Showing posts with label ஜூ வி. Show all posts
Showing posts with label ஜூ வி. Show all posts

Wednesday, September 05, 2012

திருப்பூர் எஸ்.பி ஆஸ்ரா கர்க் , கேப்டன் , ஜெ -ஈகோ ?- ஜு வி கட்டுரை

ஆஸ்ரா கர்க் டிரான்ஸ்ஃபருக்குக் காரணம் விஜயகாந்த்?
 
 

பரபரக்கும் திருப்பூர்
 
 
திருப்பூர் எஸ்.பி-யாகப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் முடிவதற்குள் மீண்டும் தூக்கி அடிக்கப்பட்டுள்ளார் அதிரடிக்குப் பெயர் போன ஆஸ்ரா கர்க். குற்றச் செயல்கள் மலிந்துபோன திருப்பூரை, தனது கட்டுக்குள் கொண்டு வந்த ஆஸ்ரா கர்கை ஏன் திடீரென மாற்றினார்கள் என்று புரியாமல் பொதுமக்கள் விழிக்கிறார்கள். 


நம்மிடம் பேசிய சில  போலீஸார், ''ஆஸ்ரா கர்க் வந்ததில் இருந்து திருப்பூர் ஓரளவு அமைதியான மாவட்டமாக மாறிவிட்டது. யார் மீது புகார் என்றாலும், புகார் உண்மையாக இருப்பின் தைரிய​மாக நடவடிக்கை எடுத்தார். அதுதான் இப்போது அவருக்கு வினையாகி விட்டது. மணல் கொள்ளை பற்றித் தொடர்ந்து புகார் வந்ததை அடுத்து, அதிரடி நடவடிக்கை எடுத்தார். அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றிவந்த லாரிகளுக்குக் கடுமையான அபராதம் விதித்தார். 


இதை முக்கிய அமைச்சர் ஒருவர் கண்டித்தும், அசராமல் தனது நடவடிக்கையைத் தொடர்ந்தார். அதனால் முன்பே இவர் மாற்றப்படலாம் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அந்தச்செய்தி ஊட கங்கள் மூலம் வெளியே வந்துவிட்டதால், அப்போது நடவடிக்கை பாயவில்லை.


தமிழகம் முழுக்க மணல் அள்ளும் தொழிலில் கோலோச்சிக்கொண்டு இருக்கும் ஒரு முக்கியப் பிரமுகருக்கும் ஆஸ்ரா கர்க்கின் செயல் எரிச்சலை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன் ஆஸ்ரா கர்க்குக்கு போன் செய்த அவர், 'மணல் ஏற்றி வரும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டாராம். அதற்கு எஸ்.பி., 'சட்டவிரோதமாக வரும் லாரிகள் என்றால் நிச்சயம் பறிமுதல் செய்யப்படும்’ என்று உறுதியாகப் பதில் சொன்னாராம். 



உடனே மணல் புள்ளி, 'நீங்க இங்கே தொடர்ந்து எஸ்.பி-யாக இருக்கணுமா... வேண்டாமா?’ என்று அதட்ட... 'உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி வைத்து விட்டாராம் ஆஸ்ரா கர்க்.



சில நாட்களுக்கு முன், திருப்பூரில் உள்ள கிளப் ஒன்றில் சீட்டு விளையாடிய பெரும்புள்ளிகள் கைது செய்யப்​பட்டனர். அதில், சாதி கட்சியைச் சேர்ந்த ஒருவரும் தேசியக் கட்சியைச் சேர்ந்த தலைவர்  ஒருவருடைய உறவினரும் அடக்கம். எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் யாராக இருந்தாலும் கைது செய்யுங்கள் என்று கூறிவிட்டார் ஆஸ்ரா கர்க். இதை மானப் பிரச்னையாக கருதிய பெரும் புள்ளிகள் தங்களின் மேலிடச் செல்வாக்கைப் பயன்படுத்தி, இவரை மாற்றுவதற்குத் தொடர்ந்து முயன்று வந்தனர்.  



இந்தப் பிரச்னைகளுக்கு இடையில் கடந்த மாதம் திருப்பூர் வந்த விஜயகாந்த், ஆளும் கட்சியைச் சகட்டுமேனிக்கு திட்டினாலும், 'ஆஸ்ரா கர்க் மிக நேர்மையான அதிகாரி’ என்று அவரைப் பாராட்டிப் பேசிவிட்டார். இது போதாதா மேலிடத்தைக் கடுப்பேற்ற? இத்தனை விஷயங்களும் ஒன்று சேர்ந்துதான், அவருடைய டிரான்ஸ்ஃபருக்குக் காரணமாகி விட்டது'' என்றார்கள்.


ஆனால் வேறு சில அதிகாரிகளோ, ''மதுரை கிரானைட் விவகாரம் பற்றி நன்கு அறிந்தவர் ஆஸ்ரா கர்க். அந்த ஊழலில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சில தர்மபுரியிலும் தொழில் செய்கின்றனர். அதனால், ஆஸ்ரா அங்கு இருந்தால் அதிரடி நடவடிக்கைளை எடுக்க அரசுக்குச் சுலபமாக இருக்கும் என்பதால்தான் தர்மபுரிக்கு மாற்றப்பட்டு உள்ளார்.


 டி.என்.பி.எஸ்.சி. தேர்வுத்தாள் வெளியான விஷயத்தில் இன்னும் போலீஸார் திணறிக் கொண்டு இருக்கின்றனர். தர்மபுரியில்தான் கேள்வித்தாள் அவுட்டானது என்று கருதப்படுவதால் இதில் இன்னும் வேகமாக நடவடிக்கை மேற்கொள்ள ஆஸ்ராகர்க்தான் சரியான நபர் என்று நினைப்பதால்தான் இந்த மாற்றம்'' என்கிறார்கள்.


தனக்கு மாற்றல் உத்தரவு வந்த கடந்த சனிக்கிழமை மாலை, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதிகளில் செயல்பட்டு வந்த பெரிய செங்கல் சூளைகளில் அதிரடி நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தார் ஆஸ்ரா. 'விளைநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக செம்மண் எடுத்து செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது.


 சேம்பர்களில் பலரைக் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்குகின்றனர்’ என்று அவருக்கு வந்த புகாரின் அடிப்படையில் அதிரடி ஆய்வு நடந்தது. முறைகேடாக இயங்கி வந்த நான்கு சேம்பர்களைக் கண்டுபிடித்து, ஆறு பேரை உடனடியாக கைது செய்தார். நான்கு சேம்பரில் ஒன்று... நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக நின்ற ஒருவருடையது. மற்றவை ம.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்களுக்குச் சொந்தமானது.



செங்கல் சூளைக்காக செம்மண் எடுத்ததில் பல நூறு கோடி அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு கனிமவளத் துறை அதிகாரிகள் சிலர் துணை போய் உள்ளனர் என்பதையும் கண்டுபிடித்தார். அடுத்தகட்ட நடவடிக்கைக்குப் போகும் முன் ஆஸ்ரா கர்க்குக்கு மாற்றல் உத்தரவு வந்ததால், அனைவரும் இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.



இந்தச் செம்மண் விவகாரம் தொடர்பாக ஆஸ்ரா கர்க்கிடம் பேசினோம். ''முறைகேடுகளில் ஈடுபட்ட நான்கு சேம்பரைக் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட நபர்களைக் கைதுசெய்து இருக்கிறோம். தலைமறைவாக உள்ளவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்'' என்றார். தர்மபுரிக்கு மாற்றம் செய்துள்ளதைப் பற்றி கேட்டபோது சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தார்.



