Tuesday, November 16, 2010

தமிழ்மணம் டாப் 20 பிளாக்ஸ் - பதிவர்களிடையே ஏற்பட்டிருக்கும் எழுச்சி

தமிழ்மணம் விருதுகள்: ஒரு பார்வை!
தமிழ்மணம் டாப் 20 பிளாக் தர வரிசப்பட்டியல் வெளியான பிறகு எங்கே பார்த்தாலும் இதைப்பற்றியே பேச்சு.பதிவர்களிடையே பரபரப்பு..உற்சாகம்.இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படப்போகின்றன.?

பிளஸ்

1.வெற்றி பெறும் பதிவர்களுக்கு பாராட்டுகள்,வாழ்த்துக்கள் குவிவதால் பதிவர்களுக்கிடையே புரிதல்,சந்தோஷம்,படைப்புத்திறனின் ஊக்குவிப்பு வளர்கிறது.

2.இதுவரை ஏதோ ஒரு பதிவு போட்டோம் என்ற எண்ணத்திலிருந்து இனி தரமான நல்ல பதிவு போட்டு பேர் வாங்க வேண்டும்,இடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் வளர்கிறது.

3.ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கூறிக்கொள்வது,கேலி பேசுவது,அடுத்த பதிவு எப்போ என கேட்டுக்கொள்வது என சிந்தனை முழுவதும் பதிவு பற்றியே குவிகிறது.

4.பதிவர்களின் படைப்பில் இப்போது ஒரு மாற்றம் தெரிகிறது.உற்சாக வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.மொக்கைப்பதிவு போட்டவர்கள் அரசியல்,சமூக விழிப்புணர்வு என வெரைட்டி காண்பிக்கிறார்கள்.கவிதை எழுதுவதில் தபுசங்கர்க்கு நிகரானவர் என பெயர் பெற்ற கவிதைக்காதலன் சமீபத்தில் சினிமா விமர்சனம்,சினிமா கட்டுரை என கலக்குவது ஒரு உதாரணம்.

5.அங்கீகாரம் மட்டுமே ஒரு படைப்பாளனை ஊக்குவிக்கும் என்ற நியதியின் படி தமிழ்மணத்தின் அங்கீகாரத்துக்காக படைப்பாளிகள் ஏங்க ஆரம்பித்து விட்டார்கள்,அவர்கள் சிந்தனைகள் எல்லாம் பதிவின் தரத்தை மேம்படுத்துவதில் இருப்பது நல்ல வரவேற்கத்தக்க மாற்றம்.

6.சினிமா விமர்சனத்தின் அடையாளம் என புகழப்பட்ட கேபிள் சங்கரின் மைனா பட விமர்சனத்தின் இண்ட்லி ஓட்டுக்களை விட ஃபிலாசபி பிரபாகரனின் இண்ட்லி ஓட்டுக்கள் அதிகம் ஆனதும்,அந்த விமர்சனத்தை கேபிள் சங்கர் சாரே பாராட்டியதும் ஆரோக்யமான மாற்றம்.

7.விசிட்டர்ஸ் டுடே ஆவ்ரேஜ் 300 டூ 500 கொண்டுள்ள கோகுலத்தில் சூரியன் வெங்கட் ஒரே ஒரு இடுகை மூலம் 1000 விசிட்டர்ஸ் வரவைத்ததும்,அவர் தொடர்ந்து 2 வாரங்களாக நெம்பர் 8 பிளேஸ்சில் இருப்பதும் பாராட்டத்தக்கது.


8.என்கவுண்ட்டர் சரியா ,தவறா என ஒரே ஒரு கேள்வி கேட்டு மங்குனி அமைச்சர் பெற்ற தமிழ்மண ஓட்டுக்கள் பிரம்மிக்கத்தக்க சாதனை.அவரது சொல்லாடல்,நகைச்சுவை நயம் இதெல்லாம் நாம் பின்பற்ற வேண்டியது..

