Showing posts with label ஜோக்ஸ். Show all posts
Showing posts with label ஜோக்ஸ். Show all posts

Thursday, May 16, 2019

தளபதி ராக்கிங் பர்ஃபார்மென்ஸ்- பூலோகம் கண்ணை மூடிவிட்டால் பூனை இறந்து விடுமா?

1  மணிரத்னம் இயக்கிய அழகியல் படங்கள்ல "இதயத்தை திருடாதே "முக்கியமானபடம்,ஆனா உங்களுக்கு மட்டும் அது ஏன் பிடிக்கலை தலைவரே!?


டைட்டில்லயே "திருடாதே"னு அபசகுனமா வருதே?திருடாம அரசியல் எப்டி பண்றது?நமக்குத்தெரிஞ்சதெல்லாம் திருட்டு,புரட்டு,உருட்டு,மிரட்டு




==============


2 என்ன மடத்தனமான அரசு இது?ரெய்டு வரும்போது இன்ன தேதில இன்ன டைம் ல வர்றோம்னு சொல்லிட்டு வர்றதில்ல?கொஞ்சம் கூட மேனர்சே இல்லாம நடு ராத்திரில வந்தா என்ன பண்ணுவான் என்"கட்சிக்காரன்?பணத்தை மறைப்பானா? மத்த விஷயங்களை மறைப்பானா?நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நோட்டீஸ் அனுப்பிட்டு ரெய்டு


=============

3 சார்,2 படத்தைத்தவிர நீங்க நடிச்சதெல்லாம் பிளாப்,அப்றம் எப்டி 8 படங்கள் கைவசம் இருக்கு?


ஒரு படத்துல ஹீரோ"சான்ஸ் கிடைச்சா அந்தப்படத்துக்கு இலவசமா இசை அமைச்டுவேன்
பிரமாதமான ஜிங் ஜக் கா இருக்கே?



============


4 எம் டி சார் உங்க கம்பெனிகளுக்கு "கொடை ஆரஞ்சு நிறுவனம், சாத்துக்குடி நிறுவனம் னு பேரு வெச்சிருக்கீங்களே?


ஏன்?ஆப்பிள் நிறுவனம் பேமஸ் ஆகலையா?



=============


5 டியர்,எனக்கு 20 , உனக்கு 18


அரசியல்வாதி மகள் = 20+18=38 தானே வருது?இன்னும் 2 சார்ட்டேஜ் ஆகுதே?
மக்கு,அதான் குழந்தை இருக்கே? 2 வயசு ஆகுதில்ல?



============


6 ஜோசியரே!மாமனார் வேற எக்ஸ்போர்ட் பிஸ்னஸ் ஆரம்பிக்க சொல்றாரு?.ஆரம்பிக்கலாமா?


மாமனாரோட முதலீடுன்னா பேஷா ஆரம்பிக்கலாம்,உங்க கைக்காசுன்னா வேணாம்.



============


7 போலீஸ் வாகனத்தில் செல்கிறது ஆளூங்கட்சியினரின் பணம்” -னு குற்றச்சாட்டு வைக்கறீங்களே?தலைவரே!அந்த விஷயம் உங்களுக்கு எப்படித்தெரிஞ்சது?


நாங்க ஆளுங்கட்சியா இருக்கும்போது"அப்படித்தானே செஞ்சோம்?..குறவன் ........ ஜாடை ....மறவனு. க்குத்தானே தெரியும்?


============


8 ரைட்டர் சார்,உங்க கதைல ஏகப்பட்ட கொலைகள் இருக்கே?


இல்லையே?வில்லன் ஹீரோயினை"மட்டும்தானே கொல்றாரு ?ஒரு கொலை தானே?
தமிழ்ல ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள்,கொலையா கொன்னிருக்கீங்க ,தமிழை



===============


9 தலைவரே!நான் சொல்றதை அப்டியே திருப்பி சொல்லுங்க


"பூனை கண்ணை மூடிவிட்டால் பூலோகம் இருண்டுவிடுமா?"
பூலோகம் கண்ணை மூடிவிட்டால் பூனை இறந்து விடுமா?



