Saturday, July 02, 2011

தங்கம் ,வெள்ளி விலை நிலவரத்தில் வெள்ளி தங்கத்தை ஓவர் டேக்கியது எப்படி?

http://www.jewelry-designs.tk/wp-content/uploads/Wedding-jewellery-images-malabar-gold-1.jpg
உச்சத்தைத் தொட்ட தங்கம்!
மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து நெகட்டிவ் செய்திகள் அதிகம் வரும்பட்சத்தில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 1,450 டாலருக்குமேல் செல்ல வாய்ப்புண்டு’ என கடந்த இதழில் சொல்லி இருந்தோம். ஆனால், நாம் எதிர்பார்த்ததைவிட 1,461 டாலருக்குமேலே சென்றிருக்கிறது. நம் நாட்டில் கடந்த வாரம் திங்கள்கிழமை அன்று காலை 10 கிராம் தங்கம் 20,744 ரூபாயாக இருந்தது.

 மூன்றே நாட்களில் இதன் விலை 21,194 ரூபாயாக உயர்ந்தது. இந்த விலையேற்றத்துக்கு என்ன காரணம்? விஷம்போல ஏறிவரும் உலகப் பணவீக்கம், அமெரிக்க டாலர் தொடர்ந்து பலவீனமடைந்து வருவது, மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் உக்கிரமாகி வரும் பதற்றமான சூழ்நிலை, ஐரோப்பிய நாடுகளின் கடன் பிரச்னை போன்ற பல்வேறு காரணங்கள்தான் தங்கம் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தி இருக்கிறது.


அமெரிக்காவின் மிகப் பெரிய கோல்டு இ.டி.எஃப். நிறுவனமான எஸ்.பி.டி.ஆர். கடந்த 5-ம் தேதி அன்று 1.5 டன் தங்கத்தை வாங்கியது. கடந்த சில வாரங்களில் இந்த நிறுவனம் தங்கம் வாங்குவது இதுவே முதல் முறை.
சரி, அடுத்த வாரம் தங்கம் விலை எப்படி இருக்கும்?

மேற்சொன்ன காரணங்கள் இன்னும் மோசமாகும்பட்சத்தில் தங்கம் விலை கூடிய விரைவிலேயே 1,500 டாலரைத் தொட வாய்ப்பிருக்கிறது. 1,500-ஐ தொடவில்லை என்றாலும் 1,470 டாலரை நோக்கியாவது செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால், நிலைமை சீரடையும்பட்சத்தில் 1,440 டாலரைத் தொடவும் வாய்ப்பிருக்கிறது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdLJosJpTrmSA2yUgtecMtz03aQM9Q9SVMzxuJdnmFlx8KdGg0PU_Q2ruA0cfgdZ41o1OB6PyYcCBcyUlprYynkV3fg1B2SBFE2YtY0z4dKghbOcaQOc92KlQ0eXVtKRHak04ZXpg6/s1600/artificial+jewellery.jpg

வெளுத்து வாங்கிய வெள்ளி!

தங்கம் விலை உயர்ந்ததை யட்டி வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்தது. கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை 38 டாலராக இருந்தது. ஆனால், மூன்றே நாட்களில் அது 39.75 டாலராக உயர்ந்தது. நம் நாட்டில் கடந்த திங்கள்கிழமை அன்று காலை வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 55,870 ரூபாயாக இருந்தது. அதே வெள்ளி புதன்கிழமை இரவு 58,485 வரை உயர்ந்தது.

இந்த விலையேற்றத்துக்கு முக்கிய காரணங்கள் இரண்டு. சீன தொழிற்துறைக்குத் தேவைப்படும் வெள்ளியின் அளவு கணிசமாக அதிகரித்திருப்பது ஒரு காரணம். இந்தியாவில் இப்போது கல்யாண சீஸன் என்பதால் பலரும் கிலோ கணக்கில் வெள்ளிப் பொருட்களை வாங்கிக் குவித்து வருவது இன்னொரு காரணம்.

சரி, அடுத்த வாரம் வெள்ளி விலை எப்படி இருக்கும்?

சர்வதேச நிலைமை எப்படி இருக்கும் என்பதை வைத்தே வெள்ளி விலை குறையுமா அல்லது கூடுமா என்பது தெரியும். இப்போதுள்ள நிலைமையை வைத்துப் பார்த்தால், வெள்ளி விலை ஒரு அவுன்ஸுக்கு 39.75 டாலருக்கு மேலே செல்லுமா என்பது சந்தேகமே. ஆனால், குறையும்பட்சத்தில் 38 டாலர் வரை உடனடியாகக் குறைய வாய்ப்புண்டு.

கிடுகிடு கச்சா எண்ணெய்!


கச்சா எண்ணெய் 2008-ல் இருந்த உச்சபட்ச விலையை இப்போது தொட்டிருக்கிறது. கடந்த வியாழக்கிழமை காலை ஒரு பேரல் விலை 108.43 டாலர் என்கிற அளவில் விற்பனையானது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் பயன்பாடு அதிகரித்திருப்பதோடு, மத்திய கிழக்கு, ஆசிய நாடுகளில் தொடர்ந்து நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அதன் விலையும் உயர்கிறது.


