Showing posts with label கமெண்ட். Show all posts
Showing posts with label கமெண்ட். Show all posts

Wednesday, September 25, 2019

கண்ணாடியைத்திருப்புனா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும்?
1 : புதிய மின் இணைப்புக்கான, 'டிபாசிட்' தொகையை உயர்த்துவது குறித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தான் முடிவு செய்கிறது. அது குறித்து, கருத்து கூற முடியாது.- தங்கமணி 


அப்போ மின்சாரத்துறை அமைச்சர் பதவி டம்மி போஸ்ட்டா?


ஷாக்கிங் நியூசா சொல்றாரே மின் துறை அமைச்சர்

===================

 2  தமிழக மக்கள், யாரை எங்கு வைக்க வேண்டுமோ, அங்கு தான் வைத்துள்ளனர். இதை, நடிகர் விஜயை கேட்டுத் தான், மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.-அமைச்சர் ராஜு:

பட ரிலீஸ் டைம்ல பரபரப்புக்காக ஹீரோக்கள் எதுனா அடிச்சு விடறதுதான்,. அதை எல்லாம் சீரியசா எடுத்துக்கிட்டு மெனக்கெட்டு பதில் சொல்லிட்டு


பிகில் பத்தி ஒரு டகில் கருத்து சொல்ல்ஜுதே அடடே!


=================== 

3   நடைபெற இருக்கும் சட்டசபை இடைத்தேர்தலில், விக்கிரவாண்டி தொகுதியில், தி.மு.க.,வும், நாங்குநேரியில், காங்கிரசும் போட்டியிடும். புதுச்சேரியில்,
காமராஜ் நகர் தொகுதியிலும், காங்கிரஸ் போட்டியிட முடிவாகியுள்ளது-ஸ்டாலின்:
 

காமராஜ் பேரைக்கேட்டாலே திமுக வுக்கு பயம் வந்துடுது போல 


கூட்டணி காட்சிக்கு 2 தனக்கு 1 என நிர்ணயித்த முதல் கட்சி நம்முதுதான். கட்சி அவ்ளோ பலவீனமா?

====================
.  4 
  கீழடி அகழாய்வு கண்டுபிடிப்புகளை, உலகம் அறியச் செய்ய வேண்டும். அதற்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது. விரைவில், டில்லி சென்று, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை சார்ந்த மந்திரிகளை சந்தித்து பேச உள்ளேன். ௧௧ புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, அடுத்த கட்ட அகழாய்வு நடத்தப்படும்.-பாண்டியராஜன் 

தமிழ் நாட்டுக்கு உதவி செஞ்சுட்டுதான் மத்த வேலையைப்பாப்பாங்க , அட ஏங்க நீங்க  வேற  

==================

'5 அமெரிக்காவில், 75 ஆண்டுகளாக மனித நேயத்திற்கு குரல் கொடுத்து வரும் அமைப்பு, வீரமணிக்கு, மனித நேய வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க உள்ளது. முதன் முதலாக, இந்தியர் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுவது, மகிழ்ச்சி அளிக்கிறது.- ஸ்டாலின் 

ஓஹோ , 75 வருசமா இருக்கற அமைப்பு பெரியார் , அண்ணா , காமராஜர் , கலைஞர் இவங்க ளை எல்லாம் விட்டுட்டு வீரம்ணிக்கு ஏன் தந்தாங்க?


வீரமணிக்கு விருதா? money மணி விஷயத்துல விளையாண்டிருக்குமோ?


=================  


6,  நிறுவனங்களின் வரியை, நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் குறைத்துள்ளார். இதனால், இந்தியாவின் மதிப்பு கூடும்; முதலீடுகள் வரும்; ஏற்றுமதி அதிகரிக்கும்; வேலைவாய்ப்புகள் கூடும்; பணப்புழக்கம் அதிகரிக்கும்; நிறுவன பங்குகள் வைத்து இருப்பவர்களுக்கு, கூடுதல் லாபம் கிடைக்கும்.- அமித் ஷா 


 நல்ல காலம் பிறக்குது    நல்ல காலம் பிறக்குது  
  ஜக்கம்மா சொல்றா மொமெண்ட்


கேட்கறதுக்கு நல்லாதான் இருக்கு , சர்க்கரைனு பேப்பர்ல எழுதுனா இனிக்குமா?

=============== 

ஸ்டாலினை,  நட்சத்திர ஓட்டல் ஒன்றில், நடிகர் விஜய் சந்தித்து பேசினார். அதன் தாக்கம் தான், சமீபத்தில் நடந்த, அவரின் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தமிழக அரசு மீது சாடியது. அந்த உண்மை இப்போது தான் தெரிய வந்துள்ளது- அமைச்சர், ராஜு  

உளவுத்துறை  ரொம்ப லேட் போல


 அப்போ நீங்க ஒரு டைம் விஜயை சந்திச்சுப்பேசுனா  திமுக வைக்குறை கூறி மேடைல பேசுவாரோ?

====================

8  உலக அளவில் பொருளாதார மந்த நிலை நிலவுகிறது. அது, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்திய மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. இதனால்,
உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1-தபன்சென்

 ஆனா டாஸ்மாக் மட்டும் அமோகமா விற்பனை ஆகுதே அது எப்படி?


===================
 

9  நேரு, படேல் இருவரும் நல்ல மனிதர்கள் தான். நல்லவர்களை விட, வல்லவர்கள் தான், நாட்டை ஆள வேண்டும். படேலின் புத்திசாலித்தனத்தால் தான், அரசியல் அமைப்புச் சட்டத்தின், ௩௭௦வது பிரிவில், 'தற்காலிகமாக' என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது. அவரின் புத்திசாலித்தனம் தான், இப்போது நமக்கு உதவியுள்ளது. - எஸ்.குருமூர்த்தி   

தற்காலிகமாக நீங்க சொல்றதை ஏத்துக்கறோம்

அப்போ மோடி வல்லவர் ஆனா நல்லவர் இல்லைனு சொல்ல வர்றீங்களா?

=================


10    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ.,யால் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை,  சோனியாவும், மன்மோகன் சிங்கும் நேரில் சென்று சந்தித்தனர்.

ஆறுதல் சொல்லப்போனாங்களா?காட்டிக்கொடுத்துடாதேனு சொல்லப்போனாங்களா?


============


11   எனக்கும், முதல்வர், இ.பி.எஸ்.,சுக்கும் இடையே, நல்ல புரிந்துணர்வுடன், சுமுகமான போக்கு உள்ளது. நீங்கள் தான், பிரிக்க நினைக்கிறீர்; அது நடக்காது.- பன்னீர்செல்வம்: 

2 பேரும் ஒற்றூமையா இல்லைன்னா 2 பேருக்குமே நல்லது இல்லை என்ற புரிந்துணர்வா?


அப்போ தர்ம யுத்தம் இப்போதைக்கு இல்லையா?

================
12 : நாட்டின் அடையாளமாக, ஹிந்தி மொழி இருக்க வேண்டும் என கூறிய, அமித் ஷா, தமிழகம் வரும் போது, அவருக்கு, காங்கிரஸ் சார்பில் கறுப்புக்கொடி காட்டப்படும் என, காங்கிரஸ் தீர்மானம்  - பத்திரிகை செய்தி 

நீங்க காட்டுன கறுப்புக்கொடியை அவர் பார்க்கலைன்னா?

 இத்தாலி மொழின்னா ஓக்கேவா?

==============

13 :பெங்களூருவிலிருந்து, 150 கி.மீ.,யில் உள்ள பெம்மணஹள்ளி என்ற கிராமத்திற்கு நான் சென்ற போது, தலித் என்ற காரணத்திற்காக, என்னை அந்த கிராமத்திற்குள் விட, மக்கள் தடுத்தனர். நான் அந்த ஊருக்குள் சென்றால், தெய்வ குற்றம் ஆகிவிடும் என்றனர். அவர்களிடம் பேசிப் பார்த்தேன்; அவர்கள் மசியவில்லை. அவர்கள் மீது, போலீசில் வழக்கு தொடர விரும்பவில்லை. அறிவு புகட்ட முடிவு செய்துள்ளேன்-சித்ரதுர்கா லோக்சபா, பா.ஜ., - எம்.பி., நாராயணசாமி


அத்தனை பேருக்கும் அறிவு புகட்டறதுக்குள்ள அடுத்த எலக்சனே வந்துடுமே?

====================
.
14 ' 'காவிரி கடை மடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை' என, 10 நாட்களுக்கு முன் கூறியோர், இப்போது அதை அப்படியே மாற்றி, 'காவிரி நீர், வீணாக கடலில் கலக்கிறது' என்கின்றனர். கடைமடையின் கடைசி பகுதி தான் கடல். இதன் மூலம், கடை மடைக்கு தண்ணீர் சென்றடைந்து விட்டது உறுதியாகியுள்ளது.-தமிழக உணவுத்துறை அமைச்சர், காமராஜ் :

எல்லா ஆறுகளும் கடலில் கலப்பதுதானே இயற்கை?


============= 
15  : வைகோவுக்கு, சமீபத்தில் உடல் நலமில்லாமல் போய்விட்டது; அதை அறிந்து துடித்துப் போனேன். அவருக்கு ஒரு அறிவுரை. கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்; உணர்ச்சி வயப்படாதீர்கள். இனிமேல் அவர் கோபப்பட மாட்டார் என, நம்புவோம்.-வீரமணி 

கோபத்தைக்குறைக்கனும்,. அதே சமயம் நிருபர்கள் ஏதாவது கேள்வி கேட்டா வள் வள்னு குரைக்கக்கூடாது

==================


16  நான், பைக் ஓட்டி, பல ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இரண்டாண்டுகளுக்கு முன் தான், மீண்டும் ஓட்டினேன்-ஜக்கி வாசுதேவ்அதான் சமூக வலைத்தளங்கள்ல உங்களை ஓட்டிட்டு இருக்காங்களே?


==================\
17 
. காவிரி கூக்குரலுக்காக, கர்நாடகாவின் தலைக்காவிரியிலிருந்து பைக் பயணத்தை துவக்கியுள்ளேன். இவ்வளவு நீண்ட துாரம் நான், இது வரை பைக் ஓட்டியதில்லை. கர்நாடகாவில் பயணத்தை துவக்கிய போது, மழை கடுமையாக இருந்தது. வழுக்கும் சாலைகளில், நிதானமாக ஓட்டி வந்தேன்.- ஜக்கி வாசுதேவ் 

 உங்களோட ஆயிரக்கணக்கான பைக் வந்ததே , அந்த புகை எல்லாம் 
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்டுக்கலையா?


==============

18   அன்னை தமிழை காப்பது தான் நமக்கு பெரு மகிழ்ச்சி. அதற்கான போராட்டமே, நம் திருவிழா!  - ஸ்டாலின்

நம்ம வாழ்க்கை பூரா போராடிட்டே இருக்க வேண்டியதுதான் போல 


=================

19 'மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்றம் செய்வது பற்றி பிரதமர் மோடியுடன் ஆலோசித்தேன்'' - மம்தா பானர்ஜி

 கண்ணாடியைத்திருப்புனா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும்?


பேரை மாத்தற மாதிரி முதல்வரை மாத்திடப்போறாங்க ஜாக்கிரதை


மாற்றம் முன்னேற்றம்கற பாமக் கொள்கையை இவரு இப்படிப்புரிஞ்சுக்கிட்டார் போல 


==================


 அதுக்கு டாஸ்மாக் வாசல்ல ஒரு ஆளை அமர்த்துனா போதுமே?

இவரு கணக்கெடுத்து அடுத்து என்ன குண்டு தூக்கிப்போடப்போறாரோ?

=======================

Tuesday, September 24, 2019

கட் அவுட் க்கு கெட் அவுட் சொன்ன தானைத்தலைவா

1  தமிழகத்தில், 'கட்-அவுட்' வைக்கக் கூடாது என அறிவித்து, பிரகடனமும் செய்து, செயல்படுத்திய ஒரே கட்சி, எங்களின், ம.தி.மு.க., தான்!- , வைகோ:

கட் அவுட் க்கு கெட் அவுட் சொன்ன தானைத்தலைவா அப்டினு ஒரு கட் அவுட் பார்த்தோமே? அது நம்ம கட்சி ஆளுங்க தான?


---------------------
2      அமித் ஷாவின், ஹிந்தி திணிப்புக் கருத்துகளை கண்டித்து,  மாவட்ட தலைநகரங்களில், மாபெரும் போராட்ட, கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளோம்-ஸ்டாலின்:

நமக்கும் பொழுது போகனுமில்ல? 


ஹிந்தி ஒழிக அமித்ஷா வீழ்காப்டினு க்ட் அவுட் வெச்சுடப்போறாங்க ,புடிச்சு உள்ளே போட்டுடுவாங்க 


================


 சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், தமிழகத்தில் தயாரிக்கப்படும், மின் வாகனங்களுக்கு, முதல் மூன்று ஆண்டுகளுக்கு,  மோட்டார் வாகன வரி விலக்கு அளிக்கப்படும்;-பத்திரிகை செய்தி:


   ஷாக் சர்ப்பரைஸ் நியூஸ்


மயில் வாகனம்னு பேர் இருந்தாக்கூட அவரு வருமான வரி கட்ட வேண்டியதில்லையா?

