Friday, January 27, 2012

A WHITE SNAKE'S REVENGE - ஜெட் லீ நடித்த லவ் ஸ்டோரி - சைனீஷ் பட விமர்சனம்

http://kaleidoscope.cultural-china.com/chinaWH/upload/upfiles/2011-09/07/the_sorcerer_and_the_white_snake_3d217de39b48be0bee2b9f.jpg

இந்த பூமில புவி ஈர்ப்பு சக்தி இருக்கா? இல்லையா?ங்கற சந்தேகத்தை எனக்கு சின்ன வயசுல இருந்தே சீனப்படங்கள் ஊட்டி, கொடைக்கானல் வருகின்றன ,அதிலும் இந்த ஜெட்லீ படங்கள் அம்மம்மா, அப்பப்பா ... செம தமாஷ் போங்க.. பறந்து பறந்து அடிக்கறதுல அண்ணன் கிங்க்கு.. அவர் ஆக்‌ஷன் ஹீரோவா பல படத்துல பார்த்து இதுல துறவியா பார்க்க வித்தியாசம்.. 

சீனர்களில் ஒரு குரூப் ஒரு கானகத்துல மருந்துக்கான மூலிகைகள் தேடி காட்டுக்குள்ள போறாங்க.. அதுல நம்ம ஹீரோவும் போறார் ( ஜெட் லீ ஹீரோ கிடையாது, கெஸ்ட் ரோல்) அங்கே ஃபயர் பட ஹீரோயின்ஸ் மாதிரி 2 நாக கன்னிகள் ஜாலியா விளையாடிட்டு இருக்காங்க.. கடல் கன்னி தெரியும், அதென்னா நாக கன்னி.. ஆனியன் போட்டா ஆனியன் ரோஸ்ட், உருளைகிழங்கு போட்டா மசால் ரோஸ்ட் போல இடுப்புக்கு கீழே மீன் வடிவம் ஆனா அது நாக கன்னி, பாம்பு வடிவம் இருந்தா அது நாக கன்னி.. 

ஹீரோ திடீர்னு ஒரு பாறைல இருந்து கீழே தண்ணீல விழறாரு .. இதே தமிழ்ப்படமா இருந்தா ஹீரோயின் காப்பாத்தி அவர் வயிற்றை அமுக்கி தண்ணீயை வெளீல எடுக்கும் , ஆனா பாருங்க இது சைனீஷ் படம்.. பாப்பா லிப் டூ லிப் கிஸ் அடிக்குது.. மயக்கமா இருந்த ஹீரோ பிழைச்சுக்கறான்.


அவன் துஷ்யந்தன் போல ஹீரோயினை மறந்துடறான்.. ஹீரோயின் 2 வது டைம் அவனை பார்க்கறப்ப  செம காண்ட் ஆகிடறா.. என்னது? என்னை நினைவில்லையா? அப்டினு கோபமா கேட்டுட்டே நினைவு படுத்த மறுபடி ஒரு கிஸ்.. இதை எல்லாம் நான் கவுண்ட் பண்ணிட்டே வந்தேன் , எதுக்கு? கவுண்ட் டவுன் கண்ணாயிரம்னு பேர் எடுக்கவா? ம்ஹூம், நாளைக்கே ராம நாராயணன் சார் ஒரு போட்டி வெச்சாலும் வைப்பார்.. (அவர்தான் தமிழக விநியோக உரிமை)

http://1.bp.blogspot.com/-GVL1RiTPVX8/Th3Btd0pyII/AAAAAAAAfyw/bYeSkMdPoRg/s400/huang+shengyi+white+snake+st1.jpg


இந்தப்படத்தில் ஹீரோயின் எத்தனை டைம் ஹீரோவுக்கு கிஸ் குடுத்தாரு?ன்னு.. அதுல கலந்துக்கறதுக்காகத்தான்.. சரி எங்கே கதை விட்டேன்? அடச்சே, எங்கே கதையை விட்டேன்?ஆங்.. கிஸ்.. இவங்க 2 பேரும் மேரேஜ் பண்ணீக்கறாங்க.. ஆனா துறவி ஜெட் லீக்கு இது பிடிக்கல.. 