கடந்த இரண்டரை ஆண்டுகளாக கச்சா எண்ணெய் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. ஆனால், இப்போது உருவாகி இருக்கும் புதிய சூழ்நிலையைப் பார்த்தால், அதன் விலை இப்போதைக்கு 100 டாலருக்குக் கீழே குறைய வாய்ப்பில்லை என்கிறார்கள்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1r4DRfD2WXU_0eB7tE7n5gKRlU3x3lIUs79devx_5tUJtbiHZMlZx3DUBNMcjQMKKW0_8OVl3zcNVi7LTS1Iel6mlqu1FgwesqVTXhyHpRpC3hD6KZQqWBMLoyXS1ygrMAYevF3bmlMrR/s400/Indian_Bridal_Jewellery_Designs4.jpg

கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல்வேறு நாடுகளின் வளர்ச்சி வேகம் கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஆசிய நாடுகளின் வளர்ச்சி கடந்த ஆண்டு 9 சதவிகிதமாக இருந்தது. இது இந்த ஆண்டு 7.8 சதவிகிதமாக குறையும் என்றும், கடந்த ஆண்டு 8.6 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் வளர்ச்சி இந்த ஆண்டு 8.2 சதவிகிதமாகக் குறையும் என்றும் சொல்லப்படுகிறது.

முழிக்க வைக்கும் மிளகாய்!
மிளகாய் உற்பத்தி குறையும் என்கிற செய்தி காரணமாக கடந்த வியாழக்கிழமை அன்று அதன் விலை கடுமையாக உயர்ந்தது. என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் இந்த மாதம் ஏப்ரல் 20-ம் தேதியோடு முடியும் கான்ட்ராக்ட் 226 ரூபாய் உயர்ந்து 9,100 ரூபாயாக விலை போனது. ஜூன் கான்ட்ராக்ட் 9,792 ரூபாய்க்கும், ஜூலை கான்ட்ராக்ட் 10,008 ரூபாய்க்கும் விலை போனது. இதன் எதிரொலியாக அடுத்த சில நாட்களில் சில்லறை மார்க்கெட்டிலும் மிளகாய் விலை உயர வாய்ப்புண்டு என்கிறார்கள் மிளகாய் வியாபாரிகள்.

மஞ்சள் விலை உயர்ந்தது!

கடந்த பல வாரங்களாக விலை குறைந்து வந்த மஞ்சள் விலை இப்போது உயர ஆரம்பித்திருக்கிறது. ஈரோடு சந்தைக்கு மஞ்சள் வரத்து குறைந்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்கிறார்கள் மொத்த வியாபாரிகள். கடந்த புதன்கிழமை நிலவரப்படி, விரலி மஞ்சள் விலை ஒரு குவிண்டால் 7800 முதல் 9709 வரை இருந்தது. இப்போதைக்கு சந்தைக்கு வருகிற மஞ்சள் மூட்டைகள் உடனுக்குடன் விலை போய்விடுவதால் அடுத்த சில நாட்களில் அதன் விலை உயரவே வாய்ப்புண்டு என்கிறார்கள்.

நன்றி - நாணயம் விகடன்

ஸ்டைலிஷா டிரைவிங்க் செய்வது எப்படி?

நீங்கள் காரோட்ட லைசென்ஸ் வைத்திருக்கலாம். காரும் நன்றாக ஓட்டத் தெரிந்திருக்கலாம். ஆனால், தவறிழைக்காமல் கார் ஓட்டுகிறீர்களா என்று கண்டுபிடிப்பது எப்படி? அதற்காக, காரைக் கையில் கொடுத்து, 'தவறு செய்யாமல் கார் ஓட்டுங்கள் பார்ப்போம்’ என்று ரிஸ்க் எடுக்க முடியாது! 


ஆனால், டிரைவிங் சிமுலேட்டரில் உட்கார வைத்தால், நீங்கள் எப்படிப்பட்ட டிரைவர் என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும். இது உங்களைக் குற்றம் கண்டுபிடிப்பதற்காக அல்ல... உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளவும், உண்மையில் கார் ஓட்டும்போது இன்னும் கவனமாக இருக்கவும் டிரைவிங் சிமுலேட்டரில் பயிற்சி எடுப்பது நல்லதுதான்.

கார் ஓட்டக் கற்றுக்கொண்டு இருப்பவர்களுக்கும், ஏற்கெனவே கற்றுக் கொண்டவர்களுக்கும் தினசரி அரை மணி நேரம் வீதம் மொத்தம் 5 மணி நேரம் பயிற்சி வகுப்புகள் எடுக்கிறது சென்னை அண்ணா சாலையில் இருக்கும் AASI அமைப்பு (ஆட்டோமொபைல் அசோஸியேஷன் ஆஃப் சவுத் இந்தியா). டிரைவிங் சிமுலேட்டர் மூலம் பயிற்றுவிக்கப்படும் இந்த கோர்ஸை முடித்துவிட்டால், சாலையில் காரோட்டும்போது பயம், படபடப்பு போன்ற டென்ஷன் இல்லாமல், தன்னம்பிக்கையுடன் இருக்க இந்தப் பயிற்சி நிச்சயம் உதவும். 

'எனக்கு நன்றாக காரோட்டத் தெரியும்’ என்று சவால் விட்ட சிலரை டிரைவிங் சிமுலேட்டரில் அமர வைத்து ஓட்டிக் காட்டச் சொன்னபோது....

''நான் கார் டிரைவிங் முறையா முடிச்சவன். இந்த சிமுலேட்டர்ல ஓட்டினா எந்தத் தப்பும் இல்லாமல் ஓட்டுவேன்'' என்று கூறிவிட்டு முதலில் களம் இறங்கினார் சரவணன். உட்கார்ந்த உடனே கியர் மாற்றி கிளம்பியவர் இரண்டே நிமிடங்களில் ஒரு காரில் மோதினார் (ஸ்கிரீனில்தான்). இருந்தாலும். இரண்டாவது முறையும் முயல... மீண்டும் ஒரு அட்டாக். மூன்றாவதாக, மெதுவாக ஓட்டியபடி செல்ல... கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் வரை எந்த சிக்கலும் இல்லாமல் சென்று பயணத்தை நிறைவு செய்தார்.


''நான் ஓட்டுனர் பயிற்சி நிறுவனம் ஒன்றில் வேலையில் இருக்கிறேன். நிறைய பேருக்குப் பலதரப்பட்ட கார்களை வைத்து டிரைவிங் சொல்லிக் கொடுக்கிறேன். ஆனால், இந்த சிமுலேட்டரில் உட்கார்ந்து ஓட்டிய பிறகுதான் தவறு செய்வது தெரிகிறது'' என்று நல்ல பிள்ளையாக ஒப்புக்கொண்டார் சரவணன்.

ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் மேலாளராக இருக்கும் லட்சுமி ஒருவித நடுக்கத்தோடு வந்தமர்ந்தாலும், இரண்டு மூன்று சிக்னல் வரை மிகச் சரியாக டிரைவ் செய்தார். 20 கி.மீ தூரம் எந்தத் தடங்கலும் இல்லாமல் ஓட்டிச் சென்றவர், சிமுலேட்டரில் இருந்து மனமில்லாமல் இறங்கினார். ''எப்பவுமே பரபரப்பா, வேகமாதான் காரை டிரைவ் பண்ணுவோம்.

 

ஆனா, இங்க எந்தவிதமான டென்ஷனும் இல்லாம கவனமா நான் ஓட்டினதாலதான் இவ்வளவு தூரமும் எந்த ஒரு இன்ஸிடன்ட்லேயும் மாட்டாம வந்திருக்கேன். ஸோ, மித வேகம் மிக நன்று!'' என சீரியஸாக லெக்சர் கொடுத்தார்.

அடுத்ததாக களம் இறங்கினார் சீனு (சாஃப்ட்வேர் டீம் லீடர்), சிமுலேட்டரில் உட்கார்ந்த உடனே கடமை கண்ணாயிரமாக சீட் பெல்ட்டை மாட்டியவர், சீட்டை அட்ஜஸ்ட் செய்தபடி, ''நான் டிராஃபிக்லதான் கார் ஓட்டுவேன்'' என அடம்பிடிக்க... சிமுலேட்டர் டிரெய்னர் சோமநாதன் டிராஃபிக் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்துத் தந்தார். ஆரம்பத்தில் அழகாக கார் ஓட்டியவர், இரண்டாவது கியர் மாற்றிப் போகும்போதே ஒரு திருப்பத்தில் இருந்து ஒரு கார் வர... பயந்து போய் சட்டென பிரேக் போட்டார். 

எல்லோரும் 'சபாஷ்’ என அவரைத் தட்டிக்கொடுக்க... சிறிது நேரத்தில் அவருடைய டார்கெட் தூரத்தை நிறைவு செய்தார். ஆனால், அவர் இரண்டாவது கியரைத் தாண்டவே இல்லை என்பதுதான் இதில் முக்கியமான விஷயம்.

''என்னோட ஃப்ரெண்ட்ஸ்கூட சிட்டியில காரை டிரைவ் செய்யும்போது, டாப் கியர் வரைக்கும் நல்ல ஸ்பீட்ல ஓட்டி இருக்கேன். இப்போதான் புரியுது, அது எவ்வளவு பெரிய தவறுன்னு! சிட்டி டிராஃபிக்ல நிதானமான வேகத்துல போனாலே போதும். நம்மை நாம பாதுகாத்துக்கணும்னா கவனமா இருக்கணும்ங்கறதைத் தெரிஞ்சுக்கிட்டேன்'' என்றா£ர் சீனு.

பயங்கர பில்டப்போடு சிமுலேட்டரில் ஏறினார், சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவியான சாய்கிருபா. ''நானும் சிட்டி டிராஃபிக்லதான் ஓட்டுவேன். எனக்கு ரிஸ்க் எடுக்கறதெல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி!'' என டயலாக் விட்டபடி சிமுலேட்டரில் அமர்ந்தார். ''கியர் ஒழுங்காக அமைந்தாலும், சடர்ன் டிராஃபிக் மற்றும் சிக்னலைக் கவனிக்காமல் சென்றதால், இரண்டு முறை விபத்து ஏற்படுத்தினார். 

இருந்தாலும், ''வீராங்கனைக்கு இதெல்லாம் சகஜம்ப்பா!'' என்றபடி மீண்டும் ஸ்பீடு எடுத்து 10 கி.மீ வரை சென்று ''வெற்றி வெற்றி'' என சந்தோஷக் கூச்சலிட்டார்.

சிமுலேட்டர் டிரெய்னரான சோமநாதன் இதன் செயல்பாடுகள் பற்றி நம்மிடம் விளக்கினார்.

'புதிதாக கார் ஓட்டக் கற்றுக் கொள்பவர்களுக்குத்தான் இந்த சிமுலேட்டர். ஆனால், கார் ஓட்டுவதில் ஏற்படும் தவறுகளைக் களைவதற்காக கற்றுக்கொள்ள வருபவர்கள் அதிகம்.

இதில் காரில் உள்ள அனைத்து அம்சங்களும் இருப்பதால், உண்மையாகவே காரோட்டுவது போன்ற ஃபீல் இருக்கும். முன் பக்கம் ரோடு அமைந்திருக்கும் வழியைப் போலவே, மானிட்டரில் ஒவ்வொரு பாதையும் அமைந்திருக்கும். அதனால், ஏற்கெனவே டிரைவிங் தெரிந்திருந்தாலும் இதில் பழகுவதன் மூலம் நமது டிரைவிங் ஸ்டைலை மெருகேற்றலாம்!'' என்று கூறி முடித்தார்.


thanx-motor vikatan

மோர்க்குழம்பு, ரவா உப்புமா,அரிசி உப்புமா... சமையல் குறிப்புகள்




உப்புமா கொழுக்கட்டை மிக்ஸ் 

தேவையானவை: பச்சரிசி - 150 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், எண்ணெய் - சிறிதளவு.

உப்புமா கொழுக்கட்டை செய்ய: தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை மிக்ஸியில் ரவையாக உடைத்து சலிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாயைப் போட்டு, சிவந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, உடைத்த ரவையில் கொட்டிக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

உப்புமா கொழுக்கட்டை தேவைப்படும்போது, கடாயில் தண்ணீர் ஊற்றி (ஒரு பங்கு ரவை கலவைக்கு 2 பங்கு தண்ணீர்) கொதிக்க வைத்து அரிசி ரவை மிக்ஸ், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி மூடி வைக்கவும். அரிசி ரவை நன்றாக வெந்ததும், தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். ஆறியதும் உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து, வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.

இதற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாயே போதும். சட்னிகூட தேவையில்லை. மூன்று வாரங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்
.
2. மோர்க்குழம்பு மிக்ஸ் 

தேவையானவை: துவரம்பருப்பு,  கடலைப்பருப்பு - தலா 50 கிராம், பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், தனியா, சீரகம் - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7, பெருங்காயத்தூள் - சிறிதளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், எண்ணெய் - சிறிதளவு.

மோர்க்குழம்பு செய்ய: தயிர் - 100 கிராம், தேங்காய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, ஏதேனும் ஒரு காய்கறி (வெண்டை, பூசணி, வாழை), எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை: பருப்பு வகைகள், அரிசி,  தனியா, சீரகம், 5 காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, 2 காய்ந்த மிளகாய் தாளித்து... மிக்ஸியில் அரைத்த பொடியுடன் சேர்த்துக் கலக்கி, சேமித்து வைக்கவும்.

மோர்க்குழம்பு தேவைப்படும்போது தயிரை நன்றாகக் கடைந்து, தேங்காய் விழுது சேர்த்துக் கலக்கவும். தயாரித்து வைத்திருக்கும் மோர்க்குழம்பு மிக்ஸை இதனுடன் கலந்து மஞ்சள்தூள் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து நுரை வந்ததும்  இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காயைப் போட்டு வறுத்து, மோர்க்குழம்பில் சேர்க்கவும். இரண்டு வாரங்கள் வைத்திருந்து இந்த மிக்ஸை பயன்படுத்தலாம்.

3.ரெடிமேட் சாம்பார் மிக்ஸ் 

தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், உளுத்தம்பருப்பு, தனியா, கடலைப்பருப்பு, கொப்பரைத் துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8 அல்லது 10, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - சிறிதளவு, வெயிலில் நன்றாக காய வைத்த புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - தேவையான அளவு.

சாம்பார் செய்ய: நறுக்கிய முருங்கை, கத்திரிக்காய், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: வெறும் கடாயில் பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய், தனியாவை வறுத்துப் பொடிக்கவும். புளி, கொப்பரை துருவலையும் தனித்தனியே வறுத்துப் பொடிக்கவும்.  இரண்டு பொடிகளையும் ஒன்றாக சேர்க்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து அரைத்து வைத்திருக்கும் பொடியுடன் கலந்து... மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து, சேமித்து வைக்கவும்.

சாம்பார் தேவைப்படும்போது முருங்கைக்காய், கத்திரிக்காயை நறுக்கி உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு வேக வைக்கவும். அரைத்த சாம்பார் மிக்ஸை தேவைப்படும் அளவுக்கு இதில் சேர்த்து, தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். சாம்பார் வாசனை வந்ததும் இறக்கி, கறிவேப்பிலை சேர்க்கவும். இரண்டு மாதங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

 4.ரவா உப்புமா மிக்ஸ் 

தேவையானவை: வெள்ளை ரவை - 200 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு, முந்திரி - 10, காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய் - சிறிதளவு.
உப்புமா, கிச்சடி செய்ய: மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய், நறுக்கிய வெங்காயம் மற்றும் காய்கறிகள் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் ரவையைப் போட்டு நன்றாக வறுத்து, தனியே வைக்கவும். மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், முந்திரி, கறி வேப்பிலை போட்டு சிவக்க வறுத்து, ரவையில் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

உப்புமா தேவைப்படும்போது, கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து (ஒரு பங்கு உப்புமா மிக்ஸ் சேர்த்து இரண்டு பங்கு தண்ணீர்), ஒரு டம்ளர் உப்புமா மிக்ஸ், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். ரவை வெந்ததும் நெய் அல்லது எண்ணெய் விட்டு மூடி வைத்து, 5 நிமிடம் 'சிம்’மில் வைத்து இறக்கினால் உப்புமா தயார்.

தண்ணீர் கொதிக்கும்போதே மஞ்சள்தூள், வதக்கிய காய்கறிகளை சேர்த்து, ரவா கிச்சடி போலவும் செய்யலாம். ஐந்தே நிமிடத்தில் செய்துவிடக்கூடிய அருமையான டிபன் இது. இந்த மிக்ஸை இரண்டு மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

5. அரிசி உப்புமா மிக்ஸ் 

தேவையானவை: பச்சரிசி - 150 கிராம், துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் - சிறிதளவு, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, துவரம்பருப்பைக் கலந்து மெல்லிய ரவையாக மிக்ஸியில் உடைத்து சலித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாயைப் போட்டு சிவக்க வறுத்து... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்து, உடைத்த ரவையுடன் கலந்து சேமித்து வைக்கவும். 

அரிசி உப்புமா தேவைப்படும்போது, கடாயில் தண்ணீர் ஊற்றி (ஒரு பங்கு ரவைக்கு 3 பங்கு தண்ணீர்), உடைத்து சலித்த ரவை, உப்பு சேர்த்துக் கிளறி, நன்றாக வேக விடவும். ரவை வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து மூடி, அடுப்பை 'சிம்’மில் 5 நிமிடம் வைத்து இறக்கி, சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: உப்புமா கிளறும்போது தண்ணீர் பற்றாமல் போனால், கொதிக்கும் தண்ணீரை ஊற்றிக் கிளறலாம். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.


நன்றி - அவள் விகடன்

Friday, July 01, 2011

தேநீர் விடுதி - லைட் டீயா? ஸ்ட்ராங்க் டீயா? - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5ldEPJ2hjxY5YA2RQk5sOtmwU_OLHARhyphenhyphenk5MZf9Rp2Kk46jfGN519vFcoNFrF-sjCa73vIGmu6SfnVB4UOkPkG-L1HtJf4t84ehywLY_uuuH1MWI-OgetCp0r0mKQMvHJkw6OfFomurg/

களவாணி இசை அமைப்பாளர் எஸ் எஸ் குமரன் முதன் முறையாக இயக்கி இருக்கும் படம் என்பதால் அந்தப்படத்தின் சாயல் கொஞ்சம் ஜாஸ்தியாகவே இருக்கிறது..ஆனால் எந்த வித பிரமாதமான திருப்புமுனையோ,பரபரப்போ இல்லாத சிம்ப்பிள் லவ் ஸ்டோரி என்பது தான் படத்தின் பலமும்,பலவீனமும்...

பந்தல் காண்ட்ராக்டராக வரும் ஹீரோ பெட்டிக்கடை வைத்திருக்கும் பெண் மீது கொள்ளும் காதல் எப்படி கை கூடுகிறது என்பது தான் கதை.. இதுல தேநீர் விடுதி எங்கே வந்தது என கேட்பவர்களூக்கு.. ஹீரோ ஹீரோயினுக்கு ரூட் போடறதே பெட்டிக்கடைக்கு எதிரே உள்ள டீக்கடையிலிருந்துதான்..

ஹீரோ சுமார் ரகம்.. பாஸ் மார்க் வாங்கிடுவார். ஹீரோயின் அம்சமான அழகு என சொல்ல முடியா விட்டாலும் அடக்கமான குத்து விளக்கு மாதிரி அழகாக வந்து போகிறார்.. ரேஷ்மா மேணன் .என்ன ஒரே மைனஸ் என்றால் அவரிடம் காதல் உணர்வுகள், சிரிப்பு இவை எல்லாம் ஸ்விட்ச் போட்ட மாதிரி வந்து போகின்றன.. அதாவது டைரக்டர் ஓக்கே சொன்னதும் டக் என்று சிரிப்பதும், ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன் என்றதும் உடனே காதல் கொள்வதும் லேசான செயற்கை இழை தட்டும் நடிப்பு.

ஹீரோயினை படம் முழுக்க கண்ணியமாக காண்பித்ததற்காகவே இயக்குநரை பாராட்டலாம்.ஹீரோவுக்கு பஞ்ச் டயலாக்,ஓப்பனிங்க் ஃபைட்,ஃபினிஷிங்க் ஃபைட் எதுவும் கொடுக்காமல் இயல்பாய் வந்து போக வைத்தமைக்கும் ஒரு பலே.. 

ரெஜிஸ்ட்டர் ஆஃபீசில்  வேலை செய்பவராக வரும் ஹீரோயினின் அப்பா நடிப்பு ரொம்பவே எதார்த்தம்..

பாடல் ஆசிரியர் முருகன் மந்திரம் அவர்கள் எழுதிய 3 பாடல்களில் 2 பாடல்கள் சூப்பர் ஹிட்.. ஜில்லென சிரிப்பாளோ,நெஞ்சுக்குள் இனிப்பாளோ.. செம மெலோடி.. பாடல் வரிகளுக்கும் , மென்மையான இசைக்கும் ஒரு சபாஷ்.. அதே போல் அட என்னமோ ஏதோ பண்ணுது புள்ளே.. பாடல் வரிகளூம் மனசுக்குள் வந்து என்னமோ ஏதோ பண்ணுது.. 

படத்தின் டைட்டில் டிசைன் அழகு.. 


http://chennaionline.com/film/Photofeature/images/Theneer-Viduthi-Movie/Theneer-Viduthi-Movie-Stills-07.jpg

வசனங்களில் செம ஸ்ட்ராங்க் என சொல்ல வைத்த இடங்கள்

1. தம்பி. இது டீக்கடை.. கண்ணும் ,கையும் தான் வேலை  செய்யனும், காதும் ,காலும் சும்மா இருக்கனும்.. 

2. என்னங்க நம்ம பந்தல் காண்ட்ராக்ட் பத்தி இம்புட்டு கேவலமா பேசிட்டீங்க.. நம்ம கோவை செம்மொழி மாநாட்டுக்கே நான் தாங்க காண்ட்ராக்ட்டு..!

போடா.. போடா ரீல் விட்டது போதும். 

3. அண்ணனுக்கு குடிக்க கூல்டிரிங்க்ஸ் கொண்டு வரவா?

வேணாம்.. ஹாட் டிரிங்க்ஸ் கொண்டு வாப்பா.. 

அட, நம்ம ஜாதிப்பையனா? படிச்சிருக்கீங்களா?அது சரி சரக்கு அடிக்க எதுக்கு படிப்பு?

4. ஜோசியரே. உங்களுக்கு வருமானம் எவ்வளவு வரும்?

ஏதோ நீங்க பாத்து குடுக்கற அளவு வரும்.. 