==============

 பொதுவாக, ஆறுகள், நீர்நிலைகள் கோடை காலத்தில் வற்றியிருக்கும். அந்த நேரத்தில் தான், துார் வாருவர். ஆனால், இப்போது ஆறுகளில், கால்வாய்களில் தண்ணீர் திறந்து விட்ட பின், துார் வாருவது எதற்காக? - தினகரன் : 

எதிர்க்கட்சிகள் இப்டி தூர் வாரி தூற்றத்தான்

================

5 ,   தி.மு.க.,வில் சாதாரண தொண்டனால், ஒரு போதும், முதல்வராக ஆக முடியாது. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி தான், அக்கட்சியில் தலைவராக முடியும்; முதல்வராக முடியும். ஆனால், அ.தி.மு.க.,வில் யார் வேண்டுமானாலும், தலைமை பொறுப்புக்கு வர முடியும்.-ஓ.எஸ்.மணியன் 


அண்ணே! பக்க்த்து இலைக்குப்பாயாசம் போடுங்க , அப்டியே நமக்கும்,,,,


=================
6  வாழ்க்கைமுறை கோளாறுகளால், நோய்கள் ஏற்படுகின்றன. வாழும் முறையில் மாற்றங்களை மேற்கொண்டால், நோய்களை சரி செய்ய முடியும். இந்த மாற்றம் தொடர்பான உத்வேகத்தை, மக்களிடம் ஏற்படுத்தவே, 'பிட் இந்தியா' இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு இந்த திட்டம் வழிகோலும்.-அஸ்வினிகுமார் சவுபே 


பிட் இந்தியாவா? இந்தியாவை பிட் பிட்டா துண்டாட நினைக்கும் சதி இது அப்டினு எதிர்க்கட்சிகள் கிளம்புவாங்களே?

=================

7   தமிழகத்தின் முதல்வராக, அண்ணாதுரை பொறுப்பேற்றதும், தமிழகத்தில் மாற்றங்கள் வரத் துவங்கின. சட்டசபையில், 'சென்னை மாகாணம்' என்று இருந்ததை, 'தமிழ்நாடு' என மாற்றினார். 'மெட்ராஸ்' என இருந்ததை, 'சென்னை' என மாற்றினார். சென்னை மாநகரில் அறிஞர்கள், கலைஞர்களுக்கு சிலைகள் வைத்தார்.- வைகை செல்வன் 


கலைஞருக்கு சிலை வெச்சதும் அண்ணா தான்னு ஒரு கூட்டம் கிள்ம்புமே

==================? கேரள அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அனைத்து தேர்வுகளுக்கும், மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் தான் இனிமேல் கேள்விக் தாள்கள் இருக்கும். தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு மலையாளத்தில் போதுமான வார்த்தைகள் மொழிபெயர்க்கப்படவில்லை. அந்த தேர்வுகளுக்கும் விரைவில், மலையாளத்தில் வினாத்தாள் தயாரிக்க நடவடிக்கை மே  
 மின் வாகன உற்பத்தி தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும்  -  பினராயி விஜயன் 

திராவிட வாசம் வீசுதே? தமிழ்நாடு டூர் வந்துட்டுப்போனாரா?

================சர்தார் வல்லபபாய் படேலை எதுக்கு வம்புக்கு இழுக்கறார்னு யாரும் சந்தேகப்”படேல் -”

================


10   நம்பத் தகுந்த கூட்டணி கட்சியில்லை என்பதை, காங்கிரஸ், மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.-மாயாவதி 

இன்னும் எத்தனை டைம் நிரூபிச்சா அவங்க கூட கூட்டணி வைக்க மாட்டீங்க? 

 ============
11  

பகுஜன் எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசில் ஐக்கியம் 'இது பச்சை துரோகம்' - மாயாவதி பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் வருமோ?


=================

1 2  நான் தமிழர்களை திட்டவில்லை. தமிழை வைத்து அரசியல் நடத்துபவர்களைதான் நன்றி கெட்டவர்கள் என சொன்னேன்'' - பொன்.ராதா

தமிழ் நாட்ல தமிழை வெச்சு அரசியல் பண்ற கட்சி ஏகப்பட்டது இருக்கு , யாரைச்சொல்றீங்க?


==============


13    இம்மாத இறுதிக்குள் 

நீர் நிலையை சீரமைக்காத அதிகாரிகளுக்கு'கல்தா!'

பணிகளை முடிக்காத, அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்படி, தலைமை செயலருக்கு, அவர் அதிரடி உத்தரவு


 தண்ணி இல்லாக்காட்டுக்கு மாத்திடுவாங்களோ?