9.பதிவும் நகைச்சுவை,பதிவின் தரத்தை விட பின்னூட்டங்களீன் மூலம் நகைச்சுவையை அள்ளித்தெளித்து கலாய்த்தல் எனும் நவீன காமெடி மூலம் பன்னிக்குட்டி ராமசாமி,மங்குனி,பட்டாபட்டி,சிரிப்புப்போலீஸ் ரமேஷ்  இவர்கள் 4 பேரும் பெறும் பின்னூட்டங்கள் சர்வ சாதாரணமாக 200 தொடுவது உன்னிப்பாக கவனிக்கத்தக்கது.

10.நல்ல நேரம் சதீஷ் சன் டி டி ஹெச்,ஐ சி ஐ சி  2 பதிவுகள் மூலம் தனது பாணீயிலிருந்து விலகி புதிய பாதையில் போய் பாராட்டுக்களையும் ஜீஜிக்ஸில் ரூ 500 பரிசும் பெற்றதும் பாராட்டத்தக்கது.தொப்பிதொப்பி அரசியல் கார்ட்டூன் பதிவின் மூலம் அட்டகாசமான ராஜ் பாட்டையை தொடங்கியதும் நல்ல ஆரம்பமே...

11. புதிய தலை முறை இதழில் வந்த யுவகிருஷ்ணாவின் கட்டுரைப்படி அலெக்ஸா ரேங்க்கிங்க்கில் முதல் 2 இடங்களைப்பிடித்ததாக சொல்லப்படும் கேபிள் சங்கர் (62000 +), ஜாக்கி சேகர் (80000 +) இருவரும் ஜனரஞ்சக பதிவர்கள்,சினிமா விமர்சனம் ,நாட்டு நடப்பு,என சகலமும் கலந்து கட்டி அடிப்பவர்கள்.இவர்களை விட அலெக்ஸா ரேங்க்கில் முன்னிலை வகிக்கும் வந்தே மாதரம் சசி (56670) டெக்னிக்கல் பதிவுகளை மட்டுமே போட்டு குறுகிய காலத்தில் இந்த அளவு வளர்ச்சி பெற்றது அபாரமானது.

டிஸ்கி - நான் தினமும் 2 மணீ நேரம் மட்டுமே நெட்டில் உள்ளதால் அதிகமாக பிற தளங்களுக்கு செல்ல முடிவதில்லை.எனவே என் லிஸ்ட்டில் வராத எத்தனையோ தளங்கள் கலக்கிகொண்டிருக்கலாம்.அவர்கள் என்னை மன்னிக்க.


மைனஸ்

1.ஓட்டுக்கள்,பின்னூட்டங்கள்,ஹிட்ஸ் இந்த 3 மட்டுமே தர வரிசையை நிர்ணயிக்கிறது.நல்ல படைப்புக்கள் பல இந்த 3ம் இல்லாமலே வந்து போய்க்கொண்டிருக்கின்றன.

2.கமெர்சியல் சினிமா,ஆர்ட் ஃபிலிம் என 2 வகையில் படங்களை தர வரிசைப்படுத்துவது போல் பிளாக்கிலும் 15 பிளாக்ஸை ஓட்டுக்கள்,பின்னூட்டங்கள்,ஹிட்ஸ் மூலம் தேர்ந்தெடுத்து 5 பிளாக்சை தர வரிசையில் தேர்ந்தெடுக்கலாம்.

3.அப்படிக்கூறியதற்காக இப்போது வரிசைப்படுத்திய 20 பிளாக்குகளும் தரம் இல்லாதவை என அர்த்தம் அல்ல.இவைகள் தரமானவை தான்.ஆனால் யாராலும் கவனிக்கப்படாத தரமான பிளாக்குகள் கவனிக்கப்பட வேண்டும் என்பதே என் வாதம்.

