Friday, November 25, 2011

மயக்கம் என்ன - சினிமா விமர்சனம்


http://viswaksena.com/wp-content/uploads/2011/10/mayakkam_enna.jpg 

புது வசந்தம் விக்ரமன் கிட்டே குடுத்துருந்தா 4 நிமிஷ பாட்டிலேயே முடிச்சிருக்கற சாதாரண கதைதான்.. நம்ம செல்வராகவன் தன்னோட திறமையை முடிஞ்சவரை  அந்த சாதா கதையை ஸ்பெஷல் சாதாவா சொல்ல முயற்சி பண்ணி இருக்கார்..

ஹீரோ ஒரு ஃபோட்டோ கிராஃபர்.. அவரோட கனவே பெஸ்ட் ஃபோட்டோ கிராஃபர் ஆகனும்கறதுதான்.. ஆனா பாருங்க அதிர்ஷ்ட தேவதை அவர் பக்கம் இல்ல.. திறமை இருந்தும்  அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலை.. அவரோட திறமையை யூஸ் பண்ணி வேறொரு ஆள் ஜெயிக்கறாரு.. அப்புறம் கஷ்டப்பட்டு முட்டி மோதி ஜெயிச்சு பெஸ்ட் ஃபோட்டோகிராஃபர் அவார்டு இண்ட்டர்நேஷனல் லெவல்ல வாங்கிடறாரு.. அவ்ளவ் தான் கதை..

தல நடிச்ச முகவரி கதையை திருப்பி சுட்ட தோசை மாதிரி இருக்கேன்னு யாரும் நினைச்சுடக்கூடாதே.. அதனால சில ஜிம்மிக்ஸ் வேலையை எல்லாம் டைரக்டர் காட்றாரு.. அதாவது ஹீரோவுக்கு ஜோடி யார் தெரியுமா? போடா லூசு.. ஹீரோயின் தானே-னு அல்ப சொல்பமா கேட்றாதீங்க.. ஹீரோவோட ஃபிரண்ட் ஒரு ஃபிகரை பொண்ணு பார்க்கறாரு.. டேட்டிங்க் போலாம்னு கூப்பிடறாரு... என்னமோ தெருக்கடைசில இருக்கற பொட்டிக்கடைக்குபோலாம் வான்னு கூப்பிடற மாதிரி.... கூப்பிட்டதும்  ஹீரோயின் பயங்கர அப்பாவி போல கூடவே வந்துடுது.. 

அவன் பாப்பாவை ( அதாங்க ஹீரோயின் ) கட்டிப்பிடிக்கறான்.. அங்கே இங்கே தடவறான் ( எங்கே எங்கே-னு எல்லாம் இண்டீசண்ட்டா கேட்கக்கூடாது).. ஆனா பாப்பா அவன் கையை லைட்டா தட்டி விடறதோட சரி..  ஏன் பளார்னு அறைய வேண்டியது தானே.. ?ன்னு டைரக்டர்க்கு ஃபோன் பண்ணி கேட்டா அவர் சொல்றாரு - தம்பி.. இது அடுத்த தலை முறைக்கான கதை..  அவ்வ்வ்

அந்த ஃபிரண்ட் ஹீரோ கிட்டே அவரோட ஆளை இண்ட்ரடியூஸ் பண்றார்.. கொல்லி மலை சேனைக்கிழங்கு மாதிரி இருக்கற ஹீரோயின் , நோய்ப்பூச்சி தாக்குன கரும்பு சல்லை மாதிரி இருக்கற ஹீரோவைப்பார்த்ததும் என்னமோ காணாததை கண்டது போல் பம்முது..  பாவம் ஆம்பளைங்களையே பார்த்ததில்லை போல.. 


http://tamil.oneindia.in/img/2011/11/15-mayakkam-enna1-300.jpg

ஹீரோவுக்கும் , ஹீரோயினுக்கும் லவ் ஆகிடுச்சுன்னு அந்த நண்பர்க்கு தெரிஞ்சுடுது.. காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போன கதையா  அவங்க 2 பேரும் கட்டிப்பிடிச்சிட்டிருக்கறதை அந்த நண்பன் பார்த்துடறார்.. இப்போதான் இடைவேளை.. ( சஸ்பென்ஸாம் அடங்கொய்யால)

போய்த்தொலையுது சனியன்னு 2 பேருக்கும் மேரேஜ் பண்ணி வெச்சுடறாரு.. அந்த தியாக நண்பர்.. இனி கதையை எப்படி நகர்த்த? இங்கே தான் டைரக்டர் தன்னோட டேலண்ட்டை காட்றார்.. ஹீரோ மாடில இருந்து கீழே விழுந்து தலைல அடிபட்டு லைட்டா சைக்கோ ஆகிடறார்.. கொஞ்சம் மெண்டல் மாதிரி..


அவர் ஹீரோயினை கொடுமைப்படுத்த , டைரக்டர் நம்மை கொடுமைப்படுத்த உஷ் அப்பா போதும்டா சாமி.. எப்படியோ எல்லாம் சரி ஆகி க்ளைமாக்ஸ் எல்லாம் சுபம் ஹி ஹி ஹி

தனுஷ்க்கு வழக்கம் போல நல்ல வாய்ப்பு.. நடிக்க.. அண்ணன் படம் என்பதால் சிரத்தையோட நடிக்கறார்.. டான்ஸ் காட்சிகளில் மனுஷன் செம கலக்கு கலக்கறார்.. 

ஹீரோயின் ரிச்சா கங்கா பாத்பாய்.. 60 மார்க் தரலாம்.. கொஞ்சம் மீனா கொஞ்சம் சங்கவி.....சாயல்  நடிப்பு பாப்பாவுக்கு சுமாராதான் வருது.. அழுற சீன்ல எல்லாம் பார்க்க சகிக்கல.. ஒரு நல்ல நடிகை என்பவர் அழும் காட்சியில் கூட ரசிகர் மனம் கவர வேண்டும்னு கே பாலச்சந்தர் சார் சொல்லி இருக்கார்..

