Thursday, February 02, 2017

போகன் - சினிமா விமர்சனம்

Image result for bogan movie images(சில வருடங்களுக்கு முன்) நான் சின்னப்பையனா இருக்கும்போது அம்புலிமாமா , பாலமித்ரா , ரத்னபாலா  சிறுவர் மாத இதழ்களில் வாண்டுமாமா எழுதும் மாயாஜாலக்கதைகள் நிறைய வரும், வீரப்பிரதாபன் கதைகள்  இன்ன பிற. அவற்றில் கூடு விட்டுக்கூடு பாயும் வித்தை சம்பந்தப்பட்ட கதைகள் செம ஃபேமஸ். பிற்காலத்தில் எழுத்தாளர்கள் சுபா, பிகேபி, ராஜேஷ் குமார், ராஜேந்திர குமார் , புஷ்பா தங்கதுரை , எண்ட மூரி வீரேந்திர நாத்  உட்பட பல புகழ் பெற்ற எழுத்தாளர்கள் அவங்கவங்க பங்குக்கு  அந்த டைப் நாவல் எழுதித்தள்ளிட்டாங்க.


இந்தக்கால ஆட்கள் மறந்து போன அந்த சப்ஜெக்டை தூசி தட்டி பழனி போகன் சித்தர் கதையை இட்டுக்கட்டி துட்டு பார்க்க கதை பண்ணி இருக்காங்க, சக்சஸ் தான்


 தனி ஒருவன் மெகா ஹிட் பட காம்போவான ஜெயம் ரவி + அர்விந்த் சாமி நடிச்ச இந்தப்படத்தோட கதை என்ன?


ஹீரோ அசிஸ்டெண்ட் கமிஷனர், வில்லன்  பழ்நி மலை சித்தர் போகன்  ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்த கூடு விட்டு கூடு பாயும் வித்தை ,  கற்றவன்.

ஹீரோவின் அப்பா பேங்க் ஆஃபீசர். தன் வித்தை மூலம் வில்லன் பேங்க் ஆஃபீசர்  புகுந்து கொள்ளை அடிச்சு அவரை மாட்டி விட்றான். அவனைப்பழி வாங்க , அப்பா நிரபராதி என  நிரூபிக்கப்போராடும் ஹீரோ உடம்பிலேயே வில்லன் எக்சேஞ்ச் ஆஃபரில்    இடம் மாறிக்கறான்.

அதுக்குப்பின் நடக்கும் தில்லாலங்கடி வேலைகள் தான் மிச்ச மீதிப்;படம்


வில்லனா ஹீரோ ரேஞ்ச்க்கு அர்விந்த்சாமி எண்ட்ரி. இவருக்கு ஓப்பனிங் சாங்க் எல்லாம் உண்டு. தனி ஒருவன் போலவே சரிக்கு சரி கேரக்டர். புகுந்து விளையாடி இருக்கிறார். டயலாக்ஸ் எல்லாம் நறுக் சுருக், ஆனால் இன்னும் அதிக டயலாக்ஸ் வைத்திருக்கலாம்


ஹீரோவா ஜெயம் ரவி , பின் பாதியில்  வில்லன் உயிர் புகுந்த பாடி லேங்க்வேஜில் பட்டாசு கிளப்பறார்


 ஹன்சிகா வழக்கம் போல் லூசு போல் வந்து பப்ளீமாஸ் ஒர்க் பண்ணிட்டுப்போகுது,  ஒரு பாடல் காட்சியில் சிம்புவைக்கடுப்பேற்றவே  கிளாமரா நடிச்சிருக்கு

காமெடி டிராக் இல்லை. ஆனால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை. போர் அடிக்காமல் படம் போகுது

Image result for hansika in bogan
 சபாஷ் டைரக்டர் 


1   டமாலு டுமீலு  பாடல் காட்சி ஆல்ரெடி ஹிட் ஆனதால் தியேட்டரில் கை  தட்டல் அதிகம். படமாக்கல் குட்

2 ஹீரோ - வில்லன்  இருவருக்கும் சரி சமமான வாய்ப்பு வழங்கி  திரைக்கதை அமைத்த விதம்


3  பாடல் காட்சிகள் , லொகேஷன் செலக்சன் , ஆர்ட் டைரக்சன் , இசை எல்லாம் குட் . குறிப்பா பிஜிஎம் பக்கா


Image result for hansika in bogan


லாஜிக் மிஸ்டேக்ஸ்


1  ஒரு போலீஸ் ஆஃபீசர் இன்னொரு போலீஸ்  ஆஃபீசரை பல போலீஸ் ஆஃபீசர் முன் கொலை செய்து சாவகாசமாய்  ஸ்லோமோஷனில் நடந்து போறான், எல்லாரும் ஆ-ன்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க, யரும் அவனைப்பிடிக்க ட்ரை பண்ண மாட்டாங்களா?