4.எனது அனுபவத்தில் அந்த மாதிரி அதிக பதிவு போடாவிட்டாலும் குவாலிட்டி பதிவர்கள் 1 சேட்டைக்காரன் 2 தொப்பி தொப்பி  3 ஃபிலாசபி பிரபாகரன்  4 குசும்பன்  5 கும்மாச்சி.

5  ராம நாராயணன் மாதம் ஒரு படம் எடுப்பார்,ஷங்கர்,மணிரத்னம் 2 வருடங்களூக்கு ஒரு படம் கொடுப்பார்.ஆனால் அவர்கள் இருவரின் ஒரு படத்தின் தரம் ராம நாராயணன் கொடுக்கும் 24 படங்களை விட அதிகம்.

பிளஸ்களை மேன்மேலும் பிளஸ் ஆக்குவோம்,மைனஸ்களை பிளஸ் ஆக்கும்முயற்சியில் ஈடுபடுவோம்,அனைவரும் உழைப்போம் எல்லோரும் மாற்றி மாற்றி வெற்றி காண்போம்.வெற்றியிலும் ,உழைப்பிலும் தானே மனிதனின் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது?

Monday, November 15, 2010

தலைவர் கறை படியாத கரத்துக்கு சொந்தக்காரரா?


1. “ஒரே  வீட்ல  பன்றிக்  குட்டிகளுடன்  10  நாள்  தங்கி  இருக்கணுமா? என்னால  முடியாது!”

“மேடம்  விளையாடாதீங்க!  இது  ‘PIG’Brothers’  நிகழ்ச்சினு  முதல்லயே  சொன்னோமே?”



2. “ஐ.சி.யு.ல  வைக்கற  அளவு  பேஷண்ட்டுக்கு  என்ன  பிரச்சணை?”

“பேஷண்ட்டுக்கு  எந்தப்  பிரச்சனையும்  இல்ல,  டாக்டருக்குத்தான்  கொஞ்சம்  பணப்  பிரச்சனை.”



3. “தீவிரவாதிகளைப்  பிடிக்கறதுல  போலீஸ்  ரொம்ப  உஷாரா  இருக்கு”

“எப்படி  சொல்றே?”

“குண்டு  மிளகாய்  பர்ச்சேஸ்  பண்ணுனாக்கூட  அரெஸ்ட்  பண்ணிடறாங்களே?”



4. “வன்முறை  என்றாலே  நம்  மன்னருக்கு  பிடிக்காது”

“அதற்காக  வானில்  மின்னல்  வெட்டினால்  கூட  இப்படி  பயப்படுவதா?”



5. “டாக்டர்,  20  வருஷமா  டெய்லி  ஊசி  போடறீங்க!  அதுக்குப்  பதிலா  ஒரு  ஆபரேஷன்  பண்ணி  குணப்படுத்தக்  கூடாதா?”

“பொன்  முட்டை  இடற  வாத்தை  ஒரே  நாள்ல  அழிக்க  சொல்றீங்களா!”



6. “இந்த  மாத்திரையை  சாப்பாட்டுக்கு  பிறகு  சாப்பிடணும்.”

“ஓ.கே.  டாக்டர். சாப்பாடு  எங்கே  எப்போ போடுவீங்க?”



7. “டாக்டர்,  இதுவரைக்கும்  ஏதாவது  நல்ல  காரியம்  பண்ணியிருக்கீங்களா?”

“ஏகப்பட்ட  காரியம்  பண்ணியிருக்கேன்.  நல்லதா,  கெட்டதான்னுதான்  தெரியலை!”



8. “டாகடர்  எதுக்கு  நர்ஸ்  சித்ராவை  வட்டம்  அடிச்சிட்டு  இருக்காரு?”

“டெய்லி  காலையில  டாக்டர்  ரவுண்ட்ஸ்  வருவார்னு  சொன்னேனே!”




9. “டாகடர்,  என்  கணவர்  அடிக்கடி  சிரிச்சிட்டு  இருக்காரு!”

