Showing posts with label ட்விட்டர். Show all posts
Showing posts with label ட்விட்டர். Show all posts

Tuesday, May 26, 2015

காமெடி கிங் கவுண்டமணி யும் ட்விட்டர்களும்

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் தேவையில்லாத திரைக் கலைஞர்களில் ஒருவரான அவரது பிறந்தநாளை ட்விட்டரில் கொண்டாடி மகிழ்கிறார்கள் தமிழ் ரசிகர்கள்.
இதற்காக உருவாக்கப்பட்ட #HappyBirthdayGoundamani என்ற ஹேஷ்டேக் இன்று காலை தொடங்கி இந்திய அளவில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, கவுண்டமணி உதிர்த்த காலத்தால் அழியாத பஞ்ச்-களை பதிவு செய்து வருகிறார்கள்.
நடிகர் கவுண்டமணிக்குப் புகழாரம் சூட்டும் ட்விட்டர் - ஃபேஸ்புக் குறும்பதிவுகள் - இன்றைய ட்வீட்டாம்லேட்டில்...
mass சேட்டு ‏@SettuOfficial - வீட்ல எதுக்கு இப்படி சிரிக்குறான்னு அவங்க சிரிக்காம நாம சிரிக்கிறது மட்டும் பார்த்தா கவுண்டமணி காமெடி பார்த்துட்டு இருக்கோம்ன்னு அர்த்தம் ;)
svenkadesh ‏@svenkadesh - MR ராதாவுக்கு பிறகு நக்கலில் கொடி கட்டி பறந்த ஒரே நட்சத்திரம் தலைவர் கவுண்டமணி மட்டுமே #HappybirthdayGoundamani
மருதாணி ‏@RedManoRed - கவுண்டமணி என்னதான் நக்கலாக நோகடித்தாலும் கஷ்டத்தை அவரே போக்குகிறார்..!!
Murali Mohan ‏@itsmuralimohan - #HappyBirthDayGoundamani #FamousDialogues உலகம் உருண்டைன்னு அமெரிக்ககா காரன் கண்டுப்பிடிக்கல, I am தான் கண்டுபிடிச்சது..
Sri Sri Sri Sri Ravi ‏@senthazalravi - உங்க மேல உயிரையே வெச்சிருக்கேன்.. எம்மேல உயிரை வெச்சுட்டு நீ என்ன பொணமாவா அலையிற?
ஹரி பாபு/ಹರಿ ಬಾಬು ‏@haritdina - அடுத்தவன் காசுல சோசியலிசம் பேசாதீங்க டா - கவுண்டர் #HappyBirthdayGoundamani.
Mohan Kiran ‏@TMoKiran - Don of Tamil Film Comedy #HappyBirthdayGoundamani
கோவை காதர் ‏- நீ யாருனு எனக்கு தெரியும்.. நான் யாருனு உனக்கு தெரியும்.. நம்ம ரெண்டு பேரும் யாருனு ஜனங்களுக்கு தெரியும்.. #HappyBirthdayGoundamani
ஜில்லு பிங்கி :) ‏@pinkpretty11 - காந்தக் கண்ணழகி உனக்கு மினிஸ்ட்ரில இடம் பாக்கறேன் #HappyBirthdayGoundamani.
கண்டமன்னூர் ஜமீன் ‏@kadalpuraa - அவன் அவன் கம்ப்யூட்டர்ல பல்லு விளக்கிட்டுருக்கான். இவனுக இன்னும் திருப்புகழையே பாடிட்டுருக்கானுகடா #HappyBirthdayGoundamani.
ராகவேந்திரா ‏@SouthIndianGuy - அப்போதே கவுண்டமணி Stock Exchange, Real Estate, Hollywood, Multi-National Companies பற்றி பேசிட்டார்! #கவுண்டமணி #Goundamani.
ச ப் பா ணி ‏@manipmp - என்ன படிச்சிருக்க? இன்ஜினியருங் போ இன்னும் நாலு வருசம் அதே படி #HappybirthdayGoundamani.
திகில்-நாவு ‏@Thiru_navu - கவுண்டர்+சத்தியராஜ் கூட்டணி மறக்க முடியாத காமெடிக் குவியல்! #HappybirthdayGoundamani.
Cuckoo ‏@vijivenkadesh - முதன்முதலா ஃப்பேக் ஐடிகிட்ட சாட் செய்து காதலில் தோற்றவர்.. #காதலர்தினம் #HappyBirthdayGoundamani"
குண்டுக் குழந்தை ‏@gundugopal - நாம் பூலோகத்தை நெருங்கி கொண்டிருக்கிறோம் எப்படி தெரிகிறது. கெட்ட நாற்றம் அடிக்கிறது.
ரெங்கா வெற்றி! ‏@r_vendan - இந்த மனுசன இன்றைய சமூக இணையதள மக்களும் எதிர்கால தலைமுறையும் மறக்காது, மறக்கவும் முடியாது #HappyBirthdayGoundamani.
Chennai vaasi ‏@Talk2gokul - கிங் ஆஃப் காமெடி ஆல்வேஸ். டைமிங்லயும் காமெடி சென்ஸ்லையும் யாரும் பக்கத்துல நிக்க முடியாது. #HappyBirthdayGoundamani.
ஃபேஸ்புக்கிலிருந்து..
Murali Csm - நமக்கெல்லாம் ஒரே தலைவன்தான்... எவனும் கலாய்க்க முடியாது... ஆனா, எவன வேணா கலாய்பாரு!‪#‎கவுண்டமணி.
சந்தோஷ் குமரன் - நம்மூர்ல தான் பா இந்த லொள்ளெல்லாம். தலைவன் தாலி எடுத்து கொடுக்குறது தொண்டன் அத வாங்கி கட்டுறது. ஏன் தொண்டனுக்கு கை இல்லையா அவன் எடுத்து கட்டமாட்டானா. நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க... - ‪#‎கவுண்டமணி‬.
Thamotharan Joseph - இதெல்லாம் நாளைக்கு சரித்திரத்துல வரும். ஸ்டூடன்ட்ஸ் எல்லாம் என்ன பத்தி நோட்ஸ் எடுப்பாங்க.