படத்துக்கு முதுகெலும்பே ஒளிப்பதிவும் இசையும் தான்.. படம் பூரா கேமரா விளையாடுது.. 3 பாட்டு செம ஹிட்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjG6Hiy2au6p78vzbFfJTukkghVhjuLXYVzOkfHnoS2S4vM5P2ik3rxjJ18azkJhUfliJmD0aZph1JF2lenzxSUClQzT1_2vL5snAvNIQ_9bYC-8njgTlVJFI50CYPYPRxjLgAbLWsW7Y4/s1600/0.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்

1. என்னடா பார்க்கறே.. கொஞ்ச நாள் டேட்டிங்க் பண்ணி பார்க்கலாம்னு தோணுச்சு , அதான் கூட்டிட்டு வந்துட்டேன் , தப்பா?

2.  ஹீரோயின் - ஏதாவது திட்டறதுன்னா திட்டு.. டோண்ட் சைலண்ட்..

ஓ..... திருட்டு மூதேவி..... 

3.  என் ஆள் எப்படிடா?

டேய்.. பிரியாணி எங்கே வாங்குனே..?  பழசு போல.. டேஸ்ட்டே இல்லையே? ( டபுள் மீனிங்க்ல அட்டாக் பண்றாராம் ஹய்யோ அய்யோ)

4.  நீ ஒரு முண்டக்கலப்பை

வாட்?

சரி.. இங்கிலீஷ் தெரிஞ்ச முண்டக்கலப்பை ( தூள் படத்துல ஜோதிகா முண்டக்கண்ணி)

5.  டேய்.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்டா.. என் ஆள் எப்படிடா?

உன் அளவுக்கு கொஞ்சம் கம்மிதான்..

6. என் லட்சியமே நல்ல ஃபோட்டோகிராஃபர் ஆகறதுதான்.. 


ஓஹோ.. கலயாண மண்டபடத்துலயா?

ஏய்.. நீ என்ன பெரிய இவளாடி? கவர்மெண்ட் கக்கூஸ்லயா ஒர்க் பண்றே? ( ஏ க்ளாஸ் ரசிகர்களூக்காக  எழுதப்பட்ட வசனமாம் ஹி ஹி )

7.  அவங்கம்மாவை எனக்குத்தெரியும்.. ஹி ஹி அவ யார் தெரியுமா??

8.  ஏய்.. ஹிந்திப்படம் ஓடுதே அதுல வர்ற வசனம் என்ன அர்த்தம்? முஜே கோயி ஃபிரண்ட் நஹி ஹை.. (எனக்கு யாரும் ஃபிரண்ட்ஸ் இல்லை)

நீ எக்கேடோ கெட்டுப்போன்னு அர்த்தம்..

9.  என்னைப்பற்றி உனக்கு என்ன தெரியும்? 6 லேங்குவேஜ் ஐ நோ.. யூ நோ?

மத்தது எதுவும் உனக்கு வந்திருக்காது.. 

10.  தப்பான இண்ட்ரஸ்ட்டை  தேர்ந்தெடுத்தா ஃபியூச்சர் ரொம்ப சிரமம்



http://www.tamilnewscinema.com/wp-content/uploads/2011/09/richa.jpg

11. தம்பி.. இந்த ஃபோட்டோ 1 எனக்கு ஒரு காப்பி குடுப்பா.. என் மனைவி அழகா இருந்து நான் பார்த்ததே இல்ல.. ( அவனவன் சம்சாரம் அவனவனுக்கு அழகா தெரியாதுய்யா)

12.  வாழ்க்கைல நாம எஞ்சாய் பண்ற வேலையை செய்யனும்.. இல்லைன்னா செத்துடனும்.. 

13.  டேய்// உங்க ஹனிமூன்க்கு நான் எதுக்குடா?

யாமினிக்கு நீ வந்தா ஓக்கேவாம்.. 

14.  எங்கேடா உன் கேர்ள் ஃபிரண்ட்?

உள்ளே பாத்ரூம்ல குளிச்சிட்டு இருக்கா.. 

கதவு திறந்து இருக்கு?

அவளுக்கு பல்லின்னா பயம்.. 

15.. யாமினி.. உங்க ஆள் வெளீல போய் இருக்காரு....

தெரியும்.. பல்லி வந்தா கூப்பிடறேன்...

16.  ஆமா.. நீங்க பாட்டுக்கு பாத்ரூம் கதவை திறந்து வெச்சுட்டு குளீக்கறீங்களே..?நானா இருக்காங்காட்டி ஆச்சு.. வேற யாராவது இருந்தா?

ம்க்கும்.. நீ பார்ப்பேன்னு நினைச்சேன்..

17.  இப்போ எதுக்கு டி என்னை திரும்பி பார்க்கறே..?

18.  ஆமா.. அவன் உன் கூடவே சுத்தறான்..?

ஆனா நான் அவன் கூட சுத்தலையே? ( விளங்கிடுச்சு)

19.  கிரியேட்டிவிட்டி என்பது கடவுளா  குடுக்கற வரம்.. நக்குனாக்கூட உனக்கு அது கிடைக்காது  ( படத்தில் பார்க்கும்போது விரசம் இல்லை)

20.  உன்னை எனக்கு ஏன் பிடிச்சிருக்கு தெரியுமா? நீ செய்யற வேலையை ரசிச்சு பண்றே.. நான் கூட என் வேலைல தப்பு செஞ்சிருக்கேன்.. ஆனா அப்போ எல்லாம் எந்த வருத்தமும் பட்டதில்லை.. ஆனா உன் வேலைல ஒரு தப்பு நடந்தா நீ வருத்தப்படறே. 


http://www.lohan.in/blog/gallery/2011/04/Actress-Richa-Gangopadhyay-in-Bridal-Makeup-001.jpg

21.  கண்டக்டர்.. இந்த பஸ் கடைசியா எங்கே போகுது?

மைசூர்..

அப்போ மைசூர்க்கு ஒரு டிக்கெட்.. 

22. உன்னை லவ் பண்றதா சொல்லிட்டு என்னை லவ் பண்றா... நாளையே என்னை லவ் பண்றதா சொல்லிட்டு வேற யாரையாவது லவ் பண்ணமாட்டா-னு என்ன நிச்சயம்?

23.  என் நிலைமை எவ்ளவ் கேவலமா போச்சு பார்த்தியா?

ஆமாடா.. மச்சான் ரொம்ப கேவலமாத்தான் போச்சு.. 

