Wednesday, September 02, 2015

தாக்க தாக்க - திரை விமர்சனம்

கடத்தல் கும்பலிடம் சிக்கிக் கொள்ளும் பெண்களைக் காப்பாற்றி, வில்லன்களை காலிசெய்யும் வழக்கமான ‘ஆக்‌ஷன் ஹீரோ’ படம் ‘தாக்க தாக்க’. 2 ஆண்டு களுக்குப் பிறகு, விக்ராந்த் நடிப்பில் வெளிவந்துள்ள இப்படத்தை அவ ரது அண்ணன் சஞ்ஜீவ் இயக்கியிருக் கிறார்.
பாலியல் தொழிலாளியின் மகனான விக்ராந்த், தன் தாயின் அவலமான வாழ்வைக் கண்டு வளர்கிறார். ஒரு கட்டத்தில், விக்ராந்த்தின் தாய் அவர் கண்முன்னே கொல்லப்படுகிறார். அங்கிருந்து தப்பித்து சென்னையில் வளரும் அவருக்கு அரவிந்த் சிங்கின் நட்பு கிடைக்கிறது. நர்ஸ் அபிநயாவைக் காதலிக்கிறார் அரவிந்த் சிங். எதிர்பாராதவிதமாக வில்லன் ராகுல் வெங்கட் கும்ப லிடம் அபிநயா மாட்டிக்கொள் கிறார். அபிநயாவை மீட்கும் போராட் டத்தில் நண்பனை இழக்கும் விக்ராந்த், வில்லன் கூட்டத்தை எப்படி அழிக்கிறார் என்பதுதான் ‘தாக்க தாக்க’.
விக்ராந்த்தின் பின்னணியை விளக்கும் தொடக்கக் காட்சிகள் எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன. ஆனால், வில்லன் ராகுல் வெங்கட்டின் அறிமுகத்துக்குப் பிறகு வரும் காட்சிகள் எளிதில் ஊகித்துவிடும்படி இருக்கின்றன. ஆக்‌ஷன் படத்தின் திரைக்கதையில் வேகம் குறைவாக இருக்கிறது.
அரவிந்த் சிங் - அபிநயா காதல், விக்ராந்த் - பார்வதி நிர்பன் காதல் எனப் படத்தில் எந்த காதல் கதையின் பின்னணியும் அழுத்தமாக இல்லை. வில்லனின் ஆட்களால் கடத்தப்பட்ட 10-க்கும் அதிகமான இளம்பெண்கள் ஒரு பழைய தொழிற்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர் களைப் பற்றி போலீஸோ, ஊடகமோ கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இப்படி பல காட்சிகளில் ‘லாஜிக்’ இல்லை.
விக்ராந்த் நடிப்பு ஓகே. சண்டைக் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். அரவிந்த் சிங், அவரது காதலி அபிநயா, அவரது தோழி பார்வதி நிர்பன் ஆகியோர் பொருத்தமான தேர்வுகள். ஆனால் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் ராகுல் வெங்கட் பலவீனமான தேர்வு. பார்வையாளர்களை பதற்றமடையச் செய்யும் நடிப்போ, தோற்றமோ அவரிடம் இல்லை.
ஆக்‌ஷன் படத்தின் முக்கியமான அம்சம் விறுவிறுப் பான திரைக்கதை. அது இந்தப் படத்தில் இல்லை.


நன்றி-த இந்து