Saturday, November 26, 2016

கவலை வேண்டாம் - சினிமா விமர்சனம்

Image result for kavalai vendamயாமிருக்க பயமே என்ற தரமான திகில் காமெடிப்படம் கொடுத்த அதே இயக்குநர் கொடுத்திருக்கும் தரம் கெட்ட படம் தான் கவலை வேண்டாம்


ஹீரோ வும் ஹீரோயினும் நண்பர்கள். லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கறாங்க.மேரேஜ் ஆன 2 வது நாளிலேயே இருவருக்கும் கருத்து வேற்றுமை வந்து பிரிஞ்சிடறாங்க. டைவர்ஸ் பேப்பரில் சைன் வாங்க வரும் நாயகியிடம் நாயகன் “ நாம 2  பேரும் சேர்ந்து ஒரு வாரம் வாழனும், அப்போதான் டைவர்ஸ் என பிரியமானவளே விஜய் போல் கண்டிஷன் போடறார்


அதுக்கு ஒத்துக்கிட்டு ஒரு வாரம் சேர்ந்து வாழும் நாயகி நாயகனின் நல்ல குணங்களைப்புரிந்து கொள்கிறார். அப்போ தான் ஒரு சிக்கல். வீட்டில் பார்த்த 2 வது மாப்பிள்ளை எண்ட்ரி ஆகறார். இனி என்ன நடந்தது என்பதே கதை


ஹீரோவா ஜீவா, அசால்ட்டான கேரக்டர். சிவா மனசில சக்தி படத்தில் செஞ்ச அதே ரோல், ஊதித்தள்ளுகிறார். 


ஹீரோயினா காஜல் அகர்வால்.ஓப்பனிங் சீனில் புறமுதுகு தெரிய வருகிறார், 

விசில் பறக்குது. ஒரு டூயட்  சீனில்  லோ ஹிப் காட்றார். மற்றபடி பெரிதாக திறமை காட்டவில்லை.


காமெடிக்கு மயில் சாமி, ஆர் ஜே பாலாஜி

சமூக நல ஆர்வலர் என்ற நல்ல பேர் எடுத்திருக்கும் பாலாஜி எஸ் எஸ் சந்திரன் , வெ ஆ மூர்த்தி போல் டபுள் மீனிங் டயலாக்ஸ் , வல்கர் டயலாக்ஸ் பேசி வருவது அதிர்ச்சி


 படத்தில் ஒரே ஆறுதல்  சுனைனா வின்  அமைதியான நடிப்பு. பாபி சிம்ஹா ஆள் ஸ்மார்ட்,ஆனா கேரக்டர் ஒர்த் இல்ல

Image result for kajal agarwal hot

லாஜிக் மிஸ்டேக்ஸ்


1   க்ளைமாக்சில்  மயில் சாமி  தன் மனைவி ஓடிப்போனதுக்கு சொல்லும் காரணம் லூசுத்தனமானது. அதை சாக்காக வைத்து இன்னொரு பெண்ணுடன்  அவர்  லூட்டி அடிப்பது கேசுத்தனமானது


2   தலைல அடிபட்டதால் அம்னீஷியா நடிப்பும் அதை  முறியடிக்க போடும் டிராமாவும் சொதப்பல்ஸ்


3  ஒரு பணக்கார வீட்டில்  குடிக்க ஒரு டம்ளர் தண்ணீர்  கூட இல்லாமல்  விக்கி  சீரியசாகும் காட்சி அபத்தம்


4   போலீஸ் ஸ்டேஷனில்  ஆர் ஜெ பாலாஜி நெ 2 போகும் காட்சி உவ்வே ரகம்
Image result for kajal agarwal hot


தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ் &  நச் டயலாக்ஸ்

டைட்டிலில்தொழில் நுட்பக்கலைஞர்கள் போட்டோவும் போட்டு அவங்க குழந்தையா இருக்கச்சே எடுத்தபோட்டோவும் போடறாங்க வேண்டாம்2 ஒரு பிகரை கரெக்ட் பண்றதுக்கு முன் பிகரோட பிரண்டை கரெக்ட் பண்ணனும் வேண்டாம் (இந்த ஐடியாநமக்குத்தோணலையே)3 சோன் பப்டி வாங்கித்தந்து பிரபோஸ் பண்றாரு ஹீரோ.ஹவ் ஸ்வீட் னு சொல்லி அந்த பேக்கு கேக்கு ஓக்கே சொல்லுது வே
4 ஏற்கனவே காஜல் அகர்வால் ரோஸ்மேரி மாதிரி தான்.எதுக்கு ரோஸ் பவுடர் போட்டு டார்க் ரோஸ் மேரி ஆகுது? வே
5 அலாரம் டைம் பீசை ஹீரோ உதைக்கற மாதிரி ஒரு சீன் வருது.காலதேவனையே எட்டி உதைக்கற மாதிரி இருக்கு # க வே
6 வல்கர் காமெடி உவ்வே # க வே
8 அவனை லவ் பண்ண எதுனா ஸ்பெஷல் ரீசன் இருக்கா?க்யூட்டா ப்ரப்போஸ் பண்ணான்.அவ்ளோதான் வேண்டாம்
9 உன் கல்யாணத்துக்கு நீயே லேட்டா.வந்தா எப்டி? வேண்டாம்

10 மாமி.என்ன ஆச்சு?
எதுவுமே ஆகலை.மேரேஜ் ஆகி 20 வருசம் ஆச்சு#கவலை வேண்டாம் (இதே டயலாக் இதே ஜீவா வின் சிங்கம்புலி யிலும்)

11 அவ உன்னை மாதிரி சாதா பிகர் இல்லை.பல நாடுகளுக்கும் போய்ட்டு வந்த இன்ட்டர்நேஷனல் பிகர் வேண்டாம் ( பிரபு தேவா இந்து டயலாக்)

12 என்ன ஆனாலும் சரி.உன் துணைக்கு உன்கூட நான் இருப்பேன்னு கையைஇறுக்கிக்கும் ஆள் இருந்தாப்போதும் வேண்டாம்(சால்ட்பெப் ட்வீட்)


13 வாழ்க்கை வாழ்றதுக்கு இல்லை.கொண்டாடுவதற்கு வேண்டாம் ( பாலகுமாரன் நாவல் இனிது இனிது காதல் இனிது வசன எடுத்தாடல்)


Image result for kajal agarwal hot

சிபி கமெண்ட் -7 கவலை வேண்டாம் -லாஜிக் பற்றி கவலைப்படாதவர்களுக்கான ,சி சென்ட்டர்ரசிகர்களுக்கான மொக்கை காமெடிப்படம்.விகடன் -40 ,ரேட்டிங் 2.5/ 5 ( குடும்பத்துடன் போய் மாட்டிக்காதீங்க, வல்கர் சீன்கள் , வசனங்கள் அதிகம்)

0 comments: