள்ளிப் பாலில் சிசு வளர்ந்தால், நம் அரசியல் அரங்கிலும் நாகரிகம் நிலைக்கும். ராஜாஜியின் இறுதிச் சடங்கில் பெரியார் குலுங்கிக் குலுங்கி அழுததும், கட்சி வேற்றுமைகளை மீறி அண்ணா, பெருந் தலைவர் காமராஜரை, 'குணாளா! குலக் கொழுந்தே’ என்று கொண்டாடியதும்... இன்று பொய்யாய், கனவாய், பழங்கதையாய்ப் போய்விட்டது. இப்போது எல்லாம், அரசியல் துர்தேவதையின் பீடத்தில் முதலில் பலியாவது நாகரிகம்தான்!''

அரசியல் நாகரீகம் பற்றி பேசுவதே அநாகரீகம் ஆகி விட்டதே இப்போது?


9. ''ரசிகன், தொண்டன் இருவரில் யார் அப்பாவி?'' 

''தன் நெஞ்சம் கவர்ந்த நாயகனின் திரைப்படம் வெளியாகும் நாளில் தோரணம் கட்டுபவன் ரசிகன். தான் நேசிக்கும் தலைவருக்காகத் தோரணம் கட்டுவதிலும், சுவரொட்டி ஒட்டுவதிலும், மேடை போடுவதிலும், கோஷம் முழங்குவதிலும் மொத்த வாழ்க்கையையும் தொலைத்துவிடுபவன் தொண்டன். இருவரில் யார் அப்பாவி என்று இப்போது புரியுமே!''

ஏமாந்த சோனகிரிக்கும்,லைஃப் டைம் அன்வேலிட் சிம்கார்டுக்கும் உள்ள வித்தியாசம்தான்.

 

 
'10. சினிமா பார்ப்பது உண்டா? சமீபத்தில் பார்த்த படம்?'' 


''கல்லூரிப் பருவத்தில் சிவாஜி கணேசன் படங்களை விரும்பிப் பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆரின் 'எங்க வீட்டுப் பிள்ளை’, 'அன்பே வா’, 'ஆயிரத்தில் ஒருவன்’ இப்போது பார்த்தாலும் பிடிக்கும். சமீபத்தில் பார்த்து ரசித்த படம் 'மதராசபட்டினம்’. இந்தியில் 'குஜாரிஷ்’. கருணைக் கொலையை மையமாக்கி எடுக்கப்பட்ட கலைப் படைப்பு. எனக்கு இந்தி தெரியாது. நல்ல படத்தை ரசிக்க, மொழி ஒரு தடை இல்லை என்பதை எனக்கு அழுத்தமாக உணர்த்திய அற்புதமான படம்!''

இந்தப்படத்தை இன்னுமா தமிழ்ல ரீமேக் பண்ணாம இருக்காங்க.. ஜெயம் ரவி, விஜய் எல்லாம் எங்கேப்பா போனீங்க?



11. ''மௌன விரதம், உண்ணாவிரதம் போன்றவற்றைக் கடைப்பிடிப்பது உண்டா... ஏன்?'' 

''வாரத்தில் ஒரு வேளை உண்ணுவது இல்லை. செவ்வாய் அன்று நாள் முழுவதும் வாய் திறந்து யாரிடமும் பேசுவது இல்லை. ஒரு வேளை உண்ண மறந்தால், ஆரோக்யம் வளரும். ஒருநாள் முழுவதும் பேச மறுத்தால், ஆன்ம ஞானம் மலரும்!''

இந்த அரசியல்வாதிகள் விடாம பேசிட்டே இருக்காங்களே.. அவங்களை எலக்‌ஷன் முடியற வரை மவுன விரதம் இருக்க வைக்கனும்.. 

12. ''சுயமரியாதை என்றால் என்ன?'' 