24.  என் கேர்ள் ஃபிரண்டை கரெக்ட் பண்ணிட்டு.. இவன் எல்லாம் ஒரு ஃபிரண்ட்..?

25. எங்கப்பனைப்பாரு.. கொஞ்சமாவது வருத்தம் இருக்கா?

26..  நீ ஆம்பளை இல்லையா? அதான்.. வீக்னெஸ்... சீக்கிரம் ஒரு மேரேஜ் பண்ணீக்க. உன் பொண்டாட்டியை நீ தான் தேடிக்கனும்.. அடுத்தவன் பொண்டாட்டியை அல்ல.. 

27.  யோவ்.. எதுக்குய்யா போலீஸ் கம்ப்ளெயிண்ட்டு? என் புருஷன் தான் மெண்டல்தான் ஆனா நல்லவன்.. என்ன கேட்டாரு? ஃபோட்டோவுக்கு போஸ் தானே கேட்டாரு? முடிஞ்சா குடு.. இல்லைன்னா மூடிட்டு போ.. ரொம்ப ஓவரா துள்ளுனே என்னை செக்ஸ் டார்ச்சர் பண்றேன்னு பொய் புகார் குடுத்துடுவேன் 

படம் இடைவேளை வரை ஏதோ கொஞ்சம் எதிர்பார்ப்புடன் நகர்கிறது.. அப்புறம் 2 பேருக்கும் மேரேஜ் ஆன பிறகு திரைக்கதையை எப்படி கொண்டு போறதுன்னு டைரக்டருக்கு மகா குழப்பம்.. 



http://surfingall.files.wordpress.com/2010/12/richa-gangopadhyay-hot-in-red-dress.jpg

இயக்குநருக்கு பாராட்டு தருவிக்கும் இடங்கள்

1. வசனம் தான் படத்துக்கு முதல் பிளஸ்.. ஷார்ப்பான வசனங்கள்.. தேவையான இடங்களீல் நறுக் சுருக். ஆனால்.. எல்லாம் முதல் பாதியில்தான்

2. ஓட ஓட பாட்டுக்கான ஒளீப்பதிவு செம.. சுத்துது சுத்துது பூமி பாட்டுக்கான லீட், நடன அமைப்பு, கேரளா ஃபிகர்களின் ஆடை வடிவமைப்பு அனைத்தும் டாப்.. 

3. யூத்களுக்கான பல மேட்டர்கள் ஆங்காங்கே தெளித்து அப்ளாஸ் அள்ளுகிறது உதவி இயக்குநர் டீம்

4. சிக்கலான திரைக்கதையிலும், சர்ச்சைக்குரிய காட்சிகள் வைக்கும் வாய்ப்பு இருந்தும் கண்ணியமாக காட்சிகளை அமைத்த விதம்

5. ஓட ஓட தூரம் குறையில பாட்டு அருமையான  ஒளிப்பதிவு  உத்தி..  கிராஃபிக்ஸ் கலக்கல் தியேட்டரில் அப்ளாஸ் அடங்கவே 2 நிமிடம் ஆகுது//



http://lh4.ggpht.com/_62XV5GGJjBs/S65hTx56ifI/AAAAAAAAHh0/_qMShB1MJFg/actress.richa-gangopadhyay.richa-gangopadhyay-hot-in-black-010.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள் , சில ஆலோசனைகள், சந்தேகங்கள்

1. ஹீரோ ஃபோட்டோகிராஃபியில் செம டேலண்ட்.. அவர் ஒரே ஒரு ஆளிடம் மட்டுமே தன் ஃபோட்டோக்களை காட்டி ஏமாந்துடறார். உலகத்துல வேற ஆட்களே இல்லையா? ஏன் மனசு ஒடிஞ்சு போறார்? அவரோட திறமைகள் ஏன் அனைத்து இண்டர்வியூவிலும் மறுக்கப்படுது?

2. இந்தக்கதைல ஹீரோயின் நண்பனின் டாவு என காட்டி இருக்கவே தேவை இல்லையே? எதுக்கு ? சும்மா ஒரு பரபரப்பை கிளப்பவா?

3.  ஏ கிளாஸ் ஆடியன்சின் இயக்குநர் என  உங்களை எல்லோரும் கொண்டாடுறாங்க.. ஏன் சில இடங்களில் வசனம் ரொம்ப லோ கிளாஸா இருக்கு?

4. ஹீரோவின் ஃபோட்டோவை ஒருவர் மிஸ் யூஸ் பண்ணீ தன் படைப்பு என சொல்லி அவார்டு வாங்கறார்.. டெவலப் பண்ணுன ஸ்டூடியோ சாட்சியை வெச்சு தன்னோட சரக்கு என்பதை அவர் தாராளமா நிரூபிக்கலாமே?

5. இந்த ஃபோட்டோக்கள் எல்லாம் வேஸ்ட்-னு அவர் தூக்கி எரிஞ்சதும் ஹீரோ அவைகளை ஏன் கலெக்ட் பண்ணாம வந்துடறார்..?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEierB34Lc5grJUXvIKG9XR-qn4V-cS3y0h622MpYgGiTnxB22IunZ73-WNkfTHSauh512Aq05wgiHrMKMsH6nciKDyIukqfrp3ypaNWaygLxsQkRpF_hs-cgBwVmPqlBvtI8KJyqqfT0Qmp/s1600/richa_gangopadhyay_mirapakaya_hot_stills_06.JPG


6. அந்த ஃபோட்டோவை மிஸ் யூஸ் பண்ணனும்னு வில்லன் நினைச்சா தம்பி குடுத்துட்டுப்போ, பார்த்து சொல்றேன்னுதானே சொல்வாங்க?

7. ஹீரோயின் டேட்டிங்க் பண்ண வந்த ஆள் கூட உரசல் புரசலா இருக்காரே, அதுதான் நவ நாகரிகமா?அப்படி இருந்துக்கிட்டே ஹீரோவை வேற லவ் பண்றாரு? அவ்வ்வ்வ்

8. ஹீரோ பாத்ரூம் போறாரு.. 6 ஃபிரண்ட்சும் ஹால்ல இருக்காங்க.. ஹீரோயினை கட்டிக்கப்போறவரும் அங்கே இருக்கார்.. அப்புறம் என்ன தைரியத்துல ஹீரோயின் உள்ளே போய் ஹீரோவை கட்டிப்பிடிச்சு கிஸ் அடிக்கறார்?

