Saturday, September 03, 2011

தி மு க முப்பெரும் விழா நடத்தும்போது சிபிஐ கிடுக்கிப்பிடி- விஸ்வரூபம் எடுக்கும் ஸ்பெக்டரம் ஊழல் விசாரணை - ஜூ வி கட்டுரை

சி.பி.ஐ. நடத்தும் முப்பெரும் விழா!

செப்டம்பர் 15
 
ஸ்பெக்ட்ரம் புயல் மீண்டும் டெல்லியில் மையம்கொண்டு, பெரும் அதிர்வுகளை உருவாக்கக் காத்திருக்கிறது. செப்டம்பர் 15-ம் தேதி என அதற்குத் தேதியும் குறிக்கப்​பட்டுள்ளது!

ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கு முன்னோட்டங்கள் தேவை இல்லை. டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நீதிபதி ஷைனி முன்பாக நடந்துவரும் இந்த ஸ்பெக்ட்ரம் வழக்கில், இது வரை இரண்டு குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 'மூன்றாவது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யும் வரை கைது செய்யப்​பட்ட யாருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது!’ என்று சி.பி.ஐ. தரப்பு இந்தச் சிறப்பு நீதிமன்றத்தில் வாதங்களை வைத்ததால், கைதான யாரும் இதுவரை வெளியில் வர முடியவில்லை.

'இவர்களை வெளியில் விடாமல் இன்னும் எத்தனை காலத்துக்கு உள்ளேயே வைத்திருக்கப்போகிறீர்கள்?’ என்று நீதிபதி ஷைனியே சி.பி.ஐ. தரப்பு வக்கீல்களிடம் கோபமாகக் கேட்டார். இதைத் தொடர்ந்து இதுவரை பதிவான இரண்டு குற்றப் பத்திரிகைகளை அடிப்படையாக​வைத்துக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.


ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி. சரத்குமார் உள்ளிட்ட அனைவரும் தங்கள் தரப்பு வாதங்களை நீதிபதி ஷைனி முன்னால் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள்.

கடந்த 25-ம் தேதி ஆ.ராசா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஷில்குமார், சில அதிர்ச்சியான தகவல்களைச் சொல்லி நீதிமன்றத்தின் கவனத்தை முழுமையாகத் தங்கள் பக்கம் திருப்பினார்.

''ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சதி மற்றும் மோசடி நடந்துள்ளதாக இந்த வழக்கு நடந்து வருகிறது. ஆனால், இதில் அரசுக்கு எந்த விதமான இழப்பும் ஏற்படவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தற்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் ஆகிய மூவரும் தெரிவித்து இருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் இந்தத் தகவல் பதிவாகி உள்ளது. எனவே, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ப.சிதம்பரம், கபில்சிபல் ஆகிய மூவரையும் இந்த நீதிமன்றத்துக்கு அழைத்து, சாட்சிகளாக விசாரிக்க வேண்டும். அவர்களுக்கு சம்மன் அனுப்ப வேண்டும்!'' என்று வழக்கறிஞர் சுஷில்குமார் சொன்ன தகவல், அங்கே இருந்த சி.பி.ஐ. தரப்பை மட்டும் அல்ல... செய்தி பரவியதும் பிரதமரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

 
''ஸ்பெக்ட்ரம் உரிமங்களைப் பெற்ற உடனேயே அதை வேறு நிறுவ​னங்களுக்கு விற்பனை செய்த​தாகப் புகார் சொல்லப்​பட்டுள்ளது. ஆனால், உரிமங்கள் விற்கப்​படவில்லை. அதிகபட்ச உச்சவரம்பான 74 சதவிகிதத்துக்கு உட்பட்டு சில நிறுவனங்கள் தங்களது பங்குகளை விற்றுள்ளன. அந்தப் பரிவர்த்தனைக்கும் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் தந்துள்ளது!'' என்று சொன்ன சுஷில்குமாரின் வாதங்கள், ப.சிதம்பரத்துக்கும் சிக்கலைக் கொடுத்துள்ளன.


அடுத்து தயாநிதி மாறன் மற்றும் அருண்ஷோரி​யையும் அவர் விட்டுவைக்கவில்லை. ''2003-ம் ஆண்டு மத்திய அமைச்சரவை நிறைவேற்றிய விதிமுறைகளைத்தான் ராசா பின்பற்றினார். ஆனால், அந்தக் காலகட்டத்தில் அமைச்சர்களாக இருந்த அருண்ஷோரி மற்றும் தயாநிதி மாறனை இதுவரை ஏன் கேள்வி கேட்கவில்லை? 2007-ம் ஆண்டு தயாநிதி மாறன் பதவி விலகும் முன்பு ஸ்வான் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கும் கோப்புகளில் கையெழுத்துப் போட்டு இருக்கிறார். அதை ராசா பதவிக்கு வந்ததும் வெளியில் சுட்டிக் காட்டி இருக்கிறார்!'' என்று சுஷில்குமார் சொல்வது, தயாநிதி மாறனை பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கி உள்ளது.


''சி.பி.ஐ. தனது ஆவணங்களை இந்த கோர்ட்டில் இன்னமும் தாக்கல் செய்யவில்லை. இந்த ஆதாரங்​களை உடனடியாகத் தாக்கல் செய்து... அதை எங்களுக்கும் தந்தால்தானே வழக்கை எதிர்கொள்ள முடியும்?'' என்றும் சுஷில்குமார் கேள்வி எழுப்பினார். இந்த ஆவணங்கள் அனைத்தையும் கேட்டு ராசா, ஒரு அவசர மனுவையும் தாக்கல் செய்தார். இது சி.பி.ஐ-க்கு ஒரு விதமான நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

இது தொடர்பாக அவசர ஆலோசனை சி.பி.ஐ. அதிகாரிகள் மட்டத்தில் நடந்ததாகவும், அதைத் தொடர்ந்து செப்டம்பர் 15-ம் தேதி தங்களது மூன்றாவது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யலாம் என்று அவர்கள் முடிவு எடுத்ததாகவும் சொல்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து நீதிபதி ஷைனி முன் ஆஜரானார், சி.பி.ஐ. வழக்கறிஞர் கே.கே.வேணு​கோபால். ''இந்த வழக்கில் சி.பி.ஐ. தனது விசாரணையை முடித்துவிட்டது. தனது குற்றப் பத்திரிகையை செப்டம்பர் 15-ம் தேதி தாக்கல் செய்யும்!'' என்று அறிவித்து, புயல் சின்னத்தைக் காட்டி உள்ளார். அதற்கு முன்னதாக வருவாய்த் துறை மற்றும் அமலாக்கப் பிரிவினர் தங்களது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வார்கள் என்றும் வேணுகோபால் சொன்னார்.


''இந்தக் குற்றப் பத்திரிகையில் கைது செய்யப்பட்ட அனை​வரும் என்ன குற்றம் செய்தார்கள் என்பதை முழுமையாகக் கொண்டுவருவோம். இந்த மொத்த சதியிலும் ஒவ்வொருவருக்கும் என்ன பங்கு என்பதையும் சொல்வோம். இதற்காகச் செய்யப்பட பணப் பரிவர்த்தனைகள், எங்கு சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன என்பதையும் கொண்டு​​வருவோம்!'' என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சொல்கிறார்கள்.

ஆ.ராசா, கனிமொழி, சரத்குமார் குறித்த முழுமையான குற்றச்சாட்டுகள் வெளியில் வரலாம். மேலும், தயாநிதி மாறன் குறித்து ஏற்கெனவே தனது அறிக்கையில் சி.பி.ஐ. சில தகவல்களைச் சொல்லி இருந்தது. அதைத் தொடர்ந்து அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தொழில் அதிபர் சிவசங்கரன் இது தொடர்பாக விரிவான வாக்கு​மூலத்தை சி.பி.ஐ-யின் முன்பு பதிவு செய்துள்ளார்.

''என்னுடைய ஏர்செல் நிறுவனம், தயாநிதி மாறனின் வற்புறுத்தலால்தான் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது!'' என்பது இவரது குற்றச்சாட்டாக உள்ளது. இந்தப் புகாரை செப்டம்பர் 15-ம் தேதிய குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்போகிறார்களா அல்லது அது தனியாக வருமா என்பது தெரியவில்லை!

இப்படி மொத்தமும் தி.மு.க. பிரமுகர்களை மையம்கொண்டதாக அந்தக் குற்றப் பத்திரிகை இருக்கப்​போகிறது. பொதுவாக தி.மு.க. செப்டம்பர் 15-ம் தேதியை முப்​பெரும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடும். இந்த ஆண்டு சி.பி.ஐ-யும் சேர்ந்து 'கொண்டாடப்’போகிறது?!


தப்பியது கலைஞர் டி.வி.?

2ஜி வழக்கின் விசாரணை குறித்து அவ்வப்போது சி.பி.ஐ. தரப்பிலும் அமலாக்கப்பிரிவு தரப்பிலும் உச்ச நீதிமன்றத்துக்கு விசாரணை நிலவர அறிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 1-ம் தேதி மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் அளித்த அறிக்கையில், '2ஜி வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. சுமார் 200 வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளை ஆய்வு செய்துவருகிறோம். இதில் சுமார் 7,800 கோடி முதல்
9,000 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்திருக்கலாம்’ என்று அமலாக்கப் பிரிவின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சைப்ரஸ், சேனல் ஐலேண்ட் போன்ற தீவுகளில் இருந்து பெரும்பாலான ஆவணங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


அதன்பிறகு 2000 முதல் 2004-ம் ஆண்டு வரையிலான பி.ஜே.பி. ஆட்சியில் பிரமோத் மகாஜன் மற்றும் அருண்ஷோரி காலத்திலும் பின்னர் தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்தும் சி.பி.ஐ. சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது. இதில், 'மகாஜன் மற்றும் அருண்ஷோரி காலத்தில் அரசின் கொள்கைக்கு மாறாக ஸ்பெக்ட்ரம் அலைவரிசை சில கம்பெனிகளுக்கு அதிகப்படியாக ஒதுக்கப்பட்டது.

அதனால் முழுமையாக விசாரணை நடத்தவேண்டும். தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்துக்கு கால தாமதம் செய்து ஒதுக்கீடு செய்துள்ளார். ஆனால் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம், அவர் கால தாமதம் செய்து ஏர்செல்லுக்கு ஸ்பெக்ட்ரம் கொடுத்துள்ளாரே தவிர, ஏர்செல் நிறுவனத்தைக் கட்டாயப்படுத்தி தனக்கு சாதகமான ஆதாயம் பெற்றதற்கான சாட்சியம் எங்களுக்கு கிடைக்கவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.

கலைஞர் டி.வி. பணத்தை வட்டியோடு திருப்பிக் கொடுத்த தாகக் கூறுவதை சி.பி.ஐ. தரப்பு ஏற்றுக்கொள்கிறது என்றும் அதனால் கலைஞர் டி.வி-க்கு உடனடியாக பிரச்னை ஏதும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் ஷாகித் பால்வாவின் ஐந்து நிறுவனங்களின் சொத்துகளும், சில வீடுகள், நிலம், வணிகக் கட்டடங்கள் ஆகியவைகளோடு வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டு 2ஜி வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான், வரும் செப்டம்பர் 15-ம் தேதி அன்று சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்ய இருக்கும் குற்றப் பத்திரிகை மேலும் சில புயல்களைக் கிளப்பும் என்றே தெரிகிறது.

'' 200 கோடி வந்தது கனிமொழிக்குச் சொல்லப்படவில்லை!''

கடந்த மே 20-ம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட கனிமொழிக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகத் தொடர்ந்து சிறையில் இருக்கிறார். இதனால் ஏற்பட்ட ஆவேசம், அவரது வழக்கறிஞர் மூலமாக வெடித்தது. ஆ.ராசாவின் வழக்கறிஞர் சுஷில்குமார்தான் கனிமொழிக்கும் வழக்கறிஞர். 'கனிமொழி மீது வழக்குத் தொடர்ந்து நடைபெறுமானால், பிரதமரையும் சாட்சிக் கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும்’ என்று எச்சரிக்கை விடுத்துப் பேசினார் சுஷில்குமார்.


'கனிமொழியை இந்த வழக்கில் சேர்த்த சி.பி.ஐ., முறைப்படி அனுமதி பெறவில்லை. அவர் மாநிலங்களவை எம்.பி. ஆனால், அவரை சி.பி.ஐ. ஒரு தனிப்பட்ட நபராகவே கருதிக் கைது செய்துள்ளது. அவரைக் கைது செய்தது குறித்து முறைப்படி மாநிலங்களவைத் தலைவரிடம் அனுமதிகூட பெறவில்லை. கலைஞர் டி.வி-யில் 20 சதவிகிதப் பங்கு இருப்பது மட்டுமே அவர் செய்த குற்றம் தவிர, வேறு எந்தத் தவறும் அவர் செய்யவில்லை. ஆனால், அவர்தான் கலைஞர் டி.வி-க்கு மூளையாக இருந்தார் என்று சொல்லப்​படுவது தவறு.

அந்த டி.வி. 10 சதவிகித வட்டிக்கு 200 கோடியைக் கடன் வாங்கிய விவகாரத்துக்கும் கனிமொழிக்கும் சம்பந்தம் இல்லை. அந்த விஷயம் அவருடைய கவனத்துக்கும் கொண்டுவரப்படவில்லை. இரண்டு பேரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கனிமொழியை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. ஆனால், ஆவண சாட்சியங்கள் எதுவும் கனிமொழிக்கு எதிராக இல்லை!'' என்று சுஷில்குமார் வாதிட்டார். இந்த வாதங்களை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே இருந்தார் கனிமொழி!



சி.பி.ஐ. தவறு செய்தால், நான் விட மாட்டேன்!

சுவாமி 2 ஜி ஆவேசம்

2ஜிஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மூன்றாவது குற்றப் பத்திரிகையை செப்டம்பர் 15-ம் தேதி சி.பி.ஐ. தாக்கல் செய்யப்போகிறது. இந்த நிலையில், மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முதல் கட்டமாக, கலைஞர் டி.வி-க்கு 214 கோடி கொடுத்த டிபி ரியாலிட்டி நிறுவனங்களின் சொத்துகளை முடக்கிக் கையகப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கிவிட்டார்கள்.

இதில் தொடர்புடைய மற்ற நிறுவனங்கள் மீதும் அடுத்தக் கட்ட நடவடிக்கை பாயும் என்கிறார்கள். கடந்த ஜூலை 6-ம் தேதி தொடங்கி இதுவரை 2ஜி விவகாரத்தில் எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை செப்டம்பர் 1-ம் தேதி சி.பி.ஐ தரப் பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்கள்.

 இந்த நிலையில், தனது அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இந்தியா திரும்பிவிட்டார். சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்!

'1. 'உண்மையைச் சொல்லுங்கள்! ஸ்பெக்ட்ரம் வழக்கை கிடப்பில்போட உங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா? தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உங்களை சந்தித்துப் பேசியதாக பரபரப்பு கிளம்பியுள்ளதே?''

''சென்னையில் டாக்டர் மோகன் காமேஷ்வரன் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அங்கே ஸ்டாலின் வந்தார். சம்பிரதாயத்துக்கு நான், 'ஹெள ஆர் யூ?' என்று கேட்க, அவரும், 'ஃபைன்' என்றார். இவ்வளவுதான் நடந்தது. வேறு எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. வழக்கு விசாரணை நீண்ட தூரம் போய்விட்டது. அதனால், இந்த நேரத்தில் என்னை யாரும் அணுக மாட்டார்கள். ஊழல் விவகாரத்தைத் தடுக்கவோ, கிடப்பில் போடவோ இனி யாராலும் முடியாது. ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாட்டியவர்களுக்கு கடைசியாக ஒரே ஒரு சான்ஸ் உண்டு. அவர்கள் அப்ரூவர் ஆகலாம். குற்றத்தில் உடந்தையாக இருந்தவர்கள், அப்ரூவர் ஆகி... பணம் எப்படி பெறப்பட்டது? யார் யாருக்கு கைமாறியது? என்று அனைத்து விவரங்களையும் தானாக முன்வந்து கோர்ட்டில் சொன்னால், தண்டனை குறையலாம்'' 


'2. 'டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் சொத்துகளை முடக்க அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளார்களே?''


''ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் முதன்முதலாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்கிற வகையில் எனக்கு மகிழ்ச்சி. 2002-ல் கொண்டுவரப்பட்ட சட்டம் அது. சட்டவிரோதமாகப் பணம் கை மாறினால், அதன் மூலம் வாங்கப்பட்ட சொத்துகளைக் கைப்பற்ற, மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. அந்த வகையில், கலைஞர் டி.வி-க்கு டிபி ரியாலிட்டி மூலம் 214 கோடி கைமாறி இருக்கிறது கலைஞர் டி.வி-யின் முதலீட்டுப் பணமே சில கோடிகள்தான். அப்படி இருக்கும்போது, இத்தனை கோடிகள் எதற்காகக் கை மாறியது? அந்தப் பணத்தை ஏதோ கடனாகப் பெற்றதாகச் சொல்லி, அவசரம் அவசரமாகத் திருப்பித் தந்து இருக்கிறார்கள் கலைஞர் டி.வி. தரப்பினர். செய்த குற்றத்தை மறைக்க நாடகம் போட்டு, மொத்தமாக மாட்டிக்கொண்டார்கள்.


மத்திய அமைச்சர் சிதம்பரத்திடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என வாதம் நடத்தப்போகிறேன். உச்ச நீதிமன்றம் எனக்குத் தனிப்பட்ட முறையில் ஸ்பெக்ட்ரம் வழக்கை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. ஆக, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இரண்டு வழக்குகள் நடக்கப்போகின்றன. சி.பி.ஐ. வழக்கு தனி. என்னுடைய வழக்கு தனி. நான், சி.பி.ஐ-யிடம் உள்ள ஆவணங்களைப் பெறலாம். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்பு உள்ளவர்களிடம் நானும் குறுக்கு விசாரணை நடத்துவேன்.

ஊழல் விவகாரத்தில் ஆரம்பம் முதல் ஒவ்வொரு முறையும் சி.பி.ஐ. தானாகவே எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை. அவர்களுக்கு எஜமானர் மத்திய அரசுதானே... அதனால், கொஞ்சம் மந்தமாகத்தான் செயல்பட்டார்கள். நான்தான் கோர்ட் மூலம் உத்தரவுகளைப் பெற்று சி.பி.ஐ-யை விரைவாகச் செயல்படவைத்தேன். வழக்கு விசாரணையில் எங்காவது சி.பி.ஐ. தவறு செய்தால், நான் விட மாட்டேன்.''

3.''சோனியா காந்தி பற்றி பேச்சே இல்லையே?''

''அதுதான் புதிராக இருக்கிறது. அவருக்கு வெளிநாட்டில் ஆபரேஷன் என்று மட்டும் தகவல் சொல்லப்பட்டது. வேறு எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. பிரதமருக்கு ஹார்ட் ஆபரேஷன் நடந்தபோது, தினமும் அவரது உடல்நிலை பற்றி ஆஸ்பத்திரி தகவல் வெளியிட்டது. வாஜ்பாய் அவரது முழங்காலில் ஆபரேஷன் செய்துகொண்டபோதும், தகவல்கள் வெளிவந்தன. ஆனால், சோனியா விஷயத்தில் இதுவரை எதுவுமே வெளியிடப்படவில்லை. போனில்கூட அவர் பேசவில்லை. வீடியோ கான்ஃபெரன்ஸ் வசதி எல்லாம் உள்ள இந்தக் காலத்தில் சோனியா ஏன் இதைப் பயன்படுத்தவில்லை என்பதுதான் புரியவில்லை.''


4.''ஊழலை எதிர்த்து நீங்கள் நடத்தும் சட்டப் போராட்டத்துக்கு அண்ணா ஹஜாரே ஆதரவு தருவாரா?''  

''ஊழலை ஒழிக்க மூன்று வகையான நடவடிக் கைகள் எடுக்கப்பட வேண்டும். ஒன்று, இரும்புப் பிடி சட்டம் இயற்ற வேண்டும். இதைத்தான் அண்ணா வலியுறுத்துகிறார். இரண்டாவது, ஊழலை ஒழிக்க ஏற்கெனவே உள்ள சட்டத்தை முடுக்கி வெற்றிகரமாக செயல்படுத்தவைக்க வேண்டும். இதைத்தான் நான் செய்கிறேன். மூன்றாவது, ஊழல் விஷயத்தில் மக்களின் அணுகுமுறை முற்றிலும் மாற வேண்டும். காசுக்காக ஆசைப்பட்டு குறுக்கு வழியில் போகிற மனோபாவம் மாறுவதற்கு ஆன்மிக மறுமலர்ச்சி வர வேண்டும். அப்போதுதான், ஊழல்கள், தவறுகள் செய்ய யாருக்கும் மனம் இடம்கொடுக்காது. இதை செய்ய நம் நாட்டில் உள்ள சாமியார்களும், சாதுக்களும் முன்வர வேண்டும்!''


thanx - vikatan

Friday, September 02, 2011

தமனா - விமன் (WOMEN)அழகிகளில் செம லெமன் அழகியா? தமனா பேட்டி-காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQFd7j91TEhbM9MbB6BK_80iDEUpWdsL59UfDgMtOx4pTcoqRLaAf0g5NYaDrsl2_jzz3oZDhyCJavdJKRWEWdRvW7qreEYtPyCkhRByG9Thwrtuw2JURdHBMxEoildw_wmbfjWb9EE2xy/s1600/tamanna+hot1.jpg 
என் ஃபுல் சப்போர்ட் அண்ணாவுக்குத்தான்!
ஹாய்ய்ய்ய்ய்... நல்லா இருக்கீங்களா? விஜய் சார் 'நண்பன்’ அப்டேட்ஸ் என்ன? அஜீத் சார் டிரைலரே செம ஹிட்டாமே! எப்போ ரிலீஸாம்? ஒண்ணுமே தெரியலைப்பா. ப்ச்... தமிழ் சினிமாவை ரொம்பவே மிஸ் பண்றேன்!''


சி.பி - அட போங்க. உங்க பேச்சு கா.. கோவை வருவீங்கன்னு நாங்க வெயிட்டிங்க்.ஏமாத்தீட்டீங்களே?


1. ''மேடம், தமிழ் சினிமா உங்களை ரொம்ப மிஸ் பண்ணுது. போன வருஷம் முழுக்க எல்லா தியேட்டர்லயும் டூயட் பாடிட்டு இருந்தீங்க... இப்போ ஆளையே காணோம்?''

சி.பி - ஒண்ணுமே தெரியாத மாதிரி கேள்வி கேட்கறதைப்பாரு..  இப்போதான் அவங்க கொஞ்ச கொஞ்சமா கோவை சம்பவத்தை மறந்துட்டு இருக்காங்க. கால அவகாசம் வேணாமா?

http://mimg.sulekha.com/tamanna/stills/tamanna-hot06.jpg




 ''அச்சோ... தெலுங்கில் பிஸி... பிஸி... பிஸி! ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் தேஜா, கரண்னு மூணு பேர் கூடவும் மாறி மாறி டூயட் பாடிட்டு இருக்கேன்.

  சி.பி - நல்ல வேளை ,உங்க பேருல 3 எழுத்து மட்டும் இருந்துச்சு..


தமிழ்ல 'பையா’, 'கண்டேன் காதலை’ படங்களுக்கு அப்புறம் ஹீரோயினுக்கு ஸ்கோப் இருக்குற கேரக்டரே எனக்கு வரலையே!


சி.பி -ஆனந்த தாண்டவத்துல நல்ல கேரக்டர் வந்தது, ஆனா படம் ஊத்திக்கிச்சு, அதை சொல்ல மாட்டீங்களா?


ஹீரோயின் கேரக்டரும் ஸ்கோர் பண்ற மாதிரி படத்தில் நடிக்கணும்னா, அதுக்கு நான்தான் கதை எழுதணும்போல. சின்ன வயசுல மாதுரி தீட்சித் மேல எனக்கு எவ்வளவு க்ரேஸ் தெரியுமா? ஸ்கூல் படிக்கிறப்ப என் பாடி லாங்குவேஜ்லாம் அவங்க மாதிரியே இருக்கும்.

சி.பி - மாதிரி சாரி.. மாதுரி தீக்‌ஷித், தமனா ஒரே பாடி லேங்குவேஜ்? !!! ஹி ஹி ஹி ம் ம் ம் 


http://www.indiancinegallery.com/wp-content/uploads/2008/10/tamanna-35.jpg

நடிகை ஆன பிறகு 'அவங்களை மாதிரி நடிக்கணும் தமன்னா’னு அடிக்கடி எனக்கு நானே சொல்லிட்டு இருப்பேன். 10 வருஷத் துக்கு முன்னாடி ஹீரோயின் களுக்கு இருந்த முக்கியத்துவம் இப்போ இல்லவே இல்லை!''


சி.பி - யாருங்க அப்படி சொன்னது? எவ்வலவு பெரிய ஹீரோவா இருந்தாலும் ஹீரோயின் ரொம்ப முக்கியம்ங்க.. ஆனானப்பட்ட ரஜினியே ஐஸ்வர்யா ராய் வேணும்னு 4 படங்கள்ல அடம் பிடிச்சு 5 வதா எந்திரன்ல தான் ஜோடி சேர்ந்தாரு.. 




2. ''ஹீரோயின்களுக்கான ஸ்கோப் பத்திக் கவலைப்படுறீங்க. ஆனா, சினிமா ஹீரோயின்களுக்குள் எந்த அளவுக்கு நட்பு இருக்கு. ஒரே படத்துல அறிமுகமான இலியானாவுக்கும் உங்களுக்கும் நல்ல ஃப்ரெண்ட்ஷிப் இருக்கா?''

சி.பி - இதெல்லாம் என்ன கேள்வி.. 1000 ஆண் நண்பர்கள் ஒரே காம்பவுண்ட்ல இருந்திடலாம்.. ஆனா 2  பெண்கள் ஒரே காம்பவுண்ட்ல இருந்திட முடியுமா? எல்லாருமே ஜெ -சசி ஆக முடியுமா?

http://mallumasalaactress.in/wp-content/uploads/2010/06/tamanna25.jpg




''நாங்க திக் ஃப்ரெண்ட்ஸ் இல்லைன்னாலும், எங்களுக்குள் சண்டை எதுவும் கிடையாது.

 சி.பி - நீங்க லைட் லெமன் கலர், அவங்க லைட் காபி கலர். எப்படி திக் ஃபிரண்ட்ஸ் ஆக முடியும்?


ரிலாக்ஸா சந்திச்சு அரட்டை அடிக்க ரெண்டு பேருக்குமே நேரம் இல்லைங்கிறதுதான் உண்மை. எப்பவாவது ஃபங்ஷன்ல பார்க்குறப்ப சும்மா 'ஹாய்... பை’யோட முடிச்சுக் குற அளவுக்குத்தான் இப்போ எங்களுக்குள் ஃப்ரெண்ட்ஷிப் இருக்கு.

ஆனா பூனம் பஜ்வா, ஹன்சிகா, காஜல், ஷமந்தானு என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல ஒரு பெரிய கேங்க்கே இருக்கு. எல்லாருமே செம சேட்டைக்காரிங்க. சென்னை யில் பார்ட்டி, ஹோட்டல், பீச்னு பயங்கரமா ஆட்டம் போடுவோம். ஆனா, வீட்டுக்குப் போயிட்டா தமன்னா குட் கேர்ள்!''

சி.பி - இந்தக்காலத்துப்பொண்ணுங்க எல்லாருமே வீட்டுல குட் கேர்ள் தான், ஆனா மவுண்ட் ரோட்ல மட்டும் டான்சிங்க் கேர்ள்.....


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-cmAsSgxV5fF1oWEdG26f-kr0L9zgpF3ODi5OoAOJb9b_a8h4VX1MUlzQLT2mZXfQ8s5HwCArsc2jI_o8lDfB10rXVmMU7DBtfDBJkAk4Z0tzyS7NqQIaOO-qSDk_P4afZ5jHJZpyxeVT/s1600/tamanna+hot.jpg

3. ''தமன்னாவின் காதல்கள்?''

சி.பி - சிங்குலர்ல கேட்காம ப்ளூரல்ல கேட்கறாரே? கொஸ்டீன் பேப்பர் அவுட் ஆகிடுச்சா?


''இந்தக் கேள்வியை நீங்க விடாத வரைக்கும் அந்தப் பதிலையும் நான் விட மாட்டேன். நோட் பண்ணிக்கோங்க... அச்சோ... காதலிக்கிற அளவுக்கு எனக்கு வயசாகலைப்பா. நான் ரொம்ப சின்னப் பொண்ணுப்பா! உடனே, என்ன வயசுன்னு அடுத்து கேள்வி கேட்காதீங்க. சொல்ல மாட்டேனே!''

சி.பி - சுமாரா 25 இருக்குமா?



http://www.cinejosh.com/gallereys/spicy/normal/tamanna_hot_stills_14_05_11_07_44/tamanna_hot_stills_14_05_11_07_44_01.jpg
4. ''சமூக அக்கறையோடு ஒரு கேள்வி... அண்ணா ஹஜாரே எதுக்காகப் போராடிட்டு இருக்கார்னு தெரியுமா? அவர் விஷயத்தில் உங்க ஸ்டாண்ட் என்ன?''  

சி.பி - பாப்பாவுக்கு கேள்விப்படாத பேரா சொல்லி ஏன் ஜெர்க் ஆக விடறீங்க?



''என்ன இப்படிக் கேட்டுட்டீங்க! ஒரு தனி மனுஷனா இந்தியா முழுக்க எல்லோர் மனசுலயும் இவ்வளவு வைப்ரேஷன் உண்டாக் குன அண்ணா தாத்தாவை எனக்குத் தெரியாம இருக்குமா? என் அண்ணன் ஆனந்த் மெடிக்கல் ஸ்டூடன்ட்.

சரியான படிப்ஸ் பார்ட்டி. ஆனா, அவனையே ஹஜாரே பத்தி தினமும் அப்டேட் பண்ணிட்டு ஃபாலோ பண்ண வெச்சிருக்கு அண்ணா ஃபீவர். என் ஃபுல் சப்போர்ட் அண்ணா ஹஜாரேவுக்குத்தான்!''

http://www.teluguone.com/tmdbuserfiles/tamanna_hot-photos.jpg

thanx - vikatan

மீட் மை ஃபேமிலி நர்ஸ்... ஹி ஹி ஹி!!!!



Sun at horizon at sea
1.மேரேஜ்க்குப்பிறகு பொண்ணு ரொம்ப பொறுப்பு ஆகிடுது, பையன் பருப்பு ஆகிடறான் # அவ்வ்வ்

--------------------------

2. புருஷன் - பொண்டாட்டிக்கு நடுவே சண்டை எதனால வருதுன்னு கண்டுபிடிச்சுட்டேன் # டைவர்ஸ் பண்ணாம இருக்கறதால!

-------------------------

3. மதுரைக்குப்போனா ஜாஸ்மின் ஞாபகம், கேரளா போனா மீரா ஜாஸ்மின் ஞாபகம் # ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ்

---------------------

4. புருஷன் தலை ஈரமா இருந்தா அவன் மனைவி அவனை பிரெயின் வாஷ் பண்ணிட்டான்னு அர்த்தமா? டவுட்டு

-------------------------
5.அப்பாவி லவ்வர்ஸ் என்பவர்கள் யார்? தியேட்டரில் நுழைந்ததும் ரைட்கார்னர்சீட்டில் காதலன், லெஃப்ட்கார்னர் சீட்டில்காதலி என தனித்தனியே அமர்வது

-----------------------




6. பசங்க வயசை மட்டும் அல்ல ,மனசையும் மறைக்க மாட்டாங்க!பொண்ணுங்கதான் வயசு,மனசு எல்லாவற்றையும் மறைப்பதும்,மாற்றுவதும்

-------------------------

7. காதலில் விழுந்தால் அடிபடுமோ?இல்லையோ?காதலி மடியில் விழுந்தால் அடி படாது #  SO SLIP ON LOVER

----------------

8. தாமதமாக எடுக்கப்படும் சரியான முடிவு கூட தவறாகிவிட வாய்ப்பு இருக்கிறது

---------------------

9. கண்களை மூடினால் இமைக்கதவின் வாயிலில் அருவமாய் நீ! கண்கள் திறந்தால் இதயக்கோயிலில் தெய்வமாய் நீ!

------------------------


10. அதிர்ஷ்ட தேவதை வலது காலை தூக்கும்போதே என் வாழ்வில் துர் அதிர்ஷ்ட தேவதை இடது காலை வைத்து விடுகிறாள்

------------------------




11. அல்சர் இருப்பதால் காரம், உப்பு சேர்த்தாமல் சாப்பிடும் சூப்பர் ஃபிகரை சப்பை ஃபிகர் என்றழைத்தால் அது சாமி குத்தமா?

-------------------------

12. எனக்குள் நீ குடி வந்த பிறகு நல்ல எண்ணங்களை மட்டுமே மனதில் ஏற்ற வேண்டிய கட்டாயம் எனக்கு

--------------------------

13. டெயிலி 1, 2, 3 என எண்களை எண்ணுபவன் தான் ”எண்”கவுண்ட்டர் ஏகாம்பரமா?

-----------------------

14.  மூளை சொல்படி கேட்டு நடப்பவன் காதலிக்க மாட்டான்.காதல் மூளையை மழுங்க வைத்து விடுகிறது, ஆனாலும் அதை விரும்புகிறோம்

-------------------------

15.  எதை எழுதினாலும் பிள்ளையார் சுழி போட்டு எழுதும் பழக்கத்தை சுலபமாக மாற்றிவிட்டது உன் காதலும், உன் பெயரும்

------------------------

Hammock Boat


16.  நமக்குப்புரிஞ்சதைத்தான் கவிதையா எழுதனும்னு அவசியம் இல்லை, பெரும்பாலும் நிறைய பேருக்குப்புரியாம இருப்பதே கவிதைக்கான இலக்கணம் ஆகிவிடுகிறது

-----------------------------

17. பொண்ணு பார்க்க வெளில கிளம்பறப்ப செம ஃபிகர் எதிரே வந்தா அது நல்ல சகுனமா? டவுட்டு

----------------------------

18. நீ அருகில் இருந்தால் எனக்கு தூக்கம் வருவதில்லை, பிரகாசமான வெளிச்சத்தில் தூங்கி எனக்கு பழக்கம் இல்லை # ஃபிகரு டியூப்லைட்

-----------------------

19. அவளை மறக்க நினைக்கும்போது மனம் கேட்கிறது.. “ ஏன்? அவ தங்கச்சிக்கு என்ன குறைச்சல்?” # SMS

--------------------------

20. ஹை க்ளாஸோ. மிடில் க்ளாஸோ ஃபேமிலி டாக்டர் வெச்சுக்கறாங்க, ஆனா ஃபேமிலி நர்ஸ் வெச்சுக்கறதில்லை ஏன்? டவுட் பை லோ க்ளாஸ் பையன்

-------------------

 

21.எடிட்டர் சார்! சன்மானம் கம்மியா அனுப்பிஇருக்கீங்க? 

யோவ், பவுன் விலை ஏறிடுச்சுங்கறதுக்காக நீ அனுப்பற பொன்மொழிக்கெல்லாம் ரேட் ஏத்தமுடியாது

---------------------------------

22. என் மனைவியோட பர்சனல் பீரோ கோயில் மாதிரி. 

நிஜமாவா? 

ஆமா! திறந்து பார்த்தா ஏகப்பட்ட நகைங்க!

----------------------------

23. டிராஃபிக் எஸ் ஐ - யோவ், டிரைவிங்க் லைசன்சை எடு. 

ஓக்கே சார், இப்போத்தானே சொல்லி இருக்கீங்க? எடுத்திடறேன்

--------------------

24. டைரக்டர் சார், கதைக்கும், ஹீரோயினுக்கும் சம்பந்தமே இல்லையே? 

ஹி ஹி , எனக்கும் ஹீரோயினுக்கும் சம்பந்தம் இருக்கே?

-----------------------------

25. ஜெயில்ல முதல்வகுப்பு வேணாம்னு தலைவர் சொல்லீட்டாராமே? 

ஏற்கனவே அஞ்சாங்கிளாஸ் வரை படிச்சவரை மறுபடி முதல் வகுப்பு போங்கன்னா கோபம் வராதா?

-----------------------------


26. கடைசியில் எல்லாம் சரி ஆகி விடும் என நம்புங்கள்,சரி ஆகவில்லை என்றால் இது கடைசி அல்ல என நம்புங்கள்
----------------------

27. உனக்கு சயின்ஸ் கொஞ்சம் கூடப்பிடிக்காதுன்னே!ஆனா சயின்ஸ் டீச்சரை கல்யாணம் பண்ணி இருக்கியே? 

ஹி ஹி  பாடி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சு

--------------------------

28. உங்க கவிதைல ஏதும் உள் குத்து இருக்கா? 

ஆமாங்க, என் லவ்வரோட அண்ணன் உள்ள கூட்டிட்டுப்போய் செம குத்து குத்திட்டான்,அந்த சோகக்கவிதைதான்

----------------------------

29. ஒரு பெண்ணுக்கு காதல்மூடு வர மழை,ரீசன், சீசன்,எமோஷன், எல்லாம் வேணும், ஆனா ஒருஆணுக்கு மூடு வர ஒரு பெண் இருந்தால்போதும்# நீதி -ஆண் எளியோன்

---------------------

30.  ஆஃபீஸ்ல இருந்து லேட்டா வீட்டுக்கு வந்தா என் மனைவி தாளிச்சுடுவா! பொய் சொல்லாதே? அவளுக்குத்தான் சமைக்கவே தெரியாதே?


-----------------------------

Thursday, September 01, 2011

விஜய்-ன் நண்பன் 3 இடியட்ஸ்ஸை ஓவர்டேக்குமா? இயக்குநர் ஷங்கர் பேட்டி - காமெடி கும்மி

http://flicksbuzz.com/Assets/Images/Kollywood/Kollywood-News/Nanban-Ileana-Latest-Photos-Pictures-Wallpapers-Nanban-Girl-Ileana-Stills-Nanban-Ileana-Photos.jpg 
 
இந்தியன் பார்ட் 2 ஹீரோ அண்ணா ஹஜாரே!

சர்ப்ரைஸ் ஷங்கர்
 
ப்போதும் ஷங்கர்... 'நண்பன்’தான். இப்போது இன்னும் பிரத்யேக நட்புடன் புன்னகைக்கிறார். மிஸ்டர் பெர்ஃபெக்ட், மிஸ்டர் பிரமாண்டம்... 'நண்பன்’பற்றிப் பேசுகிறார் உற்சாகமாக!

சி.பி - சொந்தப்படம்னா லோ பட்ஜெட், அடுத்தவன் தயாரிப்புன்னா மெகா பட்ஜெட் , நல்ல கொள்கை.. 


1. '' 'த்ரீ இடியட்ஸ்’ உங்க பிராண்ட் படமே இல்லை. அதை ரீ-மேக் செய்கிற முடிவை எப்படி எடுத்தீங்க?''

சி.பி - அநீதியை தட்டி கேட்கும் வெட்டி ஹீரோ கான்செப்டையே எத்தனை நாளுக்கு எடுக்கறது?அண்ணனுக்கே போரடிச்சிருக்கும்.. 

http://www.kollytalk.com/wp-content/uploads/2011/02/Anuya-the-mystery-woman-in-Nanban.png


'' 'எந்திரன்’ ஷூட்டிங்கின் பரபர டென்ஷனுக்கு இடையில்தான் 'த்ரீ இடியட்ஸ்’ படம் பார்த்தேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமப் போய்ப் பார்த்த படம், ஸீனுக்கு ஸீன் அப்படியே மெஸ்மரிசம் பண்ணிருச்சு. படம் பார்த்துட்டு வெளியே வந்தா... மனசு அவ்வளவு ஃப்ரெஷ்ஷா இருந்தது. உடனே, என் மனைவிகிட்ட 'படத்தை மிஸ் பண்ணாம பாரு’னு போன்ல சொன்னேன். அவங்க திரும்பத் திரும்ப குடும்பத்தோட மூணு தடவை பார்த்தாங்க. சிம்பிள் சினிமா... ஆனா, கிரேட் ஃபிலிம். படத்தை எஸ் ஃபிலிம்ஸ் சார்பாக பண்ணிரணும்னு தீர்மானிச்சேன். ஆனா, டைரக்ட் பண்ற வாய்ப்பும் கடைசியில் என் கைக்கே வந்தது ஆச்சர்யம்.


சி.பி - ஹிந்திப்படத்தையே 3 தடவை பார்த்துட்டாங்களா? சுத்தம்,அப்புறம் உங்க தமிழ் ரீமேக் பார்க்கறப்ப போர் அடிக்குதும்பாங்களே?

'எந்திரன்’ மாதிரி ஒரு படம் பண்ணிட்டு, அதுக்குச் சம்பந்தமே இல்லாமல்... வேறு கலரில், யூத் வெர்ஷனில் ஒரு படம் பண்ண நினைச்சிருந்தேன். இப்போ எடிட்டிங் டேபிள்ல ரஷ் பார்க்கிறப்போ, 'த்ரீ இடியட்ஸ்’ படத்தை நான் ரீ-மேக் பண்ண எடுத்த முடிவு சரின்னு தோணுது!''


சி.பி - எடிட்டிங்க் டேபிள்ல மட்டும் இல்ல உங்க பட ஓப்பனிங்க்கும் செம ரஷ்தான்.. 


2. ''நீங்க அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்தப்போ பார்த்த விஜய்... இப்போ இல்லை. அவரை இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது?''

சி.பி - அப்போ ஸ்ரீவித்யாவுக்கு சோப்பு போட்டுட்டு இருந்திருப்பாரு, (ரசிகன்) இப்போ அவரோட ரசிகர்களுக்கே அரசியலுக்கு வர வேண்டி சோப் போட ரெடி பண்ணிட்டு இருக்காரு. 




''விஜய் இப்போ செம புரொஃபஷனல். பக்கா டிசிப்ளின். எந்த நேரம், எந்த ஸீன் எடுக்கணும்னு சொன்னாலும்... கச்சிதமா வந்து நிற்பார். இந்த மாதிரி ஒரு ஆர்ட்டிஸ்ட் கிடைச்சா, ஒரு டைரக்டர் எவ்வளவு பெரிய கேன்வாஸுக்கும் கற்பனைகளை விரிக்கலாம். நான் அசிஸ்டென்ட் டைரக்டரா அவரைப் பார்த்ததைவிட, இப்போ அவர்கிட்ட அபாரமான வளர்ச்சி. அவரை இந்தப் படத்தில் எல்லாருக்கும் பிடிக்கும். என் படங்களுக்கு முதல் ரசிகன் நான்தான். நான் ரசிச்ச விஷயத்தை அப்படியே சொல்றேன்!''

சி.பி - கிராஃபிக்ஸ் மட்டும் கொஞ்சம் குறைச்சுக்குங்க, பல டைம் அது ஓவர் டோஸ் ஆகி ஒரிஜினிலை, ஒரிஜினாலிட்டியை குறைச்சுடுது. 

3. '' 'நண்பன்’ ஆரம்பிச்ச சமயத்தைக் காட்டிலும் இப்போ ஜீவாவுக்கு இமேஜும் மார்கெட் வேல்யூவும் எகிறி இருக்கு. அவரது பெர்ஃபார்மன்ஸ் எப்படி இருக்கு?''

சி.பி - எகிறவெல்லாம் இல்லை. கோ பட ஹிட்டால கே வி ஆனந்துக்குத்தான் வேல்யூ ஏறி இருக்கு, ரவுத்திரம் ஓடாததால ஜீவா கோ படத்தால கிடைச்ச மார்க்கெட்டை கொஞ்சம் இழந்திருக்கார். 

''ஜீவாவின் நடிப்பு துல்லியம். மீட்டர் அவ்வளவு கச்சிதமா இருக்கும். ஒரு பாயின்ட் அதிகமா இருக்காது, குறைவா இருக்காது. முதல் ஸீனில் இருந்து கடைசி வரை ஒரே அளவுதான். 'நீங்க மோகன்லால், மம்முட்டி சேர்ந்த குட்டிக் கலவை’னு அவர்கிட்ட சொன்னேன். இப்போதைய டிரெண்டுக்கு என்ன தேவையோ, அதைக் கொடுக்கிறார். ஆக்டர்னு துளி பந்தா கிடையாது. ஏதோ கார்பரேட் ஆபீஸ் போற மாதிரி இருப்பார். ஸ்வீட் பாய்!''

சி.பி - அவர் நடிப்பெல்லாம் கரெக்ட் தான், ஆனா ஆக்‌ஷன் ஹீரோ ஆக இப்பவே அவசரப்படறார், அதன் மைனஸ்.. 

4. ''இந்த செட்டில் ஸ்ரீகாந்த்... ஆச்சர்யமா இருந்தது...''


''கேரக்டருக்கு அவ்வளவு பொருத்தம். ஜாலியான - ஆனால், அப்பாவுக்குப் பயந்த பிள்ளையா, காலேஜ் படிக்கிற குழந்தை மாதிரி நடிச்சிருக்கார் ஸ்ரீகாந்த். முதல் ஸீனில் இருந்தே இந்த த்ரீ இடியட்ஸ் பின்னாடி டிராவல் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க!''

சி.பி - நேச்சுரலி அவர் பொண்டாட்டிக்கு பயந்த புள்ள ஆச்சே?

5. '' 'சிங்கிள் சிங்கம்’ ஹீரோக்களை வெச்சுதான் உங்கள் மாஸ்டர் ஹிட் படங்கள் கொடுத்து இருக்கீங்க. இந்த மல்ட்டி ஹீரோ சப்ஜெக்ட் உங்களை சிரமப்படுத்துச்சா?''

சி.பி - சம்பளம்தான் படுத்தி இருக்கும்... மற்றபடி ஒண்ணும் பெரிய எக்ஸ்ட்ரா ஒர்க் இருந்திருக்காது. 


''முன்னாடி பண்ண படங்களைக் காட்டிலும் இது ரொம்பவே ஈஸியா இருந்தது. அவங்க மூணு பேரை மட்டும் பார்க்காதீங்க. படத்தில் நடிச்ச ஒவ்வொருவருமே ஒரு ஸ்டார்தான். 'சிவாஜி’, 'எந்திரன்’ ரெண்டு படத்துக்கும் சத்யராஜ் சார்கிட்ட போனேன். அவரால் நடிக்க முடியலை. இந்தப் படத் துக்கு கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டார். எஸ்.ஜே.சூர்யா. இரண்டே ஸீன் வந்தாலும் பரபரக்கவைப்பார். இலியானாவுக்கு எவ்வளவு பெரிய கிரேஸ் இருக்குன்னு தெரியும். இவங்க எல்லாரும் உங்க முன்னாடி அழகழகா வந்து நிப்பாங்க!''


சி.பி - எஸ் ஜே சூர்யா நடிக்கறாரா? அய்யய்யோ அப்போ ஏ படமா? இலியானாவுக்கு நீங்க சொல்ற அளவு அவ்வளவு பெரிசெல்லாம் இல்லையே? ஓ ,யூ மீன் கிரேஸ்.. அப்போ சரி.


6. ''விஜய் கேரக்டருக்கு சூர்யா, சிம்புனு ஆரம்பத்தில் பெரிய மியூஸிக்கல் சேர் விளையாட்டே நடந்ததே... என்ன பிரச்னை?''

சி.பி - எல்லாம் சம்பளப்பிரச்சனைதான், அண்ணன் அடிமாட்டு சம்பளம் பேசி இருப்பாரு. அவங்க உஷாராகி இருப்பாங்க, அணில் மாட்டிக்குச்சு.. 


''பொதுவா எல்லாப் படத்துக்கும் அப்படி வர்றதுதானே! சில நடிகர்களைப் பரிசீலிப்போம். அவங்க கால்ஷீட், சம்பளம் எல்லாம் பொறுத்துத்தானே ஃபிக்ஸ் பண்ண முடியும். எனக்கு எல்லாமே செட் ஆகணும். அதுக்கு கொஞ்ச நேரம் எடுத்துக்கிட்டாலும் பிரச்னை இல்லை. ஆனா, படம் ஆரம்பிச்சுட்டு பிரச்னைன்னா... கஷ்டம். இப்போ, ஆல் இஸ் வெல்!''


சி.பி - அய்யோ எல்லாரும் கிணத்துக்குள்ளயா இருக்காங்க? ஓ! நல்லா இருக்குன்னு சொல்ல வர்றீங்களா? அப்போ சரி.. 

7. ''ஒரிஜினலில் நடிச்ச மாதவன், 'தமிழில் த்ரீ இடியட்ஸ் எடுத்தால் அஜீத், விஜய், விக்ரம் நல்ல சாய்ஸ்’னு விகடன் பேட்டியில் சொல்லி இருந்தார். அது இன்னும் நல்லா இருந்திருக்குமோ?''

சி.பி - உங்களுக்கென்ன ஈஸியா கேட்டுட்டு போயிடுவீங்க, சம்பளம் யாரு தருவா? அப்புறம் அண்ணன் தலைல துண்டு போட்டுக்கனும்.. 


''சரிப்பட்டு வர்றதைத்தான் யோசிக்கணும். இத்தனைக்கும் நானே 'ஒய் நாட்?’னு கேட்டு முடிவு எடுக்கிற ஆளு. சில விஷயங்களை யோசிக்கவே கூடாது. அது, பேச நல்லா இருக்கும், எழுத நல்லா இருக்கும். ஆனா, யதார்த்தத்துக்குச் சரி வராது!''

சி.பி - பதார்த்தமா சம்பளத்தைத்தான் யதார்த்தம்னு அண்ணன் சொல்றார். ப்ளீஸ் அண்டர்ஸ்டேண்ட்.. 

8. ''ரீல் 'இந்தியன் தாத்தா’ ரியல்ல வந்த மாதிரி அண்ணா ஹஜாரே தூள் கிளப்பிட்டு இருக்கார். இப்போ 'இந்தியன் பார்ட் 2 எடுக்கலாமே..?''

 சி.பி - அன்னா ஹசாரே கதையை எடுத்தா கடத்தல், கொலை எதையும் காட்ட முடியாதே? வெறும் உண்ணா விரதத்தை மக்கள் பொறுமையா உக்காந்து பார்ப்பாங்களா?

''ஆமாங்க... அண்ணா ஹஜாரேவை 'இந்தியன் தாத்தா’னு விகடனில் எழுதி இருந்தாங்க. சந்தோஷமா இருந்தது. அண்ணா ஹஜாரே அலைக்குப் பின்னாடி 'இந்தியன் பார்ட் 2’ எடுக்கலாமேனு கேட்கிறாங்க. நானே அப்படி நினைச்சேன். இப்போ இன்னும் நல்லா இருக்கும்னு தோணுது. ரத்னம் சார் 'ஆரம்பிங்க’னு சொல்லிட்டே இருக்கார். 'நண்பன்’ ரிலீஸ் ஆகட்டும். சான்ஸ் எப்படின்னு பார்க்கலாம்!


இந்தியா எப்படி இருக்கணும்னு ஒவ்வொரு குடிமகனும் கண்ட கனவை அண்ணா நனவாக்கப் போராடுறார். அது அவரோட லட்சியமாக மட்டும் இருக்கக் கூடாது. நம்ம எல்லோருடையதாகவும் மாறணும். பக்கத்தில் இருக்கிற சிங்கப்பூர் சுபிட்சமா இருக்கும்போது... நாம ஏன் முயற்சிக்கக் கூடாது?''

 சி.பி - ஏ எம் ரத்னம் பாவம், மாட்னாரு.. 


http://hothotbuzz.com/wp-content/gallery/ileana/lrg-8082-illiana-029.jpg

9. ''தமிழ் சினிமாவின் இப்போதைய டிரெண்ட் எப்படி இருக்கு?''


''திடீர்னு வசந்தபாலன் எஸ்.எம்.எஸ். பண்ணினான், 'ஆரண்ய காண்டம் மிஸ் பண்ணாதீங்க’னு. இப்பல்லாம் ஒரு படம் ஹிட் ஆகணும்னா... 'பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்’ ஆக இருக்கணும். எல்லாருக்கும் பிடிக்கணும். ஏதோ ஒண்ணு குறைஞ்சாலும் இடிக்குது. 'ஆரண்ய காண்டம்’ இன்னும் ஓடி இருக்கணும். ரூம் போட்டு யோசிச்சாக்கூட, ஜனங்களின் மனசு புரியலை. சுஜாதா அடிக்கடி சொல்ற மாதிரி... அது ஒரு தங்க விதி. இவ்வளவு வருஷமா இங்கே இருக்கேன். எனக்கும் இப்போ வரை எதுவுமே புரியலை!''


சி.பி - ஆரண்ய காண்டம் ஓடாததுக்கு முக்கிய காரணம் பெண்கள் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் ஓவர். நீங்க பண்ணுன பாய்ஸ் மாதிரி. பல பிளஸ்களை சில மைன்ஸ் கள் அடிச்சு கரை சேர்க்க விடாம பண்ணிடுச்சு.


10. ''ரஜினி உடல்நிலை பத்தி விசாரிச்சீங்களா?''


''ஒருநாள் திடீர்னு ஐ.எஸ்.டி. நம்பர்ல இருந்து கால். ரஜினி சாரா இருக்குமோனு நினைச்சு அட்டெண்ட் பண்ணா... ரஜினியேதான்!

'நல்லாயிட்டேன் ஷங்கர். ஃப்ரீயா சந்திக்கலாம். 'நண்பன்’ பார்க்க ஆசையா இருக்கேன்’னு சொன்னார். 17-ம் தேதி போன் பண்ணி 'ஹேப்பி பர்த் டே’ சொன்னார். அவர் சௌகரியமாகி, அவருக்கு சௌகரியமா இருக்கும்போது... பார்க்கலாம்!''


சி.பி - அப்படியே ராணாக்குப்பிறகு  2 பேரும் சேர்ந்து பண்ண ஒரு பிராஜக்ட்கு பிட் போட்டு பாருங்க

thanx - vikatan

ஜெவின் 100 நாள் ஆட்சி - பிளஸ்ஸும், மைனஸூம் விகடன் கட்டுரை

ஜெ. அரசு மார்க்! 48/100



நூறாவது நாளைக் கடந்த அ.தி.மு.க. அரசுக்கு, அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து ஐஸ் மழை பொழிந்தனர். அதில் திளைத்தெழுந்த ஜெயலலிதா, ''இந்தப் பாராட்டுகளைக் கேட்கிறபோது எனக்கு மகிழ்ச்சி என்பதைவிட, என்றுமே என் வாழ்க்கையில் தோன்றாத ஓர் அச்ச உணர்வு இப்போது தோன்றி உள்ளது. இந்தப் பாராட்டு தொடர்ந்து நீடிக்க வேண்டுமே என்ற அச்ச உணர்வுதான் அது!'' என்று சொன்னது, அவரது மனதில் ஏற்பட்டுள்ள மாறுதல் என்றால், வரவேற்போம். ''மாற்றத்தைக் கொண்டுவந்த தமிழக மக்களுக்கு ஏற்றத்தைத் தருகின்ற அரசு!'' என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு முழுமையான காரியங்கள் 100 நாளில் முடிந்திருக்க முடியாதுதான். ஆனால், அதற்கான முன்னோட்டமாவது ஒழுங்காக இருக்கிறதா?

 அள்ளிக் கொடுத்த அம்மா!
'வருந்தாதே ஏழை மனமே
வருங்காலம் நல்ல காலம்
மனம்போல இன்பம் நேரும்
திருநாளும் வந்து சேரும்!’
- இது சட்டசபையில் நின்றபடி பொதுமக்களுக்காக ஜெயலலிதா பாடிய பாட்டு. அப்படிப்பட்ட ஏழை மக்களுக்கான இலவசத் திட்டங்களைத் தேர்தல் வாக்குறுதிகளாக அள்ளிவிட்டார். அவை அனைத்தையும் இந்த ஆண்டுக்கான கவர்னர் உரையில் சேர்த்துவிட்டது நம்பிக்கையான செய்தி. கருணாநிதி கொடுத்த ஒரு ரூபாய் அரிசிக்கான விலையில் அந்த ஒரு ரூபாயையும் கழித்தது மட்டும் அல்ல, 'அதற்கு விலை இல்லா அரிசி’ என்று புதுப் பெயர் சூட்டியது நல்ல விஷயம்.

இலவச மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர், கறவை மாடுகள், ஆடுகள், மடிக் கணினிகள், தாலிக்கு 4 கிராம் தங்கம்... எனச் சொன்னது எல்லாவற்றையும் செப்டம்பர் 15-க்குள் காப்பாற்ற வேண்டும். பெண் ஊழியர்களுக்கு ஆறு மாதம் மகப்பேறு விடுப்புக் கொடுத்ததற்குப் பெரும் வரவேற்பு. அரசு கேபிள் திட்டத்தைக் கொண்டுவந்து மாதம் 50 ரூபாய்க்குள் எல்லா சேனல்களையும் ஜெயலலிதா திறந்துவிட்டால், அவரை ஜெயிப்பதே இனி சிக்கல் ஆகிவிடும்!


சறுக்கிவிட்ட சமச்சீர்க் கல்வி!
ருணாநிதி, தனிப்பட்ட மனிதர்களைப் பகைத்துக்கொள்வார். ஜெயலலிதா, கூட்டம் கூட்டமாகப் பகைப்பார். முந்தைய ஆட்சியில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் என்றால், இந்த ஆட்சியில் கோடிக்கணக்கான மாணவ - மாணவிகள்! ஜூன் 4-ம் தேதி பள்ளிக்கூடம் போய் பாடங்களைப் படித்திருக்க வேண்டிய பிள்ளைகளை அப்படியே தடுத்து நிறுத்தி, ஆகஸ்ட் 12-ம் தேதி வரைக்கும் மூலையில் முடக்கிவைக்கும் காரியமாக, சமச்சீர்க் கல்வித் திட்டத்தை ரத்து செய்த வர், கடைசியில் 'தீர்ப்பு என்ன வந்தாலும் நான் ஏற்பேன்’ என்று இறங்கி வரும் நிலை. 'கருணாநிதி கொண்டுவந்ததை ஒழிக்கிறேன்’ என்ற ஒரே நோக்கம்தான் தெரிந்தது. போகட்டும்!

கல்வித் துறையில் பெரும் மாறுதலைச் செய்வதற்கான சில முயற்சிகளை ஜெயலலிதா தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைப்பது முதல் உள்கட்டமைப்பு வசதிகள் வரை அவர் சொன்னது மாதிரி கவனம் செலுத்தினால், சமச்சீர்க் கல்விச் சறுக்கலைச் சரிசெய்யலாம்!

பதவிகள் பந்தாட்டம்!

'அதிகாரிகளையும் அமைச்சர்களையும் மாற்றுவது ஒரு முதலமைச்சரின் தனிப்பட்ட விருப்புரிமை. மறுப்பதற்கு இல்லை. ஆனால், ஓர் அதிகாரிக்கோ, அமைச்சருக்கோ, குறிப்பிட்ட கால அவகாசம்கூடத் தரப்படாத நிலையில், அவரது தகுதியைத் தராசில்வைத்து நிறுத்து, தடாலடியாகத் தூக்கி எறிவது சரியா’ என்று ஒரு தரப்பும், 'தவறு செய்துவிட்டார் என்று தெரிந்தும் ஒருவரை அந்தத் துறையின் அமைச்சராக வைத்திருப்பது சரியா’ என்று இன்னொரு தரப்பும் விவாதிக்கும் நிலை நீடிக்கிறது.

கருணாநிதி காலத்தில் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ராஜேந்திரனை சிறைத் துறைக்குத் தூக்கி அடித்துவிட்டு, மறுநாளே அவரை உளவுத் துறை பொறுப்புக்கு நியமித்ததும்; மின் வாரியத் தலைவராக ஸ்வரண் சிங்கை உருட்டி உருட்டி விளையா டியதும், உள் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்ட அடுத்த வாரமே ஷீலா ராணி சுங்கத்தைத் தூக்கி 'பொம்மை’ பார்க்க அனுப்பிவைத்ததும்... அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதில் இருந்த குழப்பத்தையே காட்டுகிறது. இசக்கி சுப்பையா தவறான மனிதர் என்று அமைச்சரான சில வாரங் களில்தான் தெரியும் என்றால், அமைச்சர் ஆக்கப்படுவதற்கு முன்பு சொக்கத் தங்கமாக இருந்தாரா? அல்லது அவ்வாறு முதல்வர் நம்பவைக்கப்பட்டாரா?


யாரோ பரிந்துரை செய்வதால் நம்புவதும், யாரோ குறை சொல்வதால் நிராகரிப்பதும் தொடர்வதால்தான் இந்தக் குழப்பங்கள்!

   ஈழத் தமிழனுக்குக் கண்ணீர்!

து கருணாநிதியைக் குப்புறத் தள்ளியதோ, அதைத் தனக்குச் சாதகமானதாக ஆக்கிக்கொண்டார் ஜெயலலிதா. தமிழக சட்டமன்றத்தில் ஈழத் தமிழர் பிரச்னையை மையமாகவைத்து, ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானம் தமிழகத்தில் மட்டும் அல்ல... உலகத்தின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களையும் மனம் குளிரவைத்தது. மத்திய காங்கிரஸ் அரசு அதிர்ச்சி அடைந்தது. பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர், முதல்வரைச் சந்திக்க ஓடி வந்தார்.

'போர்க் குற்றவாளி யாரோ... அவரைத் தண்டிக்க வேண்டும். இலங்கைக்கு இந்திய அரசாங்கம் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ என்ற தீர்மானத்தைப் பார்த்து, இலங்கைத் தூதர் பதறினார். கொழும்பில் இருந்தபடி கோத்தபய ராஜபக்ஷே, ஜெயலலிதாவைச் சீண்டினார். அதற்கும் மறு நாளே சட்டமன்றத்தில் அறிக்கை படித்து அதிர்ச்சியைக் கிளப்பினார் ஜெ. 'இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா கண்டிக்க வேண்டும்’ என்பதும் அவரது கோரிக்கை. அதோடு, அமைதியாகிவிடாமல், தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு தலா 1,000 ரூபாயை உதவித்தொகையாக அறிவித்தது, அந்த மக்களது உள்ளத்தில் பால் வார்த்தது. மொத்தத்தில், ஈழத் தமிழர் பிரச்னையை உதாசீனப்படுத்திவிட முடியாது என்பதை உணர்ந்தவராக ஜெயலலிதா தன்னைக் காட்டிக்கொண்டார்.

அவரை அமைதியாக்க வேண்டும் என்பதற்காகத்தான், பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்குத் தண்டனையை காங்கிரஸ் அரசு விரைவுபடுத்தியதாக தமிழ் உணர்வாளர்கள் சந்தேகப்படுவதிலும் உண்மை இல்லாமல் இல்லை!


கருணாநிதியை மறந்துவிடுங்கள்!

'பூனையைவிட புலி வலிமையானது என்பதை எலிகள் ஏற்றுக்கொள்வது இல்லை’ என்பார்கள். தனக்குத் தெரிந்தவன் தானே அதிக பலசாலி. அப்படித்தான் ஜெயலலிதாவை கருணாநிதி பிம்பம் ஆட்டிப் படைக்கிறது. கருணாநிதி செய்ததற்கு எல்லாம் எதிர்ப்பதமாகச் செய்வது என்பது ஒரு நல்ல தலைவருக்கு அழகு அல்ல.

சமச்சீர்க் கல்வியை அறிமுகப்படுத்தினாரா... அதை ரத்து செய். புதிய தலைமைச் செயலகம் கட்டினாரா... அதற்குள் நுழைய மாட்டேன். தமிழ்ப் புத்தாண்டு சித்திரை என்பதை தை மாதம் ஆக்கினாரா... பஞ்சாங்கப்படி அது தவறு என்பது. கலைஞர் காப்பீட்டுத் திட்டமா... நான் அதை வேறு மாதிரி ஆக்குகிறேன்.

கலைஞர் வீடு கட்டும் திட்டமா... அதன் விதிமு¬றையை மாற்றி வேறு வீடு கட்டும் திட்டம். செம்மொழி உயர் ஆய்வு நிறுவனமா... அது எதற்கு? இலவசத் தொலைக்காட்சிப் பெட்டியா... இனி டி.வி. தர மாட்டேன். இப்படி ஏட்டிக்குப் போட்டியாகவே நடந்தால், 'வந்தது கருணாநிதியின் தீர்ப்புகளைத் திருத்துவதற்கு மட்டும்தானா?’ என்று பொதுமக்கள் நினைக்க மாட்டார்களா?


கருணாநிதி செய்ததில் பல்வேறு தவறுகள் உண்டு. அதில் கொள்ள வேண்டியதைக் கொண்டு... தள்ள வேண்டியதைத் தள்ளியவர் ஜெயலலிதா என்ற பெயரை வாங்க இனியாவது ஜெயலலிதா முயற்சிப்பாரா!


துணிச்சலான கைதுகள்!


போலீஸ், வருவாய்த் துறை, பத்திரப் பதிவு மூன்றையும் கையில்வைத்துக் கொண்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் ஏராளமான நிலப் பறிப்புகள் நடந்ததாக அப்போதே தகவல்கள் பரவின. சிலர் மட்டுமே வெளியில் வந்து புகார்கள் சொன்னார்கள். மற்றவர்கள் வெளியில் வரப் பயந்தார்கள். பலம் பொருந்தியவர்கள் சம்பந்தப்பட்டு இருந்ததால்தான், அந்த பயம். ஆட்சி மாறியதும் அவர்கள் புகார்கள் கொடுக்கப் புறப்பட்டு வந்தார்கள். இதுவரை தமிழகம் முழுவதும் 8,947 புகார்கள் வந்துள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

இதில் 462 புகார்கள் மட்டுமே வழக்குகளாகப் பதிவாகி உள்ளன. 419 பேர் கைது செய்யப்பட்டுஉள்ளனர். 415 கோடியே 48 லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டு, நிலத் தின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுஉள்ளது. பறிகொடுத்த நிலத்தை மீண்டும் பெற்றுக்கொண்டதும் ஆனந்தக்கண்ணீர் விட்டுக் கொண்டாடியவர்கள் முகங் களைப் பார்த்தபோதுதான், அரங்கேற்றப் பட்ட மோசடியின் கொடூரம் தெரிகிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்பால் உறுதிமொழி எடுத்துக்கொண்ட முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முதல் மதுரையின் அடாவடிப் பேர்வழிகள் வரை தி.மு.க-வின் நிழலில் பதுங்கிச் செய்த காரியங்களை வழக்கு மன்றத்தில் நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. பொதுமக்களுக்கு இந்தக் கைதுகள், இந்த ஆட்சி மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தி உள்ளன!


எதிர்காலத் திட்டம் என்ன?


ந்த ஓர் ஆட்சியாக இருந்தாலும், அது எந்த நோக்கத்தில் செயல்படப்போகிறது என்பதே மிக முக்கியமானது. மக்கள் நலத் திட்டங்கள் அனைத்து ஆட்சிக்கும் அடிப்படையானவை. ஒருத்தர் யானை கொடுத்தால்... இன்னொருத்தர் குதிரை கொடுக்கலாம்.

ஆனால், கொள்கை சார்ந்த விஷயங்களில், எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களில் ஒரு மாநில முதலமைச்சர் தன்னுடைய சிந்தனையைச் செலுத்தியாக வேண்டும். 'தமிழகத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு 2025 தொலைநோக்குப் பார்வைத் திட்டம் தயாரிக்கப்போகிறோம்’ என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது எதை நோக்கிய திட்டம், என்ன மாதிரியான மாற்றங்களை எதிர்கொள்ளப் போகிறோம் என்பதில் தெளிவு வேண்டும்.

கடந்த தி.மு.க. ஆட்சியில் மிகப் பெரிய சிக்கலாக இருந்த மின் வெட்டைத் தீர்ப்பதற்கான திட்டமிடுதலும் இல்லை. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் அவசர முயற்சியும் இல்லை!


ஊழல் பற்றிய மௌனம்!

ன்று ஊழலுக்கு எதிரான யுத்தம் இந்தியா முழுவதும் நடக்கிறது. வளர்ச்சித் திட்டங்கள் மக்களைச் சென்றடையாமல் போவதற்கும், ஒரு மாநிலத்தின் நிர்வாகம் செல் அரித்துக்கிடப்பதற்கும் ஊழல் மட்டுமே முக்கியக் காரணம். அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஜெயலலிதா இறங்கவே இல்லை. வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக அவர் மீதான வழக்கு பெங்களூரூ நீதிமன்றத்தில் நடக்கிறது.

அதை சட்டரீதியாக எதிர்கொள்வதில் இருந்து ஜெயலலிதா இதனைத் தொடங்க வேண்டும். கர்நாடக எடியூரப்பாவும் ஆந்திர ஜெகன்மோகன் ரெட்டியும் துடிப்பதைப் பார்த்தால், இனி ஊழல் அரசியல்வாதிகள் தப்பிப்பது சிரம திசையாகத்தான் இருக்கும். எனவே, லோக் ஆயுக்தா அமைப்பை தமிழகத்தில் தொடங்கி, ஊழல், முறைகேடுகளைக் குறைப்பதற்கான காரியங் களைத் தொடங்கியாக வேண்டும். அதுவே கடந்த காலக் கசப்புகள் கற்றுக் கொடுத்த பாடமாக இருக்கும்!


சட்டசபையில் ஜேஜே!


ட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்பது என்பது வெறும் ஜனநாயகக் கடமை மட்டும் அல்ல. தன்னளவில் ஆர்வமும் இருந்தால் மட்டுமே உத்வேகமாகச் செயலாற்ற முடியும். கருணாநிதி முதல்வராக இருக்கும்போது ஒரு நாள்கூட வரத் தவற மாட்டார். அதைவிட முக்கியமாக கடைசி வரைக்கும் இருப்பார். ஜெயலலிதாவும் இம்முறை இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்.

எல்லா நாட்களும் சபையில் இருக்கிறார். அனைத்து மானியக் கோரிக்கை விவாதங்களையும் கவனிக்கிறார். யார் எந்தக் குற்றச்சாட்டுகள் சொன்னாலும் குறித்துக்கொள்கிறார். உடனடியாக எழுந்து பதில் சொல்கிறார். அமைச்சர்களுக்கு அறிவுரை சொல்கிறார். ஏன், அவைத் தலைவருக்கே திருத்தம் கொடுக்கிறார். உடல் உபாதைகளையும் தாண்டி, ஜெயலலிதா இப்படி நடந்துகொள்வது உண்மையில் மெச்சத் தக்கது!


நடமாடும் நிழல் மனிதர்கள்!


ந்த ஐந்து பேர் பெயர்களை இந்த இடத்தில் சொல்லப்போவது இல்லை! கோட்டையில், போயஸ் கார்டனில், குறிப்பாக முதல்வரிடத்தில் செல்வாக்குப் படைத்தவர்களாகவும் 'நாங்கள் சொல்வதைத்தான் முதல்வர் கேட்பார், இங்கே நாங்கள் வைத்ததுதான் சட்டம்’ என்றும் அந்த மனிதர்கள்... அதிகாரிகளிடம், அமைச்சர்களிடம் நடந்துகொள்கிறார்கள். இது அதிகார மட்டத்தில் வலம் வரும் அனைவருக்கும் பச்சையாகத் தெரிந்த சமாசாரம். இது முதல்வருக்குத் தெரியாமல் இருக்காது. தெரியாது என்றால், அது அதைவிட அதிர்ச்சிக்குரியது.

உண்மையில் அவர்கள் தகுதியானவர்கள், திறமையானவர்கள் என்றால், அரசு அங்கீகாரம் பெற்ற பொறுப்புகளில் அமரவைத்து அவர்களைச் செயல்பட வைக்கலாமே தவிர, 'சூப்பர் சுப்ரீம்’களாக அவர்களை அங்கீகரிப்பது இந்த ஆட்சிக்கு ஆபத்து!

'நாங்கள் எதைச் செய்தாலும் உள்ளச் சுத்தியுடன் செய்கிறோம். மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் கிஞ்சித்தும் இல்லை’ என்று ஜெயலலிதா சொல்வது உண்மையானால், இந்த நிழல் மனிதர்களின் நடமாட்டம் உடனடியாகக் கட்டுப்படுத் தப்பட வேண்டும்!

thanx - vikatan


டிஸ்கி -

மங்காத்தா - மீடியம் ஹிட்டா? மெகா ஹிட்டா? - சினிமா விமர்சனம்