================


10 கம்யூனிஸ்ட் ஆட்சியிலே கேரளாவில் வரலாறு காணாத 32 நாட்கள் தொடர் மழை,வெள்ளம் வந்தது,அதிமுக ஆட்சியிலே சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மழையே வராது.அவ்ளவ்"ராசியான ஆட்கள் நாங்கள்,சந்தேகம் எனில் வரலாற்றின்"பக்கங்களைப்புரட்டிப்பார்ப்பீர்!



============


11

2 தொகுதிகளில் ஏன் போட்டி இடுகிறீர்கள் ?என கேட்கிறார்களே?அதில் என்ன"தப்பு?ஒருவர் 2 சம்சாரம் ,3 சம்சாரம் கட்றப்ப அதுவும் 3 சம்சாரமும் உயிரோட இருக்கறப்பவே கட்றப்ப 2 அல்லது 3 தொகுதிகளில் மட்டும் போட்டி இட்டால் என்ன?ஸ்பேர் மாதிரி தானே?


===============

12 சார் ,தமிழ்நாடு மக்கள் தொகை எவ்ளோ?
சுமாரா 7 கோடி இருக்கலாம்
பட விமர்சனத்துல போய் பார்த்து படம் புடிக்கலனா உங்க டிக்கட் பணத்தை நான் தந்து விடுகிறேன்.கறீங்களே.படத்துக்குப்போகாமயே 7 கோடிப்பேரும் படம் பிடிக்கலைனு அடிச்சு விட்டா 7 கோடி ×120 ருபா =8,40,00,00,000 ரெடி ஸ்டாக் வெச்சிருக்கீங்களா?

=============



13  நாங்கள் சொல்வதைத்தான் செய்வோம் ,செய்வதைத்தான் சொல்வோம்
ஓஹோ,என்ன சொன்னீங்க?என்ன செஞ்சீங்க?
நாங்க ஜெயிச்சா நான் முதல்வர் பதவி ஏத்துக்குவேன்னு சொன்னேன்


===============



14 தலைவரே!எவனோ ஒருத்தன் வந்து "பிங்க்கி பிங்க்கி பாஙக் கி சொல்றான் ,அவனுக்கு 2000 ரூபா தர்றீங்க?
அது கோடு வோர்டுய்யா. 10× 200 ருபா =2008 ருபா.பிங்க் கலர்லதானே அந்த நோட்டு இருக்கு.இதை வாங்கி பாங்க் ல அவன் a/c ல போட்டுடுவான்


=================



15 டியர்,உங்களைக்கல்யாணம் பண்ணிக்கிட்டா ராணி மாதிரி வெச்சுக்காப்பாத்துவீங்களா?
ராணி மாதிரி வெச்சுக்காப்பாத்தனும்னா ஆ.ராசா மாதிரி கொள்ளை அடிச்சாதான் உண்டு,நா மாச சம்பளக்காரன்,உழைச்சாதான் சோறு


=================


16 டியர்,நீங்க ஒரு 420 னு வெளில பேசிக்கறாங்களே?நிஜமா?
ஆமா,அவங்க என் டென்த் மார்க் பத்தி சொல்றாங்க 420 / 500.
+2 ல 840 / 1200
டபுள் போர் ட்வெண்ட்டி னு சொல்வாங்க


================


17 பிலிம் இன்ஸ்ட்டிடியூஷன்
தேர்வில்
GOT. சிறுகுறிப்பு வரைக
get க்கு past tense GOT
சுத்தம்,Game Of Thrones ஹாலிவுட் தொடர் பற்றி கேட்டா ஆங்கில இலக்கணக்கதை விடறே?


