Showing posts with label கமெண்ட். Show all posts
Showing posts with label கமெண்ட். Show all posts

Friday, September 06, 2019

மூன்றாம்"கலைஞர்"வாழ்க னு ட்வீட் போட்டாலே 300 ருபா

1  இது, மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி கிடையாது. இதற்கான சாட்சி தான், லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு கிடைத்த வெற்றி.-உதயநிதி: 


 அப்போ இடைத்தேர்தல்களில் தோற்றது ஏன்? ஆர் கே நகரில்?


==============



2 தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டதாக, ஸ்டாலின் கூறுகிறார். தி.மு.க., ஆட்சியில், துணை முதல்வராக இருந்த, ஸ்டாலின், மதுரையில் சுதந்திரமாக சுற்ற முடிந்ததா? அவருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தது.-அமைச்சர், ராஜு: 

(அழ )கிரிவலம் அப்போ இருந்தது , இப்போ இல்லை

=============

3 : எந்தவோர் அரசாலும், ஐந்து ஆண்டுகளில், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பது இயலாத காரியம். -

மஹாராஷ்டிரா முதல்வர், தேவேந்திர பட்னவிஸ்

அப்போ ஒரு 20 வருசம் காண்ட்ராக்ட் தந்தா போதுமா?


===============

4  'முத்தலாக் தண்டனை சட்ட மசோதா செல்லாது' என, மிக விளக்கமாக ராஜ்யசபாவில், அ.தி.மு.க., தலைவர் உரையாற்றினார். சபை உறுப்பினர்கள், அவரது உரையைப் பாராட்டினர். ஆனால், மசோதா மீதான ஓட்டெடுப்பின் போது, அ.தி.மு.க., உறுப்பினர்கள் யாரும், சபையில் இல்லை-சிதம்பரம், 

பாராட்றதோட அவங்க கடமை முடிஞ்சுது போல 

===============

5  .முத்தலாக் தண்டனை சட்ட  மசோதாவை, அ.தி.மு.க.,வினர் எதிர்த்தனரா, ஆதரித்தனரா என்பது விடுகதை.-சிதம்பரம், 

விடுங்க , அது பெரும் கதை

=============

, 6  : தமிழக கலாசாரத்துக்கு எதிராக, மோடி அரசு செயல்படுவதால், பா.ஜ.,வை தொடர்ந்து, மக்கள் எதிர்க்கின்றனர்.-ஸ்ரீவல்லபிரசாத்

இப்படித்தான் நம்ம பிரச்சாரம் எப்பவும் கலாச்சாரம் சம்பந்தப்பட்டதாவே இருக்குமா?

=============


7   தமிழகத்திற்கு, பா.ஜ., ஒன்றும் செய்யவில்லை.-ஸ்ரீவல்லபிரசாத்

 வெச்சு செய்யப்போறாங்க  பாருங்க 

==============


8   இவர்களின் ஒற்றை அதிகார முறை, ஹிந்தி திணிப்பு ஆகியவற்றால், கடந்த முறை, 37 தொகுதிகளில், தி.மு.க., கூட்டணியை, மக்கள் வெற்றி பெறச் செய்தனர்-ஸ்ரீவல்லபிரசாத்


 அப்போ திமுக வுக்கு விழுந்தது அந்தக்கட்சிக்கான வாக்கு வங்கி இல்லை? பாஜக எதிர்ப்பு வாக்குகள் தான்?

==========

\
9  . தற்போது, முத்தலாக் தடை சட்டம் இயற்றியதால், வேலுார் தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் வெற்றி, உறுதி செய்யப்பட்டு உள்ளது.-ஸ்ரீவல்லபிரசாத்

வேலூர் தொகுதி பூரா முஸ்லீம் ஓட்டுக்கள் மட்டும் தான்னு நினைச்ட்டார் போல

=================

10    பொதுமக்களை மதம், ஜாதி ரீதியாக, தி.மு.க., தொடர்ந்து பிரிக்கிறது.-கிருஷ்ணசாமி


அப்போ தானே ஓட்டு சேர்க்க முடியும், ஜனங்களை ஜாதி வாரியா பிரிச்சாதான் வாக்குகள் சேகரிப்பது ஈசி

==============

11  தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மக்களைப் பற்றி பேச, ஸ்டாலினுக்கு தகுதியில்லை.-கிருஷ்ணசாமி

 துண்டு சீட்டு பார்க்காம பேசவே தகுதி இல்லையாம்


===============

12   தி.மு.க.,வில் இருக்கும் பட்டியலின மக்களுக்கே, அங்கு பாதுகாப்பு இல்லை. அதற்கு உதாரணமாக, நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் கொலை செய்யப்பட்டிருப்பதை சொல்லலாம்.-கிருஷ்ணசாமி

 திமுக காரங்களுக்கு தனி பாதுகாப்பு தர முடியுமா?

==============


13 பார்லிமென்டில், மசோதாக்களை ஆய்வு செய்து, நிறைவேற்ற வேண்டும். ஆனால், 'பீட்சா'வை டெலிவரி செய்வது போல், கடந்த மூன்று நாட்களில், மூன்று மசோதாக்கள், அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளன.-  திரிணமுல் காங்., - எம்.பி., டெரிக் ஓ பிரையன் 


 மசோதா டேஸ்ட்டா இருந்ததா?

=================
14  ,  'நீட்' தேர்வில் தோல்வியடைந்து, தற்கொலை செய்த மாணவி அனிதாவைப் போல், மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் வகையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தவறான கருத்துகளை பரப்பி வருகிறார்.-ராஜேந்திர பாலாஜி :

4 பேர் தற்கொலை பண்ணிக்கிட்டா அதை வெச்சு ஓட்டு அரசியல் , அனுதாப ஓட்டு சேகரிக்கலாம்னு நிம்னைக்கறாரோ?

===============


 15 போர் முனையில் எதிரிகளை வீழ்த்த, போர் வீரன் கையில் வாளுடன், ஒரே திசையில் பார்வையை செலுத்தக் கூடாது. மற்ற திசைகளிலும், பார்வை இருக்க வேண்டும். இதைப் போல தான், மாணவர்களும் நீட் தேர்வை, எதிர்கொள்ள வேண்டும்.-ராஜேந்திர பாலாஜி :

 கோச்சிங்க் கிளாசுக்கு அரசு வழி எதுனா செய்யுமா?

===========
16 ,மாநில அரசு உரிமைகளில், மத்திய அரசு தலையிட்டு, மாநில அரசுகள், மத்திய அரசிடம் கையேந்தி நிற்கும் நிலையை கொண்டு வருகிறது. - கே.பாலகிருஷ்ணன்  


கை ஆட்சியில் இருக்கும்போதும் கை ஏந்தும் நிலை தானே?

=============


17 மாநில, அ.தி.மு.க., அரசை, தலையாட்டும் பொம்மையாகவே வைத்திருக்க, மத்திய அரசு விரும்புகிறது. = கே.பாலகிருஷ்ணன்  


தஞ்சாவூர் கொலு பொம்மை மாதிரி

================

18  வைகோவுடன் செல்ஃபி எடுக்க 100 ரூபாய் கட்டணம் மதிமுக தலைமை அறிவிப்பு - செய்தி #
ரொம்ப சீப்பா இருக்கு,மூன்றாம்"கலைஞர்"வாழ்க னு ட்வீட் போட்டாலே 300 ருபா தர்றாங்களாம்


=================
19 காங்கிரஸின் தயவு தேவையில்லை: வைகோ
# திமுக கூட்டணிக்கட்சிக்கு தலைவர் இவரா?அவரா?


==============


20 சிம்பு குணத்துக்கேற்ற பெண்ணைத் தேர்ந்தெடுக்க அத்திவரதரால்தான் முடியும்: டி.ராஜேந்தர் # 40 வருசத்துக்கு ஒரு தடவைதானே"அத்தி வரதர் ஆக்டிவா இருப்பாரு?அப்றம் எப்டீ ஐஸ்வர்யா,நயன்தாரா,ஹன்சிகா எல்லாம் ஜோடி ஆனாங்க?