9. இந்தக்காலத்துல ஃபிரண்ட்ஸ் மேரேஜ் லைஃப் வேற , பேச்சிலர் லைஃப் வேறன்னு வாழ்றாங்க.. ஆனா உங்க படத்துல மட்டும் அந்த ஃபிரண்ட் ஹீரோ கிட்டே ஹீரோயினை தாரை வார்க்காத குறையா கிட்டத்தட்ட கூட்டிக்குடுக்கறாரே? ஏன்?

10. உங்க படங்கள்ல வலுக்கட்டாயமா ஹீரோவை சைக்கோவா காட்றது ஏன்?

11. பருத்தி வீரன் க்ளைமாக்ஸ் பார்த்துட்டு அதே மாதிரி பிளட் ப்ளீடிங்க் டூ ஹீரோயின் காட்னது ஏன்?படத்துக்கு அது அவசியமா?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEih0zg333eqrIOxx3ZC-su4F77rxy_pYdWhohhP4LSxoEXeq2Ow-BAWIETwTkaMgdxnhqOMw4inJCf-jhXstxgFIAwONDkxWhLmCQR4cmape0UzZStMmtaUT_lIkwaGQR09qbELI6By8kty/s1600/Richa_Gangopadhyay_Hot_12.jpg


சி.பி கமெண்ட் - இடைவேளை வரை டைரக்டர் டச்.. அதுக்குப்பிறகு ம்ச் ப்ச்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே 

ஈரோடு ஆனூர்- ல் பார்த்தேன்

படம் எல்லா செண்ட்டர்லயும் 10 நாட்கள் கண்டிப்பா ஓடிடும்.. .

மனிதர் குல மாணீக் பாட்ஷா!!! ( ஜோக்ஸ்)


1.தலைவர் ஏன் கோபமா இருக்காரு?

மனிதர் குல மாணிக்கமே-ன்னு வர்ணிக்காம ஒரு ஆள் மனிதர் குல மாணிக் பாட்ஷாவே அப்டினு வர்ணிச்சுட்டாராம்

--------------------------------------------

2. கறுப்பா இருக்கற நான் சிவப்பா இருக்கற பொண்ணை ரசிக்கறது ஓக்கே, சிவப்பா இருக்கற பசங்களும் ஏம்ப்பா சிவப்பா இருக்கற பொண்ணையே ரசிக்கறீங்க? #Y Y

-----------------------------------------

3. அத்தான், நான் இப்போ சண்டை போடற மூடுல இருக்கேன், நீங்க ஃபிரீயா இருக்கீங்களா?

 ராம்சாமி - சாரி டியர்.. இப்போதான் சரக்கடிச்சென் செம டைட், குட் நைட்


-----------------------------------------------

4. ஐ ஹேட் யூ ( I HATE YOU) என்றாள்.. ஒண்ணும் பிரச்சனை இல்லை , ஐ ஹேடு யூ ( I HAD YOU )  என்றேன் # காதல் ஜாலம் @ வார்த்தை ஜாலம்

----------------------------------------

5.  சி.பி - டியர், உன் உதடு மட்டும் எப்படி இவ்வளவு ரத்தச்சிவப்பா இருக்கு?

டேய், லூஸு.. சிவப்புக்கலர்ல லிப்ஸ்டிக் போட்டா அப்டித்தான் இருக்கும்

-----------------------------------




6. நீ தான் கைப்புள்ள அப்டிங்கறதை நான் எப்டி நம்பறது?

விக்கி தக்காளி - என் கூட எந்த ஃபிகர் பழகுனாலும் கைல ஒரு புள்ளயை குடுத்துடுவேன்

-------------------------------------

7. லேப் டாப் மனோ - மாமா, உங்க பொண்ணுக்கு சீரா என்ன தருவீங்க?

மாப்ள.. உங்களுக்குப்பொண்ணு தர்றதே பெரிசு.. இதுல சீர் செனத்தி வேற வேணுமா?

---------------------------------------

8.தலைவரோட பையன் ஜொள்ளு பார்ட்டி போல..

ஏன்?

மகளிர் அணிக்கு தலைவர் ஆகிடவா?ன்னு கேட்கறாராம்.

-----------------------------------------

9. இன்னும் 10 வருடங்கள் மட்டும் தான் அரசியலில் நான் இருப்பேன்னு  தலைவர் சொல்லிட்டாரே?

ம்க்கும், ஆல்ரெடி அவருக்கு 98 வயசாகுது...

---------------------------------------------

10.  தமிழ்வாசி பிரகாஷ் - என் காதலிக்கு சிரிச்ச முகம்..

 அடடே.. ம் ம் ..

ஃபேஸ் பிக் அட்ரஸ் கேட்டாக்கூட [email protected] -னு அட்ரஸ் சொல்றாளே?

----------------------------------


 



11. அவர் எடக்கு மடக்கு ஏகாம்பரம்னு எப்டி சொல்றே?


காக்காவுக்கு சோறு வைக்கறப்ப காகா-னு கத்தறோம், ஆனா பூனைக்கு பால் வைக்கறப்ப ஏன் மியாவ் ம்யாவ்-னு  கத்தறதில்லை?னு கேட்கறாரே?

---------------------------------------------------

12. எதிரிகளிடம் இருந்து தப்பிக்க மன்னர்  நோக்கு வர்மம் கற்றும் பயன் இல்லை..

அப்போ அவர் ஒரு பேக்கு வர்மர்-னு சொல்லு

--------------------------------------

13. சதீஷ்.. தள்ளி உக்காருங்க.. பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தா பத்திக்கும்..

ம்க்கும்.. பயந்து நடுங்க நான் ஒண்ணும் நெருப்பு இல்ல.. பருப்பு..

-------------------------------------

14.   பர்ச்சேஸ் மாலா ,சிங்கப்பூர் - காய வைக்கறதுல என் புருஷன் கில்லாடி..

அட.. உன்னையா?

ம்ஹூம்.. என் டிரஸ்ஸை... துவைச்சு காய வைச்சுடுவார்..

-----------------------------------------

15. நிரூபன் -  லவ் பண்றப்ப என் ஆளு கவரி மான் மாதிரி இருந்தா.....

அடாடா.. இப்போ..?

கவரிங்க்  மான் மாதிரி ஆகிட்டா.. அவங்கப்பன் போட்ட 30 பவுனும் போலி..

-------------------------------------------





16. டியர்.. 24 மணி நேரமும் எனக்கு உன் நினைப்புத்தான்..

 கருண் -நீ என்ன மெடிக்கல் ஷாப்பா?

-------------------------------------------------

17.  கவிதை வீதி   சவுந்தர் - மிஸ்.. நீங்க அசைவம், நான் சைவம்.. சரி வருமா?

டேய்.. லூஸு... நாம லவ் தானே பண்ணப்போறோம்? ஹோட்டலா கட்டப்போறோம்?

---------------------------------------------------------

18.  சிங்கப்பூர் சாந்தி - அத்தான்... இதோ என் கிஃப்ட்.. வீடிடோ அட்டாச்டு திசை காட்டும் கருவி..

புரியலையே.. எதுக்கு?

நீங்க எங்கே போனாலும் இது காட்டி குடுத்துடும்..

----------------------------------------------

19. சின்ன வயசுல இருந்தே நான் எறும்பு புற்று, பாம்பு புற்று பக்கம் போக மாட்டேன்..

ஏன்?

புற்று நோய் வந்துட்டா?

--------------------------------------------

20. மேடம், நீங்க எழுதற கவிதைகளை உங்க வீட்டுக்காரர் படிப்பாரா?

 சோனா - நோ நோ.. மாசம் ஆனா வாடகை மட்டும் வாங்குவார்.. ஹவுஸ் ஓனர். அவர் ஏன் படிக்கனும்?

---------------------------------------

20.  உணவு உலகம் ஆஃபீசர் - மேரேஜ் ஆகி 8 வருஷம் ஆகுது.. என் மனைவிக்கு ஒரே ஒரு டைம் தான் கோபம் வந்திருக்கு..

அடடே..

அந்த ஒரு டைம் வந்த கோபமே இன்னும் தீரலை..

-----------------------------------


 

Thursday, November 24, 2011

The Shawshank Redemption - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://movietrailers2.com/wp-content/gallery/the-shawshank-redemption/shawshank-redemption-picture2.jpg

ஒரு புருஷன், ஒரு பொண்டாட்டி.. ஒரு கள்ளக்காதலன்.. உடனே கில்மாப்படமா?ன்னு யாரும் குதூகலப்படத்தேவை இல்லை.. ஓப்பனிங்க் சீன்லயே அந்த  கள்ளக்காதல் ஜோடி யாரோலோ சாகடிக்கப்படறா..  இந்த தத்தி போலீஸ்ங்க எப்பவுமே நல்லவனை. அப்பாவியைத்தானே அரெஸ்ட் பண்ணும்.. ? அந்தப்பொண்ணோட கணவனை அரெஸ்ட் பண்ணிடுது.. சந்தர்ப்பங்கள், சாட்சியங்கள் எல்லாமே அவனுக்கு எதிரா இருக்கு... அவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிச்சு கோர்ட் தீர்ப்பு சொல்லிடுது..



ஹீரோ ஒரு பேங்க்ல ஒர்க் செஞ்சவர்.. நல்ல படிப்பு.. ஆனாலும் அவருக்கு நேரம் சரி இல்லை.. சம்சாரம் வழி தவறுது.. கொலைப்பழி  அவர் மேல விழுந்து செய்யாத தப்புக்கு தண்டனை.. இப்போ இவர் மகாநதி கமல் மாதிரி ஜெயில்ல என்னவெல்லாம் அவஸ்தைப்படறார்ங்கறதுதான் 70% படம்.. 1994 -ல் ரிலீஸ் ஆன படம் 2 மணிநேரம் 24 நிமிடங்கள் என நீளமான படமா இருந்தாலும் ஒரு சீன்ல கூட போர் அடிக்காத படம்..  படத்தோட திரைக்கதை, இயக்கம் எல்லாமே Frank Darabont தான்..

 Tim Robbins - Andy DufresneMorgan , Freeman - Ellis Boyd "Red" ReddingBob Gunton - Warden Samuel NortonWilliam ,  Sadler - HeywoodClancy  , Brown - Captain Byron Hadley

ஜெயில்ல ஹீரோ முதல் 2 வருஷங்கள் லாண்டரில வேலை செய்யறார்.. பிறகு தனது தொழில் அனுபவங்களின் காரணமாக ஜெயிலருக்கு ஃபைனான்சியல் அட்வைஸ் செய்கிறார்.. ஜெயிலில் உள்ள லைப்ரரியை விஸ்தீகர்க்க அரசாங்கத்துக்கு கடிதம் எழுதுகிறார் .. வாரா வாரம் நிதி வேண்டி மாநில அரசுக்கு அவர் எழுதும் கடிதத்துக்கு பலன் கிடைக்கிறது..

ஹீரோவின் ஆலோசனைப்படி ஜெயிலர் ஜெயில் கைதிகளை பப்ளிக் ஒர்க்ஸ்க்கு யூஸ் பண்ணிக்கறார்.. அதனால ஜெயில் கைதிகளுக்கு வெளி உலகத்தை பார்க்க ஒரு சந்தர்ப்பம்.. 

ஹீரோ ஒரு சந்தர்ப்பத்தில் தன் மனைவியை கொன்றவன் அந்த ஜெயிலில் இருப்பதை கண்டு பிடிக்கிறான்.. அதை ஜெயில் அதிகாரியிடம் சாட்சியுடன் விளக்கும்போது அந்த சாட்சி மர்மமான முறையில் கொல்லப்படுகிறான்..  ஹீரோ ரிலீஸ் ஆவது பிடிக்காமல் செய்யப்படும் சதி.. ஹீரோ தப்பிக்க முடிவு செய்கிறான்.. எந்த தப்பும் செய்யாமல் 20 வருடங்கள் ஜெயிலில் சித்திரவதைகளை அனுபவித்து ஹீரோ ஜெயிலில் இருந்து தப்பி சுதந்திர வாழ்க்கையை அனுபவிக்கிறான்..

http://i2.listal.com/image/266791/600full-the-shawshank-redemption-screenshot.jpg

ரசித்த வசனங்கள்

1. வர்றவனுங்க எல்லாம் கேடிங்க.. ஆனா பாரு எல்லாரும் அப்பாவி மாதிரியே முகத்தை வெச்சுக்குவானுங்க..

2. நான் ரெண்டு விஷயம் நம்பறேன்.. 1. ஒழுக்கம் 2 . பைபிள்

3. மொத்த வாழ்க்கையும் கண்ணிமைக்கும் நேரத்துக்குள்ள மாறிப்போறதை தாங்கிக்கவே முடியறதில்ல..

4. நான் நல்லவன் தான், ஆனா ஜட்ஜ் என்னை கெட்டவன்னு சொல்லிட்டார்..

5. என் பேரு ரெட்.. ஆனா நான் கறுப்பு.. டிஃப்ரண்ட்டான ஆளு..

6. இதை உங்க ஒயிஃப்க்கு கிஃப்ட்டா குடுங்க.. எனக்குதான் அந்த குடுப்பினை இல்லை..

7. நாங்க எல்லாம் சாப்பாட்டையே ஸ்ட்ரா போட்டு உறிஞ்சற ஆளுங்க..

8. தனிமை என்னை துரத்த ஆரம்பிச்சுது.. தனிமைதான் உலகின் பெரிய பழி வாங்கல்.. அதுவும் ஜெயில்ல தனிமைச்சிறை என்பது ரொம்ப கொடுமையானது.. 

9. நினைச்சதை உடனே செஞ்சு முடிக்கறவன் தான் மனுஷன்.. அதை தள்ளிப்போடறவன் அல்ல..

10. ஒருத்தன் உழைக்க ஆரம்பிச்சுட்டான்னா அப்புறம் அவன் சோம்பேறியா இருக்க மாட்டான்..

http://www.listosaurusrex.com/wp-content/uploads/2008/01/stiff-breeze.PNG

11. நான் உருவாக்குன கற்பனை கதாபாத்திரத்துக்கு பர்த் சர்ட்டிஃபிகேட் , டிரைவிங்க் லைசன்ஸ் கூட  ரெடி..


12. வாழ்க்கைல தப்பு பண்ணாம யாராலயும் இருக்க முடியாது.. மாட்டிக்காம வேணா சிலர் இருக்கலாம்..



13. எதுக்காக நீ ஜெயிலுக்கு வந்தே?

வெளீல புழுக்கமா இருந்துச்சு.. அதான்.. கேக்கறான் பாரு கேள்வி..

14.  எதுக்காக இந்த பேப்பரை நீ எல்லாருக்கும் பாஸ் (PAUSE) பண்ணுனே?

ஹா ஹா.. நானா? எந்த பேப்பரையும் இதுவரை நான் பாஸ் (PASS) பண்ணுனதே இல்லையே..

15. செத்ததுக்குப்பிறகு 4 பேர் தூக்கிப்போட்டா என்ன? 40 பேர் தூக்கிப்போட்டா என்ன?

16. கனவு  காண , அதை நிறைவேத்த ஆண்டவன் நமக்கு 2 சான்ஸ் குடுத்திருக்கான்.. 1. எப்படி வாழனும்? 2 எப்படி சாகனும்?

17. மனசு ஒடிஞ்சவன் என்ன வேணாலும் செய்வான்.. தேவைப்பட்டா தற்கொலை கூட..

18.  நான் இன்னும் 500 கஜம் இந்த பாதாள சாக்கடையை  நீந்திக்கடக்கனும்.. மூச்சு விடாம..  5 ஃபுட் பால் கிரவுண்டுக்கு சமமான தூரம்.. கிட்டத்தட்ட முக்கால் கிலோ மீட்டர்..

19. திருந்தறதும், வருந்தறதும் ஒண்ணுதானே.. திருந்தறதுக்கு 1 மாசம் போதாதா? அட்லீஸ்ட் 2 மாசம்? எதுக்காக 40 வருஷம் தேவைப்பட்டுது? எனக்கு?

http://i2.listal.com/image/266798/600full-the-shawshank-redemption-screenshot.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. கிட்டத்தட்ட ரெண்டே முக்கால் மணி நேர படத்தில் ஒரே ஒரு சீன் தவிர பெண் கேரக்டர்களே இல்லாமல் செம இண்ட்ரஸ்ட்டாக ஒரு படம் கொடுத்ததற்காக பாராட்டலாம்..



2.  ஜெயிலில் இருந்து ஹீரோ தப்பிக்கும் சீனை  நிதானமாக காட்டியது.. பெரும்பாலும் ஹீரோ ஜெயிலில் வந்த உடன் அடுத்த நாளே தப்பி விடும் படங்களூக்கு இடையே 20 வருடங்கள் பிளான் பண்ணி ஸ்டெப் பை  ஸ்டெப்  திட்டம் போட்டு தப்பிப்பதாக காட்டியது..

3. ஹீரோ, நண்பர் ரெட்டாக வருபவர், ஜெயிலர் என பல தரப்பட்ட பாத்திரங்களின் இயற்கையான நடிப்பு..

4. எந்த வித செயற்கை ஒளியும் இன்றி அழகான நேர்த்தியான ஒளிப்பதிவு..

5. தேவையான இடங்களில் அமைதி.. தேவைப்படும் இடங்களில் மட்டும் ஒலிச்சேர்க்கை என பின்னணி இசையில் கவனம்..

http://i.telegraph.co.uk/multimedia/archive/01467/filmdone_1467999c.jpg

லாஜிக் மிஸ்டேக்ஸ் டன் பை டைரக்டர் 

1.  ஹீரோ  ஜெயில் செல்லுக்குள் ஒரு ஹாலிவுட் நடிகையின் வால் போஸ்டரை மாட்டி வைத்திருக்கிறார்.. சிறை ரூம் என்ன சலூன் கடையா? எப்படி நிர்வாகம் அதை அனுமதிக்கிறது?

2. ஒரு மனிதனால் முக்கால் கி மீ தூரம் பாதாள சாக்கடையில் மூச்சை நிறுத்தி நீந்த முடியுமா?