நன்றி - த இந்து


  • நாராயண இந்த கொசு தொல்ல தாங்க முடியல!!! கொவுண்டர் is the best !
    about 11 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
    • Ramachandran Mohan  
      I like Silver Spoon Shilpa Kumar.Happy Birth Day
      Points
      1775
      about 12 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Dinesh Krishnan  
        உண்மையான நகைச்சுவை நடிகர்......... மக்களை சிரிக்க செய்தவர் ....... பிறந்த நாள் வாழ்த்துக்கள்
        about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • Kottai Samy  
          அவர் சொன்ன சில வசனம் இன்றும் சிறப்பானது. 1. அரசியலில் இதெல்லாம் சாதாரணம். 2. என்ன படிச்சுருக்க..போ அதயே இன்னும் 4 வருஷம் படி. 3. இவனனுகளுக்கு வேற வேலையே இல்லப்பா தலைல இங்க கொஞ்சம் ப்ளீச் இங்க கொஞ்சம் ப்ளீச். வெத்தல போட்டு துப்புனமாரி ஆகிருக்கங்க..
          about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • Reefa  
            சத்திய சோதனை..இந்த வார்த்தையை அவர் மாடுலேசனில் சொன்னால் கஷ்டம் கூட காமெடி ஆகிடும்.
            Points
            16380
            about 14 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • PRABU  
              கவுண்டமணி சார் , U r the great comedian always. I m working in abroad, but whenever i want to be relax, i will watch ur comedy only sir. thank u for it.
              about 14 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
              reefa  Up Voted
              • SATHISH R  
                கவுன்ட்டர் கௌண்டமணி சார் க்கு அவரது தீவிர ரசிகனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .....waiting for back to see U in cinema sirrrrr.

              Tuesday, February 17, 2015

              ட்விட்டரில் வியப்பு:சாதனை!! இந்திய அளவில் #தமிழ்வாழ்க முதலிடம்

              பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் தமிழிலேயே ஒரு ஹேஷ்டேக், இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் (போக்கு) முதல் முறையாக முன்னிலை வகித்துள்ளது.
              பொதுவாக, அதிகம் பேசப்படும், விவாதிக்கப்படும் கருப்பொருளையொட்டிய சொற்களால் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக்குகள் (#) ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவிலோ, உலக அளவிலோ முதல் 10 இடங்களை வகிப்பது வழக்கம்.
              அதாவது, ஒரு குறிப்பிட்டை ஹேஷ்டேக் சொற்கள் தொடர்பாக நொடிக்கு 20-க்கும் மேற்பட்ட குறும்பதிவுகள் இடப்படும்போது, அந்தச் சொற்கள் ட்ரெண்டிங்கில் வலம் வரும்.
              கடந்த சில ஆண்டுகளாக, ட்விட்டர் ஹேஷ்டேக்குகள் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவை அனைத்துமே ஆங்கில மொழியில்தான் அரங்கேற்றப்படும். ஆனால், சில தினங்களாக இந்திய மொழிகளுக்கும் ட்ரெண்டிங்கில் முக்கியத்துவம் தரத் தொடங்கியிருக்கிறது ட்விட்டர்.
              அந்த வகையில், முதலில் இந்தி மொழி சொல் ட்ரெண்டிங்கில் வலம் வந்தன. அதைக் கண்ட தமிழ் இணையவாசிகள், தமிழில் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் ஒன்றை ட்ரெண்டிங்கில் வரச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அதை ட்விட்டரும் ஏற்றுக்கொண்டு தமிழில் 'போக்கு' காண்பிக்க ஆரம்பித்துள்ளது.
              அந்த வகையில், முதலில் உருவாக்கப்பட்ட தமிழ் ஹேஷ்டேக் சொல் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது #தமிழ்வாழ்க எனும் ஹேஷ்டேக்.
              இந்த ஹேஷ்டேக்கை பிரபலப்படுத்துவதில் காரணமானவர்களில் ஒருவர், தமிழ் இணையப் பிரபலம் பிரசாந்த். இவர், சினிமா விமர்சனங்களை வீடியோ வடிவில் யூடியூபில் பதிவேற்றம் செய்து இணையத்தில் பிரபலமானவர்.
              #தமிழ்வாழ்க ஹேஷ்டேக்கை பிரபலப்படுத்தியது பற்றி அவரிடம் கேட்டபோது, "இந்திய மொழிகளில் உருவாக்கப்படும் ஹேஷ்டேக் சொற்களுக்கு ட்விட்டர் முக்கியத்துவம் கொடுப்பதை அறிந்தேன். அந்த வகையில் முதலில் ட்ரெண்டிங்கில் இடம்பெறும் தமிழ் ஹேஷ்டேக், ஒரு நேர்மறை சிந்தனை கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதினேன்.
              எனவே, #தமிழ்வாழ்க என்ற சொல்லைப் பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்கினேன். இந்தச் சொல் ஏற்கெனவே ட்விட்டரில் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டதுதான். அதைப் பிரபலப்படுத்தும் வகையில் மட்டும் என்னைப் போன்ற ஆர்வலர்கள் இன்று ஈடுபட்டனர். அதற்குப் பலன் கிடைத்திருக்கிறது. இது உண்மையிலேயே நெகிழவைக்கும் தருணம்" என்றார் பிரசாந்த்.
              இதனிடையே, திமுக தலைவர் கருணாநிதி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உயிரையே குடிக்க வந்த எதிரியே ஆயினும் உரிய மரியாதை அளிப்பதுதான் இந்த (தமிழ்) மண்ணுக்கே சொந்தமான பண்பாடு. #தமிழ்வாழ்க" என்று குறும்பதிவிட்டு, தமிழ் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தார்.
              இந்திய நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணியளவில் #தமிழ்வாழ்க என்ற சொல், ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது கவனிக்கத்தக்கது.


              நன்றி - த இந்து

              Tuesday, September 09, 2014

              பாலியல் தொழில் வழக்கில் கைதான கன்னட நடிகை விவகாரத்தில் குஷ்பு கொந்தளிப்பு@TWITTER

              சமூகம் சார்ந்த தனது பார்வையை பொதுவெளியில் பகிரங்கமாகப் பதிவு செய்வதில் குறிப்பிடத்தக்கவரான நடிகை குஷ்பு, சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கருத்துகள், ஆன்லைன் வாசகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 



              பாலியல் தொழில் வழக்கில் கைதான கன்னட நடிகை விவகாரத்தில் தனது கொந்தளிப்பை கொட்டி ட்வீட்டிருக்கிறார் குஷ்பு. 


