Showing posts with label காஜல் அகர்வால். Show all posts
Showing posts with label காஜல் அகர்வால். Show all posts

Saturday, July 18, 2015

மாரி - சினிமா விமர்சனம்


ஹீரோ நம்ம அழகிரி அண்ணன் மாதிரி பெரிய தாதா இல்லை. ஓரளவு  ரவு
டி,நம்ம காடு வெட்டி குரு மாதிரி.இவரு திருவல்லிக்கேணி ஏரியாவில்  மாமூல் வசூல் பண்ணிட்டு ரவுடியா  பொழப்பை ஓட்டிட்டு இருக்காரு.புறா பந்தயம் வேற  நடத்தறாரு.செம்மரக்கடத்தல் நடத்தும் ஆள் கிட்டே அடியாளா இருக்கார். அவர் மாதிரியே  இருக்கும்  இன்னொரு அடியாள்  சதி செஞ்சு  ஹீரோவை  ஜெயிலுக்கு அனுப்பிடறார். வெளியே வ்ந்த  ஹீரோ தன் பழைய தாதா/ரவுடி    பதவியை எப்படி  தக்க வெச்சுக்கறார்? என்பதே கதை


வேலை இல்லா பட்டதாரி , அனேகன்  செம ஹிட்சுக்குப்பின்   ஹாட்ரிக் அடிக்கும்  உற்சாகத்தில்  தனுஷ்,கலக்கலான பர்ஃபார்மென்ஸ், ஒரு மாமூல் மசாலா  ஹீரோ  எப்படி  திரையில்  அப்ளாஸ் அள்ளும் அளவு  மாஸ்  சீன்களுடன் வரனுமோ அதே  போல்  வர்றார். ஆனா கதை , திரைக்கதை  தான் பெரிய அளவில்  கை கொடுக்கலை.ஒல்லியான தேக அமைப்புள்ள இவர்  புதுப்பேட்டையில்  தாதாவாக  வந்ததை ஏற்றுக்கொள்ள  முடிந்த அளவு  இதில்  ஏற்றுக்கொள்ள முடியவில்லை, இது இயக்குநர்  மிஸ்டேக்.இவர் போடும்  ஓப்பனிங்  சீன் தர லோக்கல்  ட்டத்துக்கு  தியேட்டரில்  செம  அப்ளாஸ்.  நாயகியை கலாய்த்து  பொதுவாக  பெண்களை நக்கல் அடிக்கும் காட்சிகளில்  கைத்ட்டலை அள்ளறார்.இது  தனுஷ்க்கு  ஹிட் படம்னும்  சொல்லிட முடியாது ,அட்டர்  ஃபிளாப்பும்னும்  சொல்லிட  முடியாது. மீடியமா இருக்கும்.




நாயகியா  கா ஜில் ஜில் அகர் வாவ் வால்.இதுவரை  இவர்  நடிச்ச படங்கள்லயே இதுல தான்  மேக்கப் மகா மட்டம் .பல  கோணங்களில்  சகிக்கலை. ஆனா பல படங்களில்  இவர்  நல்ல  ஃபிகரா  காட்டி இருந்தாங்க . ஒளிப்பதிவாளரை  கவனிக்கலை  போல.அல்லது  இயக்குநர்  சரியா   கேமரா  கோணங்களை  ரீ செக்  செய்யலை.அதிகமான காட்சிகள் இவருக்கு  இல்லை . 2 பாட்டு  சீன்  , அது  போக 15  சீன்  , அவ்வளவு  தான் ( சாதா சீன் )


படத்தின்  ஆகப்பெரிய  பிளஸே  ரோபோ சங்கர்  தான்  , கேப்டனின்  பாடி லேங்குவேஜில்  இவர்  அடிக்கும் கவுண்ட்டர்  டயலாக்ஸுக்கு  செம  ரெஸ் பான்ஸ். சந்தானம் , வடிவேல் தவற விட்ட காமெடி இன்சார்ஜ்  போஸ்ட்க்கு இவர்  சீக்கிரமே   ரெடி ஆகி  மொக்கை  சூரியை  ஓவர்டேக்க வாழ்த்துகள்.  ஹீரோவுக்கு இணையான  பாத்திரம். ஸ்க்ரீன் பிரசன்ஸ் , பாடி லெங்குவேஜ் , டயலாக்  டெலிவரி  , டைமிங் சென்ஸ்  எல்லாமே  கலக்கல்  ரகம் அள்ளுது . 


வில்லனாக   வரும் விஜய்  ஏசுதாஸ்  போலீஸ்  கெட்டப் குட் .காளி  , கோபி  எல்லாரும்  ஓக்கே ரகம் . அனிரூத்  ஒரு  சீனில்  வந்து  கை தட்ட்டல் வாங்கறார். படத்தில்  ஹீரோ  -ஹீரோயின்  கெமிஸ்ட்ரி எடுபடலை. தனுஷ் -அனிரூத்  காம்போ  அருமை.


புறா பந்தயம்  பற்றிய  டீட்டெய்லிங்  குட் . ஹீரோ  வில்லனிடம் பஞ்ச்  பேசி ஸ்டைலாக நடக்கும்  காட்சிகளில்  பிஜிஎம் அள்ளுது.பாடல்காட்சிகளும்  ஓக்கே ரகம்


மனதைக் கவர்ந்த  வசனங்கள்


தனுஷ் பஞ்ச் = புள்ளப்பூச்சிக்கெல்லாம் ஐடியா வருது.வெச்சு செஞ்சிருவேன்


2 உன் ஆள் மேல கை வெச்சா நீ சும்மா விட்ருவியா?

நானா இருந்தா என் ஆள் பக்கம் போகவே விட்டிருக்க மாட்டேன் #,மாரி


3 கட்டிக்கப்போற பொண்ணைப்பக்கத்துல வெச்சுக்கிட்டு மெஹந்தியை எதுக்கு வெச்சிருக்கே?
அய்யோ .மெஹந்தின்னா மருதாணி # மாரி


4 பொண்ணுங்க எப்போ லவ்வரைக்கழட்டிவிடுவாங்கனு யாருக்குமே தெரியாது #,விசில் பறக்கும் வசனம்


5 தனுஷ் டூ கா ஜில் = ஏம்மா எதை மறைக்க துப்பட்டா போடச்சொன்னா எங்கே போட்டிருக்கே?கழுத்தொண்ட? சரியாப்போடம்மா

6 ரோபோசங்கர் = பாத்தாலே பிடிக்காதுங்கறா.பாக்க பாக்க எப்டி பிடிக்கும்?


7 எத்தனையோ பொண்ணுங்க தப்பானவனை லவ் பண்ணி காலம் பூரா கஷ்டப்படறாங்க # அப்ளாஸ் டயலாக்


8 நான் எவ்ளவோ தப்பு பண்ணி இருக்கேன்.அப்ப எல்லாம் எனக்கு எதுவுமே ஆகலை.ஆனா லவ் பண்ணேன்.இப்போ போலீஸ்.ல மாட்டிக்கிட்டேன் #,மாரி


9 ஒருத்தரை நம்ப வெச்சு ஏமாத்தறது எந்த சூழ்நிலையா இருந்தாலும் தப்பு #,மா


10 எனக்கு பெயின்ட் அடிக்கத்தெரியாதே?
போற வர்ற ஆளுங்களை அடிக்கறே!,பெயிண்ட் அடிக்க மாட்டியா? #,மா

11 ஒரு எதிரியோட பலத்தை ஒத்துக்கறவன் தான் பின் அவன் கூட மோதி ஜெயிக்க முடியும் # மா


12 கலப்படமான கெட்டவனை நம்பும் பெண்கள் சுத்தமான நல்லவனை நம்பமாட்டாங்க.#,மா



Kajal Agarwal Hot Photos in Businessman
 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  மதுரைல தனுஷ் ரசிகர்கள் ஜாஸ்தி போல.சினிப்ரியா ,மினிப்ரியா ,மெகாப்ரியா .மீடியம் ப்ரியா எல்லாதியேட்டர்லயும் 3 நாளுக்கு எல்லா ஷோவும் புல்லாம்


2 மதுரையில் செகன்ட் ஷோ பெரும்பாலும் நைட் 10 30 தான்.மாரி ஓடும் 8 தியேட்டர்ல எதுல 9 30 pm?