3. ஹீரோ தனது நண்பர் ரெட் அவர்களுக்கு ஒரு குறிப்பு பேப்பர் தருவதும் , அதை ஃபாலோ பண்ணி அவர் ஹீரோவை கண்டறிவதும் நம்பும்படி இல்லை


 சி.பி கமெண்ட் - பல அவார்டுகளை அள்ளிய இந்தப்படம் அனைவரும் காண வேண்டிய படம் டோண்ட் மிஸ் இட்.. ஃபேமிலியுடன் பார்க்கலாம்

பெண்களின் சில கறுப்புப்பக்கங்கள் - ட்வீட்ஸ்

ove


































1.விவாகரத்து செய்த பின் முன்னாள் மனைவி என அழைக்கும் கணவன் தன் மழலையை முன்னாள் குழந்தை என அழைக்க முடிவதில்லை

-----------------------------------

2. உன் மனதை குளிர்விப்பதற்காக எழுதப்படும் என் கவிதை வரிகள் தடுமாறி உன்னை வெப்பமாக்கும்போது என் விழிகள் தெப்பமாகின்றன

----------------------------------

3. மழைக்காலம், வெயில்காலம் என எந்தக்காலம் மாறினாலும் மனிதர்களின் நினைவுக்காலமும் , நடந்ததை நினைத்துப்பார்க்கும் காலமும் மாறுவதே இல்லை

------------------------------------------

4. ஆணின் வாழ்நாள் சாதனையை ஒரே ஒரு பெண்ணின் காதல் தோல்வி முறியடித்து விடுகிறது

---------------------------------------

5.பணம் இல்லை என என்னை நிராகரித்த சில பெண்கள் திருமணத்திற்குப்பின் செல்வச்செழிப்பான நரகத்தில் வீழ்ந்தது கண்டு குரூர திருப்தி கொள்கிறது மனது

------------------------------------------

 
































6. எல்லா மனிதர்களுக்குள்ளும் வெளியே சொல்லாத சில கறுப்புப்பக்கங்கள் இருக்கக்கூடும்

------------------------------------

7. தன் மனதுக்குப்பிடித்தவன் தன்னை ரசிக்கிறான் என்பது தெரிய வரும்போது ஒரு பெண்ணின் முகம் நாணத்தால் இரு மடங்கு சிவப்பாகிறது

--------------------------------

8. சின்ன வயசுல இருந்தே எங்கப்பா எனக்கு செல்லம் குடுத்து வளர்த்திட்டார்.. 

சரி.. உனக்கு எப்படி சுகர் வந்தது?

வெல்லம் குடுத்தும்  வளர்த்திட்டார்..

--------------------------------------------

9. ஒருவிஷயத்த கண்ணமூடிட்டு ஆஹா ஓஹோன்னு புகழக்கூடாது... 

ஓக்கே டீச்சர், அப்போ கண்ணை திறந்து வெச்சுக்கிட்டு புகழலாமா?

--------------------------------------


10. தோழிகளுடனான சந்திப்பில் பெண்களின் அனிச்சைச்செயலான முந்தானை சரி செய்யல் நம்மை கோபம் உறச்செய்கிறது

---------------------------------------

Visit Us @ www.MumbaiHangOut.Org


11. ஒற்றி எடுக்கும் துயரம் எனில் நான் வாங்கிக்கொள்வேன்..  தேற்ற முடியாத துயரம் எனில் உனக்குப்பதில் நான் தாங்கிக்கொள்வேன்..

-----------------------------------------

12. மிஸ்..உடம்பு சரி இல்லைன்னு சொன்னீங்களே, இப்போ பரவாயில்லையா? 

நலமாயிட்டேன் , ஆகணுமே, இல்லேன்னா முடியாது.

ஓ... இன்னும் உளறல் மட்டும் பாக்கி போல

-----------------------------------------

13. எதிரிகளிடம் இருந்து தப்பிக்க நான் எந்த தற்காப்புக்கலையும் பயில வில்லை.. சிநேகமான புன்னகையைத்தவிர..

-------------------------------------------

14. அய்யா தர்மதுரை....

சாரிப்பா காசில்லை...

என்னமோ 8 வருஷம் ரெகுலரா பிச்சை போட்ட ,மாதிரியும் இன்னைக்குத்தான் மிஸ் ஆன மாதிரியும் பேசறீங்களே?

-------------------------------------------

15.குடிமக்கள் குறை தீர்ப்பு உரிமை சட்டம் கொண்டு வர அரசு தீவிரம்  # மப்பே ஏறமாட்டேங்குதாம், கலப்பட சரக்கா?னு பாருங்க

--------------------------------

Visit Us @ www.MumbaiHangOut.Org

16. வேலாயுதம் படத்தை நானே பார்க்கவில்லை - ஹன்சிகா # அது சரி, எப்பவும் சம்பந்தப்பட்ட குற்றவாளிங்க தப்பிடறாங்க, அப்பாவி ஜனங்க மாட்டிக்கறாங்க

-------------------------------

17. அஜித், விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுக்கப்போகும் ”தலவலி” தமிழ்படம் சி எஸ் அமுதன் இயக்கம் # டைட்டில் தல தளபதி வலி-ன்னு வெச்சிருக்கலாம்

---------------------------------------

18. , இண்ட்டர்வியூவில் -

1. இந்தியாவின் வாய்தா ராணி யார்?

2. ஜாமீன் இளவரசி யார்?

போங்க சார் , ஊருக்கே தெரியுமே இது ,கஷ்டமான கேள்வியா கேளுங்க

---------------------------------------

19.. ஜீவாவுடன் நடிக்க சிம்பு தடுக்கவில்லை- ரிச்சா. # வேற எதுக்கு தடுத்தாரு என்பதை தெளிவாக சொல்லவும் மேடம் , நாங்க எல்லாம் டியூப்லைட்ஸ்

--------------------------------

20.. நான் ஒரு தடவை ஒரு பிட்டுல நடிச்சுட்டா நானே என் பிட்டை பார்க்க மாட்டேன் - மினி குஷ்பூ ஹன்சிகா மோத்வானி @ இமேஜினேஷன்

Wednesday, November 23, 2011

நமீதா - குட்டை பாவாடை , குஷ்பூ - செம கட்டை பஞ்சாயத்து - காமெடி கும்மி கலாட்டா

http://bollywoodhotties.net/data/media/144/Namitha%20014.jpg

பொது விழாக்களில் நடிகைகள் குட்டைப்பாவாடை அணிந்து வருவதை வரவேற்கும் நடிகை குஷ்பு, அதேசமயம் அவரது வீட்டுக்கு கோவணம் கட்டி  200பேர் வந்தால் அவர்களை வரவேற்பாரா என்று இந்து மக்கள் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

சி.பி - அரசியல் நாகரீகம் நல்லா வளர்ந்திருக்கு போல.. 