==================

டிக்டாக் ல 98% பொண்ணுங்க தான் பர்பார்மென்ஸ்"பண்றாங்க,ஏன் ஆண்கள் பண்றதில்லை?

1  டிக்டாக் ல 98% பொண்ணுங்க தான் பர்பார்மென்ஸ்"பண்றாங்க,ஏன் ஆண்கள் பண்றதில்லை?



ஆம்பளைக்கு 1008 ஜோலி"கிடக்கு.வேலை செஞ்சாதான் சாப்பாடு



==============

2 கைதி= யுவர் ஆனர்,வெளிநாடு போக பிணையத்தொகை ரு 10 கோடி கட்டி இருந்தேன்,அதுக்கு வட்டி கட்ட வேண்டி இருக்கு,அதை திருப்பி தரனும்



ஜட்ஜ் = உங்க சொத்து மதிப்பு எவ்வளவு?
கைதி= வெள்ளை ல மட்டும் 750 கோடிங்க
கைதி = ஊரை ஏமாத்தத்தான்
ஜட்ஜ் = அப்றம் ஏன் கடன் வாங்குனீங்க?




=============


3 உங்களுக்கு ஜூஸ்🥤 எப்படி குடிக்க பிடிக்கும்?



ஸ்ட்ரா இல்லாம டம்ளர்ல கவ்விக்குடிக்கனும்.அது புதுக்காதலிக்கு முதல் இதழ் முத்தம் தர்ற மாதிரி.ஸ்ட்ரா போட்டா கன்னத்து முத்தம் மாதிரி,ஒரு மாற்று கம்மி



=============


4 ஜோசியரே!மீனம் ராசிக்காரர் எந்த ராசிக்காரரை திருமணம் செய்யலாம்?



கடக ராசி
கன்னி ராசி
விருச்சிகராசி இந்த 3 ராசி பெண்கள்ல யாரையாவது ஒருத்தரை கட்டலாம் ,மூணையும் கட்னா முதல்வர் ஆக வாய்ப்பு இருக்கா?னு கேட்கக்கூடாது



===========


5 இண்ட்டர்வ்யூவில்



உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?
என் கட்சித்தலைமை ஹிந்தி எதிர்ப்பு,அதனால நான் கத்துக்கலை
ஓஹோ,தமிழன் தமிழ் மட்டும் கத்துக்கிட்டா போதுமா?
அப்போ தலைவரோட பேரன்,பேத்தி ங்க ,அவங்க குடும்பத்துல யாருக்குமே ஹிந்தி தெரியாதா?
அப்டிதான் தலைவர் சொன்னாரு
அது வந்து...



==============


6 தலைவரே!மொழி உணர்வைத்தூண்டிவிட்டுத்தானே நாம முன்னுக்கு வந்தோம்?



ஆமா
யாராவது நம்ம தொண்டர்கள் உங்க குடும்பத்து ஆட்கள் மட்டும் ஹிந்தி கத்துக்கிட்டாங்க,டெல்லி போறாங்க ஏன்னு கேட்டா எப்டி சமாளிப்பீங்க?
ஹிந்தித்திணிப்பைதான் எதிர்த்தோம்,அவங்கவங்க இஷ்டப்பட்டா படிக்கலாமே?னு சமாளிப்பம்



===========


7 டியர் ,தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்துக்குப்போலாமா?



அய்யய்யோ நான் தமிழன்,ஹிந்திப்படத்துக்கு வர மாட்டேன்



===============


8 மாமா,உங்க பொண்ணுக்கு சப்பாத்தி சுட்டுத்தர யாரும் சொல்லித்தர்லையா?



சுட்டுப்போட்டாலும் என் பொண்ணுக்கு சமையல் வராதுங்க



===============


9 எக்ஸ்ட்ராவா ஒரு மொழியைத்தெரிஞ்சு வெச்சுக்கறது நல்லதுதானே?ஏன் எதிர்க்கறீங்க?