3 மதுரை ராகவேந்திரா ஹாஸ்பிடல் அருகே அபிராமி தியேட்டரில் மாரி #,2 1/2 மணி நேரம் தனுஷ் ரசிகரா மாறப்போறேன்


4 நமீதா ரேஞ்ச்க்கு அகலத்திரை.திரையை அகற்றியதும் வெண் திரை இலியானா மாதிரி பொசுக்னு இருக்கு # அபிராமி தியேட்டர் மதுரை


5 தனுஷ் ஓப்பனிங் சீன்ல 4,பசங்க ஸ்க்ரீன் மேல ஏறி முத்தம் குடுக்கறாங்க.அவ்வ்வ்வ்வ்


6 ரோபோ சங்கர் பேரு படத்துல சனிக்கிழமை.பேரே சனிக்கிழமை.குறியீடு.சனி !




7 தர லோக்கல் மெட்டில் கலக்கல் ஓப்பனிங் டான்ஸ். தனுஷ் ராக்கிங் பர்பார்மென்ஸ்

8 ஆண்ட்ரியா ஓனர் அனிரூத் உடன் ஐஸ்வர்யா ஓனர் தனுஷ் கலக்கல் காம்போ டான்ஸ்



9 ரோபோ சங்கர் தம் ஒரு பப் இழுத்துட்டு டக்னு பணிவா.தனுஷ்க்கு அதே சிகரெட்டை தரும் சீன் செம அப்ளாஸ்

10 ரோபோ சங்கர் பாடி லேங்க்வேஜ் டயலாக்.டெலிவரி கலக்கல்.தனுஷ் க்கு இணையான காட்சிகள் .கலகலப்புக்கு கேரண்டி


11 ஹீரோ பில்டப்க்கு பிஜிஎம் போடுவதில் அனிரூத் விற்பன்னர்


12 கா ஜில் அகர்வால்க்கு மேக்கப்விமன் யாரு?,சொதப்பல் ஒப்பனை


13 ரோபோசங்கர் காமெடி ,அனிரூத் ன் கலக்கல் பிஜிஎம் ,தனுஷ் ன் நேர்த்தியான நடிப்புடன் முன் பாதி ஓக்கே.#,மாரி சராசரி மசாலா @ இடைவேளை


14 தனுஷ் மைன்ட்.வாய்ஸ் = புதுப்பேட்டை ரேஞ்ச்க்கு படம் எடுய்யான்னா சுள்ளான் ரேஞ்ச்க்கு எடுத்து வெச்ட்டாரே?


15 மசாலாப்படம் எடுத்து சொதப்புவது எப்படி?# மாரி




இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1   படத்தைப்பற்றிய எதிர்பார்ப்பை  எகிற வைக்கும் அளவில்  டீசர் , ட்ரெய்லர்  பக்கா எடிட்டிங்கில்  வெளியிட்டது


2  அனிரூத் இன் இசை  பிஜிஎம்   படத்தின்  பிளஸ்


3   ரோபோ சங்கரின்  கலக்கல் காமெடி  படத்தின்  உயிர் நாடி 


4  போர் அடிக்காமல்  முன் பாதி திரைக்கதையை அசால்ட்டாக  நகர்த்தியது

5   சண்டைக்காட்சிகள்  அருமையான படமாக்கம்.ஸ்டண்ட்  மாஸ்டர்  ராக்கிங்





இயக்குநரிடம்  சில கேள்விகள்



1   ஹீரோ அடிக்கடி  செஞ்சுடுவேன்  செஞ்சுடுவேன் அப்டிங்கறார். ஆனா கடைசி வரை அவர்  எதுவுமே செய்யலை. மோடி அதைச்செய்வேன் இதைச்செய்வேன்னு சொல்லி  ஃபாரீன்  டூர் அடிக்கற மாதிரி இவர் பாட்டுக்கு  ஹீரோயின்  பின்னால தான் சுத்திட்டு இருக்கார் 

2  படத்தின்  முக்கிய திருப்பம் ஆன  சீனில்  லாஜிக்  ஓட்டை. நைட் 10  மணிக்கு  ஹீரோ  மப்பில்  ஹீரோயினிடம் தன் ஒப்புதல்  வாக்குமூலம்  ஆஃப் மர்டர்  தந்துடறார். அதை  செல்லில் பதிவு  பண்ணி  நாயகி  போலீஸ் வில்லனிடம் தர்றார்.இதுக்கே  டைம் மிட் நைட் 12 ஆகி  இருக்கும். எப்படி  அடுத்த நாள்  காலைல 7  மணிக்கு அந்த  வீடியோ சாட்சியை ஆதாரமா வெச்சு  அரெஸ்ட் வாரண்ட்டோட  போலீஸ்  வருது? ஜட்ஜ்  என்ன  குமாரசாமியா?

3  புதுப்பேட்டையில்  தனுஷ் ஷை தாதாவாகக்காட்டியதில் நம்பகத்தன்மை இருந்தது. இதில்  ரோபோ சங்கர்  காமெடி தான் மனசில்நிக்குது. ஹீரோ  ஒரு ரவுடி என்பதை  சொல்லும் அழுத்தமான காட்சியே  இல்லை.


4   ஹீரோயின்  கேரக்ட்ரைசேஷன்  சரி  இல்லை. அவர் அழகு வீணடிக்கபட்டிருக்கு. லட்சக்கணக்கில் சம்பளம்  கொடுத்து  இப்டித்தான் வேஸ்ட்  பண்றதா?


5  முன் பாதி  திரைக்கதையில்  இருந்த சுவராஸ்யம்  பின் பாதியில்  இல்லை.


6  ஹீரோ  தம்  அடிக்கும்  காட்சிகள்  ஓவர். ரஜினியை எதில்  ஃபாலோ பண்ணாலும் , இதில்  ஃபாலோ  பண்ணக்கூடாது. இவரைப்பார்த்து இவர்  ரசிகர்களில் 50% பேர்  தம்  அடிச்சா அது சமுதாயத்துக்கு இவர்  செய்யும் தீங்குதானே?


சி  பி  கமெண்ட் =மாரி = சி சென்ட்டர் ரசிகர்களுக்கான சராசரி மசாலாப்படம்.ரோபோசங்கருக்கு வாழ்வு.விகடன் மார்க் 39 ,ரேட்டிங் =2.25 / 5

தனுஷ் ரசிகர்களுக்குக்கொண்டாட்டமான படமாகத்தான் இருக்கும். ஜனரஞ்சகமாத்தான் இருக்கு. ஆனா பொது ஜனங்களை பெருமளவில் கவராது. ஏ , பி செண்ட்டர்களில் சுமாராத்தான் போகும். சி செண்ட்டர்கள்ல் நல்லா ஓடிடும் . போட்ட முதலீட்டை எடுத்துடுவாங்க




ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 39



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = சுமார்



 ரேட்டிங் 2.25 / 5


மதுரை அபிராமியில் படம் பார்த்தேன்


Friday, January 10, 2014

ஜில்லா - சினிமா விமர்சனம்

ஊருக்கே  தாதா  மோகன் லால்.அவரோட  டிரைவரோட பையன் தான் விஜய்.சின்ன வயசுல  நடந்த  ஒரு ரகளைல மோகன் லால் மனைவியின்  உயிருக்கு வந்த ஆபத்தில்  இருந்து விஜய் காப்பாத்துவதால் அவரைத்தன் வளர்ப்பு மகனாவே மோகன் லால் வளர்க்கிறார். விஜய்யோட  நிஜ அப்பா ஒரு போலீஸ் ஆஃபீசர் கையால  சாவதால் விஜய்க்கு சின்ன வயசுல  இருந்தே போலீஸ்னாலே வெறுப்பு .


காஜில் அகர்வால்  போலீஸ் ஆஃபீசர் ( யாரும் சிரிக்கப்படாது,இந்தக்கதைல எல்லாரும் போலீஸ் தான் , ஹீரோ , ஹீரோயின்,காமெடியன்).ஹீரோயின் போலீஸ் -னு தெரியாம ஹீரோ பொண்ணுப்பார்க்கப்போறார்.போலீஸ்னு தெரிஞ்சதும் ஜகா வாங்கறார். அதை வெச்சுக்கொஞ்சம் காமெடி , கலாட்டான்னு படம் ஜாலியாத்தான் போகுது. 

மோகன் லாலுக்கு  போலீஸ்னாலே ஒரு  சிக்கல் வருது. அப்போதான் அவர் முடிவெடுக்கறாரு, நாம ஆபத்தில்லாம தொழில் பண்ணனும்னா நம்மாளு ஒருத்தன் போலீஸ் ஆஃபீசரா  இருக்கனும்னு. விஜய்  அசிஸ்டெண்ட் கமிஷனரா ஆகிடறார். 


ராமர் அவதாரம் எடுத்த ராவணன்  சீதையைத்தொடப்போனப்ப ராமர் நல்ல மனசும் வந்துட்டதால  டச்சிங் டச்சிங்க் பண்ணாமயே வீணாப்போன மாதிரி ஹீரோ போலீஸ் ஆனதும் மனசு மாறிடறார்.