ஹீரோ மக்களூக்காக ஒரு மருந்து தயாரிக்கறாரு.. அதுல ஹீரோயின் தன் விஷ சக்தியை பயன் படுத்தி உதவி பண்றாங்க.. அதை ஜெட்லீ கண்டு பிடிச்சிடறாரு.. ( இவரு போதி தர்மர் சிஷ்யராம் அவ்வ்)

சில வவ்வால்கள் மனிதர்களை கடிக்குது.. அதுக்கான விஷ முறிவு மருந்துதான் இவங்க தயாரிக்கறது.. தன் மனைவி ஒரு நாக கன்னிங்கற மேட்டர் ஹீரோவுக்கு தெரியாது.. ஆனா ஜெட்லீக்கு தெரியும்.. ஜெட்லீதான் தனக்கு வில்லன்கற மேட்டர் ஹீரோயினுக்கு தெரியும் , ஆனா ஹீரோவுக்கு தெரியாது.. ஹி ஹி ஹி 

ஹீரோயின் கூட ஒரு சிஸ்டர் நாக தேவதை இருக்கே அது சும்மா இருக்கக்கூடாது இல்லையா? அதனால அதை ஹீரோவோட ஃபிரண்ட்டோட கோர்த்து விட்டுடறாங்க ஹி ஹி .. தோழி பாப்பா பச்சைக்கலர்ல இருக்கு, ஹீரோயின் வெள்ளை.. 

டைட்டிலுக்கு என்னா விளக்கம்னா தன் கணவனுக்கு ஜெட் லீயால ஆபத்துன்னு தெரிஞ்சதும் அந்த ஹீரோயின் ஜெட்லீயை பழி வாங்கப்பார்க்குது.. அதான் பேலன்ஸ் கதை.. 

ஜெட்லீ முகம் முத்திப்போச்சு.. பாவம், ஆனாலும் அண்ணன் அசரலையே?பறந்து பறந்து அடிக்கறார்.. அவ்வ்வ் காது பூரா பூ..

படத்துல ரசிக்க வைப்பது நாக கன்னிகளா வரும் 2 பேரும் தான்.. ஷோக்காதான் கீது..

http://4.bp.blogspot.com/-SL_m3b3RpCs/Th3BufY8qTI/AAAAAAAAfy4/JkAO4dCdEKY/s400/huang+shengyi+white+snake+st3.jpg

ரசிக்க வைத்த வசனங்கள்

1. அங்கே போகாதே, டேஞ்சர்.. 

அதை 5 நிமிஷம் முன்னால சொல்லி இருக்கனும்.. 

2.  சொன்னதை செய்

அதைத்தானே செஞ்சுட்டு இருக்கேன்>?

3.  மனுஷங்க தான் தற்பெருமை பேசியே வாழ்க்கையை அழிச்சிக்கிறாங்க.. நீயுமா?

4.  சீக்கிரம் குரு ஆகிடனும்.. 

அப்போ நான் எதுக்கு இங்கே இருக்கேன்?

5.  உதடு ரெண்டும் ஒட்டிக்கிட்டுன்னா உள்ளங்கள் ரெண்டும் சேர்ந்துடுச்சுன்னுதானே அர்த்தம்? ( ஒரு வேளை கோதுமை அல்வாவுக்கு பதிலா கோந்து அல்வா சாப்டாங்களோ என்னவோ?)

6.   ஹீரோ - உங்க கிட்டே என்ன பெரிய குறைன்னா... ஹி ஹி  ( பெரிசா ஒண்ணுமே இல்லைங்கறது இந்த ஹி ஹி ல தெரிஞ்சிடுச்சு)

http://1.bp.blogspot.com/-AUWYNyD0pQc/TwP1I5ks02I/AAAAAAAAX8U/ls-GfQkh6Gs/s1600/jet_li_yodha_movie_photos_stills_001.jpg

7. இந்த உலகத்துல ஒருத்தரை விட ஒருத்தர் புத்திசாலியாத்தான் இருக்காங்க.. 

8.  நீ யாரை அதிகமா நினைச்சுட்டே இருக்கியோ, அவங்களை ஒரு நாள் நீ சந்திச்சே தீருவே.. ( ஆமா, நாம எல்லாருமே மரண தேவனை பற்றித்தான் அடிக்கடி நினைக்கறோம்..)

9. ஒரே ஒரு முத்தத்தால வாழ்க்கையே தலைகீழா மாறிடுச்சு ( THE RECIPROCAL KISS? HI HI )10.  எங்கே என் மனைவி? அந்த பாம்பு என் மனைவியை விழுங்கிடுச்சா?

ம்ஹூம்,அந்த பாம்பு தான் உன் மனைவியே..


11. இத்தனை இருக்கே.. இதுல எது உண்மையான மூலிகை என கண்டு பிடிப்பது?


அது நீ செத்த பிறகுதான் தெரியும்..

12.  உணர்வுகளை பரிமாறிக்கறது தப்புன்னா எங்களை படைச்சதும் தப்பு..

13.  எவ்ளவ் யோசிச்சும் நீ  யார்னு எனக்கு நினைவு வர்லையே?ஆனா உன் கண்ணீரை பார்க்கும்போது என் இதயத்துக்குள்ள வலி புகுந்து வருது..

http://1.bp.blogspot.com/-IlZC6x-SuNk/TlvDQrncxUI/AAAAAAAAg4s/5M6ki9sBvAM/s400/huang+shengyi+theme+release.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  முதல் பாராட்டு ஒளிப்பதிவும், லொக்கேஷன் செலக்‌ஷனும்.. செம செம .. ஏரியல் வியூவுல இயற்கை பிரதேசங்கள், வனங்கள் மிளிர்வது செம அழகு..

2. ஹீரொயின் செலக்‌ஷன்..

3. வால் தனமாக பேசும் அந்த சுட்டி எலி கேரக்டர்

4. படத்துக்கு தேவையே இல்லை என்றாலும் மார்க்கெட்டிங்க்கிற்காக ஜெட் லீயை உபயோகம் செய்தது..

http://4.bp.blogspot.com/-6Hkfss5t53o/TdGLFzTHkzI/AAAAAAAAefE/gmsuZcvverU/s1600/white+snake+poster+3+eva+huang.jpg

லாஜிக் மிஸ்டேக்ஸ்

1.  ஜெட்லீ ஒரு மந்திரக்கத்தியை ஹீரோ கிட்டே கொடுத்து தேவைப்படும்போது நீ யூஸ் பண்ணு என தர்றார்.. ஏன் இவர் யூஸ் பண்ண மாட்டாரா? தீட்டா?

2. பொதுவா ருத்ராட்ச மாலையை வலது கைல தான் சாது, துறவி எல்லாரும் உருட்டுவாங்க, இதுல ஒரு யாகம் நடக்கறப்ப எல்லா துறவிகளும் இடது கைல உருட்றாங்க, அது ஏன்>?

3. ஹீரோ மந்திர வேரை எடுக்கும் வரை வேடிக்கை பார்த்துட்டு, அப்புறமா எதிர்க்கும் தீய சக்திகள் மந்திர வேரை எடுக்கும்போதே எதிர்க்கலாமே, ஏன் அப்டி செய்யல?

4. துஷ்யந்தன்  சகுந்தலையை நினைவு படுத்தும் அந்த ஹீரோ - ஹீரோயின் கிஸ் சீன் ஒரே ஒரு டைம் மட்டும் எடுத்துட்டு அதையே 6 டைம் யூஸ் பண்ணி ஏன் ரசிகனை ஏமாத்தனும்? 6 ஷாட்டையும் தனித்தனியா எடுத்திருக்கலாம்..

சப்போஸ் இந்த படத்தை நான் மார்க்கெட்டிங்க் பண்ணி இருந்தா இந்தப்படத்துக்கு நான் வெச்சிருக்கும் டைட்டில்

THE SEVENTH SNAKE SYNDRELLA -  தமிழ்ல டப் பண்றப்ப - நாக கன்னியின் கில்மா கிஸ்

http://www.tarstarkas.net/blog/wp-content/uploads/2011/08/sorcerer-and-the-white-snake-7.jpg

இந்தப்படத்துல வர்ற ஆங்கில அல்லது சைனீஷ் வசனங்களை எல்லாம் இவன் தமிழ்ல  ட்ரான்ஸ்லேட் செஞ்சுட்டானே, இவன் அவ்ளவ் பெரிய அப்பாடக்கரா? என யாரும் கேட்க தேவை இல்லை, படம் தமிழ்ல டப் செஞ்சதைத்தான் பார்த்தேன் =ஹி ஹி  டைட்டில் போதி தர்மர்

சென்னையில் பத்திரிக்கைகளுக்கான பிரிவ்யூ ஷோவில் FORTH FRAME தியேட்டரில் காதல் பாதை பட பாடல் ஆசிரியர் (இன்று பாடல் வெளியீடு விழா) முருகன் மந்திரம் அவர்களுடன் படம் பார்த்தேன்.. அது பற்றிய இன்ன பிற விபரங்கள் தனி பதிவில்

ஈரோட்டில் வி எஸ் பி யில் ரிலீஸ் போல

 சி பி கமெண்ட் - லாலி பாப் சாப்பிடும் சின்ன பசங்க, ஜெட் லீ ரசிகர்கள், ஃபேண்டசி கதை பிரியர்கள் பார்க்கலாம்

13 comments:

சசிகுமார் said...