எனக்குதான் ஏற்கனவே 3 மொழி தெரியுமே?
அடடே!என்னென்ன மொழி தெரியும்?
மும்மொழித்திட்டத்தை ஆதரிக்கறது இதனாலதானா?
தேன்மொழி கனிமொழி தமிழ்மொழி




=================


10 ஹிந்தியலாம் கத்துக்க முடியாது , வேணும்னா ஹிந்திக்கார புள்ளைய கட்டிக்குறோம் 😜



சேட்டு வீட்டு பிகர் கிட்ட கடலை போடவே ஹிந்தி கத்துக்கனும்,கல்யாணமே பண்ணனும்னா ...?



================


11 தலைவரே! 1995 ல ரிலீஸ் ஆன ரங்கீலா படத்தைப்பாராட்டி ஏ ஆர் ரஹ்மான் ,ராமகோபால்வர்மா வை வாழ்த்தி இருக்கீங்க,ஸ்டார் டஸ்ட் ங்கற சினிமா மாத இதழ்ல இப்ப தான் பாத்தேன்



ஆமா,அதுக்கென்னய்யா இப்போ?
நாமதான் பச்சைத்தமிழர் ஆச்சே?ஹிந்திப்படம் பார்க்கலாமா?



===============


12 அத்த அவசரத்துக்கு பணம் எடுக்கத்தானே ஏடிஎம் கார்டு?



அத்தையோட அவசரத்துக்கு மாமா தானே கார்டு தரனும்?நான் ஏன் என் கார்டைத்தரனும்?



================


13 கடைக்காரரே!நெல்லிக்காய் ஒயர் கூடை 1 குடுங்க



சின்ன நெல்லிக்காய் ஒயர் கூடையா?பெரிய நெல்லிக்காய் ஒயர் கூடையா?



===============


14 தலைவரே! ஹிந்தி எதிர்ப்புப்போராட்டத்துல அப்பவும்சரி ,இப்பவும் சரி நம்ம கட்சியோட நிலைப்பாடு 1 தானே?



ஆமா
ஹிந்தியை எதிர்க்கலை,ஹிந்தித்திணிப்பைதான் எதிர்க்கிறோம்,அப்டித்தானே?
ஆமா
அப்போ ஹிந்தித்திணிப்பு எதிர்ப்புப்போராட்டம்தானே சரி?ஏன் ஹிந்தி எதிர்ப்புப்போராட்டம் ஹைலைட் பண்றீக?



==============



15வசிஷ்ட ரோட சகோதரியை தமிலிங்கிலீசில் ஒரே சொல்லில் விளிப்பது எப்படி?



வ"சிஸ்டர்"


=================



16 தலைவரே!ஜூன்"3 ம்தேதி ஆட்சியைப்பிடிச்சிடுவோம்னு சொன்னீங்களே?



தேதியைச்சொன்னேன் ,மாசத்தைசொன்னேன்,வருசத்தை சொன்னேனா? எப்டி நம்ம"சாணக்கியத்தனம்?




===============


17 தமிழ்நாட்டுக்கு வர ரயிலுக்கெல்லாம் தமிழ் பேர் வைக்கனும்


அப்போ அந்த ரயில் டெல்லி,ஆந்திரா ,கேரளா போறப்ப அந்தந்த மாநிலமொழிப்பெயரை வைக்கனும்னு அவங்க போராட மாட்டாங்களா?


==============


18 தலைவரே!நம்ம கட்சி எம்.பி ங்க எல்லாம் டெல்லி போய்ட்டாங்களா?


ஆமா,இன்னைக்குதான் டெல்லி ஏர்போர்ட்ல இறங்கறாங்க,எப்டி கரெக்டா கண்டுபிடிச்சீங்க?
ஏர்போர்ட் கேன்ட்டீன்ல நிறைய திருடு போய்டுச்சாம்



===============


19 ஜட்ஜ் == பதவில இருந்தப்ப அதிகார துஷ்பிரயோகம் செஞ்சு ஆத்து மணலை திருடினியா?