விஜய்க்கும் ,மோகன் லாலுக்கும் முட்டிக்குது.இடைவேளை.


அதுக்குப்பின் என்ன நடக்குது? தங்கச்சி செண்ட்டிமெண்ட் , அம்மா  செண்ட்டிமெண்ட் ( நம்ம அம்மா இல்ல , நிஜ அம்மா ) ,தம்பி செண்ட்டிமெண்ட் எல்லாத்தையும் கசக்குப்பிழிஞ்சு ( ஃபேமிலி ஆடியன்ஸ் வேணுமே? ) படத்தை முடிக்கறாங்க .


எது எப்படியோ தலைவா தோல்வியால் துவண்டு போன விஜய்க்கு இது  பூஸ்ட் அப் குடுக்கும் படம்  தான்.

மோகன் லாலின் கம்பீரமான நடிப்பு , கணீர்க்குரல் அவருக்கு பெரிய பிளஸ்.பல காட்சிகளில் அநாயசமான நடிப்பு .விஜய் , மோகன் லால் காம்போ காட்சிகளில்  மோகன் லாலுக்கு நல்ல முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கு .


விஜய் இந்தப்படத்தில்  ரொம்ப இளமையா , அழகா , புதுப்புது மேனரிசத்தோட ,வசன உச்சரிப்பில்   சில மாற்றங்களோட வர்றார். தேவை இல்லாத பஞ்ச் டயலாக்ஸ் எதுவும் பேசாம கனகச்சிதமான நடிப்பு . 

போக்கிரி படத்தில் போலீஸாக வந்தாலும் யூனிஃபார்மில்   அவரை அதிக நேரம் பார்க்க முடியாத ரசிகர்களுக்கு இதில் பாயாசத்துடன் விருந்து . போலீஸ்  யூனிஃபார்மில் கலக்கிட்டார். 

பாடல் காட்சிகளில் வழக்கமான விஜய் துள்ளாட்டம் போட்டிருக்கிறார். காவலன் படத்தில் அசினின் பின்னால பதம் பார்த்தவர் இதில் காஜல் பின்னாடி போய் பின்னால  பரோட்டா  பண்றார். இனி விஜய் ரசிகர்கள் காதலிகளிடம் இதைச்சொல்லியே பரோட்டா ஆர்டர் செய்வாங்கனு எதிர்பார்க்கலாம். 


காஜல் அகர்வால்  படம்  முழுக்க   4 ரீல் கூட வர்லை. க்ளைமாக்ஸ் காட்சியில் மட்டும் தான் குங்கும நெற்றியுடன் வர்றார்.மற்ற காட்சிகளில் எல்லாம் சாதா நெத்திதான். முந்திரி இல்லா கேசரி மாதிரி இருக்கு.அவருக்கு மேக்கப் விமன் யார்னு பார்த்து  பாதி சம்பளம் கட் பண்ணனும் , லிப்ஸ்டிக் எடுபடாத கலரில். அவர் இயல்பான இதழே கனகாம்பரக்கலர் தானே? எதுக்கு வானவில்லுக்கு வல்லியனா ஒரு மேக்கப் ? இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் ரொம்ப நல்ல கேரக்டர் போல , கிளாமர் காட்சிகளில்  அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார்கள்.வரும் காலத்தில் இந்த மாதிரி நல்லவர்கள் கூட எல்லாம் கூட்டணி வைக்க வேணாம் என விஜயைக்கேட்டுக்கொள்கிறேன்.

புரோட்டா  சூரி அப்பப்ப மொக்கை போட்டாலும் 4 இடங்களில்  சிரிக்க முடியுது. 


முன் பாதி  திரைக்கதையில்  இருந்த வேகம்  பின் பாதியில்  இல்லை . கடைசி 30 நிமிடங்கள்  இழுவை . மொத்த படம்  3 மணி நேரம் என்பதால்  ரசிகர்கள்  பொறுமை காக்க வேண்டி  இருக்கு. எடிட்டிங்கில் இன்னும்  ட்ரிம் பண்ணி  இருக்கலாம். 

விஜய்  ஒரு பாட்டு பாடி  இருக்கார். நல்ல வாய்ஸ் . குத்தாட்டத்தை  விட மெலோடியை அதிகம் நம்பிய இமானுக்கு  ஒரு ஷொட்டு . 

படம்  முழுக்க ஆங்காங்கே வரும்  ஜில்லா ஜில்லா தீம் இசை  ரசிகர்களிடையே பலத்த ஆரவாரம் பெறுகிறது 
திருப்பூர்  சிவன் தியேட்டர் ஹவுஸ் ஃபுல் ,டிக்கெட்  ரேட் 200  ரூபா

சபாஷ்  சத்யா 


1. கண்டாங்கி சேலை பாட்டில் மூங்கில்  தோட்ட லொக்கேஷன் , பின் புலத்தில் கேரள கத களி ஆட்டக்காரர்கள் கண்ணுக்கு விருந்து 



2  கேரள மார்க்கெட்டுக்காக மோகன் லாலுக்குத்தரப்பட்ட முக்கியத்துவம் , அவரின் பிரமாதமான பர்ஃபார்மென்ஸ் அப்ளாஸ் அள்ளுது

3 தாதா கதை என்றாலும்  வன்முறைக்காட்சிகள் எதையும் காட்டாமல்   ஃபேமிலி செண்ட்டிமெண்ட்ஸ் காட்சிகளால் திரைக்கதை அமைத்த சாமார்த்தியம் 


4.  இமானின் இசை , பின்னணி இசை , ஒளிப்பதிவு , ஆர்ட் டைரக் சன்  எல்லாமே   ஒரு கமர்ஷியல் மசாலாப்படத்துக்கு என்ன தேவையோ அதை  நிறைவேற்றிய விதம் 



சொதப்பல் சொப்னா 



1. விஜய் அப்பாவுக்கு என்ன தான் செல்வாக்கு  இருந்தாலும்  இன்ஸ்பெக்டர் போஸ்ட் வாங்காமல் டைரக்டா  அசிஸ்டெண்ட் கமிஷனர் போஸ்ட்டே வாங்கித்தருவது ஓவர்னா   அவர் வாழும் அதே  ஏரியாவிலேயே போஸ்ட் வாங்குவது சாத்தியமே  இல்லை. போலீஸ்  முத  ரூல்ஸே அவங்க பிறந்த  ஊர், வாழும்  ஊரில் பதவி வகிக்கக்கூடாது என்பது தானே? 


2. போலீஸ்  மீட்டிங்க் நடக்கும்போது  வராண்டாவில்  எல்லாரும்  நிக்கறாங்க.  ஏ சி சார்க்கு  ஒரு சேர்  கூடவா கிடைக்கலை? ஏன் ஜீப் மேல ஏறி  நின்னு  “ அன்பார்ந்த வாக்காளப்பருமக்களே “ரேஞ்சுக்கு காமெடி பண்றார்? 


3. போலீஸ் கமிஷனர்  ஐயப்ப சாமி  தாடி வைக்கலாம், ஆனா ஸ்டைலிஸ் பிரெஞ்ச்  தாடியுமா? 


4. காஜல் சேறில் விழுந்து எழுந்து நடக்கும்போது பின்னால் விஜய் ஃபாலோ பண்ணும்போது “அழகே பிரம்மனிடம் மனுக்குடுக்க போய் இருந்தேன் “பாடல் பல்லவி  இசை  பி ஜி எம்மா வருதே ஏன்? 


5. வாசல்ல நிறுத்தி வெச்ச பைக்கை  மோகன் லால் தள்ளி விடும்போது பெட்ரோல் டேங்க்  மூடி ஓப்பன் ஆகி  பெட்ரோல் கொட்டுதே எப்படி? அதை லாக் பண்ணித்தானே சாவியை எடுக்க முடியும் ? சாவி இல்லாம எப்படி  ஓபன் ஆச்சு? 

6. விஜய்  தன் தம்பியை  ஒரு ரூமிலடைத்து  வெளியே போகும்போது வில்லனைப்பத்தி  ஒரு எச்சரிக்கை ஏன் செய்யலை ? செஞ்சிருந்தா அவர்  தப்பி  ஓடி வில்லன்  கிட்டே மாட்டி  இருப்பாரா? 


7. மரணத்தின்  விளிம்பில்  இருக்கும் தம்பி “ஹாஸ்பிடலுக்குப்போகாதே , அப்பா கிட்டே கூட்டிட்டுப்போ , என்னைக்கொன்னது யார்னு சொல்றென்”னு சொல்வது ஏன்? செல் ஃபோன் எதுக்கு இருக்கு?ஹாஸ்பிடல் போய்ட்டே  ஃபோன்ல சொல்லலாம், எஸ் எம் எஸ் ;பண்ணலாம் . 


8. சூரி  எதுக்காக  தம்பி அடைக்கப்பட்ட  ரூமுக்கு  உள்ளே கதவைத்திறந்து போறார்? அது தேவையே  இல்லையே?

தாரை தப்பட்டை  முழங்க  ரசிகர்களின்  வெற்றிக்கொண்டாட்டம்


நச் வசனங்கள்

1எதிரிய எதிர்ல வெச்சுக்கலாம் . ஆனா துரோகிய தூரத்துலக்கூட வெச்சுக்கக்கூடாது.... # பன்ச்


2  போலீஸடிச்சுப் பாத்திருப்ப - போலீஸையே அடிச்சுப் பாத்துருப்ப? # அதான் காஜல் ..!


3ஆஸ்பத்திரிக்கு வந்தா ஒன்னு குணமாகிப்போகனும், இல்ல பொணமாகிப்போகனும் ....!!


4. அழிக்குறவந்தாண்டா சிவன் - இந்த சிவன அழிக்குற சக்தி எவனுக்குமில்லை ... # மோகன்லால் பஞ்ச் # ஜில்லா


5 தீயிலயும் , பகையிலயும்  மிச்சம் வைக்ககூடாது 


6.சிவனையும் , பாக்க மாட்டேன், எவனையும் பாக்க மாட்டேன், தூக்கிட்டுப்போய்ட்டே  இருப்பேன் 

 உன் பின்னால 1000 பேர்  இருக்கலாம், என் பின்னால ஒரே ஒரு ஆள் இருக்கான் 


7. ஏம்மா  , இவன்  காக்கி கலர் ல கவர் வந்தாலே  பிரிச்சு மேஞ்சுடுவான், நீ காக்கியையே கவர் பண்ணிட்டு வந்திருக்கியே 


8  சார், உங்க பொண்ணோட  2......

 வாட்?


 2 கண்ணைப்பார்க்கும்போது......


டேய், அது பொண்ணோட அப்பாடா.. 


9. பொண்ணோட  வண்டிச்சத்தம் இங்கே கேட்குது


 வண்டிச்சத்தத்தை வெச்சே இத்தனை கணிக்கறானே......


10  அவளை  டிரஸ்  இல்லாம பார்த்துட்டேன் 

 பார்த்துட்டியா? 

 ஐ மீன்  யூனிஃபார்ம்  டிரஸ்  இல்லாம 

11  வண்டியை  விட்டு  இறங்கு எவ்ளவ்  பெரிய ஆளா  இருந்தாலும் இறக்கிடுவேன் , அதான் போலீஸ் 



12  திருடன்  போலீஸ்  விளையாட்டுல  திருடனும் நாமளாத்தான்  இருக்கனும், போலீசும் நாமாத்தான்  இருக்கனும் 


13  போலீஸ்  கிரிமினலா  யோசிச்சு தன் புத்தியைக்காட்டிடுச்சு, கிரிமினல் போலீஸ் ஆகி நம்ம புத்தியைக்காட்ட வேணாம் ? 


14 தொப்பி போட்ட போலீசை விட தொப்பை போட்ட போலீஸ்  தான் அதிகம் 


15 சரி, நான் இப்போ மேட்டருக்கு வர்றேன் 

 அதான்  முடிச்சிட்டியே ? 

16  விஜய்  டூ காஜல் = அப்போ  நீ என் பின்னால கை வெச்சியே, அது உன் டர்ன், இது என்  டர்ன்  ( டர்னிங்க் பாயிண்ட்டாம் ) 




17   நான்  சொன்னது எல்லாம் உண்மை  தான், ஆனா தாத்தாவை மட்டும் தத்து எடுத்துக்கிட்டேன் 


18  தப்பைத்தடுக்கனும்னு  எப்ப  நீ நினைச்சியோ அப்பவே நீ போலீஸ் 


ஆகிட்டே 


19  சீன்  முடியறதுக்குள்ளே  சீன் போடக்கூடாது 


20  போலீஸ் காப் ? வளைகாப்பே நடத்திடுவான் போல 



21  கட்டைல தானே அடிப்பான்னு சொன்னே ? இப்போ   கொ.... கொலையே பண்ணப்பார்த்தானே? 


22 நான் நினைச்சா இவன் முடிப்பான்.இவன் சாதா சக்தி இல்ல.ஜீவன் உள்ள சக்தி # மோகன் லால் பஞ்ச்


23 நாட்ல வண்டி ஓட்டத்தெரியாதவன் கூட உண்டு.பிகரை ஓட்டத்தெரியாதவன் யாரும் இல்ல # சூரி


24 போலீஸ் அடிச்சுப்பார்த்திருப்பே.போலீசையே அடிச்சுபார்த்திருக்கியா ? # தம்பி ராமையா


25 சூரி - புரொடியூசர் நீ தானே?


வாட்? 



பொண்ணைப் புரொடியூஸ் செஞ்சது நீ தானே? கோ புரொடியூசர் எங்கே?


26 விஜய் - சப்பை பிகரைக்கூட லவ் பண்ணுவேன்.ஆனா சப் இன்ஸ்பெக்டரை லவ் பண்ண மாட்டேன்

27 மோகன் லால் - இந்த சிவன் இல்லாம சக்தி இல்லை. விஜய் - சக்தி இல்லாம எவனும் இல்லை # இடைவேளை பஞ்ச்


28 மத்தவங்க கிட்டே தோத்தாத்தான் தோல்வி , சொந்தப்பையன் கிட்டே தோத்தாலும் அது வெற்றி தான்



சி பி கமெண்ட் - ஜில்லா - முன் பாதி செம ஸ்பீடு ,பின் பாதி ஓக்கே. புதுக்கதை.நோ ரீ மேக். ஹிட் ஆகிடும்


எதிர்பார்க்கும் .விகடன் மார்க் - 43


, ரேட்டிங் = 3.25 / 5

சன் டி வி வீடியோ கிராஃபர் ரசிகர் ஷோ கூட்ட ஆட்டத்தை அப்டேட்டிங்

படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ்



1 ஒன் ஆப் த பெஸ்ட் ஓப்பனிங் சீன் டூ விஜய் # கண்ணாடி சில்லுகள் சிதற ஆக்சன்

2 காஜல் அகர்வாலுக்கு ஓப்பனிங் சீன் சரி இல்ல.ஹீரோயினை கோபமான முகத்துலயா காட்டனும் ? வாடால்லிக்கலர் லிப்ஸ்டிக் வேற :-(

விரசாப்போகையிலே மெலோடி சாங்க்.விஜய் ன் அலட்டிக்காத டான்ஸ் ஸ்டெப் கலக்கல்.ஆர்ட் டைரக்சன் ,ஒளிப்பதிவு ,டான்ஸ் மாஸ்டர் ராக்ஸ்

4 சிவனும் சக்தியும் ஒண்ணா சேர்ந்தா மாஸ் டா வரிகள் வரும் ஒவ்வொரு சீனிலும் ரசிகர்கள் கரகோஷத்தில் அரங்கம் அதிர்ந்தது

5 பைட் சீன் களில் விஜய் புதுசா ஒரு மேனரிசம் காட்றார் .குட்

6 ஜிங்கிளமணி குத்தாட்டப்பாட்டு கலக்கல்.அதற்கான டான்ஸ் ஸ்டெப் பில் இன்னும் வெரைட்டி காட்டி இருக்கலாம்.அந்த 2 லேடீஸ்க்கு முகமும் முத்தல்


7 ஜில்லா @ இடைவேளை. கமர்சியல் கலக்கல்.தலைவா வை தாண்டிடுச்சு.ரீமேக் கதை இல்லை.புதுசு.ட்விஸ்ட் குட்


8 எப்போ மாமா ட்ரீட்டு .அக்மார்க் விஜய் டான்ஸ் கலக்கல்.பின்றார்யா. இசை குட். காஜில் ஸ்லீவ்லெஸ் ரெட் டிரஸ்




தியேட்டர் மேட்டர் - திருப்பூர் சிவன் தியேட்டரில் ஆகாய மனிதன் எனும் யுவராஜ் கூடப்படம் பார்த்தேன்.அதி காலை 5 மணி க்கு ஷோ என்பதால் 4 55 க்குப்போனா அவங்க 4 50 க்கே படம் போட்டுட்டாங்க , மோகன் லால் ஓப்பனிங்க் சீன் பார்க்க முடியல .தியேட்டர் சுமார் தான் , ஏ சி , டி டி எஸ் எல்லாம் ஓக்கே .

Monday, November 12, 2012

துப்பாக்கி





விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், சத்யன் மற்றும் பலர் நடித்து இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரித்து இருக்கிறார்.

மும்பையில் வாழும் ஒரு தமிழ் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்து இருக்கிறார் விஜய். 'துப்பாக்கி' படத்தினைப் பற்றி வேறு எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் பாதுகாத்து வருகிறது படக்குழு.

இந்தியில் 'கஜினி' ரீமேக் செய்து முடித்தவுடன் நேரடி இந்திப்படம் ஒன்றை இயக்கலாம் என்று ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டு தயார் செய்த கதைதான் 'துப்பாக்கி'. ஆனால் 'ஏழாம் அறிவு' படத்தினை முடித்த பின் அப்படத்தை இயக்கலாம் என தள்ளிப் போட்டார். 'ஏழாம் அறிவு' இயக்கி முடித்தவுடன், விஜய் தேதிகள் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள்.

அக்ஷய்குமார் நடிக்க இருந்த கதையினை தயாரிப்பாளர்களிடம் கூறிவிட்டு முதலில் தமிழில் விஜய்யை வைத்து இயக்கிவிட்டு பின்பு அக்ஷய்குமாரை வைத்து இந்தியில் இயக்குகிறேன் என்று கூறிவிட்டு, விஜய்யை வைத்து 'துப்பாக்கி' தயார் செய்து இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

விஜய் மாஸ், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, ஹாரிஸ் ஜெயராஜ் துள்ளலான இசை என ஒரே படத்தில் அத்தனை பிரம்மாண்டங்களும் இணைந்து இருப்பது 'துப்பாக்கி' படத்திற்கு மிகப்பெரிய பலம்.

படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியான போது ஏகப்பட்ட சர்ச்சைகள், பின்பு தலைப்பு பிரச்னை என ஏகப்பட்ட பிரச்னைகள் சந்தித்து அதில் வெற்றி பெற்று இருக்கிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா அன்று வெளியான TEASERல் விஜய்யின் ' I AM WAITING ' என்று பேசிய வசனம் பிரபலமாகியுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் அனைவருமே இணையத்தில் ' துப்பாக்கி  - WE ARE WAITING' என்று எழுதி வருகிறார்கள்.

" விஜய்யை பிடிக்காதவர்களும் இப்படத்தினை பார்த்தார்கள் என்றால் விஜய்யை பிடிக்கும் " என்று ஏ.ஆர். முருகதாஸ் சொல்ல,  விஜய் "ஏ. ஆர்.முருகதாஸ் ஒரு குட்டி மணிரத்னம்" என்று பரஸ்பரம் பாராட்டியிருக்கிறார்கள்.

பாடல்களில் அனைத்துமே ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். படத்தில் மதன் கார்க்கி எழுதிய ' GOOGLE GOOGLE ' பாடல் தான் ஹைலைட். இதை விஜய், ஆண்ட்ரியா இணைந்து பாடி இருக்கிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து விஜய் இப்படத்தில் பாடி இருக்கிறார்.

கலைப்புலி தாணு தயாரித்த இப்படத்தினை ஜெமினி நிறுவனம் வாங்கி வெளியிட இருக்கிறது.

'நண்பன்' படம் திரையிட்ட அன்று விஜய் டிவி தான் TRPல் நம்பர் ஒன். இதனால் கடும் போட்டிக்கு இடையே 'துப்பாக்கி' படத்தின் டிவி உரிமையையும் பெரும் விலை கொடுத்து வாங்கி இருக்கிறது விஜய் டிவி.

சென்சார் முடித்து U சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். படம் ரசிகர்கள் கவர தீபாவளியன்று நவம்பர் 13ம் தேதி படத்தினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.


 விஜய் பேட்டி @ விகடன்
கதைதாங்கணா ஹீரோ!"



எம்.குணா

''பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஹிட் கொடுக் கிறது பெரிய விஷயம் இல்லை. இப்போ நிலைமை அப்படி இல்லை. ஒவ்வொரு படத்துக்கும் முதல் படத்துக்கான உழைப்பைக் கொட்ட ணும். கடைசி நிமிஷம் வரை உயிரைக் கொடுக்க ணும்... த்ரில்லிங்கா இருக்குங்ணா... கொஞ்சம் பயமா வும் இருக்குங்ணா!'' - முதல் பட ரிலீஸுக்குக் காத்திருக் கும் ஹீரோ போல ஆர்வமும் பதற்றமுமாக இருக்கிறார் விஜய். தீபாவளிக்கு வெடிக்கிறது விஜயின் 'துப்பாக்கி’!



 ''பொதுவா, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கமர்ஷியல் படங்களை கமிட் பண்ணிக்க மாட்டார். 'துப்பாக்கி’யில் வேலை செய்ய எப்படி ஒப்புக்கொண் டார்?''



''படத்துக்கு அவர்தான் கேமராமேன்னு சொன்னப்போ, நான் நம்பலை. 'என் படத்துக்கு எப்படி சார் ஒப்புக்கிட்டீங்க’னு நேர்லயே கேட்டுட்டேன். 'பெரிய ஆர்வம் இல்லாமத்தான் 'துப்பாக்கி’ கதை கேட்டேன். ஆனா, க்ளை மாக்ஸ்ல முருகதாஸ் வெச்சிருக்கிற மெசேஜ் கேட்டு ஆடிப்போயிட்டேன்’னு சொன்னார். காலை 9 மணிக்கு மும்பை தாதர் ரயில்வே ஸ்டேஷன்ல ஆயிரக்கணக்கான மக்களுக்கு நடுவுல என்னையும் நடக்க, ஓடவிட்டாங்க. கேமரா எங்கே இருக்குன்னே தெரியாம நடிச்சது புது அனுபவம்!''



''சினிமாவில் இப்போ ஹீரோக்கள் ரொம்ப ஃப்ரெண்ட் லியா இருக்காங்க. ஆனா, நீங்க மட்டும் யாருடனும் க்ளோஸ் ஆக மாட்டேங்குறீங்களே?''


''இது அபாண்ட வதந்திங்ணா. எல்லாரோடவும் பெர்சனல் டச்லதான் இருக்கேன். வெளியே ஷேர் பண்ணிக்கிறதில்லை... அவ்வளவுதான். மூணு வருஷமா விடாம கமல் சாரோட பிறந்த நாளுக்கு மறக்காம என்னை அழைப்பார். போயிட்டு சந்தோஷமா ஆடிப் பாடிட்டு வருவேன். சீனியர் ஆர்ட்டிஸ்ட்னு நினைக்காம, என் லெவலுக்குப் பழகுவார். இதோ தீபாவளிக்கு முன்னாடியே 7-ம் தேதி வர்ற அவரோட பிறந்த நாள் எனக்கு மினி தீபாவளி!''


''டான்ஸ்ல உங்களுக்கு அடுத்த தலைமுறை ஹீரோக்கள்ல யார் பெஸ்ட்?''


''ஒவ்வொரு ஹீரோவும் ஒவ்வொரு ஸ்டைல்ல பின்றாங்களே. சிம்பு, தனுஷ், பரத், சாந்தனு வரைக்கும் எல்லார் டான்ஸும் எனக்குப் பிடிக்கும்!''


''ஸ்டார் ஹீரோக்கள் நடிக்கிற மெகா பட்ஜெட் படங்கள் ஃப்ளாப் ஆகுது... புது முகங்கள் நடிக்கிற 'அட்டகத்தி’, 'பீட்சா’ படங்கள் ஜெயிக்குது... ஏன்?''


''அப்பவும் இப்பவும் எப்பவும் தமிழ் சினிமாவில் கதைதான் ஹீரோ... நடிகர்கள் இல்லை. அதைப் புரிஞ்சுக்கிட்டா எல்லா படங்களும் ஜெயிக்கும்!''


''பையன் சஞ்சய் என்ன பண்றார்?''


''ஏழாவது படிக்கிறார். கிரிக்கெட்ல பயங்கர ஆர்வமா இருக்கார். எந்த மேட்ச் நடந்தாலும் சாப்பாடுகூட இல்லாம டி.வி. முன்னாடி உட்கார்ந்துடுறார். புரொஃபஷனல் கிரிக்கெட் பயிற்சியும் எடுத்துக்கிட்டு இருக்கார். பார்ப்போம்... சேப்பாக்கமா... கோடம்பாக்கமானு!''- அழகாகச் சிரிக்கிறார் அப்பா விஜய்!




ஏ ஆர் முருகதாஸ் பேட்டி


எப்படி இருக்கு விஜய் கூட்டணி?"

'' இது, விஜய் ஸ்பெஷல் ஸ்டைல் ப்ளஸ் கமர்ஷியல் படம். ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருமே மும்பைத் தமிழ்க் குடும்பங்கள். கலர்... டெரர்னு கலந்துகிடக்கும் மும்பையின் சுவாரஸ்யமான முகம்தான் கதை.


 ஹீரோ ஜெகதீஷின் வாழ்க்கையில நடக்கும் விஷயங்கள், அதற்கு அவர் எடுக்கும் முடிவுகள்னு படம் பரபரக்கும். இடைவேளைக்கு அப்புறம் தடதடக்கும். நாலஞ்சு வருஷமாவே 'நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்’னு ஒவ்வொரு சந்திப்பிலும் நானும் விஜயும் பேசிப்போம்.


 ஏதேதோ காரணங்களால், ரெண்டு பேருமே பிஸியா இருந்தோம். இப்ப திடீர்னு எந்த முன்னேற்பாடுகளும் இல்லாம 'துப்பாக்கி’ யதேச்சையா முடிவாச்சு. சும்மா அவுட் லைன் மட்டும்தான் சொன்னேன். ஷூட்டிங் போறதுக்கு நாலு நாள் முன்னாடிதான் ஃபுல் ஸ்க்ரிப்ட் சொன்னேன். ரசிகர்களுக்கு தீபாவளி SPECIAL  FULL MEALS ஆக துப்பாக்கி வெடிக்கும்!''




''இந்தி 'கஜினி, 'துப்பாக்கி’னு கிட்டத்தட்ட மும்பைவாசியாவே ஆகிட்டீங்களே?''

''இந்தி 'கஜினி’ சமயமே மும்பையோட சந்துபொந்து எல்லாம் அத்துப்படி. வழக்கமா, 'மும்பையில் எடுத்தோம்’னு சொல்ற நிறையத் தமிழ்ப் படங்கள் அங்கே நாலஞ்சு நாள் ஷூட் பண்ணிட்டு, மீதி எல்லாத்தையும் தமிழ்நாட்ல ஷூட் பண்ணித்தான் மேட்ச் பண்ணுவாங்க.



வட இந்தியக் குடும்பம் வேணும்னு சொன்னா, சௌகார்பேட்டையில இருந்து 20 பேரை அழைச்சிட்டு வந்து நிப்பாங்க. 'துப்பாக்கி’யில் அந்தத் தப்பைப் பண்ணிடக் கூடாதுனு கவனமா இருந்தேன். காஸ்ட்யூம், வேலைக்காரர், டிரைவர், செட் பிராப்பர்ட்டினு எல்லாமே மும்பைதான். தாஜ் ஹோட்டல் பின்னணியில் நடுக் கடல்ல நிக்கிற கப்பல்லவெச்சு 15 நாள் ஷூட் பண்ணோம். கடல்ல இருந்து பார்க்க, மும்பை ரொம்பப் புதுசா இருந்தது. மும்பைக்காரங்களே பார்க்காத மும்பையை இந்தப் படத்தில் பார்க்கலாம்.''




''அஜீத், விஜய்னு ரெண்டு பேரையும் வெச்சுப் படம் பண்ணி இருக்கீங்க. ஒரு டைரக்டரா ரெண்டு பேரையும் எப்படிப் பார்க்குறீங்க?''

''இப்பக்கூட என்னை பாலிவுட்ல பார்த்தா, 'என்னது... நீங்க டைரக்டரா?’னு நம்பாம அதிர்ச்சியாகிறாங்க. இப்பவே இப்படின்னா,  10 வருஷத்துக்கு முன்னாடி நான் எப்படி இருந்திருப்பேன். ஆனா, அப்பவே என்னை நம்பி 'தீனா’ வாய்ப்பு கொடுத்தவர் அஜீத். அவர் எனக்கு வாழ்க்கை கொடுத்தவர். அவர் மேல் எனக்கு ரொம்பப் பெரிய மரியாதை இருக்கு.



ஆனா, நான் வளர்ந்து இந்திப் படம் வரைக்கும் இயக்கிய பிறகு, இப்போ ஏழாவதாப் பண்ற படம்தான் 'துப்பாக்கி’. விஜய் இப்போ என் நண்பர். அவர் யார்கிட்டயும் சினிமாவைத் தாண்டி எதுவும் பேச மாட்டார்னு சொல்வாங்க. ஆனா, அதை எல்லாம் தாண்டி நாங்க ரொம்ப அட்டாச்டு ஆகிட்டோம். இப்பவும் அஜீத், விஜய்... ரெண்டு பேரையும் சந்திச்சுட்டுத்தான் இருக்கேன். எங்கே சான்ஸ் கிடைச்சாலும் ரெண்டு தரப்பு ரசிகர்களும் கிண்டலடிச்சுக்கிறாங்க.





 ஆனா, அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் இன்னொருத்தரைப்பத்தி தப்பா கமென்ட் அடிச்சு நான் பார்த்ததே இல்லை. ஒருத்தரைப் பற்றி இன்னொருத்தர் பேசும்போது ரொம்ப மரியாதையாப் பேசிப்பாங்க. ரெண்டு பேருக்குள்ளயும் நல்ல நட்பு இருக்கு. அந்த நட்பு அவங்க ரசிகர்களிடமும் பரவணும்!''


 நன்றி - விகடன்


ட்ரெய்லர்



மேக்கிங்க் ஆஃப் துப்பாக்கி - துப்பாக்கி எப்படி எடுக்கப்பட்டது?



1. துப்பாக்கி பஞ்ச் -1000 பேரை அழிக்கும் தீவிரவாதிகளே உயிர்தியாகம் செய்யத்தயாரா இருக்கும்போது நாம ஏண்டா உயிர்தியாகம் செய்யக்கூடாது



2. துப்பாக்கி எதுவா வேணா இருக்கலாம் ,எந்த பிராண்டா வேணா இருக்கலாம், ஆனா அதுல தோட்டா நான்டா #துப்பாக்கி பஞ்ச்


3. நெட்டில் புரளி - டேக்கன் ஹாலிவுட்டின் தழுவல் தான் துப்பாக்கி என.# அது தவறான தகவல்


4. துப்பாக்கி விஜய் முதல் பாதி செம ஸ்பீடு ,பின் பாதி கொஞ்சம் ஸ்லோ என தகவல்

http://twitchfilm.com/assets_c/2012/10/Thuppaki_22-thumb-300xauto-34227.jpg



டிஸ்கி 1 போடா போடி -

 http://www.adrasaka.com/2012/11/blog-post_13.html

 டிஸ்கி 2 -துப்பாக்கி - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க-http://www.adrasaka.com/2012/11/blog-post_1598.html

 

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/b/b0/First_look_Thuppakki.jpg/220px-First_look_Thuppakki.jpg

Friday, October 12, 2012

மாற்றான் - சினிமா விமர்சனம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIpDjl6f40hGZPHKPdTi9s1sDrvmq8lI15fyePXbnhQZm10lKCn45lKwglrQB_yyInG4Gf0Ty3uDYqbF7Dpv63dpRWDGlQobrODRO4p0RLyLLY2rwazrDLoSalEkUIT62xF-uGiMqom-gk/s1600/Maatran+Audio+cover+Stills+(2).jpg

ஹீரோவோட அப்பா பெரிய  பேபி மில்க் பிராடக்ட் ஓனர். வெற்றிகரமா தொழில்ல முன்னேறியவர்.அவர் எப்படி மற்ற போட்டி கம்பெனிகளை எல்லாம் சர்வசாதாரணமா அடிச்சு முன்னேறுனார்ன்னு எல்லாருக்கும் ஒரு குழப்பம்.அப்போ ஒரு ஃபாரீன் லேடி பத்திரிக்கை ரிப்போர்ட்டர் என்ற போர்வையில்  அவர் கம்பெனிக்கு வந்து அவரை பேட்டி எடுக்கற சாக்குல  தொழில் ரகசியம் , அந்த பால் ஃபார்முலா ரகசியம் எல்லாம் தெரிஞ்சுக்கறா. 


இப்போ ஒரு திருப்பம். அந்த ஃபாரீன் லேடி பிரஸ் ரிப்போர்ட்டரும் இல்லை, போட்டி கம்பெனியும் இல்லை. ஃபாரீன் உளவாளி.ஹீரோவோட அப்பா தான் வில்லனே.

