Wednesday, May 01, 2019

திமுக கூட கூட்டணி வெச்சது கூட அந்தக்கட்சி மேல உள்ள பழைய பகையினால்தானா?

1    இப்போதைய மத்திய அரசால், மக்கள்எண்ணற்ற இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, ஆட்சி மாற்றத்தைவிரும்புகின்றனர்- பிரியங்கா#  இவரோட கணவர் வாத்ரா , அம்மா சோனியா , அண்ணன் ராகுல் இவங்களை தான் பொதுவா மக்கள்னு குறிப்பிடறாங்க போல


================


அ.ம.மு.க.,விடம் பணம் இல்லை; கொள்கைகள் உள்ளன.=அரவக்குறிச்சி தொகுதி, அ.ம.மு.க., வேட்பாளர், ஷாகுல் அமீது

கடல்லயே இல்லையாம் மொமெண்ட்


===============


3  மக்கள், 'மோடியே, திரும்பிப் போ' என, வாயால் மட்டும் சொல்லாமல், ஓட்டு சீட்டுகளாலும் சொல்லி உள்ளனர்.-தமிழக, காங்., தலைவர்,அழகிரி  # கோ பேக் மோடி  , கோ பேக் ராகுல்  எல்லாமே ட்ரண்ட் ஆச்சே>100 பேரை செட் பண்ணா எந்த டேக்கையும் ட்ரண்ட்   அடிக்கலாம்


==================


4  :நாட்டின் வரலாற்றிலேயே, இவ்வளவு நீண்ட நாட்களுக்கு தேர்தல்நடத்தப்பட்டது-கிடையாது.  -மம்தா பானர்ஜி  #  நீண்ட நாட்களுக்கு   இது பற்றி   ஜனங்க பேசட்டும்னுதான்


==============


5  நாடு முழுவதும், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளது. எந்தக் கட்சிக்கு ஓட்டளித்தாலும், பா.ஜ., சின்னத்தில் ஓட்டு பதிவாகிறது-அகிலேஷ் யாதவ்  அப்போ  போலிங் ஆன ஓட்டுக்கள்ல 100%  தாமரைக்கே எல்லா ஓட்டும் விழுந்திருக்கனுமே?


===================

6   

வங்கிகள் மீது பெருகும் புகார்கள்; எஸ்.பி.ஐ.,க்கு முதலிடம் #  state bank of India = state complaint  of INDIA



-------------



7    avengers end game    ஹாலிவுட் படத்தையும் பட ரிலீசுக்கு முன்பே வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் #  திரை கடல் ஓடியும் திரவியம் தேடுங்கறது இதானோ?


================



8  கடந்த 5 ஆண்டுகளில் எந்த கோயில்களிலும் பயங்கரவாத தாக்குதல் நடக்கவில்லை. இதுதான் பா.ஜ. ஆட்சியின் சாதனை.-மோடி # எப்படியோ  பிரச்சாரத்துல ஆட்சியின் சாதனைனு சொல்லிக்கவாவவ்து ஒரு பாய்ண் ட்   கிடைச்சுதே?


====================


9  வாரணாசி என்னை எம்.பி.யாக மட்டுமல்ல நாட்டின் பிரதமராக்கியுள்ளது = மோடி  # இதுக்கு எதுனா பரிகாரம் உண்டுங்களா?


=================


10  இன்று நடந்த இந்த மெகா பேரணி பா.ஜ. கூட்டணி மீண்டும் வெல்லும் என்பதற்கும் இங்கு திரண்டுள்ள மக்கள் கூட்டமுமே உதாரணம்-மோடி  #  எல்லா கட்சிக்கும் தான் கூட்டம் கூடுது , குவாட்டரும் கோழி பிரியாணியும் குடுத்தாப்போதுமே?



=================

11  காங்கிரஸ் கட்சியால் நாட்டை பாதுகாக்க முடியாது: அமித் ஷா  # ஏன்? அவங்க வந்தா ராணூவத்தை கலைச்சிடுவாங்களா?


=============


12  மக்களுக்கு, வங்கி கணக்கு துவக்க வசதி ஏற்படுத்தி கொடுத்ததற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.ஏனெனில், இந்த கணக்கில் தான், நியாய் திட்டத்தின் கீழ், பணம் செலுத்தப்படும்- ராகுல்

அப்போ அந்த திட்டத்தால பயன் அடைஞ்சவங்க அதுக்கு பாஜக வும் ஒரு காரணம்னு பாராட்டுவாங்களே பரவால்லையா?


================


13  'பயங்கரவாதத்தை ஒழித்தால், அதற்காக செலவிடப்படும் தொகையை, மக்கள் நலப் பணிகளுக்கு செலவிட முடியும். இதன் மூலம், ஏழ்மையை ஒழிக்க முடியும். அதனால்தான், பயங்கரவாதம், பாதுகாப்பு பிரச்னை குறித்து பேசுகிறேன்,'' - மோடி   # அதுவுமில்லாம இப்போதைக்ல்கு பாதுகாப்பு குறித்துப்பேசுவதுதான் ஆட்சிக்குப்பாதுகா;ப்பா இருக்கும்


===================


14      மோடி போட்டியிடும், , வாரணாசி தொகுதியில், வேட்பு மனு தாக்கல் செய்ய, தமிழகம் தெலுங்கானாவைச் சேர்ந்த, 100 மஞ்சள் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர் #  மஞ்சள் விவசாயிகள் எல்லாரும்  சேர்ந்து மோடி முகத்துல கரி பூசப்பார்க்கறாங்க ?


==================


15  நான்கு தொகுதிகளின் வெற்றிக்கு, கூட்டணி கட்சியினரைவிட, பா.ம.க.,வினர் மூன்று மடங்கு உழைக்க வேண்டும்' =, ராமதாஸ்   #  அப்போ 3  சூட்கேஸ் கை மாறி இருக்குமோ?


=================

16   நம்முடைய பகைவர்களை, ஜனநாயகப்படுத்தி தான் வென்றெடுக்க வேண்டும்.-திருமா  # திமுக கூட கூட்டணி வெச்சது கூட அந்தக்கட்சி மேல உள்ள பழைய பகையினால்தானா?


=============


17  ஒரு ஜாதி, இன்னொரு ஜாதியை அச்சுறுத்துவது, நிலையானது அல்ல -திருமா  # பொஞ்>சாதி<யைக்கூட விளையாட்டுக்குக்கூட இனி பயப்படுத்தலை சார்

===============


18. பிரதமர் பதவியில் அமர்ந்த எவரும், மோடியைப் போலப் பேசி, நான் பார்த்ததே இல்லை.-சரத்பவார்  # மாதிரி என்ன மாதிரி  மன்மொகன்சிங் பிரதமரா இருந்தப்போ அவர் பேசியே பார்த்ததில்லை ஜனங்க


=================


19   காங்கிரசுக்கு, நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருவதை, கண்கூடாகப் பார்க்க முடிகிறது.-வீரப்ப மொய்லி # கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் காட்சி அப்டினு அப்பவே பாடி இருக்காங்களே?


கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்


==============


20  பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி, 40 நாட்களுக்கு மேல் ஆகியும், எந்த முன்னேற்றமும் தெரியவில்லை.-  தினகரன்  # அதனால பழைய படி தமிழக போலீஸ் கைக்கே கேசை மாத்திடனுமா?



===============