2  வில்லன் ஹீரோ உடலில் புகுந்து  ஹீரோயின் கூட கில்மா  பண்ண   வீட்டு பெட்ரூம் வரை வந்தாச். அப்புறம் விடிஞ்ச பின்  அந்த டூயட் கனவு தானா என புலம்பறார். குற்றம் நடந்தது என்ன? வில்லன் ஆக்டிவா இல்லையா? ஸ்கூட்டியா?

3  ஹீரோ வில்லன்  இருவரும் இடம் மாறியது அந்த லேடி போலீஸ் ஆஃபீசருக்கு தெரிந்தும் அவர் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?

4  பெண் பித்தரான வில்லன்  ஹீரோ உடம்பில் புகுந்தும்  வாய்ப்பிருந்தும் வசதிகள் இருந்தும் ஹீரோயின், அந்த லேடி போலீஸ் ஆஃபீசர் யாரையும் எதையும் செய்யாதது அல்லது செய்ய முயலாதது ஆயாசத்தை வரவழைக்கிறது ( எதுனா செஞ்சிருந்தா பாயாசத்தை வர வெச்சிருக்குமா?)

5  ஒவ்வொரு பேங்க்கிற்கும் ஒரு குறிப்பிட்ட அளவு தான் அன்றாடம் புது 2000 ரூ நோட்டு வரும், கொள்ளை நடக்கும்போது கோடிக்கணக்கில் ஒரே நாளில் 2000 ரூ நோட்டு வருவது எப்படி?


Image result for hansika in bogan

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

டமாலு டமாலு டுமீலு டுமீலு கலக்கல் டப்பாங்குத்து.ஆல் சென்ட்டர் ஆடியன்ஸ் அப்ளாஷ்

ஓப்பனிங் சேசிங் சீன் ஷூட்டிங் ஸ்டைல் துப்பாக்கி சீன் போல்#போ


3 நாயகி சரக்கு அடிக்கும் பார்ட்டி என காட்டுவதுதான் பேஷன் என இப்போதைய டைரக்டர்கள் நினைப்பது பின்னடைவு

ஏழாம் அறிவு -போதிதர்மர்
போகன் - சித்தர் போகன்

5 ஜெயம் ரவி + அர்விந்த்சாமி = தனி ஒருவன் ,போகன் 2 படங்களுமே விஜய் + அஜித் காம்போ வில் வந்திருந்தா அள்ளு அதிகமா இருந்திருக்கும்

6 வாண்டுமாமா ,வீரப்ரதாபன் கதைகளில் வரும் கூடு விட்டு கூடு பாய்தல் டெக்னிக் தான் கதைக்கரு


7  போகன் -FACE OFF ரீமேக் இல்லை.அதன் சாயல் மட்டுமே

நச் டயலாக்ஸ்

ஒரு காலத்துல ராஜாக்கள் வாழ்ந்த வாழ்க்கையை இப்போ நான் வாழ்ந்திட்டு இருக்கேன்

வாழ்க்கை பூரா நல்லது செஞ்சு சொர்க்கத்துக்கு இடம் கிடைக்குமா?ன்னு பார்க்கறவன் நான் இல்ல.இருக்கும்போதே சொர்க்கத்தில் வாழ்பவன்.

என் கேரக்டர் பற்றி தெரியாம வீட்ல ஆதித்யானு பேர்வெச்ட்டாங்க.நிஜமா வெச்சிருக்க வேண்டிய பேர் போகன்

கொய்யாப்பழம் சாப்ட்டா சரக்கு அடிச்ச ஸ்மெல் வராதுன்னாங்க.வருதே?

மிஸ்! நீங்க ராஜ்கிரன் ரசிகையா?

ஏன்?
நல்லா கடிக்கறீங்க சிக்கனை

என் கிட்டே இருக்கும் மொத்த அன்பையும் நீ எடுத்துக்கோ.உன் கிட்டே இருக்கும் மொத்த அன்பையும் நான் எடுத்துக்கறேன்

7  இவ்ளோ போதைலயும் எப்டி ஸ்டெடியா இருக்கீங்க?
நான் போதைலதான் தெளிவா இருப்பேன்

பவுர்ணமின்னா பிளட் பம்ப்பிங் ஜாஸ்தியா இருக்கும்னு சொல்றாங்க

(ஜெயிலுக்கு) உள்ளே இருக்க வேண்டிய பலர் வெளியே இருக்காங்க.வெளியே இருக்க வேண்டிய பலர் உள்ளே இருக்காங்க # போ

சி.பி கமெண்ட் - போகன் - முன் பாதி சராசரி,பின் பாதி ஹீரோ வில்லன் சரிக்கு சரி.குட் ஆக்சன் த்ரில்லர்-விகடன் -41 .ரேட்டிங் = 2.75/ 5


0 comments: