Friday, August 26, 2011

யுவன் யுவதி - அள்ளும் ஒளிப்பதிவு + துள்ளும் இளமை - சினிமா விமர்சனம்

http://www.ariviththal.net/events/uploads/4811.jpg

காதல் மட்டும் இல்லைன்னா இந்த உலகமே இல்லைங்கறாங்க.. அது உண்மையோ இல்லையோ தமிழ் சினிமா ஃபீல்டே இல்லைன்னு வேணா தாராளமா சொல்லலாம்.100க்கு 96 படங்கள் லவ் சப்ஜெக்ட்ஸ் தானே வருது.. கதா விலாசம் எஸ் . ராமகிருஷ்ணன் சாரோட கதை வசனம்  என்பதாலும் ஹீரோயின்  ரீமா கல்லிங்கல் ( கேரளா ஃபிகரு) 70 மார்க் வாங்கற அளவு கும்முன்னு இருப்பதாலும் ஒரு எதிர்பார்ப்போட (!!!) போனேன்.. 

ஃபாரீன் போக ஆசைப்படும் உசிலம்பட்டி ஹீரோ, அதே ஃபாரீனுக்கு மேரேஜ்க்காக போற ஹீரோயின் இவங்க 2 பேரும் விசா ஆஃபீஸ்ல மீட் பண்றாங்க.. பல குழப்படிகளுக்கு நடுவே  இவங்க 2 பேருக்கும் நடுவே
( அல்லது ஓரமா) எப்படி காதல் மலருது? அது எப்படி நிறைவேறுது என்பது தான் கதை.. 

படத்தோட முதல் பாதி  ராமகிருஷ்ணன் எழுதுன திரைக்கதைப்படி படம் சர சர  ஸ்பீடோட போகுது.. அதுக்குப்பிறகு  காம்ப்ரமைஸ் எனும் இயக்குநரின் தலையீட்டால் திரைக்கதை நொண்டி அடிக்குது.. கதை வசனம் என ராமகிருஷ்ணன் சார் பேர் இருந்தாலும் இடைவேளை வரை அவர் திரைக்கதை என்பது அவர் நாவல், கட்டுரை படிக்கறவங்களுக்கு ஈசியா புரிஞ்சிடும்.. இடைவேளைக்குப்பிறகு இயக்குநர் கை வசம் திரைக்கதை போனதால டல்லடிக்குது..

 http://manju_v.tripod.com/images/rima-kallingal-15.jpg

ஹீரோ பரத் கேவலமான ஹேர் ஸ்டைல்ல வர்றது சகிக்கல.  மாடர்ன் யூத்தாம். டான்ஸ் காட்சிகள்ல அண்ணன் பரத் இ. த விஜய் மாதிரி ஸ்டைல் காட்ட ஆசைப்படறாரு..  எடுபடலை.. ஹீரோயின் கூட பேசும்போது பரத்தோட பாடி லேங்குவேஜ்ல பயங்கர செயற்கை.. ஓவர் அலட்டல்.. இடைவேளைக்குப்பிறகு கொஞ்சம் மெச்சூரிட்டியா நடிச்சிருக்காரு.. 

ஹீரோயின் ரீமா கல்லிங்கல் நல்ல ஃபேஸ்கட், நல்ல லோ கட்  ஹி ஹி படத்துல வர்ற மொத்த சீன்ல 6 சீன் தவிர எல்லா சீன்லயும் பாப்பா ஸ்லீவ்லெஸ், டைட் பனியன்,துக்ளியூண்டு ஷார்ட்ஸ் போட்டுதான் வர்றார்,, அவரோட தாராளமயமாக்கல் கொள்கைக்கு ஒரு சபாஷ்..  நடிப்புன்னு பார்த்தா பாப்பாவுக்கு பாஸ் மார்க் தான்.. அவரோட ஹேர் ஸ்டைல் ஓக்கே.. 