              அவரது அந்த மூன்று பதிவுகள்: 



              பதிவு 1: பாலியல் தொழில் வழக்கில் ஒரு பெண் கைது செய்யப்படும்போது அவரது முகம், அடையாளம் வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது. ஆனால், அந்த பெண்ணுடன் இருந்த ஆணின் அடையாளம் ஏன் மறைக்கப்படுகிறது? அந்த ஆணுக்கும் இந்த குற்றத்தில் சமபங்கு இருக்கிறதுதானே? 

               நடிகை குஷ்பு | கோப்புப் படம்

              பதிவு 2: பாலியல் தொழில் தண்டனைக்குரிய குற்றம் என்றால், அந்தக் குற்றத்தில் சம்பந்தப்படும் ஆண்களையும் அதே சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள். ஒரு பாலியல் தொழிலாளியின் சேவை பெற்றதற்காக அந்த ஆண்மகனுக்கும் அதே இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐ.பி.சி) கீழ் தண்டனை அளிக்கப்பட வேண்டும். 



              பதிவு 3: ஒருவகையில் அந்த ஆணுக்கு கூடுதல் தண்டனைகூட வழங்கலாம். ஏனெனில், ஒரு பெண்ணின் பொருளாதார இயலாமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அதிலிருந்து பாலின்பம் பெறுகிறார் அந்த ஆண். 



              நடிகை குஷ்புவின் இந்த மூன்று பதிவுகளும், இரண்டு பேர் சேர்ந்து செய்யும் ஒரு குற்றத்தில் ஒருவர் மட்டும் குற்றவாளியாகவும் மற்றொருவர் சட்டத்தினால் மட்டுமல்ல சமூகத்தாலும்கூட தண்டிக்கப்படாதது ஏன் என்ற வலுவான கேள்வியை முன்வைத்துள்ளது. 


              பாலியல் தொழிலாளியை அணுகும் ஆண், குறைந்தபட்சம் சமூகத்தின் அருவருப்பைக் கூட பெறுவதில்லை என்பதே அவரது ஆதங்கமாக இருக்கிறது. 



              thanx - the hindu



              Sunday, May 19, 2013

              பெண்கள் ட்விட்டரில் குப்பை கொட்டுவது எப்படி?

              சமூக வலை தள ஊடகங்களில் பேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. இந்த இணைய ஊடகங்கள் மூலம், ஒருவர், தம் கருத்தை, ஆயிரக்கணக்கான மக்களிடம் எளிதாக எடுத்துச் சொல்ல முடிகிறது.

              இவற்றில் எதை பகிர்ந்து கொள்ளலாம், எதை பகிர்ந்து கொள்ளக் கூடாது என்ற வரைமுறை இல்லாததால், கருத்து சுதந்திரம் கட்டுக்கடங்காமல், போய்க் கொண்டிருக்கிறது. குறிப்பாக, பெண்கள், தங்கள் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வது, சில நேரங்களில், அவர்களுக்கு மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது.

              இப்படி பிரச்னையில் சிக்கித் தவிக்காமல், ட்விட்டரை முறையாக பயன்படுத்த, இதோ சில டிப்ஸ்...

              ட்விட்டரில், ஒருவர் பகிர்ந்து கொள்ளும் சீர்த்திருத்தக் கருத்துகளைக் கொண்டு, அவரது குணாதிசயங்களை எடை போட வேண்டாம்; இங்கே பாதி பேருக்கு பொய் முகம்.

              ட்விட்டர் டைம் லைனில், சமூகத்தில் நடக்கிற எல்லா விஷயங்களும் அலசப்படும். அவை அனைத்திற்கும், நாமும் நம் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. காரணம், நம் தனிப்பட்ட விஷயத்தைக் குறித்து கூட வாயைப் பிடுங்க, காத்துக் கொண்டிருக்கின்றனர்.


              ட்விட்டர் பழக்கம், நாளடைவில் நட்பாக மாறுவதைத் தவிர்க்க இயலாது. அந்த நட்பு வளையத்தை உருவாக்க, அவசரப்படக் கூடாது. குறைந்தது, ஓர் ஆண்டாவது எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான், எதிராளியின் மனப்பாங்கு, சமூகம் சார்ந்த நடவடிக்கைகள் போன்றவற்றை ஓரளவு கணிக்க முடியும்.



              இவற்றில், நிஜப் பெயருக்கு பதில், புனைப் பெயர் வெளியிடுவதே நல்லது. நிஜப் பெயரில் இருந்தாலும், அதை மாற்றி விட வேண்டும். இல்லையென்றால், ஏதேனும் கருத்து மோதல் வந்தால், பெயரை குறிப்பிட்டு விமர்சனம் செ#வர். புனைப் பெயரில் விமர்சனம் செய்தால், அவ்வளவாக வலிக்காது.


              தனிப்பட்ட முறையில், ஒருவரை அவதூறாக பேசும் போக்கு, ஊடகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது; இது, ஏற்கத்தக்கதல்ல. எனவே, பொதுவான கருத்துகளை மட்டும் விமர்சனம் செய்ய வேண்டும். தனிப்பட்ட விமர்சனங்களுக்கு, பதில் சொல்ல வேண்டாம்.


              இவற்றில், கருத்துக்கு தான் முதலிடம். யார் சொல்கின்றனர் என்பது இரண்டாம் பட்சம் தான். எனவே, தங்களைப் பற்றிய சொந்த விஷயங்களை, பகிர்ந்து கொள்ள வேண்டாம். உதாரணத்துக்கு, நாம் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்பது எல்லாம், இங்கு தேவை இல்லாத ஒன்று.


              ஓரளவு நட்பு வளர்ந்து, நம்பிக்கை வந்தால் மட்டுமே, தங்களைப் பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அதுவும், தேவைப்பட்டால் மாத்திரமே. பர்சனல் லைப், சோஷியல் லைப் இரண்டிற்கும் இடையே, எப்போதுமே ஓர் எல்லைக் கோடு இருக்க வேண்டும். இல்லையென்றால், அது அனாவசிய குழப்பங்களுக்கு வழிவகுக்கும்.