================


14  தி.மு.க.வினர் நடத்தும் ஹிந்தி போதக பள்ளிகளை சமச்சீர் கல்விக்கூடமாக மாற்ற வேண்டும்= எச்.ராஜா  #  அப்றம் டொனேஷன்  எப்டி கறக்க முடியும்?

================


15 நேர்மை என்பது எள்ளுமுனை அளவாவது இருக்குமானால் போராட்டம் நடத்தும் முன் தி.மு.க.வினர் நடத்தும் ஹிந்தி போதக பள்ளிகளை சமச்சீர் கல்விக்கூடமாக மாற்ற வேண்டும். இல்லையேல் உங்களின் இரட்டை வேடத்தை மக்கள் புரிந்து கொள்வர்-எச்.ராஜா 

 நேர்மையா? நேர்மைங்கற சொல் வர்றதால ஹமாம் சோப் விளம்பரத்தைக்கூட அரசியல்வாதிகள் பார்க்கறதில்லையா,ம்

=========================

Thursday, September 19, 2019

தனியார் மயம் ஆவதை ஒத்துக்க மாட்டோம்னு ஒரு கூட்டம் கிளம்புமே?

1 செங்கோட்டையன்: புதிய பாடத்திட்டம் என்பதால், 'டெட்' தேர்வில் அதிக ஆசிரியர்கள் தேர்ச்சி அடையவில்லை.

அப்போ  மாணவர்களுக்கு பழைய பாடத்திட்டமா?ஆசிரியர்களே 1% பேர் கூட பாஸ் ஆகலைன்னா அவங்க கிட்டே படிச்ச மாணவர்கள் கதி?

 ஆத்தா , நான் ஃபெயில் ஆகிட்டேன்னு ஆசிரியர்கள் வருந்துவாங்களோ?

வெல் எஜுக்கேட்ட்”டெட்” டீச்சர்ஸ்க்கே இந்த கதியா?


வெற்றிக்கோட்டைத்தொட முடியாம கோட்டை விட்டுட்டாங்களா? மிஸ்டர் செங்கோட்டை?

=================


2  கடந்த, 25 ஆண்டு கால வரலாற்றை பார்க்கும்போது, இந்திய பொருளாதாரத்தில், ஏற்றம், இறக்கம் இருந்தபடியே தான் இருக்கிறது. இதை, பா.ஜ., அரசு சரி செய்துவிடும்.- ஜெயகுமார்:  பாஜக அதிமுக வையே கரெக்ட் பண்ணிடுச்சு,கர்நாடகா அரசை கரெக்ட் பண்ணிடுச்சு, இது பெரிய விஷயமா?

 அதுவா சரியானாதான் உண்டு

==================


3 , பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு போன்றவை அறிமுகம் செய்யப்பட்டதால், சிறு தொழில் துறையில் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகரித்து, இன்று, இந்திய பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதை, அரசு ஒப்புக் கொள்ள வேண்டும்.-ராமதாஸ்:  

தேர்தல் பிரச்சாரத்துல இதை சொல்லலை, நல்ல வேளை , உள்ள கொஞ்ச நஞ்ச ஓட்டும் கிடைக்காம போய் இருக்கும்


================

4  சமீபத்தில், முதல்வர் குறித்து, ஸ்டாலின் பேசும்போது, 'உதவாக்கரை, துப்புகெட்ட...' என்பது போன்ற, கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தினார்.-

, மேட்டூர் எம்.எல்.ஏ., செம்மலை 

அரசியல்வாதிகள் எல்லாருமே உதவாக்கரை வேட்டிகள் தானே?


கரை வேட்டிகள்  கறை வேட்டிகள் ஆகிடுச்சா?

==============

ஸ்டாலின் பேசும்போது,  அமைச்சர் ஜெயகுமாரை, 'ஜோக்கர்' என்கிறார். =மேட்டூர் எம்.எல்.ஏ., செம்மலை 

நிறைய ஜோக் சொல்வாரா?

================
6  நாம் பேசுவது, ஒருநாள் நமக்கு எதிராக திரும்பும்.-மேட்டூர் எம்.எல்.ஏ., செம்மலை 

 அதுக்காக நாம பேசாமயே இருக்க முடியுமா? - துண்டுச்சீட்டில் உள்ளபடி ஸ்டாலின்


==============

 7 ஸ்டாலின் கொச்சையாகவும், ஆணவமாகவும் பேசுவது, அவர் வகிக்கும்பதவிகளுக்கு அழகல்ல.-மேட்டூர் எம்.எல்.ஏ., செம்மலை 


மேடையில் கை தட்டல் கிடைக்கனும்கறதுதான் அரசியல்வாதிகளின் இச்சை, அதுக்காக அவங்க கைல எடுத்திருக்கும் ஆயுதம் தான் பேச்சு கொச்சை


===============
8 இந்தியா, இதுவரை இல்லாத பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது.ஆனால், மத்திய நிதியமைச்சர், இதை மூடி மறைத்து வருகிறார்.- முத்தரசன் 


 மோடி மஸ்தான் , மூடி மஸ்தான் வேலை

===============
9   மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, மாநிலங்களின் அதிகாரத்தை பறிப்பதாக உள்ளது.நாட்டின் பிரதமர் முதல், அதிகாரிகள் வரை அனைவரும், ஆர்.எஸ்.எஸ்., சொல்வதை கேட்பவர்களாக உள்ளனர்.- முத்தரசன் 


  ஆர் நோ நோ-னு இயக்கத்தோட பேரை மாத்தனுமா?

===================

10  ராஜதானி, சதாப்தி உள்ளிட்ட,பிரீமியம் கட்டண ரயில்களை, தனியார் இயக்க, ஒப்பந்தப்புள்ளி கோர, பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான, ரயில்வே துறையை, தனியார் மயமாக்கும் முயற்சிகள், நாட்டின் பொருளாதாரத்தில், கடும் விளைவுகளை ஏற்படுத்தும். - வைகோ : 

 சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு , வயித்தை கலக்குது பாரு இவங்க அரசியல் ஸ்டைலு

===============


11 பயணியர் கட்டணம் உயர்த்தப்படும்.ஏழைகளுக்கு ரயில் பயணம், எட்டாக்கனியாகி விடும். ரயில்வே துறையை, தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை, மத்திய அரசு கைவிட வேண்டும்.- வைகோ 


சாதா ரயில் கட்டணமே புல்லட் ரயில் கட்டண ரேஞ்சுக்கு மாறிடும்


===============: 

12    தமிழகத்தில், தீவிரவாதிகள் ஊடுருவல் என்பது உண்மையாக இருந்தால், மனம் திருந்தி, அவர்களாகவே வெளியேற வேண்டும். -தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர், அன்பழகன்

 கேப்டன் விஜயகாந்த் படத்தின் க்ளைமாக்ஸ்;ல தான் அப்படி நடக்கும்

====================


13  இல்லை என்றால், அரசு கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும். தற்போது, தமிழகத்தில், கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.-தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர், அன்பழகன்

தயவு செஞ்சு வெளியேறிடுங்க நு கெஞ்சிட்டு , அப்டி  இல்லைன்னா நடக்கறதே வேறனு மிரட்றாரு

=====================

14  அக்., 2 முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு இயக்கம்: 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் மோடி அறிவிப்பு


 மூக்கு , கன்னம் , உதடுனு பிளாஸ்டிக் சர்ஜரி பண்ற நடிகைகள் கலக்கம்

===================

15  நாட்டின் முக்கிய ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், மற்றும் வணிக வளாகங்களில், 'பிளாஸ்டிக் கப்' பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்து, மண்ணால் ஆன குவளைகள் பயன்படுத்த வேண்டும்' என, மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.


 மன் கி பாத் தை விட இந்த மண் கி பாத் நல்லாருக்கு

 மண் பாண்டத்தை விட தேங்கா ஓடு நல்லது

================ கடைசி வரை கட்சியை தூர் வாரும் ஐடியாவே இல்ல போல 


================= நல்லா அந்த தவில்காரன் காதுல விழற மாதிரி சொல்லுங்க , பணமே எடுக்கலைன்னாக்கூட சர்வீஸ் சார்ஜ் வருசா வருசம் தீட்டறாங்க 


====================


18 வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை சரி பார்ப்பதை, ஏ.டி.எம்., இலவச பயன்பாடாக கருதி கணக்கில் சேர்க்கக்கூடாது' என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. 


குறிப்பா எஸ்பிஐ பேங்க்குக்கு தான் சொல்லனும், ஒரு டம்ளர் தண்ணீர் பேங்க் ல குடிச்சாக்கூட அக்துக்கும் சர்வீஸ் சார்ஜ் ;போடுவாங்க போல 

======================


19   புதுக்கோட்டை:குழந்தைகள் அழுதால், தொட்டிலை ஆட்டும் இயந்திரத்தை கண்டுபிடித்து, விவசாயி சாதனை ..

அந்த இயந்திரத்தை ஆன் பண்ரது  யாரு? அம்மாக்கள் தான் டி வி சீரியல்ல பிசியா இருப்பாங்களே?