''தன் உடம்பில் இருந்து வழியும் வியர்வை யில், குடும்பத்துக்கான உணவைத் தேடுவதற்குப் பெயர்தான்... சுயமரியாதை!''

எத்தன குடும்பத்துக்கு..?


13. ''திராவிடக் கட்சிகளின் சாதனைதான் என்ன?'' 

'' 'பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை. போட்டுப் பழகிய பை!’ - ஒரு கூட்டத்தில் கண்ணதாசன் சொன்னது. நான் பக்கத்தில் அமர்ந்து கேட்டது!''

 தமிழனை ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகளை வெறுக்க வைத்து அவனை குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வைத்தது..

14. ''வரும் காலங்களில் 'நேர்மையான தேர்தல்’ சாத்தியமா?'' 

''தேர்தல் கமிஷனின் அதிகாரங்கள் சட்டபூர்வமாக விரிவுபடுத்தப்பட்டால், நேர்மையும் நெஞ்சுரமும் கொண்டவர்கள் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டால், ஆள்பவருக்கு ஏற்றபடி ஆடாமல் அரசு ஊழியர்களும், காவல் துறையினரும் சமுதாயப் பொறுப்பு உணர்வுடன் செயற்பட்டால் 'நேர்மையான தேர்தல்’ நிச்சயம் சாத்தியம்!''

ஒவ்வொரு தொகுதிக்கும் வெவ்வேறு விதமான ஓட்டு ரேட் என்பதை மாற்றி ஃபிக்சடாக தமிழ்நாடு முழுவதும் ஒரு ஓட்டுக்கு இவ்வளவு என்று நிர்ணயிப்பதே நேர்மையான தேர்தல்.. 


'15. 'தனது தேர்தல் அறிக்கை மூலம் இப்போதே 'தி.மு.க. தேவலாம்’ என்று சொல்லவைத்துவிட்டதே அ.தி.மு.க?'' 

''ஆளும் கட்சி பதவியில் இருந்து இறங்காமல் பார்த்துக்கொள்ள ஆயிரம் இலவச வாக்குறுதிகள் வழங்குவது நியாயம் என்றால், எதிர்க் கட்சி அந்தப் பதவியில் ஏறி அமர்வதற்கு இன்னும் ஓராயிரம் அள்ளிவிடுவது எப்படி அநியாயமாகும்? நியாயத் தராசை நேராக நிறுத்துங்கள். கலைஞரும் ஜெயலலிதாவும் நாற்காலிப் போட்டியில் காட்டும் நாட்டம் தம் மக்கள் வாழ்வுக்காக; தமிழர்தம் வாழ்வுக்காக என்று தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்!''

தமிழக அரசியல் ஒரு நாடக மேடை.. அதில் கலைஞர், ஜெ இருவரும் சிறந்த நடிகர்கள்.. 

Friday, April 01, 2011

கலைஞரை இந்த காய்ச்சு காய்ச்ச என்ன காரணம்? தமிழருவி மணியன் ஆனந்த விகடன் பேட்டி - காமெடி கும்மி

1. ''இந்த சட்டமன்றத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?'' 

''தேர்தல் கமிஷன் கூடுதல் விழிப்புடன் காரியம் ஆற்றினால், கலைஞர் ஆட்சி கவிழக்கூடும்!''

ரொம்ப சிரமம் சார்...மக்கள் விழிப்புடன் இல்லையே...

2. ''கருணாநிதியை இந்தக் காய்ச்சு காய்ச்சுகிறீர்களே... அப்படி என்ன அவர் மேல் கோபம்?'' 

''20 ஆயிரம் ஈழத் தமிழர்கள் முள்ளி வாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட போதும், மூன்று லட்சம் தமிழர்கள் வதை முகாம்களில் சிதைக்கப்பட்டபோதும், தன் மகன், மகள், பேரனுக்கு மத்திய அமைச்சர வையில் இடம் பெறுவதில் காட்டிய முனைப்பை, நம் இனத்தைக் காப்பாற்றுவதில் காட்ட மறந்த சுயநலம் ஒன்றுதான் என் கோபத்துக்கு முக்கியக் காரணம்!''