சந்தானம் காமெடி கொஞ்சம் கம்மி தான்.. காமெடி ஸ்கிரிப்ட் அவர் இல்ல..அதனாலயோ என்னவோ அவர் ஸ்கிரிப்ட்ல இருக்கற டயலாக் மட்டும் பேசிட்டு அவர் வேலை முடிஞ்சதுன்னு போட்டாரு.. 

சம்பத்குமார் ஹீரோவுக்கு அப்பா.. நீட்டான ரோல்.. இடைவேளைக்குப்பிறகு ஏகப்பட்ட கேரக்டர்ஸ்..


http://www.cinespot.net/gallery/d/619006-1/Reema+kallingal+photos+_5__003.JPG
மனதில் நின்ற வசனங்கள்

1. இப்போ நாம் எல்லாம் எங்கே போறோம்?

அது வண்டி ஓட்டற டிரைவருக்கே தெரியாது. அப்பா தான் கடைசி வரை எதையும் சொல்றதே இல்லையே? லெஃப்ட் போ, ரைட் போன்னு உயிரை வாங்குவாரு.. 

2. சந்தானம் - நீ கொடுத்து வெச்சவண்டா. உங்கப்பா உனக்காக என்னவெல்லாம் செய்யறார்.. எங்கப்பன் நான் மூணாங்கிளாஸ் படிக்கறப்ப என் வெள்ளி அர்ணாக்கயிரை  அத்துக்கிட்டு ஓடிட்டான்.. 

3. சந்தானம் - என்னது உசிலம்பட்டிக்காரன்னா கேவலமா? டேய்.. சச்சின் டெண்டுல்கரே கேரளா போனாலும் அவரை யாரும் கொச்சின் டெண்டுல்கரேன்னு கூப்பிட மாட்டாங்க.. சச்சின் டெண்டுல்கரேனு தான் கூப்பிடுவாங்க..

4. உன் ஃபிரண்ட் ஒரு மாதிரின்னு சொன்னே! இது மாதிரின்னு சொல்லவே இல்லை?. 

5. என் ஃபிரண்டுக்கு ஒரு பிராப்ளம்.. 

சத்யன் -என்ன? அவ பிரெக்னெண்ட்டா இருக்காளா? நீங்களா பிரெக்னெண்ட் ஆக வேண்டியது.. அப்புறம் பசங்க மேல பழியை போட வேண்டியது.. 

6. சத்யன் -  இந்த மாதிரி பேடு வோர்ட்ஸ் யூஸ் பண்றதால தான் எனக்கு கேர்ள்ஸே பிடிக்க மாட்டேங்குது, ஒன்லி ஐ லைக் பாய்ஸ்.. ( ஓ அவனா நீ!!) வாங்கடி போலாம்.. 

7.  ஆட்டோ! ஏன் கூப்பிட்ட இடத்துல நிறுத்தலே?

மயில்சாமி - கூப்பிட்ட இடத்துல நிறுத்துனா அவன் டிரைவர், கொஞ்சம் தள்ளி நிறுத்துனா  அவன் ஆட்டோ ஓனர்.. 

8. அவன் ஏன் அங்கே போறான்?

சந்தானம் -அங்கே தான் அக்கவுண்ட் இருக்கோ என்னவோ?

மயில்சாமி - மரியாதை ப்ளீஸ்.. 

சந்தானம் -அந்த லூஸூங்க ஏன்ங்க அங்கே போவுதுங்க?

9. மயில்சாமி -  டேய்.. எதுக்குடா என்னை தண்ணி ஊத்தி ஊத்தி அடிக்கறீங்க?

சந்தானம் -சோடா ஊத்தி ஊத்தி அடிக்க நீ என்ன ஃபாரீனராடா?

10. சந்தானம் - என்னதான் கருவாட்டை மினரல் வாட்டர் ல வாஸ் பண்ணினாலும் குழம்பு வைக்கறப்ப அதனோட வாசம் காட்டிக்குடுத்துடும்டா..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwvxM1C32XaN3uOuM0CK_TRuSd80sp2JCfhvBPjVT65_go2dlezFnQcVroxe49Mt-gr9PTmSDYEh6nPEDr1464dxzhL-tRLdBaA931hcRMvOXis5CIukhOAUZJK2RUPJnWraEiJwgsDd7f/s1600/cute_sexy_reema_kallingal01.jpg

11. அழகான பொண்ணுக்கு திமிர் ஜாஸ்தின்னு கேள்விப்பட்டேன், அது உண்மைங்களா?