“ஓஹோ...  அவரு  சந்தோஷமா  இருக்கறது  கூட  உங்களுக்கு  பிடிக்கலையா?”



10. “டைரக்டர்  சார்,  ஆபரேஷன்  தியேட்டரை  காட்டிட்டு  அப்புறம்  சுவர்க்கடிகார  பெண்டுலத்தை  காண்பிக்கறீங்களே,  என்ன  அர்த்தம்?”

“உயிர்  ஊசலாடிட்டு  இருக்குன்னு  அர்த்தம்.”



11. “டாக்டர்,  எனக்கு  வந்திருக்கறது  ஒற்றை  தலைவலின்னு  எப்படிச்  சொல்றீங்க?”

“ஹெட்  ஏக்னு  ( HEADACHE) சொன்னீங்களே?  ‘ஏக்’னா  ஹிந்தில  ஒண்ணுதானே?”



12. “இன்கம்டாக்ஸ்  எந்தெந்த  வழியில  கட்டலாம்னு  கவர்மெண்ட்  டெய்லி  டி.வி-ல  விளம்பரம்  தருதே?”

இன்கம்-க்கு  ஏதாவது  வழி  சொன்னா  தேவலை”



13. “நீ  கோபமா  இருக்கறப்ப  உன்  2  கன்னமும்  சிவந்துடுதுன்னு  என்  மனைவி  கிட்டே  சொன்னது  தப்பா  போச்சு”

“ஏன்?”

“24  மணி  நேரமும்  அவ  கன்னம்  சிவந்தே  இருக்கு.”



14. “ஸ்கூட்டர்  ஓட்டற  மாப்ளை  வேணாம்.  பைக்  வெச்சிருக்கற  மாப்ளைதான்  வேணும்னு  ஏம்மா  சொல்றே?”

“ஸ்கூட்டர்  மாப்ளைன்னா  அவருக்கு  ஸ்டெப்னி  வெச்சிருக்கற  பழக்கம்   இருக்குமேப்பா?”



15. “நிருபர்:  உங்க  வெய்ட்  எவ்வளவு?”

நடிகை:  மேக்-அப்புக்கு  முன்னாலயா?  மேக்-அப்புக்கு  பின்னாலயா?”



16. “தலைவர்  தான்  கட்சி  வேட்டி  கட்டியிருக்கறப்ப  மட்டும்  வேட்டியை  மடிச்சுக்  கட்றதுக்குக்  கூட  ஒரு  ஆள்  வெச்சிருக்காரே.  ஏன்?”

“கறை   படியாத  கரத்துக்கு சொந்தக்காரர்ன்னு  பெயர்  எடுக்கணுமாம்.”

Sunday, November 14, 2010

ஒரு மஞ்ச மாக்கானின் காதல் கடிதங்கள்

1) ஹாய் மோஹனா,

ஐ ஆம் சதீஷ்,....இங்கே எந்த நாயும் உன்னை மாதிரி ஒரு மொக்கை ஃபிகரை பார்த்திருக்கவே முடியாது,,நீ அவ்வளவு சப்பை. நானும் எவ்வளவோ ஃபிகர்சை கரெக்ட் பண்ண ட்ரை பண்ணுனேன்,ஆனா எவளும் சிக்கல.உன் மூஞ்சிக்கு வேற எவனும் சிக்கியிருக்க மாட்டான்னு தெரியும்.வேற வழி இல்லை... இதை உன் கிட்டே சொல்லியே ஆகனும்.முதல்ல உன் அக்கா கிட்டேதான் சொன்னேன்.ஆனா அவ ஒர்க் அவுட் ஆகல.அவ பேட்டா கடைக்குப்போய் புதுசா ஒரு ஹை ஹீல்ஸ் வாங்க வேண்டியதா போச்சு.ஐ ஆம் இன் லவ் வித் யூ......