சினிமாவில் தான் நடிகைகள் படுகவர்ச்சியாக வருகிறார்கள் என்றால், பொது நிகழ்ச்சிககளிலும் படுகவர்ச்சியான உடையணிந்தும், குட்டை பாவாடை அணிந்து வருகின்றனர். சமீபகாலமாக இது அதிகரித்து வருகிறது.

சி.பி - அவங்களே கவலைப்படலை.. உங்களுக்கென்னய்யா? 




இந்நிலையில், நடிகை நமீதா அணிந்து வரும் கவர்ச்சியான உடைகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த இருந்த நடிகை குஷ்பு, நமீதாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

சி.பி - சுந்தர் சிக்கும் பிடிக்குமாமே? விசாரிங்க.. 


அவர் குட்டை பாவாடை அணிகிறார், கவர்ச்சியான உடையணிந்து வருகிறார் என்று பலரும் கண்டனம் தெரிவிக்கின்றனர். அது அவருடைய தனிப்பட்ட விஷயம். சினிமாவில் உள்ளவர்கள் கூட இதை எதிர்க்கவில்லை. ஆனால் சில சுயநல சக்திகள் வெறும் புகழுக்காக இதை எதிர்க்கின்றனர் என்று கூறியிருந்தார். இதற்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டன் தெரிவித்துள்ளது.


சி.பி - அதானே , பெண் சுதந்திரத்தை யாரப்பா எதிர்க்கறது? ராஸ்கல்ஸ்.. அவங்க இஷ்டம் அதெல்லாம்.. ஹி ஹி ரசிக்காம.... 




இதுகுறித்து அக்கட்சியின் செயலாளர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலாச்சாரம், பண்பாட்டுக்கு முன்னோடியான மாநிலமே தமிழகம் தான். அதனால் தான் கற்புக்கரசி கண்ணகிக்கு சிலை வைத்துள்ளோம்.

சி.பி - நாட்ல எல்லாருமே கற்புக்கரசி யாருன்னு கேட்டா கண்ணகி பேரையே சொல்றாங்களே? அவங்கவங்க சம்சாரம் அவங்கவங்களுக்கு கற்புக்கரசியா தெரியலையா? அவ்வ்வ்வ்வ் 


குஷ்பு சொல்வது போல், 2 நிமிட புகழுக்காக குட்டை பாவாடை அணியும் நடிகைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. சினிமாவில் நடிகைகள் அதுபோல் அணியட்டும், பொது விழாக்களில் அப்படி அணிய வேண்டாம் என்று தான் சொல்கிறோம்.

சி.பி - முன்னாள் சி எம் எங்க தலைவர் டாக்டர் கலைஞரே அது பற்றி எதுவும் சொல்லலை.. எத்தனை சினிமா ஃபங்ஷன் அட்டெண்ட் பண்ணாரு.. ? உங்களுக்கென்னாய்யா போச்சு?




நடிகைகள் குட்டைப்பாவாடை அணிந்து வருவதை வரவேற்கும் நடிகை குஷ்பு, அதேசமயம் 200பேர் கோவணம் கட்டி அவர் வீட்டு வாசல் முன் வந்து நின்றால், அவர்களை சந்திப்பாரா...? அல்லது பேசத்தான் செய்வாரா...? ஆகவே, இதுபோன்ற நடிகைகளுக்கு வக்காலத்து வாங்குவதை குஷ்பு நிறுத்தி கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.


http://www.southgossips.in/wp-content/uploads/2009/04/namitha_hot_sexy_billa_hq_28.jpg

இனி ஜோக்ஸ் 


1. நடிகை - எனக்கு டிரஸ்ஸிங்க் சென்ஸ் இல்லைன்னு சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?



XQSமீ மேடம்.. சென்ஸ் இருக்குது, ஆனா டிரஸ் இல்லை..

-----------------------------------

2. ஒரு கட்டையே  குட்டை பாவாடை போடுகிறதே... அடடே.. ஆச்சரியக்குறி!!

----------------------------------

3. நான் குட்டை பாவாடை போடறதால உங்களுக்கென்னய்யா பிரச்சனை? 

அதாவது மேடம் நாங்க ஆஃபீஸ்ல டக் இன் சர்ட் பண்ணீட்டு வந்திருக்கோம் ஹி ஹி

------------------------------------

4. கோவணத்தோடு 200 பேர் குஷ்பு வீட்டுக்கு வந்தால் வரவேற்பாரா?-இந்து மக்கள் கட்சி! # அண்ணே, மேனர்ஸ் மேனர்ஸ்,, அப்புறமா கட்சி ஓக்கே

--------------------------------

5. விழா மேடைல 24 சேர் இருக்கு, ஆனா எல்லா ஆளுங்களும் தரைல உக்காந்திருக்காங்களே? ஏன்?

தலைவரே, சிறப்பு விருந்தினரா வர்ற நடிகை குட்டை பாவாடைல.. ஹி ஹி

-------------------------------------

6. மேடம் உங்களுக்கு பிடிச்ச ரீ மிக்ஸ் பாட்டு எது? 

பாவாடை குட்டையாக போட்ட உருவமா இது .... கர்சீப்பால் மேலாடை தைத்த பருவமா ஹோய்

----------------------------------

7. இப்போ என்னய்யா பிரச்சனை? பாடைலயா போயிடுச்சு? பாவாடைலதானே போனாங்க.. பொழப்ப பாருங்கப்பா.. 

-----------------------------------

 8. நமீதா மூன்றெழுத்து , குஷ்பூ மூன்றெழுத்து , பாவாடை மூன்றெழுத்து ,ஜாமீன் மூன்றெழுத்து , திஹார் மூன்றெழுத்து, ஊழல் மூன்றெழுத்து , ஆவின் மூன்றெழுத்து , அம்மா மூன்றெழுத்து ,- ஹூம் எல்லாம் நம்ம தலை எழுத்து

-------------------------------------------