நானும் ஜெட்லியின் ரசிகன் தான்.. ரொம்ப பிடிக்கும் ஜெட்லி படங்கள்... TORRENT LINK தேடனும்... அவ்வ்வ்வ்வ்

ஹாலிவுட்ரசிகன் said...

வணக்கம் சி.பி

ஹாலிவுட்ரசிகன் said...

// செம தமாஷ் போங்க.. பறந்து பறந்து அடிக்கறதுல அண்ணன் கிங்க்கு.. //

அப்போ நம்ம கேப்டன் க்வீனா ??? கேப்டனை கேவலப்படுத்தாதீங்க. எப்பவுமே ஃப்ளையிங் கிக்குல அவர் தான் கிங்.

ஹாலிவுட்ரசிகன் said...

// சில வவ்வால்கள் மனிதர்களை கடிக்குது.. அதுக்கான விஷ முறிவு மருந்துதான் இவங்க தயாரிக்கறது.. தன் மனைவி ஒரு நாக கன்னிங்கற மேட்டர் ஹீரோவுக்கு தெரியாது.. ஆனா ஜெட்லீக்கு தெரியும்.. ஜெட்லீதான் தனக்கு வில்லன்கற மேட்டர் ஹீரோயினுக்கு தெரியும் , ஆனா ஹீரோவுக்கு தெரியாது.. ஹி ஹி ஹி //

ஆக மொத்தத்துல ஹீரோக்கு ஒன்னுமே தெரியாது. சுத்த பேக்கு ...

Anonymous said...

சீன படங்கள்லயும் லாஜிக் மிஸ்டேக் இருக்கு போல...

மாயன்:அகமும் புறமும் said...

ஜெட்லீ நடிச்சதுன்னு ஆரம்பிச்சி, மார்க்கெட்டிங்குக்காக அவர யூஸ் பண்ணினது தேவையல்ல ன்னு முடிச்சிட்டீங்க. ஜெட்லீயின் வயசான முகம் போட்டோவில் நன்றாக தெரிகிறதுதான்...

என் வலையில்;

உங்கள் நேரத்தை வெற்றிகரமாக நிர்வாகம் செய்வது எப்படி? Time Management

RAMVI said...

நல்ல விமர்சனம்.வசனத்தை எல்லாம் ஞாபகமாக கொடுத்திருக்கும் உங்க ஞாபகசக்திக்கு பாராட்டுகள்.

அப்பறம்,இடுப்புக்கு கீழே மீன் வடிவம் இருந்தா அது மச்ச கன்னி இல்லையா?

Sankar said...

இடுப்புக்கு கீழே மீன் வடிவம் ஆனா அது
நாக கன்னி

பாம்பு வடிவம் இருந்தா அது நாக கன்னி

இந்த கன்னிகளில் ஏதோ தப்பு இருக்கு

அவ்வ்.....

மௌனகுரு said...

A WHITE SNAKE'S REVENGE - ஜெட் லீ நடித்த லவ் ஸ்டோரி - சைனீஷ் பட விமர்சனம்////

A WHITE SNAKE'S REVENGE---- ஜெட் லீ நோ ஸ்பெல்லிங் மிஸ்டெக் ஆனா லாஜிக் மிஸ்டேக் அப்படின்னு வச்சிருக்கலாம்...


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

veedu said...

//சி பி கமெண்ட் - லாலி பாப் சாப்பிடும் சின்ன பசங்க, ஜெட் லீ ரசிகர்கள், ஃபேண்டசி கதை பிரியர்கள் பார்க்கலாம்//

ஓ......இதுல நீங்க என்ன ரகம்?ஹிஹி

காங்கேயம் P.நந்தகுமார் said...

டப்பிங் பண்ணினாலே வசனம் கேட்க ஆகாது. அதை வேற நீங்க எழுதி கொல்றது நியாயமா?

கடம்பவன குயில் said...

”சப்போஸ் இந்தப்படத்தை நான் மார்க்கட்டிங் பண்ணியிருந்தால் இந்தப்படத்திற்கு நான் வைத்திருக்கும் டைட்டில்.....”


நல்லவேளை கடவுள் எங்களை அந்தமாதிரி ஒரு கொடுமைக்கு ஆளாக்கவில்லை. தேங்க் காட்

Pulavar Tharumi said...

சுவாரசியமான விமர்சனம்!