Saturday, September 01, 2012

JOKER - பாலிவுட் சினிமா விமர்சனம்

http://movies.ndtv.com/images/reviews/joker.jpgஹீரோ நாசாவில் பணி புரியும் ஒரு ஆராய்ச்சியாளர்.வேற்றுகிரகவாசிகள் பற்றிய ஆராய்ச்சி. அவங்களோட எப்படி தொடர்பு கொள்வது? இதை கண்டுபிடிக்கறதுதான் அவர் வேலை.. அவர் பண்ணிட்டிருக்கற இந்த பிராஜக்ட் ஒரு மில்லியன் டாலர் மதிப்பு உள்ளது.. 


ஹீரோவோட அப்பா இந்தியாவுல இருக்கார். அவர் கிட்டே இருந்து ஒரு தகவல்.. சீரியஸ்.. உடனே வரவும்னு.. ஹீரோவுக்கு போக இஷ்டம் இல்லை.. ஆனா ஹீரோயினுக்கு அந்த ஊரை பார்க்க ஆசை. ஏன்னா ஹீரோ ஹீரோயின்கிட்டே தான் ஒரு அநாதைன்னு டகால்டி விட்டிருக்கார்.. உண்மை என்னன்னு தெரிஞ்சுக்க  ஹீரோயினுக்கு ஆசை.. 


பொதுவா ஆம்பளைங்க யார் சொன்னாலும் கேட்க மாட்டாங்க.. ஆனா தன் மனைவி, அல்லது காதலி, அல்லது கேர்ள் ஃபிரண்ட் யாராவது சொன்னா கேட்டுடுவாங்க.. கேட்டே ஆகனும்.. அப்படி கேட்கலைன்னா என்ன ஆகும்?கறது பட்டினி இருந்தவங்களுக்கு தெரியும்.. 


இந்தியா கிளம்பறாங்க.. பாக்ளாபூர் தான் அவங்க ஊர்.. 600 பேர் மட்டும் உள்ள மிகவும் பின் தங்கிய கிராமம் அது.. நோ மின்சாரம், நோ தண்ணீர். அங்கே போன பிறகுதான் தெரியுது ஹீரோவோட அப்பா கலைஞரை விட  திறமையா டிராமா போட்டிருக்காருன்னு.. .


அவர் சீரியஸா எல்லாம் இல்லை.. தான் வாழும் கிராமம் ரொம்ப மோசமான நிலைமைல இருக்கு ..உன்னால் முடியும் தம்பி கமல் மாதிரி  அதை முன்னேற்றனும்.. அதுக்கு தன் மகன் உதவி செய்யனும்.. இதான் அவர் எண்ணம்.. 




http://bollyspice.com/wp-content/uploads/2012/08/12aug_joker-musicreview02.jpg



ஹீரோ அரசியல்வாதிகளை போய் பார்க்கறாரு.. தூள் விக்ரம் மாதிரி  கோரிக்கை வைக்கறாரு,.. ஆதாயம் இல்லாம அரசியல்வாதி ஆத்தோட போக மாட்டான், ஆதாரம் இல்லாம போலீஸ் யாரையும் லாக்கப்ல போட மாட்டான்ன்னு ஒரு பழமொழி இருக்கு, அது மாதிரி ஹீரோ சந்திச்ச அரசியல்வாதி ஆ ராசா மாதிரி தூய்மையான கரங்களுக்கு சொந்தக்காரர்.. வேலை நடக்கலை. 


ஹீரோ ரிட்டர்ன் ஆகி யோசிக்கறாரு.. சிட்டிசன் படத்துல அஜித் அத்திப்பட்டி கிராமத்தை  உலக மக்கள் கவனத்தை திசை திருப்ப ஐடியா பண்ண மாதிரி இவரும் ஒரு ஐடியா பண்றாரு..


 அதாவது வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டுல அங்கே வந்து இறங்கி இருக்காங்க அப்டினு ஒரு புரளியை கிளப்பி விடறாரு. உடனே மீடியாவுல இருக்கற பறக்கா வெட்டிகள் எல்லாம் வீடியோ கேமராவை தூக்கிட்டு முதல்வன் படத்துல குவியற மாதிரி குவிஞ்சிடறாங்க..


பூசணிக்காய், தர்பூசணி ( கோசாப்பழம்) , பாகற்காய் இதை எல்லாம் யூஸ் பண்ணி ஏலியன்ஸ் மாதிரி ஒரு ஆளை செட் பண்ணி டிராமா பண்றாங்க.. மிலிட்ரி, போலீஸ் எல்லாம் அங்கே குவிஞ்சுடுது.. என்ன நடக்குது என்பதை காமெடியா சொல்ல முயற்சி பண்ணி இருக்காங்க.. 



இந்தப்படத்தை நான் ஈ எடுத்த ராஜ்மவுலி கையிலோ ஷங்கர் கையிலோ கொடுத்திருந்தா பட்டாசை கிளப்பி இருப்பாங்க.. ஏன்னா  சி ஜி ஒர்க் எனப்படும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் படத்துக்கு மெயினா ப்ளே பண்ணறதால அவங்க தான் குட் சாய்ஸ்.

http://timesofindia.indiatimes.com/photo/15376027.cms


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. கிராமத்தில் ஹீரோ நுழைந்ததும் அங்கே இருக்கும் அப்பாவி  மக்கள் எல்லாம்  மரத்தின் கிளை நுனியில் அமர்ந்து  அடி பாகத்தை வெட்டுவதும் எல்லாம் பொத் பொத் என கீழே விழுவதும்1980 இல் 7ஆம் கிளாஸ் பாடத்தில் வந்த பழைய காமெடி என்றாலும் சிரிக்க முடிகிறது


2. மின்சாரம் இல்லாத கிராமம் என்பதால் ஒளிக்காக பெரிய பெரிய கண்ணாடித்தொட்டிகளில்  மின்மினிப்பூச்சிகளை விட்டிருப்பது கொள்ளை அழகு..  ஸ்ரீ ராம் ஆல்ரெடி மீரா படத்துல் அந்த மாதிரி காட்டி இருந்தாலும் பார்க்க நல்லா இருக்கு.. 


3. படத்தோட ஓப்பனிங்க் பாடல் காட்சில அந்த மூங்கில்களால் வேயப்பட்ட அரங்கம் அட்டகாசம்.. ஆர்ட் டைரக்டர்க்கு ஒரு சல்யூட்.. அதை ரெடி பண்ண 100 பேர் கொண்ட குழு வேலை செஞ்சாலும் ஒரு வாரம் ஆகி இருக்கும்.. 


4. மீடியாவில் இருந்து மிடி போட்டு வரும் ஜிகிடி மழையில் நனைந்து ஆடுவது செம கிளு கிளு..  அந்த சீனில் கேமரா தனது பணியை செவ்வனே செய்து இருக்கு.. 


5. பாக்ளாபூர் மக்கள் எல்லாம் மனரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட ஆஃப் லூஸ் என்று  காட்டி விட்டதால் பல லூஸ்தனங்கள் செய்வது மாதிரி காமெடி செய்ய ரொம்ப சவுகரியம்.. 


http://image3.mouthshut.com/images/ImagesR/2012/8/Joker-Movie-925642540-5234382-1.jpg
இயக்குநரிடம் சில கேள்விகள், திரைக்கதையில் சில ஆலோசனைகள், மார்க்கெட்டிங்கில் சில  யோசனைகள்



1. போஸ்டர் டிசைன் மகா மட்டம்.. படத்தோட போஸ்டர் தான் ஆடியன்சை தியேட்டருக்கு இழுத்துட்டு வரும்.. ஆனா இது சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமா? காமெடி படமா? என்று குழம்பி ரெண்டுங்கிட்டானாக போஸ்டர் அடிச்சிருக்கீங்க..  ஹாலிவுட் படத்தை எதுக்கெல்லாமோ காப்பி அடிக்கிறோம்.. போஸ்டர் டிசைன்ல காப்பி அடிச்சா என்ன? 


2. கோடாலியால மரத்தை வெட்டி எல்லாரும் பொத் பொத்னு கீழே விழும் காமெடி காட்சியில் என்னமோ ஹெலிகாப்டர் தரைல இறங்கற மாதிரி கிழே விழறாங்க.. தலை குப்புற த்தானே விழுவாங்க? படு மோசமான காட்சி அது.. 


3. ஹீரோதான் தன் சொந்த ஊருக்கு வர்றார்..  அப்பாவை பார்க்கறார்.. அவர் தான் முகத்துல சந்தோஷ எக்ஸ்பிரஷன் காட்டனும், ஆனா அவரை விட ஹீரோயின் தான் வாங்குன காசுக்கு மேலயே எல்லாத்தையும் காட்டறாங்க.. ஓவரோ ஓவர் ஆக்டிங்க்.. அண்ணன் அக்‌ஷய் ரொம்ப ரொம்ப அடக்கி வாச்சிங்க்.. சம்பளம் சரியா தரலையா? 


4.  என்னதான் ஹீரோயின் யூ எஸ் ரிட்டர்னா இருந்தாலும் அப்படியா டிரஸ்சிங்க் பண்ணி இருப்பாங்க.. எங்க ஊர் கரகாட்டக்காரிங்க கூட முந்தானையை  அப்பப்ப மூடுவாங்க.. அது என்னமோ பப்ளிக் பார்க் மாதிரி 24 மணி நேரமும் ஓப்பனாவே இருக்கு.. படு கண்றாவி. ( கிளுகிளுப்பே வர்லை யுவர் ஆனர் )


5. ஹீரோ எல்லாரையும் ஏமாத்த வயல்வெளில ஒரு செவ்வக இடம் மார்க் பண்ணி அங்கே விண்கலம் வந்த மாதிரி காட்ட எல்லா புற்களையும் கட் பண்றாரு.. பின் அந்த எல்லை வகுத்த கயிறை அப்படியா லூஸ் மாதிரி விட்டு வைப்பாங்க? 


6. ஹீரோ நாசாவுல ஒர்க் பண்றார்.. மீடியாக்கள் கேமராவுடன் வருது.. அட்லீஸ்ட் முகத்துல ஒரு மரு மச்சம் கூட ஒட்டிக்க துப்பில்லையா? முழு மாறு வேஷம் தான் போட கையாலாகலை.. 


7. ஹீரோவுக்கு எந்த மாமா பெண்ணோ, முறைப்பெண்ணோ இல்லை.. ( 2ம்  1 தான் ) பின் ஏன் தனக்கு மேரேஜ் ஆகிடுச்சு, இவதான் அவன்னு அப்பாவுக்கு அறிமுகம் பண்ணாம ஜஸ்ட் ஃபிரண்ட்னு அறிமுகம் பண்றார்? ஆனா எல்லார் கண் முன்னாலயும் 2 பேரும் ஜோடியா எப்போ பாரு சுத்திட்டே இருக்காங்க.. 



8. நாட்டோட ராணுவம் வந்த பின் வேற்றுக்கிரக வாசி மாதிரி வேஷம் போட்டு காமெடி பண்ணிட்டு இருப்பது மகா எரிச்சல்..  அவங்களும் ஷூட் பண்ணாம என்னமோ  ஜெயமாலினி டான்ஸ் பார்க்கும் ஆர்வத்துடன் வாயை ஆ-ன்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க ( ஏன் பழைய உதாரணம்னா. அந்தக்காலத்துல அது ஆச்சரியம், இப்போ எல்லாம்  அது சர்வ சாதாரணம் ஆகிடுச்சு )


9. பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் அந்த கிராமத்துக்கு வந்த பின் ஹீரோ அவங்க முன் கால் மேல கால் போட்டு பேசறது எல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர்.. அடக்கி வாசி அண்ணாத்தே.. அண்ணன் அழகிரியே அடங்கி இல்லை? 


10. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டாக நிஜமாவே  ஏலியன்ஸ் வருவது நல்ல சீன் தான்.. ஆனா ஜீன்ஸ் எலும்புக்கூடு டான்ஸ் மாதிரி அது  5 நிமிஷம் ஒரு குத்தாட்டம் ஆடிட்டு பின் விண்கலம் ஏறி தாயகம் திரும்புவது  கேட்கறவன் கேனயனா இருந்தா  கே டி விக்கு ஓனரே கே ஆர் விஜயா தான்னு  ஐ கிருஷ்  சொல்ற மாதிரி இருக்கு 

11. எங்கூர்ல 25 வது படத்துக்கே ஓவரா சலம்பல் பண்ணுவாங்க. அக்‌ஷய் குமாரின் 100 வது படம்னு பட்டாசா போஸ்டர் ஒட்டவேணாமா? அட 100 வது படமா? அப்போ ஏதாவது வித்தியாசமா இருக்கும்னு சில ஏமாளிங்க  வர  வாய்ப்பு இருக்கே? 

12. தமிழ்ல ஜி வி பிரகாஷ் குமார் செம ஃபேமஸ். அவர் ஹிந்திப்படத்துக்கு இசை அமைச்சதை  டி வி விளம்பரங்கள்ல அண்டர்லைன் பண்ணி காட்ட வேண்டாமா?

http://www.bolegaindia.com/images/gossips/akshay_sonakshi_joker_trailer_post_1342084543.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்


 காட்சி ரீதியான மொக்கை காமெடி என முடிவு செஞ்சதால இயக்குநர் வசன காமெடி தேவை இல்லைன்னு முடிவு பண்ணுனது படு முட்டாள்த்தனம். இந்தப்படத்துல கிரேசி மோகனை விட்டுருந்தா தாளிச்சிருப்பாரு.. அவரை தமிழ்ல எழுதச்சொல்லி ஒரு துபாஷை விட்டு ஹிந்தில மொழி பெயர்த்து இருக்கலாம்.. 

1.  உன் மேல இவ்வளவு பாசம் வெச்சிருக்கும் பெற்றோரை விட்டுட்டு உன்னால எப்படி இங்கே ஃபாரீன்ல டைம் பாஸ் பண்ண முடியுது?


2. கண்ணா.. உங்க கிராமம் வளர்ச்சி அடைஞ்சா அதுல எனக்கு என்ன லாபம்? எந்த வேலை செஞ்சாலும் அதுல ஒரு ஆதாயம் பார்க்கறவன் தான் உண்மையான அக்மார்க் அரசியல்வாதி 


3. Hamara mazaak mat udaao"( எங்க சந்தோஷத்தை  கெடுக்காதே)


அய்யய்யோ துபாஷ் - Don't fly our jokes." 


http://www.glamsham.com/music/reviews/images/joker.jpg

சி.பி கமெண்ட் - படம் குழந்தைத்தனமா இருக்கு. அதனால குழந்தைங்களை கூட்டிட்டு போலாம், ஜாலியா சிரிப்பாங்க.. நீங்க இதை இப்படி கேவலமா எடுத்து இருக்காங்களேன்னு சிரிச்சுட்டு வரலாம் .. அக்‌ஷய் குமாரின் 100 வது படம் ஊ ஊ ஊ ஊ - ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன், மொத்தமாவே 36 பேர்தான் இருந்தாங்க ,அதுல 28 பேர் சேட்டுகள், அவ்வ்வ்

Star Cast: Akshay Kumar, Sonakshi Sinha, Prakash Raj, Sreyas 

Talpade, Minisha Lamba

Director: Sirish Kunder

Producer: Farah Khan, Akshay Kumar


Music: G.V. Prakash Kumar

Genre: Adventure Fantasy

http://timesofindia.indiatimes.com/photo/15200153.cmsa



டிஸ்கி -

முகமூடி -சினிமா விமர்சனம்