====================
தனியார் மயம் ஆவதை ஒத்துக்க மாட்டோம்னு ஒரு கூட்டம் கிளம்புமே?

=====================

Wednesday, September 18, 2019

கலந்து கட்டி எடுக்கலாம்னு வந்திருக்கேன்
1  60 வயதிலும் கணவரின் கண்ணுக்கு மனைவி ஐஸ்வர்யராயாக தெரிந்தால்"என்ன அர்த்தம்?கல்யாணம் ஆனதுல இருந்தே மனசளவுல அவன் அபிஷேக் பச்சனுக்கு துரோகம் பண்ணி இருக்காப்டினு அர்த்தம்=-============


2 டாக்டர்,கேரட்... மனஅழுத்தத்தைக் குறைக்கும் உணவு னு சொல்றாங்களே ,அது நிஜமா?ஆமா,ஆனா கேரட்"விலை"கிலோ 80 ருபா ங்கறதை மறந்துடனும்,விலையைக்கேட்டா டென்ஷன்"ஆகிடுவீங்க

=========

3 ஜட்ஜ் = பாலியல் பலாத்காரம் பண்ணுனியா?கைதி = அய்யா ,நான் போராளிங்க.
ஜட்ஜ் = கல்யாணம் பண்ணிக்கறேன்னு ஆசை வார்த்தை சொன்னியா?
கைதி = ஆல்ரெடி கல்யாணம் ஆகிடுச்சுனுதாங்க சொன்னேன்,அது தப்பா புரிஞ்சிக்கிடுச்சு


=============


4 ஜட்ஜ் = சம்மன் அனுப்புனோம் ,ஏன் ஆஜர் ஆகல?கைதி − சாமி வந்துடுச்சுங்க
என்னம்மா கத விடறே? சாமி முதல் பாகம் 2013 ல வந்துடுச்சு
2 ம் பாகம் 2018 ல வந்துடுச்சு,உனக்கு மட்டும் ஸ்பெஷலா 2019 ல சாமி வந்துதா?


===========


5 தலைவரே!தேர்தல்ல ஜெயிச்சா நீங்க நடத்தற சாராய ஆலைகளை மூடுவீங்களா?னு ஒருத்தர் கேட்டாராமே?ஆமா,மூடீட்டோம்
சபாஷ்,சாராய ஆலையையா?
இல்ல ,கேள்வி கேட்டவரோட ட்விட்டர் அக்கவுண்ட் ,FB A/C , பேங்க் A/C எல்லாத்தையும் சப்ஜாடா மூடீட்டோம்,யாரு கிட்ட?=============


6 லஞ்ச் ஓவரா?ச்சே!ச்சே! டிபனோ,லஞ்ச்சோ,டின்னரோ எதுவா இருந்தாலும் லிமிட்டாதான்,ஓவரா எல்லாம் கிடையாது,டயட்=============


7 டாக்டர்,மதிய வேளையில் தூங்குபவர்கள் அதிகம் யோசிக்கும் திறன் கொண்டவர்கள் என்பது உண்மையா?ஆமா,வேலை ,வெட்டி இல்லாதவங்கதான் மத்தியானம் தூங்குவாங்க,எதிர்காலத்துல நாம என்ன பண்ணப்போறோம்?எப்டி சம்பாதிக்கப்போறோம்னு அதிகம் யோசிக்க வேண்டி இருக்கும்


==============


8 ஜட்ஜ் = சுடிதார் போட்டு அதுக்கு மேல சேலை கட்டி இருக்கீங்களே எதுக்கு?பேராசிரியை நிர்மலா தேவி = போலீஸ் விசாரணைல இருக்கும்போது இரண்டு அடுக்கு பாதுகாப்பு
================


9 உங்க நாலாவது பொண்ணுக்கு நான்டி அப்டி னு பேர்"வெச்சிருக்கீங்களே?ஏன்?3 வது பொண்ணுக்கு ஆல்ரெடி நான்சி னு வெச்சாச்சு,சி க்கு அடுத்து டி தானே?=============


10 யுவர் ஆனர் ,பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான கைதி மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கார்இதை சொன்னது யாரு?செக்கப் பண்ண டாக்டரா?
இல்லை,மனநிலை பாதிக்கப்பட்ட குற்றவாளியே சொன்னார் ,நமக்கு டாக்டர் fees மிச்சம்===============


11 குருவே!வயதாகி விட்டாலே அறிவுரை சொல்லத் தகுதி வந்து விட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள் சிலர் என்ற கருத்து சரியா?தவறா?தனது ஆயுட்கால அனுபவ அறிவை இலவசமாக இளைஞர்களுக்கு வழங்க நினைப்பது முதுமை,
நீ யார் எனக்கு அறிவுரை சொல்ல?என பொங்குவது இளமை=============


12 அப்பா ,ஒரு கதை சொல்லுஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டுட்டு இருந்தாங்க
அவங்க விஜய்"ரசிகையா? எப்டி தெரியும்?
வடை சுடறதுன்னாலே அவங்கதானே?===============


13 டீச்சர்,நியூசிலாந்து என்பதை சிலர் தூய தமிழில் புதிய சிலாந்து னு சொல்றாங்களே?இது சரியா?