திருப்பூரைத் தொடர்ந்து தர்மபுரி களைகட்டப் போகிறது!



கழுகார் பதில்கள்!

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.


 'நிலா மனிதன்’ நீல் ஆர்ம்ஸ்ட்ராங் பற்றி...? 


இந்த நூற்றாண்டின் இணையில்லா மனிதர் ஆர்ம்ஸ்ட்ராங். உயிர் வாழ்வதற்கு அவசியமான எதுவும் இல்லாத ஓர் இடத்தில் காலடி வைத்துத் திரும்பிய முதல்மனிதர் அவர்!


அவர் மறைந்த இந்த நேரத்தில் நினைக்கத்தக்க இன்னும் இரண்டு பேர் இருக்கின்றனர். அவர்கள், ஆர்ம்ஸ்ட்ராங் உடன் சென்ற ஆல்ட்ரின், காலின்ஸ் ஆகியோர். மூவரும்தான் நிலவுக்குச் சென்றவர்கள். முதலில் கால் வைத்தவர் ஆர்ம்ஸ்ட்ராங். இரண்டாவது காலடி வைத்தவர் ஆல்ட்ரின். இவர்களோடு வந்து ராக்கெட்டில் இருந்தவர் காலின்ஸ். மூவருக்குமே சரி மரியாதையை நம்மனதில் இருத்துவதுதான் முறையானதாக இருக்கும்!


 கலைஞர்ப்ரியா, வேலூர்(நாமக்கல்).


அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்துக்கு சசிகலா போகவில்லையே? 


ஒரே வீட்டுக்குள் இருந்தாலும் கூப்பிடவில்​லையே!


 அர்ஜுனன்.ஜி., திருப்பூர்.


6.72 லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதித் தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனரே? 



கேள்வித்தாள் மிகமிகக் கடினம் என்பது பெரும்பாலானவர்களின் பொதுவான கருத்து. ஆனால், தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் தரமும் இதில் இருந்து தெரிகிறது. பணம் காய்க்கும் மரங்களில் ஒன்றான இந்த பயிற்சிக் கல்லூரிகளில் இருந்து பட்டம் பெற்று வரக்கூடியவர்கள் எத்தகைய தகுதி உடையவர்கள் என்பது இந்தத் தேர்வு முடிவின் மூலமாகத் தெரிந்து விட்டது. இனிமேலாவது, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுப் பதில் தொடங்கி, எண்ணிக்கையை அதிகப்படுத்துவது வரை அரசு கறாராக இருந்தால் மட்டுமே இந்த 'புத்திசாலி’ வாத் தியார்களிடம் இருந்து  பிள்ளைகள் தப்ப முடியும்!



ஆசிரியர் தேர்வில் தகுதிக்கும் திறமைக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்!


 பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.



இணைச் செயலாளர் அந்தஸ்துக்கு மேலான 129 அதிகாரிகளுக்கு எதிராக, 97-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகளை கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி சொல்லி இருக்கிறாரே? 


பதிவுதானே செய்திருக்கிறார்கள். பயமில்லை! சி.பி.ஐ. இதற்கான தண்டனையை வாங்கித் தருவதற்குள் அவர்கள் எல்லாம் ஓய்வு பெற்று நிம்மதியாகப் போய்விடுவார்கள்!



 எஸ்.ஸ்ரீதர், கொடுங்கையூர்.


ஒன்றுமே புரியவில்லை... இத்தனை காலமும் பதுக்கி, மறைத்து, அரசாங்கத்தையும் அதிகாரிகளையும் ஏமாற்றிச் செய்யக்கூடிய காரியமா இந்தக் கிரானைட் முறைகேடு...? 


பதுக்கவும் இல்லை. மறைக்கவும் இல்லை. பட்டப்பகலில் அதி​காரிகள் துணையோடு அமைச்சர்​களின் ஆசீர்வாதத்​தோடுதான் இந்தக் கொடுமை கடந்த 15 ஆண்டுகளாக நடந்துள்ளது. இதை ஊடகங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டேதான் இருந்தன. 


 ஜூ.வி-யைப் பொறுத்தவரை இந்த ஆட்சி மறுபடி பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் 12 முறைக்கு மேல் எழுதி இருக்கிறோம். எல்லாமே கைமீறிப் போன பிறகுதான் நடவடிக்கை வருகிறது. சரி... இப்போதாவது உஷாரானார்களே என்று சந்தோஷப்படுவோம். கடைசி வரை, கறாராக இருக்கிறார்களா என்பதையும் கண்காணிப்போம்.


 எஸ்.ஜெயகாந்தன், புன்செய்புளியம்பட்டி.


தி.மு.க-வில் 'சகோதர யுத்தம்’ தணிந்துள்ளதா? 


ஆம்! தணிந்துள்ளது. ஆனால், தந்தை - மகன் யுத்தம்’ சூடுபிடித்து விட்டது. எந்த இடத்தை நோக்கி ஸ்டாலினை வளர்த்து விட்டாரோ... அந்த இடத்தை தரத் தயங்குகிறார் கருணாநிதி. இது, வெளியே தெரியவேண்டாம் என்பதற்காகவே 'சகோதர யுத்தம்’ திட்டமிட்டு உருவாக்கப்படுகிறதோ என்றுகூட சந்தேகமாக இருக்கிறது!



 சோ.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.


எத்தகைய கருத்தை மக்களுக்கு இன்றைய அரசியல்வாதிகள் போதிக்கிறார்கள்? 


'எங்களில் யாரும் யோக்கியமில்லை’ என்பதைத்தான்!


ரேவதிப்ரியன், ஈரோடு-1.


தீண்டாமையை ஒழிப்பதில் சிறப்பாகச் செயல்படும் கிராமங்களுக்குத் தலா 10  லட்சம் தரப்போவதாக முதல்வர் சொல்லி இருப்பது நடைமுறைக்கு ஏற்ற நல்ல முடிவுதானே..? 


நிச்சயமாக! ஆனால், தீண்டாமை ஒழிப்பின் உண்மையான அர்த்தம் என்ன என்பதைப் புரிந்து இந்தப் பரிசுகள் தரப்பட வேண்டும். கோயில்களில் சமபந்தி போஜனமோ, நடுவில் போலீஸ்காரரை நிறுத்திக் கொண்டு இரண்டு பக்கமும் வெவ்வெறு சாதிக்காரர்களை நிற்க வைத்து டீ குடிப்பதோ மட்டுமே தீண்டாமையை ஒழித்து விடாது.


ஊர்க் கிணற்றை பொதுவாக்குவது, எந்தத் தெருவிலும் யாரும் நடக்கும் உரிமையைக் கொடுப்பது, கோயில் களுக்குள் தயக்கம் இல்லாமல் அனைவரும் சென்று வணங்குவது, ஊர் விழாக்களில் சமமாகப்  பங்கேற்பது, பள்ளிக்கூடங்களில் பாகுபாடு இன்மை, கலப்புத் திருமணங்கள்... ஆகிய செயல்பாடுகளை அமல்படுத்தத் தொடங்கும் கிராமங்களுக்கு ஓராண்டு கவனித்துப் பார்த்த பிறகு விருதும் நிதியும் தரப்பட வேண்டும்.