ஒலிம்பிக்ல  நடக்கும்  விளையாட்டு போட்டிகளில் யூ எஸ் பல தங்க பதக்கங்கள் வாங்க குறுக்கு வழியா ஊக்கமருந்து கண்டு பிடிக்கறார். சோதனைல யாராலும் கண்டு பிடிக்க முடியாத ஃபார்முலா . அந்த ஃபார்முலா சக்சஸ் ஆகி யு எஸ் அவரை கொண்டாடுது. அந்த ஃபார்முலாவை கொஞ்சம் சேஞ்ச் பண்ணி குழந்தைகளுக்கான பால் பவுடர்ல மிக்ஸ் பண்றாரு. 


 இதன் படி பசுக்கள்  2 மாதத்தில் வாழ்நாள்ல எவ்வளவு பால் கறக்க முடியுமோ அத்தனையும் கறக்கலாம். ஆனா பிற்காலத்துல இது ஆபத்து . ஒரு தலை முறையையே பாதிக்கும். சொந்த அப்பாவா இருந்தாலும் எப்படி பையன் அந்த சதியை முறியடிக்கறான் என்பதே கதை.. 



படத்தோட முதல் ஹீரோ எழுத்தாளர் சுபாதான். படத்தின் கதை வசனம் எல்லாம் அவர் தான். ஆனா டைட்டில்ல வசனத்துக்கு மட்டும் அங்கீகாரம் கொடுத்திருக்காங்க.. படத்துல ஏகப்பட்ட திருப்பங்கள் இருக்கு.. சுவராஸ்யம் கருதி அதெல்லாம் சொல்லலை,.,. படத்தின் முன் பாதி வேகம் பின் பாதில  அது மிஸ்சிங்க்... 


ஹீரோ சூர்யா ட்வின்ஸ்ஸா வரும்போது இரு மாறுபட்ட கேரக்டர்ஸ்க்கான வேறுபாட்டை வழக்கம் போல் நல்லா காட்டி இருந்தாலும் இடைவேளை டைம்ல இருந்துதான் அவர் கவுண்ட்டவுன் ஸ்டார்ட் ஆகுது..  சண்டைக்காட்சிகளில் பல இடங்களில் சாகசம் காட்டி இருக்கார். ஏழாம் அறிவு பாதிப்பு ஆங்காங்கே இருக்கு அவர் நடிப்பில் . குறிப்பாக சண்டைக்காட்சிகளில்// . ஆனால் ஏழாம் அறிவில் விட்டதை இதுல பிடிச்சுட்டார்னு சொல்லலாம்../ 


ஹீரோயின் கா ஜில்  வாவ் லால் சாரி காஜல் அகர் வால்.. ஒரு டன் கனகாம்பரப்பூக்களை ராட்சச மிக்சில அரைச்சு செய்யப்பட்ட மினியேச்சர்  பீட்ரூட் அல்வா அவர் உதடு. வாழை மரத்துக்கு ரோஸ் பவுடர் போட்டு விட்ட மாதிரி அவர் இடுப்பு ஐ மீன் இடை.. அவர் ஸ்லோ மோஷன்ல ஓடி வரும்போது பேக் கிரவுண்ட்ல  ”துள்ளி எழுந்தது காத்து சின்ன குயில் இசை கேட்டு”  பாட்டு நானா கற்பனை பண்ணிக்கிட்டேன்.. நடிப்பு சொல்லிக்கற அளவு இல்லைன்னாலும் ஜொள்ளிக்கற அளவு இருக்கு. இது போதாதா? தமிழ் நாட்டின் சி எம் ஆகவே ஆகலாம்..





இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. ஸ்டக் ஆன் யூ ஆங்கிலப்பட காப்பின்னு படத்தோட  ஸ்டில் வெளியானதும் தகவல் பரவியதும் படத்தோட கதையை அவசர அவசரமா மாத்தி  சரியா செட் ஆகற மாதிரி செஞ்சது.


2. சாருலதா படத்தின் சாயல் அந்த ட்வின்ஸ் பிரிப்பு  , ஒருவர் உயிர் துறப்பு மேட்டர்ல இருந்தாலும் அது பெரிய அளவில் பாதிக்காதவாறு திரைக்கதை அமைத்தது.


3. ஒளிப்பதிவு . லொக்கேஷன்கள் கலக்கலாய் அமைச்சது. கோ படத்துல பாடல் காட்சிகள் எப்படி சிலாகிக்கப்பட்டனவோ அதே போல் அந்த ஒற்றைப்பாறை காட்சி , மலை அருவிகள் இயற்கைக்காட்சிகள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது


4. படத்துல ஏகப்பட்ட திருப்பு முனை காட்சிகள். சில யூகிக்க முடிந்தவை , சில எதிர்பாராதவை. ஒரு நாவல் ஆசிரியர் எழுத்தை நம்பினார் கை விடப்படார் என்ற பாசிட்டிவ் எண்ணத்தை நிலை நிறுத்தியது


5. படத்தின் கதை அனுமதித்தும் ஹீரோ டாமினேஷனோ பஞ்ச் டயலாக்சோ இல்லாமல் இது டைரக்டர் படம் என சொல்ல வைத்தது.


6. ஹீரோவுக்கு  ஹீரோயின் எட்டாக்கனி என்பதை யாரும் கண்டு பிடிக்காத முறையில் கேமரா கோணங்களை வைத்தது..

7. பேசிக் இன்ஸ்டிங்க்  ஹீரோயின் ஷெரன் ஸ்டோன்  சாயலில் ஒரு ஃபாரீன் லேடியை சிறப்பாக நடிக்க வைத்தது , கா”ஜில்” அகர்வால் தக்கபடி உபயோகித்தது


8. ஆர்மர் ஆஃப் காட் படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை நினைவு படுத்தும் ஸ்டண்ட் மாஸ்டருக்கு ஒரு சபாஷ் .அந்த மரக்கிளை சீன் ஓக்கே.





 இயக்குநரிடம் சில கேள்விகள் 


1. படத்தோட ஓப்பனிங்க் சீன்லயே  ஹீரோ ஸ்லிப் ஆகி  கீழே விழுவது போல் அமங்கலமான  சீன் எதுக்கு? சூர்யா ர்சிகர்கள் கோவிச்சுக்க மாட்டாங்களா? கோடம்பாக்கம் செண்ட்டிமெண்ட் பார்க்குமே?



2. சூர்யாவோட அப்பா தற்கொலை செய்ய முயற்சி செய்யும் காட்சியில் பாத்ரூம் கதவை தாழ் போடாமல் இருப்பது ஏன்? தற்கொலை செய்பவர்கள் முதலில் செய்யும் காரியமே கதவை உள் பக்கம் தாழ் போடுவதுதானே? 


3. உண்ணாவிரதம் இருக்கும் தொழிலாளிகள் பாத்ரூமில் ஒளிச்சு வெச்சு சாப்பிடும் காட்சி உவ்வே + பல படங்களில் வந்தவை 


4. காஜில் அகர்வாலுக்கு அந்த  சோடா புட்டி கண்ணாடி பார்ட்டி செந்தமிழில் காதல் கடிதம் தருவது அந்நியன் அக்மார்க்  விக்ரம் ஸ்டைல். இதை சமாளிக்க ஹீரோயினே என்ன அந்நியன் ஸ்டைலா? என்ற வசனம் வேறு 



5. ஃபாரீன் லேடி  மில்க் கம்பெனிக்கு வந்து சர்வ சாதாரணமா டாக்குமெண்ட்சை ஃபோட்டோ எடுப்பது எப்படி? மேஜை டிராயர்க்கு லாக் எல்லாம் கிடையாதா? கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள ஃபார்முலாவை இப்படித்தான் அலட்சியமாய் தொறந்து போட்டுட்டு போவாங்களா? அது என்ன நமீதா ஜாக்கெட்டா? 


6. சூர்யாவோட அப்பா அந்த ஃபாரீன் லேடியை உளவாளின்னு கண்டு பிடிச்சதும் குஜராத் போகும்போது ஏன் தன் பசங்க கிட்டே அவ பற்றி எச்சரிக்கை  பண்ணலை? நான் இல்லாத சமயம் இவ வந்தா சேர்க்காதீங்க.. அப்டினு ஃபோட்டோ காட்டி இருக்கலாமே? அதே போல் கம்பெனி மேனேஜரிடம் அந்த ஃபாரீன் லேடி பற்றி எச்சரிக்கவே இல்லையே?


7. ஃபார்முலா சீக்ரெட் தந்த பின் மொத்தமா பணம் தராம அந்த ஃபாரீன் லேடி ஏன் தவணை முறைல பணம் தர்றா? கையில காசு வாயில தோசை ஃபார்முலாவை ஃபாலோ பண்ணலை , ஏன்? 