              ட்விட்டர் மாதிரி, யாரும் நேரில் அழைத்தால், போக வேண்டாம். இங்கு, எழுத்துக்குத் தான் வலிமை; நேர்முக அறிமுகத்துக்கு இல்லை. நேரில் பார்த்து அளவளாவும் வழக்கம், எழுத்தாளர் உலகத்தில் உண்டு. சின்ன சின்ன கருத்தோ, நகைச்சுவை துணுக்கோ பகிர்ந்து கொள்வதற்கு, நேரில் பார்த்து பழக வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவசியம் என்று பட்டால், குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம்.


              முக்கியமாக, இதற்காக ஒதுக்கும் நேரத்தை முறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், ட்விட்டர் அடிமையாக்கி விடும். ட்விட்டரே கதி எனக் கிடப்பவர்கள், நமக்கு சொல்கிற செய்தி இது தான்... "நாலு விஷயம் தெரிந்து கொள்கிறோம்; சில ஆலோசனைகளை பெறுகிறோம்...' என்பது தவிர, இந்த ஊடகத்தால், தனிப்பட்ட பாதுகாப்பு குறைகிறது என்பது தான் உண்மை. பல அலுவலகங்களில் இதைத் தடை செய்வதற்குக் காரணமும் அது தான்.



              மனதில் உள்ளதை எல்லாம் பேசும் சுதந்திரம், ட்விட்டரில் இருக்கிறது. அது தான் இதில் உள்ள வசதி. அதுவே, அடிமையும்படுத்தும். கட்டற்ற சுதந்திரம், எப்போது வேண்டுமானாலும், ஆபத்தாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. இது குறித்து, அதிகம் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.



              போலி முகவரிகளிடம் (பேக் ஐ.டி.,) கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக, எல்லாரையும், பேக் ஐ.டி.,யாக, இருக்குமோ என்று நினைத்து அணுகுவதே நல்லது. உதாரணமாக, சாலையில் போகும் போது, ஒரு டர்னிங் வருகிறது என்றால், அங்கு வாகனம் ஏதும் வரும் என்று, எதிர்பார்த்து போகச் சொல்வர் இல்லையா... அது போலத் தான். சிறிது நாள் சென்றதும், பேக் ஐ.டி., இல்லை என்று தெரிந்தால், சின்னதாக ஒரு, "சாரி' சொல்லி சமாளித்து விடலாம்.


              ஆபாச வார்த்தைகளுக்கு பதில் சொல்லாமல், அவற்றை புறக்கணித்து விட வேண்டும். கைமீறி போகும் பட்சத்தில், ப்ளாக் செய்து விட வேண்டும். ஆண்கள் உபயோகப்படுத்தும், இரட்டை அர்த்தமுள்ள பல, பேச்சு”வழக்கு வார்த்தைகள், பெரும்பாலும், பெண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இதுபோன்ற ட்விட்ஸ்க்கு பதிலளித்து, பெண்கள் சிலர், சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். எனவே, அர்த்தம் புரியவில்லை என்றால், "அது சிங்கிள் மீனிங் தான்' என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.


              யாராவது ஆபாசமாகக் கிறுக்கினால், அவர்களை திருத்த முயல வேண்டாம். அது நம் வேலை இல்லை. இதை, எந்த ஊடகத்திலும் தவிர்க்க இயலாது. பிடிக்கவில்லை என்றால், ஒதுங்கிப் போவதே நல்லது.


              பேஸ்புக், ஜி-மெயில், ஸ்கைப், வாட்ஸப் போன்றவற்றிற்கு, தகவல் கொடுக்கும் முன், பல முறை யோசிப்பது நல்லது. இல்லையென்றால், அதில் தொடர்பு கொள்கிறவர்களுக்கு பதில் சொல்லி, நம் நேரம் விரயமாகும்.


              கடைசியாக, முக்கியமாக ஒன்று... சொந்த வாழ்க்கையில், சிரமம் ஏற்படுத்துமானால், ட்விட்டருக்கு, "குட்-பை' சொல்லுங்கள். இவற்றில் பகிர்ந்து கொள்ளப்படும் கருத்துகளுக்கு, அதீத முக்கியத்துவம் தராமல், "லைட்'டாக எடுத்துக் கொள்ளப் பாருங்கள்.
              வலைதள ஊடகங்களால் ஏகப்பட்ட நன்மைகள் இருந்தாலும், சில தீமைகள் இருக்கத்தான் செய்கிறது. அன்னபட்சி போன்று நல்லதை மட்டும் எடுத்து கொள்ளலாமே!
              ***

              நன்றி - கட்டதுர ,உமா யசோ, கட்டோரா (
              , தினமலர்


              Sunday, March 03, 2013

              விஸ்வரூபம் விமர்சனத்துக்கு கமல் ரசிகரின் பதிலடி

              இயக்குநர் கம் திரைக்கதை ஆசிரியர் கமல் ஹாசனிடம் சில கேள்விகள்



              1. முஸ்லீம் சகோதரர்ககளை இதுக்குமுன் பலரும் வில்லன் கேரடக்ரில் காட்டி இருக்கிறார்கள் . அர்ஜூன், கேப்டன், சரத்குமார் படங்களில் எல்லாம் பார்த்தவை தான். ஆனால் அவற்றில் எல்லாம் வில்லன் அதிக பட்சம் 15 நிமிடம் காட்டுவாங்க , ஒரு க்ளைமாக்ஸ் ஃபைட் அவ்வளவு தான்.ஆனால் இந்தப்படம் முழுக்க முழுக்க முஸ்லீம் சகோதரர்களையே வில்லன்களாக காட்டி இருப்பதால் தான் இத்தனை பிரச்சனையும் . வளரும் இளைய சமுதாயம் அக்கம் பக்கம் இருக்கும் முஸ்லீம் சகோதரர்களைப்பார்த்து மிரள மாட்டார்களா? 