5. ஹீரோயின் - நான் இன்னும் வயசுக்கு வர்லைங்கற மேட்டர் உனக்கு எப்படிய்யா தெரியும்?

எனக்கு தொழிலே அதானே? எத்தனை பக்கம் போய் பந்தல் போட்டிருக்கேன்.? எத்தனை வயசுக்கு வந்த பொண்ணுங்களை கிட்டே பார்த்திருக்கேன்?

6. அண்ணே, கேட்கறேனேன்னு தப்பா நினைக்காதீங்க.. போன தடவை ஒரு தப்பு நடந்துடுச்சு.. யாரோ ஃபோன் பண்ணிசொன்னாங்கன்னு ஏதோ ஒரு வீட்டு முன்னால பந்தல் போட்டு விடிஞ்சதும் ஏமாந்துட்டோம். பொண்ணு வயசுக்கு வந்தது நிஜம்தானா? நீங்க பார்த்தீங்களா?

யோவ், என்னய்யா கண்றாவி பேச்சு இது?பெத்த அப்பன் கிட்டேயேவா?

7. இந்த நாட்ல பொறந்தா சர்ட்டிஃபிகேட் தர்றாங்க, இறந்தாலும் சர்ட்டிஃபிகேட் தர்றாங்க.. ஆனா வயசுக்கு வந்தா மட்டும் சர்ட்டிஃபிகேட் தர்றதில்லை .. அது ஏன்? ( ஏன்னா பசங்க மெச்சூரிட்டி சர்ட்டிஃபிகேட் எங்கேம்மா?ன்னு கேட்டு ராக்கிங்க் பண்ணுவானுங்களே?)

8. லவ் மேரேஜை நாங்க எதிர்க்கிறோம். எல்லோருமே கோயில்ல கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்புறம் பந்தல் போடற எங்களுக்கு என்னய்யா வேலை?

9. இப்போ டீ சாப்பிடற எல்லாருமே திடீர்னு பால்க்கு மாறிட்டா நீ மூடிட்டு போயிட மாட்டே? கடையை சொன்னேன்பா. 

10. மொத்தம் 17 டீ குடிச்சும் இன்னும் சரி வர்லையே?

எது டீ சரி வர்லையா? அந்த ஃபிகர் சரி வர்லையா?




http://3.bp.blogspot.com/_AGkFj4KghR0/TShUNUnygGI/AAAAAAAAGg8/N0RosdPjKbg/s1600/Reshma-Menon-In-Theneer-Viduthi-Movie-Stills-3.jpg
11. முந்திரிப்பருப்பு போட்டு புளிக்கொழம்பு வைக்கனும்னு எங்கம்மா சொன்னாங்க.. கொஞ்சம் முந்திரிப்பருப்பு கொடுங்க.. 

12. ஏண்டி.. சொன்னா கேள்டி.. தம்பிக்கு முன்னாலயே அண்ணன் கல்யாணம் பண்ணிக்கிட்டா அண்ணன் செத்துடுவான்னு ஒரு தோஷம் இருக்காம்டி.. 

அட வாங்க அதை செக் பண்ணி பார்த்துடுவோம்.. ஒரு நாளாவது சந்தோஷமா வாழ்வோம்.. ( அடிப்பாவி.. )

13. யோவ்.... என்னய்யா ரூல்ஸ் பேசிட்டு இருக்கே? பொறம்போக்கு நிலத்துக்கு இப்படி ரூல்ஸ் பேசறியே.. அங்கே உன் பொண்ணு ஒரு பொறம்போக்கு பயலோட சுத்திட்டு இருக்கா..

14. உனக்கு ஒண்ணு தெரியுமா? இந்த மாதிரி ரூல்ஸ் பேசற ராமானுஜருங்களோட பொண்டாட்டி வீட்டை விட்டு ஓடிடுவா.. அல்லது பொண்ணு ஓடிடுவா.. உன் விஷயத்துல பொண்ணூ ஓடிடுவா பாரு..

15. அப்பா.. விழாவை ஜாம் ஜாம்னு நடத்தனும்.. முன் வாசல்ல பந்தல் போட்டா 50 பேர் உக்காந்து சாப்பிடலாம். பின் வாசல்ல பந்தல் போட்டா 100 பேர் உக்காந்து சாப்பிடலாம். 

 மொத்தத்துல  உன் ஆள் இங்கே பந்தல் போட வரனும் அதானே?

16. .நான் உன் லவ்வர்ங்கறது தெரிஞ்சும் என்னை இங்கே பந்தல் போட கூப்பிட்டிருக்கானே உங்கப்பன் சரியான மாங்கா மடையனா இருப்பானோ?

17. வீட்ல பொண்ணுங்க அடக்க ஒடுக்கமா இருந்தாத்தான் ஆம்பளைங்க வெளில தலை நிமிர்ந்து நடக்க முடியும்.. ( களவணி டயலாக்)

18. நாம நினைச்ச படி எதுவுமே நடக்கலையே .. ம் ம் இந்த தவளை வாயன் கிட்டே போட்டு வாங்க முடியுதான்னு பார்ப்போம்

அண்ணே.. இப்போத்தான் வள்ளியை பார்த்து கட்டி குலாவிட்டு வர்றேன்.. 

அடப்போடா லூஸ்.. அவ அவளோட சித்தப்பன் வீட்ல பத்திரமா இருக்கா.. பக்கத்து ஊர்ல.. சும்மா ரீல் விடாத. 

ஹா ஹா போட்டு வாங்குனோமில்ல../இப்போ அங்கே போவோம் இல்ல?

19. நியாயமா சம்பாதிச்ச பொருளும், பணமும் எங்கேயும் போகாது..

