Monday, June 24, 2019

தென்னை மரத்துல ஒரு குத்து ,பனை மரத்துல ஒரு குத்து


மத்தியில், பா.ஜ., ஆட்சி பலமாக அமைந்துவிட்டதால், தமிழகத்தில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த, 37 எம்.பி.,க்களும், 'வேஸ்ட்' என்ற கருத்தை சிலர் பரப்புகின்றனர்.- தி.மு.க., - எம்.பி., பழனி மாணிக்கம் : 

ஈஸ்ட்  ஆர் வெஸ்ட்  டிஎம்கே எம்.பிஸ் ஆர் வேஸ்ட் அப்டிங்கறாங்களா?


2  தமிழக மக்கள் மட்டுமல்ல, மத்திய, பா.ஜ., அரசையும் சேர்த்து அவமதிக்கும்ஒரு விஷயமாக, இதைப் பார்க்கிறேன்.தமிழகத்திற்கும், மோடி தான் பிரதமர் என்பதை, இதுபோன்ற கருத்தை பரப்புவோர் புரிந்துகொள்ள வேண்டும்.-தி.மு.க., - எம்.பி., பழனி மாணிக்கம் :


 கோ பேக் மோடி கோஷம் எழுப்பும்போது அவரு பிரதமர்னு நீங்க மறந்த மாதிரியா?


================
: தமிழகத்தில், மக்களின் அடிப்படை தேவையான தண்ணீர், இன்று, மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துஉள்ளது. அதற்கு, ஆளும், அ.தி.மு.க., அரசின் கவனக்குறைவே காரணம். தண்ணீர் பிரச்னையை, துவக்கத்திலேயே சரி செய்வதற்கான எந்த நடவடிக்கையும், தமிழக அரசு எடுக்கவில்லை. அவர்களின் முக்கிய பணி, ஊழல் செய்வது மட்டுமே.- சஞ்சய் தத் 


 எதிர்க்கட்சிகளின் பணி ஆளுங்கட்சியைக்க்குறை சொல்வது மட்டுமே?

==============
4 , சட்டசபைகளுக்கும், லோக்சபாவுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தான், நம் அமைப்பு. ஆனால், அரசியலமைப்பு சட்டத்தை தவறாக உபயோகப்படுத்தி, அதை உடைத்தது, நாம் தான். மக்கள்ஒன்றும் முட்டாள்கள் அல்ல. சட்டசபைக்கு, யாருக்கு ஓட்டு அளிக்க வேண்டும்; லோக்சபாவுக்கு, யாருக்கு ஓட்டு அளிக்க வேண்டும் என, மக்கள் முடிவு செய்வர்.-நாராயணன் திருப்பதி 

 தென்னை மரத்துல ஒரு குத்து ,பனை மரத்துல ஒரு குத்து ஃபார்முலா?

======================


 தண்ணீர் பிரச்னையால், சில பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள், உண்மை இல்லை. இது போன்ற செய்திகளை, ஊடகங்கள் பெரிதுபடுத்தக் கூடாது. குறை சொல்வதற்கு முன்னால், அதை நிவர்த்தி செய்ய, ஊடகங்கள் தயாராக இருக்க வேண்டும். அது தான், நாட்டுக்கு, ஊடகங்கள் செய்யும் சேவை.- செங்கோட்டையன்  


மக்கள் பிரச்சனையை சொல்லத்தானே ஊடகங்கள் ? பெரிது படுத்தக்கூடாதுன்னா எப்படி?



செய்தி உண்மை இல்லைங்கறாரு. இது போன்ற பிரச்சனையை பெரிதுபடுத்தக்கூடாதுங்கறாரு, முன்னுக்குப்பின் முரணா இருக்கே?

======================

 6   தமிழகத்தில் இன்று, உயிர் போகும் அளவுக்கு, குடிநீர் பிரச்னை இருக்கிறது.-துரைமுருகன் 
ஆமா, திமுக ஆட்சியில் மின்சாரப்பற்றாக்குறை பிரச்சனை இருந்ததே அதே மாதிரிஅதிமுக ஆட்சியில் தண்ணீர்ப்பிரச்சனை

=================


7   குடிநீர் பிரச்னை  குறித்து விவாதிக்க, சட்டசபையைக் கூட்ட வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அதற்கு, ஆளுங்கட்சி தரப்பில் இருந்து, இதுவரை பதிலில்லை.-துரைமுருகன் 


 சட்ட்சபையைக்கூடடனும்னா  கூட்டின பின் வாசல் தெளிக்க தண்ணீர் வேணும், தண்ணீர்ப்பற்றாக்குறைதான் கூட்டாததுக்குக்காரணமோ?

====================


8   குடிநீர் பிரச்னையைத் தீர்க்க, அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை.-துரைமுருகன் 


 உங்க கிட்டேதான் ஐடியா டிப்போக்கணக்குல இருக்குமே? கொடுக்கலாமே?


=============


9   கல்குவாரிகளில் இருக்கும் தண்ணீரை கொடுக்கிறேன் என்பது, விஷத்தைக் கொடுப்பதற்குச் சமம்.-துரைமுருகன் 

நல்ல வேளை டாஸ்மாக் தண்ணியை தர்றேன்னு சொல்லலை



 பெப்சி கொக்கோ கோலா ஃபேக்டரிக்கு லீசுக்கு விட்ட தண்ணீரை திரும்ப பெறலாமே?