=================


18 சார்,என்ன பேஸ்ட் வேணும்?க்ளோசப்?கோல்கேட்?
பிரபல ட்விட்டர் அட்லீ ரசிகர் = காபி பேஸ்ட் போதும்


==================


19 சமச்சீர் கல்வியைக்் கொண்டு வந்தது நாம தானே தலைவரே?
ஆமா
அப்றம் ,அதே மாதிரி சமச்சீர் செல்வம் திட்டமும் கொண்டு வரலாமே?
அதெப்டி?எல்லார் கிட்டயும் ஒரே அளவு பணம்,சொத்து இருந்தா வேலை செய்ய கட்சிக்கு அடிமைகள் எப்டி சிக்குவாங்க?


=================

20 கொத்தடிமை ,பரம்பரை அடிமை என்ன வித்தியாசம்?
சம்பளம் தர்ற முதலாளிக்கு மட்டும் ஓவரா விசுவாசமா இருந்தா கொத்தடிமை.முதலாளி,முதலாளி மகன்,பேரன் ,கொள்ளுப்பேரன் னு பரம்பரைக்கே அடிமை ஆனவர்கள் பரம்பரை அடிமை


================


Wednesday, May 15, 2019

சட்டத்தின் பிடியில் சிக்காமல் சாமார்த்தியமாகத்திருடுவது எப்படி?

1  கமல் தேர்தல் ல தோத்துட்டா மனசு ஒடிஞ்சு போய்டுவாரா?


ச்சே ச்சே,(டார்ச்)"லைட்"டா எடுத்துக்குவாரு...




==============

2 டைம் மிஷின் கிடைச்சா என்ன செய்விங்க?


டைம் பார்ப்பேன்



===============


3 ராகுல் = மோடி சர்கார் டவுன் டவுன்


தங்கபாலு = மோடி,சர்கார் படம் இரண்டுமே"நகர்ப்புற மக்களைக்கவர்ந்தவை துபாஷ்



=============


4 மச்சினிகளை கவனிக்கும் அளவுக்கு மனைவியை கவனிப்பதில்லை

கணவர்,அது ஏன்?
மச்சினி ங்கறது குற்றால அருவி மாதிரி,சீசன்ல டூர் போறப்ப குளிச்சாதான் உண்டு,மனைவிங்கறது வீடல இருக்கற மினரல் வாட்டர் மாதிரி எப்ப வேணா குடிச்சுக்கலாம்னு அசால்ட்டு
(கொல்லிமலை சித்தரின் ஓலைச்சுவடியிலிருந்து)




================


5 தலைவரே!உங்களுக்கு னு சில பாலிசி வெச்சிருக்கீங்களாமே?என்னென்ன?


எல் ஐ சி பாலிசி
ஜீவன்தாரா பாலிசி




===============


6 சார்,உங்க ரசிகர்கள் கற்றவை பற்றவை னு டேக் போட்டு கீச்சறாங்களே?என்ன அர்த்தம்?

ஸ்டைலா தம் பற்ற வை,அதுதான் நான் கற்றவை னு அர்த்தம்



=================

7 மேடம்,வாக்கிங் போகலையா?

"நடக்கற" விஷயத்தை பேசுங்க



============


8 கட்சித்தொண்டனான நீயே மேடைல தலைவர் மகனை கொலை செய்ய முயற்சி பண்ணுனியாமே,அது ஏன்?

வாரிசு அரசியலை ஒழிக்கனும்னு அவர்தானுங்க சொன்னாரு


=================


9 பனிமலர் க்கு கவர்மெண்ட் ஜாப் கிடைச்சிடுச்சாம்

ஓஹோ,அப்ப இனி அரசாங்கப்பணி மலர்?



================


10 மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் எங்களுக்கு வாக்களித்தது வீணாகிவிடுமோ என யாரும் கவலைப்பட வேண்டாம்.வை.கோ வை எதிர்த்தோம்,பின் தேவை வந்ததும் ஆதரிக்கவில்லையா?அதே போல் மோடியையும் ஆதரிக்கத்தயங்க மாட்டோம்.யாரு கால்ல செருப்பு அறுந்தாலும் நம்ம தலைல கிரீடம் ஏறனும்


===============


11 நீங்க முதல்ல இருந்த கட்சியோட முக்கியக்கொள்கை என்ன?

மது ஒழிப்பு
இப்ப அந்தக்கட்சியை விட்டு விலகி புதுசா ஒரு கட்சிக்கு வந்திருக்கீங்களே?அவங்க சாராய ஆலை அதிபர்னு தெரியுமா?
தெரியும்,என்னோட கொள்கை பணம் சம்பாதிப்பது


=================

12 இந்துக்களுக்கு நான் விரோதி என்ற பொய்யான குற்றச்சாட்டை என்மீது ஆளுங்கட்சிகள் சுமத்துகிறார்கள்,
என் மனைவி,
அம்மா
,சின்னம்மா 1 ,
சின்னம்மா2
என எல்லோருமே கடவுள்"பக்தைகள்தான்.பகுத்தறிவு என்பது சும்மானாச்சுக்கும்


=========


13 தலைவரே!எம்மதமும் சம்மதமே ன்னா என்ன அர்த்தம்?

அதாவது எல்லா மதத்தினரின் ஓட்டு மட்டும் வேணும்,ஆனா தேர்தல் முடிஞ்சதும் இந்துக்களை மட்டும் கிண்டல் பண்ணுவோம்னு அர்த்தம்


===============


14 தலைவரே!நம்ம கிட்டதான் 28% வாக்கு வங்கி இருக்கே?நாம ஏன் நாம் தமிழர்,மக்கள் நீதி மையம் னு யாரைப்பாத்தாலும் பயப்படறோம்?

அவங்க 2 பேரும் தலா 4 % வாங்குனாலே நமக்கு 8% நட்டம் தானே? 20% வெச்சுட்டு எதிர்க்கட்சியாக்கூட ஆக முடியாதே?ஆக... ஆக.... யாரு புதுசா வந்தாலும் நமக்கு அனர்த்தம்தான்



================


15 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூவே பூச்சூடவா"நதியா,வைகாசி பொறந்தாச்சு காவேரி இவர்களை இணைத்து,ஒரு"படம் எடுப்போம்,நதிகளைத்தான் இணைக்கமுடியலை..நக்மா வை ் வைக்கற இடத்துல குஷ்பூ வை வைக்கற மாதிரி ..



=================


16 ரஜினி ,யூகிசேது ஒப்பிடுக

தர்பார்
நையாண்டி தர்பார்


=============


17 டாக்டர் ,எனக்கு ஏன் யார் மேலயும் பொசஸிவ்நெஸ் வரமாட்டிங்குது?

ஒரே ஒரு காதலியோ,மனைவியோ ,தோழியோ,சிநேகிதியோ இருந்தா பொசசிவ்னெஸ் வரும்.ரகத்துக்கு 3 இருந்தா அது வராது


=============


18 ரைட்டர் சார்,உங்க நாவல் படிச்சேன்,
முதல் முறையா எழுதுறாப்ல தெரியல!
ஆமா,அது நாலாவது முறை.3 தடவை எழுதிப்பாத்து அடிச்சு திருத்தி 4 வது டைமா எழுதுனது.கரெக்டா கண்டு பிடிச்ட்டீங்களே?



=============


19 தலைவரே!மணிமேகலைப்பிரசுரத்துல இதுவரை 1000 வெவ்வேற டைட்டில்ல புக் விட்டுட்டாங்களாம்,இதுவரை வராத டைட்டில்ல ஒரு புக் நீங்களோ உங்க அட்மினோ விடனுமாம்

என்ன டைட்டில்?
சட்டத்தின் பிடியில் சிக்காமல் சாமார்த்தியமாகத்திருடுவது எப்படி?


================


20 டைரக்டர் சார்,உங்க மகர ராசி ட்ரெய்லர் பார்த்தேன்,அதுல, ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ்

யோவ் ,அது மகரராசியா?இதுலயே பிழை.நீ அடுத்தவன் கிட்ட பிழை கண்டுபிடிக்கறியா? (telugu)


================

Wednesday, April 24, 2019

பொட்டி வந்துடுச்சு

1  ஜெயலலிதாவை போன்று 7 மொழிகளில் பேசுபவர் ஹெச்.ராஜா… அமைச்சர் விஜயபாஸ்கர் அனல் பிரச்சாரம் # 7 மொழி"தெரிஞ்சுக்கிட்டதால ஜனங்களுக்கு"என்ன பிரயோஜனம்?எதுனா உளறி ஏழரையைக்கூட்றாரு



===========




2 பா.ஜ.க-வுக்காக பிரசாரம் செய்வேன்; ஆனால் தமிழிசைக்கு மாட்டேன்!” -விசு # கட்சின்னா எல்லாரும் ஒரு குடும்பமா பழகனும்,ஆனா இவருதான் குடும்பம் ஒரு கதம்பம் படம் எடுத்தாரு



பெண்களை மதிக்கனும்,ஆனா இவருதான் பெண்மணி அவள் கண்மணி படம் எடுத்தாரு



============


3 திருப்பூரை சிங்கப்பூராக உருவாக்கும் நோக்கம் அரசுக்கு உள்ளது. -கே.ஏ.செங்கோட்டையன்.
# ரொம்ப லேட்டுங்க நீங்க,10 வருசத்துக்கு முன்னாலயே எங்க தளபதி சிங்காரச்சென்னையை சிங்கப்பூர் ஆக்குவோம்னு வாக்கு குடுத்துட்டாரே.அத்திக்கடவு அவினாசி திட்டம் போல 75 வருசத்துல நிறைவேற்றிடுவாரு


================


4 காங்கிரஸ் கூட்டணி அரசில் திமுக இருந்தபோது தமிழகத்துக்காக எதுவுமே செய்யவில்லை!- எடப்பாடி

# வரலாறு தெரியாம பேசறாரு
1 ஆதாரம் விட்டு வைக்காம ஊழல் செஞ்சாங்க
2 கரண்ட் விஷயத்துல 16 மணி நேர மின்தடை ,வெச்சு செஞ்சாங்களே?



=================

5 என் மகன் பல மணி நேரம் இங்கிலீஷ் பேசக்கூடியவன்- காட்பாடி துரைமுருகன்"# அடடா,அப்போ ஸ்போக்கன் இங்க்லீஷ் கோச்சிங் க்ளாஸ் எடுக்கலாமே?நல்ல வருமானம்,எதுக்கு இந்த கேவலமான அரசியல் பதவிக்கு வரனும்?


=============


6 எனக்கு வாக்களிப்பதாக நினைத்து என் மகனுக்கு வாக்களியுங்கள்!- ஓ.பி.எஸ் ?# இவர் என்னவோ 10 முறை பொதுத்தேர்தலை சந்திச்சு மக்கள் ஓட்டுப்போட்டு ஜெயிச்ச மாதிரி பில்டப் தர்றாரு.லாட்டரி அடிச்ச மாதிரி பதவி கிடைச்சுது


==============


7 மீம்ஸ் போட்டு கலாய்ப்பது சிறுபிள்ளைத்தனம்” - ‘அழகு’ பற்றி தமிழச்சி விளக்கம் # மேடம்,விளக்கம் எல்லாம் பிரமாதம்.ஆனா ஒரு"பொண்ணு வெட்கப்படுவது தன் அழகுக்கான பாராட்டில்தான்.நீங்க எதுனா இப்ப சமாளிச்சு என்ன பண்ண



==============


8 மனதில் இருக்கும் மிருகத் தோலை உரிக்க வேண்டும் - வைரமுத்து
# ஆமாங்க,தோலை"உரிக்கலாம்னு பாத்தா ஆதாரம் இதுவரை"சிக்கலை


=============


9 அதிமுக ஆட்சி, ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி" - அன்புமணி ராமதாஸ் || 6 மாசத்துக்கு முன்னாலதான் ஊழல் ஆட்சின்னாரு.கி.மு, கி.பி மாதிரி கூ.மு (கூட்டணிக்கு முன்) கூ.பி (கூட்டணிக்குப்பின்) னு 2 விதமா பேசறாங்க அரசியல்வாதிகள்


=============


10 : பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து கூட விசாரிக்கலாம்-ஹைகோர்ட்
விசாரணைக்கு ஒத்துழைக்க மாறன் சகோதரர்களுக்கு ஹைகோர்ட் அறிவுரை"# நல்லவேளை,முட்டிக்கு முட்டி தட்டுங்கனு சொல்லலை,அடி வெளுத்திருப்பாங்க




===============


11 எடப்பாடி பழனிசாமி முதல்வரானது நாம் பெற்ற பேறு' - உருகிய பா.ம.க GK மணி # அதென்ன நாம் னு எங்களையும் சேத்துக்கறீங்க?நாங்கள் பெற்ற பேறு னு உங்களை மட்டும் சொல்லிக்குங்க



================


12 “அழகான வேட்பாளரான தமிழச்சியை மக்களவை பிரதிநிதியாக அனுப்ப தவறிவிடாதீர்கள்!” - உதயநிதி ஸ்டாலின் # சரி",அனுப்பறோம்,ஆனா"ஒவ்வொரு"தொகுதிலயும் நம்ம கட்சி சார்பா இதே போல்"ஒரு அழகியை வேட்பாளராக்கனும்னு யாராவது கேட்டுடப்போறாங்க


============


13 அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள மோடிக்கு ஊழல் பற்றி பேச தகுதியில்லை- ஸ்டாலின் # போபர்ஸ்"புகழ் காங் உடன் கூட்டணி வைத்துள்ள 2ஜி புகழ் திமுக வுக்கு மட்டும தகுதி இருக்கா?


===============


14 பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு பின்னடைவு.. மனுவை நிராகரித்தது ஹைகோர்ட் # யோக்கியன் வர்றாப்டி,சொம்பை எடுத்து உள்ள வைங்க,பித்தளை சொம்பைக்கூட விடமாட்டாப்டி



================


15 நரேந்திர மோடி இரும்பு மனிதர் அல்ல;
நரேந்திர மோடி கல் பிரதமர் − ஸ்டாலின் விமர்சனம் # அதாவது இளமையில் கல்,முடியலைன்னா முதுமையிலாவது கல்,கடைசி வரை கைநாட்டாவே இருந்து துண்டு சீட்டு அட்மினை நம்பி இராதே னு அர்த்தம்


===============


16 திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்பதால் மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது
குடிப்பவர்களின் உயிரை காப்பாற்றும் பொருட்டு படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும்
- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி # மங்குனி அமைச்சர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கனுமா?


==============


17 திமுகவுக்கு 15 சீட் கிடைத்தால் போதும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிவிடுவார் - துரைமுருகன் || தமிழக மக்களுக்கு எச்சரிக்கை விடறார் போல,ஜனங்களே!ஜாக்கிரதை



==============


18 கதிர் ஆனந்த் இனி உங்கள் பிள்ளை, அவரை நான் தொகுதி மக்களுக்காக தத்து கொடுக்கிறேன்." - துரைமுருகன் | # அப்போ உங்க மகன் பேருல இருக்கற சொத்துக்கள் எல்லாம் தொகுதி மக்கள்"பிரிச்சு எடுத்துக்கலாமா?


===============


அதிமுக விற்கு சரத்குமார் திடீர் ஆதரவு
தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என அறிவித்த நிலையில் அதிமுக விற்கு சரத்குமார் ஆதரவு
அதிமுகவுக்கு ஆதரவு என இன்று மாலை சரத்குமார் அறிவிக்க உள்ளதாக தகவல். # பொட்டி வந்துடுச்சு மொமெண்ட்


=================


20 வைகோவால் நாங்கள் அடைந்த பாதிப்பை திமுகவும் அடையும்- தேமுதிக துணைப் பொதுச் செயலாளர்
எல்.கே.சுதீஷ் # ஒரு"சீட்"கூட வராதுன்னா சொல்றாரு.சென்னை திமுக கோட்டை ஆச்சே? 3 வந்துடும்னு சொல்றாங்களே?


================