20. வந்தமா? பார்த்தமா? பேசுனமா?ன்னு கிளம்பிட்டே இருக்கனும்.. அண்ணனை மாமா ஆகிடாதே டா


21. டியர்.. நாம கொஞ்ச நள் பார்க்காம இருந்தா எல்லாம் சரி ஆகிடும்.. 


22. என் பரம்பரைலயே பொண்ணுங்க யாரும் படி தாண்டி போனதில்ல்லை.. ம் 


http://www.top10cinema.com/dataimages/8420/24-12-2010-8409-9-3.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஹீரோ,ஹீரோயின் இருவருக்கும் மேரேஜ் ஆகுமா ? ஆகாதா? என்பதை கண்டறிய குறுக்கு வழி ஜோசியமாக கிராமத்து வழக்கமான ஒட்டுப்புல் விளையாட்டை ஹீரோயின் விளையாடுவது.. 


2. ஹீரோயின் வயசுக்கு வராதவர் என்பதை ஹீரோ கிண்டல் அடித்த அன்று இரவு ஹீரோயின் வீட்டில் டி வி பார்க்கும்போது எல்லாப்பாடல்களூம் வயசுக்கு வந்த ஹீரோயினுக்கு சடங்கு சுத்தும் பாடலாக வரிசையாக வருவது1.அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே.. 2. மே மாசம் 98இல் மேஜர் ஆனேனே.. 

3. ஹீரோ ஹீரோயினுக்கு டீ வாங்கித்தரும்போது எதுக்குய்யா இதை இப்போ சாப்பிட வேணாம்கறே ? என கேட்கும்போது காதலை சொல்ல வெட்கப்படும் ஹீரோ அப்போது டைமிங்காக ப்ரூக்பாண்ட் டீ ரோசஸ் டீ விளம்பரத்தில் பேச நல்ல டைம் - சீன்  வருவதும் காதல் சொல்லாமலேயே உணரப்படுவதும்.. காதலியின் கண்களில் பட்டாம்பூச்சி பறப்பதும்.. ...



http://gallery.southdreamz.com/cache/actress/reshmi-menon/browse-theneer-viduthi-audio-launch-photo-gallery-20_720_southdreamz.jpg

இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. பொதுவா பொண்ணு காதலை சொல்ல முடியலைன்னா லெட்டர் எழுதி வைப்பா.. ஆனா சொந்த அப்பாவை எந்த பொண்ணாவது காதலன் முன் அவமானப்படுத்துவாளா?தான் காதலன் கூட கொஞ்சுவதை அவரே வீடியோ எடுத்து மாப்பிள்ளை வீட்டுக்கு காட்டுவாரா?காதல் இருக்குன்னு வாய் வார்த்தையா சொன்னாலே போதுமே?

2. ஹீரோவுடன் ஊரை விட்டு ஓடிப்போக தீர்மானித்து மலையில் காத்திருக்கும்போது ஹீரோ வர்லை. டென்சனில் ஹீரோயின் தான் கட்டி இருந்த 2 முழம் மல்லிகைப்பூவையும் ஒவ்வொண்ணாப்பிச்சி பிச்சு போடறா.. அப்புறம் மீண்டும் வீட்டுக்கு வரும்போது மல்லிகைப்பூ அப்படியே தலைல குறையாம இருக்கே? எப்படி? ( கண்ட்டிநியூட்டி மிஸ்ஸிங்க்)

3.படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல ஹீரோவோட அம்மா உப்பு பெறாத விஷயத்துக்காக தான் செத்துப்போனது போல நடிப்பதும் ,ஊரே திரண்டு வந்து நின்ற பிறகு சாவதானமாக எழுந்து” பார்த்தியா? நான் செத்தா யாரும் வர மாட்டாங்கன்னு சொன்னியே ? இத்தனை பேர் வந்திருக்காங்களே? என கேட்பதும் செம டிராமா.. செயற்கை.. 

4. பொண்ணோட வீடியோ லவ் காட்சி பார்த்த பிறகு கோபமாக போன அமெரிக்கா மாப்ளை மீண்டும் அந்த பொண்ணே தான் வேணும்னு வர்றாரே? ஏன்?

5. அமெரிக்க மாப்ளையாக நடிக்க ஒரு நல்ல துணை நடிகர் கிடைக்கலையா? பஞ்சம் பிழைக்க வந்த பரமேஸ்வரன் மாதிரி இருக்கற ஆளை அமெரிக்க மாப்ளை ஆக்குவதா?

மொத்தத்தில் இந்தப்படம் காதலர்கள் பார்க்கும் அளவு இருக்கு.. எல்லாரும் பார்க்கும் அளவு இல்லை.. 

ஏ, பி செண்ட்டர்களில் 25 நாட்கள் ஓடும்.. சி செண்ட்டர்களீல் 15 நாட்கள் ஓடும்
‘’
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 40


குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்கிங்க் - ஓக்கே

சி .பி கமெண்ட் - சன் டி வி ல போட்டா பார்க்கலாம்

ஈரோடு ஆனூர் திரை அரங்கில் இந்தப்படம் பார்த்தேன்.. 

http://2.bp.blogspot.com/_gYNnKAPodv8/TUde3DAi_tI/AAAAAAAAJfs/38tIh3JbsiE/s1600/Theneer+Viduthi+Movie+Stills+pics+gallery+007.jpg


மொக்கை போட வா என ஃபிகர் கூப்பிடும்போது ஏமாந்து சென்று விடாதீர்கள்!!!!

1. ” ஹலோ!என்ன பண்ணீட்டு இருக்கீங்க?”

“ஆஃபீசில் ஆணி”

“ஆணியா? தாவணியா?”