இப்படிப் பரிசு வாங்கிய கிராமத்தில், அதிகாரத்தில் இருப்பவர்களின் நேரடி அல்லது மறைமுக ஆதரவோடு மறுபடியும் தீண்டா மைச் செயல்பாடு எப்போது நடந்தாலும்... அளித்த நிதியைவிட இரண்டு மடங்கு பணத்தை அரசாங்கத்துக்கு அபராதமாகச் செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிப்பது அதைவிட முக்கியம். கலப்புத் திருமணம் செய்து கொண்டதற்காக விருது வாங்கியவர்கள், பிறந்த குழந்தையின் சான்றிதழில் எந்தச் சாதியைப் போடுவது என்று சண்டை போடுவது எந்த அளவுக்கு அபத்தமோ... அதுபோன்ற விளைவுகள் இதிலும் வராமல் பார்த்துக்​கொள்ள வேண்டும்.



 செ.அ.ஷாதிலி, கோனுழாம்பள்ளம்.


இப்போதைய மாநில அரசின் நிர்வாகம் பற்றி...? 


நிர்வாகத்தில் தேக்கம் இருப்பது உண்மை. எல்லா விஷயங்களையும் முதல்வரே செய்ய முடியாது. முதல்வர் இடத்தில் இருந்து யோசித்துச் செயல்படும் அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் ஒரு சிலராவது வேண்​டும். ஆனால், பலரும் முதல்வர் 'கேட்டால் மட்டும்’ செயல்படு​கிறார்கள். தானே படிக்கும் குழந்தைக்கும், 'அம்மா’ பார்க்கும்போது பயபக்தி​யாகப் படிக்கும் குழந்தைக்கும் உள்ள வித் தியாசம்​தான் இது!


 அ.குணசேகரன், புவனகிரி.



ஆ.ராசா, இன்று பிரதமரைச் சந்தித்தால் என்ன கேட்பார்? 


'மாட்டிக்கினீயா!’



நன்றி - ஜூ வி 

Sunday, September 02, 2012

கும்பகோணம் -கோயில் சொத்துக்கள் கோடிக்கணக்கில் மோசடி

ஒப்பிலியப்பன் நகை அரோகரா!


காரணமானவர்களைக் காப்பாற்றுகிறார்களா?

பலே திருட்டு அம்பலம்


ஒரு கோயில் கொள்ளை மெதுவாக மறக்கப்பட்டது. இப்​போது மறைக்கப்படும் கொடுமை நடப்​பதாகச் செய்திகள் வருகின்றன!


108 வைணவத் திருத்தலங்களில் புகழ்பெற்றது கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயில். தொன்​மையான இந்தக் கோயில் நகைகளைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே, மோசடி செய்திருப்பதுதான் திடுக்.



கடந்த 2008-ம் ஆண்டு பெருமாள் மற்றும் தாயாருக்கு இருப்பதுபோலவே மார்க்கண்டேயருக்கும் தங்கக் கவசம் செய்ய முடிவெடுத்தார்கள். அதற்காக கோயில் இருப்பில் இருந்த நகைகளோடு பாரம்பரியம் மிக்க அரிய வகையான தங்க, வைர நகைகளையும் சேர்த்து உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றியதாகக் கணக்குக் காட்டினார்கள். 


அதில் தில்லுமுல்லு நடந்திருப்​பதாக அப்போது புகார் கிளம்பியது. விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கோயில் செயல் அலுவலர் விஜயகுமார், நகைகள் சரிபார்ப்புப் பிரிவின் மயிலாடுதுறை துணை ஆணையர் இளம்பரிதி, திருப் பணிகள் பிரிவின் சென்னை இணை ஆணையர் திருமதி ஹரிப்பிரியா ஆகியோர் மீது இப்போது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.



எப்படி ஊழல் நடந்தது என்று அறநிலையத் துறை அதிகாரிகளிடம் பேசினோம். ''மார்க்கண்டேயருக்குத் தங்கக்கவசம் செய்ய அறங்காவலர் குழு முடிவு செய்ததும், அதற்காகக் கோயிலில் இருக்கும் தேவை இல்லாத நகைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று திட்டமிட்டனர். அதில்தான் தங்கள் கைவரி சையைக் காட்டிவிட்டனர்.

 தேவைஇல்லாத நகைகளோடு பெருமாளின் நித்யபடிக்கு என்று வைத்திருந்த அரிய, பழைமையான நகைகளையும் அதில் சேர்த்துவிட்டனர். இரட்டைவடச் சங்கிலி, பொன்சங்கிலி, ஒற்றைவட வரிமணிமாலை, திருமாங்கல்யம் குண்டு, சரடு, பொன் அரசலங்கை, மாங்கா மாலை, காசுமாலை, செண்பகப் பூ மாலை, பொன்லட்சுமி டாலர் ஆகிய மிக முக்கியமான திருவாபரணங்கள் அதில் சேர்க்கப்பட்டு வீணடிக்கப்பட்டன.



அடுத்து, அழுக்கு அரக்கு நீக்கி சுத்தம் செய்வதில் பெரும் ஊழல் செய்திருக்கிறார்கள். அதாவது, மொத்தம் உள்ள 7,191 கிராம் பொன்னை அழுக்கு அரக்கு நீக்கிய பின் 6,191 கிராம்தான் இருந்ததாக ஆவணப்படுத்தி உள்ளார்கள். ஒரு கிலோ தங்கம் இழப்பாகக் காட்டி இருக்கிறார்கள். அடுத்து, நகைகளில் இருந்து எடுக்கப்பட்ட கற்களிலும் மோசடி செய்தனர். அந்த நகைகளில் இருந்து எடுக்கப்பட்ட முத்து, வைரம் போன்ற விலை மதிப்புள்ள 1,895 கற்களையும் தரவாரி​யாகப் பிரித்து வகைப்படுத்தாமல் மொத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

 அதில் விலை மதிப்புள்ள கற்கள் அனைத்தும் மாற்றப்பட்டு அதற்குப் பதிலாக போலியான தரம் குறைந்த கற்களை வைத்திருப்பதாக சந்தேகப்படுகிறோம். அடுத்து உருக்குவதற்​காக மும்பை எடுத்துச் சென்றதாக பதிவேட்டில் குறிப்பிடப்பட்டு இருப்பது 7,251 கிராம் பொன். ஆனால் எடுத்துச்சென்றதோ 7,295 கிராம். ஆக அதில் 44 கிராம் தங்கத்தை மோசடி செய்திருக்கிறார்கள்.



அதேபோன்று ஆணையருக்கு அனுப்பி வைத்த நகைகள் பட்டியலில் இல்லாத 13.300 கிராம் எடையுள்ள வைரக்கற்கள் பதித்த பதக்கத்தையும் எடுத்துச் சென்று உருக்கியதாகக் கணக்குக் காட்டி இருக்​கிறார்கள். அதற்கான அனுமதியைப் பின் தேதியிட்டு வாங்கி இருக்கிறார்கள். இவை எல்லாமே மயிலாடுதுறை நகைகள் சரிபார்ப்புத் துணை ஆணையர் இளம்பரிதிக்கும் சென்னை இணை ஆணையர் (திருப்பணி) ஹரிப்பிரியாவுக்கும் தெரிந்தே நடந்திருக்கிறது. அதனால் மூவர் மீதும் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்று விவரித்தார்கள் அறநிலையத் துறை அதிகாரிகள்.