8. படத்தோட ஹீரோ சூர்யா என்ன ஷகீலாவா? அவர் குளிக்கறதை ஏன் விலா வாரியா காட்டனும்? ட்வின்ஸ் எவ்வளவு சிரமப்படறாங்க என்பதை காட்டத்தான் குழந்தையா இருந்தப்ப , சிறுவனா இருந்தப்போ காட்சிகள் வெச்சாச்சே? ஒரு வேளை கமல் மாதிரி பாடியை காட்டியே தான் ஆவேன்ன சூர்யா  அடம் பிடிச்சாரா?


9. ஃபாரீன் லேடி தன் ஹேண்ட் பேக்ல முக்கியமான ஆதார ஃபோட்டோக்களை அசால்ட்டா டேபிள்ல வெச்சுட்டு ஏதோ ஃபோன் வந்ததுன்னு அதை அப்படியே சூர்யா முன்னாடி வெச்சுட்டு அந்த பக்கம் போவது ஏன்? நானா இருந்தா அந்த பேக்கையும் கையில எடுத்துட்டு போய் இருப்பேன் 


10. தன் சொந்தக்குழந்தையை கொலை பண்ண முடிவு எடுக்கும் சொந்த அப்பா அதுக்கு ரொம்ப ஈசியான வழி 2 பேரும் தூங்கும்போது கொல்வதே. அதை விட்டுட்டு ட்வின்ஸ்ல ஒரு ஆள் விழிச்சிருக்கும்போது எந்த லூஸ் அப்பாவாவது  இன்னொரு குழந்தையை கொலை பண்ண ட்ரை பண்ணுவாரா? அந்த குழந்தை அம்மா கிட்டே சொல்லிடும்னு தெரியாதா? 


11. திருப்பத்துக்கு மேல் திருப்பம்  வேணும்கறதுக்காக க்ளைமாக்ஸ்ல சூர்யாவின் ”ராவணன்” ரகசியம் தேவையா? 


12. படத்துக்கு முக்கியமான காட்சியான ஃபாரீன் லேடி பென் ட்ரைவரை விழுங்குவது நம்ப்ற மாதிரியே இல்லையே? அதெப்பிடி தண்ணீர் இல்லாம ஒரு பென் டிரைவரை விழுங்க முடியும்? 


13. வில்லன் ஃபோன் நெம்பரை சூர்யா கண்டு பிடிச்சதும், மேனெஜர் கிட்டே  அந்த நெம்பரை சொல்லி ஃபோன் போடுங்க அப்டினு சொல்லும்போது வில்லன் டக்னு செல்லை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி இருக்கலாமே? ஏன் பேக்கு மாதிரி மாட்டிக்கறான்? டக்னு பேட்டரியை கழட்னாக்கூட போதுமே? 


14. மெடல் லேடி கிட்டே சூர்யா  ஹோட்டல்ல ஹால்ல எல்லாரும் பார்க்கும்போது லேப்டாப்பை ஓப்பன் பண்ணி அந்த ரகசியத்தை பற்றி டிஸ்கஸ் பண்றாரு. ஏன்? வில்லன் பார்க்கட்டும்னா? தனி ரூமுக்கு கூட்டிட்டு போய் செய்ய வேண்டியதுதானே? 


15.   காஜல் அகர்வால் லவ் பண்ணுன ஹீரோ சூர்யா ஆள் அவுட். அவரோட இதயத்தை பொருத்திய இன்னொரு சூர்யா தான் இப்போ உயிரோட . அதாவது நீ வருவாய் என படத்துல அஜித் கண்கள் ஆர் பார்த்திபன் கிட்டே பொருத்தப்பட்டதும் தேவயானிக்கு ஒரு குழப்பம் வருமே அந்த மாதிரி காஜல்க்கு நோ குழப்பம். எவனா இருந்தா எனக்கென்ன? சம்பளம் குடுத்தா சரி அப்டிங்கற மாதிரி லவ்வறது சரியா? கொஞ்சமாச்சும் தடுமாற்றம் , யோசனை வராதா? 


16. ஹீரோ அந்த மெடல் லேடி கிட்டே லேப் டாப் வெச்சு விளக்கிட்டு இருக்காரு. தத்தி வில்லன் மேனேஜர் விளக்கு பிடிச்ச மாதிரி வேடிக்கை பார்த்துட்டு இருக்காரு. மேலிடம் சொல்லித்தான் எதுவும் செய்வாரா? அவருக்குன்னு மூளை இல்லையா? அட்லீஸ்ட் அந்த ஆதாரத்தை லேப்டாப்பை பிடுங்கி இருக்கலாமே? 


17.தன் அப்பா தான் வில்லன்கற மேட்டர் தெரிஞ்சதும் சூர்யா ஏன் காஜல் கிட்டே அந்த மேட்டரை சொல்லலை?  ஆதாரம் அவ கிட்டே இருக்கு, அவ தன் அப்பா கிட்டேயே போய் குடுத்துட்டா என்ன பண்றதுன்னு யோசிக்க மாட்டாரா? ( அப்டித்தான் நடக்குது )

 


மனம் கவர்ந்த வசனங்கள் ( ரைட்டர் சுரேஷ் பாலா -சுபா)

1.காதலிச்ச யாராலும் கவிதை எழுதாம இருக்க முடியாது .கலீல் ஜிப்ரான் கவிதை படிச்சவங்க யாரும் காதலிக்காம இருக்க முடியாது



2.  உங்க 2 பேருக்கும் கனவு ஒண்ணாதான் வருமா? இதயம் மட்டும்தான் ஒண்ணு ,மத்த ஆல் பார்ட்ஸ் தனித்தனி கி கி



3. போட்டின்னு வந்துட்டா டீல் பண்ணனும் ,பீல் பண்ணக்கூடாது



4. எனக்கு இதயம் இல்லாம இருக்கலாம் ,ஆனா மனசுல ஈரம் இல்லாம இல்ல


5. நீ அரியர்ஸ் வெச்சிருந்தியே , என்னாச்சு? என்ன கண்டிஷன்ல இருக்கு?


 கஜினிங்கறதை  இதுல காட்றான்



6. லேடி - 8 வயசுல இவன் என்ன பண்ணான் தெரியுமா?

 ஆண்ட்டி.இதெல்லாமா சொல்வாங்க?






7. காஜல் - நான் இப்போ மப்புல இருக்கறதால  எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியுது போல//


 நோ நோ. உங்களுக்கு நாலு நாலா தெரிஞ்சா தான் தப்பு


8. எனக்கு டயபடிஸ் இருக்கு.. நானும் பாத்ரூம் போகனும்



 எனக்கு லெக் பீஸ்




9. பாரதியார் யார்னு தெரியுமா?


 ஒரு கோப்பையிலே என் குடி இருப்பு  பாடுனவர் தானே?


 அது கண்ண தாசன்




10. ஏம்மா? நீ போஸ்ட் பெயிடா? ப்ரீ பெய்டா?


-------


 அய்யோ அம்மா.. விடும்மா என்னை மன்னிச்சுடு


 இப்போ உன் கனெக்‌ஷன் ஆஃப் பண்ணிட்டா பார்த்தியா?




11. இவன் தான் உன் லவ்வரா? எங்கே பிடிச்சே? 1 வாங்குனா 1 ஃப்ரி மாதிரி..



12. இது நீ கட்டிக்கப்போற பொண்ணா?



 ஆமா, எப்டி தெரியும்?




 கண்ல பார்த்தாலே அது தெரிஞ்சுடும்









எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 43

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBd9rtjAch64_OPY7r3dxTmp4wvjCh1oVF3Eol1O2_gtK6IGI-TnomfDwuiEn-MP-qbjcajHBjMY3LNKb0-NROjsk-DzPEhHia7zxdmg-f_5dNaGnvRtlSlSDCHX9Sg-KuaauuTDd68TBU/s1600/kajal-agarwall19.jpg



சி.பி கமென்ட் - முன் பாதி வேகம் பின்பாதில இல்லைன்னாலும் இது கவனிக்கத்தக்க படமே. பெண்கள், சூர்யா ரசிகர்கள் என எல்லா தரப்பையும் கவரும். ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன்


இந்தபடத்தில் பணி ஆற்றிய இயக்குநர், ஹீரோ , ஹீரோயின் பேட்டி மற்றும் பாடல் வரிகள் விபரமாய் படிக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_9785.html



http://searchandhra.com/english/wp-content/uploads/2009/08/Kajal-Agarwal-Photo-Gallery-Latest-hot-7.jpg