-------------------------------------------

2)கண்மணி ,


வம்போட வெறும்பய வெங்கட் எழுதும் மேட்டர்...ச்சே.... குவாட்டர்....அதுவும் தப்பு... இதென்ன லவ் மேக்கா?டாஸ்மாக்கா?லெட்டரே இருக்கட்டும்... எங்கே படி...?

ஏன் உங்களுக்கு படிக்கத்தெரியாதா?

படிக்கத்தெரிஞ்சா உன்னை ஏண்டி லவ் பண்றேன்?

பொண்மணி! என் வீட்ல வேலைக்காரி சவுக்கியம்... உன் வீட்ல உன் தங்கச்சி சவுக்கியமா?உன் மூஞ்சியை நினைச்சுப்பாக்கறப்ப மொக்க ஜோக்ஸ்தான் வருது. அதை எழுதனும்னு உக்காந்தா மைனஸ் ஓட்டுதான் விழுது...என் பதிவுக்கு யாரும் கமெண்ட்ஸ் போடலைன்னா என் பிளாக் தாங்கிடும்.. ஆனா நீ தாங்க மாட்டே....
உன்னை ஹீரோயினா போட்டு ஒரு படம் எடுத்தா எப்படி இருக்கும்...நம்ம 2 பேரைத்தவிர ஒரு பய தியேட்டர் பக்கம் வர மாட்டான்.டைட்டில் என்ன தெரியுமா?

உனக்கு 20 உங்கம்மாவுக்கு 36 (கோபமா பாக்காதே நான் வயசை சொன்னேன்)



------------------------

3) லவ் லெட்டரை லீவ் லெட்டர் மாதிரி எழுதுனா எப்படி இருக்கும்?


LOVE LETTER

TO

THE GIRL (LOVER)

SUBJECT - PROPOSING LOVE

DEAR LOVER,

            AS I AM  SUFFERING FROM LOVE,I AM UNABLE TO EAT.,SLEEP,AND DO ANY WORK WITH CONCENTRATION FOR LAST 5 DAYS.AND I HAD ATTACHED THE LOVE CERTIFICATE TOO.SO I KINDLY REQUEST YOU TO LOVE ME FOR EVER FROM TODAY ONWARDS,

THANKING YOU,

YOUR'S LOVINGLY

HEART

YOUR'S FAITHFULLY

HEART ROBBER.

டாக்டர் ராம்தாஸ் ரசிகர்களுக்காக தமிழில்.....

காதல் கடிதம்.


அனுப்புநர்

உன் பாய் ஃபிரண்ட் நெம்பர் 18 (பாய்லதான் தினம் படுக்கறேன்)

பெறுநர்


வணக்கத்துக்குரிய காதலி  (ஒர்க் அவுட் ஆகறவரை மரியாதை )


பொருள் (சொந்தமா சேத்து வெச்சது ஒண்ணுமில்ல)- காதலை வெளிப்படுத்துதல்

அன்புள்ள காதலி,

நான் காதல் நோயால் பீடிக்கப்பட்டுள்ளேன் (நாயே உனக்கு எல்லா நோயும் தானே இருக்கு.)என்னால சாப்பிட முடியல,தூங்க முடியல,எந்த வேலையும் செய்ய முடியல.  (முதல்ல ஏதாவது வேலைக்கு போனாத்தானே?)
5 நாளா இப்படித்தான்.இத்துடன் எங்கள் குடும்ப மருத்துவர் தந்த காதல் சான்றிதழையும் இணைத்துள்ளேன்.எனவே என்னை எப்படியாவது கஷ்டப்பட்டு காதல் பண்ணுமாறு பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்.இன்றிலிருந்தே அது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கிறேன்.


இப்படிக்கு,

உன் இதயம் கவர்ந்த காதலன்.




------------------------

Saturday, November 13, 2010

தகதிமிதா மைதா நமீதா

Namitha in Saree


1. “தமிழ்  மொழியை  விட  அழகான  மொழி  எது?”

“உங்க  பொண்ணு  தேன்  மொழி  சார்!”



2. “உங்க  தோட்டத்து  காய்கறிகளுக்கு  மட்டும்  டபுள்ரேட்  சொல்றீக்களே, ஏன்?”

“தண்ணி  பாய்ச்சறது  கூட  வயலுக்கு  மினரல்  வாட்டர்தான்...!”



3. “அமைச்சரே!  நமது  நாட்டின்  ‘குடிமக்கள்’  எப்படி  இருக்கிறார்கள்?”

“போதையில்தான்  மன்னா!”



4. “உன்  கடைசி  ஆசை  என்ன?”

“இந்த  வழக்குல  உண்மைக்  குற்றவாளியை  எப்படியாவது  கண்டுபிடிச்சு  எனக்குக்  காண்பிங்க  எசமான்!”



5. “என்னது,  மன்னருக்கு  மாரடைப்பா?  எதனால்...?”

“சுயம்வரத்துக்குப்  போனவரை  அந்நாட்டு  இளவரசி  ‘மன்னா’  என்று  அழைக்காமல்  ‘அண்ணா’  என்று  அழைத்துவிட்டாளாம்...!”



6. “மன்னா,  ஆபத்து...  ஆபத்து  வந்துவிட்டது...!”

“என்ன  ஆனது,  மாறவர்மன்  நம்  மீது  படையெடுத்து  வருகிறானா?”

“இல்லை  மன்னா,  தாய்  வீட்டுக்கு  போன  மகாராணி  அதற்குள்ளாகவே  திரும்பி  வந்துவிட்டார்...!”



7. “என்ன,  மகாராணிக்கு  திடீரென்று  அலங்காரம்  செய்கிறீர்கள்...?”

“மன்னா, ‘பட்டத்து  யானையை  அலங்கரியுங்கள்’  என்று  நீங்கள்  தானே  ஆணையிட்டீர்கள்...!”



8. “தூங்கிக்கொண்டிருந்த  புலியை  எதிரி  நாட்டு  மன்னன்  ஓலை  அனுப்பி  உசுப்பி  எழுப்பிவிட்டான்...”

“இப்போது  என்ன  செய்யப்  போகிறீர்  மன்னா?”

“சாப்பிட்டுவிட்டு  மறுபடியும்  தூங்க  வேண்டியதுதான்!”



9. “மன்னா!  அரசாங்க  ரகசியத்தை  இந்த  ஒற்றன்  அறிந்து  கொண்டான்...”

“நான்  சமையலறையில்  மகாராணிக்கு  உதவியாக  காய்கறி  அரிந்துகொண்டிருந்ததை  இவன்  பார்த்துவிட்டானா...?”



10. “மன்னா,  எதிரி  நாட்டு  மன்னனிடமிருந்து  போர்ச்  செய்தி  வந்துள்ளது... என்ன  பதில்  அனுப்புவது...?”

“நீங்கள்  அனுப்பிய  ஓலை  எமக்கு  கிடைக்கவில்லை,  என்று  பதில்  ஓலை  அனுப்பிவிடலாமா...?”



11. “மன்னா,  உங்களைப்  பாட  புலவர்  வந்திருக்கிறார்...!”

“இப்போதுதான்  மகாராணியிடம்  பாட்டு  வாங்கி  வந்தேன்!”



12. “டாக்டர்  ஹார்ட்  ஆபரேஷனுக்கு  எதுக்கு  கோடாரி,  கடப்பாரை  எல்லாம்  எடுத்துட்டு  வர்றீங்க...?”

“நீங்க  ஒரு  கல்செஞ்சக்காரர்னு  சொன்னாங்க...”



13. “தலைவர்  ஒரு  துறவி  மாதிரின்னு  எப்படி  சொல்றே?”

“ஆமா...  நேர்மை,  நாணயம்,  மனசாட்சி  எல்லாத்தையும்  துறந்துட்டாரே”



14. “மன்னா!  புலவர்  எழுதிய  பாட்டில்  உங்களைப்   புகழ்ந்து  தானே இருக்கிறது.  ஏன்  கோபப்படுகிறீர்கள்?”

“அமைச்சரே!  ஓலையின்  கீழே  பாருங்கள். ‘மேலே  கூறியவை  முழுக்க, முழுக்க  கற்பனையே!  யாரையும்,  எவரையும்  குறிப்பிடுபவை  அல்ல’னு எழுதியிருக்கே!”



15. “அந்த  பாகவதர்  சினிமா  ரசிகர்னு  எப்படி  சொல்றே...?”

“தகதிமிதா-னு  பாடாம,  ‘தகதகநமீதா’னு  பாடறாரே...!”



16. “நான்  லவ்  பண்றது  தெரிஞ்சா,  அப்பா  என்  கையில  சூடு  வைப்பார்!”

“இப்படி  கூட  செய்வாங்களா?”

“இங்க  பாருங்க...  ஏற்கனவே  அஞ்சு  தடவை  சூடு  வாங்கியிருக்கேன்!”

தமிழ்மணம் விருதுகள் அறிவிப்பால் ஏற்படப்போகும் பிரச்சனைகள்

1.>>>கலந்து கொள்ளும் பதிவர், தனது பதிவினை 1-11-2010க்கு முன்னர் தமிழ்மணத்தில் இணைத்திருத்தல் வேண்டும். டிசம்பர் 1, 2009 முதல் நவம்பர் 10 2010 வரை எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே விருதுகள் தேர்வுக்கு இடம்பெறும்>>>

பொதுவாக ஒரு ஆண்டின் சிறந்த படைப்பு என்றால் அந்த ஆண்டு முழுவதும் வரும் படைப்புகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.உதாரணமாக 2010ம் ஆண்டின் சிறந்த படம் என்றால் 1.1.2010 முதல் 31.12.2010 வரை ரிலீஸ் ஆன படங்களே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

2.>>>>தமிழ்மணத்தின் முதற்கட்ட வாக்கெடுப்பு வலைப்பதிவர்களுக்கானது. தமிழ்மணத்தில் பதிவு செய்துள்ள வலைப்பதிவர்கள் அனைவரும் வாக்களிக்கலாம். ஒரு பதிவருக்கு ஒரு பிரிவுக்கு ஒரு வாக்கு என்னும் அடிப்படையில் வாக்குரிமை இருக்கும்.>>>

இதில்தான் முக்கியப்பிரச்சனை.ஒரு சாதாரண பதிவர்க்கு குறைந்த பட்சம் 10 பின்னூட்டவாதிகள் அல்லது பிடித்த பதிவாளர்களூம்,பிரபல பதிவாளர்களூக்கு 50  பின்னூட்டவாதிகள் அல்லது பிடித்த பதிவாளர்களூம் இருப்பார்கள்.அவர்கள் எல்லோருக்கும் அல்லது பெஸ்ட் பதிவுகளுக்கு வாக்களீக்க விரும்புவார்கள் ,இப்படி ரேஷன் வைத்தால் மனத்தாங்கல் ஏற்படும்.

3.>>>> தமிழ்மணம் நிர்வாகம், வலைப்பதிவர்களைக் கொண்ட நடுவர் குழு அமைக்கப்படும். நடுவர் குழுவில் இடம் பெறும் நடுவர்கள் தனித்தனியாக இடுகைகளை தேர்வு செய்து தமிழ்மணம் விருதுக்குழுவிற்கு அளிப்பார்கள்.>>>>

சீனியர்  வலைப்பதிவர்களைக் கொண்ட நடுவர் குழு எப்படி தேர்ந்தெடுக்கும் என சொல்லத்தேவை இல்லை,அவர்கள் காலகட்டத்தில் உள்ள வலைப்பதிவர்களுக்கே அதிக முன்னுரிமை கொடுப்பார்கள்.இது இயற்கை மற்றும் மனோவியல் ரீதியாகவும் அப்படித்தான் அமையும்.புது வலைப்பதிவாளர்கள் புறந்தள்ளப்பட வாய்ப்புண்டு.


4 >>>> இந்த விருதுத் தேர்வுக்கான அடிப்படை. அறிவிக்கப்பட்ட போட்டிகளுக்காக எழுதப்படும் படைப்புகளாக அல்லாமல், தன்னெழுச்சியாக வெளிப்பட்ட படைப்புகளே இந்தத் தேர்வுகளுக்கு கணக்கிலெடுக்கப்படுவதால் இதில் போட்டியோ, ஏமாற்றமோ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்குமென்றே நம்புகிறோம்.>>>

போட்டி என்று அறிவிக்கப்பட்ட பிறகு எழுதப்படும் பதிவுகளும் கணக்கில் சேர்க்கப்பட்டால் படைப்பின் தரம் இன்னும் கூடும்.இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு எழுதுவார்கள்.அது நல்லதுதானே.

5.   >>>> தனிப்பட்ட இடுகை (post) அல்லது இடுகைத் தொடர்களே விருதுக்கு தேர்வு செய்யப்படும். வலைப்பதிவு முழுமைக்குமான விருது என்று எதுவும் இல்லை.>>>

பெஸ்ட் பிளாக் அவார்டு ஒன்றும் கொடுக்கலாம்.அது ஊக்குவிப்பாக அமையும்.

6. >>>
வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் அதிக வாக்குப் பெற்று முதலிடம் பெறும் பதிவுகளுக்குத் தலா ரூ.1000ம் (ஆயிரம் ரூபாய்), இரண்டாம் இடம் பெறும் பதிவுகளுக்குத் தலா ரூ.500ம் (ஐநூறு ரூபாய்) வழங்கப்படும்.>>>

பரிசுத்தொகை மிக கம்மி.ஒரு தனி மனிதனான பரிசல்காரன் கிருஷ்ணகுமார் அறிவித்த போட்டியிலேயே (சவால் சிறுகதை போட்டி) ரூ 1000 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக பலருக்கு அளிக்கப்பட்ட போது.இத்தனை பதிவாளர்களை வைத்து நடத்தும் மிகப்பெரிய நிறுவனம் அறிவுத்துள்ள பரிசு யானைப்பசிக்கு சோளப்பொரி.

7. அதே போல் யார் யார் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது ரகசியமாக இருக்க வேண்டும்.ஏனெனில் வெளிப்படையாக தெரிந்துவிட்டால் நண்பர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்புண்டு.இது பற்றி தெளிவாக ஏதும் கூறப்படவில்லை.

டிஸ்கி - 1 : என் மனதிற்குத்தோன்றியதை நான் எழுதினேன்.இதனால் தமிழ்மணம் போட்டித்தேர்வில் என் படைப்புகள் பரிசு பெறுவதில் பாதிப்பு ஏற்படும் என தமிழ்மணம் அமைப்பு நினைத்தால் எனக்கு தனி மெயிலில் மிரட்டவும்.நான் இந்த இடுகையையே நீக்கி விடுகிறேன்.கொண்ட கொள்கையில் கடைசி வரை உறுதியாக இருக்க நான் வீரபாண்டியக்கட்ட பொம்மன் பரம்பரையில் பிறக்கவில்லை.சாதாரண குடும்பம்தான்.

டிஸ்கி - 2 : வழக்கமாக் காமெடிக்காகத்தான் அட்ராசக்க வருகிறோம்,இப்படி சீரிஸ்சாக எழுதினால் எப்படி என கேட்பவர்கள் என் ஃபோட்டோவை ஒரு முறை பார்க்கவும்.அட டம்மி பீஸு என உங்களுக்கே சிரிப்பு வரும்.அப்படியே சிரிச்சுக்கிட்டே ஓட்டும்,கமெண்ட்டும் போட்டுட்டு ஓடி விடவும்.