செயல் அலுவலர் விஜயகுமார் மீது மொத்தம் 16 வகை குற்றச்சாட்டுகளும், துணை ஆணையர் இளம்பரிதி மீது 8 குற்றச்சாட்டுகளும், இணை ஆணையர் ஹரிப்பிரியா மீது 11 குற்றச்சாட்டுகளும், சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அலுவலகம் பதிவு செய்துள்ளது. 2008-ல் நடந்த இந்த மோசடி குறித்து 2011 மே மாதம் தான் விஷயம் தெரிந்து விசாரணை நடைபெற்றது. விஜயகுமார் மாறுதல் செய்யப்பட்டு செந்தில்குமார் என்பவர் அதிகாரியாக வந்த பிறகுதான், இதைக் கண்டுபிடித்து உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்து இருக்கிறார். அவர் சொல்லும் புகாரில் உண்மை இருக்கிறதா என்பதை ஜே.சி.கல்யாணி என்ற நகை சரிபார்ப்பு அதிகாரியை அனுப்பி உறுதிசெய்துகொண்ட பின்னர்தான் நடவடிக்கைகள் தொடங்கின.



இத்தகைய சூழ்நிலையில் நடவடிக்கை எடுக்கப்​பட்​டவர்களை மீண்டும் பணியில் சேர்ப்பதற்கான காரியத்தை சிலர் தொடங்கி இருக்கிறார்களாம். இது சம்பந்தமாக இந்து சமய அறநிலையத் துறைச் செயலாளர் ராஜாராமை சந்தித்து நாம் விளக்கம் கேட்​டோம். 'இதுபற்றி முழுமையாகத் தெரிந்தவர் இணை கமிஷனர் தனபால்தான். அவரிடம் கேளுங்கள்’ என்றார். தனபாலிடம் இதுதொடர்பாகக் கேட்டுக் காத் திருந்தோம். இரண்டு வாரங்களாக எந்தப் பதிலும் இல்லை.



கோடிக்கணக்கான மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் எத்தகைய அலட்சிய மனிதர்​களிடம் மாட்டிக்கொண்டு இருக்கிறது என் பதைப் பாருங்கள்!




நன்றி - ஜூ வி

Saturday, September 01, 2012

ஜெ முன் ரஜினியின் சர்ச்சைக்குரிய மேடைப்பேச்சு

கலைஞரின் புகழ்!''

ஜெயலலிதா முகத்துக்கு நேரே கருணா நிதியைப் புகழ்ந்து பேசி, பரபரப்பு அரசியலுக்கு விதை போட்டிருக்கிறார் ரஜினிகாந்த்!


மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு விழா மற்றும் ஜெயா டி.வி-யின் 14-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி கடந்த 29-ம் தேதி சென்னையில் நடந்தது. விழா அழைப்பிதழில் ஜெயலலிதா பெயரைத்தவிர வேறு பெயர்கள் இல்லை.


 ரஜினி, கமல் மேடையேறுவதைக்கூட கடைசிவரை சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்தனர். ஜெயலலிதா வருவதற்கு முன்பே ரஜினி, கமல், கே.பாலசந்தர், இளையராஜா, ஏவி.எம்.சரவணன் ஆகியோர் மேடையில் அமர வைக்கப்பட்டனர். ஜெயலலி தாவைச் சேர்த்து எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக் கைகள். எம்.எஸ்.வி-க்கும் ராமமூர்த்திக்கும் 'திரை இசை சக்கரவர்த்தி’ விருதை அளித்து பொற்கிழிகள் வழங்கி கார்களையும் பரிசளித்தார் ஜெயலலிதா.


இதில் ரஜினி பேச்சுதான் ஹைலைட்!



''ஜெயா டி.வி-யில் சோ எழுதிய 'எங்கே பிராமணன்’ நிகழ்ச்சியை ரொம்ப ரசித்துப் பார்த் தேன். திடீரென்று அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு விட்டது. என்ன காரணம் என்று விசாரித்தபோது சோ அதை தொடராமல் இருப்பது தெரியவர... அவரிடமே கேட்டேன். 'முதல்வர் ஜெயலலிதாவும் இதையே என்னிடம் கேட்டார். தொடர முடியாத காரணத்தை அவரிடம் சொல்லிவிட்டேன்’ என்றார். இதில் இருந்து தெரிவது என்னவென்றால், முதல்வர் சொல்லியும் கேட்காத ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் சோ மட்டும்தான்'' என்று ரஜினி சொன்னபோது எதிரே உட்கார்ந்திருந்தார் சோ. ரஜினியைப் பார்த்து கையை நீட்டிவிட்டு, அப்படியே சீரியஸாக தலையில் வைத்துக் கொண்டார் சோ. இதை அங்கே இருந்த திரையில் காட்ட... கூட்டத்தினர் ரசித்துச் சிரித்தனர்.






தொடர்ந்து பேசிய ரஜினி, ''ஒவ்வொரு மனிதனும் இரண்டு முறை இறக்கிறான். பேரும் புகழும் பெற்றவர்கள் அதை இழக்கும்போது அவர்களுக்கு ஒரு முறை மரணம் நேரும். இரண்டாவது, உடலில் இருந்து உயிர் பிரியும்போது ஏற்படும். சாகாவரம் பெற்றவர்கள் இறந்தாலும் அவர்களின் புகழ் மறையாது. தமிழகத்தில் பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்றவர்கள் மறைந்தாலும் அவர்கள் புகழ் மறையவில்லை. அந்த வகையில் இப்போது அரசியலில் இருக்கும்....'' என்று லேசாக நிறுத்திய ரஜினி...



''என் ஆருயிர் நண்பர் கலைஞர்'' என்று சொல்லி அதிர வைத்தார். மேடையில் இருந்த முதல்வரின் முகம் மாற ஆரம்பித்தது. தொடர்ந்து பேசிய ரஜினி, அடுத்ததாக,




''புரட்சித் தலைவி போன்றவர்களின் புகழ் என் றும் அழியாது'' என்றும் சொல்லி வைத்தார். எப்போதும் ரஜினியின் வாய்ஸ் சர்ச்சைக் குரியதாகவே ஆகும். முன்பு, ஜெயலலிதாவை எதிர்த்து வாய்ஸ் வந்தது. இப்போது, ஜெயலலிதா முன்பே கருணாநிதியை புகழ்ந்து!



  - எம். பரக்கத் அலி

''கருணாநிதிக்கு என்ன புகழ் எஞ்சி நிற்கிறது?''


''ஜெயலலிதாவை  மேடையில் வைத்துக் கொண்டு  கருணாநிதியைப் புகழ்ந்தாரே ரஜினி?'' என்று, அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வான பழ.கருப்பையாவிடம் கேட்டோம். ''அம்மா முன்னிலையில் ரஜினி பேசியதை நானும் கேட்டேன். 'புகழ் பெற்றவர்கள் இருமுறை சாகிறார்கள். ஒன்று உடலை விட்டு உயிர் நீங்கும் போது. இன்னொரு முறை புகழ்நிலையில் இருந்து சரிவுறும் போது.’ இப்படிச் சொல்லிக் கொண்டு வந்தவர் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் என்று வரிசைப்படுத்தி, இவர்களுக்குகெல்லாம் ஒருமுறைதான் மரணம் ஏற்பட்டதென்றார்.



அவர்கள் வாழும் போது புகழை இழந்து மனஉளைச்சலுக்கு ஆகாதவர்கள் என்பதால், வாழும்போது சாகாதவர்கள் என்பது அதன் பொருள். இந்த வரிசையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் சேர்த்தார்.