12. நிறைய பேசற பொண்ணுங்க பசங்களை ரொம்ப அலைய விடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்...

13. டியர்.. சிவப்பாவோ , கறுப்பாவோ இல்லாம பிரவுன் கலர்ல இருக்கற உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு..

ம்.. அதுக்கு காரணம் எங்கம்மா கேரளா... அப்பா குஜராத்..

14. உங்க ஃபோன் நெம்பர் ஏதோ சொன்னீங்களே... 984.......?

நான் சொல்லவே இல்லையே?

சரி.. இப்போ சொல்லுங்க..

15. சந்தானம் - டேய்.. வாய்ல பிராந்தி ஊத்திட்டி இருந்தவனை வலுவனா கூடிட்டு வந்து கைக்கு மெஹந்தி போட வெச்சுட்டியே ஏண்டா?

16.  சந்தானம் -மேடம்.. நீங்க அவரை கூட்டிட்டு ஒரு ரவுண்ட் போய்ட்டு வாங்க, அதுக்குள்ள நான் இங்கே ஒரு ரவுண்ட் முடிச்சுடறேன்..

17.  டேய்.. என்னடா தட்டிட்டு இருக்கே? நல்லா பாரு,.,. லேப் டாப் ஆஃப்ல இருக்கு.. 

18.சந்தானம்  -  டேய்.. போற வழில என்னை துபாய்ல இறக்கி விட்டுட்டு போயிடு.. நான் அங்கே ஒட்டகம் மேய்ச்சாவது பொழப்பை ஓட்டிக்கறேன்..

19. எப்பவும் ஒர் சூப்பர் ஃபிகர் பக்கத்துல 2 அட்டு ஃபிகர்ங்க பக்கத்துலயே இருந்து  அவளை குழப்பி விடறதுக்குன்னே இருப்பாளுங்க..- சந்தானம்

20.  சாயங்காலம் அவ என்னை பார்க்க வர்றதா சொல்லி இருக்கா..  சாயங்காலம் எப்போடா வரும்?

 சந்தானம் - மத்தியானத்துக்கு அப்புறம்..

மத்தியானம் எப்போடா வரும்?

சந்தானம்  -டேய்.. இதாண்டா மத்தியானம்..

 http://www.imgoo.in/pics/apr-11/rima-kallingal-hot-pic-745.jpg

21.  அவளைப்பற்றி தெரியாம லவ் பண்றேன்னு சொல்லலாமா?

சந்தானம் -மத்தவங்க மட்டும் அவ பயோ டேட்டா வாங்கிட்டா லவ் பண்றாங்க?

22.  காதலிக்கற மேட்டரை எவண்டா தைரியமா அப்பா கிட்டே சொல்லி இருக்கான்?

23. சந்தானம்  - தொண்டை கட்டி மாமா , எனக்கு ஃபர்ஸ்ட் ந்நைட் எப்போடா நடக்கும்?

24. பொண்ணுங்களுக்கு ஹெல்ப் பண்ணுனா மிஞ்சறது பிரச்சனைகள் தான்..


25. சந்தானம்  - ஊர்ல அவன் அப்பன் எனக்கு வெச்ச ஆப்பே ஓவர்.. இவன் வேற ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வெச்சு படுத்தறான்..

26.  சந்தானம் -எனக்கு ஒரு டவுட்டுடா.. இந்த ஃபிகருங்க இப்படி அரையும் குறையுமா பீச்ல நடமாடுதே.. இவளுங்க எல்லாம் தீபாவளீக்காவது முழு டிரஸ் போடுவாளுங்களா?

27.  சந்தானம்   - எனக்கு மேரேஜ் ஆகி என்னடா பிரயோஜனம்? இன்னும் ஃபர்ஸ்ட்நைட் நடக்கலை.. என் சம்சாரம் வேற ஊர்ல தனியா இருப்பா..

ஏன் பயப்படறே.. அதான் துணைக்கு உன் அப்பா கூட இருக்காரில்லை?

சந்தானம் -அடப்பாவி.. அங்கே என்ன சிந்து சமவெளி நாகரீகமா நடக்கப்போகுது..?

28. சந்தானம் - இந்த  பொண்ணுங்க இருக்காளூகளே.. அவளுக பின்னே யாரும் அலையத வரை பிஞ்சு போன பேக்கும், காஞ்சு போன டிரஸ்ஸும் போட்டுட்டு அலைவாளூங்க.. நமக்குப்பின்னே ஒரு பையன் சுத்தறான்னு தெரிஞ்ச பின்னால பாருங்க..

29. சந்தானம் -  டேய்.. அடுத்தவன் சோகத்துல ஏண்டா சோறாக்குறீங்க?

30.  சந்தானம்  - ஃபோன்ல என்ன மேட்டரு?

பசு மாடு மாசமா இருக்காம்..


சந்தானம்   - ம் அவங்கம்மா வீட்டுக்கு அனுப்ப சொல்லு..

http://kerala-zone.com/entertainment/actress/current/rima-kallingal/rima-kallingal-101.jpg

31. மாமா, இன்னைக்கு சண்டே.. டி வி ல புரோக்ராம் பார்க்காம எல்லாரும் போர் அடிக்குதுன்னாங்க. அதான் நான் சொன்னேன், என் மாமா இப்போ பேசுவார்.. கேட்கலாம்னு..

சந்தானம்  - அடிப்பாவி.. ஸ்பீக்கர் ஃபோன் போட்டு கேட்க இதென்னா மீட்டிங்கா? புருஷன் பொண்டாட்டி பர்சனலா பேசறதை கூட ...... ஒட்டுக்கேட்கனுமா?

32.  யோவ்.. உன்னை இங்கே கூட்டிட்டு வந்ததே எனக்கு நீ கார் ஓட்டத்தான். அதனால அடக்கி வாசி..

33. படிச்ச பசங்க தான் அம்மா, அப்பா வேணாம், சொந்த பந்தம் வேணாம்னு போயிடறாங்க,படிக்காத பசங்க தான் அம்மா ,அப்பா கூட கடைசி வரை இருக்காங்க..

34.  சார்.. நீங்க  பேசறது ஒண்ணும் புரியல.. கிணத்துக்குள்ளே இருந்து பேசறது மாதிரி இருக்கு.

அய்யோ, இன்ஸ்பெக்டர்,.ல் நிஜமாவே நான் கிணத்துக்குள்ளே இருந்து தான் பேசறேன்.. காப்பாத்துங்க.

http://www.lankafocus.com/cinema/wp-content/uploads/2010/09/Rima-Kallingal4.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  முதல் ஷொட்டு சந்தானத்தை புக் செய்தது, திரைக்கதையின் பின்பாதி லாஜிக் ஓட்டைகளை அவர் சர்வ சாதாரணமாக மறக்க வைக்கிறார்..

2.  ஒரே ஒரு சீன் வந்தாலும் சத்யனின் திருநங்கை காமெடி நடிப்பு கலக்கல்.. 

3. டைட்டில் டிசைன் பக்கா.

4. படத்தின் ஒளிப்பதிவும் , பின்பாதியில் வரும்  சீசெல்ஸ் தீவின் லொக்கேசன் செலக்‌ஷனும் செம..

5. ஓப்பனிங்க் ஷாட்ல சேசிங்க் பரபரப்பு தரும்போதே குளியல் கிளு கிளுப்பு..

அதே போல் ஹீரோயினை முடிஞ்சவரை யூஸ் பண்ணியது..