அட போம்மா எங்க ஆஃபீஸ்ல இருக்கற 28 ஃபிகர்ஸூம் மிடி தான்”

ரிசைன் பண்ணு முதல் வேலையா..


-------------------------------


2. மொக்கை போட வா என ஃபிகர் கூப்பிடும்போது ஏமாந்து சென்று விடாதீர்கள்,நீங்கள் மொட்டை போடப்படலாம்#சும்மானாச்சுக்கும் சொல்லி வெச்சேன்

----------------------

3. கடல்கள் வற்றி விடும்: ஆய்வாளர்கள் கருத்து!:#எங்க தலைவர் கலைஞர் இருந்த வரை இப்படி ஒரு பிரச்சனை வந்துச்சா?

-----------------

4. போலீஸ் "ஹிட் லிஸ்ட்'டில் 35 பிரமுகர்கள் #ஹிட் லிஸ்ட்ல இருக்கற 35 பேரும் போலீஸ்க்கு பயந்து 100 நாட்களா விடாம ஓடிட்டு இருந்திருப்பாங்களோ?

-------------------------

5. காளஹஸ்தி கோவிலில் கருணாநிதி குடும்பத்தினர் ராகு- கேது பரிகார பூஜை #தலைவரே,பாவம் பண்ணுனாத்தானே பரிகாரம் பண்ணனும்?ஊழல் பண்ணுனதுக்குமா?

---------------

6. எனது முதல் திருமணம் பொம்மைக்கல்யாணமே-செல்வராகவன்#அடப்பாவி,இப்போக்கூட சோனியா அகர்வாலை விட்டுத்தராம பொம்மை மாதிரி அழகுங்கறாரே?

-----------

7. ஈழத் தமிழர்களின் கவலைகள் அனைத்தும் நியாயமானவையே- மன்மோகன் சிங்#வாங்கண்ணே லேட் பிக்கப் லேனாவாணனாண்னே?

--------
8. தி.மு.க., மாஜி அமைச்சர் சாபம் "அரசு ஊழியர்கள் நல்லா அனுபவிப்பாங்க'# டவுட் 1. யாரை? 2.எங்கே?3.எப்போ?#வரமா? சாபமா?

------------------
9. நான் எட்டு கிலோ குறைச்சிட்டேன் - ஹன்சிகா பெருமிதம்#மேடம்,இதை இங்க்லீஸ்ல “ஐ மினிமைஸ் எயிட்ஸ்”னு சொல்லிடாதீங்க

----------

10. டில்லியில் கருணாநிதியை கண்டுகொள்ளாத காங்கிரஸ்#தலைவரே,வருத்தப்படாதீங்க,,ராகுல் சென்னை வந்தப்ப நீங்க என்ன பண்ணுனீங்களோ, அதை அவங்க இப்போ

--------


11. ஈரோட்டில் மழை கொட்டுகிறது#நாளை கலைஞர் முரசொலியில் “கனிமொழி சிறையில் வாடுவதைக்கண்டு வானமே கண்ணீர் விட்டது”ன்னு ரீல் விடப்போறார்

-----------

12. ”நான் உங்களை விட ஒல்லி.பரவால்லியா?” காதலி  ஒல்லியா இருந்தா தப்பில்லை,வில்லியா இல்லாம இருந்தா சரி தான்.

---------------------

13. நான் யாரைப்போல் இருக்கிறேன்?எனக்கேட்டாள் காதலி.உன் அம்மாவைப்போல் என சொல்ல வாய் எடுத்து பின் தேவதை போல் என முடித்தேன்#பகடி

---------------------------
14.தமிழ்ப்பெண்கள் சினிமாவில் நடிக்க தயங்குகிறார்கள்- தங்கர் பச்சான்#அண்ணே, நடிக்க மட்டும் கூப்பிட்டா தயங்க மாட்டாங்க..

-------------------

15. பிரபுதேவவின் களவாடிய பொழுதுகள் படம் வாங்க ஆள் இல்லை#அடபோங்கப்பா,மார்க்கெட்டிங்க் டெக்னிக்கே தெரியல,உறவாடிய பொழுதுகள்னு டைட்டிலை மாத்துங்க

---------------------




16. நல்ல வாய்ப்புகள் வந்தால் மட்டுமே நடிப்பேன் - அபர்ணா#மேடம், நீங்க நல்லா நடிச்சாத்தானே வாய்ப்புகள் வரும்?

------------------

17. கல்யாணத்துக்குப்பிறகு என்னை நடிக்க வேணாம்னு அவர் சொல்லிட்டார்,நயன் தாரா கண்ணீர்#அட விடம்மா.மீறிப்போனா 6 மாசம் ஒத்துமையா இருப்பீங்களா?

--------------------

18. நயன் தாரா சீதையாக  நடிப்பதை பலர் எதிர்க்கிறார்கள்#அட விடுங்கப்பா,சிம்பு,பிரபு தேவா 2 பேருமே எதிர்க்கல.. நமக்கு என்ன வந்துச்சு?

----------------------

19. நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்: #அப்போக்கூட பாசிட்டிவ்வா நான் திறமையானவன்னு சொல்ல முடியுதா உங்களால்?

---------------------

20. ராகுல் PM ஆக எந்தத் தடையும் இல்லை- மன்மோகன் சிங் #மன்மோஹன்சிங்க் எனக்கு வழிவிடுவதாக சொன்னதில் எனக்கு எந்த  ஆட்சேபணையும்  இல்லை -ராகுல்

--------------------

21 சமைக்கறதுக்காகத்தான் நானா?என சலித்துக்கொண்டாள் மனைவி.சமையல் பெண்ணின் கடமை,அதை ருசித்து மையல் கொள்வது ஆணின் உரிமை என்றேன்#சமாளிஃபிகேஷன்

---------------------------