 தமிழ் இனம் அழிக்கப்படும்போது கடிதம் எழுதியவர் தன் குடும்பத்துக்கு பதவி வேணும்னதும் டெல்லி விரைந்தாரே.. அதை விட்டூட்டீங்க?

'3. 'பல காலம் கட்சி வளர்த்த வைகோ, ராமதாஸ், கம்யூனிஸ்ட்டுகளைப் பின்னுக்குத் தள்ளி, விஜயகாந்த் குறுகிய காலத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' 

''சினிமாவின் வீச்சு + விஜயகாந்த்தின் துணிச்சல்  +தமிழரின் ரசனை = தே.மு.தி.க -வின் வளர்ச்சி!''

மாற்று சக்திக்காக மக்களின் ஏக்கம்?


4. ''அரசியல் தெளிவு பெற நான் படிக்க வேண்டிய 10 நூல்களின் (தமிழில்) பட்டியல்கூறுங்களேன்!'' 

1. ''பிளேட்டோவின் 'குடியரசு’ (ராமானுஜாசாரி)
2. அரிஸ்டாட்டிலின் 'அரசியல்’ (சி.எஸ்.சுப்பிரமணியம்)
3. மார்க்ஸின் 'மூலதனம்’ (க.ரா.ஜமதக்னி)
4. லூயி பிஷரின்  'காந்தி வாழ்க்கை’ (தி.ஜ.ர)
5. 'காந்திஜியின் இறுதி 200 நாட்கள்’ (வி.ராமமூர்த்தி)
6. 'இந்திய அரசமைப்பு’ (ஆ.சந்திரசேகரன்)
7. 'பண்டைய இந்தியா’ (டி.டி.கோசாம்பி - தமிழில் ஆர்.எஸ்.நாராயணன்)
8. ரஜனி பாமிதத் எழுதிய 'இன்றைய இந்தியா’ (எஸ்.ராமகிருஷ்ணன்)
9. 'பெரியார் ஆகஸ்ட் 15’ (எஸ்.வி.ராஜதுரை)
10. 'இன்றைய காந்தி’ (ஜெயமோகன்)


5. ''நீங்கள் உயிருக்கு உயிராக நேசித்த காங்கிரஸ் பேரியக்கத்தைவிட்டு வெளியே வந்தபோது, தங்கள் மனநிலை எப்படி இருந்தது?'' 

 ''நான் உயிர் கசிய நெஞ்சில்வைத்து நேசித்தது காந்தியால் வளர்க்கப்பட்டு, காமராஜரால் வழிநடத்தப்பட்ட காங்கிரஸ்  இயக்கம் காமராஜர் கண் மூடியபோதே, மக்கள் நலனுக்காக இயங்கிய காங்கிரஸ் கல்லறையில் புதைக்கப்பட்டுவிட்டது.

நான் இந்திரா காங்கிரஸை எதிர்த்து உருவான ஜனதா, ஜனதா தளத்தில்தான் என் இளமை முழுவதையும் செலவழித்தேன். மூப்பனார், காங்கிரஸைக் கைவிட்டு தனியாகத் தமிழ் மாநில காங்கிரஸை நடத்தியபோது, 'காமராஜர் ஆட்சி’ அமைக்க விரும்பி எனக்கு அழைப்பு விடுத்தார்.

'சோனியா காங்கிரஸில் கடைசி வரை இணைய மாட்டேன்’ என்று என்னிடம் அவர் உறுதி அளித்த பின்பே த.மா.கா-வில் சேர்ந்து, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினேன்.

அவருடைய மறைவுக்குப் பின், 2001-ல் த.மா.கா, சோனியா காங்கிரஸில் சங்க மித்தது என்னை மீறிய நிகழ்வு.


2009 ஜனவரி வரை எட்டு ஆண்டுகள் நான் தமிழ்நாடு காங்கிரஸின் பொதுச் செயலாளராகவும், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும் நீடித்தது, என் பொது வாழ்வில் நேர்ந்துவிட்ட மாறாத களங்கம்.

இன்று நான் சிறையில் இருந்து விடுபட்ட பறவை. அரசியல் வானில் சுயேச்சையாகச் சிறகசைத்துச் சுதந்திரமாகப் பறக்கிறேன். சோனியா காங்கிரஸில் இருந்த பாவத்துக்குப் பரிகாரம்தான்... 'இனி, எந்தக் கட்சியிலும் இணைவது இல்லை. இதயத் துடிப்பு நிற்கும் இறுதி நாள் வரை, எந்த ஆட்சி அதிகாரப் பதவியிலும் அமர்வதும் இல்லை’ என்று நேர்ந்து கொண்ட வைராக்கியம்!''

மரத்துக்கு மரம் தாவும் வானரங்களுக்கு மத்தியில் நீங்கள் தமிழகத்துக்கு கிடைத்த ஒரு வரம்


'6. 'எல்லாரையும் சகட்டுமேனிக்குத் திட்டும் நீங்கள், தற்போதைய நேர்மையான 10 அரசியல்வாதிகளைப் பட்டியலிடுங்கள். அதில் நம் இருவரின் முதல் சாய்ஸ் நல்லகண்ணுவாகத்தான் இருப்பார். மீதி 9 பேரை வரிசைப்படுத்துங்களேன்?'' 

''முதலில் ஒரு திருத்தம். நான் யாரையும் எந்த நிலையிலும் திட்டி, என்னைத் தாழ்த்திக்கொள்வது இல்லை. 'காமம் செப்பாது கண்டது மொழிதல்’ முக்கியம். யாரையும் இச்சகம் பேசி நான் இன்று வரை அடைய விரும்பியது எதுவும் இல்லை. நெஞ்சில் பட்டதை நேர்படப் பேசுவேன்.

அச்சமின்றி உள்ளம் உணர்ந்த உண்மை எழுதுவேன். இதனால் எனக்கு ஏற்படும் இழப்பு, வலி போன்றவற்றை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
போகட்டும். தரவரிசைப்படுத்த என்னிடம் எந்த 'அக்மார்க்’ அளவுகோலும் யாரும் வழங்கவில்லை. அதிகப்பிரசங்கியாக இருக்கவும் நான் விரும்பவில்லை. நானறிந்து மதிக்கும் அரசியல் நேர்மையாளர் நல்லகண்ணு!''

ஆனா அவரை தமிழ் மக்களில் எத்தனை பேருக்கு தெரியும்?நித்யானந்தாவை தெரிந்த அளவு கூட தெரியாது.. ஏன்னா இங்கே பாசிடிவ்வை விட நெகடிவ்க்குத்தான் விளம்பரம் ஜாஸ்தி

'7. 'நீங்கள் கலைஞரோடு சுமுகமாக இருந்த வரைக்கும் அவர் சரியாக இருந்ததாக எண்ணுகிறீர்களா?'' 

''ஐந்தாவது முறை கலைஞர் முதல்வரான பின்பு, அவரிடம் நான் கண்ட அணுகுமுறைகளில் நல்ல மாற்றம் தெரிந்தது. தன்னுடைய வாழ்வின் மாலைப் பொழுதில் அவர் நிறை மனிதராக நல்லாட்சி தரப்போகிறார் என்று நெஞ்சார நம்பினேன்.

வால்மீகியின் ராமாயணத்தை வாசிக்கும்போதும், அருணகிரிநாதரின் திருப்புகழைப் பாடும்போதும் அவர்களுடைய மூலத்தை ஆராய்வது அறிவுடைமை ஆகாது.

நான் உறுப்பினராக இருந்த திட்டக் கமிஷனுக்கும் ஊழலுக்கும் எள்ளளவு தொடர்பும் இருக்க வாய்ப்பு இல்லை. எல்லா அரசியல் வாதிகளும் ஊழலில் ஊறித் திளைப்பதால், அவருடைய ஆட்சியில் அரங்கேறிய ஊழல் நடவடிக்கைகள் எனக்கு வியப்பைத் தர வில்லை.

ஆனால், ஈழத் தமிழரை அவர் கைவிட்ட விதம் என்னை ரணப்படுத்தியதால், பதவியை உதறிவிட்டு விமர்சனக் கணைகளை வீசத் தொடங்கினேன். அவர் என் மீது பொழிந்த அன்பு அதிகம். இன்று என்னை வாடகை வீட்டில் இருந்து ஆயிரக்கணக்கான புத்தகங் களுடன் வீதியில் நிறுத்தும் அளவுக்கு என் மீது உமிழும் வெறுப்பு மிக அதிகம்!''

கலைஞர் எப்பவும் அப்படித்தான்.. இந்த ஒரு விஷயத்தில் அவர் எம் ஜி ஆர் மாதிரி.. தனக்கு எதிரி என தெரிந்தால் ......


8. ''ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங் வாயே திறக்காமல்இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?'' 

''அவர் எந்தப் பிரச்னையிலும் வாய் திறக்காமல் இருப்பதற்கு வழங்கப்பட்டதுதான் பிரதமர் பதவி என்பதை அவர் நன்கு அறிவார்!''

டம்மி பீஸ்களிடம் அவ்வளவுதான் எதிர்பார்க்க முடியும்...

9. ''பேச்சுக் கலையில் உங்கள் முன்னோடி யார்?'' 

'' 'அவர் பொய் சொன்னார் என்று சொல்ல மாட்டேன். உண்மைக்குப் புறம்பாக அவர் பேசியிருக்கிறார்!’ என்று மென்மையான வார்த்தைகளால் மேடை நாகரிகம் காத்த 'சொல்லின் செல்வர்’ ஈ.வே.கி.சம்பத்!''

அப்பவும் உங்க கட்சி ஆளை விட்டுக்கொடுக்காம பேசறீங்களே.. பட் உங்க நேர்மை பிடிச்சிருக்கு சார்.. 

10. ''ஓட்டுக்குப் பணத்தை நான் மறுத்தாலும், வீட்டுக்குள் கவரில் பணத்தை வீசி எறிந்துவிட்டுச் சென்றார்கள் கடந்த தேர்தலின்போது! அந்தப் பணத்தை வீசி எறிய மனம் இல்லாமல் செலவழித்தேன். இப்போதும் பணம் கொடுப்பார்கள் என்கிறார் கள்... நான் என்ன செய்வது?'' 

''தவறான வழியில் வந்த பணத்தைக் கையால் தொடுவதுகூடக் தகாது. உங்களை மீறி யாராவது வீட்டுக்குள் வீசி எறிந்தால், அந்தப் பணத்தை வீதியில் கையேந்தும் ஏழைகள் பசியாறப் பகிர்ந்துகொடுங்கள்.

பாவத்தின் கறை பட்ட பணம் புனிதப்பட அது ஒன்றுதான் வழி. பணம் கொடுத்தவருக்கு வாக்களிக்கும் 'சத்தியவான்கள்’ கழுத்தில், நாளை ஊழல் பாசக் கயிறு விழுந்து இறுக்கும்போது, காப்பாற்ற 'சாவித்திரிகள்’ கிடைக்க மாட்டார்கள்!''

நாளை கிடைக்கும் பலாக்காயை விட இன்று கிடைக்கும் காலாக்காயே மேல் என சிலர் நினைக்கிறார்களே.. ? என்ன செய்வது? 


11. ''உங்களைப் போன்றவர்களால் ஏன் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை?'' 

''ஆட்சியில் பதவியைப் பெறுவதும், பணத்தைப் பெருக்குவதும்தான் வெற்றி என்றால், என்னைப் போன்றவர்கள் தோற்றுவிட்டது உண்மை. 40 ஆண்டு கால அரசியல் வாழ்வில், நான்கு செப்புக் காசுகளைக்கூட நேர்மைக்கு மாறாகவும், அறத்துக்குப் புறம்பாகவும் சேர்க்காத தூய்மைதான் பெருமைக்குரிய வெற்றி என்றால், என்னைப் போன்றவர்கள் வெற்றியாளர்களே!
பதவியை மறுத்து, பணத்தைத் துறந்தவர்... அரசியலில் தோற்றவரா... ஜெயித்தவரா?''

 காமராஜர், ஜீவா,கக்கன் இவங்க எல்லாம் வாழும் காலத்தில் பிழைக்கத்தெரியாதவர்கள் என பேசப்பட்டாலும் இன்று சரித்திரம் அவர்களை போற்றுகிறதே.. அதே போல் உங்களையும் நாளைய சரித்திரம் அடையாளம் கண்டு கொள்ளும் சார்..

12. ''பாரதி என்றதும் தங்கள் நினைவில் வருவது?'' 

'' 'மண்ணில் யார்க்கும் அடிமை செய்யோம்’ என்று வைர வரி. 'அன்பிற் சிறந்த தவமில்லை’ என்ற வேத வாசகம்!''


13. ''நல்ல நோக்கத்துக்காகத் தொடங்கப்பட்ட தலித் அமைப்புகள் அரசியல் லாபத்துக்காகத் தடம் புரள்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?'' 

''சின்னச் சின்ன சுகங்களுக்காக தலித் தலைவர்கள் சமரசங்களுக்கு ஆட்பட்டுவிடுவதற்காக வருந்துகிறேன். காந்தியைக்கூட சிறிதும் சமரசத் துக்கு இடமின்றி எதிர்த்த அம்பேத்கரைப்போல் இவர்களும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!''


'14. 'அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தூக்கிப் போராடும் மாவோயிஸ்ட்டுகள் பற்றி உங்கள் கருத்து?'' 

''அவர்களுடைய இலக்கு புனிதமானது. அதை அடைவதற்கு அவர்கள் தேர்ந்து எடுக்கும் பாதை பயங்கரமானது. வன்முறையில் கட்டப்படும் சமூக மாற்றங்கள் சரிந்து விடும் என்பதுதான் சரித்திரம்!''

15. ''ராகுல் காந்தி பற்றி உங்கள் மதிப்பீடு?'' 

''களை பறிக்காமலேயே விளைச்சலைப் பெருக்க வீண் கனவு காணும் இளம் விவசாயி!''


16. ''மறைந்த அரசியல் தலைவர்களுள் யாரேனும் ஒருவரை உயிர் பிழைக்கவைக்கும் சக்தி உங்களுக்குக் கிடைக்கிறது. யாரைப் பிழைக்கவைப்பீர்கள்?'' 

''மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முழுவதுமாக நிறைவேற்றி முடிக்க நான் உயிர் பிழைக்கவைக்கும் ஒரே மனிதர், பெருந்தலைவர் காமராஜர்!''


'17. 'தி.மு.க,  அ.தி.மு.க இந்த இரண்டு திராவிடக் கட்சிகளையும்விட்டு தமிழக மக்கள் வெளிவரவே முடியாதா?'' 

''நடிப்புச் சுதேசிகளை நம்புவதை விடுங்கள். நல்லது தானே நடக்கும்!''

சாரி சார்.. அது மட்டும் எங்களால முடியாது.. ஏன்னா நிழலை நிஜம் என்றும்,வில்லனை ஹீரோ என்றும் நம்பியே பழக்கப்பட்டு விட்டோம்..