              2, குருதிப்புனல் படத்தின் பாகம் 2 போல் தான் இந்தப்படம் வருது . ஆனா அந்தப்படத்தில் இருந்த விறு விறுப்பு , அடுத்து என்ன நடக்குமோ என்ற பதை பதைப்பு , சஸ்பென்ஸ் மிஸ்சிங்க் . முதல் 40 நிமிடங்கள் கலக்கல் , அடுத்து வரும் தாலிபான் காட்சிகள் சராசரி ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் . 



              3. டெரரிஸ்ட்டாக வரும் கமல் கண்களில் சாந்தம், பொறுமை அளவுக்கதிகமா தெரியுது. வழக்கமா எதிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கேரக்டருக்காக  உடலையே மாற்றும் கமல் குறைந்த பட்சம் கண்ணுக்கு ஒரு காண்டாக்ட் லென்ஸ் கூட வைக்காதது ஏன்? 



              4. தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் கமல் எப்படி அந்த கேங்கில் இருந்து வில்லன் கண்களில் மண்ணைத்தூவி எஸ் ஆனார்? பாகம் 2 இல் விடை கிடைக்கலாம் என்றாலும் இந்தப்படம்  மட்டும் பார்ப்பவர்களுக்கு என்ன புரியும் ? 


              5. மணிரத்னம் கூட அளவுக்கதிகமா நெருக்கமோ என்னமோ 75 % வசனங்கள் புரியவே இல்லை . பி  சி செண்ட்டர் ரசிகர்கள் ரொம்ப பாவம் . யார் என்ன பேசறாங்க அப்டினு யூகிக்கக்கூட முடியாது .



              6. ஓப்பனிங்க் காட்சில ஆண்ட்ரியாவை சிக்கனை டேஸ்ட் பாருன்னு கமல் சொன்னதும் அவர் இடது கையால உணவை எடுத்து சுவைக்கிறார்.. உவ்வே.. அந்த பேசிக் நாலெட்ஜ் கூடவா தெரியாது . வலது கைல எடுத்து டேஸ்டக்கூடாதா? 


              7. பூஜா குமார் தன் பாஸ் கம் காதலன் கூட கார்ல போய்ட்டிருக்கார். அப்போ கணவர் கமல் ஃபோன் பண்றார். ஆஃபீஸ் வேலையா வெளில கார்ல போய்ட்டிருக்கேன்னா மேட்டர் ஓவர். ஆஃபீஸ்ல தான் இருக்கேன்னு ஏன் பொய் சொல்றார்? கார் பேக் கிரவுண்ட் சத்தம் கமலுக்குக்கேட்காதா? 



              8.  ஹீரோ வுக்கும் , ஹீரோயினுக்கும் மேரேஜ் ஆகி  மேட்டர் நடக்கலை என்பதை நம்பவே முடியலை . இந்தக்காலத்துல பொண்ணு பார்க்கும்போதே ட்ரெய்லர் பார்த்துடறாங்க , நிச்சயம் நடக்கும்போது மெயின் பிக்சர் பாதி பார்த்துடறாங்க . மாடர்ன் கேர்ள்  மேரேஜ் ஆகி மேட்டர் நடக்கலை என்பதை எப்படி நம்புவது ? ஹீரோ ஒரு நார்மல் பர்சன்  இல்லை என்று ஒரு இடத்துல வசனம் வெச்சு சமாளிக்கறாங்க . ஆனா ஹீரோ அப்படி நடிக்க வேண்டிய அவசியம் இல்லை . உளவுத்துறைல பொண்டாட்டி கிட்டே மேட்டர் வெச்சுக்காதீங்க டேஞ்சர் அப்டினு எல்லாமா சொல்லி இருப்பாங்க? 




              9.  கமலுக்கும் , பூஜா குமாருக்கும் காம்பினேஷன் காட்சிகள் கொஞ்ச்மாவது வெச்சிருக்கனும் . அப்போதான் அவருக்காக கமல் ஃபைட் பண்ணூம்போது இன்னும் எமோஷன் கிடைக்கும். 


              10. டான்ஸர் கமலை தீவிரவாதிகள் படம் பிடிச்சு தலைவனுக்கு அனுப்பறாங்க. ஒரு ஃபோட்டோ அல்லது 2 ஃபோட்டோ எடுத்தா போதாதா? அட்வர்ட்டைஸ்மென்ட் எடுப்பது போல அத்தனை ஃபோட்டோ எதுக்கு? 





              11. எம்பஸி ஆஃபீசர்  கமல் அடிவாங்கும்போது வர்றார். அந்த டைம்ல ஜஸ்ட் ஒரு ஃபோன் பண்ணி இருந்தா போதுமே... டைமும் மிச்சம் ஆகி இருக்கும், கமலையும் அடி வாங்காமல் காப்பாற்றி இருக்கலாம்.. 


              12. டைம்பாம் வைப்பவன் எதுக்கு திருப்பதி நாவிதர் மாதிரி செல்ஃப் மொட்டை அடிச்சுக்கறார்? அப்போதான் பாம் வெடிக்குமா? தலையை மட்டும்னாக்கூட பரவாயில்லை... ஹய்யோ அய்யோ.. 



              13. கமல் அடிக்கடி தாலிபான் தீவிரவாதி கிட்டே “ என்ன நடக்குது இங்கே? “ அப்டினு கேள்வி கேட்கறார்.. அப்போ ஆடியன்ஸ் “ அதைத்தான் நாங்களும் கேட்கறோம், என்னதான் நடக்குது? “ அப்டினு சவுண்ட் விடறாங்க.. செம காமெடி 



              14. திரையில் இனி கமல் படம் எது வந்தாலும் தமிழ்ல படம் பூரா சப் டைட்டில் போடுவது நல்லது  . 



              15. ஆஸ்கார் வாங்கும் ஆசைக்காகவோ , அல்லது விஸ்வரூபம் பாகம் 2 க்குப்பின் ஹாலிவு ட் படத்தில் கமல் நடிப்பதாலோ அவர் ஒபாமாவுக்கு ஓவரா ஜிங்க் ஜக் அடிப்பது மாதிரி காட்சிகள் இருக்கு . 


              16 . பிராமணர்கள் , முஸ்லீம்கள் இருவரை நையாண்டி அல்லது தாக்கும் காட்சிகள் இத்தனை கட்டுக்குப்பின்னும் இருக்கு . அடுத்த படத்திலாவது அடுத்தவங்க மனசு புண் படாமல் எடுக்கவும் 


              17. மனைவிக்கு கணவனைப்பிடிக்கலைன்னா  டைவர்ஸ் பண்ண 1000 வழி இருக்கு . உதாரணத்துக்கு  யாரையாவது செட்டப் பண்ணி எதிரா சாட்சி சொல்ல வைக்கலாம். அதை விட்டு ஃபிளாஸ்பேக்கை ஆராய ஆள் வைப்பது ஓவர் 


              18. அந்த பிரைவேட் டிடெக்டிவ் ஆள் கிரிக்கெட் ரன்னிங்க் கமெண்ட்ரி கொடுப்பது மாதிரி ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணுவது செம காமெடி . அட பறக்கா வெட்டி , முழுசா அப்சர்வ் பண்ணிட்டு அப்புறமா சொல்லறதுக்கு என்ன? என கேட்கத்தோணுது 



              19. மகாநதிக்குப்பின் அழகான கமலைப்பார்க்கவே முடியல . படம் பூரா பிளாஸ்திரி ஒட்டித்தான் வர்றாரு .ஏதாவது வேண்டுதலா?

              Some answers to your Viswaroopam director questions (these are my own views)

              உங்கள் கேள்விகளுக்கு சில பதில்கள் :

              1. எனக்கு தெரிந்து யாரும் மிரள வில்லை, படம் வந்து பல நாட்கள் ஆகி விட்டன. பலரும் பார்த்து விட்டனர். படத்தை, படம் என்றே பார்க்கின்றனர்.


              2. கொஞ்சம் Logicகுடன் சேர்த்து பார்த்தால், நல்லா இருக்கும்.


              3. சாந்தமும் பொறுமையும் இல்லாமல் யாருமும் எதையும் சாதிக்க முடியாது, Terrorist உட்பட.


              4. Boss this is pure marketing. Adding some excitement to the second film. It is not required to tell everything.

              5. U r correct, it is not a film for all tamil ppl

              6. America பாஸ், anything is possible. Like andrea not bathing n so on !

              7. Kamal knows everything, including her affair and that night going out as they have bugged the complete office of DEEPAK. He also told andrea, that Nirupama wont come for dinner. He just purposly ignores it

              8. Question has the answer

              9. Part 2 for it

              10. It is the trend of the world, Everybidy has a camera, n time is not a constraint, v all take more no. of pics in the same ocassion. Also kamal is a hostage, if only the pic is good they can search in the Databases (in case if they dont identify the photo)

              11. Phones are not secure, moreover they need the FDI help too. So meeting is neeed

              12. valid point. Must ask Kamal, he must have some reason

              13. This is not a question. No body in our show asked so (but our mind voices did)

              14. No question there

              15. No question there

              16. Valid point. It is Kamal Hassan's inborn style

              17. There are such agents, Nirupama just kept n small detective to just find if there is any Girl around Kamal. It is actually n american style (novels have it)

              18. To proceed to next actions, instant is needed. U tweet in the instant n want decetives to observe fully n report.

              19. A sort of Style I think !

              ஓஜஸ் (@)

              Wednesday, December 26, 2012

              செக்‌ஷன் 66 ஏ நம் மீது பாயாமல் தற்காத்துக்கொள்வது எப்படி?

              ட்விட்டர் பாலிடிக்ஸ்

              66A வந்தாச்சு வாய்ப்பூட்டு!

              ப்ரியன்

              கடந்த அக்டோபர் மாதம் முப்பதாம் தேதி. மணி காலை ஐந்து. புதுச்சேரி குறிஞ்சி நகர் ஒன்பதாவது குறுக்குத் தெருவின் அமைதியைச் சீர்குலைத்தவாறு, போலீஸ் ஜீப் ஒன்று சிறு தொழிலதிபர் ரவி சீனிவாசன் வீட்டின் முன் நிற்கிறது. உள்ளே வந்த போலீஸ்காரர்கள் காலிங் பெல்லை அடிக்கிறார்கள். மகனை டியூஷன் கூட்டிக் கொண்டு போக வந்திருக்கும் ஆட்டோ டிரைவர்தான் என சற்று மெதுவாகவே வந்து கதவைத் திறந்தார் ரவியின் மனைவி. பார்த்தால் போலீஸ். கலவரமாகி உள்ளே போய் கணவரை எழுப்புகிறார். அவரும் சற்றுக் குழப்பத்துடனே வாசலுக்கு வருகிறார்.
              நாங்க போலீஸ்... நீங்க தானே ரவிஎன்று ஒருவர் கேட்க, ‘ஆமாம்என்று ரவி சொல்லஎங்க கூட வாங்க உங்களைப் பற்றி புகார் வந்திருக்கு.’
              ரவிக்கு திடீரென்று சந்தேகம். ‘வந்திருப்பவர்கள் போலீஸ்காரர்கள் தானா?’ சுதாரித்துக் கொண்டு .டி. கேட்க போலீஸுக்கு வழக்கமான கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. ‘ஒழுங்கா ஸ்டேஷனுக்கு வந்து பேசிக்கோங்கஎன்று ரவியை பேண்ட் போடக் கூட அனுமதிக்காமல், செல் எடுத்துக் கொள்வதைத் தடுத்து, ஷார்ட்ஸ்ஸோடு அழைத்துக் கொண்டு போனார்கள். ரவியின் மனைவிக்கும் மாமனாருக்கும் இந்த அதிரடி ஒன்றும் புரியவில்லை. எல்லாம் நிமிடத்துக்குள் நடந்து விட்டது. ‘கணவரை எங்கே கூட்டிப் போகிறார்கள்என்ற பயம் மனைவிக்கு தொற்றிக் கொண்டது.

              எனக்கே பெரிய ஷாக். நான் சட்டத்தை மதிக்கும் சாதாரண குடிமகன். ஏதோ பெரிய கிரிமினல் குற்றம் செய்தது போல் போலீஸ் கூட்டிப் போகிறதே... குழப்பம். ஏதாவது ஆள் மாறாட்டமா... யோசனையில் ஆழ்ந்தேன்" என்று சொல்லும் ரவியின் கண்களில் சம்பவம் நடந்து முப்பது நாட்களாகியும் பயம் தெளியவில்லை. ஜீப்பில் போகும்போது, ‘கம்ப்யூட்டரில் என்ன எழுதினீங்க... கார்த்திக் சிதம்பரம் பற்றி...’ என்று எஸ்..கேட்க, அப்போதுதான் ட்விட்டரில் கார்த்திக் சிதம்பரம் பற்றி ஒரு கருத்து சொன்னது அவர் நினைவுக்கு வந்தது. ‘வதேராவை விட கார்த்திக் சிதம்பரத்துக்கு அதிக சொத்துகள் இருக்குஎன்பதுதான் ரவி போட்ட செய்தி.



               ‘இதன் காரணமாகத் திட்டமிட்டு என் புகழுக்குக் களங்கம் விளைவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவும்என்று முதல் நாள் இரவு கார்த்தி அனுப்பிய ஃபேக்ஸ் புகார் மீதுதான் அத்தனை அவசர நடவடிக்கை எடுத்திருக்கிறது புதுச்சேரி போலீஸ். அண்ணா ஹசாரேயின்ஊழலுக்கு எதிரான இந்தியாஅமைப்பின் சுறுசுறு ஆர்வலர் ரவி. கேஜரிவால், வதேராவைப் பற்றிய ஊழல் செய்திகளை அம்பலப்படுத்தியபோது கார்த்தியைப் பற்றிய கருத்தை டுவிட்டரில் பதிவு செய்தார் ரவி.

              என் ட்விட்டரைத் தொடருபவர்கள் மொத்தம் 16 பேர். இவர்கள் என் நண்பர்கள். உறவினர்கள். கருத்துப் பரிமாற்றம் எங்களுக்குள்தான். ஒரு வருடத்துக்கு முன் சிதம்பரத்தைப் பற்றியும் எனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறேன். அதையும் குறிப்பிட்டு, ‘என் குடும்பத்தைத் திட்டமிட்டு களங்கப் படுத்துகிறார்கள்என்று புகார் கொடுத்திருக்கிறார் கார்த்தி. என்னைப் பிடித்துப் போன போலீஸுக்கு ட்விட்டர் என்றால் என்ன என்று கூடத் தெரியவில்லை.


               பகல் முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து விட்டு மாலையில் நீதிபதி முன் ஆஜர்படுத்தினார்கள். பின்னர்தான் ஜாமீன் கிடைத்தது. 2008, தகவல் தொழில்நுட்பச் சட்டம், பிரிவு 66A ன் கீழ் என் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்தச் சட்டப் பிரிவு மூலம் அரசியல் சட்டம் நமக்கு உறுதியளித்துள்ள கருத்துச் சுதந்திரத்துக்கு பேராபத்து வந்திருக்கிறது," என்கிறார் ரவி சீனிவாசன்.
              இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல; ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் கருத்துச் சொன்ன பலர் இந்த 66A சட்டப்பிரிவின் கீழ் மாட்டிக் கொண்டு கேஸ், ஜெயில் என்று அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வலைத்தளம் வழியாக விமர்சனம் செய்த ஒரு கல்லூரி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுத்தார் மம்தா பானர்ஜி.

              ‘மும்பையில் கடைகள் மூடப்பட்டது பால் தாக்கரேயின் மீதுள்ள மரியாதை அல்ல; பயம்என்று சமூக வலைத்தளத்தில் கருத்துச் சொன்ன இரு இளம்பெண்கள் போலீஸால் கைது செய்யப்பட்டார்கள். (இதனால் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்) பாடகி சின்மயி சர்ச்சைக்குரிய விஷயங்களில் தமது கருத்தை ட்விட்டரில் போட, விவாதத்தின் தொடர்ச்சியில் சின்மயி மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள்தனிப்பட்டவகையில் போக, அவர் புகார் கொடுக்க இருவர் மீது வழக்குப் பாய்ந்தது. சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவன தொழிற்சங்க விவகாரத்தில், கோஷ்டிப் பூசலில் அரசியல் செல்வாக்குமிக்க ஒரு கோஷ்டி மற்றொரு கோஷ்டியைச் சேர்ந்த இருவரை இதே 66A- ன் கீழ் வழக்குப் பதிவு செய்ய வைத்து 12 நாட்கள் ஜெயிலில் வைத்து விட்டது.


               ‘நாடு முழுவதும் இந்தச் சட்டப் பிரிவு கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே இதை உடனே சட்டப் புத்தகத்திலிருந்து எடுக்க வேண்டும்என்று மனித உரிமை ஆர்வலர்களும், சமூக வலைத்தள ஆர்வலர்களும் களத்தில் குதித்திருக்கிறார்கள். வரும் காலத்தில் இவர்கள் குரல் இன்னமும் பலமாகவே ஒலிக்கும். புதுச்சேரி ரவியிடம் தொலைபேசியில் பேசிய சுப்பிரமணியம் சுவாமி, அவருக்காக நீதிமன்றத்தில் வழக்காடத் தயாராக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

              அதேநேரத்தில் சமூக நிலையைப் பற்றிப் புரிதலோ, ஆர்வமோ பலருக்கு இருப்பதில்லை. கருத்தைப் பதிவு செய்பவர்கள் எல்லோருமே, சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிபுணர்களாகவோ, தொடர்புடையவர்களாகவோ இருப்பதில்லை. மின்னலெனப் பளிச்சென்று மனத்தில் தோன்றியதை உடனே பதிவு செய்கிறார்கள். இதனால் கோபம், பகை உருவாகி, வம்பு வழக்கு என்று வந்து சேருகிறது.
              சமூக வலைத்தளங்கள் எல்லையற்ற பரந்த தளம். அவற்றைக் கையாள்வதற்கு சுயகட்டுப்பாடு தேவை" என்கிறார் பிரபல தினசரி பத்திரிகையின் வலைத்தள ஆசிரியர். ஒரு பதிவர் தாம் தொடங்கி வைத்த விவாதத்தின் மீது வரும் கருத்துக்கள் அது தனிப்பட்ட தாக்குதலாக மாறும்போது, அந்த நபரை தமது பதிவை விட்டு நீக்க முடியும். வேண்டும் என்றே விவாதத்தில் தொடர்ந்தால் நிலைமை இன்னமும் மோசமாகும்.