ரஜினிகாந்த்தின் ஆராய்ச்சி சரியானதுதானா? தமிழுக்காகவும் தமிழனத்துக்காகவும் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின் தலைவராக இருந்து கொண்டு, மைய ஆட்சியிலும், அங்கம் வகித்துக் கொண்டு, சோனியா காந்தியின் சொந்த நோக்கத்துக்குத் துணைபோய், கசாப்புக்கடைக்காரன் ராஜபக்ஷே ஈழத்தை சுடுகாடாக்கும் வேளையில் தமிழ்நாடு பொங்கி எழுந்து விடாமல் பல நாடகங்களை ஆடி, இன அழிவுக்குக் காரணமான கருணாநிதிக்கு என்ன புகழ் எஞ்சி நிற்கிறது?



காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலிருந்து தி.மு.க-வை விலக்கிக் கொண்டிருந்தால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்திருக்கும். போர் நின்றிருக்கும். ஈழத் தமிழினம் காக்கப்பட்டிருக்கும். அந்த ஒன்றைக் கருணாநிதி செய்திருந்தால் அரசியல் ரீதியான திறனாய்வுகள் அப்போதும் இருக்கும் என்றாலும் 'இனம் அழியக் காரணமானவர்’ என்னும் 'வரலாற்று இழிவுக்கு’ உள்ளாகி இருக்க மாட்டார்.



 ரஜினிகாந்த் சொல்லிய வாழும் போதே அடையும் இன்னொரு மரணம் இதுவாக இருக்கலாம். ஒரு கருதுகோளை முன்வைத்து அதைத் திறம்பட வளர்த்து முடிக்க ரஜினிகாந்த் பழக்கப்பட்டிருக்கவில்லை. உண்மையிலேயே ரஜினி நல்லவர். கருணாநிதி 'என் பெயரை ஏன் விட்டு விட்டாய்’ என்று கேட்டு வருத்தப்பட்டு விடுவாரோ என்னும் தாட்சண்யம் ரஜினியை அவ்வாறு சொல்ல வைத்து விட்டது!''



கழுகார் பதில்கள்

மா.சந்திரசேகர், மேட்டு மகாதானபுரம்.


ஜெயலலிதா, மாயாவதி, மம்தா போன்றவர்களைப் பார்க்கும்போது பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணமே அடிபட்டுப் போய்விடுகிறதே? 


  அதிகார போதை அனைவரையுமே மாற்றி விடுகிறது. இதில் ஆண், பெண் பேதம் இல்லை. அரசியலில் இருக்கும் ஆண்கள் எல்லாம் சரி யானவர்களா என்ன?


தேசிய இயக்கத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி யும், திராவிட இயக்கத்தில் மூவலூர் ராமாமிர்தமும், கம்யூனிஸ இயக்கத்தில் ஜானகி அம்மாளும் இருந்த தமிழ்நாட்டு அரசியல்தான் இது. அம்புஜம் அம்மாளின் தியாகம் இங்கு மறக்கப்பட்ட விஷயங்களில் ஒன்று. எனவே, அதிகார அரசியலில் ஆண், பெண் பேதம் பார்க்கக் கூடாது!


 போடி எஸ்.சையது முகமது, சென்னை-93.


  '2ஜி உள்ளிட்ட ஊழல்களுக்குப் பிரதமர் அரசியல் ரீதியாகவும் மறைமுகமாகவும் காரணமாக இருந்தார்’ என்று பி.ஜே.பி. குற்றம் சாட்டுவதில் உண்மை உள்ளதா? 


  நிச்சயமாக! எந்த முறைகேட்டிலும் பிரதமருக்குப் பங்கு போனது என்று இதுவரை மன்மோகனின் அரசியல் எதிரிகள்கூடச் சொல்லவில்லை. ஆனால், அவரது மௌனம்தான் இங்கே விமர்சிக்கப்படுகிறது. தானே ஒரு காரியத்தைச் செய்வது அல்லது அந்தக் காரியத்தை யாரோ செய்யும்போது கண்டும் காணாமல் இருப்பது என இரண்டுமே தவறுதான். இரண்டாவது தவறைத்தான் இரண்டு முறை பிரதமராக இருக்கும் போதும்  மன்மோகன் அதிகமாகச் செய்திருக்கிறார்.


 பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.


  நிலக்கரி ஊழலை அம்பலப்படுத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியை, மத்திய மந்திரிகள் விமர்சிப்பது உரிமை மீறல்தானே? 



  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளில் ஒன்று தலை மைக் கணக்குத் தணிக்கை. அதை, அரசியல் ரீதியாக விமர்சிப்பது, உரிமை மீறல் மட்டுமல்ல, அந்த அதிகார அமைப்பை அரசியல் ரீதியாக அச்சுறுத்துவது ஆகும்.


ஆட்சியில் யார் இருந்தாலும், அரசாங்கப் பணம் முறையாகச் செலவு செய்யப்பட்டு உள்ளதா, விதிமுறைகள் ஒழுங்காகப் பின்பற்றப்பட்டு உள்ளனவா என்பதைக் கண்காணிப்பவர்கள் அவர்கள். பாரதிய ஜனதாவின் எத்தனையோ நடை முறைகளை இவர்கள் கேள்வி கேட்டவர்கள்தான். எனவே, அந்த அமைப்பை காங்கிரஸ் அமைச்சர்கள் கொச்சைப்படுத்துவது, அரசியல் அமைப்பின் மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை யின்மையைத்தான் காட்டுகிறது!


 இரா.தோணி, தூத்துக்குடி.


பரவாயில்லையே... ஒழுங்கு நடவடிக்கைக்காக நோட்டீஸ்கூட அனுப்புகிறதே காங்கிரஸ்? 


  விவகாரம் ஜெயந்தி நடராஜன் சம்பந்தப்பட்டது என்பதால் அனுப்பு கிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸில் எத்தனையோ ஒழுங்குமீறல்கள் தினமும் நடக்கின்றன. அதையெல்லாம் டெல்லி மேலிடம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. டெல்லியில் செல்வாக்கான ஜெயந்திக்கு ஒரு பிரச்னை என்றதும் நோட்டீஸ் அனுப்புகிறார்கள். மற்றபடி, 'ஒரு கண்ணில் வெண்ணெய்... இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு’ என்பதுதான் எப்போதும் டெல்லித் தலைமையின் ஃபார்முலா!


பொன்விழி, அன்னூர்.


சுவிஸ் வங்கியில் பணம் போட என்ன தகுதி வேண்டும்? 


  சுயசம்பாத்தியமாக இருக்கக் கூடாது!


 வி.ஜி.சத்தியநாராயணன், நங்கநல்லூர்.


  'நிலக்கரி ஒதுக்கீட்டில் அரசுக்கு எவ்விதமான நஷ்டமும் இல்லை’ என்று ப.சிதம்பரம் கூறிவிட்டாரே? 


  அப்படிச் சொல்லவில்லை என்றும் சிதம்பரம் சொல்லி விட்டாரே. இப்படித்தான் சில நாட்களுக்கு முன், விலைவாசி உயர்வு பற்றி ஒரு கருத்தைச் சொன்னார். அது சர்ச்சை ஆனதும் அப்படிச் சொல்லவில்லை என்றார். பொதுவாக, எந்தச் செய்தியைச் சொன்னாலும் அழுத்தம் திருத்தமாக வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசக்கூடியவர் சிதம்பரம். அவரது வார்த்தைகளை பத்திரிகைக்காரர்கள் மாற்றி எழுதி விட்டார்கள் என்று சொல்ல முடியாது.


க.ராமராஜ், கோவில்பட்டி.


முந்தைய பி.ஜே.பி. ஆட்சிக்கும் இன்றைய காங்கிரஸ் ஆட்சிக்கும் நாளைய பி.ஜே.பி. ஆட்சிக்கும் இடையே இந்தியாவின் முன்னேற்றம்..? 