தமிழை வளர்க்கறேன்
தமிழைக்காப்பாத்தறேன் னு இறங்கவங்க பெரும்பாலும் தமிழை கொல்றவங்களே! தமிழகத்தை சூறையாடுபவர்களே!


=================


14 வாழ்நாள்லயே மேக்சிமம் பத்து தடவை மட்டுமே கட்ற கல்யாணப் புடவைய எதுக்கு அவ்ளோ காஸ்ட்லியா எடுக்குறாங்க?. 😏😏


சில நடிகைகள் போல நாலஞ்சு கல்யாணம் பண்ற மாதிரி இருந்தா பரவால்ல,வாழ்நாள் முழுக்க ஒரே ஒரு"கல்யாணம் பண்றவங்க வாழ்க்கை பூரா நினைச்சுப்பார்க்க விலை உயர்ந்ததா எடுத்தா என்ன?================


15 குருவே!பொண்டாட்டியை

சமாதானப்படுத்த, வீட்ல பீரோவில் இருக்கும்
சேலையையே பேக் பண்ணி கிப்டா கொடுத்தாலும்
பீரோ பூரா அவ்ளோ சேலை.னு சிலர் ஸ்டேட்டஸ் போடறாங்களே!அது நிஜமா?
கண்டிப்பா தெரியாது
பொண்டாட்டிங்களுக்கு ஞாபகசக்தி,மோப்ப சக்தி ஜாஸ்தி, புதுப்புடவை வாசம் ,பீரோ புடவை வாசம் அத்துபடி=================


16 சார்,லோன் செக்சன்ல புதுசா ஜாய்ன் பண்ணி இருக்கேன்,யார் யாருக்கு லோன் தரலாம்?யார் ,யாருக்கு லோன் தரக்கூடாது?


டாக்குமெண்ட்ஸ் கரெக்ட்டா இருந்தா யாருக்குவேணாலும் லோன் தரலாம்,ஆனா கட்சில இருக்கற ஒரு பயலுக்கும் லோன் தந்துடாத.டீக்கடைல வாங்கற 8 ருபா பஜ்ஜிக்கே கடன் சொல்றவனுங்க===================


17 கறி வாங்கும் எல்லோருக்கும் கொழுப்பு, எலும்புமாக தரும் மட்டன் கடைக்காரர்கள், கடைசியாக, யாருக்கு தான் அந்த நல்ல கறியை தருவாங்க?
கடை ஓனரோட ஓனரான அவரோட சம்சாரத்துக்கு


================


18 ஞாபக சக்தியை வளர்க்கும் ,கணக்கிடும் ஆற்றலை பெருக்கும்னு வெண்டைக்காய் பற்றி ஒரு மேட்டர்"படிச்சேன் ,அது உண்மையா டாக்டர்.?
ஆமா,ஒரு உபரித்தகவல் ,மேட்டர் னா முருங்கைக்காய்தான்


===============


19 முழுக்கை சட்டை போட்டு முழங்கைவரை மடிச்சு விட்டுட்டு ஸ்டைல்னு அலையறவங்க புல் பேண்ட் போட்டு முழங்கால் வரை மடிச்சு விட்டுட்டு திரிவாங்களா ?
தாராளமா திரியலாமே?பொண்ணுங்க டிரஸ்சிங்க்ல தான் கெண்டைக்கால்தெரிஞ்சாலே அண்டை வீட்டார் முதற்கொண்டு பொறணி பேசுவாங்க,ஆம்பளை எப்டி டிரஸ் பண்ணா என்ன?


=================


20 சார் ,உங்க ஜவுளிக்கடைல" காட்டன், லினன், சில்க், பெங்களூரி சில்க், ஷிபான், சன்டே"மன்டே சேரி, கலந்து கட்டி எடுக்கலாம்னு வந்திருக்கேன்
அடடா,முதல்ல பணத்தைக்கட்டி புடவையை வாங்குங்க,அப்புறமா தனித்தனியாவோ கலந்தோ"கட்டிக்குங்க ,உங்க விருப்பம்


================