திருட்டுக்கைதி == ஐயா,பெரியார் மண் கறதால பற்று ஜாஸ்திங்கய்யா",அதனால ஒரு வரவு வெச்சுக்கிட்டேன்,ஏகப்பட்ட செலவு இருக்குங்களே?சமாளிக்க வேணாமா?



==============


20 சீரகம் வாங்கிட்டு வரச்சொன்னேனே?அதை வாங்காம அரிசி வாங்கீட்டு வந்திருக்கீங்க?


இது சீரக சம்பா அரிசி,டூ இன் ஒன்



===============

Sunday, September 01, 2019

ஜோசியரே!வாழ்க்கைல பிக்பாஸ் லாஸ்லியா கிடைக்குமா?

1   குருவே!எட்டாவதாகப் பிறக்கும் குழந்தை அறிவாளியாகப் பிறக்கும் என்பது நிஜமா?


அதுக்காக ஏழு முட்டாள் குழந்தைகளைப் பெத்துக்கிட்டு ஏழரையைக்கூட்டவா?



==============


2 டியர், தோசை சுடும் போது மட்டும் கோவம் வர்றமாதிரி சண்டை போடாதீங்க.. தோசைக்கரண்டி உடைஞ்சிடக் கூடாதேனு கஷ்டப்பட்டு அமைதியா நிக்க வேண்டிருக்கு


ஓஹோ,தோசை சுட்டதுக்கப்புறம்,சண்டை போடலாமா?

அப்ப சண்டை போட்டா சுட்ட தோசையைப்பிச்சு பிச்சு போட்டுடுவேன்
அப்போ புரோட்டோவா சுடு,ஈசி எனக்கு


==============


3 ஒரு நல்ல காபி க்கு தர்ற மரியாதையே அதை ஆறுவதற்கு"முன்பே குடிக்கறது.. தான்


ஓஹோ,அப்பொ cold காபி க்கு எப்டி மரியாதை"தர்றது?



================

4 கணவன் அன்பு கிடைக்காததால் தான் பெண்கள் சிலர் ட்விட்டர், fb அதிக நேரம் செலவிடுகின்றனரா?

அப்போ ஆண்கள் ஏன் அதிகம் இணையம் வருகின்றனர்...!!

அன்பு"கிடைக்காம இங்கே"வர்ற பொண்ணுங்களுக்கு அன்பு காட்டத்தான் −



=============


5 சாதா பயணம் ,அதீத சிறப்புப்பயணம் என்ன வித்யாசம்?


சிம்பு VS தனுஷ்

புரியல


============


6 களவாணி 1
களவாணி 2
என்ன வித்தியாசம்?

நெ1 களவாணி யால தான் சமூகத்துக்கு அதிக ஆபத்து,சட்டத்தின் பிடியில் மாட்டிக்காம சாமார்த்தியமா சாட்சி இல்லாம திருடுவான்
============
7  ட்விட்டரில் இதுவரை எந்த பெண்ணிடமும் கடலை போடாதவன் என்ற கர்வம் எனக்கு உண்டு!


ஓஹோ!FB ல?

நோ

வாட்சப்ல?
மெயில்"சேட்டிங்க்?
நெவர்
அதுவும்"கிடையாது;

அப்ப உனக்கு நெட்"கனெக்சன் எதுக்கு தண்டமா?


============



8 மழை
மாமழை
என்ன வித்யாசம்?

மாமழை ன்னா தொடர்ச்சியா பெய்யும் பெரு மழை தானே?
ச்சே,ச்சே.மாங்கா மரத்துல இருந்து கொத்து கொத்தா மாங்கா காத்தடிச்சு விழுவது


=============



9 சென்னை,சேலம் என்ன வித்தியாசம்?

நகரம் ,"மா"நகரம்


===========


10 மழை பொழியாத வானத்துக்கு நாங்கள் கறுப்புக்கொடி காட்டி எங்கள் எதிர்ப்பைப்பதிவு செய்தோம்,இதோ சென்னையில் மழை! எங்கள் முயற்சியால் பொழிந்த இந்த மழைக்கு நாங்கள் கட்டணம் வசூலிப்பதில்லை


============



11 மழைனு ஸ்டேட்டஸ் போடுறதுக்குள்ள மழை நின்னுட்டா எப்படிதான் ஸ்டேட்டஸ் போடுறது,?