நாளை பி.ஜே.பி. ஆட்சி என்பது உங்களது எதிர்பார்ப்பு. அதுபற்றி இப்போது கருத்துச் சொல்ல முடியாது!


முந்தைய பி.ஜே.பி. ஆட்சியில் ஊழல் முறைகேடுகள் ஒரு சில துறைகளில் மட்டும்தான் இருந்தன. ஆனால் இன்று, பெரும்பாலான துறைகளுக்கும் பரவி விட்டது. லட்சம், கோடி என்று பரிணாமம் அடைந் துள்ளது. விலைவாசியும் எகிறிவிட்டது. அதைவிட மிகமுக்கியமான வேறுபாடு, பொதுமக்கள் மீது இன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு இருக்கும் அலட்சியம், பாரதிய ஜனதா தலைவர்களுக்கு இருக்கவில்லை. அவர்கள் மக்களைப் பார்த்துப் பயந்தார்கள். அந்தப் பயம், இன்றைய மத்திய மந்திரிகளுக்கு இல்லை!


 அ.ராஜா ரஹ்மான், கம்பம்.


  மறைந்த பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனிடம் தங்களைக் கவர்ந்த அம்சம் எது?
  எதையும் சுவாரஸ்யமாய்ச் சொல்வது. நேரடிப் படைப்பா அல்லது மொழிபெயர்ப்பா என்று தெரியாதது மாதிரி இயல்பாக இருக்கும் அவரது மொழிபெயர்ப்புகள். 'பட்டாம்பூச்சி’ அவரது மொழிபெயர்ப்புகளில் சிறந்த ஒன்று. 'நான் கிருஷ்ணதேவராயர்’ அவரது எழுத்தின் மகுடம். கிருஷ்ணதேவராயரே தனது சொந்தக் கதையைச் சொல்வதாக அது அமைந்திருக்கும். தொழிலுக்காகவோ, சம்பளத்துக்காகவோ இல்லாமல் எழுத்துக்காகவே எழுதியவர்!


 இ.சிகாமணி, அத்தனூர்.


  பயப்படாமல் சொல்லுங்கள்... அழகிரி, ஸ்டாலின் ஆகிய இருவரில் யார் திறமைசாலி? 


  டெஸ்ட் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் இருவரும். ரிசல்ட்டை அவுட் பண்ணக் கூடாது!

hared Junior Vikatan's photo.




நன்றி - ஜூ வி

Wednesday, August 22, 2012

மதுரை மக்கள் உஷார்! பூகம்ப அபாய அறிவிப்பு!

பூகம்ப அபாயத்தில் மதுரை!

கிரானைட் கொள்ளையால் வரப்போகும் வினை!
''கிரானைட் கற்களை அளவுக்கு அதிகமாக சுரண்டி எடுத்ததால், மிகவிரைவில் மதுரை சுற்று​வட்டாரம் பூகம்பத்தில் சிக்கி அழிய இருக்கிறது'' என்று பகீர் கிளப்புகிறார்கள் புவியியல் ஆய்வாளர்கள்! 


சமீபத்தில், அந்தமான் நிகோபர் தீவுகளில் எரிமலை ஒன்று வெடித்து ஏகப்பட்ட நாசத்தைச் சந்தித்தது. அதற்குக் காரணம்... அந்தமான் தீவுகளில் முறைகேடாகச் சுரண்டப்பட்ட குவாரிகளால் பூமியின் உட்பகுதி பாதிக்கப்பட்டதுதான் என்று புவியியல் அறிஞர்கள் சுட்டிக்காட்ட... விழித்துக்கொண்டது சுப்ரீம் கோர்ட்.



 'தனி மனித சுயலாப நோக்கத்துக்காக இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதன் விளை​வாக, நிலச்சரிவு, பூகம்பம், எரிமலைக் குழம்பு என்று ஏகப்பட்ட இயற்கைச் சீற்றங்களை ஏற்படுத்தி விட்டார்கள்’ என்று சுட்டிக்காட்டி கிரானைட் மாஃபியா அதிபர்கள் மற்றும் குற்றவாளிகள் 13 பேருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து ​விட்டது. வெடிபொருட்களைப் பயன்படுத்தி மலைகளை உடைப்பதையும், கனரக ஆயுதங்​கள்கொண்டு மண், கிரானைட் போன்ற இயற்கை வளங்களைக் கொள்ளை அடிப்பதையும் தடை செய்துள்ளது.



அந்தமான் விவகாரத்தைச் சுட்டிக்காட்டி பேசும் புவியியல் ஆய்வாளரான அரியலூர் சந்திரசேகரன், ''உலகத்தில் மற்ற நாடுகள் எல்லாம் மலைகளைக் காப்பாற்றின. ஆனால், இந்தியா மட்டும்தான் அதிக அளவில் இரும்பு, தாதுப்பொருட்களை வெட்டி எடுத்து இயற்கையை சுரண்டிவிட்டது. மணலும் கிரானைட்டும் ஒரே இனம். அவற்றை அதிக அளவில் எடுப்பதால் நடக்கும் புவியியல் மாற்றத்தால் நிலச்சரிவு, நீரியல் மாற்றம், நிலநடுக்கம் போன்றவை ஏற்படும்.



மணலும் கிரானைட்டும் எடுக்கும் உரிமை தாசில்தார்கள் கைகளில் போய்ச்சேர்ந்ததால், 1980-க்குப் பிறகு தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் இயற்கை வளங்கள் பாதிக்கப்பட்டன. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் ஏற்படும் வண்ணம் இவற்றுக்கு வரைமுறை நிர்ணயம் செய்ய வேண்டும். புவியியல் மற்றும் சுரங்கவியல் வல்லுனர்களை நியமித்து, தமிழகம் முழுவதும் கண்காணிக்க வேண்டும். புவியியல் மற்றும் கனிமவளத் துறையில் ஒன்றிரண்டு நபர்கள் மட்டும் இருந்தால் என்ன செய்வது?


 அதிக அளவில் முறைகேடுகள் நடப்பதை தவிர்க்க முடியாத சிறிய துறையாக இருக்கிறது. முதலில் அதைச் சரிசெய்ய வேண்டும். சுரங்கச் சட்ட விதிகள், சிறு கனிம விதிகள் சட்டம் இனிமேலாவது கடுமையாகக் கையாளப்பட வேண்டும். அரசின் கவனம் தவறியதால் இன்று தமிழகத்தில் கனிமவளம் பாதிக்கப்பட்டு, மழைவரும் பருவங்களும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால், இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா மிகப் பெரிய பேரழிவுகளைச் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது'' என்று எச்சரித்தார்.  


மதுரையைச் சுற்றி பூகம்பம் ஏற்பட எந்த அளவு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறை தலைவரான டாக்டர் அருணாசலத்திடம் கேட்டோம்.



''பூகம்பம், எரிமலை, நிலநடுக்கம் நடக்கும் முறைகள் மெதுவாக நடந்துகொண்டு இருக்கிறது. இயற்கையைச் சுரண்டுவதன் மூலம் அவற்றை வேகமாகத் தூண்டி இருக்கிறோம். மதுரைப் பகுதிகளில் இயங்கும் முறையற்ற குவாரிகளின் பேராசையால் மதுரையில் நீரியியல் பாதைகள் மூடிவிட்டன. இதனால் நிலத்தடி நீர்ஆதாரம் பாதிக்கப்பட்டு விட்டது. மேலூர் பகுதிகளில் அணைக்கட்டு இருந்திருந்தால், அது எப்போதோ உடைந்து இருக்கும்.



மதுரை நிலப்பகுதி கடின வகைப் பாறைகளால் ஆனது என்பதால், இப்போது பாறைகளின் வடிவ அமைப்பு மாறி இருக்கிறது. பல மில்லியன் பழை மையான இயற்கை வளங்களை வெட்டி எடுத்ததன் விளைவு... ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு என்ற இடைவெளியில் முன்பு நடந்து வந்த இயற்கைப் பேரிட மாற்றம், இன்னமும் 100 ஆண்டுகளில் நடக்க வாய்ப்பு இருக்கிறது. மதுரைப் பகுதியில் மிகப்பெரிய அளவில் கிரானைட் தோண்டியதன் விளைவு...  பூகம்பம் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது. 


இதுபோன்ற அச்சம் கர்நாடக மாநிலத்துக்கும் ஏற்பட்டுள்ளது. குதிரை முக் நேஷனல் பார்க்கில் இப்படி இயற்கை வளங்களை சுரண்டியதன் விளைவால் அங்கு எப்போதும் பூகம்பம் வர வாய்ப்பு இருக்கிறது என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.


உலக நாடுகள் இயற்கை வளங்களைக் குறைவாக எடுத்து, ஸ்டாக் முடிந்ததும்தான் மறுபடியும் எடுக்கிறார்கள். ஆனால், இந்தியா மட்டும்தான் ஓர் இயற்கை வளம் இருப்பதை கண்டறிந்தால் அது காலியாகும் வரை எடுத்து, அதன் சீற்றத்தை அனுபவிக்கத் தயாராகிறார்கள்'' என்று எச்சரித்தார்.
தூங்கா நகர மக்கள் இனி நிம்மதியாகத் தூங்க முடியாதா?

நன்றி - ஜூ வி

ஈரோடு , திருப்பூர் - பிளாட் முதலீடு மோசடி, உஷார்!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgErvq9vwBJBSEu1riHUdCLb2C2ArtAf2aKq-H3Vj1_G-Qx9zjpUUrkZglWlM8oY1A0Ph8rl4RACAu5ZBYYZaUoxA-gCoNUApk8NyTRMt2MPLHvxbw_ByOhfFeKvj8DI1tCqEBNYvJA59o/s1600/Rmwc13.JPG

5 வட்டிக்கு ஆசைப்பட்டு..!

தென் மாவட்டத்தில் பிளாட் மோசடி
முக் குளறுபடிகள் இன்னமும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்த மோசடி அம்பல​மாகி சந்தி சிரிக்கிறது. 'ஐந்து லட்சம் ரூபாயை பிளாட்டில் முதலீடு செய்தால், மாதம்தோறும் ஐந்து சதவிகிதம் வட்டி’ என்று கோடிக்கணக்கான பணத்தை ஏப்பம் விட்டு இருக்கிறார்கள்! 


சாத்தூர் அருகே வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த ராஜா,  தீப்பெட்டித் தொழிற்சாலையில் மேஸ்திரியாக இருந்தவர். சில ஆண்டுகளுக்கு முன், மருது என்பவருடன் சேர்ந்து, 'ஆர்.எம்.வெல்த் கிரியேஷன்ஸ் இந்தியா’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். சில பெரிய நிறு வனங்களுக்கு ஏஜென்ட் போல தன்னைக் காட்டிக்​கொண்டவர், ஒவ்வொரு பிரிமியம் தொகைக்கும் 5 சதவிகிதம் கமிஷன் தருவதாகச் சொன்னார்கள்.


'பிரிமியம் தொகைக்கே கமிஷனா?’ என்று வாய் பிளந்த பலரும் வரிசை கட்டி நின்று அவர்​களிடம் இன்சூரன்ஸ் பாலிசி போட்டனர். இந்த நேரத்தில், சாத்தூர் அருகே எட்டூர்வட்டத்தில் 102 ஏக்கர் பரப்பளவில் கோல்டன் சிட்டி என்ற பெயரில் பிளாட் போட்டனர். 



ஒரு பிளாட்டுக்கு 4 லட்சம் முதல் 10 லட்சம் வரை என்று விலை வைத்தனர். எந்த பிளாட்டில்... எவ்வளவு முதலீடு செய்கிறோமோ, அந்தத் தொகைக்கு ஐந்து சதவிகிதம் மாதம் தோறும் வட்டி என்றும், வட்டி வேண்டாம் என்றால் கிரையம் செய்து தரப்படும் என்றும் கவர்ச்சிகரமாக விளம் பரப்படுத்தினர்.


 உடனே, 'எனக்கு ஒண்ணு... எங்க அப்பாவுக்கு ஒண்ணு’ என்று கூட்டம் மொய்த்தது.


அதோடு ஐந்து பேரை இந்தத் திட்டத்தில் சேர்த் து விட்டால், ஓர் ஆளுக்கு 500 ரூபாய் கமிஷன் என்று, செயின் லிங்க் சிஸ்டத்தையும் அறிமுகம் செய்து இருக்கின்றனர். டீம் லீடர்களுக்கு கார், டூர் என்று ஏகப்பட்ட வசதிகளை அள்ளித்தரவே, மளமள​​வென்று ஆட்களைச் சேர்ந்தனர். இப்போது சாயம் வெளுத்துப்போகவே, கிட் டத்தட்ட 4,000 முதலீட்டாளர்கள் ஏமாந்து நிற்கிறார்கள்.



முதலீட்டாளர்கள் சார்பில் நம்மிடம் பேசிய வக்கீல் அழகர்சாமி, ''விருதுநகர், சிவகாசி, கோவில்பட்டி போன்ற இடங்களில் வட்டித் தொகைக்கு ஆசைப்பட்டு பாமர மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை பலரும் லட்சக்கணக்கில் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். புதிதாகச் சேரும் வாடிக்கையாளர்களை டூர் அழைத்துச் சென்று நன்றாகக் கவனித்துள்ளனர்.



 குற்றாலத்தில் நடந்த மீட்டிங்கில், 'நாளைய தமிழகமே...’ என்று வரவேற்பு ஃப்ளெக்ஸ் அடித்து ராஜாவை பூப்பல்லக்கில் அழைத்துவந்து, பொதுமக்களை மயக்கியுள்ளனர். பிப்ரவரி மாதம் வட்டி தருவதில் சுணக்கம் ஏற்பட்டது. அதனால் சில மாதங்களுக்கு முன், எட்டூர் அருகே உள்ள ஆர்.எம்.டபிள்யு.சி. நிறுவனத்துக்குச் சென்ற முதலீட்டாளர்கள் ரகளை செய்தனர். அப்போது, போலீஸ் முன்னிலையில் பேசிய நிறுவனத்தின் சேர்மன் ராஜாவும் எம்.டி. மருதுவும், கொஞ்ச நாட்களில் பணத்தைத் திருப்பித் தருகிறோம், என்று உறுதி அளித்தனர். 



ஆனால் அதன் பிறகு, தலைமறைவாகி ​விட்டனர். இப்போது அவர்கள் திருப்பூர், ஈரோடு, போன்ற இடங்களில், 'எஸ்.எம்.’ என்ற பெயரில் புதிய நிறுவனம் தொடங்கும் முயற்சியில் இருப்பதாகக் கேள்விப்படுகிறோம். என் மூலமாகவே இதுவரை 300 பேர் போலீஸில் புகார் செய்துள்ளனர். இவர்கள் ஏமாந்து இருப்பது மட்டுமே 20 கோடி ரூபாய். ஆனால், மொத்தமாகப் பார்த்தால் எவ்​வளவு கோடியோ? உடனே, அவர்களைக் கண்டுபிடித்து பணத்தை மீட்கவேண்டும்'' என்றார்.


முத்துலிங்காபுரம் பஞ்சாயத்துத் தலைவர் பெருமாள்​சாமி, ''இந்தத் திட்டம் பற்றிக் கேள்விப்பட்டதும், 'எப்படி சாத்தியம்?’ என்று ராஜாவிடம் கேட்டேன். 'குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி கூடுதல் விலைக்குத்தான் விற்கிறோம். மேலும், பணத்தைப் பங்குச் சந்தையில் போட்டு லாபம் பார்க்கிறோம். அந்த லாபத்தில் இருந்துதான் மாதம்தோறும் வட்டி தருகிறோம்’ என்று நம்பிக்கையுடன் சொன்னார்.




 நானும் அதைநம்பி, எனக்குத் தெரிந்தவர்களை பணம் கட்டச் சொன்னேன். பஞ்சாயத்துத் தலைவர் என்பதால் என்னை நம்பி 800 பேருக்கும் மேல் இந்தத் திட்டத்தில் சேர்ந்தனர். எங்கள் பகுதியில் மட்டும் 5 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை மோசடி செய்து விட்டனர். இப்போது எல்லோரும், பணம் கேட்டு எனக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்...'' என்றார் ஆதங்கத்துடன்.



ராஜா, மருது ஆகியோரைச் சந்தித்து விளக்கம் கேட்க முயன்றோம். நிறுவனங்கள் மூடப்பட்டு ​விட்டன. இரண்டு மாதங்களுக்கு முன்னரே வீட்​டையும் காலி செய்து விட்டார்களாம். அதனால், அவர்கள் சார்பில் பேசவும் யாரும் முன்வரவில்லை.



இந்த மோசடியை விசாரித்துவரும் பொருளாதாரக் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் பாலாஜியிடம் பேசினோம். ''கோவையில் பாசி நிறுவனம் ஏமாற்றியதுபோல் தென் மாவட்​டத்தில் ஆர்.எம்.டபிள்யு.சி. நிறு​வனத்​திடம் பலர் ஏமாந்துள்ளனர். 


 இது தொடர்பாக நிறைய புகார்கள் வந்துள்ளன. சேர்மனாக ராஜாவும், எம்.டி-யாக மருதுவும் இருந்துள்ளனர். இயக்குனர்களாக மூன்று பேர் இருந்திருக்கிறார்கள். அந்த இயக்குனர்களை நம்பித்தான் பலர் முதலீடு செய்துள்ளனர். அந்த இயக்குனர்களும், தாங்கள் ஏமாற்றப்பட்டு விட் டதாகப் புகார் செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. ராஜா, மருது இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து தேடிவருகிறோம். அவர்​களுக்​குச் சொந்தமான சொத்துக்களைக் கைப் பற்றி, முதலீட்​டாளர்களின் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்கான நடவடிக்கையை எடுப்போம்...'' என்றார்.


டெயில் பீஸ்: சாத்தூர் வெங்கடாசல​புரத்தைச் சேர்ந்தவர் கல்யாணராஜ். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவருக்கு ஊருக்குள் நல்ல மரியாதை. அதனால் இவரை இந்த நிறுவனத்தில் இயக்குனராக நியமித்து இருக்​கிறார்கள். இவரை நம்பி பலரும் லட்சக் கணக்கில் முதலீடு செய்தனர். 



பந்தல்குடி அருகே ஒரு நிலத்தைக் காட்டி பணத்தை வசூல் செய்த விவகாரத்தில் நிர்வாகத்துடன் பிரச்னை வரவே, கல்யாணராஜை இயக்குனர் பதவியில் இருந்து கழற்றி விட்டனர். உடனே, போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து, கடந்த 17-ம் தேதி ஒரு கும்பல் இவரது வீட்டுக்கு வந்து மிரட்டி இருக்கிறது. அதனால், மனஉளைச்சல்களுக்கு ஆளான கல்யாணராஜ், அன்று இரவே தோட்டத்தில், பன்றியைக் கொல்ல வைத்திருந்த விஷ மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரம், ஏரியாவில் மேலும் கொதிப்பைக் அதிகரித்துள்ளது.

நன்றி - ஜூ வி

மோசடி செய்த நிறுவனத்தின் வெப் சைட்டில் வெளி வந்த விளம்பரம்



GREAT OPPURTUNITY FOR MLM LEADERS AND NETWORKERS. RMWC

Contact Name  : subbu 09790407098   
Email ID          : [email protected]
Website: www.rmwcindia.com 


IT’S DEFINITE- 

A DAY GETS DAWN.... 

ONLY YOU CAN...



Welcome to RMWC

            Our organization has been started with appropriate recognition under the Indian Company Act, 1956. Through this business opportunity, we aspire to provide housing plots to the members of our RMWC family. Also we seek to provide Safety Policy Schemes to our members and their family. Our ultimate maxim is to create financial freedom to everyone, who adhere the business opportunity through our organization.

 


PRODUCTS

1) REAL ESTATE


2) INSURANCE








3) HOME APPLIANCE
















 OUR FUTURE VISION






Plan – I Products
Rs: 12,000(Minimum) (for one 1 id, you can get Home Appliances products worth Rs.12,000 
Or 
Plan – II Insurance Products
Insurance Products from Reliance or Bajaj worth Rs.12,000
                                                Or 
Plan-III Lands
If your investment is Rs: 50,000 to 1,00,00,000 You will get number of ids worth Rs. 12,000  you can calculate  from that amount as divided by 12,000 (ex. amount Rs. 50000/12 = 4 ids)

INCOME RETURNS

1) Rs. 500/Monthly for one id

2) Binary Income Rs. 1000 for one pair match (1:1)

3) Matrix Income in Auto filling system

4) AWARDS & REWARDS

 

1) Rs. 500/Monthly for one id, Payment will be credited to your bank account

2) Binary Income Rs. 1000 for one pair match (1:1)

 

"Successful Auto Filling System, 

1st time in World"


3) Matrix Income in Auto filling system

1level- 5Members Rs. 500 Rs. 2500
 
2level-  25Members  Rs. 400 Rs. 10,000
 
3level- 125Members  Rs. 200 Rs. 25,000
 
4level- 625Members  Rs. 200 Rs. 1,25,000
 
5level- 3125Members  Rs. 200 Rs. 6,25,000
 
6level- 15625Members  Rs. 200 Rs. 31,25,000
 
TOTAL 19530Members Rs. 1700 Rs. 39,12,500






4) AWARDS & REWARDS







GREAT OPPURTUNITY FOR MLM LEADERS AND NETWORKERS. GET BRANDED PRODUCTS ON ENTRY AT MRP LIKE OTHER SHOPS. 

RMWC INDIA(P)LTD 

SAFE & SECURE PLANS

An ISO 9001:2008 Company, 

Company Having 13,000 CRORE ASSETS

For the First Time in India, our RMWC (RM WEALTH CREATION INDIA PVT.LTD) organization introduces a innovative business plan "AUTO FILLING SYSTEM'. By joining in this AUTO FILLING SYSTEM, EVERYONE who joins RMWC gets confirmed income (Minimum Guarantee). As per the Income Chart (given below), you will get income through AUTO FILLING SYSTEM / INCOME SHARING PLAN when members join under you. 

Contact Name  : subbu 09790407098    

Email ID          : [email protected]

Website: www.rmwcindia.com