6. விஜய் ஆன்டனி இசையில் ஓ மை ஏஞ்சல், மயக்க ஊசி, உன்னை மறக்காமல் இருப்பதால் இறக்காமல் இருக்கிறேன், உன் கண்களைப்பார்த்த பிறகு,  என ரசிக்க வைக்கும் பாடல்கள்..


http://www.nakkheeran.in/AllImages/Gallerys/13188_1.jpg
யக்குநரிடம் சில கேள்விகள்

1.  ஃபாரீன்ல ஹீரோயினுக்கு கல்யாணம் 10ந்தேதின்னா கரெக்ட்டா 10ந் தேதியே ஃபிளைட் ஏறுவாங்களா? யாராவது?  அந்த ஃபிளைட் மிஸ் ஆச்சுன்னா ஃபோன் பண்ணி சொல்ல முடியாதா? மேரேஜ் நின்னுடுமா?

2. செகண்ட் ஆஃப்ல ஹீரோவோட ஃபிரண்ட் போட்ல இருந்து கடல் தண்ணில விழறாரு.. நடுக்கடல்.. எப்படி அவருக்கு நெற்றில காயம் ஆகும்?தரைல விழுந்தாத்தானே காயம் ஆகும்?

3. ஹீரோ, ஹீரோயின் 2 பேருக்குமே அமெரிக்கா போகறதுதான் லட்சியம்.. ஆனா சொல்லி வெச்ச மாதிரி 2 பெருமே சீசெல்ஸ் தீவுக்கு போறாங்களே? அது எப்படி?

4.  ஹீரோயின் நிச்சயிக்கப்பட்ட அமெரிக்கா மாப்ளை கூட ஃபெஸ்புக்ல மெயில்ல கடலை போட்டதாவும் , ஃபோன்ல காதல் வளர்த்ததாவும் சொல்றாங்க..  அப்புறம் பரத்தை லவ் பண்ணுனதும் எப்படி அந்த மாப்ளையை கழட்டி விடறாங்க?

5. ஹீரோவுக்கு அவர் கிராமத்துல அவரோட அப்பா ஒரு ஜட்ஜோட பொண்ணை நிச்சயம் பண்றாரு.. அந்த பொண்ணை வீட்டுக்கே கூட்டிட்டு வந்து டராரு.. அந்த பொண்ணு 2 மாசமா அங்கே இருக்கே? ஒரு தடவை கூட மாப்ளை கிட்டே பேசாதா? ஹீரோவுக்கு வேற ஒரு லவ் இருக்கறதும் , தன்னை கட்டிக்க இஷ்டம் இல்லைங்கறதும் தெரிஞ்சுக்காம க்ளைமாக்ஸ்ல தான் தெரிஞ்சுக்கனுமா?

6. ஜட்ஜோட பொண்ணு க்ளைமாக்ஸ்ல எனக்கு பிடிச்ச வாழ்க்கை தான் எனக்கு அமையலை, அவராவது அவருக்கு பிடிச்ச பொண்ணை கட்டி வாழட்டும்ன்னு சொல்றாங்க.. அப்போ அவரு ஹீரோவுக்கு வெட்கப்பட்டுக்கிட்டே காஃபி கொடுக்கிறாரே அது எப்படி?

7. ஹீரோயினின் ஃபாரீன் ஃபிரண்ட் தன்னை ஒருத்தன் 3 வருஷமா லவ்வியதாகவும், பின்னாலயே சுத்தியதாகவும், தனக்கு காதலை வெளீப்படுத்த தைரியம் இல்லாததால் சொல்ல முடியலை, அவன் வேற ஒருத்தனை கட்டிக்கிட்டான்னு சொல்றாங்க..  அது எப்படி? 2 பேரும் வெளீப்படுத்தாம இருந்தா தைரியம் வராது ஓக்கே. ஒன் சைடு ஓப்பண்டு. பாப்பா சொல்ல தயக்கம் ஏன்?

http://img1.dinamalar.com/cini/CinevilaGallery/18005277808.jpg

 ஏ செண்ட்டர்ல 30 நாட்கள், பி செண்ட்டர்ல 20 நாட்கள் , சி செண்ட்டர்ல 10 நாட்கள் ஓடலாம்..

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - ஃபோட்டோகிராஃபி + லொக்கேஷன்க்காக+ ஹீரோயினை ரசிக்கறதுக்காக யூத்துங்க பார்க்கலாம்