சிம்ப்பிள்
மழை
மழை நின்னுடுச்சு
மழை மறுபடி வர்ற மாதிரி இருக்கு
இப்டி ஸ்டேட்டஸ் மேல ஸ்டேட்டசாப்போடுங்க
லைட்டா தூறுது


============



12 தமிழ் மிஸ் தன்யா = அறம் செய்ய விரும்பு னு உலகத்துக்கு சொன்னது யார்?

லொள் மாணவன் = அது சரியா தெரியல டீச்சர் ,ஆனா"அறம்"செய்யவிரும்பு,படம் ஹிட் ஆகும்னு நம்பிக்கை குடுத்து ,கால்ஷீட் குடுத்து,நடிச்சுக்குடுத்தது மேல் உதட்டின் மேல் மச்சம் உள்ள female நயன்தாரா டீச்சர்.


=============



13 ஜட்ஜ் = சுற்றுப்புறத்தை சுத்தபத்தமா வெச்சிருக்கறதுல இந்தியாவிலேயே கேரளாதான் நெ 1 ,வெரிகுட்,எப்படி உங்ளால முடியுது?

நாங்கதான் குப்பைகளை எல்லாம,தமிழ்நாடு பார்டர்ல கொட்டிடறமே?


==============

14 காலை"ல இருந்து,ரொம்ப பிசி, நிமிர்ந்து பாக்க முடியாத அளவு வேலை இருந்தது


ஓ,என்ன வேலை?

FB ல ஸ்டேட்டஸ் போடற"வேலைதான்

============



15 பிக்பாஸ் 3 போட்டியாளர்களிலேயே ரொம்ப வெண்மையானவங்க"யாரு?

லாஸ்லியா?
இல்லை,ஷெ"ரின்" தான்
எப்டி?
ரின் தான் பரிசுத்த வெண்மை தருமே?


===============


16 சார்,பேப்பர் வெய்ட் இருக்குமா?

அதெப்பிடிங்க? பேப்பர் லேசா தானே இருக்கும்?எப்டி வெய்ட்டா இருக்கும்?
சுத்தம்.


===============



17 தலைவரே!தமிழ்நாடு பூரா ஆரிய பவன்கள்தான் இருக்கு,நம்ம கெத்தைக்காட்டநம்ம கட்சி செலவுல திராவிட பவன்கள் அமைக்கலாமா?

யோவ் நமக்கு பொதுவா மக்கள் பணத்தை சாப்ட்டுதான் பழக்கம்,மக்கள் வந்து நம்ம கடைல சாப்பிடறதா?


=============

18  உடன்பிறப்பே!ஆளுங்கட்சியை ஒழிக்க"ஒரு"வழி"கண்டுபிடிச்ட்டேன்,அதிருப்தியாளர்கள்,பதவி கிடைக்காதவர்கள்,வெந்தது ,வேகாதது இப்டி யார் வந்தாலும் அவங்களை சேர்த்துக்கறது,எப்டி நம்ம சாணக்கியத்தனம்?


தலைவரே!இதுக்குப்பேரு மொள்ளமாரித்தனம் ,கேப்மாரித்தனம்,அங்கே துரோகியா இருந்தவன் இங்கே மட்டும்..?

===============

19 உங்க ஜாதகப்படி உங்க வியாபாரத்துல லாஸ் கிடைக்கும்


ஜோசியரே!அதை விடுங்க,வாழ்க்கைல பிக்பாஸ் லாஸ்லியா கிடைக்குமா?அதைப்பார்த்து சொல்ங்க



============

20 என்ன செய்தாலும் திருப்தியடையாமல் குறை சொல்லும் உறவுகளை என்ன செய்யலாம்?

அப்டி என்னென்ன செஞ்சீங்க?

ரவா உப்புமா
கோதுமை உப்புமா
சேமியா உப்புமா
ஒரே நாள்ல இத்தனை உப்புமா செய்யறது ரொம்ப தப்புமா


===================