==================

9   அரசு உயர்நிலைப் பள்ளிகளில், குறைந்தபட்சம் எட்டு ஆசிரியர்கள் இருப்பர். தற்போது அது, ஐந்தாக குறைக்கப்பட்டிருக்கிறது.-தமிழ்நாடு ஆசிரியர் 

முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர், தியாகராஜன் :


 எட்டுப்பேருக்கும் சம்பளம் தர கஜானாவில் துட்டு இல்லையாம்


=============


10   மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், ஒவ்வொரு பாடங்களுக்கும், அதற்குரிய ஆசிரியர் தான், கற்றுத் தர முடியும். ஒரு மாணவனுக்கு, ஒரு ஆசிரியர், இரண்டு ஆசிரியர்கள் இருக்கும் நிலை உள்ளதை, அமைச்சர் சுட்டிக் காட்டியிருக்கிறார். மலைக் கிராமங்களில், மாணவர்கள் குறைவாக இருக்கின்றனர் என்பதற்காக, ஆசிரியர்களைக் குறைக்க முடியுமா?'-தமிழ்நாடு ஆசிரியர் 

முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர், தியாகராஜன் :


குறிப்பிட்ட  சப்ஜெக்ட் ஸ்பெஷலிஸ்ட்டா ஏன் அப்பாய்ண்ட் பண்ணனும், எல்லா சப்ஜெக்ட்டும் படிச்ச  ஆசிரியரை நியமிச்சா செலவு குறையுமே?


=====================

11   தமிழகத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு, குடிநீர் பஞ்சம் மிகப்பெரிய அளவில் தலைவிரித்து ஆடுகிறது.-திருநாவுக்கரசர்,

அது வெறும் வதந்திதான் வசதியா பொய் சொல்லீட்டாங்களே?
===============

12  மாநில அரசு, இதற்கான மாற்று ஏற்பாடுகளை, முன்பே திட்டமிட்டு, செயல்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்ய தவறி விட்டது. -திருநாவுக்கரசர்,

மழைநீர் சேகரிப்பு விழிப்புண்ர்வும் ,மரக்கன்று நடுதலும்
நீர்நிலைகளை தூர் வாருவதும்தான்   தேவை, அது ஜனங்க கிட்டேயும் இருக்கனுமே?

======================


13 குடிக்க தண்ணீர் தர முடியாத அரசால், மக்களுக்கு என்ன பலன் ஏற்படப் போகிறது-? =திருநாவுக்கரசர்,


 ஆட்சி மாற்றம் எற்படுமே? அது பலந்தானே?

===========


14 மக்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியாத ஓர் அரசு, தேவையே இல்லை.-திருநாவுக்கரசர்,


 சரி திமுக வை கொண்டாரலாம்னா அவங்களால கரண்ட் தர முடியாது


==================



15  புதிய லோக்சபாவின், முதல் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, பிரதமர் நரேந்திரமோடிக்கு, தி.மு.க., - எம்.பி.,க்கள் மிகுந்த ஆர்வத்துடன் முன்வந்து, வணக்கம் செலுத்தியது, அனைவரையும் கவரும்படி இருந்தது.


 நல்ல வேளை , பழைய நினைப்புல கோ பேக் மோடி சொல்லாம விட்டாங்க


================


16  “சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்பது வதந்தி” - அமைச்சர் வேலுமணி # இவரு டெய்லி நியூஸ் பேப்பர்,நியூஸ்"சேனல் எதுவுமே பார்க்கறதில்லை போல


==============


17 மதுரா எம்.பி. ஹேமா மாலினி “ராதே ராதே! கிருஷ்ணம் வந்தே ஜகத்

குரு” எனக்கூறி மக்களவையில் பதவியேற்றுக்கொண்டார் # நல்ல வேளை கமல் அங்கே போகல,அவரு எம்".பி ஆகி இருந்தா;
ராதே என் ராதே வா"ராதே அப்டினு "பாடி இருப்பாரு. வாராதே(வராதே)னு சொல்றாரா?வா!ராதேனு கூப்பிடறாரா?னு குழம்பி இருப்பாங்க


=============



18 காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் ஆவணங்களை மாற்றி திமுகவினர் ரூ.100 கோடி ஏப்பம்!! சிபிஐ விசாரணைக்கு ஹைகோர்ட் உத்தரவு !! - # யுவர் ஆனர் , வழக்கு பற்றி குற்றவாளி கிட்டே கருத்து கேட்கும்போது தமிழ் வாழ்கனு கோஷம் போடுவான், ஏமாந்துடாதீங்க


==============


19   ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற விவகாரத்தில், எதிர்க்கட்சிகளை, ஆளுங்கட்சி அழைத்து பேச வேண்டும். எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாமல், செயல்பாட்டுக்கு வர முடியாது. நடைமுறைக்கு ஒவ்வாதபிரச்னைகளை பேசி, மக்களைகுழப்புவதை நிறுத்திவிட்டு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, மத்திய அரசு முன் வர வேண்டும்.'-தங்கபாலு


அப்படியே அந்த எல்லார் கணக்கிலும் ஒன்றரை லட்சம் வாக்குறுதியையும் நிறைவேற்றச்சொல்லுங்க , ரொம்ப வருசமா பெண்டிங்

===============

20  நடிகர் சங்க தேர்தலில், நாடக நடிகர்களை சந்தித்து, ஆதரவு திரட்ட இருந்தோம். இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதாக, பதிவாளர் தேர்தலை நிறுத்திஉள்ளார். தேர்தலில், எங்கள் அணி வெற்றி பெறுவதற்கு, பிரகாசமான வாய்ப்பு இருந்தது. வாக்காளர் பட்டியலை சரிபார்க்காமல், தேர்தலை அறிவித்தது, வியப்பாக உள்ளது.= பாக்யராஜ்  


வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பதற்குள் உங்க வெற்றி வாய்ப்[பு பறி போய்டுமோ?

=================