              மேலும் சமூக வலைத்தளங்களில் உள்ள பதிவர்கள் நண்பர்கள், உறவினர்கள் என்று குழு ஒன்றை உருவாக்கிக்கொண்டு செயல்பட்டால் கருத்துப் பரிமாற்றம் அவர்களுக்குள்ளேயே ஆரோக்கியமாக இருக்கும். இதைவிட்டு பதிவர்கள், தங்கள் கருத்துக்களை பொது மக்கள் கவனிப்புக்கு (Public domain) விஸ்தரிக்கும்போது கற்களும் வீசப்படலாம்; மலர்களும் கொடுக்கப்படலாம்.
              நான்கு நண்பர்கள் அவர்களுக்கு ஒரு அரசியல்வாதியைக் குறித்துப் பேசும்போது எப்படியும் பேசிக் கொள்ளலாம். ஆனால் அதையே ட்விட்டரில் பதிவுசெய்தால் விபரீதம்.

              மும்பையே கலவர பீதியில் இருக்கும் போது தாக்கரேயைக் குறித்து அப்படிச் செய்தியைப் போட்டிருக்கக் கூடாது. இந்தச் சமூக வலைத்தளங்களைத் தவறாகப் பயன்படுத்தி, நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்குபவர்களும், வதந்தியைப் பரப்பியவர்களும் இருக்கிறார்கள். எனவே கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கும், சட்டவிரோதமாகச் செயல்படுவதைத் தடுக்கவும் சட்டங்கள் தேவை. தண்டனைகள் மூலமே தவறுகள் குறையும்" என்கிறார் அந்த வலைத்தள ஆசிரியர்.
              கம்ப்யூட்டர் வழியாக ஒருவரை அச்சுறுத்தும்படி செய்தியை, கருத்தைப் பதிவு செய்வது, அதன்மூலம் தொந்தரவு, எரிச்சல், சங்கட மேற்படுத்துவது ஆகியவை தகவல் தொழில் நுட்பச் சட்டப் பிரிவு 66A-ன் கீழ் மூன்றாண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய அல்லது அபராதம் அல்லாத தண்டனைக்குரியது. இதைச் சட்டப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும்" என்று உயர்நீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருக்கிறார் மனித உரிமை ஆர்வலர் .மார்க்ஸ்.

              அரசியல் சட்டம் பிரிவு 19(2)ன் கீழ் நமக்கு அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்துக்கு முரணான பிரிவு இது. தகவல் தொழில் நுட்பச் சட்டம் முதலில் கொண்டு வந்தபோது இந்தப் பிரிவு இல்லை. அப்புறம்தான் திருத்தம் கொண்டு வந்து சேர்த்தார்கள். சமூக வலைத்தளங்களில் சொல்லும் கருத்தையே பொது இடங்களில் பேசினாலோ, எழுதினாலோ தண்டனை அவதூறு வழக்குத்தான் போட முடியும்.
              கார்த்தி சிதம்பரம் பற்றி பொதுமேடைகளில் இன்னமும் மோசமான விமர்சனம் வைக்கப்படுகிறதே. அதற்கெல்லாம் வழக்குக் கிடையாது. ட்விட்டரில் கண்ணியமான விமர்சனக் கருத்து சொன்னால் வழக்கா? கருத்துகளால் பாதிக்கப்பட்டால் அவதூறு சட்டப்படி வழக்குப் போட்டு நிவாரணம் பெறலாமே. அதைவிட்டு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை பயமுறுத்தும் கிரிமினல் பிரிவுகள் எதற்காக? வலைத்தளங்களில் விவாதங்கள் தொடர்ச்சியாக நடக்கும் போது பதிவர்கள் ஆணித்தரமான பதில்களை வைக்கும் அளவுக்கு திறமையானவர்களாக இருக்க வேண்டும்.
              கார்த்தி சிதம்பரம் கோபப்படாமல் எங்கே... நிரூபியுங்கள்?" என் றல்லவா எதிர் சவால் விட வேண்டும். அதை விட்டு வாய்ப்பூட்டுப் போடும் விதமாக வழக்கைப் போடத் தூண்டுவது எந்தவிதத்தில் சரி? 66A பிரிவை நீக்கும்வரை எங்கள் போராட்டம் தொடரும்," என்கிறார் மார்க்ஸின் வழக்கறிஞர் ரஜினி.

              மெத்தப் படித்த வழக்கறிஞரும் அமைச்சருமான கபில்சிபல், ‘66A குறிப்பிடுவது ஜாமீனில் வரக்கூடிய குற்றம்தான்என்று அடக்கி வாசிக்கப் பார்க்கிறார். இது அநியாயம்" என்கிறார் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்த ஹென்றிடிபேன்.
              கைது செய்த பிறகுதானய்யா ஜாமீன். எங்கள் கேள்வியே எதற்குக் கைது? மாற்றுக் கருத்துகளோ விமர்சனங்களோ இருக்கக் கூடாது என்று கருதும் அரசியல்வாதிகள் ஏற்பாடுதான் இந்தக் கொடுமையான சட்டப் பிரிவு. கோடிக் கணக்கில் கொள்ளையடிக்கும் இவர்களைப் பற்றிய குற்றச்சாட்டுகளோ, விமர்சனமோ சமூக வலைத்தளங்களில் வரக்கூடாது என்பதுதான் நோக்கம். ஏனென்றால் இந்தச் சமூக வலைத்தளங்கள் இன்று கருத்துகளை உருவாக்கும் மாபெரும் தளங்களாக மாறிவிட்டனவே," என்கிறார் அவர்.
              மொத்தத்தில் இந்த விவகாரம் இன்னமும் சூட்டைக் கிளப்பும் வகையில் வெடிக்கப் போகிறது. கருத்தோடு கருத்து மோதலாமே தவிர, கண்ணியமான கருத்துகளுக்கு சிறை வாசம் என்ற நிலை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதே
               
               
              நன்றி - கல்கி , புலவர் தருமி